எதிப்பார்ப்பு

1.K2K - 00002  

 எதிப்பார்ப்பு

உண்மையும் கற்பனையும் கலந்தக்கதை:

சுகாஷினியும் நந்தினியும் சிறு வயதிலிருந்தே தோழிகளாவர். ஒன்றாகவே தனது இளங்கலை பட்டப்படிப்பைப் படித்து கொண்டு இருந்தார்கள். இருவரும் எப்போவும் ஒன்றாக தான் இருப்பார்கள். நந்தினி எல்லாம் நாட்டு நடப்பு விஷயத்தையும் சேகரிப்பவள். சுகாஷினிக்கு வெளிநடப்பு, சமுதாயம் பற்றின தெளிவு இல்லை. ஏனென்றால் அவள் வீடு தான் உலகம் அவளுடைய அப்பா, அம்மா பாசப்பிணைப்பினால் அவளை தனியாக எங்கேயும் அனுப்ப மாட்டார்கள். கல்லூரிக்கு போகும் போது அவளுடைய அப்பா தான் கூட்டிட்டு போவார், வீட்டிற்கு திரும்பும்போது மட்டும் தான்    தனியாகப் போவாள்.  

அன்று ஒரு மாலை சுகாஷினி வீட்டுக்கு நடந்து போய்ட்டு இருந்தாள்   அப்போ 3 திருநங்கைகள் பார்த்தாள் அவர்கள் சுகாஷினியிடம் 20 ரூபாய் கேட்டார்கள், அவள் பயத்தில் 20 ரூபாய் இல்லை என்று சொன்னால். அதற்கு அவர்கள் 5 ரூபாய் கொடு எனக் கேட்டார்கள். இவள் பையில் தேடினால் 10 ருபாய் தாள் இருந்ததால் அவர்களிடம் கொடுத்தால் உடனே அவர்கள் சுகாஷினி தலைமேல் கையை வைத்தவுடன் அவளின் இருதயம் படப்படன்னு துடிக்க ஆரம்பிச்சிருச்சு ஆசிர்வதித்து சென்ற பின் ஓர் பெரிய மூச்சினை விட்டால், அப்போது அவள் இன்னொரு பக்கம் திருநங்கையரின் கூட்டத்தை பார்த்தாள் அவர்கள் கண் தெரியாத மாற்றுத்திறனாளியையும் மற்றும் ஊனமுற்றோர் அவர்களையும் மிகவும் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க வைத்தனர். அவர்களின் செயல் சுகாஷினிக்கு ஆச்சர்யமா இருந்திச்சி அவர்களை பற்றி  தெரிந்து கொள்ள ஆயுத்தமானால் வலைத்தளங்களில் இவர்களை பற்றி  படிச்சி தெரிந்து கொண்டதும் அவளுக்குள் இருந்த பயம் பறந்து விட்டதனால் அவர்கள் கிட்ட பேசி பழகனும்னு    ஆசைப்பட்டாள் ஓர் எதிர்பார்ப்புடன். நான் அவர்களை எல்லாம்   தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று தான் சொல்லுவேன் என்றுமே..!!     ஏனென்றால் அவர்களெல்லாம் நல்ல உள்ளம், மிகச்சிறந்த ஆற்றலும்   கொண்டவர்கள்.சிலர் வாழ்வாதாரத்துக்காக தவறான பாதையில் தேர்ந்தெடுத்து செல்வதால் தான் ஒட்டுமொத்த திருநங்கையரையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இந்த சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாதனால் தான் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தான் நம்மிடம் பணம் கேட்கிறனர். உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்யுங்கள் எக்காரணம் கொண்டும் அவர்களை அவமானப்படுத்தாதீங்க, அசிங்கப்படுத்தாதீங்க..!! அவர்களுக்கு ஹோர்மோன் குறைபாடு காரணத்தால் தான் அவர்கள் தோற்றத்தில் மாறுபட்டு இருக்கிறார்கள் தவிர அவர்களும் நம்மள மாதிரி சகஉயிர்கள் தான். அவர்கள் பிறக்கும்போதே தான் தோற்றத்தில் மறுபடவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கவில்லை இயற்கையாகவே அவர்களின் உடம்பில் ஏற்படுகிற மாற்றத்துக்கு "அவர்கள் என்ன பண்ணுவாங்க?" நம்மளை மாதிரி சகஜமா வாழனும் என்ற எதிர்பார்ப்புடன் தான் இருந்திருப்பார்கள்.இந்த சமுதாயத்தில் வைராகியத்துடன் உயர்ந்து சாதித்து காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கலந்த எண்ணத்துடன் பல போராட்டங்களை கடந்து பல  துறைகளில் அவர்களின் தனி திறமையின் மூலம்  சாதித்து விருதுகளை பெற்றிருக்கார்கள்.

நெறி: நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் நடக்காமல் போவதற்கும் எதிர்பாராத ஒன்று நடக்கும் போது நம் வாழ்க்கை தொலைவாக மாறுகிறது..!!

- லக்ஷ்மி பிரியா

 

 

2.K2K-00004

எதிர்பார்ப்பு:

பல தொலைவு கடந்து, மேடு பள்ளம் தாண்டி ஆர்பரித்து ஆரவாரத்துடன் வந்து கொண்டிருந்தால் பொன்னி நதி. அவளின் எழில் கொஞ்சும் அழகையும், மாலை நேரத்தின் மனதை வருடும் ரம்யத்தையும் கண்டு மகிழ்ந்தவாறு கைக்கடிகாரத்தை பார்த்தவாறு காத்துக் கொண்டிருந்தான் மணி. தாவணி அணிந்து சிறகடித்து பறந்து வரும் தேவதையென மெல்ல நடந்து வந்தாள் யாழினி. அவளை கண்டதும் காய்ந்து கிடக்கும் கழனியின் மேல் வந்து விழும் மழை துளியென மனம் மகிழ்ந்தான் மணி. அவ்வளவு நேர காத்திருப்பை காற்றோடு கறைந்து போக செய்தது யாழினியின் வருகை. மணி, யாழினி இருவரும் பள்ளி வயதில் இருந்து காதலித்து வந்தார்கள். மணி கல்லூரி படிப்பு முடிந்து தந்தைக்கு உதவியாக விவாசயம் செய்து வந்தான். யாழினி படித்து முடித்துவிட்டு தன் வீட்டு சுமையை தன்னால் முடிந்தவரை குறைக்க ஒரு விடுதியின் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தாள்.

இருவரும் வாரத்தில் ஒரு நாள் சந்தித்து பேசுவது வழக்கம், அதுபோல அன்றும் அவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றார்கள். மணி எப்போதும் யாழினியுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும், தினமும் யாழினியை பார்க்க வேண்டும் என்று பல எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் கொண்டிருந்தான். யாழினிக்கும் அதுபோன்ற எண்ணங்கள் இருந்தாலும் வேலை காரணமாகவும் மற்றும் தனது குடும்பத்தினருக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்ததினாலும் அவ்வளவாக வெளிபடுத்திக் கொள்ளமாட்டாள். இதன் காரணமாக இருவருக்கும் இடையே சின்ன சண்டைகள் நடப்பது வழக்கம், பின்பு அவர்களாகவே சமாதானம் செய்து கொள்வதுமாக இருக்கும். இவ்வாறாக அவர்கள் நாட்கள் கடந்தன, பின்பு இருவரும் அவர்கள் காதல் பற்றி வீட்டில் சொல்வதென்று முடிவு செய்தார்கள். இருவர் வீட்டிலும் பெரிதாக எதிர்ப்புகள் இல்லை, ஆனால் மணியின் வீட்டில் சில எதிர்பார்ப்புகள் இருந்தன, அதை அவர்கள் யாழினி வீட்டுக்கு தெரியப்படுத்தினார்கள், யாழினியின் தந்தை அவரது சக்திக்கும் மேல் முயன்று அதை பூர்த்தி செய்தார், திருமணமும் நடந்து முடிந்தது. இருவருடைய நாட்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும், இன்பமாகவும் கழிந்தன.

திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தன மணி, யாழினி இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. காதல் நாட்கள் கடந்தன, நேரத்திற்கு தண்ணிர் வராததாலும், மழை பெய்யாததாலும் விவாசயம் மிகவும் பாதிப்படைந்தது. இதனால் மணி தன்னுடைய வேலைக்காக அடிக்கடி வெளியில் செல்வதும் வருவதுமாக இருந்தான். அதன் காரணமாக யாழினி மற்றும் குழந்தையுடன் அவனால் அதிக நேரம் செலவிட முடியாமல் போனது. ஆரம்பத்தில் அதை புரிந்து கொண்ட யாழினி நாட்கள் செல்ல செல்ல அவளுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மணியும் யாழினியும் ஒன்றாக உணவு உண்பது, வெளியில் செல்வது போன்றவை அரிதிலும், அரிதாகி போயின. யாழினுக்கு மணியுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கு இடையே வீட்டில் சண்டைகள் நிகழ ஆரம்பித்தன. இதனால் அந்த வீட்டில் மகிழ்ச்சி என்பதே இல்லாமல் போனது. ஒரு நாள் இருவரும் இது பற்றி அமர்ந்து பேசுவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் இடையே உள்ள வேற்றுமைகள், அவர்கள் எதிர்பார்ப்புகளை இருவரும் தெரியப்படுத்தினர். பின்பு அவைகளை எவ்வாறு களைவது என்பது குறித்தும் தீர்மானித்துக் கொண்டனர். இருவரும் அடுத்தவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தனர், வீட்டில் மீண்டும் மகிழ்ச்சி நிலை கொண்டது, இருவர் வாழ்வும் மிகவும் ஆனந்தமாகவும், மகிழ்வாகவும் சென்றன.

"உறவுகளின் சிறு சிறு எதிர்ப்பார்ப்புகள் எழுவது இயல்பே, அதை மற்றவர் புரிந்து கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு அதை நிறைவேற்றினால் அனைவரின் வாழ்வும் இன்பமாகும்". "எதிர்ப்பார்ப்பு ஏமாற்றங்களாக மாறினால் அது நிரந்தர ஏக்கங்களையும், துன்பத்தை தந்துவிடும்". "மனம் திறந்து உரியவரிடம் ஏதிர்பார்ப்புகளை வெளிபடுத்துவோம், உறவுகளை அதன் வழி வலுபடுத்துவோம்". உரிமை உள்ளவருடன் மட்டுமே எதிர்பார்ப்புகள் எழும் என்பதை புரிந்து கொள்வோம்.

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

3.K2K - 00008.

எதிர்ப்பார்ப்பு

என்னங்க, இன்னைக்கு சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரம் வரீங்களாஎன்றபடியே சமையலறையிலிருந்து வெளிவந்தாள் செழியனின் மனைவி செல்வி.

டிபன் ரெடியா! ஆபீஸ்க்கு லேட்டாயிடுச்சுஎன்றபடியே குளித்து முடித்து தலையை துவட்டிக்கொண்டேகேட்டான் செழியன்.

ரெடியாயிடுச்சு!!! வாங்கஎன்று சமையலறையிலிருந்து பாத்திரங்களை வெளியில் எடுத்துக் கொண்டு வந்தாள். “ஏங்க, சாயங்காலம் சீக்கிரம் வரமுடியுமான்னு கேட்டேன்என்று தொடர்ந்தாள்.

தலையை ஆட்டிக்கொண்டேஏன் என்ன விசயம்என்று கேட்டான் செழியன், ‘’இல்ல, அடுத்த வாரம் குழந்தைக்கு பிறந்தநாள் வருதுல்ல; அதனால, போய் குழந்தைக்கு டிரஸ் எடுத்துட்டுவந்துடலாம்னு தான்

சரி சரி, பார்க்குறேன்என்று சொல்லவிட்டு அரையும் குறையுமாய் சாப்பிட்டுவிட்டு தன் அலுவலகத்துக்குகிளம்பிவிட்டான் செழியன்.

செழியன் ஒரு துணிமணிகள் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறான். அந்தக் குடும்பத்தில் இவன்தான் முதல்தலைமுறை தொழில்முனைவோர். இதற்கு முன் அவன் குடும்பத்தில் எல்லோரும் ஒரு முதலாளிக்கு கீழேகைக்கட்டி வேலை செய்தவர்கள் தான்.

செழியன் தன் பதினெட்டு வயது முதலே தொழிலில் இறங்கியவன். முதலில், திருப்பூர் சென்று துணிகளைவாங்கி, ஒரு தள்ளு வண்டி வைத்து, தெருத் தெருவாய் விற்றவன், பிறகு தனியாய் ஒரு கடையைதொடங்கினான். இலாபம் குறைவாய் இருப்பதை உணர்ந்து, சென்னையிலேயே பத்து தையல் இயந்திரத்தைவைத்து, நிறுவனம் தொடங்கி இன்று அது ஒரு ஏற்றுமதி நிறுவனமாய் மாறியுள்ளது. இவ்வளவும் 12 ஆண்டுகளில்.

அவன் தன்னுடைய இருபத்தெட்டாவது வயதில் தாய் தந்தையர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம்செய்துக்கொண்டு, இரண்டாவது ஆண்டில் ஒரு பெண் குழந்தையுடன், தன் அலுவலகத்துக்கு அடுத்ததெருவிலேயே வசித்து வருகிறான்.

காலையில் 8.30 மணிக்குள், அலுவலகத்திற்கு யாரும் வருவதற்கு முன்னே சென்றுவிடுவான். மதியம்சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவது சந்தேகம் தான். மாலையில் சில நேரங்களில் வீட்டுக்கு சீக்கிரம்வந்துவிடுவான். பல நேரங்களில் நள்ளிரவுக்கூட ஆகிவிடும்.

அன்று இரவு வீட்டுக்கு வரும்போது, ஏனோ செழியனின் முகம் வாடியிருந்தது. அதை செல்வி கவனிக்காமலேயே, “இன்னைக்கு சீக்கிரம் வரச் சொன்னேன். ஆனா இன்னைக்கும் லேட்டுஎன்று சொல்லி தட்டை மேசை மீதுவேகமாக வைத்தாள்.

செழியனின் முகம் கோபத்தால் சிவந்தது. “ஒருத்தன் கஷ்டப்பட்டு உழைச்சு, நைட்டு வீட்டுக்கு வந்துஅக்கடான்னு சாப்பிட உட்கார்ந்தா, தட்டை மூஞ்சியில் அடிக்கிற மாதிரி வைக்கிற. திமிறாயிடுச்சா. எடுத்துட்டுபோய் குப்பையில கொட்டு சோத்தஎன்று சொல்லியபடி படுக்கையில் போய் சரிந்தான்.

செல்விக்கு பேயறைந்தது போல முகம் வெளிறியது. இதுவரை என்ன கோபம் என்றாலும், சாப்பாட்டுவிஷயத்தில் மட்டும் கோபத்தை காட்டியதில்லை. ஆனால் இன்று ஏனோ அவன் அப்படி நடந்தது அவளுக்குவிசித்திரமாக இருந்தது. கண்ணில் பனித்துளிப் போல நீர் துளிர்த்தது வருத்தத்தால். அவளும் சாப்பிடாமலேயேபடுக்கையில் சென்று படுத்துவிட்டாள்.

மறுநாள் காலையில், அவன் எழுந்திருக்கும் முன்னேயே எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு, காலைச்சிற்றுண்டியை சமைத்துவிட்டு, வெளியில் வருவதற்குள்ளாக, செழியனும் எழுந்து குளித்துவிட்டுஅலுவலகத்துக்கு கிளம்ப தயாராகிவிட்டான். அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், தன் வண்டியைஎடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டான்.

செல்வியின் மனநிலை அன்று முழுவதும் இந்த நினைப்பிலேயே கழிந்தது. செழியன் அன்று வழக்கத்திற்குமாறாய், அலுவலகத்திலிருந்து சீக்கிரமே திரும்பிவிட்டான். மாலை நான்கு மணியளவில் அவன் வீட்டுக்குதிரும்பியிருந்த போது, அவன் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி ரேகை ஓடியது.

முதல்நாள் இருந்த அவன் முகத்துக்கும், இப்போது இருக்கும் முகத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்துகொண்டாள் செல்வி.

நேற்று செழியனின் அலுவலகத்திலிருந்து சென்ற துணிகள் கஸ்டம்ஸில் கிளியராகவில்லை. மேலும், வாடிக்கையாளரிடமிருந்து வரவேண்டிய ஐம்பது சதவீத தொகையான ரூபாய் பன்னிரண்டு இலட்சம் வங்கிகணக்கில் வரவு வைக்காமலேயே இருந்தது. இதனால், சற்று ஏமாந்திருந்த அவனுக்கு இரவு செல்விநடந்துக்கொண்ட முறையினால் சற்று கோபம் வந்துவிட்டது.

இன்று காலை, நேரே அலுவலகத்திற்கு செல்லாமல், கஸ்டம்ஸ் ஏஜென்டின் அலுவலகத்திற்கு சென்று, பிரச்சினை என்னவென்று விசாரித்து, அனைத்தையும் சரி செய்துவிட்டு, பிற்பகலில் அலுவலகம் வந்தவுடன், வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு, பணம் வந்து சேரவில்லை என்பதை தெரிவித்து, அதற்கானஏற்பாடுகளை செய்து, மாலை மூன்று மணியளவில் தன் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டவுடன் தான்செழியனுக்கு மனதில் அமைதி ஏற்பட்டது. பிறகு தான், செல்வியின் மனதை கஷ்டப்படுத்திவிட்டோமோ என்றுநினைத்து நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

சாரி செல்வி. நேத்து ஆபீஸ்ல கொஞ்சம் டென்சன். நீயும் தட்டை தூக்கி மேசையில போட்டவுடனே ரொம்பகோபம் வந்துருச்சு

என் மேலேயும் தப்பு தான். ஒத்துக்குறேன். ஆனா, நேத்து நீங்க வருவீங்க, குழந்தைக்கு துணி எடுத்துட்டுவந்துடலாம்னு ஆசையா எதிர்பார்த்துட்டு இருந்தேன். அதான் எனக்கும் கொஞ்சம் கோபம் வந்துருச்சு

சரி. குழந்தையையும் கிளப்பிகிட்டு ரெடியாவு. கடைக்கு போயிட்டு வந்துரலாம்என்றபடியே செல்வியின்கையை பிடித்து அதில் முத்தமிட்டான்.

இப்போதும் செல்வியின் கண்களில் பனித்துளிகள் எட்டிப்பார்த்தது. இது ஆனந்தக் கண்ணீர்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பது பல வகைகளில் உண்மை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒருஎதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அனைவருடைய எதிர்ப்பார்ப்பையும் ஈடுச் செய்வது என்பது அந்தஇறைவனால் கூட முடியாது.

கணவன் சீக்கிரம் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் மனைவி, வாடிக்கையாளரிடமிருந்து வரும்பணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தொழில் முனைவோர், இப்படி பல எதிர்பார்ப்புகள் நம் அன்றாட வாழ்வில்வந்துக் கொண்டிருக்கத்தான் செய்யும். கூடிய வரையில், அனைத்து எதிர்பார்ப்புகளையும் சரிச்செய்ய முயற்சிமேற்கொள்வதோடு, அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளித்தால் மாற்று வழிகளை ஏற்படுத்திக் கொள்வதேசிறந்தது. எதிர்பார்ப்புகளினால் வரும் ஏமாற்றத்தை, புரிந்துக் கொண்டு, பரஸ்பரம் கோபமில்லாமல் வாழ்ந்துவந்தால் வாழ்க்கை என்றைக்கும் இனிக்கும். எதிர்பார்ப்புகளை விட, புரிதலே இங்கு அவசியம்.

அன்பரசு மகாதேவன்

() அகத்தியன்

பொழிச்சலூர்,

சென்னை

 

 

4.K2K - 00013

 எதிப்பார்ப்பு

ராசாத்திக்கு, இரண்டு நாட்களாக உடலும் உள்ளமும் ஒரு நிலையில் இல்லை. சரியாக சொல்ல வேண்டுமானால், அவளுடைய நெடுநாளைய எதிர்பார்ப்பு நடைமுறைக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது இங்கு ராசாத்தியைப் பற்றி சில வரிகள்

ஒன்பதாம் வகுப்பு மாணவியான அவளுக்கு பள்ளியில் நாடாகும் சில நிகழ்ச்சிகளில் பங்குக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவள் ஆனால் ஏனோ அவளுக்கு வாய்ப்பு வருவதேயில்லை பலமுறை இவ்வாறு நடந்ததால் அவள் தன் தந்தையிடம் ஒரு நாள் இதைப்பற்றிக் கூறினால். அதற்கு அவள் அப்பா "கவலைப்படாதே எதிர்ப்பார்ப்பு என்பது நம் கனவுகளின்?" மாயச்சிறகுகள் " எப்பொழுது வேண்டுமானாலும் அவை மறைந்துப்போகலாம் சிதைந்தால் துவண்டுவிடாதே! வேறொரு சிறகினை உருவாக்கிக்கொள்" என்றார்.

பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி துவங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னாள் தான் தலைப்பை அறிவிப்பார்கள் இரண்டு நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பேசுபவருக்கே பரிசு வழங்கப்படும் .அன்றும் அப்படிதான், பாரதியார் பாடல்கள் பற்றி பேசவேண்டும் என்று சொன்னவுடன் அனைவரும் போட்டிக்கு தயாராகினார்கள்.

ராசாதிக்கு தனக்கு முன் பேசியவர்களைப் பார்த்தப்பொழுது அவளுக்கு உள்ளுக்குள் லேசாக உதறல் எடுத்தது இருந்தாலும் தான் நிச்சயம் முதல் பரிசை  தட்டிச் செல்வோம் என்ற நம்பிக்கையுடன் மேடை ஏறினால். அவள் எடுத்துக்கொண்ட பாரதியார் பாடல் மிகவும் புகழ்பெற்ற "அச்சமில்லை, அச்சமில்லை,அச்சம் என்பது இல்லையே" என்ற பாடலைக்கொண்டு தன பேச்சைத் துவக்க எண்ணினால் ஆனால்,ஏனோ முதல் வரியை பொங்கும் தேசபக்தி உணர்ச்சியுடன் ஆரம்பித்தவளுக்கு திடீரென்று அடுத்த வரி ஞாபகத்தில் வரவில்லை மறுபடியும் முதல் வரியை சொன்னபோது, எல்லோரும் அவளைப்பார்த்து  கேலியாக கூச்சலிட்டார்கள், அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போனபோது தன அப்பா கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வர, மிகவும் உற்சாகமாக உச்சிமீது ஏறி நின்று கத்தி (பொருள் 1 : ஆயுதம், பொருள் 2 : உரக்கப்பேசுதல் ) சண்டையிட்டாலும், அச்சமென்பது இல்லையே? என்று இருபொருள் படப்பாடி மேடையில் இருந்து இறங்கினாள். ஒரு நிமிடம் அரங்கமே அமைதி காத்தது..அந்த நிமிடம் ராசாத்திக்கு யுகமாக இருந்தது, நடுவர்கள் அனைவரும் கைத்தட்டி "அவளுக்கே முதல் பரிசு" என்றும் அறிவித்தார்கள் அவளின் சமயோசிதப் புத்திக்காக வழங்கப்பட்ட இந்த பரிசு வாழ்நாள் முழுவதும் அவளுக்கு ஒரு நீங்காத பாடத்தை கற்றுத்தந்தன (ஒரு வேலை பாரதியார் அங்கு நடுவராக இருந்திருந்தால் ?!!)

நெறி: "எதிர்பார்ப்பே" வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளாமல், அதுவும் சிற்சிலச் சந்தர்ப்பங்களில் நம்மை "எதிர்பாராமல்" உச்சிக்கு கொண்டு செல்லும் ஓர் உணர்வாகும்.

  -- RAMA GOVINDARAJAN (GRAPSS)

  

 

5.K2K00034-

எதிர்பார்ப்பு

கனவு என்பது ஒரு அற்புத உலகம்.

எனக்கு ஒரு வித்தியாசமான கனவு வந்தது ஒரு முறை அல்ல இருமுறை.

முதலில் வந்த கனவை என்னை சுற்றி இருந்த அனைவரிமும் பகிர்ந்தேன். என் அம்மாவவை தவிற. பின்ன கனவுல ஒரு பையன் நம்ம வீட்டுக்கு வந்தான். அவன நானும் என்ன அவனும் சைட் அடிச்சோம், அவன் கண்ணுல காதல் கரை புரண்டுச்சு.

என் கிட்ட அவனோட மீதி வாழ்க்கையா இருப்பியா அப்படி சொன்னான்னு சொன்னா. என்ன பண்ணுவாங்க. டின்னு கட்டிற மாட்டாங்க.

நிஜமா யாரோ இருக்காங்க நான் இப்படி கதை விடுறதா நினைக்க மாட்டாங்க. அதாங்க அவங்க கிட்ட சொல்லலை.

அவன் சொன்னபோ உண்மையா நடந்த மாறி இருந்துச்சு, என் பிரண்ட் எழுப்புறப்போ தான் தெரிந்தது அது கனவுனு. அன்னிக்கு புல்லா அந்த கனவு நாயகன பத்தி நினைச்சே நாள முடிச்சேன்.

மறக்க முடியாத விஷயத்த நோட் பண்ணுறது என் பழக்கம் தேதி போட்டு எழுதி வைத்தேன். நாட்கள் ஓடுச்சு அந்த முகம் மறந்துருச்சு பட் அந்த பீல் மட்டும் போகல.

கிட்ட திட்ட 9 மாசம் கழிச்சு அதே மாறி ஒரு கனவு பட் இது ஒரு கோயில நடந்தது போல கனவு காட்சி. இந்த முறையும் அந்த நாயகன் முகம் மறந்துருச்சு பட் அவனோட அந்த கண்கள் மறக்கல.

எனக்கு ரொம்ப ஸ்பெஷல்லா தோனுச்சு. இந்த முறை என்னோட நெருங்கிய வட்டத்துக்கு மட்டும் பகிர்ந்தேன்.

கனவுல வரதலாம் நடப்பது கதைகளில் மட்டுமே. நிஜ வாழ்க்கையில் நடக்காதுனு நிறைய அட்வைஸ் பண்ணி என் காதுல ரத்தம் வர வெச்சுட்டாங்க.

# அப்போ எனக்கு ஒன்னு புரிஞ்சுது எதிர்பார்ப்புகள் வேறு எதார்த்தம் வேறு என்று.

- சுபாஷினி

 

 

6.K2K-00037.

எதிர்பார்ப்பு:

பெயர்: வசுமதி,

27 வயது

800 மீட்டர் ஓட்டப் பந்தய வீராங்கனை.

தன் தாய்நாட்டிற்காக விளையாடி தங்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு இருப்பவள். அந்த அலுவலகத்தில் அமர்ந்து தன் வாழ்வை நினைவு கூர்ந்தாள்.

அவள் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள், அப்பா ஒரு ஏழை விவசாயி, அம்மா கிடையாது. தன் வருமானத்தில் எப்படியாவது தன் மகளை ஒரு வீராங்கனையாக செய்ய வேண்டும் என்று உறுதுணையாக நிற்பவர்.

வசுமதியின் தாயார் அவளுக்கு நான்கு வயது இருக்கும் போது இறந்து விட்டாள். பின்னர் அவளுக்கு எல்லாம் ஆக இருந்தது அவர் தந்தை சின்னமுத்து மட்டும்தான். தான் படிக்காவிட்டாலும் தன் மகள் படிக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளியில் சேர்த்தார். அவள் சிறுவயதில் நடக்க இயலாமல் இருந்ததால் பல வைத்தியங்கள் மேற்கொண்டார். ஊர்உலகம் அவளது இந்த நிலையை காதுபட பேசியபோதும் அதை பொருட்படுத்தாமல் தன் மகளை மட்டுமே கருத்தில் கொண்டு அவளுக்கு உற்ற துணையாய் நின்றவர்.  ஒவ்வொரு நாளும் மருந்து தைலத்தை அவளுக்கு தேய்த்துவிட்டு பின்னர் தன் கையை பிடித்து அவளை மெதுவாக நடக்க சொல்லி, "அப்படிதான். அப்படிதான். நேத்தவிட இன்னைக்கு நல்லாவே நடக்கிற. வா. வா அப்படிதான்.. அப்படிதான்.." என்று அவளை மிகவும் ஊக்குவித்தார். அவரது நம்பிக்கை தானோ என்னவோ சிறிது நாட்களிலேயே வசுமதி நடக்க ஆரம்பித்தாள், பின்னர் வெகு சில நாட்களிலேயே ஓடவும் ஆரம்பித்தள்.

முதல் முறை அவளுக்கு ஒரு ஓட்டப்பந்தயத்தில் நாட்டம் இருப்பதை அவளது பள்ளி விளையாட்டுப் போட்டியில் அவள் மூன்றாவது படிக்கும்போதுதான் உணர்ந்தாள்.  விளையாட்டாக கலந்துகொண்ட அந்தப் போட்டியில் அசாதாரண வேகத்தில் ஓடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.  முன்பு புறம் பேசிய வாய் அனைத்தும் இப்போது

"என்னம்மா புயல் மாதிரி ஓடுற பாரு.." என்று அவள் காதுபடவே அவளை பாராட்டினார்கள்.

இவளது திறமையைப் பார்த்து அவளின் விளையாட்டு ஆசிரியர்

"இவளுக்கு நல்லமுறையில் பிராக்டீஸ் கொடுத்தா இவ நல்ல அத்தலீட்டா வருவா" என்றார்.

சின்னமுத்து "எனக்கு அத பத்தி எதுவும் தெரியாதுங்க. நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் செய்யுறேன்" என்று சொன்னார்.

அவர் "இவ தினமும் பயிற்சி பண்ணனும். நான் தயார் பண்றேன்" என்று சொல்லி அவளை நன்றாக பயிற்றுவித்தார். பள்ளிக்கூடங்களுக்கு இடையில் நடக்கும் போட்டி, மாவட்டரீதியான போட்டி ஆகியவற்றில் முதலிடத்தில் வென்றாள்.

பின்னர் கல்லூரி படிப்பிற்காக அரசு உதவி தொகையில் சென்னையில் கல்லூரி கிடைத்து அதில் சேர்ந்தாள். அங்கும் அவளுக்கு நல்ல பயிற்சியாளர் அமைந்ததால் அங்கு மாநில அளவு போட்டிகளில் வெற்றி பெற்று பின்னர் தேசிய அளவு போட்டிக்காக தேர்வாகி பட்டியாலா வந்தாள். ஆரம்பத்தில் மொழி, சாப்பாடு, மற்ற போட்டியாளர்கள் இவை யாவும் அன்னியமாய் இருந்தாலும் நாளடைவில் அதற்க்கு தன்னை பழக்கி கொண்டாள்.

சிலர் இவளது ஏழ்மை நிலை காரணமாக இவளை சற்று அவமானமாக பேசினாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன் லட்சியத்தை நோக்கி பயணித்தாள். அன்று தேசிய அளவிலான போட்டி. அவளிடம் சரியான காலணிகள் கூட இல்லை. ஆனாலும் மனம் தளராமல் போட்டியில் பங்கு பெற்றாள். பந்தய மைதானத்தில் இருக்கும்போது அவளுக்கு தன் குடும்பம், தன் அப்பா பட்ட கஷ்டம் அனைத்தும் நினைவுக்கு வந்தது இந்த ஒரு போட்டிதான் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு போகப் போகிறது என்பதை மனதில் கொண்டு ஒரு புது உத்வேகத்துடன் ஓட ஆரம்பித்தாள். முதல் சில நொடிகள் சற்று பின் தங்கினாலும் எங்கிருந்தோ வந்த ஒரு புது சக்தியின் காரணமாக வேகம் பிடித்து எல்லைக் கோட்டை நோக்கி முன்னேறி முதலிடத்தில் வந்தாள் யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றாள்.

அந்த வருடத்தின் ஆசிய போட்டிக்காக அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அதன் பயிற்சிக்காக அவளுக்கு சர்வதேச பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார். அவளது உணவு, மருந்து, உடற்பயிற்சி, இவள் உடல்நிலை ஆகியவற்றை அவர் கவனித்துக்கொண்டார். சர்வதேச போட்டிக்காக இவளது பயிற்சி முறையையும் சற்று மாற்றினார். இவளின் சாதக பாதகங்கள், அதை எவ்வாறு சரி செய்வது போன்ற பல விஷயங்கள் இவளுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. அன்று முக்கியமான நாள். மொத்த தேசமும் இவளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாள். இவள் தன் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்த நாள்.

