பள்ளிக்கூடம்

1.K2K-0002

பள்ளிக்கூடம் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது நானும் ஒரு 90 's  கிட்ஸ் தான் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் மரத்தடியில் அமர்ந்து மணலோடு விளையாடுனது ஆசிரியர் பாடம் நடந்துரப்போ பக்கத்தில் நம்பனிடம்/தோழியிடம் பேசி அவர்களையும் சேர்த்து திட்டுவாங்க வைத்து சிரிக்கிறது.எப்போடா இந்த வகுப்பு முடியும் நமக்கு பிடிச்ச ஜாலியான ஆசிரியர் எப்போ வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறது.பள்ளி முடிந்ததும்  வீட்டுக்கு போகிற வழியில் ஜவ்வு மிட்டாய், கமர்கட், கயிறுமிட்டாய், பெப்சி ஐஸ், குச்சி ஐஸ் என ஒவ்வொருநாளும் தின்பண்டம் வாங்கி நட்போடு சேர்ந்து ருசிக்கையில் பள்ளி கூட வாழ்க்கை தனி சுகமே..!!!

கற்பனையும் உண்மையும் கலந்தக் கதை:

திருப்பைஞ்சீலி என்ற கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருத்தி இருந்தால் அவள் பெயர் துர்கா அவள் அப்பாவுக்கு சென்னையில் இடமாற்றம் வந்த காரணத்தால் அவள் அப்பா சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டார்   அவர் ஒரு பிரைவேட் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். அவளுக்கு அன்று தான் முதல் நாள் அவள் பள்ளிக்கூடத்தை பார்த்ததும் தயங்கினாள் ஏனென்றால் அவள் படிக்கப் போற பள்ளி பெரிய கட்டிடம் அவள் இதுவரையும் பார்த்தது இல்லை என்பதால் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள். அவள் தயங்கினாள், ஏன்னென்றால் அவள் இதுவரையும் படித்த பள்ளிக் கூடத்தில் வெறும் பெண்கள் மட்டுமே இங்கே ஆண்/ பெண் என சமமாக பேசி வருவதை   பார்க்கிறாள். அவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது அப்போது அவள் வகுப்பு ஆசிரியர் அவளை அன்பாகச் கூப்பிட்டு விசாரித்தார். அவளுக்கு அது ஒரு தைரியமாக இருந்தது, அவள் வகுப்புக்கு வந்ததும் அவளை எல்லாரும் ஒரு மாதிரியாக பார்த்த மாதிரியே இவளுக்கு தோன்றியது. ஆசிரியர் அவளை அமரச் சொன்னார், அவளுக்கு கடைசி பெஞ்ச்சில் தான் இடம் கிடைத்தது. கடைசி பெஞ்ச்னாலே தனி ராஜ்ஜியம் தான் நம்மளுக்கு. ஆனால் அவளுக்கு அது இன்னும் பயத்தை அதிகரிக்கச் செய்தது அவள் பக்கத்தில் ஒரு மாற்று திறனாளி அமர்ந்திருந்தாள். அவளுக்கு இன்னும் பயம் அதிகரித்தது. ஏனென்றால் அவள் இது வரையும் அப்படிப்பட்டவர்களை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும்  இல்லை, அவள் உள்ளுக்குள் அவளைப் பரிதாபமாக பார்த்தால் ஆனால் இவள் கூட எப்படி நட்பு வைத்து கொள்வது நல்ல படிப்பாளா என்று கூட தெரியவில்லையே என யோசித்துக் கொண்டு இருக்கையிலே தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் வந்தனர் எல்லாரும் எழுந்து மரியாதை செலுத்த தலைமை ஆசிரியர் எல்லோரையும் அமர சொல்லிவிட்டு "எழிலரசி நம்மளுடைய பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளாள்  அவள் தான் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் பேச்சு போட்டியில் முதல் பரிசு வென்று இருக்கிறாள். திறமைக்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல அதையும் தாண்டி என்னாலையும் சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்து காண்பித்துவிட்டாள் " என்று சொல்லி தலைமை ஆசிரியர் எழிலரசியை கட்டியணைத்து முத்தமிட்டார். மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் திளைக்க துர்காவின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது. எழிலரசி "நான் மட்டும் காரணமில்லை என்னை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவர்கள் கொடுத்த தைரியத்தினால் தான் சவாலை எதிர்கொண்டேன் மேடம்களுக்கு நன்றி என முடித்தாள்". துர்கா தான் நினைத்தது தவறு என உணர்ந்து எழிலரசியிடம் நட்பினை பெற்று இருவரும் சேர்ந்தே சாதித்து வருகின்றனர் மற்றவர்களையும் சாதிக்க தூண்டிவிடுகின்றனர்.

நெறி: ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் திறமை புதையல்களாக பொக்கிஷங்களாக மறைந்து இருக்கும் ஊக்குவியுங்கள் இவர்களெல்லாம் சாதிக்க பிறந்தவர்கள் குறையை குறையாக பார்க்காமல் பல துயரங்களையும் எதிர்க்கொண்டு போராடி சாதனை படைத்தது வருகின்றனர். சாதனை படைத்த மற்றும் படைக்க போகும் நபருக்கும் கொரோனா கதைகள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

லக்ஷ்மி பிரியா

 

 

2.K2K00003

 பள்ளிக்கூடம்

பல நினைவுகள் ஒன்றாக இணைந்திருப்பது பள்ளி வாழ்க்கை. ரோபின் தனது பள்ளி வாழ்க்கையில் பல உணர்வுகளைக் கொண்டிருக்கிறார். பள்ளி வழக்கத்தை அவர் சில சுவாரஸ்யமான உண்மைகளுக்காக காத்திருக்கிறார். அதேபோல் அவரது பள்ளிக்கூடம் ஒரு வாரத்திற்கு ஒரு சாகச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தது. அவரும் அவரது நண்பர்களும் இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தனர். அவர் தனது அன்புக்குரியவருடன் பயணம் செய்வதில் மகிழ்ச்சி அடைந்தார் .நான் ராபின் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தார்.அவளும் இந்த வகை பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறாள்.அவர்கள் கொல்லிமலை அடைந்தபோது, ​​அது மிகவும் பயங்கரமாக இருக்கிறது.ஒரு வீடு மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் அது ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. ஒரு வயதானவர் அந்த வீட்டைப் பற்றி அவர்களிடம் சொன்னார், ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் அந்த வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்கள். திடீரென்று ஒரு பயங்கரமான ஒலி வந்தது, அனைவரும் பயந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டபோது; ரோபின் சிரித்தார் அதைப் பார்த்ததும், ரோபின் அவர்களைத் தூங்கச் செல்லச் சொன்னார்; ரோபின் மற்றும் நேஹா மட்டும் நடைப்பயணத்திற்கு வெளியே சென்றனர். அவர்கள் அந்த வீட்டின் அருகே ஒரு பேய் சிலையை பார்த்தார்கள். நேஹா பயந்துபோய் ராபினை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொல்லுங்கள். பாபி பீதியடைய வேண்டாம், என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள், அவர்கள் சிறிது தூரம் நடந்து வீட்டிற்குச் செல்லும் வழியை மறந்துவிட்டார்கள். அவர்கள் இருவருக்கும் பசி ஏற்பட்டது, அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, திடீரென்று ஒரு அழகான மயக்கும் இசை அந்த இடத்தில் கேட்டது. அவர்கள் இருவரும் தூக்கத்தை உணர்கிறார்கள். ஆனால் அந்த இசை அவர்களின் காதுகளில் விழுகிறது தேன் போல. அவர்கள் நீண்ட தூரம் நடந்து ஒரு வீட்டைக் கண்டுபிடித்தார்கள் இது சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட்டுகளால் ஆனது. அவர்கள் வீட்டிற்கு வேகமாக ஓடி, சில பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகளை எடுத்து வேகமாக சாப்பிடுகிறார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அவர்களுடன் சில பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகளை எடுத்துச் செல்ல திட்டமிட்டனர்.ஆனால், அந்த இடத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பயங்கர உருவத்துடன் ஒரு சத்தம் அவர்களுக்கு அருகில் வந்தது அவர்கள் பயந்து வேகமாக காட்டுக்கு ஓடி அவர்கள் தங்கியிருந்த வீட்டைத் தேடினர். அவர்கள் குழப்பமடைந்து சிறிது நேரம் அமர்ந்தனர், அவர்கள் இருவரும் சோர்வடைந்தனர். இறுதியாக அவர்கள் அந்த வீட்டைக் கண்டுபிடிக்க ஒரு துப்பு கிடைத்தது; அவர்கள் ஒரு மந்திர மரத்தைக் கண்டுபிடிப்பார்கள். அந்த மரம் அவர்களிடம் பேசுகிறது. அவர்கள் அந்த வீட்டிற்கான வழியைக் கேட்டார்கள், அந்த மரம் அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டது, கடைசியில் அவர்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள். அந்த மரம் மகிழ்ச்சியடைந்து, மரத்தின் முதல் கிளையில் ஏறச் சொன்னது. இறுதியாக அவர்கள் வீட்டை அடைந்தார்கள் அந்த மரத்தின் உதவியால். இந்த சாகச பயணத்துடன் அந்த சுற்றுப்பயணம் முடிந்தது.

name: sindhuja.M

 

 

3.K2K-00004

பள்ளிக்கூடம்:

நகரத்தின் மத்தியில் உள்ள 15 தளங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தின் கமல் தன் மனைவி ப்ரீத்தி மற்றும் மகன் ஆதவனுடன் வசித்து வந்தான். அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு துறையில் பணிபுரிந்து வந்தான்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் சுமார் ஒரு பத்து மணி இருக்கும் அப்போது தான் பொழுது விடிந்தது போன்ற நினைவுடன் எழுந்தான் கமல். தன்னுடைய காலை பணிகளை முடித்துவிட்டு காலை உணவு சாப்பிட அமர்ந்தான் அவன் அருகில் ஆதவனும் அமர்ந்திருந்தான் சாப்பிட்டவாறே கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தான் அவன், அதை கவனித்தவாறு கமலும் சாப்பிட்டான். எதிர்பாராத விதமாக அவன் தங்கியிருந்த குடியிருப்பின் மின் இணைப்பு பழுதாகியது, ஜெனரேட்டரும் ஒரு வாரமாக பழுதாகி இருந்ததால் அந்த குடியிருப்பில் மின்சாரம் இல்லாமல் போனது. கைப்பேசியில் மின் ஏற்றம் செய்யாததால் ஆதவனின் கைப்பேசியும் அமைந்து போனது. நான்காம் வகுப்பு படித்து வரும் ஆதவனோ தன்னுடைய விடுமுறை தினத்திலா இப்படி நடக்க வேண்டும் என்று சளித்து கொண்டான். பின்பு அவன் நேரத்தை எவ்வாறு கடத்துவது என்று மிகவும் கவலையில் ஆழ்ந்தான். வேறு வழியில்லாமல் அவன் கமலிடன் வந்து அப்பா நேரம் போக மாட்டிங்கிது ஏதாவது கதை சொல்லுங்க என்று சொன்னான். கமல் அதுக்கு நான் என்ன கதை சொல்ல, அதெல்லாம் எனக்கு தெரியாது. வேணும்னா என் பள்ளி நாட்களை பற்றி சொல்றேன் என்று சொன்னான்.

ஆதவனோ பள்ளி நாட்களா அதில் என்னப்பா இருக்கும் வாகனம் வரும் பள்ளி போவோம் பாடம் பயில்வோம் வீடு திரும்புவோம் அது தானே என்றவாறு அழுத்துக் கொண்டான். கமல் அதற்கு டேய் நான் என்ன உன்னமாதிரி 2K கிட்ஸ்னு நெனச்சியா நான் 90s கிட்ஸ்டா எங்கள் காலத்தில் இருந்த பள்ளிக்கூடமே வேற மாதிரி என்று உற்சாகம் பொங்க கூறினான். ஒரு நொடி அவனின் ஆனந்த நாட்கள் நினைவுகளில் வந்து வண்ணம் செய்து சென்றது. தனது வாழ்நாளின் என்றும் பசுமையான நினைவுகளில் பயணமாக ஆயுதாமானான். நான் படித்தது ஒரு நகராட்சி அரசு பள்ளியில் ஒரு தளம் மட்டுமே கொண்ட பள்ளி அது, பரந்து விரிந்த மைதானத்தின் பின்பகுதியில் அமைந்தது எங்கள் பள்ளி. என் வீட்டிலிருந்து 2கி.மி தொலைவு உள்ள பள்ளிக்கு தினமும் நண்பர்களுடன் மிதிவண்டியில் செல்வோம் அந்த தொலைவு எப்படி நகரும் என்று தெரியாதபடி பேச்சுகளாலும், மகிழ்ச்சியிலும் வேகமாக செல்லும் பயணம் அது.

வகுப்பறைக்கு வந்தவுடன் பள்ளி தொடங்கும் முன் அனைவரும் கூடி நேற்று பார்த்த படங்களை பற்றி சுவாரசியமான பேச்சுகளால் நிறைந்திருக்கும் நிமிடங்கள், ஆசிரியர் உள் நுழைந்தது கூட தெரியாத வண்ணம் நிகழும் உரையாடல்கள். ஆசிரியர் பாடம் நடத்தும் போது அவருக்கு தெரியாமல் சிலர் எடுத்து வந்த மதிய உணவை ருசிப்போம். வகுப்புக்கு இடையே ஆசிரியர் வகுப்பை விட்டு செல்ல நேர்ந்தால் வகுப்பின் முதலாவது மாணவனை காவலுக்கு நிருத்தி பேசுபவர்களின் பெயரை வகுப்பின் பலகையில் எழுத சொல்வார். அவனும் நாங்கள் பேசினால் பெயர் எழுதி அதிகம் பேசியவர்கள், மிக அதிகம் பேசியவர்கள் என்று எழுதி வைப்பான். ஆசிரியர் திரும்பியதும் அதை பார்த்துவிட்டு அவர்களை அடிப்பார்கள். மின்சாரம் இல்லாத நேரங்களில் வகுப்பு அறைகள் மரத்தடி நோக்கி சென்றுவிடும். பின்பு மதிய உணவு எல்லோரும் வரிசையில் நின்று வாங்கி ஒன்றாக பகிரிந்து மரத்தின் நிழலில் அமர்ந்து சாப்பிடுவோம்.

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதமாக அடிப்பார்கள், சிலர் மிகவும் சகஜமாக பழகுவார்கள், சிலரிடம் கண்டிப்பு கொஞ்சம்அதிகம் இருக்கும், சிலரின் வீடு வரை சென்று குடும்பத்தில் ஒருவராக மாறும் நிகழ்வும் நடக்கும். நண்பர்களுடன் சண்டை, வகுப்பின் இடையே நடக்கும் விளையாட்டு. பாலிய காதல் அதற்கு நண்பர்களின் உதவி என்று அழகாக இருக்கும் அந்த நாட்கள். மழை காலங்களில் காலையில் தொலைக்காட்சி, வானொலியில் விடுமுறைக்காக காத்திருப்பது, நமது மாவட்டம் இன்னும் அறிவிக்க படவில்லையே என்று ஆவலுடன் நகரும் நிமிடங்கள். ஆண்டுவிழாவிற்கான ஏற்பாடுகள், நடத்தப்படும் போட்டிகள், விளையாட்டுகள், அதற்கு வழங்கபடும் சிறு சிறு பரிசுகள் அதை மேடை ஏறிச் சென்று பெருவது போன்ற அனுபவங்கள். தேர்வுகள் எழுதும் நிமிடங்கள், தேர்வு தாள்களை இனைக்க கட்டப்படும் நூல்களில் முடிச்சு போடும் போது திருமணத்தின் முடிச்சை நினைவு கூர்ந்தவாறு செய்யும் விளையாட்டு. அருகில் இருப்பவருக்கு நமக்கு தெரிந்த விடைகளை சைகையில் தெரிவிப்பது போன்ற சுவாரசியமான நேரங்கள். தேர்வு விடுமுறையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று அங்கு விடுமுறையை கழிப்போம். கைப்பேசி இல்லாமல் அப்போதைய நிமிடங்களை நினைவுகளாக மாற்றி மகிழ்வோம். எண்ணில் அடங்காத விளையாட்டுடன் வீதிகளில் பொழுதை கழித்து மகிழ்ந்தோம் என்று கூறி முடித்தான் கமல்.

இதை வியப்புடனும், ஆச்சர்யத்துடனும் கேட்டு கொண்டிருந்த ஆதவன் நம்ப முடியாமல் கேட்டான் பள்ளிக்கூடம் என்பது இப்படி எல்லாம் இருக்குமா என்று கூறியவாறு வியப்புற்றான். இன்னும் நிறைய இருக்குடா அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன் என்று சொன்னான் மீண்டும் அந்த வசந்த நாட்களை நினைத்தவாறு. அதற்குள் ப்ரீத்தி மதிய உணவை தயார் செய்துவிட்டு வந்து கூறினாள் அப்பாவும், பையனும் பேச ஆரம்பிச்சா நேரம் போறது தெரியாதே உங்களுக்கு வாங்க சாப்பிடலாம் என்று.

"பள்ளிக்கூடம் என்பது பாலிய காலத்து பசுமை நினைவுகள் மட்டும் அல்ல அது வாழ்வின் ஒருவரை வரைமுறைபடுத்தும், நல்வழிபடுத்தும் நல்ல மனிதானாக மாற்றும் இடம்". பள்ளிக்கூடம் என்பது கல்வி பயிலும் இடம் மட்டும் அல்ல அது வாழ்வியலையும், பண்பாட்டையும் பயிலும் இடம். "நமது பசுமை மாறாத பள்ளிக்கூட நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி பசுமையான நினைவுகளுடன், பண்பாட்டையும் விதைப்போம்".

பரிணாமம் இல்லாத பசுமை பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு சமர்ப்பணம்.

 

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

4.K2K - 00008

 சைக்கிளோகிராஃப் / பள்ளிக்கூடம்

காலை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. காலில் செருப்பில்லாமல் செழியன் அந்த நட்ட நடுமைதானத்தில், சொட்டும் வியர்வையோடு நடந்துக் கொண்டிருக்கிறான். வெயிலானாலும் மழையானாலும், அவன் கால்களுக்கு அந்த மைதானம் பஞ்சு மெத்தைதான்.

ஓராண்டு ஈராண்டா, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் அந்த மைதானம் தான் அவனுக்கு சொர்க்கலோகம். அவன் நண்பர்களே தேவர்கள் அவனுக்கு. அவனே இந்திரன். தேவர்களில் எமதர்மனும் ஒருவன் தானே. எமனாய்இருந்தவன்தான் தீனா.

இன்றும் அந்த பள்ளிக்கூடத்தில் தீனா, செழியன் என்றாலே அனைவரும் அறிந்த ஒன்று, அந்த பள்ளிஇறுதியாண்டின் பேட்மிண்டன் போட்டி.  தீனா, செழியன் இருவருமே ஒரே அணியில் நின்று எதிரணியைசொற்ப எண்களில் தோற்கடித்ததை யாராலும் மறக்க முடியாது. கூடவே, இருவருக்கும் கடைசி நாளன்றுநடந்த சண்டையில் மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைத்ததை யாரும்மறந்திருக்கவும் முடியாது.

அதே இடத்தில் தான் தற்போது செழியன் நின்றுக் கொண்டிருக்கிறான் 15 ஆண்டுகள் கழித்து. எத்தனைவிளையாட்டுக்கள், எத்தனை இன்பங்கள், எத்தனை துன்பங்கள் அந்த பதினைந்து வருடங்களில் என்று அந்தபள்ளிக்கூடத்தின் நினைவுகளில் மூழ்கி, கொடும் வெயிலில் நின்று கொண்டிருந்தான் செழியன்.

அப்பாஎன்ற குரலைக் கேட்டு திரும்பிய செழியன் தன் ஐந்து வயது மகன் நிதின் தன்னை நோக்கிமைதானத்துக்குள் ஓடி வருவதை கண்கொட்டாமல் பார்த்து நின்றான். தன் நினைவுகளில் மூழ்கியும் போனான்.

டேய் செழியா, வேகமா வாடாஎன்று இன்பா, வேகமாக மைதானத்துக்குள் ஓடி வரும் செழியனை பார்த்துகுரல் கொடுத்தான்.

வரண்டா மச்சி... என்ன இளவு வெயில்டா இது, இந்த கொளுத்து கொளுத்துதுஎன்றபடியே இன்பாவிடம்வந்து சேர்ந்தான்.

என்னடா, இவ்வளவு அவசரமா கூப்பிட்ட

மச்சி, இளவரசி க்ளாஸ்ரூம் வெளியில உக்காந்துருக்காடா

இளவரசி என்ற பெயரை கேட்டதும் செழியனுக்கு முகத்தில் வெட்கம் குடிக்கொண்டது. இளவரசி அந்தபள்ளிக்கூடத்திலேயே பேரழகி என்று கூறிவிட முடியாது. கருத்த மாநிறம். நீண்ட கூந்தல். வட்டமான முகம். ஐந்தடி உயரம். மிகவும் ஒல்லியாகவும் இல்லாமல், குண்டாகவும் இல்லாமலான உடல்வாகு. அவளுடைய முன்இரண்டு பற்களும் சற்று எடுப்பாக இருப்பதே ஓர் அழகு தான். சிகப்பு நிற பாவாடை தாவணியில் வெள்ளைரவிக்கை அணிந்து இருப்பாள் பள்ளி நாட்களில். காண்போரை அவளின் அழகும் சிரிப்பும் மனமுருகச் செய்யும்.

மச்சி, எனக்கு கூச்சமா இருக்குடா. இதுக்காடா கூப்பிட்ட. போடாங்கு...”

டேய் டேய் ரொம்பத்தான் சீன் போடாத போ... போய் ஒளிஞ்சு நின்னு பாரு... இதுக்கே இவ்வளவு கூச்சம்னா, இன்னும் பக்கத்தில போயி நின்னா என்ன பண்ணுவன்னு தெரியலையே

மச்சி, நீ தான் அவக்கூட பேசுறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிதரணும் டா... ப்ளீஸ்

எதுக்கு? போன தடவ சொதப்பி, என்ன அசிங்கப்பட வச்சியே அந்த மாதிரியா... போடா... போய் வேலையைப்பாரு

நண்பனுக்காக இதுக்கூட பண்ணமாட்டியாடா

நீ என் நண்பனே இல்ல, ஓடிடு

ட்ரிங் ட்ட்ட்ரிரிரிரிங்ங்ங்மணி அடித்த சத்தம் கேட்டதும் இருவரும் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

வகுப்பாசிரியர் வந்து அட்டென்டன்ஸ் எடுத்து முடித்து பாடத்தை தொடங்கினார். இன்பாவும் செழியனும்மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தனர். அப்போது செழியன் இன்பாவிடம் யாருக்கும் கேட்காத குரலில் மச்சி, ஃபிளேம்ஸ் (flames) போட்டு பார்க்கலாமாடா, எனக்கும் இளவரசிக்கும்என்று கேட்டான்.

டேய் பாடத்த கவனிடா... வாத்தியாரு பார்த்துட போறாரு

அவர் பார்த்தா பார்த்துகட்டும். போடுடா... ஒரே தடவைடா

உன் தொல்லை தாங்கலடா டேய்... இரு வரேன்

ஃப்ளேம்ஸ் போடப்பட்டது. இரு பெயர்களில் உள்ள ஒரே மாதிரியான எழுத்துக்களை நீக்கிவிட்டு மீதமுள்ளஎழுத்துக்களின் எண்ணிக்கை பதினொன்று என்றிருந்தது. முதலில்” (E) (E என்பது எனிமி அதாவதுஎதிரியைக் குறிக்கும்) என்ற எழுத்து அடிக்கப்பட்டது. செழியனின் முகத்தில் சிரிப்பு ரேகை படர்ந்தது. “சூப்பருஎன்று கத்த வாயெடுத்தவனை இன்பா தடுத்து நிறுத்தவில்லையெனில் அன்று இருவருக்கும் பால்காய்ச்சியிருப்பார் அந்த வாத்தியார். எல்லா எழுத்துக்களையும் அடித்து மீதமிருந்த இரு எழுத்துக்கள்எல்மற்றும்எம்” (L & M). நகத்தைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் செழியன். கடைசியில் “L” அடிப்பட்டது. “M” மீதமிருந்தது. M என்ற எழுத்து மேரேஜைக் குறிக்கும். செழியனுக்கு வாயெல்லாம் பல்லாய் வாத்தியாருக்குபயந்து அமர்ந்திருந்தான். வகுப்பு முடிந்து வாத்தியார் வெளியில் சென்றவுடன்மச்சி..... சூப்பர்டா, உம்மாஎன்று இன்பாவின் கன்னத்தில் முத்தமழைப் பொழிய ஆரம்பித்துவிட்டான். “டேய் விடுறா பன்னாடைஎன்றுதிட்டிக்கொண்டே செழியனிடமிருந்து விலக முயற்சித்தும் பயனில்லை இன்பாவிற்கு.

அந்த எழுதப்பட்ட காகிதம் காற்றில் பறந்து எமலோகம் சென்றது. புரியவில்லையா??? அதுதான், தீனாவின்காலடியில் போய் விழுந்தது.

தீனா அந்த காகிதத்தை எடுத்து பார்த்தான். மனதுக்குள் கருவிக் கொண்டான்.

தீனாவும் செழியனும் அந்த பள்ளியிலுள்ள பேட்மிண்டன் வீரர்கள். காலைப் பயிற்சியின் போது இருவரும்பயங்கரமாக விளையாடுவார்கள். இவர்களின் பி.டி. வாத்தியார் தான் இவர்களின் ஆசான். தீனா நேரத்திற்குவந்துவிடுவான் பயிற்சிக்கு. செழியன் கொஞ்சம் சோம்பேறிதான். குறைந்தது பத்து நிமிடமாவதுதாமதமாகத்தான் வருவான். இருவருக்குள்ளும் பயங்கர போட்டியிருக்கும். ஆனாலும், இருவரும் இரட்டையர்பிரிவில் ஓரணியிலேயே தான் விளையாடுவார்கள்.

அப்போது அந்த பள்ளியில் பள்ளிகளுக்கான விளையாட்டுக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதில்தீனாவும், செழியனும், பங்கு கொள்ள தவறவில்லை. எதிரணியான தனியார் பள்ளியின் வீரர்களை திணரடித்தனர்இருவரும். எதரிணியினர் மிகக் குறைந்த புள்ளிகளையே பெற்றனர். நடைபெற்ற மூன்று சுற்று ஆட்டங்களிலுமேஇருவரும் வெறிக்கொண்டு ஆடி, பள்ளிக்கு பெருமை சேர்த்து வெற்றிக் கோப்பையுடன் மைதானத்தில் வலம்வந்தனர். அந்த ஆண்டின் மகத்தான வெற்றியாக இந்த இருவரின் ஆட்டம் பள்ளி முழுவதும் பேசப்பட்டது.

செழியனின் ஆடிக்காராக அந்நாளில் விளங்கிய அவனின் சைக்கிளில் தான், இன்பாவும் செழியனும் பள்ளிக்குவந்துச் செல்வார்கள். வார விடுமுறை நாட்களிலும் அந்த சைக்கிள் தான் அவர்களுக்கு ஊர் சுற்றும் வாகனம்.

இன்பா, இந்த இளவரசி வீடு எங்க இருக்குதுன்னு ஒரு தடவை பாத்துட்டு வந்துடனும்டா

எப்படிடா

இன்னைக்கு பள்ளிக்கூடம் முடிஞ்சவுடனே அவ பின்னாடியே போயி பாத்துட்டு வந்துடலாம்டா

எனக்கென்னவோ நீ செருப்படிதான் வாங்கப் போறேன்னு நினைக்கிறேன்.

"டேய், நீயே இப்படி சொன்னா எப்புடிடா. இன்னைக்கு சாயங்காலம் என் கூட வாடா ப்ளீஸ்", " சரி, சரி, வந்து தொலைக்கிறேன்"

இருவரும் பள்ளி முடிந்தவுடன் இளவரசி ஏறிப் போகும் பேருந்தை பின் தொடர்ந்து சென்றனர். அவர்களின்ஊரைத் தாண்டி இரண்டு பேருந்து நிறுத்தம் அதாவது ஐந்து கிலோமீட்டர் சைக்கிளை மெறித்து சென்றனர். அவள் பேருந்தை விட்டு இறங்கி அவளுடைய வீட்டுக்கு செல்லும் தெருவில் இறங்கி நடந்தாள். இருவரும் அந்ததெரு முனையிலே நின்று வேடிக்கை பார்ப்பதுபோல் எந்த வீட்டுக்குள் நுழைகிறாள் என்று பார்த்துகொண்டிருந்தனர். நடுவில் ஏதோ ஒரு வீட்டின் படியில் அவள் ஏறியதை பார்த்ததும் இருவரும்ஒருவரையொருவர் பார்த்து சிரித்து கொண்டே நகர்ந்தனர்.

மறுநாள், காலை பயிற்சியின்போது தீனா செழியனிடம் "நேத்து நீயும் இன்பாவும் எங்கடா அவ்ளோ வேகமா பஸ்பின்னாடி போய்கிட்டிருந்திங்க?" என்று கேட்டான்.

"ஒண்ணுமில்லை டா, சும்மா தான்" என்று நழுவினான் செழியன்.

தீனா செழியனை ஒரு மாதிரியாய் பார்த்தான். பிறகு பயிற்சியை தொடர்ந்தான். அவனுக்குள் இருந்த பகைமைஉணர்வு வலுத்து கொண்டேயிருந்தது.

அந்த ஆண்டின் அறையாண்டுத் தேர்வு நடைபெற்றது. அதில் கணக்கு பாடத்தில் நிறைய பேர் பெயிலாகிஇருப்பதாக வகுப்பில் அனைவரிடமும் கணக்கு த்தியார் சொல்லிவிட்டு, பேப்பர கொடுக்கும்போதுஎல்லாருக்கும் தங்க மாம்பழம் இருக்கு என்று சொல்லிவிட்டு சென்றார். இன்பா அந்த தேர்வில் சரியாகஎழுதவில்லை என்று செழியனிடம் சொல்லி கொண்டிருந்தான். "மச்சி, இந்த வாட்டி தங்க மாம்பழம் எனக்குதான் இருக்கும்போல. செத்தேண்டா நான்".

அதற்கு செழியன் "டேய் மச்சி, கவலையை விடுடா, நான் பாத்துக்குறேன்" என்றான்.

நீ, என்ன மச்சி பண்ண முடியும்"

"பண்றேன் டா. மத்தியானம் லஞ்ச் டைம்ல, கணக்கு வாத்தியார் டேபிள்ல இருக்குற அந்த பேப்பர எடுத்துட்டுபுதுசா ஒரு பேப்பர்ல எழுதி, அந்த பேப்பர கட்டுக்குள்ள வச்சிரலாம். சரியா"

"டேய், மாட்டிக்க போறம்டா. எனக்கு பயமா இருக்கு, வேணாம் மச்சி. அசிங்கமாயிடுச்சுன்னா நல்லாஇருக்காது. அதுக்கு தங்க மாம்பழமே மேல்டா. என்ன... கொஞ்ச நேரம் கீழ உக்கார முடியாது. பயங்கரமாவலிக்கும். ஆனா அசிங்க பட்டா எல்லாமே போச்சுடா", "யாமிருக்க பயமேன், செழியன் இருக்க பயமேன். வா முதல்ல எழுது".

"மச்சி, ரெட் பென் இருக்காடா. அப்படியே கரெக்ட்ஷன் பண்ணி வச்சிரலாம்டா"

"செழியா, மாட்டிக்க போறம்டா"

"அதெல்லாம் ஒன்னும் மாட்ட மாட்டோம். ஒழுங்கா சொல்றத செய்"

இருவரும் எழுதி திருத்திய பேப்பரை அந்த கட்டுக்குள் சொருகி விட்டு, பழைய பேப்பரை எடுத்து சுருட்டிகொண்டு வந்துவிட்டனர். கணக்கு வகுப்பில் வாத்தியார் ஒவ்வொருவராய் அழைத்து அவர்கள் எடுத்தமதிப்பெண்கள் அடிப்படையில் தங்க மாம்பழம் கொடுத்து கொண்டிருந்தார், "செழியன் 75 மதிப்பெண். என்னடா காப்பி அடிச்சியா. இவ்வளோ மார்க் வாங்கியிருக்க. போ போய் உக்காரு". சற்று நேரம் கழித்து"இன்பா, வாங்க சார்" என்று அழைத்த வாத்தியார் சிலையென நின்றார். இன்பாவிற்கு வயிறு குழைந்தது. "டேய், என்னடா மார்க் வாங்கியிருக்க, 60 மதிப்பெண்ணா, நம்பவே முடியலையே. சரி சரி நல்லா இருந்தா சரிதான், போய் உக்காரு". இன்பாவிற்கு அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சற்று நேரம் பிடித்தது.

"மச்சி, என்ன காப்பாத்திட்டடா. ரொம்ப தேங்க்ஸ் மச்சி, இன்னைக்கு நான் தாண்டா உனக்கு போண்டாவாங்கி தரப்போறேன். தேங்க்ஸ் டா மச்சி"

"வுட்றா வுட்றா. அடுத்த தடவை நல்லா படிச்சி நல்ல மார்க் எடு. சரியா. ஊர் சுத்துறதுக்கு மட்டும் இல்லடா நம்மநட்பு, தக்க சமயத்துல காப்பாத்தவும் செய்யணும், அதே நேரத்துல நல்லா படிக்கவும் வைக்கணும். இனிமேசாயந்திரம் என் கூட வீட்டுக்கு வந்துடு. நான் சொல்லி தரேன். சரியா?"

"தேங்க்ஸ் டா மச்சி"

இருவரும் அவர்கள் சைக்கிளை எடுத்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்று மாலையில் படிக்க தொடங்கினர். இன்னும் மூன்று மாதங்களே உள்ளது பன்னிரண்டாம் ஆண்டு இறுதி தேர்வுக்கு. அனைத்து பாடங்களையும்நன்கு பயின்று தேர்வு எழுதினர் இருவரும். இறுதி தேர்வு அன்று தான் அந்த சம்பவம் நடந்தது.

"செழியா, நீ நல்ல மார்க் எடுத்துடுவ. நான் தான் என்ன பண்ண போறேன்னு தெரியல"

"நீயும் நல்ல மார்க் வாங்குவ, கவலையேபடாதே. புரியுதா"

"என்னவோ போ. சரி அத விடு, இளவரசியை இனிமே எப்புடிடா பார்க்க போற"

"அதான் மச்சி எனக்கும் கவலையா இருக்கு. இத்தனை நாள் இதை பத்தி யோசிக்கவே இல்லடா. தினமும்சாயங்காலம் சைக்கிளை மிதிச்சு அவ வீட்டு பக்கம் மட்டும் போய் பாத்துகிட்டு வந்தது தான் பாக்கி. ஒருவார்த்தை பேசுனது கிடையாது. ஒரே ஒரு பார்வை தான். ஹ்ம். அவ மனசுல என்ன இருக்கோ" சொல்லிகொண்டே திரும்பியவனுக்கு அதிர்ச்சி தான். இளவரசி அருகில் நின்றிருந்தாள்.

"செழியன், உங்களை பாக்கதான் வந்தேன். நீங்க ரொம்ப நாளா என்னோட வீட்டு பக்கம் வரத பாத்திருக்கேன். ஏன்னு கேட்டு உங்கள கஷ்ட படுத்த விரும்பல. ஆனா, ஒன்னு மட்டும் சொல்றேன். நீங்க எதுவும் பேசவேண்டாம், நீங்க என்ன விரும்புறீங்கன்றது தெரியும், ஆனா, அதுக்கு இது வயசு இல்லை, நமக்கு தகுதியும்இல்ல. அதனால நீங்க உங்க வாழ்க்கையில நல்லபடியா வளர்ந்து, எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுங்க. நான் உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன்"

"இளவரசி, என்ன இப்புடி திடிர்னு வந்து சொல்லிட்டு போறீங்க. நான் உங்கள விரும்புறது உங்களுக்குதெரிஞ்சும் நீங்க ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல"

"நான் தான் முதலிலேயே சொல்லிட்டேனே, இது வயசு கிடையாது நமக்குன்னு"

செழியன் கொஞ்சம் நேரம் அதிரிச்சியில் இருந்து மீண்டுவிட்டு "சரி. நான் நிச்சயமா, வாழ்க்கையில முன்னுக்குவந்துட்டு உங்கள பாக்க வரேன்" என்றான்.

இளவரசி மகிழ்ச்சியுடன் "ரொம்ப தேங்க்ஸ், நானும் எனக்குன்னு சில இலட்சியங்கள் இருக்கு. அதையெல்லாம்முடிச்சிட்டு உங்களுக்காக வெயிட் பண்ணுவேன், தேங்க் யூ செழியன். பை பை இன்பா. உங்களுக்கும்என்னோட விஷஸ் "

தையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துகிட்டு இருந்த தீனா அவர்களை நெருங்கி வந்தான். அவர்களுக்குள்நடந்த பேச்சு வார்த்தைகள் அவனுக்கு தெரியாது. அதனால் வந்தவுடனேயே "செழியா, என்ன எங்க ஏரியாபொண்ணு கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்க. கடைசி நாளும் அதுவுமா, அவளை வழி மறிச்சி தகராறுபண்ணிக்கிட்டு இருக்க, நானும் பாத்துட்டு தான் வரேன், அவ வீட்டு பக்கமா போறதும் வரதுமா இருந்துட்டுஇருக்கீங்க, கிளாஸ்ல உக்காந்து பிளேம்ஸ் போட்டு பாக்குறது, இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல" பிறகு, இளவரசியை பார்த்து, "உனக்கு அறிவில்லை, இப்படி தான் ரோட்ல போற வர்ரவன் கிட்டலாம் பேசிகிட்டுகிடப்பியா, போய் உங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை" என்று மிரட்டும் தொனியில் கத்தினான்.

செழியனுக்கோ தீனா ஏன் இப்படி கோபப்படுகிறான் என்று புரியவில்லை. இன்பா தீனாவை பார்த்து "டேய், தீனா, அவங்க ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்க. இன்னைக்கு கடைசி நாளுன்றதால இங்க நின்னுபேசிகிட்டு இருக்காங்க. அவங்க என்ன பேசிக்கிட்டு இருந்தாங்கன்னு உனக்கு தெரியுமா? அதுக்குள்ள வந்துஎன்னன்னவோ பேசிகிட்டு இருக்க".

தீனாவின் முகத்தில் கோபம் ஏறியது. "என்னது ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்களா. இது எப்போலஇருந்து? அதுக்கு நீ தான் மாமா வேலை பாக்குறியாடா" என்று இன்பாவை பார்த்து கேட்டவுடன், செழியனுக்குகோபம் வந்து தீனாவை பிடித்து தள்ளினான். அந்த சமயத்தில், தீனா பின்னுக்கு காலெடுத்து வைக்கும்போது, அவன் பின்னங்கால் இடறி விழுந்தான். விழுந்த இடத்தில் இருந்த கூரானக் கல் தீனாவின் தலையில் குத்திரத்தம் வர ஆரம்பித்தது. இதை பார்த்து மிரண்டு போன செழியன் இளவரசியை பார்த்து அவளை கிளம்பிபோகும்படி சொல்லி அனுப்பி வைத்தான். அதற்குள் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் அந்த இடத்தில் கூடி, தீனாவை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பிறகு, தீனா மருத்துவமனையில் பல நாள் இருந்து உயிருக்கு போராடி, வீடு திரும்பினான் என்று இன்பாசொல்லக்கேட்டு தெரிந்து கொண்டான்.

அதே இடத்தில் தான் இன்று செழியன் தன் ஐந்து வயது பிள்ளையுடன் நின்று கொண்டிருந்தான். இப்போதுஅவன் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பொறியாளராக இருக்கிறான். பல நாள் கழித்து தன் நண்பன் இன்பாவின்திருமணத்திற்காக ஊருக்கு வரும்போது அந்த பள்ளியை பார்த்து பழைய நினைவுகளை எல்லாம் தோண்டிபார்த்துக் கொண்டிருந்தான்.

செழியன் பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போதே ஒரு பெண்ணை காதலித்து திருமணம்செய்து கொண்டான். இளவரசியை மறந்தும் போயிருந்தான். இன்பாவின் திருமண அழைப்பை பார்க்கும்போதுதான் இளவரசி என்ற பெயர் அவன் ஞாபகத்திற்கு வந்தது. திருமண அழைப்பிதழ் அட்டையில் இன்பாவின்பெயருக்கு பக்கத்தில், இளவரசி என்ற பெயர் அச்சடிக்க பட்டிருந்தது. அதற்காகவே அந்த திருமணத்திற்கு தன்குடும்பத்தோடு வந்திருந்தான் செழியன்.

அன்று சாயங்காலம், மணமேடையில் இன்பாவும், இளவரசியும் அருகில் நின்று கொண்டிருந்தனர். செழியன் தன்குடும்பத்துடன், சிறிது வெட்கத்துடனேயே மேடைக்கு சென்றான். இன்பா அவனை வரவேற்று "மச்சி, எப்புடி டாஇருக்க. உன் கல்யாணத்தப்போ பார்த்தது. நீ காதலிச்ச இளவரசியைத் தான் இப்போ நான் கல்யாணம்பண்ணிக்க போறேன். உன் கல்யாணத்த பத்தி அவகிட்ட சொன்னேன். சொல்லும்போதே அவ அழுதுட்டா. அப்புறம், வீட்டுல பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. இளவரசியை போய் பாக்க சொன்னேன். அவங்க வீட்டுலயும்எனக்கு புடிச்சிருந்தது. அவளுக்கும் தான். உடனே கல்யாணத்தை வச்சிட்டோம். பள்ளிக்கூடம் படிக்கும்போதுவர காதல் எல்லாமே, ஒரு வகையான அன்பு தானடா. அதனால அதெல்லாம் மறந்துட்டு என்ன கல்யாணம்பண்ணிக்கோன்னு சொன்னேன்; அதுக்கப்புறம் தான் ஒத்துக்கிட்டா" என்று சொல்லிவிட்டு, மேலும் தொடர்ந்து"மச்சி, உடனே கிளம்பிடாத, கல்யாணம் முடிஞ்சவுடனே இருந்துட்டு போ. ஒடனே ஓடிடாதே" என்றுகூறினான்.

செழியனும் "சரி மச்சி. கண்டிப்பா இருந்துட்டு தான் போவேன். இளவரசி, ஆம் சாரி" என்று கூறினான், அதற்கு இளவரசி" டேய், கல்யாணத்துக்கு வந்துட்டு சாரி சொல்லிட்டு இருக்க. விஷ் பண்ணிட்டு போடா. நாமஎப்பவுமே நண்பர்களாவே இருப்போம். சரியா? என்ன இன்பா? நான் சொல்றது கரெக்ட் தானே"

"100% கரெக்ட்" என்றான் இன்பா.

மேடையை விட்டு இறங்கும்பொழுது செழியனின் மகன் நிதின் சிரித்துக்கொண்டே "அப்பா, அங்க பாரேன், அந்த அங்கிளுக்கு தலைல பின்னாடி ஒரு சர்க்கிள் இருக்கு. அங்க முடியே இல்லை" என்றவுடன் அவனைபார்த்தவுடன் செழியனுக்கு கண்ணீரே வந்துவிட்டது. "தீனா, எப்புடிடா இருக்கே, நல்லா இருக்கியா" என்றதும், தீனா செழியன்தான் அவன் என்பதை நினைவில் கொண்டு வந்தவுடன் கட்டி பிடித்து கொண்டு "நல்லாஇருக்கேன் மச்சி, நீ எப்படி இருக்க. இது யாரு பையனா, பேரு என்ன?" என்று கேட்டு கொண்டே பையனைதூக்கி கொண்டான். நிதின் கூறிய அந்த சர்க்கிளின் வரலாறுதான், அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாததுஎன்று பேசி சிரித்துக் கொண்டனர் தீனாவும் செழியனும்.

பள்ளி பருவம் என்பது விளையாட்டு, சண்டை, இன்பம், துன்பம், எல்லாமே இருக்கும் ஒரு வாழ்க்கை தான். அதில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இருக்காது. அதை நினைத்து கொள்வதே ஒரு தனி சுகம் தான். இதுஆட்டோகிராப் அல்ல. அன்று சைக்கிளில் தான் வாழ்க்கையே, அதனால் இது சைக்கிளோகிராஃப்.

அன்பரசு மகாதேவன்

() அகத்தியன்

பொழிச்சலூர், சென்னை.

 

 

5.K2K-00013 

பள்ளிக்கூடம் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம், எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்த பொது நான் விளையாட்டுக்காக செய்த இந்த குறும்புத்தனம் தான் முதலில் நினைவுக்கு வந்தது. அந்த நினைவையே இன்று ஒரு குறுங்கதையாக பதிவிடுகிறேன்.

அன்று எங்களுக்கு அரையாண்டுத் தேர்வு நிலவியல் (geography) பாடத்திற்கான கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. எனக்கு நிலவியல் பாடம் என்றாலே அலர்ஜி தான்! வேண்டா வெறுப்பாகத் தான் படிப்பேன் வந்த கேள்விகளுக்கு, அதாவது கட்டுரை (essay) மாதிரியானவற்றை நான் படிக்கவில்லை குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் தான் சிரமப்பட்டு (டப்பா?) நெட்ரு செய்திருந்தேன் ஆனால் துரஷ்டவசமாக அவை கேள்வி தாளில் இல்லை! சில வினாடிகளுக்குப் பிறகு, நான் நன்றாகப் படித்திருந்த கேள்விகளைக் எழுதி அதற்கான விடைகளையும் சேர்த்து, விடைத்தாள்களைக் கொடுத்துவிட்டேன்

விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்குச் சென்றபின் திருத்திய விடைத்தாள்களை ஆசிரியர் வகுப்பறையில் விநியோகித்தார் ஆனால் என்னைப் பார்த்து "நீங்கள் ஆசிரியர் அறைக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நானும் எந்த விதமான சந்தேகமும் கொள்ளாமல் சென்றேன்.

அங்கே ஆசிரியர் என் விடைத்தாளையும் கேள்வித்தாளையும் ஒருங்கே கொடுத்துப் படிக்கச் சொன்னார். அப்பொழுது தான் நான் செய்த கோல்மால்?! (இந்த சொல் தான் இங்கு சரியாக இருக்கும் என்று உபயோகிக்கிறேன் தமிழ் ஆர்வலர்கள் மன்னிப்பார்களாக!) கண்டுப்பிடிக்கப்பட்டதை புரிந்துக் கொண்டேன் என்ன சொல்லப் போகிறாரோ என்று நான் பயந்துக் கொண்டு நின்ற போது அவர் "எல்லோர்முன்னிலும் இதைக் குறிப்பிட்டு உன்னை தண்டிக்க எனக்கு மனம் வரவில்லை. இனிமேல் இது போன்று செய்யாதே" என்று பொறுமையாக சொன்னார். விடைத்தாள்களைத் திருத்தும்போது ஆசிரியர்கள் கேள்வித்தாளையும் சரிப் பார்த்துத்தான் செய்வார்கள் என்ற மாபெரும் உண்மையை, நான் தெரிந்து கொண்டேன்!!!

அன்று பள்ளியில் தான் கற்ற இந்தப் பாடம் என்மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது " எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் தெரிந்தே பிறரை ஏமாற்றக் கூடாது" என்பதேயாகும்.

நெறி: வாழ்க்கையில், எப்பொழுதும் நம் சுயலாபத்திற்காக, நம்முடைய எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பிறர் மீது தெரிந்தே செய்வது நல்லதல்ல எப்படியும் ஒரு நாள் அவை நம்மிடமே வந்துச் சேரும் என்ற அறிய உண்மையை "பள்ளிக்கூடம்" மறைமுகமாகச் கூறிய ஆத்திச்சூடியாகும்...!!                         

RAMA GOVINDARAJAN (GRAPSS)

 

 

6.K2K-00036

# (ன்)ங்கள் பள்ளிக்கூடம்

பத்து வருடத்துக்கு பிறகு நான் என் பழைய பள்ளிக்கூடத்தில் கால் வைக்கிறேன். ஆமாம்! நான் அந்த பள்ளியின் பழைய மாணவன். என் பெயர் உங்களுக்கு இன்னும் சொல்ல வில்லை அல்லவா...? கண்டிப்பா சொல்லணுமா…? வேண்டாம். இப்போ நான் என் பெயர் சொன்னால், இது என் பள்ளிக்கூடத்தின் கதை என்று ஆகிவிடும்.

இல்ல! இது எங்கள் பள்ளிக்கூடம். நாங்கள் எங்களின் சிறு வயதில் கழித்த சில நாட்களின் நிரல் பாடங்கள் இன்னும் எங்கள் மனதில் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.

அதோ நானும் என் நண்பர்களும் எப்போதோ சுவரில் கிறுக்கிய சில நினைவு சின்னங்கள் இன்னும் எங்களின் இருப்பின் அளவை சொல்கிறது. ஆண்கள் கழிவறை எப்போதும் எங்களின் பள்ளி கால காதலை எழுதி வைக்கும் இடம் தான் போல. சுவர் முழுதும் பல சித்திரங்கள் மற்றும் பல காதல் ஜோடி பெயர்கள். எங்கள் காலத்தில் எழுதியது எல்லாம் காணாமல் போய் விட்டது என்றாலும் இன்றைய காலத்தில் இங்கே படிக்கும் மாணவர்களின் கை வண்ணங்களை இதில் காண தான் முடிக்கிறது.

காலங்கள் மாறினாலும் கழிவறையில் தங்களின் காதலை எழுதும் பழக்கம் மட்டும் இன்று வரை மாறவில்லை.

இதே போல எழுத்துகள் பெண்கள் கழிவறை கூட இருக்குமோ என்று நானும் என் நண்பர்களும் சென்று அடி வாங்கிய நாள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அன்று வாங்கிய அடி உடலில் மட்டுமே வலித்தது. ஆனால், இன்று அதை நினைக்கும் போது அந்த காலத்தின் பிரிவு மனதில் வலியை தருகிறது.

ஒன்றா! ரெண்டா! எங்களின் பல நினைவுகள் அடங்கிய இடம் ஆச்சே இந்த பள்ளிக்கூடம்.

கணித ஆசிரியர் வகுப்பில் தூங்கியது என்ன…? தமிழ் வகுப்பில் திருக்குறளுக்கு பதில் சினிமா நடிகர் குரலில் பேசி வாங்கிய பிரம்பு அடி என்ன..? ஆங்கில வகுப்பில் தப்பு தப்பாக ஆங்கிலம் பேசி வாங்கியது அடிகள் எத்தனை..? அறிவியல் வகுப்பில் மனித உடல் கூறுகள் பற்றிய கேள்விகள் நிறைய கேட்டு அடி வாங்கியது என்ன..? இப்படி எங்களுக்கு பல அடிகள் பரிசாக கொடுத்து எங்கள் வாழ்க்கையை உயர்த்திய இடமும் இது தானே...?

கல்லூரி காலத்தை விட பள்ளி காலம் ஒரு நீண்ட காலம். குறைந்தது பதினைந்து ஆண்டுகள் பல விதமான அனுபவங்கள் கொடுத்த காலமும் இதுவே.

இன்று என் ஒரே மகனை நான் படித்த அதே பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்துள்ளேன். என் பள்ளிக்கூடம் என்பது இனி என் மகனை சேர்த்தால் எங்கள் பள்ளிக்கூடம் தான்.

நன்றி!

விஜயன்.

 

 

7.K2K-00037

 பள்ளிக்கூடம்:

ஒரு செய்தி ஊடகத்தில் பள்ளி நிர்வாகம் கூறியது...

"எங்கள் பள்ளியில் 100% தேர்ச்சி. முதல் மதிப்பெண் 1193/1200 வாங்கி மாநிலத்தில் இரண்டாம் இடம். நிறைய டெஸ்ட் வெச்சி மாணவர்களை தயார் பண்றோம்".

ஒரு பள்ளியில்... "உங்க பையன் சரவணன பத்தாவது அனுப்ப முடியாது. வெறும் 45% தான் வாங்கிருக்கான். நாங்க 90% ஆவரேஜ் மெயின்டைன் பண்றோம். ஸ்கூல் ரெப்புடேஷன் போய்டும்.

புனித பீட்டர்பர்க் பள்ளியில் ஒரு அறிவிப்பு... "ஸ்டுடென்ட்ஸ்!!! இங்க தமிழ்நாடு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 10ஆகஸ்ட் அன்று நடைபெற இருக்கிறது. உங்கள்ல பெஸ்ட் ப்ராஜெக்ட் பண்ற ஸ்டுடென்ட்ஸ் 6 பேர் கொண்ட டீம் கலந்துக்க போறீங்க.

3 வாரங்களுக்கு பிறகு 6 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

10-ஆகஸ்ட்...

பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்து தங்கள் திறமையை காட்டினர். சூரியஒளி, LED தொழில்நுட்பம், மின்சார சேமிப்பு முதலிய வகையில் செய்த திட்டக்கருவிகள் (project device) பல அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டது.

மொட்டுக்கள் என்ற பள்ளி மாணவர்களின் திட்டக்கருவிகள் மட்டும் புதிதாகவும், சற்று வேறுபட்டும் இருந்தது.

அவை

1.பார்வைச்சவால் கொண்டவர்களுக்கான கண்ணாடி (goggles for blind)

2.அச்சிடப்பட்ட காகிதங்களை மீட்டெடுக்கும் கருவி (printed paper reclaiming machine)

3.வண்ண குறியீடு வெப்பமானி (color-coded thermometer)

4. கடவுச்சொல் பூட்டு வசதியுள்ள எரிவாயு அடுப்பு (gas stove with passcode enabled locking system)

5.பேருந்தில் எச்சரிக்கை அமைப்பு (bus alert system)

6.திறன் கைத்தடி (smart walkingstick)

முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் (பாதுகாப்பு, சேமிப்பு, மறுசுழற்சி, நிலைத்தன்மை) தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதில் அனைத்து பிரிவுகளிலும் பரிசுகளை மொட்டுக்கள் பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றனர்.

புனித பீட்டர்பர்க் பள்ளி ஆசிரியர்கள் மொட்டுக்கள் ஆசிரியர் ஆதித்யபாலாஜியிடம் "வாழ்த்துக்கள்"ன்றனர்.

ஆதித்யா "நன்றி. நீங்க எந்த ஸ்கூல்?"

ஆசிரியர் ஃபெர்ணாண்டெஸ் "நாங்க புனித பீட்டர்ஸ்பர்க் ஸ்கூல். எப்படி இவ்ளோ இன்னொவேட்டிவா பண்ணீங்க? எல்லாரும் டாப்பர்ஸா?"

" நாங்க டாப்பர்ஸ், நான்-டாப்பர்ஸ், ஸ்டூடியஸ், வீக்-னு எல்லாம் தரம் பிரிக்கறதில்லை. அவங்க அறிவுத்திறன், ஆர்வம் பொறுத்து அவங்கள தயார் படுத்தறோம். அறிவியல் மட்டுமில்ல போன மாசம் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டியிலும், ஹாக்கதான்(hackathon) போட்டியிலும் எங்க ஸ்டுடென்ட்ஸ் ஜெயிச்சாங்க. வீ கிவ் ஹாலிஸ்டிக் எஜுகேஷன்".

ஃபெர்ணாண்டெஸ் "ஒருநாள் உங்களை பொறுமையா மீட் பண்ணி பேசணும்"

"கண்டிப்பா. எப்போ வேணும்னாலும் ஃபோன் பண்ணிட்டு எங்க ஸ்கூலுக்கு வரலாம்" என்று தன் எண்ணை கொடுத்தார்.

பின்னர் பள்ளி முதல்வர் அனுமதியுடன் ஆசிரியர்கள் ஃபெர்ணாண்டெஸ், கல்யாணி, நூர்ஜஹான் ஆகியோர் மொட்டுக்கள் பள்ளிக்கு சென்றனர்.

ஆதித்யா "வாங்க. தோட்டத்துல விளைஞ்ச தர்பூசணி ஜூஸ் சாப்பிடுங்க" என்றார்.

பின்னர் அவர் பள்ளியை சுற்றிக்காட்டி, புல்வெளி வழியாக தோட்டத்திற்கு கொண்டு சென்றார். அங்கு மாணாக்கர்கள் மரஞ்செடிகளை நட்டும், நீர் பாய்ச்சியும், மண்ணில் விளையாடியும் இருந்தனர்.

"என்ன சார். மண்ணுல விளையாடராங்க?"

"சார்! மண்ணு ஒரு பெரிய ஆசான். நாம விவசாய நாடு. ஆனா இன்னிக்கி பலபேருக்கு கத்திரிக்கா கொடில விளையுதா, செடில விளையுதானு கூட தெரில. இங்க விளையாட்டுடன் வாழ்வியலும் தெரிஞ்சுக்கறாங்க. ஒருவேளை பஞ்சம் வந்தா இல்ல மண்ணுக்கு கேடு தர வகைல எதாவது நடந்தா, இவங்க புரிஞ்சி நடப்பாங்க. புலம்பி திரிய மாட்டாங்க. அதுக்கு முதல்படி தான் இது.

பின்னர், "இது எங்க ஆடியோ விஷுவல் ரூம். இங்க ஔவையார், பாரதியார் மட்டும் இல்லாம ஷெல்லி, ஷேக்ஸ்பியர் மாதிரி உலக படைப்புகள் பற்றியும் சொல்றோம். இலக்கியம், அறிவியல், கலை, சரித்திரம், மல்டி லிங்குவிஸ்டிக்ஸ் இப்படி எல்லாமே கத்துத்தறோம். ஃபீல்ட் ட்ரிப், டூர் மூலமா ஜியோகிரஃபி எல்லாம் அனுபவத்துல தெரிஞ்சுக்குங்க. இது தவிர கம்ப்யூட்டர் கோடிங், மல்டிமீடியாவும் தனியா சொல்லித்தறோம். இங்க மார்க் பேஸிஸ்ல எவால்யுவேட் பண்ணாம, பாடத்திற்கு ஏத்தமாறி ப்ராஜெக்ட் பண்ண சொல்லி கான்செப்ட் பேசிஸ்ல எவால்யுவேட் பண்றோம். சாஃப்ட் ஸ்கில் ட்ரைனிங்கும் தறோம்".

நூர்ஜகான் "அப்போ அவங்க எப்படி பப்ளிக் எக்ஸாம் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க. எக்ஸாம் பேட்டர்னுக்குள்ள வந்தாகணும்ல?

ஆதித்யா" மேடம் பிராக்டிகலா இவங்க கத்துக்கிறதால அத தியரியா எழுதறது இவங்களுக்கு கஷ்டம் இல்லை. சொல்ல போனா இவங்க ரொம்ப தைரியமா எக்ஸாம ஃபேஸ் பண்ணி நிறையவே ஸ்கோர் பண்றாங்க.

ஃபெர்ணாண்டெஸ் "அப்போ எங்க சிஸ்டம் தப்புன்னு சொல்றீங்களா?" என்றார்.

தப்பு சரி எல்லாம் நான் சொல்லல. என்ன பொறுத்த வரைக்கும் உலகமே ஒரு பள்ளிக்கூடம். அதை சரியா புரிய வைப்பதுதான் ஒரு பள்ளிக்கூடத்தின் கடமை. அதை விட்டுட்டு நாம சொல்றதுதான் உலகம்னும், அதுதான் உலகத்திற்கு தேவைன்னும், அது இல்லாம வேற மாதிரி யோசிக்கிறவன அன்ஃபிட்னு(unfit) சொல்றதும் அவனை இங்க சஸ்டெய்ன் பண்ண முடியாதுன்னும் சொல்லி ஒதுக்கறதும் ஆசிரியரா நாம என்னிக்குமே பண்ணக்கூடாது.

"அப்போ சரியா பர்ஃபார்ம் பண்ணாதவன எப்படி வெச்சுக்க முடியும்?"

"எல்லாருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அதை கண்டுபிடித்து அவங்கள க்ரூம்(groom) பண்ண வேண்டியதுதான் நம்ம கடமை. நாம ஆசிரியர்கள் இந்த சமுதாயத்தை உருவாக்குரவங்க.

அப்போது ஒரு மாணவன் அங்கு வந்து," சார். எனக்கு மியூசிக் ஸ்கூல்ல அட்மிஷன் கிடைச்சிருக்கு" என்றான்.

ஆதித்யா "வாழ்த்துக்கள் சரவணன். ஆல் பெஸ்ட்" என்றார்.

அவர்களிடம் இவன் எங்க ஸ்டூடண்ட் சரவணன். நிறைய மியூசிக் காம்படிஷன்லாம் கலந்துகிட்டு ஜெயிச்சிருக்கான். இப்போ மியூசிக்கையே கேரியரா எடுத்திருக்கான் என்றதும் அவர்கள் முகம் சற்று மாறியது.

இருக்காதா???

ஒன்பதாம் வகுப்பு தேறமாட்டான் என்று இவர்கள் வெளியனுப்பிய அதே சரவணன் தான் இந்த சரவணன்.

ஒரு மாணவனின் எதிர்காலம் அவனிடம், அவன் பெற்றோரிடம் மட்டுமல்ல அவனை இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக கட்டமைப்பதில் ஒரு பள்ளிக்கூடத்தின் பங்கு இன்றியமையாதது. அவர்களை வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மட்டும் பார்க்காமல் அவர்களை நாளைய சமுதாயத்தின் தூண்களாக பார்ப்பதே இந்த நாட்டிற்கு நல்லது.

ன்றி!!!

இப்படிக்கு

பா. பிரபு,

 மடிப்பாக்கம்.

 

 

8.K2K00038

 பள்ளிக்கூடம்!

செண்பகம் பள்ளிக்கூடத்தில்(ஓட்டுக்கூரை) அவள் வகுப்பிற்கும் அடுத்த வகுப்பிற்குமான இடைவெளி வெற்றிடத்தில் ஆடைகளின்றி அமர்ந்திருந்தாள்.

உடன்படிக்கும் பிள்ளைகள் அவளைப் பார்த்துச் சிரிக்க...” ஸ்ஏன் சிரிக்கிறீங்க அவளுக்கு அதிகமா வியர்க்குது பாவம்னு அப்பிடி உட்கார வச்சிருக்கேன்.

அந்த ஒன்றாம் வகுப்பில் பள்ளிக்கூட முதல் அனுபவம் அவளுக்கு அப்பிடி இருந்தது.

நகத்தைக் கடிக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்வகுப்பை விட்டு வெளியில் போய் நில்லு

வகுப்பாசிரியர் திட்ட…. வெளியில் வந்து நின்ற நொடி பரபரப்பாக  அங்கு வந்த தலைமையாசிரியர் ,”இங்க ஏன்  நிக்கிற?!எனக் கேட்டு அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்துபிள்ளைகளை வெளியில விடாதீங்க ஸார். ஏதோ கலாட்டாவா இருக்குஎனச் சொல்லிச் செல்ல…,பனிஸ்மெண்டிலிருந்து தப்பித்த அனுபவம்  நான்காம் வகுப்பில்.

டீச்சர்டோட்டல் எண்பத்தி ஆறு தான் வருது. ஆனால் நீங்கள் தவறுதலாக தொண்ணூற்றி ஆறுன்னு போட்டிருக்கீங்க.”என்று கணக்கு பேப்பரைக் காட்டி செண்பகம் தனம் டீச்சரிடம் சொல்ல'

குட் மறைக்காம உண்மையைச் சொன்ன, வருங்காலத்திலும் எல்லா இடத்திலும் இதே நேர்மையோடு இருக்கணும்’’ என்ற ஆசிர்வாதத்தையும் வகுப்புத் தோழிகளின் கைத்தட்டலையும் பாராட்டையும் பெற்ற அனுபவம் செண்பகம்வுக்கு ஏழாம் வகுப்பில்.

திரு.வி. கவின் பெண்ணின் பெருமை கட்டுரையை அவரே நேரில் பேசுவது போல் அழகாக செண்பகம் வாசிக்க ஆசிரியரோடு மொத்த வகுப்பும் இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருக்க …..அவள் முடித்ததும் எழுந்த கரவொலியில் அடீத்தடுத்த வகுப்புகளில் இருந்து ஆசிரியர்கள் வந்து எட்டிப்பார்க்க...” டீச்சர் செண்பகம்தமிழ் வாசிக்கும் அழகை எங்களை மறந்து பாராட்டினோம் மன்னிச்சுக்கோங்க என்று வகுப்பாசிரியர் சொல்லஅவர்களும் செண்பகம்வைப் பாராட்டிப் சென்ற அனுபவம் அவளுக்கு ஒன்பதாம் வகுப்பில்.

வகுப்பு ஏற ஏற செண்பகம் புடம் போட்ட தங்கமாக ஜொலித்துக் கொண்டே சென்றாள். நல்லது கெட்டதை பயின்று விலக்க வேண்டியதை விலக்கி பென் வேண்டியதைப் பெற்று வீட்டிற்குள் நாட்டிற்கும் ஏற்ற நல்ல பிள்ளையாக வளர்ந்தாள்.

"இதந்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பட்டாலும்

பதந்திரு இரண்டும் மாறிப்

பழிமிகுத் திழிவுற்றாலும்

விதந்தரு கோடிஇன்னல்

விளைந்தெனை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி! நின்னைத்

தொழுதிடல் மறக்கி லேனே"

என்று பாரதியின் பாடலை ஒப்புவித்தல் போட்டியில் ஒப்பிக்க ஏற்ற இறக்க உச்சரிப்பிற்காகவும் தவறின்றி அழகாகச் சொன்னதற்காகவும் முதல் பரிசு வாங்கி மகிழ்ந்த அனுபவம் கிடைத்தது பத்தாம் வகுப்பில்.

எல்லாருக்கும் கொஸ்டின் அவுட்டாகியிருக்கு...உனக்குக் கிடைக்கலையா செண்பகம் நீ மட்டும் முழு மதிப்பெண் வாங்கலையே?!”

இல்லைங்க டீச்சர்கிடைச்சுச்சு, தப்புன்னு தோணுச்சுஅதான் பார்க்கலை என்றுசெண்பகம் சொல்ல தட்டிக்கொடுத்த டீச்சர் ஆண்டு விழாவில் வகுப்பாசியருக்கு பொன்னாடை போர்த்த மாணவியரை அழைக்க வேண்டிய சூழலில்,” எனக்கு செண்பகம் பொன்னாடை போர்த்துவதை விரும்புகிறேன் என்று சொல்லி பெரும் கௌரவத்தைக் கொடுத்த பன்னிரண்டாம் வகுப்பு அனுபவம் கிடைத்தது செண்பகம்வுக்கு.

இப்படி வளர்ந்த செண்பகம் என்ற பெண் இன்று நல்லதொரு இல்லத்தரசியாக எழுத்தாளராக வாழ்க்கையில் வெற்றி பெற்று பலருக்கும் வழிகாட்டியாக வாழ்கிறார்.

நீதி(படிப்பினை)

பள்ளிக்கூடம் என்பது தான் மனிதனை மனிதனாக உருவாக்கும் பயிற்சிக்கூடம். இதை மனதில் கொண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் செயல்பட்டால் நன்று.

பூமாதேவி

 

 

9.K2K-00042

பள்ளிக்கூடம்

அதிகம் படித்தவன்

 அந்த ஊர் பூஞ்சோலை பெயருக்கு எத்தாற்போல் பூத்து குலுங்கும் அழகுடனும் வளத்துடனும் இருந்தது. அந்த ஊரில் சுமார்

100 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தார்கள்.  அந்த ஊர் விவசாயத்தை நம்பி தான் இருந்தது. 

ராமன் அந்த ஊரை சேர்ந்தவனும் நன்றாக படிப்பவனும் ஆவான்.  அவன் விவசாய துறையில் உயர் நிலை பட்டம் வாங்கினான் (msc agriculture). தான் அதிகம் படித்தவன் என்று அவனுக்கு எப்போதுமே ஒரு கர்வம், தான் சொல்வது தான் எப்போதுமே நியாயமாகவும் சரியாகவும் இருக்கும் என்றும் மற்றவர்கள் சொல்வதை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அவனை தன் ஊரில் இருக்கும் வரை அவனது பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் புரிந்துகொண்டு அவன் சொல்வது சரியென்று தலையாட்டி விட்ட, அவன் மனம் வருந்தக் கூடாது என்று விட்டுவிட்டார்கள்.   பின் சரியான விஷயத்தை அவர்கள் செய்வார்கள் அவனுக்கு தெரியாமல். 

இது தெரியாமல் அவன் தான் சொன்னதை வைத்து கொண்டு தான் நம் ஊரில் விவசாயம் செழித்து வருகிறது, நான் நகரத்திற்கு சென்று மேலும் பல சாதனைகளை படைக்க போகிறேன் என்று கிளம்பினான்.

அதன் படி அவன் நகரத்திற்கு சென்றான்.  அங்கே ஒரு பெரிய விவசாய தொழிற்கூடத்தில்   வேலைக்குச் சேர்ந்தான், அங்கு அவன் தான் படித்த படிப்பின் மூலம் எல்லாம் நல்லபடியாக நடந்து விடும் தான் அங்கே பெரிய ஆள் என்று நினைத்தான்.

ஆனால் நமக்குத்தான் தெரியுமே நான் பள்ளியிலும் புத்தகத்திலும் படிப்பது குறைந்த அளவே, நம் வாழ்வின் அனுபவங்களே மிகப்பெரிய பாடங்கள். அங்கே அய்யா முத்துராம் அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் ஆனால் எதுவும் படிக்க வில்லை, அவருடைய குழுவில் அவனுக்கு வேலை கொடுத்தார்கள், மற்றும் அவன் வெறுப்பாக வேலை பார்க்க ஆரம்பித்தான்.

ஆனால் பின் தான் தெரிய வந்தது அனுபவம்தான் பெரிய கல்வி என்றும் அதுவே பெரிய பள்ளிக்கூடம் என்றும்.  அய்யா முத்துராமன் ஒரு வழிகாட்டியாக இருந்து அவனுக்கு அனுபவ கல்வியை கற்று தந்தார். பின்னர் இங்கே அவன் வேலையும் பார்த்து கொண்டு பின் தனது ஊருக்கும் சென்று அங்கேயும் நல்ல விளைச்சல் வருவதற்கு இன்னும் பல வழிகளை செய்தான். ஊரும் அவனை இப்போது மனமார வாழ்த்தியது.

நெறி: கல்வி என்பது ஏட்டுக் கல்வி மட்டுமல்ல அனுபவமும் தான் , அதுபோல ஒருவர் நாம் சொல்வது சரி என்று சொன்னால் அது நம் மனம் புண்படாமல் இருப்பதற்கு என்று அறிந்து கொள்ள வேண்டும் .

படிப்பு கல்வி என்பது   = (a+b)2 = a2 + 2ab + b2 

அனுபவக்கல்வி என்பது = E+A or Response = Outcome   = ஒரு நிகழ்வு + நடவடிக்கை = முடிவு

-கணேசன் சண்முகவேல்

 

 

10.K2K00048

பள்ளிக்கூடம் ...

                   ஒரு ஊரில் ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது, அந்த பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி அறிவு மட்டும் இன்று கலை அறிவிலும் சிறந்து விளங்கினர்,

           அதில் ஒரு குழு ஓர் வகுப்பில் மட்டும் அல்லாமல் முழு பள்ளியிலும் தனித்துவம் பெற்று விளங்கியது,

           அந்த குழுவில் நண்பர்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையுடன் இருப்பார்கள்,

           பள்ளிக்கு செல்லும் நேரம் ஒன்றிணைந்து, படிக்கும் நேரம் பொறாமை இன்றி போட்டி நடந்தது, கோபம் இன்றி சண்டை நடந்தது, சண்டையினை ஆசிரியர் பார்க்கும் நேரம் ஏதும் நடக்காதது போல் வேடம் போடும் நாடகம் நடக்கும், குழுவில் ஒருவர் ஒரு பிரச்சனையில் இருந்தால், அதனை தீர்க்க ஒன்றிணைந்து செயலாற்றும் ஆற்றால் கொண்டு செயல்பட்டனர், ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி சண்டை போட்டி கலாட்டா என அனைவரும் குதூகலமாய் வாழ்ந்தனர்.,

            ஒவ்வொருவருடைய சுழலும் குடும்ப பின்னணியும் சொல்ல இயலாத வறுமையில் மற்றும் சிக்கலில் நிறைந்து இருந்தது, இதனை குழுவில் அனைவரும் அறிவர்,

            இருப்பினும் ஒரு நாள் கூட குடும்ப சூழல் மற்றும் சிக்கல் பற்றி யாரும் யாரிடமும் பகிர்ந்துகொள்வது இல்லை,

           ஆனால் அனைவருக்கும் அனைவரும் என்றும் உறுதுணை நல்குவர், அத்துடன் அவர் அவர்களுக்கு தெரிந்த வழியினை காட்டி அதில் நாம் செயல்படவும் உதவுவர்...,

              இவ்வாறு அனைவரும் பள்ளி பருவத்தினை ஓர் புதியஉலகமாய் கருதி வாழ்ந்தனர்.,

           இவ்வாறு பள்ளி பருவ காலங்கள் பற்றிய கதை தொகுப்பு பல, தொகுப்புகளை விரிபடுத்தினால் சிறுகதை நாவலாக ரூபம் எடுக்கும், எனவே சின்னஞ்சிறு தொகுப்புகளாக கதையினை தொகுத்துவிட்டேன் ...

கருத்து: நமக்கென வேறு உலகினை, நாம் கண்டு செயல்பட, நமது துன்பம் துயரங்கள் அனைத்தும், எதிர் உலகில் இன்பங்களாய் மாறும், அது நம் துன்பங்களை எதிர்த்து போராட வலிமையை தரும் ... 

இப்படிக்கு., 

சி. தெய்வாணி ஸ்ரீ,

 

 

11.K2K-00053

பள்ளிக்கூடம்

மறந்திட முடியா தருணம் நந்தினி மனதில்...

கணக்கு பீரியட் சீக்கிரம் முடிய கடவுளிடம் வேண்டிய நாட்கள்...

அப்பாவின் கையெழுத்தை கிறுக்கி மாட்டிய திக் திக் நிமிடங்கள்...

பிறந்த நாளுக்கு வண்ண உடை அணிந்து வகுப்பில்"ஒரு நாள் மிஸ் யுனிவர்ஸாய்" வலம் வந்த நாட்கள்

அடிக்கடி கிளாஸ் டெஸ்ட் அன்று மட்டும் வந்து போகும் வயிற்று வலி நாடகத்தின் கதை, திரைக்கதை வசனம் எல்லாம் இவளே...

தோழியிடம் முதல் பொசசிவ் பீல் இறக்கை முளைத்து கோபித்த நாட்கள்...

கடனாய் கொடுத்த பென்சில் மீண்டும் கை சேருமா? என தவமாய் கிடந்த நேரங்கள்...

போட்டிகளில் எல்லாம் போரை போல களமிறங்கிய நாட்கள்...

நெற்றியில் கொடுக்கும் அம்மா முத்தத்தின் தித்திப்பை போல மனதிற்கு ரம்மியமாய் சில நினைவில் நந்தினி மூழ்கிய வேளையில்...

"மேம்...மேல்... இன்டர்வியூக்கு தானே காத்திருக்கிங்க? என பியூன் கோவிந்தன் கேட்க....  தன் கைக்குட்டையில் நெற்றியோர வியர்வை துளியை மெல்ல ஒத்தியவாரே தலை அசைத்தாள்... உங்களை பிரின்சிபல் மேம் கூப்பிடராங்க..." என கூறிவிட்டுச் சென்றான்.

பரபரப்பாய் நடக்கையில் கலைந்த தன் ஊதா நிற காட்டன் புடவையின் மடிப்பை லேசாய் சரி செய்தவாறே பிரின்சிபல் அறையை நோக்கி நடந்தாள்....

"மே கம் இன் மேம் என ஒற்றை புன்னகையில் கனிவாய் அவள்

உள்ளே நுழைகையில் தலையில் வைத்திருந்த ஒற்றை ரோஜா இதழ்கள் சில உதிர்ந்தன...

"கம் இன் மா" என்றார் சாந்தம் கலந்த புன்னகையுடன் பிரின்சிபல் துளசி பாய் மேம்...

உங்க ரெசியூம் பார்த்தேன்,

மைக்ரோ பயாலஜி படிச்சுருக்கீங்க... ரிசர்ச் பீல்ட்க்கு நல்ல ஸ்கோப், பட் டீச்சர் ஜாப் தேர்ந்தெடுக்க காரணம்...? என கேள்வியை அழுத்தமாய் நிறுத்தினார்...பிரின்சிபல் துளசி பாய் மேம்."

"பிடிச்ச இடத்துல இருக்கனும்...

பிடிச்சத செய்யனும்...

என் மனசுக்கு குழந்தைங்க ரொம்ப பிடிக்கும் மேம்... குழந்தைங்க அதிகம் இருக்கற இடம் ஸ்கூல் தானே..."

"பிடிச்சத செய்யும் போது கெடக்கிற திருப்தி வேற எதுலயும் இல்ல மேம்...இத வேலையா மட்டும் பார்க்கலை...இது என் வாழ்க்கையோட அடுத்த கட்ட பயணமா பாக்குறேன் மேம்...

மைக்ரோபயாலஜி நான் படிச்சதால கெடச்ச பட்டம்...

இங்கே என்னை நானே தேடி படிக்க வந்துருக்கேன்"

டீச்சர் ஜாப் அதுக்கு ஒரு தூண்டுகோளா அமையும்னு நம்புறேன் மேம்"

"குழந்தைங்க மனச படிக்கிற வேலை, எல்லாருக்கும் அமையாதுங்க மேம்..." என்று கடகட வென மனசில் பட்டதை எதார்த்தமாய்...ஆழமாய் உதிர்த்தாள்...

குட் டூ   கியர் நந்தினி

"விஷ்யூ ஆல் பெஸ்ட் நந்தினி" நீங்க நாளைக்கு வந்து ஜாய்ன் பண்ணலாம் இங்கிலீஸ் டீச்சரா என்று அதே புன்னகையுடன் உரைத்தார்...

நந்தினியும் கர்வமாய் விடை பெற்றாள்...

நீதி: படிச்ச படிப்புக்கு வேலை பார்க்கலனு யாரையும் குறைவான எடை போடாதிங்க...டீச்சர் னா லேசு இல்லைங்க...அது மனச படிக்கிற வேலை... காசு தராசுல நிப்பாட்டாதிங்க...

- பூங்கொடி

 

 

12.K2k00058

பள்ளிக் காதல்

            டேய் சரவணா இன்னைக்கு அவளுக்கு பிறந்தநாள் டா சீக்குரம வரியா அண்ணன் கடைக்கு போய் அவளுக்கு எதவது வாங்கிட்டு போலாம்.  அதானே பாத்தேன் பத்து மணி ஸ்பெஷல் கிளாசுக்கு ஒன்பது மணிக்கு வந்துருக்கியேனு.   சரி சரி இரு சாப்பிட்டு வரேன் போலாம்

(இருவரும் கடைக்குச் சென்று செயின் ஒன்றை வாங்கிக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர்)

            இன்னைக்கு மாடல் பிராக்டிகல்- அந்த அம்மா என்ன பன்ன போகுதோ தெரியல டா

            டீச்சர் எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் இந்தாங்க சாக்கிலேட் எடுத்துக்கோங்க.

(அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி வாழ்த்தினார்கள்)

இன்னைக்கு மாடல் பிராக்டிகல் இருக்கு. சரி எல்லாரும் லேப்க்கு வாங்க போலாம்.

ஆசிரியர்: ஒவ்வொருத்தரா வந்து கேள்வித்தாளை எடுத்திட்டு உள்ள வாங்க முடிச்சதும் சீக்கிரமா வீட்டுக்கு போலாம்.

            அப்ப லேப் முடிச்சிட்டு போகும் போது அவ கிட்ட குடுத்துரளாம் என்று எண்ணிக்கொண்டே லேபிற்குள் நுழைந்தான் பாலா.

டேய் சரவணா இங்க பாருடா என் தேவதை எவ்வோளோ அழகா பன்னிட்டு இருக்கானு.

டேய் அவளயே பாத்திட்டு இருக்காம நீ பன்னுடா அப்புறம் அவ போய்டானு அழக்கூடாது.  அதுலாம் நான் முடிச்சுருவேன் போடா

சரி சரி நான் முடிச்சுட்டேன் நீயும் சீக்குரம் வா வெளிய வேயிட் பன்னுரேன்

அவள் பின்னாடியே பாலாவும் வந்து ஆசிரியரிடம் காட்டிவிட்டு லேபிலருந்து வெளியேறினான்.

(பாலாவும் சரவணாவும் அவள் வரவை எண்ணி சாலையின் ஒரத்தில் காத்திருந்தனர்)

சரவணா: டேய் ஒழுங்க இன்னைக்காச்சும் சொல்லித்தொல

பாலா: அதுலாம் எனக்கு தெரியும் நான் பாத்துகிறேன்

சரவணா: இப்பிடிக்தான் போன வாரமும் சொன்ன செஞ்சியா. சரி அத விடு அவ வரா போய் சொல்லிட்டு வா போ

 பாலாபிரியங்கா நில்லு உன்ட ஒன்னு சொல்லனும்

பிரியங்கா: ம்ம்ம் சொல்லுங்க பாலா.

பாலா: அது வந்து ஹப்பி ... ஹப்பி…. லல... வ்வ்.... பிர்த் ... யு..... பிர்த்.....

டேய் டேய் என்ற குரல் கேட்டு பாலா தூக்கத்திலிருந்து கண்விழித்தான்

சரவணா: டேய் இன்னும் நீ பிரியங்காவ மறக்கலையா ஏன்டா இப்பிடி தூக்கத்துல கணவு கண்டு ஒலரிகிட்டு இருக்க

பாலா: இல்லடா பள்ளி நியாபகம், அவள மறக்க முடியல அதான் இப்பிடி.

சரவணா: அது சேரி நான் அப்பவே சொன்னேன் பேசுடானு நீதான் கண்ணுல பேசுரேன் காதுல பேசுரேனு சொல்லீட்டு கடைசிவர வாய தொரந்து ஒரு வார்த்த கூட பேசல இப்ப வந்து ஒலரிட்டு இரு.  சரி சரி போய் தூங்கு காலையில காலேஜ்க்கு போனும் புரியுதா ஒலராம தூங்கு

பாலா: சரிடா ஆன அவள என்னால மறக்க முடியல டா

நீதி: “நம்மளோட வாழ்க்கைல மறைக்க முடியாதது முதல் காதல்.

          அந்த காதலெனும் பாடத்தை கற்பிப்பது பள்ளிக்கூடம் தாண்.”

 

பிரிட்டோ சச்சின் மரியா. வே

 

 

13.K2K-00066

பள்ளிக்கூடம்

"உங்க அப்பாவ நம்பாத. அவன் ஒரு நம்பிக்கை துரோகி" என்று நகைத்துக்கொண்டே குமாரின் 5 வயது குழைந்தையிடம் சொன்னான் பாலு.

"ஏன் அங்கிள். அப்படி சொல்லறீங்க. அப்பா ரொம்ப நல்லவரு" என்று பெருமிதத்துடன் சொன்னான் அச்சிற்றுவன்.

"உங்க அப்பா படிக்கும்போது எனக்கு பண்ண விஷயத்த இன்னும் என்னால மறக்கமுடியல" என்றான் பாலு.

"டேய்... சும்மா இருடா குழந்தைகிட்ட ஏன்டா இப்படிலாம் பேசுற" என்றான் குமார்.

"நான்... அப்படிதான் டா சொல்லுவேன். நீ சும்மா இரு" என்று மறுமொழி கூறினான்.

குமார் கடந்த கால நினைவலைகளில் சென்றான். பாலுவும் குமாரும் 11ம் வகுப்பு படிக்கும்பொழுது. குமார்தான் வகுப்பு மாணவன் பொறுப்பில் இருந்தான். அந்த பொறுப்பால் கொஞ்சம் அதிகமாவே திமிரும் வந்துவிட்டது. ஒரு நாள் அவர்களின் ஜாலியான ஆங்கில ஆசிரியர் தான் வர தாமதம் ஆகுமென்றும், அது வரை வகுப்பை அமைதியாக வைத்துக்கொள்ளவும் குமாரிடம் சொன்னார்.

குமார் உடனே, வகுப்பின் கரும்பலகையில் "பேசுபவர்களின் பெயர்கள்" என்று எழுதி, பிரம்பில்லா ஆசிரியரைப் போல் எண்ணி கொண்டான். நன்கு சத்தமாக மற்றும் குசு குசு என்று பேசியவர்களின் பெயர்களையும் எழுதினான். உடனே அனைவரும் கூச்சலிட்டதும், அனைத்தையும் அழிந்துவிட்டான். அவன் மாணவர்களைப் பார்த்து பயந்ததை பாலு கேலி செய்து கொண்டிருந்தான். கோவத்தில் பாலுவின் பெயரை முதலில் எழுதினான். பின் அதிகமாக பேசியவர்களின் பெயர்களையும் எழுதினான். பாலு தன் பெயரை அழுக்குமாறு பல முறை கூறினான். குமார் அதை காதில்கூட கேட்கவில்லை. 15 நிமிடங்களில் அந்த ஆங்கில ஆசிரியர் வந்தார். "ஏன் சத்தம் போடுறீங்க. சும்மா இருக்க முடியாதா" என்று கேட்டுக்கொண்டே பலகையில் இருந்த முதல் நபரான பாலுவை அழைத்தார். இந்த முறை எந்த பாட்டுக்கு டான்ஸ் ஆட சொல்லுவார் என்று அனைவரும் ஆவலாக காத்திருந்தார்கள். "பளார்...! என்ற சத்தம்". பாலுவின் கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்துவிட்டது. அனைத்து மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜாலியான ஆசிரியர் இப்படி செய்துவிட்டாரே என்று! ஆனால் பாலுவுக்கோ குமாரின் பேரில் கொலைசெய்யும் அளவு கோவம் வந்தது.

அன்றய தினம் முழுதும், தான் தெரியாமல் செய்துவிட்டதாகவும், மன்னித்துவிடுமாறும் குமார் பாலுவிடம் கெஞ்சினான். "இந்த விஷயத்தை நான் இந்த ஜென்மத்துல மறக்க மாட்டேன்" என்றான் பாலு.

வருடங்கள் கடந்தும் பாலு அந்த விஷயத்தை அடிக்கடி சொல்லி சொல்லி குமாரை ஏசுவான்.

"நான் அப்போ தெரியாம செஞ்சத இப்போ என் பையன் கிட்ட சொல்லபோறானே! என் பையன் என்னப் பத்தி என்ன நினைப்பான் " என்று வருத்த பட்டான் பாலு.

குமார் பாலுவின் மகனிடம், "உங்க அப்பா... என்கிட்ட சொல்லாம... நிறைய தடவ... வேற குரூப் பசங்களோட கிரிக்கெட் ஆட போயிடுவான்." என்று வேறு ஏதோ ஒரு சின்ன சம்பவங்களைப் பற்றி சொன்னபோது தான் குமாரின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

குமாரின் வீட்டிலிருந்து கிளம்பும்போது, “பயந்திட்டியா குமாரு!... நான் உன் நண்பன் டா" என்றான் பாலு. 

நீதி: பள்ளிக்கூடத்தில் நாம் செய்யும் சிறுபிள்ளைத் தனமான செயல்கள் ஒரு நாள் சிறுகதைகள் ஆகலாம்.

-GD

 

 

14.K2K -00067.

&&&&&&பள்ளிக்கூடம்&&&&&&

     தன் வீட்டு மாடியில் தனிப்பயிற்சி வகுப்பில் இருந்தார் ஆசிரியர் அன்பு. அடுத்த வீட்டில் அவர் கூட பணியாற்றும் மதி சார் விட்டுக்கு வெளியே ஒரே கூச்சல். எட்டிப் பார்த்தார். நேற்று மாலை தன்னால் தண்டிக்கப் பட்ட பாலு என்ற மாணவனின் தந்தை, அண்ணன் மற்றும் சிலர் கூக்குரல் எழுப்பி கொண்டிருந்தார்கள். உடனே கீழ் இறங்கி வந்த ஆசிரியர் அன்பு,"ஏண்பா, நான் தானே பாலுவை தண்டிததேன். அதற்கு ஏன் மதி சார் வீட்டில் சத்தம் போடுகிறீர்கள் ?" என்று கேட்டார். மாணவன் பாலுவின் அப்பா," சார், நீங்கள் தண்டிததால் நிச்சயம் அதில் ஒரு நியாயம், காரணம் இருக்கும். ஆனாள் மதி சார் அடிக்க என்ன உரிமை ?"என்று கேட்டார்.

"மாணவர்களைக் கண்டிக்க எனக்கு மட்டும் பள்ளிக்கூடம் லைசன்ஸ் கொடுத்து இருக்கிறதா? மதி சாரும் ஆசிரியர் தானே. அவருக்கு அந்த உரிமை இல்லையா ?அப்படி  என்றால் பாலுவை கண்டிதத என்னை வேண்டுமானால் தண்டியுங்கள்" என்று கூறி அவர்கள் முன் குனிந்து  முதுகைக் காட்டி நின்றார் அன்பு.உடனே அனைவ ரும் அமைதியாகக் கலைந்து சென்று விட்டனர்.

    அன்பு சாருக்கு உள்ள மரியாதை அப்படி. ஏதாவது ஒரு பேருந்தில் அவர் ஏறினால்  ஏற்கனவே துண்டு போட்டு வைத்து இருந்ததைப் போல யாராவது எழுந்து உட்கார இடம் தருவார்கள். நடத்துந ரிடம் சீட்டுக்குப் பணம் கொடுத்தால்," முன்னாடி ஒருவர் உங்களுக்கும் சேர்த்து சீட்டு வாங்கி விட்டார்" என்று நடத்துநர் சொல்லுவார். யார் என்று பார்த்தால் ஒரு பழைய மானவனோ, பெற்றோரோ எழுந்து பணிவோடு வணக்கம் சொல்லுவார்கள்.

ஆசிரியர் அன்புவின் பள்ளிசசேவை அப்படிப் பட்டது. திறம் படப் பாடம் நடத்துவதோடு பாட அட்டவணை, வருகைப் பதிவேடு, தேர்வு வேலைகள், கட்டண வசூல், மாணவர் ஒழுக்கம் மற்றும் அமைதி காணச் செய்தல் என எல்லாவற்றையும் இழு த்துப் போட்டுக் கொண்டு செய்வார். அன்பு, அதற்காக சலுகைகள் எதையும் எடுத்து கொள்ள மாட்டார். மாணவர்களோடு, சக ஆசிரியர்களோடு கனிவாக நடந்து கொள்வார். மாணவிகள், ஆசிரியைகள் பக்கம் தேவை இன்றி ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்.

ஆண்டுத் தேர்வு மதிப்பெண் தரததில் மாணவர்களைப் பிரித்து கடைசித்தர வகுப்பை அன்பு எடுத்துக் கொள்வார். அதில் உள்ள மாணவர்களுக்கு நன்கு கற்பித்து ,மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து 100 விழுக்காடு தேர்ச்சி அடைய செய்து விடுவார் அன்பு.எனவே பெற்றோர்கள் எப்போதும் தம் குழந்தைகள் அவர் வகுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

     அப்படித் தான் அவரது நெருங்கிய உறவினர் பையன் சேகர் வேறு வகுப்பில் இருந்தான். சேகர அப்பாஅன்பு சாரை அணுகி " தம்பி,என்மகன் சேகர் நல்லா படிப்பான். ஆனால் சேர்க்கை சரியில்லை. உங்கள் வகுப்பில் கண்காணிப்பில் இருந்தால் நல்லா வருவான் என்று நினைக்கிறேன" என்றார். "வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிரிக்கப் படுகிறது. ஒருவரை வகுப்பு மாற்றினால் அதோடு நிற்காது.தொடர் கதையாகி பெரிய சிக்கலை உண்டாக்கும்" என்றார் அன்பு சார்.

  " அப்படீன்னா என் மகன் சேகரை உங்கள் தனிப் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார் சேகரின் அப்பா.

      "அய்யோ மாமா, மன்னியுங்கள். அது ஆசியர்களிடயே மன வருததத்தை ஏற்படுத்தி விடும்" என்று அன்பு சார்  சொல்வதற்குள்ளேயே சேகர் அப்பா கோபமாக வெளியேறி விட்டார்.

         நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் சேகர் நண்பர்களுடன் காவல் துறையால் வழக்கு பதியப் பட்டு பள்ளியிலிருந்து நீக்கப் பட்டான்.தந்தை வெறி கொண்டு தாக்கிட ,கோபம் கொண்ட சேகர் விஷம் அருந்தி உயிர் நீத்தார்.

    பள்ளி விடுப்பு விடப்பட்டு அனைவரும் துக்க வீட்டுக்குச் சென்ற போது, இறந்து போன சேகரின் அப்பா,"அன்பு, நீ நினைத்திருந்தால் என் மகனைத் திருத்தி இருக்கலாம். பள்ளி நாற்றங்கால் தானே . பிடுங்கி நட்டு இருக்கலாம். விதி முறைகளை சொன்னாய். இப்போ விதி முடிஞ்சு போச்சே" என்று கூறி கதறி அழுதார்.

    நல்லாசிரியர் என்றே பெயர் பெற்று இருந்த அன்பு சாருக்கு இந்த நிகழ்ச்சி நெஞ்சில் ஒரு முள்ளாக தத்து விட்டது. சில நாட்களுக்கு மனம் பணியில் ஒன்ற வில்லை. பாடமும் நடத்த இயலாது பரி தவிததார் அன்பு. பக்கத்து வகுப்பு தமிழாசிரியர் நடத்தியதிருக்குறள் காதில் விழுந்தது.

  " நன்றாற் ரலுள்ளும் தவறண்டாம் அவரவர்

பண்பு அறிந்து ஆற்றாக் கடை ".

     அன்பு சாருக்குத் தோன்றியது."விதிகளைப் பேணுவது நன்று. ஆனால் தேவையான போது விலக்குகளையும் மேற்கொள்வதன் மூலம் இழப்புகளையும் தவிர்க்கலாம்."

   ஒரு நல்லாசிரிய ருக்கு பள்ளிக்கூடம் கற்றுத் தந்த பாடம் இது.

   ஆக்கி யோன்:  அன்பழகன்

    

 

15.K2k 00068

 திருமணி மற்றும் ராஜ் இருவரும் நண்பர்கள், 7ஆம் வகுப்பிலிந்து கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமண வாழ்க்கை முடிந்து இன்னும் நண்பர்களாக உள்ளனர்.

இருவருக்கும் ஒரு விவாதம் கல்லூரி நட்பு பெரியதா பள்ளி கூட நட்பு பெரியதா என்றும் பள்ளி வாழ்க்கை பெரியதா கல்லூரி வாழ்க்கை பெரியதா என்று இறுதியில் பள்ளிக்கூட வாழ்க்கை பெரியது என முடிவுக்கு வந்தார்கள்

காரணம் சிறு வயதில் இருந்தே பள்ளிக்கூடம் செல்லமாட்டோம் என்று அடம்பிடிப்பது.

பெற்றோர்கள் நம்மை எங்கோ ஒரு இடத்தில் தள்ளிவிட்டு செல்கிறார்கள் என்று. எல்லா குழந்தைகள் போலவே பள்ளிக்கூடம் போகும்போது அழுவார்கள். பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மகிழ்ச்சியாக வருவார்கள்.

காரணம் மீண்டும் நாங்கள் உங்களிடமே வந்து விட்டோம் என்று பெற்றோர்களிடம் கூறுவதற்கு அல்ல தினம்தினம் ஒவ்வொரு சாதனைகளை முடித்து இருக்கிறோம் என்று கூறுவதற்கு.

அன்று , என்று கற்றுக் கொடுத்த ஆசிரியரால் தான் இன்று நான் சிறுகதை எழுத்தாளர் ஆக மாறியுள்ளேன் என்றான் ராஜ் திருமணியும் ஒப்புக்கொண்டு அன்று ABCD எழுதக் கற்றுக் கொண்டதால் தான் நான் வெளிநாட்டிலே வேலை செய்யும் வாய்ப்பு பெற்றேன் என்றான். இருவருமே அடித்தளம் இல்லாமல் நம் நட்பும் சேர்ந்திருக்காது என்று குறிப்பிட்டு விட்டு பள்ளி வாழ்க்கை பற்றி பேச ஆரம்பித்தவர்களுக்கு பொழுது போனதே தெரியாமல் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்

J. JEYARAJ

 

 

16.K2K 00069

   பள்ளிக்கூடம்

எனக்கென்னவோ நான் கிணற்றில் குதிக்க முடிவெடுத்த போது என் அறை ஐன்னலின் வழி அந்த நிலா பார்த்திருக்க வேண்டும் என்றே தோன்றியது. அதனால்தான் என்னவோ, சற்று வேகமாக வீசிய காற்று மேகங்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்க வானில் என்னுடனே பயணித்த நிலவு மௌனமாக ஒளியை தூவிக் கொண்டிருந்தது.  நன்கு கனிந்த மாதுளங்கனிகள் லேசாக வெடித்து சிவந்தாற் போல அவமானத்தில் முகம் சிவந்து சிறுக்க, கையில் அரையாண்டுத் தேர்வு முடிவுகளுடன் நான் வேகமாக நடந்து கொண்டிருந்தேன். 

எவ்வளவு முயன்றாலும் கணிதத்தில் எனக்கு நாற்பது மதிப்பெண்கள் தான். கணித ஆசிரியர் திட்டிய போது வகுப்பறையே குலுக்கிச் சிரித்தது.  ஆனால் நான் தமிழிலோ தொண்ணூறு. என் கதைக்கு 5 நட்சத்திரங்கள் வேறு. தமிழாசிரியரின் உந்துதலில் போன வாரந்தான் தினத்தந்தியில் பிரசுரிக்க தந்தி அனுப்பி இருந்தேன்.

ஆனால் அந்தக் கதையை பிரசுரித்தால் கூட அதைப் பார்க்க நான் உயிருடன் இருக்க மாட்டேன். அப்பாவின் பொறியியலாளர் ஆசையை நிறைவேற்ற முடியாத மகள் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?

கையில் அரையாண்டு தேர்வு முடிவுகள் கசங்கியது. கிணற்றில் குதிக்க மூச்சைப் பிடித்தேன். சற்று நேரத்தில் வாழ்க்கையுடன் போராட துணியாத நான் தண்ணீருடன் போராடிக் கொண்டிருந்தேன்.

இதுதான் சொர்க்கம் போலும், கண்களைக் கூசிய வெள்ளை ஒளியைப் பார்த்தவாறே சத்தமாகக் கத்தினேன்.  கைகால்கள் என் கட்டுபாடிற்று துடித்துக் கொண்டிருந்தது மருத்துவமனைக் கட்டில் என்று உணர்ந்தேன்.

"Patient seizing, 5mg Ativan குடுங்க nurse" யாரோகத்தினார்கள்.

பிறகு கையில் கட்டெறும்பு கடித்த வலி.

மீண்டும் அதே வெள்ளை ஒளி.

"அம்மா கயல்விழி, கண் திறந்து விட்டாயா?! " பதட்டமாக கொஞ்சியது தந்தையின் குரல்.

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

Duster அவள்மீது விழுந்தது.

"அய்யோ, கனவா! " கத்திக் கொண்டே எழுந்தாள்.

"கணிதத்தில் ஐம்பது, இதில என் வகுப்பில தூங்கிறியா? " கணித ஆசிரியர் உறுமினார்.

"வணக்கம் சார், "உள்ளே நுழைந்தார் தழிழாசிரியர்.

"உன் கதை தினத்தந்தியில் பிரசுரிக்கப் பட்டுள்ளது கயல்விழி. வாழ்த்துக்கள்." சிரித்தபடி கூறினார் தமிழாசிரியர்.

"!  அப்படியா! படிச்சு என்னாகப் போற கயல்விழி" கேட்டார் கணித ஆசிரியர்

"கததாசிரியர் ஆகப் போறேன் சார்"

"நல்லது...  கதாசிரியருக்கும் கணிதம் தெரிய வேண்டும். பணக்கணக்குகளை பார்க்க தெரியா விட்டால் யாராவது ஏமாற்றி விடுவார்கள். உக்காரு. அடுத்து  PT தான. அப்பவும் கணிதம் தான். " தன் தொப்பையேத் தடவியவாறே கரும் பலகையில் எழுதத் தொடங்கி இருந்தார் அவர்.

இப்போது கயல் விழி தூங்கவில்லை. கதை எழுதத் தொடங்கி இருந்தாள்.

🌞🌞🌞🌞🌞🌞

பள்ளிக்கூடம் என்றாலே வகுப்பைக் கவனிக்காமல் தூங்கி Duster இல் அடிவாங்கியது தான் ஞாபகம் வந்தது! 

- VILIA

 

 

17.K2K-00078

 பள்ளிக்கூடம்

###############

மால்னி "நர்மிகா டெக்ஸ்" இல் கடந்த ஒருவருடமாக வேலை செய்கிறாள். எறும்பு போல தன்னுடைய வேலையை ஓடியாடிச் செய்யும் மால்னியை யாருக்குதான் பிடிக்காது. வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வதால், என்னவோ! அவளது கண்களில் சந்தோசத்தை யாருமே கண்டதில்லை. எப்போது பார்தாலும் எதையோ! பறிக்கொடுத்தது போல இருப்பாள்.

அன்று மாலை, மால்னி தன் வேலைகளை முடித்துவிட்டு, விடுதி திரும்பியதும், கையிலிருந்த பையை தூக்கியெறிந்து விட்டு, அமைதியாக அருகிலிருந்த கதிரையில் அமர்ந்தாள்.

'சீனு! சீனு! இங்கே வா!'

என்றாள்.

"ம்ம்ம்ம்ம... இப்பவா! வந்த....."

"ஆமா....

சீனு அக்கா" எங்க போனிங்க.

"இதோ உன் எதிரிலேதான் இருக்கேன்"

என்றாள் சீனு.

நான் கவனிக்கவில்லை. ரொம்ப அசதியாக இருக்கிறது. சீனு அக்கா! இந்தக் கடிதத்தை படியுங்கள்.

"என்ன கடிதம் இது"

"காதல் கடிதம்தான்"

"என்ன?"

"ஆமாம்" கடை விலாசத்திற்கு வந்தது. படியுங்கள் அக்கா. யார் என்று சொல்கிறேன்.

ம்ம்

'என் அன்புள்ள காதலிக்கு, உன்னை பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது. எப்போது ஊருக்கு வருவாய். என் மனமோ! உன்னை மறக்கவும் இல்லை, என் வசமும் இல்லை. உன்னை பார்த்த கணமே தொலைத்துவிட்டேன்…'

ம்ம்... மேலே

படியுங்கள்.!

உணவில்லை, உறக்கமில்லை. உன்னை மீண்டும் ஒருமுறை பார்த்தால்தான் என்னுயிர் இம்மண்ணில் வாழும். "இப்படிக்கு உன் ஒருதலைக்காதலன் சுரேஸ்"

'யாரடி இந்த சுரேஸ்'

என் பக்கத்துவீட்டுப் பையன். பள்ளிக்கூடம் படிக்கையில் நானும் அவனும் ஒரே வகுப்பில் படித்தோம். என் மீது அவனுக்கு 'தீராதக்காதல்'. காதல் பித்தில் ஏராளமான கடிதங்களையும், இனிப்புகளையும் என் பள்ளித்தோழியிடம் கொடுத்து அனுப்புவான். எனக்கோ! அவனைக் கண்டால், தீ மீது நிற்பது போல இருக்கும்.

ஒருநாள் இவனுடைய தொல்லைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பாத்திமா டீச்சரிடம் சொல்லிவிட்டேன். அவனை தனியாக அழைத்து, அறிவுரைகளை வழங்கினார். அதிலிருந்து தொடர்ந்து, ஐந்து நாட்கள் நெற்றியில் விபூதியும், கையில் புத்தகமுமாக பள்ளில் வலம் வந்தான்.

மீண்டும் தொடங்கியது, அவனது காதல் ரகலைகள்.  நான் பஸ்ஸில் தான் பள்ளிக்கு செல்வேன். அதே பஸ்ஸில் அவனும் வருவான். சாயங்காலமும் இதே கதி.  நான் போகும் மேலதிக வகுப்பிலும் இணைந்துக்கொண்டான். எனக்கு அவன் மீது காதலா! என்று தெரியவில்லை. ஆனால் அவன் மீதொரு விருப்பம் இருந்தது.

அவனது பள்ளக்கால ஒருதலைக்காதல் வாழ்க்கையையே திசை திருப்பிப் போட்டுவிட்டது. ஒருநாள் பஸ்ஸில் சனநெருக்கடி சுரேஸ் நெருக்கமாக என்னருகில் நின்றுவிட்டான்.  உண்மையில் என்னாலும் அவ்விடம்விட்டு கொஞ்சம் கூட விலகமுடியவில்லை. அப்பஸ்ஸில் இருந்த பக்கத்துவீட்டு 'மல்லிகா' அக்கா அப்பாவிடம், நானும் அவனும் பேசிக்கொண்டு வந்ததாகவும், காதல் என் கண்னை மூடிவிட்டதாகவும், நாணமின்றி அவனுடன் கதைத்துக்கொண்டு வந்ததாகவும் கூறிச்சென்றுவிட்டார். அன்றிரவு என் மண்டை உடையவில்லை மாறாக, என் அம்மாவின் மண்டை உடைந்து இரத்தம் ஆறாக வீட்டில் பெருக்கெடுத்தது.

"பொட்டப்புள்ளைய இப்படியா வளப்ப அவள சொல்லி குத்தமில்ல ... உன்ன அடிக்கனு", இனியிவ பள்ளிக்குடோ போவத் தேவல...

"ரெண்டு மூனு வருசம் வீட்டோட கெடக்கட்டும், அப்ரம் ஒருதே கையில புடிச்சிக் குடுப்பம்."

நான் தொடர்ந்து இரண்டு மாதங்கள் பள்ளிக்கு செல்லவில்லை. தேர்வும் நெருங்கிக் கொண்டிருந்தது.  எனக்கோ படிப்பின் மீதிருந்த ஆசை வெகுதூரம் சென்றுவிட்டது.

கடந்த வருட இறுதியில், அப்பா வேலையில் இருந்து ஓய்வுப்பெற்றார். மூத்தவன் 'ராதா' 10ஆம் தரம் படிக்கிறான். இளையவன் 'வேனி' குறும்புக்காரன். எங்கள் வீட்டுக் கடைக்குட்டி. 8ஆம் தரம் படிக்கிறான்.

வறுமையும், நான் செய்யாத தவறும் என் படிப்பினை தொடர முடியாமல், செய்துவிட்டது. அப்பாவின் நெருங்கிய நண்பரின் கடையில்தான் நான் இப்போது வேலைச் செய்துக்கொண்டிருக்கிறேன்.

'சரி சரி விடு'

'உன்னோட படிப்பு வீணா போனது. உண்மத்தான்

ஆனா உன்னால இன்னைக்கு தம்பிங்க படிக்குறாங்களே... அத நினைச்சி மனச தேத்திகோ', "உண்மதா அக்கா" என்றாள்.

இரவு உணவை இருவரும் உண்டார்கள். நாளைக்காலை 7மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும். இம்மாதமும் எப்படியாவது 20ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கி வீட்டிற்கு அனுப்ப வேண்டும். என்ற எண்ணம் மட்டுமே அவளது சிந்னையில் இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு பின்பு... மீண்டும் ஒரு கடிதம் வந்தது. மால்னி நலமாக உள்ளாயா? இனி நான் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன். நான் "ஏசியன் மீடியாவில்" பணிபுரிகிறேன். மாத வருமானம் 50ஆயிரத்திற்கு மேல், என்னால் தானே உனது படிப்பினைத் தொலைத்து இன்று கஸ்டப்படுகிறாய். என் வீட்டில் உன்னைப்பற்றி பேசிவிட்டேன். உன்வீட்டு சம்மதத்துடன் திருமணத்தை அவ்வாரத்திலே நிச்சயிக்கலாம் என்று கூறினார்கள். நீ வேலைச் செய்யும் கடை விலாசத்தினை அறிந்து கடிதம் போட்டேன். நான் மனதில் இருக்கிறேனா? என்று தெரிந்துக்கொள்ள. ஆனால் அதற்கு அவசியமில்லை. காற்றோடு காற்றாக என்னை "கொரோனா" தொற்றியுள்ளதாக உறுதிச்செய்யப்ட்டுள்ளது... என்னை மன்னித்துவிடு ஏதோ ஒருவகையில் நீ இன்று இயந்திரம் போல உழைத்துக் கஸ்டப்பட நானும் ஒரு காரணமாகிவிட்டேன்.  இப்படிக்கு, உயர் போனாலும் உன் நினைவு போகாத. "சுரேஸ்"

கடிதத்தை வாசித்த போது கண்களில் கண்ணீர் அருவியாய் செரிந்தன. தவறாக நினைத்துவிட்டேன்! அவன் காதலின் ஆழத்தினை அறியாது அவமதித்துவிட்டோம். அவன் இத்தொற்றில் இருந்து மீண்டு வருவான். அவனது பள்ளிக்காதல் மீண்டும் மணமாலையாகும் என்ற நம்பிக்கையில் விடுதிக்கு திருப்பினாள்

உண்மையில் தகுதி, நிறம், சாதி, மதம் எதனையும் எதிர்ப்பாராது வருகின்ற காதல் பள்ளிக்காதலே. நம் ஒவ்வொருவருடைய மனதிலும் பள்ளிக்காதல் அழிய வராமாக வாழ்கிறது.

                 

                          நன்றி

பரமசிவம் இந்துஜா

நுரெலியா

இலங்கை.

 

 

18.K2K- 00079

பள்ளிக்கூடம்

வெகு காலத்திற்கு பிறகு சொந்த ஊருக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது காமராசுவுக்கு... மனம் முழுதும் மகிழ்ச்சியால் துள்ளியது. பின்னே அவர் வாழ்வின் வசந்தகாலம் அங்கேதானே இருக்கிறது.

முத்து ...முருகேசு...அழகு

புவனா அத்தனை பேரும் இளவயது புகைப்படத் தொகுப்பாக அவர் இதயத்திற்குள் பத்திரமாக இருக்கிறார்கள்.

"என்னங்க ஊருக்கு புறப்படற சந்தோஷம் முகத்துல தெரியுதுஎனக்குத் தெரிஞ்சு கல்யாணமாகி இத்தனை வருசத்துல இப்படியொரு களையை உங்க முகத்துல நான் பார்த்ததேயில்லயே..."

"உண்மைதான் கவிசின்ன வயசுல சாப்பாட்டுக்கே போராட்டம். அப்பா கூலித் தொழிலாளிதாழ்ந்த சாதி வேற... இருந்தாலும் வைராக்கியத்தோட. என்னை படிக்க வெச்சாருபலநேரம் தண்ணீ சோறுதான்... இருந்தாலும் ஸ்கூலுக்கு போனா உலகமே மறந்துடும்... இருக்கறதை பகிர்ந்துகிட்டு ஆலமரத்தடியில விளையாடிகிட்டு பொறாமை எதிர்கால பயம் இல்லாம சேர்ந்திருந்த சந்தோஷம் இப்ப எல்லா வசதி வந்தப்புறம் இல்ல...மேல்படிப்புக்காக சென்னை திரும்பியதும் வாழ்க்கையே மாறிடுச்சு...சின்ன வயசு தொடர்புகள் எல்லாம் அறுந்துடுச்சுஅப்பா அம்மாவும் இங்க வந்துட்டதால ஊருக்கு போக வேண்டிய அவசியமே ஏற்படலைகிட்டத்தட்ட. பதினைஞ்சு வருசத்துக்குப் பிறகு... சொந்த ஊருக்கு போறேன்சித்தப்பா சொத்து விசயத்துக்காக கூப்பிட்டாலும் நான் பள்ளிக்கூட நண்பர்களை பார்ப்போம்ன்ற நம்பிக்கையோடு போறேன்..." நெகிழ்ச்சியோடு சொன்னார் காமராசு.

ஒருவழியாக சொந்த மண்ணின் வாசத்தை சுவாசித்தாயிற்றுசித்தப்பாவோடு கொஞ்சநேரம் உரையாடிக் கொண்டிருக்கையில் உள்ளே வந்தான் முத்து.

"காமராசு... முத்து இந்த ஊர்லயே பெரிய விவசாயின்னு பேரு எடுத்துருக்கான்... புதிய தொழில்நுட்பங்களையும் இயற்கை விவசாயத்தையும் எல்லோருக்கும் சொல்லித்தர அளவுக்கு பெரியாளாயிட்டான்...ரெண்டு பேரும் காத்தாட போயி பேசிட்டு வாங்க... கோழி குழம்பு... கறி வறுவலோட மதிய விருந்து தயாராயிடும்... முத்து நீயும் இன்னிக்கு இங்கதான் சாப்பிடற…"

சித்தப்பா சொல்ல தலையாட்டிவிட்டு புறப்பட்டனர் இருவரும்...

"அடேய்...ஸ்கூலுக்கு போகலாமாஆலமரத்துகிட்ட உட்கார்ந்து பேசலாமா..."

உற்சாகமாய் சொன்னான் காமராசு.

பள்ளி வெகுவாய் மாறிப் போயிருந்தாலும் ...ஆலமரம் மட்டும் அப்படியே இருந்தது

மரத்தின் அடியில் அமர்ந்து நண்பனின் மடியில் தலைவைத்துப் படுத்தான். பத்துவயது காமராசுவைப் போலவே

"நீ மாறவேயில்ல காமராசு... பெரிய வேலைக்கு போயிட்டேன்னதும் எங்களையெல்லாம் மறந்துட்டியோன்னு நினைச்சேன்... நீ அப்படியேதான் இருக்கநம்ம அழகு பஞ்சாயத்து அலுவலகத்துல ப்யூனா இருக்கான். முருகேசு ஹோட்டல் வெச்சுருக்கான்..புவனா நம்ம ஸ்கூல்லயே டீச்சரா இருக்கா... நம்ம செண்பகம் பக்கத்தூரு சப்கலெக்டர் தெரியுமா...நாம எல்லாம் ஒருநாள் சந்திக்கணும்டா... நீ சரின்னு சொன்னா ஏற்பாடு செய்றேன்."

"கண்டிப்பா முத்து... பள்ளிக்கூட நட்பு பொக்கிஷம் மாதிரி... அதை எப்பவும் யாராலயும் மறக்க முடியாது... எல்லோரையும் குடும்பத்தோட சந்திக்க ஏற்பாடு பண்ணு. செலவு என்னோடது... அதுமட்டுமில்ல நம்ம ஸ்கூல்ல நல்லா படிக்கற ஏழை மாணவர்கள் பத்துபேரோட மேற்படிப்புச் செலவை நானே ஏத்துக்கப்போறேன்... நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்... நான் வேண்டிய பணத்தை அனுப்பிடறேன்..."

 காமராசு சொல்ல 'அதுக்கென்னடா பார்த்துகிட்டா போச்சு ..' என உற்சாகமாய்த் தலையாட்டினான் முத்து.

பள்ளிக்கூட நட்பின் இரண்டாம் அத்தியாயம் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

கருத்து: எத்தனை காலமானாலும் பள்ளிக்கூட நட்பை யாராலும் மறந்துவிட இயலாது. ஏனெனில் பள்ளிக்கூட நட்பு சுயநலமில்லாத தோழமையின் உறைவிடம்.

பெயர் கி. இலட்சுமி

 

 

19.K2K 00080

பள்ளிக் கூடம்

"அடியே பேச்சி! இங்கன வா"

" என்ன இசக்கிக்கா? என்ன ஆச்சு திடீர்னு?"

" இல்லைடி எனக்கொரு சந்தேகம். மனசு கெடந்து அடிச்சுக்குது. எங்க வீட்டுக் கிழம் ரெண்டு நாளா இருட்ட ஆரம்பிச்சதும் எங்கேயோ கெளம்பிப் போவுது.வெள்ளையும் சொள்ளையுமா உடுத்திக்கிட்டு மேல ஜவ்வாதுல்லாம் போட்டுக்கிட்டு அது போற ஷோக்கு இருக்கே எனக்குப் புரியவேயில்லை.ஒம் புருஷன் வீட்டில இருந்தாச் செத்தக் கூப்பிடு.கொஞ்சம் எங்க வீட்டுப் பெருசு எங்கே போகுதுன்னு பாக்கச் சொல்லறேன்".

"அடியாத்தி, இசக்கிக்கா, நானும் இதே சமாச்சாரத்தை யாருட்ட சொல்லலாம்னு யோசிச்சேன். நீயும் அதையே சொல்லறியேக்கா. பெரிய ரோதனையாப் போச்சே இந்தப் பெருசுங்களோட".

" அடியே மாரி, பொன்னம்மா, முத்தாயி, இருளாயி எல்லாரும் இங்குட்டு வாங்கடீ", என்று இசக்கி பெருங்குரலில் கூவி அழைக்க, அந்தச் சிறிய கிராமத்தில் அந்தத் தெருவில் இருந்த அத்தனை கிழவிகளும் அங்கு கூடித் தங்கள் கணவன்மார்களின் நடவடிக்கைகள் பற்றி விவாதித்தார்கள்.

இரண்டு நாட்களாக எல்லாக் கிழவர்களும் பிரமாதமாக உடை உடுத்திக் கொண்டு கிளம்பி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்தத் தனி வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கோபத்துடன் பேசி விவாதித்தார்கள். அடுத்த நாள் அவர்கள் எல்லோருமே கிளம்பிக் கிழவர்களின் பின்னால் அவர்களுக்குப் பின்னாலேயே அவர்களுக்குத் தெரியாமல் போய்க்  கையும் களவுமாய் அவர்கள் செய்யும் திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அன்று இரவு யாருக்கும் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் சாயந்திர நேரம்.

கிழவர்கள் ஷோக்காகக் கிளம்பி வழக்கம் போல ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த, அந்த வீட்டை நோக்கி நடை போடக் கிழவிகள் ஒளிந்து ஒளிந்து பின்னா லேயே சென்றார்கள்.

அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒரே சிரிப்பு சத்தம், கலகலப்பும் கும்மாளமும் காற்றில். இளம் பெண் ஒருத்தியின் குரலும் இனிமையாக நடு நடுவில் கேட்டது, திகைப்புடன் கிழவிகள் அந்த வீட்டுக் கதவைத் தள்ளக் கதவு சட்டென்று திறந்து கொண்டது.

" வாங்க வாங்க பாட்டிகள; உங்களுக்காகத் தான் காத்துக் கிட்டு இருந்தேன். ஒழுங்காக் கூப்பிட்டா வர மாட்டீங்கன்னு தான் இப்படி வர வைச்சேன். வந்து உக்காருங்க, பாடத்தை ஆரம்பிக்கலாம்",

என்று அவர்களை வரவேற்றாள் அந்த ஊருக்குப் புதிதாக வந்திருந்த கிராம சேவகி, முதியோர் கல்விக்காகத் திட்டம் போட்டு எப்படியாவது அவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இரவில் பள்ளி ஆரம்பித்துத் தாத்தாக்களை முதலில் பள்ளியில் வெற்றிகரமாகச் சேர்த்து விட்டாள். பாட்டிகள் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள் என்று இரகசியமாகத்

திட்டம் போட்டுத் தாத்தாக்களின் மேல் சந்தேகப்பட வைத்து அவர்களையும் அங்கே வரவழைத்து விட்டாள். அத்தனை பைர் கையிலயும் சிலேட்டு, பலப்பம் கொடுத்து , , , , என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.

கிழவிகளும் வேறு வழியில்லாமல் சிலேட்டில் எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். திருதிருவென்று முழித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் உட்கார்ந்திருக்கும் கிழவிகளைப் பார்த்துக்

கிழவர்கள் வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்து:

பள்ளிக்கூடம் எழுத்தறிவை மக்களுக்குப் பரப்பும் கோயில். நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து நம் நாட்டை சிறக்க வைப்போம்.முதியோர் கல்வியும் அவசியம் தேவை.நமது நாட்டு மக்கள் 100 சதவீதம் கல்வியறிவு பெற நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.

புவனா

 

 

 20.K2K- 00081

 பட்டமளிப்பு விழா

வரும் ஜூன் பதினைந்தாம் தேதி ஆதித்யாவின் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. தன் மகனின் பட்டமளிப்பு விழாவில் பங்கு கொள்வதற்காக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தயாராகத் தொடங்கினாள் நிலா.

தன் கணவன் மகேஷிடம், "ஏங்க... இன்னிக்கி ஷாப்பிங் போலாமா...?" என்றாள்.

"ஷாப்பிங் எதுக்கு....?"

" என்னங்க இப்படி கேக்கிறீங்க... நம்ம பையன் ஆதியோட பட்டமளிப்பு விழா வருதுல... அவனுக்கு நல்ல ட்ரெஸ் எடுக்கணும்... நாமளும் நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு போகவேண்டாமா... அதுக்குத்தான்..." என்றாள்.

"எப்படியோ ஒரு அஞ்சாயிரம் ரூபாய் காலி பண்ணனும்னு முடிவு பண்ணிட்ட. சரி தயாரா இரு. சாயங்காலம் போகலாம்..." என்றான் மகேஷ்.

சாயங்காலம் இருவரும் கடைவீதிக்குச் சென்றனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஷாப்பிங் செய்தாள் நிலா. ஒரு கட்டத்தில் மகேஷ், "போதும் நிலா, வீட்டுக்குப் போகலாம் ரொம்ப அசதியா இருக்கு... " என்றான்.

நிலாவோ, "இருங்க... வந்தது வந்துட்டோம். முடிச்சிட்டு போயிடலாம்…" என்றாள்.

ஒருவழியாக ஷாப்பிங் முடிந்து இருவரும் வீடு திரும்பினர்.

=====

மறுநாள் நிலா, "ஹாலோ... அம்மா நான் நிலா பேசறேன். எப்படி இருக்கீங்க?"

நிலாவின் அம்மா,

"நிலா...நல்லாருக்கியாடா... ஆதி எப்படி இருக்கான்... நாங்க நல்லாருக்கோம்மா...சொல்லுமா என்ன விஷயம்…"

நிலா, "நாங்களும் நலம்...அம்மா, ஆதியோட பட்டமளிப்பு விழா வர்ற பதினஞ்சாம் தேதி சாயங்காலம் ஆறு மணிக்கு நடக்கப்போகுது. நீங்களும் அப்பாவும் மறக்காம வந்திடுங்க..."

நிலாவின் அம்மா, "அப்படியா... ரொம்ப சந்தோஷம் கண்ணு; இப்பவே அப்பாக்கிட்ட சொல்லிடறேன்...கண்டிப்பா வந்துருவோம்…" என்றார்.

======

நிலா மகேஷிடம், "ஏங்க, உங்க அப்பா அம்மாவையும் இன்வைட் பண்ணுங்க. எல்லாரும் வந்தா நல்லாருக்கும்..." என்றாள்.

"எனக்கு நேரமில்ல நிலா. நீயே சொல்லிடு."

"எப்ப பார்த்தாலும் நானே தான் சொல்லணுமா..." என்று கடிந்துக்கொண்டே தன் மாமியார் மாமனாரையும் விழாவிற்கு அழைத்தாள் நிலா.

=====

ஜூன் 15, 2020

சாயங்கால விழாவிற்குக் காலையிலிருந்தே பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தாள் நிலா. அழகு நிலையம் சென்று மேக்கப் செய்துகொண்டாள். மகேஷுக்கு டை கட்டிவிட்டாள். ஆதித்யாவை பார்த்துப் பார்த்து தயார் செய்தாள். ஒரே பையனாயிற்றே சும்மா விடமுடியுமா.

மகேஷ், நிலா, ஆதித்யா, நிலாவின் பெற்றோர் மற்றும் மகேஷின் பெற்றோர், விழா நடைபெறும் இடத்தை அடைந்து முதல் வரிசையில் அமர்ந்தனர்.

 

விழா தொடங்கியது...

"பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் பெற்றோர் அனைவரையும் மனதார வரவேற்கிறோம். பட்டங்களை மாணவர்களுக்கு வழங்க, சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் திரு. ராஜாவை மேடைக்கு அழைக்கிறோம்..."

"அனைத்து பாடங்களிலும் தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேலெடுத்து, வகுப்பிலேயே முதலாவதாக வந்த மாணவர் ஆதித்யாவை மேடைக்கு அழைக்கிறோம்."

பெயரைக் கூப்பிட்டவுடன், கம்பீரமாய் மேடை ஏறிச்சென்று பதக்கத்தையும் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட, ஒன்றாம் வகுப்புப் படிக்கும், தன் மகன் ஆதித்யாவை பார்த்துப் பெருமிதமடைந்தாள் நிலா. மகேஷும், ஆதியை கைத்தட்டி ஊக்குவித்தான். இதைக்கண்ட ஆதியின் தாத்தா பாட்டி மிகுந்த சந்தோஷமடைந்தனர். மென்மேலும் ஆதித்யா பல விருதுகளும் பட்டங்களும் பெறவேண்டுமென வாழ்த்தினர்.

குழந்தைகள் அனைவரும் பள்ளியின் முன் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விழா இனிதே நிறைவுற்றது!

--------

கருத்து

உங்கள் பிள்ளைகள் அடைந்த வெற்றி சிறியதாய் இருப்பினும் அதைப் போற்றிக் கொண்டாடி அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாய் அமையும்.

Narmada

 

 

 21.K2K-00083

பள்ளிக்கூடம்

என் பெயர் மாறா, முப்பதி ஆறு வயது ஆண்மகன். ஒரு முறை மட்டுமே திருமணம் நடந்து ஐந்து வயது பெண் ஓருத்திக்கும், இருபத்தியெட்டு வயது பெண்ணிற்கும் தந்தையாக உள்ளேன். புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன். இந்த லாக்டவுண் நாட்களை கழிப்பது பெரும் பாடாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி நகர ஆரம்பித்தது. எனக்கு டைரி எழுதும் பழக்கம் பள்ளிக்காலத்தில் இருந்தது. அன்று டைரி எழுதும் பழக்கம் பற்றி பேசுகையில் அவள் எதச்சையாக, " பா... உன் டைரி காட்டேன் ப்ளிஸ் ப்ளிஸ்" என்று கேட்டாள்.

"அது மேல எங்கையோ இருக்கு பாப்பா" என்று கூறி தட்டிக் கழிக்க பார்த்தேன்.

பிடிவாதமாக பார்த்தே ஆகவேண்டும் என்று கேட்டாள். ஒரு வழியாக டைரியை அவள் கையில் கொடுத்து நீயே ஒரு பக்கம் எடு என்று கூறினேன்.

டைரியை என் நடையில் படிக்க ஆசைப்பட்டாள். டைரியின் கதை கீழ்வருமாறு...

அன்று 02/08/2003. நான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பீ.டீ. பீரியட் முடித்து நாங்கள் வகுப்பறைக்கு திறும்பிக்கொண்டிருக்கிறோம். அப்போது ஒரு பழூப்பு நீல கலர் TVS SCOOTY வண்டி எண் TN02BR2380 கடந்து சென்றது. சட்டென தலை திரும்பி பார்த்தது. என் நண்பனிடம் நான் " யார்ரா இது புது மிஸ்ஸா. அழகா இருக்காங்கல" என்று கூறியபடி வகுப்பறைக்கு சென்றோம். ஆனால் கண்கள் அந்த உருவத்தை படம் பிடித்து. உருண்டையான முகம், மல்லிப்பூ கண்ணு, நீண்ட அடர்த்தியான கூந்தல். அடுத்து மீனா மிஸ் வகுப்பு என்பதால் நாங்கள் தயாராகிக கொண்டிருந்தோம். திடீரென்று மீனா மிஸ் கூடவே நான் பார்த்த அதே முகம் நின்றது. மனது படபடவெண்று அடித்துக்கொண்டது. கனவா நினைவாக என்று கூட புரியவில்லை. " இனிமே இவங்கதான் உங்களுக்கு MATHS எடுக்க போறாங்க" என்று கூறினார். தலைகால் புரியாத சந்தோஷம் எனக்கு.

" என் பேரு கோகிலாஇனிமே நான் தான் உங்களுக்கு கணிதம் சொல்லித் தறப்போறேன்" என்று சொல்லி ஆரம்பித்தார். பெயரை மட்டும் பத்து முறையாவது மனதுள் உச்சரித்து பார்த்திருப்பேன். அவர் அங்கு பாடம் எடுக்க நான் இங்கு கடைசி பெஞ்சில் சிரித்துக்கொண்டிருப்பேன் தனியாக. அது ஜெயம் ரவி நடித்த "தீபாவளி" திரைப்படம் வந்த காலக்கட்டம். அதில் "காதல் வைத்து காதல் வைத்து காத்திருப்பேன்" என்ற பாடலை எப்போதும் மனுமுனுத்து கொண்டிருப்பேன்.

நண்பர்கள் அனைவரும் "கோக்கி, கோக்கி..." என்று கிண்டலடிக்க ஆரம்பித்தனர். நான் வெட்க்கப்பட்டு கொண்டிருப்பேன். அதுமுதல் பள்ளி நுழைவு வாயிலை தாண்டிய நொடி கோகிலா மிஸ் எங்கே என்று கண்கள் தேட ஆரம்பித்துவிடும். பார்த்தால் தான் அந்த நாளே சரியாக செல்லும் என்றபடி மாறியது.

எப்படியாவது மிஸ்ஸின் செல்லப்பிள்ளையாக மாறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. அதற்காக நிறைய சேட்டைகள் செய்தேன். என் பெயர் மிஸ்ஸிடம் பரிச்சையமானது. மிஸ் எப்போதும் கையில் ஒரு மூங்கில் கொம்பு வைத்திருப்பார் ஆனால் அவர் யாரையும் அடித்து பார்த்தே இல்லை. மிஸ்ஸிடம் பிடித்தது இந்த ஒரு குணம் தான். படித்தவன், படிக்காதவன் பாகுபாடு இல்லாமல் நடத்துவார். "நீங்க எல்லாரும் என் பிள்ளைங்கடா..." என்று அடிக்கடி சொல்லுவார்.

இடைவேளை நேரங்களில் மிஸ் இருக்கும் வகுப்பறை தேடிச்சென்று ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.

நாட்கள் கழிந்தன, பதினோராம் வகுப்பு முடித்து பண்ணிரெண்டாம் வகுப்புக்குள் நுழைந்தோம். ஆசிரியர்கள் மாறினர். கோகிலா மிஸ்ஸும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மோகன் சார் நியமனம் ஆனார். பெரிய தேர்வு என்பதால் நிறைய படிக்க நேர்ந்தது. மிஸ்ஸை பார்ப்பது அறிதானது. பள்ளி பேர்வல் விழா நடந்து முடிந்தது. எல்லா ஆசிரியரையும் பார்த்துவிட்டு கடைசியாக கோகிலா மிஸ்ஸிடம் சென்றேன். பள்ளி வாழ்க்கை முடிய போகிறதே என்ற வருத்தம் ஒரு பக்கம், மிஸ்ஸை இனி பார்க்க முடியாதே என்று வருத்தம் இன்னொரு பக்கம்.

"என்னடா. நல்லா படி, பெறிய ஆலா வா. வந்து ஸ்கூலுக்கு உதவி பண்ணு, இது விட பெறிய சந்தோஷம் எங்களுக்கு என்னவா இருக்க முடியும் சொல்லு" இது தான் கோகிலா மிஸ். ஏன் எல்லா ஆசிரியருக்கும் இருக்கும் ஒரு அலாதியான குணம். கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்தேன்.

"அழாத மா. ச்ச என்ன இது சின்னப்புல்ல மாரி" என்று தோளில் தட்டி ஆறுதல் சொன்னார், அதுதான் மிஸ்ஸை கடைசியாக பார்த்தது.

"அவ்வளோ தான் என்று டைரியை மூடி வைத்தேன்".

"ம்மாமா... அப்பா என்ன பண்ணிருக்காரு பாரு" என்று என்னை உதறி விட்டு அவள் அம்மாவிடம் ஓட ஆரம்பித்தாள்...

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல காதலை கடந்து வருகிறான். அதில் என்றுமே அழியாதது அவனுடைய முதல் காதலும், பள்ளி ஆசிரியர் மேல் வரும் அந்த ஈர்ப்பும் தான். இது அழகானது, புனிதமானது. இது கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்றே கூறுவேன்.

 

. ஹரிகருஷ்ணன்

 

 

22.K2K-00084

 பள்ளிக் கூடம்

 

என் வங்கிக் கிளையில் எல்லோரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள், என்னவென்று கேட்டேன். நம் வங்கியில் இருந்து இந்த முறை பழைய நோட்டுக்களை திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு போணுமாம். உடன் செல்வது நீங்கள் என்று மேனேஜர் சொன்னார்.

அடுத்த மாநிலம் என்பதால் வாழ்த்துக்கள் குவிந்தன. எஸ் கே ஸி (ஸ்வீட், காரம், காஃபி) பார்ட்டி கேட்டார்கள்.

10 மரப் பெட்டிகளில் பழைய நோட்டுக்கள் அடைக்கப் பட்டன. போலீஸ் பந்தோபஸ்த்து கொடுக்கப் பட்டது.

பந்தோபஸ்த்து பார்ட்டியின் தலைவரைப் பார்த்ததும் எனக்குப் பகீர் என்றது மனம்.

பல கோடி ரூபாய் பணம் இவரை நம்பி செல்கிறோமே என பயம் உலுக்கியது.

அவர் இன்ஸ்பெக்டர். என் பள்ளிக் கூடத்தில் எனக்கு மூன்றாண்டு சீனியர்.

என் வாழ்க்கை ரதம் 20 ஆண்டுகள் பின்னோக்கி ஓடியது.

எங்கள் பள்ளியில் மாதத் தேர்வுகள் நடக்கும். அதை நீண்ட நோட் புக்கில் எழுத வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு நோட் புக். 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான மும்மூன்று பிரிவுகளுக்கான நோட் புக் கட்டு கட்டாக ஆசிரியர் பொது அறை ரேக்குகளில் இருக்கும்.

திடீர் திடீர் என்று சில நோட்புக் கட்டுக்கள் மாயமாய் மறைந்தன.

தலைமை ஆசிரியர், ஆசிரியர் அனைவருக்கும் சவாலாய் அமைந்தது. என் அண்ணனும் ஓர் ஆசிரியர் என் பள்ளியில்.

மாதத் தேர்வு நோட்டுகளில் தேர்வு தொடங்கும் முன் புதிய பக்கத் தொடக்கத்தில் ஆசிரியரின் சிறு கையொப்பம் தேதியுடன் இடப்படும்.

நான் ஒருநாள் லாலா மிட்டாய் கடையில் கால் கிலோ மிக்சர் வாங்கப் போனேன். கடைக்காரர் சணலில் கட்டித் தொங்கப் போட்டிருந்த பெரிய தாளைக் கிழித்து எடுத்தார் மிக்சரைப் பொதிய. திடீரென என் பொறியில் ஏதோ தட்டியது. அந்த தாளில் சேரன் சாரின் சிற்றொப்பமும் கடந்த மாத தேதியும் காணப் பட்டன.

அண்ணே! அந்த தாள ஏங்கிட்ட தாங்க; வேற தாள்ல மிச்சர பொறியுங்கன்னேன்.

என் அண்ணனிடம் கொடுத்தேன். தலைமை ஆசிரியிரிடம் சேர்ந்தது. லாலா கடைக் காரர் பள்ளிக்கு வர வழைக்கப் பட்டார். வகுப்பு வகுப்பாக ஏறி இறங்கினார். 

பாரி வேந்தன் தான் என்னிடம் நோட்புக் விற்றவன் என்று அடையாளம் காட்டி விட்டு சென்று விட்டார் லாலா கடைக் காரர்.

மூத்த ஆசிரியர் கணேச ராம் பாரியை ஆசிரியர்அறைக்கு அழைத்துச் சென்று பூட்ஸ் காலால் மிதித்தார்.

பாவமாக இருந்தது எனக்கு. அதன் பின் பாரியை இன்றுதான் பார்க்கிறேன் இன்ஸ்பெக்டராக, கரன்ஸி நோட்டின் காவலாளியாக.

மனதில் பயம் கதி கலங்க வைத்தது. பல கோடி பத்திரமாய் சேருமா? பாரி பழி வாங்குவாரோ என் மீது?

பாரி என் தோழில் கையிட்டார் அன்போடு. தம்பி வங்கியில் பணியாற்றும் உன்னைப் பாத்து பெருமயாயிருக்கு - ன்னார்.

அவராகவே சொன்னார் - “தம்பி நான் இன்ஸ்பெக்டாரா இருக்க காரணமே நம்ம பள்ளிக்கூடம் தான்.”

சிறு வயதில் விபரம் தெரியாம, வீட்டுலேயே காசு திருடி சிகரெட் குடிச்சேன். பின் பள்ளியில் திருடி, பல கெட்ட நண்பர்களோடு சேர்ந்து பலான படம் பார்த்தேன்.”

கணேச ராம் சாரின் ஒரே பூட்ஸ் கால் மிதியில் அத்தனையும் மறந்தேன். எனக்கு தலைமை ஆசிரியர் டி.ஸி. தந்து விடுவார் என பயந்தேன். அனைவரும் என்னை மன்னித்து அருளினர். ஒரு சஸ்பென்ஷன் கூட செய்ய வில்லை. என் தந்தைக்குக் கூட சொல்ல வில்லை.”

வகுப்பில் கடைசி மாணவனாய் இருந்த நான், என் பிரிவில் முதல் ரேங்கும், பள்ளிக் கூடத்தி இரண்டாம் ரேங்கும் எடுத்தேன்

இதைக் கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்தினேன். பாரி விழுத்து இருக்க நான் நிம்மதியாக தூங்கினேன்.

Moral / நீதி: மாணவர்களின் அடித்தளம் பள்ளிக் கூடமே. சில மாணவர்கள் செய்யும் தவறுகளை திருத்துவதே பள்ளி செய்யும் நல்ல காரியம்.

- சிறுத்தொண்டன் சு.லி. பாண்டியன்

 

 

23.K2K-00086

பள்ளிக்கூடம் *

குடும்ப உறவுகளை தாண்டி கூட வரும் உறவுகளையும் அதாவது நண்பர்கள்

நம் வாழ்க்கை திசையை தீர்மானிக்கும் வரை பொறுப்புகலையும் உலகையும் கற்றுக் கொடுக்கும் இரண்டாவது பெற்றோர்களையும் அதாவது ஆசிரியர்கள்

உயிர் பிரிந்தாலும் உன் நினைவுகள் பிரியாதென்று காதல் என்றால் என்னவென்று கூட தெரியாத வயதில் தோன்றும் உணர்வு

தோண்ட தோண்ட ஊற்றெடுக்கும் நிலம் போல் அழியா செல்வமாக அறிவையும் கல்வியையும் என்னை போன்று அனைவரும் பெற கூடிய இடம் இந்த பள்ளிக்கூடம்

அதிகாலை துவங்கிய இந்த பயணம் வெறும் பயணம் மட்டும் அல்ல நீண்ட நாள் பிறகு நான் பயின்ற பள்ளியையும் என் நண்பர்களையும் காணப் போகும் பயணம் இது மேலும் சில நினைவுகளை சேர்க்க போகும் பயணம் இது

நாளை என் பள்ளியின் கல்வி ஆண்டு விழா

அங்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகளை அனுபவிக்கும் முன் அதனை கற்பனையாக அனுபவிக்க நினைத்து சற்று அயர்ந்தேன்

நான் வந்து சேரும் முன்பே என் வருகைக்கு காத்திருந்த நண்பர்கள் நான் வந்ததும் கட்டி அனைப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன்

எனக்கு கிடைத்தது தர்ம அடி காரணம் அன்று என் பிறந்தநாள்அதற்கு பரிசாக பள்ளி காலத்தில் துவங்கிய அடி உதைகள்

வலியுடன் கூடிய சிரிப்பு

கலங்கிய கண்களுடன் கட்டி அனைப்பு

அனைவரையும் நலம் விசாரிக்க அவசியம் இல்லை வாட்ஸ்ஆப் குழுவில் தினமும் பரிமாறிக் கொள்ளும் தகவல்கள் தான் காரணம்

வட்டமாக அமர்ந்து நினைவுகளை பகிர்ந்து பேசி சிரித்தோம் கேலிகள் அறட்டைகள் அரங்கமே அதிர்ந்தது இந்த நாளும் ஒரு நினைவு சின்னமாக அமைந்தது

வகுப்புக்கு செல்லாமல் விளையாட சென்றது

கேள்விக்கு பதில் அளிக்காமல் திட்டு வாங்குவது

பாடம் எடுக்கும் வேளையில் உண்பது பேசி சிரிப்பது

விளையாட்டுகள் சண்டைகள்

ஸ்ருதி சேராத பாடல்கள் மேசையின் மேளங்கள்

கழிவறையின் கிறுக்கல்கள் நட்பில் சருக்கல்கள்

இன்பம் துன்பம் நிறை குறை சந்தோஷம் கவலை போட்டி பொறாமை லாபம் நட்டம் வெற்றி தோல்வி என எதுவும் தெரியாத இடமும் பள்ளி தான் இவை அனைத்தையும் தோற்றுவித்த இடமும் பள்ளி தான்

மலரும் நினைவுகள் மலராத நினைவுகள் என அனைத்தும் மனதிலும் வார்த்தையிலும் வந்து போயின

எங்களின் சத்தம் இந்த சுவர்களில் என்றும் எதிரொலிக்கும்

எங்களின் மூச்சு இந்த பள்ளியின் காற்றில் என்றும் கலந்திருக்கும்

பிரியும் வேளை எங்களின் கண்ணீர் துளிகள் இந்த பள்ளியின் தரையில் வற்றாது

எங்களின் ரேகைகள் மேசையில் இருந்து மறையாது

நாங்கள் தடங்கள்பதித்த இடங்கள் எங்களை மறவாது

என்று நினைத்துக் கொண்டு நான் சிரித்துபடி இருக்க என் முகத்தில் தண்ணீர் துளிகள் கண் விழித்து பார்த்தால் தோசை கரண்டியுடன் அம்மா எழுந்திரு எருமை ஸ்கூல்க்கு டைம் ஆச்சு னு கத்தினார் சிரித்துக் கொண்டே பள்ளிக்கு புறப்பட்டேன்

காலங்கள் கடந்தும் அழியாத சிலவற்றுள் பள்ளி நட்புக்களும் நினைவுகளும் ஒன்று, நினைவுகளை கொணருங்கள் உண்மைகளை உணருங்கள் ...நன்றி

 

மு. தீபக்

....

 

24.K2K 00099

செல்லியின் பள்ளிக்கூடம்

 

செல்லி நூறாவது தடவையாக அந்த புத்தக பையை தொட்டு பார்த்தாள்.  பளபள வென்ற ரெக்ஸின் பை புத்தகம் நோட்டு புத்தகத்துடன் மொடமொடப்பாக இருந்தது.  அவள் அம்மா சிரித்தபடி தன் கணவனிடம் " யோவ் உன் பொண்ணை பாரு நாளைக்கு புது ஸ்கூல் போகப்போகுதுல்ல அந்த சந்தோஷம்.  " சிரித்த ரங்கன் " கெட்டிக்கார புள்ள, இந்த புழைப்பு நம்மோட போகட்டும் புள்ள நல்லா படிச்சு டிகிரி வாங்கி கவர்மண்டு அதிகாரி ஆகட்டும், என்ன செல்லம் அதிகாரி ஆனால் அப்பனை பாப்பியா? " என்று கேலி செய்து சிரித்தான்.

"அப்பா அந்த பள்ளிக்கூடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.  அம்மா அங்கே கூட்ட போகும்போது நான் அங்கே படிக்கணுமின்னு ரொம்ப ஆசை படுவேன்.  பெட்டி பெட்டியா வகுப்பறை.  பெரிய மைதானம்.  டீச்சர் எல்லாம் சுத்தமா அழாக இருப்பாங்க.  என்னை பார்த்து பாப்பா எப்ப படிக்க வரேன்னு கேப்பாங்க" என்று கண்கள் விரிய சொன்னாள் செல்லாயி.

ரெங்கன் ஓரு நேர்மையான தள்ளுவண்டி காய்கறி வியாபாரி.  ஒரே பெண் செல்லி.  குடி கெட்ட பழக்கம் இல்லாத சொக்க தங்கம் ரெங்கன்

மனைவி முத்துவும் தங்கமான குணம்.  இருவரின் ஒரே ஆசை செல்லாயி முத்து ஸ்வீப்பர் ஆக வேலை செய்யும் அந்த கான்வென்ட்ல செல்லாயி படிக்கணும் என்பதுதான்.

ஓரு பெரிய உயர்தர ஆங்கில பள்ளியின் சிறிய பிரான்ச் இந்த பள்ளி.  நிறைய fees கறக்கும் பள்ளி.  செல்லாயிக்கு சீட் வாங்க ரெங்கன் ரெண்டு வருஷம் அலையா அலைந்து அப்புறம் மிகவும் பெரிய மனசு நிர்வாகம் பண்ணி சீட் கிடைச்சிருக்கு.  RTE QUOTA என்பதால் பீஸ் இல்லை ஆனால் யூனிபோர்ம் அந்த fees இந்த பீஸ் என்று எக்க சக்க செலவு.  இருவரும் சிக்கனம் குடித்தனம் என்பதால் சமாளிக்க முடிந்தது

ஆச்சு செல்லி நாளை ஸ்கூல் போகப்போறா 

மறுநாள் விடியற்காலை எழுந்து தன் அம்மாவையும் எழுப்பி பரபரவென கிளம்பினாள் செல்லி. அப்பா அம்மா கையை பிடிச்சு கம்பிரமாய் பள்ளியில் நுழைந்தாள்.  எடுத்தவுடன் நிற்கும் வரிசையான கார்களை பார்த்தவுடன் அவளுக்கு ஒரே மலைப்பு.

-கிளாஸ் ரூமிலும் மற்ற பணக்கார பெண்கள் நடுவே செல்லி தனியாக தெரிந்தாள்  அவளோடு யாரும் பேசவில்லை மற்றவர்கள் சரளமாக அங்கிலம் பேச அவ்வளவு ஆங்கில அறிவு இல்லாததால் இவள் வாய் தெறக்கவில்லை. அவள் மனதில் பய பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. சாப்பாடு ஹாலிலும் எல்லோரும் விதவிதமான சாப்பாடு சாப்பிட செல்லி தனியே உக்காந்து ஆறிப்போன எலுமிச்சை சாதம் சாப்பிட வெட்கமாய் இருந்தது. மறு நாளும் இதே கதைதான்.

இரண்டு நாட்கள் கழிந்துவிட்டது செல்லி சந்தோசமாய் இல்லை.

இப்போது கிளாஸ் மிஸ் அவளிடம் ஓரு நீண்ட தாளை கொடுத்து " இதில் இருப்பதை எல்லாம் இரண்டு நாளில் நீ கொண்டு வர வேண்டும் " என்று சொன்னார்கள், தாளில் ஆங்கிலத்தில் ஏதோ தட்டச்சு செய்திருந்தது.  செல்லி வீட்டில் யாருக்கும் அங்கிலம் தெரியாது.  நல்ல வேலையாக ரெங்கன் காய்கறி கொடுக்கும் பானு அக்கா படித்து சொன்னார்கள், " ரெங்கா அவ ஸ்கூலில் ஒவ்வ்வொரு வாரமும் ஓரு கலர் தீம் உண்டாம் அன்று அந்த கலர் டிரஸ் போடணுமாம்.

அதற்கு மேட்ச் ஆக ஷூ பை எல்லாம் வாங்கணுமாம் அதுவும் அவர்கள் சொன்ன கடையில்தான் வாங்கணுமாம், என்று ஓரு பெரிய கடை பெயரை சொன்னாள் பானு, மிகவும் பெரிய கடை அது விலையும் மிகவும் அதிகம்.

அன்று சாயங்காலம் ரெங்கன் தள்ளுவண்டியை ஓரு ஓரம் நிறுத்திவிட்டு தயங்கி தயங்கி போய் இந்த சீட்டை காட்டி விலை கேட்டான்.  அவனை மேலும் கீழும் பார்த்த கடை ஆள் அந்த பெரிய பள்ளியின் பெயரை சொல்லி அந்த ஸ்கூல் லிஸ்ட் என்று கூறி ஓரு பெரிய விலைப்பட்டியல் தந்தார். எதற்கு என்று கேட்க ரெங்கன்  என் பெண் அங்கே படிக்கிறாள் என்று பெருமையுடன் சொன்னான்.  அவனை சற்று பரிதாபத்துடன் பார்த்த அந்த பெரியவர் " அடிக்கடி இந்த மாதிரி வாங்கவேண்டி இருக்கும் " என்று சொன்னதில் உன்னால் முடியுமா என்ற கவலை இருந்தது அந்த விலை பட்டியல் பார்த்த ரெங்கனின் தலை சுற்றியது.  ஆயிர கணக்கில் விலை.  ரெங்கன் ஓரு நாள் வியாபாரத்திற்கு வாங்கும் காய்கறியின் அடக்க விலையோடு அதிகம், இதை இரவு செல்லி தூங்கியபிறகு தன் மனைவியிடம் சொல்ல அவளும் கவலை பட்டாள் ஆனால் செல்லி தூங்கவில்லை; மறுநாள் செல்லி பரபப்பாக எழும்பவில்லை.  நிதானமாக எழுந்தாள்.  தன் அப்பாவிடம் " அப்பா இந்த பணக்கார ஸ்கூல் எனக்கு வேண்டாம்.  என் பிரண்ட்கள் படிக்கும் பக்கத்து அரசு பள்ளி எனக்கு போதும் அப்பத்தான் நான் சகஜமா நல்லா படிப்பேன்.  பெரிய ஸ்கூல் எனக்கு பிடிக்கவில்லை.  " என்று கூறி பதிலை எதிர் பார்க்காமல் பல் விளக்க ஓடினாள்.

நன்கு படித்தால் அரசு பள்ளியிலும் சாதனை செய்யலாம், பகட்டுக்கு மயங்க வேண்டாம்.

 

V. Krishnakumari

Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY