காலம்

 

1. K2K 00068

 சைக்கிளின் காலம்

ஒரு ஊரில்  ராஜ் என்ற ஏழைச்சிறுவன் இருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மாவோ கூலி வேலை. அவனுடைய தாய்மாமா அவர் குழந்தைக்கு ஒரு மிதிவண்டி வாங்கிக் கொடுத்தார். தாய்மாமா மகன் பவுல் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு செல்வார்கள். ஒருநாள் மிதிவண்டி ஓட்டிச் செல்லும் போது பவுலுக்கு கால் வலி ஏற்பட்டது. உடனே ராஜை ஓட்டச் சொன்னான். அவனும் ஓட்டினான். ராஜ்க்கும் கால்வலி ஏற்பட்டது. ஆனால் அவன் காட்டிக் கொள்ளவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டினான். பள்ளிக்கூடம் வந்தது. பள்ளி கூடம் வந்து இறங்கிய உடன் நாயைப் போல் நாக்கைத் தொங்க விட்டு இளைக்க இளைக்க பேசினான்.

அவர்களால் 8 ஆம் வகுப்பிற்கு மேல் அவ்வாறு மிதிவண்டி ஓட்ட முடியவில்லை.. வீட்டில் கூறினான். இருவருக்கும் தனித்தனியாக மிதிவண்டி கிடைத்ததுநாளடைவில் ராஜ் மிதிவண்டி ஓட்டும் போட்டியில் வெற்றி பெற்றான்.

பள்ளி வாழ்க்கை முடிந்தது . பவுல் மோட்டார் வாகனம் இருந்தால் தான் கல்லூரி செல்வேன் என்றான். ராஜ் இருக்கும் வந்தான் மிதிவண்டியிலே கல்லூரி வாழ்க்கையை முடித்தான்.

ராஜ்க்கு கல்லூரி படிக்கும் போது

பாண்டி என்ற நண்பன் இருந்தான். அருகில் உள்ள ஊரில் இருந்து வருவான். ராஜ் பள்ளி  வாழ்க்கை வரலாறு போன்று தன் நண்பனை மிதிவண்டியில் அமரச் செய்து மிதிவண்டியை ஓட்டி வந்தான்

கல்லூரி வாழ்க்கை முடிந்து பாண்டி வெளியூருக்குச் சென்றான்.

நல்ல வேலை கிடைத்தது . ராஜ் தன் சொந்த ஊரிலே தன் தாயை கவணித்துக் கொள்ள குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வந்தான். இருவருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள்.

பாண்டி தன் குழந்தைக்கு மிதிவண்டி வாங்கினான்.  தன்னைப் போல் பிறரையும் நேசி  என்பார்கள். அதுபோல தன் நண்பனை நினைத்தான் .

சிறிது உதவி செய்தாலும் கடல் போலவும் பனையளவு போலவும் வள்ளுவர் கூறியதை நினைத்து நண்பன் குழந்தைக்கு  மிதிவண்டியை வழங்கினான்

ஜோ. ஜெயராஜ்

 

2. K2K-00065

#இதுஒருகாதல்(கால)_சந்திப்பு

அந்தி சாய்ந்த வேளையினிலே  ஆத்மாத்ம காதலின் வெளிப்பாடு இப்பதிவில் இரு ஜீவன்களின் எண்ணிலடங்கா புரிதல்களில் ஒன்று இருவரிடையே வெளிப்பட்ட பொழுது  ஏற்பட்ட அனுபவத்தின் தொகுப்பை விவரிக்கிறேன் .. இப்பதிவில்  90களில் பிறந்த ஓர் பையனும் பெண்ணும் நட்பு வட்டாரங்களில் இருந்து காதலர்களாக மாறுகின்றனர். நான்  ஏன் 90களில் பிறந்தவர்களை கருவாக எடுத்தேன் ……. பின்னணி என்ன  ??...

90களில் பிறந்தவர்களுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அவர்கள் மட்டுமே இரு பரிணாம உலகத்தை அனுபவித்து வாழ்ந்து வந்தவர்கள் ... இன்றைய டிஜிட்டல் காலத்தில் எதையும் எளிதில் பெற்றும் தெரிந்தும் கொள்ள கூடிய விஷயங்கள் முன் காலத்தில் சுலபமாக அவர்களுக்கு கிடைத்திடவில்லை. அவர்கள் பெரும்பாலும் நாள்தோறும்  தன் நட்பு வட்டாரங்களோடு சுற்றி திரிந்து அவர்களோடு அதிக நேரம் செலவழித்து தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்....

காதல் --- காதல் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தம் இல்லாமல் உலகில் உயிருள்ள ஜீவன் அனைத்திலும் ஒன்றி இருக்கிறது ... காதல் என்றாலே தனி சுகம்  தான் ....அது எப்போதும் தனிப்பெரும் சுகங்களையும் உற்சாகத்தை மட்டும் அல்லாமல் அவ்வப்போது  சில வலிகளையும் சுமந்து செல்ல நிர்பந்திக்கும்.. காதலிப்பவர்களுக்கு முக்கியமானது சந்திப்புகள் ...  இருவருக்குமே தன் காதலரை கோவில்களிலே  சந்திக்க  விரும்புவர்   .... அதுவும் 90களில் பிறந்த இவர்கள் சந்திக்கும் இடம் கோவிலின்றி வேறு ஏது ?. அந்த காலகட்டத்தில் ஒரு பையன் தன் காதலியை சந்திப்பது மிகவும் கஷ்டம் அதிலும் அந்த பெண் தன் காதலனிடம் பேசுவது அரிதிலும் அரிது ...

பெண்ணானவள் எப்போதும் மௌன மொழியே பேசுபவள் ...கண் ஜாடையில் பேசி கிறங்க செய்பவள் .. அவள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தை கேட்கவும் நாணி குறுகி பின் நடையிட்டு வரும் அழகை காணவும்  அப்படியொரு தவம் செய்திருக்க வேண்டும்..

சினிமாவில் காதல் என்பது மிக பிரமாண்டம் .. அதை காட்சிபடுத்த மிகவும் சிரமம்.... காதலானது சில நேரங்களில் நம்மை அறியாமலே நம் அன்றாட வாழ்விலும் நமக்கு சில ஆச்சரியங்களை அளிக்கும் .. அப்படி இருவருக்கும் இடையே ஓர் மாலைப்பொழுதில் சுவாரசியமாக நடந்த நிகழ்வை நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...

90களில் பிறந்து வளர்ந்த இருவரும் கல்லூரி காலகட்டத்தில் சூழ்நிலையினால்   நட்பெனும் வலையில்  ஒன்றிணைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக புரிதலால் காதல் வயப்பட்டனர். கல்லூரி கால  நட்பு துணையாகிய அவள் தன் காதல்  துணையாய்  மாறுவாள் என்று அவனும் நினைத்திருக்க மாட்டான் ..கல்லூரி பருவமும் முடிந்தது .. இருவரும்  தனக்கென வேலை தேடி சேர்ந்து அவரவரது அன்றாட வேலைகளை பார்த்து வந்தனர்.. திடீர் என்று அவன் மட்டும் வெளியூர் சென்று வேலை பார்க்கும் படி காலம் அவனை நகர்த்துகிறது,...அவனும் தற்காலிக பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் தன்  வாழ்வின் முன்னேற்றம் என நினைத்து வெளியூர் செல்கிறான்.. இடைப்பட்ட தூரமானது பிரிவை மட்டும் அல்லாமல் அவர்களிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகளை தந்து கொண்டே இருந்தது.. காதலில் சண்டைகள் தானே மனவலிமை ஏற்படுத்தி இருவரிடையே புரிதல்களை உருவாக்குகின்றது

இடையிடையே அவன் ஊருக்கு வரும்போதெல்லாம் அவளை பார்க்க தவறியதில்லை... அவளுடன்  கோவிலுக்கு சென்று பேசி நேரம் பகிர்ந்தும் வந்தான்... ஒரு சிறிய மனக்கசப்பில் அவன் கடைசியாக வந்த இரண்டு தடவையும் அவளை பார்க்க போகவில்லை . இது அவளுக்கு கஷ்டமாகவே இருந்தது..

நாட்களும் கடந்தன,.. இடையில் ஒரு மாதத்தில் சரி ஊருக்கு போகலாம் என நினைத்து அந்த பையனும்  ஊருக்கு புறப்பட்டு சென்றான்.. ரொம்ப நாளாக பார்க்க முடியாத தவிப்பில் இருந்த அவள் , அவனின் வருகையை தெரிந்து கொண்டு அவனை பார்க்க வருவதாக கூறினாள் .. அவனும் வேண்டா வெறுப்பாக  வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்றான்.

எப்போதும் போல அவளை கோவிலுக்கு அழைத்து சென்றான் .. அவன் மட்டும் அவள் மீது இருந்த கோவத்தினால் மூஞ்சியை உம்மென்றே வைத்து இருந்தான் , ஒவ்வொரு தடவையும் அவள் விரும்பும் நெற்றியில் குங்குமம் வைத்திடும் பழக்கத்தையும் அவன் செய்ய வில்லை... இது அவளுக்கு மனதில் பாரமாக தோன்றியது. இவளும் சமாதான முயற்சி பல செய்தும் பலனளிக்கவில்லை,சரி என்னடா செய்வது என்று  யோசித்து சரி வா ஐஸ்கிரீம் சாப்பிட போலாம் என்றாள்.அவனும் அரைமனதோடு போலாம் வா என்றான் .. இருவரும் ஐஸ்கிரீம் பார்லர் போனார்கள்.

அங்கு சென்றவுடன் அவள் அவனிடம் நான் உனக்கு பிடித்ததையும் நீ எனக்கும்  மாத்தி வாங்கி தரலாம் என்று சொன்னாள். அதற்கும் கடிந்துகொண்டு அவன்,”சாக்லேட் பைத்தியக்காரி வேறென்ன இவளுக்கு பிடித்துவிடப்போகிறது என்று சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு வந்து உட்காந்தான்

ஆனால் அவளோ அவனுக்கு பிடித்த ஐஸ்கிரீமோடு  சில வண்ண சேர்க்கைகளை சேர்த்து வாங்கி வந்து உட்காந்தாள்.. பில்லை  வாங்கு, பணம் கட்டிட்டு போலாம் என்று கத்தினான். பில்லும் வந்து சேர்ந்தது அவள் கைகளில்..

ஓர் ஆச்சரியத்துடன் அவள் அதை இதுவே நம்மிடையே நிரந்தரம் என்று அவனுடைய கைகளில் திணித்தாள். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை .. ஆண்டவன் என்னவோ யோசிக்குற விசயத்துல பையன்களுக்கு கம்மியா அறிவ  கொடுத்துட்டார் போல என யோசித்து கொண்டே இருந்தான். என்ன தான் டி இருக்கு இதுல?? அப்டினு கேட்டான்.

பில் தொகையை பார் என சொன்னாள். அதிலோ ரூ143.00 என்று இருந்தது.. சட்டென்று முகமெல்லாம் சிவந்தது அவனுக்கு ...பெண்ணுக்கு மட்டுமா  கன்னம் சிவக்க வேண்டும் என்று ஆண்டவன் படைத்தான். அன்று அவனுக்கும் சிவந்தது..அந்த பில்லை பார்த்த நொடிப்பொழுதில்.

143’ இது வெறும் குறியீடு இல்ல.. காதலுக்கு என்று விதிக்கப்பட்ட எண் . அது 90களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிரசித்தம்.. அவர்கள் மட்டுமே நிறைய குறியீடுகளை பள்ளி,கல்லூரி காலங்களில் சொல்லி சொல்லி பழகி வந்தனர்.அதுவும் அவளோ அதுவே நம்மிடையே நிரந்தரம் என்று தன் காதலை மறைமுகமாக சொன்னதை நினைத்து நினைத்து வாங்கி வைத்த ஐஸ்கிரீம் ஐ  விட மென்மையாய் உருகித்தான் போனான் அவன்...

அதுவே அவர்களுக்கு இடையே இடைவிடாத புரிதலுக்கு அடித்தளம் போட்டது.  சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருவரிடையே பிரச்சனைகள் ஏற்படுத்தும் . ஆனால் இருவருக்கும் இடையே நடக்கும் இதுபோன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் மட்டுமே தொடர் பந்தத்தை ஏற்படுத்துகிறது.இன்றளவும் அவர்களிடையே அந்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக அங்கம் வகிக்கிறது.

இப்படிக்கு 

வீரா வீகா

 

3. K2K-00078

காலம்

அவனைப்பற்றி உங்களுக்கு தெரியாது. என்னுடைய நெருங்கிய நண்பன். ஏழு வருடங்களுக்கு முன்பு நானும் கர்ணாவும் ஒரே பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை முடித்தோம். எனது பெற்றோர்கள் இருவரும் தேயிலை தோட்டத்தில் நாற்கூலிக்கு வேலை செய்தார்கள். என்னுடைய உடன் பிறப்பு என்னைப்போல அல்ல மாங்கனியை ஒத்த நிறமவள். தாமரை மலரைப் போன்ற பாதங்களை கொண்டவள். அவ்வூரிலே அழகியென்றால் சீத்தாவைதான் கூறுவார்கள். நானோ இருளை ஒத்த நிறம். என்னை அடிக்கடி சீத்தா செல்லமாக "கருவண்டு" என்று அழைப்பாள்.

சிறிய குருவிக்கூடு போல எங்களது வாழ்க்கை என்று கூறி முடிக்கும் சந்தர்ப்பத்தில் வேணுவை யாரோ  அழைக்க அவனோ என் துயரினை கூறி முடிக்கும் முன்பே அவ்விடத்தை நீங்கினான்

பாலா நடந்தவற்றை தனக்குள்ளே முனுமுனுத்தான்.

சீத்தா பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் இறை பத்தியால் பட்டப்படிப்பு படித்து முடித்த ஒரு வருடத்தில் பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றேன். அதிகமாக நடுத்தர குடும்பத்தினை சேர்ந்த பிள்ளைகளே அப்பாடசாலையில் கல்வி கற்றனர். சனி, ஞாயிறு தினங்களிலும் மேலதிக வகுப்புகளை மாணவர்களுக்கு செய்தேன்.

திடீரென நாட்டில் ஏதோ கெட்ட கிருமி மக்களை தொற்றுகிறது என்று பாடசாலைகள் மூடப்பட்டன.

சித்திரை மாதம் கடுங்கோடை காலையில் இருந்தே கடுமையான வெயில் எட்டு மணியிருக்கும் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தேன். சீத்தாவும் பாடசாலை விடுமுறை என்பதால் தனது தோழிகளுடன் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தாள்.

பின்னால் இருந்து அணைத்தவாறு என்னுடைய கண்களை யாரோ மூடினார்கள். "அய்யோ விடு சீத்தா உனக்கு எந்தநேரம் பார்த்தாலும் விளையாட்டுத்தான்" என்று கோபம் கொண்டு திட்டினேன். பின்னால் திரும்பிப் பார்த்தேன். கண்களை மூடியது கர்ணா. முதன் முறையாக வீட்டிற்கு வந்திருக்கிறான். நானும் கடந்த ஒருவருடத்திற்கு பிறகு சந்தித்தேன். ஆனந்தமாக இருந்தது.  இவ்விடுமுறையை கழிக்க நண்பன் அருகில் இருக்கிறான். பறவை போல விண்ணில் பறக்கலாம் என எண்ணினேன்.

இருவரும் முற்றத்திலே வெகுநேரம் உரையாடினோம். சீத்தா தேநீர் கொண்டு வந்து கர்ணாவை பார்த்து

       'அண்ணா எடுத்துக்கொள்ளுங்கள் என்று நீட்டினாள்,

கர்ணா அவளின் முகத்தை பார்த்தப்படி தேநீரை கையில் எடுத்தான். சீத்தாவின் பார்வையோ மின்னல்போல அவனை ஒருசில வினாடிகள் பார்த்து அணைந்து விட்டது.

நங்கள் இருவரும் மாலையில் தேயிலைத்தோட்டத்தை பார்வையிடச் சென்றோம். செல்லும் வழியில் நான் பல்கலைக்கழக நினைவுகளை மீட்டிக்கொண்டு வந்தேன். கர்ணாவின் நினைவுகள் சீத்தாவின் மீதே இருந்தது. உன் தங்கை உன்னைப்போல இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் செந்தாமரை போல இருக்கிறாள் என்று அவளை புகழ்ந்துக்கொண்டு வந்தான். நான் செல்லமாக அவளை "சிகப்பாயி" என்றே அழைப்பேன். அவளோ என்னை போடா "கருவண்டு" என்று செல்லமாக கூறிச்செல்வாள். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு வீட்டையடைந்தோம்.

கர்ணாவும் பெண்கள் பார்த்து ஆசைப்படுமளவிற்கு அழகான வாலிபனாகதான் இருந்தான். பொழுது சாய்ந்தது அன்றிரவு சீத்தா கர்ணாவை பார்த்து அண்ணா உங்களுடைய பல்கலைக்கழக அனுபவங்களை என்னுடன் பகிருங்களே! என்று உரிமையுடன் கேட்டாள். கர்ணாவும் ஒவ்வொன்றாக கூற அவள் கண்களில் நன்றாக படித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக வேண்டுமென்ற ஆசை தென்ப்பட்டது. கர்ணாவின் கண்கள் அவளை காமத்தால் நெருங்க எத்தணித்தது.

எட்டு மணியிருக்கும் என்னுடைய தாத்தா இறந்துவிட்டதாக தொலைப்பேசி அழைப்பு வந்தது. தங்கை அருகிலிருந்த கர்ணாவின் மார்பில் சாய்ந்து விம்மி விம்மி அழுதாள். இதனை சாதகமாக பயன்படுத்தி அவளின் மனதில் நுழைய திட்டம் தீட்டினான். அக்கணமே அனைவரும் புறப்பட்டு தாத்தா வீட்டிற்கு சென்றோம். மரணச்சடங்குகளை முடித்துவிட்டு மூன்றாம் நாள்  தங்கையுடன்  கர்ணாவையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினேன். தந்தையும் தாயும் ஏதோ ஐந்தாம் நாள் சடங்கு செய்ய வேண்டுமென்று அங்கேயே தங்கிவிட்டனர். இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பினோம்.

சீத்தா இரவு உணவை சமைக்க சமையலறைக்கு சென்றாள். கர்ணாவும் பூனைப்போல உள்ளே நுழைந்தான். அவளை பார்வையில் தீண்டினான். அதனையறிந்து கொண்வடள் கருவண்டு என்று என்னை அழைத்துக்கொண்டு ஓடிவந்தாள். நானோ இரவெல்லாம் உறக்கமின்றி இருந்ததால் திண்ணையில் அயர்ந்து தூங்கிவிட்டேன். சீத்தாவின் அருகில் சொல்ல மீண்டும் மீண்டும் எத்தணித்தான்.  அக்கொடிய மிருகத்தை தீ போல கண்களால் சுட்டெரித்தாள். அன்றிரவு ஏதோ ஒரு அச்சத்தில் உறக்கமின்றி தவித்தாள்.

அதிகாலை நித்திரை விட்டெழுந்த சீத்தா என்   முகத்தில் எப்பொழுதும் விழிப்பாள். கண்களை மூடிக்கொண்டு அறைக்குள் நுளைந்தாள். 'அண்ணா எங்கே சென்றாய்' என்று சிறுப்பிள்ளை போல அழைத்துக்கொண்டு சுற்றி சுற்றி தேடினாள். அவ்வறையில் இருந்த கர்ணா சீத்தாவை பார்த்து பாலாவை கொன்றுவிட்டேன் என்றான். சீத்தாவோ அவனின் சட்டையை பிடித்துக்கொண்டு கத்தியழுதாள். வீட்டில் யாருமில்லாத அச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கர்ணா இப்போது நீ என் ஆசைகளுக்கு ஒத்து வரவில்லை என்றால் உன் தந்தை, தாய் இருவரையும் பாலாவை கொன்றது போல செய்துவிடுவேன் என்று மிரட்டினான்.

சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மான் போல கர்ணாவின் காமவெறிக்கு சீத்தா இறையாகினாள்.

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. சிறகுடைந்த பறவை போல எழுந்து கதவை திறந்தாள்.  என்னைக் கண்டதும்

             'அண்ணா.... அண்ணா....

என்று தோலில் சாய்ந்து கதறினாள்.

நானோ நடந்தவற்றை அறியாது. 'உனது பிறந்தநாள் அல்லவா! இன்று அதுதான் நீ கேட்ட பூ போட்ட தாவாணி பாவாடை வாங்கச் போனேன்'. என்று கூறி அவளின் கைகளில் அதனை கொடுத்துவிட்டு சிகப்பாயி மன்னித்துவிடு. கடைக்காரன் கடை திறக்க நேரமாயிற்று. அதனால்தான் தாமதம் என்று கூறினேன். நீ தனியாக இருக்கப் பயப்படுவாய் கவனமாக பார்த்துக்கொள் என்று கர்ணாவிடம் சொல்லிவிட்டுதானே சென்றேன். ஏன்? நீ அழுகிறாய். கர்ணா எங்கே இருக்கிறாய் என்று கூவியழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தேன்.

இப்போதுதான் அழைப்பு வந்தது பாலா நான் உடனடியாக  செல்ல வேண்டும். அம்மாவிற்கு மாரடைப்பு என்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அப்பா அழைப்பில் கூறினார். மீண்டும் ஒரு நன்னாளில் சந்திக்கலாம் என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறினான்.

அன்று முழுநாளும் நடந்தவற்றை நினைத்து அழுதுக்கொண்டிருந்த சீத்தா. எனக்கொரு கடிதம் எழுதியிருந்தாள். தனது முத்தான எழுத்துக்களில்

"அண்ணா உன்னை தேடி வந்த வேட்டைக்காரன். நீ இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி என் கற்பை வேட்டையாடிவிட்டான்"

"அண்ணா......

கர்ணா போன்ற கொடிய மிருகங்கள் வாழும் இவ்வுலகில்  நான் மட்டுல்ல என்னைப்போல் எப்பெண்ணும் வாழ முடியாது மன்னித்துவிடு" என்று கூறி வாழ்க்கைக்கே விடைகொடுத்து விட்டாள்.

கடித்ததை வாசித்தவுடன் என் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது. நண்பனின் துரோகமும் சகோதரியின் பிரிவும் என்னை கொல்லாமல் கொன்றது.

பாலா .... பாலா.....

 என்று அம்மா என்னை அழைத்த குரலை கேட்டு சுய நினைவிற்கு வந்தேன். வீட்டினுள்ளே போய் பார்த்தேன் என் சீத்தாவின் படத்திற்கு பூமாலை அலங்காரம். 

மலர்க்கொடி மண்ணில் வீழ்ந்து இ்ன்றுடன் ஒருவருடம் ஆகிவிட்டது.

ஒருசில ஆண் மிருகங்களின் தீராக்காம பசிக்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.

பரமசிவம் இந்துஜா

நுவரெலியா

இலங்கை.

 

4. K2K 00038.

 காலம்!

அபிநீ ஹோம்வொர்க் முடிச்சுட்டு படிச்சுகிட்டிரு.நான் கோவிலுக்குப் போயிட்டு வந்துடறேன்.ராகுல் …உனக்கு காபி இருக்கு …குடிச்சுட்டு ஸ்நாக்ஸ் சாப்பிடு.நான் வர்றேன் கதவை பூட்டிக்கோங்க.”

அன்றைக்கு செவ்வாய்க்கிழமை.வழக்கமா போகிற கோவிலுக்கு பஜனைக்கு அவசர அவசரமாக கிளம்பிச் சென்றாள் அனு.

வந்ததும் அபிக்கு படிக்க உதவி சாப்பிட்டுத் தூங்க இரவு பத்து மணி.அபி கதை புத்தகம் படிக்க ராகுல் பாடம் படிக்க அனு அலைபேசியில் எழுத ராகவன் அவருடைய அறையில் அலைபேசியில் களித்திருக்க பதினொரு மணிக்கு அவரவர் வேலை முடிந்து படுக்கின்றனர்.

காலையில் பிள்ளைகள் பள்ளிக்கு கணவன் வேலைக்கு அனு வீட்டு வேலை என்று நின்று பேசவும் நேரமின்றி பரபரப்பாக செல்கிறது.இந்த நாள் மட்டுமில்லை வருடத்தின் 365 நாளும் இப்படித்தான்.

ராகவன் அனு தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள்.பெரியவன் கல்லூரி விடுதியில்.சின்னவன்  இன்டகிரேட்டடு ஜே.இ. ப்ளஸ் ஒன் வகுப்பில் .அபி நான்காம் வகுப்பு.சனி ஞாயிறுகளில் பரதம் வகுப்பு.

ஐந்து பேர் இருந்தும் ஐந்து பேரும் ஒன்றாக அமர்ந்து பேச யாருக்கும் நேரமில்லை.யாரைப்பற்றியும் யாரும் கண்டு கொள்வதும் இல்லை.அவர்களுக்கிடையே உறவு இருந்தது பாசம் இருக்கிறதா  ஒருத்தருக்கு உடம்புக்கு முடியவில்லை மனசுக்கு சரியில்லை என்றால் புரிந்து உதவுவார்களா என்ற சந்தேகம் வெளியிலிருந்து பார்க்கும் யாருக்கும் தோன்றும்.இப்படி இந்தக் குடும்பம் மட்டுமில்லை.இன்றுசமுதாயத்தில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை இது தான்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அவசரமாக ஊரடங்கு பிறப்பித்தது அரசு.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க.

பெரியவன்  விடுதியிலிருந்து வந்து விட்டான்.ராகவனுக்கும் கம்பெனி விடுமுறை.பிள்ளைகளுக்கும் பள்ளி விடுமுறை.ஐந்து பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து பேசத் தொடங்கினர்.ஒன்றாக சாப்பிட்டனர்.பேசினர்டி.வி பார்த்தனர்.

விஜய் இங்க வா.ஏன்டா இவ்வளவு முடி நரைச்சிருக்கு சரியா ஷேவ் பண்ணுடா நாடில ஒரு முடி தெரியுதுஅனு பெரியவனை பார்த்து பேச

உன்னை விட ராகுல் அண்ணனுக்கு மீசை பெருசா இருக்குதுடா அபி கலாட்டா பண்ண…”.அண்ணன்னு சொல்லுன்னு அப்பா அதட்ட இப்படியே அவர்களுக்கிடையே அன்னியோன்யம் நெருக்கம் அதிகமாகிறது.

பத்து நாள் இருபது நாள் மாதம் கடந்து ஊரடங்கு நீட்டிக்க இவர்களிடையே உறவும் பந்தமும் பாசமும் நட்பும் வளர்கிறது.

எதிர்காலம் குறித்து பேசுகின்றனர்.வேலை வாய்ப்பு சேமிப்பு அரசியல் வீடு கட்டுவது அபியின் படிப்பு  சகலமும் பேசுகின்றனர்.

அனு மட்டுமே புழங்கி வந்த வீட்டு பொருட்களும் வீடும் ஐவரின் பார்வையில் உதவியில் சுத்தமாகி வேண்டாதது  வெளியேறி அழகாகிறது.

அம்மா.நாம காலையில தினமும் மொட்டை மாடியில் வாக்கிங் போகலாம்‌.அப்பா நீங்களும் தான் தொப்பை விழுகுது ரெண்டு பேருக்கும்.”விஜய் அக்கறையோட பேச…”அப்பாவுக்கு தாடியெல்லாம் வெள்ளையா இருக்கு.” அபி அப்பாவின் தாடியைப் பார்த்து சிரிக்க,”எல்லாம் உன்னால தான்.நீ தான் பவுடர் போட்டுட்டு வந்து அப்பா தாடியில இசிச்சிட்ட.”

போடா அப்பா தாத்தா  ஆயிட்டாருன்னுகேலி பண்ணி ஓடினஅபிய அப்பா அண்ணன்கள் துரத்த …அபி அம்மாவின் முந்தானைக்குள் ஒழிய அங்கே சூரியன் மெல்ல எட்டிப்பார்த்து இவர்களை ஒளிப்பதிவு செய்ய.கொரோனா காலம்  குடும்பத்தின் உறவுகளின் அருமையை பெருமையாக படம் பிடித்துக் காட்டுகிறது.

இரவு தூங்கப் போன அனு இந்த நிகழ்வுகளை நினைத்து ,” வைரஸால் எத்தனையோ  பிரச்சனைகள்  பயங்கள்.ஆனாலும் ஒவ்வொரு வீடும் இப்படி உறவுகளின் நெருக்கத்தில் இருப்பதும் காலம் செய்த கோலம் தானே அதுவும் அழகான வண்ண வண்ண ஆனந்தக் கோலம் என்று நினைத்து நெகிழ்கிறாள் கடவுளுக்கு நன்றி சொல்லி.

நீதி(படிப்பினை);

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல சந்தர்ப்பம் கிடைக்கும் போதே உறவுகளோடு புரிந்து வாழ்ந்திடுவோம்.

கடுமையான காலமானாலும் கவலையின்றி ஒற்றுமையாக இருந்தால் வெற்றி பெறலாம்.

நன்றி.

பூமாதேவி

 

5. காலம்:

வாகனங்களின் ஓசையினால் எப்போதும் மூழ்கியிருக்கும் விறுவிறுப்பான சாலைகளை உடைய ஒரு இடைநிலை நகரம் அது. ஓடும் வாகனத்தை போலவே அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையும் நிற்க நேரம் இல்லாமல் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும். அந்த நகரில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில் பணிபுரிகின்றவர் தான் குமார் ஐம்பது வயதுக்காரர். அந்த உணவகம் தொடங்கியது முதல் அங்கு வேலை செய்து வருகின்றார்.

நகரின் உட்புறத்தில் உள்ள நெருக்கம் அதிகமுள்ள ஒரு தெருவின் வாடகை வீடு ஒன்றில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் மனைவி ஜெயா இல்லத்தரசி. அவர்களுக்கு மூன்று குழந்தைகள், மூத்தவள் பெயர் லலிதா பத்தாவது வரை படித்துவிட்டு ஒரு துணிகடையில் பணிபுரிந்த வந்தாள், இரண்டாவது மகன் முருகன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தான், இளையவள் செல்வி பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தாள். தனது குடும்ப சூழ் நிலையாலும், அப்பாவின் சுமையை குறைக்கவும் முருகன் படித்து முடித்தவுடன் அரபு தேசத்தில் பணி செய்ய செல்ல நேர்ந்தது.

தன்னுடைய இளமை காலம் முடியும் முன்பே வீட்டு பாரம் குறைக்க அனல் சுழந்த அந்த அரபு தேசத்தில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமல் கிடைத்த வேலை செய்யும் நிலைக்கு ஆளானான். பொழுது விடியும் முன் ஆட்டு மந்தை கூட்டம் போல ஒரு பேருந்தில் ஏற்றி கூட்டிச் சென்று நாள் முழுக்க வெயிலில் பணி செய்ய வைத்துவிட்டு இரவு ஆனதும் அவன் இருக்கும் அறைக்கு வந்து சேர்பார்கள். அறிமுகம் இல்லாத நபர்கள், முன்பின் அறிந்திராத மொழிகள், ருசியில்லாத உணவு என்று ஏக்கங்களும், பசியுமாக அவன் நாட்கள் கடந்தது. அவன் தேவைகளை கூடுமான வரை குறைத்து கொண்டு பணம் சேமித்து ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

முருகன் அனுப்பும் பணம் கொண்டு குமார் லலிதாவிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தான். முருகனால் திருமணத்திற்கு வர இயலவில்லை, அங்கு இருந்தபடியே கைபேசி வழி திருமணத்தை கண்டு ரசித்தான். காலம் உருண்டோடியது அவன் செல்வியை நல்ல படிக்க வைத்தான் பின்பு அவளுக்கும் திருமணமும் செய்து வைத்தான். அதற்கும் அவனால் வர இயலாத சூழல், அங்கு இருந்தவாறே கவலையுடன் கைபேசியில் திருமணத்தை பார்த்து ரசித்தான். பின்பு சொந்தமாக வீடு கட்டி அதில் அவன் குடும்பத்தை குடியமர்தினான். அனைத்தையும் கைப்பேசி வழியாகவே கண்டு கழிக்க நேரந்தது. சுமார் பத்து வருடங்கள் கடந்து அவன் கனவுகளில் கண்டு வந்த அந்த ஊருக்கு திரும்பும் நாள் வந்தது.

அப்போது அவன் முப்பதை கடந்திருந்தான் தனது இளமை காலத்தையும், அவன் குடும்பத்தின் ஏறத்தாழ அனைத்து சுப நிகழ்சிகளையும் தவர விட்டிருந்தான். அவன் தன் சொந்த வீட்டிற்குள் நுழையும் போது அதுவும் அவனுக்கு அண்ணியமாகவே தெரிந்தது. தன் போல் உள்ள மற்ற இளைஞர்களின் வாழ்கை முறையையும், அவர்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வீட்டிலே வாழ்வதை பார்த்து வேதனையில் ஆழ்ந்தான். அவன் வாழ்நாளின் பொன்னான காலங்களை, திரும்ப கிடைக்காத தருணங்களை இழந்ததை எண்ணி மனதில் கண்ணிரை மறைத்து, வெளியே சிரித்துக் கொண்டே உள் சென்றான் வீட்டில் அவனை வரவேற்கும் அம்மா, அப்பா, அக்கா, தங்கை மற்றும் புதுமுகங்களான மாமன், மச்சான்களை மலரந்த முகங்களை பார்த்தபடியே.

"காலம் பொன் போன்றது" சிலருக்கு அதன் அருமை புரிவதில்லை, சிலருக்கு அதை அனுபவிக்க முடிவதில்லை. "கடமையை கண்ணாக செய்கையில் காலம் செல்வது தெரிவதில்லை. கடமைகள் முடிந்ததும் கடந்த சென்ற காலம் மீண்டும் கிடைப்பதில்லை. " கிடைக்கும் போதே கடமையையும் காலத்தோடு அனுபவித்து வாழ்வோம்".

"தூர தேசம் சென்று தன் கடமைக்காக காலங்களை தொலைக்கும் வெளிநாட்டில் வாழும் இளைஞர்களுக்கு சமர்ப்பணம்".

இவன்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

6. K2K-00066

காலம்

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முகம் என் அம்மா மட்டும் தான். நான் சரியாக நடக்க கற்றுக்கொள்ளும் முன் என் அம்மாவையும் இழந்துவிட்டேன்.  சொந்த பந்தம் என்று யாருமில்லை. எனக்கென்று ஒரு வீடு வாசல் இல்லை. வெயிலிலும் மழையிலும் நான் பட்ட வேதனைகளை சொல்லி மாளாது. ஒரு நாடோடி போல் என் வாழ்க்கை போக ஆரம்பித்தது. ஒரு வேளை சாப்பாட்டிற்காக நான் வீதி வீதியாக சுற்றினேன். சென்ற இடமெல்லாம் அவ மரியாதையும் , இளக்காரமான பேச்சுகளும் அவ்வப்போது கற்கள் மழையிலும் நினைந்தேன்.

ஒரு நாள் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டேன். இனிமேல் முடியாது என்று தற்கொலை செய்ய துணிந்து தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தேன். ரயில் நெருங்கி வரும் சமயம் என்னை ஓர் உன்னதமான உயிர் காப்பாற்றியது. என்னை விட வயதில் மூத்தவர்போல் இருந்தார். என் சொந்த கதை சோக கதை எல்லாம் அவரிடத்தில் சொன்னேன். அப்போது அவர் சொன்னது இன்றும் ஞாபகம் இருக்கு, "தம்பி, உன்னோட கடந்த காலம் எப்படி இருந்ததுனு முக்கியமில்லை. இப்போ நீ என்ன பண்ணா  உன்னோட வருங்காலம் நல்ல இருக்குமுனு யோசி". எனக்கு ஆறுதல் சொல்லிட்டு கிளம்பிடுவாருனு நெனச்சேன். "சரி, நீ என் கூட வா.." னு என்ன கூட்டிகிட்டு போயிட்டாரு. அவரும் என்ன மாதிரி நாடோடி தான் தெரிஞ்சிகிட்டேன். இரண்டு பேரும் ஒவ்வொரு நாளையும் புதுசா எதிர்நோக்க கத்துக்கிட்டோம். வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்தது.

ஒரு நாள் நாங்க வீதில நடந்து வரும்போது, ஒரு திருடன் ஒரு பெண்ணிடம் கூரிய கத்தியைக் காட்டி மிரட்டிட்டு இருந்தான். நாங்க உடனே ஹீரோ மாதிரி சண்டை போட்டு அந்த பெண்ணைப் காப்பாத்தி விட்டோம்.  அந்த பெண் அவளின் தந்தைக்கு கைபேசியில் தொடர்புகொண்டு வரவழைத்தாள். அது வரைக்கும் நாங்கள் அவளுக்கு காவலாக இருந்தோம் . ஒரு பெரிய மகிழுந்து வந்தது, இந்த பெண் நடந்ததையெல்லாம் அவள் தந்தையிடம் சொல்லிய பிறகு அவரின் காதோரமாக ஏதோ சொன்னாள்.

 அவர் எங்களிடம் வந்து எங்களை மேலேயும் கீழேயும் பார்த்தார். எங்களை வண்டியில் ஏறச் சொன்னார். விரப்பான முகம் தான் என்றாலும் அவர் நல்ல எண்ணத்தோடு தான் சொன்னார் என்று தெரிந்தது. 

அடுத்த ஒரு வாரத்தில் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. எங்களுக்கென்று ஒரு சிறிய வீடு, நேரத்திற்கு நல்ல உணவு, நாங்கள் தொலைத்த அன்பையெல்லாம் அந்த பெண் மூலம் கண்டெடுத்தோம். அன்று, நான் விரட்ட பட்ட அதே வீதிகளில், இன்று ராஜாவைப்  போல் நடந்து செல்கிறேன்.   

மக்களே, அன்றைக்கு மட்டும் நான் தற்கொலை செய்திருந்தால், இப்படி ஒரு வாழ்க்கையை வாழாமலேயே போய் இருப்பேன். "கஷ்ட காலம் எல்லோருக்கும் வரும் ஆனால்  காலம் முழுக்க வராது" என்று நான் இப்பொழுது நன்கு புரிந்துகொண்டேன்.

அன்று நான் தெருபொறுக்கி. இன்று எனக்கென்று ஒரு அடையாளம்.

நான் - பப்பி,  திவ்யாவின் செல்ல பிராணி (நாய்)

நீதி : கடந்த காலத்தை மறந்து, நிகழ் காலத்தை புன்னகையுடன் எதிர் கொண்டால் , வருங்காலம் வசந்தமாகும்

- GD

 

7. K2K00088

மலைகளுக்கு பின்னால் அக்கதிரவன் வருகின்ற வேளை அது.ஒரு வீட்டின் உள்ளே., "ஏன்டி மாலா சீக்கிரம் வாயேன்டி நல்லநேரம் முடிய போகுது" என்று தன் மனைவியை நோக்கி கூறியவாறு   சீனு.அடுப்பங்கறையில் இருந்து, " இதோ வந்துடேன்னா செத்த  நாழி பொறுங்கோ " என்று மாலா தன் கணவருக்கு உணவை எடுத்துக்கொண்டு வருகிறாள். "மாலா நான்தான் இந்நேரம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று நோக்கு தெரியாதடி" என்று சீனு கூற,"ஏன்னா, இன்னும் உங்க அலுவலகம் தொடங்க முப்பது நிமிடம் உள்ளது,அதுக்குள்ள அவசரம்.." மாலா பதில் கூற  "ஏன்டிமா, அதுக்குள்ள நல்ல நேரம் முடிஞ்சுபோயிடும், நான் அலுவலகம் போகனுமோ இல்லையோ.." என்று தொடங்குகிறது சீனுவின் அன்றைய நாள். சீனு- மாலா நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்து வரும் தம்பதியினர். சீனு ஜோதிடத்தை அளவு கடந்து நம்புபவன்.அவன் தினமும் நல்ல நேரம் எதுவோ அதை பொறுத்துதான் அவனது எந்த ஒரு பணியையும் தொடங்குவான்.அவன் மனைவி மாலாவிற்கு இதன்மீது பெரிதாக எதுவும் ஈடுபாடு இல்லையென்றாலும் தன் கணவருக்காக அவளும் அவன் கூறியபடியே செய்வாள்.நன்றாக தான் அவர்களது வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது கடந்த ஆறு மாதங்களாக.

அன்று ஒரு நாள், கதிரவன் மறையும் வேளையில் சாலையோரம் தன் இல்லத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த சீனுவின் முன்னே, ஒரு நபர் தென்படுகிறார்.அவர் சீனுவின் கல்லூரி நண்பன்.அவருடைய முகம் சற்று வாடி இருந்ததைப் பார்த்து," என்ன நண்பா எப்படி இருக்கிறாய்?ஏன் கவலையுடன் தோற்றமளிக்கிறது உன் முகம்? " என சீனு தன் பேச்சை முடித்த நொடி, " அதை நான் எப்படி சொல்லுவது சீனு, என் நேரமே சரியில்லை.." என்று நண்பர் கூற, " என்னவாயிற்று கூறு, வா நம்ம ஆத்துக்கு போய் பேசுவோம்" என்ற சீனுவின் வார்த்தையை கேட்டவுடன், " இல்லை நான் ஒரு வேலையாக சென்று கொண்டிருக்கிறேன் சீனு, வேறு ஒரு நாள் வருகிறேன் " என்றார் அந்த நண்பர் கவலை கலந்த குரலில்." சரி அது இருக்கட்டும் உன் கவலைக்கான காரணம்தான் என்ன?" என்று சீனு வினவினான். அது வேறு ஒன்றும் இல்லை சீனு என் வியாபாரம் சில நாட்களாக நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது,அதான் என்னடா இது நம்ம நேரம் சரியில்லைனு கோவிலுக்கு போய் பரிகாரம் ஏதும் இருக்கானு பார்த்துட்டு வரேன்., என நண்பன் கூறியதை கேட்ட சீனு, " ஆமா ஆமா நண்பா அதுவும் சரிதான் நேரம் நல்லா இல்லைனாதான் இப்படியெல்லாம் நடக்கும், நீ கவலைப்படாத எல்லா சரியாகிடும் பார்த்துப் போயிட்டு வா" என்று ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு விடைபெறுகிறான் சீனு.

இல்லத்தில் மாலாவிடம் நடந்ததை கூறினான் சீனு." பார்த்தாயா மாலா என் நண்பனின் நிலையை., நல்ல வேளை நமக்கு நேரம் நல்லா இருக்குன்னு நம்ம ஜோசியம் சொல்லுது, அதுனால நமக்கு ஒன்னும் தீங்கு நடக்காதுடி" என்று சீனு கூறிய வார்த்தைகளைக் கேட்ட மாலா," ஏன்னா நேரம்தான் காரணமா   இருக்குன்னும் சொல்ல முடியாதுல" என்று கூற, அவளை நோக்கி சீனு, " சும்மா இருடி நோக்கு ஒன்றும் தெரியாது" என்று சற்று கோபத்துடன் கூறினான்."சரி விடுங்கோ கை கால் அலம்பிட்டு வாங்கோ சாப்பிடலாம், நடக்றது நடக்கட்டும்" என்று மாலா கூற , சீனு - மாலாவின் அன்றைய பொழுது முடிகிறது. அவன் நண்பனின் கஷ்டத்திற்கும் , அவனுக்கு அக்கஷ்டம் ஏதும் இல்லாததற்கும் நேரம் காலம் இவையெல்லாம் தான் காரணம் என்று நினைக்கும் சீனுவைப் போல நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டுதான்  இருக்கிறோம்.

கதையின் கருத்து:

                 நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் நாம் செய்யும் செயல்களே காரணம்., அதற்காக நாம் நேரத்தை சுட்டிக் காட்டுவதிலோ பழிபோடுவதிலோ எந்தவித பயனும் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.நேரத்தை நமக்கு கிடைத்த வரமாகக் கருதி பயனுள்ளதாக கழிப்போம்.

அன்புடன்

ஜனனி பிரபா

 

 

8. K2K0063

அவர்களின் காலம்

அவனுக்கும் அவளுக்கும் இன்று திருமணம்.இருவீட்டாரும் இணைந்து இருமனங்களை இணைந்தனர்.ஆனால் அவனை அவள் அவளது 8 வயதில் பார்த்தாள், அவனுக்கு அப்போது 19 வயது, அவனது குடும்பத்தினை கவனிக்கும் பாங்கு, அவனது பாசம், எதிலும் அவன் எடுக்கும் திட முடிவு, எதிர் பாலினத்தை அவன் மதிக்கும் பண்பு அனைத்தையும் இரசித்தாள்.அவனை தனது 13ம் வயதில் திருமணம் செய்ய எண்ணினாள் , அவனுக்கும் அது தோன்றியிருக்குமோ?, என்று அவனிடம் கூறும் காலத்திற்கு காத்திருந்தாள்.ஒரு நாள் தன் மனதை அவனிடம் கூறினாள், அவன் வயது அதிகம் என்று வருந்தினான் அதற்கு அவள் வயது தடையல்ல என்று மனதை வேண்டினாள்.இருவீட்டார்களிடமும் அவர்களின் விருப்பத்தினை கூறி திருமணம் நடந்தது அவளின் 17ம் வயதில்.அவன் அவள் குடும்பத்தையும் தனது குடும்பமாக மாற்றினான்.17 வயது கன்னியை தனது குடும்பத்தின் மகளாய் எண்ணி வளர்த்து தனக்கான துணையாக மாற்றினான்.அவர்களின் இல்லறத்திற்கு சாட்சியாக மூன்று வருடங்கள் கழித்து மகன் பிறந்தான், அவன் பிறந்து 8 வருடங்கள் கழித்து மகள் கருவில் உருவானாள் . மகள் பிறந்து 7 வயதில் அவனுக்கு புற்றுநோய் உண்டானது முற்றிய நிலையில் 8 மாதங்கள் அதனுடன் போராடியபடியே மேலும் அவளை வலுவானவளாக உருவாக்கினான்.திடமாய் தனித்திருக்க பழக்கினான் . ஒரு நாள் அவன் அவளிலியே ஐக்கியமானான் . அன்றிலிருந்து இன்றுவரை அவனாகவே மாறி அவள் அவளையும் வளர்த்துக்கொண்டு தன் மகனையும் மகளையும் சிறப்பாக வளர்த்திட தன் காலத்தை தனிமையில் , இவ்வாறான அவர்களின் கடந்த காலத்தை நினைத்து , நிகழ்காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறாள்.

அவள்

அனுராதா.

 

 

9. K2K-00008

காலம் - காத்திருப்பு

காத்திருந்து காத்திருந்து... காலங்கள் போகுதடி... பூத்திருந்து பூத்திருந்து....” வானொலியில் பாடல்ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது அந்த தேனீர்க்கடையில்.                                           

சுந்தரமும் மோகனும் அந்த கடையில் விடியற் காலையில் ஒன்றாய் அமர்ந்து தேனீர் அருந்துவது வழக்கம். இன்றும் அதே போல ஒரு தினசரி நாளிதழை புரட்டிக் கொண்டே இருவரும் வாதங்கள் புரிந்துகொண்டிருந்தனர்.

மோகன், தினமும் நானும் பார்க்கிறேன். இந்த நாளிதழில் தினமும் ஒரு கற்பழிப்பு அல்லது பாலியல் பலாத்காரச்செய்தியாவது வந்துடுது. நம்ம நாடு ஏன் இப்படி மாறிப்போச்சு

சுந்தரா, நம்ம நாடு எப்படி மாறிப் போயிடுச்சுன்னு சொல்ற. இது ஒண்ணும் புதுச் செய்தியில்லையே. மகாபாரதம் காலத்துலையே இது நடந்திருக்கு. அப்படி இருக்கும்போது, இப்போ நடக்குறதுல என்னத்த புதுசாகண்டுட்ட

டேய் என்னடா சொல்ற, மகாபாரத காலத்துலையே இப்படி நடந்துருக்கா

மகாபாரதத்துல மட்டும் இல்ல, நம்ம சரித்திரத்திலையே நிறைய நடந்திருக்கு. அதாவது ஒரு 20 வருசத்திற்குமுன்னாடி வரைக்கும், நிறைய பேர்கிட்ட டிவி இல்லை, போன் இல்லை... அதனால நிறைய விசயங்கள் நமக்குதெரிஞ்சுக்க முடியலை. ஆனா இப்போ, பல் தேய்க்குறத முதற்கொண்டு எல்லாத்தையும் சமூக வளைத்தளத்துலபோட்டுறானுங்க. அதனால ஊரு உலகத்துல நடக்குற எல்லா விசயமும் சீக்கிரமா தெரிஞ்சு போயிடுது

ஆமாமா. நீ சொல்றதும் வாஸ்தவம்தான். அதுவும் டிக்டாக்னு ஏதோ ஓன்னு இருக்குதாமே, ஊரு உலகத்திலஇருக்குற எல்லா பசங்க பொண்ணுகளும், தான்தான் ஏதோ எஸ்.பி.பீக்கு சீடன்ற மாதிரி பாட்டு பாடிட்டுதிரியுறானுங்க. இன்னும் சில ஜென்மங்க இருக்கு. அதுங்க, குத்துப்பாட்டுக்கு சிவாஜி டான்ஸ் ஆடுனா எப்படிஇருக்கும், அந்த மாதிரி ஆடிக்கின்னு திரியுதுங்க. ஆமாம் மகாபாரதத்துல என்ன விசயமிருக்கு சொல்லு?”

மகாபாரதத்துல பாஞ்சாலியை துச்சாதனன், சபை நடுவிலயே சேலையை உருவுனுது, பீஷ்மர் என்ற பிதாமகர், அம்பை, அம்பிகை, அம்பாலிகைன்ற இளவரசிங்கள நோய்வாய் பட்டுருக்குற அவரோட நாட்டு இளவரசருக்குகல்யாணம் செய்ய தூக்கிகிட்டு வந்தது, பாஞ்சாலி வனவாசத்துல இருந்தப்ப செயத்ரதன் அவளை தூக்கிட்டுபோய் செருப்படி பட்டது, ஏன், இராமாயணத்துல கூட இராவணன் சீதையை அவ சம்மதமில்லாம தூக்கிட்டுபோனது, இதெல்லாம் கூட பாலியல் வன்கொடுமைல தான வரும்

என்ன கொடுமை சார் இது? மோகன், அப்போ இப்ப நடக்குற எல்லாத்துக்கும், அதுலாம்தான் காரணம்னுசொல்றியா?”

நான் அப்படி சொல்ல வரலை. அதாவது அந்த காலத்துல நடந்த விசயத்தை புராணங்களா நமக்குகொடுத்துருக்காங்க சுந்தரா. அதனால அதை வச்சு நாம பாடத்தை கத்துக்கணும். ஆனால், நாம என்னபண்றோம்? அதையே காரணமா வச்சிகிருக்கோம். ஒரு பொண்ணை அவளோட விருப்பம் இல்லாததொடக்கூடாது. அப்படி தொட்டா அவன் ஆம்பளையே இல்லை. ஒரு விசயத்தை பத்தி பயப்படுறவன் தான்அதையே நினைச்சிக்கிட்டு இருப்பான். அப்போ எப்பப் பார்த்தாலும், பொண்ணு காமம் இதையேநினைச்சிக்கிட்டு இருக்குறவனுக்குள்ள நிச்சயமா அதைப் பற்றின ஒரு பயம் இருக்குறதால தான் அதைசெய்யிறான். அதனாலதான் அவன் அந்த தப்பையே பண்றான்மோகன் தொடர்ந்தான். “இதே ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி, தினமும் பாலியல் பலாத்காரம், கற்பழிப்புன்னுசெய்தி படிச்சிக்கிட்டா இருந்தாங்க. இல்லையே... ஏன், அப்போ அதெல்லாம் நடக்கலையா? ஏன்னா பலவிசயங்கள் அப்போ அவ்வளவு வேகமா பரவலை. முன்னவிட இப்போ கொஞ்சம் குறைஞ்சிருக்ககுமோன்னு கூடதோணுது. ஆனால் எதையும் சொல்றதுகில்லை

மோகன், அப்போ இது குறைவதற்கு என்னதான் வழி. விழிப்புணர்வு ஏற்படுத்தலாமா இதைப்பத்தி. அப்போகொஞ்சம் குறைய வாய்ப்பிருக்குல்ல

சுந்தரா, விழிப்புணர்வு அப்படின்ற வார்த்தையே தவறு. விழிப்புணர்வுன்ற பேர்ல நீ என்ன சொல்லுவமத்தவங்ககிட்ட... இனிமே இப்படியெல்லாம் யாரும் பண்ணாதீங்கண்ணா??? விழிப்புணர்வு என்ற வார்த்தையேபலரை ஏமாற்றும் யுக்திதான். நமக்கும் நம் மக்களுக்கும் தேவை விழிப்புணர்வு அல்ல, புரட்சி... புரட்சி மட்டுமேஇது போன்ற குற்றச் செயல்களை தடுக்கும்

மோகன். நீ என்னடா திடீர்னு, பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி பேசுற புரட்சி அது இதுன்னு

சுந்தரா, மகாத்மா காந்தி போல அகிம்சையை கடைப்புடிச்சோம்னு வச்சுக்க, இன்னும் பல நூற்றாண்டுகள்ஆகும் இந்த பாலியல் குற்றங்களை தடுக்க. குற்றம் பண்ற அத்தனை பேரையும் பாரபட்சம் பாக்காமதண்டிக்கணும். குற்றம் செஞ்சவன் வயசு குறைச்சலு, அதனால தையல் இயந்திரம் கொடுத்து அனுப்பிவைச்சா, எப்படி இந்த மாதிரி குற்றங்களை நிறுத்த முடியும்

சரி தான். சில விசயங்களை தடுக்குறதுக்கு புரட்சிதான் தேவை

நாடு சுதந்திரம் அடைவதற்கு அகிம்சை தேவைப்பட்டது. நாட்டுக்கு சுதந்திரமும் கிடைத்தது. நம் பெண்சொந்தங்கள் சுதந்திரம் அடைய, புரட்சி ஒன்றே தேவையான ஒன்று. இனி வரும் ஆண்டுகளில் அவர்களுக்குமுழுச்சுதந்திரமும் கிடைக்கும், பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமையிலிருந்து. அந்த காலமும் வரத்தான்போகிறது கூடிய விரைவில்

சரியா சொன்ன மோகன். ப்பா.... என்னா வசனம்... என்னா வசனம்... பேசாம நீ படத்துக்கு கதை எழுதபோயிடலாம். ஆமா மறந்தே போயிட்டேன், நாளைக்கு படத்துக்கு போலாம்னு கேட்ட. என்ன படம், எத்தனைமணிக்கு எதுவும் சொல்லவேயில்லை

சாயங்காலம் வேலையை முடிச்சிட்டு போன் பண்றேன் சுந்தரா. சரி. கிளம்பலாமா

கிளம்பலாம் டா. எனக்கும் நேரமாச்சு. வரேன் மோகன்.

இன்றைய இளைஞர்களின் புரட்சிப் பேச்சுக்கள் வீணாய் இப்படித்தான் காற்றில் பறந்து விடுகிறது. உண்மையான புரட்சியை எக்காரணம் கொண்டும் திசை திருப்புதல் கூடாது. புரட்சி என்று கூறிவிட்டு அதைச்செயல்படுத்தாமல் போனால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

பெண்களே நம் நாட்டின் செல்வங்கள் மற்றும் கண்கள். அதை காத்திட நினைக்காமல்கூட இருக்கலாம். ஆனால் கெடுக்க நினைக்கக்கூடாது.

என்றாவது ஒருநாள் இந்த புரட்சி வெடிக்கும். அப்போது நிச்சயம் நம் சகோதரிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும். காலம் மாறும். காத்திருப்போம்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி... பாடல் நேயர் விருப்பமாக மறுஒலிபரப்பு செய்யப்படுகிறது என்று அந்த தேனீர் கடையின் வானோலி ஒலித்துக் கொண்டிருந்தது.

அன்பரசு மகாதேவன்

(அ)

எழுத்தாளர் அகத்தியன்

 

 

10. K2K - 00081

கால(தாமதம்)

"டேய் சிவா, காலைல பத்து மணிக்கு நேர்முகத்தேர்வு. எப்பவும் போல இல்லாம இனிக்காச்சும் சீக்கிரமா வந்துடு" என்று அலைபேசியில் சொல்லிவிட்டு, தேர்வு நடக்கும் இடம்நோக்கி நடக்கத்தொடங்கினான் ரவி. கடந்த நான்காண்டு கால நினைவுகள் அவன் மனதில் ஓடத்தொடங்கின.

 ரவியும் சிவாவும் முதலாமாண்டிலிருந்தே நல்ல நண்பர்கள். படிப்பிலும் புத்திசாலிகள். ஆனால் ரவிக்கு சிவாவிடம் பிடிக்காத

ஒரு விஷயம், காலதாமதம். ரவி பலமுறை எடுத்துக்கூறியும் சிவா அலட்சியம் செய்தான். "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் " என்று வசனம் பேசுவான். தேர்வுகளுக்குக் காலதாமதமாகச் சென்றதால் பலமுறை ஆசிரியர்கள் கண்டித்தனர்.  இந்த நேர்முகத்தேர்வுக்காவது நேரத்தில் அவன் வந்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டே தேர்வு அறையை அடைந்தான் ரவி. மணி பத்தாகியது, தேர்வும் தொடங்கியது, ஆனால் சிவா எப்பொழுதும் போல பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்தான். அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் மன்றாடி தேர்வில் பங்கேற்றான். பல கட்டங்களாக நடைபெற்ற தேர்வில் ரவியும் சிவாவும் சிறப்பாகப் பங்களித்தனர். இறுதியாக தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்கள் படிக்கப்பட்டன.

"ரவி..."

"கீர்த்தனா..."

"விவேக்..."

"திவ்யா...."

தேர்ச்சி பெறுவோம் என்று நம்பிக்கையோடிருந்த சிவா இதை கேட்டு கலங்கிய வேளையில், அவனை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நிறுவன மேலாளர் அவனை தன் அறைக்கு அழைத்து வருமாறு சொல்லியனுப்பினார்.

"சர்.... உள்ள வரலாமா?"

"வாங்க சிவா...உக்காருங்க..."என்றார் அவர்.

தயங்கியபடியே உட்கார்ந்தான் சிவா.

"தேர்வுக்குக் காலதாமதமா வந்த மாணவர் நீங்கதானே..." என்று அவர் சட்டென கேட்டபோது சிவா வெட்கித் தலை குனிந்தான்.

"இங்க பாருங்க தம்பி...நடந்த எல்லா கட்டத்திலயும் நீங்க நல்லா பதில் சொன்னீங்க... உங்க பெயரும் இறுதி பட்டியலில் இருந்தது... ஆனா..... அது பின்னர் நீக்கப்பட்டுவிட்டது..." என்று அவர் சொன்னபோது அதிர்ச்சியடைந்தான்.

மேலும் அவர், "தேர்வுக்கு வரதுக்கு முன்னாடி உங்களுக்குக் குடுக்கப்பட்ட விதிமுறைகளைப் படிச்சீங்களா...?"

"படிச்சேன் சர்.."

"அதுல முதல் விதி என்னனு சொல்லுங்க பாப்போம்..."

அவர் திடீரென கேட்டதும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை.

சிரித்துக்கொண்டே அவர், " தேர்வுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி இங்க இருக்கணும்னு போட்டிருக்கும்..."

சிவா செய்வதறியாமல் திணறினான்.

" எங்கள் அலுவலகத்தில் நாங்கள் கடைபிடிக்கும் மிகமுக்கியமான பண்பு 'நேரம் தவறாமை'. புதுசா சேர்கிறவங்களும் அதை கிடைபிடிக்கணும். அதனால் தான் அதை முதல் விதியா வெச்சுருக்கோம். மாணவர்கள் சொன்ன நேரத்துக்கு வராங்களானு பாத்து, அதுக்கும் மதிப்பெண் கொடுத்தோம். அதுல உங்க ஸ்கார் பூஜ்யம். நீங்க காலதாமதம் செய்வதால் வீணாவது உங்க நேரம் மட்டுமல்ல, உங்களுக்காக மத்த வேலையெல்லாம் விட்டுவிட்டு காத்திருப்பவரோட நேரமும்தான். மத்தவங்க நேரத்தை வீணடிக்கும் உரிமை உங்களுக்கில்லை. இப்போ உங்களை நாங்க தேர்வு செய்தால், நேரம் தவறாமல் வந்தவங்களுக்கு அநியாயம் செஞ்சா மாதிரி இருக்காதா....அறிவை வளத்துக்கலாம் ஆனா நற்பண்புகள் அப்படியில்லை. இன்னிக்கி நீங்க கத்துகிற இந்த பாடம் கடைசிவரை நினைவிலிருக்கட்டும். இனியாச்சும் காலத்தோட அருமை தெரிஞ்சு நடந்துகோங்க. அடுத்த தேர்வுக்கு நேரமா போங்க கண்டிப்பா வெற்றி கிடைக்கும்" என்று வாழ்த்தியனுப்பினார்.

சிவாவின் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

 

"காலம் பொன்போன்றது. ஒவ்வொரு நொடியும் நமக்கு கொடுக்கப்பட்ட வரம். அதை வீணாக்காமல் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ளுங்கள்"

Narmada  

11. K2K00069

நிலையற்ற நேரத்தை நிறுத்தி அது ஒரு காலம் என விழிக்கும் தாத்தா பாட்டிகளை நீங்களும் கண்டிருப்பீர்கள்.

எங்கள் காலத்தில் இப்படியில்லை என்று நாம் பழக்கப்பட்டிருங்கும் கைபேசி யுகத்து வாழ்வைப் பார்த்து சிரிக்கும் நம் பெற்றோர்களுக்கு அவர்களின் காலம் தான் இனிது.. 

ஆனால் அவர்களின் கதைகளை என்றாவது கேட்டிருக்கிறீர்களா?  கேட்டிருந்தால் காலம் என்று தங்கள் இளமைக்காலத்தை பற்றி சொல்வதைப் புரிந்து கொள்ளலாம்.

சரி கதைக்கு வருவோம்.

நிலாவிற்கு முப்பது வயததுதான் ஆகி இருந்தது.  அன்பான கணவன் கதிர் அழகிய மழலை அன்பு என்று அவளது இனிய திருமண வாழ்வு நத்தையாக ஊர்வதை இரசித்து இன்பமாகவே இருந்தாள். 

18வது வயதில் திருமணம், 25வது வயதில் குழந்தை என வாழ்கை ஓடிக்கொண்டிருந்தது. 

அன்று "குறையொன்றும் இல்லை,  மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா.. ஆ ஆ ஆ ஆ.."

என்று பாடும் போது குறைகள் எட்டிப்பார்க அவள் சலனமடைந்தாள்.. 

 

நிலா நன்றாக படிக்கும் பெண்.  நன்றாக ஓவியமும் வரைவாள்.இது வரை 50கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருந்தாள். ஆனால் இதுவரை காட்சிப்படுத்தியதில்லை.குழந்தை பிறந்த பிறகு வேலை மிகுதியில் ஓவியங்களை வரைவதும் இல்லை..  ஆனால் அவளது கோலங்களை பார்ப்பவர்களள் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு தான் செல்வார்கள்.

 

நேற்று முதல்நாள் அவளது அப்பாவும் அவரது நண்பரும் வந்த போது ஒரு கலை கண்காட்சியகத்தில் அவளது ஓவியங்களை காட்சிப் படுத்தும் வாய்ப்பை பற்றி கூறினர்.

அதைப் பற்றி கதிரிடம் கூறிய போது அவன் சற்று தயங்கினான்.

"  காற்றுள்ள காலத்தில் தூற்றிக் கொள்ள வேண்டும் இல்லையாங்க..  இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்காதுங்க"  என்றாள்.

" பார்ப்போம் " என்றவனின் குரலில் அக்கறையில்லை.

இப்படி கலைத்த கனவுகளின் கோலங்களைத் தான் காலம் என்கிறார்கள் போலும்.

ஆனால் நிலா தன்னுடைய தூரிகையைத் தொலைக்கவில்லை.. விதியின் விளையாட்டை ஏற்று தன் மகளின் கனவுகளுக்கு வர்ணம் தீட்ட தான் தொலைத்த கனவுகளைத் தூரிகையாக்கினாள்.

⏳⏳⏳⏳⏳⏳⏳⏳

" Dr.அன்பு, ரொம்ப நன்றி.  நோய எதிர் கொள்ள நீங்க மனதளவில் எனக்கு நிறய தைரியம் தந்தீங்க.. " அந்தப் பெண் உருக்கமாகக் கூறினார்.

" இது என்னோட வேல .. உடம்ப பாத்துக்கங்க" கீற்றுப் புன்னகையுடன் கூறினார் அந்த பெண் மருத்துவர்.

கைபேசியில்...

" தாத்தா,  அம்மாவின் ஓவியக்கண்காட்சிக்கு கண்டிப்பாக வாருங்கள்" என்ற அன்பு , அம்மாவால் ஒளியூட்டப் பட்ட தன் கனவின் வெளிச்சத்தில் தாயின் கனவை பிரகாசமாக்கும் வேலையைத் தொடங்கினாள்.. ..

-VILIA 

 

12. K2K-00013

எங்கள் "ஊரான ரெட்டிப்பட்டி", தமிழ்நாடு ஆந்திரா எல்லைகளுக்கு இடையில் உள்ள ஓர் அழகிய கிராமமாகும். இங்குதான் என் அம்மாச்சி பிறந்து, வளர்ந்த இடமாகும். தொன்னூறு வயதைத் தாண்டினாலும், இப்பொழுதும் தனியாக வசித்து வருகிறார்கள். படிப்பறிவு இல்லாவிட்டாலும், நாட்டு நடப்புகள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்பிடியாகும். தனி ஆளாக என் அம்மாவையும், மாமாவையும் தன் உழைப்பால் வளர்த்து திருமணமும் செய்துக் கொடுத்துவிட்டார்கள்.

ஆனால் அம்மாச்சியைப் பற்றி கேட்டால் மட்டும் மௌனம் ஆகி விடுவார்கள்  என் அம்மாவே பலமுறை கேட்டும் , அவர்களுக்கும் பதில் கிடைக்காது. ஒரு முறை அப்பா கேட்டதற்கு  "காலம் பதில் சொல்லும்" என்று ஒற்றை வரியில் சொன்னார்கள் அதற்கு பிறகு நாங்களும் விசாரிப்பது விட்டுவிட்டோம். திடிரென்று ஒரு நாள் அம்மாச்சி சீரியஸ் என்று செய்தி வர, நாங்கள் எல்லோரும் உடனே புறப்பட்டுச் சென்றோம். எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருந்துப் பார்த்த அம்மாச்சியை படுக்கையில் பார்த்த பொழுது எங்களுக்கு கண்ணீர் வந்தது.அம்மா அவள் கையை பிடித்து, "ஆத்தா என செய்யுது ?" என்று கேட்டாள், அதற்கு அம்மாச்சி, "அய்யருக்கு சொல்லிருக்கான்" என்று மெதுவான குரலில் சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சுமார் எழுபது வயதுடைய முதியவரும், நடுத்தர வயதுடைய பெண்மணியும் உள்ளே வந்தனர். அம்மாச்சியைப் பார்த்து, "அடியே ராக்கு இம்புட்டுக் காலமா ஏற்க மறுத்துவிட்டாயே " என்று அழுதார்கள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாச்சி                                               எங்களை அருகில் அழைத்து "இவ்வுளவு காலம் நீங்க கேட்ட ஐயன் இவுகத்தான், சிறுவயதில் ஒரு நாள் விளையாட்டாக உன் ஐயன் என்னிடம் வந்து "நான் உன் தோழி தர்மியைக் கல்யாணம் செய்து கொண்டு வந்து நிறுத்தினால் என செய்வாய் ? என்று கேட்டார் அதோடு நில்லாமல் அவளை அழைத்துக்கொண்டு நேரே வந்ததும் நின்றேர். விளையாட்டு வினையாகி நன் கோவித்துக் கொண்டு உங்களுடன் இங்கு வந்துவிட்டேன். உன் ஐயன் பிறகு எவ்வளவோ முறை என் தோழியுடன் வந்து மன்னிப்புக் கேட்டும், நான் அவர்களின் நல்லா உள்ளதைப் புரிந்துக் கொள்ளாமல் விரட்டி அடித்தேன் மனசாட்சி உறுத்தியதால் தர்மியும் யாரையும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இருவரும் என்னுடைய கோபத்தினால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டார்கள். இப்பொழுதும் நான் திருந்தவில்லையெனில் தான் மனுஷியே இல்லை என்று சொல்லி அழுதார்கள்..

இதைக் கேட்டதும் அம்மா "இப்பொழுது நீ சொன்னவற்றை முன்னமே சொல்லியிருந்தால் நாம் எல்லோரும் சந்தோசமாக இருந்திருப்போமே" என்று சொல்லி அழுதாள்.

நீதி: வாழும் "காலத்தில்" நாம் சற்றே நிதானமாக யோசித்து செயல்பாட்டால், பின்னாளில் வாழ்க்கையில் வருந்த தேவையில்லை.

RAMA  GOVINDARAJAN(GRAPES )

 

13. காலம்

அவள் நன்றாக தூங்கி நான்கு நாட்கள் ஆகிவிட்டது .

கண்களின் எரிச்சல் தாங்க முடியவில்லை.வீட்டிற்கு சென்று தூங்கினால் தான் நன்றாக தூங்க முடியும் என்று நினைத்தாள்.

நான் வீட்டுக்கு போய்ட்டு குளிச்சிட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு வரேன் மா'

'ஏன்மா இங்கேயே குளிக்கலாமே'

'இல்லமா இங்க சரியா வராது' மருத்துவமனை குளியல் அறையை நினைத்தாலே குமட்டி கொண்டு வந்தது அவளுக்கு

'சரி போய்ட்டு சீக்கிரம் வா' என்றாள் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் நந்தினியின் அம்மா சொன்னாள்

அவள்  தயாராகி கிளம்பு முன் மறுபடியும் அவளின் அம்மா ' நீ கண்டிப்பாக  போகவேண்டுமா.என்னமோ நீ வருவதற்குள் என் காலம் முடிந்து விடும் னு தோணுது' என்றாள்

'எத்தனை தடவ சொல்றது இப்படி பேசாதீங்கனு'  கொஞ்சம் கோவத்துடன் சொன்னாள் அவள்.

அவள் அம்மா அப்படித்தான் வேதனை பொறுக்க முடியாமல் அடிக்கடி ‘நான் சீக்கிரம் போய் விடுவேன்' என்பாள்.. ஆஸ்துமாவால் 20 வருடங்கள் அவதிப் பட்டு கொண்டிருந்தாள்பின்புறம் இடுப்பு பகுதியில் தீடீரென நீர் கசியத் தொடங்கியது

என்ன ஏது என்று புரியாமல் அரசாங்க மருத்துவ மனையில் வந்து சேர்த்து நான்கு

நாட்கள் ஆகி விட்டதுமூத்த பெண் நந்தினி தான் நான்கு நாட்கள் கூட இருந்தாள்..

கல்லூரிக்கு விடுப்பு  சொல்லி விட்டு அவள் தங்கை இன்று தான் வந்தாள். அவளிடம் அம்மாவை பார்த்து கொள்ள சொல்லி விட்டு நந்தினி வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு நினைத்து இருந்தாள்

நந்தினியை கொஞ்சம் அதிகமாகத்தான் அவள் அம்மாவுக்கு பிடிக்கும் அதற்காகத்தான் அவளை இருக்க சொன்னாள்அவளை தோழியாக தான் அவள் நினைத்தாள்..

அம்மா நான் போயிட்டு வரேன்கவிதா இருக்கமா உங்கள் நல்லா பார்த்துப்பா நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்' என்றாள் நந்தினி..

இல்லடி எனக்கு என்னவோ தோணுதுநான் போயிடுவேன்னு தோணுது'

அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. இப்படி பேசாதீங்க ப்ளீஸ்'

நான் போயிட்டு வரேன்' என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பி விட்டாள்.

அவளின் வீட்டுக்குச் செல்வதற்கு அரை மணி நேரம் ஆகும்.. பேருந்தில் தான் செல்ல வேண்டும்பேருந்தில் ஏறி உட்கார்ந்து அவளின் அம்மாவை பற்றி நினைத்துக்கொண்டே சென்றாள்.. உலகத்தில் இவ்வளவு அன்பாக யாராவது இருப்பார்களா?... அவள் பேரன்பு உடையவள்அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் கவலைகள் மறந்து விடும். அவளின் குணத்தை நினைத்து நந்தினி பலமுறை மிக ஆச்சரியப் பட்டிருக்கிறாள்

அனைவரையும் சமமாக பார்க்கும் அந்த நல்ல உள்ளம் யாருக்கும் வராது.

குழந்தை மனம் அவளுக்குஅதட்டிப் பேசத் தெரியாது.. எத்தனையோ விஷயங்களில் அவளின் நல்ல குணத்தை நந்தினி பார்த்திருக்கிறாள்

நினைவுகளை அசை போட்டுக் கொண்டே வீடு போய் சேர்ந்தாள் நந்தினி சிறிது நேரம் படுக்கலாம் என்று நினைத்து படுத்தாள்..

5 நிமிடத்திற்கு மேல் படுக்க முடியவில்லைஏனோ அவள் அம்மாவின் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் நினைவில் வந்துகொண்டே இருந்தது..

குளிக்கவும் இல்லை சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் இல்லை கிளம்பிவிட்டாள் மருத்துவமனைக்கு. மருத்துவமனையின் வாசலில் வந்து கொண்டிருக்கும்போது அவளுடைய அப்பா எல்லாம் முடிந்துவிட்டது என்பது போல் கையை அசைத்து கொண்டே வந்து கொண்டிருந்தார்தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..அப்பா என்ன ஆச்சு'

போய்ட்டா மா அவ போய்ட்டா நம்ம எல்லாரையும் விட்டுட்டு'

'அம்மா' என்று அவள் கத்திய சத்தத்தில் அங்கு இருந்த அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள்நான்கு நாட்கள் அவள் கூடவே இருந்து அவளை கவனித்துக் கொண்டவள் இன்று ஒரு நாள் அவளுடன் இருந்திருக்கக் கூடாதா. அழுது அழுது தீரவில்லை நந்தினியின் துக்கம். காலத்தின் கணக்கை யாரறிவார்..

# காலத்தின் கணக்கு எளிதில் புரிவதில்லை.

-சுகமதி

 

 14. K2K-00002

காலம்

ஒரு சிறிய அழகான அன்பான குடும்பத்தை பற்றி பார்ப்போம்.

'அம்மா' பெரிய படிப்பு படிக்கா விட்டாலும் வாழ்க்கையில் யார்கிட்டயும் கையேந்தும் நிலைமை மட்டும் வரக்கூடாது என்று நினைப்பவள்.மகன் பெயர்- அருண் அவன் மிகவும் நல்லவன் அம்மா என்றால் உயிர் அவள் மட்டும் தான் உலகம் என்று நினைப்பவன் சுட்டித்தனம் கொண்டவன் அவனுக்கு விளையாட்டு மட்டுமே பிடிக்கும். அருண் குழந்தையாக இருக்கும் போதே அவனின் அப்பா மாரடைப்பால் இயற்கை எய்திவிட்டார். அருணின் அம்மா அப்பா இல்லாத குறை மற்றும் ஏக்கம் வரக்கூடாது என்று எண்ணி அவன் மேலுள்ள  பாசப்பிணைப்பால்  கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து கொண்டு இருந்தால்  ஆனால் அருண் வளர வளர படிப்பில் ஆர்வம் குறைந்து விளையாட்டு பிள்ளையாகவே இருந்தான்.அவனுடைய அம்மா  எவ்வளவு  அறிவுரை வழங்கினாலும் மாறாமலே இருந்தான். அவனை சரி செய்ய அம்மா புரியாமல் விழிபிதுங்கி இவனின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்னவோ என்று யோசித்து தன்னை அறியாமல்  கண்கலங்கினாள். அம்மா அழுவதை பார்த்த அருணுக்கு புரியாமல் " அம்மா ஏன் அழுகிறாய்" என்று கேட்க அதற்கு அவள் உன் எதிர்காலத்தை நினைத்து தான் நீ இப்படியே படிக்காமல் விளையாட்டு விளையாட்டுனு திரிந்தால் வாழ்க்கையில் எப்படி நீ முன்னுக்கு வருவாய் நான் தான் படிக்கல அந்த காலத்தில எங்க அம்மா  உன் மாமா சித்தியை பாத்துக்கணும்னு என்னை  பள்ளிக்கு அனுப்பவில்லை. பருவ வயது வந்தவுடன் கல்யாணத்தை பண்ணி உன் அப்பாவின் கைகளில்  பிடித்து கொடுத்துவிட்டார்கள்.                             2 வருடங்கள் கழித்து நீ பிறந்தாய் உன்னை வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டோம் கையேந்தும் நிலையும் வந்தது ஆனால் உதவிக்கரம் என்று நான்  நீட்ட வில்லை.ஏனென்றால், சொத்துக்காக சொந்த பந்தங்களே முகத்தை  திருப்பிக்கொண்டனர். அப்புறம் என்னுடைய தாலிச்செயின் விற்றுத்தான் குடும்பத்தை நடத்தினோம் உன் அப்பாவுக்கு பிடிக்கவில்லை விற்றது அவர் தன்னோட நேர்மையான கடின உழைப்பால்  சேர்த்து வைத்து  உன் பிறந்தநாள் அன்று மீட்டு திருப்பிக்கொடுத்தார் நம்ம நல்ல நிலைமைக்கு வந்ததுக்கு அப்புறம் சொந்த பந்தங்களுக்கு ஞாபகம் வந்திச்சி உன் அப்பா திட்டி அனுப்பிவிட்டார் அதனால் தான் சொல்கிறேன் நீ நல்ல படிச்சி பெரிய உத்தியோகத்தில் இருந்தால் தான் உன்னை மதிப்பாங்க ஒரு மனுஷனா இல்லை என்றால் இந்த காலக்கட்டத்தில்

உன்னை ஒரு துளிக் கூட மதிக்க மாட்டார்கள் அவர்களின்  கண்ணுக்கு நீ ஒரு கோமாளியாக தான் தெரிவாய் என்று தன் மகனுக்கு புத்தி உரைத்தால். அம்மாவே மீண்டும் பேச தொடங்கினாள் அது மட்டும் இல்லை அருண் கண்ணா இன்றைய காலத்தில் நேர்மையா உழைச்சி சம்பாதிக்கணும் குறுக்குவழியில் சம்பாதிக்கணும்னு நினைக்கிறது மட்டுமே தப்பு இல்லை அதே சமயம் குறுக்குவழியில் சம்பாதிக்கிறது நிரந்தரமும் அல்ல அருண் அதற்கு " புரியல அம்மா குறுக்கு வழினு எப்படி கண்டு பிடிக்கிறது ?" அம்மா விளக்கி கூறினால்  எதை  நீ என்கிட்டயோ  மாற்றவர்களுடனோ  பகிர  தயங்குகிறாயோ நீ தப்பு செய்துருக்கிறாய் என்று அர்த்தம். அருண் தன் அம்மாவிடம் " என் எதிர்காலம் நினைத்து வருத்தப்படாதீங்கள் நான் அடுத்த காலக்கட்டத்தில் உயர்ந்து நம் ஊர்க்கு பெருமை சேர்ப்பேன் என்று வாக்களித்து அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம்  பெற்று வேலைக்கு சேர்ந்த சிறிது காலத்திலேயே  சொன்னது போல் செய்தும் காட்டிவிட்டான். அருணின் அம்மா மிக மகிழ்ச்சியுடன் தன் மகனை தட்டி கொடுத்தால் .ஊர் மக்கள் மற்றும் சொந்தபந்தங்கள் அனைவரும் ஏளனமாக பார்த்த காலம் போய் இப்போழுது அவனை பெருமிதத்துடன் போற்றப்படுகிறார்கள்.

கருத்து: காலம் மாறலாம், நேரம் மாறலாம்,இயற்கை மாறலாம்,  பாதை மாறலாம், சூழ்நிலை மாறலாம், வாழ்க்கை மாறலாம்,உலகம் கூட மாறலாம்  ஆனால் இந்த உலகில் தாய் பாசம் மட்டும் என்றுமே மாறாது.

-லக்ஷ்மி ப்ரியா

 

 

 

15. K2K00048

காலம்

             ஓர் ஊரில் ஓர் குடும்பத்தில் தாய் தந்தை மற்றும் இவர்களின் இரு பெண் குழந்தைகள் வாழ்ந்துவந்தனர் .,

             இரு குழந்தைகளுக்கும் இடையில் பத்து வருட கால இடைவெளி இருந்தது , எனவே இவர்களின் வயதின் பக்குவ நிலை முற்றிலும் வேறுப்பட்டதாகவே இருந்தது .,

             பெரியவள் என்றும் வீட்டில் தனித்து இருக்கும் நேரம் எல்லாம் தொலைக்காட்சியுடன் கால நேரங்களை செலவழித்தால் .,

             சிரியவளின் உணர்வு சிறு குழந்தையின் உணர்வாகும் , இவள் ஓடி ஆடி விளையாட்டு குணத்துடன் இருக்கும் வயதில் ,

             தன்னுடன் விளையாட யாரும் இல்லை என்று ஏங்கி தவித்தால் , இதனை பெரியவள் உணரவில்லை , 

             சிறியவள் படும் மனவேதனையை எவரும் அறியவில்லை , எனவே சிரியவள் தம்முடைய குணத்தையும் பக்குவத்தையும் பெரியவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முயற்சி செய்தால் ,

            சிறிய வயதிலும் பெரியவர் போல பக்குவம் பெற்றால் , இந்த பக்குவத்தினால் இவள் உடன் இருக்கும் தோழர்கள் நடுவில் இவள் தனித்து நின்றாள்.,

           ஏனெனில் இவளின் வீட்டை பொறுத்த வரை இவளின் பக்குவ குணம் பெருமை அளித்தது , ஆனால் பருவ வயதிற்கு மேற்பட்ட இவள் குணம் , இவள் வயதிற்கு சம்பந்தம் இல்லாத நிலையில் அமைந்தது ..,

          இவள் அதிகமாக வீட்டில் இருந்த நேரத்தில் இவள் வீட்டில் உள்ளவர்களுக்காக தம்மை மாற்றிக்கொள்ள முயன்றால் , இவள் மாறியதும் , காலமும் மாறியது , இவள் அதிகமாக வெளியில் உள்ள காலங்களில் வெளி உலகிற்கு ஏற்றவாறு இவளது குணம் அமையவில்லை ,

          இவள் மீண்டும் தம்மை பருவ வயது பெண்ணாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க எண்ணினால் வரும் காலங்களில் நாம் மீதி இருக்கும் வாழ்வினையும் இழப்போம் என்று உணர்ந்தாள் .,

         இருக்கும் காலங்களில் இவள் அனைத்து சந்தோஷங்களையும் நிம்மதியையும் இழந்தவலாய் வாழ்ந்தால் ...

-சி. தெய்வாணி ஸ்ரீ

 

16. K2K-00036

கால மாற்றம்

பத்து வருடத்துக்கு முன்பு..

தாத்தா, "சந்தோஷ் கண்ணா! இங்க வாப்பா"

கம்ப்யூட்டரில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த தன் ஒரே பேரனை அவர் அழைக்க ,அவரின் குரலை கேட்டு விளையாடிக் கொண்டு இருந்த கேமை பாஸ் செய்து வைத்து வந்தான்.

சந்தோஷ், "ஹ்ம்ம் சொல்லுங்க தாத்தா"

தாத்தா, "என்னப்பா நானும் காலையிலிருந்து பார்க்கிறேன் அந்த டிவி பெட்டியை பார்த்து கொண்டே கையில் ஒரு பலகையை வச்சு தட்டி கொண்டே இருக்கே. அப்படி அதில் என்ன செய்யுற?"

சந்தோஷ், "கிரிக்கெட் விளையாடுறேன் தாத்தா."

தாத்தா, "கிரிக்கெட் எல்லாம் ரோட்டில் தானே விளையாடுவாங்க நீ என்ன டிவி பெட்டில விளையாடுற?"

சந்தோஷ், "ஐயோ தாத்தா அது டிவி பெட்டி இல்ல ,கம்ப்யூட்டர்."

தாத்தா, "அட பார்க்க டிவி பெட்டி மாதிரி தானே இருக்கு? டிவிக்கும் இதுக்கும் என்னப்பா வித்தியாசம்?"

சந்தோஷ், "வித்தியாசம் இருக்கு தாத்தா. டிவி ல நீங்க படம் பார்க்கலாம், நியூஸ் பார்க்கலாம் அப்பறம் பாட்டு கேட்கலாம். இப்படி குறிப்பிட்ட சிலது தான் பண்ண முடியும்."

தாத்தா, "அப்போ நீங்க சொன்ன இந்த பெட்டி ல?"

சந்தோஷ், "இது பெட்டி இல்ல கம்ப்யூட்டர். டிவி ல இருக்குற அதே மாதிரி தான் இதிலும் பார்க்கலாம்.ஆனால் இதில் நம்ம பார்க்க நினைப்பது தான் பார்ப்போம். நமக்கு பிடித்த பாட்டு டவுன்லோட் பண்ணி பார்க்கலாம், கேட்கலாம் மற்றும் ரசிக்கலாம். பாடம் கூட இணைய தளத்தில் பார்க்கலாம். அத்தோடு நிறைய பயன் இருக்கு தாத்தா அதில் ஒன்று தான் இப்போ நான் கேம் விளையாடுவது. இந்த காலத்தில் கம்ப்யூட்டர் எல்லா துறையிலும் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது."

தாத்தா, "என்னமோ போ! எங்க காலத்தில் இப்படியெல்லாம் இல்ல. ஒரே இடத்தில் உட்கார்ந்து பலகையைத் தட்டிக் கொண்டு இருக்க மாட்டோம். வெளியே போய் விளையாடுவோம் ,வீட்டு பெரியவர்களோடு கலந்து பேசுவோம். எங்க காலத்தில் கூட்டுக் குடும்பம் தான் நடைமுறை. இப்போ பார் அவங்க அவங்க தனிக் குடித்தனம் போக ஆரம்பிச்சுட்டாங்க. இனி போகப் போக என்ன நடக்கப் போகுதோ?"

சந்தோஷ், "இதான் தாத்தா காலத்தின் மாற்றம். ஒவ்வொரு காலத்திலும் மனிதனின் வாழ்க்கை முறை இன்னும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது."

தாத்தா, "தப்பு பா! தப்பு! இந்த மாற்றம் எல்லாம் மனிதனுக்கு உயர்வு தருவது போல மனிதனை மனிதனிடம் பிரிக்கிறது. நீ சொன்ன இந்த கம்ப்யூட்டர் இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னாடி பக்கத்து வீட்டு பசங்களோட பக்கத்து ஏரியா பசங்களோட போய் என்று கிரிக்கெட் விளையாடுவது போய் இப்போ இந்த பெட்டியை பார்த்து விளையாடிக் கொண்டு இருக்கே. இதனால் பல நண்பர்கள் இழந்து இருக்கே அது உனக்கு புரியுதா?"

சந்தோஷ், "அட போங்க தாத்தா! எப்படி பார்த்தாலும் எதையாவது சொல்லிட்டு கிட்டு. நான் போய் திரும்பி விளையாட போறேன்."

இன்று..

அதே சந்தோஷ் தன் முன்று வயது மகனுக்கு அறிவுரை சொல்லி கொண்டு இருந்தான்.

சந்தோஷ், "குட்டி சொன்ன கேளு வீட்டுல போய் மொபைல் கேம் விளையாடலாம். இப்போ தாத்தா பாட்டியை பார்க்க அவங்க வீட்டுக்கு வந்து இருக்கோம் ல. அவங்க கூட போய் பேசு."

குட்டி, "போப்பா இது என்ன கம்ப்யூட்டர் ஆ? ஒரே இடத்தில் வைத்து விளையாட? இது மொபைல் போற எல்லா இடத்திலும் வச்சு விளையாடலாம்."

தற்போது சந்தோஷ் அவன் காலத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

# குறிப்பு

காலங்கள் மாற மாற மனிதனின் தேவையும் மாற்றம் ஏற்படும். ஆனால் அந்த மாற்றம் தந்த தொல்லைகள் உங்களின் முன்னால் தலைமுறைக்கு தான் தெரியும். உங்கள் கால மாற்றம் முன்னால் காலத்துக்கு எப்போதும் தொல்லை தான். ஆனால் எதிலும் முழு நன்மையும் இல்ல! தீதும் இல்ல! அது பார்க்கும் பார்வையை பொறுத்து.

நன்றி!

விஜயன்.

 

 

17. காலம்

பள்ளிக்கூடம் பயில்கயிலே ஆலங்கட்டி மழைக் கண்டோம்...! கல்லூரி பயில்கயிலே வெள்ளம் வந்து முழு நாடும் சேதம் அடைந்து அதிலிருந்து மீளக்கண்டோம்...! இன்று நோய் தொற்று காரணமாக உலகமே அடைந்து கிடக்க காண்கிறோம்...!

சந்தோஷம்... சோகம்... ஏற்றம்... தாழ்வு... பாதிப்பு... மீட்ப்புப்பனி... அத்தனையும் கண்டோம்...!

இன்னும் என்னென்ன காண்போம்...? காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.”

கொரோனா காலம் முடிந்த பிறகு கல்லூரி திறந்த நாளன்று கந்தன் தன் கல்லூரி நண்பர்கள் முன்னால் நின்று முதல் நாள் உரையாற்றினான்.

அவன் பேச்சும் அவன் கூறிய எடுத்துக்காட்டுகளும் அநேகரை கவர்ந்தது.

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்தில் பிளேக் நோய் பரவத்தொடங்கியது. கொரோனா போலவே அதுவும் சுவாசம் வழியாகவே மனிதர்களை பலிக்கொண்டது. அதிலிருந்து மீண்டு வந்து இத்தனை காலமாக மருத்துவ துறையும் தொழில்நுப்பத் துறையும் அடைந்திருக்கும் உயரம் நாம் எல்லோரும் அறிவோம். அப்படி இருக்க நாம் பயம் கொள்ள தேவையில்லை. இருந்த போதிலும் இந்த நோய்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டு மரணித்த அணைத்து ஆன்மாக்களும் சாந்தம் அடைய அந்த இறைவனை வேண்டுவோம்.”

கந்தன் பேசி முடித்தான். அனைவரும் ஒரு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தினார்கள். கூட்டம் கலைந்தது.

நல்லா பேசுன டா...! நரையா ப்ராக்டிஸ் பண்ணியோ...?” பிரியா கந்தனை வாழ்த்திக்கொண்டே கேலியாக கேட்டாள்.

இல்லடி... எல்லாம் மனசுல இருந்து பேசுனது....”

தெரியும் டா... சும்மா கிண்டலுக்காக கேட்டேன்...”

ம்ம்ம்...”

இருவரும் மௌனமாக நடந்தார்கள். தினம் அமரும் பெஞ்சில், கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு அமர்ந்தார்கள். லாக்டவுன் முன்பு தினம் தினம் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடும் இடம் அது. இன்று இவர்கள் இருவர் மட்டும்.

ஐ மிஸ் தெம் பிரியா சொன்னாள்.

மீ டூ...”

ம்ம்ம்...” இருவரும் பெருமூச்சி விட்டு மீண்டும் அமைதியானார்கள்.

நாட்கள் முன்பு போல் இல்லை. மீண்டும் அந்த காலம் திரும்புமா? தெரியவில்லை. அடிக்கடி கை கழுவலாம், தினம் இருமுறை குளிக்கலாம், வெளியே சென்று வந்தால் கை கால்கள் கழுவலாம், சமூக இடைவெளி கடைபிடிக்கலாம், இத்தனையும் செய்தாலும் அனைவரின் மனதில் பதிந்துள்ள இந்த பயம் காணமல் போக இன்னும் எத்தனைக் காலம் ஆகுமோ தெரியவில்லை.

 பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி வந்த பிறகும் இன்னும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கூட்டம் இருக்கும் என்பதால் வெளியே அனுப்பவில்லை. கந்தனும் பிரியாவும் கல்லூரியின் ச்டோன் பெஞ்சில் அன்று தனிமையில் அமர்ந்திருந்ததற்கு அதுவே காரணம்.

என்னடா இது... பத்து பேருக்கு கம்மியா நம்ம இங்க உக்காந்ததே இல்ல... இப்போ பாரு... எல்லாம் வீட்ல ஜாலியா உக்காந்து நெட்ப்ளிக்ஸ் பாத்து ஸ்டேடஸ் போடுதுங்க

விடுடி.. பசங்களும் கண்டிப்பா நம்மள மிஸ் பண்ணுவானுங்க....”

கிளிசானுங்க....”

கொஞ்ச நாள்ல எல்லாம் சரி ஆய்டும்...”

எவ்ளோ நாள்...?”

மீண்டும் மௌனம் நிலவியது.

கல்லூரி மணி ஒலித்ததும் அவர்கள் வகுபிற்குச் சென்றனர்.

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

நாம் காத்திருப்போம்...!

-Mr.Dexzty  

 

18. K2K-00042

காலம்...

கால(ன்)தாமதம்

காலம் கண் போன்றது ,கடமை பொன் போன்றது.

 அந்த அழகான மேற்கு தொடார்ச்சி மலை அடிவாரத்தில் தான் நம் கதை நாயகர்களின் ஊர் . கொஞ்சும் அழகே கெஞ்சும் குற்றால மலை அடிவாரத்தில் அந்த அருவி  போகும் வழியில் தான் அவர்களின் ஊர் அமைத்துள்ளது. அவ்வூரின் பெயர் கடையநல்லூர். நம் கதை நாயகர்கள் ஒட்டி பிறந்த இரட்டையர்கள். ஒருவர் பெயர் அன்பு , மற்றவர் பெயர் அரசு. இருவரும் பிறந்த வருடம் 1980. இருவரும் அதே ஊரில் தங்களது பள்ளி படிப்பை முடித்தனர். பின் தங்களது கல்லூரி படிப்பை தனக்கு மாவட்டத்தின் தலை நகர் நெல்லையில் சென்று முடித்தனர். அன்பு எப்போதும் அவன் பெயருக்கு ஏற்றாற்போல் அன்புக்கும் அறிவுக்கும்  பாத்திரமாக விளங்குபவன்.அரசு பாதி அன்பும் மீதி அவசரமும் கொண்டவன்.

  இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் ஆனாலும் குணங்கள் வேறு வேறு மாதிரியாக இருந்தது. அன்பு எப்போதும் தன் நேரத்தை கணக்கிட்டு திட்டமிட்டு செயல்களை செய்பவன். அதனால் அவன் வாழ்வில் உயரிய இடத்தை அவன் திட்டமிட்ட படி அடைய முடிந்தது .அரசுவும் தன் வேலைகளை செய்து முடிப்பான் ஆனால் அவன் தான் விருப்பப்பட்ட நேரத்தில் செய்து முடிப்பான். அவனும் முன்னேறினான் ஆனால் அதற்க்கு சில காலம் அதிகமாக ஆயிற்று. இப்படி இருக்கையில் அவர்களுக்கு திருமண வயதும் வந்தது பின் அவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அதை அவர்கள் வீட்டில் சிறப்புற செய்து முடித்தார்கள்.

   இருவரும் தத்தமது வாழ்க்கையில் வெற்றிகரமாக சென்னையில் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அன்பு தான்  வாழ்க்கையில்  எது நடந்தாலும் நல்லதே என நினைக்கும் மனம் கொண்டவன். ஆனால் தம்பி அரசு தன் அவசர குணத்தால் சில சமயம் யாரிடமாவது சண்டை வளர்த்து கொள்வான்.  இருவரும் ஒரு முறை தம் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு  போவதாக திட்டமிட்டார்கள் . அந்த நாள் இரவு 10 மணிக்கு அவர்களுடைய பேருந்து. அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பி செல்ல அன்பினால்  சிறிது நேரம் அதிகமாகி விட்டதால் அவர்களால் அந்த பேரூந்தை சென்று பிடிக்க இயலவில்லை. இதனால் அரசு மிகவும் கோபமும் வெறுப்பும் அடைந்து தன் அண்ணன் அன்புவை திட்டி கொண்டே வீடு திரும்பினான். அன்புவோ எல்லாம் நன்மைக்கே என நினைத்து கொண்டு வீடு திரும்பினான்.

   பின் மறுநாள் காலையில் அவர்கள் எழுந்து செய்திகள் பார்க்கும் போது தான் அவர்களுக்கு தெரிய வந்தது. தாங்கள் செல்ல வேண்டிய பேரூந்து ஒரு பலமான விபத்தில் சிக்கி கொண்டு ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதை கேட்டதும் அரசு தன் அண்ணனை ஆற கட்டி தழுவி கொண்டு மன்னிப்பு கேட்டான். அந்த நிகழ்வுக்கு பிறகு அவனும் காலத்தை கணக்கிட்டு நடக்க ஆரம்பித்தான்.

    ஆம் அந்த கால தாமதம் அவர்கள் வாழ்வில் கால(னை) அல்லவா தாமத படுத்தி இருக்கிறது. அதனால் நாமும்  நம்முடைய வாழ்வில் காலத்தை திட்டமிட்டு கணக்கிட்டு நடப்போம். பின்பு எதாவது தாமதம் ஏற்பட்டால் எல்லாம் நன்மைக்கே என எண்ணிக்கொண்டு நிம்மதியாக வாழ்வோம்.

    நெறி:  காலம் கண் போன்றது ,கடமை பொன் போன்றது. அதே வேளையில் எல்லாம் நன்மைக்கே எனவும் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு நாளு ம் நாம் கண் விழித்து எழும் போது 86400 நொடிகள் நம் கணக்கில் இருக்கிறது. நாம் அதை விழிப்புணர்வுடன் பயன் படுத்தினாலே போதும் , நாம் நினைக்கும் காரியங்களை வெற்றிகரமாக அடைய முடியும்.

-கணேசன் சண்முகவேல்

அஹமதாபாத் ல் இருந்து...

19. K2K - 00034

மாயவளின் கண்ணாமூச்சி

கண்ணுக்கு எட்டிய தூரம் வெறும் இருட்டு மட்டுமே தெரிந்தது அர்ஜுனுக்கு. நம்ப எப்படி இங்கே வந்தோம் என்று யோசித்தவனின் எண்ணத்தை தடை செய்தது தூரத்தில் ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்.

அர்ஜுனா நீங்கள் இங்கு வர இத்தனை காலம் ஆகிவிட்டதா?  உங்களின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து பாருங்கள் என்னை, சற்று பருமனான நான் தங்களை எண்ணி எண்ணியே இப்படி கொடியிடையாக காட்சி அளிக்கின்றேன் என்றால் பாருங்கள்.

எங்கம்மா இருக்க சத்தம் மட்டும் கேட்குது ஆளை என்று கேட்க அழகிய வனப்புடன் வந்தாள்.

அர்ஜுன், "ஹே யாமினி இங்க என்னடி பண்ணுற? ".

பிரியனே என்ன மொழி இது இருந்தாலும் கேட்க நன்றாக தான் இருக்கிறது வாருங்கள் என்னோடு என்று அவனை கிட்டத்தட்ட இழுத்து சென்றாள் அந்த பாவை.

ஏய் யாமினி என்னடி ஆச்சு உனக்கு வித்தியாசமா நடத்துகிற எனக்கு பயமா இருக்கு? என்ற அர்ஜுனை பார்த்தவள் எதுவும் பேசாது கூட்டி சென்றாள்.

அவ்வளவு நேரம் இருந்த இருட்டு மறைந்து கண்ணை கூசும் வெளிச்சம் வர அந்த இடத்தை கண்டவன் புருவம் முடிச்சுகள் விழ யோசித்தான் இது அந்த வாட்ச் மாறியே இருக்கே என்று. 

பெண்ணிவளின் விரல் பட்டு நினைவு வந்தவன், யாமினி என் கையை பிடி என்றதும், அதற்கென்ன அர்ஜுனா என்று அவள் கையை பிடிக்க கண்ணை வெட்டும் மின்னல் ஒன்று வெட்டி மறைந்தது.

 

யாமினி யாமினி என்று கத்தியவாறு எழுந்த அர்ஜுனை கண்கள் மின்ன பார்த்துகொண்டிருந்தாள் யாமினி.

டேய் கண்ணை தொறந்து பாரு டா எருமை,  உன் பக்கத்துல தான் இருக்கேன் என்றவளின் குரலில் கண் விழித்தான் அர்ஜுன்.

யாமு, நேத்து நீ காமிச்ச அந்த வாட்ச் மாறியே அந்த இருட்டுக்குள்ள கூட்டிட்டு போய் காமிச்ச என்று நிறுத்தாமல் நடந்ததை பேசியவன் வாயை கையால் மூடி, அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

டேய் அம்மு என் ப்ராஜெக்ட் சக்ஸஸ் டா என்றாள் ஆச்சரியமாக.

அர்ஜுன், "அப்போ உன் ப்ராஜெக்ட்க்கு நான் தான் எலியா?".

நீ தான் டா என் லக்கி சார்ம் அதனால் தான் நேத்து பேசிகிட்டு இருக்கும் போது, உன் கையில அதை காட்டி விட்டேன். 

சரி இது என்ன ப்ராஜெக்ட் என்றான்.

அதுவா உனக்கு வர  கனவை முழுசா அனுபவிக்க முடியலன்னு சொன்னில அதுக்காக பண்ணது தான் இந்த கடிகாரம் இதுல.

கனவுல என்ன டா பார்த்த என்றாள் யாமினி.

உன்னை தான் டி பார்த்தேன் என்றான் காதலாய்.

எனக்கு நேரம் ஆச்சு லேப்க்கு நைட் வந்து பொறுமையா பேசுறேன் என்று முத்தமிட்டு சென்றாள் யாமினி.

காதலில் கூட அறிவியலை கலக்கும் தன்னவளை நினைத்தவாறு படுத்த அர்ஜுன் அவளை பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். பட்டு என் டி இப்படி இருக்க ரொமான்டிக்கா பேச வந்தா உன் முளையில இந்த ஹார்மோன்ஸ் சுரக்குது அதான் இப்படி பேசுறேன்னு ஒவ்வொரு விஷயத்தையும் சயின்ஸ்சோடா ரிலேட் பண்ணுற.இருந்தாலும் உன்னை பிடிச்சுருக்கு டி என்று கண்ணயர்ந்தான்.

 

# காலம் மாற அறிவியல் கிளர்ச்சிகளை காதலனுடன் அனுபவிப்போம் போல்

-சுபாஷினி.

 

20. K2K0050

காலம்...

எங்கள் குழந்தை பருவத்தின் ஒரே ஆனந்தம் எங்கள் ஆச்சி தாத்தா வீட்டில் கழிக்கும்  கோடை விடுமுறையே ஆகும்.......என் தந்தையுடன் பிறந்தவர்கள் மொத்தம் 3 பேர்.....பெரிய அத்தை திண்டுக்கல் பின் சின்ன அத்தை ராமேசுவரம்.....அப்பாவும் சித்தப்பாவும் தூங்கா நகரத்தில்....என் தாத்தாவின் பேர் சொல்ல பிறந்த நாங்கள் மொத்தம் 10 பேர்.......என் தாத்தா மதுரை madura coats- இல் பணி செய்த காலத்தில் கல் மண் சுமந்து குடும்பமாக இணைந்து கட்டிய வீடே இக்கதையின் மையப்புள்ளி.......அக்காலத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்ததால் வாடகை ஈட்டும் நோக்கத்தில் 1/2 ground-ல் ஆறு வீடுகள் மற்றும் ஒரு கடையுடன் கூடிய ஒரு compound வீடாக எழுப்பப்பட்ட மாளிகை அது!!! என் தாத்தாவே விஸ்வகர்மா🤩......என் தந்தை மற்றும் சித்தப்பா கடையின் பணிகளை மேற்கொண்டு மதுரையில் இருந்தனர்.....நானும் எனது இரு தங்கைகளும் மற்றும் 3 தம்பியரும் மதுரையில் பள்ளிப்படிப்பு மேற்கொண்டிருந்தோம் ஆச்சி தாத்தவின் அரவணைப்பொடு........

இறுதியில் வரும் விடுமுறைக்காகவே வருடம் முழுதும் தவம் கிடந்த காலம் அது......பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 20 தேதிக்குள் அத்தை வீட்டாரின் வரவு நிகழ்ந்தேரும்......அன்று ஆரம்பிக்கும் ரகளைகள்.....எனக்கு ஒரு பெரிய அண்ணி, இரண்டு பெரிய அத்தான், ஒரு சின்ன அத்தான்.....பிறகு compound- ல் இருக்கும் இரண்டு அக்கா வும் கூட்டணியில் பங்கேற்பார்கள்..........

நாங்கள் விளையாடாத விளையாட்டே இருக்காது என்று கூட வைத்துக்கொள்ளலாம்....அதில் சிறந்தது கண்ணாமூச்சி🙈....மொத்தம் ஆறு வீடுகள்.....திருடன் போலீஸ் விளையாட சிறந்த இடம்.....வீட்டின் எதிரே புங்கை மரம் ஊஞ்சல்கான சண்டை......அம்மா திட்டினாள் அத்தையின் ஆதரவு......சாக்கடையில் விழுந்ததை கூட சாதனையாக கூறிய நாள்......மொட்டை மாடி தூக்கம்...டென்ட் கொட்டாய் சினிமா..... சனி-ஞாயிறு : உள்ளூர் அறிதல் - ராஜாஜி பூங்கா, சித்திரை பொருட்காட்சி, காந்தி அருங்காட்சியகம், eco park(சூழல் பூங்கா), வைகை அணை மேலும் பல இடங்கள்......சுற்றலா துறையின் வருமானத்தில் பெரும்பங்காற்றிய கர்வம் கொஞ்சம்(வாரிசுகள் மட்டுமே தசம் அல்லவா😅)......அனைத்திலும் சிறந்தது சித்திரை திருவிழா மற்றும் மீனாட்சி தாய் திருக்கல்யாணம்.....மதுரையை திருவிழா கோலம் பூனும்......நாங்க சும்மாவா.......நீர்மோர் பந்தல், பானகரம்,அன்னதானம் என்று area-வயே தெறிக்க விடுவோம் .....கடைசிநாள் மஞ்சள் திருவிழா....ஹோலி என்னங்க ஹோலி.....சும்மா அதிரடியாக இருக்கும்.....வீட்டின் ஒவ்வொரு இடுக்கிலும் ஒவ்வொரு நினைவுகள்...நினைத்தால் இன்றளவும் சுகம் தரும்....

2010 இல் நிகழ்ந்த நிகழ்வு...அனைத்தையும் வேரோடு மாற்றியது.....விதியின் காரணமாகவும் அப்பாவின் அலுவல் பணி காரணமாகவும் தலைநகரத்தில் தஞ்சம் புகுந்தோம்........இருப்பினும் ஒரு விடுமுறை தவறாது சென்று விடுவோம் ஆச்சி வீட்டிற்கு.....ஆனால் ராமேசுவரம் மற்றும் திண்டுக்கல் அத்தைகள் கூட்டணியில் பங்கேற்கவில்லை.......

அவர்களை காண்பதே அரிதாயிற்று😞.......

சிலருக்கு மனகசப்பு....சிலருக்கு பணி சுமை.... சிலருக்கு மனமாற்றம்......சிலருக்கு இடமாற்றம்.....சில்லரைகளாய் சிதறினோம்😔

மாரிமுத்து வாரிசுகள் என்ற WhatsApp group மட்டுமே எங்களை இணைந்திருந்தது....  ஆயினும் தொலைபேசி தொலைவயே ஏற்படுத்தியது ......எனினும் அவர்களுடன் பேசுவதில் இன்றளவும் மகிழ்ச்சி சிறிதும் குறைந்த பாடில்லை......

கடைசியாக இதிலும் ஒரு பிரளயம் எழுந்தது......வீடு கட்டி 25 ஆண்டுகள் ஆன நிலையில், வீட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட சேதம் காரணமாகவும், தான் ஈன்ற பிள்ளைகளின் பொருளாதார தேவையை நிறைவு செய்வதற்காகவும், வீட்டை விற்க முடிவெடுத்தார் என் தாத்தா.....என் தங்கைகோ சற்றும் மனமில்லை; எனக்கும் தான் .......நகர வாழ்வில் தத்தளிக்கும் எங்களுக்கு தாத்தா எழுப்பிய வீடே நினைவாலயம்.....எங்கள் குட்டி chair, நாங்கள் பயன்படுத்திய மூன்று சக்கர மிதிவண்டி, என் தாத்தாவின் மிதிவண்டி,  compound அடிகுழாய், நட்ட மரம், சறுக்கி விளையாடிய மாடிப்படி தடுப்புச்சுவர்,....இவ்வாறு பல....சாகசம் புரிந்த சாக்கடையும் உட்பட........ எங்கள் வாரிசுகளுக்கு  எங்களின் வாழ்க்கை முறையை காட்ட இதை விட வேறு நல்ல வழி தென்படவில்லை.....

நாங்கள் 10பேர் நினைத்தால் எங்கள் நினைவகத்தை காப்பாற்றலாம் என்ற எண்ணம் எழுந்தது.....

எங்களால் இயன்ற அளவு பணம் திரட்டி வீட்டில் மராமத்து பணி செய்து, இப்பொழுது வீடு நண்பர் ஒருவருக்கு lease-ற்கு விடப்பட்டுள்ளது.....

அண்மையில் 25வருட நினைவாக அனைவரும் குலதெய்வம் கோவிலில் மீண்டும் சந்தித்தோம்...அனைவரிலும் பெரிய மாற்றம்......தோற்றத்திலும் சரி...மனமாற்றத்திலும் சரி.......மேற்கத்திய கலாச்சாரத்தின் சாயம் பூசப்பட்டே அனைவரும் இருந்தோம்....

சிறு பிராய நினைவுகளை ஏனோ அந்நிகழ்வு வெற்றி கொள்ளவில்லை.....

இன்றளவும் எக்கத்துடன் நாங்கள்....

காலங்கள் மாற, மனிதனும் மாறுவான்....நினைவுகளே பசுமரத்தாணி!!!!!!!

-Tharini

 

 

 

 

 

21. K2K-00037

காலம்:

 

கருணாகரன், 29

கைதி, பாலியல் வன்கொடுமை.

சிறையில் செல்வாக்கு மிகுந்த கைதிகளுடன் இருப்பதால் போதை சிகரெட் என அனைத்தும் தேடி வரும் அளவு அவர்கள் தண்டனை இருந்தது.

டாக்டர்.ருத்ராபதி,49

உளவியல் நிபுணர்.

சமீப காலங்களில் சிறைக்கைதிகளின் மனநல ஆயுவு மற்றும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சிறையில் இரண்டு குழுக்களுக்குள் நடந்த கைகலப்பில் கருணாகரனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. பின்னர் சில நாட்களில் அவன் சிறிது உளவியல் பாதிப்புக்கும் உள்ளானான். திடீர் என்று ஏதோ உருவம் தெரிவதாக கூச்சலிடுவான். அதீத கோவத்தில் அவன் சக கைதியை அடித்து மண்டையை உடைத்ததும் நடந்தது.

09 ஆகஸ்ட்:

சிகிச்சைக்காக கருணாகரன் டாக்டர்.ருத்ராபதியிடம் அழைத்து வரப்பட்டான்.

"என்ன பிரச்சனை கருணாகரன்?  Don't worry. It will be strictly confidential" "இல்யூஷன்ஸ்(illusions) வருது டாக்டர்"

"என்ன மாறி இல்யூஷன்ஸ்?"

"பெண் உருவம். என்ன கூப்புடற மாறி. சிலது கோரமா, சிலது பாவமா. இப்படி...

 

"அதீத மனஅழுத்தமா இருக்கலாம். உங்கள இப்போ தூக்க நிலைக்கு கொண்டுபோக போறேன். பிளீஸ் கோ-ஆபரேட்."

ஹிப்‌னாடிச நிலையில்.....

"கருணாகரன்! உங்க கடந்தகாலம் பத்தி மறைக்காம சொல்ல முடியுமா?"

"அப்பா எக்கச்சக்க சொத்து வெச்சிருக்கார். உல்லாசமா எல்லாத்தையும் அனுபவிக்கறேன்... பணமா, பொருளா, டிரக்ஸா, பெண்களா இப்படி பலவகைல. ஒண்ண நினைச்சா அடஞ்சே தீருவேன் அது என்னவா இருந்தாலும். அத அடைஞ்சா கிடைக்கும் போதை வேற எதுலயும் இல்ல. மத்தவங்க பத்தி நான் கவலைப்படுறதில்லை."

"அப்படி என்ன அடைஞ்சீங்க?"

"எக்கச்சக்கமா. Gadgets, properties, girls, etc… வேண்டாம் வேண்டாம்னு சொல்ற பொண்ணுங்கள அடையறதுல ஒரு தனி கிக். கணக்கே இல்ல"

"எப்படி ஜெயிலுக்கு வந்தீங்க?"

"நாங்க மூணு பேர். ஆன்லைன்ல ப்ரெண்டு ரிக்வஸ்டு கொடுத்து கொஞ்சகொஞ்சமா ப்ரெண்டு ஆகி, மீட் பண்ணி, வெளிய எல்லாம் போய், ஒரு அவுட்டிங் பிளான் பண்ணுவோம். அங்க எங்க ஆசைய தீர்த்துப்போம். அதீத போதைக்கு ஆளாக்கி அவங்கள ஆத்துலயோ, கடல்லயோ, இல்ல விபத்தாவோ பண்ணி முடிச்சிடுவோம்

ஒரு பொண்ணு மட்டும் எப்படியோ இழுத்துகிட்டு மரண வாக்குமூலம் கொடுத்தது கொஞ்சம் எதிரா போய்டுச்சு. எவிடென்சஸ் எல்லாம் அழிக்கற வரைக்கும் பாதுகாப்பா ஜெய்ல்ல இருந்துட்டு சீக்கிரமே வெளிய வந்துடுவேன்"

……..

.......

 

இயல்பு நிலையில்....

டாக்டர் "எல்லாம் சரியாகிடும். டோண்ட் ஒர்ரி"; என்றார்.

இந்த நாட்களில் அவனை தனி செல்லுக்கு மாற்றினார்கள்.

ஒரு நாள் இரவு அதீத வெறியுடன் "என்ன வெளிய விடுங்க டா." என்று கத்தி சுவற்றில் மண்டையை மோதி கொண்டவனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உள்நுழைந்த போது அவன் போலீஸ் துப்பாக்கியை எடுத்து, ஓடி சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்தபோது காலில் சுடப்பட்டு விழுந்து தலையில் பலத்த காயம்.

உயிர் பிழைத்தாலும் அவன் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சுயநினைவு இழந்து நடைபிணமானான். தலையில் அடிபட்ட விபத்தில் நரம்பு மண்டலம் பாதித்ததாக கேஸ் மூடப்பட்டது.

நடந்தது....

09 ஆகஸ்ட்:

டாக்டர் தனியாக ஜெய்லரிடம் "சார் இவர் ட்ரக் அப்‌யூஸ்ட் பேஷன்ட். சில மெடிசின்ஸ் தரேன். கொஞ்சம் கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க. ரொம்ப அன்கண்ட்ரோலபுள்ளா போச்சுன்னா ரீஹாப்‌ல அட்மிட் பண்ணனும்" என்றார்.

அவர் பூயுப்‌ரனோர்பின்(Buprenorphine) மற்றும் ஆல்ப்‌ரசோலம்(Alprazolam) மாத்திரைகளை (ஒன்றுக்கொன்று முரண்படும் தன்மையுடையது) பரிந்துரைத்திருந்தார். அதன் பக்கவிளைவாக அன்றிரவு முற்றிலும் கட்டுப்பாடு இழந்ததால் வெறிகொண்டு செயல்பட்டான் கருணாகரன்.

ருத்ராபதி அவர் வீட்டில் தன் மகளின் புகைப்படத்தின் முன்பு "காலம் என் மூலமாக மத்த இரண்டு பேருக்கும் நிச்சயம் பதில் சொல்லும்." என்றார்.

 

 

நீதி:

நாம் செய்யும் செயலுக்கு தக்கபடி காலம் ஏதோ வடிவில் அதற்கான கூலியை நிச்சயம் கொடுக்கும்...

-பா. பிரபு

 

 

22. K2K-00093

காலம்...

இந்த வார்த்தையின் அர்த்தம் இன்னதென்று அறியாத போது இழைத்த தவருகளின் எண்ண ஓட்டங்களே இக்கதை... பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம் அது... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமாக கடந்த பொதுத்தேர்வு முடிவுகள்.  1131 மதிப்பெண்களின் மதிப்பு இவ்வளவு குறைவு என்பதை உணர்த்திய மருத்துவ நுளைவு தேர்வு என நினைத்து கூட பார்க்க விரும்பாத ஒன்றரை வருடங்கள்.... கும்மிருட்டில் குட்டி வெளிச்சம் போல வெளிநாட்டில் மருத்துவம் படிக்க கிடைத்த ஆதாயம் காலம் எனக்கு தந்த இரண்டாம் வாய்ப்பு என்றாலும் காலத்தின் கோலம் என்றே செல்லலாம்... பெற்றோரையும் பிறந்த மண்ணையும் முதல் முறையாக பிரிந்து 6000 மைல் தூரம் வந்து சேர்ந்த போது இருந்த எனது மனநிலையை விளக்க பதம் தேடி தோற்றேன்... பிரிவு,  கவலை, வேதனைகள் மிகுந்து இருந்த போதும் புது புது உறவுகள், நண்பர்கள் என இயல்பாக நகர்ந்த வாழ்க்கையில்... நறுக்கென நாக்கை கடித்தார் போல நெருங்கிய ஓர் உறவின் பரிவு... இவ்வாறாக கழிந்த கல்லூரி பொழுதுகள்... எவரையும் எப்படி வேண்டுமானாலும் மாற்ற கூடிய சக்தி காலத்திற்கு உண்டு என்பதற்கு சான்றாக வாழ்வின் கடைசி நாட்க்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஓர் புற்று நோயாளியின் காலம் பற்றிய உபதேசங்களை அமைதியாய் உருபோட்டபடி கேட்டுக் கொண்டருந்தேன்... சட்டென எங்கோ படித்த கவிதை ஒன்று நினைவு வர " அதுவாய் வரும் வரை எதையும் கயிறு கட்டி இழுக்காதீர்கள்" என்ற என்னை அதிகம் பாதித்த வரிகளின் அர்த்தம் புரிந்தவளாய் சிகிச்சை தொடங்கினோம் காலத்தின் மீது இருந்த மாறா நம்பிக்கையுடன்

-Tresa immaculate

 

23. K2K-00023

காலம்

காலை 6மணி சூரியன் மெல்ல எட்டி பார்க்க தொடங்கியது. விழித்துக் கொணடும் எழுவதற்கு மனமில்லாமல் படுத்திருந்தார் கோபாலகிருஷ்ணன், எழுந்து என்ன செய்யப் போகிறோம் என்கிற நினைப்பு. சற்று நேரத்தில் எழுந்து காலை வேலைகளை முடித்து பங்கஜம், அவர் வீட்டில் வேலை செய்பவர், செய்திருந்த இட்லியும் கொத்தமல்லி சட்னியும் சாப்பிட்டு சோபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்ட ஆரம்பித்தார்.

அப்போது கோபாலா என்ன பண்ற? என்ன கேட்டவாரே அவரது பால்ய வயது நண்பன் நடேசன் உள்ளே வந்தார். “நான் என்ன பண்ண எப்பவும் போல தான் என்ன விஷயம் காலையிலேயே இங்கஎன்றார் கோபாலகிருஷ்ணன்.

முன்னாடியே உன்கிட்ட கேட்டது தான், பையன் வெளிநாடு போற விஷயமா கொஞ்சம் பணம் வேண்டி இருக்குன்னு கேட்டேனே என்று இழுத்தார் நடேசன். “ஆமா, ஏற்பாடு பண்ணிட்டேன்.சாயங்காலம் உன் பையன வந்து வாங்கிக்க சொல்லு.  “சரி ரொம்ப சந்தோஷம்என நகர்ந்தார் நடேசன்.

மாலை நேரம்……..

அங்கிள் சரவணன் வந்திருக்கிறேன். அப்பா நீங்க வர சொன்னதா சொன்னாங்க

ஆமா அப்பா சொன்னார் துபாய் போக  ஏற்பாடு பண்ணிட்டு இருக்கனு. எல்லாம் ரெடியா எப்ப கிளம்புறே?”

ஒரு பத்து நாள்ல. கேஸ் கம்பெனியில் வேலை அஞ்சு வருஷம் காண்ட்ராக்ட். உங்களுக்கு தெரியாதா நீங்களும் அங்கதானே ரொம்ப வருஷமா இருந்திங்க. சீக்கிரம் நல்ல நிலைமையை அடைய இதுதான் நல்லதுனு தோணுது அதான்

ஒரு புன்முறுவலுடன், “ஆமா கிட்டத்தட்ட 18 வருஷத்துக்கு மேல நா அங்கே இருந்தேன். நிறைய சம்பாதித்தேன் அதை விட நிறைய இழந்திருக்கிறேன். கல்யாணமாகி மூணாவது மாசம் வேலைக்கு துபாய் கிளம்பினேன். மூணு வருஷம் காண்ட்ராக்ட்,  பணம் கொடுத்த போதை அங்கிருந்து கிளம்ப எனக்கு மனசே வரலை பத்து வருஷத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்னேன். “

என் மனைவி மாசமா இருந்தப்ப என்னால கூட இருந்து பார்க்க முடியல என் பையன் பொறந்தபோ அவனை என்னால தூக்க முடியல அவன் முதல்ல நடந்தது பேசினது எதையுமே கூட இருந்து ரசிக்க முடியவில்லை. அப்பா இல்லாம கஷ்டப்பட்டு தனியா வளர்த்தாங்க எங்கம்மா அவங்களோட கடைசி காலத்துல அவங்க முகத்தை பார்க்க கொடுத்து வைக்கல. நான் திரும்பி வந்தப்ப என் பையன் வளர்ந்திருந்தான். அப்பா மகன் உறவு இருந்ததே தவிர பாசம் இல்லை. என் மனைவியும் போன பிறகு இங்க தனியா இப்படி ஒக்காந்து இருக்கேன். “

உன்னை வெளிநாடு போகாத நான் சொல்லலை அதுக்காக வாழ்க்கைய இழந்துடாதனு சொல்கிறேன். அடுத்தவங்க வெற்றினு நினைக்கிறத நாம் அடைய கூடாது நம்ம மனசு திருப்தி படுத்துற வெற்றி தான் உண்மையான சந்தோஷம்.  பணம் சேமிக்கிற அளவுக்கு நல்ல நினைவுகளையும் நாம சேமிக்கணும் காலம் போன கடைசியில அதுதான் பெரிய சொத்து.” என எழுந்து அவன் கேட்ட பணத்தை அவன் கையில் திணித்தார். “நல்லபடியா போய் சம்பாதித்து வா என்றார்.

தேங்க்ஸ் அங்கிள். நீங்க சொன்னதெல்லாம் ஞாபகத்தில் வச்சிக்கிறேன் என நகர்ந்தான் சரவணன்.

யக்ஞப்ரியா ரா

 

24. K2K-00089

 மாய தீவில் ஒரு நாள்

எங்கு பார்த்தாலும் நீலநிற காட்சி தான். காற்று பலமாக வீசும் சத்தம் அதனோடு சேர்த்து கடலின் அலைகள் சத்தம் மட்டும் தான் கேட்டது. சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்தது.

அந்த அமைதியான சமுத்திரத்தில் ஒரு கட்டுமரம் தென்பட்டது. அதில் தன் கையில் தென்னைமட்டையுடன் ஒரு வாலிபன் தட்டு தடுமாறி பயணித்து கொண்டிருக்கிறான். பாவம் அங்குட்டு இங்குட்டென்று கடல் காற்றின் திசையோடே பயணிக்கிறானே தவிர அந்த மட்டையை துடுப்பாக பயன் படுத்த தெரியவில்லை.

அவன் பயணம் செய்த எதிர் திசையில் திடீரென்று ஒரு கழுகின் ஓசை கேட்டது. அவன் திரும்பி பார்க்கையில் ஒரு மாய தீவு தென்பட்டது; ஆம் அது மாய தீவாகவே தெரிகின்றது காரணம் அந்த தீவில் மட்டும் வானம் எரிமலை குழம்பின் சிவப்பு நிறம் போல காட்சி அளித்தது. நெடுநாளாக கடலில் இருந்ததனால் அந்த மாயத்தோற்றமானது வாலிபன் மாறன் கண்ணனுக்கு புலப்படவில்லை.

தன் முழு பலத்தை பிரயோகித்து மட்டையை வைத்து எப்பிடியோ அந்த தீவுக்கு வந்து சேர்ந்தான். தீவை நெருங்கிய மகிழ்ச்சியில் கட்டுமரத்தை கடலில் கரையேற்றாமல் விட்டு விட்டு தண்ணீரில் நீந்தி வந்து கரையேறினான்.

ஒரு பெருமூச்சு விட்டான்.

அது குட்டி தீவு தான். தென்னைமரமும் அடர்த்தியான புதர்களும் தான் இருந்தது. ஆனால் அங்கு பல ஆட்டு மந்தைகள் நடந்த வழித்தடம் அந்த தீவின் கரையோரமாக காணப்பட்டது. அந்த தடத்தில் ஒரு தூரத்தில் தன்னை விட வயதில் மூத்தவர் ஒருவர் காணப்பட்டார். இத்தனை நாள் மனிதர்கள் யாருமே காணாததால் அவரை கண்ட மறுகணமே அந்த திசை நோக்கி ஓடினான்.

அவரை நெருங்கியதும் ஒரு ஆச்சிரியம் மாறனின் முகத்தில் காணப்பட்டது. பார்க்க அவர் அந்த வாலிபன் மாறனை போலவே இருந்தார். ஆனால் இளமை இழந்த முகம், அடர்த்தியாக தாடி மீசையுடன் பேண்ட் சட்டை கிழிந்து காணப்பட்டார். வெறித்து வெறித்து அவரையே பார்த்து கொண்டிருந்தான் மாறன்.

"என்ன பார்க்கிறாய் நான் தான் உன் எதிர் காலம்!", என்று அந்த குரல் கேட்டவுடன் ஒரு கணம் அவன் இதயம் துடிக்க மறந்துபோனது.

உடனே சற்று பதட்டத்துடன், "என்னது நீ நானா! எதிர் காலத்தில் நான் இப்படியா இருக்கிறேன்.. ஏன்டா இப்டி இருக்க ! இங்க என்ன பண்ற .. இங்க எப்படி வந்த ..ஏன் பிச்சைக்காரன் மாறி இருக்க .."

எதிர்கால மாறன் குறுக்கிட்டு, " நான் பிச்சைக்காரன் தான்டா சரியா கண்டுபுடிச்சிட்டியே" என்று கூறினார்.

அந்த தீவில் திடீரென்று எரிமலை வெடித்துவிட்டது போல, ஆவேசம் தாங்காமல், " ஏன்டா இப்டி நாசமா போயிருக்க.. உன்ன நினைச்சி நா என்னவெல்லாமோ கனவு கண்டேனடா.. இப்டி தறுதலயா நிக்கிறியே" என்று அந்த தீவே அலறும் அளவுக்கு கத்தினான்.

மனிதன் ஒரு காலமும் தன் மீது உள்ள குற்றத்தை அவ்ளோ எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் எதிர்கால மாறன், " அதுக்கு நான் என்ன பண்ணுவேன் நீ தான் கரணம்." என்று பழிசுமத்தினார்.

கண்ணிமைக்கும் நொடியில் திடீரென்று ஒரு இளநீர் மாறன் தலையில் விழுந்தது. விழுந்த மறுகணம் மண்ணோடு மண்ணாக புரண்டு சரிந்து கிடந்தான். ஆனால் என்னவொரு ஆச்சிரியம் அவனுக்கு தலையில் வலிக்க வில்லை மாறாக அவன் மனதில் வலித்தது, ரத்தமும் அவன் நெஞ்சிலே சிந்தியது.

சற்று சுயநினைவிழந்த அந்த வாலிபன் மாறன் அருகில் தீவு அதிர இருவர் கல கலவென்று சிரித்தார்கள். அவன் கண் திறந்து பார்க்கையில் ஒருவன் எதிர் காலமும், இன்னொருவன் தன்னைவிட வயதில் சிறியவனாக இருந்ததாள் பார்த்த மறுகணமே அவன் என் இறந்த காலம் என்பதை உணர்ந்து உடனே இருதயத்தில் வலியைப்பொறுத்துக்கொண்டு எழுந்தான்.

இறந்தகால மாறனின் கழுத்தை நெறித்து  திட்டினான் எதிர் காலத்தின் நிலமைக்கு நீ தான் காரணமென்று கோபம் கொண்டான். உடனே எதிர் காலம்,

"அவன் தான் இறந்துவிட்டானே பின்பு என் திட்டுகிறாய்? விடு அவனை!" என்றதும் திடுக்கிட்டு தன் கைகளை அவன் கழுத்தில் இருந்து அகற்றினான்.

அந்த தீவில் என்ன நடக்கின்றது என்பது அவனுக்கு புரியவில்லை அதிர்ச்சியில் உறைந்து நின்றான். ஒரு கழுகின் ஓசை மீண்டும் கடலின் ஒரு முனையில் இருந்து ஒலித்தது. அப்போது அவன் இருந்த கரையோரமாக இத்தனை நாள் பயணித்த கட்டுமரம் கடல் அலையால் தானாக வந்து கரையருகில் நின்றது. உடனே சுயநினைவு திரும்பி நான் இங்கிருந்து புறப்பட வேண்டும் என்று கூறினான்.

"நல்லது நாம மூனுபேரும் போகலாம் வாங்க." என்று இறந்தகால மாறன் கூறினான்.

"அதெல்லாம் முடியாது இதுல ஒருத்தர் தான் போக முடியும், மீறி போன கட்டுமரம் தாங்காது கவிழ்ந்துவிடும்." என்று எதிர்கால மாறன் கூறினார்.

உடனே அவன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். “எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க நான் என் வீட்டுக்கு திரும்ப போறேன். நான் செஞ்ச தப்பெல்லாம் சரி செய்யனும் என்று கெஞ்சினான் கதறினான். எதிர்காலம் அதுக்கு வாய்ப்பில்லை நீ திரும்ப வீட்டுக்கு போனா அங்க கடந்த காலம் கிடையாது உன்னால எதுமே மாற்ற முடியாது அது எல்லாம் இறந்து விட்டது என்றார்..

அங்கு நடப்பது அனைத்தையும் பார்த்துகொண்டேயிருந்த மாறனின் மனதில், “ இறந்த காலத்தை எண்ணி கடுகு அளவும் பயனில்லை ; எதிர் காலம் என்பது கனவு காண்பதற்கில்லை “ என்று புரிதல் ஒன்று உண்டாயிற்று.

    அடுத்த நொடி அந்த செக்க சிவந்த தீவில் இப்போது மழை ; அவன் மார்பில் ரத்தம் மழையில் கரைந்துப்போனது ; மேலும் இறந்தகால மாறனின் உயிர் நாடியும் பிரிந்தது.

  அவனை கண்கலங்கியபடி தூக்கிக்கொண்டு வந்தான் எதிர்கால மாறன். இருவரும் ஒரு ஆறடி கூழியில் மூடி அவனை புதைத்து அதில் ஒரு தென்னங்கன்று ஒன்றும் நட்டு வைத்து அருகில் அமர்ந்தார்கள். மழையில் எதிர்கால மாறனின் கண்ணீர் தெரியவில்லை. வாலிப மாறனின் நெஞ்சிலோ அமைதி மட்டுமே காணப்பட்டது.

"இத்தகைய இறந்த காலம், மனதில் என்றும் ஆறாத வடுவாகவே உள்ளது." என்று எதிர்கால மாறன் கூறினார்.

உடனே அந்த தீவில் இடி இடிக்க,

சட்டென்று வாலிப மாறன் எழுந்து கட்டுமரம் நோக்கி சென்றான். சற்று திரும்பி எதிர்கால மாறனை பார்த்து,

" எதிர் காலத்தை இனி எதிர் பார்க்க மாட்டேன்; புறப்படுகிறேன்." என்று கூறியவுடன்.

அங்கிருந்து அமர்ந்த படியே அவனை திரும்பி பார்த்து, " ஒரு காலம் எதிர் காலம் இறந்து போகும் அப்போது அது வரலாறாக அல்லது சரித்திரமாக மாறுவது உன் கையில் தான்." என்று ஏக்கத்துடன் கூறினார்.

மீண்டும் அந்த மழைபொழியும் தீவில் இடி சத்தம்.

அதை கேட்ட மறுநொடி காலம் என்னும் கட்டுமரத்தில் ஏறி வாழ்கை என்னும் மட்டையை துடுப்பாக பயன் படுத்தி தனது சமுத்திரத்தில் பயணிக்க தொடங்கினான். இம்முறை தான் காற்றின் திசையிலில்லாமல் தான் அறியும் திசையில் கட்டுமரம் சென்றது. தீவில் இருக்கும் எதிர் காலம் என்ன வென்று திரும்பி கூட பார்க்காமல் நொடிக்கு நொடி தன் மட்டை துடுப்பை நன்றாகேவே செலுத்திக்கொண்டே சென்றான் மாறன். இந்த ஒரு வினாடி தான் வாழ்வில் முக்கியம் என்பதை புரிந்துகொண்டான்.

ஒரு நொடி துடுப்பை செலுத்த முற்பட்ட போது தீவின் திசையில் அந்த சமுத்திரம் எங்கும் பரவ இடி இடிக்கும் சத்தம் கேட்டது. ஆனால் இம்முறை,

    "டேய் மாறா! டைம் ஆவுது பாரு சீக்ரம் எந்திரிச்சு காலேஜ்க்கு கிளம்பு டா ....." , என்று தன் அம்மாவின் குரல் கேட்டது. உடனே பெருமூச்சுவிட்டு எழுந்தான். சோம்பல் தெளிந்த பின்பு தான் கண்டது கனவு என்பதை உணர்ந்துக்கொண்டான். பின்பு காலம் தாழ்த்தாமல் கல்லூரிக்கு புறப்பட்டான்.

கதையின் நீதி:

காலம் என்பது மாயை. அதை புரிந்து கொண்டு இந்த நொடி அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் எல்லா காலமும் வசந்த காலமே.

 -    விஷ்ணு வர்த்தன்.ஜெ

 

 

25. K2K00009

 என் கைபேசியும், பேனாவும் உரையாடிக்கொண்டிருப்பதை உற்று கவனித்த நான், சற்று வியந்து எழுதி ஆவணப்படுத்த ஆவலுடன் ஆறம்பித்தேன்..

அந்தக்காலத்துக்கும் இந்தக்காலத்துக்கும் உலகம் எப்படி மாறியிருக்கின்றது என்று என் கைபேசி என் பேனாவைக்கேட்க, என் பேனாவும் " உண்மைதான் உலகம் எல்லாவற்றிலும் முன்னேறியிருக்கின்றது என்று நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது " என்றது பேனா...

நீ முன்னேற்றம் என்கிறாய் நான் அதை முடக்கம் என்கிறேன் என்றது கைபேசி.. என்ன இப்படி சொல்லிவிட்டாய் , நீயே ஒரு முன்னேற்றம் தானே ! எங்கோ இருக்கும் ஒருவரை உடன் இருப்பதுப்போல் முகம்பார்த்து பேசும் அளவுக்கு உன்னால்தானே முடிகிறது இது முன்னேற்றம் தானே என்றாள் தோழி பேனா..

 

சரிதான் தோழியே.. நான் எங்கோ இருக்கும் ஒருவரை கூடயிருக்கும் படி செத்துவிட்டேன். ஆனால் எத்துனைப்பேர்  மனிதன் கூடவே இருக்கும் மனிதனை.. ஏன்.. பெற்றோரிடம் கூட முகம் பார்த்து பத்துவார்த்தைப்பேசி எத்தனை காலம் ஆனது உனக்கு தெரியாததொன்றுமில்லை... என்று கூறி , முன்னேற்றம் இங்கு முடக்கதானே காரணமாகிருக்கின்றது என்றான் தோழன் கைபேசி..

என் பேனாவும் தோழா உண்மைதான்.. இருந்தாலும் இந்த உலகதயே உன் வடிவில் உள்ளங்கைக்குள்  கொண்டுவந்துவிட்டோம் இது முன்னேற்றம் தானே.. கேட்டாள் அழகுப்பேனா..

நீ ஒருப்பார்வையே பார்ப்பதேனோ தோழி, எத்துனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையுணர்ச்சி இழந்துயிருக்கின்றனர்.. காரணம் என்னையே முழு நேரமும் கையில்க்கொண்டு என்னிடமிருந்து வரும் வெப்பமும் அதிர்வும் பிஞ்சுக்கைகளின் உயிராற்றலை அழித்துல்லதே.. இது தெரியவில்லையா உனக்கு என்று கோபமுடன் கேட்டான் கைபேசி..

ஆம் தோழா வருதத்திற்குள்ளாகினேன்.. இருப்பினும்.. வீட்டிலிருந்தே விளையாடிக்கொண்டு சம்பாதிக்கவும் செய்கிறார்களே ஏதோ ஆன்லைன்கேம் அப்படியிப்படி என்கின்றனர்.. இது கட்டாயம் முன்னேற்றம் தானே என்றாள் தோழி பேனா...

சரி சற்று நான் கேட்கும் கேள்விக்கு பதில் முடிந்தால் கூறு என்று தொடங்கினான் கைபேசி.. நீ சொல்கிறாய் ஆன்லைனில் உட்கார்ந்தபடியே விளையாடிக்கொண்டே சம்பாதிக்கின்றனர் என்று.. ஆனால் அந்தகாலத்தில் ஓடியாடிவிளையாடியதால் தான் ஆரோகியமாக எந்த நோயுமின்றி வாழ்காலமுழுதும் இன்புற்று வாழ்ந்தனர்.. ஆனால் இன்றோ.. உட்கார்ந்தபடியே விளையாடிக்கொண்டே சம்பாதிக்கின்றோம் என்ற பெயரில் ஓடியாடிவிளையாடாமல்  பல நோய்களுடன் மருத்துவமனையாய் தேடித்தேடி சம்பாதித்த பணம் அனைத்தையும் நோய்களுக்காக செலவு செய்துக்கொண்டிருக்கின்றோம் அறியாமையால் என்றான் கைபேசி..

 

சரிதான் தோழா என்னதான் காலம் மாறினாலும், முன்னேற்றம் என்றும் முடக்கம் என்றும் பேச ஆயிரம் காரணம் இருக்கதான் செய்கிறது.. ஆக மாற்றம் ஒன்றே மாறாதது இந்தக் காலம்போல  என்று  சரித்துக்கொண்டே முடித்தால் பேனா..

கருத்து:

காலம் அதிவேகமாக ஓடினாலும் இந்த வாழ்க்கையில் ஆக்கம் இருப்பின் அழிவும் உண்டு.. அனைத்துமே காலத்தின் மாற்றமே என்று முடித்தேன்..

இப்படிக்கு,

காலத்தை கண்டு வியந்த இவள்,

சோனியா சிவாஜி,

 

 

26. K2K-00053

அந்திவேளையில் மெல்லிய காற்று இன்னிசையாய் மாற,அதற்கெற்ப அவளின் நீண்ட கூந்தல் காற்றில் கலைந்து அலைபாய்ந்திட....அதனை சரி செய்ய அவள் விரல்கள் அபிநயித்துப் போராட...

      "ஜன்னலோரம் தெரியும் நிலவை ரசிப்பது போலவே... ஓரப்பார்வையாலே அவளுக்குத் தெரியாமலே அவளை உற்று நோக்கினான் சஞ்சீவ்"

        "மை பூசிய விழிக்குள் ஏதோ ஓர் தவிப்பு; நின்ற இடத்திலிருந்தே யார் வரவுக்கோ அவள் விழியின் அசைவுகள் மட்டும் நீண்ட தூரம் பயணித்து தேட...

" தூரமாய் சஹானா என அழைத்த குரல் வந்த திசை நோக்கினாள்...

பாலைவனத்தில் மெல்லிய சாரல் பெய்தது போல, இதழோரம் லேசான புன்னகையை உதிர்த்தவளாய் திரும்பினாள்"

  "என்ன ரிகர்சல் முடிஞ்சதா?என வினவியவாறு அருகே வந்தாள் சத்யா...

மீண்டும் மீண்டும் யார் வரவுக்கோ அவளின் விழியின் அசைவுகள் மட்டும் நீண்ட தூரம் பயணித்துப் போராட...

" சஹானா என்ன யோசனை?உன்கிட்ட தான் கேட்கிறேன், ரிகர்சல் முடிஞ்சதா?என அழுத்தமாய் கேட்டாள் சத்யா"

புன்னகையை மட்டுமே பதிலாய் உதிர்த்து பின் லேசாய் தலை அசைத்தாள்"

"சஹானா, மாற்றங்கள் நெறஞ்ச இந்த வாழ்க்கையில, இன்னைக்கி இல்லைனு தோன்ற விஷயம் நாளைக்கு ஆமானு  தோனலாம், காலம் எல்லாத்தையும் கரைக்கும் உன் மனசையும் ஒரு நாள் கறைக்கும்"என்றாள் சத்தியா புதிராய்...

"நீ என்ன தான் சொல்ல வர்ற?சுத்தி வளைக்காம நேரடியா சொல்ல வேண்டியத சொல்லு" என்றாள் சஹானா மெல்லிய எரிச்சலோடு”

"உன்னோட  கச்சேரிக்கு சஞ்சீவ் கண்டிப்பா வரனும்னு என்ன அவசியம்?அதுவும் கலிபோர்னியாலயிருந்து...

" அத நீ சஞ்சீவ் கிட்ட கேளு"என்றாள் கோபமாக...

"இப்ப இந்த நிமிஷம் கூட உன் கண்ணுல ஏதோ ஒன்னு மறைக்கிற பார்த்தியா...

ஒவ்வொரு கச்சேரிலயும் நீ என்ன தேடுற சஹானா?சஞ்சீவ் எங்கேனு உன் மனசு அலைபாயறத நான் உன் கண்ணுல பார்க்காம இல்ல...

இப்படியே எத்தனை வருஷம் சஹானா?என்று வெளிப்படையாய் கேட்டா சத்யா...

 

" நான் எதையும் மறைக்கல. உன் கற்பனைக்கு உருவம் குடுக்க எனக்கு நேரம் இல்ல... கொஞ்சம் தள்ளு சத்யா என்றவாறு கண்ணாடி முன் அமர்ந்தாள் மேக்கப் கிட்டோட..."

சரி நேரடியாகவே கேட்கறேன்...

உனக்கு சஞ்சீவ பிடிச்சிருக்கு தானே?ஏன் நீ அவனோட காதலை நிராகரிக்கிற? காலமும் காதலும் வேகமா அதோட வேலைய பார்க்கும்,கவனம் சஹானா தொலச்சுறாத..

உனக்கு சஞ்சீவ பிடிச்சுருக்கு தானே ?உன் மனசு என்ன கல்லா என்றாள் சத்யா குரல் உயர்த்தி மிக அழுத்தமாய்..."

 ஆம்...எனக்கு சஞ்சீவ பிடிச்சிருக்கு...  ஆனா பிடிச்ச எல்லாரயுமே காதலிக்கனும்னு கட்டாயம் இல்லையே...என் மேல சஞ்சீவ்க்கு இருக்கறது காதலா? இல்ல கருனையா? இல்ல பரிதாபமா?எனக்கு ஆராய நேரம் இல்ல சத்யா... கச்சேரிக்கு நேரமாச்சு...

எனக்கு காதல் இசை மேல மட்டும் தான் என கூறிக் கொண்டே லேசாக தன் லேசான வளைந்த கால்களை கோல் கொண்டு தாங்கியபடி மெல்ல நடந்தாள்....

 அவளுக்குத் தெரியாமலே இத்தனையும் கவனித்துக் கொண்டே சஞ்சீவ்...

மேடையில் சஹானா...

நெடிய கூந்தல் அவள்  சூடிய மல்லிகையால் மேலும் அதிகமாய் மிளிர்ந்த்து;மை பூசிய விழிகள்;வானவில்லாய் வளைந்த புருவங்கள் மத்தியில் வெண்மையான நிலா வெட்கத்தால் சிவந்தது போல அளவான மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டு,சின்னஞ்சிறிய ஒற்றைக்கல் மூக்குத்தி,காதோர கூந்தலுக்கிடயே சிக்கித் தவிக்கும் ஜிமிக்கி கம்மல்,அடிக்கடி புன்னகை உதிர்க்கும் சிவந்த இதழ்கள், நேர்த்தியான ஒப்பனைக்கு ஏற்ப பச்சை நிற பட்டுச்சேலை அவன் இமைக்குள் நிழலாடியது...

குறை ஒன்றும் இல்லை கண்ணா... என அவள் பாட ஆரம்பிக்க....

மனசுக்குள்ளே மறுகினான் "ஊனம்னு உன்ன நெனைக்கல சஹானா..

இங்கே என் காதல் ஊனமாகிற கூடாதேனு இந்த காலத்துகிட்ட வேண்டுறேன்...சொல்லாத ஒவ்வொரு காதலும் மனசுக்குள் ஊனமே...சில துளி கண்ணீரை கைக்குட்டைக்குள் மறைத்தான்...

பாடிக் கொண்டே அவளின் விழிகள் மட்டும் அவனிடம் பேச அவனது மொழிகள் இங்கே மவுனமானது.

காலம் இனி மிச்ச கதை சொல்லும்

நீதி: காலம் எவ்வளவு தூரம் கடந்து சென்றாலும் இந்த காதல் சாகும் வரை நெஞ்சோரம் கசிந்து கொண்டே தான் இருக்கும். காலம் எதை வேண்டுமாலும் மாத்தலாம். ஏற்பட்ட உணர்வ மாத்துற சக்தி காலத்துக்கு மட்டுமில்ல கடவுளுக்கும் இல்ல...

-பூங்கொடி

 

 

27. K2K-00051

தம்பி ராஜா, என்னபா பண்ற. இங்க கொஞ்சம் வா, எப்பப்பாத்தாலும் பாடிட்டே இருக்க, என்னோட ரெண்டு காதும் சீக்கீரமா செவிடாயிடும் போல இருக்கு, பன்னிரெண்டாம் வகுப்பு வேற படிக்கிற, ஒழுங்கா படி பா.

என்னம்மா என்று வந்தான் ராஜா. ராஜாவுக்கு ஒரு பாடகராக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால், பாடும் அளவிற்கு அவனுடைய குரல் இன்னும் சீர்படவில்லை. இதனால் அவன் பாடும்போது அனைவருக்கும் அது ஒரு இரைச்சலை போல இருந்தது. அவனுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரும் படிக்காமல் ஏன் இவ்வாறு பாடிகொண்டே இருக்கிறாய் என்று ஏளனம் செய்தனர்.

ஆனாலும், விடாமுயற்சியோடு அவன் பயிற்சியில் ஈடுப்பட்டான். நடந்தது என்ன தெரியுமா?

எப்பொழுதெல்லாம் பாடல்பாட மேடை ஏறுகிரானோ அப்பொழுதெல்லாம் அவமானங்களும், விமர்சனங்களும் தான் வந்தது. மனம் உடைந்த அவன் படிப்பிலும் கவனம் செல்லுதாமல் பரீட்சையில் பொது தேர்வுக்கு முன்பு வரை தேர்ச்சி பெறாமல் இருந்தான். அவனுடைய தாய்க்கும், அவனுடைய ஆசிரியர்களுக்கும் இது மனவேதனையை தந்தது. இதை பார்த்த ராஜாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டிற்கு சென்று தூங்கிவிட்டான்.

 

என்ன இது டைம் மேசின் போல இருக்கு, இப்போது இதில் ஏறி என்னுடைய குழந்தை பருவத்திற்கு சென்று, எப்படியாவது ஒரு இசை கற்று தரும் வகுப்பில் சேரலாம் என்று குழந்தை பருவத்திற்கு ராஜா செல்கிறான். டைம் மேசினின் சென்று பார்த்தபோது என்ன ஆச்சரியம். அவனுடைய தாய் தந்தை அவனை அவனை அன்போடு வளர்பதையும், சிறு வயதில் தன்னுடைய தந்தை சாலை விபத்தில் மரிப்பதையும், அதிலிருந்து தான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை தன்னுடைய தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார்கள் என்பதையும் கடந்த காலத்திற்கு சென்று பார்த்து கொண்டு இருந்தான். கண்களில் நீர் பெருக்கெடுக்க, தன் தாயை நோக்கிக்கொண்டிருக்கிறான், அப்பொழுது அவனுடைய தாய் அவனுடைய உறவினரோடு உரையாடும் நிகழ்வை காண்கிறான். அந்த உறவினர் எப்படி உங்கள் கணவரை இழந்த துன்பத்தில் இருந்து மீண்டு வந்தீர்கள் என்று வினவ, அப்போது அவனுடைய தாய் எல்லாவற்றிக்கும் காலம் தான் சிறந்த மருந்து என்று விடையளித்தார்.

