நகைச்சுவை
1.K2K-00002
நகைச்சுவை
நகைச்சுவை- யார் அடி முட்டாள்?
கற்பனைக் கதை:
பூந்தி என்ற ஊரில் 3 முட்டாள்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் "பேச்சும், செயலுமே" முட்டாள் தனமாக தான் இருக்கும். அவர்களின் குடிசையின் அருகில் தீணா என்ற வாலிபன் புதுசாக அந்த ஊர்க்கு வந்திருந்தான். முதல் முட்டாள் வெளியே வந்து "நான் சமைப்பதற்காக காய்கறியைப் பார்த்து(பறித்து) வருகிறேன்" என்று சொல்லிவிட்டு போனான். இரண்டாம் முட்டாள் "நான் சமைப்பதற்கு தண்ணீரை காய்த்து (எடுத்து) வருகிறேன்" என சொன்னான் மூன்றாம் முட்டாள் நீங்கெல்லாம் வெளியே போறீர்கள்."நான் மட்டும் தொங்கிட்டு (இங்கிட்டு) இருந்து என்ன பண்ண போறேன் நானும் பானையரை பிடித்து (பண்ணையரை பார்த்து) வருகிறேன்" என்று சொல்ல அந்த வாலிபனுக்கு அவர்களின் பேச்சும் செய்கையும் தமாஷாக இருந்த காரணத்தால் அவர்களில் முதலாம் ஒருவனை பின்தொடர்ந்தான். அந்த முட்டாள் ஒரு வாளியை பார்க்கிறான் இதில் காய்கறிகளை போட்டு காய்த்து செல்லாமே என்று வாளியை எடுத்து பார்த்தான் அதில் காய்கறி இருந்ததை அவன் "இந்தக் குப்பையை யாரு? இதில் போட்டது முட்டாள் பயலுக" என்று சொல்லி காய்கறியை கீழே கொட்டிவிட்டு வாளியை கொண்டு சென்று தோட்டத்தில் அவன் காய்ப்பறிக்காமல் இலையை பறித்தான். தோட்டத்தின் வேலைக்காரன் இவனுக்கு பழக்கம் என்பதால் இதை பார்த்துவிட்டு "இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என கேட்க முட்டாள் அதற்கு " நான் காய்கறி பார்க்கிறேன் (பறிக்கிறேன்) என்று சொல்ல வேலைக்காரன் அதற்கு "நீ காயை பார்க்காமல் கறியை (இலையை) பார்க்கிறாய் (பறிக்கிறாய்)" என்று சொன்னான். அவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த தீணா ஒரு பக்கம் சிரிப்பும் இன்னொரு பக்கம் தலையில் அடிக்காத குறையாய் இருந்தது. இரண்டாம் முட்டாள் "லலலால கீதமே செங்கீதமோ ஓ ஓ" என பாட்டு பாடிகிட்டே போனான் அவன் ஆற்றங்கரை பக்கத்தில் குவிந்திருக்கும் "மணலை" பார்க்கிறான், அதில் "நாம் இதைக் கொண்டு பெரிய வீட்டை கட்டலாமே" என சிறிது நேரம் யோசித்தான்" இதை எப்படி ஒரே நிஜத்தில்(நேரத்தில்) எடுத்து கொண்டு போவது" என ஆழ்ந்த யோசனைக்கு சென்றான் "கயிறு கட்டி ஏன் இதை சிலுப்பிக்கிட்டு (இழுத்துகிட்டு) போகக்கூடாது" என உடனடியாக செயல்பட்டான். இதையெல்லாம் கவனித்த தீணாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஏனென்றால் "இவ்ளோ நேரம் யோசித்து இப்படி ஒரு அறிவாளியா" ஒரு பாறாங்கல்லை கட்டி இழுத்தாள் கூட முயற்சி செய்ய சொல்லலாம். இதுக்கு என்னத்த சொல்றது என நகர்ந்தான். மூன்றாவது முட்டாள் பண்ணையாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தான்."பானையாரே எனக்கு வேலை இல்லையா நான் எத்தகைய அரிவாள் (அறிவாளி) என உரலுக்கு(உங்களுக்கு) தெரியவில்லை" என சவால்விட்டு சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.பண்ணையார் யோசித்து அவனிடம் புன்முறுவலுடன் ஒரு குழியை தோண்டிவிட்டு வந்து பார்க்க சொன்னார்.அதற்கு அவன் "சரி அப்படியே ஆடட்டும் (ஆகட்டும்)" என சொல்ல குழியை தோண்டினான்.முட்டாள் வேலை பார்த்து கொண்டே மனதுக்குள் "எப்படியோ ரோட்டை (வேலை) வாங்கியாச்சு" என நினைத்தான் தோண்டி விட்டதனால் பண்ணையாரை பார்க்க போனான்.பானையாரே "ரோட்டை முடித்து விட்டேன்" பண்ணையார் அதற்கு "நல்லது..! இன்னும் வேலை முடியவில்லை, பீங்கான் ஜாடிகளில் எண்ணெய் உள்ளது. ஒவ்வொன்றாக புதைத்துவிட்டுச் செல்" என்று கூறினார். "அப்படியே முறுக்குகிறேன் (முடிக்கிறேன்)" என சொன்னான். அவன் ஜாடியை ஒவ்வொன்றாக எடுத்து வந்து மூடியை திறந்து ஊற்றினான். இதை பார்த்துக் கொண்டிருந்த தீணா "நிறுத்து ஊற்றதே..! நீ வீணாக்குகிறாய்..!" என்று கூறினான் முட்டாளிடம். அவன் கேட்காமல் "பானையர் தான் ரோட்டை முறுக்க (முடிக்க) சொன்னார். அதை படுக்க (தடுக்க) நீ யார்" என கேள்வி எழுப்பினான், பண்ணையார் சத்தத்தைக் கேட்டு வந்துப்பார்த்தார். விவரத்தை கூறினான் தீணா, எனக்கு ரொம்ப நல்லது பண்ணிருக்க தம்பி என்று கூறி அவனுக்கு நல்ல சம்பளத்துடன் வேலையை தந்தார்.
கருத்து: இக்கதையில் "யார் அடி முட்டாள்?" என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்னைச் சொல்லக்கூடாது ஏனென்றால் நீங்களும் தான் படித்தீர்கள் என மறவாதீர்கள் ..!!
- லக்ஷ்மி பிரியா
2.K2K-00004
ராமசாமி அறிந்திரா ராமசாமி:
என்ன குப்புசாமி சப்பாடு சப்பிடிங்களா என்று கேட்டவாறு அந்த ஊரில் உள்ள பலகார கடையின் மேசையில் அமர்ந்தான் அவன். யார்டா அது சாப்பாட சப்பாடுனு சொல்றது என்றவாறு நிமிர்ந்து பார்த்தார் குப்புசாமி, வந்தது ராமசாமி என்று தெரிந்தது. ராமசாமிக்கு சுமார் முப்பது வயது இருக்கும், சிறு வயதிலே பெற்றோர் இல்லாத காரணத்தால் பெரிதாக படிக்கவில்லை. ஊரில் உள்ள மற்றவருக்கு அவனால் முடிந்த உதவி செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தான். படிக்காத காரணத்தாலும், யாரும் உடன் இல்லாத காரணத்தாலும் ராமசாமிக்கு ஒருமை, பன்மை, பாலின வேறுபாடு, துனைக்கால் எங்கு போடுவது என்பது தெரியாது. இதனால் அவன் செல்லும் இடமெல்லாம் சிரிப்புக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இருக்காது.
ராமசாமி ஒரு நாள் வயல் வேலைக்காக ஊர் எல்லைவரை சென்றான், அப்போது ஊரின் எல்லையில் ஒரு யானை வருவதை கண்டான் அதைப் பார்த்து பரபரப்பான இவன் பின்வருமாறு கூச்சலிட்டபடி ஓடினான் " யானைகள் வருகின்றன ஊருக்குள்" என்றவாறு. அதை கேட்டு ஊரே கலவரமாக மாறியது எல்லோரும் ஓடி ஓழிந்துகொண்டனர். பின்பு ஊருக்குள் ஒரு கோவில் யானை பாகனுடன் வந்தது, ஊரில் யாரும் இல்லாததை பார்த்த அந்த பாகன் ஆச்சர்யபட்டு போனான். பின்பு விசாரித்ததும் அது ராமசாமியின் வேலை என்று தெரியவந்தது. ஊரே ஒன்று கூடி ராமசாமியை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்கள்.
பின்பு ஒரு நாள் ஊருக்கு வந்த பண்ணையாரை வரவேற்கும் பொருப்பு ராமசாமியிடம் வந்தது, அவனும் அவனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு, அவர்கள் சொன்னதை அவனுக்கு தெரிந்ததை எழுதி தயார் ஆனான். வரவேற்பு உரை வாசிக்க தொடங்கினான் "நமது ஊருக்கு வந்திருக்கு பண்ணையார் மிகவும் நல்ல மனிதர், அவர் பெரிய செல்வந்தர்" என்பதற்கு பதிலாக "நமது ஊருக்கு வந்திருக்கு பானையார் மிகவும் நல்ல மனிதர், அவர் பெரிய சொல்வந்தர்" என்று கூறினான் இதை கேட்ட அங்கு இருப்பவர் எல்லோரும் நகைக்க ஆரம்பித்தனர். இதனால் கோவம் கொண்டு அங்கிருந்து போய்விட்டார். பின்பு நிலைமையை உணர்ந்த ராமசாமி அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் நழுவி சென்றுவிட்டான்.
ராமசாமியின் பக்கத்து வீட்டு சாரதி மாமாவிற்கு திடிர் என்று உடல் நிலை மிகவும் மோசம் ஆனது, அன்று பார்த்து ஊரில் உள்ள அனைவரும் பக்கத்து ஊர் திருவிழாவிற்கு போய்விட்டார்கள். அப்போது ராமசாமியை அழைத்த சாரதி மாமா பட்டனத்தில இருக்க என் பையனுக்கு ஒரு தந்தி அனுப்பனும் கொஞ்சம் நான் சொல்றத அப்படியே போய் தபால் நிலையத்துல சொல்லு என்று கூறிவிட்டு பின்வருமாறு சொன்னார் "அவசரம் உடனே வரவும்" என்று. வழக்கம்போல "அவருக்கு சுரம் உடனே வரவும்" என்று தந்தி அனுப்பினான் இதை பார்த்த சாரதியின் மகனும் இந்த மாதம் கடைசியில திருவிழா வருது அப்போது போகலாம் என்று விட்டுவிட்டான். பின்பு நிலைமை மோசம் ஆனதும் மீண்டும் ஒரு தந்தி அதை பார்த்த அவன் அவசரமாக ஊருக்கு வந்தான். முதல் தந்தி யார் அனுப்பியது என்று விசாரித்துவிட்டு ராமசாமியை ஊரே சேர்ந்து வெளுத்து வாங்கியது.
இதனால் கவலையுற்ற ராமசாமி ஊரை விட்டு வெளியேறி பக்கத்தில் உள்ள ஒரு மலைக்கு சென்று சிவனை நினைத்து தவம் செய்ய தொடங்கினான். அவனின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானும் அவன் முன் தோன்றி, அவன் நிலையை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று சொன்னார். அவனும் நடந்ததை சொல்லிவிட்டு பின்வருமாறு கூறினான் "நான் தொடும் எவரும் சிறிதாக வேண்டும்" " என்னை பழித்தவர்கள் பாராட்டும்படி நான் இருக்க வேண்டும்" என்று கேட்பதற்கு பதில் வழக்கம் போல " நான் தொடும் எதுவும் சிறிதாக வேண்டும்" " என்னை பழித்தவர்கள் பரிதாப படும்படி நான் இருக்க வேண்டும்" என்றான் சிவனுக்கே அதை கேட்டு சிரிப்பு வந்துவிட்டது, அவரும் விளையாட்டாய் அப்படியே அகட்டும் என்று சொல்லி சிரித்தவாறு சென்றுவிட்டார். பின்பு அந்த வரமே சாபமாகியது அவனுக்கு சாப்பிட கூட முடியாமல் அவன் தொடும் அனைத்தும் சிறிதாகி போகும் அவல நிலைக்கு ஆளானான். இதனால் அவன் உணவு கூட உண்ண முடியாமல் அனைவரும் பரிதாபம் படும்படி ஊரெல்லாம் அலைந்து உயிர் விட்டான்.
தாய்மொழியை பிழையின்றி பேச, எழுத தெரியாத ஒருவன் தவம் செய்து வரமே பெற்றாலும் அதுவும் அவனுக்கு சாபமே. "புன்னகைப் போம் அடுத்தவரை புண்படுத்தாமல்". "புரியவைப்போம் அடுத்தவரின் தவரை புன்னகையுடன்".
தாய்மொழியை பிழையின்றி பேசும், எழுதும் யாவருக்கும் சமர்ப்பணம்.
இவன்
கடைக்கோடி தமிழன்
மணிகண்டன் கணேசன்
கும்பகோணம் (குடந்தை)
3.K2K
- 00008
புன்னகை - நகைச்சுவை
தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான் செழியன். முழுவாண்டு தேர்வின் கடைசி நாளன்று தான் அதுநடந்தது.
வகுப்பில் உடன்படிக்கும் நண்பர்களான முத்துவும், காதரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருந்தனர். செழியன் அவர்களிடம் என்னப் பிரச்சினையென்று விசாரிக்கப் போனான். அந்த வகுப்பிலேயே படிக்கும்கோமலாவால் தான் இந்த பிரச்சினை என்று தெரிந்ததும் செழியன் லேசாய் விலகிக் கொண்டான்.
கோமலா, அந்த வகுப்பிலேயே மிகவும் அழகானவள். காண்போரை வியக்க வைக்கும் அழகு. அவள் சிரித்தால், ரோஜாப்பூ மலர்வதை நிறுத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கும். செக்கச் செவேலென்று அழகிய கன்னங்களும், அவளின் கண்கள் அழகிய மீன் நீந்துவது போலவும் இருக்கும். அவ்வளவு அழகு. வயதுக்கேற்ற உயரம். சொல்லவும் வேண்டுமா அவர்களுக்கான சண்டை ஏன் என்று?
செழியன் அவர்களை விட்டு நகர்ந்து, கோமலாவிடம் சென்று “உன்னால் தான் அவர்களுக்குள் சண்டை” என்றான்.
“அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்” என்றாள் அவள்.
“போய் சண்டையை நிறுத்து. நீ சொன்னா தான் கேப்பாங்க. இல்லனா நிறுத்தவே மாட்டாங்க” என்றான்செழியன்.
என்ன செய்வது என்று புரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள் கோமலா. அப்போது தான் அவளுடைய சிநேகிதிகுமாரி வந்தாள். கோமலா அவளிடம் “இங்க பாருடி. இவனுங்க என்னாலதான் சண்டை போட்டுக்குறாங்கன்னுசெழியன் சொல்றான். என்னைப் போய் தடுக்கச் சொல்றான். என்னடி பண்றது?” என்றாள்.
குமாரி சற்று யோசித்துவிட்டு கோமலாவின் காதுகளில் ஏதோ சொன்னாள். உடனே, கோமலா அருகிலிருந்ததன் பையிலிருந்து ஏதோ எடுத்தாள். தன் பாக்கெட்டில் அதை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்களை நோக்கிச் சென்றாள்.
“டேய் முத்து, காதர். சண்டையை நிறுத்துங்கடா. ஏண்டா அடிச்சிக்கிட்டு இருக்கீங்க. இந்தா இதைப்புடிங்கரெண்டு பேரும். இதுக்கு தான சண்டை. காலையில முத்து என் கையில இருந்து புடுங்கிகிட்டு போயிட்டு, நான்தான் அதை கொடுத்தேன்னு இவன் கிட்ட சொல்லி, ரெண்டு பேரும் இப்போ சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க” என்று தன் பாக்கெட்டில் வைத்திருந்ததை எடுத்து கொடுத்தாள். இருவரும் சண்டையை மறந்து, அதைபெற்றுக்கொண்டனர்.
கோமலா தொடர்ந்தாள். “டேய்,
ரெண்டு பேரும் இனிமே சண்டை போட்டிங்கன்னா அவ்வளவு தான். அடுத்தவருசம் நாமெல்லாம் மூணாங்கிளாஸ் போகப் போறோம். இன்னமும் சண்டை போட்டுக்கின்னு இருக்கீங்க”.
“சாரி, கோமலா. நீதான் ரப்பர் வச்ச பென்சில் கொடுத்துட்டியே. இனிமே ரெண்டு பேரும் பழம்” என்றனர்கோரசாக.
ஒரு சிறு புன்னகை உங்கள் உதடுகளில் வந்திருக்குமில்லையா? சிறு வயதில் எத்தனையோ விசயங்கள்நடந்திருக்கும். சண்டைகள் மனக்கஷ்டங்கள் அதை அனைத்துமே இன்று நினைத்துப் பார்த்தோமேயானால், எல்லாமே நகைச்சுவை தான்.
அன்பரசு மகாதேவன்
(அ) அகத்தியன்
பொழிச்சலூர்,
சென்னை.
4.K2K00011
இல்லறம் என்ற நல்லறம் துவங்கி இன்றோடு 16 நாள்கள் ஆகிறது.
என் கணவருக்கு வெளியூரில் வேலை. காலை 6 மணிக்கு செல்பவர் மாலை 7 மணிக்கு திரும்புவார்.
என்ன உணவு பிடிக்கும்? எப்படி சமைக்க வேண்டும் என்று இன்னும் அறிய முடியவில்லை.
இரவு
உணவுக்கு சாதம், பொரியல் தயார் செய்து விட்டு முட்டைக்கு வெங்காயம் அறுக்க ஆரம்பித்தேன்.
கணவரோடு பேசிக்கொண்டே சமையல் செய்யலாம் என்று ஹாலில் அமர்ந்து வெங்காயம் உரிக்கலானேன். பேன் காற்றுக்கு கண் எரியும் என்று நினைக்காமல் அமர்ந்து இருந்தேன்.
ஏய்
அறிவில்லையா உனக்கு?, கண்ணெல்லாம் காந்துது.
இல்ல
மாமா முட்டை பொரிக்கலாம்ன்னு. முட்டை எவன் கேட்டான்?
ராத்திரி முட்டை சாப்பிடலாமா.? இந்த 16 நாளா நல்லா தானே பேசினாரு.
அழுகை முட்டிக் கொண்டு வந்தத, ஆசையா சமைச்சா இப்படி பேசறாரே.
மறுநாள் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து வேகவேகமாக சமையல் செய்தேன்.. அலுவலகம் கிளம்பியவர் ஏண்டி காலையில் இருந்து கடாமுடா கடாமுடான்னு உருட்டற. மனுசன நிம்மதியா தூங்க விடறியா?
உங்களுக்கு சாப்பாடு செஞ்சேன்.
உன்னை யார் கேட்ட,?
இல்ல மாமா இப்ப வரை ஒட்டல்ல சாப்டீங்க. இனி நான் வந்துட்டேன்.
டிபன்ல கொண்டு போங்க, பிளீஸ் மாமா, சரி சரி வை.
நல்ல மாமா.
கடவுளே என்னை காப்பாத்து. மாமா சத்தமாக வேண்டினார்.
இந்தாங்க மாமா.
என்னடி உன் உயரத்துக்கு ஒரு டிபன்.
சாதம், குழம்பு, பொரியல், மோர், ரசம்
ஏன் வடை, பாயாசம் வைக்கலே
ஐயோ நாளைக்கு வச்சிறேன்.
அடியே ஊர் ஊரா ஆர்டர் எடுக்கிறவன் டிபனை தூக்கி அலைய முடியாது.
உங்களுக்காக ஆசை ஆசையா செஞ்சேன். ஒரு நாள் கொண்டு போங்க.
சின்னதா ஒரு டப்பால வை, பருப்பு கெட்டு போகும். தேங்காய் துருவல் சேர்த்து பண்ற பொரியல் ஊசிப் போகும். எதுவும் தெரியாமல் வைச்சு அனுப்பி வைச்சாச்சு.
மதியம் 2 மணி இந்நேரம் சாப்பிட்டு முடிச்சிருப்பாரு.
கூட இருக்கிறவங்க கிட்ட என்ன பத்தி பெருமையா சொல்லி இருப்பாரு.
ஐயோ நினைக்கையிலே வெக்க வெக்கமா வருதே.
தேர்வு முடிவுக்கு காத்து கிடக்கும் மாணவன் மாதிரி எப்படா வருவாருன்னு வாசல எட்டி எட்டி பார்த்தேன்.
7 மணிக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் சிரித்தேன்.
முறைத்தவாறு உடை மாற்றி வந்து அமர்ந்தார்.
காபியை கொடுத்து விட்டு ஏன் மாமா மத்தியானம் சாப்டீங்களா?
எப்படி இருந்துச்சு?
பேசாமல் இருந்தார்.
மாமா சாப்பாடு... காபிய குடிக்கவா? வேணாமா?
குடிச்சு முடிக்கிற வரை அமைதியாக இருந்தேன்.
மாமா சாப்பாடு. ஏய் புதுப் பெண்டாட்டி வைய வேணாம்னு பாக்கிறேன்.
சாப்பாடாடி அது? பருப்பு, பொரியல் எல்லாம் கெட்டுப் போச்சு. ஏண்டி உங்கப்பா தென்னந்தோப்பு வச்சிருக்காரா?.
இல்லையே மாமா.
பொரியல்ல அவ்வளவு தேங்காயா?
எங்க ஆபிஸ் நாய்க்கு கொட்டினேன்.
அது கூட சாப்பிட மாட்டேன்றுச்சு. தாயே நான் எப்பவும் போல ஒட்டல்ல சாப்றேன். நீ ஒன்னும் என்னை காப்பாத்த வேணாம்.
அடுத்த நாள் பால் மட்டும் குடித்து விட்டு கிளம்பினார்.
ஏன் மாமா...
ஆரம்பிச்சுட்டையா, உன்
மாமா தான் சொல்லு.
நீங்க சாயங்காலம் வரும் போது எனக்கு பூ வாங்கிட்டு வர்றீங்களா.
ஏன் நம்ம வீட்டு பக்கம் பூ வரலையா?
இல்ல மாமா பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க. வீட்டுக்காரர் தான் வாங்கிட்டு வரணும்னு. நானும் சினிமாவில் பார்த்து இருக்கிறேன்.
பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.
மாலை வழக்கமா பூ தர்ற அக்கா வந்து கேட்டுச்சு.
இல்லக்கா இன்னைக்கு என் வீட்டுக்காரர் வாங்கிட்டு வருவார்.
பூக்காரக்கா நமட்டுச் சிரிப்புடன் சென்றது.
மாமா வந்த உடன் வேகமா ஏன் மாமா
ஆரம்பிச்சுட்டையா பல்லவிய
பொறு கைகால் கழுவிட்டு வர்றேன்.
என்ன காபி. போடலையா,?
பூவை கொடுங்க. தலைல வச்சிட்டு காபி போடறேன்.
என்ட்ட எங்கடி இருக்கு? நீங்க வாங்கலையா? காலைல சொல்லி விட்டேன்ல.
ஆமாடி உனக்கு பூ வாங்கத்தான எனக்கு சம்பளம் கொடுக்கிறாங்க.
சினிமாவில் பார்க்கிறது எல்லாம் வாழ்க்கையில் நடக்காது. நீயே வாங்கிக்க.
எதையும் நிதானமா சொல்ல, மாட்டாரா.
முகம் சுளிக்க பேசாத என் அப்பா ஞாபகம் வந்தது.
மறுநாள் ஞாயிறு. ஏன் மாமா என்ன டிபன் செய்ய?
கறி எடுத்துட்டு வர்றேன். பூரி போடு
தெரியுமா..? ஓ சூப்பரா போடுவேன்.
மாவு பிசைந்தேன். ஆர்வக் கோளாறு வேகமாக தேய்த்து போட்டு எடுத்து வைத்தேன்.
என்னடி இது பூரி சுடச் சொன்னா முறுக்கு சுட்டிருக்க?
இல்ல மாமா முறுக்கு உழக்கெல்லாம் எடுக்கல.
மாவு உருட்டி தேய்த்து போட்டேன்.
ஏன் மாமா?
உன் தலையிலபோடு, பூரி எந்திரிக்கவே இல்லை.
எப்படி போட்டா எந்திரிக்கும்?
அலாரம் வைத்து எழுப்பி விடுஎந்திரிக்கும்.
மாமா சரியாவே சாப்பிடல. மத்தியானம் அம்மாவ செய்ய சொல்லி ருசியான சாப்பாடு போடணும்.
நான்கு வீடு தள்ளி இருக்கும் அம்மாட்ட ஏம்மா மாமாவுக்கு பிரியாணி போட்டு தர்றியா?
எனக்கும் போட தெரியாது பேசாமஅப்பாட்ட சொல்லி கடையில் வாங்கி கொடுத்து விடலாம்.
ஏன் மாமா சாப்பிட வர்றீங்களா.
அம்மா கொண்டு வந்து கொடுத்தாங்களா
இல்ல கடையில் வாங்கினோம்.
உங்கம்மாவுக்கும் தெரியாதா?
சுத்தம்..
நாளும் பொழுதும் ஒடியது. நவரசமாய் வாழ்க்கை பயணம். அன்றலர்ந்த தாமரையாய் என் மகள் பிறந்தாள்.
வளர்ந்தாள்.. இன்னும் என் உணவு மீது நம்பிக்கை வரவில்லை?
ஏன் தோசை வெள்ளட்டின்னு இருக்கு? இட்லி சிலேபி கெண்டை மாதிரி இருக்கு? தெரியாமல் பச்சரிசி புட்டு செய்து கொடுத்தேன்
வயிற்று வலியால் அவதிப்பட்டு நான் திட்டு வாங்கியதுதான் மிச்சம்.
திருமணம் முடிந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டது.
அவரும் குறை காண்பதை நிறுத்தவில்லை. நானும் ஏன் மாமாவை நிறுத்தவில்லை. என் வாழ்க்கை நகைச்சுவையா? நான் சமைப்பது நகைச்சுவையா?.
-ல. மதுமதி
உசிலம்பட்டி
5.K2K
- 00013
காமெடி
பொறுப்புத் துறப்பு:
இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் தொழில்முறைகளைப் பற்றி கேலிச் செய்வதற்கோ தவறுகளைச் சுட்டிக்காட்டி, புண்படுத்துவதற்கோ வடிக்கப்பட்டவையல்ல ஆகவே "நகைச்சுவை?"! உணர்வுடன் படித்து ரசிக்குமாறு வேண்டப்படுகிறது. ஒரு வேளை எதிர்மறையான எண்ணங்கள் இப்படைப்பு தோற்றுவித்தால், படிப்பவர்களின் உளமார்ந்த மன்னிப்பு வேண்டப்படுகிறது.
ராதா ஆன்ட்டிக்கு இன்று பிறந்தநாள். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவர் ஒரு "பொதுநல விரும்பி" ஆவர். சீனியர் சிட்டிசன்
ஆக இருப்பதால் அங்குள்ள அனைவரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். அதில் அந்தக் குடியிருப்பில் ஒரு வாரத்திற்கு முன்பு வந்த ஒரு குடும்பத்தின் அனைவரும் வந்திருந்தனர். மறுநாள் ராதா ஆன்ட்டி வீடு வேலைகளை முடித்து விட்டு அவர்களுடைய பிளாட்க்குச் சென்றார். புன்சிரிப்புடன் அவரை உள்ளே அழைத்த அந்த ஆன்ட்டி, வெகு இயல்பாக பேசத் தொடங்கினார். தன்னுடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் மூன்று பிள்ளைகளின் படிப்பிற்காக தான் அவர்களுடன் இங்கு இருப்பதாக கூறினார். ராதா ஆன்ட்டி "உங்கள் பிள்ளைகள் என்னப் படிக்கிறார்கள்? என்று கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்தார்.
"என் மூத்தப்பையன் இறுதியாண்டு "கட்டிட பொறியாளர் " படிப்பதாகவும், இரண்டாவது மகன் மூன்றாம் ஆண்டு "வழக்கறிஞர் துறை " படித்துக்கொண்டிருப்பதாகவும், கடைக்குட்டி இப்பொழுது தான் "மருத்துவப்" படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்து இருப்பதாகவும் பெருமையுடன் சொன்னார். ராதாம்மா அப்பொழுது நான் கேட்கிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம், இப்பத்தான் லட்சக்கணக்கில் பொறியாளர்களும், வக்கீல்களும், மருத்துவர்களும் வேலையின்றி அவதிப்படுகிறார்களே அவர்கள் படித்து வந்தால் என்ன செய்ய போகிறார்கள் என்று உண்மையான கரிசனத்துடன் கேட்டார்கள். அதற்கு அந்த ஆன்ட்டி ஒரு மர்ம புன்னகையுடன் சொல்ல தொடங்கினார் "என் பிள்ளைகளுக்கு ஒருவர் கிடைத்தால் போதும் மூன்றுப் பேருமே பிழைத்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஒருவர் தன் வீட்டை கட்டுவதற்காக மூத்தவனிடம் வந்தால் அவன் சில, பலக் காரணங்களை காட்டி தாமதப்படுத்துவான். உடனே அவரும் கடுப்பாகி அவன் பேரில் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றத்தை நாடுவார். உடனே என் இரண்டாம் மகன் அவரிடம் சென்று கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தைரியம் சொல்லி, தன் தொழில் முறைகளைக் கையாண்டு வாய்தாக்களாக வாங்கி அவரை இழுத்தடிப்பான். இறுதியில் கிளையண்ட் வெறுத்துப் போய் உடல்நலம் கெட்டுவிட, உடனே நம் கடைக்குட்டி டாக்டர் அவருடைய குடும்பத்தாரை அணுகி ஆறுதல் வார்த்தைகள் கூறி தன் மருத்துவமனையில் சேர்த்தால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம் என்பான். இப்படியாக என் மூன்றுப் பிள்ளைகளும் தத்தம் வாழ்க்கையை கவலையில்லாமல் நடத்திக் கொள்வார்கள்.
"ஒரே கல்லில் இரண்டு? மாங்காய் என்பதற்கு பதிலாக "மூன்று" என்பதுதான் புது மொழியாகும் என்று சொல்ல ராதா ஆன்ட்டிக்கு மயக்கமே வந்துவிட்டது.
-
rama govindarajan (graps)
6.K2K-00036,
# சைக்கிள் சவாரி..!
"முடியாது! முடியாது! என்னால் உங்க சைக்கிளில் ஏற முடியாது.", என்று சொன்ன வைதேகி ஒவ் என்று கண்ணீர் சிந்தினாள், வாசு
அவளின் கணவர். வாசுவுக்குப் பல வருட ஆசை தன் மனைவியை ஒரு தடவையாவது சைக்கிளில் உட்கார வைத்து சவாரி செய்ய வேண்டும் என்பது. ஆனால், சைக்கிள் ஒன்றை பார்த்தாலே பத்து அடி தூரம் ஒதுங்கும் வைதேகியின் அச்சம் அவரின் ஆசை மேல் மண்ணைப் போட்டது.
அவர்களின் ஐந்து வருட கல்யாணம் வாழ்க்கையில் இந்த அச்சத்தின் மர்மம் மட்டும் விளங்கவே இல்லை, வைதேகிக்கு ஸ்கூட்டி, கியர் ஃபக், கார் என்று பல வித வாகனங்கள் ஒட்ட தெரிந்த போதிலும் அவளை உட்கார வைத்து அவளின் கணவன் சவாரி செய்த போதிலும் இந்தச் சைக்கிள் ஒன்றில் மட்டும் அவளுக்குப் பயம்.
..................
இன்று வைதேகியின் அண்ணன் நாகேஷ் தன் ஒரே தங்கையைக் காண அவள் வீட்டுக்கு வந்தார், எப்போது போலச் சில நல விசாரிப்புகளுக்குப் பிறகு, வாசுவின் பேச்சு வைதேகியின் சைக்கிள் பயத்துக்குப் போனது.
வாசு, "உங்க தங்கச்சிக்கு ஏன் தான் சைக்கிளை கண்டால் அப்படி ஒரு பயம் புரியல. பெரிய பெரிய வண்டியில் எல்லாம் அசால்ட்டா உட்கார்ந்து வருகிறவள், இந்தச் சைக்கிளே ஒன்றை கண்டால் மட்டும் ஓட்டம் தான், கண்ணீர் தான்.", என்று குறை கூறினார்.
அதனைக் கேட்ட நாகேஷ், "எல்லாம் என் சித்தம் மச்சா.", என்று சொன்னவர் ஒரு ஃப்ளாஷ்பேக் சொன்னார்.
.....................
அப்போது நாகேஷூக்கு பத்து வயது வைதேகிக்கு ஐந்து வயசு.
வைதேகி, "அண்ணா! அண்ணா! என்னையும் உன் புதுச் சைக்கிளில் உட்கார வைத்து சவாரி கூட்டிக்கிட்டு போ. பிளீஸ்..", என்று சொல்லி கெஞ்சினாள்.
நாகேஷ், "இரும்மா. கொஞ்ச நாள் போகட்டும், அண்ணா இப்போ தானே சைக்கிள் ஒட்டவே ஆரம்பித்து இருக்கேன். ஒரு வாரத்துக்குப் பிறகு உன்னைச் சவாரி கூட்டிக்கிட்டு போறேன்.", என்று அன்பாகச் சொன்னார்.
ஆனால் அப்பவும் வைதேகி பிடிவாதம் பிடிக்க வேறுவழி தெரியாதவர் சரி என்று சொல்லி தங்கையை அதிகம் போக்குவரத்து இல்லாத இடமாகப் பார்த்துச் சைக்கிளில் சவாரி செய்தார்.
அப்போது தான் விதி விளையாடியது. ஒரு பெரிய கல் தடுக்கியதால் அவரின் நிலை தடுமாற இருவருமே கீழே விழுந்தார்கள். அதில் நாகேஷ் மட்டும் சைக்கிள் அருகேயே விழுந்து இருக்க, வைதேகியோ ஓர் ஓரத்தில் தேங்கி இருந்த இரவு பெய்த மழையால் உருவான குட்டையில் விழுந்து நனைத்து விட்டாள்.
உடல் முழுவதும் சேர், சகாதி என்று அழகிய உருவம் சேர் உருவமாகக் காட்சி அளித்தது.
அவளின் நிலையைக் கண்ட அந்த வழி செல்லும் சிலர் உதவிக்கு முன் வர, மற்ற சிலர் அவளைப் பார்த்து சிரித்து விட்டுச் சென்றார்கள்.
அவர்களின் சிரிப்பில் ஏற்பட்ட அவமானத்தில் முடிவு செய்தாள். இனி ஒரு காலும் இந்தச் சைக்கிள் சவாரி போகவே கூடாது என்று சொல்லி சபதம் ஏற்றாள்.
..................
நாகேஷ், "இதான் மச்சா நடந்தது. சைக்கிள் ஒட்ட தெரியாமல் நான் ஓட்டினேன். அதில் இவளோடு விழுந்து வரிய நானே எல்லாம் மறந்து அடுத்த நாளே அதே சைக்கிள் ஒரே வாரத்தில் பல சாகசங்கள் செய்யும் அளவுக்கு ஒட்டி பழகினேன். ஆனால் என் தங்கை, இன்னும் அந்தச் சைக்கிளை பார்த்து பயந்து கொண்டு இருக்கிறாள்.", என்று சொல்லி சிரித்தார்.
வாசு, "அதெல்லாம் ஒரு ஃப்ளாஷ்பேக்கா..? ஐந்து வயசில் விழுந்து வாரியத்தில் யாரோ சிரித்தார்கள் சொல்லி இப்படி மனசே விடலாமா..? ஏதோ உன் அண்ணன் சைக்கிள் ஒட்ட தெரியாத வயசில் ஒட்டியதல் விழுந்து இருப்பாய். நான் அப்படியா..? ஒரு தடவை என் கூடச் சைக்கிள் சவாரி வா. என்னோட பாதுகாப்பான சாவரியில் சைக்கிள் பயமே போய்டும்.", என்று தன் மனைவிக்குச் சொல்லி பல கஷ்டங்களுக்குப் பிறகு அவளின் சம்மதம் வாங்கினான்.
.................
சிறிது பயத்தோடு தான் வாசுவின் சைக்கிள் சவாரிக்கு வந்தாள் வைதேகி.
முதல் ஐந்து நிமிடத்துக்கு மட்டும் பயத்தோடு சென்ற அவளின் சவாரி அனுபவம் ஒரு கட்டத்தில் சந்தோசத்தைத் தந்தது.
அவளின் சைக்கிள் சவாரி மேல் இருந்த பயத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் விதி மறுபடியும் விளையாடியது.
வாசு தன் மனைவியின் சந்தோச முகத்தைப் பார்த்த ஒரு நொடி கவனச்சிதறலில் எதிரே வந்த ஒரு காரை கவனிக்க வில்லை. கடைசி நொடியில் கவனித்து விட்டு சைக்கிளை இடது பக்கமாகத் திருப்ப இந்தத் தடவையும் ஒரு கல் தடுக்கி விழுந்தார்கள்.
சென்ற முறை நாகேஷ் சைக்கிளோடு இருந்தது போல வாசுவும் சைக்கிளோடு சைக்கிளாக விழுந்து கிடக்க, வைதேகியின் நிலையோ சென்ற முறை போல ஒரே விதமான சேர் அபிஷேகம் தான்.
அதைப் பார்த்து உதவவும் சிரிக்கவும் அங்கே சிலர் இருந்தது தான் இன்னும் வேடிக்கையே. அந்தச் சிரிக்கும் சிலரின் வாசுவும் இருந்தான்.
வாசு, "டார்லிங், நம்ம திரும்பி ஒரு ரவுண்ட் போவோமா..?", என்று சொல்லி அவன் கண்ணடிக்க அதில் காண்டு ஆன வைதேகி ஒரு கலே தூக்கி வாசுவின் மண்டைக்குக் குறி வைத்து அடித்தாள்.
குறி மிஸ் ஆகாமல் அதன் வேலையே செய்தது.
.............
"முடியாது! முடியாது! என்னால் உன் சைக்கிளில் ஏற முடியாது.", என்று சொன்ன வைதேகி ஒவ் என்று கண்ணீர் சிந்தினார்.
தற்போது கண்ணீர் சிந்தும் இவருக்கு வயசு 65. அவர் வர மாட்டேன் சொன்னது அவரின் ஒரே பேரன் ஜெகனிடம் தான்.
ஜெகன், "தாத்தா நீயாவது பாட்டி கிட்ட சொல்லு. நான் நல்ல தான் சைக்கிள் ஓட்டுவேன்.", என்று சொல்லி அவன் கெஞ்ச
வாசு, "அதே தான் பேராண்டி நானும் ஒரு காலத்தில் இதே வார்த்தை சொல்லி நல்லதோர் பரிசு வாங்கினேன். இதோ அதன் தடயம்", என்று சொல்லி அன்று வாங்கிய கல் அடியால் ஏற்பட்ட தழும்பை காட்டினார்.
# குறிப்பு:
இது ஒர் உண்மை கதை. எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவமே இது.
கல் அடிப்படவில்லை என்றாலும் திட்டுக்கள் நிறையவே பெற்றார்.
- விஜயன்
7.k2k00038
நகைச்சுவை தொடர்பான கதை!
சிரிப்பு!
அது மே.சி.நா.உ.பே.தே.அ. மேல்நிலைப்பள்ளி, பன்னிரண்டாம் வகுப்பின் இ பிரிவு வகுப்பறை, எகனாமிக்ஸ் டீச்சர்,” முருகேஸ்வரி
இந்த பணத்தை ஆபிஸ் ரூமில் கொடுத்து நாலு பேருக்கு சஞ்சய்கா(சிறுசேமிப்பு) கட்டி வா”, என்று சொல்ல அவர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் முருகேஸ்வரி தோழி சாந்தியுடன் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள்.
“முருகேஸ்வரி…! அங்க என்ன சத்தம்?! நான் கூப்பிடறது காதில் விழலையா?!”, அடுத்த பெஞ்சில் இருந்த பவானி முருகேஸ்வரியைக் கிள்ளி டீச்சரைநோக்கி ஜாடை காண்பிக்க முருகேஸ்வரி திரும்பவும், பத்தாவது முறையாக டீச்சர் அழைக்கவும் சரியாக இருந்தது.
“ஸாரி டீச்சர்…நான் கவனிக்கலைன்னு சொல்லி அவர்கள் சொன்ன வேலையைச் செய்யக் கிளம்புகிறாள் முருகேஸ்வரி”. சாந்தி…. நீயும் கூட போ.”
“சரிங்க டீச்சர்”, வகுப்பறையை விட்டு வெளியே வந்ததும் மறுபடியும் சிரிப்பு தொடர அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு ஆபிஸ் ரூமிற்கு செல்கின்றனர்.
இவர்கள் போன நேரம் ஆபிஸில் அவங்க பஸ் டிரைவர் சக்கையா அமர்ந்திருக்க…அவரைப் பார்த்துக் கொண்டே ஆபிஸில் இருந்தவரிடம்,” அண்ணா டீச்சர் சக்கையா போடச் சொன்னாங்க” என்று முருகேஸ்வரி சொல்ல” என்ன…சக்கையாவை போடச் சொன்னாங்களான்னு அந்த ஆபிசர் கேட்க இடம் மறந்து முருகேஸ்வரியும் சாந்தியும் சிரித்துக் குமிக்கிறார்கள்.
ஏற்கனவே சிரிப்பு மூடில் இருந்த அவர்களால் இந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை, பலமான சிரிப்புச் சத்தம் கேட்டுபக்கத்து அறையிலிருந்து தலைமையாசிரியர் வெளியில் வர … அவரைக் கவனிக்காத இவர்கள் விடாமல் சிரித்துக் கொண்டிருக்க ... சக்கையா அண்ணனும் ஆபிசரும் திகைச்சு நிற்க, ஐந்து நிமிடம் கழித்து தற்செயலாக சாந்தி திரும்பி பார்க்கிறாள்.
பார்த்ததும் அதிர்ந்து முருகேஸ்வரியைக் கூப்பிட..
குனிந்து சிரித்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்த நொடி தன்னிலை உணர்ந்தாலும் அடங்காத சிரிப்பு பீறிட்டுக் கிளம்பி…மெல்ல அடங்குகிறது.
“ஸாரி ஸார், நாங்கள்….”
“சரி…சரி…வகுப்புக்கு போங்க..மா” ன்னு சொல்லிட்டு இதழோரப் புன்னகையில் தானும் உள்ளே போகிறார் தலைமையாசிரியர்.
இதைச் சொல்லிச் சொல்லி தோழிகளுடன் சிரித்து மாய்ந்து போகின்றனர் இருவரும்.
அதன் பிறகு தலைமையாசிரியரைக் கண்டாலே ஒழிந்து கொண்டனர் இருவரும், இவர்களைப் பார்த்தாலே அவரும் எங்கே சிரித்து விடுவோமோ என நினைப்பாரோ என்னமோ பார்க்காதது போலக் கடந்து போய் விடுவார்.
“அப்படியென்ன பிள்ளைகளா அன்னைக்கு அடங்காத சிரிப்பு…?!” பஸ்சுக்காக நிற்கும் போது டீச்சர் கேட்க… இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரிக்க, முருகேஸ்வரி சொல்கிறாள் “டீச்சர் பஸ்ல வரும் பொழுது போக்கிறதுக்காக ஏதாவது விளையாடுவோம், அன்னைக்கும் அப்பிடித்தான் விளையாடிக்கிட்டுருந்தோம்.
“நம்ம பஸ்சை தாண்டிப் போகுற சைக்கிள் உன் கணக்கு, நடந்து போகுறவங்க என் கணக்கு”, “சரின்னு எண்ண ஆரம்பிச்சதும் சாந்தி கணக்குக்கு ஒருத்தர் கூட வரலை. திடீர்னு பார்த்தா…வரிசையா நாலு பசங்க காலைக் கடனுக்காக ரோட்டோரமா உட்கார்ந்திருக்காங்க. அதைப் பார்த்ததும் இது யார் கணக்குன்னு கேட்டேன்.அதைக் கேட்டதும் சாந்தி சிரிக்க நானும் சிரிச்சேன்.நீங்க சஞ்சய்கா போடச் சொன்னப்ப மாத்தி சக்கையா போடச் சொன்னாங்கன்னு சொல்லிட்டேன், அதான் டீச்சர் அன்னைக்கு சிரிப்பு. “முருகேஸ்வரி சொன்னதும்,” விளையாட்டுப் பிள்ளைங்க” ன்னு டீச்சரும் சிரிக்க..சிரித்துக் கொண்டே பஸ்சில் ஏறுகின்றனர் முருகேஸ்வரியும் சாந்தியும்.
நீதி; சிரிப்பு எப்ப எப்படி எங்க வந்தாலும் தாராளமா சிரிங்க…. அது உள்ளத்திற்கான டானிக்.
-பூமாதேவி
8.K2K-00042
நகைச்சுவை
சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கே சொந்தமானது சிரிப்பு, சிறு குழந்தையாக இருக்கும் போது ஒரு நாளைக்கு நாம் 300 தடவைக்கு மேல் சிரிப்பதாக கருத்துக்கணிப்புகள் சொல்கிறது, ஒரு குறிப்பிட்ட வயது 25-க்கு மேல் வரும் போது ஒரு நாளைக்கு 15 தடவை கூட மக்கள் சிரிப்பதில் என கருத்துக் கணிப்புகள் சொல்கிறது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும், சிரிப்பே சிறப்பு, உன் மனம் வலிக்கும் போது சிரி பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.
மனிதனுக்கு உயர்ந்த நகை புன்னகைதான் பொன் நகை அல்ல, சிரித்து வாழவேண்டும் சிரிப்பதால் முகத்தில் உள்ள எல்லா நரம்புகளும் வேலை செய்கிறது முகத்துக்கு மசாஜ் செய்வது போன்றது சிரிப்பது. சிரிக்கும்போது டோபமைன், ஆக்சிடோசின், செரோடோனின் கூடவே எண்டார்பின்ஸ் என நான்கு வகையான ஹார்மோன்கள் சுரக்கிறது. நமக்கு கோபமோ சோகமோ சந்தோஷமோ வரும் போது 30 நொடிகள் தனியாக ஒரு ரூமுக்கு சென்று அழுததோ சிரித்தோ விடுங்கள். ஐயோ கதை அல்லவே எழுத சொன்னீங்க நான் கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டேன்.
சரி கதைக்கு வருவோம் விஜய் கல்லூரியில் இளநிலை ஆண்டு மூன்றாம் ஆண்டு படித்து வந்தான், அவன் பணக்கார வீட்டு பையன். பணத்தால் எல்லாம் செய்து விட முடியும் வாங்கி விட முடியும் என நினைப்பவன். அவர்
நண்பர்கள் நாலு பேருடன் தங்கி கல்லூரியில் படித்து வந்தான். அவனது நண்பர்கள் எல்லோரும் அவனுக்கு நகைச்சுவையாக பணத்தை விட குணம் தான் சிறந்தது என உணரவைக்க விரும்பினார்கள். விஜய்க்கு ஜூன் 15ல் பிறந்த நாள், அதற்காக தனது நண்பர்களுக்கு விருந்து தருவதாக உறுதி அளித்தான். அந்த நாளும் வந்தது அது போலவே அவன் எல்லோரையும் அழைத்து சென்றான், விஜய் வழக்கம் போல எல்லோருக்கும் ஒரு கட்டளை இட்டான் தன்னுடன் விருந்துக்கு வரும் போது யாரும் பணம் கொண்டு வரக்கூடாது என்றும் அப்படி எடுத்து வந்தால் கூட வரக்கூடாது என்று.
அந்த நாளும் வந்தது எல்லோரும் கிளம்பி ஹோட்டலுக்கு சென்று நண்பர்கள் அனைவரும் ஹோட்டலுக்குச் சென்று வயிறு முட்ட சாப்பிட்டார்கள் பில்லும் ரூபாய் 8000 வந்தது. ஏற்கனவே அவனுக்கு புரிய வைப்பதற்காக அவ னுடைய பர்சை எடுத்து ஒளித்து வைத்து விட்டனர். இது தெரியாமல் விஜய் பில் வந்த பிறகு பணம் கொடுக்க பையில் கையை விட்டான் அங்கே பர்ஸ் இல்லை, திகைத்து போய் விட்டான், ஏற்கனவே நண்பர்களிடம் பணம் கொண்டு வர வேண்டாம் என சொல்லி விட்டோம் இப்போது என்ன செய்வது அவர்களிடம் சொல்ல முடியாமல் உணவக உரிமையாளரிடம் சென்று சொல்ல முயற்சிதான் ஆனால் அவர் அதை நம்ப மறுத்தார், எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க... அதெல்லாம் முடியாது நீ இங்கே மாவு ஆட்ட வேண்டும், கடையை கூட்டி பெருக்க வேண்டும் என அடுக்க ஆரம்பித்து விட்டார். இதற்கிடையில் இது நண்பர்களுக்கு தெரிய வர வந்து விஜய்யிடம் தனியாக மன்னிப்பு கேட்டு பர்ஸை கொடுத்தனர். இதை தெரிந்து திகைப்பில் இருந்த விஜய் ஆனந்தத்தில் நகைக்க ஆரம்பித்தான்.
நண்பனுக்கு புரிய வைக்க நினைத்ததை உணவக உரிமையாளரும் புரிந்து கொண்டு அவர்களின் பில்லில் 50% (ஆளுக்கு 10%) தள்ளுபடி செய்தார்.
நெறி: நகைச் சுவை என்பது நமக்குள் இருக்கும் அரிய பொக்கிஷம், அதை நாம் எப்போதுமே புரிந்து கொண்டால் எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் சுலபமாக கடந்து விடலாம்.
ஒவ்வொரு நாளும் புதிய தலைப்புகளை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் கணேசன்சண்முகவேல் ...
கொரோனா குழுவிற்கு கோடி வணக்கங்கள் மற்றும் நன்றிகள் ...குழுவின் பணிகள் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...
கதை எழுதும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...
மிகுந்த எதிர்பார்ப்பில் - எல்லோருடைய ஆதரவில் ஜூம் மீட்டிங் ஏற்பாடு செய்யவும்...
-கணேசன் சண்முகவேல்
9.K2K00048
நகைச்சுவை
ஓர் ஊரில் ஒருவர் நகைச்சுவை நாடகம் புரிபவர் வாழ்ந்து வந்தார், அவர் நாடகம் புரியும் நேரம் மட்டும் அல்லாமல் சாதாரணமான நேரங்களிலும் அனைவரையும் தனது நகைச்சுவை செயல்களை கொண்டு மகிழ்வித்து வந்தார் ., எப்போதும் சந்தோஷமாக இருக்கும் வரத்தினை அவர் பெற்றதாக அனைவரும் கூறுவர் ., இவ்வாறு வியக்கும் அளவிற்கு அவர் செய்யும் நகைச்சுவை என்ன என்பதை சொல்கிறேன் கேளுங்கள் ....,
காலை விடிந்ததும் தன் வீட்டினை விட்டு வெளியில் வந்து வாய் கொப்பளிக்க தெரிந்தும் தெரியாதது போல் அசுத்த நீரிணை பருகி அதனால் உண்டான நாற்றம் போக்க அவர் செய்யும் செயல்கள் மிகவும் வேடிக்கை ஆனவை, அத்துடன் குளிக்க கிணற்றடிிக்கு செல்வோம் என்று கேள்வி பட்டதை, அறியா வண்ணம் கிணற்றினுள் குதித்து கிணற்று அடியினை நோக்கி சென்று மூச்சி திணறல் கொண்டு மீண்டும் மேல் வந்து மீண்டும் மீண்டும் கிணற்றின் அடிக்கு செல்ல முயற்சித்து முயற்சித்து முச்சி விட மேல் வந்து அவர் செய்யும் செயல்கள் மிகவும் கேலியாக இருக்கும், அவர் துணி அணிந்து வரும் விதமும் வேடிக்கை நிறைந்தது, உண்ணும் போது உணவினை தட்டுடன் எடுத்து வாயில் கொட்டிக் கொள்வது , நீர் அருந்தும் போது நீருடன் கிளாஸ்சையும் சேர்த்து வாயினுள் செலுத்த முயல்வது போன்ற வேடிக்கைகள் அனைவருக்கும் சிரிப்பை நல்கியது , அவர்கள் சிரிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து இவரும் சிரிப்பார் ,
நடக்கும் விதம் உட்காரும் விதம் பேசும் விதம் போன்று நடைமுறையில் அனைத்து விதத்திலும் இவரின் செயல்பாடுகள் நகைச்சுவை நல்கும்.,
இரவு நேரங்களில் வீட்டிற்குள் மறையும் இவர், இரவு முழுவதும் ஓர் முலையில் அமர்ந்து வாய் அடைத்து கொண்டு கதறி அழும் வேதனைகளை எவரும் கண்டது இல்லை,
இவருக்கு தினம் தினம் நடைமுறை வாழ்வின் சம்பவங்கள் நினைவில் நிலைக்காமல் மறந்துவிடும், எனவே தினசரி பணியையும் மற்றவர்களை பார்த்து செய்யும் இவரது வாழ்க்கையில் அனைத்தும் புதியதாய் விளங்குவதால் இவரின் செயல்கள் அனைத்தும் வேடிக்கையானது, தான் நாடகம் புரிபவன் என்று மற்றவர் கூறுவதால் அதனையும் அவர்கள் கருத்தை கொண்டு செயல் படுத்தி வாழ்பவர்,
இவரின் நகைச்சுவையில் ஆனந்தம் அடையும் யாரும் இவருடன் நெருக்கம் ஆவது இல்லை, ஆகையால் இவருக்கு இருக்கும் ஞாபகமறதி பற்றி ஒருவரும் அறிய மாட்டனர், இவ்வளவு ஏன், தனக்கு இவ்வாறு ஒரு நோய் இருப்பதை அவரே அறிமாட்டார், ஏனெனில் தினமும் புதிதாய் பிறப்பவராக விளங்கும் இவர், தினம் தம்மை சுற்றி உள்ள அனைவரும் சிரிக்கும் காரணம் அறியாதவர், அதனை நினைத்து இரவெல்லாம் நரக வேதனையை அனுபவித்து, காலையில் புது உலகில் தோன்றி, மீண்டும் இரவு நரக வேதனைக்கு செல்பவர் இவர், இவரது தினசரி வாழ்வு இவ்வாறே நிறைவும் பெற்றது. இவர் இறந்த பின்னர் இவர் உடலினை அடக்கம் செய்ய ஊரில் அனைவரும் ஒன்று கூடி வருந்தி சகல மரியாதையுடன் இருதி சடங்கு நடத்தினர்,
உயிருடன் வாழும் போது அவருக்கு கிடைக்காத மதிப்பு அப்போது அனைவராலும் கிடைத்தது, அவரது புகழ் காலம் எல்லாம் பறைசாற்றப்பட்டது ...
கருத்து: ஒருவர் வெளியில் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரது வாழ்வும் அதுவே, வாழ்விலும் அவ்வாறே என்று தீர்மானிப்பது தவறாகும் ....
இப்படிக்கு.,
சி. தெய்வாணி ஸ்ரீ ...
10.K2K-00053
நகைச்சுவை
துளசி.... துளசி...துளசி....
இன்னும் என்னடி தூக்கம்...
பாப்பா அழுகறா பாரு...
உனக்கு அது கூட கேக்கலயா?..."
இன்னும் கொஞ்சம் ஐஞ்சு நிமிஷம் நவீன்... பிளிஸ் டா தூங்கறேன்...
"துளசி எந்திரி?" கப்பில் தண்ணி எடுத்து வந்து புல் வெளியில் தெளிப்பது போல தெளித்தான்...
"நவீன்...நல்லா ஜில்லுனு இருக்கு டா"
"ம்ம்ம்... இருக்கும் இருக்கும்" என கூறிக் கொண்டே கப்பில் இருந்த அத்தனை தண்ணிரையும் அவள் முகத்தில் வாரி இரைத்தான்"
"எழுந்திரி டி... பாப்பாவ பிடி..."
டேய் எனக்கு மட்டுமா பாப்பா? எனக்கு இல்லையாடா?
எனக்கு ஆபிஸ்க்கு நேரம் ஆச்சு...
என பெட் விட்டு எழுந்தான்
"டேய் இது டூ மச்" நைட்டெல்லாம் உன் ரைட்டிங்குக்கு சப்போர்ட் பண்றேன் சொன்ன...
"லீவ் போட்டு குழந்தை பார்த்துக்கறேன் சொன்ன... என செல்லமாய் சிணுங்கினாள்..."
"அது நைட் ஏதோ ஒலறிட்டேன்...
இப்ப நேரம் ஆச்சு டி லீவ்க்கு சான்சே இல்ல"
"நைட்டெல்லாம் ஸ்டோரி எழுதறேன்னு எதையோ கிறுக்கி எழுத வேண்டியது...
எனக்கு எங்கே டி டைம்... அதான்
சும்மா உன்ன டைவர்ட் பண்ண லீவ் போடறேனு பொய் சொன்னேன்... என குறும்பு புன்னகையாய் கண்ணடித்தான்...
"ஏய்...துளசி ...
பாப்பா கைல இருக்குடி... இப்படி உட்கார்ந்துட்டே தூங்கி வழியாத...
"சரி...காபி போட்டு எழுப்பு டா ஹஸ்பென்ட்"
சீரியஸ்லி நேரமாச்சு டி"
இன்னைக்கி சன்டே இல்ல டி...
"கொஞ்சம் தூங்க விடு டா.."
இப்படியே....
ஐஞ்சு நிமிஷம்னு சொல்லி சொல்லி...ஒரு மணி நேரம் ஓடிருச்சு டி என் தூங்கு மூஞ்சி பொண்டாட்டி...
"இப்ப என்ன மணி ஆறு இருக்குமா... சும்மா டைம் ஆச்சுனு சீன போடாத நவீன்...என கூறிக் கொண்டே மீண்டும் போர்த்திக் கொண்டாள்..."
"ஏய்...துளசி...இப்படியா எட்டு மணி வரை குப்பற படுத்து தூங்குவ..."
மீண்டும் எழுப்பினான்...
ஓ மை கடவுளே.... எட்டா...
அட துரோகி ஹஸ்பென்ட்...
எழுப்பறப்போ டைம் சொல்லி
எழுப்ப மாட்ட....
"உன்னால தான்டா லேட்டு"
என பரபரப்பாய் எழுந்தாள்...
"யாரு என்னால நீ எழ லேட்டா?"
துளசி காமெடி பண்ணாத டி...
ஐயோ...போடா ஹஸ்பென்ட்..
என்னைய இப்படி இவ்வளவு நேரம் தூங்க விட்டுட்டியே டா...
பிரஸ் பண்ணி கொண்டே...
"இன்னும் ஒரு வார்த்தை கூட எழுதலையே....
ஐயோ யோசிக்க மண்டல இருந்து ஒன்னும் ஒரு காமெடி கூட வரலயே..."
தூ...தூ...துப்பினாள்..
பிரஸ் பண்ணியவாறு....
என்ன துளசி... உன்ன நீயே துப்பிக்கற போல டி... என கிண்டலடித்தான்...
வேணாம் நவீன்... அடி வாங்கிறாத டா...
நா...ஒரு ஐடியா தரட்டா...
உன்ன நீயே கழுவி ஊத்து ஸ்டோரி செம காமெடி ஆகிரும்"
"அப்புறம் என் ரைட்டிங் பத்தி யாரும் குரூப்ல கமெண்ட் பண்ணல னு பொலம்ப மாட்ட"
ஆல் த பெஸ்ட்..
டைம் ஆச்சு பொண்டாட்டி டாட்டா...
டேய் போடா என சிணுங்கினாள்...
நீதி: வாழ்க்கைல எல்லாமே லைட் அன்ட் ஸ்வீட் எடுத்தா எல்லாமே ஜாலி...காமெடி தான்..
- பூங்கொடி
11.K2K-00066
நகைச்சுவை..!
2010ம் ஆண்டு, சென்னையில் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுகொண்டிருந்த கார்த்திக்கு ஆகஸ்ட் 14ம் தேதி அன்று இரவு 8 மணிக்கு ஒரு 'எஸ் எம் எஸ்' வந்தது, "ஹாய்.. நான் விஜயா".
கார்த்தியும் விஜயாவும் ஒரே 'ஐஐடீ கோச்சிங் சென்டரில்' படிப்பவர்கள். என்ன காரணமோ தெரியவில்லை கார்த்திக்கு விஜயாவைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. அவளை வெறிக்க வெறிக்க பார்ப்பதையே முழு நேரமும் செய்வான்.
விஜயா மீது அவ்வளோ காதல் கொண்ட கார்த்திக்கு, அந்த 'எஸ் எம் எஸ்' ஓர் இன்ப அதிர்ச்சிதான்.
"ஹாய்.. விஜயா.. நீ தானா?" என்று மறுமொழி கூறினான்.
"நீயும் என்ன ரொம்ப நாளா பாத்துகிட்டே இருக்க. நாளைக்கு நேர்ல பாத்துப் பேசி ஒரு முடிவு பண்ணலாம். 10 மணிக்கு நேரு பார்க்கு வாடா " என்றாள்.
"10
மணிக்கு கஷ்டம். நாளைக்கு ஆகஸ்ட் 15, ஸ்கூல்ல கொடி ஏத்திட்டு மீட்டிங் வைப்பாங்க. நான் அத முடிச்சிட்டு 11 மணிக்கு வரேன்" என்று அசட்டுத்தனமாக சொன்னான்.
"ஷபா.. செரி ஒழுங்கா வந்து சேறு" என்று சொன்னதுதான் கடைசி 'எஸ் எம் எஸ்'. அன்றைய இரவு, கார்த்திக்கு தூக்கமே வரவில்லை. அவளைப் பார்த்த நாட்களை எல்லாம் நினைத்து நினைத்து வெட்கப்பட்டான். முழித்துக்கொண்டே கனவில் டூயட் பாட சென்றுவிட்டான். மறுநாள், எதையோ சாதித்ததைப் போல் பெருமிதத்துடன் பள்ளிக்கு சென்றான்.
மொத்த நிகழ்ச்சியும் 10.30 மணிக்கே முடிந்து விட்டது. "வாடா, கிரிக்கெட் ஆடலாம்" என்று அருண் சொன்னபோது "இல்லடா. அப்பா ஒரு வேல சொல்லி இருக்காரு. நான் வரல, நீ போ" என்று சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் நேரு பார்க்கு 10.45 மணிக்கு சென்றான். அந்த 15 நிமிடங்கள் அவனுக்கு 15 வருடங்கள் போல் இருந்தது.
"இது தான் அப்பா சொன்ன வேலையா" என்று ஒரு குரல் ஒலித்தது. கார்த்திக் திரும்பி பார்த்ததும், அருண் நின்றான், மாட்டிக்கொண்டோம் என்று தெரிந்தவுடன்,
"டேய்.. சாரி டா.. உண்மைய சொல்றேன்.. விஜயா என்னப் பாக்க வரா டா..அதான் பொய்ச் சொல்லி வந்துட்டேன்" என்றான்.
"கேவலமா பண்ணிட்டல.. போடா.. உனக்கு லவ் செட் ஆகாது" என்றான் அருண்.
"டேய் டேய்.. ப்ளீஸ் டா.. அப்படி சொல்லாத.." என்று காலில் விழாத குறையாக கார்த்திக் மன்னிப்பு கேட்டான்.
"கோச்சிக்காத டா.. விஜயா எப்போ வேணுனாலும் வரலாம்.. நீ கொஞ்சம் ஓரமா போ டா..!" என்றான்.
"
எரும..நீ இவ்வளோ நேரம் விஜயா கிட்டத் தான் டா பேசிட்டு இருக்க.. நேத்து தான் புது நம்பர் வாங்குனேன். எல்லாருக்கும் வலை வீசினேன். நீ தான் தொக்கா மாட்டுனா..செம பல்பு ல?" என்று அருண் சொன்னப்போது கார்த்திக்கின் இதயம் ஒரு நொடி நின்றே விட்டது..!
சற்று நேரத்தில், கார்த்திக்கின் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அங்கு வந்தார்கள். அவன் விஜயா விற்கு அனுப்பிய 'எஸ் எம் எஸ்' களைப் படித்து படித்து அவனை கிண்டல் செய்தார்கள்.
நீதி: தெரியாத நம்பரில் இருந்து 'எஸ் எம் எஸ்' வந்தால், கவனமாக கையாள வேண்டும்..
-GD
12.K2k
00068
ஒரு ஊரில் கருப்பண்ணசாமி, என்ற பண்ணை வைத்திருப்பவன் திமிர் பிடித்தவன். அவன்
ஏழை எளிய மக்களுக்கு தொல்லைகள் பல தருபவன்.
ஒரு நாள் கடவுள் அவனுடைய திமிர்வாதத்தை அடக்க ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்தார். ஏழையை பணக்காரனாக மாற்றினார்.
கருப்பண்ணசாமி தியானம் மேற்கொண்டு கடவுளை வரவழைத்தான். கடவுளும் உன் வரத்தை கேள் என்றார். உடனே அவன் பொறாமை பிடித்து என்னை விட ஏழையை பணக்காரனாக மாற்றினீர்கள்
எனக்கு பண்ண வேண்டாம் அதை நீயே வைத்துக் கொள் என்றான். கடவுளும் சரி என்றார்,
அதற்கு பதில் நான் கேட்கும் வரத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்றான், கடவுளும் சரி என்றார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அவன் எனக்கு சாவே வரக்கூடாது என்றான். அவர் நான் கொடுக்கின்ற வரத்தை நீ திரும்ப கேட்க கூடாது என்றார். அவனும் சரி என்றான்.
கடவுளும் வரத்தை கொடுத்து விட்டு சென்றார். திமிர் பிடித்த கருப்பண்ணசாமி ஊரில் அனைவரிடமும் கடவுளிடம் நான் சாகா வரத்தைப் பெற்றேன் என்றான்.
வெளியூருக்குச் சென்றான் ஒரு நாள். அங்கு ஒருவர் அவனிடம் உன் பெயர் என்ன என்று கேட்டார். அவனோ கருமி என்றான். அவனால் அவன் பெயரை முழுமையாக கூற முடியவில்லை.
அவன் அப்பொழுது தான் சிந்தித்தான். கடவுளிடம் பண்ணை என்பதற்கு பதிலாக என்று கூறினோமோ பின்பு சாவு வரக்கூடாது என்பதற்கு சா வே வரக்கூடாது என்பதனால் சா என்பது வரவில்லையோ என அழுது புலம்பினான் தவறை உணர்ந்தான்.
கடவுளிடம் கேட்க கூடிய வரம் நமக்கு கொழுப்பெடுத்து கேட்டால் அவருக்கு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தான்.
நகைச்சுவை என்பது ஓன்று இல்லை என்றால் மனிதர்களால் வாழவே முடியாது என்றார் காந்தியடிகள்.
நகைச்சுவைக்கு ஊடகத்தின் வழியே கொண்டு வந்தவர்கள் N. S. கிருஷ்ணண், சார்லி சாப்ளின் ஆவார்கள். நகைச்சுவை பல வழிகளில் உண்டு
அவை
குடும்ப நகைச்சுவை, வகுப்பறை நகைச்சுவை, அரசியல் நகைச்சுவை, டைமிங் ஜோக் என்று கூறும் நகைச்சுவை என்று எந்நேரமும் வரலாம். சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் ஆயுள் அதிகம் என்பார்கள்
நாமும் மகிழ்ச்சியோடு வாழ்வோம் மற்றவரையும் சந்தோஷப் படுத்தி வாழவைப்போம்
ஜோ. ஜெயராஜ்
13.K2K
00069
நகைச்சுவை
"எனக்கும் கொஞ்சம் பால் குடுடா கவின்" மழலை மொழியில் கெஞ்சினாள் விந்தியா.
"மாட்டேன்" பாதி பாலை குடித்து விட்டு நிமிர்ந்தான் ஆறு வயது கவின். கண்ணன்