அப்பா

1.K2K - 00002 

 அப்பா

"அப்பா" என்றவுடன் "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை அவர் அடிக்கின்ற அடிக்கு மருந்தும் இல்லை,அவரை போல் பாசம் வைக்க யாருமில்லை, அவரின் பாசத்திற்கும் ஈடுஇணை எதுவும் இல்லை" அதையும் தாண்டி நம் அப்பா நம்மளுக்கு  தனக்கென துடிக்காத இதயம்,தனக்கென ஓடாத கால்கள், தனக்கென உழைக்காத கைகள், தனக்கென உடற்சோர்வை மறந்து குடும்பம் குடும்பம் என ஓய்வில்லாமல் சக்கரமாய் சுழன்று நாம் கஷ்டப்படக்கூடாது என நினைத்து நம்மை நெஞ்சில் சுமைப்பவர் தான் அப்பா ..!!

 

காட்சி 1

சில நண்பர்களுக்கோ "அப்பா " கூட இருந்துவிட்டு அவருடைய பாச அரவணைப்பில் இருந்துவிட்டு இப்போ "அப்பா" இல்லையே என்கிற வலி வேதனையுடன் நினவலையில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். இன்னும் சில பேர் நான் குழந்தையாக  இருக்கும்போதே  கடவுளிடம் போய் சேர்ந்துவிட்டார் அப்பாவின் முகத்தை கூட பார்த்ததிலேயே என்ற ஏக்கம் அவர்களுக்குள் எனக்கும் அப்பா இருந்திருந்தால் அவருடன் சேர்ந்து  விளையாடிருப்பேன்,இந்த  உலகத்தையே  சுற்றிக்காண்பித்து இருப்பார் பல நல்ல விஷயங்களை அவர் அனுபவப்பட்டதை எடுத்துக்கூறி கற்று கொடுத்து புரியவைத்திருப்பார் என்று பாசத்துடனும், ஏக்கத்துடனும் சொல்வார்கள்.

 காட்சி 2 :

இன்னும் சில நண்பர்களோ அப்பாவின் அருமை தெரியாமல் அவர் சொல்ற பேச்சைக் கேட்காமல் உதாசீனபடுத்துவார்கள் உங்களுக்கு  என்ன தெரியும் உங்க  வேலையை பார்த்துகிட்டு போங்கள்!! எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் !! ஆனால் ஒரு நாள் தோல்வி அடையும் போது தான் மனம் வருந்தும் அப்போது தான் அன்று அப்பா சொன்னதைக்  கேட்கவில்லையே..!! அந்த ஒரு நிமிடம் கேட்டுருந்தால் இன்று இப்படி தோற்று போயிருக்கமாட்டேனே என அழுகையில் அப்பா நினைவு வந்து மன்னிப்பு கேட்பார்கள்.அப்போது அப்பா "உன்னால் முடியும்" என்றும் "மனதைரியத்தை  தன்னம்பிக்கையுடன்" இருக்கவேண்டும் "நீ வைத்த இலக்கு எட்டும்  வரை போராடு எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது" என "வாழ்வுக்கான விதையை விதைப்பவர்" தான் "அப்பா"            "அம்மா இல்லாமல் வளர்வதே கடினம் என்றால் அப்பா இல்லாமல் வளர்வதும் கடினம் தான்."    

காட்சி 3 :

"அப்பா " தன் மகளுக்காக வேறு துணை வேண்டாம் என்னால் என் மகளை பார்த்துக்கமுடியும் என்று வாழ்க்கையை அர்ப்பணித்தவர் உறவினர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியும்,அவர் தன் மகள் தான் முக்கியம் என அவளை பாராட்டி, சீராட்டி இளவரசியாகக் கவனித்து நல்லபடியாக படிக்கவைத்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் வரை போராட்டமாக இருக்கும் "அப்பாவுக்கு" தன் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைந்ததும் தான் தன் பேரக்குழந்தைகளுடன் நிம்மதியாக வாழக்கையைக் கழிப்பார்.    

காட்சி 4 :

குழந்தை தன் அம்மாவிடம் "அப்பா எப்போ வருவாங்க" என்ற பாச ஏக்கத்துடன் கேள்வியை கேட்கும்போது குழந்தையின் ஏக்கத்தை புரிந்துக்கொண்டு எப்படி சமாதானம்படுத்துவது என புரியாமல் மனதுக்குள்ளேயே "அப்பா எப்போவும் வரமாட்டாங்க கண்ணு" எப்படி சொல்றது என் தவித்துக் குழந்தையைக் கட்டிக்கொண்டு அழுவாள்.தன் குடும்பத்தை பிரிந்து நம் நாட்டுக்காகவும் , நம் பாதுகாப்பிற்காகவும் போரிட்டு, வீர மரணம் அடைகின்றனர். மற்றும் கொரோனாவில் பிரிந்து வாடும் இதயங்கள் அவர்களின் புனித ஆத்மா சாந்தியடையட்டும்..!!          

  கருத்து: "ஆயிரம் மடங்கு அன்பை" வெளியே காட்டிக்காவிட்டாலும் "அன்பை பொக்கிஷமாய்" உள்ளேயே  பூட்டி வைத்திருப்பவர் தான் "அப்பா" எல்லோருக்கும் "நம் அப்பா ஹீரோ" தான்  என்றுமே ..!!!

- லக்ஷ்மி பிரியா

 

 

2.K2K-00004

 அப்பா:

அடுத்தவரால் அதிகம் பேசப்படாத, பேசப்பட வேண்டும் என்று ஒரு பொழுதும் நினைக்காத உன்னத மனிதராக அனைவராலும் பார்க்கப்படும் ஒரு சராசரி அப்பாவின் கதை தான் இது.

நடுத்தர நகரத்தில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது மகனாக பிறந்தார் கணேசன். சிறுவயதில் அப்பா இறந்த காரணத்தால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழலுக்கு ஆளானார். அடுத்தடுத்து சிறு குழந்தைகள் உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலையில் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் நிலை அந்த தாய்க்கும் அவருடன் சேர்ந்து கணேசன் மற்றும் அவர் மூத்த சகோதரர்க்கும் வந்தது. வேறு வழியின்றி கணேசன் மிகவும் கடினமான அந்த பகுதியில் பரவலாக பார்க்கப்படும் எவர் சில்வர் பாத்திரங்கள் செய்யும் வேலைக்கு போக நேர்ந்தது. பதின் பருவத்தில் இருந்த அவரது பாலியம் மாறாத மென்மை கைகள் சுத்தியலின் பாரத்தை தாங்கும் நிலைக்கும், கூர்மையான தகடுகளால் அவரின் கைகள் பதம் பார்க்கும் நிலைக்கும் ஆளானாது. இருந்தாலும் தன்னால் இயன்றதை குடும்பத்திற்கு செய்ய வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தார். தன் உழைப்பில் ஒரு பங்கை தன் செலவிற்கு எடுத்துக்கொள்ளும் வழக்கம் கணேசனுக்கு இருந்தது. நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, நல்ல துணிமணிகள் உடுத்துவது, படங்கள் பார்ப்பது, பாட்டு கேசட்டுகள் வாங்கி சேகரிப்பது என்று சேமிப்பு இல்லாமல் நகர்ந்தன அவரின் நாட்கள். அவருக்கு திருமண வயதும் வந்தது, அவரின் அம்மா அவருக்கு திருமணமும் செய்து வைத்தார். தன் மனைவியுடன் தனது வாழ்க்கை இன்பமாக தொடங்கியது, இருப்பதை வைத்து ஆனந்தமாக வாழ்தார்கள். இரண்டு ஆண் குழந்தைகளும் அவர்களுக்கு பிறந்தது. பிள்ளைகளை நல்லா படிக்க வைத்து, நல்ல நிலைக்கு வர வைக்க வேண்டும் என்பதையே ஒரே குறிக்கோளாக கொண்டு நடக்க ஆரம்பித்தார் கணேசன். தனக்கான செலவுகள், நண்பர்களுடன் ஊர் சுத்தல், நல்ல துணிமணிகள் ஆகியவை அவர் மறந்தே போனார். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் பல வந்தன சொந்தமாக அவரே எவர் சில்வர் பாத்திரங்கள் செய்யும் பட்டரை ஆரம்பித்தார். தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் தன் சக்திக்கும் மீறி கான்வெண்டில் படிக்க வைக்க முடிவெடுத்து அதிக கட்டணம் பெரும் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார். இதை பார்த்த கணேசனின் நண்பர்கள் உன் தகுதிக்கு மீறி செய்கின்றாய், ஏதாவது ஒரு அரசு பள்ளியில் சேர்ந்துவிடு என்று சொன்னார்கள். அதற்கு கணேசன் என்னால் முடியாததை என் பிள்ளைகள் செய்யட்டும் எவ்வளவு தடைகள் வந்தாலும் நான் அதை சமாளிப்பேன் என்று பதில் அளித்தார்.

இப்படி அடுத்தடுத்து பல சவால்கள் வந்தாலும் தன்னலம் கருதாது, தனக்கு என்று எதுவும் செய்து கொள்ளாமல், பிள்ளைகளுக்கு ஒரு குறையும் இல்லாமல் அனைத்தையும் வழங்கினார். நல்ல உணவு, உடை, படிப்பு எல்லாம் நிறைவேற்றினார். உள்ளே அளவுகடந்த பாசமும், அன்பும் குவிந்திருந்தாலும் வெளியே கண்டிப்பும் அதட்டலும் நிறைந்திருக்கும் அவரின் பேச்சில். தனக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அடுத்தவரிடம் சென்று கையேந்தாமலும், கடன் வாங்காமலும் அவர் தன் கடமையை மிகவும் திறம்பட செய்தார். நல்ல நாட்களில் கூட தனக்கென துணி எடுத்துக்கொள்ளாமல், வீட்டில் அசைவம் சமைத்தாலும், நல்ல சாப்பாடு செய்தாலும் பிள்ளைகளுக்கு அதை அள்ளி வைத்து அவர்கள் உண்பதை பார்த்து மகிழ்ந்தார். அவர் பிள்ளைகளும் தந்தையின் எண்ணத்தின்படி படித்து முடித்துவிட்டு நல்ல வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்க தொடங்கினார்கள். இருந்தபோதும் கணேசன் இன்றளவும் தன் உழைப்பையோ, தன் எளிமையையோ சிறிதளவும் மாற்றிக்கொள்ளவில்லை. அவரது பிள்ளைகள் எவ்வளவோ வற்புறுத்தினாலும் அவர் அதை கேட்பதில்லை, தன்னுடைய உழைப்பிலே இன்னமும் வாழ்ந்து வருகின்றார் அந்த தன்னலமறியாத தந்தை. அவரை நோக்கி சிரித்த அவரின் நண்பர்கள் முன்னால் வைராக்கியாமாகவும், பெருமித்துடனும் நடமாடுகின்றார், தான் நினைத்தை சாத்தித்த மகிழ்ச்சியில்.

"தனயன் சிகரம் தொடுவதை...

தானே தொடுவதாக எண்ணி கர்வம் கொள்ளும் தனித்தன்மை மிகுந்தவர்கள் தந்தையர்கள்". "தன் துயர்களையும், வலிகளையும் தனக்குள் அடக்கி, தன் குழந்தைகளின் முகத்தில் குறுநகை காண மனம் நிறையும் மகத்துவமானவர் அப்பா." "தனது ஆசைகள் அனைத்தும் மறந்து பிறரின் அசைகள் ஈடேற இடைவிடாமல் பாடுபடும் உயரிய மனம் படைத்தவர்கள் அப்பா." அனைத்தையும் தந்துவிட்டு மகனின் வளர்ச்சியில் மனம் நிறையும் அப்பாக்களுக்கு சமர்ப்பணம்...

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

3.K2K - 00008

தெய்வத்தின் ரூபம்நீ என்னை காப்பாத்துவியாஎன்று தன் பிஞ்சு மொழியில் மழலையாய் கேட்டான் செழியனிடம் தன் பிள்ளைசூர்யா, பிச்சாவரம் படகு சவாரியில் பயந்துக் கொண்டே பயணித்து கொண்டிருந்தபோது. “நிச்சயம் காப்பாத்துவேன்டா செல்லம்என்று படகுலேயே அவனை தூக்கி எடுத்து மடியில் வைத்துக்கொண்டான் செழியன். அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வரும் வழியெங்கிலும் அந்த வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது செழியனின் ஆழ்மனதில், “நீ என்னை காப்பாத்துவியா”.

காப்பாற்றுவதற்காகத்தானே நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்என்று மனதில் நினைத்துக் கொண்டே தன் சிறுவயதிற்கு மனதை எடுத்துச் சென்றான் செழியன். அனைத்து விசயங்களிலும் தன் தந்தை, தன்னை செதுக்கி, அழகான சிற்பமாக்கி, இன்று நான்கு பேர் பாராட்டும்விதமாய் மாற்றியமைத்ததை நினைவு கூர்ந்தான். சிறுவயதில் ஓடி ஓடி சைக்கிள் கற்றுக் கொடுக்கும்போது, தன் இடுப்பு வளைவதற்கு முதுகில் கொடுத்த அடி ஒவ்வொன்றும், வலி ஏற்படுத்தினும், பிற்காலத்தில் நன்கு சைக்கிள் ஓட்டவும், எந்த வண்டியாயினும் ஓட்டுவதற்குஅடித்தளம் அமைத்துக் கொடுத்த தன் தந்தையின் நினைவிலேயே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் செழியன். “அப்பா, நீ ஏன் எனக்கு பொம்மையே வாங்கிட்டு வரலைஎன்று மூன்று வயதேயான சூர்யா தன் தந்தையிடம்தினமும் கேட்கும் கேள்வி.“தினமுமா வாங்கின்னு வருவாங்க, வாங்கிட்டு வந்த பொம்மையெல்லாம் தூங்கிட்டு கிடக்கு. இன்னும் புதுசாவேற வேணுமாஇது செழியனின் சுப்ரபாதம்.

தேர்வு விடுமுறை எப்போ விடுவார்கள் என்று ஆர்வத்துடன் காத்துக்கொண்டிப்பார்கள் செழியனும், அவன் தம்பிமணியனும். ஒவ்வொரு தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கும்போது தான் ஒரு புது பொம்மை அவர்களுக்குகிடைக்கும்.

