சுய விருப்ப கதைகள்

1.K2K -00002

 15 ஆம் தலைப்பு ஒரு குட்டிக்கதை 

அந்தி பகலில் வானம் மேக மூட்டத்துடன் மாலை பொழுது போல சிறிது துளி மழை தூறல் என்மேல் பட தென்றல் காற்று ஜில்லென்று வீச எனது மேனி சிலிர்க்க இயற்கையின் காட்சியை ரசித்து கொண்டே "சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ" என பாடலை முணுமுணுத்துக் கொண்டு கடற்கரை அலையை ரசித்தவாரு நடந்து போய்க் கொண்டுருந்தேன்.

எனக்கு எதிரில் வடமாநிலத்து சிறிய பெண் குட்டி குரங்குடன் விளையாடிக் கொண்டிருக்க அதையும் ரசித்தப்படி சிறிது தூரம் தான் போயிருப்பேன் அந்தக் குட்டி குரங்கு என் பின்னாளில் இருந்து துப்பட்டாவை இழுக்க நான் அதிர்ந்து விட்டேன் அந்த ஒரு நொடி. குரங்கு என்னை பார்த்து புன்னைகைத்தது  நான் அதை தடவிக் கொடுத்து என்னிடம் இருந்த ரொட்டி பொட்டலத்தை எடுத்து அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தேன். இருவரும் சாப்பிட்டார்கள் எனக்கு ஒருவித சந்தோஷத்தையும் மனசும் நிம்மதியாகவும் இருந்தது.

அங்கிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன், அங்கு ஒருத்தர் வேறு ஒருவரிடம் பிக்பாக்கெட் அடிக்கிறதை பார்த்துவிட்டேன் ஆனால் என்ன செய்வதுனு தெரியாமல் விழிபிதுங்கி நின்றேன். டீ கடை உரிமையாளரும் இதைப்பார்த்து கொண்டிருப்பார் போல அந்த திருடனை பிடித்து அவன் திருடுன பணத்தை உரிமையாளரிடம் சேர்த்துவிட்டு அடிக்காமல் அவனை விசாரித்தனர். அவன் அதற்கு சொன்ன பதில் எல்லோர்க்கும் நெஞ்சை உலுக்கியது என்னைவென்றால் அவனுடைய அப்பா "ஒரு வாரத்துக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இருதய ஆபரேஷன்காக பணம் தேவைப்படுகிறது எங்கு வேலை கேட்டாலும் உனக்கெல்லாம் இங்கு வேலை தரமுடியாது அடிக்காத குறையாக அனுப்பிவிட்டனர். ஒருவர் வேலை தருவதாக கூறி என்னை நம்பவைத்து திருட்டு தொழில் சேர்த்துவிட்டார் அவரிடம் நான் சிறிது பணம் கொடுத்தாலும் இன்னிக்கு இவ்ளோ தான் போனி பார்த்தியா என்று கேட்டு அடிப்பார் இல்லையென்றால் தகாத வார்த்தைகளால் திட்டுவார். என கண்ணீர் மல்க என்னை காப்பாற்றுங்கள் எனக் கதறினான் அங்கு வந்த போலீஸ்காரர் என்ன எதுன்னு விசாரித்து மனுதாபிமானத்துடன் செயல்ப்பட்டதால் அவனுடைய வாழ்க்கை மீண்டும் பிரகாசமானது. "நீங்கள் எப்படி என யோசித்தால் இதோ பதில் " போலீஸ் தேடிவரும் முக்கிய குற்றவாளி அந்த குற்றவாளியை இவன் பிடித்த கொடுத்தமையால் அவனுக்கு போலீஸ் வேலையும் கிடைத்தது. அவனுடைய அம்மாவையும் காப்பாற்றி தன்னுடைய குடும்பத்தை நல்லபடியாக கவனித்து தன்னுடைய வேலையில் கடமை தவறாது நேர்மையாக உழைத்து உயர்ந்த பதவி சென்றதும் வெற்றியின் கொடியை நிலை நாட்டினான்..! 

நெறி: மனிதனாக வாழ்வது எளிது..!!

மனிதாபிமானத்துடன் வாழ்வது தான் பெரிது..!!!.

-- லக்ஷ்மி பிரியா-

 

 

2.K2K-00013 

ஆவிகளும் ஆத்மாக்களும்

இந்த தலைப்பைப் தேர்ந்தெடுக்கும்போதே, எனக்கே சிறிது "அல்லாகத்" இருந்தது. இருந்தாலும் சிறுவயது முதல் எனக்கும் சுற்றியிருந்தவர்களுக்கு ஏற்பாட்டை வினோதமான அனுபவங்களைகே கேட்டும் இக்கதை புனையப்பட்டது.

ரவிணாவிற்கு, சிறுவயது முதலே அமானுஷ்யமான கதைகளைக் கேட்பதிலும், படிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தாள் ஒரு சமயம் அவளுடைய இரு அக்காக்களும் பெற்றோர் இல்லாத வேளையில் அட்சரப்பலகைக் கொண்டு ஆவிகளோடு?! அல்லது இறந்தவர்களின் ஆத்மாக்களோடு பேச முற்படுவதை ஒளிந்திருந்துப் பார்த்திருக்கின்றாள். அன்றிலிருந்து ரவினாவிற்கும் அவ்வாறு அழைத்துப் பேசவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதின் அடித்தளத்தில் தங்கிவிட்டன. இப்பொழுது மனநல மருத்துவமனை பின்பு மக்களின் "மனவலியை", தினந்தோறும் கேட்பதாலும், அவளுக்கு மனத்திர்ற்கும் ஆவி, ஆத்மா போன்றவற்றைப் பற்றி மேலும் விருப்பமாகி தன் நண்பனுடன் சேர்த்துக்கொண்டு மும்முரமாக அதன் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாள்.

ஒரு நாள் மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக இரவு எட்டுமணியளவில் கிளம்பிவீட்டிற்கு செல்ல நேரிட்டது வானம் மேகமூட்டத்துடன், மலை வரும் போல் இருந்தது. ரவினா தன் இருசக்கர வாகனத்தை சற்றே வேகம் கூடி சென்றுக் கொண்டிருந்த போது சாலியின் நடுவே ஒரு பாத்திமான்ன்று வயது சிறுமி வண்டியை நிறுத்தும்படி கூறினாள். மனதில் லேசாக பயம் வர இருந்தாலும் வண்டியை ஓரம் காட்டினாள் அச்சிறுமி உடனே கண்ணீருடன் " அக்கா என் அம்மாவிற்கு விபத்துள்ளாகி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்னை உங்கள் வண்டியில் ஏற்றி மருத்துமனையில் கொண்டு போய் விடுங்கள் எனக் கெஞ்ச ரவிணாவும் இரக்க்கப்பட்டு எந்த மருத்துவமனை என வினவ அவள் பணிபுரியும் மருத்துவமனையின் பேரைச் சொன்னால் ரவிணாவும் தன் தொலைபேசியில் பெற்றோருடன் தொடர்புக் கொண்டு வருவதற்கு சிறுது நேரம் ஆகும் என்று கூறிவிட்டு மீண்டும் மருத்துவமனை நோக்கிச் சென்றால் அந்த சிறுமியும் உடனே வெண்டையை விட்டு இறங்கி "ரொம்ப தாங்க்ஸ்" அக்கா என்று சொல்ல ரவிணாவும் உன் பெயரென்ன என்று கேட்க அவளும் தன் பெயர் 'ராகினி' என்று கூறிவிட்டு உள்ளே  சென்றுவிட்டாள். திரும்பி ரவிணா வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது அவள் வீட்டிற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் பாலம் உடைந்து பல வாகனங்கள் விபத்துக்குள்ளாய் இருந்தன. அந்தப் பெண் மட்டும் தன்னை திரும்ப அழைத்துப் போகவில்லை என்றால் தானும் இந்த விபத்தில் சிக்கியிருப்போம் என்று நினைத்தபோது அவளது உடல் ஒரு முறை அதிர்ந்தது.

மறுநாள் வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்றவுடன், அங்கிருந்த பணியாளரை நோக்கி " நேற்று ராகினி என்ற சிறுமியின் அம்மா எவ்வாறு இருக்கிறார்கள்? என்று கேட்கவும் பணியாளர் அவளை வினோதமாகப் பார்த்தார் " ஏன் அப்படி பார்க்கிறீர்கள் என்று ரவிணா கேட்க அதற்கு அவர் "நேற்று மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டது ராகினி என்ற சிறுபெண் அவள் நேற்றிரவு இறந்துவிட்டாள்  அவளுடைய உடல் பெறுவதற்கு அவள் அம்மாவும் உறவினர்களும் வெளியில் இருக்கிறார்கள் என்று சொல்ல இரண்டாவது முறையாக ரவிணாவின் உடலும் உள்ளமும் ஒரு சேர அதிர்ந்தன அப்படியானால் நம்மை காப்பாற்றிய ராகினி விபத்தில் உயிரை இழந்த ஆவியா இல்லை தனக்கு உதவியதால் அவளுடைய ஆத்மாவா என்று வெகு நேரம் விடைத்த தெரியாமல் ரவிணா இன்று வரை தவித்துக்கொண்டுஇருக்கின்றாள் இக்கதை படித்த உங்களுடைய விடை என்னவாக இருக்கும்?!!!

- ரமா கோவிந்தராஜன் (க்ராப்ஸ்)

 

 

3.K2K00038

கொரோனாவா?! குடியா?!

தவிடு ஒரு கூலித் தொழிலாளி, மூட்டை சுமப்பது கை வண்டி இழுப்பது கடைகளில் வாசலைக் கூட்டி சுத்தம் செய்வது கட்டிட வேலை செய்யும் இடங்களில் எடுபிடி வேலைகள் செய்வது என்று கிடைத்த வேலையை மனநிலைக்கு ஏத்த மாதிரி செய்வான்.

 அவனுக்கென குடும்பம் இருந்தது, வயசான அம்மா மனைவி பிள்ளைகள் இருவர், அவர்களும் அவர்களுக்கு ஏற்ற வகையில் தீப்பெட்டி ஒட்டியோ காடு கரைகளில் வேலை பார்த்தோ சம்பாதிக்கவே செய்தனர்.

இவன் வாங்கும் சம்பளத்தில் பாதி தான் வீட்டுக்கு வரும், பாதி டாஸ்மாக்கிற்கு போய் விடும், முதல் நாள் இரவு குடித்த போதை மிச்சமிருக்க காலை எழுந்திருக்கும் போதே தலைவலி தவிடனுக்கு.

துரை எந்திருக்கவே லேட்டானா என்ன வேலைக்குத் தான் போகுறது?!” தவிடனின் பொண்டாட்டி சுப்பு அம்மியில் அரைத்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தாள்“. காலங்காத்தால அவன் பேச்சை ஏன் பேசுற எதையாவது திங்கக் குடுத்து அனுப்பு.பாதி போதையில ஏதாவது சண்டைக்கு வருவான்”, தவிடனின் அம்மா கோமதி   மகனின் புத்தி தெரிந்து எச்சரிக்கிறாள்.

ஆமா அதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை, குடிசை ஒழுகுது குடிக்கிறதை குறைச்சுகிட்டு காசு கொண்டு வான்னு சொன்னால் கேட்குதாதினம் பாதியை அந்த பாழாப் போன டாஸ்மாக்ல குடுத்தத்தான் கடன் தீரும்னு இருந்தால் என்ன பண்றது….?!”

சுப்பு பேசுறதைக் கேட்டுகிட்டே சட்டையைப் போட்ட தவிடன்'” ஆமா இவள் அப்பன் வீட்ல போய் வாங்கியாறது தான?! வக்கத்தவ பேசுறா பேச்சுஎன கத்துகிறான்.

இந்தா பிள்ளைகளா இந்தா பைக்கட்டை தூக்கிட்டு பள்ளிக்கோடம் போங்க. புள்ள சுப்பு உன்னையும் தான்  வெரசா கிளம்பு….வீட்ல இருந்தா பிரச்சனை தான்னு விரட்டுறாள் கோமதி.

தவிடன் சரியான முரடன், ஐஞ்சாங்கிளாஸ் தான் படிச்சிருக்கான், கோமதிக்கு ஒரே பையன்.அதுனால அவனோட அப்பன் சுந்தரம் அவனைஅடிக்காம திட்டாம செல்லமா வளர்த்தாரு.அவர் இருக்கிற வரை இவன் வேலைக்கே போகலை.சொந்த அத்தை மகள் சுப்பு.மாமனை நம்பி இந்த வீட்டுக்கு தவிடனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தாள்.

மவராசன் சுந்தரமும் மருமகளை ஒரு குறையும் இல்லாம பாத்துக்கிட்டாரு.

மாமா இவரு இப்பிடியே வேலைக்குப் போகாம இருந்தா எப்பிடி பொழைப்பு நடத்துறது”, “ஏன் தாயி இங்க உனக்கென்ன குறைச்சல் எல்லாம் மாமா செய்றேன்..மா

இன்னைக்கு செய்வீங்க, நாளைக்கு ஒரு கோபம் தாபம்னு வந்தால் தாங்க முடியுமா?!"

"சரி நான் பேசுறேன்.நீ சண்டை போடாத"

இவன் வேலைக்குப் போன நேரமோ என்ன கருமமோ நல்லா இருந்த சுந்தரம் பொசுக்குன்னு மாரடைப்புல செத்துப் போறாரு.

தன்னை செல்லமா வளர்த்த அப்பன் இறந்ததும் தான் இந்த தவிடன் இப்பிடி குடிகாரனா மாறிப் போனான்.

அப்பன் செத்த சோகத்துல குடிக்கிறான்னு சுப்புவும் கோமதியும் பேசாம இருக்க பிள்ளைங்க பிறந்ததுக்கு அப்புறமும் குடியை விடாம குடிக்கு அடிமையாகிப் போனான்.

குடிக்க ஆரம்பிச்சதும் முரட்டுத்தனமும் முன் கோபமும் கூடவே தொத்திக்கிச்சு, கடைசியில குணம் கெட்டவனா ஆயிட்டான்.

எதையாவது நினைச்சுகிட்டு சுப்பு கூட சண்டை போடுவான்.

குடிக்காதன்னு சொன்னால் கேட்க மாட்டான், குடிக்கிறதுக்கு காசு இல்லைன்னா வீட்ல இருக்கிற பண்ட பாத்திரங்களை வித்து குடிச்சுட்டு வருவான்.

அன்னைக்கு எப்பவும் போல ஆளுக்கோரு பக்கமா வேலைக்குப் போயிட்டு பொழுது சாய வீட்டுக்கு வர்றாங்க, வழக்கம் போல குடிச்சுட்டு வந்த தவிடன்,” சுப்பு! நாளைக்கு எந்த வேலையும் நடக்காதாம்.சும்மா வேலைக்குப் போன்னு எழுப்பாதநான் நல்லாத் தூங்க போறேன்

ஒன் மூஞ்சிஇப்பவும் இப்பிடி அறிவில்லாம குடிச்சுட்டு வர்றீயே ஊரெல்லாம் கொரோனா பரவுதுன்னு முழு அடைப்பு விட்டிருக்காங்க, தினக்கூலி வேலை பாக்குற நாம இருக்கிறதை வச்சு எப்பிடி கஞ்சி குடிக்கிறதுன்னு நான் தவிச்சுகிட்டிருக்கேன்.” னு புலம்புறாள் சுப்பு.

எத்தனை நாளைக்கு மா அடைப்பு?!”

தெரியலத்தைஒரு வாரம் பத்து நாள் இருக்கும்னு பேசிக்கிறாங்க. வீட்டுக்குள்ள தான் இருக்கணுமாம்.யாரு கூடவும்  முகத்தை மூடாம பேசக் கூடாதாம்.யாரையும் தொடக் கூடாதாம்.”

பத்தாவது நாள் இருக்கிறதை வச்சு பிள்ளைகளுக்கு ஆக்கிப் போடுறாள் சுப்பு, தவிடனுக்கு குடிக்க முடியலையே கடை திறக்கலையேன்னு ஆத்திரம்.” நீ தான் தினம் கருவருத்தஇப்ப பாரு பத்து நாளாச்சு.நிம்மதியே இல்லாம போச்சு

ஆமா அது தான் முக்கியம், அடுத்த வேளை பிள்ளைக பசிக்குதுன்னு வந்தால் எதை வச்சு ஆக்கிப் போடுறதுன்னு திண்டாடுறேன், இவருக்கு அந்தக் கவலை இருக்கா?!”

ஏற்கனவே குணம் கெட்ட தவிடன் குடிக்க முடியலைன்ற ஆத்திரத்துல வீட்லயே கிடக்கிறதால தினம் சுப்பு கூட சண்டை போடுறான்.

ஒரு மாதம் அந்த ஏழைக் குடிசையில் ஒரு வேளை இரண்டு வேளைக்கு அரைகுறையா அடுப்பு எறிஞ்சு கால் வயிறு அரை வயிறு நிறையுது.

இவங்களைப் போல பல வீடுகள்ல நிலைமை இப்படித்தான் இருக்குது, எல்லாம் தினக்கூலிங்க கட்டட வேலை நூறு நாள் வேலைத் திட்டம் கடைகள் இல்லாதது இப்பிடி இருந்தால் எந்த வேலைக்குப் போவாங்க எப்படி காசு வரும்?!

நாற்பது நாள் ஆச்சு அவசரத் தேவைக்கு மருந்து வாங்கவோ கிழிஞ்ச துணிமணிகளுக்கு மாத்தா வேற துணிமணிகள் வாங்கவோ லைட்டு பேனு ரிப்பேர் பண்ணவோ முடியாம இருக்கிறதை வச்சு கதியேன்னு வாழ்ந்துகிட்டிருக்காங்க மனுசங்க. இந்த இக்கட்டான நேரத்துல ஒரு நாள்,” அண்ணே டாஸ்மாக் திறந்திருக்கு.வெரசா வான்னு குரல் கொடுத்துக்கிட்டே ஓடுறான் பக்கத்து வீட்டு சிவா.

குப்புறப்படுத்து தந்தரையைப் பார்த்துக்கிடந்த தவிடன் தடால்புடால்னு எழுந்திருக்கிறான்.” …..சுப்பு! எங்கடி போனன்னு அலறுறான்.

என்னமோ ஏதோன்னு பதறியடிச்சு ஓடி வந்த சுப்பு கைலி விழுந்தது கூட தெரியாம நிக்கிற புருஷனைப் பார்த்து பதறுறாள்.

என்னா ஏன் இப்பிடி நிக்க?! நெஞ்சு வலிக்குதா?! என்ன வேணும்?!”

…..டாஸ்மாக் திறந்துட்டாங்களாம் எனக்கு நூறு ரூபா குடு

உன் தலையில கொள்ளி வைக்க, பிள்ளைகளுக்கு பசிக்குது இன்னைக்கு பொழுதுக்கு யார்கிட்ட கேப்போம்னு தவிச்சுகிட்டிருக்கேன், புத்திகெட்ட மனுசனுக்கு பொழப்பு பாரு?!”

ஐயோ பேசிக்கிட்டிருக்காளே நான் என்ன செய்வேன் டாஸ்மாக்ல கூட்டம் வந்துருமே?! காசுகாசுக்கு எங்க போவேன்?! பித்தனைப் போல புலம்பி வீட்டையே சுத்தி சுத்தி வர்றான் தவிடன்.

திடீர்னு சுப்புகிட்ட போனவன் அவள் கழுத்துல இருந்த தாலியை அறுத்துகிட்டு ஓட்டமெடுக்கிறான்.

அடப்பாவி கட்டுனவனே தாலியை அறுக்கிறதை எங்கியாவது கண்டோமா?! பாழாப் போன அரசு டாஸ்மாக்கை திறந்து என் தாலியை அறுத்துருச்சே நான் என்ன செய்வேன்?! தாலியோட போகுமா என்னையும் தான் வித்துப்புடுவான், குடிகாரன்னு தெரிஞ்சும் என்னை இங்க கட்டிக்குடுத்து என் குடியைக் கெடுத்துட்டாகளே?!” தெருவைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறாள் சுப்பு.

மாசக்கணக்கா கடை கண்ணி இல்லாம வேலைக்குப் போக முடியாம இருக்கிறதை வச்சு கஞ்சி குடிக்கிறோம்.இந்த டாஸ்மாக்கை மட்டும் ஏன் திறக்குறாங்க.எங்களை உசுரோட கொல்ல முடிவெடுத்துட்டாங்களே….பாவிகளா நீங்க நல்லா இருப்பீங்களா?! சும்மாவே காசை வம்புல குடிச்சி சீரழிப்பானுங்க. இப்ப வீட்ல எதையெல்லாம் விப்பானுங்களோ எங்களையும்  விப்பானுங்களோ?! இதைக் கேக்க ஆளில்லையா?!”

கோமதியும் சேர்ந்து அழுகிறாள், அழுது அழுது பிள்ளைகளும் சுப்புவும் கோமதியும் சாப்பிடாமலே படுத்துக்கிடக்க தள்ளாடிக்கிட்டே வந்த தவிடன் இவங்களை தாண்டி உள்ள போயி அடுப்படியில சட்டியை உருட்டுறான்.” வயித்தப் பசிக்குது சோறு போடுங்கடின்னு ஏக வசனத்துல அம்மாவையும் சேர்த்துக் கத்துறான்.

அழுது ஓஞ்சு படுத்துக்கிடக்குற சுப்புவும் கோமதியும் பதிலே பேசாம படுத்திருக்க….

வாயில நுழைய முடியாத கெட்ட வார்த்தையால் திட்டிக்கிட்டே வாசல்ல போய் விழுகிறான்.

காலையில எந்திரிக்கும் போதே காய்ச்சல் கொதிக்குது கட்டுன பாவத்துக்கும் பெத்த பாவத்துக்கும் அவனைத் தூக்கிப் படுக்க வச்சு சுடுகஞ்சியும் மாத்திரையும் குடுக்கிறாங்க சுப்புவும் கோமதியும். அன்னைக்கு சாயங்காலமே இருமலும் தும்மலும் விடாம தொடர மறுநாள் கொரோனா கணக்கெடுக்க வந்தவங்க சந்தேகப்பட்டு இவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறாங்க.

இரத்த மாதிரியை சோதிச்சதுல இவனுக்கு வந்திருக்கிறது கொரோனாதான்னு   உறுதியாகிருது.இதே அறிகுறிகளோட அங்க வந்த இன்னும் பத்துப் பேருக்கும் இதே கதி தான்.கடைசியா விசாரிச்சதுல நேத்து டாஸ்மாக்கை சரக்கு வாங்குன எல்லாருக்கும் வந்திருப்பது உறுதியாகுது.உடனே வந்து வீட்ல இருக்கிற பொம்பளைங்க   பிள்ளைங்களையும் அள்ளிக்கிட்டுப் போய் சோதனை பண்றாங்க. பாதிக்கு பாதி பேருக்கு கொரோனான்னு உறுதியாயிருச்சு..

கூழோ கஞ்சியோ குடிச்சாலும் உசுரோட இருந்தோம், இப்பிடி டாஸ்மாக்கை திறந்து மொத்தமா எங்க குப்பத்துக்கே கொள்ளி வச்சுட்டாங்களேன்னுபொம்பளைங்க வைக்கிற ஒப்பாரி அந்த ஊரையே உலுக்குது.

அடுத்தடுத்து ஒரே வாரத்துல ஐம்பது பேரு பெருசும் சிறிசுமா செத்துப் போறாங்க. இங்க இவ்வளவு பேரு பெத்ததுக்கு எது காரணம் கொரோனாவா?! குடியான்னு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் விவாதம் பண்ணிக்கிட்டிருக்காங்க. நீங்களே யோசிச்சுப் பாருங்க கொரோனாவா?! குடியா?!

- பூமாதேவி

 

 

4.K2K-00042 

 விருப்பமான தலைப்பு கதை

மனைவி (இரண்டாம் தாய்)

மணி மொழியன் 8 வயதிருக்கும்போதே தன் தாயையும் தந்தையும் ஒரு விபத்தில் இழந்து விட்டான்.  அவர்களின் தூரத்து சொந்தமான முத்து சித்தப்பா வீட்டில் தான் தங்கி படித்ததான். சித்தப்பா சித்திக்கு அந்த நேரத்தில் குழந்தைகள் இல்லை, அதனால் அவர்கள் இருவரும் நல்ல பாசமாக இருந்தனர்.

ஓரிரு வருடங்களில் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனாலும் சித்தப்பா எப்போதும் போல இவனிடம் நல்ல பாசமாக தான் இருந்தார்.  ஆனால் அவரது சித்தி தனக்கு குழந்தை வந்து விட்டதால் அவனை ஓரம் கட்ட ஆரம்பித்து வித்திட்டார். எப்போதுமே அவனுக்கு பாரபட்சம் தான் தன் சித்தியிடம்,

மணி மொழியனோ அவன் தம்பி மற்றும் சித்தி சித்தப்பாவிடம் நல்ல பாசமாக இருப்பான்.  இவை எல்லாவற்றையும் கடந்து நல்ல முறையில் படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான்.  அவனுக்கு மனதில் ஒருவித பயம் எப்போதும் சித்தியை நினைத்து கொண்டு இது போல் தன் மனைவி அமைந்து விட்டால் என்ன செய்வது என்று மனம் முடிக்க அவனுக்கு பயம் விருப்பம் இல்லை.

இப்படியிருக்கையில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது தனியார் நிறுவனம் ஒன்றில். அங்கே நறுமுகை என்ற பெண்ணும் அவன் சேர்த்த அதே நாளில் வேலைக்கு சேர்ந்தார்.  அவளுக்கு அப்பா கிடையாது அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்தவள். 

மணி மொழியனின் அமைதியான குணம் கண்டதும் அவளுக்கு அவன் மீது காதல் ஏற்பட்டது. அதை தன் தோழி அகிலா மூலமாக தெரிவித்தாள் . ஆனால் மணி மொழியனுக்கோ தன் மனதில் உள்ள பயத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

ஆனால் நறுமுகையோ விட வில்லை அவனிடம் சென்று நேரடியாக பேசினாள், நான் உங்களைப் பற்றியம் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் நீங்கள் வளர்ந்தத விதம் எல்லாம் தெரிந்து கொண்ட பிறகுதான் எனக்கு உங்கள் மீது காதல் அதிகமாக வந்தது.

 அம்மா இல்லாத பிள்ளைக்குத்தான் அம்மாவின் அன்பு தேவைப்படும் அது புரியும்.  அதை நான் உங்களுக்கு தர தயாராக இருக்கிறேன் என சொல்லக் கேட்டதும் மணி மொழியனுக்கு தலை கால் புரியவில்லை நொடி தாமதிக்காமல் நறுமுகையை இறுகத் கட்டி தழுவிக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டான். அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன், அவர்கள் திருமணம் இனிதாக நடைபெற்றது அவர்களும் நீடுழி வாழ்ந்தார்கள்.

நெறி: மனைவி என்பவள் கணவனுக்கு இரண்டாம் தாய், அதே போல கணவன் மனைவிக்கு முதல் குழந்தை என்று வாழ்ந்தால் இல்லம் என்பது இனிய இல்லறமாக இருக்கும். நாம் வாழும் போதே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.

- கணேசன் சண்முகவேல்

 

 

5.K2K-00042

விருப்பமான தலைப்பு கதை

உழைத்து வாழ வேண்டும்

தானப்பபுரம் என்ற   ஊரில் அய்யாவு என்று ஒருவன் இருந்தான. அவனுக்கு ஒரு அமானுஷ்ய சக்தி இருந்தது, அதாவது அவன் எந்த விதமான விலங்குகளாக இருந்தாலும் அதனுடன் பேசுவான் அந்த விலங்குகளை கணநேரத்தில் அடிமையாகி விடுவான்.

அந்த சக்தியை வைத்து அவ்விலங்குகளை அடிமைப் படுத்தி அதன் மூலம் தன் வாழ்க்கையை நடத்தி வயிற்றை நிரப்பி வந்தான.  ஒரு நாள் ஒரு யானையை பிடித்து வர காட்டுக்குச் சென்றான்.

போகும் வழியில் ஒரு குரங்கை பார்த்தான். அவனை கண்டு அஞ்சி நடுங்கி நின்ற அந்த குரங்கிடம் அவன் யானை எங்கே இருக்கிறது என்று கேட்டான், அதற்கு அப்பாடா நாம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று நினைத்து கொண்டு, நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் யானை நேராகச் சென்றால் ஒரு மாமரம் இருக்கும், பின் வலது புறம் திரும்பினால் அங்கே ஒரு புளியமரம் இருக்கும்.  அங்கே பார்த்தால் புலிகள் இருக்கும், அவைகளிடன் கேட்டால் அது சொல்லிவிடும் என்றது. அதை கேட்டு அவன் அவ்வழியே நடந்து சென்று அங்கே புலியையும் கண்டு பிடித்தான.

புலியும் இவனது சக்தி கண்டு பயந்து நடுங்கி நின்றது, அவன் அப்புலியிடம் யானை எங்கே என்று கேட்க நீங்கள் அந்த ஆற்றைக் கடந்து சென்றால்ஒரு சில நிமிடத்தில் யானை கூட்டத்தை காணலாம் என்றது.

அதன்படியே கடந்து சென்ற அவன் யானை கூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தான்.  நன்கு வளர்ந்த யானை ஒன்றை கண்டு அதைத் தன்னுடன் வருமாறு அழைத்தான்.  அதற்கு அந்த யானையும், எஜமானரே நானும் உங்களுடன் வருகிறேன் ஆனால் எனக்கு ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்க அனுமதிக்க முடியுமா? என்றது. அதற்க்கு அவன் இந்த யானைக்கு என்ன அறிவு இருக்க போகிறது கேட்டு விட்டு போகட்டும் என அனுமதித்தான்.

பின் யானை அவனிடம் நாங்கள் ஐந்தறிவு உயிரினங்கள் நாங்களே இங்கே எங்களுக்கு தேவையானதை உழைத்து பெற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் பகுத்தறிய தெரிந்த நீங்கள் எங்களைப் பிடித்து சென்று எங்களுக்கு பிடிக்காத வேலை செய்யச் சொல்லி அதன் மூலம் உங்கள் வயிற்றை வளர்க்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டது,

அதை கேட்டதும் அய்யாவுக்கு தூக்கி வரி போட்டது, ஒரு ஐந்தறிவு உயிருக்கு இருக்கும் புத்தி கூட தனக்கு இல்லை என நொந்து மனம் திருந்தினான் அய்யாவு. அந்த யானைக்கு நன்றி சொல்லி விட்டு ஊருக்கு திரும்பி வந்தான். தன் குடும்பத்தினருடன் நடந்ததை சொல்லி ஒரு சின்ன வியாபாரம் தொடங்கி குடும்பத்தினருடன் நலமாக வாழ்ந்தான்.

நெறி: உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...

-கணேசன் சண்முகவேல்

 

 

6.K2K – 00043

சக மனிதா!

அங்கு மனிதர்கள் வாழ்ந்தனர்; மனிதர்கள் மட்டுமே. சிறு புழுவிற்கும் அங்கு இடம் இல்லை. காலால் நசுக்கினர்; விரட்டி அடித்தனர்; இன்னும் பல பலசாலிகள் பெரும் மூச்சைவிட்டு ஓட வைத்தனர். காரணம் அது மனிதர்கள் மட்டுமே வாழும் இடம். அது எப்போதும் அப்படி இருந்தாக வேண்டும் என்னும் கடமை, சுயநலம், சக மனித அக்கறை; வெறும் "மனித" அக்கறை. அதை சித்தாந்தமாகக் கருதி, அவர்கள் எப்போதும் அதை நினைத்து பெருமை கொண்டதுண்டு. சக மனிதர்கள் மீது அக்கறை கொள்ள எடுத்துரைப்பதுண்டு. மேலும் அதை உயர பிடித்து ஓடுவதுண்டு.

அப்படித்தான் அந்நாளும் விடிந்தது. சித்தாந்தமும் மாறவில்லை, அந்த இடமும் மாறவில்லை. அது மனிதன் வாழும் இடமாகவே இருந்தது. தொலைவில், ஒரு பச்சை நிற துண்டு தெரிந்தது. அது காற்றில் அசையவும், அருகில் வருவது உடையில்லா ஒரு சக மனிதன் எனவும், அவன் அழுவதும் மற்ற சக மனிதர்களுக்கு விளங்கியது. அவன் கையில் ஓர் கலப்பையும் (ஏர்) உள்ளது என்று, அவன் தொலைவில் உள்ள போது, யாரும் அறியவில்லை. அதை கண்டதும் பிற மனிதர்கள் விரைந்தனர். சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பிற மனிதர்களிடம் அவனை காப்பாற்ற சண்டை பிடித்தனர். அங்கு ஒரு போர் மூண்டாலும் ஆச்சரியம் இல்லை. அந்த அளவுக்கு பெரும் சண்டை.

தலைவன் ஒருவன் வந்தான். அவனுக்கு ஆடை வழங்க பணம் தேவை என்றும் அதை விரைவில் தருவதாகவும் கூறி சித்தாந்தத்தை உரக்க மொழிந்தான். காவி நிற நூலை வேறு உலகத்தில் இருந்து வாங்க எல்லோர் முன்னும், அவனோடு துணை நின்ற, சக மனிதன் ஒருவனை செல்ல ஆணையிட்டான். சிலர் அதை வழி மொழிய சிலர் அதை எதிர்க்க என்று அந்த காலை பொழுது நீண்டது. ஆடையில்லா அவனோ, அக்னி கதிர்களுக்கும் சக மனிதர்களுக்கும் நடுவில் வாய்அசையாது நின்று கொண்டிருந்தான். கலப்பையின் எடை கூடியதா அல்லது அவனின் பலம் குறைந்ததா என்று தெரியவில்லை; அவன் அதை தரையில் வைத்து யோசிக்க தொடங்கினான்; அவனுக்கு பின்னால் வரப்போகும் 'சக மனிதர்களை' பற்றி. ஒருவனுக்கு செருப்பில்லை (அவனை அணிய வேண்டாம் என்று கட்டளை இட்டதும் அதே சக மனிதன் தான்), மற்றொருவனின் மேனி முழுவதும் சக மனிதனின் கழிவு (அதை எடுக்க கட்டளை இட்டதும் அதே சக மனிதன் தான்). இவர்கள் பொறுமையாக வரட்டும் என்று வேண்டிக் கொண்டான்.

வேறு உலகத்தில் இருந்து நூல் வரும் என்று எதிர்பார்த்த மனிதர்கள், ஆடையற்றவன் யோசிக்கும் வேறு மனிதர்களை பற்றி யோசிக்கவும் இல்லை, அப்படி இருவர் இருப்பதும் இவர்களில் பலருக்கு தெரியாது. ஆனால், சக மனித சித்தாந்தந்தம் ஓங்கி வளர அவர்களின் குரல் எப்போதும் ஒலிக்கும். காரணம் இது மனிதர்கள் வாழும் உலகம் இங்கு சிறு புழுவிற்கும் கூட இடம் இல்லை.

"தனி மனிதனுக்கு இடம் இல்லை என்றால் நாங்கள் மரத்தினையும் அழிப்போம்!"

பின் குறிப்பு: இந்த உலகத்தில் "அவன்" மட்டுமல்ல "அவளும்" இருக்கிறாள். ஆனால் சக மனிதன் அவளை வீட்டில் இருக்க உத்தரவிட்டுள்ளான். மீறினால் தண்டிக்கப் படுவாள்!

 

விஜய குமார்

 

 

7.K2K00048 ...

 ...... என்னுடைய விருப்பம் ......

          என் வாழ்க்கை ஆரம்பித்த இடத்தில் இருந்து ஊன்று உழன்று விடா முயற்சியுடன் என் முதல் அடியிணை பூமியில் எடுத்து வைத்தேன், என்னை தொடர்ந்து வந்து நான் கீழ் விழாமல் தாங்கி பிடிமானம் கொடுத்து வந்தது எனது அன்பிற்குரிய உறவுகள், அந்த பிடிமானம் விட்டு தூர விலகிச் சென்று வெகுதொலைவில் உள்ள நிரந்தர பிடிமான நிலையினை படிக்க செல்லும் போது, பலரும் பிடிமானம் தருவது போல் நடித்து ஏமாற்றி என்னை கீழ் தள்ளி மிதித்து புதைக்க முயன்றனர்,

         அப்போதும் உலகில் நம்மிடம் எதும் இல்லாத நிலையில் கடவுள் துணை நிற்பது போல, எனக்கு சில வாய்ப்புகள் தேடி வந்தது..,

         அந்த வாய்ப்புகள் மிகவும் சிறியது, இருப்பினும், பாதி மண்ணில் புதைந்த எனக்கு ஊன்று கொல் போல் நின்றது அத்தகைய வாய்ப்புகள் மூலம் நான் சிறுக சிறுக மேல் வரும் கணமும் என் வெற்றிக்கான அறிகுறி என்று தன் நம்பிக்கை வளர்த்து, முயற்சி செய்து,

          மீண்டும் மீண்டும் தோர்த்து, மீண்டும் மீண்டும் முயற்சித்தேன், என் முயற்சிக்கு ஏற்ற வாரு வாய்ப்புகளும் சிறுக சிறுக பெரியதாக வந்தது, என்னை முழுவதுமாய் மீட்டெடுத்து, சாதனை படைக்க காரணமாய் திகழ்ந்தது., இத்தகைய ஒரு வழியின் பக்க பலமாகவும், ஊன்று கொலாகவும் பயன்பட்டு என்னையும் என் திறனையும் வளர்த்து, உலகிற்கு ஒளி வகுத்து காட்ட கூடிய இந்த சிறு கதை முயற்சி.,

           எனக்கு மிக பெரிய வாய்ப்பு, கடவுள் அளித்த வெற்றி என்று கருதுகின்றேன்...

இப்படிக்கு.,

சி. தெய்வாணி ஸ்ரீ.,

 

 

8.K2K-00053

கூந்தலும் மீசையும்

"எதிரே வரும் காற்று அவள் நெற்றியோர கூந்தல் கலைத்துச் சென்றது... மிக வேகமாக ஸ்கூட்டியை ஓட்டினாள்... மனதில் ஒரே படபடப்பு...

"நவின்...உனக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்..." மனதில் எண்ணியவாறே காற்றோடு பயணித்த தன் கூந்தலை சரி செய்து கொண்டே இன்னும் வேகமாக டிரைவ் பண்ணினாள் துளசி"

வீட்டு வாசல் கிரீச்சென நீண்ட ஒலியில் ஸ்கூட்டி நின்றது....

பரபரப்பாய் உள்ளே நுழைந்தாள்

விழுங்கிய அத்தனை காற்றையும் மூச்சாய் வெளியிட்டாள்...

சில துளி நீரை கண்ணில் தேக்கியபடியே நவின் நவின் என அழைத்தபடியே தேடலானாள் ரூம் ரூமாக பரபரப்பாக...

துளசியின் கொலுசொலி அவனுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல.... கண்ணை மூடிக் கொண்டே...

"வாங்க மைடியர் பொண்டாட்டி கால் பண்ணின உடனே வந்தாச்சு" என செல்லமாய் புன்னகையுடன் அழைத்தான் நவின்"

'டேய் உனக்கு என்ன விளையாட்டா இருக்கா? நான் உன்கிட்ட ரசிச்சு ரசிச்சு பார்த்த அப்யரன்ஸ் போயிரும் டா... நா அலோ பண்ண மாட்டேன்

நா இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன் என கத்தினாள்"

"ஏன் டி இவ்வளவு சத்தம் போட்டு கத்துற? ஹார்ட் பீட் இவ்வளவு வேகம்? என அவள் நெஞ்சோரம் தலை சாய்த்தான்...

லேசாக தள்ளினாள்...

துளசி ஒன்னுமே இல்லாத விஷயம் டி.... இதுக்காக ஆபிஸ்லருந்து பாதில வந்தியா? என மிக நிதானமாகக் கேட்டுக் கொண்டே ஷேவிங் ரேசரை கையில் எடுத்தான்..."

"நோ.... உன்ன நா விட மாட்டேன்...

எனக்கு என் நவின் மீசையோட தான் வேணும் என கண்ணிர் துளியை தன் கூந்தலால் ஒதுக்கினாள்..

லேசாக சிணுங்கினாள்..."

"ஏய்.... இது ஒரு சூட்டிங்குக்கு...

ரொம்ப நாள் கழிச்சு கெடச்ச ஆபர்

ஒரு காபி விளம்பரத்துக்கு டி..."

காபிக்கும் மீசைக்கும் என்ன டா சம்பந்தம்? அந்த டைரக்டர் லூசா டா?

துளசி கோப படுத்தாத நகறு... டோன்ட் பி ஸ்டுபிட் என தள்ளினான் சேவிங் ரேசரை எடுத்துக் கொண்டே...

ஏன் டா போன மாசம் நா ஹேர் கட் பண்ணிக்க கேட்ட போது பெருசா ரியாக்ஷன் விட்ட...

எனக்கு லாங் ஹேர் தான் பிடிக்கும் கட் பண்ணாதனு ஆர்டர் போட்ட...

உனக்காக நா கேக்கலியா....

நீ மீசைய மொத்தமா ஷேவ் பண்ண விட மாட்டேன்....

பொம்பள வேசமாடா போட போற..

என கூறிக் கொண்டே ஷேவிங் ரேசரை ஜன்னல் வழியே தூக்கி எறிந்தாள்...

"துளசி....இட்ஸ் டூ மச் டி" என கோப பார்வை பார்த்தான்...

பிளீஸ் டா...எனக்காக... மை ஆசை மீசை டா நீ... என செல்லமாய் தோள் சாய்ந்தாள்...

புன்னகையாய் தலை அசைத்தான் நவின்...

 நீதி: இது மொத்தமும் மனசு பீலிங்ஸ்ங்க...வெளிலயிருந்து பார்த்தா யாருக்கும் வெலங்காதுங்க...அதனால இதுக்குள்ள நீதினு சொல்லிட்டு நாம மூக்க நுழைக்காம இருப்போமே....

- பூங்கொடி-

 

 

9.K2K-00042

புத்திசாலி பெற்றோர்

அழகம்மாள்புரம் என்ற ஊரில் மதுமதி மற்றும் ராஜனுக்கு இரண்டு குழந்தைகள் அவர்கள் பெயர் பிந்து & சிந்து இருவரும் இரட்டையர்கள் வயது 6. அவர்கள் எப்போதுமே தனக்கு பிடித்தத்தை மட்டுமே சாப்பிட்டு வந்தார்கள். ஐஸ் க்ரீமில் கூட. அம்மா மதுமதிக்கு மிகுந்த வருத்தம். வளரும் பிள்ளைகள் இப்படி இருக்கிறார்களே என்ன செய்வது என்று தன் கணவர் ராஜனிடம் கேட்க அவர் ஒரு ஐடியா சொன்னார்.

அதன் படி இருவரையும் தாங்கள் இருக்கும் வீட்டின் அருகில் இருக்கும் ஐஸ் கிரீம் கடைக்கு அனுப்பி வைத்தனர். பிந்துவுக்கு எப்போதும் சாக்லேட் ஐஸ் கிரீம் தான் பிடிக்கும், சிந்துவுக்கு மேங்கோ ஐஸ் கிரீம் தான் பிடிக்கும்.

அவர்கள் அங்கே சென்று கடையில் இருக்கும் முருகன் மாமாவிடம் ஐஸ் கிரீம் கேட்டனர். ஆனால் ஏற்க்கனவே மதுமதியும், ராஜனும் கடை உரிமையாளர் முருகனிடம் சொல்லி வைத்திருந்தனர். தங்கள் குழந்தைகள் வரும் போது நீங்கள் வேறு சுவை கொண்ட ஐஸ் கிரீம் கொடுங்கள் என்று.

அதன் படி முருகனும், செல்ல குட்டிங்களா நம்ம கடையில இப்போ ஸ்ட்ராபெர்ரி ஐஸ் கிரீம் தான் இருக்கு அதுவுமே ஒன்னு தான் இருக்கு. நீங்க சாப்பிட்டு பார்த்துட்டு நல்ல இருந்த பணம் கொடுங்க என்று சொன்னார். ஆனால் அவர்கள் இருவருக்கும் பலத்த யோசனை என்னடா இது இப்படி ஆகி விட்டதே என்று. ஆனாலும் ஐஸ்கிரீம் சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தில் மற்றும் நல்ல இருந்த தானே பணம் கொடுக்க வேண்டும். என்று நினைத்து கொண்டு பிந்துவும் சிந்துவும் வாங்கி சாப்பிட்டு பார்த்தனர்.

அவர்கள் இருவரும் அதன் சுவையில் மெய் மறந்து மனம் மகிழ்ந்து போயினார்கள். முருகன் மாமாவுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்ததை சொல்லி, அம்மா இனிமேல் நீங்க கொடுத்ததை சாப்பிடுகிறோம் என்று சொல்லி தாயில் மடியில் படுத்து கொண்டனர்.

நல்ல விஷயத்தை தங்கள் குழந்தைகளுக்கு புரிய வைத்ததற்கு அப்பா அம்மா இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

நெறி: புதிய பாதை - புதிய உறவு - புதிய சுவை - எப்போதுமே நமக்கு தேவை, இதை புரிந்து கொண்டால் வாழ்கை என்பதை பெரும் சுவையாக அமையும்.

- கணேசன் சண்முகவேல்

 

 

10.K2K00063

தலைப்பு தாராவின் ஒரு நாள் ஒரு கனவு

தாரா கண்விழித்து தன் கைபேசியில் நேரம் பார்த்தாள் காலை 4.30 மணியையும் அன்றைய தேதி 1.3. 2030 என்று காட்டியது. தன் மேல் கால் போட்டு படுத்து இருக்கும் ஆதர்ஷ், ஆதிரா இருவரும் மகன் வழி பேரன் பேத்தி மற்றொருபுறம் மணிஷ், அனுஷா மகள் வழி பேரன் பேத்திகளின் கைகால்களை அவர்களின் தூக்கம் கலைக்காமல் எடுத்து நகர்த்தி போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். தாரா தன் கைபேசியில் கவலை ஏதும் இல்லா குழுவிற்கு (Hakkuna matata) காலை வணக்கம் செய்தி அனுப்பினாள், அப்படியே அற்புதமான மனிதர்கள் வலைதளத்தில் (Amazing human being website) அவளுக்கான செயல்கள் என்னென்னவென்று பார்த்தாள். அன்றைய நிகழ்வுகள்(Daily events) பகுதியில் தன் பேரன் பேத்திகளுக்கு தன் பள்ளிப் பிள்ளைகளுக்கான நிகழ்வுகளை தேடி குறித்துக் கொண்டாள். நாம் பேசுவோம் இணைந்திருப்போம்(Let's talk, let's connect) குழுவை திறந்து அதில் இன்றைய பகுதியில் எதைப்பற்றி யார் பேசுகிறார் என்பதை குறித்துக்கொண்டு ,அற்புதமான மனிதர்கள் வானொலியை ஒலிக்க விட்டாள்(Amazing human being radio) .அதன்பின் தன் வகுப்பு பிள்ளைகளுக்கான பாடத்திட்டங்களை சரி பார்த்தாள் .அதற்குள் மணி ஐந்தாகி விட்டது உடனே மாடிக்கு சென்று நடைபயிற்சி மேற்கொண்டாள் ஆறு மணிக்கு புறாக்களுக்கு உணவு வைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள் .அதற்குள் மகன் ,மருமகளும், மகள் ,மாப்பிள்ளையும் அவரவர்களின் அறைகளிலிருந்து வெளியே வந்தனர். பிள்ளைகள் மட்டும் எப்போதும் தாராவின் அறையிலேயே இருப்பார்கள் .அவர்களும் எழுந்து வந்தனர் .அப்போது அங்கு உணவு சமைக்கும் அம்மாவும் வந்தார் உடனே தாரா தன் பேரக் குழந்தைகளிடம் என்னென்ன சிற்றுண்டி வேண்டுமென கேட்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவை கேட்டனர் .அவற்றை ஒட்டிய தகவல்களை அம்மாவிடம் கூறிவிட்டு தானும் குளித்து வந்து உதவுவதாகக் கூறி சென்றாள் தாரா .தன் அறைக்குச் சென்ற தாரா கைப்பேசியில் சியாம் ,அஜிஸ், பவித்ரன் , தீபா, பவானி ,பிரசன்னா ,கமலேஷ் ,பண்டலேறு சதீஷ், சச்சு,- உதவி மகிழ் திவாகர், குட்டிக்கதை பிரியா மற்றும் தன் மகள் பாடிய பாடல்களை கேட்டுக்கொண்டே தன் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு அவர்களின் பாடல்களுக்கான பாராட்டுகளை தெரிவித்துவிட்டு கீழே வந்தாள் .தன் பேரன் பேத்திகளுக்கான சிற்றுண்டிகளை தயாரிக்கலானாள். அவரவர்கள் தங்களின் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு சிற்றுண்டியை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின் அவரவர்கள் அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர் .பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனர் .தாராவும் மதியத்திற்கு வேண்டிய உணவு தயாரிக்கச் சொல்லி அம்மாவிடம் கூறிவிட்டு அவளும் அவள் பள்ளிக்கு சென்றாள் . அவள்பள்ளிஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. மாலை அனைவரும் ஒன்றாக அமர்ந்து நொறுக்குத் தீனியை தின்று தேனீர் பருகினர் அப்போது தாராவின் மகள் ராயல் என்ஃபீல்டு வண்டியில் நீண்ட தூர பயணம் சென்று வந்த கதையை கூறினாள். தாராவின் மகன் தன் சொந்த மகிழுந்து வண்டியில் தன் குடும்பத்துடன் பயணம் சென்று வந்த கதையைக் கூறினான் பேரக்குழந்தைகள் அப்பணத்தை அவர்கள் எவ்வாறு ரசித்தார்கள் ,மகிழ்ந்தார்கள் என்பதை தாராவிடம் கூறினார்கள் அப்போது தன்  குடும்பத்துடன் கப்பலில் உலகப் பயணம் மேற்கொண்டிருந்த பண்டலேறு சதீஷிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது அப்பயணத்தை பற்றி சதீஷிடம் பேசிவிட்டு அவ்வாரம் தன் வீட்டு மாடியில் நடக்கவிருக்கும் மொட்டைமாடி சந்திப்பிற்கு திட்டமிடும்போது தன் குழு உறுப்பினர்களான மீட் பார் தாய் அஜீஸ், ரேடியோ ஜாக்கி பிரசன்னா,கண் மருத்துவர் பவானி, கதை ஆசிரியர் பிரியா, உதவி மகிழ் திவாகர்,புதுமைக் கல்வி புகுத்திய ஷியாம், கவிஞர் கமலேஷ்,சேவகி தீபா, அற்புதமனிதர் சச்சு,சுப்ரதா,பத்மா, மஹாலக்ஷ்மி, கார்த்திகா, ராதிகா, பவித்ரன், ஆஷிஷ், ஹரீஸ், தன் உயிர் தோழியும், தன் குடும்ப நலன் விரும்பியுமான நந்தினியையும் மற்றும் பல நண்பர்களுடன் திட்டமிட்டுவிட்டு அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அவரவர் நலன்களை விசாரித்து வைத்தாள் தாரா. மாடியை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதை மகளுடன் சேர்ந்து திட்டமிட்டு விட்டு இரவு உணவிற்கான திட்டமிடல்களை அம்மாவிடம் கூறிவிட்டு அவளுக்கு

மறுநாள்பள்ளிக்கு தேவையானவற்றை திட்டமிடலானாள். தீபாவின் சேவைக்கு பணம் அனுப்புமாறு மகளிடம் நீனைவூட்டினாள். இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டுவிட்டு அவரவர்கள் தங்களின் அறைக்கு செல்ல தாராவும் தன் பேரக் குழந்தைகளுடன் பாட்டியாகி தன் அறைக்குச் சென்று கதை கூறிக்கொண்டே உறங்கலானாள்.

- ANURADHA

 

 

 

11.K2K-00064

"தோழிகள்"

மாதவியும், மாலாவும் மிக நெருங்கிய தோழிகள்! எதிரெதிர் வீடும் கூட.

மாதவி, மாலா வீட்டுக்கு வந்தாள். இருவரும் வெகு நேரம் அரட்டை அடித்துக் பேசிக்கொண்டிருந்தனர்.

பின் மாதவி மாலாவிடம், "சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு ஈவ்னிங் என் நாத்தனார் பொன்னுக்கு பர்த்டே பங்க்ஷன் இருக்கு, அந்த பங்ஷனுக்கு போகனும், நான் எந்த சாரி கட்டிட்டு போனா நல்லா இருக்கும்னு கொஞ்சம் சொல்லேன் ஒரே குழப்பமா இருக்கு" என்றாள்.

அதற்கு மாலா, "...இன்னைக்கு சண்டேல்ல, நானும் மறந்துட்டேன் இன்னைக்கு ஒரு மேரேஜ் பங்க்ஷன் இருக்கு நானும் போகணும், ம்...நீ லாஸ்ட் மன்த் வாங்கினில்ல ஒரு ரோஸ் கலர் சாரி அதையே கட்டிக்க சூப்பரா இருக்கும்", என்றாள் மாலா.

"ஆமால்ல, நானும் மறந்துட்டேன், அப்ப அந்த சேரியவே நான் கட்டிக்கிறேன, ஓகே மாலா அப்ப நான் கிளம்புறேன் டைம் ஆயிடுச்சு நைட் பார்க்கலாம்" என்று அவள் சொல்ல, அதற்கு மாலாவும் "சரி நானும் கிளம்புறேன் டைம் ஆச்சு" என்றாள்.

மாதவி சேலைகட்டி புறப்பட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டே..."என்னங்க என்னங்க உங்களத்தான் கொஞ்சம் வாங்களேன்" என்று கணவனை கூப்பிட்டாள்.

"என்ன மாதவி கிளம்பிட்ட போல, கேப் புக் பண்ணவா, போகலாமா" என்று கணவன் கேட்டான்

"அதெல்லாம் நான் புக் பண்ணிட்டேன், கதவை திறந்து கொஞ்சம் வெளியே பாருங்களேன், மாலா வீட்டு கதவு சாத்தியிருக்கா திறந்திருக்கான்னு, நான் வெளியில் வரும்போது அவ பொசுக்குன்னு வந்துட போறா, அவ முகத்துல முழிச்சுட்டு போனா ஒன்னும் விளங்க மாட்டேங்குது என்று மாதவி சொல்ல", அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு வெளியே பார்க்கச் சென்றான் அவன்.

மாலா வீட்டில், "என்ன மாலா கிளம்பிட்டியா போகலாமா" என்றான் மாலாவின் கணவன்.

அதற்கு மாலா தன் கணவனிடம், "அதுலாம் இருக்கட்டும் முதல்ல கதவைத் திறந்து எதிர்ல மாதவி வீட்டு கதவு திறந்திருக்கா சாத்தி இருக்கான்னு பாருங்க, அவள பார்த்திடாம கிளம்பணும், அவ முகத்துல முழிச்சுட்டு போனா போரகாரியம் ஒன்னும் உருப்படாது" என்று சொல்ல... இதை வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த மாதவியின் கணவன் திக்கித்து போய் நின்றான்.

*************

-மகிழை. சிவகார்த்தி

 

 

12.K2K- 00067

!!!!!!!!! நாமொன்று நினைக்க....!!!!!!!!!

______________.         போக்குவரத்துத் துறை அமைச்சர் எதிரே.தூரத்து உறவினர் கூட.பக்கத்து இருக்கையில் தாய் மாமன் தோழர் தியாகு.போக்குவரத்துத் துறை தொழிலாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்.எனவே கொஞ்சம் ஒடுங்கியே உட்கார்ந்து இருந்தான் சிவா.

          அமைச்சர் தான் ஆரம்பித்தார்." சொல்லுங்க தம்பி, நீங்க பெரிய சாதனை தான் படைச்சிருக் கீங்க, பத்து வருஷமா நானும் அமைச்சர், உங்க மாமாவும் தொழிற் சங்கத் தலைவர், எந்தப் பரிந்துரைக்கும் என்கிட்ட அவர் வந்ததே இல்லை, இப்ப வந்திருக்காருன்னா உங்க மேல அவர் எவ்வளவு பாசம் வைச்சிருக்காருண்ணு தெரியுது...

     அப்புறம் உங்களுக்கு கண்டக்டர் போஸ்டிங் SETC வேணுமா இல்ல TNGSTC வேணுமா? உங்க சாய்ஸ் என்ன?" என்றார்.

   உடனே யோசிக்காமல்TNGSTC என்றேன்.

         " சரிங்க தம்பி, அடுத்த வாரம் ஆணை வரும் வாங்க" என்றார் அமைச்சர். ஒருவருக்கு ஒருவர் வணக்கங் கள் முடிய வெளியே வந்தோம்.

         வெளியே வந்ததும் மாமா கேட்டார்," ஏன் மாப்ள, SETC கேப்பேன்னு பார்த்தேன், ஏன் அதைத் தேர்வு செய்யல?"

    " மாமா, கேட்டா சிரிக்கக் கூடாது, SETC வலது புறம் ஓட்டுநர் இருக்கை, இடது புறம் நடத்துநர் இருக்கை, எதிர்பாராத விபத்து சூழலில் ஓட்டுநர் தான் தப்பிக்க இடது பக்கம் தானே வண்டியை அணைப்பார், நடத்துநர் உயிருக்கு அதிக ஆபத்து. அதனால் தான் " என்றேன்.

       பெருங்குரலெடுத்து சிரித்த மாமா," மாப்ளே, உனக்கு முன் ஜாக்கிரதை ரொம்ப அதிகம் டா" என்று சொல்லிச் சிரித்தார். அமைச்சர் சொன்னது போலவே ஒரு வாரத்தில் ஆணை வந்தது, பணியில் சேர்ந்து ஓடி கொண்டு இருந்தான் சிவா, ஒரு நாள் சிவாவைச் சந்தித்த நண்பன் ஒருவன்," என்னடா அமைச்சர், தொழிற்சங்கத் தலைவர் என்று இரண்டு பேரைப் பையில் வைத்திருக்கும நீ SETC வேலை வாங்கி இருக்கலாமே. மன்னையில் பயணிகள் ஏற்றினால் சென்னை, இடையில் வேலையே இல்ல, சும்மா சல்லுண்ணு போய் கிட்டே இருக்கலாம் இல்ல.

   இது என்ன லோக்கல் கட்ட வண்டி, ஸ்டாப்புக்கு ஸ்டாப் நிறுத்தி ஏத்தி இறக்கி ...பெரும் சல்லையில்லே" என்றான். மாமாவிடம் சொன்ன காரணத்தை அவனிடமும் சொன்னான் சிவா.

             அதைக் கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்த அவன்," ஏண்டா, லோக்கல் வண்டில நடத்துநர் இருக்கை கடசில இருக்கே, பின்னாடி வருற டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டா என்னடா பண்றது?" என்று கேட்டுக் சிரித்தான்.

       அன்றிலிருந்து பின்னால் இருக்கும் நடத்துநர் இருக்கையிலும      உட்காருவதில்லை சிவா.

               பல ஆண்டுகளுக்குப் பின் சிவாவின் நண்பன் மூர்த்தி சென்னையிலிருந்து ஊருக்குப் போக சிவாவின் பேருந்தில் வந்து ஏறினான். நடுப் பகுதியில் ஒர் இரட்டையர் இருக்கையில் நண்பனை உட்கார்த்தி வைத்த சிவா பக்கத்து இருக்கையில் பையை வைத்து இருக்கையை ரிசர்வ் செய்யச் சொன்னான்.

     " ரொம்ப நாளாச்சு நாம சந்திசசு...இருடா சீட்டெல்லாம் போட்டுட்டு கணக்கு முடிச்சுட்டு வரேன்" என்று போனான் சிவா.

     வேலை முடித்து வந்த சிவா காற்று வேண்டி ஜன்னல் பக்க சீட்டில் அமர்ந்தான்.

      நண்பர்கள்சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு வந்த போது ஒரு நான்கு முனைச் சந்திப்பை வண்டி கடக்கும் சமயத்தில தடால் என்று ஒரு பெருத்த மோதல் சத்தம். வண்டி குலுங்கி நின்றது.இவர்களது சலைக்குச் செங்குத்தான சாலையில் படு வேகமாக வந்த மணல் லாரி ஒன்று  நடத துனர் சிவா அமர்ந்திரntha ஜன்னல் சீட்டுக்கு நேரே மோதி நின்றிருந்தது. பேருந்தில் நல்ல வேலை யாருக்கும் அடியில்லை.

         கண்டக்டர் சிவா அவன் நண்பன் மீது சாய்ந்த படி இருந்தான், அவன் தலை தொங்கி இருந்தது.

-அன்பழகன்.

 

 

13.K2K 00068

ஒரு ஊரில் தேவி என்