அவளுடன் சீனா, ஜப்பான், கொரியா முதலான பல ஆசிய தேசத்தின் வீராங்கனைகள் போட்டியிட்டனர். போட்டி துவங்க பட்டது. சீனா வீராங்கனை எடுத்த எடுப்பில் அசுர பாய்ச்சலில் சென்றாள். வசுமதிக்கு சற்று நீண்ட கால்கள். அவள் தண்டுபகுதி சற்று சாய்ந்து நேராக அவள் மூச்சு சீராக, காற்றை கிழிக்கும் வகையில் அவள் நீண்ட கால் தடம் பதித்து ஓடுவாள். போட்டியாளர்கள் மைதானத்தில் முதல் வளைவில் திரும்பும் நேரத்தில் வசுமதி பாதத்தினை சற்றே அழுத்தி ஒரு உந்து பாய்ச்சலில் துப்பாக்கி குண்டு போல சீறி சீன பெண்ணிற்கு சமமாக ஓட்டம் பிடித்ததாள். கொரிய, ஜப்பானிய பெண்களும் விட்டால் ஒரு மைக்ரோ வினாடியில் இவர்களை முந்தி விடுவார்கள் என்பது போல் தொடர்ந்து முன்னேறி வந்தனர். ஓடும் போது தன் கைகளை முன்னே பாய்ச்சி ஆனால் கட்டுப்பாட்டுடன் ஒரு சீரான வேகத்தில் ஓடினாள். 600 மீட்டர் கடக்கும் போது கால்களின் வேகத்தை அடி வயிற்றில் இருந்து சக்தி எடுத்து பாய்ந்ததில் இவள் அரை இன்ச் முன்னே சென்றாள். பின்னர் மீண்டும் முழு மூச்சுடன் முட்டி வேகத்தை கூட்டி இலக்கை நான்கு மைக்ரோ வினாடி முன்னிலையில் தொட்டு கடந்தாள். பெரிய திரையில் வசுமதி வெற்றி என்று காட்டியது. இந்த தருணம் அவள் எதிர்பார்த்த இந்த ஒரு தருணம் அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் ஒரு வெகுமதியாய் தன் நாட்டின் தேசிய கொடியை தூக்கி அசைத்து தன் வெற்றியை பறைசாற்றினாள்.

பின்னர் அந்த அலுவலகத்தில், "மேடம் உள்ள வாங்க", "சொல்லுங்க வசுமதி."

"சார் என்னோட பி சாம்பிள் ரிப்போர்ட் கேட்டு அப்ளை பண்ணி இருந்தேன்"

" அதுவா. எதுக்கு உங்களுக்கு?"

"எனக்கு வேணும். என் ரிப்போர்ட் கேட்க, பார்க்க எனக்கு உரிமை இருக்கு"

"சரி சரி. தரேன். பார்த்து என்ன பண்ண போறீங்க. அப்படி ஜெயிச்சி என்ன?"

"கஷ்டப்பட்டு வந்தவ நான். எங்க மாறி ஆளுங்க ஜெயிக்கிறத பிடிக்காம நம்ம ஆளுங்களே கிளப்பி விட்ட புரளி. இதுக்கு நான் பயப்பட மாட்டேன். என் நியாயத்தை நிரூபித்து காட்டுவேன் " என்று சொல்லி தன் ரிப்போர்ட்டை வாங்கி சென்றாள்.

ஜெயித்த 1 வாரத்திற்கு பிறகு

ஊக்க மருந்து சோதனை ரிப்போர்ட் வந்ததில் வசுமதி ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவள் இரண்டு வருடங்கள் தடை செய்யபட்டாள். அவள் பெற்ற வெற்றியும் திரும்ப பெறப்பட்டது. தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க மீண்டும் அவள் வாழ்வில் மற்றும் ஒரு சவாலை எதிர் நோக்கி நியாயத்தை எதிர்பார்த்து புறப்பட்டாள். அவள் தந்தையும் ஊரில் அதே எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.

அவள் நியாயம் என்றாவது நிரூபிக்கப்படும் தர்மம் வெல்லும் என்று நாமும் எதிர்பார்ப்போம்...

ன்றி.

இப்படிக்கு

பா. பிரபு,

மடிப்பாக்கம்

 

 

7.K2K 00038

எதிர்பார்ப்பு!

விஜியை பெண் பார்த்துச் சென்றார்கள் மாப்பிள்ளை வீட்டார், பரஸ்பரம் மாப்பிள்ளை பெண்ணுக்கு பிடித்து விட்டது, இரண்டு வீட்டாருக்கும் கொடுக்கல் வாங்கல் எல்லாம் அவரவர் திருப்திக்கு அமைந்தது.

இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என்று திருமணத்தேதியும் குறிக்கப்பட்டது, விஜி கல்லூரி விடுதியில் தங்கி இலக்கியம் படிக்கும் மாணவி, பெண் பார்த்துச் சென்ற பிறகு கலர் கலராக கனவுகள் காண்கிறாள்.

விஜியைப் பெண் பார்த்துச் சென்ற சுரேந்தர் நல்ல நெடுமால் வளர்த்தி, நல்ல கம்பெனியில் நல்ல சம்பாத்தியம், அவனுக்கு விஜியை பார்த்து வந்ததிலிருந்து இருப்புக் கொள்ளவில்லை.

அவள் விடுதிக்கு பெயரை மட்டும் குறிப்பிட்டு கடிதம் எழுதுகிறான், விஜி என்ற பெயரில் இவள் மட்டுமே இருந்தது அவன் அதிர்ஷ்டம், அவள் கடிதத்தைப் படித்ததும் தெரிந்து கொள்கிறாள் இது சுரேந்தர் தானென்று, அவன் பெயரைக் குறிப்பிடாமலே தான் யாரென்று கண்டுபிடிக்க முடிந்தால் கீழ்க்கண்ட முகவரிக்கு கடிதம் எழுதலாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.

இடைப்பட்ட இரண்டு மாதம் கடிதத்திலேயே விஜியை உருகி உருகி காதலிக்கிறான், அவளின் அழகுக்கும் உடல்நலத்திற்கும் நிறைய டிப்ஸ்கள் சொல்லி மெருகேற்றுகிறான்.

நீ அழகாக இருக்கிறாய் விஜி, ஆனால் மாதம் ஒரு முறை என் கம்பெனி ஃபேமிலி மீட்டிங் அட்டண்ட் பண்ணனும், அப்போ இங்க எல்லோரும் மாடர்னா டிரஸ் பண்ணிட்டு வருவாங்க.

ஷோ நீயும் சுடிதார் பேண்ட் எல்லாம் போட பழகிக்கோ.

புடவைக்கு உன் ஹேர் ஸ்டைல் அழகா இருந்தது, ஆனாலும் கொஞ்சம் மாடர்னா கட் பண்ணி போனி போட்டுக்கோ.

ஆங் சொல்ல மறந்துட்டேன், உனக்கு ஸ்போக்கன் இங்க்லீஸ் ஹிந்தி தெரியுமோ?! இரண்டு மாசம் டைம் இருக்கே அதையும் கொஞ்சம் கத்துக்கோ என்னோட கொலீக்ஸ் வேற வேற மாநிலத்திலிருந்து வந்தவங்க, இங்க்லீசும் ஹிந்தியும் தெரிஞ்சா தான் அவங்களோட உன்னால் மிங்க் பண்ண முடியும்.

ஸ்டைலா சின்னதா டான்ஸ் ஆடத் தெரிஞ்சா நல்லது, சரி அதை விடு, கல்யாணத்துக்கப்புறம் அதை உனக்கு நானே கத்துத் தர்றேன்உன் கையைப் பிடிச்சு இடுப்பை வளைச்சு….” கடிதத்தை படித்து மெய் மறந்து நிற்பாள் விஜி.

இந்த இரண்டு மாதத்தில் சுரேந்தரின் காதலில் திளைத்து கன்னம் உப்பி காது மடல்கள் சிவந்து இன்னும் பல மடங்கு அழகாகி விட்டாள் விஜி.

அவன் சொன்னது போல மாடர்னாக உடை உடுத்தவும் பேசவும் கூட கற்றுக் கொண்டு விட்டாள்.

விஜிஅள்ளுறடி, ஃபர்ஸ்ட் நைட் இன்னிக்குத்தான?! பெருசுக தேதியை தள்ளி வச்சிடப் போகுதுங்கஎன்று மணமேடையில் விஜிக்கு மட்டுமே கேட்குமாறு குசுகுசுவெனப் பேசுகிறான் சுரேந்தர்.

வெட்கத்தில் திணறும் விஜியின் அழகை பார்வையாலேயே பருகிக் கொண்டிருக்கிறான்.

ஹனிமூனுக்கு சிம்லா போகிறார்கள், பனி கொட்டும் இரவு, பனி விழும் இரவு... நனைந்தது நிலவு...

இளங்குயில் இரண்டு...

இசைக்கின்ற பொழுது...

பூப்பூக்கும் ராப்போது

பூங்காற்றும் தூங்காது

வாவாவா….!

சட்டென விழிப்பு வந்தது போல் நனவுக்கு வந்தாள் விஜி.

என் கல்யாண வாழ்க்கையும் கணவனும் இவ்வளவு ஆசையா காதலா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

நான் போட்ட கடிதத்திற்குக் கூட பதில் எழுதாத முட்டாளாக வரதட்சணையிலேயே குறியாக இருந்து கல்யாணமும் பண்ணிக்கிட்டு நாம தனியா இருக்கிறதே ஹனிமூன் தான்னு வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சிருக்கே அசடுஆசையா நாலு வார்த்தை பேசத் தெரியாத மக்குஇதோட நான் எப்பிடித்தான் காலந்தள்ளப் போறேனோன்னு தன் கல்யாண வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளெல்லாம் ஏமாற்றமடைந்த வெறுப்பில் அழுது கொண்டிருக்கிறாள் விஜி.

 

-பூமாதேவி

 

 

8.K2K-00042

எதிர்பார்ப்பு ஏகாம்பரம்

ஒரு ஊரில் ஏகாம்பரம் என்பவர் வசித்து வந்தார், அவர் ஊரில் எல்லோருக்கும் நல்லதே செய்வார், ஆனால் அதற்காக எதாவது பதில் உபகாரம் எதிர் பார்ப்பார். அப்படி செய்ய வில்லை என்றால் மனம் வருந்தி கொண்டே இருப்பார். ஆனால் நல்லது செய்வதை விட வில்லை.

இப்படி சென்று கொண்டிருக்கையில் அவரது பள்ளி நண்பர் ஆனந்தன் வெளிநாட்டிலிருந்து பல வருடங்களுக்கு பிறகு வந்திருந்தார், அவரிடம் இதை சொல்லி வருத்த பட்டு கொண்டிருந்தார்.

அதற்க்கு ஆனந்தன் நண்பா ஏகாம்பரம் நான் உன்னிடம் சில விஷயங்களை பற்றி கேட்கிறேன் அதற்கு பதில் சொல்வாயா என கேட்டார். அதற்க்கு ஏகாம்பரமும் சரி என்று சொல்ல, ஆனந்தன் கேட்க ஆரம்பித்தார்,

கேள்வி: ஆனந்தன்:  சூரியன் யாரையாவது எதிர்பார்த்து உதிக்கிறதா? பதில்: ஏகாம்பரம்: இல்லை

கேள்வி: ஆனந்தன்: மழை யாரையாவது எதிர்பார்த்து   பொழிகிறதா?  பதில்: ஏகாம்பரம்: இல்லை

கேள்வி: ஆனந்தன்: கடல் யாரையாவது எதிர்பார்த்து   அலையை வீசுகிறதா? பதில்: ஏகாம்பரம்: இல்லை

கேள்வி: ஆனந்தன்: சரி விடு கடைசியாக ஒன்று கேட்கிறேன், நாம் மூச்சு விடும் போது நம்மிடம் கேட்டு / எதிர்பார்த்து வருகிறதா? 

பதில்: ஏகாம்பரம்: இல்லை

பின் நாம் ஏன் பிறரிடம் எதையாவது எதிர்பார்க்க வேண்டும்.

நீ நல்லது செய்வது என்று முடிவு செய்து விட்டால் நீ அதை செய்து விடு. அதற்கான பலனை நீ செய்தவரிடம் இருந்து எதிர் பார்க்காதே.

ஆண்டவன் உனக்கு அதற்கான பலனை நிச்சயம் கொடுப்பான்.

இதை கேட்டவுடன் நீண்ட நாட்களாக தன் மனதில் இருந்த வருத்தத்திற்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் நண்பனை ஆர தழுவி அன்பை பொழிந்தார்.  இதனால் மனம் திருந்திய ஏகாம்பரம் அன்று முதல் எதையும் எதிர்பார்க்காத ஏகாம்பரமாக மாறினார்.

நெறி: ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், நன்றும் இன்றே செய், இன்றும் இனிதே செய், கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே.

 

கணேசன் சண்முகவேல்

 

 

9.K2K-00042

()ந்த கால எதிர்பார்ப்பு 

இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரபுவும் அகிலாவும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்காடும் இடத்தில் காத்திருந்தனர் எதற்காக? 

ஆம் இருவருக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆனால் அவர்களுக்கு ஒத்துப்போகாததால், பிரிவதற்காக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து அதற்காக ஆஜராகி இருந்தார்கள் 

நீதிபதி வந்து உட்கார்ந்தவுடன் அவர்களின் பெயர் மற்றும் ஊர் பெயர் கேட்டவுடன் தன் ஊரை சேர்ந்தவர் என்று தெரியவந்தது, வழக்கை பார்வைக்கு எடுத்து கொள்ளும் முன், அவர்களிடம் தன்னை மதியம் உணவு இடைவேளையின் போது வந்து பார்க்கவும் என்று நீதிபதி சுந்தரம் ஐயா சொன்னார். 

அவர்கள் இருவரும் மதிய உணவின்போது அவரை சென்று பார்த்தார்கள், அப்போது அவர் அவர்களிடம் கேட்டார் என்னுடைய ஊர் எது தெரியுமா? அதற்கு இருவரும் தெரியாது என்று தலையசைத்தனர்.  உங்கள் ஊரான மடத்துபட்டி தான் எனது ஊரும் உங்கள் தாத்தா ராகவன் அய்யா அவர்களின் உதவியால் தான் இந்த நிலைமைக்கு வந்ததாகவும் தான் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவன் என்றும் அவர்களிடம் சொன்னார்.  பின் நீங்கள் இருவரும் இப்படிப் பிரிவது நல்லதல்ல ஊருக்கு சென்று உங்கள் குடும்பத்துடன் 2 மாதங்கள் இருந்து விட்டு வந்த பிறகு பிறகு முடிவெடுங்கள் என்று சொல்லி அனுப்பிவைத்தார். 

 இருவரும் வேண்டா வெறுப்பாக ஊருக்குச் சென்றார்கள் அங்கு அவர்கள் இருவரும் தங்கள் தாத்தா பாட்டி மற்றும் குடும்பத்துடன் தங்கி அவர்களை நெருங்கி பேச வாய்ப்பு கிடைத்தது. பாட்டியிடம் கேட்டார்கள் நீங்கள் எப்படி ஒரு பொருமையுன் எல்லா குடும்ப நபர்களையும் அன்புடன் கவனித்துக் கொள்கிறார்கள். 

இந்த காலத்து மக்கள் ஏன் இப்படி இருப்பதில்லை என கேட்டனர் அதற்கு பாட்டி சொன்ன விடயங்களை கேட்டு அதிர்ந்து போனார்கள். 

நாங்கள் அந்த காலத்தில் ஊருக்கு ஒரு டிவியுடன் இருந்தோம், ஆனால் இன்று ரூமுக்கு ஒரு டிவியுடன் வாழ்கிறீர்கள் ...

அன்று வீட்டுக்கு ஒரு போன் இருப்பதே மேல், இன்றும் கைக்குழந்தை வரை கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கிறது...

 அந்த குடும்பத்தின் தலைவர் முடிவெடுப்பார் மற்றவர்கள் கேட்பார்கள் என்று குடும்பத் தலைவருக்கு கேட்பதற்கு மட்டுமே அனுமதி... அன்று வாரத்துக்கு ஒரு ஒளியும் ஒலியும் இன்று நொடிக்கொரு ஒளியும் ஒலியும் ... 

2 மாதத்திற்கு ஒரு பிராந்திய மொழியில் தமிழ் படம் பார்ப்பது அன்று அரிது... இன்றோ எண்ணிலடங்கா படங்கள்... 

அன்று உணவுக்காக ஓடினோம்... இன்று பசிப்பதற்கு ஓடுகிறீர்கள் ...  ஆனால் பசி இல்லை..

அன்று உணவு மருந்தாக இருந்தது, இன்று மருந்து உணவாகிறது...

இப்படி எவ்வளவோ மாறிவிட்டதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டன. உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டால் வாழ்கை என்பது வளமாகவும் நலமாகவும் அமையும். இது தான் வெற்றி சூத்திரம். இதை கேட்டதும் அவர்கள் மனது மிகவும் தெளிவாக ஆகி விட்டது. நகரத்தில் ஓடி ஓடி உழைத்ததால் அவர்களுக்கு இதெல்லாம் தெரிந்து இருந்தும் புரிய வில்லை. பாட்டியின் பேச்சை கேட்டவுடன் அவர்களின் முடிவை மாற்றி கொண்டு நீதிபதி சுந்தரம் அய்யாவிடம் வந்து மன்னிப்பு கேட்டு வழக்கை திரும்ப பெற்று கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். 

நெறி: எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது ஏமாற்றங்களும் அதிகமாகும்.  

-கணேசன் சண்முகவேல் 

 

 

10.K2K00048..

எதிர்பார்ப்பு ...

                 இந்த உலகத்தில் எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில் எவரும் இல்லை., கடவுள் உட்பட அனைவருக்கும் ஏதேனும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது., இத்தகைய எதிர்ப்பார்ப்பு இல்லையெனில் எவருக்கும் எப்போதும் துன்பம் என்பது இருக்காது, இதில் ஒரு வித எதிர்ப்பார்ப்பு கூடிய ஒருவரின் கதையினை பார்ப்போம் ...

             ஒரு கல்லூரியில், இருவர் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர், ஆரம்பத்தில் ஒரு நண்பர், தானாக சென்று இன்னொரு நண்பருடன் நேசம் கொண்டு அன்பினை மிகுதியாய் பொழிந்தான், என்றும் தன் நண்பர் மீது அக்கறையாக இருந்தார், இன்னொரு நண்பரும் இந்த நண்பர் மீது மிகுந்த பாசமும் நேசமும் கொண்டு அன்பில் ஒன்றாகி இருந்தனர்., நாட்கள் ஓட ஓட இருவர் இடையிலும் சிறு பிரிவு ஏற்பட்டு விலகி நின்றார்கள் , ஒரு நண்பர் , அவர் தன் மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளார் , இவ்வாறே இருந்தால் வருங்காலத்தில் நான் உடன் இல்லாத சூழலில் மிகவும் வருந்துவார் , எனவே இப்போதில் இருந்தே விலகி இருக்க பழகுவோம் என்று எண்ணி , விலகி நின்றார் ,

              இன்னொரு நண்பர், நான் அவருடன் நெருங்கி இருப்பதனை அவர் விரும்பவில்லை, நான் எதேனும் அரியா தவறு செய்து இருப்பேனா என்று மனம் வருந்தி, தன் உணர்வையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தாமல், வேதனை தீயில் வாடினார்.,

              இருவரும் ஒருவருடன் ஒருவர் மிகுந்த நேசம் கொண்டவரே, ஆனால் இவர்களின் எதிர்ப்பார்ப்பு கண்ணோட்டம் வேறாக இருந்தது., ஒரு நண்பர் இன்னொரு நன்பர்பருடைய எதிர்கால எதிர்ப்பு எண்ணி வருந்தி விலகினார், எதிர்கால நேரத்தில் நான் இப்போது போல் அப்போது இல்லாமல் போகலாம், அப்போது அவர் என் அன்புக்கும் ஆதரவுக்கும் எதிர்பார்த்து ஏங்கி அது கிட்டாமல் போனால் மிகுந்த ஏமாற்றமும் வலியும் சுட்டெரிக்கும் அவர் மனதை என்று எண்ணியதால், அவரை இப்போதே பிரிந்து வாடினார்.,

          இன்னொரு நண்பர், எதிர் காலத்தில் இருவரும் தொழில் மற்றும் குடும்பத்தினை வழிநடத்த உழைத்து கொண்டு இருப்போம், அப்போது அன்பாக ஆறுதலாக உடன் இல்லாமல் போகலாம், எனவே இப்போது இருக்கும் காலத்தில் இருவரும் இணைந்து இருந்தால் நன்மை பயக்கும் என்று, தற்போதைய அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கி நின்றார்,

          இத்தகைய எதிர்பார்ப்புகள் மேன்மேலும் வலிகள் மற்றும் வேதனைகளை இருவருக்கும் வாரி வழங்கியது., இவ்வாறு அனைவரும் ஒன்று கடந்தகாலம் எண்ணி எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை எண்ணி நிகழ்காலத்தில் வருந்தி வரும் எதிர்காலத்தையும் வீணான கடந்த காலமாக மாற்றுவர்.,

          இல்லையெனில் நிகழ்கால எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்று எண்ணி காத்திருந்து நிகழ்காலத்துடன் வருங்காலத்தை காத்திருந்து அழித்துவிடுவோம்,

          அல்லது, வருங்காலம் பற்றிய எதிர்பார்ப்பில் நிகழ்காலத்தை தொலைத்துவிடுவோம் இவ்வாறே அனைவரது எதிர்ப்பார்ப்பு கண்ணோட்டம் வேறாகவும், வேதனை தருவதாகவும் இருக்கும்,

          மனிதர்களால் எதிர்ப்பார்ப்பு இன்றியும் வாழ இயலாது, நம்மை படைத்த கடவுள் கூட நாம் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நம்மை படைக்கிறார்., எனவே எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ இயலாது, ஆனால் எதிர்ப்பார்பினை நம்மால் குரைத்து கொள்ளவும், கட்டுக்குள் வெய்த்துகொள்ளவும் இயலும்.,

        இவ்வாறு இருக்க பழகலாமே ..

கருத்து: கடந்தகால எதிர்பார்ப்பின் ஏமாற்றம் மறந்து, நிகழ்கால எதிர்ப்பார்பை நிறைவெத்தும் செயலாற்றி, வருங்காலத்தை சிறப்பாக்குவோம் ....

 

இப்படிக்கு.,

சி. தெய்வாணி ஸ்ரீ,

 

 

11.K2K-00051

எதிர்ப்பார்ப்பு

ஒருமுறை ஒரு முனிவர் காட்டில் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேடன் இவரது தவத்தை கலைக்கவும் கூடாது ஆனால் அவருக்கு பின்னல் ஒரு ஆடு இருக்கிறது, அந்த ஆட்டை வேட்டையாடினால் தான் தன்னுடைய குடும்பதிற்கு அன்றைய உணவு கிடைக்கும், ஆனால் அந்த ஆடோ கருவுற்றிருகிறது. இது வேடனுக்கு தெரியாது. ஒரு பக்கம் தவத்தில் இருக்கும் முனிவர், இன்னொரு பக்கம் கருவுற்றிருக்கும் ஆடு. செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தான் அந்த வேடன்.

திடிரென இடி முழக்கம் கேட்க, ஆடும் ஓட துவங்கியது, முனிவருடைய தவமும் கலைந்தது. கண்ணை திறந்த முனிவர் எதிரில் நிற்கும் வேடனை பார்தார், வேடனுக்கும் கையும் ஓடல காலும் ஓடல. முனிவர் மெதுவாக வேடனை பார்த்து புன்னகைத்தார்.  வேடனுக்கும் ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது முனிவர் வேடனிடம், நீ உன்னுடைய குடும்பத்திரனுக்காக வேட்டையாட வந்தாய், உன்னுடைய எதிர்ப்பார்ப்பு அந்த ஆடு. ஆனால் அந்த ஆடு இப்போது கருவுற்றிருகிறது. ஒருவேளை நீ அதை வேட்டையாடினால், நீ என்னுடைய தவத்தை கலைத்ததும் இல்லமால் இரு உயிர்களையும் கொன்றிருப்பாய். மேலும் என்னுடைய சாபத்திற்கும் ஆளாகியிருப்பாய். வேடனுக்கு, நல்ல வேலை நாம் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவில்லை, தப்பித்தோம் என்று பெருமூச்சி விட்டான்.

இதை கண்ட முனிவர் என்னுடைய அருகில் வந்து அமர்வாயாக என்று வேடனை அழைத்தார். வேடனும் அமர, தன்னுடைய வாழ்கையை சொன்னார் முனிவர். நானும் ஒரு எதிர்ப்பார்ப்போடு தான் தவமிருக்கிறேன். அது என்னவென்றால், நான் மிகவும் கோபக்காரன். என்னுடைய கோபத்தால் பலவற்றை இழந்து, மனைவி பிள்ளைகளை துறந்து இங்கு தவம் புரிகின்றேன். இன்று என்னுடைய தவம் கலைப்பட்டிருக்கலாம், ஆனால் என்னுடைய எதிர்ப்பார்ப்பு நிறைவேறி விட்டது.

பிறகு வேடனிடம் உன்னுடைய எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார் முனிவர். கண்களில் நீர் பெருக தன்னுடைய வறுமையையும், சமுதாயத்தால் புறகணிக்கப்பட்டிருப்பதையும், பிள்ளைகளை படிக்கவைக்க பணமில்லை, என்னை போல என்னுடைய பிள்ளைகளும் நாளை இந்த கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என்றான். ஒரு தந்தையின் எதிர்பார்ப்பை உணர்ந்த முனிவர், தான் அமர்ந்து இருந்த இடத்தை தோண்ட சொன்னார். வேடனும் சிரமத்துடன் தோண்டவே, குழிக்குள் ஒரு பெட்டி இருந்தது அதை திறந்த வேடனுக்கு என்ன ஒரு ஆச்சரியம், அந்த பெட்டிக்குள் தங்க காசுகள். வேடனுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வர, இதை நீயே எடுத்துகொள், இதை வைத்து பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலத்தை அமைத்துக்கொடு என்றார் முனிவர்.

முனிவரை வணங்கிவிட்டு மகிழ்ச்சியோடு விட்டுக்கு சென்றான் வேடன்.

கருத்து: நம்முடைய எதிர்ப்பார்ப்புகளும் பிறர் நலன் சார்ந்திருத்தல் அவசியம்.

- Brightson. T

 

 

12.K2K-00053

எதிர்பார்ப்பு

"இது நீங்க சுயமா எடுத்த முடிவா? உங்கள் யாரும் வற்புறுத்தினாங்களா? என தன் மூக்கு கண்ணாடியை மேஜயில் கலட்டி வைத்தவாறே சற்றே யோசிப்புடன் ஜட்ஜ் இராமலிங்கம் கேட்க...."

"ஏதும் வார்த்தை வராமல் மவுன வேலிக்குள் மனதை பூட்டி நின்றாள் அந்த கோர்ட் குற்றவாளி கூண்டுக்குள் வினிஷா.."

ஒரே ஒரு வார்த்தை... நீ எனக்கு லைப் லாங் வேணும்னு டா னு சொல்ல மாட்டியா டி?" என உள்ளத்தில் எதிர்பார்ப்புடன் தன் கையில் இருந்த பேனா முனையை உள்ளங்கையில் அழுத்தியவாறே மறுகினான் விஷ்வா...

அவள் கண்கள் அவனை பார்க்கையில் தன் கண்ணிரை இமைக்குள் மறைத்தவாறே பேச ஆரம்பித்தான்...

"அவ என்கிட்ட இருந்து எதிர்பார்க்கறது டைவர்ஸ் தான்...

நா கொடுக்க ரெடி என்றான் குறுக்கே பாய்ந்து...."

"...உன்னால நா இல்லாம வாழ முடியும்னா என்னாலயும் நீ இல்லாம வாழ முடியும் என தன் எண்ணங்களை மனதிலே மவுனத்தால் கிறுக்கினாள்..."

சொல்லுங்க வினிஷா.... என ஜட்ஜ் மீண்டும் கேட்க...

"என்னை யாரும் கட்டாய படுத்தல சார்...இது என் சுயமான முடிவு...

என மிக எதார்த்தமாய் நிதானமாய் பதில் அளித்தாள்..."

"விஷ்வாவின் அத்தனை எதிர்பார்ப்பும் தற்கொலை செய்து கொண்டு அவன் கண் அருகே சட்டென சமாதியானது..."

டைவர்ஸ் பேப்பரில் வினிஷா என்ற மூன்றெழுத்தை வேண்டா வெறுப்பாய் கிறுக்கி கொடுத்து திரும்பி பாராமல் நகர்ந்தாள்....

"உன் மேல போய் எதிர்பார்ப்பு வெச்சென் பாரு, எனக்கு நல்லா வேணும் டி என இரவெல்லாம் புலம்பி தீர்த்தான்...

தனது இல்லத்தில் வினிஷா....

வேகமாக குளித்து...

காபி போட்டுக் கொண்டு..

விஷ்வா, விஷ்வா எங்கே இருக்கிங்க என அழைத்தாள்...

எங்கே போயிட்டார் என ரூம் ரூமாக தேடினாள்....

அப்போது தான் நினைவு வந்தவளாக சோபாவில் உட்கார்ந்தாள் கையில் இருந்த காபி சூடு மனதிலும் லேசாய் சுட்டது...

கண்ணாடி முன்னே நின்று அதில் தெரிந்த அவன் போட்டோவை பார்த்துக் கொண்டு பேசலானாள்...

விஷ்வா... நா உன் கிட்ட எதிர்பார்த்தது அன்பு மட்டும் தான்..

இப்படி பைத்தியம் ஆக்கிட்ட...

நீ என்னோட இல்லன்ற உணர்வ கூட நம்ப முடியலடா....

ஒரு வார்த்தை நீ எனக்கு வேணும்னு சொல்லிருக்கலாமே என உள்ளத்தில் மறுகினாள்....

விஷ்வா இல்லத்தில்...

ஆபிஸ் விட்டு மல்லிகை பூவுடன் வீட்டிற்குள் நுழைந்தான்...

வினி...வினி என அழைத்தவாறே

... இனி வரமாட்டலே கூறியவாறு

பூக்களை எறிந்தான்...

நீதி: அன்பு அதிகம் வெச்சதுனால வர்ற ஏமாற்றத்துக்கு மொத்த காரணம் நம்ம எதிர்பார்ப்ப ஒருத்தருக்கொருத்தர் சொல்லாம இருக்கறதும் ஒரு காரணம்...

மனச விட்டு எதிர்பார்ப்ப சொல்லுங்க...

- பூங்கொடி

 

 

13.K2K00056

எதிர்பார்ப்பு - வாழ்க்கை தத்துவம்

 ஷீலாவும் மாலாவும் கல்லூரி தோழிகள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ஷீலாவிற்கு திருமணமாகிவிட்டது, மாலாவும் தன்னுடைய வேலை விஷயமாக சென்னை சென்றுவிட்டாள். ஒரு நாள் கல்லூரி தோழிகள் இருவரும் காய்கறி வாங்கும் மார்க்கெட்டில் சந்தித்த உடன் மாலா ஷீலாவை வாரி அணைத்து கட்டிக்கொண்டு பரஸ்பரம் விசாரித்தாள் எப்படி செல்கிறது உன்னுடைய திருமண வாழ்க்கை என்றாள் அதற்கு ஷீலா ஏதோ போய்கிட்டு இருக்கு டி என்று சலிப்புடன் சொன்னாள் சரி நான் வீட்டுக்கு இன்னைக்கி ஈவினிங் 5 o'clock உங்க வீட்டுக்குவரேன் ஓகேவா டி என்றாள் மாலா அதற்கு ஷீலா கண்டிப்பா வரணும் என்று சொல்லிவிட்டு இருவரும் பிரிந்தார்கள். அன்று மாலை ஐந்து மணி இருக்கும் காலிங் பெல் சத்தம் கேட்டு ஷீலா தன் வீட்டு கதவை திறந்தாள் மாலாவை பார்த்தவுடன் அளவில்லா சந்தோஷம் கொண்டாள் சரி மாலா என்ன சாப்பிடுற காபியா டீயா என்று கேட்டாள் அதெல்லாம் இருக்கட்டும் டி நீ எப்படி இருக்க என்றாள் மாலா ,ஷீலா நான் ஃபர்ஸ்ட் டீ போட்டு உனக்கு ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரேன் அப்புறம் பேசலாம் என்று சொல்லிவிட்டு சமையல்    அறையை நோக்கி சென்று ஒரு கப்பில் டீ யுடனும் ஒரு தட்டில் ஸ்நாக்ஸ்வுடனும் வந்தாள் அதை மாலாவின் கைகளில் கொடுத்துவிட்டு மாலாவின் அருகில் உட்கார்ந்து கொண்ட ஷீலா சரி உன்னுடைய சென்னை லைப் எப்படி போகுது என்று கேட்டாள் அதற்கு மாலா நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல என்று சொன்னாள் மாலா மௌனமாய் இருந்தால் ஷீலா . மாலா அவளுடைய முகத்தில் தன்னுடைய கைகளை வைத்து அவளுடைய முகத்தை நிமிர்த்தி உன்னை உன் வீட்டுக்கார் சந்தோஷமாக தானே வைத்திருக்கிறார் என்றாள் அதற்கு கண்களில் நீர் நிரம்பி அதை ஏன் கேட்கிறாய் மாலா எதற்கெடுத்தாலும் குறை என்ன செய்தாலும் குறை இதை இப்படி  செய்யணும் அதை அப்படி செய், இப்படி  எதற்கெடுத்தாலும் ஒரே குறை ,கண்டிஷன் எனக்கு பிடிக்கல இந்த லைப் நான் எதை எதிர்பார்த்து வந்தேனோ அது எனக்கு கிடைக்கவே இல்லை என்று கண்களில் நீர் வழிய அழுகையுடன் சொன்னாள் மாலா அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு அழாதே ஷீலா கொஞ்சம் சற்று விரிவாக சொல் என்றாள், அதற்கு ஷீலா அவருக்கு , நான் அவருக்குப் பிடித்த உணவுகளை வகைவகையாய் சமைக்க வேண்டுமாம். அவருடைய உடைகளைத் துவைக்க வேண்டும் அவருக்குத் தேவையான எல்லா பணிவிடைகளையும் நான் செய்ய வேண்டும் ஆனால் நான் எதிர்பார்க்கும் ஒன்றையும் அவர் செய்வதில்லை உனக்கே தெரியும் மாலா நம் திருமண வாழ்க்கை பற்றி எப்படி எல்லாம் கனவு கண்டோம் நமக்கு சினிமாவில் வரும் கதாநாயகன் போல தன்னுடைய கதாநாயகியை எவ்வளவு அன்போடு வைத்துக் கொள்கிறான். எவ்வளவு எல்லாம் பாசத்தோடு நடந்து கொள்கிறான் எவ்வளவெல்லாம் அவளை தாங்குகிறார் அதே மாதிரிதான் கணவன் வேண்டும் என்று கற்பனை செய்தோம் ஆனால் என் வாழ்வு எப்படி வெறுமையாகி விட்டது என்று விம்மி விம்மி அழுது கொண்டே சொன்னாள்.

 அதற்கு மாலா சற்று பொறு ஷீலா அழாதே உன் கணவர் குடிப்பாரா இல்லை என்று தலையசைத்தாள் சிகரெட் மற்ற ஏதாவது கெட்ட பழக்கங்கள் உண்டா என்று கேட்டால் அதெல்லாம் அறவே அவரிடம் இல்லை என்றால் உன்னை அடிப்பாரா என்று கேட்டாள் இல்லை என்று சொன்னாள் உனக்குத் தேவையானதை வாங்கித் தருவாரா உன்னை வெளியே அழைத்து செல்வாரா என்றால் ஆம் அதையெல்லாம் செய்வார் என்றாள் பிறகு என்ன குறை என்றாள் நான் எதிர்பார்க்கிற மாதிரி அவர் நடந்து கொள்வதில்லை என்றாள்,என்னிடம் அவர் மிகவும் அன்பாக நடந்து கொள்வதில்லை என்னை அவரும் உருக உருக காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்றாள் அதற்கு மாலா அட அசடே இதுக்காகவா அழுதுகிட்டு ஏதோ மாதிரி இருக்கே ஒன்னு தெரிஞ்சுக்கோ ஷீலா சினிமா லைஃப் வேற நிஜ லைஃப் வேற இன்னும் ஒன்று நீ எதை அவரிடம் எதிர்பார்க்கிறாய்யோ அதை அவருக்கு கொடு திரும்ப உனக்கு அது பல மடங்காக கிடைக்கும் இதுவே வாழ்க்கை தத்துவம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்

 மூன்று மாதங்கள் கழித்து ஷீலாவின் வீட்டுக்கு மாலா சென்றாள் ஷீலாவிடம் நல்ல மாற்றம் அவள் முகத்தில் பழைய கவலை இல்லை அதற்கு பதிலாக பலமடங்கு சந்தோஷமே நிறைந்திருந்தது என்னடி இது ஆளே மாறிட்ட என்று மாலா கேட்டாள் அதற்கு ஷீலா நீ சொன்ன வாழ்க்கை தத்துவம் ஒர்க் அவுட் ஆயிடுச்சு என்றாள் புன்னகையுடன். அதற்கு மாலா ஓகே ஓகே என்று புன்னகைத்தாள்.

 தத்துவம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும் அது பல மடங்காக நமக்கு நிச்சயம் ஒருநாள் கிடைக்கும் இது திருமண வாழ்க்கைக்கு மட்டுமல்ல எல்லா வாழ்க்கைக்கும் பொருந்தும்.

இப்படிக்கு

ஏஞ்சல்

 

 

14.K2K00066

எதிர்ப்பார்ப்பு

"யாருலாம் எம். ஜி. எம் உல்லாசப்பயணத்துக்கு வரபோறீங்க? நாளைக்கு 500 ரூபாயைக் கொடுத்தா, டிக்கெட் புக் பண்ணுவோம்" என்று 7ம் வகுப்பு படிக்கும் மோகனின் ஆசிரியர் சொன்னார்.

தன் பக்கத்துக்கு வீட்டு அண்ணன் அங்கு சென்று வந்ததைப் பற்றி சொன்னதிலிருந்து அவனுக்கு அங்கு செல்லவேண்டும் என்று ஆசை இருந்தது. குறிப்பாக 'ரோலர் கோஸ்டர்' எனும் விளையாட்டைப் பற்றி மிகவும் விவரித்தான். அத்தனையும் கேட்டதும் அவனுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. அதனால் ஆசிரியர் அதைப்பற்றி சொன்னதும், மோகனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

அன்றைய தினம் பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு சென்று சமையல் அறையில் பணி செய்துக்கொண்டிருந்த அப்பாவிடம், உல்லாசப்பயணம் பற்றி சொன்னான். "என்னடா மோகன்.. நம்ம குடும்பம் இருக்குற நிலைமைல நீ இப்படிலாம் கேக்குற. எனக்கு வேல போனதுல இருந்து அம்மாவோட சம்பளத்துலதான் நம்ம குடும்பம் ஓடுது. உல்லாசப்பயணம் அடுத்த வருஷம் போலாம்.. புரிஞ்சிக்கோ.." என்று மோகனின் அப்பா சொன்னதும், அவனின் கனவு கோட்டை இடிந்துவிட்டது. கஷ்டமாக இருந்தாலும் அப்பா சொன்னதை எல்லாம் நினைத்துப் பார்த்து, "எவ்வளவோ போச்சு.." என்று மனதில் புலம்பிக்கொண்டு சென்றான்.

அம்மா இரவு 8 மணிக்கு, மிகுந்த களைப்புடன் வீட்டிற்கு வந்தாள். மூவரும் ஒன்றாக உணவு உண்டார்கள். பின் மோகன் உறங்க சென்றுவிட்டான். "மோகன் ஏங்க சோகமா இருக்கான்" என்று மோகனின் அப்பாவிடம் அம்மா கேட்டாள். அவர் நடந்ததையெல்லாம் சொன்னார். “நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும். புள்ள என்ன பண்ணுவான். 500 ரூபாய் தானே, நாலு நாள் ஓவர் டைம் வேல பண்ணா போச்சு" என்று சொன்னப்போது, "அம்மாக்கள் எப்பவும் இப்படித்தானா?" என்று சொல்லிக்கொண்டு அவர் உறங்க சென்றார்.

மறுநாள் காலை, "டேய் மோகன், இந்தா 500 ரூபாய், உல்லாசப்பயணம் போய்ட்டு வா" என்று அம்மா சொன்னதும், இடிந்து போன கனவு கோட்டையை மறுபடியும் கட்டினான். " லவ் யு அம்மா" என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு சென்றான்.

ஆசிரியரிடம் பணத்தைக் கொடுத்து, பெயரைப் பதிவு செய்துகொண்டான். அந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை அன்று உல்லாசப்பயணம் போவதாக ஆசிரியர் சொன்னார். தன்னுடைய ஆசை எல்லாம் நிறைவேறப்போகுது என்று மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருந்தான்.

ஞாயிற்றுக்கிழமையும் வந்தது, எம். ஜீ. எம் சென்றடைந்தான். "நம்ம ஆசையும் நிறைவேறுதுல" என்று மனதில் சொல்லிக்கொண்டு அவன் மிகவும் ஆவலாக இருந்த 'ரோலர் கோஸ்டர்' விளையாட்டுக்கு சென்றான். நீண்ட நெடும் கூட்டம் இருந்தது, அவன் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தனர். 30 நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின் அவன் உள்ளே சென்றான், "தம்பி இங்க வா.. நீ உயரம் கம்மியா இருப்ப போலயே.. அங்க போ" என்று உயரம் கணிக்கும் நபரிடம் செல்லும்படி அந்த ஊழியர் சொன்னார். அந்த விளையாட்டுக்கு ஏற்ற உயரம் இல்லை என்று 'ரோலர் கோஸ்டர்' விளையாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தன் நண்பர்கள் விளையாடுவதைப் பார்த்து அவனை அறியாமல், அவனின் கண்ணின் வழியே நீர் துளிகள் கசிந்தன.

நீதி: எதிர்ப்பார்ப்பு சில சமயங்களில் ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். அதனால் எதிர்ப்பார்ப்பைக் குறைத்துக்கொள்வது நல்லது.

--GD

 

 

15.K2K- 00067.

 ((((((((((எதிர் பார்ப்பு))))))))))

           " கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே " என்று கீதையில் கூறுகிறான் பார்த்தன். நடைமுறையில் பார்த்தால் அப்படியா உள்ளது நிலைமை?

      கோயிலுக்கு வந்தால் பக்தன் கோரிக்கை யோடு தானே வருகிறான், ஆராத்தி எடுக்கும் அர்ச்சகரின் எதிர்பார்ப்பும் தட்டில் விழும் துட்டாக தானே இருக்கிறது.

    தென்னையை நட்டுப் பயிராக்குகி றோம் என்றால் தேங்காயை எதிர் பார்த்துத் தானே.

   பிள்ளையை வளர்த்து ஆளாக் குகிறோம் என்றால் முதுமையில் ஆதரவை எதிர் பார்த்துத் தானே, ஆதலால் எதிர்பார்ப்பு என்பது எதிர் பாராதது அல்ல. ஆனால் எல்லா எதிர்பார்ப்புகளையும் நம்மால் நிறைவேற்ற முடியுமா என்பது ஒரு சுவையான கேள்வி தான்.

         உதயசங்கர் இருபத்து நான்கு வயதில் இன்று ஒரு மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி. இந்த இளம் வயதில் இப்படிப் பட்ட உயர்ந்த நிலையை அடைய அவனுடைய அப்பா, அம்மா, ஆசிரியர், அவரது உறவினர் ஆன தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரது பங்கு மகத்தானது.

     உதய சங்கருக்கு இருபத்தைந்து வயது முடிந்ததும் அவன் திருமணப் பேச்சை துவக்கி ஜாதகக் குறிப்பை தேடி எடுத்தார்கள். உதயசங்கரின் உயர்வுக்கு காரணமான ஒவ்வொருவரும் ஒவ்வொரு எதிர் பார்ப்புடனேயே அவர்களது பங்கை ஆற்றி அவன் திருமண விஷயத்தை அணுகினார்கள்.

          உதய சங்கரின் அம்மா மீது அவனுக்கு அளவு கடந்த பக்தியும் பாசமும் உண்டு.அவனை ஊட்டி வளர்த்து படிக்க தினமும் ஊக்கப் படுத்தி தேர்வு நேரங்களில் சீக்கிரம் எழுப்பி தேனீர் வழங்கி -- இப்படிபார்த்துப் பார்த்து வளர்ததவள் அவள்.தாய் சொல்லைத் தட்டாத மகன் அவன்.

           உதய சங்கரின் அம்மாவுக்குப் பாசமலர் போன்ற ஓர் அண்ணன் உண்டு, அவருக்கு தேவதை போன்ற ஒரு பெண் உண்டு, அவளும் நன்கு படித்து முடித்து திருமணத்துக்கு தயாராய் இருந்தாள்.

        வீட்டுக்குவரும் மருமகள்கள் வீட்டை இரண்டு   ஆக்குவதையும் பெற்றோர்கள் பிரிக்கப்படுவதையும் உணர்ந்த உதய சங்கரின் அம்மா தன் அண்ணன் பெண்ணை திருமணம் செய்தால் தங்கள் அந்திமக் காலம் அமைதியாய் கழியும் என்பது அவள் எதிர்பார்ப்பு. அதற்குத் தக அவள் காய் நகர்த்தி வந்தாள்.

    அவன் அப்பாவோ வேறு எதிர் பார்ப்பில் இருந்தார். அவர் தங்கைக்கு ஓர் அழகிய மகள் உண்டு. ஒரே பெண்ணான அவளும் பட்டம் பயின்று ஆசிரியராக நிரந்திர அரசுப் பணியில் உள்ளாள். அவள் தந்தைக்கு ஏராள மான நிலபுலன்கள், வீடுவாசல்கள், கட்டுமான தொழில், அரசு ஒப்பந்தக்காரர் பணி என்று கொழுத்த வருமானம். அதையும் தன் உறவினரான சட்டமன்ற உறுப்பினர் செல்வாக்கையும் பயன்படுத்தி தான் தன் பெண்ணை அரசுப் பணியில் அமர்த்திட முடிந்தது அவரால். இந்த திரண்ட செல்வம் முழுவதும் கடைசியாக தன் மகனுக்கு வர வாய்ப்பு இருப்பதால் தங்கை மகளை மகனுக்கு கட்டிவைக்க வேண்டும் என்பது உதய சங்கரின் அப்பாவின் எதிர்பார்ப்பு. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றே இருக்கும் தன் மகன் தன் சொல்லை மீரமாட்டான் என்பதும் அவர் எதிர் பார்ப்பு.

          சிறு வயதில் இருந்தே உதய சங்கரை கல்வியில் மேம்படுத்தி, பழக்க வழக்கங்களில் நெறிப் படுத்தி, வாழ்வில் இலக்குகளை உருவாக்கி வழி காட்டி அவனைச் செதுக்கி சீர் செய்ததில் அவனது பள்ளி ஆசிரியருக்கு ஒரு பங்குண்டு.

          என்றைக்கும் ஒழுக்கம் தவறாத நல்லாசிரியர் ஆக இருக்கும் அவர் மீது அவனுக்கு ஒரு மாறாத மதிப்பும் தீராத ஈரப்பும் உண்டு. அதைக் கருத்தில் கொண்டும், தன் மகள் மீது பாசத் தோடு இருப்பதை எண்ணியும் உதய சங்கரை மரு மகனாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எதிர் பார்ப்போடு இருந்தார் ஆசிரியர்.

            உதய சங்கர் எவ்வளவு தான் கல்வித் தகுதி, திறமை, ஆளுமை, தேர்வாணைய தேர்வில் முதன்மை பெற்று இருந்தாலும், நேர் முக தேர்வில் வெற்றி என்பது பண பலம், அரசியல் செல்வாக்கு கொண்டோரின் வேட்டை காடாகவே உள்ளது. இந்த இடததில் தான் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளே நுழைகிறார், அவன் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரியாகப் பணி ஏற்க்க வும் உதவுகிறார்.

         . . உறுப்பினருக்கு கூட ஒரு பெண் இருக்கிறாள், ஆனாள் உதய சங்கரின் சுயம்வர போட்டியில் உள்ள மற்ற பெண்களைப் போல இவள் அழகிலும் அறிவிலும் தகுதி மிக்கவள் அல்ல.களை அற்ற முகமும்  அமைபற்ற உடலும் கொண்ட  பள்ளிப் படிப்பை தாண்டாத பெண் அவள்.

        மனதில் ஒரு புள்ளி வைத்து, கோலம் போட்டே உதய சங்கர் விஷயத்தில் உதவி செய்தார் அவர். தன் பணபலம் பதவிப் பெருமை ஆகியவற்றை வைத்து உதய சங்கரை மடக்கிப் போட்டு விடலாம் என்பதே அவர் எதிர் பார்ப்பு.

       இந்த எண்ணத்தில்மகளின் ஜாதகக் குறிப்பை தேடி எடுக்க நல்ல நாள் குறித்தார் .. உறுப்பினர்.

     இந்தப் போட்டியாளர்களை எப்படி உதயசங்கர் ' நாக் அவுட் 'செய்தான் என்பது தான் சுவையானது.

      நுண்ணுயிரியல் பட்டம் பெற்ற அவன் தன் ஆசிரியரை அணுகி, மரபியல் கோட்பாட்டின் படி இரத்தத் தொடர்புள்ள நெருங்கிய உறவு திருமணம் வம்சாவழி வளர்ச்சிக்கு கேடானது என்பதை அவர் மூலம் தன் பெற்றோருக்கு உணர்த்தினான். இதன் மூலம் சுயம்வரத்தில் முதல் சுற்றில் அத்தை மகளையும் மாமன் மகளையும் வெளியேற்றி விட்டான்.

         அடுத்து .. உறுப்பினர் தரப்பில் இருந்து ஜாதகம் கொடுத்து ஜாதகம் கேட்டு ஆள் வந்தாயிற்று. உதய சங்கருக்கும் அவன் பெற்றோருக்கும் துளிக்கூட விருப்பமில்லை. ஆனாலும் குல தெய்வம் கோயிலில் வைத்து சாமி கும்பிட்டு ஜாதகம் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி அனுப்பினர்.

    பின் பெண் ஜாதகத்திற்க்கு ஏழாம் பொருத்தம் உள்ள ஒரு ஜாதகத்தை சோடித்துஉருவாக்கி கொண்டு போய்கொடுத்தார் உதய சங்கரின் அப்பா. மறு நாளே அடித்த பந்து போல திரும்பி வந்தது செய்தி பொருத்தமில்லை என்று. ஆக அடுத்த சுற்றில் . . உறுப்பினர் பெண்ணும் வெளியேறி விட்டாள்.

         விரைவில் ஆசிரியரும் மனைவியுடன் உதயசங்கர் வீட்டுக்கு வந்து தன் ஆசையை வெளிப்படுத்தினார். உதய சங்கர் பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.இருப்பினும் பையனைக் கேட்டு தகவல் சொல்லி அனுப்புவதாக அனுப்பினார்கள் ஆசிரியரை.

     உதய சங்கர் காதில் போட்ட போது ஆசிரியர் மகளை உடன் பிறவா சகோதரியாக கருதுவதாக பெற்றோரை விட்டே சொல்லச் சொல்லி விட்டான் அவன்.

      இப்படி எல்லாருடைய எதிர் பார்ப்புகளையும் தவிடு பொடியாக்கி உதய சங்கர், எதிர்பாராத விதமாக ஒருநாள் தன்னோடு தேர்வாணைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மாவட்ட துணை ஆட்சியராக பணி புரியும் நிறை மதியோடு வந்து நின்றான். பெற்றோர் ஒப்புதலோடு திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து காலில் விழுந்து வணங்கினான். ஒருசேர அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் மேலிட திகைத்துப் போய் நின்றார்கள் அவன் பெற்றோர்கள்.

 

ஆக்கியோன: அன்பழகன்,

நீடாமங்கலம்...

 

 

16.K2k 00068

 ராஜ் சிறு வயதில் இருந்தே ஏழை, அவனோ கடினப்பட்டு படித்து வந்தான், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தான், அவன் அம்மாவோ தீப்பெட்டி தொழில் செய்து வந்தார்கள்.

அவனுக்கு சிறு வயதில் இருந்தே தந்தை கிடையாது, அவனுடைய அம்மாவோ அந்தக்கால puc மற்றும் ஆசிரியப் படிப்பு படித்திருந்தார்கள். ஒரு நாள் அரசு வைத்த தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியையாக மாறினார்கள், ஊர் மக்களுக்கு போட்டி பொறாமையடன் செயல்பட்டார்கள். அவனுக்கோ சிறு வயதில் இருந்தே போலீஸ் ஆகவேண்டும் என்ற எண்ணம்.

அவனுடைய அம்மாவிற்கோ அவனும் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம். ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு. அவன் தாயிற்காக அவன் ஆசிரியப்படிப்பு படித்தான்.

அவனுக்கோ ஒரு அக்கா திருமணம் ஆகாதா என்ற எதிர்பார்ப்போடு ஒரு சாதாரண பள்ளியில்   ஆசிரியராக வேலை பார்த்தான்.

அவனும் தனக்கும் அரசு வேலை கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்போடு இருந்தான். போட்டித் தேர்வு அதிகமாகவே தோல்வியையே தழுவினான். வேலைவாய்ப்பு அலுவலகம் இருந்தும் என்ன பயன் என்று வெறுப்பு அடைந்தான்.

அவன் நண்பர்களுக்கு திருமணம் நடக்கும் போதெல்லாம் அவனுக்கும் ஒரு சிறு எதிர்பார்ப்பு நம் அக்காவிற்கு எப்பொழுது திருமணம் நடைபெற நமக்கு எப்பொழுது நடைபெற என்ற வருத்தத்துடன் இருந்தான்.

ஆனால் அவனுக்கு மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது, ஆசிரிய பயிற்றுனராக படித்து முடித்தான் ஆசிரியருக்கே ஆசிரியர் என்று பெருமிதம் அடைந்தான்.

அக்காவிற்கோ 31 வயதில் திருமணம் நடைபெற்றது. தனக்கு எப்பொழுது நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தான். மேலும் அரசு வேலைக்கு முயற்சி செய்தான் அந்த வேலை கிடைக்குமா இந்த வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு 11 பட்டங்களை படித்து முடித்தான்.

அக்காவிற்கு ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லை என அக்கா மாப்பிள்ளை விவாகரத்து செய்து விட்டு சென்றார். ராஜ் தாயாரோ எனக்கு தான் 2 குழந்தைகளை என் கணவர் விட்டுச் சென்றார். என் குழந்தைக்கும் இந்த நிலையா கணவன் இல்லாமலே வாழ்வா என தினமும் அழத்தொடங்குவார்

இவன் வரும் போதே அழும் போது இவனுக்கு திருமண ஆசை விட்டது. இவனுக்கு 35 வயதில் திருமணம் நடைபெற்றது. இவன் எதிர்பார்ப்புகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது..

இரு குழந்தைகளுக்கு தகப்பன் ஆனான். 40 வயதில் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க எதிர்பார்ப்போடு இருந்தான். ஊரெங்கும் வைரஸ் தொற்றினால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இவனுடைய தனியார் வேலையும் பறிபோனது. இவன் அரசு வேலைக்கு எதிர்பார்போடு இருந்து தனியார் வேலையும் போனது.

ஆனாலும் மனந்தளராது இது வரை நமக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்து, எதிர்பார்ப்போடும் தன் விடா முயற்சியுடன் வாழ்ந்து வருகிறான், பிறரிடம் பேசும் போது இல்லாததற்கு எதிர்பார்ப்போடு வாழ்வதை விட இருக்கிறதை வைத்து வாழுங்கள் என்று கூறி வாழ்ந்து வருகிறான்.

J. JEYARAJ

 

 

17.K2K-00078.

எதிர்ப்பார்ப்பு

#################

இடைவிடாத மழையும், இதமான குளிரும் நந்துவின் இறந்தக் காலத்திற்கு அழைத்துச் சென்றது. வீட்டின் ஜன்னலருகில், தனிமையில் அமர்ந்தவள். கண்முன்னே! நிஜங்கள் நிழல்களாக ஆடின.

பள்ளிக்காலத்திலே... தாமரை மலரை போல, விரிந்த இவளது இதழ்களை சுவைக்க, ஆண்கள் காதல் என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு உணவகத்திலும், விளையாட்டு மைதானத்திலும் அணியாக நிற்பார்கள்.

ஆனால் இவளுக்கோ ஆண்கள் என்றாலே வெறுப்பு. இவளது உடன்பிறப்பு சினேகா, மாறனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டாள். ஆசை அறுபது நாட்கள். மோகம் முப்பது நாட்கள் என்பதை உணர்த்திச் சென்றான். பித்து பிடித்தவள் போல சினேகா வீட்டிலே, அடைப்பட்டுக் கிடக்கிறாள்.

அக்காவின் காதல் காமத்திற்கு முன்னுரிமை கொடுத்ததை நினைத்தவள் காதல் என்றாலே! வெறுப்புடன் நோக்கினாள். சீனுவும், நந்தும் நீண்டகால நண்பர்கள். இவர்களுடைய நட்பை பார்த்து, பொறாமை கொள்ளாதவர்கள் உண்டோ.. ஆனால் சீனுவின் மனதில் நந்துவுக்கென ஒரு இடம் ஒதுக்கப்பட்டே இருக்கும். அவ்வொதிக்கிடம் காதலா? நட்பா? என்பதில் ஐயம் அடிக்கடி சீனுவுக்கு எழுவதுண்டு. ஒருநாள் தலைவலி என்று பள்ளிக்கு போகாமல், அடுத்தநாள் போனவனைக் கண்ட நந்துவின் கண்களில் எதோ! ஏக்கம் தென்பட்டது. அதனையறிய பல முயற்சிகளை மேற்கொண்டான்.

சீனுவின் நண்பன் ரவி. ஒருநாள் நந்துவிடம் சீனு உன் மேலே காதல் நோய் கொண்டுள்ளான். என்றும் அதை உன் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொண்டு உன்னிடம் சொல்ல அச்சம் கொள்கிறான் என கூறினான். நந்துவுக்கு பதில் கூற முடியவில்லை. ஆனால் சீனு மீது அளவு கடந்த அன்பிருந்தது.

அடுத்தநாள் காலை பள்ளியில் பிரியாவிடை அன்று தனது மனதிலுள்ள காதலை சொல்லி விட்டான். நண்பனின் இத்தகைய செயலைக் கண்டு கோபம் கொண்டவள். ஒரு வாரம் பேசவில்லை. அந்த பேசா காலத்தில் தான் சீனுவும் அவள் மனதில் இருப்பதை உணரமுடிந்தது.

நானும் உன்னை விரும்புறேன். ஆனால் அக்காவின் வாழ்க்கை பறிபோய் விட்டது. நானும் காதலிக்கிறேன் என்று தெரிந்தால், பெற்றோர்கள் உயிரையே மாய்த்துக் கொள்வார்கள் என்றாள். நான் இருக்கிறேன் கவலைக் கொள்ளாதே என்று கூறினான். நாட்கள் கடந்தது. காதலும் கடந்துவிட்டது.

சீனு மீது அதிக அன்புக் கொண்டவள். அவன் பார்க்க வரவேண்டும். வெளியில் மற்ற காதலர்களைப் போல சுற்றித் திரிய வேண்டும் என்றெல்லாம் ஒரு எதிர்ப்பார்ப்புடன் இருந்தாள். ஆனால் அவளது ஆசைகளை புரிந்துக் கொள்ளாதவன். அவளை விட்டு விலகினான்.

பள்ளிக் காலத்தில் விதையாக விழுந்த சீனு-நந்து காதல் பள்ளியிலே முடிந்துவிட்டது. காலம் கடந்தாலும், அவனை பார்க்கும் போதெல்லாம் அவளின் காதல் ஆலமரமாகத்தான் இருந்தது. சீனு திடீரென தன்னை ஒதுக்கிவிட்டதை நினைத்து வருந்துவாள். நண்பர்களிடமிருந்து ஒதுங்கினாள். நந்துவின் நெருங்கிய சினேகிதி பத்மாவை சீனு காதலிப்பதாக பள்ளியில் அனைவரும் கதைப்பார்கள். அதனை கேட்கும் போது மனதுக்குள் ஆயிரம் ஊசிகள் நெஞ்சில் இறங்குவது போல வலி அவளுக்கு ஏற்படுவதுண்டு.

எல்லாம் விதியென தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டாள்.

எதிர்ப்பார்ப்புகளற்ற வாழ்க்கை சுகமாக அமையும்.

நன்றி!

 

பரமசிவம் இந்துஜா

இலங்கை.

 

 

18.K2K 00079

எதிர்பார்ப்பு

தவசுப்பிள்ளை சோர்வாய் திண்ணையில் சாய்ந்திருந்தார்..மனைவி பாக்கியத்தின் மரணம் அவரை நிலைகுலைய வைத்துவிட்டது...பாக்கியம் அற்புதமான மனைவி..அவருக்கு மனைவியாக. வாய்த்தது அவர் செய்த புண்ணியம்தான்.. இருப்பதை வைத்து திறம்பட குடும்பத்தை நடத்திச் சென்றவள்..ஒரே பிள்ளையையும் நன்கு படிக்க வைத்தாயிற்று..இதோ சாதாரண ஓட்டு வீடாக இருந்த இந்த இடத்தை மரங்கள் நிறைந்த பசுமைச் சோலையாக மாற்றிவிட்டு சென்றிருக்கிறாள்..தென்னையும் மாவும் பலாவும் வேம்பும் முருங்கையும் பனையும் என எங்குத் திரும்பினும் கண்ணுக்கு குளிர்ச்சி...கண்ணுக்கு கண்ணாய் பெற்ற பிள்ளைகளைப் போல கருத்தாய்ப் பார்த்துக் கொள்வாள்..அவள் போயாயிற்று.. தவசுப்பிள்ளைதான் தவித்துக் கொண்டிருக்கிறார்..

வேப்பமரம் தன் கிளைகளை அசைத்து பக்கத்து மரத்திடம் செய்தி சொல்லியது.. 'என்ன.. என்பதாய் கிளைகளை அசைத்தது தென்னை..'

'நமக்கெல்லாம் ஆபத்து என உள்ளுணர்வு சொல்கிறது... நேற்று இரவு முத்தரசு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.... நம்மைப்பற்றிதான்..அரசல் புரசலாக. காதில் விழுந்த வார்த்தைகள் சரியில்லை.."

"பெற்றோரை வயதான காலத்தில் பரிதவிக்க விட்டு பட்டணம் போனவனிடம் பரிவை எதிர்பார்க்க முடியுமா..அவனுக்கு மாமரத்தில்தானே தொட்டில் கட்டினார்கள்..சின்னவயதில் ஆசையாய் இங்குதானே ஓடியாடி  விளையாடுவான்..மரத்தில் ஏறி பழம் பறிக்கையில் எத்தனை கிளைகளை ஒடித்திருப்பான்..வருடம் தவறாமல் குலைகுலையாய்க் காய்த்து இலாபத்தை தந்தோமே..அதில்தானே மேற்படிப்பையே முடித்தான்..அவன் குழந்தைகளும் இங்குதானே விடுமுறையில் ஆடிப்பாடி சந்தோஷம் கண்டார்கள்..நுங்கும் இளநீரும் மாங்கனிகளும் சலிப்பின்றி ருசித்து தின்கையில் கண்டு இரசித்து மகிழ்ந்தோமே.. பாக்கியம் மங்களவதி.  நம்மை நன்றாய்ப் பார்த்துக் கொண்டாள்..அவள் விருப்பப்படி நம் நிழலில் படுத்துதான் உயிரை விட்டாள்..தவசுக்கும் நம்மேல் பிரியம்தான்..எது நடக்க வேண்டுமோ அது விதிப்படி நடக்கட்டும்.."மரங்களின் சலசலப்பு நின்றது..

முத்தரசு அப்பாவின் எதிரில் வந்து நின்றான், "அப்பா..உங்க சோகம் புரியுது..என் நிலையையும் நீங்க புரிஞ்சுக்கணும்..ரொம்ப நாள் இங்கயே நான் இருக்க முடியாது..கௌசிகாவும் பிள்ளைங்களும் நேத்தே ஊருக்கே கிளம்பிட்டாங்க..அங்க எல்லாம் போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துருக்கேன்..உங்களைத் தனியே விட்டுப்போக மனசு கேட்கலை.. மொத்தமா வீட்டையும் மரங்களையும் விலைபேசி வித்துட்டு உங்களை கூட கூட்டிட்டு போயிடலாம்னு இருக்கேன்..

தவிர எனக்கும் நிறைய பணமுடை இருக்கு..வர்ற பணத்தை வெச்சு கடனெல்லாம் அடைச்சுட்டு சொந்தமா அங்க வீடு வாங்கலாம்னு இருக்கேன்.." முத்தரசு போய்விட்டான்...

தவசுப்பிள்ளை எதுவும் சொல்லத் தோன்றாமல் மௌனமாய் ...இரவுச் சாப்பாட்டை ஒதுக்கிவிட்டு ..வேப்ப மரத்தடியில் நார்க்கட்டிலில் படுத்தார்.. பாக்கியத்தைப்போல் மரங்களைப் பராமரிக்க இயலுமா என அவருக்குள்ளும் கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கிறது..

மறுபடியும் மரங்களின் சங்கேத பாஷை சலசலப்போடு தொடங்கியது..

"தவசுப்பிள்ளை என்ன முடிவெடுப்பார்னு எதிர்பார்க்கற.. " கேட்டது பலா மரம்..

"ம்ம்.. என்ன இருந்தாலும் சொந்த பிள்ளைதானே உசத்தி.. அவரு என்னவேணா சொல்லட்டும்..இப்ப சலசலன்னு பேசிகிட்டு கிடக்காம...அவருக்கு இதமான காத்தை தருவோம்.. நிம்மதியா தூங்கட்டும் மனுசன்.."

கிளைகளை இலேசாய்த் தாலாட்டுவது போல அசைக்க தென்றலை அனுபவித்தபடி நிம்மதியாய் உறங்கினார்.. தவசுப்பிள்ளை..

"என்னங்க..நான் இங்கதாங்க இருக்கேன்..என் மூச்சுக்காத்து இங்கதான் அலையுது..என்னையும் ஆசையா வளர்த்த மரங்களையும் விட்டுட்டு எங்கேயும் போயிடாதீங்க.." பாக்கியத்தின் குரல் கேட்டு சிலிர்த்து எழுந்தார் தவசுப்பிள்ளை.

காலையில் விடிந்தும் விடியாததுமாக .. முத்தரசு எதிர்பார்ப்போடு வந்து நின்றான்..

"என்னப்பா எப்ப வரச்சொல்லட்டும் இடம் பார்க்க ஆளை.."

"வேண்டாம் முத்தரசு..இது நான் வாழ்ந்த இடம் மட்டுமில்ல..உங்கம்மா தெய்வமா நடமாடிய இடம்..ஒவ்வொரு மரத்துலயும் அவ முகம்தான் தெரியுது. பாக்கியம் நினைவா இங்கேயே இருந்துடறேன்..அம்மாவோட நகை..எங்க சேமிப்பு எல்லாத்தையும் எடுத்துக்க..இந்த வீட்டையும் மரங்களையும் விட்டுடு..என் காலம் முடிஞ்சப்புறம் என்ன வேணா செஞ்சுக்க.. துண்டை உதறித் தோளில் போட்டபடி தவசுப்பிள்ளை சொல்ல.. ஆனந்த நெகிழ்ச்சியில் பூக்களைச் சொரிந்தன மாவும் வேம்பும்..

கருத்து: மனிதர்களைப் போல் மரங்களுக்கும் உணர்வும் எதிர்பார்ப்பும் உண்டுதானே..

பெயர்: கி. இலட்சுமி

 

 

19.K2K 00080

எதிர்பார்ப்பு

அந்த பிரபலமான தனியார் கம்பெனியின் மனிதவளத் துறையில் (human resources department) ஆட்களை ரெக்ரூட் செய்வதற்காக இண்டர்வ்யூ நடந்து கொண்டிருந்தது.

இலட்சக் கணக்கில் பட்டதாரிகள் விண்ணப்பித்துத் தேர்வெழுதி நேர்முகத் தேர்வுக்காக ஆயிரக் கணக்கில் குறைக்கப் பட்டிருந்தார்கள்.

அன்று காலையில் இருந்து ஆரம்பித்து

ஒவ்வொரு கட்டமாகத் தேர்வுகள் முடிந்து

நான்கு கட்டத் தேர்வுகள் முடிந்து இறுதியில் வெறும் நான்கு இளைஞர்கள் மற்றும் ஓர் இளம் பெண் மட்டும் மிஞ்சினார்கள்.

அந்தக் கம்பெனியில் மட்டும் வேலை கிடைத்து விட்டால் போதும், வாழ்க்கையில் ஸெட்டில் ஆகி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் ஐந்து பேரும் மனதில் பரபரப்புடன் இறுதிக்கட்டத் தேர்விற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு தனியறையில் அவர்கள் ஐந்து பேர் மட்டும், " இன்னும் ஒரு மணி நேரத்தில் இறுதிக் கட்டத் தேர்வு; அது வரை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்", என்று அவர்களுக்கு செய்தி வந்தது, கூடவே தேநீரும் பிஸ்கட்டுகளும் அனுப்பி இருந்தார்கள். அந்த டென்ஷனான நேரத்தில் அந்தத் தேநீர் மனதிற்கு இதமாக இருந்தது, தேநீரைப் பருகிக் கொண்டே ஐந்து பேரும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். முதலில் அந்தப் பெண் தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

" நான் படித்து முடித்ததும் எனது பெற்றோர் எல்லாப் பெற்றோர்களைப் போலத் திருமணத்திற்குப் பார்க்க ஆரம்பித்தார்கள், எங்களுடைய குடும்பம் அதிக வருமானமில்லாத நடுத்தர வர்க்கக் குடும்பம்.நிறம் மட்டு.வேலை இல்லை என்று எத்தனையோ நிராகரிப்பு.திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து வேலை தேட ஆரம்பித்து விட்டேன்.என் சொந்தக் காலில் நின்று என் பெற்றோரை வயதான காலத்தில் காப்பாற்ற நினைக்கிறேன்."

முதல் இளைஞன்.

"நான் என் குடும்பத்தின் மூத்த மகன், அப்பா சொந்த பிஸினஸ், திடீரென்று பாரலிடிக் அட்டாக். படுக்கையில் இப்போது.ஒரு தங்கை, ஒரு தம்பி, பட்டப் படிப்பை முடித்து மேலே நிறைய படிக்க ஆசை.சூழ்நிலை இடம் கொடுக்காததால் பார்ட் டைம் வேலை செய்து கொண்டே எம்.பி.. படித்தேன், இந்த வேலை கிடைத்தால் குடும்பம் முன்னேறும்".

இரண்டாவது இளைஞன்

" நான் கிராமத்தில் இருந்து நகரத்திற்குப் படிப்புக்காக வந்தேன், வேலை கிடைத்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் என்னைப் போன்ற மற்ற இளைஞர்களுக்கும் வழி காட்ட வேண்டும்".

மூன்றாவது இளைஞன்

"நான் ஒரு மாற்றுத் திறனாளி, கல்லூரியில் படிக்கும் போது ஒரு சாலை விபத்தில் ஒரு காலை இழந்து விட்டேன், செயற்கைக் கால் இப்போது, உங்களைப் போல் ஓடியாட முடியாது, ஆனால் வேலை கிடைத்தால் என்னை நானே பார்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை வரும்".

நான்காவது இளைஞன்

" நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன், வேலை கிடைத்ததும் அந்தப் பெண்ணின் வீட்டில் பேசப் போகிறேன்". ஐந்து பேரும் தங்களை அறிமுகம் செய்து கொண்ட பின் நேரமும் முடிந்து இறுதிக் கட்டத் தேர்வு நடக்கும் அறைக்கு ஐந்து பேரையும் ஒன்றாக அழைக்க ஆச்சர்யத்துடன் சென்றார்கள்.

"ஹலோ ஃப்ரண்ட்ஸ், வாங்க உட்காருங்க, கங்கிராஜுலேஷன்ஸ், நீங்கள் நாலு பேருமே ஸெலக்டட் இதோ உங்களுடைய வேலை நியமன உத்தரவு, அக்ரிமெண்ட் மற்றும் உங்களுடைய பேக்கேஜ் (package) விவரங்கள்", என்று சொல்ல, " நாலு பேரா? நாங்கள் ஐந்து பேர் இருந்தோமே!", என்று முழிக்க அந்த இளம்பெண் சிரித்துக் கொண்டே எதிர்ப்பக்கம் சென்றாள்.

"ஹலோ நண்பர்களே! நான் தான் ஆர்த்தி. உங்களுடைய டீம் லீடர்.அந்த அறையில் நடந்தது தான் உங்களுடைய இறுதிக் கட்டத் தேர்வு",

என்று சொல்லிப் புன்னகைத்தாள் ஆர்த்தி.

நால்வர் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.

எதிர்பார்ப்புக்கள் நல்ல நோக்கத்துடன் இருக்கும் போது ஆண்டவனால் நிறைவேற்றப் படுகின்றன.

 

புவனா

 

 

20.K2K - 00081

பட்டாளத்தான்

"என்னம்மா சீதா... பட்டாளத்துல இருக்கிற உம்புருஷன் ஒரு மாசம் விடுப்புல ஊருக்கு வரப்போரானாம். சந்தோசம் தானே...?" என்று கேட்ட மாமியாரை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்துக் கொண்டே தன் அறைக்கு ஓடினாள் சீதா.

தன் தலையணைக்கு அடியில் வைத்திருந்த கணவனின் புகைப்படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஆயிரம் ஆயிரம் நினைவலைகள் மனதில் ஓடத்தொடங்கின.

சீதா, இருபத்தைந்து வயதான எம்எஸ்சி வேதியியல் பட்டதாரி. அவளுக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த முரளிக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்தது. முரளிக்குப் பட்டாளத்தித்தில் வேலை.

பட்டாளத்தான் என்று முதலில் திருமணத்திற்குத் தயங்கினாள் சீதா. ஆனால் முரளிக்கோ சீதாவைக் கண்ட உடனே பிடித்து விட்டது. அவள் வீட்டிற்கு நேராகச் சென்று அனைவரிடமும் அவன் விருப்பதைக் கூறினான். சீதாவிடம் சிறிது நேரம் தனியாகப் பேசினான். அவளை மணமுடிக்க விரும்புவதாகவும், காலம் முழுக்க கண்கலங்காமல் பார்த்துக் கொள்வதாகவும் வாக்களித்தான். அவள் எதிர்பார்த்ததைப் போலவே இருந்த முரளியை, சற்று அதிகமாகவே பிடித்துவிட்டதால் தன் சம்மதத்தை உடனே தெரிவித்தாள்.

சீதாவின் பெற்றோரும் தாங்கள் எதிர்பார்த்த நற்பண்புகளை உடையவனாக இருந்த முரளியை மனமுவந்து மருமகனாக ஏற்றுக்கொண்டனர்.

விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.  முரளி, சீதாவை தங்கமாய்ப் பார்த்து கொண்டான். தன் கணவன் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று பல கனவுகளைக் கொண்டிருந்த சீதாவிற்கு, முரளி கிடைத்தது, தான் செய்தத் தவம் என்றே தோன்றியது.

திருமணத்திற்கு ஒரு மாதம் விடுப்பில் வந்திருந்தபோதும், திடீரென மேலிடத்திலிருந்து அழைப்பு வந்ததால் உடனே கிளம்ப வேண்டிய சூழ்நிலை முரளிக்கு. சீக்கிரம் வருவதாய் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அவன் சென்ற ஒரு வாரத்தில் சீதா கருவுற்றிருப்பது உறுதியானது. முரளி இதைக்கேட்டுத் தலை கால் புரியாத சந்தோஷம் அடைந்தான்.

ஆறு மாதங்கள் கண்ணிமைக்கும் நொடியில் ஓடிவிட்டன. அடுத்த வாரம் முரளி வருவதாய் இப்போதுதான் போன் கால் வந்தது.

தன் கணவனின் வருகையை இப்பொழுதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள் சீதா. அவனோடு என்னவெல்லாம் பேசவேண்டும் எங்கெல்லாம் செல்லவேண்டும் என அனைத்தையும் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாள். "அப்பா வரப்போராரு செல்லம்..." என்று தன் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் தினமும் கூறினாள்.

நாளை மறுநாள் முரளி வரப்போகிறான். இரவு ஏனோ தூக்கமே வரவில்லை சீதாவிற்கு. எழுந்து நடப்பதும் கடிகாரம் பார்ப்பதுமாய் இருந்தாள்.

காலை 5.00 மணிக்கு ஒரு போன் கால். அதைக் கேட்ட சீதாவிற்கு ஏதோ சரியாகப் படவில்லை. பயந்துகொண்டே எடுத்துப் பேசினாள். மறுமுனையில், " நாங்க டெல்லில இருந்து பேசுறோம். நேத்து இரவு நடந்தத் தீவிரவாதத் தாக்குதல்ல முரளி வீரமரணம் அடைந்துவிட்டார். நாளிக்கிக் காலைல அவரோட உடல் உங்க வீட்டுக்குக் கொண்டு வரப்படும்....". ஆசை ஆசையாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த கணவன் இனி ஒருபோதும் வரப்போவதில்லை என்பதை உணர்ந்த சீதா மயக்கமுற்றாள்.

இருபது ஆண்டுகள் கழித்து...

"அம்மா...நான் பாலு பேசறேன். அடுத்த வாரம் மிலிட்டரி ட்ரெய்னிங் முடியுதும்மா. நான் கிளம்பி வரேன்..."

இரண்டு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வரும் தன் மகன் பாலமுரளியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் சீதா.

முடிவுரை

தாய் நாட்டுக்காக உயிரைத் துச்சமாய் எண்ணி போராடும் ராணுவ வீரர்களுக்கும், அவர்கள் பத்திரமாக வீடு வந்து சேர்வார்கள் என்று நாள்தோறும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இக்கதை சமர்ப்பணம்.

 

Narmada

 

 

21.K2K 00099

 எதிர்பார்ப்பு

"அத்தான் என்னத்தான்

அவர் என்னைத்தான் "

பாட்டு பாடிக்கொண்டே நிலா வேலைகளை முடித்தாள்

"என்னம்மா நிலா எல்லாம் ஆச்சா?  சரவணன் வந்தவுடன் சாப்பிட சொல்ல வேண்டும் பசியோடு வருவான்.  என்னையும் உள்ளே விடவில்லை.  இழுத்து போட்டு தனியே செய்கிறாய் ' என்றவாறு உள்ளே வந்தாள் செண்பகம்

"எல்லாம் ஆயிற்று அத்தை வடை மட்டும் சூடாக தட்டலாம் ", சரி நீ போய் முகம் கழுவி நல்ல   புடவை கட்டி பளிச் என்று இரு " என்று தன் அண்ணன் பெண்ணை பாசமாக பார்த்தாள்.

ஆயிற்று இருபது வருடம் ஓடிவிட்டது.  நிலா பிறந்தவுடன் செண்பகத்தின் அண்ணி கண்ணை மூட அண்ணன் தன் சொத்துக்கள் மகளையும் தங்கை கையில் கொடுத்து விட்டு துறவி ஆகிவிட்டார் செண்பகத்திற்கு ஓரு பையன் சரவணன் சின்ன வயதில் இருந்து நீதான் என் மருமகள் என்று வளர்க்க நிலாவிடம் அதற்கான எதிர்பார்ப்புகள்.

நிலா கை வேலைகளில் கெட்டிக்காரி படு சமத்து சமையல் பிரமாதம். படிப்பு ஏறவில்லை பத்தாவது தட்டி முட்டி பாஸ் செய்து தானே நிறுத்திக்கொண்டு, வீட்டு வேலைகளை கையில் எடுத்து கொண்டாள். ரொம்ப ஆர்பாட்டமான அழகு இல்லாவிட்டாலும் சுமாரான அழகு. சரவணன் நல்லா படித்து பெரிய வேலை கம்பெனி ப்ராஜெக்ட் அமெரிக்கா போய் இரண்டு வருடம் தாண்டி இன்று வருகிறான்.  நிலா மனதில் அத்தனை எதிர்பார்ப்புகள்.  அவன் வந்தவுடன் கல்யாணம் பேசி முடிக்க வேண்டும் என்று அத்தை மாமா பேசியதை கேட்டதிலிருந்து அவளுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் கனவுகள்.

ஆயிற்று சரவணன் வந்தாச்சு, ஏற்கனவே நல்ல கலர், இப்போ இன்னும் வாட்டசாட்டமாக நல்ல அழகு.  ஆனால் அமேரிக்கா வாசம் அவன் நல்லாவே மாறி இருந்தான். கலகலப்பு இல்லாத பிசினஸ் டாக்.  நிலாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.  ஹலோ என்று ஓரு சிறிய தலை அசைப்பு உயிரை கொடுத்து செய்த சமையலையும் நன்கு ருசித்து சாப்பிடவில்லை.  நிலாவுக்கு சற்று சங்கடம்

ரெஸ்ட் எடுக்க போனவன் பின்னால் போன அத்தை சற்று நேரத்தில் ஓரு சிறிய வாட்ச் பெட்டியுடன் வந்தாள். 

"இந்தா இது உனக்கு சரவணன் வாங்கி வந்தது" என்று கொடுக்க நிலாவுக்கு சந்தோஷசம். அவன் ஏன் நேரில் கொடுக்கவில்லை?  என்று கூட தோன்றவில்லை. கிப்ட் பிரிந்தவுடன் அவளுக்கு அதிர்ச்சி, உள்ளே சீட்டில்" மை டியர் மம்மி" என்று எழுதி இருந்தது. அவளுக்கு உண்மை தெரிந்து விட்டது அத்தை சமாளிக்கிறாள் என்று. 

ஆனால் சிறிய வயதில் இருந்தே தன் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றை மனதில் புதைக்க கற்று இருந்ததால் இதையும் சமாளித்தாள். இரண்டு நாள் சரவணனின் ஜெட் லாக் எல்லாம் போன பின் அப்பா அம்மா மெதுவாக கல்யாண பேச்சை ஆரம்பித்தனர். 

"அம்மா நல்ல வேலை.  நானே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். இருங்கள் " என்றவாறு உள்ளே சென்ற சரவணன் ஓரு கவரோடு திரும்பி வந்து அதை அப்பா கையில் கொடுத்தான்.

அதை பிரித்த அவர்கள் தலையில் இடி இறங்கியது. சரவணன் கூட ஓருமாடல் அழகி போல ஒரு பெண் ஒட்டி உரசியபடி நெருக்கம் நன்றாக தெரிந்தது.

"அம்மா அப்பா இவள் சுஷ்மா டெல்லி, அமெரிக்காவில் செட்டில் ஆனவர்கள்.  நல்ல படிப்பு நல்ல வேலை நல்ல வசதி நீங்கள் சரி என்று சொன்னவுடன் கல்யாணம் அவர்களும் இப்போது ரிலேட்டிவ்ஸ் பார்க்க இந்தியா வந்துள்ளார்கள் " என பட படபடவென பேசி முடித்தான்

அப்பா மெதுவாக

" ஏம்பா நீ அனுமதி கேக்கிறியா இல்லை தகவல் சொல்லறீயா " என்று கேட்டார்.

செண்பகத்துக்கு வாயடைத்து விட்டது உள்ளே கேட்டு கொண்டிருந்த நிலாவின் எதிர்பார்ப்பு கோட்டைகள் தூள் தூள் ஆகி உலகம் சுழன்றது.

சரவணன் அழுத்தம் திருத்தமாக"

அடுத்த மாதம் இங்கே ரெஜிஸ்ட்ரார் ஆஃபிஸில் கல்யாணம். ஓரு பைவ்ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்.  எல்லா ஏற்பாடும் பக்கா. நீங்கள் வந்து சும்மா நின்னா போதும். " என்று முடித்தான்.

அம்மா மெதுவாக

"தம்பி நம்ப நிலாவை நெனைச்சு பாத்தியா சின்ன வயதில் இருந்தே ஓரு எதிர்பார்ப்புடன் வழ்ந்துவராடா.  அவ பாவமில்லையா " என்று அழுகையுடன் கேட்டாள்.

கபகப என்று சிரித்த சரவணன்

  " வாட் நான்சென்ஸ் அம்மா நான் எவ்வளவு பெரிய படிப்பு அமெரிக்காவில் வேலை மனைவியும் அங்கேதான் கூட்டி போகவேண்டும்.  உன் அண்ணன் பொண்ணுக்கு அந்த தகுதி இருக்கான்னு நினைச்சி பார்த்தாயா என்ன வேணாலும் எதிர்பார்க்கலாமா. ஒரு தகுதி வேண்டாமா?  " என்று முகத்தில் அடித்தமாதிரி கேட்டு வீட்டு தன் பைக்கில் பறந்தான். மருமகளை சமாதானப்படுத்த எழுந்தவள் டமால் என்று இடி விழுந்த சத்தம் மாதிரி கேட்க எதையும் நினைக்க நேரமின்றி வாசலுக்கு விரைந்தனர். அங்கே அப்பப்பா!  சரவணன் சென்ற பைக்கில் லாரி மோதி பைக்ஓருபுறம் சரவணன் ஒருபுறம் விழுந்து கிடந்தான்.

மூன்று மாதங்கள் போன இடம் தெரியவில்லை சரவணனை டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சைகள் செய்து ஓரு வழியாக பிழைத்து வீடு வந்து சேர்ந்தான். அத்தை   மாமா வயசானவர்கள் அவர்களையும் பார்த்து வீடு ஹாஸ்பிடல் என நிலாவுக்கு முழு அலைச்சல்.

நினைவு வந்தவுடன் அவன் கேட்ட கேள்வி, சுஷிமா வந்தாளா என்றுதான்.  சுஷ்மாவின் எதிர்பார்ப்பு இந்த சரவணன் இல்லை ஆதலால் குடும்பம் விஷயம் கேள்விப்பட்டவுடன் இந்த பக்கம் வராமல் பிலைட் ஏறி அமெரிக்கா போய் விட்ட விவரம் ஓரு பொது சிநேகிதன் மூலம் தெரிய வர கொஞ்சம் அப்செட் ஆன சரவணன் நார்மல் ஆனதும் நிலாவின் முயற்சியால்தான்.

மெல்ல மெல்ல நிலாவின் நல்ல குணங்கள் புரிய சரவணனுக்கு ஓரு ஈர்ப்பு ஏற்பட்டது, எதையும் பட் என்று கேட்கும் அவன் தன் எண்ணத்தையும் நிலாவிடம் தெரிவித்தான், அதிலும் அன்புக்கு பதில் அவளுக்கு அது ஒரு பெரிய கொடுப்பனை அவள் ஏற்று கொண்டு ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது

ஆனால் நிலாவின் இப்போதைய எதிர்பார்ப்பு வேறு, " சாரி அத்தான் என் அன்புக்கு பணிவிடைக்கு பரிகாரம் கல்யாணம் அல்ல, நான் உங்களுக்கு பொருத்தம் இல்லை என்று சொன்ன அடுத்த நொடி என் எதிர்பார்ப்புகளை நான் தூக்கி எறிந்து விட்டேன்.  நான் கவனித்தது என் அத்தை மாமாவுக்கு செய்யும் நன்றி கடன்.  நீங்கள் நன்றாக குணம் ஆகிய பின்னர் ஜோடி பொருத்தம் இல்லை என்று நீங்கள் வருந்தலாம். உங்களோடு படித்த ராகவன் ஓரு விவசாயீ உள்ளூர்.  சிறு வயதில் இருந்து என்னை பிடிக்குமாம்.  ஆனால் நாம் திருமணம் செய்வோம் என்று தன் எதிர்பார்ப்பினை சொல்லாத நல்ல உள்ளம்.  இப்போது அவர் தங்கை மூலம் அதை தெரிந்து கொண்டேன் நானும் சரி என்று சொல்லி விட்டேன் உங்களுக்கு சரியானவுடன் எங்கள் கல்யாணம்.  உங்களுக்கும் உங்கள் எதிர்பார்ப்பின்படி நல்ல பெண் கிடைப்பாள் " என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

சரவணன் எதிர்பார்ப்பு ஈகோ சுக்குநூறான நிலையில் தன்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

எதிர்பார்ப்புகள் எப்போதும் நிறைவேறுவது இல்லை.

-Krishnakumari

 

 

22.K2k00100

எதிர்பார்ப்பும்- எதிர் வீடும்

உங்க எல்லாருக்கும் சாப்பாடு- இத கேட்டாலே ஞாபகம் வரது எது? பிரியாணி ? அப்படினா நீங்க நம்ம கதைல வர சுரேஷ் மாறிங்க...

இந்த கதையில அவனோட வாழ்க்கைல நடந்த சில சுவாரசியமான தரமான சம்பவங்களை பார்க்கலாம்!

சுரேஷும் குருவும் செம்ம க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்..ஒரே ரூம்.. பெங்களூர்ல வேலை ...குரு சுரேஷ எழுப்பி " வா மச்சான் நீ என் நண்பன் உனக்கு ஏதாவது பண்ணனும் போல இருக்கு தம் பிரியாணி வாங்கி தரேன்னு " சொல்றான்..அவன் எழுந்து பல்ல கூட ப்ரஷ் பண்ணாம செருப்ப மட்டும் தூக்க கலக்கம்- தேடி புடிச்சு சரியா ஒரு காலிலே அவனோட செருப்பயும் இனொரு காலுல அவுங்க இன்னொரு ரூம்- ஆளான சதிஷ் ஓட செருப்ப போட்டுவிட்டு வெளில வரான்..நடக்கிற வழில ஒரு டார்க் வயலேட் கலர் பூனை டிரிங் டிரிங் அப்டின்னு கத்து!!!!!! டப்புனு முழிச்சு பார்த்தா மொபைல் போன் அலார்ம் அடிக்குது!!!

அடத்த்தூ... தானா வந்து ஒருவர் டிரீட் அப்டி சொல்லுற அப்போ தெரிய வேணாமா அது கனவு அப்டின்னு??? அந்த மாறி நெனச்சி எழுந்தான் சுரேஷ்...

இடம்: சென்னை பூந்தமல்லி - சுரேஷ் வீடு

அது ரம்ஜான் நாள் .. பையன் பிரியாணி கனவு காண அது தான் காரணம்.. எதிர் வீட்டு ஆன்டி மும்தாஜ் "பிரியாணி தான டா?? கண்டிப்பா தரேன் சத்தியமா தரேன்" அப்டின்னு சொன்னது சுரேஷ் நினைப்புக்கு வந்துச்சு.... பல்லு தேய்க்காம போன காரணம் நமக்கு கனவுல பிரியாணி கிடைக்காமல் போச்சு..அதுனால பல்ல வேக வேகமா வெலக்கி சட்டை நல்லா டிப் - டாப் பா போட்டுகிட்டு பக்கத்து வீட்டுக்கு கிளம்பினான் நம்ம பையன் சுரேஷ்....

சுரேஷ் வீடு 3 ஆவுது மாடி...ரொம்ப ஆசை ஆசையா கீழ இறங்கி ..எதிர்த்த வீட்டிற்கு கிளம்பினான் சுரேஷ்...ஒரு வேகத்துல கீழ இறங்கி வந்த காரணமோ இல்ல அங்க கீழ இருந்த வாழைப்பழம் தோல் பார்க்காத காரணமோ வழுக்கி விழுந்தான் சுரேஷ்.. செம்ம வலி காலுல..ஆனாலும் பிரியாணி வேணுமே?

கீழ இறங்கி...அவன் கேட் திறந்து வெளில வந்து எதிர் வீட்டு காலிங் பெல் அடிக்கலாம் பொறான்..அப்போ தான் வீட்டுக்கு பூட்டு போட்டு இருக்கத பாத்து அதிர்ச்சி சுரேஷ் மனசுல!

பக்கத்து வீடு பூட்டி இருக்க காரணம் இவனுக்கு பயந்தா இல்ல திடீர் வெளியூர் வேலையா? நீங்களே கண்டூப் புடிங்க.....

செய்தி:

எதிர்பார்ப்பு மத்தவங்க கிட்ட வச்சா அது நடக்காமல் போகலாம்.. அதுக்கு நாம தயாரா இருக்கணும!

-Aakash

 

 

23.K2K-00101

* எதிர்பார்ப்பு *

அன்று காலை 10 மணி

அடித்து போட்டார் போல் படுத்து கொண்டிருந்தான் மித்ரன். எந்த ஓசையும் அவனை நெருங்கவும் இல்லை எந்த ஒளியும் அவனை மிரட்டவும் இல்லை..

திடீரென்று பதறி எழுந்தவன் அங்கும் இங்கும் தேடி தன் மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு எழுந்தான். அருகில் அவன் மனைவி ஊமைவிழி அசட்டு சிரிப்போடு அவனை பார்த்து கொண்டிருந்தாள். அந்த பேசா மடந்தையின் சிரிப்பு மித்ரனின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

எழுந்தவன் நேரே சென்று பல் துவக்கி முகம் துடைத்து அவன் செய்ய வேண்டிய வேலையை செய்ய அறை கதவை திறந்தான். திறந்தவனுக்கு அனைத்தும் புதிதாய் இருந்தது. அவன் செய்ய வேண்டியதாய் ஒப்புக்கொண்ட அனைத்து வேலைகளும் முடித்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது தான் அவன் புத்தியில் நியாபகம் வந்தன தான் ஒப்புக்கொண்ட மூன்று நாள் முடிந்து விட்டது என்று.

மூன்று நாள் முன்னாள் அவனுக்கும் அவளுக்கும் நடந்த கருத்து வேறுபாட்டில் மூன்று நாள் வீடு வேலைகள் அனைத்தும் செய்வதாய் தான் ஒப்புக்கொண்ட சவால் அவன் நினைவில் உதயம் ஆனது. அப்போது மித்ரன் தன்னவளை பார்த்த நொடி அவன் மனதில் அவன் செய்த தவறுகளை வெடித்து போட்டு கொண்டு இருந்தன.

காலையில் எழுந்து வாசல் சுத்தம் செய்து வீடு வேலை செய்து இவன் எழுந்திருக்கும் முன்னர் பெட் டீ உடன் இவனை அணுகி இவனை தேற்றி எழுப்பி டிபன் கொடுத்து இவன் ஆபீஸ் வேலையின் நடுவிலும் இவனுக்கான மதிய உணவு செய்து அதன் பிறகும் வீடு வேலையின் நடுவில் மாலை டீ மற்றும் இரவு உணவு என்று பம்பரமாய் சுழன்று ஓடிய ஊமை விழியின் கால்கள் ஓய்வுக்கு அமர்ந்த அந்த அரைமணி நேர வாக்குவாதம் அவன் மூலையில் அடித்தது.

எந்த வேலைக்கும் தான் செய்யாத உதவிகள் மனைவி எதிர்பார்த்த நேரங்களில் இவன் முகம் கடிந்து கொண்ட நேரங்கள் இவன் விழி ஒரமும் நீரீனை நனைத்தது. பேச முடியாத மனைவியின் நிலையை காதலில் மறைத்தவன் அவளின் எதிர்பார்ப்பு பேச்சுகளை அறியாமல் போனான். நேரே சென்றவன் அவளை இறுக்கி அணைத்து மனதோடு மனம் இருக்கையில் அவளின் எதிர்பார்ப்பு பேச்சுக்களுக்கு செவி குடுப்பேன் என அவனது மனம் சத்தியம் செய்தது.

வாழ்வில் அனைவரும் ஓடுவது அவர்கள் எதிர்பார்ப்பு நடக்கும் ஆசையினாலே. செவி கொடுப்போம் மற்றவரின் எதிர்பார்பிற்கும். எதிர்பார்ப்பு அழகு. எதிர்பார்ப்பின் புரிதல் அந்த அழகின் நாணம் ஆகும்.

 

. ஹரீஷ்

 

 

24.K2K-00102

 எதிர்பார்ப்பு -   தரணியின் மதி

என் இறுதிக்காலம் இது, என் மரணத்தை எதிர்ப்பார்த்து ஏங்குக்கூற நாட்கள், அவள் நினைவுகள் மட்டும் என்னை இளமையாக்கும்.

பரணி நட்சாத்திரத்தில் பிறந்ததால் தரணி எனும் என் பெயர், தேய்பிறை வளர்பிறையாய் என் வாழ்வில் வந்ததால் என்னவோ அவள் பெயர் மதி.

பருதிவனம் ஊருக்குள் மக்களின் மனதில் சில மர்ம எண்ணங்களும், கடவுளும் கடவுளுக்குத்தரும் கணிக்கையும் விசித்திரமான மூடநம்பிக்கையாக பிறப்பெடுத்து வந்தக்காலத்தில் நானும் மதியும் அங்கே பிறந்தோம். எதிர் எதிர் வீடுகள், இருவீடுகளும் அருகே தான் ஆனால் இருவீட்டார்கள் எண்ணங்கள், அந்தஸ்த்து, கௌரவம் போன்றவையால் மிகவும் தூரம்.

வளர்பிறை:

சிறுவயது முதல் அவளிடம் பேச வேண்டும், பழக வேண்டும், ஆனால் அவளை நாள்தோறும் அவள் வீட்டு ஜன்னல் வழியாக மட்மே காணக்காத்து நிற்பேன், பருவம் வந்தப்பின்னும், என் காதல் ஜன்னலை தாண்டி மறுபுறம் சேரவில்லை, அந்த கண்கள் என்னை கணதோ?

பௌர்ணமி:

பின்பு, ஊர் திருவிழாவில் பௌர்ணமி என் கண் எதிரே கண்டேன், யாரும் அருகில்ல சமயம், பேச தயங்கி, அவளிடம் என் முதல் வார்த்தை "மதி",

அவள் அழகிய இதழில் இருந்து என் பெயர்! காதலை சொல்லிட ஏங்கினேன், யாராவது பார்த்து, வினையில் முடியும்.

ஜன்னல்கள் மூலம் அஞ்சல் சேவை தொடங்கியது!

தேய்ப்பிறை:

கடிதங்கள் பறந்தன, கவிதையும் கலைகளையும் பரிமாறிக்கொண்டோம், என் காதலை தவிற!

ஊர்க்குள் பஞ்சம் தலைவிரித்து ஆடியாது, கடவுளுக்கு காணிக்கையாக பலி குடுக்க ஆரம்பிக்கப்பட்டது! பின்பு மூடநம்பிக்கையின் உச்சத்துக்கே சென்றாது, கடவுளோட,

கருணையை எதிர்ப்பார்த்து!, காதல் உணர்வை காகிதக் கடிதத்தில் சொல்லி!

 அவள் நல்பதிலை எதிர்ப்பார்த்தேன்.

அமாவாசை:

கனவுலகத்தில் வாழ துடங்கினேன், ஏன்ன பதிலாக

இருந்தாலும் அவள் விருப்பம் வேண்டியிருந்தேன், மதியுடன் வாழ, ஒன்றாய் வாழ, மறுநாள் காலை கடிதம் என் ஜன்னல் இடையே இருந்தது, ஆனால் மதியின் தலை உடம்பின்றி அவள் வீட்டு மூன் இருந்தது.

என் கடிதம் ஜன்னல்களை தாண்டி, அவள் தந்தையின்

வாசலில் விழந்தது, அவர் மகளை என்னுடன் வாழ்வதை விட கடவுளுக்கு நரபலிக் காணிக்கையாக, தருவாதக முடிவேடுத்தார்.

மதியின் காதல் கடிதம், உணர்வின்றி வெறும் காகிதமாய்ப் போனது.

செய்தி:

எதிர்பார்ப்புக்கள் நம் அறிவுக்கு அர்த்தாமாக இருந்தால் வேண்டும் அல்லது எதிர்பார்ப்புக்கள் கொல்லும்.

நன்றி!

-. -சுரேஷ்

 

 

 


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY