தேவதை
கொரோனா கதைகள்
தலைப்பு: 1: தேவதை
1. K2K-00008
கல்யாணமெல்லாம் இப்போ எதுக்கு? நான் வாழக்கையில் செட்டிலாகி, அதுக்கப்புறம் வேணா கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்” தங்கராசுவின் பதிலால் அவன் தாய் செங்கமல்லிக்கு வருத்தம்தான்.
அவனுக்கோ வயது இருபத்தேழை நெருங்கப்போகிறது. இன்னமும் வாழ்க்கையில் செட்டிலாகிய பிறகுதான்கல்யாணம் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறான். அவன் தாய்க்கு அதே கவலை. அவன் தந்தை இவ்வுலகை விட்டு மறைந்து மூன்றாண்டுகள் முடியப் போகிறது. அன்றிலிருந்து இன்றுவரைசெங்கமல்லியிடமிருந்து வரும் வார்த்தைகள் இதுதான் “நீ எப்போ கல்யாணம் கட்டிக்கப்போற”.
தங்கராசுவுக்கோ தன் தாய்ப்பட்ட துன்பங்கள், தன் மனைவிக்கு நேரக்கூடாது என்று சிறுவயதிலிருந்தே மனதில் பதிந்த ஒன்று.
செங்கமல்லி கல்யாணமாகி வரும்போது கணவருக்கு தக்க
வேலையில்லை. வருமானமின்றி தவித்தது முதல், சீர்வரிசை மற்றும் புகுந்த வீட்டிற்கு வரும்போது போட்டுக்கொண்டு வந்த எந்த நகையும் இப்போது கைவசமில்லை. இத்தனைக்கும் அவளின் கணவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமுமில்லை. தங்கராசுவை படிக்க வைப்பதற்காகவே அத்தனை நகைகளும் இந்தி படிக்கச்சென்று அங்கேயே தற்கொலையும் செய்து கொண்டது.
அதனாலேயே தங்கராசுக்கு தமக்கு வரப்போகும் மனைவிக்கு அத்தகைய துன்பம் தரக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கியே இருந்தது.
வாழ்க்கையில் செட்டிலாகுவதற்கும், கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு “கல்யாணம் என்று ஒன்று நடந்துவிட்டால், வீட்டிற்கு வரும் மனைவி, பிறகு கிடைக்கப்பெறும் குழந்தை இவற்றுக்கு வசதியான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பது கணவனின் கடமை. அதனால் வாழக்கையில் செட்டிலாவதற்கும், கல்யாணத்திற்கும் சம்பந்தம் உள்ளது” என்று பதிலுரைப்பான்.
தங்கராசுவின் பதிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் இதில் சற்று யோசித்துப் பார்த்தோமேயானால், தங்கராசு படித்து வளர்ந்தது வசதியான வாழ்க்கையை பெற்ற தாய் தந்தையரிடமிருந்து இல்லையென்பதே. ஆக, ஒரு குடும்பம் நல்ல நிலை வருவதற்கு, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்பது மட்டுமல்ல, செங்கமல்லியை போன்ற ஒரு குடும்ப பெண்ணும் வேண்டுமென்பதுதான்.
தன் வறுமையைக் காட்டிலும் பிள்ளை மீதுள்ள பிரியமும் பாசமும், வைராக்கியமுமே தங்கராசு படித்து வளர்ந்ததற்கு காரணம். அப்பேர்ப்பட்ட செங்கமல்லிப் போன்ற ஒரு தாய், மனைவியாய் கிடைத்தால், யாவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம்.
இங்கே செங்கமல்லி போன்ற ஒவ்வொரு தாயும் மனைவியுமே தேவதைகள்தான்.
*நெறி: தாய் மற்றும் மனைவியே, ஒரு ஆணின் வெற்றிக்கு பின்பலமாய் அமைவர். அவர்களே ஆண்களின்தேவதைகளும் ஆவர்.*
அன்பரசு மகாதேவன்
(அ)
எழுத்தாளர் அகத்தியன்
பொழிச்சலூர், சென்னை
2. K2K00038
தேவதை!
“அம்மா ….! காலையில என்ன டிபன்?! “
“ இட்லி…டா”
வியர்க்க விறுவிறுக்க சூடாக இட்லியும் தக்காளிச் சட்னியும் கொண்டு வந்து வைக்கிறாள் சிந்து.
“அம்மா எனக்கும் குடுத்துடுங்க ஆன்லைன் கிளாஸ் இருக்கு”
சின்னவனும் கேட்க இதோ அடுத்து உனக்குத்தான் என்று அடுப்படிக்கு விரைகிறாள்.
இப்படி அரக்க பரக்க காலைப்பந்தி முடிகிறது.
பிள்ளைகளும் கணவனும் ஆன்லைன் வகுப்பிலும் தொலைபேசியிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கியிருக்க குளித்து துவைத்து பத்தரை மணிக்குஹாட்பாக்சில் இருந்த இட்லியைச் சாப்பிட உட்காருகிறாள் சிந்து.
சாப்பிட்டதும் சற்றே கண்ணசர போனவளை “ எனக்கு ஒரு காப்பி…” என்ற கணவனின் குரல் தடுக்கிறது.
“ அப்படியே அந்த வெள்ளரிப் பழத்தை ஜூஸ் போட்டா பிள்ளைங்க குடிப்பாங்க”
இந்த வேலைகள் முடிந்து சமையலை ஆரம்பித்து வெண்டைக்காய் சாம்பாரும் உருளைக்கிழங்கு கறியும் பருப்பு மசியலும் செய்து முடிக்க மணி ஒன்றரை ஆகிறது.
மதிய நேர பந்தி முடிச்சு பாத்திரங்களை ஒழித்து சிங்கில் போட்டு விட்டு முகநூலை நோட்டம் விடுகிறாள்.
“ அம்மா என் கூட கேரம் விளையாட வாங்களேன்….” மகள் மாலினி அழைக்க…அவளுடன் கேரம் விளையாடுகிறாள் .
விளையாடி முடிந்ததும் மணி ஐந்து.காபிக்கான நேரம்.பாலைக் காய்ச்சி காபி கலந்து எடுத்து வரும் போது,” நேத்து வாங்கின பாப்கார்னை போடுங்கம்மா சாப்பிடலாம்”
அதையும் முடித்து மகளுக்கு தலைவாரி தானும் வாரிக் கொண்டு பிள்ளைகளுடன் மொட்டை மாடியில் அரைமணிநேரம் வாக்கிங் செல்கிறாள்.இது இவர்களின் கொரோனா கால பழக்கம்.அந்த அரை மணி நேரம் ஏதாவது பேசிக் கொண்டு நடப்பார்கள்.
கீழிறங்கி வந்ததும் சிந்து சாமி கும்பிட சென்று விடுவாள்.ஒரு மணிநேரம் பூஜை.சத்தான உணவு சுகாதாரம் இவைகளுடன் நம்பிக்கையாக ஆண்டவனை வேண்டுவதும் நம்மைப் பாதுகாக்கும் என்று பிள்ளைகளுக்குச் சொல்வாள்.தீபாராதனை செய்யும் போது பிள்ளைகளையும் அழைத்து சாமி கும்பிட வைப்பாள்.
இரவு சாப்பாடு தூக்கம் .மறுபடி காலையில் வேலை இப்படியே செல்கிறது கொரோனா காலம்.
ஒரு நாள் வியர்க்க விறுவிறுக்க தோசை சுட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் கார்த்தி ”அம்மா …நாங்கள் எல்லாம் வீட்ல இருக்கிறதால உங்களுக்கு வேலை அதிகமாயிருச்சுல்ல?!”
சிரித்துக் கொண்டே இன்னொரு தோசை எடுத்துக்கோ என்கிறாள்.” என் செல்ல அம்மா என முத்தமிட்டுச் செல்கிறான் கார்த்தி.
“அம்மா வாரமலருக்கு எழுதலையா?!”
“நேரமில்லைடா….நைட் எழுத முடியுமான்னு பார்க்கணும்”
சின்னவன் மகேஷிடம் பேசிக் கொண்டே அரிசியை குக்கரில் வைத்து மூடுகிறாள்.
“ இங்க வாங்க குக்கர் விசில் வரட்டும் …நான் முடியை கட் பண்ணி விடறேன்…காடா வளர்ந்து கிடக்கு”
“ உங்களுக்குத் தெரியுமா அம்மா?!”
“ முயற்சி பண்றேன் பின்ன எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருப்பீங்க?!”
மடமடவென முடியை வெட்டி அழகாக படிய வாரி விடுகிறாள்.
“ மாலினி இன்னைக்கு தலைக்குத் குளிக்கணும்.எல்லாம் எடுத்து வை..நான் வந்து தேய்ச்சு விடறேன்”
மாலை நேர உலாவலின் போது மகேஷ்” அம்மா …கோவிலுக்கு போவீங்க.இப்ப அது கூட முடியலை இல்லை?!பாவம்.”
“ வீடே கோவில்…..”
*அப்புறம் ஏன் போனீங்க…”மாலினி கேலி செய்ய,”அப்ப நீங்க எல்லாம் பிசியா வேற வேற இடத்துல இருந்தீங்க எனக்கான மனதிருப்திக்கு கதை எழுதினேன் கோவிலுக்குப் போனேன்.இப்ப வீட்லேயே வேலை அதிகமா இருக்கிறப்ப அதுவும் கோவிலெல்லாம் மூடியிருக்கிறப்ப எப்படி போக முடியும் அதான் போகலை”
“ ஆமா… ஆனால் எங்க தேவதை வீட்லேயே இருக்கே?! அது தான் எங்க அம்மா” என்று மூத்தவன் வந்து கட்டிக்கொள்ள மற்ற பிள்ளைகளும் கட்டிக் கொள்ள,” டே...அவன் என் பொண்டாட்டி..டா.எனக்கும் கொஞ்சம் இடம் குடுங்க” ன்னு சிந்துவின் கணவனும் வந்துகட்டிக் கொள்ள பூரித்துப் போகிறாள் சிந்து.
காலையில் எழுந்ததில் இருந்து சமையல் துவைப்பது கூட்டுவது பாத்ரூம் க்ளீனிங்குன்னு விடாத வேலையில் களைத்திருந்தாலும் பிள்ளைகளும் கணவனும் காட்டிய அன்பில் வலி மறந்து சிரிக்கிறாள்.
நாளாக ஆக அந்த தேவதையின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட பிள்ளைகள் அம்மாவுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
நீதி;(படிப்பினை)
அம்மாவைப் புரிந்து கொண்டால் தேவதையாகிவீட்டை சொர்க்கமாக மாற்றுவாள்.
பூமாதேவி
3. K2K-00042
ஆ(ம்)ண் தேவதை
நண்பர்களுக்கு நல் வணக்கம்...
இந்த கொரோனாவின் விடுமுறையில் நான் நிறைய சிந்திக்க ஆரம்பித்தேன்... அதற்க்கு நல் வாய்ப்பாக இந்த கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது... இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த நல் உள்ளங்களுக்கு மனம் உவந்த நன்றி...
நான் இங்கே கதை எழுத முயற்சி செய்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறன்.இது என்னுடைய கன்னி ... ஆம் என் கன்னியின் கதை... மற்றும் இரண்டு வித முடிவுகளில் கொடுத்து இருக்கிறேன்.
கதையின் நாயகனாக நமது கார்த்திக் வருகிறார்.அவர் சின்ன வயதிலேயே மிகவும் அழகாகவும் பெயருக்கு ஏற்ப நல்ல கார்த்திகை தீபம் போல் ஒளிரும் முகமாகவும் இருப்பார்.கதையின் நாயகன் கார்த்திக் தான் பள்ளியில் படிக்கும் தருணத்தில் ஒரு தேவதையை போல இருந்த கதையின் நாயகி முதல் தேவதையை கண்டான்.
அப்போது அவன் ஒன்பதாம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தான். அவனுக்கு அது காதல் வரும் வயதில்லை என்றாலும் அந்த பெண் ப்ரியதர்ஷினியை காணும் போது ஒரு இனம் புரியாத மட்டற்ற மகிழ்ச்சி. இருவரும் ஒரே வகுப்பில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தார்கள்.இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நேரம் வரும் போது ப்ரியதர்ஷினியின் தந்தைக்கு வேலை மாற்றம் வந்தது அதன் காரணமாக வேறு ஊர்க்கு சென்று விட்டார்கள். அதன் பிறகு அவர்கள் தொடர்பு கொள்ள வாய்ப்பு இருக்கவில்லை அதுவும் இது நடந்தது 90 களின் காலம். பின் கார்த்திக் கொஞ்சம் கொஞ்சமாக அவளை மறந்தே போய் விட்டான்.
அவனுடைய கல்லூரி காலத்தில் இன்னொரு தேவதையை (கண்மணி) சந்தித்தான் , ஆனால் அப்பொழுதும் தன் காதலை வெளிப்படுத்தாதல் அந்த தேவதையும் அவன் தவறவிட்டான்.
முடிவு ஓன்று : பின் 2010 ல் அவனுக்கு திருமணம் நடந்தது அவன் வாழ்வில் கோமதி என்ற உண்மையான அவன் பக்கத்திலே எப்போதும் இருக்க கூடிய தேவதை அவன் வாழ்வில் கிடைத்தாள் . இந்த தேவதை அவனை தன் முன்னாள் தேவதைகளை விட நூறு மடங்கு அதிக அன்போடும் பாசத்தோடும் பார்த்து கொண்டாள். அவன் அப்போது புரிந்து கொண்டான் வாழ்க்கையில் நமக்கு எதாவது ஒன்று கிடைப்பதற்கும் கிடைக்காமல் போவதற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது என்பதை.
முடிவு இரண்டு : தன் வாழ்க்கையிலும் கல்யாணம் என்ற நற்செய்தி வந்தது , அவன் நினைத்தபடியே நல்ல தேவதையாக அன்பரசி அமைந்தாள். பெயருக்கு ஏற்றபடி நல்ல அன்பாகத்தான் போய் கொண்டிருந்தது, பத்து வருடங்கள் கடந்தோடிய பிறகு குறை நிறைவாக நிறை குறைவாக மாறியது. அவர்கள் வாழ்க்கையின் வசந்தத்தில் சூறாவளி சுருட்டி வீசியது.இப்படி இருக்கும் போது சிறிது காலம் அவர்கள் பிரிவதென்று முடிவெடுத்தார்கள். இது நடந்த காலம் மார்ச் முதல் வாரம் 2020. அப்போது இருவரும் தனித்தனியே இருக்க தொடங்கினர். இதுவரை துள்ளி திரிந்து கொண்டிருந்த கார்த்திக் இந்த தனிமையில் தன்னிடம் நிறைய பேச தொடங்கினான் , கேள்வி கேட்க தொடங்கினான். ஆம் நான் இதுவரை நானே தான் தேவதைகளை தேடி கொண்டு இருந்தேன். பின் அவர்கள் கிடைத்தும் நான் அவர்களை நழுவ விட்டு விட்டேன். அப்படி இருக்கும் போது இது அவர்களின் குற்றமா? இல்லை என்னுடைய குற்றமா ? என கேட்க தொடங்கினான். பின் அவன் இப்படி முடிவு எடுத்தான். இனி தன் வாழ்க்கையில் தேவதையை தேட போவது இல்லை, ஆ(ம்)ண் தேவதையாக மாற தானே முடிவு எடுத்து தான் மனைவியுடன் கலந்து பேசி நல்ல முறையில் வாழ தொடங்கினான் இந்த கொரோனாவின் முடிவுகாலமான மே 2020 மூன்றாம் வாரத்தில்.
நெறி : தேவதையை நீ தேடாதே ஏனென்றால் அது கிடைத்தாலும் பின் ப(ம)றந்தும் போகலாம் , ஆகையால் நீயே தேவதையாக மாறி விடு...
பின்குறிப்பு : (கதை இரண்டு பக்கம் மட்டும் என்பதால் வேறு கதாபாத்திரங்கள் இங்கே குறிப்பிடப்படவில்லை)
கணேசன் சண்முகவேல்
அஹமதாபாத் ல் இருந்து...
4. K2K-00004
தேவதை:
குடந்தை அடுத்த ஒரு சிறிய கிராமம், சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கும் ஒரு அழகான பகுதி அது. வயல்வெளிகளும், மரங்களும், சோலைகளும், நீர் நிலைகள் சூழ்ந்த ஒரு அழகிய கிராமம். ஒரு காலை நேரம் உழவர்கள் வயலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய ஓட்டு வீட்டின் திண்ணையில் ஆறுமுகம் அமர்ந்திருந்தார்.
அம்மா கயலு நேரம் ஆகுது நீ இன்னும் வேலைக்கு போகலையா தாயி என்று கேட்டார். இதோ கிளம்பிட்டேன் அப்பா என்று சொல்லி கொண்டே மதிய சாப்பாட்டிற்கான வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல ஆயுத்தமாகிக் கொண்டிருந்தால். மதியம் சாப்பாடு செஞ்சி வச்சிருக்கேன் கார்த்திய பள்ளிக்கு போகும் போது எடுத்திட்டு போக சொல்லுங்க என்று கூறிவிட்டு அவசரமாக சென்றாள் கயல்.
அருகில் இருக்கும் குடந்தை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்ற திருமண வயதை அடைந்தவள் தான் கயல்விழி. அப்பா ஆறுமுகம் அருகில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் போது ஏற்பட்ட விபத்தில் கால்களை இழந்தவர். அம்மா சிறுவயதிலேயே புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். கார்த்தி என்று ஒரு இளைய சகோதரன் இப்போது பள்ளி பயின்று வருகின்றான். சிறு வயதிலே குடும்பத்தின் மொத்த பொருப்பும் தன் தலையில் சுமந்து வந்தாள் கயல் விழி.
அது ஊரடங்கு காலம் என்பதால் 03கி.மி இருக்கும் அவள் பணிபுரியும் மருத்துவமனைக்கு மிதிவண்டியிலே சென்றாள். அங்கு இருக்கும் உடன் வேலை செய்கின்றவர்களை நலம் விசாரித்துவிட்டு தனது பணியை தொடர்ந்தால். கொராணா காரணத்தால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதில் ஒருவர் தான் பாலாம்பாள் என்ற கணவனை இழந்து 70 வயதை கடந்த முதியவர். உறவினர்கள் என்று யாரும் இல்லாத அந்த மூதாட்டி மனதளவில் மிகவும் தளர்ந்து எதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
கயல்விழியை பார்த்ததும் உற்சாகம் பொங்க நினைவு வந்த பாலாம்பாள் முகம் மலர்ந்தாள். கயலிடம் பேசிக்கொண்டே அவர் கேட்டார் நீ என்மா இன்னும் கல்யாணம் பண்ணல என்று. அதற்கு கயல் தனது குடும்ப நிலையை விவரித்தால். பின்பு பாலாம்பாள் இந்த கொரானா காலத்திலும் உன்ன பத்தி நினைக்காம இங்க வந்து எங்கள பாத்துகிட்டு இவ்வளவு சிரமப்படுரியே, நீ என் மா வேற நல்ல சம்பாத்தியம் உள்ள வேலைக்கு போக கூடாதா என்று. அதற்கு அவள் பாலாம்பாளுக்கு உணவு ஊட்டியபடி பதில் சொன்னால், இந்த வேலை வெறும் காசுக்காக மட்டும் செய்யல மா, என் அம்மா அப்பாவ பாத்துகிற போது கிடைகிற மனநிம்மதி இங்க கிடைக்குது, என் கவலையெல்லாம் மறந்து போகுது என்று கூறி புன்னகை பூத்தால். உன் வாழ்கையில் ஒரு குறையும் இல்லாம நீ நல்லா இருக்கனும் என்று கூறி கயலை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார் பாலாம்பாள். பின்பு மதிய உணவை அனைவருக்கும் வழங்கிவிட்டு தானும் மற்றவர்களுடன் பகிர்ந்து உணவு உண்டால், மாலை வந்ததும் பணிமுடிந்து மிதிவண்டி ஏறி விடு சென்றாள் வெண்ணிற ஆடை தரித்த "தேவதையாய்" மின்னலென....
"தேவதைகள் என்பது தேவனால் படைக்கப்பட்ட தேவலோக கன்னிகைகள் மட்டும் அல்ல. பூலோகத்தில் தம் குடும்ப இடர்களையும் மறந்து முகம் தெரியாத அடுத்தவர் துயர்களை களையும் உன்னத பணிபுரியும் அனைத்து செவிலியர்களும் தான்...
செவிலியர்களுக்கு சமர்ப்பணம்
இவண்
கடைக்கோடி தமிழன்
மணிகண்டன் கணேசன்
கும்பகோணம் (குடந்தை)
5. K2K-00002
ஓரு நாள் மாலை பொழுதில் நண்பர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து வெளியே போனேன் சிறிது நேரத்திலேயே கருமேகங்கள் சூழ்ந்து தென்றல் காற்று வீச என் உடம்பு சிலிர்க்க அதே நேரத்தில் எனக்கு எதிரே என் தேவதை தென்பட்டால் அந்த அழகான ரம்மியமான காட்சியில் அழகாக தெரிந்தால் எனக்குள் ஓரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தது..ஆஹா! கனவா நிஜமா என்று யோசித்து நிற்கையில் அவள் என்னிடம் வந்து "இந்த பக்கம் குழந்தை வந்தது பார்த்தீர்களா?" என்று கேட்டால் நான் இல்லை..யாரோட குழந்தையை தேடுகிறீர்கள் உதவட்டுமா என்று கேட்க 'சரி' என்று கூறினால் மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்து அவளை பற்றி ஆழமாக தெரிந்து கொண்டேன். என் வீட்டிலும் என் தேவதையை பிடித்து போனதால் எங்கள் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தி முடித்துவிட்டனர். எங்களின் திருமண வாழ்க்கை அழகாக கடந்தது ஆனால் ஒரு கட்டத்தில் 7 ஆண்டுகள் கடந்தும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் எந்த ஒரு நல்ல விசேஷத்துக்கும் என் தேவதையை அவதூறாக பேசி ஒதுக்கியே வைத்து விட்டனர் என்னுடைய சொந்த பந்தங்கள் என் மனதே இவ்வுளவு வலி என்றால் என் தேவதையின் வலி பெரியதாக இருக்கும் என கருதி அவளை ஒரு ஆசிரமம் அழைத்து சென்று அங்கு ஒரு குழந்தையை தத்து எடுக்குறது பற்றி பேசலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போது எனது கைபேசி ஒலித்தது என் நண்பன் தான் 'என்ன மச்சான்' என்று கேட்டேன். அவன் மிகவும் பதற்றமாக 'மச்சான் நீயும் உன் மனைவியும் எங்க ஊர்க்கு வாங்கடா' என்றான். 'வந்துரன்டா நீ பதற்றம் ஆகாமல் பேசு என்ன பிரச்சனை உனக்கு சொல்லு' என்று கேட்டேன். 'பேச நேரம் இல்லடா இங்க உதவி பண்ண யாரும் இல்லடா எனக்கு உங்களை விட்டா வேற யாரும் தெரியாது'. டேய் மச்சான் கவலைப்படாத நாங்க வந்துறோம் சரியா என்று சொல்லி துண்டித்துவிட்டேன். என் தேவதையிடம் என் நண்பன் சொன்ன விஷயத்தை சொல்லி அழைத்து கொண்டு போனேன். நாங்கள் போகும் நேரம் மருத்துவர் என் நண்பனிடம் குழந்தையை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது உங்கள் மனைவியை காப்பாற்ற முயற்சி பண்ணோம் அவர்கள் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறிவிட்டார். என் நண்பன் கதறுறான் 'எனக்குனு நீ மட்டும் தான் இருந்த இப்போ நீயும் என்ன விட்டு போய்ட்டியே நான் என்னடி பண்ணுவேன்' எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே புரியவில்லை. என் தேவதை என் நண்பனிடம் அண்ணா அழாதீங்கனா உங்கள் மனைவி மறுபிறவி எடுத்து குழந்தையின் உருவில் உயிர் பெற்றுருக்கிறார்கள் போய் பாருங்கள் என்று சொன்னால். அவன் குழந்தையை எடுத்துக்கிட்டு வந்து எங்களிடம் கொடுத்து இந்த குழந்தை இனிமேல் உங்களோட குழந்தை என்று சொன்னான். மச்சான் வேணாம் டா உனக்கு இப்போ இந்த குட்டி தேவதை தான் ஆதரவு இதையும் எங்க கிட்ட கொடுத்துவிட்டு எங்க போக போற என்றேன். என் நண்பன் 'எங்கேயோ போறேன்டா இனிமே எனக்கு என்ன வாழ்க்கை இருக்கு அவளும் மகராசியா போய்ட்டா நான் இருந்து என்ன பயன் இனிமே' நான் அப்படி சொல்லாத மச்சான் நம்ப இனிமே ஒரே குடும்பமா (குட்டி தேவதை)யோட மகிழ்ச்சியாக வாழ்வோம்..!
கருத்து: ஆயிரம் உறவுகள் இருப்பினும் ஒருவரையொருவர் சரியாக புரிந்துக் கொண்டு செயல் பட்டால் எந்த உறவும் அழகிய சொர்க்கமே..!
லக்ஷ்மி பிரியா
6. K2K00078
தேவதை
#################
அன்று காலை எழுந்தது முதல் அவளது மனதில் ஏதோ மின்னல் போல வெட்டியது சில நினைவுகள். அதனை கவனத்தில் கொள்ளாது தனது வேலைகளை செய்யத் தொடங்கினாள் காயத்திரி. பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. தனது வீட்டைவிட்டு வெளியேறி வெளியூருக்கு சென்று அலுவலகம் ஒன்றில் பணிபுரிய ஆரம்பித்து. இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான இவள். பிள்ளைகளின் எதிர்க்காலத்திற்காக காற்றாடிப்போல் உழைக்கின்றாள்.
மூத்த மகள் அணுவிற்கு வயது பதினான்கினை எட்டிவிட்டது. தாயை ஒத்த அழகினையும் மிகவும் சாமர்த்தியமாகவும் செயற்ப்பட கூடியவள். இளையவள் மீனுஷா செல்லமாக இவளை மீனுகுட்டி என்று அழைப்பார்கள் மிகவும் சுட்டிப்பெண்ணான இவளுக்கு வயதோ ஏழுதான் ஆகிறது ஆனால் அவளுடைய கேள்விகளுக்கான பதிலினை கூற முடியாது காயத்திரி தடுமாறும் சந்ர்ப்பங்களும் உண்டு.
காயத்திரி குழந்தைகளுக்காவே வாழ்நாளை அர்ப்பணிக்கின்றவள். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளையும் பிள்ளைகளுக்கு உணவு தாயரித்து அதனை பொதியாக்குவது முதல் சகல வேலைகளையும் தினந்தோறும் சரிவர செய்பவள். காலை எட்டு மணிக்கு அலுவலகத்திற்கு செல்ல வீட்டிலிருந்து புறப்படும் காயத்திரி இரவு ஏழு மணிக்கு வீடு திரும்புவாள்.
ஒருநாள் அலுவலக பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய காயத்திரி உடல் சோர்வில் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தவாறு தன்னுடைய தொலைப்பேசியை எடுத்தாள்.
அம்மா ..... அம்மா......
என்று மீனுக்குட்டி ஓடுவந்து கட்டிப்பிடித்து மடியில் அமர்ந்தாள். அம்மா எனக்கு ஒரு கதை கூறுங்களே! நாளை ஆசிரியரிடம் கூறவேண்டும் என்று புன்சிரிப்புடன் அன்பாக கேட்டாள். உடனே தனது உடல் களைப்பினை பொருட்படுத்தாமல் கதைக் கூற தொடங்கிவிட்டாள் காயத்திரி.
ஒரு ஊரிலே மித்ரா என்ற இளவரசி வசித்து வந்தாள். ஆனால் அவளை எல்லோரும் தேவதை என்றே அழைப்பார்கள் காரணம் தேவதை போன்ற கொள்ளை அழகு கொண்டவள் அவ்விளவரசி.....
அவ்வூரிலே.......
கல்வியிலும் நாட்டியத்திலும் அழகிலும் சிறந்து விளங்கினாள். மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் பன்மடங்கு சிறந்தவள்.
அதே ஊரை சேர்ந்த காமன் என்பவன் தேவதை போன்ற மித்ரா மீது காதல் கொண்டான். அவனது அழகினையும் வசிகரமான தோற்றத்தினையும் கண்ட தேவதையோ காதல் வலையில் சிக்கிக்கொண்டாள். தேவதையும் காமனும் தனது சொந்த ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டனர். நீண்டகாலம் குடும்ப வாழ்வில் குதூகலமாக வாழ்ந்து வந்தனர். ஒருநாள் காமனை, தேவதையாகிய மித்ராவின் மாமா தந்திரமாக பேசி மலையொன்றிற்கு வரவழைத்து கொலை செய்துவிட்டான்.
இதனையறிந்த தேவதை தானும் இவ்வுலகை விட்டு நீங்க வேண்டும் என்று முடிவுச்செய்து உயிரை மாய்த்துக்கொள்ள அம்மலையை அடைந்தாள். நிறைமாத கர்பிணியானவள் தன் கணவனை இழந்த சோகத்தில் "வீட்டில் அப்பா வருவார். அள்ளி அணைத்து கொஞ்சித் தூக்கி விளையாடுவார்" என ஆசையோடு வீட்டில் காத்திருக்கும் மகளின் அன்பினை மறந்துப்போனாள். தற்கொலை செய்துக்கொள்ள மலையில் ஏறியப்போது கர்ப்பத்தில் இருந்த சிசு அவளை எட்டி உதைத்தது.
என்று கூறியவாறு காயத்திரியின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.
மீனுக்குட்டி அம்மா ஏன்? என்று தானும் அழுதுக்கொண்டு கேட்டாள்.
உடனே இல்லையம்மா !!
கண்களில் ஏதோ விழுந்தது விட்டன என்று கூறி பொய்யான புன்முறுவல் ஒன்றை செய்தாள்.
மீனுவின் முகம் மலர்ந்தது.....
இவளோ விடவில்லை கதையை கூறுங்கள் அம்மா என்று கேட்க, மீண்டும் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
அப்போதுதான் மகளே!
தேவதைக்கு நினைவு வந்தது. தன்னிரு குழந்தைகளின் எதிர்காலம் தானும் இல்லையென்றால் என்னவாகும் என்று தன்னுள்ளே எண்ணிக்கொண்டு தனது தற்கொலை முயற்சியை கைவிட்டு மலையை விட்டு கீழே இறங்கினாள்.
ஓரிரு நாட்களில் குட்டி தேவதையும் இம்மண்ணை தொட்டுவிட்டாள். அன்றிலிருந்து அந்த மித்ரா இளவரசி தனது குழந்தைகளுக்கென வாழ்ந்தால் என கூறி கதையை முடித்தாள்.
கையில் இருந்த தொலைப்பேசியில் மித்ராவின் இளவயது புகைப்படம் இருந்தது. அதனை பார்த்த மீனு அம்மா தேவதை இந்த பெண்னை போல இருப்பாளா? என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
இல்லையம்மா.........
தேவதைகள் நீண்டநாள் கனவுகளுடன் வாழ்ந்தால் மட்டும் போதாது. அறிவு, பெற்றோரை மதிக்கும் மனப்பாங்கு முதலான பண்புகள் வேண்டும் என்று கூறி தன் சோகம் மறைத்துக்கொண்டு சிரித்தாள்.
பெண் தேவதைகள் என்றுமே தனக்கென ஒரு குறிகோல் கொண்டு வாழ வேண்டும். இல்லையென்றால் இவ்வாறுதான் உறவுகளின் நிழலுமற்று, தனித்து வாழ இறைவன் வழியமைத்து கொடுப்பான்.
பரமசிவம் இந்துஜா
நுவரெலியா இலங்கை
Indhuja
7. k2k-00011
அதிகாலை குளிர் காற்று தேகம் வருடி சிலிர்க்க வைத்தது. எங்கோ சேவல் கூவியது. சரக் சரக் என வாசல் கூட்டும் சத்தம் கேட்டது. தலைக்கு மேல் வேலையை வைத்துக் கொண்டு எப்படி தூங்கினேன்.?பக்கத்தில் படுத்திருந்த அம்மா எங்கே? அம்மா அம்மா எங்கே இருக்கீங்க?
வேகமாக வெளியே வந்து பார்த்தேன். அம்மா அந்த இருளில் தன் புது வீட்டை அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது. தோளின் மீது கையை வைத்து அழுத்தினேன். என் கை அழுத்தத்தில் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
அன்று தம்பியின் புதுமனை புகுவிழா. பெரிய அக்கா காலையில் தான் வந்தாள். வந்தாலும் ஆலோசனை மட்டும் கூறுவாள். சிறிய அக்காவிற்கு கணவரிடம் இரவு9 மணிக்கு அனுமதி கிடைத்து
வந்து கொண்டிருக்கிறாள். நான் கடைசியாக பிறந்தவள். புகுந்த இடம் போர்க்களம்.
தம்பியும், மனைவியும் கணபதி ஹோமம் முடிந்து அம்மாவிடம் ஆசி வாங்க வந்தனர். மகன் வீடு கட்டியதன் நிறைவு அம்மாவின் கண்களில் தெரிந்தது. உதட்டில் சிறு புன்னகை. அது தான் கடைசி புன்னகை என்று யாரும் அறியவில்லை.
விழா முடிந்து விட்டது. அனைவரும் சென்று விட்டனர். நான் எப்பொழுது வந்தாலும் 2 அல்லது 3 நாள்கள் கழித்து செல்வேன். அம்மாவுடன் தங்குவேன்.
சுந்தரி தூங்கிட்டியா?
இல்லைம்மா நீங்க தூங்கலையா?
என்னம்மா வேணும்?
அம்மாவுக்கு மூச்சு விட முடியல. கொஞ்சம் தைலம் தடவி விடறியா?
காலை வரை நீடித்தது வலி.
தம்பியிடம் சொல்லி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.
அம்மா என்ன பிரச்சினை?
முதுகுக்குள்ள சுருக் சுருக்குன்னு வலி. மூச்சு விட முடியவில்லை.
எவ்வளவு நாளா வலிக்குது?
ஒன்றரை வருஷமா வலிக்குது. இப்ப கொஞ்சம் அதிகமா இருக்கு.
என்னது ஒன்றை வருஷமா?
ஏம்மா நீங்க யாரு? இவங்கள கவனிக்கவே இல்லையா?
நான் இவங்க பொண்ணு. அம்மா இங்க தம்பிட்ட இருக்காங்க.
ஏம்மா மகன்கிட்ட சொல்லலைய.
இல்ல சொல்லியும் கவனிக்கலையா?
ஐயோ டாக்டர் எம் மகன் எனக்கு ஒண்ணுண்ணா துடிச்சுப் போவான்.
நான் தான் சொல்லல.
என்னம்மா நீங்க போய் ஸ்கேன் எடுத்துட்டு வாங்க.
காரணம் புரியவில்லை. கண்களால் கேட்டேன்.
ஒண்ணும் இல்லை. வயசாயிருச்சு. எலும்பு தேஞ்சுருக்கும்.
முடிவுக்காக காத்திருந்தேன். டாக்டர் என்னை மட்டும் தனியாக அழைத்தார்.
என்ன டாக்டர் அம்மாவுக்கு என்ன?
உங்கள் குடும்ப பிரச்சினை எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் அம்மா தன் வாழ்நாள் எண்ணிக் கொண்டிருக்கிறார்.
என்ன சொல்றீங்க டாக்டர்?
உங்கள் அம்மாவுக்கு இரத்தப் புற்று நோய். நான்காவது நிலை. அத்துடன் சிறுநீரகம் செயல் இழந்து விட்டது.
அதிர்ச்சியில் உறைந்து போய் அழ ஆரம்பித்தேன். டாக்டர் என் தோளைத் தட்டி வருத்தப்படாதே. நம் கையில் ஒன்றும் இல்லை. நாளை முதல் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.
என்ன சுந்தரி என்ன சொன்னாங்க?
நீங்கள் சொன்னது தான். எலும்பு தேஞ்சு போச்சாம்.
அப்பாடா இப்பதான் நிம்மதி. எங்க என் மகனுக்கு பெரிய செலவு வைக்கப் போறோம்னு நினைச்சேன். கடவுள் நம்மளை கைவிடவில்லை.
என்னக்கா டாக்டர் என்ன சொன்னாங்க? அம்மாகிட்ட சொன்ன பொய்யை தம்பி கிட்டயும் சொன்னேன்.
அன்று இரவு மீண்டும் மூச்சு விட முடியாமல் திணறினார். பயம் என்னை தொற்றிக் கொண்டது.
தம்பி எந்திரி. அம்மா வலியில் துடிக்கிறாங்க.
ஏன் அம்மா மாத்திரை சாப்பிடலையா.?
பணம் செலவழிப்பது தம்பி என்பதால் உண்மையை கூறினேன்.
என்னக்கா சொல்ற?
அவன் கண்களில் கலவரம்.
ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் உபகரணம் மாட்டப் பட்டது.
என்னை அருகில் அழைத்தார்.
நேத்து எங்கிட்ட எலும்பு தேய்மானம்னு பொய்தான சொன்ன
இல்லம்மா டயாலிசிஸ் 2தடவை பண்ணுனா சரியாகிடும்ன்னு சொன்னாங்க.
அரண்டு போன தம்பியை குனிய சொன்னார். நீங்க 2 பேரும் நேத்துதான் பொய் சொன்னீங்க.
ஆனால் நான் 2 வருஷமா பொய்யா வாழறேன். எனக்கு ஏதோ பெரிசா நோய்ன்னு முன்னாடியே தெரியும்.
அப்புறம் ஏம்மா மறைச்சீங்க,
என் மேல நம்பிக்கை இல்லையா?
நான் வளர்ந்த பிள்ளை தப்பு பண்ண மாட்டாங்க. எனக்கு நல்லா தெரியும். அப்பா எல்லா சொத்தையும் வித்து நம்பளை நடுத்தெருவில் நிப்பாட்டினாரு.
ஒரே மகன். ஏன்னு கேட்காமல் கையெழுத்து போட்ட. நான் கண்ணை மூடுறதுக்குள்ள ஒரு சொத்தாவது நீ வாங்கி கையெழுத்து போடணும்ன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன்.
என்னால பணம் கொடுக்க முடியாது. ஆனால் எனக்கு செலவழிக்கிறதை தடுக்கலாம் இல்லையா? இப்ப என் மனசு நிம்மதியா இருக்கு.
அம்மா ஏதேதோ பேசாதீங்க.
உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.
அம்மா உனக்கு பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்.
மகன் கைகளில் முகத்தை புதைத்தார்.
ஒரே நிசப்தம். ஐயா டாக்டர் இங்க வந்து பாருங்க.
டயாலிசிஸ் உபகரணங்கள் அகற்றப்பட்டது.
உங்கள் அம்மா கோமா நிலையில் உள்ளார். வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
கதறலுடன் கண்ணீருடன் அழைத்து வந்தோம்.
அன்று இரவு லேசாக சுயநினைவு வந்தது. கண்களால் மகனைத் தேடினார். ஓடி வந்து மடியில் இருத்தினான். அவன் நெஞ்சில் தலை சாய்த்தார்.
மூச்சு நின்று போனது. முற்றத்தில் முழுநிலா பிரகாசமாய்ச் சிரித்தது. நிலாவில் பாட்டி வடை சுடவில்லை. எங்கள் அம்மா சிரித்தார். எங்கள் அம்மா ஒரு தேவதைதானே.
ல. மதுமதி எண் 12 உசிலம்பட்டி
Madhumathi
8. K2K-00081
"இன்னோரு அறுவை சிகிச்சை பண்ணி தான் ஆகணும். ஏற்கனவே பண்ணதுல உங்க பொண்ணுக்கு சரி ஆகலனு.."சொல்லிட்டு மருத்துவர் அவர் பாட்டுக்கு கெளம்பிட்டாரு. "இன்னோரு அறுவை சிகிச்சை பண்ணா சரி ஆகிடுமாபா "னு பாவமா கேக்குற பொண்ணுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு தெரியாம கவலை படுறாரு அப்பா. கல்லூரில நல்லா படிச்சு சந்தோஷமா இருக்க வேண்டிய பொண்ணு, இப்படி ஆஸ்பத்திரியில படுத்து அல்லாடுறாளேன்னு மனசெல்லாம் ஒரே வேதனை. "நான் வேணா ஒரு முறை மருத்துவர் கிட்ட அறுவை சிகிச்சை கண்டிப்பா பண்ணனுமானு கேட்டுட்டு வரேன்" னு கெளம்புன அப்பாவ தடுத்து நிறுத்தினாங்க அம்மா. "அவர் ரொம்ப பெரிய மருத்துவர். கோவக்காரரும் கூட. அவருக்கு தெரியாததா உங்களுக்கு தெரிய போகுது.... அவரு சொல்ற மாதிரி கேட்டு நம்ம பொண்ண உடம்பு சரி பண்ணலாம்" னு கண்ணீர் விட்டு அழுதாங்க. இருந்தாலும் மனசு கேக்கல அப்பாக்கு. " ஒரு தடவை கேட்டு தான் பாக்குரெனே. இப்படியே சரி ஆச்சுனா நல்லது தானே" னு சொல்லிட்டு மருத்துவர் அறைக்கு போனாரு.
"ஐயா..., உள்ள வரலாமா?".
"வாப்பா... என்ன வேணும் சொல்லு..."
"ஐயா, நான் கவிதா ஓட அப்பா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாத்து இன்னோரு அறுவை சிகிச்சை பண்ணனும்னு சொன்னிங்களே..."
"ஆமாம்பா சொல்லு.
.. என்ன விஷயம்?"
"ஐயா... எம் பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணுங்க....... ஏற்கனவே நெறய வலி அனுபவிச்சிட்டா. இன்னோரு அறுவை சிகிச்சைனா தாங்க மாட்டாங்க.... தப்பா நெனக்கலனா... ஒரே ஒரு முறை அவ பைல் திரும்பி பாத்து மருந்து மாத்திரைல சரி பண்ண முடியுமா சொல்றிங்களா...."னு கெஞ்சி கேட்டாரு அப்பா.
அன்னிகி நல்ல மன நிலையில இருந்த மருத்துவர், கொஞ்ச நேரம் யோசிச்சாரு. அப்புறம் கவிதா ஓட பைலை திரும்ப படிச்சாரு.
"இங்க பாருப்பா.... உம்பொண்ணுக்கு இன்னிக்கே அவசரமா அறுவை சிகிச்சை செய்யணும்னு இல்லை. ஆனா இப்டியே சரி ஆகாம இருந்தா எனக்கும் வேற வழி இல்லை. நீ கேக்றியேனு ரெண்டு நாள் பொறுத்து பாக்கலாம். முன்னேற்றம் இல்லாட்டி அறுவை சிகிச்சை கண்டிப்பாக தேவை படும். சரி தானே" னு மருத்துவர் கேட்டாரு.
அப்பாக்கு ஒரு சின்ன சந்தோஷம். நெனப்புக்கு வந்த சாமி எல்லாத்தையும் வேண்டுனாறு, பொண்ணுக்கு இப்பிடியே சரி ஆகணும்னு.
ரெண்டு நாள் கழிச்சு ஸ்கேன் பண்ணி பாத்துட்டு "உன் கோரிக்கை வீண் போகலயா. உம்பொண்ணு நிலைல சின்ன முன்னேற்றம் இருக்கு. பொறுத்து பாக்கலாம். அறுவை சிகிச்சை வேணாம்" னு சொல்லிட்டு போன மருத்துவரை கண்ணீர்மல்க கையெடுத்து கும்பிட்டாரு அப்பா. அன்னிகி அப்பா, ஒரு அப்பாவா இல்ல, தேவதையா தான் தெரிஞ்சாரு.
"கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் கேட்டு பார்ப்பதில் தவறில்லை.... ஒரு முறையேனும் கேளுங்கள்... வேண்டியவரிடமும், இறைவனிடமும்... "
Narmada
9.K2k – 00035
தேவதை
அக்கா அக்கா இங்க வாயேன்.
என்னடா வர்றேன்.
இந்தா இந்த கவர பிரிச்சு பாரேன்.
என்னடா இது.
பாரு உனக்கு தான்.
யார் இது?
உனக்கு தான்க்கா மாப்பிள்ளை
நல்லா இருக்காரா?
நான் உன்னை இப்ப எனக்கு கல்யாணம் வேணும்னு கேட்டேனா?
நீ கேக்க மாட்டேன்னு தெரியும் அதான் நானே பாத்துட்டேன். நாளைக்கு உன்ன பாக்க வருவாங்க நீ கிளம்பி ரெடியா இரு .
என்று சொல்லிச் சென்ற தம்பியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத அனாதை அமுதா.
வேற்று தாயின் மகனாக இருந்தாலும் தன் நலனில் அக்கறை கொண்ட உடன்பிறவா தம்பியின் அன்பை கண்டு நெகிழ்ந்து போனாள்.
அமுதாவின் கண்களுக்கு அவள் தம்பி தாயாகவும், தந்தையாகவும், ஆண் தேவதையாகவும் காட்சி தந்தான்.
(யாராக இருப்பினும் உண்மையான அன்பு கொண்டோர் தேவதைகளே)
பி.பிரேமா ராணி,
திருநெல்வேலி.
10. K2K-00058
குழந்தையின் அழுகுரல்
தங்க நகை அலங்காரத்துடன் தலை நிறைய மல்லிகைப்
பூவைச்சூடி பட்டுப்புடவையிலே பார்க்கையில் சந்தியா தேவதை
போல் காட்சியளிக்கும் வகையில் தோளில் மாலையணிந்து
மணவறை நோக்கி வந்தாள்.
ஆம் “இருமனம் இணைந்து ஒரு மனம் ஆகும் திருமணம்” தாங்க
நடக்கிறது.
புன்னகைத்தபடியே குணிந்த தலையுடன் அமர்ந்தாள்.
கெட்டிமேளம் என ஐயர் கூற மேளதாள ஒலிவுடனும் உற்றார்
உறவினரின் வாழ்த்துக்களோடும் பெற்றோர், பெரியோர்
ஆசியோடும் ஐயர் மந்திர முழக்கத்தில் தன்னவர் கட்டிய
தாலியை ஏற்றாள் சந்தியா. கண்ணங்களில் கண்ணீர் வழிய
மனக் குழப்பங்களுடன் தன்னவர் கரம்பிடித்து சென்றாள் சந்தியா.
புகுந்த வீட்டிற்குள் வலது பாதம் பதித்து வந்தபோது தன் மனக்
குழப்பத்திற்கான பதிலினைப் பாசமான மாமியார் மூலமும்,
தோழிபோல் வரவேற்ற நாத்தனார் மூலமும் அன்பால்
அறவணைத்த தன்னவர் மூலமும் உணர்ந்தாள்.
நாட்கள் செல்ல வழக்கம் போல் வேலைக்குச் சென்று சோர்ந்து
வந்த கணவனை வரவேற்று அவரிடம் தனக்கு மாங்கா சாப்பிட
வேண்டும் என்றாள் கணவனோ நேரங்கெட்ட நேரத்தில் மாங்கா
கேட்குதா என கிண்டலடிக்கப் புன்னகையுடன்
தலைகுணிந்தபடியே தன்னவரிடம் ஏங்க நீங்க அப்பா
ஆகிடிங்கனு சொன்னாள். இதை கேட்ட கணவன்
புத்துணர்சியுடன் எழுந்து அவளை கட்டியணைத்து முத்தமிட்டு
அந்த வீதி முழுவதும் சந்தோஷத்தில் கத்தித் திரிந்தான்.
கருத்தரிப்பினை உறுதிசெய்யும் வகையில் மருத்துவரிடம்
சென்று உறுதிசெய்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.
கருத்தரித்த ஐந்தாம் மாதத்தில் தாயும் சேயும் பேசிக்கொள்ள
தயாரானார்கள் முதல் முறை தாய் பேசியதை கேட்ட குழந்தை
பயத்தில் தவித்தது எனினும் தாயின் குரலை அறிந்த குழந்தை
பயத்திலிருந்து மீண்டு தாய்க்குப் பதில் சொல்லும் விதத்தில் தன்
உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்தத் துவங்கியது ஏழாம்
மாதத்தில். ஒன்பதாம் மாதம் சந்தியாவிற்கு இரு கைகளிலும்
வளையல்கள் போட்டு கண்ணத்தில் சந்தனம் பூசி நெற்றியில்
குங்குமமிட்டு தாய்மாமன் சீர்கொண்டுவர ஆரவாரமாய்
நடைபெற்றது வளைகாப்பு நிகழ்வு. குழந்தை தன்னிடம் பேசிக்
கொண்டிருக்கும் தாயின் முகத்தைக் காண தன் தலையைத்
திருப்பி வெளிவர முயற்ச்சிக்கும் தருணத்தில் தாய்க்குப்
பன்மடங்கு வலி கொடுப்பதாலோ என்னவோ குழந்தை
வெளிவந்த உடனே அழது கதருகிறது முதலில் தந்தையின்
கைகளில் சென்றடையும் குழந்தை தன் தாயைக் காண மேலும்
அழுது கதருகிறது. ஒருவழியாக தாய் தன்னை கைகளில்
ஏந்துகையில் முகம் மலர்ந்து புன்னகைக்கிறது.
"நாற்பது வாரங்கள் தாயின் கருவரையிலிருந்து தாயைக்
காண அழுது தவித்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்
தேவதை தான்"
பிரிட்டோ சச்சின் மரியா
புதுக்கோட்டை
11. K2K-00034
அவன் ஒரு தேவதை#
வரு சீக்கிரம் கிளம்பு டி, நம்ம போறதுக்குள்ள நல்ல நேரம் முடியப்போகுது. வந்துட்டேன் என்று புடவையை சரி செய்தவாறு வந்தாள் வர்ஷா .
கிட்டத்தட்ட பதினைந்து நிமிடப் பயணத்திற்கு பிறகு அவர்கள் வர வேண்டிய இடம் வந்தது. இருவரும் இறங்கி உள்ளே செல்ல, வயதான பெண்மணி அவர்களை வரவேற்று ஒரு அறையில் அமர வைத்து குடிக்க தேநீர் கொடுத்து மெதுவாக பேச ஆரம்பித்தார்.
சார் உங்களுக்கு குழந்தை இல்லை என்று தத்தெடுக்க வந்திருக்கீங்க, ஒருவேளை உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்றால் இந்த குழந்தையின் நிலையை நினைச்சு பார்த்து இருக்கீங்களா? பிஞ்சு மனம் பட்டுவிடும் என்றார்.
ஆகாஷ், " மேடம் இங்க பாருங்க நீங்க கேட்கும் கேள்வி எல்லாம் சரி தான். உங்க கிட்ட தெளிவா சொல்லாமல் விட்டது தப்புதான் என் மனைவிக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு பத்து சதவீதம் தான். எனக்கு அவள் மட்டும் போதும் ஆனால் அவளுக்கு நான் மட்டும் போதாதாம் குழந்தை வேணுமாம் " என்று வர்ஷாவை பார்த்து கண்ணாடிதான்.
போடா இம்சை என்று உதட்டை சுழித்து அழகுக்காமித்தாள் வர்ஷா.
சாரி சார் இது எங்க கடமை அதான் சில கேள்விகள் கேட்க வேண்டியதா போய்டுச்சு மனசில் எதுவும் வைச்சுக்க வேண்டாம் என்றார் அந்த குழந்தைகள் காப்பகத்தின் உரிமையாளர்.
வர்ஷா, " பரவாயில்லைம்மா நாங்க போய் பேபீஸ்ஸை பார்க்கலாமா? " என்றாள்.
மூணு குழந்தைங்கள் ஒரு வயசுக்குள்ள இருகாங்க முதல அவங்கள பாருங்க பிடிக்கலைன்னா வேற குழந்தைங்கள பார்க்கலாம் என்று அவர்களை குழந்தைகளிடம் கூட்டி சென்றார் அந்த பெண்மணி.
ஆகாஷ் எனக்கு நெர்வ்ஸ்ஸா இருக்கு, என்று அவன் கையை பற்றினாள் வர்ஷா.
வரு உன்னோட சந்தோசத்துக்காக தான் டி இதெல்லாம், நீயே எனக்கு குட்டி பாப்பா தான் டி உனக்கு ஒரு பாப்பா வேணும்னு மூணு நாள் சாப்பிடாமல் அடம்பிடிச்சு உன் காரியத்தை சாதிச்சுட்ட என்று வலிக்காமல் அவள் தலையில் கொட்டினான்.
இரண்டு நிமிட நடைக்கு பின், அந்த பெண்மணியின் நடை ஒரு அறைவாசலில் தடைப்பட்டது. குழந்தைகள் அழுகை சத்தம் இருவரையும் சிலிர்க்க செய்தது. பெண்மையில் மட்டுமல்ல ஆண்மையிலும் தாயுணர்வு இருக்கு என்று அந்த அழு சத்தத்தில் உணர்ந்தான் ஆகாஷ்.
அள்ளி அணைக்க ஆர்ப்பரிக்கும் விரல்களை கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் ஆகாஷை விழி பனிக்க பார்த்தாள் வர்ஷா. உனக்கு குழந்தைங்க என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று எனக்கு தெரியாதா என் மனசு கஷ்டப்பட கூடாதுனு இப்படி நீ நடிக்கிறது எனக்கு வலிக்குது டா. நீ நான் நம்ப பாப்பா என்று ஏழு மாத பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.
அப்போ படத்துல காமிக்கிற மாறி எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டிய என்று கேட்டவன் கையில் கிள்ளி உனக்கு இந்த ஜென்மத்துல நான் தான் என்று அவன் நெற்றியில் முட்ட சிணுங்கினாள் அவர்களது மகள். இப்போவே கூட்டணியா என்று கேட்க பொக்கைவாய் திறந்து சிரித்தாள் அந்த அழகி.
# யார் சொன்னது தேவதை பெண்பால் என்று இங்கு சில ஆண் தேவதைகளும் உண்டு #
உங்கள்,
சுபாஷினி.
12. K2K-00036
# தேவதை வந்தாள்..!!
அவனுக்குள் ஒரு தேடல் பல வருடங்களாக, அது தன் உண்மையான திறமை என்ன என்பதே அது. பாட்டு கற்க முயன்றான் குரல் அதற்கு சரிப்படவில்லை. நடனம் கற்க முயன்றான் காலில் சுளுக்கு பிடித்ததே மிச்சம். ஏதேனும் இசை வாத்தியம் இசைக்க ஆசைப்பட்டான் அதற்கு நீண்ட பொறுமை இல்லை.
விளையாட்டு பலவற்றில் கவனம் செலுத்தினான் எதிலும் மனம் லயிக்கவில்லை. பேச்சு போட்டிகளில் சேர்ந்து பேசி பார்த்தான் மழலை பேச்சால் திக்கு பேச்சால் அவமானம் கொண்டான். அதை மாற்றும் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் சொன்னான்.
இதே மேல் முடியாது என்று படிப்பில் கவனம் செலுத்தினான். கணிதம் கை கொடுத்த அளவுக்கு மற்ற பாடங்கள் கை கொடுக்க வில்லை. கணிதத்தில் தொண்ணூறுக்கு மேல்! மற்ற பாடங்களில் எழுபது கீழ்! அறிவியலிலோ தேர்ச்சி மதிப்பெணே!.
திரும்பி தன் தேடலை தொடர்ந்தான் பள்ளி பெற முடியாத படிக்கும் பையன் என்ற பெயரை கல்லூரியில் வாங்கினான். இங்கேயும் அவனின் கணித திறமையே கை கொடுத்தது. அப்படி இருந்தும் படிப்பை தவிர தன் வேறு திறமை என்னவென்று தேடினான். கல்லூரி படிப்பும் முடிந்தது ஆனால் அவனின் தேடல் முடியவில்லை.
கணினி பொறியாளன் வேலையில் சேர்ந்தான். இயந்திரம் போன்ற வேலையின் நடுவில் வலைதொடர் கதை படித்து பொழுதை போக்கினான். மற்றொரு தேடல் இங்கே தொடங்கிறது, அவனும் முயன்று பார்ப்போமே என்று கதைகள் எழுத ஆரம்பித்தான்.
அவனின் எழுத்து பிழை நிறைந்த கதையின் நற்கருத்துக்களை யாருமே பார்க்கவில்லை! படிக்கவில்லை!. இந்த தேடலும் விண், மற்ற விஷயங்களை போல இதிலும் தனக்கு திறமை இல்லையென்ற நினைப்பில் அவன் பின்வாங்க நினைக்க வந்தாள்! தேவதை வந்தாள்! அவனின் கதைகளை ரசித்தாள். அவனுக்கே புரியாத அவனின் கதையை படித்து உண்மை விமர்சனம் செய்தாள்.
அவளை மேலும் மேலும் ரசிக்க வைக்கவே மேலும் மேலும் கதைகள் எழுதினான். ஒவ்வொரு கதையிலும் பல்வேறு கருவை கொண்டு பல கதைகள் படைத்து தேவதையின் நற்மதிப்பை இன்னும் பெற்று நற் விமர்சனம் வாங்கினான்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வலைதளங்களில் கதை எழுதும் எழுத்தாளன் அவன். அவனின் கதைகள் பிரபலம் இல்லை! அதை பற்றிய கவலையும் அவனுக்கு இல்லை!.
தன் தேவதை ஒருத்தியின் ஒரே விமர்சனங்களை பார்க்கவே கதை எழுதும் தேவன் அவன். அவள் அவனின் காதலி அல்ல! நெருங்கிய தோழி அவள்.
தாகத்துக்கு தண்ணீர் கேட்காமல் கொடுத்து உதவும் மனிதர் தேவதை என்றால் இவனுக்கு அவள் தேவதை தான்.
தேவதை யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அவனின் தேவதை அவனின் திறமையை விமர்சனம் மூலம் கண்டுக்கொள்ள வைத்து பலவிதத்தில் எழுத வைத்த இணைய தோழி.
நன்றி!
விஜயன்.
13. K2k 00068
ஒரு நாள் ஒரு ஊரில் மக்கள் தொற்று நோய்க்காக ஆளானார்கள். தனக்கு பிடித்த இறைவனை வேண்டினார்கள். தான் செய்த தவறை ஒருபோதும் ஒத்துக்கொள் மாட்டார்கள். அந்த இறைவனிடம் தான் செய்த தவறுக்காக தன்னிடம் உள்ள பணம் அனைத்தையும் உண்டியலில் போட்டு திருப்தி அடைவார்கள். பெண்களை கேலி செய்து விட்டு கொடுமைபடுத்துவார்கள். அங்கே ஆண் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் தீக்கு இறையாக்கப்பட்டார்கள்.அந்த ஊரில் ஒரு நல்ல மனிதன் இருந்தான். அவன் கனவில் ஒரு தேவதை வந்தாள். மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் நோய் தொற்று இல்லாமல் வாழ சிறந்த வழி பெண்களை கொடுமை படுத்தாதீர்கள் என்று கூறி விட்டு இறைவனுக்கு பணம் பெரிதல்ல மனம் தான் பெரியது என்று கூறி விட்டு மறைந்தது. அவன் கனவில் கண்ட காட்சியை அனைவரிடமும் கூறினான். அவனை கோமாளி என ஏளனம் செய்தார்கள். அவனிடம் தேவதை என்றால் என்ன அர்த்தம் என்று
தெரியுமா தனக்கு தேவையான நேரத்தில் பெண்களை தேய்த்து வதைப்பதே தே வதை என்றார்கள். அவனோ மறுமொழியாக அவர்கள் தேவனுடைய சதையில் ஒரு பகுதி என்றான். அதுதான் தேவ தை என்றான்.இருவருக்கும் தகராறு முற்றியது. இறுதியில் தீமை செய்பவர்கள் ஒரு கட்டளையிட்டார்கள் நீ சொல்கின்ற செயலுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமெனில் உன்னுடைய தேவன் தை மாதத்தில் நோய் தொற்றை நீக்கினால் உனக்கு நாங்கள் அடிமை என்றார்கள். இருவருக்கும் ஒரு நாள் கனவில் தேர் வந்தது. நன்மை செய்பவனோ கனவில் தே ர் வ ருகின்ற தை தேவதை வந்தாள் என்றான். தீமை செய்பவனோ தேர் வருகின்றதை தேரா இது தேராது என்றான். அடுத்த நாளில் இருந்து நன்மை செய்தவனுக்கு நன்மை கிடைத்தது. தீமை செய்தவனுக்கு தீமை கிடைத்தது. நாளடைவில் தீமை செய்தவன் தவறை உணர்ந்தான். பிறருக்கு உதவிசெய்யும் மனப்பான்மையை வளர்த்தான்.தீங்கு செய்யும் அனைவரும் திருந்தினார்கள். பின்பு தீதும் நன்றும் பிறர்தர வாரா என உறுதி மொழி எடுத்தார்கள். நோய் தொற்றும் தை மாதத்தில் மறைந்தது. தேவனின் சதையின் ஒரு பகுதி தேவதை தான் என நம்பினார்கள். தேவைதான் இந்த நிலையில் தேவதைதான் என்றார்கள். அந்த ஊரில் ஒரு பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.குழந்தையும் தெய்வமும் ஒன்று எண்பார்கள் இங்கு பிறந்தது பெண் தேவதை என மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஜோ. ஜெயராஜ்
14. K2K00066
தேவதை
ஆண்டு – 2014.
எளிய குடும்பத்தில் பிறந்த குமார், சென்னையின் சிறந்த கல்லூரியில் கட்டட பொறியியல் படிக்கும் வாய்ப்பை கைப்பற்றினான். 9 மணி கல்லூரிக்கு 7.30 மணிக்கே வீட்டை விட்டு புறப்பட்டு பஸ் ஸ்டாப்பிற்கு சென்று, 'பிராட்வே' பேருந்து டிப்போவிற்கு போகும் பஸ்ஸில் ஏறுவான். அங்கு 21 G பேருந்திற்க்காக காத்திருந்து பயணித்து சென்று கல்லூரியை சென்றடைவான். அயன் செய்த சட்டை கசங்கிட, நெற்றியில் இட்ட சந்தனம் கரைந்திட, முகமெல்லாம் வியர்த்து கொட்ட தன் வகுப்பறைக்கு செல்வான். கல்லூரி முடிந்து அதே 21 G பஸ்ஸிற்காக காத்திருந்து வருவான். நாட்கள் போக போக நண்பர்கள் கூட்டம் பெரிதானது. கை செலவிற்கு 20 ரூபாய்க்குமேல் யாரிடமும் இருக்காது.
அன்று ஒரு நாள், குமாரும், பாலாஜியும் வெங்கட்டும் கல்லூரியின் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார்கள். திடிரென்று ஒரு 'AC' பஸ் வந்தது. அதை பார்ததும் பாலாஜி சொன்னான், "டேய்.. இன்னைக்காவது ‘AC’ பஸ்ல போலாம் டா..டெய்லி காத்தே வராத பஸ்ல போய் கடுப்பா இருக்கு".
"எனக்கும் ஆசையா தான் இருக்கு ஆனா என் கிட்ட 20 ரூபாதான் இருக்கு", என்றான் குமார்.
"என் பைல 200 ரூபா இருக்கு, நான் டிக்கெட் எடுக்குறேன்.." என்று வெங்கட் சொன்னான்.
‘21 G AC’ பஸ் சீக்கிரம் வரவேண்டும் என்று மூவரும் வேண்டி முடிப்பதிற்குள் பஸ் அவர்களின் முன் வந்து நின்றது. கதவு திறந்தது, பல்லாயிரம் குளிர்சாதன பெட்டிகளை ஒன்றாக திறந்துபோல் இருந்தது.
உள்ளே ஏறியவுடன், நடத்துநர், "எங்கே போனும்?" என்று கேட்க ,மூவரும் ஒரு சேர பிராட்வே என்று சொல்லி 60 ரூபாவை கொடுத்தார்கள். நடத்துநர் டிக்கெட்டை கையில் கொடுத்துவிட்டு,
"மீதி பணத்தை எடுத்து வையுங்கள், நான் உள்ளே சென்றுவிட்டு வருகிறேன்" என்றார். டிக்கெட்டில் 135 ரூபாயென்று போட்டிருந்தது. குமாரும், பாலாஜியும் வெங்கட்டைப் பார்த்தார்கள்.
வெங்கட் தன் பையின் உள்ளே கையை விட்டான். அடுத்த நொடியே "டேய்.. 200 ரூபாவை காணோம் டா" என்றான். குமாரும் பாலாஜியும் அவர் அவர்களின் பையின் உள்ளே கிடந்த சில்லறையெல்லாம் எடுத்தார்கள். மொத்தமாக அவர்களிடம் 45 ருபாய் வந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், நடத்துநர் பிசியாக இருந்தார்.
"அடுத்த ஸ்டாப்ல இறங்கிடலாம் டா" என்று பாலாஜி சொன்னான். குமாரும் வெங்கட்டும் "வேற வழி.. முதல் ‘AC’ பஸ் பிரயாணம் இப்படி ஆகிடுச்சே" என்று மூவரும் முனகினார்கள்.
திடிரென்று குமாரின் முன் அமர்திருந்த ஒருவர் 50 ரூபாயை அவனிடம் கொடுத்து, "வெச்சுக்கோ பா" என்றார். "வேணாம் சார் " என்று குமார் மறுத்தான். "நீங்க மெதுவா பேசுனதலாம் நான் கேட்டேன், வெச்சுக்கோங்க" என்றார். பாலாஜியும் வெங்கட்டும் "ரொம்ப நன்றி சார்" என்றார்கள்.
சொல்லி வைத்தாற்போல் நடத்துநர் வந்தார், மீதி பணத்தை கொடுத்தனர். தர்ம சங்கடமாக இருந்தாலும், சிறிது நேரத்திற்கெல்லாம் மூவரும் ‘AC’ பஸ்சின் அழகில் , குளிரில் மெய் மறந்தார்கள்..!
அன்றய தினத்தில், அம்மூவருக்கும் அந்த நபர் 'தேவதையாகவே' தெரிந்தார்.
“முன் பின் தெரியாதவர்களுக்கு அவர்கள் கஷ்ட படும்போது கேட்காமல் உதவினால் நீங்களும் "தேவதை" ஆகலாம்”.
GD
16. k2k-00059
கோவையில் ஒரு அருமையான கிராமம் . தென்றலின் இசைக்கு ஏற்ப தலை ஆட்டும் செந்நெற் கதிர்கள். மலையின் மடிப்புகளில் ஒளிந்து கண்ணாம்பூச்சி விளையாடும் காலை கதிரவன். பண்ணிசைத்து துயிலெழுப்பும் குயில்கள் கூட்டம். வயல் சூழப்பட்ட பசுமைவனம் நடுவினிலே, மையப்புள்ளியைப் போல் ஒரு அழகிய வீடு. யார் இருக்கிறார்கள் உள்ளே ? பார்ப்போமா..
துணிச்சல் நிறைந்த அன்பு பூண்ட ஒரு விவசாயப் பெண்மணி . பட்டாளத்தில் தன் கணவனை இழந்த நிலையில் ஒரு பருவ வயது மகன், மழலை மாறாத குட்டி பெண் குழந்தை அவளுக்கு. இவர்களைப் பற்றிய கதைதான் இது .
வயலோரம் வளர்ந்து நிற்கும் மாமரக்கிளையினிலே, கட்டம்போட்ட கண்டாங்கி சீலையில் தூளி ஒன்றைக் கட்டி வைத்தாள். மழலை மகள் மகேஸ்வரியை கிடத்திவிட்டு, பயிர்களோடு பழக சென்று விடுவாள். தூளியில் ஆடும் அந்த சின்னக்கிளி பசிக்கும் பொழுதெல்லாம் பெற்றவளை அழைக்க கூச்சலிடுவாள். அழுகுரல் கேட்டவுடனே மோட்டார் செட்டில் பீறிட்டு வரும் தண்ணீரில் கை கால்களை அலம்பிக்கொண்டு, பாலூட்ட சென்றிடுவாள் அன்னை.
அண்ணனோ, தாயின் துயர் அறிந்து எப்போதும் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்று ஆழ் மனதில் உறுதிபூண்டவன் . தாய் மீதும் தங்கை மீதும் ஒப்பற்ற பாசம் கொண்டவன். தனக்கென எந்த ஒரு ஆசையை கனவிலும் நினைக்காதவன். வெள்ளாமையையும் விளைச்சலையும் தெய்வம் போல் போற்றுபவன். தான் உழுதுவரும் விளை நிலமே அவனுக்கு கோவில். அதில் உலா வரும் தன் தாயே அவனுக்கு தெய்வம் இலட்சியக் கனவுகள் நிரம்பப் பெற்றமையால் அவனுக்கு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் நாட்டம் இல்லை . துணிச்சலும் நம்பிக்கையும் விடா முயற்சியும் தான் ஆண்டவன் அறிவுறுத்தும் அருள் வாக்கு என்று நிர்ணையித்தவன் .
ஒரு நாள் விடியற் காலையில், ஏதோ முணுமுணுக்கும் சத்தம் கேட்டு அண்ணன் எழுந்தான். அன்னை விசாலாட்சி போர்த்திய போர்வை மெல்ல மெல்ல அதிர்வதை பார்த்தான். உடனே எழுத்து விளக்கி பார்த்தால், விசாலாட்சி குளிர் சுரத்தினால் நடுங்கிக்கொண்டு இருக்கிறாள் . சிறுவாண்டு மகேஸ்வரி ஏதும் அறியாமல் படுக்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். பதறிப்போன மகன், வண்டியில் மாட்டினைப் பூட்டிக்கொண்டு வைத்தியம் பார்க்க விரைந்தான். கையில் தங்கையை ஏந்தியபடி, வைத்தியரையும் விசாலாட்சியையும் கூர்ந்து கவலையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான். "மனசுல ஏதோ ஒரு வெறுமை பா! உடம்புக்கு ஏதும் இல்ல . இந்த கஷாயத்தை நாலு நாளைக்கு மூணு வேள குடு! மனசு கெட்டு போனா ஒடம்பு பட்டுப் போய்டும் ! கவலை இல்லாம உங்க ஆத்தாவ பாத்துக்கோ!" என்றான் வைத்தியன்.
"உங்களுக்கு என்னம்மா கவலை ?. கண்ணுக்கு இனிமையா தங்கச்சி முகம் ! களைப்பாற காத்தாட வயல்வெளி மரத்தடி! குடிக்க மூணு வேல கஞ்சி ! உறவுக்கார மாமாவொட ஆதரவு! ஏன் கவல படுறீங்க ?" என்றான் மகன். விசாலாட்சி சிரித்தபடி " நீ கண்ணாலம் கட்டிக்கோ ஐயா ! உனக்கு புரியும் " என்றாள். மகனும் ஏதும் புரியாமல் வயலுக்கு சென்று அன்றாடம் செய்யும் பணியினை முடித்தான். இப்படியே சில நாட்கள் கழிந்தன.
ஒரு நாள் வயக்காட்டில் விழுந்தபடி கிடந்த விசாலாட்சியை கண்டு அக்கம் பக்கத்தினர் பதறிப்போய் வைத்தியரிடம் காட்டினர். மகன் சந்தைக்கு சென்று வியாபாரம் முடித்து திரும்பினான். விசாலாட்சி பக்கவாதத்தில் படுத்து விட்டால் என்று அங்கிருந்தோர் கூறியதை கேட்டு அதிர்ந்து போனான். "எதிர்வரும் இன்னல்கள் எதுவென்றாலும் உன் பலத்ததால் தகர்த்தெறிவேன், என் பலமே சோர்வுற்றால் நான் என்ன செய்வேன் " என்று தன்னுள் கவலையுற்றான் .
மறுநாள் முதலாக, தாய்க்கு செய்யவேண்டிய சேவையெல்லாம் தாமாகவே செய்து கொண்டு, தங்கையை பராமரித்துக்கொண்டு, விளைச்சலையும் கவனித்தான். தன் தெய்வத்தின் இந்த நிலை அவனுக்குள் மாபெரும் பூகம்பமாக வெடித்துக்கொண்டு இருந்தது . எனினும், தினமும் அன்னையை வணங்கி அவளுக்கு தேவையான அன்றாட சேவைகளை செய்வதே அவளை தான் வழிபடும் சிறந்த முறை என்று கருதி வாழ்ந்து வந்தான்.
ஏழு ஆண்டுகள் கடந்தது. மகேஸ்வரி நன்றாக வளர்ந்து அண்ணனின் செயலில் பங்கு கொண்டாள். அனால் , விசாலாட்சியின் உடல் நிலை மோசமாகத்தான் இருந்தது . மகள் வளர்ந்த நிலையிலும் தன் அனைத்து தேவைகளுக்கும் அவள் மகனைத்தான் தேடினாள். “உங்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் அண்ணனுக்கு மட்டுந்தானா ?” என்று மகள் வருத்தமுற்றாள்.
இதற்கு பதிலை அந்தத் தாய் விசாலாட்சி தன் மரணப்படுக்கையில் தெளிவுற்றால். ஆண் பெண் என்று பாகுபாடு பார்க்கும் உலகத்தில், அன்னை என்ற ஒரு உன்னத உறவினை மட்டும் மனதில் கொண்டு எல்லா சேவைகளையும் அன்பும் அரவணைப்புடனும் என் மகன் ராஜகோபாலன் எனக்கு செய்தான். அவன் அதனை மேன்மையாகவும் தனது ஆத்ம திருப்தியாகவும் கருதினான். " ஆண்மையில் தாய்மையை கொண்ட உன் அண்ணன் ஒரு ஆண் "தேவதை" " என்று சொல்லிவிட்டு உயிர்நீத்தாள் விசாலாட்சி .
கருப்பொருள் : எந்த விதமான காரணிகளும் நம் சேவை உணர்வுக்கும் உதவும் மனப்பான்மைக்கும் தடைகள் வித்திடக்கூடாது. அதனை ஆழ்மனதில் கொண்டு சேவை புரியும் ஓவொருவரும் தேவதை தான்.
• சடையப்பன்
17. K2K - 00043
தேவதை
"பளார்!"
அதுவே அவளின் கடைசி உரசல். காதலின் கடைசி வினாடி காமத்தின் கடைசி முத்தம். அவன் மேல் தவறில்லை. எனினும் அவளுக்கு கடைசியாக முத்தம் கொடுத்து விடை பெற தோன்றவில்லை. இந்த மூன்று மாதத்தில் அவன் எள்ளவும் மாறவில்லை அவளை மறக்கவில்லை இவள் பல முறை விளக்கியும் அவனுக்கு புரியவில்லை. காதலை மட்டும் காரணமாக்கினான்.
அந்த அறையின் ஒலி மறைவதற்குள் அவள் அங்கிருந்து போய்விட்டாள். ஆளற்ற சாலையில் இவன் மட்டும் அந்த கடைசி நிமிடத்தை எண்ணியபடி நின்று கொண்டிருந்தான். பல முறை சண்டை வந்தும் போகாதவள் இம்முறை ஏன் போயினாள் என்ற கேள்வி மட்டும் அவனிடத்தில் இருந்தது. கேள்வி மட்டும் தான் அவன் கேட்க முடியும் பதில் கூறுவது அவளின் விருப்பம் என்று இவனுக்கு தோன்றியது. ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பு அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு அவனுக்கு அதை இனி கேட்க தோன்றவில்லை. அவன் பெண்ணியவாதியும் இல்லை. ஆனால் அவளின் முடிவை மதித்தான். அவளை மீண்டும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தான்.
அவன் மென்மையானவன் இல்லை முரடன் தான் அவன் கடைசியாக கோவப்பட்டதும் இவளோடு தான். அவன் சற்று யோசிக்க தொடங்கினான், வேறு ஒன்றும் செய்ய முடியாததால். கடைசியாக எப்போது அவன் வன்முறையில் ஈடுபட்டான் என்று. அவனுக்கு நினைவில் வரவில்லை இரண்டு வருடங்களாக இல்லை என்று மட்டும் தெரிந்தது. அவள் தன் காதலை சொல்லியதும் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான். அவள் தான் தன்னை இப்படி ஆக்கிவிட்டாலோ என்று தோன்றியது கடந்த காலம் சற்று கண் முன் வந்தது.
அவன் கையுமாகத் திரிந்தவன் அவன். இப்போதும் அவனுக்கு கோவம் உண்டு. நாடு ரோட்டில் பளார் என்று அறைந்தால் கோவம் வரத்தானே செய்யும். கோவம் வரும் போதெல்லாம் அவன் சிகரெட் தேடுவான். இப்போது அதன் யோசனைகூட இல்லை. அந்த தேவதை அவனை விட்டு போனதன் வருத்தத்தை அவன் உணர்ந்தான் கன்னம் இப்போது வலிக்கத் தொடங்கியது.
அறைந்தாள்; ஆனால் அவளுக்கும் வலித்தது. வேறு வழி தெரியவில்லை. இனி இது நடக்காது இனியும் நம்புவது வீண் என்று எண்ணி அவள் பர்தாவை விலக்கி கண்ணீரை துடைத்தாள். "மைக்கேல்" என்று பெயர் அவளுக்கு ஒரு ஆண் தேவதையின் பெயராகத் தோன்றியது. கதைகளில் வரும் தேவதையை போல அவன் அழகானவன். ஆனால் தேவதைகள் பெண்களாக மட்டும் சித்தரிக்கப்படுவதில் இவளுக்கு ஒரு வித கோவம் ஏன் என்றல் மைக்கேல் தான் அவளின் தேவதை
அவன் முரடன் தான். ஆனால் தைரியம் உள்ளவன்; மனதில் உறுதி உள்ளவன். இவள் இரண்டு முறை தற்கொலை செய்ய முயற்சித்தவள். மீண்டும் ஒரு முறை கூட இனி யோசிக்கவும் மாட்டாள். காரணம், அவன் தான். அவனின் பாதி தைரியம் இவள் மனதில் இப்போதும் உணர்ந்தாள். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் வாழ்க்கை முடியவில்லை என்று தோன்றியது. மைக்கேல் பல முறை அவளோடு இதைத்தான் சொல்வான்.
அவன் இனி அவள் வாழ்க்கையில் இல்லை என்றாகிவிட்டது. சாலையின் ஓரத்தில் அவன் நிற்பது போல் இருந்தது. அது அவன் நிற்கும் இடம் தான். இன்று அது வெற்றிடமாகத் தோன்ற அவள் மெல்ல அந்த நடுநிசியில் நடந்தாள். இனி தன் தேவதை தனக்கில்லை என முடிவு செய்தபடி!
கருத்து:
தேவதைகளுக்கு பால் இல்லை. நம் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் அந்த தேவதை நம்மோடு இல்லை எனிலும் அந்த தாக்கம் இருந்தால் போதும் அந்த தேவதையே நம்மோடு இருப்பது போல. தேவதைகள் தரை இறங்குவதில்லை; தரையில் தான் இருக்கிறார்கள்!
விஜய குமார்
18. K2K00025
தேவதை
• எந்தன் உலகமே அவர்தான் •
நான் நல்லவன் ,
நான் எவருக்கும் துரோகம் செய்ததில்லை ,
நான் சுதந்திரப்பறவை ,
நான் ரசிகனாக இருந்து கலைஞன் ஆனேன்
இவை அனைத்துக்கும் காரணம் என் தந்தை.
எனக்கு சிறு வயதாக இருக்கும் பொழுது
நான் வீட்டில் தலைவாசல் தடுக்கி விழுந்துவிட்டேன்
அன்று அறிந்தேன் பாசத்தின் அதிபதி அவர்தான் என்று.
எந்தன் உயிரே நீ பாமரன்ஆக இருந்தபோதிலும்
நான் பணக்காரனாக இருந்தேன்
உந்தன் அன்பினால் .
உங்க கஷ்டத்தை வெட்டி வெட்டி
அதை மாற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தீங்களே அப்பா
அப்பா நீங்க கொடுத்த பாசத்தை இங்கு எவரும் தரவில்லை,
எனக்காக நீங்க வாழ்ந்தீர்கள்
உங்களால நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ,
நீங்க வேலைக்கு போயிட்டு தின்பண்டம் வாங்கி கொண்டு வருவீங்களா
நான் வேலைக்குப் போகும் போதெல்லாம் அதை நினைப்பேன் ,
உண்ண உணவும்
உடுத்த உடையும்
இருக்க இடமும்
தந்தவர் மட்டுமா நீங்க
என் வாழ்க்கையை செதுக்கிக்கொண்டிருக்கும் சிற்பக்கலைஞனே
நீங்கதானே அப்பா .
உங்களப் பத்தி உங்க கிட்டே சொல்லிக்கிட்டு இருக்கேன் பாருங்களே இருங்க அப்பா உங்கள பத்தி என் வருங்கால மனைவிகிட்ட சொல்ல போறேன்
ஓய் கண்மணி '
உன்ன பத்தி சொல்லுங்கன்னு
என் கிட்ட கேட்டுக்கொண்டே இருப்பேன்ல இப்போ சொல்றேன் ஆனா
என்ன பத்தி இல்ல எங்க அப்பாவை பத்தி சொல்றேன் ஏன்னா அவர பத்தி சொன்னாலே என்ன பத்தி சொல்ற மாதிரி :
சின்ன வயசுல எனக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு ஒரு ஒரு ஆஸ்பத்திரியை என்ன கூட்டிட்டு போயிட்டு பாத்தாரு
எனக்கு அப்போ தெரியல பிற்காலத்துல அவரை கூட்டிகிட்டு நான் ஒரு ஒரு ஆஸ்பத்திரியை
போயிட்டு பார்ப்பேனு ,
சின்ன வயசுல இருந்தே எனக்கு எங்க அப்பா நான் ரொம்ப பிடிக்கும் அவர்
என்னை அடிக்க மாட்டாரு
திட்ட மாட்டாரு
கோவப்படும் மாட்டாரு
அதனாலேயே நான் ரொம்ப நல்லவனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன் எப்பவும் நல்லவனாகவே இருப்பேன் எங்க அப்பாவுக்காக,
அவர் எனக்காக சொத்து, பணம் இது எதுவுமே சேர்த்து வைக்கலை
ஆனால் அன்பு என்னும் மிகப்பெரிய சொத்து கொடுத்திருக்காரு,
நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது மதிப்பீட்டில் எல்லாம் சிவப்புக்கோடு தான் இருக்கும் அவனாலும் கையெழுத்து போட்டு கொடுத்தவாறு எங்க அக்கா திட்டிக்கிட்டு இருப்பாங்க அவன் சரியா படிக்கத்தற்கு நீங்க தான் காரணம்னு
இருந்தாலும் அவர் சொல்லுவார் நீ இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சா தேர்ச்சி பேரலாம்னு சொன்னார்
அவருக்காகவே நான் பன்னிரண்டாவது வரைக்கும் படிச்சேன்,
படிச்சு முடிச்சதும் ஐடிஐ படித்துவிட்டு அரசு பேருந்து ஓட்டுநர் போறேன்னு சொன்னேன் ஆனா அவரு வேண்டாம்னு சொல்லிட்டாரு
அப்புறம் கணினி பயிற்சி மையம் போனேன் அப்புறம்
புகைப்படம் மையத்துக்கு போயிட்டு புகைப்படம் எடுக்க கத்துக்கிட்டேன் அப்புறம்
ஒரு ஸ்டுடியோவில் வேலை செய்தேன் அப்புறம்
தொழிற்சாலையில் ஒரு மாதத்திற்கு மட்டுமே வேலை செய்தேன் அப்புறம்
சொந்தமாகவே ஒரு அரிசிகடை வைத்தேன்
இது எல்லாமே அவரால தான் ஏன்னா
நான் எதாவது கேட்டால்
உனக்கு என்ன தோணுதோ அதை செய்பானு சொல்லுவாரு
இப்பவும் எனக்கு என்ன தோணுதோ அதைதான் நல்ல வழியில் நான் செய்வேன்...
விண்ணுலகில் இருந்துகொண்டு
மண்ணுலகில் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும்
என் தந்தையே தேவதை ஆண்தேவதை...
::: இந்த உலகம் பாசத்தால் இயங்குகிறது
எந்தன் உலகம் ஆண்தேவதையான
என் தந்தையின்ஆல் இயங்குகிறது :::
-அன்புக்கடவுள் கணபதி ரவிக்குமார்,
( ஒரகடம் ).
19. K2K-00079
தேவதை
***********
திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் குடைராட்டினம் அருகே தனியே நின்று மிரள மிரள விழித்துக் கொண்டிருந்த சிறுமியிடம் சென்று கனிவாக பேசினார். சிறுமிக்கு ஆறேழு வயது இருக்கலாம்.
தாயைப்பிரிந்த நிலையில் பயந்து போயிருந்தாள் சிறுமி.
"பாப்பா..உன் பெயரென்னம்மா..யார் கூட திருவிழாவுக்கு வந்த.." பேசத்தயங்கிய குழந்தையிடம் மீண்டும் சொன்னார்.
"நீ விவரம் சொன்னாதான் உன்னை உங்க வீட்ல கொண்டு போயி சேர்க்க முடியும்..இந்தா சாக்லேட் சாப்பிட்டுகிட்டே சொல்லு பார்ப்போம்.."
பயத்தை உதறி கையில் சாக்லேட்டை வாங்கியபடி மழலைக் குரலில் சொல்லியது குழந்தை.
"நான் மோகனா..அம்மா பேரு தேவதை..திருவிழா பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு..அதான் அம்மா கூட்டிட்டு வந்துச்சு..பஞ்சுமிட்டாய் பார்த்துட்டு ஓடிவந்தேனா அம்மாவைக் காணலை..அம்மா வேணும்.." லேசாய் விசும்பல் குழந்தையிடம்..
"நான்தான் சொன்னேன்ல...உன்னை அம்மாகிட்டே சேர்ப்பேன்னு..அம்மா பேரை மறுபடியும் சொல்லு..அவங்க எப்படி இருப்பாங்க.."
"எங்க அம்மா பேரு தேவதை...அழகா இருப்பாங்க...குழந்தை சொல்ல குணசேகரன் யோசித்தார். பெயரே தேவதையா..இல்லை குழந்தை அம்மாவின் அழகைப் பற்றிச் சொல்கிறதோ தெரியவில்லையே.."
"ஏய்யா ஏட்டு..சுந்தரம் இங்க வா.. ஒலி பெருக்கியில எல்லா இடத்துலயும் கேட்கற மாதிரி தேவதைங்கறவங்க எங்க இருந்தாலும் குடைராட்டினம் அருகே வரவும்..உங்க குழந்தை மோகனா இங்க இருக்கான்னு அறிவிப்பு கொடுய்யா.. "சற்று நேரத்தில் எல்லா இடத்திலும் தேவதை பெயர் எதிரொலித்தது.
அறிவிப்புக் கொடுத்த சில நிமிடத்துக்குள் மூச்சு வாங்க ஓடி வந்தாள் அந்த பெண். முகமெல்லாம் தழும்புகளுடன் கோரமாயிருந்தது அவளின் முகம்.
"ஹை ..தேவதை அம்மா வந்துட்டாங்க.".குணசேகரன் பிடியிலிருந்து தாவிக்குதித்து ஓடியது குழந்தை.
"என்ன பாப்பா...இப்படி பண்ணிட்ட ..அம்மாவைத் தவிக்க விட்டுட்டியே...தேடாத இடமில்ல..தங்கமே வாடி.." கட்டியணைத்து உச்சி மோந்தாள் அவள்.
"ஏம்மா..குழந்தைய ஒழுங்கா பார்த்துக்க வேண்டாம்..ஆமா உங்க பேரு தேவதையா.."
"இல்லைங்க..என் பேரு அம்மிணி.."
"அப்ப பாப்பா...நீ ஏன்மா தேவதைன்னு சொன்ன..அம்மா பேரு தெரியலையா..."
"எங்க குடிசை வீட்ல திடீர்னு தீப்பிடிச்சுதா..அப்ப என்னைக் காப்பாத்தி வெளிய தூக்கிட்டு வரும்போது அம்மாவுக்கு முகமெல்லாம் புண்ணாயிடுச்சு...அதனால அப்பாக்கு அம்மாவைப் பிடிக்கலையாம்.. எங்களை விட்டுட்டு போயிட்டாரு.. அன்னிலருந்து எனக்காகவே உழைச்சு வாழுது எங்கம்மா..நான் கேட்டதெல்லாம் வாங்கித் தருது...ஸ்கூல்ல தேவதை கதை சொன்னாங்க டீச்சர்... தேவதை கேட்டதெல்லாம் தருமாம்.. நான் கேட்டதெல்லாம் அம்மாதானே தராங்க...அதான் நான் அம்மாவை தேவதைன்னு கூப்பிடறேன்..இந்த பெயர்தான் எனக்குப் புடிச்சுருக்கு...நான் எப்பவும் தேவதைன்னுதான் அம்மாவைக் கூப்பிடுவேன்.."
"ஆமாங்க..என்ன சொன்னாலும் கேட்காம என்னை தேவதைன்னுதான் கூப்பிடும் பாப்பா.. "வெட்கத்தோடு சொல்லிய பெண்ணை உண்மையாக தேவதையாகவே பார்த்தார் குணசேகரன்.
கருத்து: உழைப்பையே வாழ்க்கைத்துணையாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் அத்துணை பெண்களும் தேவதைகள்தாம்.
பெயர் கி.இலட்சுமி
20. K2K-00031
தேவதை
கீழ் வானம் சிவசிவக்க ஆதவன் தன் கரங்களை மேலுயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டு வெளிவந்தான். தோட்ட வேலை முடித்துவிட்டு பிரியா வீட்டினுள் சென்றாள். தோட்டத்தில் பறித்த காய்கறிகள் பழங்கள் கீரைகள் எல்லாம் ஒரு ஓரம் வைத்துவிட்டு அடுப்பு மூட்டி சமைக்கத் தொடங்கினாள்.
அதிகாலை கதிரவனின் இதமான உஷ்ணத்தோடு நன்கு நீராடி நன்கு உடுத்திக்கொண்டு கந்தன் காலை உணவிற்காக "பிரியா...." என்று அழைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.
"அடடே... என்னடி நல்லா ஃபிரஷா இருக்கு காய்கறி எல்லாம்..."
"ஆமாயா... எந்த அவசரமும் இல்லாம அதுவா மொலைக்கட்டும்னு விட்டு வச்சது... பாக்கவே எப்படி இருக்கு பாத்தியா..."
"ஆமா புள்ள... இந்த கொரோனா காரணமா மார்க்கெட் மூடுனாலும் மூடுநானுங்க... எதுக்குமே அவசரம் இல்லாம போச்சி.
வெறும் தண்ணிய மட்டும் எடுத்துக்கிட்டு எப்படி விலஞ்சிருக்குல்ல...." என்று பேசிக்கொண்டு பிரியா தோட்டத்தில் இருந்து பறித்து வந்த அத்தனையையும் எடுத்துப் பார்த்தான் கந்தன்.
"ஏபுள்ள... இம்புட்டும் நமக்கு எதுக்கு... அக்கம் பக்கம் குடுத்துடலாம்ல... இது எல்லாமே நல்ல பொருள்... மிஞ்சி போனா ஒரு நாள் தான நல்லா இருக்கும்... நம்ம ரசாயனம் எதுவுமே தெளிக்கலயே..."
"வந்துட்டாரு கர்ணன்.... இங்க பாருயா...இத்தோட கடை எல்லாம் சாத்தி பன்னெண்டு நாள் ஆச்சி... ஊட்ல வச்சிருந்த காசுலா காலி ஆக போகுது... இன்னும் எத்தன நாளைக்கு இப்புடியே இருக்குமோ தெரியல"
"சரி அதுக்காக இதெல்லாம் நம்மளே வச்சிக்க முடியுமா... அடிக்கிற வெயிலுக்கு அழுகிதான போகும்....?'
"உன்னோட மூள மாதிரி அழுகி தான்யா போகும்.... உன் மரமண்டைக்கு...."
என்று கோவமாக கந்தனை திட்டிக்கொண்டே அவனுக்காக சுட்ட தோசையை தட்டில் போட்டு அவன் கையில் கொடுத்தாள்.
தோசைத் தட்டை வாங்கிக்கொண்டு டிவியை ஆன் செய்து அதன்முன் சாப்பிட அமர்ந்தான் கந்தன்.
'வரலாறு காணாத அளவு நோய் தொற்று பரவுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்'
டிவி அலறியது. இருவரும் அதில் மூழ்கினார்கள். நோய் பரவுகிறது என்பதைவிட இவர்கள் பாரப்பும் செய்திகள் பயத்தை அதிகமாக்கியது. இந்நிலைமை தொடர்ந்தால் நிச்சியம் மார்க்கெட் இன்னும் பலநாள் மூடியே தான் இருக்கும். தங்கள் வீட்டில் வளரும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாம் வீணாகதான் போகும். இன்னும் ஐந்து நாள் இது தொடர்ந்தால் ஆறாம் நாள் ஒரு வேளை சோறு தான் கிடைக்கும். அடுத்த ஆறாம் நாள் அதுவும் இல்லாமல் போகும். இவையெல்லாம் இருவரும் யோசித்து பயப்படத் தொடங்கினர்.
இந்நிலையில் இருந்து தப்பிக்க பிரியா ஏற்கனவே ஒரு வழி கண்டுவிட்டாள்.
தனது தந்தையின் நிலத்தை, அவர் மறைவிற்குப் பிறகு, கந்தனும் அவன் மனைவி பிரியாவும் சேர்ந்து தோட்டமாக அமைத்து அதன் மத்தியில் போதுமான அளவு சிறியதொறு அழகிய வீடு எழுப்பி அதில் வசித்து வந்தனர். மண்ணின் வளம் காரணமாக எது விதைத்தாலும் முளைத்தது. வீட்டுத் தோட்டத்தில் முளைத்த அனைத்தும் வழக்கமாக மார்க்கெட்டில் கொண்டுபோய் கந்தன் அங்குள்ள வியாபாரிகளிடம் விற்றுவருவான். இயற்கையாக வளர்ப்பதினாலேயே கந்தன் தோட்டத்துப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் தனி மதிப்பு. ஆனால் அங்கு சென்ற பிறகு ரசாயனம் தெளிக்கத்தான் படுகிறது என்ற வருத்தம் அவனுக்கு எப்போதும் உண்டு. இப்போது பிரியா எண்ணமிட்டு இருக்கும் காரியம் கை கூடினால் அந்த வருத்தமும் தீரும்.
"இந்தாயா... டிவி பாத்தது போதும்.. நான் சொல்றத கேளு..."
கந்தன் டிவியை அமர்த்தி விட்டு அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.
பிரியா தொடர்ந்தாள்.
"நம்ம தோட்டத்து பொருள எல்லாம் இந்த தெரு முக்குல ஒரு கட ஒன்னு போட்டு நம்ம ஊரு ஆளுங்களுக்கு வித்தா என்ன?"
கந்தன் முகம் மலர்ந்தது.
'ஆறாம் நாள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டாள் பிரியா. இவள் இல்லை என்றால் நான் என்ன ஆவேன்?'
'வரம் கொடுக்க தேவதை வரும் என்பார்கள். தேவதையே வரமாக வந்தவள் என் பிரியா' என்று தான் மனைவியின் பெருமையை மனதேவதை
கீழ் வானம் சிசுவசிவக்க ஆதவன் தன் கரங்களை மேலுயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டு வெளிவந்தான். தோட்ட வேலை முடித்துவிட்டு பிரியா வீட்டினுள் சென்றாள். தோட்டத்தில் பறித்த காய்கறிகள் பழங்கள் கீரைகள் எல்லாம் ஒரு ஓரம் வைத்துவிட்டு அடுப்பு மூட்டி சமைகத் தொடங்கினாள்.
அதிகாலை கதிரவனின் இதமான உஷ்ணத்தோடு நன்கு நீராடி நன்கு உடுத்திக்கொண்டு கந்தன் காலை உணவிர்க்காக பிரியாவை அழைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.
"அடடே... என்னடி நல்ல ஃபிரஷா இருக்கு காய்கறி எல்லாம்..."
"ஆமாயா... எந்த அவசரமும் இல்லாம அதுவா மொலைக்கட்டும்னு விட்டு வச்சது... பாக்கவே எப்படி இருக்கு பாத்தியா..."
"ஆமா புள்ள... இந்த கோரோனா காரணமா மார்க்கெட் மூடுனாலும் மூடுநானுங்க... எதுக்குமே அவசரம் இல்லாம போச்சி.
வெறும் தண்ணிய மட்டும் எடுத்துக்காட்டு எப்படி விலஞ்இருக்குல்ல...." என்று பேசிக்கொண்டு பிரியா தோட்டத்தில் இருந்து பறித்து வந்த அத்தனையையும் எடுத்துப் பார்த்தான் கந்தன்.
"ஏபுள்ள... இம்புட்டும் நமக்கு எதுக்கு... அக்கம் பக்கம் குடுத்துடலாம்ல... இது எல்லாமே நல்ல பொருள்... மிஞ்சி போன ஒரு நாள் தான நல்ல இருக்கும்... நம்ம ரசாயனம் எதுவுமே தெளிக்களயே..."
"வந்துட்டாரு கர்ணன்.... இங்க பாருயா...இத்தோட கடை எல்லாம் சாத்தி பன்னெண்டு நாள் ஆச்சி... ஊட்ல வச்சிருந்த காசுலா காலி ஆக போகுது... இன்னும் எத்தன நாளைக்கு இப்புடியே இருக்குமோ தெரியல"
"சரி அதுக்காக இதெல்லாம் நம்மளே வசிக்க முடியுமா... அடிக்கிற வெயிலுக்கு அழுகிதான போகும்....?'
"உன்னோட மூல மாதிரி அழுகி தான்யா போகும்.... உன் மரமண்டைக்கு...."
என்று கோவமாக கந்தனை திட்டிக்கொண்டே அவனுக்காக சுட்ட தோசையை தட்டில் போட்டு அவன் கையில் கொடுத்தாள்.
தோசை தட்டை வங்கிக்கொண்டுக்கு டிவியை ஆன் செய்து அதன்முன் சாப்பிட அமர்ந்தான் கந்தன்.
'வரலாறு காணாத அளவு நோய் தொற்று பரவுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்'
டிவி அலறியது. இருவரும் அதில் மூழ்கினார்கள். நோய் பரவுகிறது என்பதைவிட இவர்கள் பார்ப்பும் செய்திகள் பயத்தை அதிகமாகியது. இந்நிலைமை தொடர்ந்தாள் நிச்சியம் மார்க்கெட் இன்னும் பலநாள் மூடியே தான் இருக்கும். தங்கள் வீட்டில் வளரும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாம் வீணாகதான் போகும். இன்னு ஐந்து நாள் இது தொடர்ந்தால் ஆறாம் நாள் ஒரு வேளை சோறு தான் கிடைக்கும். அடுத்த ஆறாம் நாள் அதுவும் இல்லாமல் போகும். இவரெல்லாம் இருவரும் யோசித்து பயப்பட தொடங்கினர்.
இந்நிலையில் இருந்து தப்பிக்க பிரிய ஏற்கனவே ஒரு வழி கண்டுவிட்டாள்.
தனது தந்தையின் நிலத்தை, அவர் மறைவிற்குப் பிறகு, கந்தனும் அவன் மனைவி பிரியாவும் சேர்ந்து தோட்டமாக அமைத்து அதன் மத்தியில் போதுமான அளவு சிறியதொறு அழகிய வீடு எழுப்பி அதில் வசித்து வந்தனர். மண்ணின் வலம் காரணமாக எது விதைத்தாலும் முளைத்தது. வீட்டுத் தோட்டத்தில் முளைத்த அனைத்தும் வழக்கமாக மார்க்கெட்டில் கொண்டுபோய் கந்தன் அங்குள்ள வியாபாரிகளிடம் விற்றுவருவான். இயற்கையாக வளர்ப்பதினாலே கந்தன் தோட்டத்துப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் தனி மதிப்பு. ஆனால அங்கு சென்ற பிறகு ரசாயனம் தெளிக்கத்தான் படுகிறது என்ற வருத்தம் அவனுக்கு எப்போதும் உண்டு. இப்போது பிரியா எண்ணமிட்டு இருக்கும் காரியம் கை கூடினால் அந்த வருத்தமும் தீரும்.
"இந்தயா டிவி பாத்தது போதும்.. நான் சொல்றத கேளு..."
கந்தன் டிவியை அமர்த்தி விட்டு அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.
பிரியா தொடர்ந்தாள்.
"நம்ம தோட்டத்து பொருள எல்லாம் இந்த தெரு முக்குல கட ஒன்னு போட்டு நம்ம ஊரு ஆளுங்களுக்கு வித்தா என்ன?"
கந்தன் முகம் மலர்ந்தது.
'ஆறாம் நாள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டால் பிரியா. இவள் இல்லை என்றால் நான் என்ன ஆவேன்?'
'வரம் கொடுக்க தேவதை வரும் என்பார்கள். தேவதையே வரமாக வந்தவள் என் பிரியா' என்று தன் மனைவியின் பெருமையை மனம் முழுக்க பாடினான். காதலோடு அவளை அணைத்து உச்சி முகர்ந்தான்.
"யோவ் விடுயா... என்ன இது காலங்காத்தால இதெல்லம்...."
என்று அவனை விலக்கி விடும் பொய்யான முயற்சியில் தோற்று போனவளாய் நடித்தாள்.
"நாளை நிச்சயமாய் மாறும்...!
விடியும் என்ற எதிர்பார்ப்போடும்
முடியும் என்ற நம்பிக்கையோடும்
உழைக்கும் நாம்...!"
MrDexzty
21. K2K -00017
தேவதையை கண்டேன்
கதிரவனின் சுடரொளியில் பூத்தது காலைப்பொழுது......என்றும்போல் அன்றும் பறவை பட்டாளத்தின் இசையில் துயில் நீங்கி எழுந்தாள் அவள்.....
தன் வீட்டின் முற்றம் நோக்கி செல்ல துவங்கினாள் தன்னவர்களை காண.....
அவளை எதிர்நோக்கி காத்திருந்ததுபோல் புன்னகை பூத்து அதற்கே உரிய மணமொழியால் வரவேற்றன பூச்செடிகள்.
பூவுக்கும் தென்றலுக்கும் இடையே நடந்த அன்பு பரிமாற்றத்தால் பூந்தென்றலாய் அவ்விடமே ரம்மியமாக காட்சியளித்தது.
தென்றல் தன் அன்னையின் குரல் கேட்டு தன்னவர்களுக்கு பிரியாவிடையளித்து தன் வீட்டினுள் செல்ல முற்பட்டாள்.
அப்பொழுது முன்னறையில் இயங்கிகொண்டிருந்த தொலைகாட்சியில் செய்தியாளர் "சென்னையில் வேலைதேடிவந்த பட்டதாரி வாலிபர் மனம் உடைந்து தற்கொலை" என அதிவிரைவாக விவரித்து கொண்டிருந்தார்.அதை கேட்ட நொடி நினைவலைகளில் சிலையாய் ஸ்தம்பித்தாள தென்றல்.....
அவள் நினைவுகளிலோ ஒரு போராட்டமே நடந்தேரியிருந்தது.....
தென்றல் தன் சிறுவயதில் இருந்தே உயிரினங்களிடம் எல்லையில்லாத அன்பு பிணைப்பை கொண்டிருந்தாள்.
தென்றல் என்றால் எல்லாருக்கும ஒரு இனம்புரியாத பிரியம் தோன்றும்...
அவள் முகத்தில் நிலைத்திற்கும் புன்முறுவல்தான் அதற்கு காரணமோ என்னமோ.....?
தென்றல் பட்டதாரி படிப்பில் நல்ல மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாள்.தினமும் வேலை தேடி சுற்றுவதையே கடந்த ஒரு வருடமாக வேலையாக வைத்திருந்தாள்.ஏனோ அனைத்து கதவுகளும் அவள்வரையில் மூடப்பட்டே இருந்து.....
அந்த நாட்களில் ஒரு நாள் அவள் வேலைதேடி அலைந்து திரிந்து வருத்தத்துடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அப்பொழுது.....
அப்பொழுது ஒரு முதியவர் அவளை நெருங்கி வருவதை உணர்ந்தாள்.கந்தலான ஆடையும், அழுக்கு படிந்த முகமும்,தீர்க்கதரிசி தோற்றமோ இல்லை பிச்சைகார தோற்றமோ அவரது குறு குறு பார்வை அவளுக்கு பயத்தை காட்டியது.....எனினும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் நேர்கொண்ட பார்வையுடன் எதிர்நோக்கி நின்றாள் தென்றல்.
அவரோ " என்ன பொண்னே நீ தேடுறது கிடைக்கல போல? " என கேள்வி எழுப்பினார்.
தென்றலுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.
"உன்னத்த பொண்னெ கேட்கல " அவளும் உற்று நோக்கினாள் "உனக்கானத தேடுனா கிடைக்கும் இன்னொருத்தனோடது உனக்கெப்புடி கிடைக்கும்"
இப்பொழுதும் அவளுக்கு விளங்கவில்லை.மலங்க மலங்க முழித்து கொண்டு அங்கேயே அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.
"விளங்கலையோ,போ போய் உன்னையே கேளு" என்று சொல்லிவிட்டு நிற்காமல் போயே போய்விட்டார் பெரியவர்.
அம்முதியவரின் குரல் அவள் மனதில் பேரொளியாய் ஒலித்துகொண்டேயிருந்தது எப்படியோ அவள் வீட்டை அடைந்திருந்தாள்.அதன் பிறகு அவளுக்கு அதே நினைவுதான்.அவள் சுய ஆய்வு செய்ய துவங்கினாள்.....
என் வாழ்வின் தேவை என்ன?
எனக்கானது எது?
தான் யார்?
நான் யார்?
அவளுள் பல கேள்விகள்.....
விடை கிடைத்ததா.....
அர்த்தம் புலப்பட்டதா.....
விடை அவளது புரிதலே அவள் இன்று மகிழ்ச்சியுடன் இயக்கிவரும்
""தென்றல் பூஞ்சோலை"" யின்
துவக்கம்,ஆக்கம்,வெற்றி அனைத்திற்கும் அடிதலம்.
தென்றல் தென்றலாய் வாழ்க்கையை வென்றுகாட்டினாள்.
மீண்டும் தன் அன்னையின் குரல் கேட்டு நினைவலைகளிலிருந்து மீண்டு பூஞ்சோலைக்கு கிளம்பினாள்.....
தென்றலின் வாழ்க்கையைபோல் எல்லாருடைய வாழ்க்கையிலும் தீர்க்கதரிசிபோல் ஒரு தேவதை வருவாளா என்ன...?
மனிதன் அவனின் மனதையொத்த செயல்களில் ஈடுபடும்போதே முழுமையானவனாக உணர்கிறான்.
""""தனக்குள் இருக்கும் தேவதையை கேளுங்கள் அவள் சொல்வாள் நீ யாரென்று""""
தியா
22. K2K-00048
தேவதை ...
ஒரு பெண் ஒரு வீட்டில் தனிமையின் பிடியில் வாடிக்கொண்டு அனுதினமும் மாலையில் எவரும் இன்றி கடவுள் சிலை முன் சிலையாக நின்று கண்ணீர் வடித்து மனம் உருகி தனக்கென ஓர் துணையினை ஏதேனும் ஓர் வழியில் தனக்கு தருமாறு வேண்டி மண்டி இட்டு வருந்தினாள் .,
இவளின் வருத்தமும் , வலி , வேதனைகளும் , கடவுளை நீங்கி வேறுயாரும் அறியா வண்ணம் இருந்தது .,
இவளின் பெற்றோர்கள் தங்கள் வியாபாரத்தினை முடித்து , வீடு திரும்பும் நேரம் , இரவு 9.00 மணி காலநேரம் ஆகும் .,
ஒரு முறை இவளுக்கு ஏற்பட்ட ஒரு நோயால் பாதிக்கப்பட்ட இவள் , தன் சர்ம்ம அழகினை இழந்து பொழிவற்று இருந்தால் .,
எனவே , இவள் பள்ளியில் இவளுடன் இருக்கும் நண்பர்களும் இவளிடம் வேறுபாடு காட்டினார்கள் , வெளியில் எங்கு சென்றாலும் இவளின் சர்மத்தை பற்றிய அனைவரும் பேசினர் , அருவருப்பாய் கண்டனர் ,
ஒரு சில காலங்களில் , இவளின் தாயும் விளையாட்டு பேச்சாக இவளை ஒதுக்கி வைத்து பார்ப்பது போல் செயல்பட்டார்கள் ,
பெற்றோகள் , உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரும் தன்னை ஒதுக்கி வைத்த வலி சொல்ல முடியா கொடும் வேதனையை அவளுக்கு அளித்தது ,
எனவே , இனி யாருக்கும் தொந்தரவு வேண்டாம் என்று எண்ணி , தமக்கென ஒருவரை கடவுள் அளிப்பார் என்ற நம்பிக்கையில் இவள் தினந்தினமும் பள்ளியிலும் , வீட்டிலும் தனிமையில் இவளே தம்மை சிறைப்படுத்தி கொண்டால் , ஒளி இல்லா இருட்டிலும் பயத்துடன் வாழ்ந்தால் , ஒளியினை தோற்றுவிக்க விரும்பாமல் இருளிலே இருளாக இருந்தால் ,
பள்ளி வாழ்க்கை முடிந்ததும் இவளின் சர்மமும் மீண்டும் பொலிவு பெற்று அழகிய உருவாக உருமாரினால் ,
கல்லூரியிலும் யாருடனும் சேராது தனிமையிலே விளங்கினாள் , தானாக வந்து சிலர் நட்பு பாராட்ட , வரும் நட்பினை அன்புடனும் பணிவுடனும் அரவணைத்து மகிழ்ந்தாள் , ஒருவன் இவளுடன் நெருங்கிய தோழமை கொண்டான், அவளுடைய தூய அன்பினை நிலையில்லா மனதுடைய எவராலும் உணர இயலவில்லை , எனவே இவள் அன்பினை பெற்று இவள் உள்ளதினை காயப்படுத்தி , இவளிடம் உள்ள திறமைகள் உதவியுடன் அவர்கள் வேலையினை முடித்து , இவளை விட்டு விலகினர் , ஒவ்வொரு கணமும் நரகமாக உணர்ந்தாலும் தனது அன்பினை மட்டுமே பிறருக்கு அளித்தால் ,
இதனால் இவளின் குடும்பத்தில் இவளின் புகழ் பாடப்பட்டு , போற்றப்பட்டு வீட்டின் தேவதையாக விளங்கி அனைத்து செயல்பாட்டினை நடைமுறை படுத்தி செயல்படுத்தினால் , கல்லூரியில் இவளின் அருமை தெரியாது விலகியவர்கள் , இவளின் அருமை அறிந்த பின்பு மீண்டும் இவளின் அன்பை பெற தாம் தகுதி இழந்ததாக கருதி விலகியே இருந்தனர் ,
அனைத்து நபர்களின் வெருப்பினையும் , பழி சொற்களையும் , கோபத்தையும் , ஏற்றால் , வலி , வேதனை , கொடும் காரிருள் கொண்ட நிலை , மன உளைச்சல் என அனைத்தையும் பழகினால் ,
இப்படி அனைத்தையும் கொண்ட இவள் வாழ்வில் , எப்போதும் இதனால் பாதிக்கப்பட்ட இவள் இன்றளவும் பேரழகினை பொழியும் துய அன்பினை மட்டுமே அனைத்து நிலையிலும் வழியிலும் அளித்து சென்றால் ,
இந்த அழகிய தேவதையை கடவுள் மனிதர்களின் வாழ்க்கையில் இணைத்து உலகில் தூய அன்பினை நிலைநாட்டி , அன்பின் பாவத்தின் உண்மையான உருவினை தோற்றுவிக்க படைத்தார் என்பதை உணர்ந்து ,
அவள் தனது பணியினை அத்மார்த்த நிலையுடன் ஏற்று செயல்பட்டு வந்தால் ,
இந்த தேவதையின் உண்மை ரூபம் அறியாதவர் தூய அன்பினை இழந்து வாடுபவரானர் ,
இவளின் உண்மை ரூபம் அறிந்து தரிசனம் பெற்றவர் ,
வாழ்வில் தூய அன்பினை உணர்ந்து , அன்பின் பந்தங்கள்ளுடன் பிரியமாக வாழ்ந்தனர் ,
ஆனால் அந்த தேவதை மட்டும் என்றென்றும் காத்துக்கொண்டே இருந்தால் தம் மீதும் அன்பு அக்கறை கொண்டு இணைத்திருக்க , அன்பின் தேவதையாக திகழும் எனக்கு , பிரியமான தேவர் பிரியா வண்ணம் கிடைப்பாரா என்ற ஏக்கத்துடன் காத்திருந்தால் அந்த தேவதை .,
அன்பின் இழப்பை உணர்வதால் மட்டும் தான் இவள் அன்பினை பகிரும் அன்பு தேவதையாக விளங்குகிறாள் என்பதை இவளுக்கு உணர்த்த கடவுள் இவளுக்கு பிரியமான தேவரை அனுப்புவாரா , என்பது , வாழ்வின் புதையல் யாருக்கு கிட்டும் என்று வாழ்வில் பயனப்பவரின் பதில் போன்றது ...
கருத்து - வாழ்வில் நாம் யார் என்பதை அனைவரும் உணர்ந்தாள் , வாழ்வில் அனைத்தும் சுவாரசியம் ஆகும் ... சுயநல எண்ணம் இன்றி , எந்த பயணினையும் எதிர்பார்க்காது செயலாற்றினால் ,
வாழ்வில் என்றும் ஓர் நிம்மதி கிட்டும் ..
இப்படிக்கு .,
சி. தெய்வாணி ஸ்ரீ ,
23. K2K-00051
தேவதை
நான் வாழ்ந்து என்ன ஆகபோகிறது என்ற விரக்தியில் தன் உயிரை மாய்த்துகொள்ள செல்கின்றார் தருண். அது விடியற்காலை நேரமானதால், விரைவு வண்டியின் முன் விழுந்து தற்கொலை செய்யலாம் என்று தண்டவாளத்தில் நடந்து சென்றார். அவர் எதிர்ப்பார்த்தப்படி விரைவு வண்டியும் பெரும் இரைச்சலோடு வந்து கொண்டிருந்தது. விரைவு வண்டி அவரை நெருங்குவதற்குள் ஒரு குரல், மகனே! மகனே! என்று அழைக்க திரும்பி பார்த்தார். தண்டவாளத்திற்க்கு கொஞ்சம் தூரம் தள்ளி நிற்கும் தன் தாயின் (தேவதையின்) உருவத்தை கண்டு கண்ணீர் பெருக்கெடுக்க அவரிடம் சென்றார். என்ன ஆச்சரியம், வரைவு வண்டி அவரை கடந்து சென்றது. தன் தாயிடம் செல்வதற்குள் அவர் மறைந்து விட்டார். அப்போது தான் அவருக்கு புரிந்தது, அவருடைய தாய் இறந்து இரண்டு வாரங்கள் ஆகிறது.
வீட்டிற்கு சென்று தன்னை காப்பாற்றிய தாயை நினைத்து பார்க்கிறார், அப்போது அவரது தாய் அவருக்கு ஒரு தேவதையாகவும், வாழ்கையை வாழுவதற்காண ஒரு வாய்ப்பை தந்ததும் தெரிகிறது. உடனே கதறி அழுகின்றார், தன் தாய் உயிரோடு இருக்கும்பொழுது அவரை சரியாக பார்த்துக்கொள்ளாததையும், அவருடைய பேச்சுக்கு மதிப்பளிக்காததையும் எண்ணி பார்த்தார். ஒரு முடிவு எடுத்தார், தன்னுடைய மளிகை வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி சரிசெய்வது மற்றும் தன் சகோதரிகளின் எதிர் காலத்திற்க்கு வேண்டியதையும் செய்ய திட்டமிட்டார். தங்களுடைய சகோரன் சோகத்துடன் சிந்திப்பதை பார்த்த சகோதரிகள், அவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். நடந்ததை சொல்லி மன்னிப்பு கேட்டார் தருண். கண்ணீரோடு சகோதரிகள் நீயும் எங்கள விட்டு சென்றால் நாங்கள் என்ன செய்வது என்று அழுதனர். பின்பு தன் சகோதரிகளின் ஆலோசனையுடன் மளிகை வியாபரத்தை நடத்தினார். இரண்டு வருடங்களுக்குள் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார். இறைவன் தனக்கு தந்த மூன்று தேவதைகளையும் எண்ணி மகிழ்ச்சியடைதார். தன் சகோதரிகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார், மனநிறைவோடு வாழ்ந்தார்.
கருத்து : கருவில் சுமந்து வாழ்கை தந்த தாயும், துயருறும் போது உதவிடும் தங்கையும் என்றுமே தேவதைகள் தான்...
Brightson. T
24. K2K00050
தேவதை..
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து ஐந்து வருடம் ஆன நிலையில் மருத்துவர் ஆலோசனையும் மீறி copper-T எடுத்து கணவர் வீட்டாரின் கட்டாயத்தினால் வாரிசு வேண்டி மூன்றாவது முறை கர்ப்பம் தரித்தால்.....
அதுவரையில் தன் கணவர் வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவள் இரத்தசோகை காரணமாக குறிப்பிட்ட தேதிக்கு நான்கு நாள் முன்பாகவே பெரியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.
19.10.2004
அதிகாலை வேளையில் "No. 12, 15, 16, 18 நாலு பேரும் இருக்கீங்களா மா...இவங்க எல்லாரும் "வயிறு check பண்ண 9 மணிக்கு பச்சை அட்டைய எடுத்துட்டு OP வந்துருங்க" என்று உரத்த குரல் அலாரம் போல் ஒலித்தது....
இரண்டு வாசல் கொண்ட 11×11 சதுர அறை அது....வரிசையாக அமைக்கப்பட்டிருந்த ஆறு பிரசவ மேசையை நோக்கி ஆறு வரிசையில் கர்ப்பிணி தாய்மார்கள்....... பார்க்கயில் மருத்துவமனையா?? அல்லது பொங்கல் பரிசு வாங்க வந்தவர்களா?? என்ற சந்தேகம்!!!!என்னே இந்தியாவின் ஜனத்தொகை!!!!.......
முந்தி இருக்கும் வயிறும் அவர்களின் டுன் டுன் நடையும், பிரசத்தி பெற்ற மருத்துவமனை மணமுமே ஆஸ்பத்திரி என்று உணர்த்தியது..... மறை திரை கூட இல்லை......
"No.12 யாருமா?" மீண்டும் அதே உரத்த குரல்...
நான் தான் sister என்றால் பதட்டத்துடன்...
கையிலிருந்த பச்சை அட்டையை பார்த்து விட்டு...."ஏறிப் படுமா"...என்று கூறி கையுறையை அணிந்து குழந்தையின் தலையிரக்கத்தை காண முற்பட்டால்...." பாவடைய தூக்குமா.......ஒவ்வொரு தடவையும் சொல்லுவாங்களா...மூணாவது குழந்தை தான...என்னமோ புதுசு மாதிரி திருதிரு -னு முழிக்குற...... "என்று கூற அவள் கண்களில் நீர் துளித்தது...... சுருங்கிய நெற்றியோடு
"இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீலி கண்ணீர் வடிக்குற???" என கேட்க....."வலிக்குது sister" என்றால் தாங்க முடியாத வலியோடு.....
"அத நீ உன் புருஷன் கூட இருக்குறப்ப யோசிச்சு இருக்கணும்....வலிக்குமே-னு" என்றார் சலிப்புடன்......உடல் ரணத்தை விட அவர் கூறிய கூரிய சொல்லின் ரணம் மிகுந்தது.........ஆரா வடுவாய் பதிந்தது.....
தன் மகளின் கண்ணீர் கண்டு செந்நீர் வடித்தால் தாய் லட்சுமி.....வாயிலில் தன் அம்மசியோடு நின்று கொண்டிருந்த இரண்டு மழலையில் மூத்தவள் " அம்மாச்சி நான் பெரிய டாக்டர் ஆவென்" என்று கூற " வேண்டாம் குட்டி.....இப்ப இருக்கிற doctor-கும் செரி sister- கும் செரி.... record எழுதவே நேரம் செரியா இருக்கு......அப்புறம் எங்கிட்டு இருந்து நோயாளிகளுக்கு வைத்தியம் பாப்பாங்க......நோய் இல்லாம வரவங்களுக்கும் நோய் தான் உண்டாகும்.....சிரிச்சா முகமா இருக்கிற என் பேத்தியும் அப்புறம் robot மாதிரி மாறிடுவா.....என்று கூறி தன் பேத்தியை வாரி அணைத்துக்கொண்டாள்.....புன்னகையுடன் அம்மாச்சி லட்சுமி
20.10.2004- இறைவன் அருளால் ஆண் குழந்தை பிறந்தது.
ஆண்டுகள் சென்றன....
அனைவரும் டாக்டர் இஞ்சினியர் ஆக முற்படும் போது தன் மகளை செவிலியராக்க ஆயத்தப் படுத்தினால்....
அன்று மருத்துவமனை செல்ல வெறுத்தவள் இன்று 2/6/2020 வரை செல்லவில்லை...... ஆனால் தன் புதல்வியை தடுக்கவில்லை
;என்னை தடுக்கவில்லை... செவிலியராக செல்ல......
செவிலியராகி ஒரு வருடமான நிலையில்..
"உன் பேத்தி வைத்தியம் கேக்குமோ கேக்காதோ தெரியாது லட்சுமி.....ஆனா அவ சிரிச்ச முகம் பாத்தாலே பாதி நோய் ஓடி போயிடும்" என்று அந்த பாட்டி கூறியதை கேட்டு கர்வமுடன் நின்றால் என் தேவதை!!!!!
என் தேவதையின் அழகிய நாமம் தேன் போன்ற பா.... தேன்பா......எனினும் அன்று No.12 என்று தான் என் தாய் அறிமுகப்படுத்தப்பட்டார்.......
My angel used to remind me that not all angels have wings...some have stethescope♥
நீதி: தான் பெற்ற துன்பத்தை வேறெவரும் பெற கூடாது என்று என்னும் அனைத்து உள்ளங்களும் தேவதைகளே......என் தாயும் தேவதையே!!!!!!!
முகம் சுலிக்காமல் சேவைபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும் சமர்ப்பணம்
-Tharini T-
25. K2K-00037
தலைப்பு: தேவதை
ப்ரீதா மிகவும் உற்சாகமாகவும் அதே நேரம் பதற்றத்துடனும் இருந்தாள். மாத பரிசோதனைக்கு (monthly check-up) இன்று வந்தபோது மகப்பேறு மருத்துவர் (gynecologist) பிரேமா அவளுக்கு நாட்கள் நெருங்கிவிட்டதையும் அவளை இன்று மாலைக்குள் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுமாறும் கூறியதுதான் காரணம். ப்ரீதா தன் மனதிற்குள் கடந்த சில மாதங்ளாக நடந்தவற்றை நினைவு கூர்ந்தாள்.
ஏழு மாதத்திற்கு முன் தான் அவள் பரிசோதனைக்கு சென்று அவள் கருவின் முதல் வளர்ச்சியை கண்டது போல் இருந்தது. அதற்குள் நாட்கள் எவ்வாறு விரைந்துவிட்டன. முதல் ஸ்கேனில் அந்த கரு ஒரு சிறிய இலந்தைபழம் அளவிற்கு இருந்ததும் அவள் வயறு மெலிதாய் தெரிந்ததும், அதன் அசைவுகள் தெரிந்தபோதும் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பதினைந்து வாரங்களுக்கு பிறகு அவள் சற்று தெளிந்திருந்தாள். தன் உடல்நிலை மாறுபாட்டை ஓரளவிற்கு அவள் அறியத் தொடங்கிவிட்டாள். வாந்தி, மயக்கம் போன்றவை சற்று குறையத் தொடங்கியது. அவளுக்கு சத்தான ஆகாரங்கள் யாவும் கொடுக்கப்பட்டது. அவளுக்கு வேண்டப்பட்டவர்கள் அவள் உடல்நலம் பற்றி உடனுக்குடன் கேட்டறிந்து கொண்டனர்.
சில வாரங்கள் கடந்து...
குழந்தையின் அசைவும் , வளர்ச்சியும் நன்றாகவே இருந்தது. அவள் வயிற்றை கூர்ந்து கவனித்தால் சிலசமயம் சிறுபாதத்தின் தோற்றம் நன்றாகவே தெரியும். பல வேளையில் நன்றாக உதைப்பது தெரிந்தது. அந்த வலியும் இன்பமாகவே இருந்தது அவள் அதன் நல்ல வளர்ச்சியை எண்ணி ஆனந்தம் கொண்டாள். பல நேரங்களில் அவள் தனிமைக்கு துணையாக அந்த கருவே இருந்தது.
அவள் அதனிடம் "இன்னும் கொஞ்ச நாள்ல நீ வெளில வந்து இந்த உலகத்த பார்க்கபோற டா செல்லக்குட்டி. உன்ன கையில வெச்சு தாங்க போறோம்" என்று சொல்லும் போது அதை ஆமோதிப்பதைப் போல ஒரு உதை தெரியும். அதேபோல் அவள் நல்ல இசையைக் கேட்கும்போதும், இயற்கை எழிலை ரசித்து காற்று வாங்கும்போதும், அவள்" நீ நல்லா வருவ செல்லம்.. " என்று கூறும் போதும் நன்றி கூறுவது போல் ஒரு உதை உண்டு.
இவ்வாறு நாட்கள் கடந்து இன்று அரங்கேற்ற நாளாக அவள் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டாள். செவிலி அவ்வப்போது அவளை சரிபார்த்து விட்டு "எல்லாம் இயல்பாக (normal) இருக்கு. நீ அமைதியாவும் தைரியமாவும் இரு" என்று கூறிவிட்டு சென்றாள். வலி வர தொடங்கியது ப்ரீதா பிரசவ அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.
மருத்துவர் பிரேமா பலவருட அனுபவம் வாய்ந்தவர். இப்போது ப்ரீதாவிற்கு மிகவும் ஆறுதலாய், பொறுமையாய் அவளுக்கு தைரியம் கூறி அவள் மூச்சு மற்றும் இதர மருத்துவ விஷயங்களையும் மிக நேர்த்தியாக நிபுணத்துவத்துடன் (expertise) கையாண்டு ப்ரீதாவிற்கு சுகபிரசவத்தில் ஒரு அழகிய குட்டி தேவதை பிறந்தாள். ப்ரீதா எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.
ஒரு கணம் அவள் அதை பார்த்தபோது தனது அழுகையின் ஊடே அந்த தேவதையும் ஒரு நொடி இவள் கண்களை உற்று நோக்கியது அவளுக்கு ஆயிரம் அர்த்தங்களை தந்தது.
பின்னர் மூன்றாம் நாள் வீடு திரும்பிய ப்ரீதா சில நாட்கள் வெறுமையை உணர்ந்தாள். என்னதான் ஒத்துக்கொண்டு வாடகைத்தாயாக (surrogate mother) இருக்க சம்மதித்தாலும், இத்தனை நாட்கள் தன்னோடு இருந்த தன் உயிரை யாரோ பிரித்து சென்றார்போல் உணர்ந்தாள். அதனை பார்க்க எண்ணி ஏக்கத்திலும், பல வேளை கட்டு ஏற்பட்டும் வலியிலும் துடித்தாள், எரிச்சலும் கோவமும் கொண்டாள். ஆனால் அவளின் மனதில் தான் பெற்றெடுத்த குழந்தை எங்கோ ஒரு நல்ல தம்பதியரிடம் நன்றாக வளர போவதை எண்ணி, இதுவே நிதர்சனம் என்பதையும் உணர்ந்து அக்குழந்தையின் அந்த ஒரு நொடி பார்வை தந்த நினைவில் தன் வாழ்வின் அடுத்த பயணத்திற்கு தெளிவுடன் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள்.
தாய், வாடகைத்தாய் ஆயினும் அவளும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு அந்த வரத்தை தன் மூலம் தந்த தேவதையே.
நன்றி!!!
இப்படிக்கு
பா.பிரபு, மடிப்பாக்கம் .
26. K2K-00053
தேவதை
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜன்னி" காதோரம் வந்த அம்மாவின் வாழ்த்தில் இமை திறக்கிறேன்....சந்தோஷமாய்...
சிறு முத்தம் ஒன்றை குறும்பாய்
உதிர்த்து பதிக்கிறேன்..."தேங்க்யூ மா"...
"அம்மா...இன்னும் ஐந்து நிமிஷம் கழிச்சு எழுப்பு"
"சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா ஜனனி"
"அம்மா....கொஞ்சம் இங்கே வா... உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..
என் ஓவியங்கள்ல உனக்கு எது பிடிக்கும்?
" நீயே என் சிறந்த ஓவியமடி"என்கிறாள்
செல்லமாய் தலை கோதியபடி...
அம்மா இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வேணாம்...சொல்லு... "என் ஓவியம் எந்த அளவுக்கு உனக்கு பிடிக்கும்?"
உன் மனசே ஓவியம் ஜனனி... எனக்கு பிடிக்காம போயிருமா?
சீக்கிரம் குளிச்சு கிளம்பு ஜனனி...
"இன்னைக்கி உன்னோட ஓவியக் கண்காட்சிக்கு விருது தர்றாங்க...
சரியான நேரத்துக்கு போகனும் ஜனனி...நேரத்துக்குனு ஒரு மதிப்பு இருக்கு..."
இன்னைக்கி எனக்கு முக்கியமான ஒரு மீட்டீங்... அப்பா உன் கூட வருவார்...சரிங்க டாக்டர் அம்மா..
"இன்னைக்கி ஆட்டிச விழிப்புணர்வு தினம் தானே" எனக்கு ஞாபகம் இருக்கு மா...
(விழா மேடை...)....
"அன்பே சிறந்த மருந்து இந்த தேவதைகளுக்கு" என்ற வாசக பேனர் அன்பாய் வரவேற்றது...
வணக்கம் ஜனனி...உங்களோட இந்த வெற்றிய பத்தி ஒரு சில வார்த்தைகள் எங்களோட பகிர்ந்துக்கோங்களேன்...
எல்லாருக்கும் வணக்கமங்க...
"வேறு வழியே இல்லையெனும் போது வரும் தைரியத்துக்கு பலம் அதிகம்ங்க".இன்னும் உங்க மகள் பேசலையா என கேட்ட ஊராரின் கேள்விக்கு பயந்த என் பெற்றோரின் நாட்கள் மிக கனமானது...
" எங்கே என் புன்னகை?ஏன் எனக்கு புன்னகைக்க தெரியவில்லை?நான் நானாகத்தான் இருக்கிறேனா?என்ற கேள்வியில் பயணித்த நாட்கள் அதிகம்...
எனக்கு என் அப்பா சொன்ன இந்த தோற்றுப் போன முயல் கதையும் தந்திரமிக்க நரி கதையும் பிடிச்சதே இல்ல. எனக்கு பிடிச்சதெல்லாம் வண்ணங்கள்...அதுவே என் எண்ணமாச்சு...ஓவியமாச்சு..
என்னோட முயற்சியின் விதைகள் என்னோட அம்மா அப்பா தான்...
"நான் மட்டும் இல்லைங்க சதத்தில் சதமடித்தவரான சச்சின்,இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய எல்லாருமே மிகக் குறைந்த நிலை ஆட்டிசம் பாதித்தவர்களே"
அன்பே சிறந்த மருந்து என் போன்ற போராடும் தேவதைகளுக்கு...
(கரகோஷத்துடன் விழா நிறைவு)
ஆனந்த சொர்க்கத்தில் அப்பா...
நீதி: இந்த உலகத்துல தன்னைத் தவிர எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பதாய் எண்ணிக் கொண்டு ஒவ்வொருவருமே புலம்பிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம்.அங்கே அந்த ஆட்டிச தேவதையிடம் நாம கற்றுக் கொள்ள நிறைய இருக்கு.
முயற்சிகள் மட்டுமே மாற்றத்தின் வேர்.
பூங்கொடி- தேவதை
27. K2K-00001
என் வாழ்வில் நான் 8 ரகசிய தேவதைகளை கண்டுகொண்டேன் என்னடா இது ஆரம்பத்துலயே ஒன்னுக்கு 8 சொல்றான் எங்க போகபோதோ பாக்குறீங்களா !!!
ஆமாங்க நான் ஒன்றன் பின் ஒன்றாக 8 தேவதைகளை பார்த்திருக்கேன் அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு இருக்கு ஆனா இல்லனு பயங்கரமா குழப்பமாக்கி விட்ருச்சுங்க.. அத தான் இத்தன வரிகளா நீயும்!! உங்க எண்ணோட்டம் புரியுது சொல்றேன் சொல்றேன்
என் பெயர் மகிழ் நானும் மற்ற 90 % சதவிகிதம் மக்களை போலவே நடுத்தர வர்க்கம் எதுடா மகிழிச்சினு தெரியாம ஓடிக்கிட்டு இருந்தேன், தேடிகிட்டு இருந்தேன் ஒரு குரங்கு மாதிரி இந்த சந்தை பொருளாதாரா சூழல்ல மாட்டிகிட்டு அது குடுக்குற சாட்டை சத்தத்துக்கும் அசைவுக்கும் ஏத்த மாதிரி தாவிகிட்டு கிடந்திருந்தேன்,அப்போ எனக்கு தெரியாது மொத்த மனித தொகையில இது 2% மக்களோட விளையாட்டுனு,என் சித்தப்பா சொல்லித்தான் தெரியும், அவர் ஓர் தமிழ் ஆர்வலர் இப்ப யூகிச்சிருப்பிங்க இவன் தமிழ் இப்டி இருக்க காரணம் யாரு இவருதான், சும்மா கிடந்த சங்க ஊதி தமிழ் தமிழ்னு சொல்லிட்டு போய்ட்டாரு இறைவன்கிட்ட ஆமாங்க தமிழ் ஈழபோரில் தன்உயிரை மாய்த்து கொண்டார் தன் மக்கள் அனுபவிக்கும் சித்ரவதை கண்டு சகமனுசியின் பிறவித்துவாரத்தில் துப்பாக்கியை நுழைத்து ஒருவன் சுடுவதை கண்டு தன்மேல் ஏறின சினம் அவரை தீவேந்தனுக்கு இரையாக்கிவிட்டது,புரியாத வயது கோவமும் கண்களில் நீர் குளமாய் மணம் ஆகாத அந்த மாமனிதன் மரித்ததின் விளைவு தலையின் மேல் அலங்கரித்த மயிரை மட்டுமே என்னால் அழிக்க முடிந்தது!!
அப்போதுதான் ஒரு நாள் முதல் தேவதையை பார்த்தேன் அவங்க திடிர்னு உனக்கு என்ன வரம் வேணுன்னு கேட்டாங்க எனக்கா ஒரு பக்கம் ஆச்சர்யம் ஒரு பக்கம் பயம் நடுக்கம் , பலவாறு யோசனை அத கேக்கலாம் இத கேக்கலாமான்னு நானும் நிறைய தேவதை கதைகளை சின்ன வயசுல பெரியவங்க சொல்லி கேட்ருக்கேன், சரி கேட்டுத்தான் பாப்போம் அப்டினு நான்தான் அறிவாளி ஆச்சே எனக்கு மகிழ்ச்சியா இருக்கனும் அதுக்கு ஒரு வரம் குடுன்னு கேட்டேன். தேவைதையோ நான் சொல்வதை நீ செய்தால் நீ மகிழ்வதற்க்கான வரம் பெறுவாய்னு சொல்லிட்டாங்க! சரி என்ன சொல்ல போறாங்கன்னு ஆர்வமா கேட்டேன் உன்னிடம் இருப்பதை பகிர்ந்து தேவைகளை அறிந்து உதவிசெய்ய முற்படு, நீ முன்னில் குரல் கொடு உன்பின்னே நண்பர் கூட்டம் தானாய் சேரும் பணம் தேவையில்லை மனம் போதும் என உணர்வாய் சகஉயிர்களிடம் அன்பு காட்டு இங்கே யாரும் மேல் இல்லை கீழும் இல்லை சரிச்சமமும் இல்லை தன்னிலையில் அவர்களுக்கே தனித்துவம் உண்டு இங்கே நீ யாரையும் மாற்ற போவதில்லை மாற்றிக்கொள் உன்னால் அடைந்த பயனால் அவர்கள் உதட்டில் சிந்தும் வார்த்தையின் பலனை நீ அனுபவிப்பாய், பின்னாளில் அதுவே எனக்கு தினசரிவாழ்க்கையில் அங்கமாயிற்று கண்களில் காணும் ஆனந்தமும் என்னை அடிமையாக்கிற்று இதோ பின்விளைவில் வந்த பயன்களாய் என் தமயன் தமயந்திகள் கொடுத்த தலைப்பில் கிறுக்கி கொண்டிருக்கிறேன்
முதல் தேவதை சொன்ன மாதிரி உதவிமகிழில் என்னால் ஆனா முயற்சிகளை பண்ணிக்கொண்டிருக்க அடுத்த நொடியே மறுபடியும் இன்னொரு தேவதை இது இரண்டாவது தேவதை இவங்களும் அதே கேள்வி , எனக்கா எங்கயோ கேட்ட குரல் உங்கள எங்கயோ பாத்த மாதிரியே இருக்கேனு அவங்க சிரிச்சிட்டே போக போக தெரியும் ஓரபுன்னகையில சிரிச்சிட்டே நான் விடுவேனா அதே பதில் நான் மகிழ்ச்சியா இருக்கனும், அப்ப நான் சொல்றது செய்யணுமோனு சொல்ல நம்ம தலை தானாக ஆடிவிட்டது ஆடு சிலித்திருச்சு வெட்ட போறாங்க இவங்க என்னெல்லாம் சொல்ல போறாங்களோ அதுக்கு அதிகாலைல எந்திரி எனக்கா அது சரி நம்ம எங்கத்த உடற்பயிற்சி பண்ணு அப்புறம் நல்ல சத்துணவா சாப்பிடு இது சொல்றிங்களா இது கண்டிப்பா பண்ணிடுவோம் என் தாய் எனும் தெய்வம் இருக்கையில் சோத்துக்கு கவலை என்ன, நல்லா தூங்கு எனக்கா அச்சோ அழகு அழகு என்னமா வேலை குடுக்குறாங்க சொல்ல வார்த்தையே இல்ல, நானும் சொன்னதை முயற்சி செய்துபார்த்தேன் சிறிது காலத்தில் அப்பப்பா அப்படியொரு புன்னகை எனக்குள்ள என் உடலை கட்டுடல் மேனியாய் என் வீட்டு நிலைகண்ணாடியில என்னையோ பாக்கும்போது!!
பாத்துகிட்டு இருக்கும்போதே இன்னொரு தேவதையும் வருகை மூன்றாம் தேவதை எனக்கா சந்தேகம் இது எங்க போய் முடியபோது கதையை வேற என் செல்லங்கள் 2 பக்கத்துக்கு மிகாம எழுதணும் சொல்லிட்டாய்ங்க நமக்கா இப்பனு பாத்து எல்லா அனுபவமும் பக்கம் பக்கமா வருது கைப்புள்ள தடுத்து நிறுத்துன்னு பின்னாடி மண்டைல ஓடுன குரங்கை புடிச்சு உக்காரவச்சா இவங்களும் அதே கேள்வி நானும் விடுவேனா அதே பதில்,மறுபடியும் சொல்றத செய்யணுமேனு ஒரு குரல்!! செஞ்சிடுவோம்னு நான் அப்டினா இனி அன்னைக்கு காலைல ஆறுமணி கதையா இல்லாம வரிசையா சொல்லிடறேன் ஒவ்வொரு தேவதை சொல்றதையும் புடிச்ச வேலைய போய் செய், இல்ல கிடைச்ச வேலைல புடிச்சத செய்னு ஒரு தேவதையும், உன் உழைப்பின் விளைச்சலில் நீ பொருளாதாரத்தை பெற்றுகொள்ள முற்படு என்றது மற்றொரு தேவதை,உறவுகளின் உன்னதத்தில் லயித்திரு,அது ஆணோ பெண்ணோ மரமோ,மண்ணோ உறவுகொள் காதல் செய் என்றொரு தேவதையும்,எண்ணங்களில் வெளிப்படையாய் பேசி பகிர்ந்து,உன் எண்ண அலைகளில் உறவாடி உரிமையோடு பேசி லயித்திருக்க வேண்டுமென ஓர் தேவதையும்,துணிகர செயல்களின் அனுபவம் கொள், மலைமீது ஏறு, மேகங்களின் சுவாசம் அருவிகளின் வாசம் கொள், பனிச்சாரலில் நனைந்திரு,இரவுகளின் இசையில் கானகத்திற்குள் பயணம் மேற்கொள் இயற்கை உன்னை வழிநடத்தட்டும் நிலவின் ஒளியில் உறக்கம் தேடு, வாழ்க்கை திருப்பங்களை எதிர்கொள் என மற்றோரு தேவதையும்,நகைச்சுவைகளில் திளைத்திரு அது ஒருவரினை பரிகாசமோ ஏளனமோ செய்வதால் வராமல் இருக்கட்டும்,நடைமுறைகளில் நிகழட்டும் இயற்கையோ, செயற்கையோ அதன் பின் இருக்கும் முயற்சிகளின் அழகில் சிரித்திருங்கள் என்றது எட்டாவது தேவதை இப்படியாக சேவை,உடல்,வேலை, பொருளாதாரம்,காதல்,மனம், துணீகரம்,நகைச்சுவை எட்டு தேவதைகள் வந்துபோயின என் கோவமும் கண்ணீரும் கரைந்து போயின..
நெறி
கதையில் வரும் இவ்வெட்டு தேவதைகளின் கூற்றில் உள்ள செயல்களில் நேரத்தை செலவிடுவதின் மூலம் மகிழ்ந்திருக்கலாம் என மகிழ் இறுதியாக புரிந்துகொண்டான் நீங்களும் அப்படியே புரிந்துகொள்ள ஆசைதான் அவனுக்கும்
இவண்
கிரியேட்டர் (உதவிமகிழ்)
திவாகர் பாலசுப்பிரமணியன்
பூவுலகில் ஓர் மாவட்டம் கரூர்
28. K2K00047
தேவதை
பசுமை நிறைந்த நெடு மரங்களுக்கு இடையே அழகியதோர் வீடு. அந்த வீட்டிற்கோ அழகு சப்தம் தான். ஆம், கூட்டுக்குடும்பம் என்றாலே அப்படி தானே. ரக்ஷா தன் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, ஆதித்யன்(பெரியப்பா மகன்), கிரன்(சித்தப்பா மகன்), ரக்ஷவின் சித்தி, சித்தப்பா பற்றி தானே யோசிக்கிறீங்க, அவர்கள் வெளிநாட்டில் உள்ளனர். இருண்ட கார்மேகம், சிலு சிலு என காற்று வீச, பௌர்ணமி நிலவு ஒளி..... சொல்லவா வேண்டும் நிலவின் அழகை. நிலாச்சோறு நிறைவுற்று மரத்தடியில் படுத்து கொண்டு கதை கேட்க ஆவலாய் இருந்தனர். இது "குட்டீஸ் நேரம்" பாட்டி கதை சொல்ல அதை கேட்டுக்கொண்டே தூங்கும் சுகமே தனி. பாட்டி ஓர் தேவதை கதையை கூற குட்டீஸ் கனவு உலகிற்குள் சென்று விட்டனர். கதையை முடிக்க ரக்ஷாவின் அம்மா ஓர் கேள்வி கேட்டார்கள். சரி பசங்களா, இப்போ தேவதை உங்கள் கண் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள் என்று. வித விதமான பொம்மைகள், கண்ணை கவரும் உடைகள், விளையாட்டு, பொருட்கள், கைப்பேசி, கணினி, தின்பண்டங்கள் இப்படி எல்லாம் கேட்பார்கள் என்று தானே நினைத்தீர்கள்... என்னை போலவே. ஆனால் ரக்ஷாவோ, என்னைப் போன்ற பல சிறு குழந்தைகள்...கடைகளில் வேலை பார்ப்பவர்களும் , சாலைகளில் கையேந்தி நிற்பவர்களும் என்னுடன் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்று கூற, ஆதித்யனோ, என் தங்கை ரக்ஷா போன்ற அனைத்து பெண் குழந்தைகளும் பயம் இல்லாமல் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என கூறினான்.கடைக் குட்டி கிரனோ அம்மா அப்பாவும் இங்கு நம்முடன் இருக்க வேண்டும் என கேட்பேன் என்றான். சிறு குழந்தைளுக்குள் இவ்வளவு சிந்தனையா என மெய்மறந்தனர். தாத்தா உடனே, நீங்கள் தான் அந்த தேவதைகள், அதனால் அதனை செயல்படுத்த வேண்டியவர்களும் நீங்களே என்றார். தாத்தாவின் சொல் நமக்கும் பொருந்தும்.
நீதி: வளர்ந்த நாமோ பணம் சேர்ப்பதில் குறியாக உள்ளோம், ஆனால் குழந்தைகள் ஏங்குவதோ பாசத்திற்கு தான்.பணம் அவசியம் தான் ஆனால் பணமே அனைத்திற்கும் தீர்வு அல்ல. பிறர் நலம் கருதும் சுயநலம் இல்லா பிஞ்சு மனசுகள்.
- சுப்ரதா
29. K2K00055
வானத்தில் நட்சத்திரங்கள் வரவேற்க தென்றல் சில்லென்று வருட கலையோ இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை வழிநெடுகிலும் அவளின் கண்ணீர் துளிகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிடும் போலஅவளின் மனவோட்டம் சுற்றியுள்ள எதையும் பொருட்படுத்தவில்லை கடவுளே நான் என்ன உன்கிட்ட அப்படி பெருசா கேட்டுட்டேன் சொல்லுங்க நாளைக்கு கடைசி நாள் நான் என்ன பண்ண போறேன்னு தெரியல ஐயோ கரெக்டா தான் சூப்பர்வைசர் சொன்னது நம்ம தகுதிக்கு என்னவோ அதுதான் நம்ம செய்யணும் போல ஆமா என் தகுதியை சொல்ல இவங்க யாரு இப்படி அவள் கடவுளிடம் சண்டையும் தன் வாழ்க்கையில் நடந்ததையும் மன ஓட்டத்தில் தன்னை மறந்தவள் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள் கலையின் வாழ்க்கை ஆரம்பம் ஆனந்தமாய் இருந்தது சிறு வயதிலிருந்தே அவள் படிப்பில் படு சுட்டியாக இருந்தாள்ஆனால் அவள் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவளது தந்தை இறந்துவிட்டார் இருக்கிற சொத்துக்களை வைத்து தந்தையின் கடனை அடைத்துவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்றான் 7 வயது மூத்தவனான அவன் அண்ணன் அருண். அருண் கலையின் தேவை அறிந்து அவள் எதையும் வாய்விட்டு கேட்கும் முன் கையில் கொண்டுவந்து கொடுத்து விடுவான் இவள் ஆச்சரியத்தில் திகைப்பாள் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றாள். தன் கலெக்டர் ஆக வேண்டும் என்று கனவுக்காக அவள் வரலாறு குரூப்பை தேர்வு செய்தாள். பன்னிரண்டாம் வகுப்பின் கடைசி பரிட்சை அவள் தேர்வுக்கு ஆயத்தமாகி கொண்டிருக்க எதிர்பாராத விதத்தில் அவள் அண்ணன் இறந்து விட்டார் என்று செய்தி இடியாய் வந்து சேர்ந்தது கேட்டவுடன் மயங்கி சரிந்தாள் . அண்ணன் அருண் எப்பொழுதும் அவளை கலெக்டர் கலை என்றே அழைப்பான் அவர்களின் வாழ்க்கை எளிமையாக இருந்தாலும் அந்த வீட்டின் மகாராணியாக அவள் வலம் வந்தாள், பின் மருத்துவமனையின் சிகிச்சைக்கு பின் அவள் மறுநாள் கண் திறந்தால் பாவம் அவள் அறியவில்லை இதற்கிடையில் அவளின் கடைசி பரீட்சை கனவாகி முடிந்து பல மணிநேரம் அடைந்துவிட்டது. காரியம் முடிந்த பின் அவளின் மாமா பேச ஆரம்பித்தார் இங்க பாருமா உனக்கு உடம்பு சரியில்லை உன்னால வேலைக்கு போக முடியாது கலைக்கு பக்கத்து ஊர்ல உள்ள ஜவுளி கடையில் வேலை வாங்கி வச்சிருக்கேன் மாசம் 4,500 சம்பளம் 500 பிடித்தம் போக 4000 கைக்கு வரும் இத வெச்சிகிட்டு வாடகை மற்றும் மத்த செலவுகளைபாத்துக்கோ என்ன பண்றது எனக்கு பிள்ளைங்க இருக்காங்க என்று கூறிவிட்டு சென்று விட்டார். கலையோ கலெக்டர் கனவை கலைக்க மனமில்லாமல் கடமையை ஏற்க தயாரானாள். ஆனால்
அடுத்த ஆண்டே அவள் விட்ட பரீட்சையை எழுதி முழு மதிப்பெண் எடுத்தாள். எப்படியும் தன் கலெக்டர் கனவை நனவாக்கி விட வேண்டுமென்று சிறுக சிறுக ஆறாயிரம் 3 வருடங்களாக சேர்த்து வைத்தாள். ஆனால் அந்த சேமிப்பும் அம்மாவின் அவசர செலவுக்கு அவசியமாயிருந்தது. இதற்கிடையில் கலை எப்பொழுதும் புத்தகமும் கையுமா இருப்பாள் தன்னோடு வேலை செய்யும் பெண்கள் கதாநாயகிகள் கதாநாயகர்கள் பற்றி பேசும்போது இவள் நிஜ வரலாற்று கதாநாயகிகள் கதாநாயகர்கள் பற்றி பேசுவாள். இவளுக்கு தோழிகள் என்பது உள்ளூர் நூலகத்தில் இருந்து பெறப்பட்ட புத்தகங்களே. இந்த வருடம் எப்படியும் தொலைதூரக் கல்வியில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்தாள் ஆனால் அவளிடம் பணம் இல்லையே எனவே சூப்பர்வைசரிடம் சொல்லி முதலாளியிடம் முன் பணம் பெறலாம் என்று நினைத்தாள் ஆனால் அந்த சூப்பர்வைசர் இவளை கடும் கோபமாக திட்டி அனுப்பிவிட்டார். இதையெல்லாம் யோசித்தவளாய் வீடு வந்து சேர்ந்தாள். அம்மா கடை வீதிக்கு சென்று இருந்தார் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு கதறி அழுதாள் தன் கனவு கலைகிறது என்று அவளால் நினைத்துக்கூட மறக்க முடியவில்லை கதவு தட்டப்படும் ஓசை கேட்டது அம்மா தான் வந்து விட்டார் என்று முகத்தை கழுவி துடைத்து விட்டு கதவைத் திறந்தாள் ரேவதியும் அவள் அப்பாவையும் கண்டு ஆச்சரியத்துடன் அவர்களை உபசரிக்க தயாரானாள். கலையும் ரேவதியும் ஒன்றாக வேலை பார்க்கின்றனர் இவர்கள் தெருவில் தான் அவளும் வசிக்கிறாள் அவள் அப்பா ஆட்டோ ஓட்டுனர் 5 பெண் பிள்ளைகள் இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகிவிட்டது மூன்றாவது கலை இன்னும் இரண்டு பெண்கள் படிக்கின்றனர் இதற்கிடையில் அவள் அம்மாவும் வந்துவிட ரேவதியின் அப்பா பேச ஆரம்பித்தார் இங்க பாரும்மா ரேவதி எல்லாவற்றையும் சொன்னாள், நான் எனக்குத் தெரிந்தவர் மூலம் பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில் உனக்கு சீட்டு வாங்கி இருக்கேன். அவள் வாய் திறக்கும் முன்னே அவளின் மனவோட்டத்தை அறிந்தவராய் என் அம்மா அந்த ஊர்ல தான் தனியா இருக்காங்க நீங்க வேணும்னா வீட்டை காலி செய்துவிட்டு அங்கேயே தங்கிகோங்க எங்க அம்மாவுக்கும் துணையா இருக்கும் உனக்கு நான் பார்ட் டைமா வேலைக்கு கேட்டுள்ளேன் என்னஓரளவு சம்பளம் வரும் அதை வைத்து வீட்டு செலவுக்கு வைத்துக்கொள் எனக்கு ஐந்து பிள்ளைகள் இப்ப ஆறுன்னு நினைக்கிறேன் தயவுசெய்து மறுக்காதம்மா என்றார். இப்பொழுது ரேவதி பேச ஆரம்பித்தாள் கலை படிப்பு என்பது வரம் அது எங்களுக்கு எவ்வளவோ முயன்றும் கிடைக்கல உனக்கு கிடைச்சிருக்கு நீ அதை இழக்க கூடாது. இது என் திருமணத்திற்கு வைத்திருந்த பணம் இத வச்சு காலேஜ் ஃபீஸ் கட்டிக்கோ நீ நல்லா வருவ கலை, நீ புத்திசாலி, கலெக்டர் கலை நாங்க போய் விட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர் நடந்தது கனவா ?நனவா? என்று யோசிக்கும் முன் ரேவதி கலைக்கு வரம் கொடுத்த தேவதையாக நின்றாள்.
இப்படிக்கு
பாண்டியரசி
30. K2K00056
மதுரையில் மிகப் பிரசித்தி பெற்ற மருத்துவமனைகளில் ஒன்று சாரால் மருத்துவமனை அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் முன்பகுதியில் உள்ள வரவேற்பறையில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டிருந்த அந்த ஐம்பது வயது நிரம்பப் தக்க மரகதம் இப்படியாக யோசிக்கலானாள் இந்த இரவு என் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூனியத்தைக் கொண்டு வந்துவிட்டது திடீரென்று என்னிடம் உள்ள எல்லாவற்றையும் பிடிங்கிக் கொண்டு என் கண்ணை கட்டி காட்டில் விட்டது அல்லவா போலிருக்கிறது என்று நினைத்து விம்மி விம்மி அழுகையை அடக்க முடியாமல் வாய்விட்டு கதறி விட்டாள் தன்னருகில் உறவினர்கள் இருந்தும் தனித்து விடப்பட்டாள். பயமும் திகிலும் சூழ்ந்து கொண்டிருக்கையில் ஒரு ஆதரவான ஒரு கரம் அவள் முதுகின் மேல் பட்டது அவள் நிமிர்ந்து பார்த்தால் ஒரு செவிலி பெண் கருணை ததும்பும் கண்களுடன் அம்மா கவலை படாதீங்கஉங்கள் கணவர் சரியாகி விடுவார் என்றாள் உடனே மாறாக மரகதம் கொஞ்சம் பெலன் பெற்றவளாய் அந்த செவிலி பெண்ணிடம் , சிஸ்டர் ஏதோ என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் ஆபரேஷன் என்று ஏதோ சொல்கிறார்கள் இந்தப் பாவிக்கு ஒன்றும் புரியல மனசு தான் பாடாய் படுத்துது என்றாள் அதற்கு அந்த செவிலி பெண் கவலைப்படாதீங்க அம்மா உங்க கணவரை பார்க்கும் டாக்டர் வெங்கடேஷ் அவரிடம் உங்கள் கணவரின் உடல்நிலை பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றாள். அதற்கும் அழகம்மாள் ரொம்ப நன்றி அம்மாள் என்றால் அந்தப் பெண் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு சென்று விட்டாள் அடுத்த ஒரு வாரமாக அவள் எடுத்துக்கொண்ட சிரத்தையை பார்த்த மரகதம் இந்தப் பெண் இவளுடைய கடமையை விட தன் கணவரிடம் இன்னும் அதிக சிரத்தை காட்டுகிறாள் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள் அடுத்த எட்டாம் நாள் மரகதமாளின் கணவர் ராகவனின் உடல்நிலை நன்கு தேறி விட்டது வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறிவிட்டார். உடனே மரகதமாள் தன் மகன் ரமேஷை அழைத்து நீ போய் பில் செட்டில் பண்ணிட்டு வாப்பா என்று சொன்னாள் .ரமேஷ் பணம் செலுத்தும் கேஸ் கவுண்டரில் பணம் செலுத்தும் ரசீதை கொடுத்து பணத்தை எண்ணிக் கொடுக்கலாம் அப்பொழுது அந்த கேசியர் நீங்கள் சிஸ்டர் ராகவியின் உறவினர் என்று மருத்துவர் கூறி உங்களுக்கு 20% மருத்துவ கட்டணத்திலிருந்து டிஸ்கவுண்ட் கொடுக்க சொல்லிவிட்டார் தலைமை மருத்துவர் என்று கேஷியர் கூறியதைக் கேட்டு பணத்தை செலுத்திவிட்டு குழப்பத்துடன் திரும்பி வந்து தன் தாயிடம் நடந்ததை விவரிக்க லானான் யாரம்மா அந்த ராகவி என்று தன் அம்மாவிடம் வினவினான் ரமேஷ் அதற்கு மரகதமோ அன்று இரவு நடந்ததை கூறி விட்டு ராகவி சிஸ்டரா அதோ அங்கு இருக்கிறார்கள் அவங்கதான் என்று கூறினாள் அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் ரமேஷ் சற்று முகத்தில் கலவரத்துடன் அம்மா அந்த பெண்ணை யாரென்று உனக்கு தெரியலையா தெரியலையேப்பா மூன்று வருடத்திற்கு முன்பாக நாம் காந்திநகரில் போய் பார்த்தோமே அந்த பெண் தான் இவ அவளை கூட நான் எனக்கு ஏற்றவள் இல்லை எனக்கு ஒரு தேவதை மாதிரி பெண் வேண்டும் என்று நிராகரித்து அந்தப் பெண் தானே இவள் மரகதம் ஞாபகம் வந்தவளாய் அந்தப் பெண் மாதிரிதான் இருக்கு என்றாள். அந்தப் பெண் மாதிரி இல்லமா அந்தப் பெண்ணே தான் இவள் என்று சொல்லிவிட்டு தன் மனதிற்குள் சிந்திக்கலானான் தேவதை மாதிரி என்று எண்ணிய என் மனைவி சூனியக்காரி அன்பில்லாதவள் எங்கே? தன்னை நிராகரித்த குடும்பத்திற்கு அவள் யார் என்பதை சிறிதும் வெளிக்காட்டாமல் உதவி செய்யும் இந்த தேவதை எங்கே ஆம் அவள் தேவதை தான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் தேவதை மாதிரி பெண் கேட்ட நான் கையில் கிடைத்த தேவதையை விட்டு விட்டேனே என்று எண்ணும்பொழுது அவன் மனம் விம்மியது. அங்கே அன்பே உருவாய் நின்று கொண்டிருந்த அந்தக் கடமை உணர்வு கொண்ட அந்த பெண் தேவதை என் அம்மாவிடம் என் என் தந்தைக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளையும் கொடுக்க வேண்டிய உணவுகளையும் விவரித்துச் சொல்லி விட்டு ஒரு புன்முறுவல் பூத்து விட்டு சென்றுவிட்டாள் ஆம் தேவதை சென்றுவிட்டாள்.
இப்படிக்கு.
ANGEL
31. k2k 00049
ராகவ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அம்மா அப்போதே சொன்னாள் இது போன்ற நேரத்தில் பயணமெல்லாம் கூடாதென்று. டாக்டர் இரண்டு வாரம் கழித்துதான் தேதி கொடுத்திரு க்கிறார் அதெல்லாம் ஒன்னுமாகாது என்று ராகவ்தான் தைரியமாக நிறைமாத கர்ப்பினியான கவிதாவை கூட்டிக்கொண்டு ஆக்ராவுக்கு கிளம்பினான்.
சென்றமாதம் அலுவலகத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பரிசாக கிடைத்த டூர் பேக்கேஜ் அது. இரண்டு நாட்கள் ஆக்ராவில் தங்கி சுற்றிபார்ப்பது வரை எல்லாமே அலுவலக செலவில்,அவனுக்கும் கவிதாவுக்கும் தாஜ்மகால் பார்க்கவேண்டுமென்பது நீண்டநாள் ஆசை இப்படி ஒருவாய்ப்பு கிடைத்ததும் அதை தவறவிட்டுவிடக்கூடாதென்பதில் உறுதியாய் இருந்தான்.
கவிதாவுக்கும் அவன் சொன்ன நாளிலிருந்து கனவுகளே வரத்தொடங்கியிருந்தன.மனதுக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் திட்டங்கள் என கனவுகளில் மிதந்து கொண்டிருந்தாள்.
கவிதாவுக்கும் ராகவ்வுக்கும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.
இப்போது கவிதாவுக்கு பத்தாவது மாதம்
,தேவையான பொருட்கள் எல்ராவற்றையும் எடுத்துக்கொண்டார்கள்.பாதுகாப்புக்காக அத்தியாவசிய மருந்துகள் கையில் எடுத்துக்கொண்டனர்.
இப்படியாக தொடங்கிய அவர்கள் பயணத்தில் இதோ ரயிலில் பாதி வலியில் கவிதாவுக்கு பிரசவ வலி வந்து விட அவள் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்.
அந்த ரயில் பெட்டியில் பெரும்பாலும் ஆண்களும் மிகவும் இளவயது பெண்களும் மட்டுமே இருக்க எல்லோரும் கவிதாவிற்காக இரக்கப்பட முடிந்ததே ஒழிய யாராலும் உதவி செய்ய முடியவில்லை.
இரயில்வே அதிகாரியிடம் தகவல் அளிக்கப்பட அவர் ரயிலில் யாரேனும் மருத்துவர்கள் இருக்கிறார்களா என தேடிக்கொண்டிருந்தார்.அருகில் மருத்துவமனையும் இல்லாத காட்டுப்பகுதியில் அந்த ரயில் பயணித்துக்கொண்டிருந்தது.
கவிதா வலியால் துடிக்க ராகவ்வுக்கு பயம்,பதட்டம் இயலாமை என எல்லாம் சேர்ந்து அவனை அலைக்கழித்தது.
அவளின் கைகளை பிடித்துக்கொண்டுஅவளின் அருகில் அமர்ந்தவனுக்கு கண்களில் நீர் தாரை தாரையாகக்கொட்டியது.
தம்பி அக்காவுக்கு எதாச்சும் கொடு, என்று கேட்ட மைதிலிக்கு பத்துரூபாயை கொடுத்து விட்டு பதறி நகர்ந்தான் பக்கத்து பெட்டி பையன் அந்த கூட்டத்தில் கையை தட்டி காசு கேட்டுக்கொண்டே வந்த மைதிலி கவிதாவின் அழுகுரல் கேட்டு கூட்டத்தை விளக்கிக்கொண்டு உள்ளே வந்த மைதிலி
கீழே படுக்க வைக்கப்பட்டிருந்த. கவிதாவை பார்த்து பதறியபடி என்ன தம்பி ஆச்சு என ராகவ்வை பார்த்து கேட்டாள், பதட்டத்தோடு விபரத்தை சொன்னவன் அவள் திருநங்கை என்பதை அறிந்ததும் முகத்தில் ஒரு அருவருப்போடான வெறுப்போடு அவளை பார்த்தான் .அதை கண்டுகொள்ளாத மைதிலி
"எக்கோவ் இங்க வாங்க" என கைதட்டி உரத்த குரலில் இரண்டுமுறை கத்த ,எங்கிருந்தோ நான்கைந்து திருநங்கைகள் கூட்டமாக வந்தனர்.
நிலமையை புரிந்துகொண்ட அவர்கள் கூட்டமாக நின்றவர்களை அப்புறபடுத்திவிட்டு தான் கட்டியிருந்த சேலையை அவிழ்த்து மறைப்பு கட்டிவிட்டு பரபரப்பாக செயல்படத்தொடங்கினர்.ஒரு பதினைந்து நிமிட போராட்டத்திற்கு பின் கவிதாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.
முகமெங்கும் பனிக்குடத்தின் நீரும் ரத்தமுமாய் குழந்தையை கையிலேந்தி வந்த மைதிலி அதை ராகவ்வின் கைகளில் கொடுக்க ராகவ்க்கு இனம்புரியாத சந்தோசம். தன் வாரிசை கையிலேந்தி நின்றதைவிட தாயும் சேயும் நலமாயிருப்பது பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.எல்லா கடவுள்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே கவிதாவின் அருகே அமர்ந்தான் ராகவ்.
தன் உடலை பாத்ரூமில் கழுவிக்கொண்டு வெளியே வந்த மைதிலி தன் ஜாக்கெட்டுக்குள் கையைவிட்டு ஒரு இருநூறு ரூபாய் தாளை எடுத்து குழந்தையின் தலையில் வைத்து ஆசீர்வாதம் பண்ணி அதன் கையில் திணித்துவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்தாள் மைதிலி.
அவளோடு கூட வந்தவர்கள் எல்லோரும் குழந்தைக்கு திருஷ்டி முறித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
ராகவ்வின் கண்ணுக்கு அது ஒரு தேவதை
கூட்டம் நடந்து போவதாய் தோன்றியது.கண்களில் கண்ணீர் நிரம்ப நன்றியோடு அவர்களை பார்த்துக்கொண்டேயிருந்தான்.அந்த தேவதை கூட்டம் வழக்கம் போல கை தட்டிக்கொண்டே அடுத்த பெட்டிக்கு சென்று கொண்டிருந்தது.
ஆம்,
தேவதைகளுக்கு
பால் பேதமில்லை
தேவதைகள் என்றும் தேவதைகளே
நாம்தான் தேவதைகளை தேவைக்கு கொடுப்பவையாக தேடுகிறோம்.
எபிநேசர் ஈசாக்.
32. K2k-00069
************************
நேற்று இரவு காதுகளை கிழித்த இடி மின்னலுடன் நல்ல மழை. நானோ கடையில் இருந்து இரவு பத்து மணிக்குத் தான்வெளியில் வந்தேன். காலம் சதி செய்தாற் போல என் மோட்டடார் வண்டி பஞ்சர் ஆகி இருந்தது. போக்குவரத்து குறைந்திருந்த அந்த வேளையில் பேருந்தில் கூட தூரமாயிருந்த என் வீட்டுக்கு போக முடியாது.
அப்போது தான் எதிர்கடை உரிமையாளன் சங்கர் எனக்கு உதவ முன் வந்தான்.
" *காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது* "
எனவே சங்கர் என் கண்களுக்கு *தேவதை* யாகத் தான் தெரிந்தான். அவனது புண்ணியத்தில் தான் வீடு வந்து சேர்ந்தேன்.
என் களைத்த கண்களை பிடிவாதமாகத் திறந்து பார்த்த போது இன்னும் விடியவில்லை என்று உறைத்தது.
சித்திரமும் கைப்பழக்கமல்லவா! எப்போதும் போல நான் கோழி கூவும் முன் எழுந்து விட்டேன்.. சோம்பல் முறித்து குளித்து வீடு துடைத்து காலை உணவை மேசையில் வைக்கும் வரை என் வேர்வையை சால்வையில் ஒற்ற நேரமிருக்கவில்லை.
"என் அம்மா ஒரு அழகிய *தேவதை*. நான் பள்ளிக்கூடம் போகும் காலங்களில் அவருக்கும் இப்படித்தான். தலைக்கு மேலே வேலை இருக்கும். தனது கனவுகளைத் தொலைத்து விட்டு ஊன் உறக்கம் இன்றி எங்கள் கனவுகளுக்காக தன்னையே அர்ப்பணித்த *தேவதை*" எண்ணிக் கொண்டே இட்லியை இறக்கினேன்.
"ஆகா, இன்னொரு குளியலலுக்குப் பிறகு இறைவனை வணங்கி விட்டு கடைக்குச் செல்ல வேண்டும்." சத்தமாக எண்ணினேன்.
"என்னங்க, மன்னிச்சிருங்க! இன்று தான் என் கடைசி தேர்வு. நாளையில் இருந்து நான் சமைக்கும் வேலையைப் பார்ப்பேன்" மையிட்ட அவளது கண்கள் படபடத்தன.
மெலிதாக சிரித்தேன்.
" சாப்பிட்டு விட்டுப் போ.. பைக் பஞ்சர்.. " சொல்லி விட்டுக் குளிக்க ஓடினேன்.
என் வாழ்விற்கு துணையாக வந்த *தேவதை* க்காக நான் செய்யும் ஒரு சின்ன உதவி இது. அவளுக்கு நற்சமுதாயத்தை உருவாக்கும் நல்ல பிரஜைகளை உருவாக்கும் ஆசிரியையாக விருப்பம். காதல் மிகுதியில் பி.எட் (B.Ed) படித்து முடிக்கும் முன்னே கலியாணம் செய்து கொண்டோம். எனவே அவளுக்காக என் சில வசதிகளை மாற்றியமைத்து விட்டேன். எனவே, எனது வாழ்விலும் வாழ்வியக்கத்திலும் மாற்றம் நிகழ்ந்து, என்
மனம் நிறைவாக இருக்கிறது.
*************************
இது என் கணவரின் இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய தினக்குறிப்புப் புத்தகத்தில் படித்தது. எப்போதும் பெண்களை மட்டுமே தேவதைகளாக பார்க்கப் பழகக்கப்பட்டிருந்த எனக்கு, எனது கனவுக்காக தனது வசதிகளை மாற்றிக் கொண்ட எனது கணவர் ஒரு *தேவதை* யாகத் தெரிந்தார்.
* அன்புதான் தேவதைகளை உருவாக்குகிறது.. அன்னையில் தொடங்கி அவசரத்தில் உதவுபவர் வரை அனைவரும் தேவதைகள் தான் .. எத்தனை பேருக்குத் தெரியும் அம்மாக்களைப் போல மெழுகுவர்த்தியாக தன்னை உருக்கி தன் குடும்பத்திற்கு ஒளிதரும் அப்பாக்களும் தேவதைகள் தான் என்று!!*
Vilia
33. K2K-00065
பேருந்து_காதல்
"அதிகாலை தென்றல் வீசி அந்திமாலை மடிசாய்ந்து"
வணக்கம் , உங்களின் அன்போடும் ஆதரவோடும் எழுத தொடங்குகின்றேன்....
அன்றாடம் வேலைக்கு செல்லும் அகல்யாவிற்கு(தேவதை) நடந்த காதல் தருணங்களே இந்த பதிவு , அவளின் காதல் தருணங்களை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் ..
#படித்து ரசிக்கலாமே....
அகல்யா , ஒரு நடுத்தர குடும்ப இளம்பெண். தன் பெயருக்கு ஏற்ப தன் அகண்ட விழிகளால் எதிர் நோக்குபவரை காந்தமாய் கவர்ந்து இழுப்பவள். தன் இளம் வயதில் இருந்தே குடும்ப சூழ்நிலை கருதி தன் வாழ்க்கையை நேர்கொண்ட பார்வையில் செலுத்தி வாழ்ந்து வருபவள்.கல்லூரி படிப்பை முடித்து விட்டு 10கிமீ தொலைவில் உள்ள டவுனில் கிடைத்த வேலை பார்த்து வந்தாள் ....
#அடா காதல் தருணங்கள் எங்கே!! .
13B, வாசிக்கும் நமக்கு இது வெறும் நம்பர் மட்டுமே , ஆனால் அகல்யாவின் ஊருக்கு அந்த நம்பர் கொண்ட அசையும் சொத்து ..
ஆமா !... இரும்பன் (பேருந்து) தாங்க நம்ம கதையோட ஹீரோ !!...
பல போராட்டங்களுக்கு பிறகு அவளது ஊருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்து அது .. முருகன் அண்ணாவின் கரங்களில் தழுவி தினமும் டவுண் முதல் அவளது ஊருக்கு வந்து சென்று வரும் ,இரவில் அகல்யாவின் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலமரத்தடி நிறுத்தத்தில் நின்றிருக்கும்.அவளும் தினமும் இரும்பனில் தான் வேலைக்கு சென்று வருவாள், முருகன் அண்ணாவும் காலையில் முன்பக்க சீட்டில் துண்டை வைத்து இடம் தருவார் . மாலையில் அவளது அலுவலகம் அருகே அவளை ஏற்றிக்கொண்டு வீட்டின் அருகே விட்டு செல்வார்.
#இதிலென்ன காதல் இருக்கு
ஆமா நிறைய காதல் சொல்லாம தவிப்போட இருக்கு !..
~இயந்திர இதயம் கொண்ட இரும்பனின் காதல்~
காதல் வயப்பட்ட நம்ம இரும்பன் அவளை ரசிக்க ஆரம்பித்தது.. காலையில் ஜன்னல் ஓரம் அமரும் அவள்மீது தென்றல் வீசி அவளை சிலிர்க்க வைக்கும் ,காதணிகளை அசைய விட்டு ஒலிகள் எழுப்பி அந்த இசையோடு அசைந்தாடிடும், அவளது ஈர கூந்தலை தன் மீது படர செய்து ஆர்ப்பரித்து கொள்ளும்.
காதல் வயப்பட்டதால் என்னவோ இரும்பனின் குறும்புகள் சில வெளிப்பட்டன,நிலவின் ஒளியில் இரவின் மடியில் அவளது வீட்டை பார்த்தபடியே நின்றிருக்கும், மாலையில் அவளது ஆபிஸ் வெளியே அவளை சத்தமிட்டு(ஒலிப்பான்) அழைக்கும் , வேலை முடித்து அயர்ந்து வரும் தன் ராதையை தன் மடியில் (சீட்) அமர்த்தி தாலாட்டி தூங்க செய்யும்..
இரும்பன் தன்னவளை அரவணைக்கவும் தவறியதில்லை, சில சமயங்களில் இடுபாடுகளில் சிக்கி தவிக்கும் அவளை தன் சோக குலுக்கலில் முன்பக்கம் இழுத்து வந்து நிறுத்திடும்..சில கயவர்களின் சில்மிஷங்கள் அவளை நெருங்க விடாமல் தன் கூரிய கம்பிகளினால் கீறவும் செய்திடும்.தேவதையை சுமந்து செல்வதால் ஏனோ ,இதுவரை ஒரு விபத்தை கூட இரும்பன் சந்தித்ததில்லை..
இன்றளவும் இந்த அன்றாட பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது ..இரும்பின் காதல் என்றென்றும் மாறாதவை, இது அகல்யா போன்ற பல நடுத்தர குடும்ப இளம்பெண்களின் வாழ்க்கை தருணங்கள் .. இன்னல்கள் பல ஏற்பட்டாலும் தன்னை சுமந்து செல்லும் இரும்பன்களை பல அகல்யாக்கள் நேசிக்க தவறியதுமில்லை.....
எதிர்பார்ப்பு ஒன்றுதான் இரும்பனின் குறும்புகள் என்றுதான் அகல்யாவின் அகண்ட விழித்திரையில் திரையிடபடுமோ !.....
#ஆவலுடன்_நான்
அன்றாடம் வேலை சென்று தன் குடும்ப சுமைகளை தாங்கும் பெண்கள் என் கண்ணோட்டத்தில் தேவதைகளே!...
வீரா வீகா ..
34. K2K-00076
என் வாழ்வில் தோன்றிய தேவதை
தேனிக்கு மிக அருகில் ஒரு சிறிய கிராமம்,அங்கு மஹாலக்ஷ்மி என்ற தாய்க்கு கிருஷ்ணன் என்று ஒரு பையன் பிறந்து வளர்ந்து வந்தான். அவனக்கு அன்னை தான் அவனுக்கு உலகமாக இருந்தது அவன் 9 ஆம் வகுப்பு படிக்கும்போது அவள் தாய்க்கு உடல்நலம் குறைவால் இயற்கை எய்தினாள். தந்தை சிறுவயதிலேயே இருந்துவிட்டார்.அவன் வாழ்வில் யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தான்.அவன் படிப்பில் ஆர்வம் உடையவன் எனவே மாலை நேரங்களில் சில வேலைகள் செய்து படித்து ஒரு பட்டப்படிப்பு வேணும் என்று சென்னைக்கு வந்தான். அங்கே அவன் ஒரு கல்லுரியில் சேர்ந்தபோது அவனுக்கு தெரியவில்லை அந்த கல்லூரி அவனுக்கு அறிவு மட்டும் தர போவதில்லை அவன் வாழ்க்கைக்கு ஒரு தேவதையும் சேர்த்து தர போகிறது என்று. முதல் வருடம் படித்து முடித்தான்..இரண்டாம் வருடம் அவன் சென்றான் .மேலும் புதுமாணவர்கள் முதலாம் ஆண்டு சேர வந்தார்கள். அதில் ராதை என்ற பெண் அவன் படிக்கும் படிப்பையே தேர்ந்தெடுத்து இவன் படிக்கும் பக்கத்து அறையில் படித்து வந்தால்.ஒரு நாள் அவள் இவனை தேடினால்.ஏன் என்றால் இவன் தான் கல்லூரியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன். இவனிடம் சில குறைகள் கேட்டு தெரிய வந்த ராதை படிப்பை கவனித்தாலோ இல்லையோ இவனை நன்றாக ரசித்து கவனித்தால். பின்னர் சிலருடன் அவன் விசாரிக்க இவனை பற்றி தெரிந்து கொண்டால் ஆனால் இவனின் தாய் தந்தை பற்றி அவள் தெரிந்து கொள்ளவில்லை. அவன் மேல் காதல் வயப்பட்டாள் அவனும் காதலித்தான் பின்னர் கல்லூரியும் இறுதி ஆண்டு வந்தது கிருஷ்ணனுக்கு. ராதை இவனை காதலிப்பதை பற்றி தந்தையிடம் கூறினால் ஆனால் அவள் வீட்டிலோ பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவில்லை சாதி மதத்தை பெருமையாக போற்றி இவளையும் அவனையும் பிரித்து விட்டனர் ..இருவரும் பிரிந்து வாழ்ந்தபோது கிருஷ்ணனின் நடவடிக்கையை பார்த்த யசோதை என்ற ஆசிரியர் அவனை அழைத்து அவனுக்கு ஒரு தாயாக இருந்தார். பின்னர் சில காலம் கழித்து பார்த்தால்.அவனை வளர்ப்பு மகனாக ஏற்று கொண்டால் ..ராதையின் தந்தை இவனின் வளர்ச்சியை பார்த்து தன் மகள் இவனோடு இருந்தால் தான் வாழ்க்கை வளரும் என்று சேர்த்து விட்டார்.. கல்யானம் முடிந்தது குழந்தைகள் பிறந்தது ஒரு நாள் தன் மகளிடம் கிருஷ்ணன் தன் வாழ்வில் தோன்றிய தேவைதை பற்றி கூறினான்.அப்போது கிரிஷ்ணனின் மகள் தந்தையைப் பார்த்து யார் அந்த தேவதைகள் என்று வியந்து கேட்டால். உடனே கிருஷ்ணன் என்வாழ்வில் தேவதையாக இருந்த இருவருள் ஒருவர் உன் தாய் ராதை மற்றும் என் தாய் யசோதையும் மகாலட்சுமியும் என்று கூறினான். நீதி : ஒரு ஆணின் வாழ்வில் ஒரு
தேவதை இருப்பாள் தாயாகவும் , தாரமாகவும் மற்றும் அன்பிற்கு முன்னாள் ஜாதியும் இல்லை மதமும் இல்லை எல்லாரும் ஒரே ஜாதிதான் மனிதஜாதி.
பிரசன்னா பாலாஜி
35. K2K -00086
தேவதை
கதிரவன் மறையும் வேளை காக்கைகள் சத்தம் அடங்கியது அப்போது ஒரு அழு குரல் கண்ணீர் நிரம்பிய கண்கள் ஆவலுடன் பார்க்க உனக்கு
தேவதை பிறந்துள்ளார்
என்று கூறியதை கேட்ட செவிகளுக்கு அடக்க முடியாத இன்பம்
கண்ணீருடன் புன்னகை
தன் கரங்கள் ஏந்த சிசுவை
எச்சில் படாது உதடுகளால் முத்தமிட்டார் அந்த தந்தை
காலங்கள் கடந்தன தேவதைக்கு வயது ஐந்து
தந்தைக்கு பணிமாற்றம்
பிறந்து வளர்ந்த மண்ணை பிரிய மனமில்லாமல் விடைபெறும் குடும்பம் தேவதையின் ஏக்கத்துடன்.....
நகர வாழ்க்கை தொடங்கியது நற்குணங்களுடன் படிப்பை முடித்த தேவதைக்கு மருத்துவர் பணி
மகிழ்ச்சி வெள்ளத்தில் பெற்றோர்
தன் கனவுகள் மெய்ப்பட கடின உழைப்பிட்டு
உயிரைக் காக்கும் மருத்துவ பணி பெற்றதால் மனமெங்கும் மகிழ்ச்சி துள்ளி விளையாடியது
மருத்துவமனை தொலைவில் உள்ளதால்
பெற்றோர் மனதில் சிறு கலக்கம்
அதிகாலை பணிக்கு செல்லும் தேவதை வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகிவிடும்
அன்றிரவு தந்தை கடிகாரம் பார்க்க ஒன்பது மணி
தேவதை அன்று வீடு வந்து சேர தாமதம் காரணம் பணி அதிகம்
சமூக தவறுகளை எடுத்துரைத்து விரைவாக வீடு வரும் படி தேவதைக்கு அறிவுறுத்தினார் தந்தை
சிறு சிறு துன்பங்கள் எட்டி பார்த்தாலும் மகிழ்ச்சியாக அழகாக நகர்ந்து கொண்டிருந்தது மன நிறைவான பணியுடன் தேவதையின் வாழ்க்கை
அன்று ஓர் காலை பணிக்கு செல்லும் வழியில் அவளின் இருசக்கர வாகனம் பழுது ஏற்பட்டு பாதியில் வண்டியை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார் தேவதை
இரவு வீட்டிற்கு செல்ல புறப்பட்டு சுங்கச்சாவடி அருகில் நிறுத்தியிருந்த வாகனம் அவ்விடத்தில் இல்லை
இடம் மாறி நிறுத்தப்பட்டு இருந்தது
லாரிகள் நிறுத்தும் இடம் அது
அடைமழை பெய்து ஓய்ந்துள்ளது சாலையில் ஒரு சில வாகனங்கள் இரண்டு மின்விளக்கு இதை தவிர்த்து சுற்றி வேறு எதுவும் இல்லை
இறைச்சியின் வாசம் பிடித்து அங்கு குவியும் நாய்கள் போல்
இவள் வருகை அறிந்து மூன்று மிருகங்கள் அங்கு வந்தன
உதவி செய்வது போல் நடித்து தன் ஆசைக்கு இணங்க வற்புறுத்தினர் அந்த வஞ்சகர்கள்
நேரம் கடந்து பரிதவித்து கொண்டிருக்கும் தேவதையின் பெற்றோர்களால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை
பதற்றத்துடன் இறைவனை வணங்கிய படி கண்ணீருடன் நான்கு கண்கள் அங்கு வீட்டில்
தன்னை காப்பாற்றும் படி எழும் கதறலை கேட்க யாரும் இல்லை
கதறலை ரசிக்க அங்கு அந்த அரக்கற்களின் செவிகளே இருந்தது
சிறகொடிந்த பறவையாய் அவர்கள் முன் இருக்கும் தேவதை தன்னை விடுவிக்கும் படி கைக்கூப்பினாள் அவர்களின் மனதில் கிருமி அளவு கூட கருணை எட்டி பார்க்கவில்லை
அருவி போல் அழுகை கொட்ட காவல் நிலையத்தில் பெற்றோர்
தேவதையை தேடி அலைந்தனர் வழி எல்லாம்
உயிரற்ற உடலாய் சிதைந்து கிடந்த தன் தேவதையை கண்ட தந்தை தன் குரல்வளை வெடிக்க கதறினார்
மலராத மொட்டை வண்டுகள் பதம் பார்ப்பது போல் என் மகளை சிதைத்து விட்டார்களே
அந்த கொடூரர்கள் குளிர் அடங்க என் மகளின் தேகத்தை எரித்துவிட்டார்களே என்று அவர் கதற பார்ப்பவர்களின் மனதில் கோபம் எரிமலையாய் வெடித்தது
அவர்களால் கோபம் மட்டுமே கொள்ள முடியும்
தன் தேவதையை கையில் ஏந்தி உதட்டின் எச்சில் கூட படாமல் முத்தமிட்ட தந்தையால் தன் கண்ணீர் துளி அவள் மேல் விழ கட்டி அனைத்து அழக்கூட முடியவில்லை
இத்தகைய கொடுமைகளை கண்டு தேவதைகளை படைக்க கூட அந்த இறைவன் தயங்குவது சரி தான் என்று தோன்ற வைக்கிறது சமூகத்தின் சில உண்மை சம்பவங்கள்.......நன்றி
மு.தீபக்
சென்னை
36. K2K00067
தேவதை.
தேவதை மாதிரி ஒரு பெண் குழந்தை பிறந்து இருக்கு என்று செவிலியர் சொல்லக் கேட்ட போது மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனது தந்தையின் மனது.மூன்று தலைமுறைகளாக ஆண் குழந்தைகள் மட்டுமே பிற ந் த வீட்டில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு தேவி என்றே பெயரிடப்பட்டது.
குழந்தைப் பருவத்தில், பள்ளியில், உறவு வட்டத்தில் எங்கெங்கும் தேவி ஒரு தேவதை போலவே கொண்டாடப் பட்டாள்.இருட்டிலே ஒளி கூட்டும் விளக்கு போலே,ஒளியிலே மின்னும் வைரம் போல அவள் இருப்பு இருந்த இடத்துக்கு ஒளி கூட்டியது.எல்லோரது கண்களையும் எப்போ தும் எவ்விடத்தும் கவர்ந்து இழுக்கும் தேவதையாக தேவி இருந்து வந்தாள.
தேவியின் வசந்த காலமும் வந்தது.ஆம் அவள் பூபெய்தினாள்.மஞ்சள் நீராட்டு.மகளிர் பாராட்டு.' இந்த தேவதை எந்த தேவனுக்காக படைக்கப் பட்டு இருக்கிறாளோ ' என்று மனதால் நினைத்தவர் பலர்.வாயால் பாரோட்டியோர் சிலர்.
பள்ளிப் படிப்பு முடிந்தது.கல்லூரிப் படிப்பு தொடர்ந்தது.ஊடகவியல் படிப்பில் உற்சாகம் காட்டினாள் தேவி.கல்லூரிக் கட்டிளம் காளைகளின் கனவு தேவதை ஆனால் அவள்.
உடன் பயிலும் மாணவன் ஒருவன் எடுத்த அவளது அழகிய புகைப் படம் ஒன்று சமூக வலை தளத்தில் வெளியிடப் பட்டு பல மில்லியன் தடவைகள் பகிரப் பட்டு வைரல் ஆனது.' யாழ் தேவதை ' என்ற பெயரில் ஒரு மகர யாழை தேவி மீட்டுவ து போன்ற தோற்றத்தில் அமைந்த படம் அது.
அதிர்ஷ்ட தேவதை கண்ணைத் திறந்து தேவியைப் பார்த்து விட்டாள்.அந்த யாழ் தேவதை படம் பல சர்வ தேச விருதுகள் வென்ற ஒரு கலைப் பட இயக்குனரின் கண்களைக் கவர்ந்து விட்டது.ஐந்து ஆண்டுகள வேறு படங் களில் நடிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம். தேவி, தேவி ஸ்ரீ ஆனாள் திரைப்படத்துக்காக. யாழ்தேவி என்ற பெயரிலேயே ஓராண்டு உழைப்பில் ஒரு திரைக் காவியம்.ஒரு வீணை இசைக் கலை தேவதையின் வாழ்வின் சோக ஓவியம். திரையரங்குகளில் வெளிவராத அந்த திரைப் படம் பன்னாட்டு திரைப் பட விழாக்களில் பல நூறு பரிசுகளை வென்றது.முததாய்ப்பாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது நம் தேவதைக்கு.
அடுத்த பட வாய்ப்பு கலைப் பட இயக்குனரு க்கு கிட்ட வில்லை. நம் தேவதைக்கும் கிட்டவில்லை_ ஒப்பந்த தடையால். அடுத்த நான்காண்டுகள் கலைப் பட இயக்குனரின பராமரிப்பில் நம் தேவதை.
ஐந்தாண்டுகள் வனவாசம் முடிந்து வந்த போது திரைத்துறையில் ஏகப் பட்ட மாற்றங்கள்.நம் தேவதை பழைய தேவதை ஆகி விட்டாள்.பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் ஜாலம் தானே.
சில ஆண்டுகள கழித்து ஒரு நாள் செய்தித் தாள்களில் முதல் பக்கச் செய்தி_தொலைக் காட்சிகளில் தலைப்புச் செய்தி "விருது பெற்ற நடிகை யாழ் தேவதை தேவி ஸ்ரீ விபச்சார வழக்கில் கைது ".
Anbalagan ,
Nidamangalam.
37. K2K 00080
தேவதை
"ஆண்டவனே,இந்த முறையாவது ஆம்பளைப் புள்ள பொறக்கணுமே! பொண்ணு பொறந்தா கொன்னு போட்டுருவாங்களே வீட்டில",
பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த
பொன்னி கடவுளிடம் முறையிட்டாலும் அவர் என்னவோ மனம் இரங்கவில்லை.
பிறந்ததென்னவோ பெண் குழந்தை.மாமியார் முகம் சுளிக்கப்
பொன்னி தாய்ப்பறவையாகக் குழந்தையை அடை காத்தாள். குழந்தை
உயிர் பிழைத்தாள்.ஆனால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப் பட்டாள்.
இன்னொரு குழந்தையும் தன் வயிற்றில் பிறந்து இத்தனை வேதனைப் பட வேண்டாம் என்று பொன்னி வீட்டிற்குத் தெரியாமல் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனும் செய்து கொண்டு வந்து விட்டாள்.அடுத்தது ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆசையுடன் எதிர்பார்த்த கணவன் மற்றும் மாமியாரின் ஆசையில் மண்ணை வாரிப் போட்டு விட்டாள் பொன்னி.
அவள் செய்த காரியத்தால் அவளுடன் சேர்ந்து அவளுடைய பெண்குழந்தைகளுக்கும் தினமும் திட்டு தான்.அடுத்தடுத்து பிரச்சினைகள் மூன்று குழந்தைகளும் வளர வளரப் புதிது புதிதாக வெடித்தன.
" பொட்டப் புள்ளைங்களுக்கு எதுக்குப் படிப்பு? படிச்சுக் கிழிக்க வேண்டாம்.வீட்டில இருந்து வீட்டு வேலை கத்துக்கிட்டாப் போதும்.மூணு பேருக்கும் படிப்புச் செலவுக்கு எம் பையன் பணத்துக்கு எங்கே போவான்?",
என்று அடுத்த ஏவுகணை மாமியாரிடம் இருந்து கிளம்பியது.இதுவே மூணும் ஆம்புளைப் பசங்களா இருந்திருந்தா இப்படிச் சொல்லிருப்பாங்களா என்று நினைத்தாள் பொன்னி.
" நான் வேலைக்குப் போய் எம் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்"
என்று துணிந்து வீட்டு வேலை செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினாள்.
பொன்னி வேலை செய்த வீடுகளில் ஒரு பெண் டாக்டரின் வீடும் இருந்தது.அவருக்குப் பொன்னியை மிகவும் பிடித்துப் போய் விட்டது.குழந்தைகளின் கல்விப் பொறுப்பைத் தானே முன்வந்து ஏற்றுக் கொண்டார்.
இருபது வருடங்கள் ஓடிவிட்டன.பொன்னியின் முதல் மகள் ஸ்கூலோடு படிப்பை நிறுத்திக் கொண்டாள்.அவளுக்குப் படிப்பில் அதிக நாட்டமில்லை.ஆனால் தையல் கற்றுக் கொண்டு தனியாகக் கடை போட்டு நன்றாகச் சம்பாதிக்கிறாள்.
இரண்டாவது பெண் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு டீச்சர் டிரெயினிங் முடித்து இப்போது ஒரு பள்ளியில் வேலை பார்க்கிறாள்.
மூன்றாவது பெண் பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு நர்ஸாகப் பணி புரிவது தான் தன்னுடைய இலட்சியம் என்று நர்ஸாகி விட்டாள்.
பொன்னியை வேலைக்குப் போக வேண்டாம் என்று பெண்கள் தடுத்தாலும் டாக்டர் வீட்டுக்கு மட்டும் நன்றிக் கடனுக்காகப் போய் வருகிறாள்.
பெண்குழந்தைகளைக் கரித்துக் கொட்டிய பாட்டிக்கும் இப்போது பேத்திகளால் பெருமை கூடி விட்டது அவர்களுடைய தெருவில்.
"என்னுடைய பேத்திகள் மூன்று பேரும்
மூன்று தேவதைகள்.அதுவும் கடைக்குட்டி இருக்காளே நெஜமாவே வெள்ளை டிரஸ் போட்ட தேவதையே தான்",
என்று பெருமையுடன் பேசுகிறாள்.
எந்தக் குழந்தையைப் பிறந்தவுடன் கொன்று போட நினைத்தாளோ அந்தக் குழந்தையால் அவளுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடித் தான் விட்டது.எல்லாமே பொன்னியின் மன உறுதியாலும் ஓயாத உழைப்பாலும் தான் சாதிக்க முடிந்தது.
இந்தக் கதை இன்று கொரானாவின் பிடியில் தவிக்கும் நோயாளிகளுக்காக ஓயாமல் பணி புரியும் செவிலியருக்கு சமர்ப்பணம்.
கருத்து
பெண்குழந்தைகள் என்றும் தேவதைகள்
தான்.சமுதாயம் முன்னேறப் பெண் கல்வி மிகவும் அவசியமானது.
புவனா
38. K2k00009
அன்று முதல் நாள். கொரோனா கதைகளுள் நான். தேவதை தான் தலைப்பாம். கதை எழுதியதே இல்லை நான். இருந்தும் ஒரு ஆர்வத்தில் எழுத உட்க்கார்ந்தேன்..
ஆம்..அவள் ஒரு தேவதை. பல ரூபங்களில் என்னுடன் வாழும் அவள் ஒரு தேவதை. யார் ஒருவர் சுயநலமற்று வாழ்கிறாரோ, பாகுப்பாடின்றி கொடுக்கிறாரோ, கோபத்தைக்கூட அனைவரிடமும் வெளிப்படுத்துகிறாரோ, எல்லா உறவாகவும் இருக்கின்றாரோ அவரை தானே தேவதை என்பேன் என நான் எழுத, என்னை சற்று நிருத்தச்சொல்லி புரியவில்லை என்றாள் என் பேனா..
சுயநலமற்று இருப்பவள் என்றேன். என் பேனா எப்படி என்றது. ஒருப்போதும் தன்னைப்பற்றி யோசிக்காமல் தன்னை சார்ந்தவர்களுக்காகவே வாழ்கிறாளே என்றேன். அட மக்கு பொதுநலத்தின் பொருளைக் கேட்க்கவில்லை அதை நீ நிரூபி என்றது என் பேனா..
நானும், அவள் தன்னையே உருக்கி என் தாகத்தைத் தீர்த்தவள். என் பசியைப்போக்க உணவாய் தன்னையே தந்தவள். இவை மழை என்றும் பூமி என்றும் சொன்னேன். சரி தான் சிற்பியே, நானும் தன் குருதியை உனக்கு பாலாகவும், உணவாகவும் தந்த உன் தாயை சொல்வாய் என்று நினைத்தேன் என்றாள் என் பேனா..
சரி பாகுப்பாடின்றி பாசத்தை கொடுக்கிறாள் என்றாய் , அதைக் கொஞ்சம் விளக்கு என்றாள் என் பேனா. நானும் கூறினேன் தாகத்தைத் தீர்க்கவும், வயலுக்கு பாய்ச்சவும், உயிர் வாழவும் எனக்கு மட்டுமோ என் சகோதரிக்கு மட்டுமோ தன் பாசத்தைப் பொழியும் மழையாகவும், ஓடும் நதியாகவும், கொட்டும் அருவியாகவும், பல உருவிலும் அனைவருக்கும் சமமாகவே தருகிறாலே என் நீர் தேவதை என்றேன்..
என் பேனாவோ, அடி அழகுக்குட்டியே உன் தாய் உனக்கு மட்டும் பசிக்கு சோறுப் போட்டு உன் தங்கைக்கு போடாமல் நீ பார்த்ததுன்டா என்றாள். ஆம் ஒரு நொடி யோசித்தேன். பொரு !உன் ஒன்பதாம் வகுப்பில், ஒரு பசியால் தவித்த நாய்க்குட்டிக்கு தன் மார்பகப்பாலை ஒரு தாய் கொடுத்ததுப்போல் படித்ததை மறந்துவிட்டாயா என்றாள் என் பேனா. அட கண்கலங்கினேன் தாய்மையின் உணர்வால்..
சரித்தங்கமே, ஏதோ கோபத்தைக்கூட சமமாய் காட்டுவாள் என்றாயே அது என்ன என்றாள் என் பேனா. நானும், அவளை வாழவிடாமல் நாசம் செய்ததால் தானே சுனாமியாய் உருவெடுத்து நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரன் என்றில்லாமல் அனைவரையும் அடித்து சென்றதை மறந்துவிட்டாயோ என்றேன்.
என் தேவதையே நீ ஏழு வயதில் ஒரு இரவில் மிகவும் சளியில் இருப்பினும் ஐஸ் வாங்க அடம்பிடித்து, உன் தாயை கோபமாக்கி உன்னை மட்டுமில்லாமல் உன் தங்கையையும் சேர்த்து ' சொல்ரதே கேட்குரதில்ல ரெண்டுப்பேரும் ' என்றடித்து அழவைத்தாலே அதை நீ மறக்க வாய்ப்பில்லை என்றாள் என் பேனா. நானும், அட அதெல்லாம் ஒரு அழகிய நினைவு. ஆம் என் தாயும் தேவதைதானே என்றேன் சிரித்துக்கொண்டே..
சரி அடுத்து உன் கேள்விக்கும் பதில் சொல்கிறேன் என்றேன் என் பேனாவிடம். பேனாவும், கேட்டுதானே ஆகனும் கூறு என்றாள் நக்கலுடன். நானும், அனைத்தையும் என் மாமரத்திடமே கூறுவேன் அது என் தோழியாகவும், நான் சோகத்தில் இருக்க அந்த கடலலையே மன அமைதியைத் தரும் ஒருக்குழந்தையாகவும், நான் சோர்ந்துப்போய் இருந்தால் வாழ்க்கையில் வளைவுநெளிவு எப்போதுமே உண்டு இருந்தாலும் நிக்காமல் ஓடிக்கொண்டேயிரு என்று ஊக்குவித்துச் செல்லும் அந்த நதி ஒரு தந்தையாகவும், என்னை ஒருபோதும் பட்டினியில்விடாத என் தோப்பு என் தாயாகவும் என பல உறவுகளும் இந்த இயற்கைத் தந்துள்ளதே அது தேவதை தானே என்றேன்.
அவளும் உண்மையில் வியந்தேன் உன் தேவதையால் என்றாள். ஆனாலும் நான்! நீ சிறிய வயதிலிருந்து இன்றுவரை நீயே கூறவில்லை என்றாலும் கேட்டுக்கேட்டு தெரிந்துக்கொள்வாளே ஒரு தோழியாகவும், உன் முகத்தைப் பார்த்தே சோகம் என்றரிந்து ' என்ன ஆச்சு மேடம்க்கு ' என்ற அவள் கேள்விக்கு கட்டிப்பிடித்து அழுதால் ' சரி எல்லாம் சரியாகிடும்' என்று காரணமே தெரியாமலும் ஆருதல் சொல்லுவாலே அதில் கிடைக்குமே மனநிறைவு அட அவளும் குழந்தைதானே. நீ சோர்வடைந்து வந்த நாட்களில் ' உன்னாலே முயலனா வேற யாராலயும் முடியாது சோனி எல்லாமே கலந்து எல்லாவற்றையும் கடந்து ஜெயிக்கிறது தான வாழ்க்கை ' என்று ஒரு தந்தையாய் ஊக்குவித்ததை நீ மறந்துவிட்டாயா இல்லை நீ பசியில் இருக்கின்றாய் எனத்தெரிந்தும் அவள் பசியை மறந்தும் உனக்கு வயிருநிரம்ப உணவுப்போடுவாலே அததான் மறத்தியா என்றாள் என் பேனா..
கட்டிப்பிடித்து கணக்கில்லா முத்தம்கொடுத்து தாயே நீ ஒரு தேவதேயே என்று சொல்ல ஓடினேன்..
கருத்து:
உணர்ந்தேன் கதைக்கும் கவிக்கும் கற்பனை அழகு ஆனால் கற்பனைக்கே இயற்கை தான் அழகு. ஆக இயற்கையே தேவதை என்றேன். அவள் தானே ஒரே வடிவாய் உன்னுடன் வாழ்கிறாள் உன் தாயாய் என்றாள் என் பேனா..
இப்படிக்கு,
கற்பனை கதையழகி இவள்,
சோனியா சிவாஜி.
39. K2K-00091
"கார்த்தியும், கந்தாவும் தொலைபேசியில் கடலை போட்டுகொண்டிருக்க...!!!"..
"மச்சா கந்து நான் சொன்னேன்ல் மொட்டை மாடி குரூப்பு அதுல என்னையும் கதை எழுத சொன்னாங்க டா என்ன பண்றதுன்னு தெரியல,ஒரு தலைப்பு கொடுத்தா பக்கம் பக்கமா எழுதுவேன் ஆனா கதை எழுதுனும் என்ன பண்றது"..
"பையா நீதான் வாய்க் கிழிய பேசுவல்ல,எவ்ளோ எழுதிருக்க மனசுக்கு வந்தது எழுது மாப்ள,நல்லா வரும்னு சொல்லிட்டு பயபுள்ள போனை கட் செய்ய"..
"சரி மாப்ள சொன்னா மாதிரி வந்ததை எழுதுவோம்,யாரு கேப்பான்னு மொபைல் எடுத்து டப்டப்புனு ( ஹார்ட் பீட் அல்ல) கீபோர்டு சத்தம்.."..
"கதையை எழுதிட்டு மச்சானுக்கு கால் பண்ணேன்"..
"சொல்லு கார்த்தி எழுதிட்டியா?.."..
"ம்ம் எழுதிட்டேன் டா படிக்கிறேன் கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லு ஓகே வா.."
"ம்ம சொல்லு கேட்டுத் தொலையுறேன் இல்லனா விட்டிடுவியா என்ன..!!!!"..
" தேவதை என்ற வார்த்தையை யார் கேட்டாலும் அவங்களுக்கு பிடித்த ஒரு பெண் முகம் தான் நினைவு வரும், அந்த பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்,சினமா நடிகை/இல்லைனா காதலிக்கும்/லுக்கு விடும் பெண், அம்மா/குழந்தை பலருக்கு தந்தை/அண்ணன்/மாமா/சித்தப்பா கூட தேவதைகளாக தெரிவார்கள்,ஏனெனில் தேவதை என்றாலே மனதுக்கு பிடித்த நெருக்கமான உறவு தானே,"..
"அட செம டா மேல சொல்லு"..
"நிறைய பேரு சொல்லி கேள்விப் பற்றுப்போம் 'ஒருவனின் வெற்றிக்கும் சரி,தோல்விக்கும் சரி பெண் தான் காரணமென' , இதில் 50 % உண்மையும் 50 % பொய்யும் உள்ளது"..
"அப்படியா ஏண்டா அப்படி சொல்லுற??.."
"சொல்லுறேன் கேளு, ஆமா உண்மை தான், ஒருவன் வாழ்வில் ஓடுவதற்கு காரணம் ஒரு பெண்ணுக்காக தான் அப்பெண் தாய்,தாரம்,மகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் இவர்களுக்காக வெற்றியை/பணத்தை தேடி,ஓடி உழைக்கிறனர், மறுப்பக்கம் பார்த்தால், "பலர் வாழ்வில் பெண்களே இல்லாமல் அனாதைகளாக இருந்தவர்கள் பலரும் வெற்றி கண்டுள்ளதை நம் வாழ்வில் ஒருவரையாவது கண்டிருப்போம்.."..
"ஆமா நீ சொல்லுறதும் வாஸ்துவம் தான் , அப்புறம்?"..
"வெளியே இருக்க தேவதைலாம் ஓகே தான், ஆண்,பெண் என்றெல்லாம் இல்லாமல் , நமக்குள்ள ஒரு தேவதை இருக்கு,அந்த தேவதை எங்க இருக்குனு தேட வேண்டாம், அது உனக்குள்ளும், எனக்குள்ளும் உடலிலும்,உள்ளத்திலும் இருக்கு, நீ/நான்/நாம் தான் அந்த தேவதை,கண்ணாடியில் உன்னை நீயே பார்த்து அட செமையா இருக்கோம்லனு சொல்லிப் பாரேன் நீ தான் தேவதை" இதை உணர்ந்தால் நாம் அனைவருமே மகிழ்வான வாழக்கைக் கனவை நினைவில் வாழ்வோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை"..
"சூப்பர் டா கார்த்தி இதையே கதையா அனுப்பு நல்லாருக்கு டா" ஓகே பையா டாட்டா"
நீதி :நம் அக உலகில் வாழும் தேவதையை கண்டுணர்ந்து ,பின் புற உலகு தேவதைகளை நேசிப்போம்!
அசோக் குமார் சுதர்சனம்
40. K2K-00023
தேவதை
சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்த மாலை நேரம், மொட்டை மாடியில் அமர்ந்து அலைபேசியை அலைக்கழித்துக் கொண்டிருந்தான் கதிர். அப்பொழுது ஒரு அறிமுகமில்லா எண்ணிலிருந்து அழைப்பு வரவும் யோசனையுடன் எடுத்து ஹலோ என்றவன் கண்ணில் அதிர்ச்சி நிரம்பியது. அடித்துப் பிடித்துக் கொண்டு அடுத்த அரை மணி நேரத்தில் அந்த காவல் நிலைய துணை ஆய்வாளர் முன் நின்றான். பதட்டத்துடன் கேட்டான் “ரகு-விகு என்ன சார் ஆச்சு?”
“கொலை கேஸ் அனேகமா காதல் விவகாரமா இருக்கும் நினைக்கிறேன் விசாரித்துக் கொண்டு இருக்கிறோம் இன்னும் முழு விவரம் தெரியல” என்றார் துணை ஆய்வாளர்.
திடீரென வந்த நண்பனின் மறைவு செய்தி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மெல்ல சுதாரித்து “யார் சார் பண்ணது?” என்று அவன் கேட்கவும் காவல் நிலையத்தின் மூளையில் கை நீட்டினார் ஆய்வாளர். திரும்பிப் பார்த்தவனுக்கு இப்பொழுது மயக்கமே வந்து விட்டது அங்கே உட்கார்ந்து இருந்தது மது,அவனது தங்கை.
“அந்த பொண்ணு தான் சார் உங்க நம்பர் கொடுத்துச்சு ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குது நீங்க ஏதாவது கேட்டு சொல்லுங்க” என்றார். எழுந்து மதுவிடம் ஓடிய கதிர், “ஏமா மது? நீ இங்க இருக்க? என்ன ஆச்சு? ரகு எப்படி” என கேள்விகளை அடுக்கினான்.
அனல் கக்கும் ஒரு பார்வையை பதிலாக தந்த மது, “நீ எல்லாம் மனுஷன் தானா? நீ இப்படி பண்ணுவேன்னு என்னால் நம்ப கூட முடியல” என்று கூறி அழ ஆரம்பித்தாள். ஒரு நிமிடம் மிரண்டுபோன கதிர் “ஏன்.? ஏன் இப்படி சொல்ற? என்ன ஆச்சு?” என மறுபடியும் கேட்டான்.
“நீயும் அந்த ரகுவும் சேர்ந்து பண்ண எல்லா வேலையும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். கவிதா என் கல்லூரி தோழி.” கவிதா என்ற பெயரை கேட்டவுடனே என்ன நடந்திருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. மேற்கொண்டு மதுவை பார்க்க முடியாமல் எழுந்து நின்றான். வேகமாக எழுந்த மது,
“என்ன நடந்திருக்கும் புரிஞ்சிருக்குமே, இந்த மாதிரி இன்னும் எத்தனை? ரகுவை பார்க்க கவிதா கிளம்பும்போது ஒரு முக்கியமான வேலை அதனால ஒரு அவசர தேவைக்கு ரகு பணம் கேட்டான் சொல்லி என்கிட்ட குடுத்து அனுப்பிச்சா. அங்க போனது மட்டும் தான் ஞாபகம் இருக்கு. நினைவு வந்த பிறகு ஒரு ரூம் அங்க கட்டிப் போட்டிருந்தாங்க அப்போ ரகு வெளியில போன் பேசுவதை வச்சுதான் நீங்க பண்ற வேலையை நான் தெரிஞ்சுக்கிட்டேன்.”
அவள் சொல்ல சொல்ல அவமானத்தில் குறுகி போனான் கதிர். பல பெண்களிடம் காதல் என்ற பெயரில் ஏமாற்றியது, அவர்களுக்கு தெரியாமல் படம் எடுத்தது, மிரட்டி பணம் பறிப்பது அனைத்தும் அவன் கண் முன் வந்து போனது. மெல்ல அவளிடம் திரும்பி “இப்போ நீ வீட்டுக்கு போ அம்மா கிட்டயும் சொல்லாதே இந்த கேஸ் நான் பாத்துக்குறேன் இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை கெளம்பு” என்றான்.
“ஏன் உன் சொந்த ரத்தம்னா உனக்கு வலிக்குதா? தங்கச்சிய இப்படி உன்னால பார்க்க முடியலையா? நீ ஏமாத்தினா ஒவ்வொரு பொண்ணு யாருக்கோ தங்கச்சி தானே. உன்னையும் கொலை பண்ற நெனப்புல தான் வந்தேன் ஆனா நீ உன் ஆயுள் முழுக்க அனுபவிக்கனும் என்னை நெனச்சு. அதுதான் உனக்கு தண்டனை” என்று சொல்லியவாறு நடக்க ஆரம்பித்தாள்.
ஒரு நிமிடம் நின்று திரும்பி அவனிடம் “எல்லா அப்பாக்களுக்கும் மகள்கள் தேவதை!! எல்லா அண்ணன் களுக்கும் தன் தங்கை தேவதை!! எல்லா மகன்களுக்கும் அவன் அம்மா தேவதை!! நீங்க இங்க தேவதைக்கு சிலை வைக்கவேண்டாம், தேவதைய சிதைக்காமல் இருங்க” என்றவாறு சிறையை நோக்கி நகர்ந்தாள் யக்ஞப்ரியா ரா
41.K2K-00013
"தேவதை" - யார் என பெயரைக் கேட்டாலும் ஒருமுறைக்கு இருமுறை என்னை வினோதமாகப் பார்ப்பார்கள், இப்படியும் ஒரு பெயரா என்று!
ஏன், நானும் பலமுறை என் பெற்றோரிடம் பெயர் காரணத்தைக் கேட்டிருக்கிறேன் ஆனால் ஒரு போதும் சொன்னதில்லை
ஒரு நாள் அம்மாவிடம், " ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள்? எனக்கு இப்பொழுதே சொல்லுங்கள் என்று பிடிவாதம் பிடிக்கவே, வேறு வழியின்றி அம்மா சொல்ல ஆரம்பித்தாள்.
"நான் நிறை மாசமா இருந்த போது நானும் உன் அப்பாவும் அப்பத்தாவை பார்க்க காரில் சென்று கொண்டிருந்தோம், கிராமத்திற்கு செல்லும் பாதை மிகவும் குறுகலாகவும், இரண்டு பக்கங்களிலும், தென்னை மரங்களும், வயல் வெளிகாளாக இருந்ததே தவிர ஒரு வீடோ சின்ன கடையோ எதுவும் இல்லை, சிறிது தூரம் சென்றதும், கார் நின்றுவிட்டது. ஆப்பவளா எவ்வுளவு முயற்சி செய்தும், ஸ்டார்ட் ஆகவில்லை வானம் வேறு இருந்து மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படவே, நாங்கள் மிகவும் பயந்து விட்டோம். அப்பொழுது நாங்கள் எதிரே சுமார் பதினைந்து வயதுடைய ஒரு சிறுமி தலையில் கூடையுடன் வந்து கொண்டிருந்தாள் . அப்பா அவளிடம் "பாப்பா இங்கே பக்கத்தில் ஒர்க் ஷாப் ஏதாவது இருக்க ?" என்று கேட்க அவள், "ஐயா, எங்க அப்பவே ஒரு கார் மெக்கானிக் தான் நான் ஓடி போய் உடனே கூட்டி வருகிறேன் " என்று சொல்லிவிட்டு எதிர் புறமாக ஓடி மறைந்தாள். சிறிது நேரத்தில், நடுத்தர வயதுடையவர் ஒருவர் வந்து எங்களிடம், பாப்பா சொல்லிச்சு " கவலைப்படாதீர்கள், நான் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் சரி செய்து விட்டார்.நாங்கள் பணம் கொடுக்க வரும்போது " வேண்டாம் துரை, இது சின்ன ரிப்பேர் தான், பத்திரமாக ஊர் போய் சேருங்கள்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார். பிறகு, நாங்கள் வீட்டிற்குச் சென்று என் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் எங்களை விநோதமாகப் பார்த்தார்கள். சில நாட்களில் நீயும் பிறந்து விட்டாய். அப்புறம் ஒரு நாள் அப்பத்தா என்னிடம் ரொம்ப வருஷங்களுக்கு முன்பு , இங்கு அப்பாவும் பெண்ணுமாக ஒரு கார் பட்டறை வைத்திருக்கிறார்கள் ஊரில் உள்ள சில ரௌடிகள் அந்தச் சிறுமியை வனப்புணர்ச்சி செய்து கொன்றுவிட்டார்கள். இதனால் அவளுடைய அப்பாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு, தற்கொலைச் செய்துக்கொண்டார். கர்ப்பிணியாக நீ அன்று இருந்ததால் நாங்கள் உன்னிடம் சொல்லவில்லை என்று கூறினார் இதை கேட்டதும், நாங்கள் திகைத்துவிட்டோம் அப்பொழுது தான் உன் அப்பா முடிவெடுத்தார், "குறை ஆயுசில் இறந்தவர்களை ஆவியாகத்தான் சுற்றி தெரியவேண்டும் என்று கிடையாது.நம்மை போன்றவர்களுக்கு "தேவதையாகவும்" தோன்றுவார்கள் அதனால் நம் பெண்ணுக்கு "தேவதை" என்றுப் பெயர் வைப்போம் என்றார் அன்றிலிருந்து நானும் என் பெயரைப் பற்றி நினைத்து வேதனைப்படவோ, வெறுப்பதோ இல்லை.
RAMA GOVINDARAJAN(GRAPSS)
Comments
Post a Comment