தந்தை சிவாவுக்கு வாரக் கூலிதான். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் அம்மா தேவி, அந்த கூலிக்காக காத்துக்கொண்டிருப்பாள். வாடகை, கரண்டு பில், மளிகை சாமான், காய்கறி, பதார்த்தங்கள், இதற்கிடையே செழியனுக்கும் மணியனுக்கும் மாதந்தோறும் கொடுக்கப்படவேண்டிய டீயூசன் பீஸ், ரேசன் பொருட்கள், இப்படிபலத் தரப்பட்ட குடும்பச் செலவுகளுக்காகவே, அந்த வருமானத்திற்காக காத்திருப்பாள். செழியனின் குடும்பம் மிக ஒற்றுமையான, பற்றுதலான, மென்மையான, இரண்டாம் மத்தியத் தரக் குடும்பம். வாரநாட்களில் தன் தந்தையை காண முடியாது செழியனுக்கும் மணியனுக்கும். இரவு வெகு நேரம் கழித்தே வீடுதிரும்புவார் சிவா. ஞாயிற்றுக் கிழமைகளில் தான் அவர்கள் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவது பேசுவது எல்லாம். செழியன் விடுமுறை நாட்களில் தான், தந்தையிடமிருந்து ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் போன்ற பலபோன்றவற்றை கேட்டு தெரிந்து கொண்டிருந்தான். பள்ளியில் கொடுத்த குறைந்த மார்க்குகளை பார்த்து பலமுறை அடியும் திட்டும் வாங்கியிருக்கிறான் செழியன். அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வான், தந்தை ஏன் இப்படி கொடூரமாய் நடந்துக் கொள்கிறார் என்று பள்ளிக்கும் டியூசனுக்கும் கட்டணம் கட்டவே மிகவும் கஷ்டப்பட்டு அவன் தந்தை சம்பாதித்தது அன்று ஏனோஉறைக்கவில்லை செழியனுக்கு. காலங்கள் கடந்தது. இன்று செழியனுக்கும் குழந்தை பிறந்துவிட்டது. செழியனும் தகப்பனாகி விட்டான். இன்று தான் புரிகிறது தன் தந்தை ஏன் அப்படி நம்மை திட்டியும் அடித்தும் வளர்த்தார் என்று. வேலைச் செய்யும் இடத்தில் வரும் பிரச்சினைகளை சொல்லி அழக்கூட முடியாததால் வரும்கோபமே மகன்களின் மேல் வந்து விழுகிறது.“அறியாத மகனின் மீது நான் படும் கோபமும் அதுவாகத்தானே இருக்கிறதுஎன்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான் செழியன். “அம்மா, இந்தப்பா ஏன் எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காருஎன்று தன் தாயிடம் கேட்டான் சூர்யா. இப்போது அவனுக்கு வயது பத்து.

அதை, இரவு வேலைமுடித்து வந்த செழியனிடம் அவன் மனைவி செல்வி சொன்னாள். குழந்தையின் கேள்வியைசற்று உள்வாங்கி செழியன் மெல்லச் சொன்னான். “அன்று என் தந்தையிடம் நான் பெற்ற அடியும் திட்டுக்களும்தான், நான் இந்த நிலைமைக்கு வரக் காரணம். அன்றைக்கு நான் செய்த சேட்டைகளுக்கு, என் தந்தைகண்டிக்காம போயிருந்தா, இன்னைக்கு நான் இந்த நிலைமைக்கு வந்திருப்பேனான்றது சந்தேகம் தான். கோபப்படவேண்டிய நேரத்தில் கோபப்படலன்னா அது நம்ம குழந்தைக்கு தான் கெடுதல். இன்னைக்கு இதுவேணும்னு அடம்புடிக்கிற குழந்தை, நாளைக்கு எதாவது தப்பான விசயம் வேணும்னு கேட்டு அடம்புடிச்சுதுனாலஎன்ன பண்ண முடியும். அதனாலதான் இந்த கண்டிப்புஎன்று தன் மனைவிக்கு விளக்கம் கொடுத்துவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினான்.

சூர்யா இப்போது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு எந்த கல்லூரியில் சேர்வதை என்பதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். இன்று இருக்கும் சூழ்நிலையில், அறிவியல் படிப்பதைவிட கணக்காளருக்கு படிப்பது நல்லது என்று அறிவுறுத்தினார் செழியன். ஆனால், சூர்யாவுக்கோ அறிவியல் மீதுதான் அதீத பற்று இருந்தது. அந்தநேரத்தில் தந்தை தன் சுதந்திரத்தில் தலையிடுவது சூர்யாவுக்கு பிடிக்காமல் போனாலும், தந்தையின்சொல்லை புறக்கணிக்க முடியாமல் கணக்காளருக்கான பாடத்தை எடுத்து அதில் பட்டமும் பெற்று இன்று ஒருநல்ல அலுவலகத்தில் பணியாற்றி, கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். “நெல்லிக்கனி முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்என்பது போல தந்தையின் அறிவுரைகள் முன்னே கசந்தது, பின்னே இனித்தது சூர்யாவுக்கு. இன்று அவன் படித்து நல்ல வேளையில் இருப்பதற்கு காரணம், தந்தை சிறுவயதில் கொடுத்த அறிவுரைகளும், மதிப்பெண் சரியாக எடுக்கவில்லையென திட்டி அடித்ததும்தான்காரணம்.

தன் இரத்தத்தை பணமாக்கி, பெற்ற பிள்ளைகளின் வயிற்றை நிறைத்து, அறிவையும் வளர்த்து, தைரியம்கொடுத்து, அறிவுரை வழங்கி, வாழ்க்கையை புரிய வைத்து, தன் இளமைக் கால சந்தோஷங்களையெல்லாம்தொலைத்து, வீடு, மனைவி, பிள்ளைகள் என்றே தன் காலத்தை கழித்து வாழும் ஒவ்வொரு தந்தையும் தெய்வத்தின் ரூபம் தான். தந்தையர் தினத்துக்குக்கூட வாழ்த்துக்களை எதிர்ப்பார்க்காத ஒரே உள்ளம் - தந்தைதான்”.

அன்பரசு மகாதேவன்

() அகத்தியன்

பொழிச்சலூர், சென்னை

 

4.K2K - 00013 

 அப்பா

அப்பா - தலைப்பு பார்ப்பதற்கு சுலபமாகத் தெரிந்தாலும் எழுத முற்படும் போது தான் , நமக்கு இப்பிறவி மட்டும் போதாது, பல பிறவிகள் எடுத்து வந்தாலும் அப்பாக்களின் மகத்துவத்தை சொற்களால் பதிவேற்றுவது கடினம் என்றும் உண்மைப் புலப்படுகின்றது. பூமியில் "ஆண்" சிசுவாக உதித்து "சிறுவனாக" அடியெடுத்து, பின்பு "கட்டிளம் காளையாக"  உருவெடுத்து, இப்படி பலப் பருவங்களைக் கடந்து, பின்பு "அப்பா, அய்யன், நைனா, பிதாஜி, டாடி (டாட்)" என்ற நிலைக்கு வரும் போது தான் முக்கால்வாசி ஆண்கள், தங்கள் "பலத்தையும், பலவீனத்தையும் உணரத்  தொடங்குகிறார்கள். அப்பாக்களின் மீது, பெரும்பான்மையினர், வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு ? அவர்கள் தன் "பெண் குழந்தைகள்"  மேல் வைக்கும் அளவிட முடியாத "குருட்டு" பாசமும் செல்லமும் ஆகும் . உண்மை என்னவென்றால், அப்பாக்கள் தன் பெண்ணை "தாய், சகோதரி" சாய்வில் பார்க்கிறார்கள்.  இத்தன்மை அவர்களுக்கு சிறுவயது முதல் மனதில் ஆழமாகப்  பதிந்து விடுகிறது மனைவியை தன் "சரிபாதி" யாக நினைக்கும் ஆணால், பெண் பிள்ளையை மட்டும் ஒரு " நடமாடும் குட்டி தேவைதையாகப்" பார்க்கின்றான் அதனால் தான் பல வேளைகளில் அவள் செய்யும் தவறுகளையும் மன்னித்து விடுகின்றான். இத்தன்மையே அவனுடைய பலமும் , பலவீனமாகும்!!

அப்பாக்கள் அம்மக்களைப்போல் உடனுக்குடன் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டி கொள்வதில்லை. இதுவே பல சமயங்களில் நாம் அப்பாக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கின்றது. மகனுக்கு தன் அப்பா ஒரு ஹிட்லர் ஆகப் பார்க்க தூண்டுவது இந்தக் காரணத்தினால் மட்டுமல்லாமல், மகளை தனக்கு போட்டியாக? கருத்துவமாகும் அப்பாக்கள் தம் பிள்ளைகள்  தாங்கள் பட்ட வலிகளையும், கஷ்டங்களையும் அவர்கள் படக்கூடாது என்று எண்ணி மறைத்துவிடுகிறார்கள். இதுவும் அப்பாக்களின் "பலவீனமாகும்" சரியான தருணத்தில் அவர்களுக்கு புரிய வைக்காத தவறும்போது அப்பா குழந்தைகள் இடையே ஓர் "இடைவெளி" ஏற்பட்டுவிடுகிறது. இந்நிலையானது தந்தை தங்களைப் பிரிந்தபோதும், அவர்கள் மனதில் ஒரு ஆறாத வடுவாக மாறிவிடுகிறது, சில அப்பாக்கள் வேண்டுமானால் தங்களுடைய கெட்ட பழக்கவழக்கங்களால், பிள்ளைகளை வெறுத்து அடித்தும் துன்புறுத்தி இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் கூட என்றாவுது ஒரு நாள் "திருந்தி" வரும்போது பிள்ளைகள் அவரைப் புறக்கணிக்கணித்தால், அதை விட பெரிய தண்டனை வேறு ஒன்றும் இருக்க முடியாது!!!

பின்குறிப்பு:

ஆண்டுகள் பல கடந்தாலும் "தந்தையர் தினமான இன்று ரமா கோவிந்தராஜானகிய இந்த "குட்டி தேவதை" என் தந்தை எனக்களித்த அனைத்து நலன்களையும் மனதில் நிறுத்தி. இச்சிறிய குறிப்பை (கிறுக்கல்!) காணிக்கையாக அளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்!!!

-- RAMA GOVINDARAJAN 

 

 

 

5.K2K - 00034

# அப்பாவின் பொருள்

ஈன்றால் மட்டுமே தந்தை ஆகிவிடுவார்களா? தந்தையின் பாசம் யாது? தந்தை முகம் யான் அறியேன். இரு ஆண்களின் காதல் , அவர்களின் காதலை போட்டியற்று சமமாக என்னிடம் காட்டிய அனுபவம்  உண்டு. இன்றளவும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை யாருடைய காதல் பெரியது என்று. தந்தைக்கு தந்தையாக தாயுக்கு தாயாக எனை சேயாக காத்தனர். எள்ளவும் காதல் குறைவில்லை என்மீது அவர்களுக்கு .வெண்பிஞ்சாக எனை கையில் ஏந்திய நொடியில் இருந்து இன்று வரை அவர்களது காதல் குறைவில்லை, வளர்பிறையை போல வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தந்தை இல்லை தாயுக்கும் மேலான தாயுமானவர்கள். என் தாயின் இரு தமையன்கள். என்மீது எனக்கே பொறாமை கொள்ள வைத்த மாமன்கள். இல்லை என்ற சொல்லை அறியாதவள் பருவமடையும் வரை . கண்கள் காட்டிய பொருளும் கைகள் நீட்டிய பொருளும் எனத்தாக்கியவர்கள். பாசத்திற்கு ஏங்கியதில்லை. அள்ளி அள்ளி அன்பு செய்த அன்பானவர்கள். பெண் பிள்ளையை பெற்றாள் தான்  தந்தை பாசத்தை கொடுக்க வேண்டுமா.  சின்னஞ்சிறு கிளியான எனக்கு அப்பாசத்தை கொடுத்த அந்த இரு ஆண்களின் காதலுக்கு ஈடு இணையே இல்லை.

அப்பா என்று மொழியாத இப்பாவை மாமா என்று மூச்சுக்கு முன்னூறு முறை அழைக்கும் எனக்கு அப்பா என்ற வார்தையை காட்டிலும் மாமா என்ற வார்தைக்கு வீரியம் அதிகம்.

# அப்பா என்ற உணர்விற்கு இன்றும் அர்த்தம் கற்றுக்கொண்டிருக்கும் காரிகை நான்.

உங்கள்

சுபாஷினி

 

 

6.K2K-00036

# அப்பா எழுதிய கடிதம்

 

எங்க அப்பாவுக்கு கடிதம் எழுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய கடிதங்களை எல்லாம் எங்க அம்மா பொக்கிஷமாக ஒர் பெட்டியின் இன்னும் வைத்துள்ளார். அதில் அவர் எனக்கு எழுதிய ஒர் கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த கடிதம் நான் எங்க அம்மாவின் வயிற்றில் இருந்த சமயத்தில் எழுதியது.

அன்புள்ள மொட்டைக்கு,

அப்பா உன் மேல் கோபமாக உள்ளேன். ரொம்ப ரொம்ப கோபமாக உள்ளேன். குழந்தைகள் பிறந்த பிறகு தான் தன் அம்மா அப்பாவை தொல்லை செய்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் நீ வயிற்றிலிருக்கும் சமயத்திலேயே இந்த அளவுக்கு தொல்லை செய்யக் கூடாது. நீ செய்வது தொல்லை கூட அல்ல, கொடுமை..!. சாப்பிடவே பிடிக்காத உங்க அம்மாவை எந்த நேரமும் சாப்பிட வைத்துக் கொண்டு இருக்கிறாய், இதைவிட கொடுமை என்ன இருக்கிறது..?. ஒர் இடத்தில் கூட நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் உங்கம்மாவை சோர்வு தாங்கமுடியாமல் ஒரே இடத்தில் உட்கார வைத்து விட்டாயே.! இது கொடுமை அல்லாமல் வேறென்ன..?. குளிர்காலத்தில் கூட ஒரு நாளைக்கு இரண்டு கப் ஐஸ்கிரீம் சாப்பிடும் உங்கம்மாவை இப்போது ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் கூட குடிக்க முடியாமல் செய்துவிட்டாயே! இதுவல்லவா கொடுமை. அதை விட பெரிய கொடுமை, உங்க அம்மா வயிற்றில் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்..?. ஏதாவது கிச்சு மூட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாயா..?. இன்னும் ரெண்டு மாசத்தில் நீ வெளியே வந்த பிறகு கண்டிப்பாக அப்பா உன் மொட்டை தலையில் நல்லா கொட்ட போகிறேன் பார். இன்னும் ரெண்டு மாசம் பொறுத்துக் கொள். நீ வெளியில் வந்த பிறகு ரெண்டு பேரும் சேர்ந்தே உங்க அம்மாவை தொல்லையுடன் சேர்த்து கொடுமையும் செய்யலாம். சரியா..? அதுவரை அம்மாவுக்கு கிச்சு மூட்டமால் அவங்க வயிற்றுக்குள் அமைதியாக இரு.

இப்படிக்கு,

உன் அன்பான அப்பா

எங்க அப்பா சொல்லு போல நான் மொட்டை அல்ல. தலையில் அதிக முடியுடன் பிறந்தேன். அது சாதாரணமாக பிறக்கும் குழந்தைகள் தலையில் இருக்கும் முடியை விட கொஞ்சம் அதிகம். அந்த முடி செய்த கிச்சு மூட்டால் தான் எங்க அம்மாவுக்கு அடிக்கடி வயிற்று அரிப்பு எடுக்க, அதை பற்றி விசாரிக்கவும் என்னை கொஞ்சவும் வெளியூரில் இருந்து எங்க அப்பா இப்படிப்பட்ட ஒர் கடிதம் எழுதினார்.

# குறிப்பு:

தந்தைகள் பல விதம், அதில் ஒவ்வொரு தந்தையும் பலரகம். அவர்களின் அன்பை தாய் அன்போடு கூட ஒப்பிட முடியாது. தாய் அன்பை போல தந்தையின் அன்பும் தனி சிறப்பே. அவர் கோபத்தில் சில சமயம் அடித்தாலும் அதில் கூட ஒர் மூலையில் அன்பு ஒளிந்து இருக்கும். ஒர் தாய் தன்னை போன்ற சந்தோசம் வாழ்க்கை தன் குழந்தை பெற வேண்டும் என்று ஆசைக்கொள்வர் என்றால் தந்தையோ தன்னை விட சிறந்த வாழ்க்கையை தன் பிள்ளைகள் வாழ வேண்டும் என்கிற ஆசை கொள்வர்.

-விஜயன்

 

 

7.K2K00038

அப்பா!

விவசாயமோ வெளி வேலையோ  ஆசிரியரோ ஆசாரியோ சம்பாதனை வருவது பெரும்பாலான குடும்பங்களில்  அப்பாவால் தான்.

இன்று  படித்து வேலைக்குப் போகும் பெண்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கலாம்.அது கூடுதல் தேவைக்காக மட்டுமே பெரும்பாலான நேரங்களில் அமைந்து விடுகிறது. அப்பாவின் சம்பாத்தியமே ஒரு குடும்பத்தின் ஆணி வேர். ஒரு வேளை அந்தக் குடும்பத்தின் ஆணி வேர் சம்பாதிக்கவில்லை என்றால் சொந்த வீடு பிள்ளைகள் படிப்பு கல்யாணம் இதெல்லாம் அவ்வளவு சீராக நடந்து விடாது.

அப்பா ,படித்த படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையைத்தான் தேடிக் கொள்வேன் என்று இருந்து விட முடியாது இருந்து விடுவதில்லை. அப்படி இருந்திருந்தால் செய்யத் தயங்கும் சாக்கடை அள்ளும் வேலையும் பிணம் எரிக்கும் வேலையும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ வேலைகள் இந்த சமுதாயத்தால் சரிபடுத்திக் கொள்ள முடியாமலே போயிருக்கும். சுந்தரியின் அப்பாவும் அப்படித்தான் எட்டாவது வரை படித்தவர்.நகைக்கடையில் வேலை பார்த்தார்.திருமணம் ஆனதும் சொந்த ஊருக்குச் சென்று சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்தார். பிள்ளைகள் பாட்டி வீட்டில் வளர்ந்தாலும் வர போக இருக்கும் போது பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியதைச் செய்தார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் பெரியாதானதும் தன்னுடனேயே கூட்டி வந்து விட்டார். விவசாயம் நொடித்ததும் கூல்ட்டிரிங்க்ஸ் கடை நடத்தினார். நல்ல வருமானம்.மகளை திருமணம் செய்து வைத்தார். கூல்டிரிங்க்ஸ் கடை வருமானம் படிப்படியாகக் குறைந்தது. சொந்த நிலத்தையும் விற்க வேண்டிய நிலை வயதும் ஆனது..

இன்று வருமானத்திற்கு வழியில்லை.பிள்ளைகளிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அப்பா. திடீரென அம்மாவும் இறந்து போனார். “அப்பா என்ன செய்தார் எங்களுக்கு?!” என்று பிள்ளைகள் ஒதுங்கிக் கொள்கின்றனர். சுந்தரி கணவனின் அனுமதியோடு பெற்றவர்  பசியில்லாமல் இருக்க ஏதோ உதவுகிறாள். அப்பா என்ன செய்தார் என்று அவள் யோசிக்கவில்லை.செய்யாமல் விட்டதை நினைக்கவில்லை. அப்பா பாசம் .... அப்பா பாதுகாப்பு .... அப்பா துணை.. அப்பா இல்லாவிட்டால் குடும்பம் ஏது?! என்று நினைத்தாள்.

அண்ணன் தம்பிக்கும் சொல்லிப் புரிய வைத்தாள். “இன்னைக்கு நீங்க உங்க பிள்ளைகள் பட்டினியில்லாம இருக்க போராடுற மாதிரி தான நம்ம அப்பாவும் கஷ்டப்பட்டாரு.ஏதோ நேரம் தொழில் நஷ்டமாயிருச்சு.அதுக்காக அப்பாவை கவனிக்காமல் விடலாமா?!

இப்பவும் நமக்கு என்ன தெரியுது?“அப்பா ….பாப்பாவுக்கு மொட்டை போடணும் குலதெய்வம் கோவிலுக்கு எப்ப போகலாம்?!” “அப்பா….கோவில் வரி கேட்கிறாங்க.நமக்கு எத்தனை தலைக்கட்டு?!” “ம்…. அப்பாகிட்ட கேட்டுச் சொல்றன்னேன்இப்பிடி எத்தனையோ விசயத்திற்கு நம்மையும் அறியாமல் நாம அப்பாவைத் தான் சார்ந்திருக்கோம். அவரோட அருமையை இன்னுமா நீங்க புரிஞ்சுக்கலை?!” கேட்கிறாள் வசந்தி. “அவரும் சம்பாதிக்க ஏதேதோ முயற்சியெல்லாம் பண்ணினாரு.அண்ணனுக்கு மாவு மில் வச்சுக் குடுத்தாரு.உனக்கு பலகாரக்கடை வச்சுக் குடுத்தாரு. யாருக்கும் எதுவும் சோபிக்கலை.அதுக்கு அப்பாவை மட்டும் குத்தம் சொல்லலாமா?!”ன்னுதம்பிக்கிட்ட இதமா சொல்லி புரிய வைக்கிறாள். நம்மல்லாம் சின்னதா இருந்தப்ப அவர் பசியா இருந்தாலும் நம்ம வயித்தை நிரப்புனாரே?!  தீபாவளிக்கு நம்ம மட்டும் தான் புதுத்துணி போட்டோம் அப்பா பழசைத்தானே போட்டாரு?! இன்னைக்கு அவரால நமக்கு உதவ முடியலைங்கிறதுக்காக அவரை குறைவா நினைக்கக் கூடாது.பசியோ பட்டினியோ அவரை வேதனைப்படுத்தக்  கூடாது. சுந்தரியின் பேச்சில் உள்ள ஞாயத்தைப் புரிந்து கொண்ட பிள்ளைகள் அப்பாவின் அருமையை உணர்ந்து அவரை கவனித்துக் கொள்ள முடிவு செய்தனர்.

நீதி; அப்பா இல்லாமல் நாம் இல்லை.உணர்ந்து அவரை ஆதரிப்போம்.

-பூமாதேவி

 

 

8.K2K-00042

அப்பா

ஒரு ஊரில் அன்பு என்ற சிறுவன் இருந்தான் அவன் பெயரில் நான் அன்பு இருந்ததே தவிர மற்றதெல்லாம் அடாவடி தான். தன் அப்பா அவனுக்கு எவ்வளவோ சொல்லியும் திருந்தவில்லை பின்னரும் சொல்வதை நிறுத்தி விட்டார்  தன்னால் திருந்தி விடுவான் என்று.  பின்னர் வளர்ந்து கல்லூரி படிக்கும் பருவமும் வந்தது. அவன் கல்லூரியில் சேர கூடாத நபருடன் சேர்ந்து கெட்டு போய் பின் ஒரு வழியாக படித்து ஒரு வேலைக்கு சேர்ந்தான்.

பின்னர் அவனுக்கு திருமணனும் முடிந்தது.   அப்போதும் அவன் தந்தோன்றி தனமாகவே நடந்தான் அப்பாவை மதிப்பதில்லை. இப்படியிருக்கையில் காலம் உருண்டோடியது. ஆனால், இப்போது படிப்படியாக அவனுக்கு புரிய ஆரம்பித்தது அப்பா சொன்னது, ஏன் என்றால் இப்போது அவன் ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்கிறான்.

நெறி : அப்பா  என்பதை நாம் உணர்ந்தால் / புரிந்தால் மட்டுமே அவர் சொல்வது நமக்கு புரியும். அப்பா இருக்கும் வரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் , அவர் சென்ற பிறகு போட்டோவுக்கு மாலை போட்டு அல்ல .

- கணேசன் சண்முகவேல்

 

 

9.K2K-00042

அப்பா  

அகல்யாவுக்கு திருமணமாகி ஆறு மாதம் தான்  ஆகி இருந்தது. ஆரம்பத்தில் இனிமையாக போய் கொண்டிருந்த வாழ்கையில் குறை சொல்ல ஆரம்பித்தாள். தன் அப்பா ராம்குமாரிடம் தன் கணவர் அன்புவை  பற்றி குற்றம் சொல்ல ஆரம்பித்தாள். அதை நாசூக்காக சரி செய்ய திட்டமிட்ட அவள் அப்பா , ஒரு சில வினாடிகள் யோசித்து விட்டு பின் அவளிடம் நீ சிறு வயதில் இருக்கும் போது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விவாதம் வரும் போது யார் பக்கம் இருப்பாய் ? அதற்க்கு சற்றும் தாமதிக்கமால் உடனே அவள் சொன்னால் உங்கள் பக்கம் தான் அப்பா. அது போலவே இப்போதும் நீ உன் கணவர் சொல்வதை கேள் அவர் உனக்கு நல்லதை தான் சொல்வர் என்று சமாளித்தார். அவரை நீ அப்பா போல நினைத்து கொள். அதே வேளையில் அவர் தன் மருமகனுக்கும் தனியாக போன் செய்து அவரிடமும் பேசி தன் பெண்ணை குழந்தை போல் பார்த்து கொள்ளுமாறு அவருக்கு புரியும் விதத்தில் சொன்னார். மருமகனும் புரிந்து கொண்டார். இப்போது அன்புவும் அகல்யாவும் இணைபிரியாத சச்சரவில்லாத ஜோடியாக ஆகி விட்டனர். 

நெறி: அப்பாவின் நாசூக்கான திறமையால் , இருவருக்கும் பெரிய விவாதம் இல்லாமல் சுமூகமாக வரவிருந்த பிரச்சனையை முடித்து வைத்தார். 

- கணேசன் சண்முகவேல் 

 

 

10.K2K00048

அப்பா ...

உலகில் உயிருள்ள ஜீவன்கள் அனைத்திற்கும் அனைவருக்கும் , தந்தை என்ற உறவு நிச்சயம் உண்டு , தாய் இல்லாமல் பிறக்க முடியாது , தந்தை இல்லாமல் நாம் உருபெறவே முடியாது ,  இத்தகைய அற்புத படைப்பினை பற்றிய குறிப்பினை சிறு கதையாக பதிவிடுகிறேன் .. ஒரு மகளின் தந்தை , தன் மகள் பிறந்தது முதல் உலகில் அனைத்தையும் வென்றது போல் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். தன் மகளை வளர்க்கும் ஓவ்வொரு நொடியும் சொர்கத்தின் செயலாற்றலில் இருப்பதாகவே உணர்ந்தார் ., தன் மகளுக்கு ஏற்படும் துன்பத்தால் அவள் கண்ணீர் வடிக்கும் போது , அவளது கண்ணீர்க்கு காரணம் ஆன உலகினை அழித்துவிடும் அளவிற்கு கோபத்தால் பொங்கி எழுந்தார் .,  அவள் முதல் முதலில் பள்ளிக்கு செல்லும் போது அவள் உடன் இல்லாத உலகில் வேதனையில் மூழ்கினார் , அவள் வீடு திரும்பும் வரை வழி மேல் விழி வைத்து காத்திருந்து , வந்ததும் தன் மகளுடன் சேர்ந்து சிறு குழந்தையாகவே மாறினார் ,  அவள் பெரியவள் ஆனதும் , அதே நேசத்துடன் அவளுக்கு பிடித்த அனைத்தையும் கொடுத்து பெரும் சந்தோஷம் அடைந்தார் , அவள் குமரி ஆகி திருமணம் ஆன பிறகும் தனது வாழ்கையில் அவளின் வருகையை எண்ணி அவள் வந்ததும் , அவளை சந்தோஷப்படுத்தி பார்க்க ஏங்கி திரிந்தார் .,

            இவ்வாறு தன் மகளை அந்த ஆண்டவன் போல் பார்த்து , கடவுளுக்கு செய்யும் சேவையை போல் , தன் மகளுக்கு அனைத்தும் செய்து வாழ்வினை முடித்து கொள்வார் ஓர் தந்தை ..,  ஓர் மகனை பெற்ற தந்தை , அவன் பிறந்தது முதல் , தன் மகனை நினைத்துப் தனக்கு பெரும் பலமாக எண்ணினார் , தன் மகனுடன் ஓர் நல்ல தோழனாக இருந்து அவனுக்கு பலமாக ஆரம்பத்தில் இருந்து , அவனை நல் வழியில் வழி நடத்தி சென்று , அவனுக்கு என்று அனேக தயிரியங்களை அனுகி அவனை நல் முறையில் வளர்த்து , காலத்தினால் தனது இன்னல்களையும் போக்கி , அனைத்தையும் சுபமாக கருதி அவனை பெரிய நிலையில் நிறுத்தி , அவனது உயர்வினை கண்டு பெருமிதம் பெருமையும் மகிழ்வும் அடைவார் .,  பிற்காலத்தில் தன் மகளும் தன் மகனும் தம்மை நிர்கதியின்றி நிற்க வைத்தாலும் , தன்னுடைய பிள்ளைகள் என்றும் உயர்வுடன் , மகிழ்வுடனும் காண துடிப்பவர் , அப்பா என்பவர் ....

        ஓர் தந்தையின் வாழ்நாள் முழுதும் அவர் செய்யும் தொண்டு மற்றும் சேவை பற்றிய சிறிய விவரமே இது , அவர்களின் தியாங்கள் பற்றி நாம் அறிய இயலும் ஆனால் உணர இயலாது.,  நாம் அத்தகைய நிலையை அறிந்தால் மட்டுமே நமக்கு புறியும்...

கருத்து :  தந்தை என்பவர் தன்னிலையினை கடந்த தைரியம் கொண்டு வாழ்வினை தன் குழந்தைகளுக்காக அற்பணிப்பவர் ....

 

இப்படிக்கு .,

சி. தெய்வாணி ஸ்ரீ.,

 

 

11.K2K00051

அப்பா

 

நீ என்னபா பண்ண, என்னுடைய நண்பர்களுடைய அப்பாலாம் இருசக்கரவண்டி, கார் போன்றவற்றை வங்கி தராங்க. நீங்க பெருசா என்னப்பா பண்ணுனிங்க. ஒரு போன் கூட வாங்கித்தரலனு அப்பாவுடைய மனம் நோகும்படி பேசினான் சதீஷ். டேய் சதீஷ் தினமும் அப்பாக்கிட்ட சண்ட போட்டுட்டு தான் இருப்பியா என்று அவனை கடிந்து கொண்டார் அவனுடைய அம்மா. என்னமோ பண்ணுங்க என்னோட வாழ்கையை அழிசிட்டிங்க என்று கோவத்துடன் சென்றான் சதீஷ்.

மறுநாள் சதீஷ் நடந்ததை பற்றி தன் நண்பர்களோடு பேசினான். என்னக்கு வீட்டுக்கு போகபிடிகவில்லை என்று புலம்பிதள்ளினான். அவனுடைய ஆருயிர் நண்பன், அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறார் என்று புத்திமதி சொன்னான். எதையும் ஏற்றுக்கொள்ளாமல் நான் வேலைக்கு செல்கிறேன் என்று தன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு, வேலை தேடி அலைந்தான். யாரும் வேலை தந்தபாடில்லை. வீட்டிற்க்கு செல்லாமல் சாலையோரம் படுத்துகொண்டான்.      

அவனுடைய கனவில்...

(அவனுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்குழந்தை பிறந்தது. ஆசையோடு வளர்த்தான். தன்னுடைய மகனை காணும்போது வாழ்வில் பெரிய சாதனை செய்ததாக தன் மனைவியிடம் பெருமையாக சொல்லுவான். என் மகன் வளர்ந்து பெரிய மருத்துவராக, போலீசாராக, விஞ்ஞானியாக வருவான். அவன் என்னை பெருமையடைய செய்வான் என்று மகிழ்ந்தான்.

நாட்கள் கடந்தன, மகனும் வளர்ந்தான். அவனுடைய தேவைகளை பூர்த்திசெய்ய இப்போது சதீஷ்க்கு பணம் இல்லை. ஒரு புறம் தன்னை நம்பி வந்த மனைவியின் அறுவை சிகிச்சைக்கு வேண்டிய பணத்தை தயார் செய்யவேண்டும் மறுப்பக்கம் தன்னுடைய ஒரே மகனும் தன் தியாகத்தை புரியாமல் சுயநலமாக இருகிறானே என்று அழவும் முடியாமல் தவித்தான். அவனுடைய மகன், நான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். அவனை தட்டுக்க இயலவில்லை. இன்னொரு புறம் மருத்துவமனையில் இருந்து அழைப்பு உங்கள் மனைவி...) அலறியடித்துக்கொண்டு எழுந்தான்.

அத்தனையும் கனவு என்று புரிந்து கொண்டான். நாம் குழந்தையாய் இருக்கும் போது எவ்வாறு நம் தந்தையின் கரம் நம்மை தாங்கியதோ அவ்வாறு நாம் வளர்ந்த பிறகு நம் கரம் அவரைத் தாங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டான். அங்கிருந்து எழுந்து வீட்டிற்குச் சென்றான். வீட்டிற்குச் செல்லும் வழியில் அவனை தேடி அலைந்து கொண்டிருந்த தந்தையை பார்த்தவுடன் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அவன் எதுவும் செய்யாதது போல அரவணைத்து சென்றார் அப்பா.        

 

கருத்து: தந்தையின் தியாகம் நாம் தந்தையாகும் போதுதான் தெரியும்.

 

Brightson.T

 

 

12.K2K-00053

அப்பா

"உயிர் உருகும் வார்த்தை"-அப்பா," உலகிலுள்ள எல்லா மகள்களுக்குமான சுவாசம்... வாழ்க்கையின் பாதியை காத்திருந்தே கரைத்தார் இராமலிங்கம், தன் மகளின் வரவுக்காக... பதினைந்து வருஷ காத்திருப்பின் கனி இந்த "பூங்கொடி".… அப்பா...அப்பா என அழைத்தவாறே வருகிறாள் பூங்கொடி... அப்பா, எப்படி தான் இப்படி ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்கிங்க? அப்படி என்ன தான் யோசிப்பிங்களோ? வாங்க கண்ணுக்கு மருந்து ஊத்தனும்... கண்ணுக்கு மருந்து ஊத்திக் கொண்டே பேசலானாள் பூங்கொடி... ஏன் பா பசிச்சா ஒரு வார்த்தை கூட சாப்பாடு வேணும்னு கேட்க மாட்டேங்கறிங்க...  அமைதியா செடிக்கு தண்ணி ஊத்தறிங்க.. ஓடுற பேன் ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு மேல பார்த்து எண்ணிட்டு உட்கார்ந்து இருக்கிங்க... தீப்பெட்டில இருந்து தீக்குச்சிய கொட்டி எடுத்துட்டு ஒத்தையா இரட்டையா பார்த்துட்டு இருக்கிங்க... "என்ன அப்பா உங்க பிரச்சனை? இந்த ரிட்டையர்ட் லைப் போர் அடிக்குதா?என் லைப் பத்தி திங்க் பண்றிங்களா? நான் சின்ன வயசுல இருந்து பார்த்த அப்பா எங்கே போயிட்டார் பா?அந்த அப்பா என் கூட பேசிட்டே இருப்பார்... எங்கே என்னைய கூப்பிட்டு போனாலும் கைடு போல அந்த ஊர்களின் கதைய பத்தி சொல்லுவிங்க..போதும் பா பிளேடு போடாதிங்க பா னு சொல்லுற அளவுக்கு பேசுவிங்க...

இப்ப என்ன பிரச்சனை? ஒரு தனி உலகத்துல நீங்களும் நியூஸ் பேப்பருமா இருக்கிங்க... உங்களுக்கு மகளா பொறக்கறதுக்கு டெய்லி நியூஸ் பேப்பரா பொறந்திருக்கலாம் போல... என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதே இல்ல... எனக்கு மறுபடியும் என் அப்பா வேணும் பா...

"வயசான காலத்துல நடக்க முடியலயேனு ரோடு கிராஸ் பண்ணுற அப்போ கைய பிடிச்சா கைய தட்டி விடறிங்க.. நா நடந்துக்குவேன் மா சொல்லிட்டு..."  "ரசம் சாதம் சாப்பிட்டுட்டு கடைசியா ரசத்த தட்டொட எடுத்து குடிக்கிறப்போ இந்தா தங்கம்னு செல்லமா எனக்கு ஒரு வாய் குடுப்பிங்களே..." "அந்த தருணம் என் சாகுற நிமிஷத்துல கூட என் உயிர்ல கலந்துருக்கும் பா..." உங்க பிரச்சனை என்ன அப்பா? நானே பேசிட்டு இருக்கேன்... நீங்க எனக்கு சுயமா யோசிக்கிற ஸ்பேஸ் என் விவரம் அறிஞ்சு ஆறு ஏழு வயசுல இருந்தே குடுத்துருக்கிங்க... இத செய், இத செய்யாதனு ஒரு விஷயத்துலயும் என்னை நீங்க தடுத்து வளர்க்கல அப்பா... கண்டிப்பா என்னோட எந்த முடிவும் அவசரத்துல எடுத்தது இல்ல பா... ரமேஷ் எனக்கு பிடிக்கும் பா... எனக்காக மறுபடி வருவார்... பேரன் பேத்தினு பார்ப்பிங்க... லாக் டவுன் ஸ்ரீலங்கால மாட்டிட்டு இருக்கார்...எங்க லவ் சும்மா இல்ல பா... ரெண்டு வார கல்யாண வாழ்க்கை இன்னும் முடியல பா... வருவார் பா...

இராமலிங்கம் மனம் மவுனத்தில் மேலும் கரைந்தது...

நீதி: அப்பா மனசு கடலை விட ஆழம்ங்க. எப்போ என்ன யோசிப்பார்னு சொல்லவே முடியாது...ஆன யோசிக்கிற அத்தனை யோசிப்பும் தன் மகளுக்காகவே இருக்கும்...

- பூங்கொடி

 

 

13.K2K00063

எல்லாரையும் போல என் ஹீரோ அப்பாதான் அதிலும் பெண் பிள்ளைகளுக்கு அப்பா ஹீரோ என்ற எண்ணம் மிக அதிகம் அவ்வாறே சம்யுக்தா தன் தந்தையைப் பற்றி யோசிக்கலானாள் அவள் அப்பா பியூசி முடித்தவுடன் பயிற்சி இல்லாத ஆசிரியராக ஆசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் அதன்பின் பயிற்சி பெற்று பிஏ ஆங்கிலம் எம்ஏ ஆங்கிலம் படித்து முடித்தார் 17 வயதிலிருந்து ஆசிரியராக பணியாற்றி தன் பணிக்காலத்தில் முப்பத்தைந்து ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றினார் அவர் பகுதியில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் பயிற்சி அளிக்கவும் அவரை விட்டால் ஆளே கிடையாது அவருக்கு 25 வயதில் திருமணம் நடந்தது அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்தனர் சம்யுக்தாவின் அப்பா தென்னார்க்காடு ஜில்லாவில் பின்தங்கிய குக்கிராமத்தில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார் அங்கு மருத்துவமனைகளும் ஊருக்குள் செல்லும் வாகனங்கள் கிடையாது அவரவர்கள் நடந்தும் மிதிவண்டியிலும் அல்லது சொந்த வண்டிகளில் தான் செல்ல முடியும் எனவே தனது குடும்பத்தை திருச்சியில் வைத்துவிட்டு அவர் எந்த பள்ளியில் பணிபுரிகிறாரோ அப் பள்ளியிலேயே சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கி விடுவார் மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுமுறையை பொருத்து ஊருக்கு வந்து செல்வார் வரும்போது பிள்ளைகளுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி வருவார் சம்யுக்தாவின் தங்கைக்கு அப்பா வரேன்னு சொல்லிட்டு அவர் வர முடியாவிட்டால் அவளுக்கு ஜுரம் வந்துவிடும் அதன் பின்னும் அவர் வர முடியாவிட்டால் அவளுக்கு இழுப்பு வந்துவிடும் இந்நிலையில் நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் நடந்த ஆசிரியர் மாநாட்டிற்கு அவருடன் 30 ஆசிரியர்களை அழைத்துச் சென்று வரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது அதற்கான கால அவகாசம் ஒரு மாதம் அவர்தன் கடைசி மகளிடம் தான் வெளிநாடு செல்ல வேண்டிய காரணத்தையும் அவசியத்தையும் கூறி இரண்டு மாதம் கழித்து திரும்பி வருவேன் என்று கூறி மகளின் சம்மதம் பெற்று சென்று வந்தார் வரும்போது அம்மாவிற்கு புடவை கைகடிகாரம் குழந்தைகளுக்கு உடைகள் மற்றும் தின்பண்டங்கள் வீட்டிற்கு பானாசோனிக் ஒளிப்பதிவு நாடா கருவி வாங்கி வந்தார் அந்தக் காலத்தில் வானொலியும் ஒளிப்பதிவு நாடா கருவியும் வைத்திருப்பது மிகவும் பெருமை அந்த வகையில் சம்யுக்தா விற்கும் தன் அப்பாவின் மீதும் அப்பாவின் வேலையின்  மீதும் மிகுந்த மரியாதை இந்நிலையில் பிள்ளைகள் படித்து வளர்ந்தனர் ஒவ்வொருவராக திருமணம் முடித்து பேரக்குழந்தைகளும் பார்த்தார் தனது 58 வயதில் பணி ஓய்வு பெறும் விழாவில் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும் இனி இப்பகுதியில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் பயிற்சி அளிக்கவும் ஆளை தேட வேண்டும் என்பது மிகப்பெரிய கவலையாக உள்ளது என்று அப்பாவின் ஆங்கிலப் புலமையையும் கவிதை எழுதும் திறனையும் பாராட்டினர் சம்யுக்தா வும் அப்பாவை பிறர் பாராட்டியதை எண்ணி மகிழ்ந்தாள் தன் கணவனும் அப்பாவைப் போல மிகச் சிறந்த கணவனாகவும் தந்தையாகவும் விளங்குவான் என்று மனதில் நினைத்து மகிழ்ந்தாள்.

இவள் அனுராதா

 

 

14.K2K00066

அப்பா..!

"அய்யோ.. புள்ள விழுந்துட்டாங்க.. ஓடிப்போய் பாருங்க" என்று என் அம்மா சொன்னது மட்டும்தான் எனக்கு ஞாபகத்தில் இருந்தது. கண்களில் யாரோ தண்ணீர் தெளித்தனர், கண் விழித்தேன். என் பெயர் ஹரிஷ், மூன்றாம் வகுப்பு படிக்கின்றேன். என் அண்ணன் ஐந்தாம் வகுப்புப் படிக்கின்றான். அரையாண்டு தேர்வில் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்ததுக்கு அப்பா அவனுக்கு சைக்கிள் கொடுத்தார். அதைப் பார்த்ததிலிருந்து அதை ஓட்ட வேண்டுமென்று ஆசையிருந்தது. அன்று சனிக்கிழமை என்பதால், அம்மா அப்பா அண்ணன் அனைவரும் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு தெரியாமல் என் அண்ணனின் சைக்கிளை மெதுவாக வெளியே எடுத்தேன். ஓட்ட தெரியாத சைக்கிளை ஓட்ட முயற்சித்து கொண்டிருந்தேன், அம்மா திடிரென்று பால்கணியிலிருந்து, "டேய், ஹரிஷ், என்ன பண்ற, கீழ வீழப்போற" என்று சொன்னதும் உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு வேகம், வெறிக்கொண்டு சைக்கிளின் மேலே ஏற முயற்சித்தேன். தடுமாறி கீழே விழுந்தேன், கரடு முரடான ரோடு என்பதால் என் மெல்லிய தேகத்தை, சீண்டி பார்த்துவிட்டன. கண் விழித்தபோதுத்தான், வலி எடுக்க ஆரம்பித்தது, என் தாடையிலிருந்து ரத்தம் வந்தது. "அம்மா.. அம்மா.. " என்று கத்த ஆரம்பித்தேன். அப்பா, என்னை அப்படியே, அருகிலிருத்த மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டுசென்றார். மருத்துவர் சிறிய காயம் தான், ஒரு வாரத்தில் சரி ஆகிவிடுமென்று சொல்லி காயத்துக்கு சின்னதாக கட்டுப்போட்டார். பின் வீட்டிற்கு வந்தோம், அந்த சைக்கிளைப் பார்த்தபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. விழுந்ததால் வந்த வலியை விட, அன்று இரவு என் அம்மா தோசை கரண்டியால் அடித்ததுத்தான் மிகவும் வலித்தது. "இனிமே.. இப்படி செய்வியா..? செய்வியா..? உன் உயரதுக்கு இப்போ சைக்கிள் எதுக்கு" என்று சொல்லி சொல்லி அடித்தார். "ஹரிஷ்.. உனக்கு ஏதாவது ஒன்னுனா நான் என்ன டா   பண்ணுவேன்" என்று சொல்லிக்கொண்டு அம்மா என்னக் கட்டி அணைத்தார். "இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் மா .." என்று நானும் சென்றேன்.

மறு நாள், அம்மா பாட்டி வீட்டிற்கு செல்ல கிளம்பும் போது, "சமத்தா சாப்டு டிவி பாரு" என்று சொல்லிவிட்டு சென்றார். அம்மா சென்ற 15 நிமிடத்தில், அப்பா என்னிடம் வந்து, "ஹரிஷ்.. டிரஸ் போட்டுக்கோ.. ஒரு முக்கியமான வேல இருக்கு" என்று சொன்னார். நானும் ரெடி ஆகிவிட்டேன், அண்ணனும் ரெடியாக இருந்தான். "எங்கப்பா போறோம்?" என்று அண்ணன் கேட்டான். "ஹரிஷுக்கு சைக்கிள் ஓட்ட கத்து தர போறோம்" என்று அப்பா சொன்னபோது, குடு குடுவென்று ஓடி ஒழிந்துகொண்டேன்.  "அப்பா.. வேணாம் பா.. எனக்கு சைக்கிளே வேணாம்." என்று கண்ணில் நீரை வரவழைத்துக்கொண்டு சொன்னேன். அப்பா பொறுமையாக என் பக்கத்தில் வந்து, "ஹரிஷ் .. அடிபட்டாத்தான், சில விஷயங்களைக்  கத்துக முடியும். தோல்வியைப் பார்த்து பயந்தா வாழ்க்கையில ஜெயிக்க முடியாது.. நீ கோழையா இருக்க கூடாது" என்று சொன்னப்போது என் அப்பா, சக்திமானை விட பெரிய ஹீரோ போல தோன்றினார். அவர் கொடுத்த தைரியத்தாலும், பக்குவமா சொல்லி கொடுத்ததாலும், ஓரளவுக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன்.

நீதி : அப்பா  - வாழ்க்கை பாடத்தைக் கற்றுத்தரும் ஆசான்..!

-GD

 

 

15.K2K- 00067

.:::::::::::: அப்பாசாமி ::::::::::::

      கண்களில் கண்ணீர் வழிந்தோட செருமிக் கொண்டே அம்மாவைக் கேட்டான் குழந்தை அருள், "ஏம்மா அப்பா அக்காவை அடிக்காம என்ன மட்டும் அடிக்குறாரு ?" "நீ தானே தீவாளிக்கு வெடி கேட்டு அடம் புடிக்குற, அதான்", "எயிதத வூட்டு ஆனந்து தெனமும் வெடிக்குறான். அவுங்க அப்பா ஒரு பை நெரியா வாங்கி கொடுத்திருக்கா ரே." "அவுங்க வீட்ல தீவாளி கொண்டாடுறாங்க.அவன் வெடிக்குரான். நாம கொண்டாட மாட்டமில்ல", "நாம ஏம்மா தீவாலி  கொண்டாட மாற்றோம்"   "நாம சாமி கும்புட மாட்டோமில்ல அதான் ".

  சாமி என்றதும் அருளுக்கு ஏதோ நினைவுக்கு வந்துவிட," ஆமாம்மா,போன வாரம் சித்தி விட்டுக்குப் போனப்போ ஒரு சாமி பொம்மய கேட்டு அழுத ப்போ அப்பயும் தாம்மா அப்பா என்னைய அடிச சாரு.ஏம்மா?  கேள்விகள் வளர்ந்து கொண்டே போயின. கணவனின் கடவுள் கோட்பாடுகள் பற்றியெல்லாம் சின்னப்பிள்ளை க்குக் கூறமுடியாது.எனவே அருளின் அம்மா எதையோ சொல்லி அவன் வாயை அடைக்க முயன்றாள். "அப்பா வாததியாரா  இருக்காரில்லே? புள்ளைங்க தப்பு. பண்ணா குச்சியால ரெண்டு குடுப்பாங்கள்ள.அது போல உனக்கும் ரெண்டு போட்டுட்டார்,அப்பா",என்றால் அம்மக்காரி. "அடுத்த வீட்டு அகமது அப்பா போலீஸ்காரா இருக்காரே. அகமது தப்பு செஞ்சா அவனோட அப்பா அவன துப்பாக்கியால் சுட்டு ருவாரில்ல மா? நல்ல வேல நம்ம அப்பா போலீசு இல்ல "என்றான் அருள் வெள் லந்தியாக அடுத்த அறையிலிருந்து அமைதியாய் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பாவுக்கு சுருக்கென்று நெஞ்சில் ஒரு முள் தைத்தது. அவர் எழுந்து போய் தினமும் பள்ளிக்கு பசங்கலை அடிப்பதற்காக எடுத்துச் செல்லும் பிரம்புக் குச்சியை எடுத்து ஒடித்துப் போட்டார்.அருள் சொன்னது அவர் காதில் பிரணவ மந்திரம் போல ஒலித்துக் கொண்டே இருந்தது.

   ஆக்கியோன: அன்பழகன்,நீடாமங்கலம்.

 

 

16.K2K 00068

கதையல்ல நிஜம்

அப்பா என்று தந்தையர் தினம் கொண்டாடும் நாளில் அதிக ஆசையுடன் அப்பாவைப் பற்றி கூறும் நாளில் எப்படி இருக்கக்கூடாது அப்பா இவ்வளவு தப்பா என்ற சிறுகதை.

திருநெல்வேலியில் தன் தந்தை மது அருந்தக்கூடாது என்று பாலத்திலே தூக்கிலிட்டு தற்கொலை செய்த மாணவன் புதுக்கோட்டை அருகே ஆண் குழந்தை வேண்டி பெண் குழந்தையை ஜோதிடம் மூலம் கொலை செய்த தந்தையை போல  இருக்காதீர்கள் என்று வருங்கால தந்தையர்களுக்கு இக்கதை சமர்பணம். கங்கா என்ற பெண்மணிக்கு இரு குழந்தைகள் தேவி மற்றும் ராணி. படிக்காத கங்கா தன் குழந்தைகளை கடினப்பட்டு படிக்க வைத்தாள். தேவி கருப்பாக இருப்பாள். ராணி சிவப்பு நிறமாக இருப்பாள். உறவினர் பேச்சை நம்பி தேவிக்கு 12 ஆம்வகுப்பு  முடித்தவுடன் திருமணம் செய்து வைத்தார்கள். சந்தேக புத்திகாரன் சைக்கோபோல நடந்தவன் திருமண நாளில் இருந்து அவன் வீட்டை விட்டு வெளியே சென்றால் மனைவியை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு செல்வான். ஞாயிறு அன்று கறி வாங்கி எத்தனை துண்டுகள் என எண்ணுவான். கறி சமைத்த தேவி ஒரு துண்டை ருசி பார்த்ததற்கு  எண்ணிக்கை குறையாக உள்ளது என தேங்காயால் மண்டையை உடைத்தான். ஆனாலும் தேவி 5 வருடங்கள் இரு குழந்தையுடன் காலத்தை கடத்தினாள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவே தற்கொலைக்கு முயற்சிக்கவே ,தேவி குடும்பத்தினர் அவளை பாதுகாக்கவே, பிரச்சனைகள் அதிகரிக்க விவாகரத்து பெற்றனர்.

தேவி மகன் வளர்ந்த பின்னரே அவன் செய்த கொடுமைகளை தாய் கூறினாள் சினிமாவில் காண்பிப்பது போல் பழி வாங்க துடித்தான் முடியாமல் போகவே இயற்கையாகவே இறந்தான். தன் வாழ்க்கை தரம் இப்படி போனது தங்கை ராணிக்கு நல்ல படித்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொடுத்தார்கள் போலீஸ் என நம்பினார்கள் வெளியில் மட்டும் தான். வீட்டிலோ தெரு பொறுக்கி.

போலீஸில் வண்டி ஓட்டுபவன் ராணியை திருமணம் செய்து விட்டு கொடுமைபடுத்தினான். ஏனெனில் ராணி ஒரு ஆசிரியை சம்பளம் முழுவதும் வாங்கி விடுவான் மேலும் வரதட்சணை கொடுமை அவன் கூட பிறந்த அக்கா தங்கைக்கு செலவிடுவான்.  இறுதியில் அவளுக்கும் விவாகரத்துதான். இதை அனைத்தையும் பார்த்த தேவி மகன் படித்து பெரிய ஆளாக மாறியவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அப்பனும் சரியில்லை சித்தப்பனும் செத்த அப்பனாக மாறிவிட்டான்.நண்பரகளிடையேபழகிய அவன் எங்கப்பா அதை செய்தார் எங்கப்பா இதை செய்தார் என்று கூறும்போது அப்பாவாக எப்படி வாழ வேண்டும் என கற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினான். 

கங்காவோ தன் மகள்களுக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது விதி என்றே புலம்புவாள். ஆண் ஆதிக்கம் உள்ள ஒருசில செயல்களை திருத்திக் கொள்ள வேண்டும். அன்னையிடம் அன்பை வாங்கலாம். தந்தைபிடம் நீ அறிவை வாங்கலாம். தாயைச் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று அறிந்து வாழ்ந்தால் எதிர்கால சந்ததியினருக்கு விவாகரத்து என்பதே இருக்காது. ஒவ்வொரு தந்தையாக மாறத் துடிக்கும் இளைஞர்களே அப்பா என்ற சொல்லை பிஞ்சு உள்ளங்களில் தப்பா பதித்து விடாதீர்கள்

ஜோ. ஜெயராஜ்

 

 

17.K2K 00069

 அப்பா

முழங்கால் வரை கால்ச்சட்டை மற்றும் முகத்தின் பிரகாசத்திற்கு சற்றும் குறையாது ஒளிர்ந்த துவைத்துத் தேய்த்த சட்டையுடன் அம்மாவின் அன்பான முயற்சியால் கருப்பு நிறமாக்கப்பட்ட முடி காற்றோடு கலைந்து ஆட கறுப்பு நிற ஸ்கூட்டி வண்டியை கடலோரக் காற்றுடன் போட்டி போட்டு வேகமாக வந்து கொண்டிருந்தார் அப்பா.  "அப்பா" கத்திக் கொண்டே நானும் தம்பியும் ஓடிச் சென்று வண்டியில் ஏறிக் கொண்டோம்.  தந்தையிடன் மோதித் தோற்றுக் கொண்டிருந்த காற்றில் கைகளை விரித்துக் கொண்டு இலகுவாகப் பயணித்துக் கொண்டிருந்தோம்.  "காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொடும் தேவதை அம்மா.. " பாட்டுச் சத்தத்துடன் எழுந்தேன்.  ", கனவா! " ஏமாந்த ஏக்கத்தை சத்தமாக அமைதிப் படுத்திவிட்டு காலைக் காப்பியுடன் மாடியில் அமர்ந்தேன்.  "தூரமாக இருந்தாலும் இன்னும் உன்னை உள்ளத்தில் சுமந்து உன்னை இலகுவாக ஒருவர் பறக்கச் செய்கிறார்" காதில் கத்திய காற்று அருகிலிருந்த மரக்கிளையில் தாவி மறைந்தது.  லேசான ஏக்கத்துடன் காப்பியை உறிஞ்சினேன்.

 

-- VILIA

 

 

18.K2K-00078

அப்பா

10 வருடங்களாக கடைப்பிடித்து வந்த வெள்ளிக்கிழமை விரதத்தை கைவிட்டு, பிடிவாதமாக கடவுள் மீது நம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டி வந்தாள் ஊர்மிளா. "நல்ல நாளு அதுமா இவ. கறுப்பு சீலைய கட்டிருக்கா? வேற சீலைய கட்ட சொல்லு"  சுந்தரம் புறுபுறுக்க தொடங்கினான். ஊர்மிளா சுந்தரம் கூறியதை கேட்டும், கேட்காதவள் போல உட்கார்ந்து இருந்தாள். மதி பதில் அளித்தாள்."அது கறுப்பில்லயப்பா... பீக்கோ புளு" "என்ன புளுவோ? பாத்தா கறுப்பாதா இருக்கு" போ... போ.... மஞ்சள் கலர். இல்லாட்டி சிவப்பு கலர் சீலையொன்னு எடுத்து கட்ட குடு" என்று கூறி தொழிலுக்குச் சென்றான். "கோயிலா அக்கா  ஊர்மிளாக்கு டவுன்ல இருந்து, வரன் வந்துருக்கு அதா! ரெண்டு மூனு சமா வாங்களானு போறே. மீன கொஞ்ச பாத்துகுங்கு" என கூறி அருகிலுள்ள கடைக்கு மதியையும், சீலனையும் அழைத்துச் சென்றாள். சுந்தரத்திற்கு மூன்று பிள்ளைகள்.மூத்தவள் ஊர்மிளா. பட்டப்படிப்பினை நிறைவு செய்தவள். தகுதிக்கேற்ற வேலையைத் தேடிக்கொண்டிருந்தாள். யாரிடமும் அதிகம் பேசாதவள். எந்நேரம் பார்த்தாலும் எதையோ!! பறிக்கொடுத்தது போல இருப்பாள். ஊர்மிளாவின் தங்கை மதிவதனி. அக்காவுக்கு எதிரானவள். கடும் சுட்டித்தனம். இளையவன் சீலன். 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். பள்ளியில் எப்போதும் முதல் மாணவன். எதிர்கால வைத்தியரென அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருப்பான்.

இம்மூவரையும் இம்மண்னை தொட வைத்தவர்கள். சுந்தரமும், தேவியும். சுந்தரம் 50வருடத்திற்கு மேல் கடலில் மீன்ப்பிடிக்கும் தொழிலை செய்து வருகிறான். வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்றால், திங்கட்கிழமை தான் வீடு திரும்புவான். அவன் மனம் போல பாரை, கொடுவா,சூடை, விறால் என பல மீன்களை கரைக்கு அள்ளி வருவான். பிள்ளைகள் மீது அதித அன்புடையவன். அவனுடைய பாதிநாள் வாழ்க்கை உப்போடு உப்பாக கரைந்தது. தேவி சுந்தரம் கொண்டு வரும், மீனில் கொஞ்சத்தை எடுத்து, வீட்டிலேயே மீன் கடையொன்றை வைத்திருந்தாள். இவளும் பிள்ளைகளுக்கெனவே வாழ்ந்து வருபவள். திருமணம் முடித்து 22வருடங்களாக இவள் படுகின்ற கஸ்டங்களை பக்கத்து வீட்டு, கோயிலா அக்கா மாத்திரம்தான் அறிவாள்.

இவ்வாறு இருக்க, ஊர்மிளாவுக்கு அப்பா என்றால், சிறுவயதிலிருந்தே பிடிக்காது. மூத்தவள் என்பதாலும், பெண் பிள்ளை என்பதாலும் செல்லம் கொடுக்காது. கொஞ்சம் கட்டுக்கோப்புடன் வளர்த்தான். ஆனால், ஊர்மிளா ஆசைப்படும் உடை முதல் உணவு வரை உடனே வாங்கிக் கொடுப்பான். தனது மனைவிக்கு கூட தெரியாது, ஊர்மிளாவின் திருமணத்திற்கு என மாதம் 5ஆயிரம் ரூபாவினை வங்கியில் (Bank) இட்டு வந்தான். ஊர்மிளா முதல் பிள்ளை இவளை பார்த்துதான் இளையவர்கள் வளர்வார்கள் என எண்ணியவன். ஊர்மிளாவை மிகக் கண்ணியமாக வளர்த்தான். யமன் போல இக்குடும்ப கூட்டையளிக்க ஒருவன் வந்தான். சுந்தரத்தின் நெருங்கிய நண்பனான, மாரியின் மகன் கௌதமன். இவனும் தந்தையுடன் இணைந்து தொழிலுக்கு செல்வான். தொப்புள்க் கொடியுடன் தாயின் உயிரையும் அறுத்தெறிந்து, மண்ணில் உதித்தான்.

மூன்று மாத முடிவில், மாரி வைதேகி என்ற பெண்னை மறுமணம் செய்துக் கொண்டான். மாரிக்கும், வைதேகிக்கும் பிறந்தவள் 'அஞ்சலி' இவளும் ஊர்மிளாவும் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நண்பர்களாக இருந்தனர். கௌதமன் ஊர்மிளாவை ஒருதலையாக (one side love) காதலித்து வந்தான். தன் தங்கையையே, தன் காதல் பயிருக்கு தண்ணீருற்ற தூதாக வைத்திருந்தான். அவளிடம் காதல் கடிதம் அனுப்புதல், புடவை வாங்கிக் கொடுத்தல், கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தல் என தன்னுடைய தங்கையை வைத்தே காய் நகர்த்தினான். தொடர்ந்துக் கொண்டிருந்த ஒருதலைக் காதல், பட்டப்படிப்பின் முடிவில், ஊர்மிளாவின் மனதிலும் 'காதல்' நிலையான இடத்தை பிடித்துக் கொண்டது. ஆனால் கௌதமன் பற்றி நன்கறிந்தவன் சுந்தரம். தொழிலுக்கு செல்லும் போது போதைப்பொருட்களை சட்டத்தை மீறி விற்பனைச் செய்தல், அதுமட்டுல்ல.. ராசாத்தி என்ற குப்பமாவின் மகளை காதல் என்ற பெயரில் ஏமாற்றி அடிக்கடி பழைய படகோரம் ஒதுங்கியதையும் சுந்தரம் கண்டுள்ளான். அவனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை.

தன் அப்பாவின் அன்பையுணராத ஊர்மிளா. கௌதமன் விரித்த வலையில், சிக்கிவிட்டாள். அடிக்கடி கௌதமனும், ஊர்வசியும் தனிமையில் சந்தித்து, காதலை யாருமறியாத வண்ணம் வளர்த்து வந்தனர்.  "என் அப்பாவிற்க்கு என் மீது அன்பேயில்ல...  எப்ப பாத்தாலு ஏசிட்டே இருக்காரு" என கூறினாள். இப்புலம்பலினை தன்வசமாக்கிக் கொண்டான். மேலும் சுந்தரத்தினை ஊர்மிளா அடியோடு வெறுக்கும்படியாக பல கதைகளை கட்டுவித்தான்.  "உன் அப்பாவ பத்தி ஒனக்கு தெரியுமா? ரெண்டு மூனு நாளைக்கு ஒருக்கா தானே வீட்டுக்கு வருவாரு.. அவரு நல்லவரு போல நடிக்குறாரு.. ராசாத்தினு ஒரு பொம்பல வீட்டுல தங்குறாரு" என்றான்.

விம்மி விம்மி அழுதாள். கௌதமன் போட்ட நாடகத்தினை மெய்யென நம்பிவிட்டாள். சுந்தரமபிள்ளைகளுக்கென இரவு பகல் பாராது உழைத்தான். ஒருநாள் ராசாத்தி கர்பமாகிய தகவல் ஊரே பரவியது. கருவுருவாக காரணம் கௌதமன் என கை காட்டினாள் ராசாத்தி. "இவ யாரோட முறயிலாம பழகி. புள்ளய! சுமக்குறாலோ.... " என்றான்.  அவமானமும், 'அப்பா' இ்ல்லாத! பிள்ளை மண்ணில் பிறக்க கூடாது என எண்ணியவள். குளத்தில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டாள்.  ஊர்மிளா ராசாத்தி கருவுற்றது. தன் அப்பாவின் மூலமென மனதுக்குள், ஒரு கோட்டையை கட்டி வைத்திருந்தாள். ஊர்மிளாவின் காதலை அறிந்த, சுந்தரம் பலமுறை எச்சரித்தான். "உங்கள பத்தி எனக்கு தெரியு..  என்னோட.வாழ்க்கைய நானே முடிவு பன்னிகறே" என்று கௌதமன் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு தன் தந்தையின் வார்தைகளுக்கு மதிப்பளியாது பேசினாள்.  விபரமில்லாது பேசுகிறாள். தங்கையாவின் மகனை இவளுக்கு திருமணம் முடித்து வைப்போம். என சுந்தரமும் தேவியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதனை கேட்டவள் அடுத்த நாள் காலை அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.  சுந்தரம் அன்றைய தினம் தொழிலுக்கு செல்லவில்லை. மாலை 5மணிக்கு சென்றவள். இரவு 7மணிக்கு வீடு திரும்பினாள்.  "எங்க போன? ஒனக்கு யாரு இவளோ! தைரியம் கொடுத்தா." காதில் விழுகாதாது போல உள்ளே சென்றாள்.  கிளிபிள்ளைக்கு கூறுவது போல கூறியும் கேட்கவில்லை. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டாள்.

அடுத்தநாளும் வேலைக்கு செல்ல மனமே இல்லாத சுந்தரம் சென்றான். இரண்டு நாளில் திரும்பி வந்தவன். ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த தேவியை பார்த்து " அழுற" என்றான். "ஊர்மிளா நம்மள விட்டுடு அவனோட போய்டாங்க" என்றாள். சுந்தரம் மார்பை பிடித்துக் கொண்டு தரையில் விழுந்தான். தன்னிரு பிள்ளைகளின் எதிர்காலத்தினை மனதில் கொண்டு தேவியையும் சமாதனம் செய்தான்.  3மாதங்கள் ஓடியன. மதியை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும். மறுபடியும் அயராது உழைக்க ஆரம்பித்தான். ஊர்மிளா செய்த துரோகத்தால், மனதாலும், உடலாலும் சோர்வடைந்தான்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 6மணியிருக்கும். கடலோரம் பிணமொன்று கரை ஒதுங்கியது. காகங்கள் பிணத்தை அண்டியன. சனங்களும் கூடின. மனமற்ற அக்கூட்டத்தில் உருகிய மனம்படைத்த சுந்தரமோ! காகங்களை விரட்டியடித்தான். கையில் இருந்த மோதிரத்தை பார்த்து, ஊர்மிளா பிணமாக கரையொதிங்கியதை கண்டு கொண்டான். பிணத்தை கட்டியணைத்து அழுதான். "காக்கைக்கும், மீனுக்கும், நண்டுக்கும் இரையாக்கவா! உன்ன படிக்க வச்சே!

பொட்ட புள்ளனு தானே பொத்தி பொத்தி வச்சே! இனி இந்த சுந்தரத்த அப்பானு சொல்மாட்டியா!  மணமால போட ஆசப்பட்டே  ஒனக்கு இப்ப எங்கையால மண்ண போட வச்சிட்டியே!" என மனதை உருக்கும் வண்ணம் சுந்தரம் ஒப்பாரி வைத்தான். ஊர்மிளாவின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அன்றிரவே பொலிஸாரால் கௌதமன் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டான். கடல் அளவு கோபமும் சுமையும் நொடிப்பொழுதில் மறைந்து விட்டது. தன் மகள் உலகில் இல்லையென்றவுடன். அப்பாவை மட்டும் ஏமாற்றி நன்றாக வாழ்ந்துவிடலாம் என எண்ணாதீர்கள். அவர்கள் விடும் கண்ணீர் நம்மை வாழவிடாது.

நன்றி!

பரமசிவம் இந்துஜா

இலங்கை.

 

 

19.K2K 00079.

தாயுமானவர்

காலை ஐந்தரைக்கு அலாரம் சரியாக அடித்தது...இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமென புரண்டு படுத்தான் சபரீஷ்.. "டேய் கழுதை..எழுந்திருடா...பத்து மணிக்கு உனக்கு இன்டர்வியூ..இப்ப எழுந்தாதான்.. பதட்டமில்லாம கிளம்பி போகமுடியும்.." ஆரம்பிச்சிட்டாரு இனிமே தூங்கினாப்பபுலதான் சலித்தபடி எழுந்தான் சபரீஷ்.. "குளிச்சாச்சா...வெளிய வாடா...சூடா காபி வெச்சுருக்கேன் பாரு..குடிச்சுட்டு க்ரீம் கலர்ல சர்ட்..தகுந்தாப்புல பேன்ட்  எடுத்து வச்சுருக்கேன் போட்டுக்க.." "இன்னும் என்னடா அங்கேயே நின்னு தலைசீவிகிட்டு கண்ணாடி பார்த்துகிட்டு நிக்கற..பொண்ணு  பார்க்கவா போறே..இன்டர்வியூக்குத்தானடா போற.." "இந்தாடா நில்லு ...போற அவசரத்துல டிபன் சாப்பிட மறந்துட்டியே..வாயைத் திற..." இட்லியும் சட்னியும் கலந்து தானே ஊட்டிவிட்டார்...  '"அடேய்..கேட்ட கேள்விக்கெல்லாம் நிதானமா  பதில் சொல்லு...நல்ல கம்பெனி.. தவறவிட்டுடாதே..சுவாமியை வேண்டிகிட்டு போடா..." "முதமுதல்ல இண்டர்வியூ போற..பதட்டமில்லாம ஆட்டோல போடா..போற வழியில தெருமுனை பிள்ளையார்க்கு தேங்காய் வாங்கி உடைச்சிட்டுப் போ"

அப்பா எப்பவுமே இப்படித்தான்....ஐந்து வயது பையனாகவே  என்னைப் பார்க்கிறார்... பெற்றவள் மறைந்த நாள்முதல் அவர்தான் சகலமும்... "சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சிதான் குளிக்கணும்..அப்பதான் உடம்புக்கு நல்லது.." உட்கார வைத்து குளிப்பாட்டுவார். ஐந்து மணிக்கே எழுந்து சமையலை முடித்து சபரீஷையும் கிளப்பி தானும் அலுவலகம் சென்று விடுவார். காலையில் பெரும்பாலும் இட்லிதான்..மாலை வரும்போதே இரவு சமையலுக்கான ஆயுத்தத்துடன்தான் வருவார்...பருப்பு அடை.. இடியாப்பம். . ஜவ்வரிசி உப்புமா..கேழ்வரகு புட்டு..கம்பு தோசை என விதவிதமாய் செய்து அசத்துவார்..சில நேரங்களில் மகனின் விருப்பத்திற்காக நூடுல்ஸ்.. பாஸ்தாவும்..மணக்க மணக்க செய்வார்... ஞாயிற்றுக்கிழமைகளில் அவனோடு பேசியபடியே இட்லிக்கு மாவு அரைப்பதும்..துவைத்த துணிகளை இஸ்திரி போட்டு அழகாய் அடுக்கி வைப்பதும் வீட்டை துப்புரப்படுத்துவதும் அப்பாவுக்கு கைவந்த கலை...அம்மாவை போட்டோவில் மட்டுமே பார்த்ததால் பெரிய ஒட்டுதல் வரவில்லை.. புகைப்படிந்த நினைவுகளாய் இருந்த அம்மாவின் உருவத்தில் இப்போது அப்பாவின் முகம்.. அப்பாதான் அவனுக்கு அதிசயமாகத் தெரிந்தார்.அவனது ஐந்து வயதில் அம்மா விஷஜூரம் வந்து இறந்ததாக பாட்டி சொன்னாள்.  வேறுதுணை நாடாமல் அன்றிலிருந்து மார்போடும் தோளோடும் அள்ளிப்போட்டு அவனை வளர்த்தவர்தான் அப்பா. பரீட்சை வேளைகளில் தயங்காமல் லீவு போட்டுவிடுவார். அவனை தேர்வுமையத்தில் விட்டுவிட்டு வெளியே காத்துக்கிடப்பார்.. பிள்ளை நல்லமுறையில் தேர்வு எழுதினான் என்பதைக் கேட்டபிறகுதான் முகமலரச் சிரிப்பார்.தோழனுக்குத் தோழனாய் அன்னையாய் ..ஆசானாய்.. அப்பாவுக்குத்தான் எத்தனை முகம்... தனக்காக உழைத்த அப்பாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். சமையலுக்கு ஆள் போடவேண்டும். சொகுசாய் வாழவைக்க வேண்டும். இந்த எண்ணத்துடன் முனைப்பாய் நேர்முகத்தேர்வை அணுகினான்..முயற்சிக்கு பலன் கிடைத்தது...மாதம் அறுபதாயிரம் சம்பளம்..பணிநியமன கடிதம் கைக்கு வந்ததும் அப்பாவைப் பார்க்க ஓடினான். வழியில் அவருக்கு பிடித்த மைசூர்பாக் அரைகிலோ வாங்கி கொண்டான்.

ஆட்டோவில் போய் இறங்கியதும் கதவைத்தட்ட பாட்டிதான் கதவைத் திறந்தாள். குழப்பமாயிருந்தது.. "அப்பா எங்க பாட்டி..எனக்கு வேலை கிடைச்ச விஷயத்தை சொல்லி அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்.." ஆசிர்வாதம்தானே போ..போயி..வாங்கிக்க.. மௌனமாய் கைகாட்ட..அங்கே ஆளுயரப் போட்டோவில் ரோஜாப்பூ மாலையோடு சிரித்துக் கொண்டிருந்தார் அப்பா. "போனவன் பொசுக்குன்னு போயிட்டான் புள்ளயை விட்டுட்டு..ஒரு மாசமாச்சு..இன்னும் பித்துப் பிடிச்ச மாதிரி இருக்கானே இவன்..தனக்குத்தானே பேசிக்கிறான்..சிரிக்கிறான்.. தள்ளாத வயசுல எனக்கு இதெல்லாம் தேவையா.."பாட்டி புலம்பிக் கொண்டிருந்தாள். அப்பாவின் போட்டோவில் கடிதத்தை வைத்துவிட்டு கண்ணீரோடு அவரின் புகைப்படத்தையே பார்த்தான்." எனக்கு சந்தோஷம்டா சபரீஷ்..என் வளர்ப்பு வீண்போகலை...மரணம் இயற்கைடா..அதுக்காக சோர்ந்து போலாமா..உனக்குன்னு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்துடுத்து வாழு..கண்ணுக்குத் தெரியாத ரூபத்துல உன்கூடத்தான் அப்பா இருப்பேன்.."  சம்மதமாய்த் தலையாட்டினான் சபரீஷ்..ரோஜா இதழ்கள் அட்சதையாய் அவன்மேல் விழுந்தன..

கருத்து: தாயுமானவராய் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஆண்களுக்கும் இக்கதை சமர்ப்பணம்.

பெயர் :கி.இலட்சுமி

 

 

20.K2K 00080

அப்பாவின் அன்புமுகம்

கண்ணன் இன்று வேலையில் சேர்கிறான்.முதல் நாள் ஆஃபிஸில் . தன்னுடைய கேபினில் உட்கார்ந்து வேலையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இண்டர்காம் ஒலிக்க எடுத்துப் பார்த்தான்.அவனுடைய மேலதிகாரி ராஜி மேடம் தன்னுடைய கேபினுக்கு அழைத்தார். தயக்கத்துடன் அவர் அறைக்குச் சென்றான். " ஹலோ கண்ணன்.ஆஃபிஸ் சூழ்நிலை எப்படி இருக்கு? உனக்கு என்னைத் தெரியாது.ஆனால் எனக்கு உன்னுடைய அப்பா,அம்மாவை நல்லாத் தெரியும்", என்று சொன்ன ராஜியை ஆச்சர்யமாகப் பார்த்தான். "எப்படித் தெரியும்னு ஆச்சர்யமா இருக்கா‌?நான்,உன் அப்பா,அம்மா மூணு பேரும் கல்லூரி நண்பர்கள்.சிவராமன் எவ்வளவு ஆழமா உன் அம்மா காயத்ரியைக் நேசிச்சான் தெரியுமா?", ஆச்சர்யமாகக் கேட்ட கண்ணனுக்கு இது புதிய தகவல். அவனுக்கு அப்பாவைக் கண்டாலே பிடிக்காது.அவன் பிறந்தவுடன் காயத்ரி இறந்து போனதால் பத்து வயது வரை பெரியம்மா அதாவது அம்மாவின் அக்கா தான் வளர்த்தார்.அப்பா அஸ்ஸாம் பக்கம் எங்கோ வேலை பார்த்து வந்தார்.பத்து வயது முடியும் போது தான் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார்.ஆனால் கண்ணன் அவரிடம் ஒட்டவேயில்லை.அப்பா அம்மாவுடன் ரொம்ப சண்டை போடுவார்; அடித்துத் துன்புறுத்துவார் என்றெல்லாம் பெரியம்மா சொல்லியிருந்தார்.அதனால் தான் அத்தனை வெறுப்பு. " என்ன பாக்கறே அப்படி?.உங்க அம்மான்னா அவ்வளவு உசுரு சிவராமனுக்கு.அவ்வளவு நல்ல ஜோடி.பாவம் திருஷ்டி பட்டமாதிரி போய்ச் சேந்தா காயத்ரி.அப்பக் கூட இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம உனக்காகவே வாழ்ந்துட்டுருக்கான்.பாவம் மனசில இருக்கற அன்பைக் கூட வெளியே காட்டத் தெரியாத அப்பாவி அவன்", என்ற ராஜியிடம் தயக்கத்துடன் கண்ணன்  சொன்னான். " இல்லையே! பெரியம்மா வேற மாதிரி சொன்னாங்களே!",‌ என்று முனகினான். "யாரு சாவித்திரியா.அவ மனசு பூரா விஷம்.நீ சின்னக் கொழந்தை.ஒனக்குப் புரிஞ்சிருக்காது அப்போ. உங்க பாட்டி வகையில் தூரத்து சொந்தம் சிவராமன்.சாவித்திரி அவனை ஒரு தலையா  அவனை விரும்பியிருக்கா.ஆனா சிவராமன் காயத்ரியை விரும்பினதால சாவித்திரியின் கல்யாணம் முடிஞ்சதும் காயத்ரி,சிவராமன் கல்யாணத்தை எளிமையாக் கோயிலில் வச்சு முடிச்சார் உங்க தாத்தா.உன்னோட பெரியப்பாவுக்கு அவ்வளவு நல்ல வருமானம் இல்லை.குணமும் சரியில்லை.அதனால தன்னை விட நல்ல வாழ்க்கை காயத்ரிக்கு அமைஞ்சதுன்னு அவளுக்குப் பொறாமை. உன்னை சிவராமன் அஸ்ஸாமுக்குத் தன்னுடன்  கூட்டிப் போவதாகத் தான் இருந்தான்.சாவித்திரி தான் குறுக்கே வந்து தன்னிடம் விடச் சொன்னாள்.சிவராமன் 'உனக்காக நிச்சயம் பணம் அனுப்புவான்.அது தனக்கு உதவியா இருக்கும் 'என்று கணக்குப் போட்டாள்.வேறென்ன? அவ்வளவு தள்ளியிருக்கற இடத்தில் யார் உதவியும் இல்லாமல் எப்படி சமாளிப்பீங்கன்னு அவள் சொன்னதைப் பாவம் அப்படியே சிவராமன் நம்பிட்டான்.ஆனால் கஷ்டப்பட்டு சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்ததும் உன்னை வலுக்கட்டாயமாகக் கூட்டிட்டு வந்துட்டான்", என்று சொல்லக் கண்ணனுக்கு உண்மைகள் தெளிவாகப் புரிந்தன. பெரியம்மா தான் குழந்தையாக இருந்த போது அவளுடைய குழந்தைகளுக்கும் தனக்கும் காட்டிய பாகுபாடு கூட இப்போது தான் புரிந்தது.எவ்வளவு அடிமுட்டாளாக இருந்து அப்பாவை வெறுத்திருக்கிறோம் என்று வருத்தமாக இருந்தது. அதன்பிறகு வேலையைப் பற்றிப் பேசி விட்டுத் தனது ஸீட்டிற்குத் திரும்பிய கண்ணனின் மனதில் அப்பா மட்டுமே வியாபித்திருந்தார்.அவர் கட்டிக் கொடுத்திருந்த உணவு கூட அன்று அதிக ருசியாக இருந்தது. மாலையில் வீடு திரும்பிய போது கண்ணன் அப்பாவுக்குப் பிடித்த இனிப்பை வாங்கிக் கொண்டு போய் அப்பாவின் வாயில் தானே ஊட்டி விட்டுப் பாசத்துடன் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டான்.

அன்று அங்கு ஒரு மகன் புதிதாகப் பிறந்தான்.தாயுமாகி நின்ற அந்தத் தந்தையின் உள்ளம் நிறைந்தது. தாயைப் போலத் தந்தைக்குப் பாசத்தை வெளியே காட்டத் தெரியாது.மனதிற்குள் பூட்டி வைத்திருப்பார்.தந்தையின் உயர்வைப் புரிந்து கொண்டு போற்ற வேண்டும். அனைத்துத் தந்தைகளுக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!

புவனா

 

 

21.K2K – 00081

அப்பா

"கங்கிராட்ஸ் கவின்... நீங்க அப்பா ஆகப் போறீங்க....நிரோஷா கர்ப்பமா இருக்காங்க..." என்று வாய் நிறையச் சிரிப்போடு வாழ்த்தினார் மகப்பேறு மருத்துவர். கவின் அளவில்லா சந்தோஷமடைந்தான். தன் நண்பர்களுக்குக் கேக் வாங்கிக் கொடுத்துக் கொண்டாடினான். குழந்தை நல்லபடியாகப் பிறக்க வேண்டுமென்று அனைத்துத் தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டான். கண்ணிமைக்கும் நொடியில் ஒன்பது மாதங்கள் ஓடின... நிரோஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டுக் காத்திருந்தான் கவின். "நம்ம குழந்தை நல்லபடியாக பொறக்கணும் ப்ரியா..." என்று தன் மனைவி ப்ரியாவிடம் மானசீகமாக வேண்டினான்.

ஆம்...  ப்ரியா...

ப்ரியா, கவினின் அன்பு மனைவி. பெயருக்கு ஏற்றார் போல மிகவும் ப்ரியமானவள். அவர்களுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை. ப்ரியாவின் கர்ப்பப்பைக்கு ஒரு குழந்தையைச் சுமக்கும் சக்தி இல்லை என்று மருத்துவர் கூறியதைக் கேட்ட இருவரும்  மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். அவளை தன் பிள்ளையாய் ஏற்றுக்கொள்வதாகக் கவின் கூறியதை ப்ரியா ஏற்க மறுத்தாள். இறுதியில் ஓர் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெறலாம் என முடிவு செய்து அதற்கான நடைமுறைகளை விசாரித்தனர். நெருங்கிய உறவினர் ஒருவரே வாடகைத் தாயாக இருக்கமுடியும் என்பதை அறிந்தனர். ப்ரியாவின் சகோதரி நிரோஷா அதற்கு ஒப்புக்கொள்ளவே, ஐவிஎப் முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கான முடிவு தெரியும் முன்னரே துரதிர்ஷ்டவசமாகப் ப்ரியா ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தாள்.

மனமுடைந்து போனான் கவின். அவன் வாழ்வின் அச்சாணியாய் இருந்த மனைவி இறந்ததும் தன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாய் எண்ணினான். இனி தான் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்து என்ன பயனென்று விரக்தி அடைந்தான். தானும் இறந்துபோக வேண்டுமென்று முடிவு செய்தான். இந்நிலையில் தான் நிரோஷா கருவுற்ற செய்தி வந்தது. மட்டற்ற மகிழ்ச்சி அவனைத் தழுவிக்கொண்டது. அவன் எதிர்காலத்திற்கு அர்த்தம் கிடைத்ததாய் உணர்ந்தான். இனி தன் வாழ்வை குழந்தைக்கு அற்பணிக்கப் போவதாக மனைவி ப்ரியாவிடம் மனதார வாக்களித்தான். ஓர் அப்பாவாக அக்குழந்தையை தன் கண்போல் காக்கப் போவதாக தனக்குத் தானே கூறினான்.

இதோ இன்று குழந்தை பிறக்கப்போகிறது... "கவின்... டேய் கவின்...."நித்திரையிலிருந்து எழுந்தான் கவின். அவன் என்னவென்று அறிவதற்குள் அழகிய பெண் குழந்தையை அவன் கையில் கொடுத்தார் அவனது அம்மா.

"நீ அப்பா ஆகிட்ட கவின். உனக்கு என்னோட வாழ்த்துக்கள்.." என்றார் ஆனந்தக் கண்ணீரோடு. குழந்தையைக் கையிலேந்தியக் கவினுக்கு உடலெல்லாம் பூரிப்பு. "அம்மா, எம் பொண்ணு, அப்படியே ப்ரியா மாதிரி இருக்கா... மனைவியே மகளாகக் கிடைக்க நான் குடுத்து வெச்சுறுக்கணும்..."என்று சிலாகித்தான். நிரோஷாவுக்கு பலகோடி நன்றிகளைத் தெரிவித்தான். மகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று மனைவியின் படத்தின் முன் வைத்து ஆசிர்வாதம் வாங்கினான். இனி தன் எதிர்காலம் இவள்தான் என்றெண்ணி தன் வாழ்வை ஒரு அப்பாவாக வாழத்தொடங்கினான் கவின்.

கருத்து

இறைவன் ஒரு கதவை அடைக்கும்போது, இனொன்றை கண்டிப்பாகத் திறந்துவிடுவான். நம்பிக்கையோடு காத்திருங்கள்.

-Narmada

 

 

22.K2K – 00090

அப்பா

அப்பாவின் வருகைக்காக வாசலில்  காத்துக்கொண்டிருந்தாள் தன்யா. ‘வந்து படுத்துக்கோ தன்யா’‘இல்லம்மா அப்பா வந்துடட்டும்' ‘அவர் எப்ப வந்து நீ எப்ப தூங்குவ'‘அம்மா ப்ளீஸ் எனக்கு தூக்கம் வராது.. நீ படுத்துக்கோ மா' ‘சொன்னா கேக்க மாட்ட சரி என்னவோ  பண்ணு' என்று சொல்லிவிட்டு தன்யாவின் அம்மா ரேணுகா தூங்க சென்றாள்தன்யாவோடு கூட படிக்கும் சுந்தர் அவளைப் பார்த்துக் கொண்டே வந்தான். ‘உங்க அப்பா அங்கே கீழ விழுந்துட்டார்தனியா என்னால அவரை கூட்டிட்டு வர முடியல நீயும் வரியாஎன்றான் சுந்தர். ‘எங்க சுந்தர்' என்று பதட்டத்தோட கேட்டாள் தன்யா… ‘இங்க தான் வா போலாம்' என்றான்.. பலமுறை இப்படி நடந்திருக்கிறது…. அவர் வரும் வரை அவள் பயந்து கொண்டேதான் இருப்பாள்  அவளின் அப்பா வீட்டுக்கு வந்த பிறகு தான் அவள் நிம்மதியாக தூங்குவாள்

தெருமுனையில் சைக்கிள் அருகே கீழே விழுந்து கிடந்த தன்யாவின் அப்பா குடிபோதையில் ஏதேதோ உளறிக் கொண்டு இருந்தார்'… ‘அங்கிள் வாங்க வீட்டுக்கு போலாம்' சுந்தர் அவரைத் தூக்க முயன்று சைகையால் தன்யாவையும் பிடிக்க சொன்னான். கைத்தாங்கலாக இருவரும் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்…. சுந்தர் அவரின் சைக்கிளை கொண்டு வந்து கொடுத்தான்தன்யாவிற்கு அவமானமாக இருந்தது.

ரொம்ப தேங்க்ஸ் சுந்தர்’‘இட்ஸ் ஓகே தன்யா அப்பாவை பாத்துக்கோஎன்று சொல்லிவிட்டு சுந்தர் சென்று விட்டான்.,  அப்பாவின் மேல் கோபம் கோபமாக வந்தது தன்யாவிற்கு.... அவளின் பிறந்தநாள் அன்றும் இது போல தான் நடந்ததுமாலை ஆறு மணிக்கு அப்பா வந்து விடமாட்டார் என்ற நம்பிக்கையில்  வீட்டிற்கு திடீரென பரிசுகளோடு வந்த தோழிகளுடன் நிம்மதியாக பேசிக்கொண்டு இருந்தாள்ஆனால் அவளுக்கு வந்த சோதனை சண்முகம் அன்று சீக்கிரமே வந்து விட்டான்வழக்கம் போல் குடித்து விட்டு வந்திருந்தான்.. அவன் தள்ளாடி தள்ளாடி அவளின் தோழிகளிடம் உளறியதை நினைத்தாலே  தன்யாவின் கண்களில் கண்ணீர் வந்துவிடும்.

தன் தலையெழுத்தை எண்ணி கொண்டே தூங்கிப் போனாள் தன்யா.. தன்யாவின் அப்பா சண்முகம் தினமும் குடித்து விட்டு தான் வீட்டுக்கு வருவார்.... தந்தையின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி போனவள் தன்யா…. தன்னுடைய நண்பர்களின் அப்பாவைப் பார்த்து தனக்கும் ஒரு நல்ல அப்பா அமைந்து இருக்கக் கூடாதா என்று ஏங்கிப் போயிருக்கிறாள்சண்முகம் மிகவும் கோவக்காரன்.. குடித்து விட்டு வரும் சண்முகம்  மிகவும் அன்பாக பேசுவான்ஆனால் குடி போதையில் உளறும் அந்தப் பேச்சு தன்யாவிற்கு பிடிக்காது …. சண்முகத்தின் நடவடிக்கையால் தன்யா மிகுந்த மனவேதனையை அடைந்து இருக்கிறாள்.. அப்பாவிற்கும் மகளுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டுதான் போனதுஅவனின் அன்பிற்காக தன்யா ஏங்கி போனாள் என்பது சண்முகத்துக்கு தெரியாமலே போனதுகால ஓட்டத்தில் தன்யாவிற்கு திருமணம் ஆனதுதன்யாவின் கணவன் கார்த்திக் மிகவும் நல்லவன்அவர்களுக்கு தேவதையாக நித்யா பிறந்தாள்…..எப்படி எல்லாம் தன் அப்பா இருக்க வேண்டுமென்று தன்யா நினைத்து இருந்தாளோ அப்படி கார்த்திக் இருந்தான்கார்த்திக், நித்யா இருவரும் பேசுவதையும் விளையாடிக் கொள்வதையும் பார்த்து பார்த்து ஆனந்தம் கொள்வாள் தன்யா…. அப்போதெல்லாம் அவளை அறியாமலேயே கண்களில் கண்ணீர் துளிர்த்து விடும்பலமுறை கார்த்திக் அதை கவனித்திருக்கிறான்அவள் எதையும் வெளிப்படையாகப் பேசுபவள் அல்ல என்று அவனுக்குத் தெரியும்நேரடியாகக் கேட்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டான்அரசல்புரசலாக அவளின் உறவினரின் பேச்சின் மூலம் அவள் அப்பாவின் அன்பிற்காக ஏங்கி போனவள் என்பதை புரிந்து கொண்டான்அவளின் விருப்பங்களை ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டான்ஒரு நாள் மாலை கார்த்திக் மிகப்பெரிய டிராயிங் ஸ்டாண்ட் போர்டும் ஓவியம் வரைய தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்தான்….‘கார்த்திக், நித்யாவிற்கு ரெண்டு வயசு தான் ஆகுதுஅவளுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய டிராயிங் போர்டு'‘அது அவளுக்கு இல்ல என்னோட இனியவளுக்கு …. உனக்கு ட்ராயிங் பண்ண பிடிக்கும் தானே' அதைக்கேட்டதும் தன்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது….எத்தனை நாள் ஆசைப்பட்டு இருப்பாள் இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் அவளின் அப்பா வாங்கி தர வேண்டும் என்று…. கொடுமை என்னவென்றால் அவளுக்கு டிராயிங் வரைய பிடிக்கும் என்பதே அவருக்கு தெரியாது….‘தன்யா அழாத.. வாழ்க்கையில எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறது இல்லைஎன்னால உன்னுடைய ஏக்கங்கள் எல்லாத்தையும் சரி செய்ய முடியாதுஆனா உன்னோட ஆசைக்கு என்னோட சப்போர்ட் எப்பவும்  இருக்கும்' என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டான் கார்த்திக்இவனுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டாள் தன்யா….ஒருவர் மீது உண்மையான அன்பு இருந்தால் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல…. முதன்முறையாக அப்பாவிற்குரிய அன்பையும் அரவணைப்பையும் தன் கணவனின் மூலம் பெற்றாள் தன்யா.

# நல்ல அப்பா கிடைப்பதும் கடவுள் கொடுக்கும் வரம்.

சுகமதி

 

 

23.K2K 00099.

"அப்பா கையை புடிச்சி நடந்தா இந்த தெரு கூட அழகா மாறும் '

நாட்டுப்புற பாடல் பாடகியின் குரல்  இனிமை வார்த்தைகளின் வளமையை ரசித்தவாறு அம்மா கை மணத்தில்  செய்த பஜ்ஜியையும் ருசித்து கொண்டிருந்தாள் பாவை.

"அக்கா ஹிட்லர் பராக்  பி அலெர்ட் " என்று கத்தியவாறு

உள்ளெ வந்த சீனு  பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் தான் வீசி எறிந்த பையை எடுத்துக்கொண்டு சோபாவில் அக்கா பக்கத்தில் அமர்ந்தான்.  கை தன்னிச்சையாக அக்கா தட்டில் இருந்த பஜ்ஜியை திருடியது

சாதாரண நேரமாய் இருந்தால் இதற்கு பழி சண்டை போட்டு மல்லுக்கு நின்று அம்மா வந்து சமாதானம் செய்ய வேண்டும்.  இப்போது அவள்  பாவை பி. எல்.  தம்பி பிளஸ் டூ.  எனவே கோபத்தை காட்டாமல் இன்னும் ஓரு பஜ்ஜியை அவன் வாயில் தினித்தாள். அதோடு அவன் எச்சரிக்கை நினைவுக்கு வர தட்டோடு பரபரக்க எழுந்து மொபைல் ஆப் பண்ணினாள். சமையலறை  பக்கம் நடையை காட்டினாள். சீனு ஹிட்லர் என எச்சரிக்கை செயதது  இதுகள் இரண்டின் அப்பா நாயகம் .  அது என்னோவோ நாயகம் என்றாலே கண்டிப்பு  கறார்.  குழந்தையாக இருந்தபோதே மற்ற அப்பாக்களை போல தூக்கி கொஞ்ச மாட்டார். அவருக்கு  இரண்டு பிள்ளைகள்.  நாயகம் ஓரு இன்ஸ்பெக்டர்.  கடமையில் எவ்வளவு கடுமையோ அவ்வளவும் வீட்டில் உண்டு.  ஓரு பைசா லஞ்சம் வாங்காத நேர்மை.  பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருந்தாலும் அவர்களுக்கு ஓரு குறையும் வைக்க மாட்டார்.  என்ன வாயை திறந்தால் அதட்டல்தான்   அன்பை வெளி காட்ட  மாட்டார்.  அன்பாய் இருக்கார் என்று கூட  தெரியாத அளவில் நடந்து கொள்வார்.  அவர் வீட்டில் இருந்தால் மிலிட்டரி ரெஜிம் மாதிரி பிள்ளைகள் இருக்கும் இடம் தெரியாது.  ஓரு தவறை கூட அனுமதிக்க மாட்டார் தவறுக்கு தண்டனை உண்டு.  ஆனால் அடி அல்ல மூலையில்  உட்கார வைப்பது,  தனிமை படுத்துவது, தோப்புக்கரணம்.   இம்போசிஷன் எழுத வைப்பது இப்படி.  அம்மா சாது. அதோடு கணவன் நல்ல குணம் தெரியும். அவர் செய்வதும் குழ்ந்தைகள் நல்லதுக்குதான் என்று ஒன்றும் பேசாமல் அவர் போனபின் சமாதான படுத்துவாள். அதற்குத்தான் சிறுசு வைத்த பெயர் ஹிட்லர்.  அவருக்கும் அது தெரியும்.  இருந்தாலும் கண்டு கொள்வதில்லை.  பாவை இப்போது லா பட்டதாரி.  அவளுக்கு பிடித்த படிப்பு நல்ல மார்க்  நாயகம் அவள் இஷ்டப்படி சென்னை கல்லூரியில் படிக்க சேர்த்து விட்டதுடன் அவளுக்காக அவள் வீட்டில் இருந்து படிக்க வேண்டும் என்பதற்காக அவளை கல்லூரியில் சேர்த்த கையோடு தானும் மாறுதல் வாங்கிக்கொண்டு சென்னை வந்தாச்சு.  எல்லோரும் வந்து பாவையும் படித்து முடிந்து அவள் விருப்பப்படி ஓரு பெரிய வக்கீலிடம் ஜூனியர் ஆகவும் சேர்ந்தாகிவிட்டது.  தம்பி நல்ல படிப்பாளி  பிளஸ் டூ. அவனுக்கும் நாயகம் ஓரு குறையும் வைத்ததில்லை. என்ன அப்பா என்று நெருங்கி பழகி கிட்ட உட்கார்ந்து மடியில் புரண்டதில்லை. ஓரு பயம் கலந்த தயக்கம்தான் இருவருக்கும். உள்ளே வந்த நாயகம் சீனு படிப்பதை ஓர கண்ணால் பார்த்துவிட்டு டிரஸ் மாற்றி பிரெஷ் ஆகி வெளியே வர வீடு கப் சிப்.  " பாவை வந்தாச்சா " "அப்பவே வந்துட்டாங்க.  கூப்பிடவா "  அம்மா குரல் கேட்டு பாவை வெளியே வந்து அம்மா பக்கத்தில் நின்றாள்.

"சீனு நீ மாடியில் போய் படி " என்று கணவன் குணம் தெரிந்து பையனை மாடிக்கு அனுப்பினாள் அம்மா. வீடு ஓரு கோர்ட் மாதிரி அசாதாரண சூழ்நிலை. அம்மாவுக்கு புளி கரைத்தது. ஆனால் பாவை என்னோவோ

தைரியமாக இருந்தாள். " சலீம் யாரு?  " அப்பா நேரடியாக பாவையிடம் கேள்வி கேட்டார் நாயகம் அம்மாவுக்கு தூக்கி வாரி போட்டது.  இந்த பொண்ணு என்ன பண்ணி வச்சிருக்கு என்று ஒரே தவிப்பு.  "அவர் எனக்கு சீனியர் நம்ம வக்கீல் அங்கிள்கிட்டயேதான் அவரும் இருக்கார்.  அவருக்கு நெஸ்ட் இவர்தான் ' என்று தலை குனிந்தவாறு பிசிறில்லாமல் சொன்னாள் பாவை.

"மண்ணடியில் ஜவுளிக்கடை வைத்துள்ள மரைக்காயர் பேரன்தானே.  அப்பா மிலிட்டரி ஆஃபீஸ்ர்.  அம்மா டாக்டர்.அந்த குடும்பம்தானே.  நாளை நீ கோர்ட்க்கு போக வேண்டாம் நான் உன் சீனியரிடம் பேசி விட்டேன். மரைக்காயர் குடும்பம் நாளை இங்கு வருகின்றார்கள் உன் சீனியர் கூட வரார்.  எல்லாம் பொருந்தி வந்தால் நாளை பேசி முடிந்து விடலாம் " என்று தன் இயல்புக்கு மாறாக சற்று சிரித்தவாறு சொன்னார் ஹிட்லர்.  பாவைக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.  அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

சிரித்தவாறு அம்மாவை பார்த்து " நீ மாமியார் ஆக போகிறாய்.  மாப்பிள்ளை யார் தெரியுமா வக்கீல் சலீம்.  அந்த பையனுக்கு லா காலேஜில் படிக்கும்போதே உன் பெண் குணத்தை பார்த்து ரொம்ப பிடிக்குமாம்.  ஆனால் நம் பெண் ஏறெடுத்தும் பார்க்கவில்லை  இப்போது ஒரே இடத்தில் வேலை செய்யவும் அவன் தன் விருப்பம் சொல்ல,  இவள் நீங்கள் வேறு மதம்.  என் அப்பா சம்மதம் தர மாட்டார்.  அப்பாவை மீறி நான் எதுவும் செய்ய  மாட்டேன்,  என்று சொன்னாளாம்.  உடனே அந்த பையன் தன் சீனியர் மரைக்காயர் உடன்என் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார். வெளியில் போய் பேசியபோது அவன் கண்ணியமாக தன் விருப்பத்தை சொன்னாரு. அந்த பிள்ளையின் தாத்தாவும்

மனிதர்களை விட நம் பிள்ளைகளின் சந்தோசத்தை விட மதம் எனக்கு முக்கியமில்லை உங்க பெண் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.  எங்க வீட்டுக்கு மருமகளாக வந்தால் போதும். அந்த பெண்  அப்பா விருப்பம்தான் என் விருப்பம் என்று சொன்னதில் அவள் பண்பும் உங்களது  வளர்ப்பும் தெரிகிறது. என்று ஒரே புகழ்.  வக்கீல் ஐயாவும் தனியே என்னை கூப்பிட்டு தங்கமான பெண் தங்கமான பையன்  உங்கள் பொண்ணுக்கும் இவன் மேல் ஒரு பற்று இருப்பது எனக்கு தெரியும் இருந்தாலும் உங்களை மீறி ஒன்றும் செய்ய மாட்டாள்.  உங்கள் மீது அவ்வளவு மரியாதை. அந்த பொண்ணுக்கு நல்லது செய்ய வேண்டாமா எதை பற்றியும் யோசிக்க வேண்டாம். என்று பலமான சிபாரிசு செய்ய நானும் நாளை வாருங்கள் என் பெண் மனைவியிடம் கலந்து பேசி எல்லோருக்கும் திருப்தி என்றால் ஓரு நிச்சயம் மாதிரி பண்ணி கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன். " என்று கூறியவாறு தன் சட்டை பையில் கையை வீட்டு ஓரு புகைப்படத்தை எடுத்து அம்மாவிடம் நீட்டினார். "இதோ பார் உன் மருமகன் ரொம்ப உஷார்.  அத்தை என்னை பார்த்ததில்லை மாமா  இதை கொண்டு காட்டுங்கள்  என்று புகைப்படம் கொடுத்தார்." அம்மா கையில் வாங்கி பார்க்க பையன் நல்ல கம்பிரம் பாவைக்கு அவ்வளவு பொருத்தம். பாவைக்கு நடப்பது கனவா நனவா என்று புரிய வில்லை

தன் ஹிட்லர் அப்பாவா இவ்வளவு சீக்கிரமா என் மனசு தெரிந்து,  "அப்பா " என்று கண்ணில் நீர் நிறைய அப்பா காலில் விழுந்தார்  அப்பாவும் முதல் முறையாக தன் பெண்ணை கை பிடித்து எழுப்பி சமாதானம் செய்தார்.  அம்மாவும் ஆனந்த  கண்ணீருடன் அந்த காட்சியை தன் கண்ணில் நிரப்பினாள். "என்ன அழகூடாது.  நான் கண்டிப்பேன் நிங்கள் நல்லா இருக்கணும் என்றுதான். ஆனால் உங்கள் விருப்பத்துக்கு குறுக்க நிற்க மாட்டேன்.  நாளை அவர்கள் வரும்போது பிரெஷ் ஆக இருக்க வேண்டாமா. போய் சாப்பிட்டு வீட்டு தூங்கு.  நம் வீட்டு பெரிய மனுஷன் நாளைக்கு பள்ளி போக வேண்டாம் அவனும் அவன் மாமாவை பார்க்கட்டும்.  கமலம் மச மசவென்று நிற்காதே.  சமையல்காரர் வேலைக்கு ஆள் எல்லாம் வர சொல்லி இருக்கேன்.  நம் வீட்டுக்கு என்ன வேண்டும் லிஸ்ட் போடு. நாம் போய் வாங்கி வருவோம்.  இனிமே நிற்க நேரம் இல்லை " என்று தன் பாணியில் கட்டளை இட்டுக்கொன்டே போகும் அப்பாவை தன் கண் நிறைய பார்த்தாள் பாவை

சில அப்பாக்கள் பலா பழம் போல மேல் முள் இருந்தாலும் உள்ளுக்குள் கரும்பாய் இனிப்பார்கள்.

அம்மா அன்பு திறந்த புத்தகம்

அப்பாவோட அன்பு  மூடிய புத்தகம். படிக்க படிக்க அருமை புரியும்.

KK MADAM

 

 

 

 


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY