LGBTQ & மாற்றுத்திறன்

1.K2K - 00002  

LGBTQ (மாற்றுப் பாலினப் பால் ஈர்ப்பு மக்கள்) 

மக்களுக்கு இத்தலைப்பை பார்த்ததும் என்ன இது தலைப்பு? எதற்காக இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்திருக்கார்கள். இக்கதையை படிக்கலாமா? வேணாமா? என கூட யோசிக்க தோன்றும் ஏனென்றால் அதில் இருக்கும் உண்மையை யாரும் அறிவதில்லை. உண்மையிலேயே தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதற்கான அரியவாய்ப்பும் மற்றும் தெரிந்து கொண்டதை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமாகும்.

மதுவும், சாதுவும் இருவரும் சேர்ந்து "சர்வதேச LGBTQ மே 17 ஆம் நாள்" அன்று நடந்த உரையாடலின் நாடகத்தை இன்று காண்கின்றனர்      

சாது : என்னடி ஆளே மாறிட்ட போலயே?

மது: நீயும் தான் ஆளே மாறிட்ட..ஆமாம்! விஷயம் இல்லாமல் இந்த பக்கம் வரமாட்டியே நீ இன்னும் ஆராய்ச்சி  பண்றப்பழக்கத்தை விடலையா ?    

சாது : ஆமாம் கண்டுப்பிடிச்சிட்டியே இது ரொம்ப அவசியமானது. "LGBTQ" பற்றி தான் இன்று "சர்வதேச LGBTQ மே 17 ஆம் நாள்" மாற்று பாலின மக்களுக்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.          

மது: எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. கல்லூரியில் இரட்டைஅர்த்ததிலோ "LGBTQ" பற்றி பேசினாலே உனக்கு பிடிக்காது. நீயா "இதை பற்றி ஆராய்ச்சி செய்கிறாய் ??"

சாது: எனக்கு பிடிக்காது தான் ஏனென்றால் "அன்று,இது பற்றின தெளிவு,புரிதல் இல்லை. திருநங்கை மற்றும் மனவளர்ச்சி இல்லாத ஜீவன்கள் " பற்றி தெரியவந்திச்சோ அப்போவே "LGBTQ" பற்றி  தெரிந்துக்கொண்டேன். என்னவென்றால் "நம் நாட்டில் மக்கள் LGBTQ சமூகத்தினரைப் பற்றி என்ன நினைக்கிறார்" என்று பார்த்தால் "அவர்களின் உறவு இயற்கைக்கு முரணானது; அவ்வுறவுகள்  காமத்தை மட்டுமே மையமாக கொண்டது; தடை செய்யப்பட வேண்டியது; அருவருக்கத்தக்கது" என்பது போன்று பல தவறான அபிப்ராயங்கள் உள்ளது."இயற்கைச் சுழற்சிக்கு ஆண்-பெண் சார்ந்த உறவு மட்டுமே சரியானது என்றும், இதர பாலின உறவுகள் புறம்பானது" என மக்களின் மனதில் பதித்து விட்டனர். மாற்றுப்பாலின உறவுகளிலும் காதல், அன்பு,பாசம், பிரிவு,கவலை, ஏக்கம் என்று அனைத்து விதமான உணர்வுகளும் உள்ளது என்பனவற்றை புரியாமல் அவர்கள் காதுப்படவே அவதூறாக பேசி வருகின்றனர். உண்மையென்னவென்றால் சில ஆண்-பெண் சார்ந்த உறவுகளில்  மட்டும் தான் தூய்மையும் புனிதமும் அடங்கி இருக்கிறதென்றால் ஏன் இவர்களின் உறவுகளில் சந்தேகப்பார்வையால் கணவன்/மனைவி கொலை,கள்ளத்தனமான உறவு என அவர்களின் வாழ்க்கையில் விவாகரத்து பெற்று விரிசல்கள் ஏற்படுத்துகின்றன..?? சிந்தியுங்கள்..!!     

மது: அப்போ மாற்றுப்பாலின உறவுகள் தான் சரின்னு சொல்லவரியா??

சாது: அப்படி இல்லை..!  மாற்றுப் பாலினப் பால் ஈர்ப்பு மக்களுக்கு அது ஒரு நோய் என்ற புரளியும் பரப்பியிருக்கின்றனர். அவர்களுக்கு   எத்தனையோ இயந்திரங்கள் குறித்துப் பேசுகிறோம்.ஆனால் ஒரு மனிதனின் அடிப்படை உணர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும் LGBTQ க்கான காரணம் என்னவென்று பார்த்தால் அது ஒரு ஈர்ப்பும்,ஓர் மனநிலையும்தான்,அன்பிற்காக ஏங்கி தவிப்பவர்களும், குழந்தையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களும், தனிமையில் விடப்பட்ட குழந்தைகளும் தான். நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவர்களை கேலி செய்வதோ, கிண்டலடிப்பதோ தவறு. மாற்றங்களை ஏற்க வேண்டும்.!!

மது: அதாவது நீ சொல்லவரும் கருத்து "LGBT பாவமோ, குற்றமோ இல்லை.அன்பு இயற்கைக்கு எதிரானதோ முரணாததோ  இல்லை. ஒரு குழந்தையின் சிசுவை அழிக்கிறது, பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு போன்றவை தான் இயற்கைக்கு எதிரானதும் முரணானதும் தான்.அவர்கள் நம்மை சமமாக நினைக்கும்போது அவர்களையும் சமமாக நடத்த வேண்டும். அப்போதுதான் நாம் நாகரிகம் அடைந்த சமூகம்.அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை மதியுங்கள்.!!  .

 

நெறி: அப்படி இருக்கும் மனிதர்களை வெறுத்து ஒதுக்கவேண்டாம், அவர்களை தற்கொலைக்கு தூண்டவேணாம்! தப்பாக நினைக்கவேண்டாம்..! அருவருப்பாக பார்க்க வேண்டாம்..!  மேலும் குழந்தைகளுக்கு குட் டச்/பேட் டச் சொல்லித்தாருங்கள் பெண் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல..ஆண் குழந்தைகளுக்கும் தான் இதில் தாமதம் வேண்டாம்..!!

இத்தலைப்பைத் தயங்காமல் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு கொடுத்த கொரோனா கதைக் குழுவிற்கு நெஞ்சார்ந்த  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ..!!

லக்ஷ்மி பிரியா

 

 

2.K2K-00004

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்:

பிரசவ வார்டின் காரிடோரில் அங்கும், இங்கும் பதட்டமாக அலைந்து கொண்டிருந்தான் தினேஷ். தினேஷ்க்கும், பார்வதிக்கும் திருமணமாகி ஐந்தாண்டு கடந்திருந்தது, அவர்களின் நீண்ட நாட்களின் கனவுகள், ஏக்கங்களின் காத்திருந்த அந்த நேரம் அது. இத்தனையும் அவன் சிந்தனையில் அசைப்போட்டு கொண்டே நடந்து கொண்டிருந்தான் தினேஷ். அப்போது செவிலியர் தினேஷிடம் வந்து வாழ்த்துகள் சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என்று சொன்னார், தாயும் சேயும் நலம் என்று சொல்லிவிட்டு சென்றார். மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் தினேஷ், பின்பு மகிழ்வுடன் அவர்கள் நாட்கள் நகர்ந்தன. அவர்கள் ஆசை புதல்வனுக்கு ரஞ்சித் என்று பெயரும் சூட்டினார்கள்.

ரஞ்சித்தும் மற்ற சிறுவர்கள் போல பள்ளியில் சேர்ந்து தன் வாழ்க்கையை தொடங்கினான். படிப்பில் படு கெட்டிகாரனாகவும், வீட்டில் படு சுட்டியாகவும் வளர்ந்தான் அவன். வாலிப வயதை எட்டினான் ரஞ்சித் மீசையுடன் ஆசைகளும் அறும்பும் வயது அது. மற்றவர்களுக்கு எதிர் பாலினத்தவர் மீது தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதும், அறும்பு மீசை காதல்களும் துளிர்விட்டு வானில் இறக்கை கட்டி பறக்கின்றனர். ரஞ்சித்துக்கோ அப்படி எந்த உணர்வும் தோன்றவில்லை அவனும் மற்றவர்கள் போல தனக்கும் அந்த உணர்வுகள் துளிர்விடும் தாமும் தன்னுடைய துணையை கண்டு காதல் சிறகடித்து பறக்க காத்திருந்தான். அவன் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் நிகழ தொடங்கியது.

ஆனால் மற்றவருக்கு நேர்ந்தது போன்ற மாற்றம் அல்ல அது. தன் உடன் நெருங்கி பழகும் சக ஆடவர்கள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு வர தொடங்கியிருந்தது. அவனுக்கே தெரியாமல் அவர்களின் அழகை ரசிக்க தொடங்கினான். நாட்கள் செல்ல செல்ல அவன் மனதின் எண்ணம் அவனுக்கு புரிய ஆரம்பித்தது. அவனுக்கு அதை வெளிப்படுத்துவதா வேண்டாமா என்று ஒரு தயக்கம், குழப்பம் சூழ்ந்தது. இணையத்தின் வழி அவன் தன் கேள்விகளுக்கு விடைகான முயன்றான். தெளிவுகளும், புரிதலும் இல்லாமல் அவன் பள்ளி படிப்பு முடிந்தது.

கல்லூரி வாழ்க்கை அவன் வீட்டை விட்டு தூரம் சென்று பயில நேர்ந்தது. அவன் அங்கு தான் தன்னை முழுவதுமாக உணர்ந்து கொண்டான் மகேஷ் உடனான நட்பிற்கு பிறகு. மகேஷின் குணமும், அவன் மற்றவர்களுடன் பழகும் விதமும் ரஞ்சித்தை ஈர்த்தது. அது அவன் மேல் அளவு கடந்த அன்பாக மாறியது. ஒரு நாள் அவன் மனதில் தைரியத்தை வரவைத்துக் கொண்டு மகேஷிடம் தன்னுடைய நிலையையும், அவன் மேல் தான் வைத்திருக்கும் எண்ணத்தையும் வெளிப்படுத்தினான். மகேஷ் முன்பே ரஞ்சித் அவன் மேல் வைத்திருந்த அன்பினால் ஆச்சர்யத்தில் மூழ்கியிருந்தான், அவன் வாழ் நாளில் அவ்வளவு அக்கரையுடன் அவனிடம் யாரும் நடந்து கொண்டது இல்லை. முதலில் சற்று தயங்கிய மகேஷ் பின்பு ரஞ்சித்தின் அன்பை முழுமையாக உணர்ந்து ஏற்றுக்கொண்டான்.

ரஞ்சித், மகேஷ் இருவரின் மிதமுள்ள கல்லூரி நாட்களும் மிகவும் ஆனந்தமாகவும், மகிழ்வாகவும் கடந்தது. கல்லூரி படிப்பு முடிந்து அவர்கள் இருவரும் நல்ல வேலையில் சேர்ந்தார்கள். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல அவர்கள் முடிவு செய்தார்கள். இருவரும் அவர்களின் விருப்பத்தை வீட்டில் தெரிவிப்பது என்று முடிவு செய்தார்கள். ரஞ்சித் அவனின் வீட்டில் முதலில் அவன் அப்பாவிடம் சொல்வது என்று முடிவெடுத்து பேச தொடங்கினான். இது பற்றி அறிந்ததும் ரஞ்சித்தின் அப்பா தினேஷ் மிகுந்த அதிர்ச்சியுற்றார், அவரால் அந்த விடயத்தை ஒரு துளி கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தினேஷ் நல்ல படித்தவர், அரசு உத்யோகத்தில் இருந்தார், அவராலே அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியவில்லை. ரஞ்சித் எவ்வளவோ முயன்றும் அவனால் தினேஷின் எண்ணத்தை மாற்ற முடியவில்லை, புதிதாக நடந்த 377 சட்ட நீக்கம் குறித்தும் அவன் விவரித்தான். ஒரு பயனும் இல்லை அவன் அப்பா ஊரே நம்ம பார்த்து சிரிக்கும், நான் எப்படி வெளிய தலை காட்டுவது என்று கூறி, கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தார், நீ நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் நானும், உன் அம்மாவும் சாவதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லி நிறுத்தினார் ரஞ்சித் அதிர்ந்து போனான். மகேஷின் வீட்டிலும் அதே நிலை தான் நடந்தது.

இருவரும் வேறு வழியின்றி பிரிவது என்று அவர்கள் மனதிற்கு விரோதமாக அந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். காதல் திருமணத்திற்கே வீட்டின் சம்மதம் அரிதிலும் அரிதான நிகழ்வாக தான் நடக்கின்றது, அப்படி பட்ட நம் சமுகத்தில் இப்படி ஒரு நிகழ்வு என்பது நிச்சயம் சாத்தியம் இல்லாத ஒன்றாக தான் இருக்கின்றது. பின்பு இருவர் வீட்டிலும் அவர்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு ஆனது. தன்னுடைய கனவுகளும், உள் மனதின் உணர்வுகளும் புதைத்துவிட்டு, உணர்வுக்கு விரோதமான ஒரு உறவை ஏற்க அவர்கள் நிர்பந்திக்க பட்டார்கள். அவர்கள், குடும்பத்திற்க்காகவும், சமுகத்திற்க்காகவும் இதை அவர்கள் ஏற்றார்கள். நடைபிணங்களாக, உணர்வில்லாத ஜடங்களாக அவர்கள் தங்கள் வாழ்கையை வாழ்ந்து மறைந்தார்கள்.

"உடல்கள் இணைவது மட்டும் திருமணம் அல்ல, மனங்கள் இரண்டும் ஒன்றாக இணைவதே உண்மையான திருமணம்". "உணர்வுகளின் எண்ணங்கள் இறைவனால் படைக்கப்பட்டு இயக்கப்படுபவை, அதில் இயற்கைக்கு விரோதம், சாதகம் என்று எதுவும் இல்லை". "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ், அன்பு அனைத்தையும் கடந்தது".. இதுபற்றிய சரியான புரிதல் நமக்கும், நம் சமூகத்திற்கும் மிக அவசியம். அதுவே எதிர்காலத்தில் மற்றவரின் உணர்வுகள் மடியாமல் இருக்க உதவும்...

மனிதரை மட்டும் அல்ல அவர் உணர்வுகளையும் மதிப்போம்.

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

3.K2K – 00008

அரவாணி

இரவு ஒன்பது மணி. செழியன் நுங்கம்பாக்கத்தில் பணி முடித்து கோயம்பேட்டிலுள்ள தன் வீட்டுக்கு காரில்சென்றுக் கொண்டிருந்தான். நெல்சன் மாணிக்கம் சாலையில் வண்டி வரும்போது, சாலையின் ஓரத்தில் ஒருபெண் நின்றுக் கொண்டு கைகாட்டி வண்டியை நிறுத்த முயன்றாள்.  செழியன், அவள் நிற்பதை கவனித்தும் நிற்காமல் வண்டியை முன்னோக்கி ஓட்டிக் கொண்டு வீட்டுக்குவந்துவிட்டான். இது தினமும் நடப்பது தான் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை ஆறு மணி. தினமுரசுவில் மூன்றாம் பக்கத்தை புரட்டிக் கொண்டிருக்கும்போது தான், செழியன்அதை கவனித்தான். “நெல்சன் மாணிக்கம் சாலையில் நேற்றிரவு, முல்லை என்ற அரவாணி உயிருக்குஊசலாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ரோந்துக்கு சென்றுகொண்டிருந்த காவலர்கள், 108 ஆம்புலன்ஸிற்கு போன் செய்து, சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவரின்உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறை வழக்குப் பதிவுசெய்துவிசாரித்து வருகின்றனர்”. அருகிலேயே அந்த அரவாணியின் புகைப்படம் இருந்தது. அந்த நீளப் பூப்போட்டவெள்ளைச் சேலையைப் பார்த்தவுடன், செழியனுக்கு மனத்தில் நெருடியது.

தினமும் அந்த இடத்தில் பல பெண்கள் தனியாகவோ, குழுவாகவோ நின்றிருப்பதை செழியன்கவனித்திருக்கிறான். அதுபோல் தான் இதுவும் என்று வீட்டிற்கு வந்துவிட்டான். ஒருவேளை காரைநிறுத்தியிருந்தால், அந்த பெண் தப்பித்திருப்பாளோ? என்று எண்ணியவாறே தன் காலைக் கடன்களை முடித்து, குளித்து ஊரிலிருக்கும் மனைவி மற்றும் தாயிடம் அலைபேசியில் பேசிவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இவன் ஊரைச் சேர்ந்த குமரன் என்பவன் பணியாற்றி வருவது நினைவுக்குவந்தது. போகும் வழியில் அவனைப் பார்த்துவிட்டு செல்ல மனதில் நினைத்துக் கொண்டான் செழியன்.

காரை வீட்டிலிருந்து வெளியிலெடுத்து தெருமுனை திரும்பும்போது ஒரு காவல் வாகனம் வந்து செழியனின்கார்முன் நின்றது. அதிலிருந்த உதவி ஆய்வாளர், இவனின் காரை நோக்கிவந்து ஜன்னல் கதவை தட்டி கீழேஇறக்க சொல்லி சைகை காட்டினார். செழியன் கதவை திறந்து வெளியே வந்துசொல்லுங்க சார்என்றான்.“நேற்று எத்தனை மணிக்கு நீங்க இந்த கார்ல வந்தீங்கஎன்றார் உதவி ஆய்வாளர் கண்ணன். “நைட்டு ஒன்பது மணிக்கு சார்”“நெல்சன் மாணிக்கம் சாலை வழியா தானே வந்தீங்க

ஆமாம். சார். என்ன விஷயம்” “உங்க பேரு என்ன சார்?”

செழியன்”“நேத்து நைட்டு, ஒரு அரவாணி உங்க காருக்கு முன்னாடி நின்னு கைநீட்டுனாங்களா

ஆமாம் சார். அவங்க அரவாணின்னு தெரியாது. இன்னைக்கு காலையில தான் பேப்பர்ல படிச்சேன். ஒருஅரவாணி அந்த இடத்தில இறந்துட்டாங்கன்னு. என்ன ஆச்சு சார்?” கேள்வியுடன் முடித்தான் செழியன்.“நேத்து நைட்டு உங்க காருக்கு முன்னாடி கை நீட்டும்போது, அவங்க கூட யாராவது இருந்தாங்களா? நீங்கஅங்க வேற யாரையாவது பார்த்திங்களா?” என்று கேள்வியை அடுக்கினார் கண்ணன். “இல்ல சார். அவங்க கை நீட்டும்போது நான் எதுவும் கவனிக்கலை. ஆபீஸ் டென்சன்ல ஏதோ நியாபகத்துலகாரை நிறுத்தாம வந்துட்டேன்.“சரிங்க மிஸ்டர் செழியன். சி.சி.டி.வி காமிரா பாத்துட்டு தான் உங்ககிட்ட ஒரு சின்ன என்கொயரி. வேறஒண்ணுமில்ல

அவங்களுக்கு என்ன சார் ஆச்சு” “உங்க கார் அவங்கள கடந்து போய், அஞ்சு செகண்ட்ல அவங்க இதயத்துக்கு நேரா ஒரு கத்தி பறந்து வந்துசொருகிருக்கு. அந்த இடத்துலேயே அவங்க இறந்துட்டாங்க. சரிங்க மிஸ்டர் செழியன். வேற ஏதாவது விஷயம்தேவைப்பட்டதுன்னா உங்களை கூப்பிடறேன்என்று சொல்லிவிட்டு அவர் தன் வாகனத்தில் ஏறி புறப்பட்டார். செழியன் அங்கையே சிறிது நேரம் நின்றுவிட்டு, தன் காரில் ஏறி நேராக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குசென்றான். அங்கு தன் நண்பன் குமாரை பற்றி விசாரித்து, அவனுக்காக வெளியில் காத்திருந்தான்.

என்னடா மாப்ள, இந்த பக்கம்என்று கூப்பிட்டபடியே குமரன் வெளியில் வந்து செழியனின் கையை பிடித்துகுலுக்கினான். “சும்மா தான் மச்சி. நேத்து நெல்சன் மாணிக்கம் ரோட்டுல ஒரு அரவாணி அடிப்பட்டு இருந்ததாக காலைலபேப்பர்ல பார்த்தேன். இப்போ கிளம்பி வரும்போது, கண்ணன்னு ஒரு எஸ்.. வழியில காரை மடக்கி ஏதோஎன்கொயரின்னு, சில விசயங்கள் கேட்டுட்டு போனாரு. அதான் என்ன ஆச்சுன்னு உன்கிட்ட தனிப்பட்டமுறையில கேட்டுட்டு போலாம்னு வந்தேன்சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “அவ பேரு முல்லை. அரவாணி மாதிரி இருக்கமாட்டா. அழகா பொண்ணுமாதிரிதான் இருப்பா. ஆனா, என்ன பண்றது இந்த சமூகம் அவங்கள மாதிரி ஆளுங்களை கிட்ட சேத்துக்குறதுஇல்ல. அதனால, அரவாணிகள் இந்த சமூகத்தை தள்ளி வச்சிட்டு, அவங்க இஷ்டம் போல இருக்காங்க. இந்தமுல்லை அந்த மாதிரியில்லாம, சமூக சேவை செய்றவங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி, அவங்க ஒருபள்ளிக்கூடத்துல மரம்நடுவிழா நடத்திகிட்டு இருந்துருக்காங்க. அப்போ அந்த அரசுப் பள்ளியிலிருந்த பழையகட்டடத்தில ஏதோ சத்தம் வந்திருக்குன்னு போய் பார்த்துருக்காங்க. அங்க நிறைய சிறுமிகளை அடச்சி வச்சு, ஒரு கும்பல் இருந்திருக்குது

அப்புறம்

இவங்க உடனே போன்ல போலீஸுக்கு போன் பண்ணி சொல்லிட்டாங்க. அவங்க எல்லோரையும் கூண்டோடபுடிச்சுட்டு போயிட்டாங்க. அது ஏதோ வடநாட்டு கும்பல் போலயிருக்கு. அவனுங்கதான் ஏதாவதுபண்ணிருப்பாங்கன்னு சந்தேகமா இருக்கு.” “ஏன், இந்த மாதிரி கம்ப்ளைண்ட் பண்றவங்களுக்கு, பாதுகாப்பு ஏதாவது கொடுக்க கூடாதாடா” “அதான், ஆரம்பத்துலையே சொல்லிட்டேனே. நம்ம சமூகத்துல தான் இவங்களையெல்லாம் தள்ளிவச்சிருக்கானுங்களே... என்ன பண்றது” “சரிடா. ஆபீஸுக்கு நேரமாச்சு. அப்புறம் ஒரு நாள் மீட் பண்ணலாம்என்றபடியே தன் காருக்கருகில்சென்றுவிட்டான் செழியன். “சரி. பாக்கலாம்டாஎன்றபடி குமரனும் காவல் நிலையத்திற்குள் சென்றுவிட்டான்.

செழியனுக்கு அந்த விசயமே மனதைக் குடைந்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் காரை நிறுத்தியிருந்தால், ஒரு நல்ல மனதுள்ள அரவாணியை காப்பாற்றியிருக்கலாம். என்னுடைய ஒரு சிறு தவறான கணிப்பு, ஒருஉயிரையே இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட்டது என்று நினைத்துக் கொண்டே அலுவலகத்திற்குச் சென்றுதன் அலுவலைத் தொடர்ந்தான். நம்மில் பலரும், ஒரு அரவாணியைக் கண்டால் தூர விலகுகிறோம். அது இந்த சமூகம் நமக்கு நடத்தியபாடத்தினால் மட்டுமில்லை, நம் மனதில் நாம் பதித்துக் கொண்டதும் தான். அரவாணி என்பது நோயல்ல, அதுவும் ஒருவகையான பிறப்பு. மூளையில் ஏற்படும்ஜெனிபிலிக் மற்றும் ஆன்ட்ரோபிலிக்என்ற மாற்றமேஆணிலிருந்து பெண்ணாகவும், பெண்ணிலிருந்து ஆணாகவும் மாறுவதற்கான கூறுகள். அதுமட்டுமில்லாமல், குரோமோசோம்களின் குறைபாடுகள் காரணமாகவும் அரவாணிகள் உருவாகிறார்கள். ஆனால், இந்த சமூகம்அவர்களை ஒரு நோய்த் தொற்றில் இருப்பவர்களைப் போன்று நினைத்து, பார்த்தவுடன் முகம் சுளிப்பது, திட்டுவது போன்ற செயல்களால் மனமுடைந்து, அதில் பலர் தவறான பாதைகளில் செல்கின்றனர். அரசாங்கமும்இதுவரை அவர்களுக்கு எந்தவொரு சலுகைகளையும் சரிவர கொடுத்ததில்லை. சமீப காலங்களில் தான்இதைப்பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்பட்டு, படிப்பு, வேலை, சுயதொழில், சமூக சேவை என்று அவர்களும்முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இனியும், அரவாணிகளை குறை சொல்வதைவிட, இந்த சமூகத்தையும், சமூக சிந்தனையையும் மாற்றுவதே சிறந்தது. அவர்களையும் நம்மில் ஒருவராய் அரவணைத்து செல்வதே இந்தஅவலத்திற்கெல்லாம் தீர்வாகும். இரவு மீண்டும் பணிமுடித்து செழியன், நெல்சன் மாணிக்கம் சாலையை கடக்கும்போது, அவ்விடத்தில் ஒருவெறுமை படிந்திருப்பது போல மனதில் பட்டது.

பின்குறிப்பு: இந்த சிறுகதைமதுமிதா கோமதிநாயகம்என்கிற சமூக சேவகருக்கு சமர்ப்பணம். அவர் ஒருஅரவாணி. அவர் எனக்கு நண்பராக கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

அன்பரசு மகாதேவன்

() அகத்தியன்

பொழிச்சலூர், சென்னை

 

 

4.K2K - 00013  

 LGBTQ (பால் புதுமையினர்)

"யட்சிகளுக்கு மட்டுமே தெரியும் குப்பிகளில் அடைபடுவதன் வலி"!

காமேஷ்க்கு இவ்வரிகளைப் படிக்கும்போது, தன்னை போன்று வாழ்க்கையில் "புதுமையான வலிகளைக் கடந்தவர்தான் இதை எழுதியிருக்க வேண்டும் என நம்பினான்.

இன்று காமேஷ்க்கு வயது ஐம்பதாகும், முப்பது ஆண்டுகளுக்கு முன் கமலாவாகப்  பிறந்து காமேஷாக மாறி பயணித்துக் கொண்டிருக்கும். தன் வாழ்க்கையை அசைப் போடலானான். ஒரு சராசரி குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்து கமலாவாக வளர ஆரம்பித்தாள் பத்து வயதான பொழுது, முதன்முதலில் "பெண்" என்ற உணர்வை விட, தான் "ஆண்" என்ற எண்ணம் வர ஆரம்பித்தன. பெண் தோழிகளைத் தவிர்த்து விட்டு, ஆண் பிள்ளைகளுடன் பேசவும் விளையாடவும் ஆரம்பித்தாள். பதினாறு வயதை எட்டியும், பூப்படையாமல் இருக்கவே அவளது பெற்றோர் அவ்வூர் "கோடங்கியிடம்" அழைத்துச் சென்றனர். கமலாவின் ஜாதகத்தில் "தோஷமிருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜையில் தன்னுடன் தனியாக தியானம் செய்யவேண்டும் என்றுச் சொல்லவும் அவர்களும் சம்மதித்தனர். பார்ப்பதற்கு அழகாக இருந்ததால், கமலாவிடம் கோடங்கி தவறாக நடந்துக்கொண்டான். அன்றுதான் முழுமையாக தான்" பெண் என்ற உணர்வை விட்டு முழுமையாக விலகினால். பெற்றோரிடம்  எதுவும் கூறாமல் வீட்டை விட்டு சென்ற போது இளம்பெண்களைக் கடத்தும் கும்பலில் சிக்கி பம்பாயின் விபசாரப் பகுதியில் விற்கப்பட்டாள் சமூக ஆர்வலர் ஒருவரால் மீட்கப்பட்டு,அவருடைய இல்லத்திலேயே தங்கிவிட்டாள் அவளுடைய  உணர்ச்சிப் போராட்டங்களை புரிந்துக் கொண்ட அவர் அவளை  தன்  "தத்துப்பிள்ளையாக்கி" காமேஷ் என்று பெயர் சூட்டி கல்வியையும் அத்துடன் தன் திரண்ட சொத்துக்கு  "வாரிசாக" ஏற்றுக்கொண்டார் . காமேஷ் நன்குப்படித்து தன்னைப்போல இருப்பவர்களுக்கு உதவி செய்ய விரும்பினான் "பால் புதுமையினர்" என்றொரு அறக்கட்டளை நிறுவி, சிறுவயதில் தன்னைப் போன்றவர்களுக்கு கல்வியும் வேலையும் தந்து அவர்களை சமுதாயத்தில் ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டுச் சென்றான்.

இன்று காமலேஷை சமுதாயத்தின் பெரும் புள்ளியாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள் அனால் சில வேளைகளில் இயற்கையின் தவறால் தம்மைப்போல் இவ்வுலகில் வந்தவர்கள் அனைவரும் மண்ணுலகின் "மாதொரு பாகர்கள் தான் என்று நம்பிக்கையுடன் நம்மில் ஒருவராகத் திகழ்கின்றன.

நெறி: எதிலும் "புதுமையை" விரும்பும் நாம் அவர்களில் உணர்வுகளை மதித்து, நம்மில் ஒருவராக நினைத்து வாழ்வோமாக!!

நம்மிடம் அவர்கள் எதிர்பார்ப்பது;இரக்கத்தையோ கேலிப்பேச்சையோ அல்ல !! மனிதநேயத்தை மட்டுமே !!!

- RAMA GOVIDARAJAN (GRAPSS)

 

 

5.K2K-00017

அச்சாணி

சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரம். அங்கு சிறு அழகிய கிராமத்தில் கடைக்குட்டியாய் பிறந்தவளே குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளையான மைதிலி. அண்ணன்கள் மூவரும் மைதிலியை சீராட்டி வளர்த்தாலும் காலம் அனைவருக்கும் சவால்களை தர மறப்பதில்லை. அண்ணன்களின் திருமணமும் வயதான பெற்றோரின் வறுமையும் மைதிலியை வருத்தினாலும் அழகிய பதுமையான அவள் சுயமரியாதையுடன் நெறிகொண்ட பெண்னாகவே வளர்ந்து வந்தாள். பத்தாம் வகுப்பை அடைந்தாலோ இல்லையோ கல்யாண யோகம் அவள் வீட்டின் கதவுகளை உரக்கத்தட்ட ஆரம்பித்து விட்டது.வறுமை தந்த பாடங்கள் வாழ்க்கை படகை ஓட்ட போதுமா என்ன? பேதைப்பெண் வறுமைக்கூண்டில் இருந்து தப்பித்து சந்தேகக்கூண்டில் மாட்டிக் கொண்டால்.கணவர் அவள் மீது மாறாத பிரியம் கொண்டவராக காணப்பட்டாலும் 15 வயதே ஆன பேதை யாதறிவால்!

அவளது வெளிறிய நிறமோ சிலை போன்ற தேகமோ அவள் மீது வீட்டாரின் சுட்டெரிக்கும் சந்தேகப் பார்வையை விழசெய்வதுவிட்டது.ஆறே மாதத்தில் கர்ப்பமும் தரித்துவிட்டாள். தாயை நினைத்து மனம் தவித்தது ஆனால் அவர்களின் வறுமை அவளை அடக்கியது. சந்தேகபார்வையையும் ஏச்சுப்பேச்சுகளையும் கேட்காதது போல் புறக்கணிக்க கற்றுக்கொண்டாள் அவ்வப்போது சுயமரியாதை தலை தூக்கினாலும் கணவரின் அன்பு உள்ளத்துக்காக அதுவும் புறக்கணிக்கப்பாக மாரியது. நாட்கள் மாதங்களாக மாறியது தாய்வீட்டாருக்கோ மரியாதை கிட்டவில்லை என அறிந்தவள் அங்கும் புறக்கணிப்பு ஆயுதம் ஏந்தினாள். நான்கு சுவர்களும் ஏச்சுப்பேச்சுகளை புறக்கணிப்பதுமே அவளது கர்ப்பக்காலமானது. 9மாதத்தில் வளைகாப்பு என்ற வீட்டாரின் கட்டளை தாய்வீட்டு கனவுகளை மீண்டும் உடைத்துவிட்டது. வளைகாப்பு முடிந்து தாய்வீடு சென்ற ஒரே வாரத்தில் பிரசவம் முருகனின் அழகுடன் பிறந்தது ஆண் குழந்தை-எழில் சரவணன் எனப் பெயரிட்டாள். குழந்தைக்கு ஒரு வருடம் ஆகிவிட்டது மிகவும் சுட்டியான தன் மகனை வீட்டாரும் சீராட்டி வளர்த்தனர்.

அதற்குள் மீண்டும் கர்ப்பம் தரித்துவிட்டால் அப்போதுதான் தன் பையன் ஒன்றரை வருடம் ஆகியும் பேச ஆரம்பிக்கவில்லை என்பதை சிறிது சிறிதாக உணர்ந்தாள். மருத்துவமனைகளே தஞ்சமாக நாட்கள் கழிந்தது கடைசியில் ஒரு நிபுணர் அந்தப் பேதையின் கறை படிந்த முகத்தை பார்த்து உண்மையை உரக்க கூறிவிட்டார். தன் பையன் காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி  என்பதை எந்த தாயால்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். பல லட்சங்கள் கரைந்தன. ஆனால், பையன் பேசவில்லை. இயலாமைக்கு வறுமைக்கும் மதம் ஏது? கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலை தஞ்சம் கிறிஸ்துவக்கோயில் வாசலில் தன் மகனை போட்டுவிட்டு உரக்க கதரினாள்.

 கர்ப்பிணியான மைதிலி தன்  மனவலியை தாங்க முடியாமல் கடவுளிடம் மன்றாடினாள் இந்த தெய்வம் தன் மகனை குணப்படுத்திவிடுமோ என்ற ஆசையில்? இரவு முழுவதும் அவளும் அவள் கணவனும் கண்ணீர் மொழிகளால் மனவலியை கொட்டினார்கள். விடிந்தது பொழுது மைதிலியின் மனதிலும் இலட்சிய வேட்கை பிறந்தது அன்றிலிருந்து தன் மகனே தன் வாழ்க்கை என பயணித்தாள். வரம் இருந்து அடுத்து இரண்டும் பெண் குழந்தைகளாக  ஈன்றெடுத்தாள். தன் மகனின் அன்பை இன்னொரு மகனுடன் பகிர்ந்துக்கொள்ள மனமின்றி. தன்னைப் போலவே தன் மகள்களையும் லட்சியப்பாதையில் குதிரைகளாக ஓட  கற்றுக்கொடுத்தாள். அன்பினால் மகனை கட்டி வீட்டுக்குள்ளே இயலாமையை வளர்க்காமல் அவனும் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என கனவு கண்டாள். சிறப்பு பள்ளிகள் பெரிதும் இல்லாத காலகட்டத்தில் மகனுக்காக அவளே ஆசிரியையாக மாறினால்! கற்றால்; கற்பித்தல்..! மகனை பல்வேறு துறைகளில் படைப்பாளனாக  வலம்வரவைத்தாள். இயலாமை  என்பது மனதுக்கும் மன உறுதிக்கும் சம்மதமற்றது என உரக்கக்கூறினாள். தன் மகனையே லட்சியமாக நினைத்து ஓடத்துவங்கிய மைத்திலியின் வாழ்க்கைபடகு இன்னும் பல்வேறு மகன்மகள்களுக்காக அயராது பயணிக்கிறது. ""மாற்றுத்திறனாளி என்பவர் மாபெரும் திறமையின் வாகனங்களை அதை ஓட்டிச் செல்லும் சாரதியே அவர்களின் வாழ்க்கை வெற்றிக்கு அச்சாணிகள்.""

இக்கதை அனைத்து அச்சாணிகளான தாய்மார்களும் தந்தைமார்களும் சமர்ப்பணம்.

-தியா

 

 

6.K2K-00034

 #அவன் ஒரு கேள்விக்குறி

உயிர் போகும் நேரத்தில் அவனை மீட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்குழு அருகில் இருந்த ஹோமில் கடமையென விட்டனர். அங்கு இருந்தவர்களுக்கு வேடிக்கை பொருளாகி போனான் அவன் வினோத். எந்த வித உணர்வையும் முகத்தில் காட்டாது படுத்திருந்தவன் தலையை கோதிய  கைகளை நிமிர்ந்து பார்த்தான். தோல்கள் சுருங்கிய கைகள் மட்டுமே தெரிய தலையை தூக்கி பார்த்தான். ஏய்யா மனசுல கண்டதை நினைச்சு விசனப்படுற என்றவரை தடுத்து பாட்டி நீங்க நினைக்கிற மாறி நான் பையன் இல்லை என்றதும் ஒரு நொடி முகபாவனையை மாற்றியவர் அவன் கவனிக்கும் முன் மீண்டும்  கனிவாக பார்த்தார். அவன் ஆம் அது அவனில்லை அவனாக மாறிய அவள் வினோதினி.

இங்க பாருப்பா நீ எப்படி இருந்தாலும் எம்பிள்ளை தான் சரியா நீ இப்போ தூங்கு என்றார். அவரிடம் எதிர்வாதம் செய்ய விரும்பாமல் கண்மூடி படுத்தவன் நினைவிற்கு அழையா விருந்தாளியாக வந்தது அவன் இறந்த காலம்.

இரண்டு நாட்களுக்கு முன், எங்க மானத்தை வாங்கவே எங்களுக்கு பிறந்து இருக்கியா என்று வயிற்றில் எட்டி மிதித்தான் வினோவின் அண்ணன்.  அண்ணா ப்ளீஸ் அண்ணா வலி தாங்க முடியலை என்று அவள் கதறியது எல்லாம் அவன் காதுக்கு எட்டவில்லை. அவளின் தாய் அழுது கரைய இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார் அவளின் தந்தை. டேய் கார்த்திக் அந்த கழுதை கழுத்தை திருகி தூக்கி கட்டிரு நான் பெத்த மவ செத்ததாவே போகட்டும். இப்படி நிதமும் மானம் போகிறதுக்கு ஒரே நாளுல தூக்கி போட்டு போகிறலாம் என்று அவர் வார்த்தை காதில் விழுந்த நேரம் நினைவை இழந்திருந்தாள் வினோ. அவளை பாராட்டி சீராட்டி வளர்த்த தன் தந்தையா என்ற கேள்வியுடன் கண்ணை  திறந்தவன் அருகே அமர்ந்திருந்தார் அந்த பாட்டி. மீண்டும் கண்ணை முடியவனின் மனதில் பல கேள்விகள். என் இந்த நிலை எனக்கு என்னுள் நடக்கும் மாற்றத்திற்கு நான் தவறா?  அல்ல அந்த கடவுளின் தவறா? பாவம் அவன் செய்ய பழி மட்டும் என்னிடத்திலா?. காலம் மாறினாலும் என்னை போன்று பெண்ணாய் பிறந்து ஆணாய் மாறும் மனிதனை மனிதனாக இந்த உலகம் ஏற்குமா? எறும்பு போல நசுக்க தானே பார்க்கிறது இந்த சமுதாயம். என்னை போல் வாழும் திருநர்களுக்கு விமோசனமே இல்லையா? ஆணாய் பிறந்து  திருநங்கையாக மாறியவர்களையும் சரி பெண்ணாய் பிறந்து திருநம்பியாக மாறியவர்களையும் சரி இந்த சமுதாயம் அருவருப்பான கண்ணோட்டத்தில் தான் காண்கிறது. இந்த பார்வை மாறும் தருணமே மனிதன் மனித தன்மையுடன் வாழ்கிறான் என்ற அர்த்தம். யாரும் தெரியாத இந்த பாட்டி என் மேல் காட்டிய பரிவு போல் என்னை போல் இருப்பவர்கள் மேல் வர வேண்டும் என்று வேண்டியவன் கண்ணை மூடினான், இந்த மிருகங்கள் நிறைந்த உலகத்தில் இருந்து நிரந்திரமாக.

 

# மனிதன் என்றவன் பொன் பொருளில் அல்ல மனிதநேயத்தில் மட்டுமே காண முடியும்.

உங்கள்,

சுபாஷினி

 

 

7.K2K-00037

கதை தலைப்பு : பாதை

பாரதி-ரோஹன் கல்யாணம் ஆன புதுமண தம்பதியர். பாரதி ஒரே பெண். அப்பா கிடையாது. படித்தவள், நடுத்தர குடும்பம். ரோஹன் மேல்தட்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். நன்கு படித்தவன். பாரதியின் மென்மையான குணத்தின் காரணமாக தன் மகனை மணமுடித்து வைத்தார் ரோஹனின் தந்தை ரெங்கராஜன்.

அன்று அவர்கள் வீட்டில் இரு வீட்டாரும் ஒன்று கூடி இருந்தனர். ரெங்கராஜன் "பாரதி, இத எப்படிமா நாங்க ஏத்துக்கிறது. ஊர் உலகம் என்ன சொல்லும்"  "நீங்க என்ன சொன்னாலும் நானும் உங்க மகனும் சேர்ந்து வாழ முடியாது". "அவரோட வாழ்க்கை வேற. அத மீறி அவர கட்டாய படுத்தி வாழ முடியாது. அத நாம புரிஞ்சிக்க தான் வேணும்".

அப்படி அவர்களுக்குள் நடந்தது என்ன????

கல்யாணம் ஆகி தேன்நிலவு போனதிலிருந்து ரோஹன் அவளிடத்தில் சற்று தள்ளியே இருந்தான். வெளியில் ஒன்றாக சென்றாலும் அந்த இணக்கம் வருவதற்கு இரண்டு பேருக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்தது. அதற்கு காரணம் இருந்தது. ரோஹன் படித்தது எல்லாம் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடம். கல்லூரியும் மிகவும் கண்டிப்பான கல்லூரி. இன்றைய நவீன யுகத்தில் ஆண்-பெண் பேசுவதை பெருங்குற்றமாக கருதும் கல்லூரிகளில் அதுவும் ஒன்று. அதுவும் இல்லாமல் அவனுக்கு எந்த பெண் நண்பர்களும் கிடையாது. இருந்த ஆண் நண்பர்களும் ஒரு சிலரே. தன் சொந்த உழைப்பில் ஒரு கம்பெனி ஆரம்பித்து நடத்தி வருபவன். பாரதியும் இவையாவும் உணர்ந்து பொருமையாக இருந்தாள். சில வேளையில் அவர்கள் நெருக்கம் காட்ட நினைத்தாலும் அது முழுமையாக இல்லாமல் சம்ப்ரதாயமாகவே இருந்தது. 2 மாதங்கள் ஆகியும் அவர்களுக்குள் அந்த நெருக்கம் வரவில்லை.

ரோஹன் ஒரு நாள் அவன் கைபேசியை மேஜை மீது வைத்து விட்டு உள்ளே சென்று இருந்தான். அப்போது அங்கு அதை ஒழுங்கு படுத்தும் போது தொடர்ந்து குறுஞ்செய்தி வந்ததை எதேச்சையாக பார்த்த போது பூனை என்ற தொடர்பிலிருந்து "மிஸ் யூ டார்லிங்" என்ற செய்தியுடன் இதயம் மற்றும் முத்த எமோஜிகள் போட்டு வந்ததை அவள் கவனித்துவிட்டாள். பெரிதாக அதை எடுத்து கொள்ளாவிட்டாலும் நாளடைவில் அவன் செய்கையில் மாறுபாடு தெரிய ஆரம்பித்தது.

அடிக்கடி கைபேசி எடுத்து தனியாக சென்று பேசுவது, இரவில் போர்வைக்கு அடியிலிருந்து செய்தி பரிமாற்றம் என பல செயல்கள் தெரியவந்தன.

ஒருநாள் பாரதி  "ரோஹன், இன்னிக்கு ஈவினிங் ஷோ படம் போலாமா?"

"சாரி இன்னிக்கு எனக்கு மீட்டிங் இருக்கு". "ஹனிமூனுக்கு அப்புறம் எங்கையும் போகல. எதாவது பிளான் பண்ணலாமா?" "பார்க்கலாம் அப்புறம் சொல்றேன்" என்று கூறிவிட்டு கார் எடுத்து சென்று விட்டான்.

பாரதி தனக்குள் "நான் அழகா இல்லையா, ஒரு பொண்ணா அவனுக்கு என்ன பிடிக்கலயா? அவனுக்கு பிடிச்ச மாறி நான் நடக்கலயா? ஒரு வேளை கட்டாயத்துக்கு என்ன கல்யாணம் பண்ணிட்டானா?" இவ்வாறு பல கேள்விகள் அவளை வாட்டி எடுத்தன. இருந்தும் மனம் தளராமல் இருந்தாள். ஒரு நாள் அவள் அலுவல் முடிந்து சீக்கிரம் கிளம்பியபோது" சரி ரோஹன் ஆபீஸ் போய் அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் பண்ணலாம்" என்று நினைத்து அங்கு சென்றதும் அவன் ஏற்கனவே கிளம்பிவிட்டதும் எங்கு என்று சொல்லவில்லை என்றும் தெரிய வந்தது. அவள் அவனை கேட்டதற்கு  "ப்ராஜக்ட் விஷயமா மோகன்னு ஒருத்தர பார்க்க போனேன். அவர நம்ம கம்பெனில பார்ட்னர்ஷிப் விஷயமா பேச" என்றான்.

மறுநாள் அவன் குளிக்கும் போது மோகன் என்று கைபேசியில் காண்பித்தது. இவள் எடுத்து "ஹலோ அவர் குளிக்கறார். யம் ஹிஸ் வொய்ஃப். எனிதிங் டு கன்வே?" "அமாம் நேத்து அவர் என்ன பார்க்க வரதா சொல்லி அப்புறம் வரமுடியலனு சொன்னார். இன்னைக்கு வருவாரானு அவர கன்ஃபார்ம் பண்ண சொல்ல முடியுமா?" இவளிடம் அவன் பொய் சொன்னதை உடனே உணர்ந்தாள். ஆனால் பொறுமையாக "ஓகே வில் ஆஸ்க் ஹிம் டு கால் யூ " என்று துண்டித்தாள். அவன் வந்ததும் "மோகன் கால் பண்ணாரு" என்றாள். அவன் சற்று பதற்றத்துடன் ஆனால் வெளிக்காட்டாமல் "என்ன சொன்னார்? " "உன்ன கால் பண்ண சொன்னார் " "வேற ஒண்ணும் சொல்லலியா"  "இல்லை"  "எல்லாம் அந்த பார்ட்னர்ஷிப் விஷயம் தான்" என்று சொல்லி நழுவினான். நடப்பதை நினைத்து அவள் கண்களில் நீர் வழிந்தது. ஆனால் அவள் இதை அம்மாவிடமோ அல்லது அவன் பெற்றோரிடமோ கூறுவதற்கு முன்னால் விஷயம் என்ன என்று தானே கண்டுபிடிக்க ஆயத்தம் ஆனாள். அவள் முதலில் செய்தது அவன் செயல்கள் என்ன என்று தெரிந்து கொள்ள நினைத்தாள். இணையத்தில் இருந்து ஒரு செயலியை அவன் கைபேசியில் அவனுக்கு தெரியாமல் பதிவிறக்கம் செய்து அவன் பேசுவதை கேட்க முயற்சி செய்தாள். விதி அது மறுமுனை பேசும் நபரின் ஒலியை செரியாக கேட்க முடியவில்லை. பின்னர் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரியை கொண்டு அவன் கைபேசியிலிருந்து அவன் அழைத்த எண்கள் என்ன என்று பார்த்ததில் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லை. அவன் நண்பன் ரோஹித், தன் தாய் மற்றும் தன் வியாபார ரீதியானஅழைப்புகள் தான் இருந்தது. ரோஹன் அவளிடம் நண்பர்களுடன் ஒரு சுற்றுலா செல்வதாக கூறி சென்றான். அவன் செய்கையை கண்காணிக்கையில் அவன் தன் நண்பன் ரோஹித் உடன் தான் சென்றான் என்று தெரிந்தது. வேறு தொடர்பு இல்லாத போது பின் ஏன் தன்னை ஒதுக்குகிறான் என்று பாரதிக்கு விளங்கவில்லை. இருந்தும் ஒரு கடைசி முயற்சியாக ஒன்று செய்தாள். ஒரு சிறிய மைக்ரோஃபோனை அவன் மடிக்கணினி பையில் வைத்து அவன் பேசுவதை அறிய நினைத்தாள். அவன் அலுவலகம் செல்லும் போது ஒரு நபரை ஏற்றிக் கொண்டு செல்கிறான். அந்த நபரிடம் "இந்த சமூகம் என்ன சொன்னாலும் பரவாயில்லை. என் முடிவு இதுதான்" என்று தீர்க்கமாக சொன்னதை அவள் கேட்டாள்.

அன்று இரவு ரோஹனிடம், "என்ன எதுக்கு கல்யாணம் பண்ண?"

மௌனம்..... "சொல்லு எதுக்கு கல்யாணம் பண்ணி என் வாழ்க்கைய கெடுத்த?" மீண்டும் மௌனம்....

அவள் "நான் என்ன பண்ணேன். உனக்கு அந்த லைஃப் தான் வேணும்னா என்ன எதுக்கு கல்யாணம் பண்ண ஒத்துகிட்ட?" " ஆம் சாரி பாரதி. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. வீட்ல இதபத்தி சொன்னா அவங்க ஒத்துக்கல. அம்மா அவமானத்தில் உயிர விட்டுடுவேன் சொன்னதால வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டேன்" என்றான். "உன்னால என்ன ஆச்சு பார்த்தியா? இப்போ நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கு. வேற வழி இல்ல இதப்பத்தி பேசிதான் ஆகணும்".

 

பின்னர் கதையின் ஆரம்பத்தில் சொன்னது போல் இரு வீட்டாரும் ஒன்று கூடினர். அவள் நடந்ததை கூறி அவர்கள் இருவரும் பிரிய நினைத்திருப்பதாக கூறினாள். அதற்க்கு ரெங்கராஜன்" அவசர படாத மா. நான் பேசுறேன்" "டேய் பொண்டாட்டி இருக்கும் போது யாரு டா அவ"என்றதும் பாரதி "அவர் வேற பொண்ணு கூட எல்லாம் சுத்தல"  "அப்போ"

"அவர் ஃபிரண்ட் ரோஹித் கூட தான் போனார்"  "என்னமா ஃபிரண்ட் கூட போறது ஒரு விஷயமா?" "மாமா இவர் அவர் கூட ஓரின தொடர்புல (gay relationship) இருக்காரு. போதுமா??? " "என்னமா சொல்ற. நீ கவலை படாதே. நான் பேசி சரி பண்றேன்".  "இதுக்கு காரணமே நீங்க தான் மாமா " "நானா " "ஆமாம் அவர் கல்யாணத்துக்கு முன்னாடியே இத உங்க கிட்ட சொல்லி இருக்கார். ஆனா நீங்க இந்த சொஸைட்டி, ஸ்டேட்டஸ், மீதி பேர் என்ன சொல்வாங்கனு அவர எமோஷனல் பிளாக்மெயில் பண்ணி எனக்கு கட்டி வெச்சீங்க. இப்போ எங்க வாழ்க்கை தான் கேள்விகுறி ஆச்சு. "

"என்ன மன்னிச்சுடு மா. உன்ன மாறி ஒரு பொண்ணு இவன் வாழ்க்கைல வந்தா இவன் மாறிடுவான்னு ஒரு தகப்பனா நினைச்சு தான் இப்படி பண்ணேன். இப்பவும் நம்பறேன் நீ உன் குணத்தால அவன மாத்த முடியும்" "மாமா மாத்துறதுக்கு இது பழக்கம் இல்ல உணர்ச்சி. எப்படி ஒரு ஆணுக்கு ஒரு பொண்ணு மேல ஈர்ப்பு வரது ஒரு இயல்பான உணர்ச்சியோ அது மாறி அவருக்கு இன்னொரு ஆண் மேல அவருக்கு ஈர்ப்பு வரதும் ஒரு விதமான உணர்ச்சி தான்" "அம்மா இவன் இப்படி ஆகிட்டா இவன் வாழ்க்கை என்ன மா ஆகுறது? இவனுக்குனு ஒரு குடும்பம், குழந்தை எல்லாம் இல்லாம இவன் எப்படி வாழ போறான்?" "இனப்பெருக்கம் இல்லாத (non-reproductive) உறவுகள் இங்க நிறைய இருக்கு. முதுமையில் செய்யும் திருமணம், குழந்தையோடு இருக்கும் ஒரு கைம்பெண்ணுடன் திருமணம் இப்படி பல. அந்த வகையில் இவர் வாழ்க்கையும் இருக்கும். அத அர்த்த படுத்த அவருக்கு வழிகள் இருக்கு. அவருக்கு நான் தேவை இல்ல. அவருக்கு தேவை அவர் துணை ரோஹித் தான்".  "பாரதி, இத எப்படிமா நாங்க ஏத்துக்கிறது. ஊர் உலகம் என்ன சொல்லும்" "நீங்க என்ன சொன்னாலும் நானும் உங்க மகனும் சேர்ந்து வாழ முடியாது".

"அவரோட வாழ்க்கை வேற. அத மீறி அவர கட்டாய படுத்தி வாழ முடியாது. அத நாம புரிஞ்சிக்க தான் வேணும். பாரதியின் தாய்" உன் வாழ்க்கை இப்படி ஆகி போச்சே " என்று வெடித்து அழுதாள்.  பாரதி" நான் இவர் கூடவே இருந்தா தான் எங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கை நரகம் ஆகும். என் வாழ்க்கை இத்துடன் முடிய போறதில்லை. என் வாழ்க்கை பாதையில் என்ன புரிஞ்சு ஒருத்தன் வருவான்" என்றாள். ரோஹன் அவளிடம் "என்னால தான் உனக்கு கஷ்டம். ஆம் வெறி சாரி " "எனக்கு உன் மேல வெறுப்பு இல்ல. இந்த சமூகம் தான் உங்களை அடக்கி வெச்சுடுச்சு. இப்போ கொஞ்சம் மாற்றம் ஆரம்பிக்கிறது. யாரையும் காயப்படுத்தாத, கட்டாயப்படுத்தாத எந்த உணர்ச்சியும் தப்பில்லை. ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லி விடை பெற்று தன் பாதை நோக்கி சென்றாள்.

ன்றி!!!

இப்படிக்கு

பா.பிரபு ,மடிப்பாக்கம்

 

 

8.K2K-00042

இதுவரை வந்த தலைப்புகளில் இது மிகவும் மாறுபட்ட தலைப்பாக இருந்தது. ஏனென்றால் இதுவரை வந்த தலைப்புகளில் நான் உணர்வுபூர்வமாக சில இடங்களில் (சி)ந்தித்த  விஷயங்களை கதையாக எழுத முடிந்தது. இதை பற்றி எழுத ஒரு யோசனையாகத்தான் இருந்தது. ஆனால், இது ஒரு புதுவிதமான தலைப்பு என்பதால் கொஞ்சம் அதிகமான தகவல்களை பெற்று அவர்களைப் பற்றி கொஞ்சம் அறிந்து பிறகு எழுதலாமே என்று முடிவு செய்தேன். இந்த மாதிரி ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்வதற்கும் அதைப் பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும், அதை தெரிவு செய்ததற்கு குழுவிற்கு நன்றி.

திருநங்கைகளை பற்றி நான் தெரிந்து கொண்ட இந்த இரண்டு நாளில் சில அடிப்படை விஷயங்களை நான் இங்கே கூற விரும்புகிறேன் சாதாரணமாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 46 குரோமோசோம்கள்  தான் இருக்கும் . அதில் 22 ஜோடி குரோமோசோம்களின் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும், அந்த 23 வது ஜோடி  குரோமோசோம்கள் தான்  நமது பாலினத்தை முடிவு செய்வது. அதாவது XX என்றால் பெண்கள் XY  என்றால் ஆண்கள் . திருநங்கைகள் என்பது XXY, பெண் குணத்தில் இருக்கும் ஆண் தோற்றம் உள்ளவர்கள்.

ஒரு குழந்தையின் பாலினத்தை முடிவு செய்வது ஆணின் விந்தணு தான். ஆண்கள்  பெண்கள் போல திருநங்கைகளும் மனிதர்கள் தான் நாமும் அவர்களை மதித்து அன்பு செலுத்த வேண்டும் . இங்கே இரண்டு முடிவுகளை கொடுத்து இருக்கிறேன். சிவசங்கரி அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சி  நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர். அழகில் அந்த ரம்பையையும் மேனகையையும் கடைந்து ஒரே இடத்தில் வைத்தார் போல் ஒரு மினு மினுக்கும் அழகு. அவரை பார்க்கும் ஆண்கள் வைத்த  கண்கள் வாங்காமல் பார்க்காமல் விடமாட்டார்கள். அவர் தன்னுடைய பணியில் இருந்து 45 ம்  வயதில் விருப்ப ஒயுவு பெறுவதாக முடிவு எடுத்தார் , பின் அவர் பிரிவு உபசார விழாவில் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.  அவருடைய கதையை   நாமும்  கேட்போம். அவர் சொல்ல சொல்ல எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து வாய் பிளந்து கேட்டு கொண்டு இருந்தார்கள். சிவசங்கரி தான்  பிறப்பில் சிவசங்கர் ஆக பிறந்தேன், 1975 இல் நெல்லை மாவட்டம் மானூர் கிராமத்தில் பிறந்தேன் என் வீட்டில்  தான் ஆறு  பெண்களுக்கு பிறகு ஏழாவது ஆண்  குழந்தையாக பிறந்தேன் . நாங்கள் மிகவும் வசதி வாய்ந்த விவசாய குடும்பம். எங்கள் குடும்ப வாழ்கை  மிகுந்த சந்தோஷத்தில் சென்று கொண்டிருந்தது. நானும் வளர ஆரம்பித்தேன் எனக்கு 8 வயது வரும் போது என் உடலில் மாறுதல்கள்  தெரிய ஆரம்பித்தது , ஆம் நான் ஆண்களுடன் மட்டுமே மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்தேன். இது தெரிந்த என் குடும்பத்தினர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கே தான் தெரிய வந்தது நான் பெண்ணாக மாற ஆரம்பித்து இருக்கிறேன் என்று. அது வரை ராஜா மாதிரி வளர்க்க பட்டு  இருந்த நான் என்  வீட்டில் வேண்டாதவனாக ஆளாகினேன். என்னை  எல்லோரும் வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. நான் மனமுடைந்து எங்காவது போய் விடலாம் என முடிவு செய்து கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். எங்கள் ஊர் புகை வண்டி நிலையத்தை அடைந்து தனியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு நபர் என்னை பார்த்து எதற்க்காக அழுகிறாய் என்று கேட்டார். அவருக்கு என் தந்தை வயது தன் இருக்கும். நான் அவரிடம் என்னை பற்றி சொன்னேன். அவரும் புரிந்து கொண்டு நானும் உன்னை போல் தான் , என்னுடன் வருகிறாயா என்று கேட்டார். எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. என்னை புரிந்து கொள்ள ஒரு தந்தை கிடைத்து விட்டார் என்று அவருடன் சென்றேன்.

கதை-1 அவர் பெயர் கோமதி சங்கர், என்னை சீரும் சிறப்புமாக பார்த்து கொணடார். என்னுடைய 12வது வயதில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து என்னை இப்படி  அழகாக மாற்றினார்.பின் என்னை நன்றாகவும் படிக்க வைத்து நல்ல வேலைக்கும் சேர வைத்தார். நான்  இன்று நல்ல நிலைமையில் இருப்பதற்கு அவர்தான் காரணம் . இன்று அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக நானும் என்னை போன்று சிறு வயதில் தவித்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு கொடுக்க முன் வந்துருக்கிறேன். இது போல்  உங்கள் வாழ்விலும் கடக்க நேர்ந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக எதாவது நல்ல காரியம் செய்யுங்கள்.

கதை 2. அந்த புகை வண்டி நிலையத்தில் அந்த ஊரின் பிரபல கொள்ளைகாரன் ரவுடி ரங்கா நின்று கொண்டிருந்தான், அழுது கொண்டிருந்த என்னை பார்த்ததும் எனக்கு எதோ ஒரு இனிப்பை கொடுத்து என்னை கடத்தி மும்பைக்கு அனுப்பி வைத்தான். நான்  இங்கே வந்து என்ன செய்வது என்று இருந்த போது அவன் என்னை ஒரு பாலியல் கும்பலுடன் இணைத்து விற்று விட்டிருந்தான். அவர்கள் என்னை அடித்து உதைத்து என்னை பெண்ணாக மாத்தினார்கள். நான் பெண்ணாக மாறிய பிறகு என் அழகில் மயங்காத மக்களே இல்லை நான் எல்லோருக்கும் சுகத்தை கொடுத்து உள்ளுக்குள் அழுது கொண்டு என் காலத்தை கழித்து கொண்டிருக்கிறேன்.

நெறி: கோமதி சங்கராக இருப்பதும் ரவுடி ரங்காவாக இருப்பதும் நம்மை பொறுத்தே... திருநங்கைகளும் மனிதர்கள் தான் அவர்களுக்கு உதவ மறந்தாலும் உபத்திரவம் செய்யாதீர்கள் .

 

கணேசன் சண்முகவேல்

 

 

9.K2K00048

ஒரு ஊரில் ஒரு தாய்க்கு ஒரு குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்த உடன் செய்யப்படும் ஆரோக்கிய சிகிச்சை மூலம், அந்த குழந்தை ஒரு அர்தாங்கினி என்று தெரிய வந்தது. தன்னுடைய குழந்தை ஒரு அர்தாங்கினி என்று தெரிந்த , அந்த குழந்தையின் தந்தை , இது என் குழந்தை அல்ல , எங்களை பீடித்த அபசகுனம் என்று , உயிருடன் அந்த குழந்தையை மண்ணில் புதைக்க முற்பட்டார். இதனை அறிந்த குழந்தையின் தாய் , தன் கணவனை தாக்கி , அந்த குழந்தையை காப்பாற்றி , இவள் என்னுடைய புதல்வி , நான் இவளை இந்த சமூகத்தில் என்றும் தலை நிமிர்ந்து வாழ வெய்பேன் , இவளுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தருவேன் என்று கூறி அந்த குழந்தையை அரவணைத்து வளர்த்தாள், அந்த குழந்தையை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல், என்றும் வீட்டிற்குள்ளேயே இருக்க வைத்து வளர்த்தார்கள் தான் ஓர் அர்தாங்கினி என்பது அந்த குழந்தைக்கு கூட தெரியாத வண்ணம், யாரிடமும் அவளை சேரவிடாமல், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் கூட அறியாதவாரு, அவளை ஒரு முழு பெண்ணாகவே வளர்த்தால், தன் தாய்க்கும் தனக்கும்  உள்ள வித்தியாசம் கூட அந்த குழந்தைக்கு தெரியாது, தான் ஒரு பெண் என்றே கருதி வாழ்ந்தால், அவளுக்கு வெளி உலகம் எப்படி இருக்கும்  என்று கூட தெரியாது , பிறந்தது முதல் எதற்குமே அவள் வெளியில் சென்றது இல்லை, தன் தாய் தந்தை பாட்டி இவர்களை தவிர அவளுக்கு எந்த ஓர் உறவும் இல்லை. எதிர்பாராத விதமாக அந்த பெண்ணாக வளர்ந்த அர்த்தாங்கினி தன்னுடைய 21ஆம் வயதில் , தன் தாய்க்கு உடல் நிலை குன்றிய காரணத்தால் இவளை பிரிந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவியது , அத்தைகைய சூழலில் தன் தாயை காண துடித்து அந்த அர்தாங்கினி வீட்டை விட்டு வெளியில் அடி எடுத்து வைத்தால், அப்போது உலகம் அறியா அவள் , வெளியில் உள்ள அனைத்தையும், வெளியில் இருக்கும் அனைவரையும் புதிதாக ஆச்சர்யமாக பார்த்தால், இவளின் தோற்றமும் ஓர் அழகிய பெண்ணாகவே தோன்றியது,

எனவே ஓர் இடத்தில் இவளை சில ஆண்கள் சீண்டினர். இவள் மிகவும் பயந்து செய்வது அறியாது நின்றாள், அப்போது இவளை ஒரு இளைஞன் காப்பாற்றி, அவளுடைய வீடு எங்கு உள்ளது என்று விசாரித்தான், ஆனால் அவளுக்கு தன்னுடைய வீட்டு முகவரியினை கூற தெரியவில்லை, எது கேட்டாலும் தெரியாது என்று தாழ்ந்த குரலில் கூறினால், இவளின் அறியாமையை கண்டு பரிதாபம் கொண்டு தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான், அவள் மிகவும் பயந்த வண்ணம் இருந்தால் , இவளுக்கு உலகின் பழக்க வழக்கங்கள் எதும் தெரியவில்லை, கைப்பேசி என்றால் என்ன என்று கூட அறியாமல் இருந்தால், இவளை எவ்வாறு இவள் வீட்டில் சேர்ப்பது என்று யோசித்தான், இவள் மீது அக்கறை கொண்டு நன்றாக பார்த்துக்கொண்டான் அவன், அவன் வீட்டில் உள்ள எவருடனும் பேசவும், பழகவும் தயங்கி பயந்து நின்றாள், தன்னைய காப்பாற்றியதால் அந்த ஆண் மகனுடன் மட்டும் பேசி பழக்கம் கொண்டால், இவளுக்கு தன் வீட்டினை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை என்பதால், இவளை இவன் சந்தித்த இடத்தின் பக்கம் எல்லாம் சென்று இவளின் புகைப்படம் காட்டி விசாரித்து வந்தான், அவளின் வீட்டிற்கும் சென்று விசாரித்தான், ஆனால் அவளின் தந்தை, யார் என்று தெரியாது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் இவன் இவளை வெளியில் விடுவதும் இயாலாது என்று, தன் வீட்டிலேயே இருக்க வெய்தான், அந்த வீட்டில் அனைவரும் அவள் மீது அன்புடனும் அக்கறையுடனும் இருந்தனர். தன் தாயின் அன்பை தவிர வேறு எவருடைய  பழக்கமும் இல்லாத இவள், அங்கு மகிழ்ந்து இருந்தால், மருத்துவ மனையில் இருந்த இவளின் தாய் இறந்தால், இதனை அறியாது தன் தாயை காண ஏங்கி கொண்டு இருந்தாள், இவளின் அறியா குணத்தின் தூய்மையான அன்பின் வெளிப்பாடு, இவளை காப்பாற்றியவன் உள் காதலை ஏற்படுத்தியது, தன் குடும்பத்தில் இருப்பவரிடம் கூறி , அவளை மணந்து மனைவி என்னும் அதிகாரத்தினை வழங்கினான். பிறகு, இவளின் உண்மை ரூபம் தெரியவந்தது, அவள் ஒரு அற்தாங்கினி என்று தெரிந்த பிறகு, தன்னை அந்த அர்தாங்கினி உண்மை கூறாமல் ஏமாற்றியதாக அறிந்து, மிகுந்த சினம் கொண்டு, அவளை வார்த்தைகளால் சுட்டெரித்து, வெறுத்து ஒதுக்கினான், அந்த அர்தாங்கினியை தான் அழைத்து வந்ததால், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல், இந்த அர்தாங்கினியே தன்னை வெறுத்து ஒதுங்கி செல்ல வேண்டும் என்று, தினம் தினம் தன்னை விட்டு செல்லும் மாறு திட்டித்துரத்தினான், அந்த அர்தாங்கினிக்கு மேலும் மேலும் துன்பம் அளித்தான் , பிறகு அவளின் நிலையை புரிந்து கொண்டு, தான் கொண்ட காதலும் இவள் மீது தான் இவளின் தோற்றம் மீதும், அழகு மீதும் அல்லது உடல் சுகத்திற்காகவும் இல்லையே என்று எண்ணி, தான் செய்த செயலுக்கு மணிப்பு கேட்டு, அந்த அர்தாங்கினி குணத்தால், பெண் என்று, தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். அத்துடன் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டு, ஓர் குழந்தையினை தத்தெடுத்து வளர்த்து சந்தோஷமாக வாழ்ந்தனர், ஆனால் இந்த உண்மை தெரிந்த பிறகு இருவரும் அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டனர். இருப்பினும் இவர்கள் ஒன்று இணைந்து வாழ்ந்து காட்டினர்.

 

கருத்து : எந்த ஒரு வேறுபாடு இருந்தாலும் , ஓர் உயிர் பிறந்தால் அதன் உணர்வுகள் அனைத்தும் வேறுபடாத ஒன்றே ....

இப்படிக்கு .,

சி. தெய்வாணி ஸ்ரீ .,

 

 

10.K2K-00053

"படிக்க அக்கரை படாத பிள்ளைய வெச்சு நாங்க என்ன செய்ய?எழுத்து அவன் இஷ்ட்டம் போல எழுதறான்...கண்டிச்சும் பயன் இல்ல...போர்ஷன்ஸ் ஹெவி்.NCERT சிலபஸ். இந்த சின்ன வயசுல இவ்வளவு டல். சொல்ற எதையும் புரிஞ்சுக்கல. ஒரு இடத்துலயே உட்காரது இல்ல...இப்படியே ஆறு மாசம் போயிருச்சு. எங்க ஸ்கூலுக்குனு ஒரு பேரு இருக்கு. சாரி அம்ரீஷ்க்கு என்ன குறைனு பாருங்க. நீங்க வேற ஸ்கூல் பாருங்க... என படபடப்பாய் மூச்சு விடாமல் பேசினார் பிரின்சிபல் ஆறுமுகம்..."

மீரா மிக அமைதியாக எல்லாத்தையும் கேட்டாள். சார், ஒரே ஒரு கேள்வி...என்றாள். "உங்க குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்தா வீட்ட விட்டே வெளில அனுப்பிருவிங்களா? இல்ல ஸ்கூல் விட்டே நிறுத்திருவிங்களா? என கண்ணில் வெப்பம் பொங்க வார்த்தைகளை கொட்டிவிட்டாள்.." அம்மா! வா மா போகலாம் திட்டாத மா என்றான் அம்ரீஸ் சோகமாய்..." நீ என்ன பண்ணின அம்ரீஸ், உன் மேல தப்பு இல்ல டா. அம்மா என் மேல தான் மா தப்பு. மிஸ் போர்டுல bag box book னு எழுதி போட்டு இருந்தாங்க. நான் தெரியாம dag dox dookனு எழுதிட்டேன் மா. அப்போ மிஸ்க்கு என் மேல கோபம் வரும்ல...நீயே சொல்லு மா என அவள் நாடியை பிடித்து செல்லமாய் சிணுங்கியவாறு கேட்டான். "மேக்ஸ் மிஸ் சிக்ஸ்னு நம்பர் எழுதினாங்க... நான் நையன் போட்டுட்டேன். அவங்க நையன் எழுதினா நா சிக்ஸ் போட்டுறேன். என்னடா வேணும்னே எழுதறியா கேட்டு அடிச்சாங்க மா" என் மேல தான் மா தப்பு. "நமக்கு இந்த ஸ்கூல் வேணாம் மா. அவங்களுக்கு எல்லாம் என்னைய பிடிக்கல. மிஸ் பாவம் மா என்னால அப்செட் ஆகுறாங்க. நா போயிட்டா எல்லா மிஸ்க்கும் டென்ஷன் இல்ல... வா போகலாம் மா... என மீராவின் சேலை நுனியை பிடித்து இழுத்தான் ஆறு வயதேயான அம்ரீஸ். "என் பிள்ளைக்கா கற்றல், கேட்டல் குறைபாடு?இங்க  இருக்க டீச்சர்ஸ் மனசை நல்லாவே படிச்சு வெச்சுருக்கானே. "பிடிக்காட்டி புரிஞ்சு ஒதுங்கற குணம் இந்த சின்ன வயசிலே இருக்கு..." கொழந்தை முன்னாடி குறை சொல்லக் கூடாதுனு பேசிக் நாலட்ஜ் உங்க யாருக்கும் ஏன் இல்லாம போயிருச்சு?" ஸாரி இப்படி பட்ட ஸ்கூல் என் கொழந்தைக்கு தேவையே இல்ல என வெளியேறினாள்.

நீதி: அடுத்தவங்க மனச படிக்காம மனச கஷ்ட்ட படுத்தற எல்லாருக்குமே டிஸ்லக்சியா தான்...

-பூங்கொடி

 

 

11.K2K00063

நர்த்தகி நாட்டியப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கியது. நந்தனா குருவாக நாட்டியக் கலையை அனைவருக்கும் கற்பிக்கிறாள். இருப்பவகளிடம் கட்டணங்களை நிறைவாக பெற்றுக் கொண்டு, பல  மாணவர்களுக்கு குறைந்த கட்டண த்திலும், ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக நாட்டியத்தை கற்பிக்கிறாள். இனி நந்தனாவைப் பற்றி 8 வயதில் தன்னுள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான். தனக்குள் பெண் தன்மை மலர்வதை உணர்ந்தான்.இதைப்பற்றி தன் அம்மாவிடம் சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேறி ஒரு நாட்டியம் கற்பிக்கும் குருவிடம் மாணவனாக சேர்ந்தான்.நாட்டியத்தில் பெண்களின் பகுதியை மிகவும் சிறப்பாக ஆடியில் குரு அவனை பாராட்டினார்.அன்று அவன் தன் நிலையை விளக்கி தனக்கு உதவுமாறு வேண்டினான்.குருவும் அவனை வேலையாக வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி அனுப்பி அவனை நந்தனாவாக மாற்றி அழைத்து வந்து நர்த்தகி நாட்டியப் பள்ளியையும் துவக்கி கொடுத்தார்.அதற்கு அவர் வந்தனாவின் கேட்ட கைமாறு  என்ன வென்றால் நீ உன்னைப் போல் யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு உதவி அவர்களையும் உயர்த்த வேண்டும்.மேலும் நீ நாட்டியக் கலையின் உச்சத்தை தொடவேண்டும் என்று கூறி ஆசிர்வதித்தார். இப்போது நந்தனாவுடன் சமையல் கலையில் சிறந்த பெண்னாக மாறிய தஸ்லீமா,பத்மாவாக இருந்து மாறிய பத்மநாபன் சிறந்த தையல் கலைஞன், இவர்கள் சேர்ந்து கண் தெரியாத பாபு,காது கேளாத வாய் பேச முடியாத கேசவ்,கமலி என்ற மூன்று குழந்தைகளை வளர்த்து வருகின்றனர்.அன்று முதல் இன்று வரை நாட்டியத்தை தன் உயிராய் வளர்க்கிறாள் நந்தனா.இவர்களின் இலட்சியத்தில் உச்சத்தை தொட அனைவரும் இறைவனை வேண்டி வாழ்த்துவோம் வாருங்கள்.

ANURADHA

 

 

12.K2K00066

பெண்விழையாள்..!

15 ஆகஸ்ட் 2016

"உன் பொண்ணு ஏன் இப்படி பண்றா, எப்பப் பாத்தாலும் கல்யாணம் வேணாமுனு சொல்றா? அவ மனசுல யாரையாவது நினைச்சிகிட்டு இருந்தாலும் பரவால்ல, பேசி முடிச்சிடலாமுனு" தேவியின் அம்மாவிடம்  தேவியின் அப்பா கூறினார்.

"நான், அவகிட்ட தனியா பேசிட்டு சொல்றேன். கொஞ்சம் பொறுங்க..!" என்றாள் அம்மா. தேவியின் அறைக்கு சென்ற அம்மா, மெதுவாக அவளின் மனதில் இருப்பதை அறிய பேச்சு குடுத்தாள்.

"யாரையாவது காதலிக்கிறியானு" அம்மா கேட்க.

"அம்மா... அம்மா..."

"தயங்காம சொல்லு தேவி.." என்றாள்

"நான் விளையாட்டுக்கு சொல்லல அம்மா. நான் கல்யாணம் பண்ணா அனுஷ்யாவைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று தேவி கோபமாக சொன்னதும், அம்மாவின் முகமே மாறிவிட்டது. "என்னடி சொல்ற..? ஒன்னும் புரியல" என்றாள் அம்மா.

 

தேவி, தானும் அனுஷ்யாவும் பெண்விழையாள் என்பதை தெரிவித்தாள். இயற்கையாகவே அவளுக்கு தற்பாலினத்தவரின் மீது ஈர்ப்பு இருந்ததாகவும், அனுஷ்யாவும் அவ்வாரே தன்மீது ஈர்ப்பு கொண்டதாலும், இருவரும் காதலிக்க அரம்பித்தனர் என்று சொன்னப்போது, தேவியின் அம்மா "அய்யோ கடவுளே.. நீ ஏன் இப்படி பண்ற" என்று கடவுளை வசை பாடிவிட்டு தேவியிடம் எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்.

அம்மா அனைத்தையும் அப்பாவிடம் சொல்ல, வெறிகொண்ட வேங்கை போல தேவியின் அறைக்கு சென்றார். கண்மூடித்தனமாக அடித்துவிட்டு, "ஒழுங்கா.. ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா செத்துப்போ" என்றார். சுதந்திர தினத்தன்று தன் சுதந்திரம் பறிபோய் விட்டது என்று தேவி மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டு, இரவு முழுக்க ஆழுதாள்.

அன்றிலிருந்து, வீட்டில் பேசுவதை நிறுத்தினாள். கல்யாண பேச்சு வரும்போதெல்லாம் எரிமலை போல் பொங்கியதைக் கண்டு, அவளின் பெற்றோர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். அனுஷ்யா வீட்டிலும் இதே நிலமையாகத்தான் இருந்தது. காலம் வேகமாக சென்றது.

5 செப்டம்பர் 2018..!

"நாளைக்கு என்ன நடக்கமுனோ தெரிலடி" என்றாள் அனுஷ்யா

"நான் உறுதியா இருக்கேன்.. நமக்கு சாதகமாதான் எல்லாம் நடக்கும்" என்றாள் தேவி. மறுநாள், உச்ச நீதிமன்றத்தின் தீரிப்பிற்காக காத்துக்கொண்டிருந்த ஆயிர கணக்கான இந்தியர்களிள் இவர்களும் அடங்குவர். அவர்கள் விருப்பம் போலவே, "ஒருபாலுறவு குற்றமல்ல" என்று தீர்ப்பு வந்தது. அந்த செய்தியைக் கேட்டவுடன், தேவியும் அனுஷ்யாவும் அடைந்த சந்தோசத்தைப் பார்த்தப்  பிறகு, “சமூகம் என்ன நினைக்கும்என்ற வலையில் மாட்டிக்கொண்ட அவர்களின் பெற்றோர் வெளியே வர முயன்றார்கள்.

15 ஆகஸ்ட்  2019..!

பெற்றோர்களின் சம்மதத்தோடு தேவியும் அனுஷாயும் திருமணம் முடித்தார்கள்.

14 நவம்பர் 2019..!

"எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..பல நாள் ஆச.. இன்னைக்கு நிறைவேற போது.." என்று தேவி சொன்னதும், நடுங்கிய அவளின் கைகளை இறுக்கி பிடித்து, "டென்ஷன் ஆகாத.." என்றாள். "இவங்க தான் உன்ன தத்தெடுக்கப் போறாங்க" என்று அநாதை விடுதியின் மேலாளர் சொன்னதும், "ஐய்யா... எனக்கு ரெண்டு அம்மா" என்று சிரித்திக்கொண்டே அவர்களை நோக்கி ஓடிவந்தான் அந்த நான்கு வயது சிறுவன். "நாமளும் அம்மா ஆயிட்டோம்ல" என்று ஆனந்த கண்ணீருடன் சொன்னாள் தேவி.

நீதி  : நான் எதிர்பாலீர்ப்பாளர், அதனால் மற்ற பாலினத்தவர்களைப்  பற்றி எனக்கு கவலையில்லை என்று எண்ண வேண்டாமே..!

-GD

 

 

13.K2K 00068

இதில் வரும் கதாபத்திரம் வெறும் கற்பனையே யார் மனதையும் புண்படுவதல்ல ஓரே பேருந்தில் இரு பெண்கள் அறிமுகமாகிறார்கள். சாலியா நாகா என தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுகிறார்கள். சாலியாவோ எங்க அம்மா புற்றுநோயால் அவதிப்படுகறார்கள். எங்க  அப்பாவோ அதை நினைத்து நினைத்து குடிகாரராக மாறிவிட்டார். இந்த உற்றார் உறவினர் எங்களிடம் சேருவதில்லை. இந்த எனக்கோ வயது 31. திருமணமாகவில்லை. என் சம்பாத்தியத்துலதான் குடும்பமே ஓடுது என்றாள். நாகாவோ நான் ஒரு அனாதை எனக்கு பிள்ளைகள் இல்லை. கனவரோ தினமும் திட்டிக் கொண்டே இருக்கிறார். சனியனே நீ செத்து தொல என்கிறார். நீ செத்தா தான் நான் இன்னொரு கல்யாணம் பண்ண முடியும் என்கிறார். இந்த உலகத்துல எனக்கும் வாழ புடிக்கல என்றாள். இருவருடைய பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே  போனது.

ஒரு நாள் சாலியா அம்மா இறந்து விடவே அவளுடைய அப்பாவும் அதிகமாக குடித்து விட்டு இறந்து லிடுகிறார். அனாதையான சாலியா தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள் . அப்போது அவளுக்கு ஆறுதலாக நாகா வருகிறாள் ஒரு பக்கம். மறுபக்கம் சாலியா வீட்டிற்கு கேதம் கேட்க வந்த நாகாவை அவள் கணவர் யார் கூட போய்ட்டு வந்த என்று வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். ஒரு நாள் வாரம் போனது குடிகார்கள் மற்றும் காமக்கொடூரர்கள் ஒரு வீட்டில் இரு பெண்கள் இருப்பதை இரவு கதவை தட்டுகிறார்கள். இருவரும் சேர்ந்து தற்கொலை செய்யலாமா என சிந்திக்கும்போது ஏன் வாழக் கூடாது காமக் கொடூரர்களையும் குடிகாரர்களையும் வெல்ல ஒரே வழி நாம் திருநங்கையாக மாறுவதுதான்.  ஆண்களில் நல்லவர்கள் இருந்தாலும் நம்வாழ்க்கையில் அமையவில்லை. நாமே சேர்ந்து வாழ்வோமே என வாழ்கிறார்கள்.. உணர்வுகள் உணர்ச்சிகள் அடக்க முடியாமல் அனைத்துக் கொள்கிறார்கள் திருநங்கைகளாக. இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்தாலும் சமுதாயம் ஏற்காதே என்ற சிந்தனை வெளிநாட்டுக் கலாச்சாரம் ஓரினைச் சேர்க்கையாக வாழலாம் என்று கூறினாலும் நமது சமுதாயம் நம்மை ஒதுக்கினாலும் நமக்குத் தேவை அன்பும் அமைதியும் இன்பமும் தான்.

இந்த வாழ்க்கை கூட கிடைக்காமல் எத்தனை பேர் தற்கொலை செய்கிறார்கள். பிச்சைகார்களாக போனாலும் நம் உடம்பிற்காக சில பேர் வருவார்கள். நம்மை விட இன்னும் ஏத்தனை பேர் என்னென்ன கஷ்டபடுராங்களோ! வாழ்க்கை வாழ்வதற்கே நாமும் நல்லபடியாக வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம்  என முடிவு எடுத்தார்கள் சிறு தொழில் செய்து வந்தார்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தார்கள்.

-J. JEYARAJ

 

 

14.K2K-00078

மாற்றுத்திறனாளிகள்

பதினான்கு வயதாகும் போது, பார்வையில் சிறு மாற்றத்தை உணர ஆரம்பித்தாள். கயல்மீனை ஒத்த அவளது, கண்களின் வசீகரம் சோர்வடைந்தது. ஆமாம்., தேவியின் கண்கள் வருத்தமுற்று, கேள்விக்குறியைப் போல தென்பட்டன. தேவி ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே அடைபட்டுக் கிடந்தாள். புதிதாக தேவிப் படித்த பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என,  (விசேட கல்விப்பிரிவு) ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதில் முதல் மாணவியாக இணைந்துக் கொண்டவள் தேவியாகும்.

ஒருவருடத்திற்கு பிறகு பள்ளிக்கு சென்றவளுக்கு, தனிமை ஒரு கொடுமையாகவே இருந்தது. விசேடக்கல்வி துறையில் முதுமாணி பட்டம் பெற்ற ஆசிரியரான கணேசலிங்கம் தேவியிடம் அன்பாகவும், அரவணைப்புடனும் நடந்துக்கொள்வார்.. அவளது மனதில் ஏதோ கறையாக படிந்துள்ளது. என்பதையறிந்த கணேசலிங்கம். தேவியிடம் "நீ ஏன்? எப்போது பார்த்தாலும், எதையோ! பறிகொடுத்தது போல இருக்கிறாய்" என கேட்டார். வெகுநேரம் மௌனமாக இருந்தவள்.

திடீரென பேச ஆரம்பித்தாள். நான் இதே பாடசாலையில் கமலினி டீச்சர் வகுப்பறையில் படித்தேன். சமீபத்தில் ஏற்பட்ட சிறு விபத்தில் கண் பார்வையில், ஒரு மாற்றம் உண்டானது. வறுமை காரணமாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற முடியவில்லை. நான் இரண்டு மாதங்களாக வீட்டில் இருந்தேன். அம்மா அதிபரிடம் வறுமையையும், என்னுடைய எதிர்காலத்தையும் அவரிடம் கூறி, மீண்டும் பள்ளிக்கு செல்ல அதிபர் மூலம் வாய்ப்பு கிடைத்தது.

நானும் மறுபிறவி கிடைத்தது போல எண்ணிக்கொண்டு, பள்ளிக்குச் சென்றேன். என்னுடைய மாற்றங்களைக் கண்ட மாணவர்கள். ஒவ்வொரு நாளும் "கண்கெட்டி" என்று பட்டப்பெயர் வைத்து, கேலிச் செய்வார்கள். உடலளவில் பாதிக்கப்பட்ட நான் மனதளவிலும் பாதிக்கப்பட்டேன்.

மதியவுணவு வழங்கும்  திட்டத்தினை அப்போதுதான் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி இருந்தது. மதியம் 12மணியானால், மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். எனக்கு மட்டும் விதி விளக்கா! சோறுடன் அரைவாசி முட்டை என்றதுமே நாவில் எச்சில் ஊறும்.

ஒருநாள் என்னுடன் படிக்கும் கலையரசன். "தேவி! சோறுடன் இன்று உனக்கு பிடித்த பப்படமும் தருகிறார்கள். விரைவாக வா!" என்று கூறி வேகமாக உணவகத்திற்கு ஓடினான். நானும் கை தாங்களாக உணவகத்திற்கு, ஆசையோடு சென்றேன். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த எனக்கு அம்மதிய உணவு "பிரைட்ரைஸ்" கொடுப்பது போல எண்ணத் தோன்றும். கமலினி டீச்சர் கொடுத்த உணவில், கலையரசன் காய்ந்த இலைகள் இரண்டினை போட்டுவிட்டான். நானும் சோற்றோடு பப்படம் என நினைத்து, ஒன்றாக இலைகளையும் கலந்துவிட்டேன். முதல் பிடியை ஆசையோடு எடுத்து வாயில் வைத்தேன். வாய் கசந்தது பப்படமல்ல.. அது காய்ந்த வேப்ப இலைகள் என அறிந்துக் கொண்டேன். எதுவுமே பேசாது பசிக்கு ருசியினை மறந்து சாப்பிட்டேன். இவ்வாறு எதோ ஒரு வகையில் கலையரசன் மட்டுமல்ல. ஏனைய மாணவர்களும் இவ்வாறான வேலைகளை, தீட்டம் தீட்டி செய்வது போல செய்வார்கள்.

என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு தருணம்.  நான் எனக்கு கண்பார்வை குறைவு என்பதை குறையாக நினைத்ததே இல்லை. என் கடமைகளை சரிவரச் செய்வேன். அதிகாலை 5மணிக்கு எழுந்து கோழிகளுக்கு தீவணம் வைத்தல், ஆடுப்பட்டிளை துப்பறவு செய்தல் முதலான வேலைகளை முடித்துவிட்டு, அம்மாவின் துணையோடு பள்ளிக்கு செல்ல ஆய்தமாகுவேன். அன்று மதியவுணவு வழங்கும் வேலையில் தீவிரமாக கமலினி டீச்சர் செயற்பட்டுக் கொண்டிருந்தார். கடுமையான தலைவலி காரணமாக நான் மதியவுணவினை உண்ணச் செல்லவில்லை. வகுப்பறை மேசையிலேயே உறங்கிவிட்டேன்.

கமலினி டீச்சர் 1மணியிருக்கும் வகுப்பறைக்கு வந்தார். தன்னுடைய பையில் இருந்த தொலைபேசியை காணாது பதற்றமடைந்தார். தனி தனியாக ஒவ்வொருவருடைய புத்தகப் பைகளையும் எடுத்து ஆராய்ந்தார். கலையரசன் வகுப்பில் முதல் மாணவனாக அமர்வான். வரிசையில் நான் இறுதி மாணவியாக தனியாக அமர்ந்திருப்பேன். இருபது மாணவர்களை கொண்ட என்னுடைய வகுப்பறையில், பத்தொன்பதாவது மாணவியான ஊர்வசியின் பையை ஆராந்துக் கொண்டிருந்த டீச்சர். என்னருகில் வந்தார். என் பைகளை எடுத்து, பையின் உள்ளே கையை விட்டார். என்னிடம் ஒன்றுமே பேசவில்லை.. பொறுமையை இழந்த கமலினி டீச்சர் விசாரிக்காது, வார்த்தைகளைக் கொட்டிவிட்டார். அதிபர் அலுவலகத்திற்கு வரச் செல்லி அனுப்பினார்கள். "நீ! திருடிவிட்டாய். நாளை உன் பெற்றோர்களை அழைத்து வா! இல்லையென்றால், இனி பள்ளிக்கு வராதே! என்று அதிபர் திட்டிவிட்டார். நான் அன்றிலிருந்து பள்ளிக்கே செல்லவில்லை. வீட்டிலுள்ள கோழிகளையும், ஆடுகளையும் அன்பாக பார்த்துக் கொண்டேன்.

போன வாரம் புதிதாக, என்னைப் போன்ற கண் தெரியாத பிள்ளைகளுக்கு என, படித்துக்கொடுத்த ஆசிரியர் ஒருவர் வந்திருப்பதாக, கலா அக்கா அம்மாவிடம் கூறினார்.

ம்ம்ம்ம்... சரி விடு. ஒருவிடயம் புரிந்துக்கொள்! நீ கண் தெரியாத பிள்ளைதான். ஆனால் உனக்குள் ஓராயிரம் திறன்கள் ஒழிந்துக்கிடக்கிறன. உன்னுடைய வாழ்க்கையில் நடந்த, ஒவ்வொன்றையும் அழகாக தமிழ் சொற்களைக் கோர்த்து கூறும்போது, நீ கதைகளை எழுதும் திறனை கொண்டிருக்கிறாய் என ,நான் உணர்கிறேன். நான் உன்னை நம்புகிறேன்.

நடந்தவற்றை யோசிக்காதே! மாற்றுத்திறனாளிகளுக்கு என போட்டிகள். சர்வதேச ரீதியில் நடைப் பெறவுள்ளது. அதில் கலந்துக் கொண்டு, உன் திறகைகளை காட்டவேண்டும் என்றார். போட்டி நாளும் நெருங்கியது. போட்டியன்று நான் கதை கூற, மாணவன் ஒருவனால் எழுதப்பட்டது. என்னுடைய கதை முதல் பரிசினைப் பெற்றது. மாற்றுத்திறனாளிகள் தினமான டிசெம்பர் 3ஆம் தேதி என்னுடைய, கதையினை கணேசலிங்கம் சார் வாசித்தார். அக்கதையினை கேட்ட, கமலினி டீச்சரும், அதிபரும் செய்த தவறினை நினைத்து, மனம் வருந்தினார்கள். நான் இன்று  கணேசலிங்கம் சார் மூலம் மாற்றுத்திறனாளிளைக் கண்டறிந்து, அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் உயர் கல்வி அமைப்பில் பணி புரிகிறேன். திறமைகள் இல்லாத மனிதர்களே. யாரையும் ஒதுக்கிவிடக்கூடாது. இறைவனின் கவனயின்மையால், படைக்கப்பட்ட மாற்றுத்திறாளிகளிடமும் எதனையோ! திறமைகள் ஒழிந்துக் கிடக்கின்றன. வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் போது, சமூகத்தில் தனக்கென ஓரிடத்தை பெற்றுக்கொளுகிறார்கள்.

நன்றி!

பரமசிவம் இந்துஜா

இலங்கை.

 

 

15.K2K 00079

பிராயச்சித்தம்

ஜெசிகா..கடந்து செல்கையில் நாசியைத் தீண்டியது நறுமணம், என்னருகே அவள் வருகையில் பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது மனம், எத்தனை அழகு, எத்தனை நளினம், பழகுவதில் இனிமை, உதவிடும் கருணை அத்தனையும் இணைந்த பேரழகின் வடிவமாய் ஜெசிகா. அவள் என் உள்ளத்தில் குடிவந்து பலநாட்களாகிறது, காதலைச் சொல்ல இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து இணைந்த அழகுப்பதுமைதான் ஜெசிகா. கல்லூரி நாட்களில் நான் காணாத அழகிகளா, அவர்களின் உதட்டுச் சாயத்தையும் நவநாகரிக உடைகளையும் தாண்டி பொய்மை முகத்தினைக் கண்டவன் நான். இங்கும் இருபத்தைந்து பெண்கள் பணிபுரிகின்றனர். ஆனால் ஜெசிகாதான் என்னவள் என மனம் சொல்கிறது..துணிந்து அவளை அழைத்தேன். "ஜெசிகாநீ தப்பா நினைக்கலேனா இன்னைக்குச் சாயந்திரம் காபி ஷாப்புக்கு போலாமா" என்னை ஊடுருவிப் பார்த்தாள் ஜெசிகா. மறுத்துவிடுவாளோ. இருதயம் தாறுமாறாக அடித்துக்கொண்டது. ". கே..ஷ்யாம்.. ஆனா அரைமணி நேரம்தான் டைம்..நான் ஏழுமணிக்கு இன்னொரு இடத்துல இருக்கணும். குடிசைப்பகுதியில இருக்கற இருபது குழந்தைகளுக்கு இலவசமா அங்கேயே போயி பாடம் சொல்லித் தரேன். பசங்க நான் போகலைன்னா ஏங்கிடுவாங்க.." தலையாட்டி ஏற்றுக்கொண்டேன் நான். ஆறுமணிக்கு பிரபலமான காபிஷாப்பில் எதிரெதிரே நானும் ஜெசிகாவும்.. "சுத்தி வளைச்சு சொல்ல விரும்பல.. நான் உன்னை விரும்பறேன்..வாழ்க்கை முழுக்க நீ கூட வந்தா நல்லாயிருக்கும்னு தோணுது. நான் காதலைச் சொல்ற முதல் பொண்ணு நீதான்..உனக்கும் விருப்பமிருந்தா நாளைக்கே வீட்ல பேசறேன்.."

ஜெசிகாவின் முகத்தில் இலேசாய் அதிர்ச்சி. சிலநிமிட மௌனத்துக்குப்பின் பேசினாள். "உண்மையைச் சொல்லணும்னா நானும் உங்களைக் காதலிச்சுட்டுதான் இருக்கேன். நீங்களும் என்னை விரும்பறது இன்பஅதிர்ச்சியா இருக்கு..இந்த அன்பை ஏத்துக்கற தகுதி எனக்கிருக்கான்னு தெரியலை.. ஏன்னா.."கொஞ்சம் தயங்கிவிட்டுச் சொன்னாள். "நான் பெண்ணாய் மாறிய ஆண்..தெளிவா சொல்லணும்னா திருநங்கை.. என்னால உங்களுக்கு எல்லா பெண்களைப் போல அன்பையும் சுகத்தையும் தரமுடியும். ஆனா தந்தைங்கற அந்தஸ்தைத் தரமுடியாது. அதுமட்டுமில்ல நாளைக்கே என்னைப் பத்திய உண்மை வெளியே தெரிஞ்சா பல சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.  அவமானங்களை படிக்கல்லா மாத்திதான் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கேன்.. இப்பவே உங்க முடிவு மாறியிருக்கும்னு எனக்குத் தெரியும்.. பரவாயில்லை நண்பர்களா உறவைத் தொடர்வோம் ஷ்யாம்.. "

ஜெசிகா போனபின்னும் வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன் நான். ஏனோ மனம் கடந்த காலத்தை அசைபோடத் தொடங்கியது. பால்ய வயதில் செய்த  மிகப்பெரிய தவறு முள்ளாய் நெஞ்சை பிறாண்டிக் கொண்டிருக்கிறது. அப்போது ஷ்யாமுக்கு பதினாறு வயதிருக்கும். உடன்பிறந்த திவாகருக்கு அப்போது பதிமூன்று வயது. திடீரென அவன் போக்கில் மாறுதல். நடையில் வித்தியாசம்..பேச்சில் மென்மை. குழைந்து குழைந்து பேசுவான்.. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தனியறைக்குச் சென்று தாழிட்டுக் கொள்வான்..

அன்று ஷ்யாமுக்கு இருப்பு கொள்ளவில்லை., ஜன்னலைத் திறந்து எட்டிப் பார்த்தான். அம்மாவின் புடவை வளையல்களை அணிந்துகொண்டு கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தான் திவாகர். பார்த்ததும் பதறி ஓடிப்போய் அம்மாவிடம் சொல்ல அவள் அப்பாவிடம் சொல்லி உடம்பெல்லாம் வீங்கும்படி வெளுத்து வாங்கிவிட்டார் அப்பா.

'அடிக்காதிங்கப்பா..இனிமே இப்படிச் செய்ய மாட்டேன்..' அவன் கதறிய கதறல் இன்னும் செவிகளுக்குள் எதிரொலிக்கிறது. மறுநாள் விடிந்தபோது திவாகர் அறைக்குள்ளேயே புடவையில்  தூக்கிட்டு இறந்து போயிருந்தான். அந்த ரணம் இன்னும் மனதில் மாறாத வடுவாய். இதோ.. பிராயச்சித்தம் செய்ய ஒருவாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெசிகாவின் மீது இன்னும் அன்பு கூடிப்போயிற்று. எனக்கும் பிடித்திருக்கிறது. அவளுக்கும் பிடித்திருக்கிறது. சமூக நடைமுறைகளை புறம்தள்ளி மணக்க ஷ்யாமின் மனம் தயாராகி விட்டது. அவளின் எண்ணை அலைபேசியில் அழுத்தி குறுஞ்செய்தியை அனுப்பினான். 'அன்பு ஜெசிகாவுக்கு ஆயிரம் முத்தங்களுடன் காதலன் ஷ்யாமின் இரவு வணக்கம்..'மறுமுனையில் பார்த்த ஜெசிகாவின் முகத்தில் வெட்கச்சிவப்பு படர்ந்தது.

கருத்து: மூன்றாம் பாலினருக்கும் மனமுண்டு..அவர்களை ஏற்றுக்கொண்டால் புதிய சமுதாயம் மலர இடமுண்டு.

பெயர்  கி.இலட்சுமி

 

 

16.K2K 00080

வாழ்த்தி வரவேற்போம்!

இன்று காலையில் இருந்து கோர்ட்டில் நடந்த விஷயங்களை மனதில் அசை போட்டுக் கொண்டே கோர்ட் காரிடாரில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த நரேனின் கவனத்தை அந்த இளம் பெண் ஈர்த்தாள்.அவளுடைய முகம் என்னவோ பரிச்சயமாக இருந்தது. தோளில் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு ஜோல்னாப் பை.கையில் ஒரு ஃபைல். காலையில் இருந்து அவளைப் பலமுறை கோர்ட் வளாகத்தில் பார்த்து விட்டான். அங்குமிங்கும் அலைந்து களைத்துப் போய்த் தோல்வியை ஏற்றுக் கொண்ட முகபாவத்துடன் சோகமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். என்னவோ அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மனதில் சின்ன ஆசை எட்டிப் பார்க்க அவள் அருகில் சென்று அவளுடைய தோளைத் தட்டி ஆதரவாகக் கூப்பிட்டான் நரேன்.திடுக்கிட்டுப் போய் சடாரென்று எழுந்த அந்தப் பெண் நரேனை ஏறிட்டுப் பார்த்தாள். "நீ நீங்கள் நரேன் தானே!" "ஆமாம். நீங்கள்? பார்த்த மாதிரி இருக்கிறது முகம். ஆனால் சட்டென்று ஞாபகம் வரவில்லை. எங்கோ சந்தித்திருக்கிறோம். நீங்கள் என்னுடைய ஸ்கூல் ஃப்ரண்ட் ஆத்விக்கின் சகோதரியா? அவனுடைய ஜாடை தெரிகிறது உங்கள் முகத்தில்." ஆச்சர்யமும் ஆனந்தமும் ஒன்றாக அந்தப் பெண்ணின் முகத்தில் கூத்தாடின. "அட! நல்ல மெமரி தான் உனக்கு.நான் ஆத்விக்கே தான்.இப்போது ஆதிரா." பெண்ணாக மாறி விட்டத் தனது நண்பனை ஆச்சர்யத்துடன் பார்த்தான் நரேன். அவனைக் கோர்ட் வளாகத்தில் இருந்த தன்னுடைய சேம்பருக்கு அழைத்துச் சென்றான் நரேன். நரேன் வளர்ந்து வரும் சிவில் லாயர்.டெல்லியில் துவாரகா கோர்ட்டில் அவனுக்குத் தனி அறை அதாவது சேம்பர் இருநதது.ஆத்விக்கும் நரேனும் டெல்லியின் வசந்த் விஹாரில் இருக்கும் பிரபல பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டு பேருமே படிப்பில் பயங்கரச் சுட்டி.ஆத்விக் படிப்புடன் சேர்த்து எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸ் பலவற்றிலும் பங்கெடுத்துக் கொள்வான்.நல்ல நடிப்புத் திறமை.ஆண் குரல்,பெண் குரல் இரண்டிலும் மாற்றி மாற்றிப் பாடிக் கைதட்டல்களைப் பெறுவதில் கெட்டிக்காரன். அநாயாசமாகப் பெண் வேடங்கள் போட்டு சிறப்பாக நடிப்பான். நரேன் நல்ல மேடைப் பேச்சாளி. நிறைய டிபேட்டுகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றவன். பிளஸ் டூ முடித்ததும் ஆத்விக் ஹிந்து காலேஜில் ஃபிஸிக்ஸ் படிக்கச் சென்றான். நரேன் ஹைதராபாத் லா காலேஜில் லா படிக்கச் சென்றான்.அதற்குப் பிறகு இன்று தான் சந்திக்கிறார்கள் இருவரும். "நீ எதற்காக கோர்ட்டிற்கு வந்திருக்கிறாய்? என்ன பிரச்சினை என்று சொல்." நரேன் ஆத்விக்கை இல்லை ஆதிராவைக் கேட்க ஆதிரா பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தாள். "நரேன் கல்லூரியில் பி.எஸ்.ஸி முடித்து டெல்லி யுனிவர்சிட்டியில் எம்.எஸ்.ஸியும் முடித்து நெட் எக்ஸாம் எழுதி நல்ல ஸ்கோருடன் க்ளியர் செய்திருக்கிறேன்.எனக்கு இங்கு ஒரு பிரபல கல்லூரியில் வேலைக்கு விண்ணப்பித்து லெக்சரர் வேலைக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரும் கிடைத்து விட்டது.வேலைக்குச் சேரப் போன என்னை சேர அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்கள். என்னுடைய ஜெண்டர் தான் அவர்களுக்குப் பிரச்சனை. ஆணாக இருந்து பெண்ணாக மாற வேண்டும் என்ற தவிப்பில் நான் மாறி விட்டேன்.இன்று உலகின் கண்களில் நான் ஒரு திருமங்கை. இது என்னுடைய தவறா? என்னுடைய நியாயமான மன உணர்வுகளை ஏற்றுக் கொண்டது தவறா? அந்தக் காரணத்தால் என்னுடைய கல்வித் தகுதியின் அடிப்படையில் கிடைத்த வேலையைப்பறிப்பது சரியான செயலா? கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கேஸ் ஃபைல் செய்ய வந்தேன்.எனது கேஸை எடுத்துக் கொள்ள எந்த வக்கீலும் தயாராக இல்லை." "அப்படியா.என்னிடம் காட்டு உன்னுடைய தகுதிச் சான்றிழ்களையும் கல்லூரியில் இருந்து வந்த நியமனக் கடிதத்தையும்" நரேன் ஆதிராவின் கேஸை எடுத்துப் போராடி ஆதிராவிற்கு வெற்றியும் வாங்கித் தந்தான். அந்த கேஸ் மிகவும் ஸென்ஸேஷனல் கேஸாக டெல்லி வட்டாரங்களில் பேசப்பட்டது. தன்னை மறுத்த கல்லூரியில் நஷ்ட ஈட்டுத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு அந்த வேலையை மறுத்து விட்டு வேறு ஒரு கல்லூரியில் இன்று பணி புரிகிறாள் ஆதிரா.தன்னை மதிக்கும் இடத்தில் வேலை பார்க்கிறாள். இப்போது ..எஸ்.பரீக்ஷைக்கும் தயார் செய்து வருகிறாள். அவள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

திருநங்கைகளுக்கும் சமுதாயத்தில் அந்தஸ்தும் உரிமைகளும் சமமாகத் தரவேண்டும்.

-புவனா

 

 

17.K2K 00081

இப்படிக்கு நான்...

நான்... நான்தான் பேசுகிறேன்...இப்பொழுதாவது கேட்கின்றதா?...மிகுந்த வருத்தத்தோடும் கண்ணீரோடும் எழுதுகிறேன்.

பிறப்பால் வளர்ப்பால் ஆண், ஆனால் மனதால் ஒரு பெண். சமூகம் வைத்த பெயர், 'அரவாணி'. அறியாப் பருவத்தில் வித்தியாசமாய் இருக்கிறேன் என்பதற்காகப் பெற்றோரால் அனாதை இல்லத்தில் விடப்பட்ட அபலை நான். அங்கு எனக்கென்று யாருமில்லை. தனிமை  மட்டுமே என் வாழ்க்கை.

இருட்டில் ஒளிரும் மின்மினிப் பூச்சிபோல, என் வாழ்வின் ஒளியாக நான் கருதியது படிப்பு ஒன்றே. படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று ஆசை. ஆனால் என்னை போன்றோருக்கு பள்ளியில் இடம் கொடுக்கத் தயாராக எவருமில்லை. இனம் இனத்தைச் சேரும் என்பதற்கேற்ப என்னைப் போன்றிருக்கும் சிலரின் பேருதவியால் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பள்ளியில் நான் அனுபவித்தத் துன்பம் சொல்லிமாளாது. எனக்கென்று ஓரத்தில் இடம். யாரும் உடன் பேசமாட்டார்கள், ஆசிரியர்கள் உட்பட. காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளால் ஏளனம் செய்யப்பட்டேன். எந்த பாலினத்தவரின் கழிவறைக்குச் செல்ல வேண்டுமென்ற குழப்பதினால்

காலையிலிருந்து சாயங்காலம் வரை அடக்கிக்கொள்வேன். என்னைத் தீண்டினால் பாவம் என்பார்கள். பிற மாணவர்களின் பெற்றோர் என்னைப் பார்த்தாலே முகம் சுழிப்பார்கள். அனாதை இல்லத்தை விட்டு வெளியே சென்றால் மிஞ்சியது அவமானம் மட்டுமே. மனிதன் உயிரோடு தான் இருக்கிறான், ஆனால் மனிதநேயம் செத்துவிட்டதாய் உணர்ந்தேன்.

போன ஜென்மத்தில் செய்தத் தவறு என்னவென்று அறியாமல் தவித்திருக்கிறேன். யாராவது அன்பாகப் பேச மாட்டார்களா என்று துடித்திருக்கிறேன். பெற்றோரை ஒரு முறையேனும் காண வேண்டுமென்று  ஏங்கியிருக்கிறேன். எதுவுமே நடக்கவில்லை. கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு இரவு பகலாகப் படித்தேன். இறுதியாண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். இருப்பினும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காததால், தனியார் கல்லூரியில் விண்ணப்பிக்க விரும்பினேன். கழிவறையில் கூட இடம் குடுக்காத பாவிகள் கல்லூரியில் குடுப்பார்களா என்ற சந்தேகம் தடுத்தது. எனினும் முயற்சி செய்து பார்க்க விரும்பி விண்ணப்பித்தேன்.

நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்ததால் நம்பிக்கையும், சந்தோஷமும் அடைந்தேன். ஆனால் தேர்வுக்குச் சென்ற என்னை மேலும் கீழும் பார்த்து கூனிக்குறுகச் செய்தார்கள். புழு பூச்சிக்குக் கூட மதிப்புண்டாம் இவ்வுலகில் என்னைப் போன்றோருக்கு இல்லை. கல்லூரியில் இடமில்லை என்றார்கள். "ஏன் ஒரு சீட் தரக்கூடாது..?" என்று நியாயம் கோரியதற்காக, நியுசன்ஸ் என்று கூறி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டேன். செய்யாத தவறுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டேன். தகாத வார்த்தைகளும் பாலியல் சீண்டல்களும் இரவு முழுவதும் தொடர்ந்தன. எவ்வளவு கெஞ்சியும் விடுவதாயில்லை. வக்கீலை கூப்பிடவேண்டுமென்றேன், பொய்யான பாலியல் புகாரை என் மீது சுமத்தினார்கள். கேட்பதற்கு நாதியற்று அழுது புலம்பினேன். விரக்தியின் உச்சத்தில் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுக்கிறேன். இதை நீங்கள் படித்து முடிக்கும்போது நான் இவ்வுலகில் இருக்கப்போவதில்லை. இருப்பினும் என் நிலை உலகறிய வேண்டுமென எழுதுகிறேன்.

மனிதனை மனிதனாய் மதியுங்கள். நாங்கள் கேட்பது சிறிதளவு கருணை தான். குடுக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை எங்களை வதைக்காதீர்கள். மூன்றாம் பாலினமாய்ப் பிறந்தது எங்கள் தவறல்ல, இது காலத்தின் கட்டாயம். புரிந்து கொள்ள முயற்சியாவது செய்யுங்கள். மனிதம் தழைக்கட்டும்!

இப்படிக்கு,

நான்

கருத்து

எப்பாலினதவராய் இருப்பினும் அவர்களை மரியாதையோடு நடத்துவோமாக. அவர்கள் திறமைகளை ஊக்குவித்து கௌரவிப்போமாக. வேற்றுமையை விடுத்து ஒற்றுமையைக் கடைபிடிப்போமாக!

-Narmada

 

 

18.K2K-00084

எல் ஜி பி டி / LGBT (மூன்றாம் பால்) நான் தாம்பரம் ஸ்டேசனில் காத்துக் கொண்டிருந்தேன், சென்ட்ரல் செல்ல. என் ஃபேஸ்புக் நண்பர் (நண்பி) நெல்லூரில் இருந்து வருகிறாள் ஒரு வேலை நேர்முகத் தேர்வுக்காக. அவள் பெயர் தர்சனா. சென்னை வருவது முதல் முறை. அவள் உறவினர் இருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை. நேரில் அறிமுகம் இல்லாத ஃபேஸ்புக்கில் நட்பு மலர்ந்த என்னை நம்பி வருகிறாள். நான் தாம்பரம் அருகில் ஒரு கல்லூரியில் .ஸீ.. இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். அவளோ எம்.. ஸோஸியாலஜி முடித்து எம்.ஃபில் படிக்கிறாள். அவளுக்காக நான் எக்மோர் ஒய் டபுள்யூ ஸீ வில் ஒரு .ஸீ அறை புக் செய்து வைத்திருந்தேன். வீட்டில் என் நண்பன் ஒருவனைப் பாக்கப் போரேன்னு பாதிப் பொய் சொல்லிட்டு போனேன். நெஞ்சு கொஞ்சம் படபடத்தது. சற்று நேரத்தில் அவள் வந்து இறங்கி விட்டாள் தேவதை போல் இருந்தாள். தமிழ் நடிகைகள் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி விடுவாள், அப்படி ஒரு அழகு. கட்டி அணைத்தாள். பதறிப் போனேன். ஓலா புக் பண்ணினேன் நானே. எவ்வளவு சொல்லியும் பின்இருக்கையில் அவளுடன் இருக்க மறுத்து, முன் சீட்டில் அமர்ந்தேன். ஒய் டபுள்யூ ஸீ சேர்ந்தோம். அவள் அறை வாசல் வரை சென்று, “நான் வீட்டுக்கு போகலாமா ?” என்றேன். அவள், “ஃபிலிப், என் எம் ஃபில் டிசர்ட்டேஸன் டிராஃப்ட் ரெடி. நாளைக்குத் தான என் இன்டர்வியூ. பிளீஸ் என் டிசர்ட்டேஸனைப் படிச்சிட்டு, இம்ப்ரூவ் பண்ண ஷஜஸன் குடு.” சற்று தயக்கம் இருந்தாலும் ஒத்துக் கௌண்டேன். அது ஒரு ரியல் கேஸ் ஸ்டடி. தேஜா ஒரு சிறந்த மாணவன். ஒரே மகன், செல்லப் பிள்ளை. நல்ல மா நிறம். அழகில் ரம்பா, மேனகாவிற்குப் போட்டி. சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும்.

12 ஆம் வகுப்பு விடுமுறையின் போது ஐதராபாத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு உறவினர் திருமண வீட்டிற்கு சென்று இருந்தான். 18 வயது ஆகி இருந்தது. ஒத்த வயது பசங்க எல்லோரும் விளையாடி களைத்து உண்டு உறங்கினர் ஒரே அறையில். நடு இரவில் பக்கத்தில் படுத்திருந்த பையன் நன்கு கட்டி அணைக்கத் தொடங்கினான். முதலில் தட்டிவிட நினைத்தான். ஆனால் விடவில்லை. தட்டவும் இல்லை; திட்டவும் இல்லை.

மறுநாள் கல்யாண மண்டபத்திலும் ஒன்றாக சுற்றினர். ஒன்றாக உண்டனர். பிரியும் போது ௐட்ஸப் நம்பர் எக்சேஞ்ச் செய்து கொண்டனர். இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர். ஐதராபாத் ஐஐஐடியில் தேஜாவும், நிஜாம் கல்லூரியில் அவன் நண்பன் ஆர்யாவும் சேர்ந்தனர். ஆர்யா ஹாஸ்டலில் இருந்தான். தேஜா வீட்டில் இருந்தான். இருவரும் அடிக்கடி சந்தித்தனர். தத்தம் வகுப்பில் முதல் இடம். தேஜா ரகசியமாய் தன் அம்மா உள்ளாடை அணிவான். அதை ஆர்யா அறைக்கும் எடுத்துச் செல்வான். ஆர்யா தேஜாவுக்கு புதிய உள்ளாடை வாங்கித் தருவான். இருவரும் 377 பி ஸீ சட்டப் பிரிவு செல்லாது என சுப்ரீம் கோர்ட் அறிவித்த போது அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். எல் ஜி பி டி பேரேட்டில் பங்கேற்றனர். அது சம்பந்தப் பட்ட நூல்களைப் படித்தனர். நல்ல படங்களைப் பார்த்தனர். நெக்லஸ் ரோடு, லும்பினி பார்க், ஹூஸைன் சாகர் லேக், பிர்லா கோவில் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதலர் போல ஒன்றாக சுற்றினர். எம் என் ஸியில் பணி கிடைத்தது இருவருக்கும். தேஜா வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினர். தேஜா மறுத்தான். கெஞ்சினான். கதறினான். கடைசியில் தான் ஒரு ஆண் அல்ல; மூன்றாம் பால் என வெளிப்படையாகத் தெரிவித்தான்.  தந்தை ஒப்புக் கொள்ளாமல் டாக்டரிடமும், கௌன்ஸலரிடமும், மலையாள மந்திரவாதியிடமும் அழைத்துச் சென்றார். தேஜா தன்னைப் பற்றியும், ஆர்யா மீதுள்ள நட்பு கலந்த அன்பு பற்றியும் நேர்த்தியாக தாயின் மடியில் படுத்துக் கிடந்து எடுத்துரைத்தான். பாசமாக வேண்டினான்.

அம்மா அறிவாளி. நன்கு உணர்ந்து கொண்டாள். ஆனால் அப்பாவுக்கு பயந்தவள். “நீ ஊருக்காக ஒரு திருமணம் செய்து கொள். உன் நண்பனுடன் உறவு வைத்துக் கொள்என்று விநோதமான அறிவுரை தந்தாள் அம்மா. இது ஒரு அநியாயம் என்றான் தேஜா.

ஒரு சினிமா வில்லன் போல, ஆள் வைத்து அடித்து நொறுக்கினார் ஆர்யாவை, தேஜாவின் தந்தை. மனம் உடைந்த தேஜா தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான். ஒரே மகனை இழந்த பின், அவனது தந்தை, அவன் வைத்திருந்த நூல்களைப் படித்து, படங்களைப் பார்த்து, அறிந்து கொண்டார், இது நோயும் அல்ல, இயற்கைக்குப் புறம்பும் அல்ல, இது ஒரு ஒப்புக் கொள்ள வேண்டிய சாதாரண விதி விலக்கு என்று. ஆர்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். “ஜதராபாத் தேஜா வானவில்என்று ஒரு என் ஜி அமைத்தார். தன் 100 கோடி ரூபாய் சொத்து முழுவதும் அதற்காக அர்ப்பணித்தார். ஆர்யாவை அதன் முழு நேர டேரக்டராக நியமித்தார்.

நூலகம், திரையரங்கு, கௌன்ஸலிங் சென்டர், டாக் ஷோ, மாதாந்திர கூட்டம், ஹெல்ப் லைன் கால் சென்டர் , இவை அனைத்தும் எல் பி ஜி டி நலம் பேண நன்முறையில் நடை பெறுகின்றன. ஐதராபாத் பல்கலைக் கழகம், ஓஸ்மேனியா பல்கலைக் கழகம், எஸ் பி, ஐஐஐ டி, நிஜாம் கல்லூரி ஆகியவற்றில் முதல் இடம் பெறும் மூன்றாம் பால் (எல் பி ஜி டி) மாணவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசு அளிக்கிறது இந்த என் ஜி .  எல் ஜி பி டி சம்பந்தப் பட்ட தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கு அனைத்திற்கும் ஆர்யா ஒரு முக்கியப் பேச்சாளராக அழைக்கப் படுகிறார். ஒரே பாலார் (3ஆம் பாலார்) திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் பெற, சிறப்பு திருமணச் சட்டம், 1954, இந்து திருமணச் சட்டம், 1955, மற்ற சமய சட்டங்கள் ஆகியவற்றில் தேவையான சட்டத் திருத்தங்கள் 21 ஆம் நூற்றாண்டின் 21ஆம் ஆண்டிற்குள் (2021) கொண்டுவர ஆர்யா பல்வேறு கட்சித் தலைவர்களையும், எம் பிக்களையும் வீடியோ அழைப்பு மூலம் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

பிற மாநிலங்களில்ஐதராபாத் தேஜா வானவில்போன்ற  அமைப்புகள் நடத்த இலவச பயிற்சியும் தரப் படுகிறது. தர்சனா இந்த டிசர்டேசனுக்காக தேஜா, ஆர்யா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஆசிரியர்கள் பலரிடமும் இன்டர்வியூ செய்திருந்தாள்.

கேஸ் ஸ்டடி ஆராய்ச்சி அருமையாக செய்து இருந்தாள். இதைப் படித்து எனக்கு ஒரு புதிய உலகமும் புதிய உண்மையும் புலம் பட்டன. ஓரினச் சேர்க்கை (எல் ஜி பி டி) விபச்சாரமோ அல்லது வியாபாரமோ அல்ல என்று சரியாகப் புரிந்து கொண்டேன். ஒரு புதிய பரிமாணத்தை சரியாக அறிந்து கொள்ள உதவிய தர்சனாவுக்கு நன்றி சொல்லி நடை கட்டினேன், வீட்டிற்கு, உண்மையே சொல்வேன் என்ற உறுதியடன். உள்மனம் சொன்னது, சென்னையிலும் ஒரு வானவில் அமைக்க வேண்டும், வெகு விரைவில் என்று.

பின் குறிப்பு: கதையும், அனைத்து கதாப் பாத்திரங்களும் முற்றிலும் கற்பனையே.

Moral / நீதி: எல் ஜி பி டி ஒரு நோய் அல்ல; சட்டத்திற்கோ, நெறிகளுக்கோ புறம்பானதும் அல்ல. இது பற்றிய விழிப்புணர்வு பொது மக்கள் மத்தியில் நன்கு பரவ வேண்டும்; பரப்ப வேண்டும். அனைவரையும் மதிப்போம்; மனித நேயம் போற்றுவோம்.

 

-சிறுத்தொண்டன் சு.லி. பாண்டியன்

 

 

19.K2K – 00090

வீட்டிற்குள் நுழைந்த குணா தன் அம்மாவிடம் கேட்டான்.‘இன்னிக்கு டான்ஸ் கிளாசுக்கு கவிதாவை யாரு கூட்டிட்டு போனா'‘ஏண்டா, உன் பிரண்டு நளினி தான்'‘உனக்கு என்ன ஆச்சு.. நீ கொண்டு போய் விட வேண்டியதுதானே’’அவதான் நான் கொண்டு விட வான்னு கேட்டா' சரின்னு சொன்னேன்.. ‘அவ கூட எல்லாம் அனுப்ப வேண்டாம்முடிஞ்சா நீ கொண்டு விடு' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான் குணா….

குணா அவளின் மூத்த பையன்., காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறான். நான்கு நாட்களுக்கு முன்னாடி அவனோட கிளாஸ்மேட் நளினியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தான். அவளும் ரொம்ப நல்லா பழகினா கவிதாட்ட ரொம்ப அன்பாக இருந்தா குணாவுக்கு நளினி கவிதாவிடம் அன்பாக இருந்தது அவ்வளவாக பிடிக்கவில்லை போலாம்போலாம்என்று அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். அவன் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டான். நேரம் பார்த்து அவனிடம் இதைப்பற்றி பேச வேண்டுமென்று வித்யா நினைத்துக்கொண்டாள். அவர்களின் அம்மா மகன் உறவு மிகவும் ஆரோக்கியமான அழகான உறவு, குணா மிகவும் பாசமானவன் ஆனால் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டான்.

ஒருநாள் குணாவும் அவள் அம்மாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.‘LBGT னா என்னன்னு தெரியுமாஅது LGBTQ மா' ‘உனக்கு அதைப் பற்றி தெரியுமா டா'

‘Lesbian gay bisexual transgender Q I think queer'‘எப்படிடா உனக்கு தெரியும்

நான் இப்ப தான்டா அதை பத்தி கேள்வி பட்றேன். உனக்கு தெரிஞ்சிருக்காது னு நினைச்சேன்' ‘அம்மா நான் காலேஜ் படிக்கிறேன். எல்லாம் தெரிஞ்சிருக்கணும் உலகம் எப்படியோ போயிட்டு இருக்கு மா' ‘நளினி உனக்கு ஞாபகம் இருக்கா அவ bi…. Bisexual' ‘என்னடா சொல்ற அப்புறம் எதுக்குடா அவ கூட பழகற' ‘அம்மா அது அவளோட சாய்ஸ்காலேஜ்னா எல்லாம் தான் இருக்கும்நிறைய பேர் இப்படி இருக்காங்க. அவங்கள அப்படியே ஏத்துக்கணுமா. இந்த ஒரு விசயத்துக்காக மட்டும் அவங்க ஒதுக்கி வைக்க கூடாது மா' ‘பாதிப்பு வராம இருக்கனும் னு தானே அன்னிக்கு அப்படி கோவபட்ட'‘ஆமா எனக்கு எப்படி handle  பண்ணனும் னு தெரியும் கவிதாவுக்கு தெரியுமா'‘ அதான் அன்னிக்கு அப்படி சொன்னயா?’ ‘ஆமா’ ‘இது ஒரு மன ரீதியான பிரச்சினை னு தோணுது'

ம்இருக்கலாம்' ‘வெஸ்டர்ன் கல்ச்சர் நம்மளோட கலாச்சாரத்தை ரொம்ப பாதிக்குது னு தோணுது' ‘அம்மா, பொண்ணுங்க தம்மடிக்கிறதும் தண்ணி அடிக்கிறதும் ரொம்ப சாதாரணமா போச்சுஇது வெஸ்டர்ன் கல்ச்சரோட பாதிப்பா இருக்கலாம். ஆனா ரிசர்ச் LGBT ஒரு ஜெனடிக் ப்ராப்ளம் னு சொல்றாங்க' ‘Section 377 பத்தி தெரியும் தானே இப்போ லீகலா ஏத்துக்கிட்டாங்க' ‘ம் தெரியும்'

வருத்தத்தில் அவளின் முகம் வாடிப்போனது.‘மனரீதியா தான் இப்போ நிறைய பேர் பிரச்சினைகளை சந்திச்சுட்டு இருக்காங்க. பாலியல் பற்றிய கல்வி அறிவும்  கண்டிப்பா தேவை னு தோணுது' ‘உனக்கு இது பிரச்சனையா தெரியுது இதெல்லாம்  இப்ப ரொம்ப கேஷுவல்' ‘கேஷுவலா நடக்கறதுனால அது பிரச்சனை இல்லைன்னு ஆயிடுமாநான் நளினியோட அம்மா அப்பாட்ட பேசவா' ‘வேண்டாம் மா இதை இப்படியே விட்டுவிடு. இதுவும் ஒரு பீல் தான் மாஇயற்கைக்கு விரோதமானதுனு நினைக்கறவங்களுக்கு இதை ஏத்துக்க முடியல அவ்வளவு தான். எந்த ஒரு ஃபீலும் கண்ட்ரோல் இல்லாம போகும் போதுதான் பிரச்சனை' இவ்வளவு ஈஸியா சொல்றான். ஏத்து கொள்ள முடியாத  ஒரு விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் டா சொல்றானே. உலகம் இவ்வளவு மோசமாக வா போயிட்டு இருக்குவரும் காலங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது அதிசயமாக போய்விடுமோ? நளினியை கூப்பிட்டு பேசிப் பார்க்கலாமா? இல்ல அவ அப்பா அம்மாட்ட பேசலாமா? இப்பிரச்சனையை எப்படி தீக்கறது? உனக்கு தான் பிரச்சனையா தோணுது னு சொல்றான் குணா. ஒருவேளை அவன் சொல்றது சரிதானாநான் தான் ரொம்ப பின்தங்கி இருக்கேனா? எல்லாமே ஜஸ்ட் லைக் தட் டா போயிடுச்சா…. இது பெரிய பிரச்சனையே இல்லையா? கேள்விகளால் தவித்துப் போனாள் வித்யா.

அம்மா, என்ன ரொம்ப யோசிக்கிற' ‘ஒன்னும் இல்ல'

மனச போட்டு ரொம்ப குழப்பிக்காத' ‘இல்லடா எங்கயோ நடக்குது னு கேள்வி படறதுக்கும் நேர்ல பாக்கறதுக்கும் உள்ள வித்தியாசம் தான் சரியாயிடும் ஏத்துக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு அவ்வளவுதான்'

ஓகே மா.. பாத்துக்கோ.. குட் நைட் நான் தூங்க போறேன்.

குட் நைட் டா..

#LGBTQ ஒரு சில மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல

-சுகமதி

 

 

20.K2K00099

"அடுத்த வீட்டு அம்புவுக்கு இது எட்டாம் மாசமாம் ஆம்பள புள்ளதான் பொறக்கணும்னு புருஷன் சொல்லிட்டான் ----' எதிர் வீட்டில் இருந்து கசிந்து வந்த பாடல் கேட்டை திறந்து கோலம் போட வந்த ருக்குவின் முகத்தை சுளிக்க வைத்தது.

சென்னை புறநகர் பகுதியில் ருக்குவின் வீடு.  ருக்குவின்  எதிர் வீட்டில்  சேவை நிறுவனம் பெண்கள் முன்னேற்றம் திருநங்கைகள்  மேம்பட  பாடுபடும் ஓரு டிரஸ்ட். அங்கே இருந்த திருநங்கைகள் ஓரு கலைகுழு அமைத்து சமூக விழிப்புணர்வு அளிக்கும் கலை நிகழ்வுகள் கிராமம் கிராமமாக சென்று நடத்தி வந்தனர்.  சுயஉதவி குழுக்களாக செயல்பட்டு அரசு வாங்கி கடன் பெற்று சிறு தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டி ஓரு சிறப்பான வாழ்க்கை அமைத்து கொண்டு இருந்தார்கள்.  திருநங்கைகள் ஓரு பத்து பேர் கும்பலாக அங்கே இருந்தனர் மேல மாடியில்  டிரஸ்ட் அலுவலகம். இப்போது அவர்கள் பெண் சிசு கொலை தடுத்தல் விழிப்புணர்வுக்கு ஓரு நாட்டுப்புற பாடல் ரிகர்சலில் இருந்தனர்

ருக்கு  ஒண்டிக்கட்டை மாமா போய் அவர் கட்டிய வீடு,  பேமிலி பென்ஷனில் வாழ்க்கை. குழந்தைகள் இல்லை. டிரஸ்ட் இருக்கும் வீட்டு உரிமையாளர் காமாக்ஷிஅம்மா ஒரே  பையன் திருநங்கையாக மாறிய பின் சமூக புறக்கணிப்பு மற்றும் அம்மாவின் சுடுசொல்லால் மனம் நொந்து  தற்கொலை செய்து கொள்ள மனம் மாறிய காமாட்சி  அவன் நினைவாக  இந்த அர்த்தநாரி டிரஸ்ட் உருவாக்கி அதன் காப்பாளராக நல்ல சமூக சேவகி ஒருவரை நியமித்து தானும் அங்கயே தங்கி இருக்கிறாள்.  திருநங்கைகள் அவரை அம்மா என்று அழைக்க ஓரு அருமையான குடும்ப சூழ்நிலை.

ஆனால் எதிர்விட்டு ருக்குவுக்கு  இந்த சமூக சேவை காமாட்சி அம்மா முக்கியமாக திருநங்கைகள்  எதுவும்  பிடிக்கவே செய்யாது.  அவர்களை பார்த்து முகம்  சுளிப்பதும் ஜாடையாக கிண்டல் பண்ணுவதும் அவர்கள் மனதை காய படுத்தும்.  முக்கியமாக காமாட்சி அம்மாவை ரொம்பவே திட்டுவாள் ஆனால் காமாட்சி அம்மா நீங்கள் எந்த வம்புக்கும் போகக்கூடாது என ஸ்ட்ரிக்ட்ஆக சொல்லியுள்ளதால் திருநங்கைகள் மாமியை ரொம்ப கண்டுகொள்வது இல்லை.

இன்றும் அந்த பாட்டை கேட்டு முகம் சுளித்து  "என்ன ஜென்மங்கள்! பெண் சிசு கொலை பாட்டு பாடுதுங்க. இதுகளே  ஓரு வேஸ்ட் இதுங்க போய் சமுதாய சீர்திருத்தம் பண்ணி கிழிக்கும்"  என்று   அவர்களை திட்டி தீர்த்து திரும்பியவள் தலை சுற்றி கிழே விழுந்து கிரில் கேட்டில மோதியதுதான் தெரியும். கொட கொட வென்று ரத்தம். ருக்கு உணர்வு தப்பி மயக்க நிலையில் ஆழ்ந்தாள். இரவா பகலா நாம் எங்குஇருக்கிறோம் என்னவென்று புரியாத சூழ்நிலையில் கண் விழித்த ருக்குவின்  தலையில் பெரிய கட்டு, விண்  விண்  என்ற வலி வேறு. சற்று பொறுத்து பார்த்ததும் தான் ஓரு கட்டிலில் படுத்து இருப்பதும் தன் இரு பக்கங்களிலும் காமாட்சி அம்மாவும் சமூகசேவகியும் அமர்ந்து இருப்பது தெரிந்தது. இது டிரஸ்ட் வீடு எனவும் புரிந்தது. "மெல்ல ருக்கு, ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம் தலையில் தையல் போட்டுள்ளது.  நிறைய ரத்தம் வேறு சேதம் . சூடாக எதாவது குடிக்கின்றிர்களா?  என காமாட்சி அம்மா அன்புடன் வினவினார். வலியாலும் வெட்கத்தாலும் ருக்குவுக்கு  வாய் பேச வரவில்லை.  இந்த காமாட்சி  அம்மாவை எவ்வளவு ஜாடை பேசி  இருப்பாள்.  ஒன்றும் நடக்காத மாதிரி அன்பாக பேசும் அவர்களை வியப்பாக பார்த்தாள். "உங்களுக்கு ரத்த அழுத்தம் சுகர் அதிகமாகி மயக்கம். அப்போது  கிரிலில்  அடிபட்டு மண்டை  உடைந்து ஏகப்பட்ட ரத்த சேதம்.  தையல் வேறு போட்டிருக்காங்க  இரண்டு நாளா படுத்த படுக்கை இரண்டு  வேலையும் நம்ம டாக்டர் வந்து பாக்கிறாங்க.  நீங்கள் கண் முழித்ததும்தான் எங்களுக்கு நிம்மதி.

உங்களுக்கு எங்க பிள்ளைகளை பிடிக்காது என்று தெரியும்.  ஏன்னா நான் கூட  அப்படிதான் இருந்தேன்   என் புள்ள செத்து எனக்கு புத்தி புகட்டினார். இவர்கள் இப்படி இருப்பது இவர்கள் தப்பா ஹோர்மோன் கோளாறு. இவர்கள் தெய்வ அம்சம் அர்த்தநாரீசுவரர்கள். சந்தி பிழைகள் மாதிரி சந்ததி பிழைகள்.  இவர்களும் வாழ வேண்டும்.  இவர்களை நாம் ஏன் காரணம் இல்லாமல் வெறுக்க வேண்டும் ?  அவர்களும் நம்மை போன்ற மனித பிறவிதானே. "

தொடர்ந்து சமூக சேவகி அம்மாள்" ஓரு விஷயம் தெரியுமா.  எங்க குட்டி பொண்ணு  பாரதிக்கு உங்களை  ரொம்ப பிடிக்கும்.  உங்க கிட்ட பேச அவ்வளவு ஆசை .  ஆனா அவளை பாத்தாலே நீங்க திட்டுவீங்க.  அவள் எவ்வளவு அழுது இருக்காள் தெரியுமா? ஒண்ணுமில்ல நீங்க அப்படியே அவங்க அம்மா ஜாடையாம் பெரியம்மா பெரியம்மான்னு எங்ககிட்ட அப்படி கொண்டாடுவாள். இப்போ உங்களுக்கு ரத்தம் கொடுத்தது கூட அவதான்."

இவர்கள் பேச பேச மதுவின் நெஞ்சம் துடித்தது கண்கள் கலங்கியது  அறியா பிறவிகள் மீது வெறுப்பு காட்டியதை நினைத்து தன் மீதே வெறுப்பு வந்தது. மெதுவாக எழுந்த ருக்குவை  காமாட்சி அம்மா கைத்தாங்கலாக உட்கார வைத்தாள்.  உள் வர பயந்து ஜன்னல் அருகே நிற்கும் அந்த சின்ன பெண்ணை கை காட்டி அருகே அழைத்தாள். தயங்கி தயங்கி வந்தவளை கை பிடித்து தன் அருகே உட்காரவைத்தாள்.  களங்கம் இல்லா முகம் பெண் தன்மையோடு போட்டி போடும் ஆண்தன்மையும் சேர்ந்து கலவையான முகம். சராசரிக்கு அதிகமான உயரம். ஆண்மையின் கம்பிரத்தை மீறி ஓரு நளினம்.  சற்றே முரடான கைகள். கச்சிதமான சுடிதார்.  மேலுதட்டில் சீரிய மீசைக்கோடு எல்லாம் ருக்குவுக்கு  இப்போது அழகாக தெரிந்தது. மூன்றாம் பாலினத்தை நாம் அங்கீகரித்தால் என்ன தவறு? எல்லா திருநங்கைகளும் மௌனமாக பக்கத்தில் வந்து நிற்க அவர்களை கனிவுடன் பார்த்த ருக்குவுக்கு தான் செய்த தவறு தெளிவாக புரிந்தது. தன்னை நினைக்கவே அருவருப்பாக இருந்தது. கத்தியின்றி,  ரத்தமின்றி ஓரு புதிய புரட்சி அவளுள் உருவாகியது. இந்த குழந்தைகளுடன்தான் இனிமேல் என் வாழ்க்கை என முடிவு செய்தாள் ருக்கு.ரத்த கலப்புடன் அன்பும் அங்கே கலந்தது

ஓரு ஆள் அண்டா பிறவி அன்புக்கடல் ஆக மாறிய அதிசயம் அங்கே அரங்கேறியது. மனித வாழ்க்கை மிகவும் குறுகியது இதில் ஓரு இனத்தை மட்டும் ஏன் வெறுத்து ஒதுக்க வேண்டும் அதுவும் அவர்கள் எதுவும் தப்பு செய்யாதபொழுது?

மனிதம் வளர்ப்போம் !

-V KRISHNAKUMARI

 

 

21.K2K00100

பாரதியும் - பாரதியும்

ஒரு குளுகுளு

காதலர் தினம் பொழுது.. 8-மணி. பாரதி வழக்கம் போல் யோகா கிளாஸ் முடித்த களைப்பில் மாணவர்களை அனுப்பிவிட்டு தனது மடிக்கணினியில் முகநூலை திறந்தா ..பாரதியார் பேர் வச்ச அவ சின்ன வயசுல இருந்தே பாரதியார் பக்தி...அவளுக்கு எப்பொழுதும் பார்க்கும் பக்கமான ' இறகு ' எனும் பெண்கள் மட்டும் இருக்கும் ஃபேஸ்புக் பக்கதுல ப்ரெண்ட் ஆன ஜீவபாரதி- கண் விரிஞ்சு அவ பாக்க என்ன காரணம்?  எல்லா நேரமும் தான் ஆசை தீர பேசி விவாதிக்கும் நபரான ஜீவாவ வீடியோ கால்- சந்திக்க ஏற்பாடு ..அப்போ அந்த ஷாக்  ஏன்?

இருவரும் வைரமுத்து மற்றும் பாரதியாரின் கவிதைகளால் ஈர்க்கப்படவர்கள்...தினமும் ஆரோக்கியமான வாக்குவாதம்.அப்டி சொல்ல முடியாது..கண்டபடி அடிதடி தான்... காரணம் என்னனா ஒன்னு பாரதி கெத்து நம்மள மோடிவேட் பன்றதுல பாரதியார் கெத்து  சொன்னா, இநோனு " அய  வைரமுத்து எழுதுன பாட்டு  கவிதைலாம் ஃபர்ஸ்ட் படி அப்ரம் அப்டி கமெண்ட் பண்ணிக்கோ.". இந்த கூத்து நடைபெறும் இடம் அந்த இறகு பேஜ்ல தான். ரெண்டு பேரும் கமென்ட் - அடிசுக்குற கும்பல்..ஆன ஊடலா ஆரம்பிச்சா அது காதலா முடியும்னு சொல்ற மாறி நம்ம பாரதிக்கு ஜீவா மேல செம ஒரு தலை காதல்..எப்படியாச்சும் ஜீவகிட்ட பேசி அவளோட காதல ப்ரொபோஸ் பண்ணிர்லாம் - என்று விடியோ கால் ஆன் பண்றா..

இதுல என்ன கொடுமை தெரியுமா?  முதல் டைம் மீட் பண்றதே அன்னிக்கு தான். என்னதான் பெண்களுக்குள் கெமிஸ்ட்ரி இருக்கும் நாலும் ஒரு பாலின காதல் தமிழ்நாட்ல ஒரு கருமமா பார்ப்பாங்க அப்டினு பாரதிக்கு பயம்..இருந்தாலும் அவ அவளுக்கு புடிச்ச பாரதியார் ஓட பாட்டு பாத்து தைரியம் ஏதிட்டு வந்து கால் - ஓபன் பண்றா. எதிர் திசையில் இருக்க ஜீவா எப்பொழுதும் மெசேஜ் செய்றப்ப ஜீவா - கும் காதல் இருக்ரத ஃபீல் பண்ணிற்கா பாரதி..அதுனால தான் காதலர் தினமான அன்னிக்கு காதல சொல்ல தயார் ஆனா. ஓபன் செஞ்சா எதிர் பக்கம் இருக்கும் ஜீவா ஒரு மாற்றுத்திறனாளி. இத பாத்து அப்டியே கால் கட் பண்ணி விட்டு கோவமா வெளில போரா பாரதி. பாரதியார் ஓட புதுமைப்பெண் ஆன நம்ம பாரதி ஒரு பாலின காதல் ஏதுக்க முடியுது ஆன ஒரு மாற்றுதிறன சகிக்க முடியல.

மாரல்:

இன வெறி , நிறவெறி போல பாலின வெறி, உடல் உருவ வெறியும் மனிதத்தின் சாபமே..

-Aakash

 

 


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY