அவமானம்

1. K2K-0001

 அவமானம் ..!   

அவமானம் அது ஏளன சிரிப்பில் ஆரம்பிக்கிறது என்க., அவர் மகிழா அதுமட்டுமல்ல அவர்தம் எண்ணங்களில் உள்ளது.,பயத்தில் உள்ளது என நான் பின்னர்.,அவர் இப்படியாக எங்கள் விவாதம் தொடர்கிறது..! சித்தப்பாவிற்கும்., மகனுக்கும் நடக்கும் விவாதமே இக்கதை கற்பனையும் உண்மையும் கலந்து.,எனக்கு தெரிந்த தாய்த்தமிழ் வார்த்தைகளில் வெளிப்படுத்த முற்படும் முயற்சி, 

எங்களிருவர் விவாதத்தை உங்களை போல் என் தங்கையும் கேட்டு கொண்டிருக்க, அவர் ஓர் உண்மை சம்பவத்தை சொல்கிறேன் கேள், அவள் பெயர் பர்கானா கனவுகளோடு சிறகை விரித்து பறந்திருந்த பள்ளி செல்லும் செல்லக்குட்டி, அவள் அறிந்திருக்கவில்லை பூப்பெய்ய போகிறாள் என்று என, ஏழாம் வகுப்பின் ஆரம்பித்திலேயே பருவமடைந்து விட்டால், தாய் தந்தையரோ தினசரி உணவுத்தேவைக்காக போராடும் வர்க்கம், சமூககட்டமைப்பின் கெளரவம் என்னும் வீணாய் போன மாய பிம்பத்திற்காக அதிக பணம் செலவு செய்து தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்த்துவிட்டார்கள் அவர்கள் அறிந்திருக்கவில்லை அப்பள்ளியே அவர்கள் மூவர் வாழ்க்கையை புரட்டிபோட போகிறது என, அவள் தாயோ போதிய அளவு பர்கானாவிடம் மாதவிடாய் சுழற்சியின்  விவரங்களை பகிர்ந்து கொள்ளவும்,அந்நாட்கள் தீட்டு என சொல்லி அவளை தள்ளி நிர்க்கவே பழக்கியிருந்தார்கள்.


ஒரு அறிவியல் பார்வையில்லா மடத்தனம் என்பதை தவிர வேறு எதுவும் அந்நேரத்தில் சொல்ல தோன்றவில்லை., அவளுக்கு எதுவும் புரியவே இல்லை அவளுக்கு அன்னையிடம் கேட்கவும் பயம், தயக்கம் அவள் நேரம் பகிர்ந்து கொள்ளவோ கேட்கவோ நெருங்கிய நண்பர்களே இல்லாமல் இருந்தது, அப்பள்ளியில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகிருந்ததால்..! அன்று எப்பொழுதும் போல் சென்றிருந்த அவளுக்கு தெரியவில்லை,நிகழப்போகும் விபரீதத்தை பற்றி மனித வாழ்க்கையில் மனித இனம் நிலைத்திருக்க, உயிர்கள் ஜனித்திருக்க ஓர் பெண்ணாய் அவள் சிந்தும் ரத்தம் 12 முதல் 15  வயதில் ஆரம்பித்து, நாற்பது ஐம்பது வருடங்கள் தன் உதிரம்,உடல் வலி, மன வலி இவ்வனைத்தையும் ஏற்றுக்கொண்டு தன் பிறப்பின் தனித்துவத்தை காத்துக்கொண்டிருக்கும்,ஒர் உயிரியல் நிகழ்வின் ஓர் நாள் வகுப்பில்  அமர்ந்து பாடம் கவனித்து கொண்டிருக்கும் போதே அவளை அறியாமல் அவள் உடை உதிரத்தால் நனைந்து போனது, சகமாணாக்கள் கவனித்து ஆசிரியரிடம் சொல்ல பெண்ணாய் பிறந்து ஆசிரியராய் நின்ற அவரே தன்னிலை மறந்து அவளை வசைப்பாட்டு பாடி கரும்பலகை துடைப்பானை பயன்படுத்து என குடுக்க, விவரம் அறியா மாணாக்கள் ஏளனமாய் சிரித்து விடுகிறார்கள். 

உதவி புரியவேண்டிய இரண்டாவது தாய் என்ற நிலைக்கு உயிர்தான அவரோ தலைமை ஆசிரியை இடம் அழைத்து செல்ல அவரும் சளைக்காமல் திட்டிவிட அவளோ உடைந்தே பொய்விட்டாள், ஆசிரியைகளோ பாவம் அவர்களுக்கும் கூட இதன் மேல் ஓர் வெளிப்படையான அறிவு சார்ந்த  பார்வை அமைந்திருக்கவில்லை அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையின் காரணம், அவர்களுக்கும் கற்பிக்க ஆட்கள் இல்லாமல் இருந்திருக்கிறார்கள், அவள் வீட்டில் தாயிடம் சொல்ல  அவளும் இவளுக்கு ஆதரவாய் வார்த்தைகள் கூறவில்லை விளைவு, அவமானம் என்ற விவரம் அறியா வார்த்தைக்குள் அகப்பட்டு, கேலி செய்வார்கள் என பயத்தினால் ஏழாம் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள், இதில் யார் மேல் தவறு விவரத்தை அளிக்க மறந்த பெற்றோரா, அரவணைத்து உதவி செய்திருக்க வேண்டிய ஆசிரியரா,உடன் இருந்து தோள் கொடுத்த்திருக்க வேண்டிய தோழமைகளா? தற்கொலை முடிவெடுத்த அவளா  யார் காரணம்? 

ஓர் ஏளன சிரிப்பு, அனுபவ அறிவை கூட பகிரா நிலைமை, தன்னிலை மறந்த ஆசிரியரின் போக்கு,தள்ளி வைக்கும் மூடத்தனம், உடைந்தவளை உடனிருக்கேன் என சொல்ல தவறிய வார்த்தை இவற்றிற்கு பலி, விலைமதிப்பில்லா உயிர்..சொல்லிவிட எத்தனித்த அனைத்தையும் வரிகளில் உணர்ச்சிகளாய் கொட்டிவிட எண்ணிய அவள் ஆத்மாவின் கொந்தளிப்பாகவே கருதுகிறேன்,அவள் ஆத்மா கூறும் அனுபவத்தை கேளுங்கள்.,

அணைத்திருக்க வேண்டிய கைகள் அணைக்கவில்லை,கைகள்  கொடுத்திருக்க வேண்டிய கைகள் கொடுக்கவில்லை,பகிர்ந்திருக்க வேண்டிய உதடுகள் பகிரவில்லை,சிந்தித்திருக்க வேண்டிய மூளையும் சிந்திக்காமல் மழுங்கி போனதா மானிட பதர்களா!


நெறி:

வார்த்தைகளின் அர்த்தங்கள் நாம் உருவாக்கியதே!!  உணர்ச்சிகளும் நம்மிடம் இருந்தே வருகிற ஊற்று,அதன் திருகாணியை திருகினாள் வீணாவதை தடுத்து விடலாம்,சிரிப்பில் கூட தன்னிலை மறவாதீர்கள் இன்னொருவரின் தோல்வி, உங்களை மகிழ்விக்காதிருக்கட்டும் மனிதனாய் ஜனித்திருப்போம்.தெரிந்து கொண்ட திருப்தியின் முடிவில் தலையாட்டினர் மகிழும்,அவன் தங்கையும் அப்படியே நீங்களும்.!

இவண்.,

திவாகர் பாலசுப்ரமணியன்,

உதவிமகிழ்,

பூவுலகில் ஓர் மாவட்டம் கரூர்.


 

 

2. k2k-00002 

அவமானம் என்ற சொல் பார்த்தவுடன் நினைவுக்கு வருவது..நம் வாழ்க்கையில் பிறந்தது முதல் எங்கேயெல்லாம் அவமானப்பட்டோம்..பள்ளியில்,கல்லூரியில், வீட்டில், நட்பு வட்டாரத்தில், உறவினர் மத்தியில், வேலையில். இப்படி சிலபேருக்கோ பல பேருக்கோ சில இடத்தில் அவமானம் பட்டு இருக்கலாம்." இது மட்டுமா அவமானம்?" என்றால் இல்லை.. நாம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் பேசினால் அவமானமா..மற்ற மொழிகளில் பேசினால் பெருமிதமா இப்படினு நம் மனதில் பதிய வைத்துவிட்டார்கள் இந்த சமுதாயம்  தமிழ் நம் அடையாளம் என்று தெரியவில்லை. இப்போது நாம்  ஒரு சுவாரஸ்யமான கதையை  பார்ப்போம்.. 

பாடசாலை என்ற ஊரில் ஒரு சிறிய குடிசையில்  அம்மா அப்பா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகள் கல்யாண வயதில் இருக்கிறாள் மகன் பெயர் கல்லூரியில் நன்கொடை இல்லாமல் சேர வாய்ப்பு தேடுகிறான். சிறிய குடும்பம் என்றாலும் அன்பான குடும்பம். அப்பா அம்மா இருவரும் விவசாய வேலை செய்பவர். மகளுக்கு வரன்கள் நிறைய பேர் வந்தாலும் குடிசை என்பதால் வசதியாக இல்லை என்று சொல்லிவிட்டு  போய்விட்டார்கள். அவர்களுக்கு அது அவமானாக இருந்தாலும் எதிர்பார்த்தது தான். ஆனால் அவள் மகள் ஒரு முடிவில் இருந்தால் வசதி வாய்ப்பு பார்க்காமல் எவன் நான் மட்டும் வேணும் என்று கேட்கிறானோ அவனிடத்தில் தான் என் கைகளை கோர்ப்பேன் என்ற முடிவில் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தால் அவர்கள் அப்படி ஒருத்தன் எப்போ வருவான் நாங்கள் அதுவரை உயிரோட இருப்போமா என்றால் எங்களுக்கு தெரியாது. இந்நிலையில் நீ இப்படி சொல்கிறாய். அதற்குள் அங்கு வந்த தம்பி,  "அக்கா இந்த உலகில் அப்படிப்பட்ட நல்லவர்கள் தேடுறது ரொம்ப கஷ்டம்" என்றான் " இல்லை தம்பி நான் என் முடிவில் தெளிவாக இருக்கிறேன் இதோட 10 பேர்க்கு மேல் பொண்ணு பார்த்து போய்விட்டனர், நானும் ஒவ்வொரும் நாளும் அலங்காரம் பண்ணிக்கிட்டு அவங்க முன்னாடி நின்று தேநீர் அருந்த கொடுத்து  பின்னர் வசதி இல்லை" என்று சொல்லியே போய்விட்டனர் அவர்களுக்கு பதில் "நான் ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளுக்கு தேநீர் கொடுத்திருந்தால்  நம்மகிட்ட அது  உண்மையா பாசமா இருந்துருக்கும்.உங்ககூடவே இந்த கிராமத்திலே அழகான இயற்கையை ரசித்து சுதந்திரமாய்  பறக்கும் பறவையாய் வாழ்ந்துகிட்டு போறேனே" என்றாள். அடுத்த நாள் மாலையில் தம்பி வீட்டில் உள்ளே நுழைந்தான் அக்கா பார்த்து கேட்டாள் ஏன்டா சோகமா வர உனக்கு என்ன ஆயிற்று அதற்கு தம்பி எனக்கு ஒன்னும் ஆகல " நிறைய மார்க் எடுத்தும் எந்த கல்லூரிக்கு போனாலும் நன்கொடை, சாதி மதம் பார்த்து தேர்வு செய்கிறார்கள்.இதுக்கு நான் ஏன் நிறைய மார்க் எடுக்கணும் காசு கொடுத்தாலே போதும் என்றால் அதற்கு எதற்கு பப்ளிக் தேர்வு, மாதத் தேர்வு, கிளாஸ் டெஸ்ட், வீட்டுப்பாடம் ஒன்றுமே புரியல அக்கா.. "எனக்கு அவனமானமா இருக்கு" அதற்கு அக்கா "நீ என் தம்பி அவமானம் பாடணும் இதற்கு அவர்கள் தான் அவமானப்படணும்". அது மட்டும் இல்லை அக்கா கல்லூரி படிவத்தில் தந்தை தொழில் இருக்குற இடத்தில விவசாயி என எழுதிக்கொடுத்தேன். இது பெரிய கல்லூரி இங்கு பெரியவீட்டு  பசங்கள் படிக்கிற இடம்னு சொல்லி வெளியே அனுப்பி விட்டார்கள் என்று கண்கலங்கி சொன்னான். பின்னர் இருவரும் கூட்டுச்சேர்ந்து  தொழில் ரீதியாக சேர்ந்து அதில் பன்மடங்கு லாபம் வந்ததை இவர்கள் இருவரும் ஒரு கல்லூரியை நிறுவி எந்த பாகும்பாடும் காட்டாமல் எல்லாம் மாணர்வர்களுக்கும் வாய்ப்பை அளித்து அந்த ஊரில் இவர்கள் நிறுவிய கல்லூரி  முதல் இடமாக பிடித்து திகழ்கின்றது. 

நெறி: ஒருவரை எளிதாக அவமானப்படுத்திவிடலாம் ஆனால் அது ஆணித்தரமாக அவர்கள் மனதில் பதிந்து விடும் அதை மறக்கிறது தான் பெரிய போராட்டமாக இருக்கும். யாரையும் அவமானப்படுத்தாதீர்கள் தெரிந்தும் தெரியாமலும் ஒரு சிலருக்கு அது தற்கொலைக்கு தூண்டும்படியாக கூட இருக்கலாம்.         

குறிப்பு: யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் கற்பனையே..!!

 

லக்ஷ்மி பிரியா 

 

K2K00003

அவமானம் 

அன்னிக்கு நடந்த சம்பவத்தை என்னால லைஃப் லாங் மறக்கமுடியாது கீர்த்தி ஏன்னா அப்பிடி ஒரு பொன்ன மிஸ் பண்ணிட்டேன் ....ஏன்னடா, அண்ணா அண்ணி உன்ன பிடிகலனு சொல்லிடாங்களா இவ்ளோ பீல் பன்ற .நானா இருந்தா ஓவர் ஆஹ் பன்றான்னு சொல்லிட்டு வந்துருப்பேன். அடிவேணுமா உனக்கு யார் அவன் நீ சரி இல்ல டாய் அண்ணா நா சும்மா விளையாட்டுக்கு சொன்ன டா அப்டிலா யாரும் இல்ல நா உன் தங்கச்சி டா நம்பு ..அதுனாலதான் நம்பமுடியல உன் ஃபோன்ன குடு..."மற்றவர்களின் தொலைபேசியைச் சரிபார்ப்பது கண்ணுக்கு தீங்கு விளைவிக்கும்...இதுல செந்தமிழ் வேற ஒருநாள் மாட்டாமய போயிருவ அப்போ இருக்கு பாய் டாடா ராம் எனக்கு ஒர்க் இருக்கு. சாப்புட்ற ஒர்க் தானா ...உன்னை மாதிரி நெனட்சியா நான் என் ப்ரெண்ட் இந்துவ மீட் பண்ண போறேன் குரூப் ஸ்டடி ஏய்! என்ன பேர் சொன்ன இந்து வா.. அவ நேமே கூட இந்து  தா பாரஹ்  அத்துகாக உன்னையும் கூட கூடிட்டு எப்டி போறது ..அவ ஆல்ரடி கமிடெட் என்ன கொடும  இது இந்த குட்டி பிசாஸஹ் எப்டி வழிக்கி கொண்டு வரது...நீ மைண்டுவாய்ஸ் னு நெனச்சி சவுண்ட் ஆஹ் பேசிட்டு இருக்க...இந்த அவமானம் உனக்கு தேவையா...சீக்கிரம் கீழ்பாக்கம் தா....அடியே உன்ன னு தொரத்துரேன்....             

  

(   இப்டிதங்க நம்ப மனசுல தௌசண்ட் சோகம் இருந்தாலும் இந்த மாதிரி குட்டி பிசாசுங்க கிட்ட அவமானம் பட்டு விளயாடுறது எல்லாத்தையும் மறக்க வச்சிரும்.........).                       

-Sindhuja.M 

 

 

4.K2K00004

அவமானம்: 

வானம் பார்த்த பூமியும், வைகை ஆத்த நம்பியும் விவசாயம் செய்யுற மதுரை பக்கத்தில் ஒரு விவசாய கிராமம் அது. முன்பெல்லாம் வானம் கணக்கு பாக்காம, ஏமாதாம அள்ளி தந்ததால பசுமையும், பயிரும், மகிழ்ச்சியுமா இருந்தது ஊரு. திருவிழா, கண்ணாலம், காது குத்துனா அங்காளி பங்காளி எல்லாம் ஒன்னா சேர்ந்து ஒரே குடும்பமா நின்னு ஊரே கொண்டாடி தடபுடல் பண்ணிடுவாங்க. ஆடு, மாடு, கோழி, நாயி மேல கூட கொள்ள பாசம் வச்சிருப்பாங்க அப்படி ஒரு மண்வாசம் மாறாத ஊர்.

அந்த ஊர்ல உள்ள தலைகட்டு தான் சுப்பையா. அவருக்கு மீனாட்சினு ஒரு சம்சாரம், மூணு பயலுங்க, ரெண்டு பொட்ட புள்ளைங்க. ரெண்டு பொட்ட புள்ளையையும் நல்ல குடும்பதில கல்யாணம் பண்ணி கொடுத்திட்டார். மூத்தவன் வேலன் நல்லா படிச்சி மதுரையில சர்கார் உத்தியோகம் பார்க்கிறான். அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி. இரண்டாவது பையன் சுந்தர், சுப்பையா கூடவே விவாசயம் பார்த்திட்டு இருந்தான். அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி மனைவி பேரு மகிழினி, பையன் அழகன். கடைசி பையன் பேரு மணி அவன் மெட்ராஸ்ல படிச்சிட்டு அங்கேயே ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்த்திட்டுருந்தான். 

ஒரு நாள் மலைக்காலம் ஆரம்பம் அது, உடம்பு சரியில்லாம இருந்த சுப்பையா இறந்து போனார். சொந்த பந்தம் எல்லாரும் வந்து ராஜ மரியாதையோட அவர வழியனுப்பி வைச்சாங்க. வந்த சொந்தம் பந்தம் போறதுக்குள்ள சொத்து பிரச்சனை ஆரம்பிச்சிட்டாங்க. ஊர் பெருசுங்க எல்லாம் சேர்ந்து சொத்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சிக்கு சரிக்கு சமமா பிரிச்சி கொடுத்தாங்க. சுந்தருக்கு விவாசய நிலம் கொஞ்சமும், இருக்கிற வீட்டையும் கொடுத்தாங்க. அவங்க அவங்க பங்க வாங்குனதும் வித்திட்டு அவங்க அவங்க குடும்பத்தோடா வேற ஊர்க்கு போய்டாங்க. கொஞ்ச நாள்ள மீனாட்சியம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க.இயற்கையும் வாழ்க்கையும் இணைந்து போயிட்டிருந்த சுந்தர் வாழ்க்கையில அந்த வருசம் பஞ்சம் எல்லாத்தையும் திருப்பி போட்டிருச்சி. வானம் பொய்ச்சிடுச்சி, போட்ட பயிரெல்லாம் தண்ணியில்லாம கருகி போச்சி. கையில இருக்கிற விதை பயிர கூட வித்து செலவு செஞ்சாச்சு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்ல அப்படி ஒரு கஷ்டம், என்ன பண்றதுனு தெரியல வேற வழியே இல்லாமா அவன் குடும்பத்தோட அண்ணண்கிட்ட உதவி கேட்கலாம்னு மதுரைக்கு போனான். வந்தவங்களுக்கு சாப்பாடு போட்டாங்க அவங்க அண்ணி, நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆனதால அழகன் அவசரபட்டு எல்லாத்தையும் வேக வேகமா சாப்பிட்டான். அத பார்த்த அவங்க அண்ணி இது என்ன காணாதத கண்ட மாதிரயில உன் பையன் சாப்பிட்ரான்னு சொன்னாங்க. அத கேட்டதும் அவன் சொல் முடியாம மனசுல அழுதிட்டு பாதி சாப்பாடோட எழுந்திட்டான். அப்பறம் அவங்க அண்ணன்கிட்ட அவன் வந்த விசயத்த சொன்னான். அதுக்கு அவரு அப்பவே அந்த ஒன்னுக்கும் ஆகாத விவசாயத்த விட்டுட்டு என் கூட வந்து வேலை பாருனு சொன்னேன் நீ கேட்கல. இங்க எனக்கே ரொம்ப பிரச்சனை இதுல எங்க உனக்கு பணம் தாரது, தப்பா நினைச்சிக்காத சொல்லிட்டாரு. அதுக்கு மேல அவனுக்கு அங்க இருக்க புடிக்கல, அவனும் உடனே ஊருக்கு கேளம்பிட்டான். வேற வழியில்லாம வீட்டை அடமானம் வச்சி அந்த வருசம் சாமாளிச்சான். அப்போது மணிக்கு தை மாசம் கல்யாணம் முடிவாச்சி. மணி எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்க வந்தான். சுந்தர் இருக்க நிலைமைய பார்த்திட்டு அவன் வேண்டா விருப்பா பத்திரிக்கை வைச்சிட்டு ஒரு வாய் சாப்பிடாம கூட போய்டான். அவன் போனதும் கல்யாண பத்திரிக்கைய படிச்சு பார்த்தா மகிழினி அதுல மத்த ஆளுங்க பேரு எல்லாம் இருந்துச்சி சுந்தர் பேரு மட்டும் இல்ல, அத சுந்தர் கிட்ட சொல்லி அவ பொலம்புனா. அதுக்கு சுந்தர் அவன் பெரிய பெரிய எடத்துல போய் பத்திரிக்கை வைப்பான் அதுல என் பேரு பாட்ட நல்லா இருக்காதுனு பொட்டிருக்க மாட்டான். அத விட்டுத்தள்ளு நாம என்ன பண்ணாலாம் அவனுக்கு என்று அவன் மகிழினி கூட பேசிட்டுருந்தான். அதுக்கு அவ நாம இருக்க நிலைமைக்கு என்ன பண்ண முடியும் நமக்கும் அடுத்து பையன் இருக்கான் அவனையும் படிக்க வைக்கனும் பார்த்து செய்யுங்கனு சொல்லிட்டு உள்ள போயிட்டா மகிழினி. கல்யாண நாளும் வந்துச்சு மதுரையில பெரிய மண்டபத்தில கல்யாணம் , வந்தவங்க எல்லாம் பெரிய இடம். சுந்தரும் அவன் குடும்பத்தோட வந்தான் அவன் வந்த கோலத்த பார்த்ததும் மணிக்கு வந்தது கோபம், எள்ளும் கொள்ளும் வெடிக்க அவன் சுந்தர பார்த்து ஒரு நல்ல துணி போட்டு வர வேண்டியதானே ஏன் என் மானத்த வாங்குற அப்படினு கேட்டான். இதகேட்டு அவன் மனசு உடைஞ்சிடுச்சு, அவன் அண்ணனும், அக்கா, தங்கச்சியும் அவன கண்டுக்கல அவன் ரொம்பவே நொந்து போயிட்டான். அவங்க அப்பா சுப்பையா இடத்துல இருந்து கல்யா. 

-மணிகண்டன்

 

 

5. K2K - 00008

 அவமானம் - முதுமையில்!!! 

சென்னையிலுள்ள ஒரு பெரிய ஓட்டலின் அரங்கம் முழுவதும் மக்கள் கூட்டம். காண்போரை கண் கூச்சச்செய்யும் வண்ண விளக்குகள். மேடையில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் சில முக்கிய அமைச்சர்கள். இவர்களுக்கு மத்தியில், வெள்ளைச் சட்டையும், கருப்பு பேண்ட்டும் காலில் கருப்பு நிற ஷூவும், அணிந்து மிகமரியாதையுடன் மேடையில் அமரந்திருந்தார் சமூக சேவகர் செழியன்.பாராட்டு விழா.சமூக சேவகர் செழியனுக்கு பாராட்டு விழா. நாள்தோறும் தொலைக்காட்சியில் இடம் பெறும்ஒரு முக்கிய செய்தியாக மாறிய சமூக சேவகர் செழியனுக்கு நம் மாநில முதல்வரால் பாராட்டு விழாநடைபெறுகிறதுஎன்று விழா அமைப்பாளர் மேடையில் முழங்கிக் கொண்டருந்தார்.சமூக சிந்தனையே சிறந்தது என்று தான் படிக்கும் காலத்திலிருந்தே பல சேவைகளில் ஈடுபட்டு, ஈடுபட்ட அத்தனை சேவைகளிலும் வெற்றிப் பெற்று, உழைப்பால் அனைவரையும் தன்பால் ஈர்த்த மாமனிதர் செழியனுக்கு இந்த தங்கப்பதக்கத்தை ஆளுநர் வழங்குவார் மற்றும் தமிழக முதல்வர், செழியனுக்கு பாராட்டுச் சான்றிதழைவழங்கி கவுரவிப்பார்என்றவுடன் விண்ணை அதிரும் கர ஒலி பிறந்தது. இடி இடித்தது போன்று விண்ணைமுட்டும் வாழ்த்தொலிகள்செழியன் வாழ்க! செழியன் வாழ்கஎன்று அந்த ஓட்டல் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. திடீரென்று காதை அடைக்கும் ஒரு சத்தம் ஏற்பட்டதால் பதறி எழுந்த செழியனுக்கு தான் கண்டது கனவு என்றுஅப்போதுதான் உரைத்தது. “விடியற்காலையில் என்ன இப்படியொரு கனவு, விடியற் காலைக் கண்ட கனவுகள் எப்படியும் ஒரு வாரத்திற்குள்பலிக்குமாம்; நல்லது நடந்தால் சரிஎன்று படுக்கையிலிருந்து எழுந்து தன் இரண்டு கைகளையும் ஒன்றாய் இணைத்து, நன்கு தேய்த்துவிட்டு முகம் முழுக்க அந்த சூட்டைப் பரப்பி கண்களை மெதுவாக திறந்து அலைபேசியை ஒளிரச் செய்து நேரத்தைப் பார்த்தான். மணி காலை 5.30 நிமிடம் என்றிருந்தது. “இன்று சற்று அதிக நேரம் தூங்கிவிட்டோமோஎன்று நினைத்துக்கொண்டே உடனே படுக்கையை உதறி எழுந்துவிட்டு, பல்தேய்த்து முகம் அலம்பி, அரை நிக்கரை எடுத்து அணிந்துக்கொண்டு, வழக்கமாக போகும் அருகிலுள்ள பூங்காவில் நடைபயணத்தை மேற்கொண்டான். நடைப்பயிற்சிக்கு பின்பு சிறிது நேரம் மூச்சுப்பயிற்சி என்று முடித்துவிட்டு வீட்டை அடைந்து, குளித்துஉணவருந்தி, உடையணிந்து கிளம்புவதற்கு மணி எட்டு ஆகியிருந்தது. செழியன் ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞரிடம் ஜூனியராக பணிப்புரிந்து வருகிறான். கூடவே மாலையில் தனியாக, ஒரு இலவச சட்ட மையமும் வைத்து நடத்திக் கொண்டு வருகிறான்.  

அன்று மாலை பணியைவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வரும்போது எதிரே ஒரு முதியவரை இரண்டு இளைஞர்கள் வழிமறித்து தகராறில் ஈடுப்பட்டிருந்தனர். அதனை கண்டும் காணாததுப் போல பலர் சென்றுகொண்டிருந்தனர். செழியனுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் இரக்கக் குணம் அதிகம். அதனால், இந்த இரண்டு இளைஞர்களையும் விலக்கிவிட்டு முதியவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சாலையில் ஓரத்தில் உட்கார வைத்தான். அந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் அவர்களிடம் சென்ற செழியன்ஏன் இந்த பெரியவரிடம் தகராறு செய்துக் கொண்டிருக்கிறீர்கள்என்று கேட்டான். அதற்கு அவர்களில் ஒருவனான ராமுநீ யார்? உனக்கு என்ன பிரச்சினைஎன்று செழியனை நோக்கிகேட்டான். “நடுரோட்டிலே ஒரு முதியவரிடம் தகராறு செய்துக் கொண்டிருக்கிறீர்கள். என்ன என்று கேட்டால், நீயாரென்று என்னை எதிர் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். ஏன் இந்தப் பெரியவரிடம் தகராறு செய்துக்கொண்டிருக்கிறீர்கள்என்று மீண்டும் சற்று அதட்டலாக கேட்டான் செழியன். “அவர் எங்கள் தாத்தா, நாங்கள் இருவரும் அவரின் பேரன்கள். அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார். அதனால், நாங்கள் அவரை வலுக்கட்டாயமாக எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரை கூப்பிட்டுக்கொண்டிருந்தோம்என்றனர் அதில் ஒருவனான சோமு. “தாத்தா என்கிறீர்கள். அதற்காக அவரை ஏன் இப்படி கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டும். சரி. கொஞ்சம் இங்கேயே இருங்கள். நான் என்னவென்று விசாரித்து பிறகு உங்களுடன் அனுப்புவதா வேண்டாமாஎன்று தீர்மானிக்கிறேன்என்று கூறிவிட்டு அந்த முதியவர் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றான் செழியன்.

தாத்தா என் பேரு செழியன். நான் வழக்கறிஞராக இருக்கிறேன். இவர்கள் இருவரும் உங்களை தங்கள்தாத்தா என்று சொல்கின்றனர். ஆனால், நடுரோட்டில் நடந்துக் கொள்ளும் முறை கொஞ்சமும் சரியில்லை. நீங்கள் சொல்லுங்கள் அவர்கள் உங்கள் பேரன்களா?” என்று வினாவைத் தொடுத்தான். 

அந்த முதியவர் சற்று தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துக் கொண்டு விம்மத் தொடங்கினார். அவர் ஏன் இப்போது அழுகிறார் என்று செழியனுக்கு புலப்படாமல் போகவே, “தாத்தா என்ன ஆச்சு உங்களுக்கு. ஏன் இப்ப அழறீங்கஎன்று பொறுமையாக கேட்டான்.

அதற்குள் ராமுவும் சோமுவும் செழியனை நெருங்கிபாஸ், அவர் எங்க தாத்தா தான். அதற்காக உங்களுக்குஎங்க வீட்டு ரேசன் கார்டெல்லாம் காமிச்சுதான் நீரூபிக்கணும்னு அவசியமில்லை. தாத்தா ஏந்துரி, கண்டவன்கிட்டல்லாம் என்னை பேச்சு வாங்க வச்சுகிட்டு. ஒழுங்கா விட்லயே இரு. எங்கனாவது ரோடுல போய்திரிஞ்சுகிட்டுருந்தன்னு வை, கால கைய ஒடச்சி உக்கார வச்சிடுவேன். ஜாக்கிரதைஎன்று கூறிவிட்டுரோட்டுல எவனாவது எப்படியாவது போறான் உனக்கென்ன, மூடிக்கிட்டு கிளம்புஎன்று செழியனைப் பார்த்துசொன்ன நொடியில் சோமுவின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது. செழியனின் கைக்கு லேசாக வலியும்எடுத்தது.

தம்பி, தம்பி... ஏன் அடிக்கிறீங்க அவங்களை. அவனுங்க என் பேரன்தான்என்றார் முதியவர். “தாத்தா, என்ன ஆச்சுன்னு நீங்க சொன்னீங்கன்னா தான் தெரியும். சொல்லுங்க?”என்றான் செழியன். “என்னத்த சொல்ல தம்பி. வாழுகிற காலம் வரைக்கும் இவனுங்க கிட்டயும், நான் பெத்துவச்சிருக்கிற புள்ளைககிட்டயும், என் மருமகள்க கிட்டயும் நான் படணும்னு என் தலைல எழுதியிருக்கு. அதை யாரால மாத்த முடியும். என் தலையெழுத்துஎன்று சோக பெருமூச்சு விட்டார் முதியவர். சற்று நேரம் கழித்து தொடர்ந்தார். “தம்பி, ஒரு வீட்டுல பெரியவன்னு ஒருத்தன் இருந்தா, நாலு நல்லதுகெட்டது சொல்லத்தான் செய்வாங்க. ஆனா, இதுங்க மாதிரி ஜென்மங்களுக்கு சுய புத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாது.  நான் எந்த நல்லத சொன்னாலும், அதுல ஒரு குத்தத்தை கண்டுபிடிச்சு, என்னதிட்டுறதுதான் இவனுங்களுக்கும் இவங்க ஆத்தாள்களுக்கும் வேலை. இப்பக்கூட ஒரு நல்லத சொல்லித்தான்திட்டு வாங்கி, எச்ச தட்டுல அடி வாங்கி அவமானப்பட்டு, எங்கயாவது போயிடலாம்னு பார்த்தா, அதுக்கும்வழியில்லை இவனுங்க கிட்ட 

 

இப்பவும் ஏன் இவர்கள் உங்களை தடுக்கிறார்கள் தாத்தாசெழியன் முதியவரிடம் அன்பாக கேட்டான். “எல்லாம் என் பேருல இருக்கிற சொத்து பணம் தான் தம்பி. இவனுங்க பாட்டி, அதான் என் பொண்டாட்டிஅப்பவே சொல்லுச்சு, உங்கக்கிட்ட இருக்குற சொத்தை யாருக்கும் பிரிச்சு கொடுத்துராதீங்க. அவனுங்கநட்டாத்துல விட்டுட்டு போயிருவானுங்கன்னு. நல்ல வேளை, அந்த ஒரு விசயத்துல நான் அவள் பேச்சைக்கேட்டேன். இல்லன்னா எப்பயோ என்ன தொரத்தி விட்டுருப்பானுங்கஎன்று வருத்தத்துடன் சொன்னார்முதியவர்.

இப்பக்கூட அந்த சொத்துக்காகத்தான் என்னை வலுக்கட்டாயமா கூட்டிட்டுப்போக வந்திருக்கானுங்கஇவனுங்கஎன்று. தொடர்ந்தார் முதியவர். “யோவ் கிழவா, நம்ம ஊட்டுக்கதையை வரவன் போறவன்கிட்டலாம் சொல்லிட்டு இருக்கஎன்று சொல்ல ராமுவாயைத் திறந்தான்.  சோமுவின்  மூக்கைப் பார்த்துவிட்டு அமைதியானான்.

ஏன் தாத்தா, இவர்கள் தான் இவ்வளவு தொல்லையும் அவமானமும் செய்திருக்கிறார்களே, நீங்கள் ஏன்இன்னமும் அமைதியாய் இருக்கீங்க. நேராக காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டியது தானே?” என்று செழியன் கேட்டான். “என்னதான் இருந்தாலும் நான் பெத்த புள்ளைங்க தானப்பா. என்ன செய்யிறது. எல்லாம் என்தலையெழுத்தேன்னு போயிக்கிட்டுருந்தேன். ஆனா இனிமே அந்த வீட்டுல ஒரு நிமிசம் கூட இருக்க மாட்டேன். நீ ஒரு உதவி பண்றியா, எனக்கு ஒரு நல்ல வக்கீலா இருந்தா சொல்லு, என்னோட எல்லா சொத்தையும்ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு எழுதி கொடுத்துட்டு அங்கேயே இருந்துடறேன்என்று மிக வருத்தமாகமுதியவர் செழியனிடம் கேட்டார்.

தாத்தா, நானே ஒரு வழக்கறிஞர் தான். வாங்க, உங்களுக்கு ஒரு நல்லது செய்து கொடுக்கிறேன்என்றுபரிவுடன் செழியன் கூறியதும், முதியவர் அவனை ஒரு மரியாதையுடன் அவன் கையை பிடித்துக்கொண்டுஅவனுடன் சென்றார். அந்த இரண்டு இளைஞர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

 

மறுநாள் காலை செழியன் முதியவரை அவனுடைய வண்டியிலேயே உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, தனது அலுவலகத்திலேயே  அன்னை ஆதரவற்றோர் இல்லம்என்ற ஆதரவற்றோர் பள்ளிக்கு அவர் சொத்தைபதிவு செய்து கொடுத்தான். பிறகு, அந்த முதியவரிடம் ஒரு விண்ணப்பமும் வைத்தான். அந்த முதியவர் அவனைஅதிர்ச்சியோடும் ஆசையோடும் பார்த்தார்.

தாத்தா, என்னைப் பெற்றவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். நான் பிறந்த பிறகு அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்கிக் கொண்டு, என்னை ஆதரவற்றோர் பள்ளியில்சேர்த்துவிட்டு அவர்கள் வழியைத் தேடிக் கொண்டனர். பள்ளியில் படிக்கும்போதும் என்னை அத்தனைமாணவர்களும் அனாதை என்று கேளிச் செய்து அவமானப்படுத்துவார்கள். அதனால் என் மனம் அதிகம் புண்படும். அதனையும் மீறி என் படிப்பின் மீது கவனம் செலுத்தி இன்று வழக்கறிஞராய் இருக்கிறேன். இதுவரை எனக்குயாரும், நல்லது சொல்லியோ, சிறுவயதில் எந்த தாத்தா பாட்டிகளும், எனக்கு கதைகளோ சொன்னதில்லைதாத்தா. இப்போது நீங்கள் சொத்து சுகத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதிக் கொடுக்கும்போது உங்களைஏன் நான் என் தாத்தாவாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் வந்தது. நீங்கள் விருப்பப்பட்டால்என்னுடன் என் வீட்டிற்கே வந்து எனக்கு தாத்தாவாக இருக்க முடியுமாஎன்று தன் விருப்பத்தை முதியவரிடம் கூறினான். முதியவரின் கண்கள் பனித்தது. “எந்த காலத்துல நான் என்ன பாவம் செஞ்சேனோ எனக்கு அந்த மாதிரி பணத்தாசை புடிச்ச, பெரியவங்களை மதிக்கத் தெரியாத புள்ளைங்க கிடைச்சது. ஆனா, நீ யாரோ என்னவோ, நேத்தி சாயங்காலத்துல இருந்து உன் தாத்தாவாவே என்ன நடத்துற, இது நான் எந்த ஜென்மத்தில செஞ்சபுண்ணியம்னும் தெரியலை. இந்த வயசான காலத்துல என்னைய கூட்டி வச்சிக்கணும்னு சொல்ற. ஆனா நீயும்என்னை ஒரு சமயத்துல பாரமா நினைச்சிட்டீன்னா என்ன பண்றது தம்பிஎன்றார். “தாத்தா, இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை புரியும். இருக்கிறவங்களுக்கு அது தெரியாது. அதனால்நீங்க எனக்கு என்னைக்கும் பாரமா இருக்க மாட்டீங்க தாத்தாஎன்று கண்கள் கலங்க முதியவரிடம்சொன்னான்.

 

சரி தம்பி, நேத்தி நான் வீட்டுக்கு வரும்போது, ஒரு அம்மா மடியில தலைவெச்சு படுத்துட்டுருந்தியே, அவங்கயாரு? உனக்குத்தான் யாருமில்லைன்னு சொன்ன” “ஆமாம் தாத்தா. அவங்களதான் என் அம்மாவா நான் நினைச்சிட்டுருக்கேன். அவங்க ஒரு வருசத்துக்குமுன்னாடி, சாலையில் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. நான் இப்போ அவர்களை என் அம்மாவாகதத்தெடுத்துகிட்டேன் தாத்தா”.

முதியவரின் கண்களில் அவரை அறியாமல், கண்ணீர் காவிரியாய் விரிந்தது. அந்த முதியவரை மெல்லஅணைத்துக்கொண்டு சென்று, தன் வீடு நோக்கி வண்டியில் பயணித்தான் செழியன். செழியனின் கனவு பலித்தது. ஆம். அவனுக்கு கிடைத்த பதக்கம், அந்த பெரியவரின் பாசம். அவனுக்கு கிடைத்தசான்றிதழ், அந்த முதியவரின் அனுபவம். அந்த கர ஓசை, அவனுக்கு கிடைத்த மகிழ்ச்சியின் உச்சம். அந்தவாழ்த்தொலிசெழியன் வாழ்கஎன்பது அந்த முதியவரின் ஆசிர்வாதங்கள்.

வீட்டிலுள்ள பெரியவர்களை மதித்து நடத்துங்கள். அவர்களும் உங்களைப் போன்று மனிதர்கள் தான். உங்கள்வயதை கடந்து வந்தவர்கள் தான். அவர்களை மரியாதையுடனும், அவமானப் படுத்தாமலும் நடத்துங்கள். நாளைநீங்களும் முதுமை அடையலாம். அப்போது உங்களுக்கும் இது போல் நேரலாம். அதனால் பெரியவர்களைமகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவில்லையெனினும் அவமானப்படுத்தாதீர்கள். 

-அன்பரசு மகாதேவன் 

() 

எழுத்தாளர் அகத்தியன் 

பொழிச்சலூர், சென்னை

 

 

6. 17.K2K 00011

 

அம்மா மணி எட்டரை. பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. சாப்பாடு ரெடியா? இந்தா வரேன் கவிதா. இந்தா சாப்பிடு. ஏம்மா கலர் பென்சில், சாட் வாங்கணும். முப்பது ரூபாய் கொடும்மா. நீ போ பின்னாடியே நான் வாங்கிட்டு வர்றேன். என்னது அப்புறம் வாங்கிட்டு வர்றியா. இப்ப ரூபாய் தரலேனா நான் பள்ளிக்கூடத்துக்கு போகலை. ஏம்மா நான் என்ன சின்ன புள்ளையா? டீச்சருக்கு படிக்கிறேன். ஒரு கலர் பென்சில் இல்லைனா என்னை கேவலமா பாப்பாங்க. ஒரு தடவை பொறுத்துக்க. எதிர் வீட்டில் இருக்கும் அக்கா ஒன்பது மணிக்கு தர்றேன் ன்னு சொல்லி இருக்காங்க. தினம் கடன் கடன் அசிங்கமா இருக்கு. சாப்பாட்ட நீயே சாப்பிடு கவிதா வெறும் வயிறா போகாத. படிக்க முடியாது. நான் கத்திக் கொண்டே பின்னால் சென்றேன். திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள். பெற்ற வயிறு வலித்தது. கண்ணீரை துடைத்து விட்டு எதிர் வீட்டுப் படியில் போய் நின்று எட்டிப் பார்த்தேன். அக்கா வராமல் குரல் வந்தது. பத்து மணிக்கு தர்றேன். வீட்டில் உட்காரவும் முடியல. வெளியே போகவும் முடியல.

கடிகாரம் கூட மெதுவாக நகர்ந்தது. ஒரு வழியாக மணி பத்து. ஏன் காமாட்சி அவர் வெளியே கிளம்பறப்ப வந்து நிக்கிற. நேரம் காலம் கிடையாதா? சோத்துக்கே வழியில்லை. அப்புறம் எதுக்கு இந்த வெட்டி பகுமானம். எவனாவது கூலி வேலை பாக்கிறவனா பார்த்து கட்டிக் கொடுக்கிறத விட்டு டீச்சருக்கு படிக்க வைக்கிற. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணாமா? கூனிக் குறுகிப் போய் வீட்டிற்கு வந்தேன். கட்டினவன் நல்லாயிருந்தா இந்த நிலை வந்திருக்குமா,? சாயங்காலம் கவிதா வந்தாள். பாப்பா இந்தா பென்சில் சாட் வாங்கிக்க. இன்னைக்கு பிச்சை எடுத்தாச்சு.

டப்பால வை. முகம் கொடுக்காமல் பேசினாள். பழகிப் போய் விட்டது.

கவிதாவைப் பார்த்தாலும் பாவமாக இருந்தது. மறுநாள் காலை பரபரவென்று கிளம்பியவள். சத்தமாக இங்க பாரும்மா. நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. ஒன்னாம் தேதி கமிசன். 300 மார்க். உன் பஞ்சப் பாட்ட பாடாம 2000 ரூபா ரெடி பண்ணு. மாடல் செய்யணும். என்ன பாப்பா இப்பத்தான் சொல். எப்ப சொன்னாலும் கடன்தான வாங்கப்போற. என்னமோ பீரோவில இருந்து கொடுக்கிற மாதிரி. ஏம்மா நான் அம்மா. கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசலாம்ல.

படிச்சு சம்பாரிச்சு எனக்கா கொடுக்கப்போற? உன்னை கட்டிக்கப்போறவனுக்கு கொடுப்ப. நீங்க என்ன மாதிரி கடன் வாங்காம நல்லா இருக்கப்போற. அந்த பாக்கியம் எல்லாம் எனக்கிருக்கா?,

படிக்கவே தாளம் போடுது. இதுல கல்யாணம். ஏம்மா தெரியாமத்தான் கேட்கிறேன்.. உங்களுக்கு வசதி இல்லை. அப்புறம் எதுக்கு பிள்ளை பெத்தீங்க? இதுல நான் தான் கஷ்டப்பட்டேன். நீயாவது நல்லா இருன்னு கோளாறு வேற. தகுதி இல்லைன்னா என்னைப் பெறாம இருந்திருக்கலாம். படி படின்னு உயிரை வாங்கி இப்ப எல்லாத்துக்குமே பிச்சை எடுக்க வைச்சிருக்க. சே நல்ல வீட்ல என்னை கடவுள் பிறக்க வச்சுச்சா?  போதும் நிறுத்து. உனக்கு 2000 ரூபாய் தான வேணும். பிச்சை எடுத்தாவது தர்றேன்.

இந்த வெட்டி ரோஷத்துக்கு குறைச்சல் இல்லை. சாமி முன்பு நின்றேன். முடியும் மட்டும் அழுதேன். கழுத்தில் மஞ்சள் கிழங்கை கட்டினேன். கடைசி மிஞ்சியது 2 கிராம் தங்க தாலி. எடுத்துக் கொண்டு போய் விற்று ரூபாய் 2000 வாங்கி வந்தேன். என் மகள் படிப்பைக் காட்டிலும் தாலி பெரிதல்ல. மறுநாள் காலை கைகளில் ஈரம் பட்டு கண் விழித்தேன். ஏம்மா உன் தாலி எங்க?  வித்துட்டயா? மன்னிச்சுடும்மா. என் கூட படிக்கிறவங்க அசிங்கமா கேலி பண்றாங்க. அதனால்தான் உன்னை பேசிட்டேன். என்னால நீங்க நிறைய அவமானப்பட்டுட்ட. நீ நல்லா இருக்கு எவ்வளவு அவமானம் வந்தாலும் தாங்குவேன். அம்மா என்னும் சுமைதாங்கி என்னை இறுகக் கட்டிக் கொண்டது.

 

-.மதுமதி உசிலம்பட்டி

 

 

7. K2K -00013

 

ரஞ்சிதா ஒரு சராசரி பெண்மணி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவளின் கணவர் இறந்து   ஏறக்குறைய  இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன, இரு பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள் "சீனியர் சிட்டிசன்" ஆன ரஞ்சிதா, தன கணவரின் வீட்டில் தனியாகவே வாசிக்க விரும்பியதாலும், கணவரின் "பென்ஷன்" வருகின்றபடியால், அவளை பிள்ளைகளும் உன் இஷ்டம் என்று விட்டுவிட்டார்கள் போன் மூலம் அவர்களுடன் பேசிக் கொண்டு காலத்தை நிம்மதியாக கழித்து வந்தாள். சில வருடங்கள் சென்றன ரஞ்சிதாவிற்கு இப்பொழுது தன்  பிள்ளைகளைப் பார்க்கவும் அவர்களுடன் தங்கி வரவும் விரும்பினாள். ஒரு நாள் மகளை போனில் அழைத்து, "தாயி எனக்கு உங்களுடன் சிறுது நாட்கள் இருக்கவேண்டும் போல் உள்ளது நான் உடனே புறப்பட்டு வருகிறேன் என்று சொன்னால், மகள் சந்தோஷமாக தன்னை வர சொல்லுவாள் என ஆவலுடன் எதிர்பார்த்தவளுக்கு அவள் தன் பிள்ளைகளுக்கு இப்பொழுது பரீட்சை நேரம் மேலும் அவர் ஆஃபிஸில் எல்லோரும் குடும்பமாக டூர் போக ஏற்பாடு செய்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டாள். முதலில் ரஞ்சிதாவிற்கு மனம் சற்று கலங்கினாலும் பிறகு, சில நாட்கள் கழித்து மகனுக்கு போனே செய்தால் போனை எடுத்த மருமகள் அன்பாக, "எப்படி அம்மா இருக்கிறீர்கள்?" டாக்டரிடம் சென்று மறுத்து மாத்திரை எல்லாம் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள் அவர் வெளியே சென்றிருக்கிறார் வந்தவுடன் போன் செய்ய சொல்கிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள். இந்தச் சம்பவம் ரஞ்சிதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மவன் வெளியே போனால் போனை எடுத்துக்கொண்டு போகாமலா இருப்பான் என பொருமினாள், அன்பு செலுத்துபவர்களிடம் "அவமானம்" பட நேர்ந்தால் அதை விட கொடிய வேதனை இது இருக்கின்றது? நாட்கள் நகர்ந்தன ஒரு நாள் ரஞ்சிதா இறந்து போனாள் ஏற்கனவே ரஞ்சிதா தன் இறுதி பயண செலவுக்கு என்று தனியாக பணம் வைத்திருந்தாள் அதை தன் உறவினர்களிடம் கொடுத்துச் சென்றதால் அவர்களும் ரஞ்சிதாவின் பிள்ளைகளிடம் கொடுத்து விட்டார்கள். காரியம் அனைத்தும் முடிந்த பிறகு பிள்ளைகள் இருவரும் பேசி கொண்டிருந்தார்கள் அப்பொழுது ரஞ்சிதாவின் மகள்  தன் தம்பியிடம் அம்மா சில காலத்திற்கு  முன்பு தன்னுடன் வந்து தங்கியிருக்க பிரியப்பட்டதையும் தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றும் கூறினாள் தம்பியும் தன் பங்குக்கு அக்காவிடம் அதே எண்ணத்தைப் பகிர்ந்துக் கொண்டுருந்தபோது பேரக் குழைந்தைகள் கோபமாக " நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள்" ஆனி(பாட்டி)  உங்களை வளர்க்கும்போது தன்னை பற்றி கவலைப்படாமல் உங்கள் தவறுகளை மன்னித்து பல அவமானங்களைச் சுமந்தும் இருந்திருகின்றார்கள் அப்படிப் பட்டவரை நீங்கள் இவ்வாறு நடத்தியது எங்களுக்கு நீங்கள் செய்த "பெரிய அவனமாகும்" என்று கோவமாகச் சொல்ல இரு பிள்ளைகளும்                 வாயடைத்து போனார்கள்.

 

RAMA GOVINDARAJAN

 

 

8. 24. K2K-00031

அவமானம் 

எல்லாரும் குறை சொல்லுற அளவுக்கு இது ஒன்னும் அவ்ளோ மோசம் இல்ல...” புலம்பிக்கொண்டே வந்தான் கந்தன். “என்ன டா ஆச்சி... யாரு மோசமில்ல?”  பிரியா கேட்டாள். “நம்மெல்லாம் வெளிய போகாததுனால ஊரு நல்லா இருக்கு... உலகம் நல்லா இருக்கு... பொல்யூஷன் இல்லனு ஊரு பூராவும் சொல்லிட்டு சுத்துராங்களே அதுமகந்தன் தொடர்ந்து வந்த மணி சொன்னான்.

அன்று ஞாயிறு, ஒரே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் நண்பர்கள் அனைவரும் அன்று மொட்டை மாடியில் ஒன்று கூடினர். கொரோனா காரணமாக வீட்டினுள் அடைந்து கிடக்கும் வாலிபக் கூட்டத்தில் இவர்களும் ஒன்று. வாரம் முழுக்க வீட்டிலேயே வேலை செய்யும் இவர்கள் அறுவரும் ஞாயிறு அன்று இப்படி சந்திப்பது வழக்கம். கந்தன், பிரியா, மணி, மேகலா, அருண் மற்றும் அனன்யா. அனைவரும் IT கம்பெனியில் பணிபுரிபவர்கள். வெவ்வேறு கம்பெனி என்றாலும், இவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தனர். கந்தன் வாழ்வில் எது நடப்பினும்பார்த்து கொள்ளலாம்என்று பாசிடிவாக பார்க்கும் மனம் உள்ளவன். பிரியா சில சமயம் கோபப்படுவாள் ஆனால் மற்றவர்கள் மீது வைக்கும் பாசத்தில் அவளே முதலிடம். மணி எதையுமே ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். எல்லாம் விதிப்படி நடக்கும் என்று எண்ணுபவன். மேகலா மணியின் பெண் உருவம். இருவருக்கும் மனம் ஒத்து போவதாலேயே அதிக வாக்குவாதம் வரும். அருண் வேலை என்றால் புலியாகவும் மற்ற இடங்களில் பூனையாகவும் இருப்பான். மற்றவர்கள் பேசுவதை நன்கு அர்த்தம் அறியாமல் பதில் பேசுவது குற்றம் என்று கருதும் ஒரு நல்ல உள்ளம்.

மணி சொன்னது ஒரு வகையில சரிதான....?” என்றாள் மேகலை. “ஏய்... அது நான் சொல்லல... ஃபேஸ்புக்ல வாட்சாப்ல எல்லாம் வருதுல அத பாத்து சார் அப்செட்டா இருக்காரு”. “விடு மச்சி... பேசுறவன் என்னவேனா பேசுவான்அருண் சொன்னான். “ஒரு நியாயம் வேணாமாடா?” பிரியா நக்கல் செய்தாள்.

 

அத தான் நானும் கேக்றேன்கந்தன் தொடர்ந்தான். “மக்கள் இல்லாத நாடு நல்லா இருக்கு... நகரம் நல்லா இருக்கு... ரோடு நல்லா இருக்கு.... பீச் நல்லா இருக்கு.... நம்மள நாமளே அவமானபடுத்துறோம். மக்கள் இல்லாம இதெல்லாம் இருந்தா என்ன...? இல்லனா என்ன?”

 

ஓசோன் தன்ன தானே சரி பண்ணிக்க ஆரமிச்சி பல வருஷம் ஆச்சி. இப்போ வந்து 2 மாசம் யாரும் வெளிய வராதனால தான் சரி ஆச்சினு போஸ்ட் போடரானுங்க”. “தன்னோட கடமைய ஒழுங்கா செய்றது இல்ல... எவனாச்சும் செஞ்சா அத கொற சொல்றது.... யாரோ இதெல்லாம் சரி செய்ணும்னு எதிர்பாக்குறோம் நம்ம என்ன செய்யணும்னு எவனும் யோசிக்கிறது இல்லஒரு வழியாக கந்தன் முடித்தான். அங்கு இருந்து மற்ற நால்வரும் அவன் உதிர்த்த வார்த்தைகளை சிந்தனையில் போட்டு அமைதியாக சிந்தித்தனர். “டேய்... சாப்பாடு ரெடி... வரிங்களா இல்லையா?” அனன்யா அனைவரையும் சமையல் முடித்துவிட்டு அழைத்தாள்.

காப்பாத்திட்டடி ஆத்தா...” முதல் ஆளாக தப்பி ஓடினான் அருண்.

 

 கடமை அறிந்து செயலாற்றுவோம்!

 

MrDexzty

 

 

9. 15. K2K-00034

அவள் ஒரு அவமானத்தின் சின்னம்

தனது இறுதி தேர்வை எழுத அனுமதிக்குமாறு தேர்வறை கண்காணிப்பாளரிடம் மன்றாடி கொண்டிருந்தாள் மேகா. மேகா, "சார், ப்ளீஸ் இது தான் என் கடைசி எக்ஸாம். இதை விட்டா ஒரு வருஷம் வீணா போயிடும் என்று அவர் காலில் விழுந்தாள். ச்சி நகரு, உனக்கு என்ன தைரியம் இருந்தா என் காலை பிடிச்சுருப்ப என்று அவளை எட்டி உதைத்து உள்ளே சென்றார். அங்கே அமர்ந்து அழுவதை தவிர வேற எதுவும் செய்ய முடியவில்லை.

இரண்டு ஆண்டுக்கு பிறகு....... 

வணக்கம்., முக்கிய செய்திகள், இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்திய குடியியல் பணிகள் தேர்வில் மாநிலத்தில் முதல் இடமும், ஆல் ஓவர் இந்தியாவில் பதினேழாவது இடமும் பெற்று சிவப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் தேர்ச்சியடைந்துள்ளது இதுவே முதல் முறை. நேரலையில் நம்முடன் இருப்பவர் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மேகா அவர்கள் தான். இந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல, இந்த இடத்தை அடைய நீங்கள் கடந்து வந்த கருப்பு நாட்களையும் உங்களை பற்றியும் நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்.

வணக்கம் நான் மேகா, என்னை பார்த்ததும் எத்தனை பேர் முகம் சுழிச்சிருப்பிங்கனு தெரியல ஆனால் என்னோட பதிமூணாவது  வயதில் இருந்து இந்த மாதிரியான சூழ்நிலையை தாண்டி தான் வந்துள்ளேன்.

என்னை போன்றவர்களை போதை வஸ்துவாக மட்டுமே பார்த்தவர்கள் ஏராளம். இந்த இடத்திற்கு நான் வர என்னை சுற்றியிருப்பவர்கள் எத்தனை தியாகம் செய்தார்கள் என்று எனக்கு மட்டும் தான் தெரியும் என்று விழியில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு பேசினாள்.  என்னோட பைனல் இயர் பைனல் எக்ஸாம் ஹாலுக்குள்ள போகும் ஒரு நிமிடம் தான் என்னை உள்ளே அனுமதிக்க மறுத்தார் அறை கண்காணிப்பாளர். அன்று நான் பட்ட கஷ்டத்தை சொல்ல வார்த்தையில்லை. அன்று முதல் நாள் சிவப்பு விளக்கு பகுதியில் என்னை பார்த்துள்ளார். அந்த தொழில் செய்யும் என்னை மாறி பெண்ணுக்கு எதற்கு படிப்பு என்று காது கூசும் படி வார்த்தைகளை பேசி கூனிக்குறுக வைத்தார்.  அவரால் எங்கள் இடத்தில் இருந்து போராடி படித்த முதல் பெண்ணான நான் பட்டம் பெற ஒரு வருடம் தள்ளி போனது. இதை எல்லாம் மனசுல வச்சு நைட் பகல் எல்லாம் நேரம் சோறு தண்ணி இல்லாம படிச்சேன் பட்டம் வாங்குன அடுத்த வருடம் இதோ என் கனவை நிறைவேற்றி நான் சொல்ல நினைச்சதை சொல்ல போறேன். நான் என்னும் என்னுடைய அடையாளம் என் பிறப்பையோ வளர்ப்பையோ சாராது. என் படிப்பும் என் பதவிவும் தான் நான், இந்த மேகாவை குறிக்கும்.

சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் அனைவரும் காசுக்காக மட்டுமே உடலை விற்கவில்லை. அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருக்கும் ஒரு கதையுண்டு. வெளி பார்வை வைத்து எங்களை ஈன பிறவியை போல் காண்பதை விட்டுவிடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு அவள் வளர்ந்த சிவப்பு விளக்கு பகுதிக்குள் சென்றாள் மேகா . . எஸ். 

#புத்தகம் அட்டையை பார்த்து புத்தகத்தை தரம் பிரிக்காதே. இன்று நீ அவமானம் படுத்தும் நபர் நாளை உன்னை ஆளுமை செய்யலாம். மதிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை மிதிக்காதே #

 

-சுபாஷினி

 

 

10. 16. K2K-00036

அவமானத்தின் வலி 

ராம் ரொம்ப நன்றாக படிக்கும் மாணவன் இல்லை. விளையாட்டில் கூட சுமார் ரகம் தான். பத்தாம் கிளாஸ் படிப்பில் கூட 398/500 எடுத்து அந்த தலைசிறந்த பள்ளியின் எல்லார் மாணவர்களையும் விட குறைந்த மதிப்பெணே எடுத்தான். அவன் குடும்பத்துக்கு அது கவலை தராத போதிலும் அவன் பள்ளியில் அடிக்கடி அவமானம் அடைந்தான். பின் கணினி அறிவியல் குரூப்பை பதினோராம் வகுப்பில் எடுத்து அதிலும் பல இடத்தில் அவமானம் அடைந்தான். கணிதம் மற்றும் கணினி அறிவியல் தவிர மற்ற பாடங்களில் குறைந்த அளவே அவன் மண்டையில் இறங்கியது. ஆனால் அவன் கூட படிக்கும் எல்லாருமே 190/200 குறையாமல் எல்லாத்திலும் எடுக்க அவனின் கணித 170/200 மற்றும் கணினி அறிவியல் 175/200 கூட கேலி வைத்து அவமானம் செய்தது. 

இப்படி போய் கொண்டு இருக்கே ஒரு நாள் அவன் பள்ளிக்கு டி.சி.எஸ் என்கிற கம்பெனி ஒன்று வந்து மாணவ மாணவியர்களின் கணினி அறிவை சோதிக்க சில மாதிரி படங்கள் எல்லாம் காட்டி கோடிங் செய்ய சொன்னது.

எல்லோரையும் போல ராமும் கோடிங் செய்ய ஆரம்பித்தான். ஒரு மணிநேர அவகாசம் இருந்தும் அரை மணிநேரத்தில் எல்லாருக்கும் முன்னாடி முடித்தவன். அதனை சமர்ப்பித்து வேடிக்கை பார்த்தான். கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததும் அவனை தவிர யாருமே கொடுக்கப்பட்ட வேலையை முடிக்கவில்லை. அப்படி இருக்க அந்த பள்ளியில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கிய மாணவன் ஒருவன் அவனை நெருக்கி கேலி செய்தான், "இங்க பாருங்க உன் கோடிங் எல்லாம் சரியா இருக்காது. உன்னை விட நாங்க எல்லாருமே நன்றாக படிப்பவர்கள். எங்களால் முடியாதது எப்படி உன்னால் முடிந்து இருக்கும்..?", என்று அந்த திமிர் பிடித்த மாணவன் சொன்னான். ஆனால் நம்ம ராம், "படித்து அப்படியே எழுதி மதிப்பெண் வாங்குவது இல்லடா படிப்பு. படித்தது கொஞ்சமாக இருந்தாலும் அதை சரியான இடத்தில் சரியான விதத்தில் பயன்படுத்த தெரியணும். உனக்கு ஆறு பாடங்கள் நன்றாக வரும்போது எனக்கு ஒன்று கூடவா வராது..?", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அன்றைய நாள் முடிவில் அவனின் புரோகிராமிங் கோடிங் தான் பரிசு பெற்றது. அவனை மேடைக்கு அழைத்த அந்த பள்ளி தலைமை ஆசிரியர், "இதனை பேரால் முடியாத ஒன்று உன்னால் மட்டும் எப்படி முடிந்தது..?", என்று கேட்க அவனோ ஒரு திருக்குறள் சொன்னான்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக."

எனக்கு ரொம்ப பிடித்த குரல் இது. இதன் பொருளே நாம் கற்கும் ஒன்றை கற்றதோடு விடாமல் அதனை செயல்முறை படுத்த வேண்டும். அதான் என் விஷயத்தில் நடந்தது. நீங்கள் எல்லாருமே மதிப்பெண் ஒன்றை மட்டும் மனதில் வைத்து என்னை அவமானம் செய்த போது எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. என்றாவது ஒரு நாள் உங்கள் முன் என் திறமையை நிருபித்து காட்டுவேன் என்ற உறுதியில் இருந்தேன். அது இன்று நடந்து விட்டது. முதல் மதிப்பெண் வாங்கிய உங்களின் தலை சிறந்த மாணவன் படித்த அனைத்தும் மறந்து கீழே இருக்க நானோ எல்லாரையும் விட குறைந்த மதிப்பெண் வாங்கியவன் உங்கள் கையால் பரிசு வாங்கிறேன். 

# குறிப்பு:

ஒருவன் திறமை என்னவென்றே தெரியாது அவமானப்படுத்த வேண்டாம். ராமை போல நீங்க அவமானம் செய்தவரின் திறமை வெளியே வருபோது அங்கே அவமானப்பட்டு இருப்பது அவன் அல்ல நீங்கள் தான்.

 

நன்றி!

-விஜயன்.

 

 

11. 26. K2K-00037

 

 அவமானம்:

என் பேரு குரு. ஒரு சராசரி மாணவன். கேம்பஸ்ல செலக்ட் ஆகாம வேலை தேடும் ஒரு கம்பியூட்டர் இன்ஜினியர். வேலை தேடும் நேரம் போக மீதி நேரம் சமூக வலைத்தளத்தில்  அரட்டை, வலைத்தள தேடல், என்றிருக்கும் ஒரு இளைஞன். இந்த 2 மாசத்துல என் வாழ்க்கை இப்படி மாறும்னு நினைக்கவே இல்லை. 

2 மாதங்களுக்கு முன்பு..... 

நான் வழக்கம் போல சமூக வலைதளத்தில் இயங்கி கொண்டிருந்தேன். அது ஒரு டேட்டிங் வலைத்தளம். சாட் ரூம் சென்று ஒருசிலருக்கு ஹாய் மெஸேஜ் தட்டி விட்டேன் . அதில் ஒரு யூஸர் பாப்அப் பளிச்சிட்டது.

அதில் "ஹாய் ஹாண்ட்சம்...." என்று முத்த எமோட்டிக்கானோடு பதில் வந்தது. ப்ரோபைலில் அது ஒரு 23 வயது பெண் என்றும் அவள் இடம் பெங்களூர் என்றும் இருந்தது.  நானும் "ஹாய் பியூட்டி. ஹவ் ஆர் யு? என்று வினவ அரட்டை அடிப்படை கேள்விகளில் இருந்து அடுத்த கட்டத்திற்கு சென்றது. இருவரும் அவரவர் படிப்பு, ஆர்வம் பற்றியும் மற்ற விஷயங்களையும் பேசத் தொடங்கினோம். அடுத்த 1 வாரத்தில் தினமும் சாட்டிங் செய்தோம்.

ஒருநாள் அவள் "நாம் இன்று வீடியோ சாட் செய்வோமா?"

குரு "சரி ஓகே."

அவள் "இந்த வெப்சைட் இல்லாம ஒன்-டு-ஒன் பெர்சனல் சாட் செய்யலாம்" என்றாள். இருவரும் லாகின் செய்ய, அவள் பார்க்க அளவெடுத்தார் போல அனைத்தும் சரியான அளவில் நல்ல நிறத்தில் ஒரு டாப் அணிந்து காணப்பட்டாள். நான் நினைத்ததைவிட அழகாகவே இருந்தாள். எங்கள் பேச்சு விர்சுவல் டேட்டிங்காக தொடர்ந்தது. நாங்கள் அவ்வப்போது கிறக்கமாகவும், நெருக்கமாகவும் பேசினோம். அவள் "உனக்கு அந்தமாறி சாட் பண்ண இஷ்டமா?" என்று கேட்டாள்.  எந்த பையனுக்குதான் ஆசை வராது "டபுள் ஓகே" என்றேன். அப்போ தெரில இதன் பாதிப்பு என்னன்னு. ஒரு நாள் எனக்கு ஒரு இமெயில் வந்தது. அதில் "நாங்கள் சொல்வதை செய்யாவிட்டால் பெரும் பாதிப்பு நேரிடும்....  என்றும் நான் வீடியோ சாட் செய்த புகைப்படமும் அத்துடன் இருந்தது. (206)

எனக்கு புரிவதற்குள் என் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

நான் "ஹலோ...."

மறுமுனையில்,  "மெயில் பார்த்திருப்ப.. உன் மெயில், செல்போன், உன் சோஷியல் மீடியா எல்லாத்தையும் ஹாக் பண்ணிட்டோம்..."  டீல் ரொம்ப சிம்பிள். நாங்க கேக்குற பணத்த சொல்ற பேமண்ட் சிஸ்டம்ல ட்ரான்ஸ்பர் பண்ணு. சைபர் க்ரைம், போலீஸ்னு போனா உன் அந்தமாறி போடோஸ் எல்லாம் நெட்ல போட்டுறுவோம்". என்று துண்டிக்கப்பட்டது. (250)

 

அன்று மாலையே என் வாட்ஸ்ஆப்பில் ஒரு வாய்ஸ்நோட் வந்தது. அதில் என் நண்பனுக்கு  இதைப்பற்றி பேசியது ரெகார்ட் வாய்ஸில் அனுப்பப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு அழைப்பு." நீ நாங்க சொல்றத பெருசா எடுக்கல. தப்பு பண்ற. உன் போடோஸ போட்டாதான் உனக்கு புரியும்" என்றதும்,  நான் "இல்ல இல்ல நீ சொல்றத செய்றேன். எதுவும் பண்ணாத" என்றேன்.  அவன் "ஒழுங்கா இன்னிக்கு ராத்திரி பணத்த அனுப்பு இல்ல 12 மணிக்கு உன் போடோஸ் அப்லோட் ஆகி மானமே போய்டும்" என்று துண்டிக்கப்பட்டது. 

அன்று இரவு மர்ம நபருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை திறந்தபோது அதில் ஒரு ரூபாய் வந்திருப்பதாக இருந்தது. குருவுக்கு மீண்டும் ஒரு அழைப்பு " என்ன திமிரா??? சொன்னா புரியல. இரு இப்பவே எல்லாத்தையும் ஏத்துறேன்" என்று அவன் கணினி உள்நுழைந்த போது, திரையில்  "You are busted" என்ற வாக்கியம் தோன்றியது. அவன் மற்ற கைபேசியில் அழைப்பு வந்தது. மறுமுனையில் குரு  "என்ன புரியல. ஹா ஹா. கொஞ்ச நேரத்துல புரியும்" என்றதும் அவனை கைது செய்ய போலீஸ் வந்தது. 

நடந்தது என்ன???..... அந்த மர்மநபர் பல பேரை இவ்வாறு பணம் பறித்து வந்தவன். சைபர் க்ரைம் குழு அவர்களை சாராத ஒரு நபரை வைத்து தூண்டில் போட்டு பிடிக்கவே குரு நியமிக்கப்பட்டான். குரு இதற்காகவே அனைத்து அடையாளங்களும் மாற்றப்பட்டு ஒரு சாதாரணமான ஒருவனாக உலவி வந்தான். அந்த மர்மநபரை எந்த வகையிலும் பிடிக்க முடியவில்லை அவன் ஐபி, சர்வர் எல்லாம் மாஸ்க் செய்யபட்டு, டிஜிட்டல் லாக்(log) அழிக்கப்பட்டு எதையும் அறிய முடியவில்லை. ப்ராக்சி சர்வர்கள் எல்லாம் வேறுவேறு நாட்டில் காட்டியது. அவன் செய்த சிறு பிழை ஆன்லைன் ஃபார்மில்(forum) இணைய ஊடுருவல் பற்றிய கட்டுரையில் அவன் விட்ட சிறு தடையம். ஒரு ஸ்கிரீன்ஷாட் ஒன்றில் அவன் ஹாக் செய்த வங்கிஅட்டை விவரத்தை குறிப்பிட்டு இருந்தான்.  இரண்டாவது அவனையும் அறியாமல் அடுக்கு ப்ராக்சி(proxy layers) ஐபியில் அவனது உண்மையான ஐபியையும் குறிப்பிட்டது.  அதை சரியாக குரு கண்டுபிடித்து சைபர் க்ரைம் உதவியுடன் அந்த இணைய கட்டுரை பதிவிடப்பட்ட ஐபி மற்றும் அடுக்கு ப்ராக்சி ஐபி இரண்டையும் பொறுத்தி அந்த ஐபியுடன் இணைந்த கைபேசியை கண்டுபிடித்து அதற்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அதை திறந்ததும் அவன் சிம்கார்ட் டிராக் செய்யப்பட்டு அவன் இருக்கும் இடம் அறிந்து போலீஸ் அவனை கைது செய்தனர்

அப்போது குரு அந்த பெண்ணிடம் வீடியோ சாட் செய்தது, அவர்கள் இவன் அந்தரங்க புகைப்படத்தை பதிவு செய்தது???

அது எதுவுமே குருவின் உண்மை முகம் அல்ல அது கருவியின்(simulated Webcam) உதவி கொண்டு உருவாக்கப்பட்ட பிம்பம்(simulated image). 

2 மாதங்களுக்கு பின்..... 

என் வாழ்க்கை இப்படி மாறும்னு நினைக்கவே இல்லை சர்...

குரு இப்போது சைபர் க்ரைம் பிரிவில் நியமிக்கப்பட்டு ப்ரோபேஷன் ஆபிசராக உள்ளான். 

இணையம் ஒரு களஞ்சியம். அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு.

உலகம் முழுவதும் இணையதளம் மூலமாக டேட்டிங், ஹூக் அப், விபச்சாரம் முதலான தப்பான விஷயத்தை வைத்து மக்களை இழுக்கும், மிரட்டி பணம் பறிக்கும் கூட்டம் சத்தமில்லாமல் இயங்கி வருகிறது. தவரான பாதையில் சென்றால் பணம் மட்டும் இன்றி மானத்தையே இழக்கவும் நேரிடும். அதை நல்ல முறையில் பயன்படுத்தினால் பல இழப்புகளையும், அவமானங்களையும் தடுக்கலாம். 

ன்றி 

இப்படிக்கு

பா. பிரபு

 

 12. K2K00038

அவமானம்!

அது ஒரு அரசு நகரப் பேருந்து.கூட்டம் அதிகமாக இருந்தது.இருக்கைகள் நிறைந்து நிற்கவும் இடமின்றி நெருக்கி நின்று கொண்டிருந்தனர் ஜனங்கள்.சீட்டின் விளிம்பில் தொடுக்கி உட்கார்ந்திருந்தாள் மாலா. நின்றிருந்த சிலர் இவளை உரசித்தான் நிற்க வேண்டி இருந்தது.எழுந்து நிற்கவும் இடமின்றி சங்கடத்தில் நெளிந்த மாலா அந்த நிலையிலும் சேலையை சரிசெய்ய எத்தனித்து சொறுகியிருந்த முந்தானையை இழுத்து மடியில் வைக்க முயன்றாள். இற்றுப் போயிருந்த சேலை இவள் இழுத்ததும் கிழிந்தது.சர்….ர்ரென்ற கிழியல் சத்தம் சுற்றி இருந்த எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மாலா  அவமானமாக உணர்ந்து தலை குனிந்து கொண்டாள்.எங்க கிழிஞ்சதுன்னு தெரியலையே முந்தியாக இருந்தால் பரவாயில்லை.பின்புறத்தில் கிழிந்திருந்தால்….ஐயோ என்ன செய்வது எப்படிக் கீழிறங்குவது?!இப்படி என் நிலைமை ஆயிருச்சே?! கூட்டம் இருக்கிறது கூட நல்லது தான் யாரையும் பார்க்காம இறங்கி ஓடிறலாம்.ஆனால் இறங்குற இடம் கடைவீதியாச்சே….அதைத்தாண்டி எப்படி போகுறது?!

 

நினைக்க நினைக்க அவமானத்தில் அழுகை வருது.அந்த நேரம் நடத்துனர் வந்து நிற்க ....தான் இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு இரண்டு ஸ்டாப் தள்ளி டிக்கெட் கேக்குறா மாலா. வழக்கமா வந்து போனதால் நடத்துனருக்கு பரிச்சயம்.இவளை ஒரு மாதிரி பார்த்துக்கிட்டே டிக்கெட்டை குடுத்துட்டு நகர்றாரு. ஆனால் அப்பப்ப திரும்பி இவளை பார்க்குறாரு.கொஞ்சம் கூட்டம் குறையுது.மாலா  சீட்டில பக்கத்துல  இருந்த அம்மா இறங்க இவள்  தள்ளி வசதியா உட்கார்றா. திடீர்னு என்ன நினைச்சாரோ  நடத்துனர் வந்து பக்கத்துல உட்கார்ந்து,”என்ன பிரச்சனைன்னு ரகசியமா கேக்கஇவள் உள்ளதை சொல்றாள். எந்திரிச்சு முன்னாடி போய் மேல இருந்து ஒரு பையை எடுத்து அதிலிருந்து ஒரு சட்டையை எடுத்துட்டு வந்து இவகிட்ட குடுத்து…..இதை  போட்டுகிட்டு இறங்கு.நாளைக்கு வந்து குடுன்னு சொல்லி அவளோட ஸ்டாப்பிலேயே இறக்கி விட…. அதைப் போட்டுகிட்ட மாலா நன்றி சொல்லவும் தோன்றாமல் அவமானத்தோடு தலைகுனிந்து இறங்கி வேகமாக வீட்டை நோக்கி நடக்கிறாள். எத்தனை நாள் நான் அவரை பொம்பளை பொறுக்கியா நினைச்சிருக்கேன்? இப்பிடி கண்டவெனெல்லாம் பார்க்கும் படியா வேலைக்குப் போறோமே?  கட்டினவன் சரி இருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமான்னு மறுகினேனே? நான் முறைகாகிறப்ப எல்லாம்  அவரும் என்னை வெறிச்சு வெறிச்சு பாத்துருக்காரு? ஆனால் இன்னைக்கு என் நிலையை புரிஞ்சு எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்காரு? இக்கட்டான சூழ்நிலை வரும் போது தான் மனுசனை மனுசன் புரிஞ்சுக்க முடியுது.  இந்த உலகத்துல யாரையும் பார்த்ததும் தவறா நினைக்கக் கூடாது.பலாப்பழம் போல பார்க்கத் தெரிந்தாலும் உள்ளே சுவையான சுளைகளா மனிதர்கள் இருக்கலாம்  .யாரையும் பார்க்குற ஒரு பார்வையில தப்பா எடை போடக் கூடாதுன்னு அந்த சூழ்நிலையிலும் தன்னை துரத்தின சிந்தனையைத் தொடர்கிறாள் மாலா. வீடு வந்ததும் அவசரமா  கதவைத் திறந்து உள்ளே போறாள்.சட்டையைக் கழட்டிட்டு பார்க்கிறாள்.சரியாக உட்காரும் இடத்தில் கிழிஞ்சிருக்கு.மறுபடி சட்டையைப் போட்டு பார்க்கிறாள் கிழிசல் தெரியாம மறைஞ்சிருக்கு. வியர்வை வாடை வரும்  அந்தச் சட்டையைக் கையிலெடுத்து அந்த நடத்துனரின் காலா நினைச்சு கும்பிடுறாள்.

 

அய்யா….ரொம்ப நன்றிங்க .உங்க சட்டையை துவைச்சுக் கொண்டு வந்திருக்கேன்.வேணும்னா புதுசு வாங்கித்தரட்டா….?” “பரவாயில்லைமா அதையே குடுங்க.நீங்களே புடைவையில்லாம தான கஷ்டப்படறீங்க…. ஆங் ... .மறந்துட்டேன் தப்பா நினைக்கலைன்னா இதுல ரெண்டு புடவை இருக்கு வாங்கிக்கிறீங்களா என் மனைவி குடுத்தாங்கன்னு குடுக்குறாரு. கண்ணு கலங்க அதை வாங்கி தன் மடியில் வச்சுகிட்டா மாலா.

 

நீதி(படிப்பினை) ஒருத்தரை  தவறா நினைக்கிறது தான் பெரிய அவமானம் அந்தத் தப்பை யாரும் பண்ணக்கூடாது.

 

-பூமாதேவி

 

 

13. 18. K2K-00042

அவமானம்

 

ஐயா கமலக்கண்ணன் தன்னுடைய 38வது வயது பிறந்த நாளில், தன்னுடைய தொழிற்சாலையின் அரங்கத்தில் ஆயிரம் தொழிலாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலையின் பத்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த அந்த வேளையில் அவர் இரண்டு உருவச்சிலைகளை திறந்து வைத்தார். அந்த  சிலையில்  இருப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் பெரிதும் ஆர்வமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனென்றால் அந்த இரு  உருவத்தையும் யார் ஒருவரும்  இதுவரை பார்த்தது இல்லை. எனவே கேள்விகளை மனதில் எழுப்பியவாறு இருக்கும் வேளையில் ஐயா கமலக்கண்ணன் பேச ஆரம்பித்தார், அன்புள்ள நண்பர்களே நான் என்று இந்த நிலையில் இருப்பதற்கு இந்த இருவரும்தான் காரணம் ஆனால் அவர்கள் இருவரும் எனக்கு ரத்த சம்பந்தமும் அல்லது நண்பர்களோ இல்லை. இதை கேட்டதும் ஊழியர்கள் அனைவரும் இன்னும் ஆச்சரியமாக கேட்கத் தொடங்கினார் பின்னர் தன்னுடைய பேச்சை தொடர்ந்தார் கமலக்கண்ணன் ஐயா. நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் ஊர் கடையநல்லூர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம். அங்கே பள்ளிப்படிப்பை முடித்தேன் அப்படி படித்துக் கொண்டிருக்கையில் நான் பன்னிரெண்டாம் வகுப்பில் சுமாராகப் தான் படித்தேன் அதனால் என்னுடைய ஆசிரியர் அய்யா முத்தையா அவர்கள் என்னை பலமுறை திட்டி இருக்கிறார்கள் ஒருமுறை அவர் என்னை எல்லா மாணவர்களுக்கும் முன்பும் நீ படிப்பதற்கு லாயக்கில்லை என பயங்கரமாக திட்டினார் அந்த வயதில் எனக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சம்பவம்.அந்த சம்பவத்தின் பிறகு நான் எப்படியாவது வாழ்வில் முன்னேறிக்காட்ட வேண்டும் என்ற வேட்கை இருந்தது .பின் ஒருவழியாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தொலை தூர கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்று அதன் மூலம் வேலை பார்ப்பதற்காக சென்னை வந்தடைந்தேன் அங்கே ஒரு சின்ன கம்பெனியில் கணக்கு எழுதும் பணி கிடைத்தது , அங்கே ஒரு வருடம் வேலை பார்த்தேன். அப்போது ஒரு சின்ன தவறு நடைபெற்றது அதற்காக என்னை அந்த கம்பெனியில் உயரிய பொறுப்பில் இருந்த ராமகிருஷ்ணன் ஐயா அவர்கள் அங்கே வேலை செய்வதற்கு லாயக்கு இல்லை நாளை முதல் இங்கே வராதே என்று திட்டி வெளியே அனுப்பி விட்டனர். பின் என்ன செய்வதென்று தெரியாமல் என் சிந்திப்பதை நிறுத்தி விட முடிவு செய்தேன் (அதாவது உயிருள்ள மனிதனின் குணம் தான் சிந்திப்பது) அப்படி நினைத்துக் கொண்டு நான் புகைவண்டி நிலையத்தில் சென்று நான் தங்கும் இடமான ராமாபுரத்திற்கு செல்ல தாம்பரத்தில் இருந்து  வந்து கொண்டிருந்தேன்.அப்போது கிரோம்பேட்டையில் நிலையத்தில் புகைவண்டியில் ஒரு மாற்றுத்திறனாளி அதாவது தன் எண்ணங்களால் மட்டுமே உலகை பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற நண்பர் ஒருவர் தன் கையில் குச்சியும் மறுகையில் கடலை மிட்டாய் பாக்கெட்டை வைத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் என் மனதில் நமக்கு இறைவன் ஏதும் குறை  கொடுக்கவில்லையே, பின் நாம் ஏன் இந்த சிந்திப்பை நிறுத்த வேண்டும், என நினைத்துக் கொண்டு பின் என் வாழ்க்கையில் கடினமான முறையில் உழைத்து இன்று நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன் என்று தன்னுடைய வாழ்கை வரலாறை  சொன்னார். கேட்ட எல்லோரின் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் துளிர் விட்டது. அன்று என்னால் படிக்க முடியாது படிக்க லாயக்கில்லை என சொன்ன முத்தையா அய்யா அவர்களின் சிலை தான் இது ஆம் அவர் சொன்னது சரிதான் நான் பெரிய அளவிற்கு படிக்க லாயக்கில்லை தான் ஆனால் இன்று பல நூறு குழந்தைகளைப் படிக்க வைக்க லாயக்காக

 இருக்கிறேன் இதைத்தான் அவர் முன்னே தெரிந்துகொண்டு கூறியிருக்கிறார். அதேபோல இராமகிருஷ்ணன் அவர்களும் நீ வேலை செய்ய லாயக்கில்லை ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பதர்க்கு தான் லாயக்கு என்பதை தெரிவித்து இருக்கிறார் . அவருடைய சிலைதான் மற்றது. இது போல உங்கள் வாழ்க்கையிலும் உங்களை பல பேர் சொல்லி இருக்கலாம் ,அதை நீங்கள் நேர்மறையாக எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் 

நெறி: அவமானத்தை விட பெரிய ஆசான் யாருமில்லை  , அவமானப் படாமல் வெகுமானங்கள் இல்லை.  அவமானம் செய்பவர்கள் ஒரு விதத்தில்  நமக்கு நன்மை பயப்பவர்களே...

 

என்றென்றும் நன்றியும் தங்கள் அன்புக்குரிய

கணேசன் சண்முகவேல்

அகமதாபாத் - ல் இருந்து

 

 

14. K2K00048

அவமானம்

 

ஒரு நடுதர குடும்பத்தினர்; ஒரு தேநீர் விடுதி வைத்து தொழில் செய்து வந்தனர்.அந்த விடுதியின் முதலாளி மிகவும் அதிகாரம் மற்றும் அகங்கார எண்ணம் கொண்டவர். மிகுந்த பணத்தாசை கொண்ட அவர் நாளுக்கு நாள் விடுதியின் வாடகையும் அட்வான்ஸையும் அதிக படுத்தி கொண்டே இருந்தார். 1,00,000 இருந்த அட்வான்ஸ் 2,00,000 ஆனது , 3100 ரூபாய் இருந்த வாடகை 5000 ரூபாய் ஆனது. ஆனால், இருக்கும் இடமோ மிகச்சிறியது. அட்வான்ஸ் 1,00,000 ஏறிய போதே கடையினை விடுத்து நடைபாதையில் கூட ஏதேனும் தொழில் செய்து கொள்ளலாம் என்று கடை நடத்துபவரின் மனைவி கூறிய போது, நடைப்பாதை கடை வைப்பதை தன்மான குறைவாக கருதி, வட்டிக்கு கடன் வாங்கி அந்த விடுதிக்கு குடுத்து குடுத்து 10,00,000 வரை கடன் சேர்ந்தது, இந்த கடனை கேட்டு வருவோர் அனைவருக்கும் பதில் அளிக்க இயலாமல் வாய் அடைத்து நின்றார். கடையில் வியாபாரம் சுத்தமாக நின்று விட்டது. தினசரி உணவிற்கு கூட வருமானம் இல்லை. இந்த நிலையில் கடை அட்வான்ஸ் மற்றும் வாடகை இன்னும் அதிகரித்தது. தேநீர் விடுதி வைத்தவரின் உடல் நிலையும் குன்றியது. இந்த நிலையினை பார்த்தும் மனிதாபிமானம் இன்றி கடன் கொடுத்துவர் அனைவரும் வந்து காலநேரம் ஏதும் இன்றி பணத்தை கேட்டு வந்து தீய வார்த்தைகளால் விவாதம் புரிந்தனர். இதன் மூலம் தனது தன்மானம் போவதை தேநீர் விடுதி வைத்தவர் அறியவில்லை.மேலும் அட்வான்ஸ் வாடகை ஏறியதால் வேறு வழி இன்றி அந்த விடுதியினை விட்டு வெளியேறினர். நடைபாதை கடை போட்டு நடத்தும் பலம் கூட இல்லாது போனது.வாழ்வதற்கு கதி இன்றி நின்றனர். இவருக்கு பருவ வயதுடைய ஒரு மகளும் இருந்தால் தாய், தந்தை, மகள் மூவரும் கதி இன்றி நிற்கும் நிலையில் கடன் கொடுத்தவர் அனைவரும் கேட்க இயலாத வார்த்தைகளால் பொது இடத்திலும் வீட்டின் சுற்றாருக்கு தெரிந்த வாரும் மானத்தை வாங்கினர்.மேலும் அனைவர் முன்னிலையிலும் இவர்களின் மகளிடம் தவறான கண்ணோட்டத்துடன் செயல் பட்டனர். அவர்களின் மகளுக்கு மானக்கெடு விலைந்தது.

           இதில் இருந்து தன்னை தானே விடுவித்து கொண்டு, தனது பெற்றோரையும் விடுவிக்க தனது ஆசைகள், கல்வி, சேர்த்த பொருள்,  சேகரித்த செல்வம், அனைத்தையும் இழந்து தன்மானம் இழந்து, தன் மானத்தை காத்து , பெற்றோரின் நிலையினை சீர் செய்ய போராடினாள். தன் மகளின் போராட்டத்தில் அவள் படும் கொடிய வேதனை, அவமானங்கள் எண்ணி எண்ணி வேதனையில் அனுதினும் துடி துடித்து வாழ்ந்தார். அனைத்தும் சீர் ஆனதும், அனைவரிடமும் இவர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இல்லாது போனது ,

            அப்போது தன் மகள் கூறினால் , சுயமாக நாம் நமது முயற்சியினை கொண்டு ஆற்றும் காரியம் எதுவாக இருந்தாலும், அது பிறர் காலினை பிடித்து விடும் வெளியாயினும், நமது உடல் திறனால் ஆவதால், அது அவமானம் ஆகாது என்று கூறி, அனைத்தும் இழந்த நிலையில் எந்த ஒரு பயனும் இன்றி பிறர்காலில் விழுவது தான் அவமானம் என்று புரியவைத்து , தன் வாழ்வினை துளைத்த நிலையில் நின்று உணர்தினால் ...

கருத்து  - 

நம் உழைப்பினால் பெரும் எந்த ஓர் நிலையும் அவமானம் அல்ல, உழைப்பின்றி கிட்டும் எந்த ஓர் நிலையும், பெரும் அவமானத்தை விளைவிக்கும் .. (கடன் இன்றி இருப்பதை வைத்து வாழ்வினை நடத்தி இருக்கலாம், உழைப்பின்றி கடன் வாங்கி இருப்பதை பிடித்து வைத்து இருந்ததால் அவமானம் மிஞ்சியது...)

 

இப்படிக்கு ,

-சி.தெய்வாணி ஸ்ரீ

 

 

15. 22. K2K-00053

அவமானம்

 

முதல் நாள் தன் கணவனின் இல்லம். சிறு புன்னகை பூரிப்பில் சிந்து...

"கவுஸ் ஒய்ப்" கனவு நிறைவேறிய உற்சாக சாரலில் மவுனம் கலந்த வெட்கத்தோடு சித்தார்த் அருகே பிங்க் நிற டிசைனர் பட்டுப்புடவையில் அழகாய் அமர்ந்திருந்தாள். "பொண்ணு மாப்பிள்ளைக்கு பால் பழம் கொடுக்கும் சம்பிரதாயம்..." "அண்ணி இந்தாங்க.... என்றவாறு வாழைப்பழத்தை பாலில் முக்கியவாறு ஒரு வாய் சிந்துவிற்கு கொடுத்தாள் நாத்தனார் சாந்தி. புன்னகையுடன் ...... வாங்கிக் கொண்டாள் சிந்து. அடுத்த ஒரு வாய் சித்தார்த்தின் வாய் அருகே கொண்டு போக. "அட எதுக்கு இந்த பார்மாலிட்டி? பால்ல கலந்த எதுவும் எனக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியாதா சாந்தி?என்று கூறியவாறு லேசாக தட்டி விட்டான் சித்தார்த். தட்டிவிட்ட பழத்துண்டு சிந்துவின் மெட்டியை உரசிக் கொண்டு காலடியில் விழுந்தது. சிந்துவின் மனமும் இங்கே அவமானத்தில் சிறு துண்டாய் சிதறியது. தான் சாப்பிட்ட பாதியை நிரகாரித்ததை ஜீரணிக்க சக்தி இல்லாதவளாய் மவுனமாய் அமர்ந்திருந்தாள். எல்லார் முன்னிலையிலும் அழுகக்கூட உரிமையற்றவளாய் மனச்சோர்வாய் சித்தார்த்தை பார்த்தாள். அவன் கண்டு கொள்ளவே இல்லை. இரவு வேளை வேஷ்டி சட்டையிலிருந்து டி ஷர்ட்,  ஷார்ட்ஸ்க்கு மாறி இருந்தான். சற்றே மேலும் நொறுங்கித் தான் போனாள். ஒவ்வொரு ஷர்ட் பட்டன் கலட்டும் போது ஒவ்வொரு முத்தம் என சிந்து கணக்கிட்டு வைத்த மொத்த முதலிரவு கனவின் பிம்பங்கள் யாவும் கண் அருகே கலைந்து. அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் சிந்து சில்லென வீசும் காற்றில் தன்னை புதுப்பிக்க போராடிக் கொண்டிருந்தாள். அண்ணி....அண்ணி....என அழைத்தவாறே சாந்தி வருகிறாள்.. சித்தார்த்தின் தங்கை என்ன அண்ணி உங்கள எங்க எல்லாம் தேடுறது? இன்னும் இந்த சேலைய மாத்தலையா? சும்மா ஒரு நைட்டிய எடுத்து போடுங்க அண்ணி. உங்களுக்காச்சும் தலை நிறைய பூ இருக்கு, என் பர்ஸ்ட் நைட்ல அது கூட இல்ல என புன்னகைத்தவாறு நகர்ந்தாள்.

 

எங்கேயோ வலிக்குது என உணர மட்டுந்தான் முடிந்தது சிந்துவால். அன்றைய இரவு அவமானத்தின் உச்சம் "ஏதோ ஒன்றை  தெரிந்தே தொலைத்த நிலை என் எதிரிக்கும் வேண்டாம்" என மனதில் எண்ணியவாறு கண்ணாடி முன்னே தலை துவட்டுகிறாள். சிந்து என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட? இது அபார்ட்மெண்ட் டி நீ பாட்டுக்கு கோலம் போட கிரவுண்ட் புலோர் போயிராத என கிண்டலடித்தவாறு கட்டி அணைத்தான் சித்தார்த் வராத வெட்கத்தை தன் கண் அருகே கொண்டு வர இந்த இமைகளும் போராடித்தான் போனது சிந்துவிற்கு அவமானங்கள் அத்தனையும் தன் மவுனத்தால் தோற்க வைத்தாள். கதவை திறந்ததுவும் சாந்தி ஓடி வந்து...என்ன அண்ணி அண்ணா கூட சந்தோஷமா இருந்திங்களா?ஏதும் சந்தேகம்னா கூச்ச படாம என்ட்ட கேளுங்க நாத்தனார்களுக்குள் இதெல்லாம் சகஜம் அண்ணி என்றாள் சாந்தி. வார்த்தைகள் ஏதும் இல்லாதவளாய்...உயிர் உருகும் வலியை இதலோர புன்னகையில் மறைத்தாள். டைனிங் ஹால் தட்டில் இட்லிக்கும் சாம்பாருக்குமிடையே விரலில் புள்ளி கோலம் போட்டவாறு யோசனையாய் மெல்ல சாப்பிட்டாள். சிந்து உனக்கு போர்க் யூஸ் பண்ணி சாப்பிடத் தெரியாதா? எப்படி தான் இப்படி இருக்கியோ கொஞ்சம் மாத்திக்கோ சிந்து ஐயோ பேரு மார்டனா இருக்குனு நம்பி ஏமாந்துட்டேனோ என கிண்டலடித்தவாறு சிரித்தான் சித்தார்த்.

மற்றவர்களும் சிரிக்க அவமானத்தில் சிந்து

 

வாழ்க்கை பூரா இப்படியே இன்னும் எத்தனையோ.

 

நீதி: அவமானங்களை சகித்து வாழ பலர்க்கு இங்கே மவுனம் மட்டுமே ஆயுதம்.

 

-பூங்கொடி

 

 

16. 23. K2k00058

 

மகன் தந்தைக்காற்றும் கடமை

            இந்த கதையோட கதாநாயகன் பெயர் சந்தோஷ். பெயருக்கேற்ற மாரியே ரொம்ப சந்தோஷமாவே இருப்பான். அட ஆமாங்க கல்லூரி படிக்குரேன்ற பேருல நல்லா ஊரச் சுத்திக்கிட்டு நண்பர்களுடன் சேர்ந்து படத்திற்கு போரது அது இல்லாம குடிப்பழக்கம் வேற வார வாரம் சனிக்கிழமை ஆனாலே சரக்கும் சைடிஸ்சும் இல்லாம தூங்குறதே இல்ல.  அப்படி ஒரு சனிக்கிழமை அருண் இவன் வீட்டுக்கு வந்து வா மச்சான் சரக்கடிக்க போலாம்னு கூப்பிட்டான்.  எப்பையும் போலாம்னு சொல்ர சந்தோஷ் வரல மச்சான் நீ போய்ட்டுவானு சொன்னான்.  என்னாச்சு மச்சான்னு அருண் கேட்டான்.  அப்ப சந்தோஷ் நேத்து மனசு ஒரு மாதிரி இருந்துச்சு சேரி சரக்கடிக்க போலாம்னு பாத்தேன் காசு பத்தல சரி அப்பாகிட்ட சாவி கொடுத்திட்டு காசு வாங்கிட்டு வரலாம்னு அவரோட கம்பேனிக்கு போனேன்.  அங்க என்ன ஆச்சு தெரியுமா…….

 

நேற்று:

 

சாராத: டேய் மணி 9 ஆச்சுடா இன்னுமா நீ தூங்குர எழுந்திருடா எழுந்து காபிய குடி.

சந்தோஷ்: ஏம்மா காலையிலேயே கத்திட்டு இருக்க.

சாராத: டேய் எழுந்திரு நான் சித்ரா அத்த பொன்னு கல்யாணத்துக்கு போய்ட்டு வரேன். நீ காலேஜ் போரப்ப சாவிய உங்க அப்பாகிட்ட குடுத்திட்டு போ.

சந்தோஷ்: போரேன்! போரேன்! போமா.

சாராத: டேய் மறக்காம கொடுத்திடுடா.

சந்தோஷ்: சரி சரி போரேன் போ.

(அப்பா வேளை செய்யும் நிறுவனம்)

சந்தோஷ்: சுந்தரம் அண்ணே எப்படி இருக்கீங்க?

சுந்தரம்: வாடா தம்பி நல்லா இருக்கேன் நீ டா?

சந்தோஷ்: நல்லா இருக்கேன்ணா. நீங்க மட்டும் சாப்பிடுறீங்க எங்க அப்பாவ காணாம்.

சுந்தரம்: அட அதயான்டா கேக்குற நீ ஏதோ காலேஜ் பீஸ் கட்ட காசு கேட்டனு அந்த மேனேஜர்கிட்ட உங்க அப்பா வாங்கி குடுத்தாரு காசு ஏன் இன்னும் தரலனு தினமும் கேட்டு எல்லாரு முன்னாடியும் அசிங்கப்படுத்துறான்டா.  இது பத்தாததுக்கு உங்க அப்பாவ அந்தாளோட வீட்டு வேலையலாம் செய்ய சொல்றான்.  இப்ப கூட உங்க அப்பா அவன் வீட்டுல கழிவறை கழுவிவிடச் சொன்னானு போயிருக்காருடா எல்லாமே உனக்காக தான்டா நீதான் நல்லா படிச்சு உங்க அப்பாவ காப்பாத்தனும்.

சந்தோஷ்: சரினா, அப்பா வந்தா இந்த சாவிய குடுத்திடுங்க நான் காலேஜ் போரேன்னா.

சுந்தரம்: சரிடா தம்பி

 

இன்று:

 

சந்தோஷ்: நான் சந்தோஷமா இருக்கனும்னு நல்லா படிக்கனும்னு தானே நான் சொல்ர பொய்யெல்லாம் உண்மைனு நம்பி காசு தாராங்க ஆனா நான் காச வாங்கிட்டு குடிச்சிட்டு கூத்தடிக்கிறேன்.  என்னால தானே அங்க ஏன் அப்பா அசிங்கப்பட்டு இருக்காரு இனிமேலாச்சும் நான் ஒழுங்கா இருக்கனும் நல்லா படிச்சு ஏன் அப்பாவையும் அம்மாவையும் நல்லா பாத்துகனும் இனிமே நான் குடிக்கலடா என்ன விட்டுரு. “நம்மளோட சந்தோஷத்திற்காக நம்ம அம்மா அப்பா நாலுபேருகிட்ட அசிங்கப்படுறமாதிரியோ இல்ல அவமானப்படவோ விடக்கூடாது”.

 

-பிரிட்டோ சச்சின் மரியா.வே

புதுக்கோட்டை

 

 

17. K2K 0063

அவமானம்

                 

அவமானத்தை வெகுமானமாய் மாற்றுவதில் தான் வாழ்க்கையின் வெற்றியே உள்ளது.அவன் பள்ளியில் நன்றாக படிப்பான். 1975 ல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினான் கணக்கில் 100/100 எடுத்து, 392/500 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக விளங்கினான். அவனுக்கு ஆசிரியர் பயிற்சியில் சேர மிகவும் விருப்பம்.ஆனால் அப்பயிற்சியில் சேர 15 ரூபாய் தேவை.அவன் குடும்பம் இருந்த நிலையில் 15 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகையாக இருந்தது. அவன் உறவினர்கள் அவனுக்கு உதவ முன் வராததுடன் உனக்கு எதற்கு இத்தேவையில்லாத வேலை, போய் சமையல்காரருடன் உதவியாளராக சென்று வேலை செய்தால் வருமானம் வரும் என்று கூறி கேலியும், கிண்டலும் செய்து அவமானப்படுத்தினர். அவனும் அதற்கு பின் வேதபாடசாலையில் வேதம் படிக்க சென்றான். வேதம் படித்து முடித்து வெளியில் வந்தான். கும்பகோணத்தில் ஒருவர் வீட்டில் தங்கி வைதீக வேலைக்கு சென்று வந்தான்.ஒருவர் வீட்டில் தங்கி இருந்தான் அல்லவா அந்த அவர் கோவிலில் அத்தியாயம் பட்டராக இருந்தார்.அவனை வைதீக வேலையை பார்த்துக் கொண்டே கோயிலிலும் உதவியாக வேலை பார்க்க வைத்தார். பின் அக்கோயிலிலேயே உதவி அத்தியாணபட்டராக வேலை வாங்கித் தந்தார்.அதன் பின் அவன் 1991 ல் திருமணம் செய்து கொண்டான்.அவன் மனைவி +2 மட்டுமே படித்து விட்டு திருமணம் செய்து அவன் மனைவியானாள். அவன் தான் கண்ட ஆசிரியராகும் கனவை தன் மனைவியை படிக்க வைத்து அவளை ஆசிரியராக்கி அழகு பார்த்தான். உறவினர்கள் அவனை மனைவி படித்து வேலைக்கு சென்றால் உன்னை  மதிக்கமாட்டாள் என்று கூறினார்கள் அவன் அவற்றையெல்லாம் புறந்தள்ளி தன் மனைவியை ஆசிரியராக்கி அழகு பார்த்தான். தன்னால் முடிந்த வரை கல்வி கற்கும் குழந்தைகளை தேடித்தேடி உதவினான். உறவினர்கள் அன்று 15 ரூபாய் கொடுத்திருந்தால் அவன் மட்டுமே ஆசிரியராகியிருப்பான். ஆனால் பணமும் கொடுக்காமல் அவமானமும் செய்ததால் தான் வெறி கொண்டு வாழ்வில் வெற்றி பெற்று தான் பெற்ற வெற்றியின் மூலம் பலரையும் வெற்றியடையச் செய்தான் அவன்.

அவனின் அவள் அனுராதா

 

அனுராதா

 

 

18. K2K-00066

அவமானம்

 

இயந்திரமான வாழ்க்கையில் அலுவலகத்தில் இன்னொரு நாள் என்று என்னுடைய நாள் நகர ஆரம்பித்தது. நான், கமலி, சுரேஷ் மூவரும் ஒன்றாகத்தான் மதிய உணவு சாப்பிடுவோம். அன்றைக்குச் சாப்பிட்ட பிறகு நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சுரேஷ் கமலியிடம் திருமண வேலையெல்லாம் எப்படி நடக்கின்றதென்று கேட்டான். "வேகமாப் போகுது தேதி இன்னும் ரெண்டு நாள்ல முடிவு செஞ்சிடுவாங்க"னு கமலி சொன்னாள். சுரேஷும் கமலியும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். சுரேஷ் திடீரென்று, "உனக்கு என்ன பரிசு கல்யாணத்துக்கு வேணும் ?"னு கமலியிடம் கேட்டான். அந்த கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அவள் நகைத்துக்கொண்டே, "அதுலாம் ஒண்ணும் வேணா, கல்யாணத்துக்கு வந்து சேரு"னு மறுமொழி கூறினாள். அவன் திரும்பத் திரும்ப அந்த கேள்வியைக் கேட்கக் கமலிக்கு தர்மசங்கடமாப் போச்சு, அவள் உடனே "நீ என் சங்கீத் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடு, அது தான் நீ எனக்குத் தர பரிசுனுசொன்னாள். அதை கேட்டவுடன் சுரேஷின் முகத்தில் சோகம் தாண்டவம் ஆட ஆரம்பித்தது. "எனக்குத் தெரியும் உன்னால அது முடியாதுனு, ஒழுங்கா கல்யாணத்துக்கு வந்து சேருனு"  மறுபடியும் கமலி சொன்னாள்.

இதில் ஏதோ மர்மம் இருக்கின்றதென்று எண்ணி கமலியிடம் வினவியபோது,  சுரேஷ் கல்லூரியில் படிக்கும்பொழுது நடனப் போட்டியில் கலந்துகொண்டு அவன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து மொத்த கல்லூரியுமே அவனைக் கிண்டல் செய்ததையும் அந்த அவமானத்தால், அதன்பிறகு அவன் ஆடவேயில்லை என்பதையும் சொன்னாள். இந்தக் கதையை அவள் சொல்லி முடிக்குமுன் "நான் டான்ஸ் ஆடுறேன் கமலி"னு சுரேஷ் சொன்னான். நானும் கமலியும் அவனை ஆச்சரியமாகப் பார்த்துச் சிரித்தோம். பிறகு வேலை பார்க்கச் சென்றுவிட்டோம்.

சங்கீத் நாள் நெருங்கியது, சுரேஷ் வேலைக்கு விடுப்பெல்லாம் எடுத்து நடன பயிற்சிக்குப் போனான். சங்கீத் நாளன்று நான் மிகவும் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தேன். சுரேஷ் கமலி மற்றும் கமலியின் தம்பி, தங்கை, நண்பர்கள் என்று ஒரு பெரிய குழுவே நடனம் ஆடத்தொடங்கியது. என் பார்வை முழுவதும் சுரேஷின் மீது தான் இருந்தது. நிஜமாகவே நன்றாக அடிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெண்ணுடன் ஜோடியாக ஆட ஆரம்பித்தான். "பையன் வாழுறான்"னு மனதிற்குள் தோன்றியது. நடனம் முடிந்ததும் ஒட்டுமொத்த மக்களும் ஒரு நிமிடத்திற்கு மேலாகக் கரகோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் கழித்து சுரேஷ் என் அருகில் வந்து அமர்ந்தான். நான் அவனை வாழ்த்திவிட்டு "கல்லூரில அவமானப்பட்டும் இங்க எப்படி ஆட ஒத்துக்கிட்ட" என்று கேட்டேன். அவன் சிரித்துக்கொண்டே "டான்ஸ் ஆடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு தடவ சரியா ஆடாம அவமானப்பட்டேன். இந்த வாட்டி நல்லா பயிற்சி எடுத்து நல்லா ஆடணும்னு வெறியா இருந்தேன். எல்லாத்துக்கும் மேல இந்த பரிசு தான் வேணும்னு கமலி கேட்டா, அவளுக்காக இது கூட பண்ணலனா எப்படி?" என்றான். அதைக் கேட்டதும் நான் கலங்கிவிட்டேன். கமலி அப்போது எங்கள் அருகில் வந்து "ரொம்ப நன்றி சுரேஷ். இந்தப் பரிசை நான் மறக்கவே மாட்டேன்" என்றாள். பிறகு மூவரும் ஒன்றாக சாப்பிட்டோம்.

நீதி: உங்கள் வாழ்க்கை வரலாற்றில் தோல்வியால் அவமானம் வரலாம், ஆனால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, விடாமுயற்சி செய்தால் நீங்கள் வரலாரே  உருவாக்கலாம். 

-GD

 

 

19. 27. K2K -00067 

அவமானம்

' மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர் நீப்பா் மானம் வரின் ' ஆசிரியர் புலவர் சாமிநாதன் மனதுக்கு ஏனோ இந்தக் குறள் நினைவுக்கு வந்தது. உற்றார்,உறவினர், ஊரார் முன்னிலையில் மதிக்கத்தக்க ஆசிரியராக, ஒழுக்கத்தை போதிப்ப தோடு,கடைப் பிடிப்பவர் ஆகவும் கருதப் பட்டு கையெடுத்து வனங்கத் தக்க வாழ்க்கையை வாழ்ந்து வந்த அவருக்கு ' ஆசிரியர் மகள் ஓடிப் போய் விட்டாள் ' என்ற அவச் சொல் அவரைக் கூனிக் குறுக வைத்து உணர்ச்சி மேலிட உயிர் நீத் திடலமோ என்ற உந்தலுக்கு ஆளாக வைத்தது.

   ஒரு கணம் இந்தக் குறளை விளக்கும் வகுப்பறை தருணம் ஏனோ அவர் மனத் திரையில் ஓட ஆரம்பித்தது.இதற்கு எடுத்துக் காட்டாக கண்ணகி வழக்குரை காதையில் பாண்டியன் நெடுஞ்சழியன் ஆராயாது தீர்ப்பு கூறி கோவலன் உயிரைப் போக்கியதர்க்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட இறப்பைப் பொருத்திக் கூறுவது அவர் நினைவுக்கு வந்தது.

    கோவலன் உயிரை மீட்டுத் தர இயலாத நிலையில்  '  கணவனை இழந்த கண்ணகிக்கு காட்டுவது இல் '  என்ற சூழலில் நீதி வழுவிய உணர்ச்சி மேலிட பாண்டியன் மயங்கி விழுந்து இறந்து போனான்.மாறாக அவன் தற்கொலை செய்து கொள்ள வில்லையே. தனுக்கு மட்டும் இந்த  தற்கொலை உணர்வு ஏன் மேலிட்டது என்று அவர் மனம் ஒரு கணம் தடுமாறியது. அதே சமயம் ,சங்க இலக்கியப் பாடல்களைப் பயிற்றுவிக்கும் போது ' கற்பு '  என்றும்  ' களவியல் ' என்றும் ' உடன்போக்கு ' என்றும் ' பசலை நோய் ' என்றும் தான் விளக்கிய பாடல்கள் அவர் நினைவுக்கு வந்தன.இலக்கியக் காதலை விளக்கிட செம்புலப் பெயல் நீர் போல நெஞ்சம் கலந்ததை குறிப்பிட்ட நினைவும்,இலக்கியக் காதலை பாராட்டும் மக்கள் வீட்டில் ஏற்பட்டால் விழுந்தடித்து ஓடுவது ஏன் என்று எள்ளல் தொனியில் வகுப்பில் கூறியது எல்லாம் மீள் காட்சியாக மனத்திரையில் ஓடியது.

      மனத் தெளிவு பெற்ற புலவர் கை பேசியை எடுத்து மகளை அழைத்தார். என்ன ஆச்சரியம்? ஒரு வாரமாக அணைத்து வைக்கப் பட்டிருந்த மகளின் கை பேசியில் மணியோசை தொடர்ந்தது. "அப்பா மன்னியுங்கள்.நான் மட்டும் தனியாக சித்தி வீட்டில் தான் இருக்கிறேன். தாயில்லாத நான் எங்கு போவேன்? உங்கள் ஒப்புதலின்றி நான் ஏதும் செய்யேன். நீங்கள் ஒப்பா விட்டால், நான் கன்னியாகவே இருந்து  சமுதாய சேவை ஆற்றுவேன் " என்றுபட படவென்று அடுக்கினாள் அவர் மகள்.

       "அம்மா அதற்கெல்லாம் தேவையில்லை.நான் கற்ற இலக்கியம் என்னை செம்மைப் படுத்தி விட்டது. உன் விருப்பத்திற்கு முழு ஒப்புதல்.சித்தியுடன் வீடு திரும்பு.உன் திருமண ஏற்பாடுகளை செய்வோம் - உன் விருப்பப் படி " என்றார் புலவர்.

     " அப்பா ' என் தன்மானத்துக்கு அவமானம் '  என்று கூறிய தாங்கள் எனக்குத் தரும் சன்மானம் இது " உளம் நெகிழ கூறினாள் மகள்.

 

அன்பழகன்

20. K2K00068

 

ஒரு கல்லூரியில் முத்து படித்துக் கொண்டு இருந்தான். நல்ல மதிப்பெண் பெற்றான். அவனிடம் கேட்டு படித்த பெண் மீது அவனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவளும் நாளடைவில் அவனை நேசிக்க ஆரம்பித்தாள். காலங்கள் ஓடின. அவனும் வேலைக்குச் சேர்ந்தான். அவன் வாங்கிய ஊதியமோ 2800 ரூபாய். அவனுக்கு வயது 27.  அவளுக்கோ வயது 24. அவனோ ஏழை. அவளோ பணக்காரன். முத்துவிற்கு கூட பிறந்த அக்கா ஓன்று. அவளும் திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்தாள். இவனோ தன் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தான். ஆக்காவிற்கு திருமணம் நடைபெற்றால் தான் தனக்கு நடைபெறும் என வேகமாக பார்க்க ஆரம்பித்தான். முத்துவிற்கு  தந்தை கிடையாது. இவனுக்குத் தான் அனைத்து பொறுப்புகளும் உள்ளன. தாய் என்ன செய்வாள். முத்துவிற்கு ஒரு பாட்டி உண்டு. இந்த நிலையில் இவன் ஒவ்வொரு மாப்பிள்ளை பார்க்க இவனுடைய பாட்டி உனக்கு என்ன அவசரம் நீ யாரையாவது பாத்திருக்கியா உன் அக்காவிற்கு கூனோ குருடோ மொண்டியோ மொடமோ யார் கிட்டயாவது தள்ளிவிட்டுடலாமா அனத்தாம அமைதியா இரு என கூறியது. நாட்கள் ஓடின.

ஒரு நாள் பூகம்பம். முத்துவை விரும்பிய பெண்ணோ என் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க போராங்களாம் வர்ற ஞாயிற்றுக்கிழமை எங்க அப்பா கிட்ட வந்து பேசனும்னா பேசுங்க இல்லைனா என்ன விடுங்க என்றாள்.

அவள் பேச்சைக் கேட்ட அவன் ஞாயிற்றுக்கிழமை அவன் வீட்டில் கிரிக்கெட் விளையாட போவதாக கூறிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றான்.

அவளோ முன் அறையில் தந்தை தாயை அமர வைத்து வீடடின் சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தபடி  நின்றாள்.

அவளுடைய பெற்றோரை வணங்கினான். அவர்களும் அவனை அமரச் சொன்னார்கள். அமர்ந்தான். அவர்கள் நீ எங்கே வேலை பார்க்கிற எவ்வளவு சம்பளம் என்றார்கள். இவனும் கூறினான்.

அவளுடைய தந்தையோ என் மகள் வண்டியின் பெட்ரோல் செலவு தான். உன் சம்பளம் என்றார். பிறகு எப்படி குடும்பத்த ஓட்டுவ என்றார். உடனே அவன் அவளும் நடித்திருக்கிறார். குடும்பத்தை ஓட்டிவிடலாம் என்றான்

அவரோ ஒரு பொட்ட பிள்ள சம்பாத்தியத்துல திங்கணும்னுக நினைக்கிற வெட்கமா இல்லே என்றார். பின்பு  நீ எவ்வளவு வரதட்சணை எதிர் பாக்குற என்றார். அவனோ உங்கள் பெண் மட்டும் போதும் என்றான்

பிறகு என்ன என்று அவள தாயிடம் ஒரு மஞ்சள் கயிறு எடுத்துட்டு வா அவன் தாலியை கட்டிட்டு போகட்டும் என்றார். அவனோ அவளை பார்த்தான். அவள் வீட்டிற்குள் சமையல் இருந்து கை எடுத்து கும்பிட்டாள்.

அவனோ எனக்கு அக்கா இருக்கிறாள் அவள் திருமணத்திற்கு பின் தான் என் திருமணம் என்றான். என் மகள் நகையை வைத்து திருமணம் செய்து வைக்கப் போகிறாயா என்றார்.

அவனோ எனக்கு 6 மாதம் வேண்டும் என் அக்காவிற்கு திருமணம் செய்து வைத்து விட்டு இவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்றான்.

 

அவரோ சரி என்று கூறி விட்டு இவள் இழவு காத்த கிளி போல காத்துக் கொண்டே இருக்கனுமா என்றார். மறந்து விடாமல் செல் என்றார். அவனோ ஒவ்வொரு நாளையும் கடினமாக கடந்தால். அவளோ மகிழ்ச்சியாக கடந்தாள்.

இறுதியில்  இருவருக்கும் பிரச்னை நடந்தது. அக்கா திருமணம் நடைபெறவில்லை. வழியில்லாமல் மீண்டும் 6 மாதம் என்றான். இரு வீட்டிற்கும் தகராறு நடைபெற்றது. அவன் எனக்காக காத்திரு என்றான் அவளோ நீயெல்லாம் ஒரு ஆம்பளையா இனி உன் முகத்தில் முழிக்க மாட்டேன் என் அப்பா அம்மா சொல்பவரையே திருமணம் செய்வேன் என்று கூறி விட்டு சென்றாள்.

அவனோ அவளிடம் கூட்டிட்டு ஓட .வேண்டாம். அது அசிங்கம் உன்னை இப்பொழுதே திருமணம் செய்தால் அவள் வாழ்க்கை கெட்டுவிடும் அவளும் ஒரு பெண் தானே என்றான். அவளோ நானும் ஒரு பெண் தான் என்றாள். பொறுத்திரு ஈன்றான். முடியாது என கிளம்பினாள். காதல் தோல்வி அடைந்தது. அவனோ அழுதான் புலம்பினான் சாவின் விளிம்பிற்கு சென்றான். அவனுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டான்.  ஏழையாக பிறந்தது தவறா அல்லது கூடவே அக்கா பிறந்தது தவறா எவ்வளவு படித்தாலும் தனியார் கொடுக்கும் கூலி இது தானா அரசு காட்டும் வழியும் இது தானா என்று புலம்பியவன்

 

இறுதியில் அவனோ என்னைப் போன்ற நிலைமை என் எதிரி்க்கும் வரக்கூடாது ஈன்றான் அவன் வாழ்வில சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் வாழ்க்கையில் செட்டில் ஆன பின்பு அதாவது நல்ல வேலையில் இருந்த பின்பு திருமணம் செய்த பின் காதலியுங்கள் என்றான். என் வாழ்க்கை பிறருக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றான்.

 

-J. JEYARAJ

 

 

21.  21. K2K-00069

அவமானம்

 

தவளைகள் அதைரியமூட்ட செவிட்டுத் தவளை மரமேறிய கதையைக் கேட்டடிருக்கிறீர்களா? தேரின் சக்கரங்கள் சேற்று மண்ணில் சிக்கிவது போல பலரும் அவமானங்களால் அணைந்து போவதுண்டு. நானும் அணையத்தான் இருந்தேன், பிறர் இழிவு செய்வதை நம்பாமல் விடும் வரை. தூக்கம் கொஞ்சம் கண்களைக் கெஞ்ச கெஞ்ச துஞ்சாது எழுதிய கதை மனதை நிறைத்தது. கொண்டைச் சேவலின் கூவல் கிட்டத்தட்ட மணி நான்கு என்று தலையில் குட்ட ஒரு குட்டித் தூக்கத்ததில் அமிழ்ந்தேன். ஒரு மூன்று மணிநேர உறக்கம் கண்களின் கீழே கருங்குடமாகப் பொங்கி இருந்தது. அலட்சியமாக பௌடரை  தட்டிவிட்டு ஓடினேன். பலருக்கு அந்த நடிகரின்  படங்கள்என்றாலே தேன் மிட்டாய் மழையாகப் பொழிவது போலத்தான். என் அர்த்தமுள்ள கதைகளை இரசித்த ஒருவர் என்னை சினிமாக் கதாசிரியர் கனவை அந்த நடிகரை வைத்து திரையரங்கில் ஒளியூட்ட சம்மதித்தார். நானுமா பூஞான புத்தகத்துக்கு ஐவ்வாதிட்டு மணக்க மணக்க மல்லிகையாக மாற்றி விட்டு மயிலிறகொன்றை நடுப்பக்கத்தில் வைத்து  முருகனை வேண்டி விட்டு என் சைக்கிளில் அந்த நடிகரைக் காணச் சென்றேன்.

 

*தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்*

 

வள்ளுவர் மொழி அறிந்து இளிவுக்குப் பயந்து, நான் பார்த்துப் பார்த்து எழுதிய என் கதையை ஏளனம் செய்தது மட்டுமின்றி என் தோற்றத்தையும் பரிகசித்துச் சிரித்தார் அந்தத் திரையின் நாயகன். சங்கடத்துடன் நெழிந்தேன். முதுகில் காயம் பட்டதால் அவமானமடைந்து வடக்கேற்று உயிர் நீத்த மாமன்னர்களுக்கு நானும் சளைக்கவில்லை. ஆனால் சிவந்த முகத்தை அமைதியான புன்னகைக்குப் பின்னால் மறைத்து விட்டு அவமானங்கள் எல்லாம் வெகுமானங்கள் என்று அறிந்தும் தேற்ற முடியாமல் தவித்த மனதை ஊக்குவித்தேன். இன்று நான் எழுதிய 25வது கதையில் நடிக்க தானே முன் வந்து ஏற்றுக் கொண்ட அந்த நடிகருக்கு என்னை ஞாபகமிருக்கவில்லை. நான் ஞாபகபடுத்தவும் இல்லை.

 

நீதி - நீங்களே உங்களை வெகுமதிகிறீர்கள். எனவே பிறர் அவமானப் படுத்தும் போது செவிடாகி விட்டு வெற்றி என்னும் மரத்தின் கிளைகளில் அமருங்களேன்.

 

- Vilia

 

 

22. K2K00078

அவமானம்

 

"யஸ்வந்த் "   'உள்ளேன் டீச்சர்' 

"டில்சான் குலாஸ்"  'உள்ளேன் டீச்சர்' 

"கீர்த்திகா"     'உள்ளேன் டீச்சர்' 

''ரோஷிகா"   மௌனம்…. 

     "அவள் இன்னைக்கு வரல டீச்சர்" ரோஷிகா அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பதை எனக்குத் தெரியப்படுத்தும், முகமாகவே கீர்த்திகா "இன்னைக்கும்" என்ற சொல்லை கொஞ்சம் அழுத்திச் சொன்னாள். ரோஷிகா பள்ளிக்கு ஒழுங்காக வராததை நானும் சில நாட்களாக அவதானித்து வருகிறேன். 

ரோஷிகாவின் தங்கை ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளிடம் சென்று கொஞ்சம் விசாரித்துப் பார்க்கலாம். 

"மஞ்சுளா டீச்சர்        குட் மொர்னீங்" 

ம்ம்ம்ம்ம்......     "குட் மொர்னிங் டீச்சர்" 

"சஞ்சனா எங்கே? அவளது அக்கா சரியாக பள்ளிக்கு வருவதில்லை" 

......  அப்படியா! அவ்வளவுதான்.

மஞ்சுளா டீச்சர் வகுப்பறையின் உள்ளே சென்றுவிட்டார். 

அடுத்தநாள் நெருங்கிய நண்பி ஒருத்தியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். ஆடல், பாடலென  இருந்த  "இருமனவிழா" வில் ரோஷிகாவை சமயலறையில் கண்டேன். அதித வேலைப்பழுவில் அவள் என்னைக் காணவில்லை.

நிம்மதியில்லாத பயணமாக இருந்தது. வீட்டிற்கு வந்தும், ரோஷிகாவின் ஞாபகங்கள் மனதை விட்டுப் போகவில்லை. கடந்த வருடம் நடந்து, முடிந்த "தமிழ் தினப்போட்டியில்" தமிழ்மொழியின் சிறப்பு பற்றி தானே பாடலொன்றை பாடி மாவட்ட ரீதயில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமையினை சேர்த்தாள். அதுமட்டுமல்ல விளையாட்டு முதலான அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு வருடமும் முதலிடம் பெறுவாள்.

 

என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமானவை. வறுமை, தனிமை, வாய்புகள் கிடைக்காமை முதலானவற்றை நன்கு அறிந்திருந்தேன். அதனால்தான் என்னவோ! ஒவ்வொரு மாணவர்களின் திறமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து, போட்டி பொறாமை மிகுந்த இச்சமூகத்தில் முன்னேற, வழியமைத்து கொடுக்க வேண்டும் என்ற அவா என்னுள்ளே காணப்படுகிறது.

 

குழந்தைப் பருவத்தில் பள்ளிக்கு வந்து, பிள்ளைப் பருவத்தைக் கடந்து, கட்டிளமைப் பருவத்தை, அணுகும்போது ஒவ்வொரு மாணவர்களின் நடத்தையிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள் எம்மை அதிசயிக்க வைக்கும். ஆனால் ரோஷிகாவின் நடத்தையில் இப்படியொன்று தென்பட்டதில்லை.

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவள் என்பதால் என்னவோ! தெரியவில்லை. அவளின் கண்களில் "படிப்பு" என்ற பசியை மட்டுமே கண்டுள்ளேன்.

 

சிறுவயதிலே தந்தையை இழந்த, ரோஷிகாவின் தாயை சந்தித்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென ஏற்ப்பட்ட மாரடைப்பில் கணவனை இழந்துவிட்டதாகவும், மூன்று பெண் பிள்ளைகளை கையில் ஏந்தியவாறு "ஷரிஷா மேக்" என்ற உணவகம் வைத்திருப்பவரின் வீட்டில் சமயல்காரியாக வேலைக்கு சென்றதாகவும் கூறினார்.

ரோஷிகாவை பற்றியும் அவர்களது குடும்ப நிலை பற்றியும் விசாரித்தேன். தன்னுடைய ஐயாவிற்கு ஒரேயொரு பெண் பிள்ளையாகும். அவளுக்கும் என் மகளுக்கும் ஒத்த வயது. ஐயாவின் மகளை காட்டிலும் ரோஷி படிப்பதிலும், விளையாடுவதிலும் கெட்டிக்காரி. தனியார் பள்ளியொன்றில் கல்வி பயிலும் ஐயாவின் மகள் சோதனையில் 50% கூட பெறமாட்டாள். பொற்றோர் கூட்டத்தில் அடிக்கடி ஐயா அவமானப்படுவார். ரோஷி ஒவ்வொரு பாடத்திலும் 100% பெறுவாள். இதனை அறிந்தவர்.

"உனக்கு எதற்கடி படிப்பு. உன் தாயைப் போல பாத்திரங்கள் தேய்".  மேலதிகமாக 500/= தருகிறேன் என கட்டளை பிறப்பித்துவிட்டுச் சென்றார்.

இளையவள் இப்போது ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறாள். ரோஷியாவது அதிகப்படிப்பு படித்துவிட்டாள். என்னால் ஐயாவை எதிர்த்துக்கொண்டு மீண்டும் அவளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்றார். தன்னுடைய வறுமையையும், அறியாமையையும் என் தலைக்குள் போட்டு விட்டுச் சென்றார்.

 

அடுத்தநாள் நானும் எனது நண்பனும், முதலாளி வீட்டிற்குச் சென்றோம். அவரை சந்தித்து ரோஷிகாவின்  கல்வி தொடர்பாக ஆலோசித்தோம். "ரோஷி படித்தால், தனக்கு அவமானம். தன் பிள்ளைக்கு படிப்பு வரவில்லை" என்பதனை மனதில் வைத்துக் கொண்டு அவளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை.அவ்வீட்டிலே தொடர்ந்து இருந்தால், ரோஷிகாவின் திறமைகள் புதைக்கப்படும். என்பதையறந்து நானும் எனது நண்பனும் இணைந்து, அவள் தாயின் அனுமதியுடன் பெண்கள் விடுதியொன்றிற்கு அழைத்துச் சென்றோம். அவ்வாரத்திலேயே எனக்கு வேலை இடமாற்றமும் கிடைத்தது. ரோஷிகாவின் வகுப்பிற்கு எனது நண்பனே, அதிபரின் கட்டளைக்கு இணங்க பொறுபாக்கப்பட்டான்.

மூன்று மாதங்களின் பின் நண்பனை  பேரூந்தில் சந்தித்தேன். 'ரோஷிகா சுறுசுறுப்பும், புதிய விடயங்களை அறிந்துக்கொள்வதில் அதிக ஆர்வமும், படிப்பதில் உள்ள அக்கறையும், கற்றல் புறச் செயற்பாடுகளில் உள்ள ஈடுபாடும் என்னை மாத்திரமின்றி வேறு சில ஆசிரியர்கறையும் ரோஷிகாவின் மீது அக்கறை கொள்ளச் செய்துவிட்டது. என்றான். மனதிற்குள் சொல்ல முடியாத சந்தோசத்தில் மீண்டும் சந்திக்கலாம் என்று நண்பனிடம் கூறி விடைப்பெற்றேன்.

 

காலங்கள் கடந்து சென்றன. மாவட்ட ரீதியாக முதலாம் இடம் பெற்று, பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியுள்ள மாணவி அழகேஸ். ரோஷிகாவினை பாராட்ட பள்ளி அதிபர், அசிரியர்கள் உள்ளிட்ட குழுவினரால் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விழாவில் நான் விசேட அதிதியாக கலந்துக்கொண்டேன்.

 

ரோஷிகாவின் தாயின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியன. முதலாளி செய்த தவறினையும், பணத்தால் பிறர் கல்வியை அழிக்க முடியாது என்ற உண்மையை அறிந்துக்கொண்டவர். அக்கூட்டத்திலே அவமானத்தால் தலைகுனிந்து நின்றார்.

 

திறமைகளை மண்ணிலே புதைத்தாலும், வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் போது, மின்னல் வேகத்தில் வெளிப்பட்டு நிற்கும். வறுமை நிலையற்றது. பணத்தாசை கொண்டவர்களின் அடக்குமுறையில் இருந்து மீண்டு வெற்றியடைவோம்.

 

 

பரமசிவம் இந்துஜா

நுவரெலியா

இலங்கை.

 

 

23.

5. K2K00079

அவமானம்

*****

 

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வகுப்பறை....

அரையாண்டுத் தேர்வின் விடைத்தாள்களுடன் வகுப்பிற்குள் நுழைந்தார் முதுகலை கணித ஆசிரியர் கதிரேசன். அவர் நுழைந்ததையும் கவனியாமல் பாதி தூக்கத்தில் சொக்கிக் கொண்டிருந்தான் ரவி.

"ரவி...இங்க வா" ஆசிரியர் கூப்பிட... பக்கத்தில் இருந்த மாணவன் தோளைத் தட்ட இருக்கையிலிருந்து பாதி தூக்கத்தோடு எழுந்து ஆசிரியரின் அருகே பயத்துடன் சென்றான் ரவி. "இதோ பாரு...இந்த தடவையும் நீ கணிதப் பாடத்துல ஜீரோ தான் வாங்கியிருக்க.. வகுப்புலயும் பாடத்தைக் கவனிக்காம தூங்கி வழியுற.. உனக்கெல்லாம் எதுக்கு படிப்பு.. நீயெல்லாம் உருப்பட மாட்ட.. எதுக்குடா எங்க உயிரை வாங்க படிக்க வர்றீங்க.. மாடு மேய்க்க போக வேண்டியதுதானே.." கோபத்தில் விடைத்தாளை தூக்கியெறிந்து கத்தினார் கதிரேசன்.

"சார் அவன் மாடு மேய்க்க மாட்டான், செருப்பு தைச்சு பொழைச்சுப்பான் சார்.. ஏன்னா.. பள்ளி விட்டதும் அவங்க அப்பாவோடு உட்கார்ந்து இப்பவே அறுந்த செருப்பை  தைக்கிறான்...  உங்க செருப்பு அறுந்து போச்சுன்னா கவலைப்படாதீங்க சார்.. ரவி ப்ரீயாவே தைச்சுக் கொடுப்பான்..."குறும்புக்கார மாணவன் கிண்டலாக ரவியின் இயலாமையைப் போட்டு உடைக்க வகுப்பறையே கொல்லென்று சிரித்தது. ரவியின் முகமும் உடலும் அவமானத்தால் குன்றியது.

ஆம்...உண்மைதான்.. ரவியின் அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி. பரம்பரைத் தொழில். பெரும்பாடுபட்டு ரவியைப் படிக்க வைக்கிறார் அப்பா. அவரின் கடும் உழைப்புக்குத் தோள் கொடுக்கும் வகையில் ரவியும் பள்ளி முடிந்ததும் அப்பாவுடன் அமர்ந்து செருப்பு தைப்பான். என்னவோ இந்தக் கணிதம் மட்டும் அவனுக்குப் பிடிபடவே மாட்டேன் என்கிறது.. இரவு பதினொரு மணிவரையில் வேலை பார்த்துவிட்டுப் படுப்பதால் வகுப்பறையில் தூக்கம் வந்து விடுகிறது. அன்று அவமானப்பட்டு  கண்ணீரோடு  வகுப்பறையிலிருந்து வெளியேறினான் ரவி.

காலம் உருண்டோடியது... "அப்பா..எனக்கு அலுவலகத்துல முக்கியமான மீட்டிங்... அவளாலயும் லீவு போட முடியாது... வேலையிலருந்து ஓய்வு வாங்கி சும்மாதானே வீட்ல இருக்கீங்க..உங்க பேரனைக் கூட்டிகிட்டு ஸ்கூலுக்கு போங்க.. மார்க் கம்மியா வாங்கியிருக்கான் அரையாண்டுத் தேர்வுல.. இன்னிக்கு கூப்பிட்டிருக்காங்க..போயி என்ன ஏதுன்னு கேளுங்க... நான் மிஸ்கிட்ட பேசிட்டேன்..டென்த் போர்டு எக்சாம்... எதையும் அலட்சியப்படுத்தக் கூடாதுப்பா.." மகன் உத்தரவிட பேரன் வைசாக் உடன் பள்ளிக்குச் சென்றார் கதிரேசன். வகுப்பாசிரியர் நீண்ட அறிவுரைகளை வழங்கி கணித ஆசிரியரை பார்க்க அனுப்பி வைத்தார்.

"வணக்கம்.. சார் நீங்களா.. உட்காருங்க.." குரல் எங்கேயோ கேட்டதைப்போல் தெரிய சடாரென நிமிர்ந்தார். 'அட...இவன் ரவியாயிற்றே.. 'அதிர்ச்சியில் உறைந்தார்.. இவன் கணித ஆசிரியரா.. நம்பமுடியாமல் கண்ணாடியைக் கழற்றி மாட்டினார்.

"என்ன சார்..என்னை அடையாளம் தெரியுதா..நான்தான் ரவி..ஞாபகமிருக்கா சார்.. அன்னிக்கு என் மூஞ்சில பேப்பரை விசிறியெறிஞ்சீங்களே.. அன்னிக்குத்தான் சார் என் வாழ்க்கையோட முக்கியமான நாள்... அதுக்கப்புறம் வெறியா கணிதத்தைப் படிச்சேன்... ப்ளஸ் டூலயும் டிகிரியும் கணிதத்தை முதன்மை பாடமா எடுத்துகிட்டேன்...இன்னிக்கு உங்களாலதான் நான் கணித ஆசிரியரா ஆகியிருக்கேன். அன்னைக்கு கிடைச்ச அவமானம்தான் என்னை வாழ்க்கையில உயர்த்தியிருக்கு..." ரவி சொல்லிக்கொண்டே போக மௌனமாய்த் தலை குனிந்தார் கதிரேசன்.

கருத்து: வாழ்க்கையில் அவமானமில்லாமல் வெகுமானமில்லை.

 

-கி.இலட்சுமி

 

 

 

24. K2K00080

அவமானம்

 

கதிரவன் அன்று அலுவலகத்தில் இருந்து கிளம்பிய போது மனது அவமானத்தால் கனத்துப் போயிருந்தது. அலுவலக வேலையில் அவருடைய ஈடுபாடும் கடமை உணர்வும் எல்லோரும் அறிந்ததே.

 

அநாவசியமாக யாரிடமும் வம்பு பேசாமல் தானுண்டு தனது வேலையுண்டு என்று கருமமே கண்ணாயிருக்கும் அவருக்குத் தனி மரியாதை. அந்த ஆஃபிஸில் யாராவது புதிதாக வேலைக்கு வந்தால்  கூட வேலை கற்றுக் கொள்ள அவரிடம் தான் அனுப்புவார்கள் என்ற நிலையில் இன்று ஏற்பட்ட தலைகுனிவால் அவமானமாக உணர்ந்தார். எல்லாம் அந்தப் புதிதாக வந்திருக்கும் தலைமை அதிகாரியால் தான்.இளம்வயதில் எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவியில் வந்து உட்கார்ந்திருப்பவர்.

காலை நேரத்தில் பரபரப்பாக எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கதிரவன் குனிந்த தலை நிமிராமல் வேலையில் மூழ்கி இருந்தார்.அன்று மாலைக்குள் முடிக்க வேண்டிய ஃபைல்களை ஒவ்வொன்றாக க்ளியர் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மேலதிகாரி ஒரு ஃபைலைத் தூக்கி அவர் மேஜையில் வீசிவிட்டு கன்னா பின்னாவென்று கத்தினார்.இள ரத்தம் கோபத்தில் சூடாகி விட்டார்.கட்டுப் படுத்தத் தெரியவில்லை.

"என்ன வேலை பார்க்கிறீர்கள்? எத்தனை தப்பு? வேலை தெரியவில்லை என்றால் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே! இங்கே வந்து ஏன் என் உயிரை வாங்கறீங்க? பார்க்காமல் நான் கையெழுத்து போட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?", என்று அவர் கத்த எல்லோரும் எழுந்து ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தார்கள்.கதிரவனின் வேலையில் தப்பு வந்ததா? இது என்ன புதுசா இருக்கே என்று எல்லோருக்கும் வியப்பு.

தலைகுனிந்து நின்ற கதிரவன் மேலதிகாரி போனதும் அந்த ஃபைலை எடுத்துப் பார்த்தார்.ஃபைல் அவர் அனுப்பியது தான்.ஆனால் அதில் இருந்த பேப்பர் அவர் தயாரித்தது அல்ல.மேலதிகாரி அறையில் ஃபேன் காற்றில் ஃபைல்களில் இருந்த பேப்பர்கள் பறக்க,எடுத்து அடுக்கிய ப்யூன் ஒரு பேப்பரை மாற்றி வைத்து விட்டான். அவருடையதேயில்லை அது.வேறோரு  ஊழியர் செய்த வேலை. அதைக் கூட சரியாகப் பார்க்காமல் மேலதிகாரி திட்டியதால் மனவருத்தத்துடன் அரை நாள் லீவு போட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பி விட்டார். வீட்டிற்கு வெளியே சாலையோரத்தில்  நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அவருடைய மகன் பந்தைக் கீழே போட்டு விட்டு உள்ளே போகத் திரும்பினான்.

 

 

அதற்குக் காரணம் முதல் நாள் தான் அப்பாவிடம் அவனுடைய நண்பர்கள் எதிரிலேயே திட்டு வாங்கியிருந்தான். இந்தத் தடவை மேத்ஸ் பேப்பரில் குறைவாக மார்க் வாங்கியதைக் குத்திக் காட்டி  ஃப்ரண்ட்ஸ் முன்னாலயும் அப்பா திட்டியது அவனுக்கு மனதில் உறுத்தியது. கலைந்த சிறுவர்களை நிறுத்தித் தானும் கொஞ்ச நேரம் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதில் மனமும் லேசாகியது‌.இரவு மகன் அருகில்  உட்கார்ந்து முதல் நாள் நடந்து  கொண்டதற்கு வருத்தப்பட்டார்.

"பரவாயில்லைப்பா.இன்னைக்கு நீங்க எங்களோட விளையாடினது எவ்வளவு ஜாலியா இருந்தது தெரியுமா!" என்ற அவனுடைய வார்த்தைகளில் அவனுடைய குழந்தை மனதின் குதூகலம் புரிந்தது.அவருடைய மூடும் சரியானது. அடுத்த நாள் மலர்ந்த முகத்துடன் ஆஃபிஸில் நுழைந்தவரைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட அந்த மேலதிகாரியும் தனது அறையில் இருந்து வெளியே வந்து அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

"பரவாயில்லை ஸார்.நேற்றே தெரியும் எனக்கு", என்று சொல்லி விட்டு எப்போதும் போல இயல்பாகத் தன் வேலையில் ஆழ்ந்தார். யாரையும் கடிந்து பேசி அவமானம் செய்வது தவறு.அப்படித் தவறைச் சுட்டிக் காட்டிப் பேசினாலும் மற்றவர்கள் எதிரில் அவமானப்படுத்தக் கூடாது.தனிமையில் கூப்பிட்டுக் கண்டிக்கலாம்.

 

நன்றி.

-புவனா

 

 

25. K2K00081

மாத(வன்)வி

 

"ப்பளார்ர்." என்று அப்பா அடித்த வேகத்தில் மாதவனின் கையிலிருந்த கண்ணாடி வளையல் கீழே விழுந்து சுக்கு நூறானது.

"ஒழுங்கா ஆம்பள பிள்ளையா நடந்துக்கிற வழிய பாரு. இல்லாட்டி நடக்கிறதே வேற" என்று கூறிவிட்டு வெளியே சென்றார். அடிவாங்கிய அதிர்ச்சி நீங்காமல் அறையிலிருந்து வெளியே வந்த மாதவன், அழுதுகொண்டிருந்த அம்மா லட்சுமியின் மடிமீது தலைவைத்துப் படுத்தான்.பழைய நினைவுகள் அவன் மனதில் ஓடத்தொடங்கின.

திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தையில்லாமல் தவித்த சுப்புவுக்கும் லட்சுமிக்கும் வரமாய் பிறந்தான் ஒரு மகன். மா தவம் செய்து பிறந்ததால் 'மாதவன்' என்று பெயரிட்டு பாராட்டி சீராட்டி வளர்த்தனர். ஆனால், அவன் சிறு வயதிலிருந்தே ஒரு ஆண்மகனைப் போலில்லாமல் பெண்பிள்ளையைப் போல நடந்துகொள்வதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவனை கடுமையாகக் கண்டித்தனர். இருப்பினும், போகப்போகச் சரியாகிவிடும் என்று நம்பிக்கைக்கொண்டனர். ஆனால் அவன் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.

பாவம்.... அந்த சின்ன உள்ளமோ தன்னிடம் என்ன குறையென்று கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. உடலளவில் நடக்கும் மாற்றம் ஒரு பக்கம் மனதளவில் மாற்றம் இன்னொரு பக்கம். உணர்வுகளை யாரிடம் பகிர்வதென்று அறியாமல் திண்டாடினான். பள்ளிக்குச் சென்றால் சரியாகிவிடுவான் என்றெண்ணி பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அங்கிருந்த சிறுவர்கள் அவனை "ஒம்போது...அலி..."என்றெல்லாம் சொல்லி நோகடித்து ஒதுக்கிவைத்தனர். ஏளனம் தாங்க முடியாமல் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திக்கொண்டான்.

நாட்கள் செல்லச்செல்ல, ஊரார் மற்றும் உறவினரின் மிகுந்த கேலியும் கிண்டலும்  மாதவனை மனஉளைச்சல் அடையச்செய்தன. இதனால் வீட்டிலேயே முடங்கிப்போனான்.  தான் ஆண் உடம்பில் படைக்கப்பட்ட பெண்ணென்று உலகிற்கு உரக்கக் கூற விழைந்தான். ஆனால் ஈன்றெடுத்தத் தாயிடம்கூட புரியவைக்க முடியாமல் அல்லாடினான்.

சுப்பு, மாதவனால் தன் குடும்பத்துக்கே அவமானம் என்று கருதி அவனை அறவே வெறுத்து ஒதுக்கினான்.  லட்சுமியோ தன் மகனுக்குச் சரியாக வேண்டுமென்று கோவில் கோவிலாக ஏறி இறங்கினாள்.

தவறு இருந்தால் தானே திருத்திக்கொள்ள முடியும்.... ஏதேனும் நோய் இருந்தால்தானே குணமாகும்...தன் இயற்கையே இப்படித்தானென்று புரியாமல் அவமானப்படுத்துகிறார்களே என்று மனதில் புழுங்கினான் மாதவன். தன்னை இப்படி படைத்த இறைவனை அவன் திட்டாத நாளில்லை. இருப்பினும் சமூகத்திற்குப் பயந்து தன் உணர்வுகளை மறைக்கப் பழகிக்கொண்டான்.

இன்று பதினைந்து வயதான மாதவன், வீட்டில் யாருமில்லை என்றெண்ணி, தன் பெற்றோர் வந்ததைக்கூட கவனிக்காமல், கண்ணாடி வளையலை ரசித்துக்கொண்டிருந்தான். அதைக் கண்டு கோபம் கொண்ட சுப்பு அவனை அடித்துவிட்டான். அப்பா அடித்தது அவனை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இப்படி தினமும் தண்டனை அனுபவிப்பதைவிட எங்கேயாவது சென்றுவிடலாம் என்றெண்ணி இரவு யாரும் பார்க்காத வேளையில் வீட்டைவிட்டு வெளியேறினான். மறுநாள் மகனைக் காணாமல் பெற்றோர் கதறினர். என்னதான் கோவமிருந்தாலும், பெற்ற மனம் பித்துதானே...பிள்ளையைத் தொலைத்த சோகத்தில் சுப்புவும் லட்சுமியும் ப்ரமைப்பிடித்தார் போலாகி சில வருடங்களில் மாண்டும் போயினர்..

வருடங்கள் ஓடின, டிவியில் ஒரு நாள், " தமிழகத்தின் முதல் திருநங்கைக் காவல் ஆணையாளராக மாதவி அவர்கள் பொறுப்பேற்றார். தான் சந்தித்த அவமானங்களும் ஏளனங்களுமே தன்னைச் சாதிக்கத் தூண்டியதாகப் பேட்டியளித்தார்"

 

கருத்து

பெற்றோர்களே, பிள்ளைகள் எப்பாலினத்தைச் சேர்ந்தவராயினும் அவமதிக்காமல் அரவணைத்துக் கொள்ளுங்கள்.

பிள்ளைகளே, அவமானங்களை வெகுமானகளாகக் கருதி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

 

-Narmada

 

 

26. K2K-00086 

அவமானம் 

 

அன்று காலை விழித்தவுடன் தொலைக்காட்சி பார்க்க தொடங்கினேன் எனக்கு பிடித்த கேலிச்சித்திரம் (cartoon) அது அந்த சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது மோகம் கொண்டேன். இந்த பழக்கம் என்னை விடவில்லை நான் காணும் கதாபாத்திரங்கள் போலவே நடித்து பழகினேன் நடிப்பு வரும் அளவிற்கு பேச்சு வராது. பிறப்பில் இருந்து நான் பேசுவதற்கு சிரமப்படுவேன். அப்போது ஊமை படங்கள் மட்டுமே இருந்ததால் இந்த பேச்சு குறை என்னை பாதிக்காது என்று நம்பினேன் 

நாட்கள் ஓடின வயதுகள் கூடின உடல் வளர்ச்சி பெற்றது ஆனால் குரல் வளர்ச்சி இல்லை  இந்த குறைபாட்டின் பின் விளைவுகள் அப்போது என் கண் முன்னே தோன்றவில்லை. மனதும் வயதும் முதிர்ந்தாலும் தனக்கு பிடித்த கேலிச்சித்திரம் பார்ப்பதை தொடரும் பலரில் நானும் ஒருவன் 

வருடங்கள் கடந்தாலும் என் வீட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து அதே கேலிச்சித்திரம் பார்த்து கொண்டு இருந்தேன். மனசு விட்டு சிரிக்க வயது வரம்பு ஏது ? அந்த குழந்தைகளின் சிரிப்பு என் மனதில் இன்ப தாக்கம் ஏற்படுத்தியது அவர்கள் முகத்தின் புன்னகை அதை நானும் தர வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது 

 

சிறு வயதின் கனவை நினைவாக்க நினைத்தேன் திரை துறையில் வாய்ப்புகள் தேட தொடங்கினேன். என் வாய்ப்புகளுக்கு தடையாக அமைந்தது என் பேச்சு குறை  வாய்ப்புகள் கேட்ட இடத்தில் காகிதத்தில் வாக்கியங்களை கொடுத்து படிக்க சொன்னார்கள் திணறினேன். அப்போது நான் கண்ட கேலிகள் என் மனதும் காயம் பட கூடும் என உணர வைத்தது

 

வாழ்வில் வயதிற்கேற்ப அனுபவங்கள் கற்றுக்கொள்ளும் நாம் அவமானங்களையும் எதிர்கொள்ள நேரிடும். அந்த அவமானங்கள் தான் வாழ்வில் வெற்றி பெற அடித்தளத்தை இடும் என்று பலர் கணிப்பதில்லை. நானும் அறியவில்லை கைகளால் கன்னங்கள் தொட்டுப் பார்த்தேன் ஈரம் 

காரணம் கண்களில் இருந்து கசியும் கண்ணீர் ஆறுதல் கூற ஆள் இல்லாமல் உடைந்து போனேன் 

 

என்னிடம் ஓடி வந்த சிறுவன் ஏன் இந்த அழுகை நீங்கள் அழுது நான் பார்த்ததில்லை என்று கூறினான். அந்த சிறுவனின் மனம் புண் படாது படி மகிழ்விக்க தடுக்கி  விழுந்து நான் சிரிப்பூட்டினேன்.  நடிப்பில் கூட கொடுமையானது துன்பத்தில் அழுகையுடன் கூடிய சிரிப்பு . அதனை அன்று உணர்ந்த போது நான் முடிவெடுத்தேன் . நகைச்சுவைக்கு வார்த்தைகள் தேவையில்லை சிரிப்பை மூட்ட வசனங்கள் தேவையில்லை என்று  எனக்கு நிகழ்ந்த அவமானங்களை அடித்தளமாக இட்டு  என் சொந்த முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நகைச்சுவை கதாபாத்திரமாக என்னை தோற்றுவித்து மக்களின் வரவேற்பை கண்டேன்  என் பேச்சு குறைபாட்டை கண்டு ஏளனமாக சிரித்த அனைவரும் என்னை தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்வோடு சிரித்தனர். நான் திணறிப்போனதை பார்த்தவர்கள் என் வளர்ச்சி கண்டு திகைத்துப் போனார்கள்.

 

இன்று என் உயர்வு பல மடங்கு என்னை ரசிக்காத ஆள் இல்லை. அவமானங்களை கண்டு முயற்சிகளை தூக்கி வீசாமல் துணிவுடன் முயற்சிகள் செய் ! ஒரு நாள் வெற்றி உனது !

 

சில கற்பனைகளுடன் சில உண்மை கதை 

 

நன்றி

என் பெயர் Mr.பீன்...... 

மு. தீபக் 

சென்னை 600023

 

 

27. K2K-00089

"பாண்டியும் அவமானமும்"

 

பயம் அவனது கால குத்தகைக்கு எடுத்துக்கிச்சு போல, கால் ஆடிட்டே இருக்கு ஆனா நின்றபாடில்லை. அவமானமோ எப்போதான் நேரம் வருமோனு தெரில அடிக்கடி முழுக்கைசட்டையை விளக்கி விளக்கி கை கடிகாரத்துல  நேரம் பாத்துட்டே இருந்துச்சு. அவமானத்துக்கு எப்போமே குறும்பு அதிகம் எல்லாரிடத்திலும் வாய்ப்புக்கிட்டும்போது விளையாடிட்டே இருக்கும்.

 

 தன் கல்லூரி நண்பனான ஜாவா ஜோசப் தான் Python பாண்டிக்கு இந்த IT நிறுவனத்துல வேலைக்கு விண்ணப்பம் செய்தான். இது போன்ற நிறுவனத்துக்கு வேலைக்கு போனா ஆங்கிலம் பேசவேண்டும் என்று பயம் பாண்டிக்கு. பொறுத்து பொறுத்து பார்த்தான் ஜாவா ஜோசப் கடைசியா மிகவும் வற்புறுத்தி இங்கு அவனை அனுப்பினான். முதல் சுற்றில் தேர்வாகி அடுத்த சுற்றுக்கு காத்துட்டு இருந்தான். முதல் சுற்று எழுத்து தேர்வுதான் கொஞ்சம் சுலபமா தான் இருந்துச்சு ஆனா அடுத்த சுற்று குழுமுறை கலந்துரையாடல் ஆங்கிலத்தில் group discussion என்று கூறுவர். ஆங்கிலத்திலேயே பேசனுமே பாவம் Python பாண்டி சின்ன வயசுலிருந்தே தமிழ் வழியில் கல்வி கற்றவன். பட்டப்படிப்பு ஆங்கிலம் தான், ஆனா அதிகம் போராடி தான் படிச்சு முடிக்க முடிந்தது. அவமானத்துக்கு இப்போ அதிக சந்தோஷம் கலந்துரையாடல் ஆரம்பமாயிற்று. இன்று தான் அவமானம் python பாண்டியிடும் அதிக நேரம் விளையாட முடியும் போல. போதும் குத்தகைக்கு இருந்தது என்று எப்படியோ பயத்தபோக்கி அடுத்த சுற்றுல கூட்டத்துல ஒருத்தனா உக்கார்ந்தான் பாண்டி. எல்லாருமே ஆங்கிலத்துல சரளமா பேசுறாங்க. இவன் வாய்ப்பு வரும் போது பாவம் என்ன பண்ணுவான் தட்டு தடுமாறி தான் பேசினான். அவமானம் பாண்டி மனசுல சந்தோஷமா விளையாடிச்சு. சில சமயம் அங்கிருந்தவங்க முனுமுனுத்து சிரிச்சாங்க சில சமயம் தவறுதலா பேசினால் கூட்டமே கட்டுப்படுத்த முடியாமல் சிரித்திவிடும். ஆனால் எல்லோரும் சிரிப்பதில்லை அவன் அருகில் உக்கார்ந்தவர்கள் பாண்டியின் நிலமை புரிந்து ஊக்குவிக்கவும் செய்தார்கள். ஆனால், அவமானத்துக்கு ஒரே குழப்பம். நம்ம python பாண்டியிடம் விளையாடுவதா இல்லை ஆங்கில மோகத்தில் இருந்து தமிழின் அருமை உணர தவறிய இவர்களிடத்தில் விளையாடுவதா என்று குழப்பம். ஆனால் அங்கு அறியாமை ஏற்கனவே விளையாடி கொண்டிருந்தது ஆகையால் பாண்டியிடமே இருந்துக்கொண்டது அவமானம். நடப்பதனைத்தையும் நேர்காணல் நடத்தும் மேலாளர் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அவருக்கு இது புதிது அல்ல ஏற்கனவே இது போல பல நிகழ்வுகள் அவர் பார்த்தது தான். இத்தகைய சூழலில் அவர் இறுதிச்சுற்றில் தான் முடிவெடுப்பார். எனவே இறுதி சுற்றான நேர்முகத் தேர்வுக்கு பாண்டி தகுதி பெற்றான். Python பாண்டிக்கு சற்று அதிர்ச்சி தான். தனக்கு வாய்ப்புக்கிட்டாது என்றெண்ணினான். எனினும் மகிழ்ச்சி. இதுவரை நடந்ததவற்றை எண்ணாமல் தன்னுடன் தைரியத்தையும் நம்பிக்கையும் அழைத்துக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு சென்றான். அவமானத்துக்கோ அதிர்ச்சி கோவம் கவலை. பாவம் அவமானத்துக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டது. பாண்டி அவமானத்தை தூக்கிவீசுவிட்டதால் கவலை. இப்போ மேலாளரிடம் நேர்காணல் நடைபெற்று கொண்டிருக்கிறது. எப்படியும் ஆங்கிலத்தில் பேசமுடியாமல் மீண்டும் அவன் தன்னை மனதில் ஏற்றுக்கொள்வான் என்று எதிர்பார்த்த அவமானத்துக்கு ஏமாற்றம் தான், காரணம் மேலாளர் அவனிடம் தமிழிலே நேர்காணல் நடத்தினர். கேள்விகள் பதில்கள் அனைத்தும் அவனிடம் தமிழிலே உரையாடப்பட்டது.

இனி பாண்டியிடம் விளையாட முடியாது என்று எண்ணிய அவமானத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனால் மேலாளர் கேட்ட இறுதிக் கேள்வியில் சிறிது நம்பிக்கை வந்தது. "இங்க பாரு தம்பி, உனக்கு கணினியில் நல்ல அறிவு இருக்கு, இங்க வேல பாத்தா நல்ல எதிர்காலம் உனக்கு நிச்சயம் உண்டு. ஆனா இங்க எல்லாமே ஆங்கிலம் தான், நீ உடனே ஆங்கிலம் கத்துக்கிட்டு பேசி வேலப்பாக்குறனா சொல்லு இங்க உனக்கு வேல உண்டு. முடியாதுனு தோனுச்சுனா இங்க வேல கிடயாது." ,என்று சொல்லிமுடித்தார். இந்த நொடி மொழிக்கு ஏற்பட்ட அவமானத்தையாச்சு எண்ணி தன்னை ஏந்தி மானத்தோடு வேலையைவிட்டெறிவான் என்று அவமானம் எதிர்பாத்தது. ஆனால் அவன் மனதில் வறுமை எப்போதோ வெகுநாட்களாக அழையா விருந்தாளியாக உள்ளது. "சரிங்க சார். நிச்சயம் கத்துக்குறேன்." ,என்றவுடன் "அப்போ நியமனம் கடிதம் உங்க மின்னஞ்சலுக்கு வந்ததும் வேலைக்கு செந்துக்கோங்க." ,என்றார் மேலாளர். பிறகு பாண்டி மகிழ்ச்சியாக அங்கிருந்து விடைப்பெற்றுக்கொண்டான். நிறுவனத்தின் கதுவுகளைத் தாண்டி வெளியே சென்றான். அவமானம் பட வேண்டிய எடத்தில் பாண்டி அவமான படாமல் நடந்ததைக்கண்டு அவமானம் வாசலிலே வெட்க்கி தலைகுனிந்து நின்றது. இனி பாண்டியிடம் இருக்க போவதில்லை என்று முடிவெடுத்தது அவமானம். பிறகு தனியாக பரிதவித்த அவமானத்தை தானாக தமிழ் மொழி வந்து அரவணைத்த்துக்கொண்டது. சற்று யோசித்து பார்த்தால் சில சமயம் அவமானம் மனிதர்களுக்கு தேவை. அவமானம் மனிதர்களை ஒரு போதும் தாழ்த்துவதற்கு அல்ல அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கு  தான். இங்கும் மொழிக்கு ஏற்பட்ட அவமானமானது ஒரு நாள் உணரப்படும் போது மொழிக்கு முன்னேற்றத்தை அஃது நிச்சயம் தரும்.

 

 சில மாதங்கள் கழிந்தது....

இப்போ நம்ம python பாண்டியே பல நேர்காணல் நடத்துகிறான், ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறான். அன்று நேர்காணலில் தன்னுடன் சிறிது நேரம் விளையாடிய அவமானம் அவனுக்கு முன்னேற்றத்தை தான் விட்டு சென்றிருக்கிறது.

 

- விஷ்ணு வரத்தான் . ஜெ

 

 

28. K2K00088

 

அவமானம்! அனைவரும் அவரவர் வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்திருப்போம். இருவிதமான கோணத்தில் அவமானங்களை பிரிக்கலாம். ஒன்று நம்மை பிறர் அவமானப்படுத்துவது,மற்றொன்று நாம் சில செயல்கள் செய்வதை அவமானமாக நினைப்பது.முதல் வகையான அவமானம் நமக்கு ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கையில் நாம் முன்னேறுவதை தடுப்பதற்காகவே பல கோணங்களில் பலர் ரூபத்தில் வருவது.அதையெல்லாம் பெரிதாக கருதாமல் தங்கள் குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர்கள் பலரை நாம் அறிவோம் அல்லவா.அவ்வளவு ஏன் அதில் நாமும் கூட ஒருவராக இருக்கலாம்.ஆனால்,மற்றொரு வகையான அவமானம் நம் அன்றாட வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கும் ஒன்று. சிலர் தன் கௌரவத்திற்காக பல செயல்களை செய்வதை அவமானமாக கருதலாம் அல்லது சிலர் தீய காரியங்களை செய்வதை அவமானமாக கருதலாம் இப்படி பலவகை உள்ளது. அதில் ஒன்றை நாம் இப்போது கதையாக பார்க்கலாம்.

கீதா, நன்கு படிக்கும் ஒரு மாணவி.அவளது பள்ளிக்கூட வாழ்க்கை அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.ஏனெனில் அப்பள்ளியில் அவளைத் தெரியாத ஆசிரியர்களே  இல்லை.ஒழுக்கமும் படிப்பும் அவளிடம் சிறந்து விளங்கியது.பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர வேண்டிய தருணம் அது. பிறகு அவளுக்கு நல்ல கல்லூரியில் இடமும் கிடைத்தது.அது மிகவும் அழகான தரம் வாய்ந்த கல்லுாரிகளில் ஒன்று.கீதாவிற்கும் அக்கல்லூரி மிகவும் பிடித்திருந்தது.ஆரம்பத்தில் சிரமப்பட்டாலும் காலப்போக்கில் பழகியது அவளின் கல்லூரி வாழ்க்கை.கீதா விவரம் அறிந்த நன்கு படிக்கக்கூடிய மாணவியாக இருந்தாலும் அவளும் சில காரியங்களில் தவறிழைத்தாள்.அப்படி ஒன்று தான் மொழி.கல்லூரியில் பெரும்பாலும் அனைவரும் படிக்கக்கூடிய பேசக்கூடிய மொழியென்றால் அது ஆங்கிலம், நாம் அறிந்த ஒரு உண்மை தானே இது.அப்படிப்பட்ட கல்லூரியிலே அவர்களது தாய் மொழியில் பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ பலரும் கூச்சம் கொள்வார்கள் அல்லது சிலர் அவமானமாக கருதுவார்கள்.அப்படிப்பட்ட சூழலில்தான் கீதாவும் இருந்தாள்.அவள் தன் தாய்மொழியாகிய தமிழை பெரிதாக கருதியது இல்லை.தனக்கு தமிழ் தெரியும் என்பதை பிறருக்கு கூறுவதையே அவள் அவமானமாக கருதினாள்.ஆனால், கீதாவிற்கு தமிழ் மிகவும் பிடிக்கும். தன் நண்பர்களுடன் கூட பெரும்பாலும்  தமிழில் தான் உரையாடுவாள்.ஆயினும் அதை வெளியில் தெரிவிப்பதை அவமானம் என்று நினைத்தாள்.பள்ளிப் பருவத்தில் கீதா இப்படி இருந்ததில்லை.ஆனால் கல்லூரிச்  சூழல் அவளை மாற்றியது.

அன்று ஒருநாள் அவளது கல்லூரியில் ஆசிரியர் தினத்தையொட்டி விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர்.அதற்காக சிறப்பாக பல ஏற்பாடுகளும் மாணவர்களால் செய்யப்பட்டது.அதில் ஆசிரியர்களின் மகத்துவத்தை போற்றும் வண்ணம்  சில மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு சிறு கட்டுரை ஒன்றை தயாரித்தனர். அக்கட்டுரைகளை விழாவின் போது அனைவர் முன்னிலையிலும் படித்தாக வேண்டும்.அதற்காக தகுந்த மாணவர்களை, விழா ஏற்பாடு செய்யும் குழு தேர்ந்தெடுத்தது.கீதா படிக்கும் வகுப்பில் யாரும் முன்வராததால் தமிழ் கட்டுரையை அவள் படிப்பதாக கூறினாள்.விழாவும் தொடங்கியது, ஆசிரியர் அனைவருக்கும் மாணவர்கள் வாழ்த்தினை தெரிவித்து சில மகிழ்ச்சியான விளையாட்டுகளையும்  நடத்தி விழாவை  சிறப்பாக முடித்தனர். கீதாவும் அவளது கட்டுரையை சிறப்பாக பேசி முடித்தாள்.விழா முடிந்து அவ்வரங்கத்தை விட்டு வெளியே வந்ததும், பலரும் கீதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். அவளது ஆசிரியர்கள்,நண்பர்கள்,அலுவலகப்  பணியாளர்கள் என அனைவரும் அவளது பேச்சினை மிகவும் பாராட்டினார்கள்."நீ இவ்வளவு அழகாக தமிழ் உச்சரித்து பேசுவாய் என்று நினைக்கவில்லை" என்றெல்லாம் பாராட்டினார்கள்.கீதா மிகவும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் இருந்தாள்.அவளுக்கு இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல ஆனால் இவ்வளவு பாராட்டு  கிடைக்கும் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.அதிலும் தமிழில் பேசியதற்காகவா இவ்வளவு பாராட்டுக்கள் என்று திகைத்து நின்றாள். அப்போது உணர்ந்தால் அவள், பேசும் மொழி யாதாயினும் அதை ஒரு போதும் அலட்சியமாக கருதக் கூடாதென்று.

படிக்கும் மொழி எதுவாயினும் சரி, அதை மற்ற மொழிகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.இந்த இடத்தில் இந்த மொழி பேசக் கூடாது பேசினால்  நமக்கு அவமானம், மற்றவர்கள் நம்மை ஏளனமாக பார்ப்பார்கள் என்று  நினைக்கும் பலர்  இவ்வுலகில் வாழ்ந்துதான் வருகின்றனர். அதில் கீதாவைப் போல புரிந்து கொண்டவர்களும் உண்டு, புரிந்துகொள்ளாதவர்களும் உண்டு.

கதையின் கருத்து:

மொழி என்றும் ஒருவருக்கு அவமானத்தை தருவதில்லை.அது, எந்த மொழியாக இருந்தாலும் சரி.தாய் மொழியில் பேசுவது,எழுதுவது,படிப்பது  இதையெல்லாம் அவமானமாக ஒருபோதும் நினைக்க வேண்டாம்.

 

அன்புடன்

-ஜனனி பிரபா

 

 

 

29. K2K00093

அவமானம்🙃

 

"கனிமொழியாள்" பெயருக்கு ஏற்றார் போல கனி மொழி மட்டுமே பேச தெரிந்தவள். ஆகா., ஓகோ! என்னும் அளவிற்கு வாழ்க்கை அமையாவிட்டாலும் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லாத இல்லறம் அளவாக மையிட்ட அவளது கண்களையும் காற்றில் அலைபாயும் முழுமையும் கறுமை என்று சொல்லிவிட முடியாத தேன்குழலையும் காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது எனலாம். எத்தனையோ ஆண்களை கடந்த போதும் எவரையும் ஏறிட்டும் பார்க்காத அவளது அடக்கம் அவளது அழகிற்கு அவள் இட்ட திருஷ்ட்டி பொட்டு. கலை கல்லூரி படிப்பு மூன்று ஆண்டுகளை திருடி செல்ல அனைத்து பெண்கள் போல திருமண ஏற்பாடுகள் நிறைவாய் நடந்தேரியது. தன் கல்லூரி தோழிகளுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக உற்சாகமாய் கிளம்பியவள் வீடு திரும்ப போவதில்லை என்பது அப்போது அவளுக்கு தெரியாது. காலை பத்து மணியளவில் நெல்லை மாநகரின் அளவில்லா அழகை ரசித்து கொண்டே நடந்து சென்றவள் எக்ஸ்கியூஸ்மி என்ற சப்தம் கேட்க திரும்பி பார்த்தாள். அவ்வளவே அவள் நினைவில் இருந்தன. இரண்டு நாட்கள் கழித்து விழித்த போது அடித்து போட்டார் போல உடல் வலியும் உடலில் அங்கங்கே கட்டுகளுமாக மருத்துவமனையில் இருப்பது தெரிந்தது. தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய தவித்த மனமும் அதற்கு ஒத்துழைக்காத உடலுமாக சோர்ந்து மீண்டும் உறங்கி போனாள். சற்று நேரத்தின் பின் கண் விழித்த போது தாயின் அங்கலாய்ப்பை கேட்டு நிலை குலைந்து போனாள். ஆம் அவள் ஆசைப்பட்ட வாழ்வு இனி அமைய போவதில்லை. அன்று நடந்த விபத்து அவளது தாய்மையை பறித்து இருந்தது. ஏற்கனவே திருமணத்தின் போது நடந்த விபத்தால் அபசகுனம் என்ற பேச்சு அடிபட்டது. இதில் குழந்தை பாக்கியத்தை இழந்தது மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தால் கல்யாணமே நின்று போகுமே என்ற அன்னையின் அழுகுரல் அவளை ஆடி போக செய்தது. திருமண நாள் நெருங்க நெருங்க கனிமொழிக்கு பயம் அதிகரித்தது. பொய் சொல்லி மணந்து ஒருவனை ஏமாற்றுவதை விட உண்மையை சொல்லி தானே விலகுவது என்ற முடிவில் தன் வருங்கால கணவரின் கை பேசி எண்ணுக்கு அழைக்க கைபேசியை எடுத்த போது திருமண வீட்டாரிடமிருந்து அழைப்பு வந்தது. கனிமொழியையும் அவள் குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்து பேச வேண்டும் என்றனர். வாய்ப்பு தானாக அமைகிறது என்ற எண்ணத்தில் அவள் கிளம்பி செல்ல அங்கே அவர்களுக்காக கனிமொழியின் ஹாஸ்பிடல் ரிப்பேர்ட்டுடன் காத்திருர்தனர் மாப்பிள்ளை வீட்டார். அதிர்ச்சியில் உறைந்த கனிமொழியும் அவள் குடும்பத்தினரும் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டது அவளை குறுகிப் போக செய்தது. கல்யாணம் நின்று போனதும் அல்லாமல் அவமானம் ஏமாற்றுக்கார குடும்பம் என்ற பட்டமும் அவளுக்கு ஏற்பட்ட விபத்தின் விளைவும் அவளை முடக்கி போட்டது. ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு பின் ஓர் அனாதை ஆசிரமத்தில் உதவிக் கொண்டிருந்த அவளை தொலைவிலிருந்து பார்த்து கொண்டிருந்த தயாளன் அன்று விபத்தின் போது அவளை காப்பாற்ற முயன்றவன். பின்னர் இரண்டு முறை மருத்துவமனைக்கும் வந்து விசாரித்து விட்டும் போயிருந்தான். இப்போது அவள் மீது இருந்த கருணை காதலாக உருவெடுத்து இருந்தது. அவளிடம் கேட்டு மறுத்து விட்டால் என்னை செய்வது என்ற  எண்ணத்தில் அவள் வீட்டிற்கு செல்வது என்ற முடிவெடுத்து இருந்தான். தன் ஒரே மகளின் இருண்டு போன வாழ்க்கைக்கு ஒளியாக வருபவனை பேரானந்தத்துடன் ஏற்றுக் கொண்டனர் பெற்றோர். கனிமொழியாளின் விருப்பம் எடுபடவில்லை என்ற போதும் அவள் மறுக்கவில்லை. காரணம் உண்மை அனைத்தும் அறிந்த பிறகு தன்னை மணக்க முன்வந்தவன் அவ்வளவு மோசமானவனாக இருக்க முடியாது என்ற அவனுக்கு இசைவாய் அவளுள் எழுந்த வாதம். இருப்பினும் அவளுள் எழுந்த சந்தேகங்களை அவனிடமே கேட்பது என்று முடிவு செய்தாள்... தாய்மை திருமண வாழ்வில் ஓர் இன்றியமையாத நிகழ்வு அது நடக்காது என்று தெரிந்தும் என்னை ஏற்றுக்கொள்ள காரணம் என்ன என்று ஒருவாறு படபடத்த படி கேட்டு முடித்தாள். ஆவன் அவள் புறம் திரும்பி "கற்று மறக்க முடியாதது அவமானம்" இன்று அவமானத்தால் வலுவிழந்த நீயும் உன் குடும்பமும் ஏதோ ஒரு வகையில் என் கடந்த காலத்தை நினைவு படுத்தியபோது குழந்தைகள் தடையாக தோன்றவில்லை... உன்னையும் உன் தாய்மையையும் அந்த அனாதை இல்லத்தில் 3 வருடங்களாக நேசித்தேன். இனியும் உன்னை தூரத்தில் இருந்து காதலிக்க  விருப்பமில்லை என்றான். 3 வருடமாக அவமான தீயில் வாழ்ந்தவளுக்கு அவனின் அந்த வார்த்தைகள் நீரூற்றி அணைத்தாற் போல் இருந்தது... தன்னையும் மறந்து அவனின் தோழ்களில் தஞ்சம் புகுந்தாள்...

 

Tresa Immaculate

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Popular posts from this blog

Own stories

சுய விருப்ப கதைகள்

நகைச்சுவை