டேய் ராஜா, சீக்கிரமா எழும்பு, உன்னுடைய ஆசிரியர் வந்திருக்கிறார். எழுந்து பார்த்தபோது தான் புரிந்தது அவன் கண்டது அனைத்தும் கனவு என்று. எழுந்து சென்று ஆசிரியரை பார்த்தான். ஆசிரியர் அவனிடம் என்ன பிரச்னை ஏன் படிப்பில் கவனம் செலுத்த மாட்டின்கிறாய் என்று கேட்க தன்னுடைய பாடகனாகும் விருப்பத்தை சொல்கின்றான். அப்போது ஆசிரியர் அவனிடம் நீ பொது தேர்வுவை நல்லமுறையில் எழுதி முடித்தவுடன் நான் என்னுடைய நண்பரிடம் உன்னை பாடல் வகுப்பிற்கு அனுப்புகிறேன். அவர் உன்னை ஒரு மிக சிறந்த பாடகனகா மாற்றுவார் என்று சொன்னார். அப்போது தான் அவனுக்கு புரிந்தது, தன்னுடைய தாயின் தாரக மந்திரம்.

கருத்து : “காலம் சிறந்த ஓர் மாமருந்து

-Brightson. T

 

28. K2K00056

காலம்*

சூரியனுக்கு விடை கொடுத்துவிட்டு சந்திரனை வரவேற்க தயாராக இருக்கும் அந்த அந்திமாலையில் சென்னையில் உள்ள அண்ணாசாலையில் சுமார் ஆறு மணி அளவில் ரமேஷ் தன் இரு சக்கர வாகனத்தில் உற்சாகமாக தன் வீட்டை நோக்கி பறந்து கொண்டிருந்தான் திடீரென்று எதிர்பாராத விதமாக அவனை நோக்கி எதிராக வந்துகொண்டிருந்த அந்தக் கட்டுப்பாட்டை இழந்த லாரி தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் தான் யோசிக்கும் அந்த ஒரு நொடியில் அந்த லாரியின் அடியில் அவன் இரு சக்கர வாகனத்துடன் விழுந்து கிடந்தான் ரமேஷ். உடனே ஓடி வாங்க ஓடி வாங்க எல்லோரும் ஓடி வாங்க என்று சொல்லும் சப்தமும் ஐயோ! பாவம் ரொம்ப சின்ன வயசா இருக்கே என்று சொல்லும் சப்தமும், யாராவது உயிர் இருக்கா? என்று பாருங்களேன் என்று சொல்லும் சப்தமும் அவன் காதில் எங்கோ ஒரு ஓரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. திடீரென்று அந்த கூட்டத்தில் ஒருவர் அவளுடைய நாடியை பரிசோதித்த வாராய் ஒன்னு இல்லபா உயிர் அடங்கிவிட்டது பாவம் சின்ன வயசு அவன் காலம் அவ்வளவுதான் என்று வருத்தத்துடன் சொன்ன சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அவனுடைய உடல் மிகவும் லேசானது போலவும் எங்கோ நோக்கி பயணம் செய்துகொண்டிருப்பது போலவும் இருந்தது திடீரென்று மிகவும் பிரகாசமான மிகவும் வெளிச்சமான இடத்தில் தான் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான், இது என்ன? ஒரே வித்தியாசமான இடமாய் தெரியுது இது பரலோக மாதிரி இருக்கு அப்போ அப்போ நான்.... நான் இறந்து விட்டேனா? என்று அவனுக்குள் அவன் கூறிக் கொண்டிருக்கையில் தேவதைகள் அவனை அழைத்துக் கொண்டு சென்றது, என்னை விடுங்கள், என்னை விடுங்கள் நான் கடவுளை பார்க்க வேண்டும் நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அவர்கிட்ட என்னை தயவுசெய்து கூட்டிட்டு போங்களேன். உடனே அந்த தேவதைகளில் ஒன்று நீ நினைத்தவுடன் அவரை எல்லாம் பார்த்து பேச முடியாது நான் அவர்கிட்ட நான் ஒரு கேள்வி கண்டிப்பா கேட்கணும் என்று அவன் கத்திக் கொண்டிருக்கையில். திடீரென்று மிகவும் பிரகாசமான ஒளி ஒன்று அவன் முன்பு தோன்றியது அதில் ஒருவர் மிகவும் சாந்தமானவாராய் அன்போடு புன்முறுவல் பூத்துக் கொண்டு அவன் முன் நின்று கொண்டிருந்தார் ஓ ... நீங்கதான் நிச்சயமா கடவுள் இருக்க முடியும் உங்ககிட்ட நான் கேட்க வேண்டிய கேள்வி ஒன்னு இருக்கு எல்லாத்தையும் படச்ச நீங்க ஏன் ஒரு சிலருக்கு மட்டும் குறைந்த ஆயுட்காலத்தை கொடுத்தீங்க நான் என்னோட ஆயுசு காலத்துல என்னெல்லாம் நான் சாதிக்கணும் நினைச்சேன் என்னெல்லாம் அனுபவிக்கனும்னு நினைச்சேன் என்னை இப்படி அற்ப ஆயுசில் இங்கு என்ன கூட்டிட்டு வந்துட்டீங்க நான் என்ன செய்யமுடியும் ஐயோ கடவுளே என் கனவெல்லாம் கலைஞ்சு போச்சு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் அவனை நோக்கி இடி முழக்க போன்ற ஒரு சத்தத்தோடு ஒரு சிரிப்பொலி கேட்டது ,அவன் கோபத்தோடு நிமிர்ந்து பார்க்கையில் உங்களுக்கு என்ன புரியும் என்னுடைய வேதனை நான் ஏதாவது சாதிக்கணும் என்று வாழ்ந்தவன் நான். அதற்கு கடவுள் அப்புறம் என்றார். அதற்கு அவன் அதற்குள்ள தான் என்னை இங்கு வந்துட்டேனே என்று வருத்தத்தோடு சொன்னான் உம்...இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் நான் என்ன எல்லாம் செஞ்சு இருப்பேன் போச்சு எல்லாமே போச்சு, கடவுள் அவனைப் பார்த்து இன்னும் கொஞ்ச காலமா? இருந்த காலத்தை நீ என்ன பண்ணின? 24 வருடம் மட்டுமே வாழ்ந்திருக்கிறேன் என்றான் சலிப்போடு அவன்,அதற்கு கடவுள் 24 வருடம் தான் அப்பா அந்த வருடத்தில் நீ என்ன செஞ்ச இது உலகத்தில காலம் எப்பயும் யாருக்காகவும் எதற்காகவும் காத்துக்கொண்டு இருக்காது நம்மை எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்று இல்ல உனக்கு கொடுக்கப்பட்ட காலத்தை நீ எவ்வளவு புரோஜனம் படுத்துகிறேன் அதில் தான் உன் புத்திசாலித்தனம் இருக்குது நீ வீணாகியது 24 ஆண்டு வாழ்க்கை மட்டுமல்ல உன்னுடைய காலத்தையும் தான் காலம் தன்னை மறந்து அவனை அது மறக்குது அதை பிரயோஜனம் படுத்துகிறவனை சாதனையாளனாக மாற்றுகிறது. நீ காலத்தை பிரயோஜன  படுத்தாமல் என்னை குறை சொல்வது நியாயமல்ல , ஏன் கொஞ்ச காலம் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவாக இருக்கட்டும் நம்ம பாரதியார் இருக்கட்டும் எத்தனையோ பேர் சாதிக்க வில்லையா இதோ பார் மகனே உன் கையில் கொடுக்கப்பட்ட விலைமதிப்பில்லாத காலத்தை தொலைத்து விட்டாய், நீ என்னை குறை சொல்வது நியாயம் ஆகுமா?இன்று கடவுள் கூறியவுடன் ரமேஷ் தன் குற்றத்தை உணர்ந்தவனாய் எனக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுக்க முடியுமா என்று வருத்தத்தோடு வினவினான். அவ்வளவுதான் மகனே உனக்கு கொடுத்த காலம் நிறைவேறிவிட்டது இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு அந்த ஒளி சட்டென்று அவனை விட்டு மறைந்து விட்டது அப்போதுதான் அவனுக்கு புலப்பட்டது எவ்வளவு காலம் வீணாக ஊர் சுற்றியது நண்பர்களுடன் அரட்டை அடித்து மொபைல்போனில் டைம் வேஸ்ட் பண்ணினது டிவியுடன் காலத்தைக் கழித்தது நான் ஒரு சரித்திரம் படைத்து சாதனையாளனாக வேண்டும் என்று நினைத்த என் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது இன்று எனக்கு அது எட்டாக்கனியாகி விட்டது. என்று துக்கத்தை அடக்கிக் கொண்டவனாய் எதையோ பறிகொடுத்தவனாய் எண்ணிக் கொண்டிருக்கையில் அவன் காதில் ஏதோ ஒரு சத்தம் ஒலித்தது சூரிய ஒளி முகத்தில் அடிக்கிற அளவுக்கு நல்லா தூங்குடா எரும மாடு ,கழுதை வயசாயிடுச்சு இனி உனக்கு பொறுப்பு இல்லை, என்று அம்மாவின் குரல் கேட்டவுடன் அப்ப..... அப்ப நான் சாகலையா நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேனா கடவுளே உனக்கு ரொம்ப நன்றி நன்றி கடவுளே நான் இனி ஒரு போதும் காலத்தை வீணடிக்க மாட்டேன் அது எனக்கு கையில கிடைச்ச பொக்கிஷம் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான் இது அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட ஒரு பாடம் தானே.

-ANGEL

 

29. K2K 00086

காலம்

நவீன தொழில்நுட்பங்கள் ஆளும் இத்தகைய கால கட்டத்தில் இயற்கை வளங்களை அழித்துவிட்டு விவசாயம் செய்வதை நம்பி வாழ்பவரின் அனுபவம்

அன்று அதிகாலையில் சோம்பலுடன் கண் விழிக்க தன் மனைவி வீட்டு வாசலில் கோலமிடுவதை பார்த்து சிரித்து கேலி செய்து கொண்டு இருந்தார் கதாநாயகன்

நேரத்தை கண்டு அடித்து பிடித்து தயாராகி வீட்டை விட்டு கிளம்பினார்

எங்கே இவ்வளவு வேகமாக என்று மனைவி கேட்க

பயிர் இட விதை வாங்க செல்கிறேன் என்றார்

கொளுத்தும் வெயிலில் உயிருள்ள மீனை தரையில் போட்டால் சற்று நேரத்தில் கருவாடு ஆகிவிடும் இந்த காலத்தில் பயிரிடுவது பலனை தராது பயிரிட வேண்டாம் வெயிலுக்கு முன் இருக்கும் வேலைகளை முடியுங்கள் என்றால்

அவளின் அறிவுரையை கேட்காமல் விதை வாங்கி அதனை நட்டும் ஆகிவிட்டது இயற்கையை நம்பி விதைத்த பயிர்கள் வளர தொடங்கியது கோடைகால ஆரம்பம் அது

தன் சொற்களை மீறி நடந்தது தெரியவந்து வீட்டில் எரிமலை வெடித்தது

நான் பலன் அடைந்து காட்டுகிறேன் பார் என்று மனைவியிடம் சவால்

கால நேரம் பாராமல் பயிரைக் காத்து நீர் பாய்ச்சி பராமரித்து வந்தார்

கிணற்றில் நீர் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது பருவ மழை வந்தால் தான் பயிர்கள் பிழைக்கும் என மனதில் வேதனை

செய்தியில் பருவ மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்தனர் ஏற்றவாறு மழை கொட்டியது இவருக்கு கொண்டாட்டம் தூங்கவில்லை ஆனால் அது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை மழை நின்றவுடன் இவரது மனம் வாட தொடங்கியது

நாட்கள் ஓடின பயிர்கள் வாடின மழை பெய்யும் திசை கூட தெரியவில்லை

இயற்கையை  நம்பி பயிர் செய்தது தவறாகிவிடுமோ என்று கலங்கினார்

பிள்ளை பாக்கியம் இல்லாத நமக்கு இந்த விவசாயத்தை தானே பிள்ளையாக எண்ணி பேணிக் காத்து வருகிறோம் அவைகள் கண் முன்னே கருகுவது மனதை உயிருடன் கொல்கிறது என்று மனைவியிடம் கண் கலங்கினார்

தலை சாய மடி தந்து ஆறுதல் கூறினால் மனைவி

லாபம் நட்டம் வெற்றி தோல்வி இன்பம் துன்பம் என என்ன ஆனாலும் நம்முடன் இருப்பவர் மனைவி தான் என்று உணர்ந்து உன் சொல்லைக் கேட்காமல் பயிர் செய்தது தவறு என்று மன்னிப்புக் கேட்டார்

நான் உங்களோடு இருக்கிறேன் நாம் வணங்கும் தெய்வம் நமக்கு துணை நிற்கும் என்று தைரியம் அளித்தார்

இயற்கை வளங்களை மனிதர்கள் அழித்து வருவதால் தகுந்த காலங்களில் தகுந்த பருவ மாற்றம் நிகழ்வதில்லை இந்த முறை சமாளித்து விடலாம் கவலை வேண்டாம் என அவர் மனதை சமாதானப் படுத்தினால்

 

அந்நேரம் இடியுடன் கூடிய பலத்த காற்று மழை வரும் என இருவரும் நம்பி உறங்க படுத்தனர் அவருக்கு உறக்கம் சிறிதளவு கூட எட்டி பார்க்கவில்லை பயிரை பற்றிய கவலை மழையை பற்றிய ஏக்கம்

சிறிது நேரம் கழித்து கண் அசந்து தூங்கினார்

அதிகாலை தெருவில் கூச்சல் சத்தம் என்ன என்று இருவரும் ஓடி போய் பார்த்தனர்

ஊரின் பழைய ஏரி உடைந்து தண்ணீர் கதாநாயகனின் விளைநிலங்களில் புகுந்தது பயிர்கள் மட்டும் அல்லாமல் கிணறும் நிரம்பி இருப்பதை கண்டு இந்த ஜோடிக்கு அடக்க முடியா ஆனந்தம்

இந்த அனுபவத்தில் இருந்து இவர் கற்று கொண்டது காலம் எப்போதும் கை கூடாது

எவ்வித செயலாக இருந்தாலும் காலங்கள் கருதி செயற்பட வேண்டும் என அறிவடைந்தார்.....நன்றி

மு. தீபக்

சென்னை 600023

 

 

30. K2K-00003

காலம்

காலத்தை மாற்றி அமைப்பது எவளரலும் முடியாத காரியம்....... ஆன இங்க ஒருத்தன் அந்த காலம் தனக்கு கொடுத்த ஆபத்த மாற்றி வரைந்திருக்கிறார்....

எல்லாரையும் மாதிரி தனக்கான லைஃப் அஹ் ஹேப்பி அஹ் வெட்சிகணும்னு ரொம்ப ஆசை ஆன அந்த ஆசை கனவு எல்லாம் சுக்குநூறை போயட்டுட்சி அதும் ஒரு தவிர்க்க முடியாத விஷயத்துக்காக

விக்ரம் தனொட ப்ரெண்ட் கல்யாணத்துக்கு மதுரை பக்கம் ஒரு கிராமம் கு சென்றான் ...அங்க போன பிறகு ஒரு புது உலகத அவன் பாதான் வித்தியாசமான மனிதர்கள், உணவுகள் அது அவனுக்கு புது அனுபவத்தை குடுதுட்சு சில விசயங்கள் அவனுக்கு திகிலாவும் இருந்துட்சி அவன் ஊருக்குள்ள போகும் போது சில விசயங்கள கவனிட்சான் அது ஏற்கனவே எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சி...... முதல ஒரு மரத்தை பார்த்தான் அந்த மரத்தை சுத்தி ஒரே கரையான் புத்தா இருந்துட்சி அது அவன்கிட்ட எதையோ சொல்ற மாதிரி இருந்துச்சி அவன் ரெண்டாவதா ஒரு விசயம் பார்த்தான் அது அவனுக்கு மேலும் பிதியை கிளப்பியது. .... தலையே இல்லாமல் இருக்கும் மனிதர்கள் போல் நிரையா சிலைகள் அங்கு தென்பட்டது....அதை பற்றி ஊருகுள் கேட்கும் போது ..."அதெல்லாம் உனக்கு வேணாம்" என்று ஒரு வயதான தாத்தா சொல்லிட்டு  போனரு.... அவன் யார் சொல்றதையும் கேக்கமா அதை பத்தி தகவல் தெடிடு இருந்தான் தானொட நண்பன் கல்யாணத்துக்கு சென்றவன் எதோ கரணகள் கூறி அங்கேயே இருகான்...அவனுக்குள் ஒரு உணர்வு இந்த இடத  விட்டு போகக்கூடாது...அந்த நேரத்தில் தா அவன் அந்த மூணாவது விசயத்தை பார்த்தான்....அது அவனோட இரத்தத்தை உறைய செய்தது....அவன் அதை பார்த்த நொடியில் உறைந்து நின்றுகொண்டிருந்தான்...... அது அவனை நோக்கி வந்தது....உறைந்து நின்றவன் அது அருகில் வர வர சிலிர்த்து போனான் ....ஒரு பெண் கண்ணில் ரத்தொடு அவன் முன் நின்றாள் அது வேற யாரும் இல்லை அவன் மனைவி தா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣..........அவன் தகென்று எழுந்து அடிப்பாவி ஏன் டி இப்டி ....நா கனவு கண்டு அளருவன் நு தெரிந்தே இப்டில பன்ற போடி .... அமா தினமும் நிங்க குடுக்குற தொல்ல தங்களால அதான் இப்டி...

ஒருநாளைக்கு அந்த. கனவு உனக்கு வரடும் அப்ரம் இருக்கு உனக்கு....தினமும் விக்ரம் கு இந்த கனவு வரும் .. காலிங் பெல் சவுண்ட் கேட்டுச்சு யாருனு போய் பாத்தா கூரியர் வந்துருச்சு ..அத பிரிட்சா அந்த கனவில் வந்த அதே நண்பனுக்கு கல்யாணம் என்று இன்விடேஷன் வ்ந்துட்சி  அதை பார்த்து அரண்டுபோநான் ..அவன் பினாடி ஒரு சவுண்ட் கேட்டுட்சி ...திரும்பி பார்த்த அவன் வாய்பேச முடியாமல் போன....கண்ணில் ரத்தத்தோடு ஒரு ஒருவம் நின்றது ....அவன் மெதுவாய் ..என்ன மா இப்டி பண்றீங்களே மா நு சொன்னான் ....யார் மா நீ .. நான் தான் காலம் உண்ண தேடி வந்துருகன் ..உண்ண கொண்டுபொகாபோரன்....அவன் மெதுவாய் எனத்து கொண்டுபோகவா மா என்ன விட்ரு மா நா ரொம்ப பாவம் ....இன்னும் என் வாழ்க்கையே ஸ்டார்ட் பண்ணல என்ன விட்டுடு மா ....சரி விட்டுரன் அபோன எனக்கு ஒரு ஜோக் சொல்லு நா உண்ண விட்டு போர்ன்....ஐயய்யோ திடீர்னு ஜோக்கு வரால ... கோல்டு சைனா ஓரசுன்ன கோல்டு வரும் சில்வர் சைனா ஒரசுன்ன சில்வர் வரும் ஆனா சைக்கிள் சைனா ஒரசுன்ன சைக்கிள் வருமா....அவன் கீழ விழுந்து சிரிட்சிடு இருந்தேன் ....அதை பாத்து அந்த காலம் நீ 90s கிட் ஆ நூ கெடுட்சி ...அட ஆமா மா சொல்லி வையெயமூடல அந்த ஒருவன் த்லதெரிக்க ஒடிருட்சி....

கருத்து:

90s கிட் ஆ இருந்தா ஆவி கூட நெருக்கி வாரது ஒடிரும்.......

-Sindhuja .M

 

 

31. K2K00055

காலம்

அகன்று விரிந்த சாலையில்    கதிரவனின் அழகான ஆடி  கார் விரைந்து கொண்டிருந்தது. அவனுக்கு சற்று பயமும் திகிலும் பிடித்திருந்த நிலையில். ஏழு வருடங்கள் கழித்து அப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான். இவ்வளவு நாள் அவனுடன் இருந்த மிகப்பெரிய பலம் தன்னைக் கடந்து போய்விடும் போல இருந்தது. ஆம் மீட்டிங்கில் இருந்த அவனுக்கு அவனின் அப்பா கடைசி நிமிடங்களை எண்ணி கொண்டுருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் தன் மனைவியையும் மகனையும் அனுப்பிவிட்டு தற்போது அவன் பயணித்துக் கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்ந்து அவன் எண்ண ஓட்டங்களும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவனின் அப்பா ராமச்சந்திரன் ஒரு கம்பனியில் அக்கௌன்டன்ட் வேலை கணக்கு வழக்கில் மட்டும் நேர்மை கொண்டவர் அல்ல வாழ்க்கையிலும் அவர் நேர்மையானவர் ஊரிலும் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. ராகவ் வீட்டிற்கு ஒரே பிள்ளை அவனின் அப்பா சிறு வயதிலிருந்து கண்டிப்பையும் அன்பையும் கலந்து கொடுத்தார் இவனுக்கு அப்பா என்றால் ஒருவித மரியாதையும் பாசமும் இருக்கும். ஒரு முறை இவன் சிறுவயதில் மிக நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றதால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை மறுநாள் இவன் லீவ் லெட்டர் எழுதி கொண்டு வந்து அப்பாவிடம் கையொப்பம் போட சொன்னான். ராமச்சந்திரன் அதை பார்த்துவிட்டு ஏன் காய்ச்சல் என்று எழுதி இருக்கிறாய் உன்மை மட்டும் சொல் என்று அது நமக்கு நன்மையைத் தரும் என்று சொல்லி மறுபடியும் எழுதி வரச் சொன்னார். ராமச்சந்திரன் மற்றவர்களை போல் நீ டாக்டராக வேண்டும் என்று கலெக்டர் ஆக  வேண்டுமென்று ஒருபோதும் ராகவனிடம் அவர் சொன்னதில்லை. ஒரு முறை கணிதத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தான் ராகவ் இதனை பார்த்த ராமச்சந்திரன் இவன் அல்ஜிப்ராவில் தடுமாறுகிறான் என்பதைக் கண்டறிந்து அவனுக்கு உதவினார். அதுமட்டுமல்லாமல் அவனுக்கு ஹாக்கி நன்றாய் விளையாடுவதைக் கண்டு அதற்கு என்று  தன் விடுமுறை காலங்களில் தனி கவனம் செலுத்தினார். இதனால் மாநில அளவில் அவன் பரிசுகளைக் குவித்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான் தன் நண்பர்கள் எல்லோரும் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்வதால் தானும் சேருவதாக சொன்னான் அதுதான் ஃப்யூச்சருக்கு நன்றாக இருக்கும் என்று அவன் எண்ணினான். அப்பொழுது ராமச்சந்திரன் அவனைப் பார்த்து உனக்கு சின்ன வயதிலிருந்தே நன்றாய் படம் வரைவாய் என்று உள்ளே சென்றவர் அவன் சிறுவயதில் இருந்து இன்றளவும் வரைந்த அனைத்து படங்களையும் கொண்டு வந்து கொடுத்தார் இதனை நன்றாக கவனித்துப் பார் என்றார். ஏதாவது தெரிகிறதா என்று கேட்டார். அவன் உற்றுநோக்கி ஒன்றும் தெரியவில்லை என்றான். உன் படங்களில்  மிக அழகான வித்தியாசமான வீடுகளை வரைந்துள்ளாய் நன்கு பார்.    அதுமட்டுமல்ல நாம் இருக்கும் இந்த இந்த வீட்டைக் கூட உன் ஆசைப்படி தான் கட்டினேன் எல்லாரும் சொன்னாங்க சின்னபிள்ளை பேச்சைக் கேட்காதேன்னு, என்னைப்பொறுத்தவரையில் நம்ம வீடு அழகாக இருக்கு. அப்போதுதான் அவனுக்குள் இருக்கும் திறமையை அறிந்தான். ராமச்சந்திரன் அவனை நோக்கி  "ராகவ் வேலை என்பது பணத்திற்காக மட்டுமில்லை நமக்கு மன திருப்தியை தரணும் அப்படிப் பார்க்கும் எந்த வேலையும் வேலையாக நமக்குத் தெரியாது எனவே இதில் பி.இ சிவில்  படி அதனோடு ஆர்க்கிடெக்சர் பற்றியும் படி கடவுள் உனக்குக் கொடுத்திருக்கும் திறமையை புதைத்து விடாதே  எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கும் நீ நல்லா வருவாய்" என்று சொன்னார். அவனும் சற்று தயக்கத்துடன் தந்தை சொல்லை ஏற்றான். ஒருமுறை தன் கல்லூரிக்கு தற்செயலாக வந்த அவன் தந்தையைப் பார்த்த கல்வி முதல்வர் அவரை வரவேற்று உட்கார வைத்து உபசரித்தார் இவனும் ஆச்சரியத்தில் நம்ம அப்பாவிற்கு எப்படி கல்வி முதல்வரை எப்படி தெரியும் என்று யோசித்தான். தன் அப்பா சென்ற பிறகு கல்லூரி முதல்வர் இவனை அழைத்து ராமச்சந்திரன் பிள்ளையா நீ இப்பொழுதுதான் அவர் சொன்னார். உன்னப்பா ரொம்ப நல்ல மனிதர் இங்கு நன்றாக படிக்கும் பீஸ் கட்ட வழியில்லாத பிள்ளைகளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் இவரால் பயன் பெற்றவர்கள் நிறையப் பேர்கள் ஆனால் இன்றளவும் தான்தான் உதவுவதாக சொல்ல மறுத்து விட்டார். ராகவிற்கே இன்றைக்குத்தான் தெரியும் நிறைகுடம் தழும்பாதுல்லவா. ஒருநாள் கல்லூரி நண்பர்கள் எல்லோரும் ஊட்டி செல்வதால் தானும் செல்வதாக அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்க சொன்னான் ‌இவன் ராமச்சந்திரன் மறுத்துவிட்டார் இவனுக்கு அவர் மீது அதிக கோபம் வந்தது. ராமச்சந்திரன் பேச ஆரம்பித்தார் ராகவ் என்மேல் உனக்கு கோபம் இருக்கலாம் உன் நண்பர்கள் ராஜேஷ், சுந்தர் மற்றும் மணி இந்த மூன்று பேரும் சரியில்லை பாலாஜி மட்டும்தான் பரவால்ல ஆனாலும் அவனின் நடவடிக்கையும் வர வர சரியில்லை இனிமேல் அவர்களிடம் சகவாசம் வைக்காதே உன் நல்லதுக்காகத்தான் சொல்கிறேன் கேள் என்று சொல்லிவிட்டு தன் வேலையைக் கவனிக்கலானார். ராகவ் கோபத்துடன் அறைக்கு சென்றுவிட்டான். அவர் சொல்வதும் சரிதான் அப்பா சொல்வதை போல் அவர்கள் 3 பேரும் முன்ன மாதிரி இப்ப இல்ல சிகரெட் தண்ணி என்று திரிகின்றனர். ஆம் ராமச்சந்திரன் மகனை சுற்றியுள்ள நண்பர்கள் வட்டாரத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். அப்பாவிற்கு பயந்து அவர்களிடமிருந்து சற்றே விலகினான். சிறிது நாள் கழித்து பாலாஜியும் அவர்கள் மூவரோடு சேர்ந்து குடித்துவிட்டு கல்லூரிக்கு வந்ததால்  இவர்கள் நால்வருக்கும் டி.சி கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டார் கல்லூரி முதல்வர். ராகவ் கல்லூரி முடிந்தவுடன் சிறிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றை தொடங்கினான் இன்றைக்கு முன்னணி நிறுவனமாக உலகம் முழுவதிலும் அவனுக்கு ஆர்டர்கள் வருகின்றன 50 க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்கள் இருக்கின்றன 1000க்கும் மேற்பட்டோர் இவனுக்கு கீழே வேலை செய்கின்றனர். எல்லோரும்  அவனுடைய திறமைகள் முயற்சி உழைப்பு எல்லாவற்றையும் பாராட்டும்போது இதற்கெல்லாம் காரணம் தன் தந்தை தான் என்று எண்ணினான். எல்லா ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள் இவனின் வெற்றிக்குப்பின் இருப்பதோ ஆண் இவனின் தந்தை. இவனும் தன் தந்தையை தன்னுடன் இருக்குமாறு அம்மாவிடம் சொல்லி வற்புறுத்தினான் ஆனால் அவர் வரமறுத்து விட்டார் இதனால் தந்தையின் மேல் கோபம் கொண்டான். கடைசியாக அம்மாவின் இறப்பிற்கு சென்று வந்த இவன் இப்பொழுது தான் செல்கிறான். இந்த எழு வருடங்களில் அவனுக்கிருந்த வேலைப்பளு காரணமாக தந்தையிடம் பேசவே இல்லை. அவனின் தந்தையும் இரண்டு மூன்று முறை இவனை அழைத்து பேச முயன்றார் அப்பொழுது இருந்து வேலையின் காரணமாக தான் அப்புறம் பேசுவதாக சொன்னான்.அதற்குபின் அவனின் தந்தையும் அவனை தொடர்பு கொள்ளவில்லை. தான் மகனுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று எண்ணி விட்டாரோ என்னமோ?. குற்ற உணர்ச்சி நிறைந்தவனாக  சிறுவயதிலிருந்தே தனக்கென்று ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி இருந்த அவருக்கு அரை மணி நேரம் கூட நான் செலவு விடவில்லையே எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன். இந்த அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்றால் அவர்தான் காரணம் அப்பாவைப் பார்த்து எப்படியாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினான். அதுமட்டுமல்லாமல் தன் அப்பாவிடம் "அப்பா நீங்கதாப்ப என்னுடைய ரோல் மாடல் காரணம் என்னன்னா என்னை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அன்பாகவும் வளர்த்தீர்கள் நீங்க பட்ட கஷ்டத்தை ஒருநாள்கூட வாய்திறந்து என்கிட்ட சொல்லவில்லை உங்களை பல நேரம் ரொம்ப கோபப்பட்டு பேசி இருக்கேன் ஏன் மனசுல கூட திட்டி இருக்கேன். அப்ப நீங்க சொல்லுவீங்க உன் நல்லதுக்குத்தான்னென்று ஆனா இப்பதான் இந்த மர மண்டைக்கு எல்லாம்  புரியுது. நீங்க ஒரு நல்ல தகப்பன் உங்களைப் போலத்தான் நான் என் மகனை வளர்க்கணும்" கார் சடன் பிரேக் போட்டவுடன் நினைவுகளை கலைத்தவன் அப்பொழுதுதான் தன் வீடு வந்ததென்று உணர்ந்தான். கனத்த இதயத்துடன் கீழே இறங்கினான் ஊர் ஜனங்கள் இவனின் வரவை எதிர்பார்த்து கொண்டிருந்தவர்கள்  சலசல என்று பேசிக் கொண்டிருந்த அவர்களின் சத்தம் நிசப்தமானது. ராகவ் இதயம் பயத்தில் படபடத்தது  மெல்ல அப்பாவின் அறை நோக்கி சென்றான். அப்பாவின் அருகில் மனைவியும் மகனும் உட்கார்ந்து இருந்தனர். ராமச்சந்திரன் கட்டிலில் படுத்திருந்தார் அவருடைய உடல் தளர்ந்திருந்தாலும் முகம் தெளிவாக இருந்தது இவன் வரவுக்காகக் காத்திருந்த அவர் புன்னகைத்தார். இவன் அருகில் வரும்படி அழைத்து அருகே உட்காரும்படி சைகை காட்டினார். ராகவனின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது அவன் அப்பா நீ அழக்கூடாது என்பது போல் பாவனை செய்தார் மெல்ல தன் கைகளை எடுத்து அவனை ஆசீர்வதித்து கொண்டிருக்கும்போது அவரின் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது.  ராகவனின் இதயம் வெடித்து விடும் போலிருந்தது ஒட்டுமொத்த நாடி நரம்புகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அப்பா என்று சத்தமிட்டுக் கதறி அழுதான். எல்லோரும் நினைத்தனர் அவன் தன் அப்பாவிற்காக தான் அழுகிறான் என்று ஆனால் அவனுக்கு மட்டுமே தெரியும் தன் இழந்த அப்பாவிற்காக மட்டுமல்ல இழந்த காலத்திற்காக சேர்த்துதான். குற்றவுணர்ச்சி நிறைந்தவனாக திரும்ப அந்த பழைய காலம் தனக்கு வரக்கூடாதா  எல்லாவற்றையும் சரி செய்திடலாம். இது முட்டாள்தனம் என்று அவனுக்கும் தெரியும். நாம் இருக்கும் காலத்தை பணம் பதவி என்று முக்கியத்துவம் கொடுக்காமல் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

-பாண்டியரசி

 

 

32.: K2K-0001

 காலம்.,என்பதை நேரங்களின் தொகுப்பாக நான் காண்கிறேன்;என்றேன். என் சித்தப்பாவிடம்., அவர் உடனே ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்., அடக்கிவிடாதே மகனே..!

 

காலம் அணை கட்டி தடுக்க கூடிய ஆற்று வெள்ளம்.,அல்ல பால்வெளி அண்டைத்தை விட பரந்து.,விரிந்த கடல் என்கிறார்..!

திகைத்து போகிறேன்..!என் முகத்திலே கேள்வி கணைகளை கொண்ட.,உணர்ச்சிகளை ஏந்தி கொண்டு.,ஒன்றும் அறியா குழந்தை பாவனையில் அவரை பார்க்க மண்டையில் நறுக்கென கொட்டிவிட்ட.,பாசாங்கு பச்சிலை இங்கு விற்க்காது என்க நானும் அவரும் ஒரு சேர சிரித்து விட்டோம்..!

பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்து பரமேசேனனிடம் செல்லும் வரை உன் வாழ்கை காலம் , புரிந்து கொண்டவன் புத்தன் அல்ல பூலோக அரசனாய் கூட ஆகிவிடலாம்,ஒரு கதை சொல்கிறேன் கேள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லா வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை பகுதி அது பாடமாவதும் காகித பட்டமாவதும் கதை படிப்பவர் கையிலே என்ன கதைக்குள் போகலாமா!!

இதோ மகிழ் அதிகாலை எழுந்து ,பக்தியுடன் அமர்ந்து படிக்கச் ஆரம்பித்து விட்டான் பத்தாம் வகுப்பு பரீட்சை அல்லவா அவனுக்கு,கொரோனா விஷக்கிருமியால் உலகம் ஸ்தம்பித்து கிடக்க இங்கே இவனுக்கோ பேனாவில் மை ஊற்றி வைக்க நேரமில்லாமல் ஓடும் நிலைமை,இது என்ன சோதனை பரிச்சைக்கு செல்வதற்கோ சரியான பேருந்துகள் இல்லை, அவனோ இருசக்கர மோட்டார் சைக்களில் செல்லும் வாய்ப்பில்லா சட்டை அணியா நெசவாளியின்  பதின்பருவ மகன், சிக்கலான சூழ்நிலை இருந்தும் குடும்ப நிலை கருதி எதிர்கால வாய்ப்புகளை எண்ணி, பரீட்சைக்கு மிதிவண்டியில் செல்கிறான் 15 மைல் மிதிவண்டி பயணம்,மிதிவண்டி சக்கரம் வேகமாக சுழல்கிறது திடிரென்று அங்கே பார்த்தால் குறுக்கே ஓர் நாய்க்குட்டி இடித்துவிட கூடாதேன அவன் கச்சையை அழுத்த மிதிவண்டி சங்கிலி கழன்று போகிறது  இருப்பதோ 40 நிமிடம் போகவேண்டிய தூரமும் அதன் பின் நடக்கும் விசயங்களை எண்ணிபார்க்க கூட நேரமில்லை,30 நிமிடம் தாமதமாய் வந்து சேர்கிறான்,உடல் சோதனைக்கு பிறகு தேர்விற்கு அனுமதிக்கப்படுகிறேன்,வினாத்தாளை எடுத்து வாசிக்கிறான்,அவன் கண்களுக்கு தெரிந்த முதல் வார்த்தை காலம்,காலத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக??  என கேள்வி,அவன் சிறந்த பதில் அளித்திருப்பான் என நான் நம்புகிறேன்!!

மகனே தூங்கிவிட்டாயா !! இல்லை என அவன் தலை அசைக்க மீண்டும் தொடர்கிறார், காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் 24 மணி நேரத்தை ஒரு நாளாக தந்துவிடுகிறது ஆனால் அது அனைவருக்கும் சமமாக இருப்பினும் ஒருவனால் செய்ய முடிந்ததை மற்ற அனைவராலும் செய்ய முடிவதில்லையே ஏன்?? மண்டையை சொரிந்து கொண்டு அவன் விட்டத்தை பார்க்க அவர் புரிந்து கொண்டு தொடர்கிறார், நிர்வாகம் பேசுகிறது இங்கே காலத்தை நிர்வாகம் செய்தவறுக்கும்,காரணங்கள் கூறி செய்ய இயலாமல் சுற்றி திரிந்தவருக்கும் ஒரே ஒரு வித்தியசத்தை இந்த பிரபஞ்சம் அளித்த காலம் விட்டுச்செல்கிறது?? என்ன அது மீண்டும் புதிர் போடும்,நிமிர்ந்து முகத்தை பார்க்கிற அவனுக்கோ குழப்பம்,தேவையை அறிந்தவர் அல்லவா தந்தை இலக்கு எனும் இடத்தை அடைவதற்கான தூரத்தை நிர்ணயிக்கிறது,

இங்கே காலம் கானல் பூமியில் மட்டுமே 24 மணித்துளி ஒருநாள், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிவுசெய்யப்பட்ட கணக்கு, அதுவும் மனிதனால் முடிவுசெய்யப்பட்ட ஒன்றே முன்னாட்களில் நம் முன்னோர்  13  மாதங்களை ஓர் ஆண்டாக கூடகருத்தியிருக்கிறார்கள்,என்னால் பலநேரங்களில் காலம் வேகமாய் கடந்து சென்றதாய் உணர்ந்திருக்கிறேன் சில இடங்களில் அவை நத்தையாகவும் இருந்திருக்கின்றன, நிகழ்காலத்தில் மெதுவாய் சென்றதாய் உணர்ந்து விட்டு, பின்னாளில் அக்காலகட்டத்தையே வேகமாய் சென்றதாய் எண்ணி அதன்மேல் என் செயல்கள் முடிக்கப்படாமல் இருந்ததற்கு குறை கூறியிருக்கேன், என்னப்பா  கதை சொல்றிங்கனு சொன்னிங்க பத்து வரி சொல்லிட்டு வாழ்வியலுக்குள்ளயும் வரலாற்றுக்கும் ஓடிட்டிங்க!! என்ன கொடும சரவணன் என அவர் பெயரை அழைக்க படவா ராஸ்கல் என்று எழுந்திருக்கும் போதே ஓடிவிட்டேன் காத தூரம்,

நெறி:

கால நிர்ணயம் யார் வேண்டுமானால், எப்படி வேண்டுமானாலும்  செய்து கொள்ளட்டும் இன்று அகவையாகி  எப்போது என முடிவு தெரியா வாழ்நாளை  வாழ்ந்துவிட்டு அந்தமாகி செல்லும்  அந்த  கால இடைவெளியை மகிழ்வுடன் வாழ்ந்திருக்க நிர்வாகம் செய்ய முற்படுகிறேன் வாருங்கள், 24 மணிநேரத்தை ஒன்றாக இணைந்து 24 லச்சமாக கூட மாற்றிவிடலாம்,?? ( உங்கள் 24 மணி என்  24 மணியுடன் கூட்டல் செய்து வரும் கணக்கு), நான் இருக்கிறேன் உனக்கு

மகிழ்ந்திருங்கள்,இணைந்திருங்கள்,

-திவாகர் பாலசுப்ரமணியன்

உதவிமகிழ்

பூவுலகில் ஓர் மாவட்டம் கரூர்

 

 

33. காலம்

அவள் நன்றாக தூங்கி நான்கு நாட்கள் ஆகிவிட்டது .

கண்களின் எரிச்சல் தாங்க முடியவில்லை.வீட்டிற்கு சென்று தூங்கினால் தான் நன்றாக தூங்க முடியும் என்று நினைத்தாள்.

நான் வீட்டுக்கு போய்ட்டு குளிச்சிட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு வரேன் மா'

'ஏன்மா இங்கேயே குளிக்கலாமே'

'இல்லமா இங்க சரியா வராது' மருத்துவமனை குளியல் அறையை நினைத்தாலே குமட்டி கொண்டு வந்தது அவளுக்கு

'சரி போய்ட்டு சீக்கிரம் வா' என்றாள் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் நந்தினியின் அம்மா சொன்னாள்

அவள்  தயாராகி கிளம்பு முன் மறுபடியும் அவளின் அம்மா ' நீ கண்டிப்பாக  போகவேண்டுமா.என்னமோ நீ வருவதற்குள் என் காலம் முடிந்து விடும் னு தோணுது' என்றாள்

'எத்தனை தடவ சொல்றது இப்படி பேசாதீங்கனு'  கொஞ்சம் கோவத்துடன் சொன்னாள் அவள்.

அவள் அம்மா அப்படித்தான் வேதனை பொறுக்க முடியாமல் அடிக்கடி ‘நான் சீக்கிரம் போய் விடுவேன்' என்பாள்.. ஆஸ்துமாவால் 20 வருடங்கள் அவதிப் பட்டு கொண்டிருந்தாள்பின்புறம் இடுப்பு பகுதியில் தீடீரென நீர் கசியத் தொடங்கியது

என்ன ஏது என்று புரியாமல் அரசாங்க மருத்துவ மனையில் வந்து சேர்த்து நான்கு

நாட்கள் ஆகி விட்டதுமூத்த பெண் நந்தினி தான் நான்கு நாட்கள் கூட இருந்தாள்..

கல்லூரிக்கு விடுப்பு  சொல்லி விட்டு அவள் தங்கை இன்று தான் வந்தாள். அவளிடம் அம்மாவை பார்த்து கொள்ள சொல்லி விட்டு நந்தினி வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு நினைத்து இருந்தாள்

நந்தினியை கொஞ்சம் அதிகமாகத்தான் அவள் அம்மாவுக்கு பிடிக்கும் அதற்காகத்தான் அவளை இருக்க சொன்னாள்அவளை தோழியாக தான் அவள் நினைத்தாள்..

அம்மா நான் போயிட்டு வரேன்கவிதா இருக்கமா உங்கள் நல்லா பார்த்துப்பா நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்' என்றாள் நந்தினி..

இல்லடி எனக்கு என்னவோ தோணுதுநான் போயிடுவேன்னு தோணுது'

அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. இப்படி பேசாதீங்க ப்ளீஸ்'

நான் போயிட்டு வரேன்' என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பி விட்டாள்.

அவளின் வீட்டுக்குச் செல்வதற்கு அரை மணி நேரம் ஆகும்.. பேருந்தில் தான் செல்ல வேண்டும்பேருந்தில் ஏறி உட்கார்ந்து அவளின் அம்மாவை பற்றி நினைத்துக்கொண்டே சென்றாள்.. உலகத்தில் இவ்வளவு அன்பாக யாராவது இருப்பார்களா?... அவள் பேரன்பு உடையவள்அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் கவலைகள் மறந்து விடும். அவளின் குணத்தை நினைத்து நந்தினி பலமுறை மிக ஆச்சரியப் பட்டிருக்கிறாள்

அனைவரையும் சமமாக பார்க்கும் அந்த நல்ல உள்ளம் யாருக்கும் வராது.

குழந்தை மனம் அவளுக்குஅதட்டிப் பேசத் தெரியாது.. எத்தனையோ விஷயங்களில் அவளின் நல்ல குணத்தை நந்தினி பார்த்திருக்கிறாள்

நினைவுகளை அசை போட்டுக் கொண்டே வீடு போய் சேர்ந்தாள் நந்தினி சிறிது நேரம் படுக்கலாம் என்று நினைத்து படுத்தாள்..

5 நிமிடத்திற்கு மேல் படுக்க முடியவில்லைஏனோ அவள் அம்மாவின் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் நினைவில் வந்துகொண்டே இருந்தது..

குளிக்கவும் இல்லை சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் இல்லை கிளம்பிவிட்டாள் மருத்துவமனைக்கு.

மருத்துவமனையின் வாசலில் வந்து கொண்டிருக்கும்போது அவளுடைய அப்பா எல்லாம் முடிந்துவிட்டது என்பது போல் கையை அசைத்து கொண்டே வந்து கொண்டிருந்தார்தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..

அப்பா என்ன ஆச்சு'

போய்ட்டா மா அவ போய்ட்டா நம்ம எல்லாரையும் விட்டுட்டு'

'அம்மா' என்று அவள் கத்திய சத்தத்தில் அங்கு இருந்த அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள்நான்கு நாட்கள் அவள் கூடவே இருந்து அவளை கவனித்துக் கொண்டவள் இன்று ஒரு நாள் அவளுடன் இருந்திருக்கக் கூடாதா. அழுது அழுது தீரவில்லை நந்தினியின் துக்கம். காலத்தின் கணக்கை யாரறிவார்..

# காலத்தின் கணக்கு எளிதில் புரிவதில்லை.

-சுகமதி

 

34. K2K 00080

காலம்

காலமும் காலனும் யாருக்காகவும் இரக்கப்பட்டுவதில்லை‌.காலச் சக்கரம் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது.

காலை 8 மணி

" என்னங்க குளிச்சாச்சா? ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் ரெடியா இருக்கு.சீக்கிரம் சாப்பிட வாங்க.ஆஃபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குன்னீங்களே!".

" இதோ வந்துட்டேன்மா",

என்று வந்து அவசர அவசரமாகக் காலை உணவை முடித்து விட்டுக்

கிளம்பினான் அநிரன்.அன்பு மனைவி மாளவிகாவின் இதழில் அழுத்தமாக முத்தத்தைப் பதித்து விட்டு அந்த  இனிமையுடன் கிளம்பினான்.ஆறு மாத கர்ப்பிணியான அவளின் மேடிட்டிருந்த வயிற்றில் அடுத்த முத்தத்தைப் பதித்து

விட்டு வேகமாகக் கிளம்பினான்.

பகல் 11 மணி

ஸெல்ஃபோன் விடாமல் அடிக்க வேலைகளை முடித்து விட்டு அப்போது தான் உட்கார்ந்த மாளவிகா 

ஃபோனை எடுத்தாள்.

" ஹலோ மிஸஸ்.மாளவிகா தானே பேசறது? உங்கள் கணவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஜி.ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கிறார்.சீக்கிரமாகக் கிளம்பி வாங்க",

என்று மற்ற விவரங்கள் எதுவுமே சொல்லாமல் ஃபோனை வைத்து விட்டார் அந்த முகம் தெரியாத மனிதர்.

காதல் திருமணம் என்பதால். இரண்டு பக்கப் பெற்றோரும் இன்னமும் முறைப்பிலேயே இருக்கிறார்கள்.உதவிக்காக ஆஃபிஸ் நண்பருக்கு ஃபோன் செய்து விட்டுக் கையில் கொஞ்சம் பணத்துடன் கிளம்பினாள் மாளவிகா.

பகல் 3 மணி

ஜி.ஹெச்.சில் தலைமை மருத்துவரின் அறை.மாளவிகா கவலையுடன் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.ஆஃபிஸ் நண்பர் மாளவிகாவின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

" மேடம்.வெரி ஸாரி.உங்களுடைய கணவருக்குத் தலையில் பலத்த அடி.அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தோம்.ஒன்றும் பலனளிக்கவில்லை.இப்போது அவருக்கு மூளைச்சாவு ஆகி விட்டது.இப்போது நீங்கள் ஒரு முக்கியமான முடிவைத் துணிச்சலாக எடுக்க வேண்டும்.நீங்கள் ஓகே சொன்னால் உங்களுடைய கணவரின் ஆர்கன்களை தானம் செய்யலாம்.ஆர்கன்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஐந்து நோயாளிகள் பயனடைவார்கள்.நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுங்கள்",

தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த மாளவிகா  நிமிர்ந்து பார்த்தார்.

" இதில் யோசிக்க டயம் தேவையில்லை டாக்டர்.நான் முழு சம்மதம் தருகிறேன்.

எந்த பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லுங்கள்",

கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசிய மாளவிகாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அந்த டாக்டர்.

இரவு 8 மணி

கணவனின் உடலோடு வீட்டுக்கு வந்தாள் மாளவிகா.அடுத்த நாள் காலையில் அநிரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அலுவலக நண்பர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

அவளைப் பார்க்கப் புதிதாக ஐந்து பேர் வந்து கைகளைக் கூப்பிக் கண்ணீருடன் நன்றி கூறினார்கள்.அவர்களுடைய குழந்தைகளுக்குத் தான் அநிரனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப் பட்டிருந்தன.

" அம்மா நீ தான் எங்களுக்கு இனி தெய்வம்.எங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறாய்.

உனக்கு எவ்வளவு பண உதவி வேணுமோ தயங்காமல் கேளும்மா",

என்ற அவர்களைக் கை கூப்பித் தடுத்து நிறுத்தினாள் மாளவிகா..

" பணத்தாசை காண்பித்து என் கணவரின் உடல் உறுப்புகளை விற்ற

பாவத்தை என் மேல் போட வேண்டாம். முடிந்தால் நீங்கள் யாராவது எனது தகுதிக்கேற்ற வேலை வாங்கித் தர முடியுமா? எனது குழந்தைக்காக நான் உயிர் வாழ வேண்டும்",

என்று சொன்ன அந்த வீரப் பெண்ணை பிரமிப்புடன் பார்த்தார்கள்.

" கண்டிப்பாக ஏற்பாடு செய்கிறோம்மா",

என்று சொல்லி நகர்ந்தார்கள்.

காலத்தை வென்ற அந்தப் பெண்

மனித நேயத்தில் உயர்ந்து நின்றாள்.

கருத்து

காலத்தின் கடும் சோதனைகளை மனத் துணிவுடன் எதிர்கொண்டு வெல்லலாம்.

-புவனா

 

 

 

Comments

Popular posts from this blog

Own stories

சுய விருப்ப கதைகள்

நகைச்சுவை