அழகு

 

 

1.K2K -00002

அழகு என்ற சொல் எதனை குறிக்கும் பொதுவாக ஒரு ஆணின் மற்றும் பெண்ணின் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்கள் தான் இந்த உலகத்தில் அழகு என்று சொல்லி விட முடியுமா? என்றால். "இல்லை", அவர்கள் செய்யும் செயலில் தான் அழகு இருக்கிறது. என்று எத்தனை பேருக்கு தெரியும்? ஒரு சில ஆண்கள் பெண் பார்க்கும் போகும்போது கூட பெண் அழகாய் இருக்கனும் தான் எதிர்பாக்கிறான் தவிர அவளோட அழகான மனசை பார்க்கிறது இல்லை 

     வாருங்கள் நேயர்களே! அழகான கதைக்கு செல்வோம்

  

அஜி என்ற பையன் தனி வீடு எடுத்து தன் இரண்டு நண்பர்களுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய நண்பர்களின் இருவரின் பெயர் க்ரிஷ் மற்றும் சிரன் இவர்கள் மூன்று பேருக்குமே நல்ல ஒற்றுமையும் புரிதலும் இருக்கின்றது. அஜி நல்ல நிறம் மற்றும் நல்ல உயரம் உடல்பலம் மொத்தத்தில் வசீகர தோற்றம் உடையவன். க்ரிஷ் கருப்பா இருந்தாலும் கலையாக இருப்பான் அவன் உதவும் குணம் உள்ளவன் மற்றும் பேச்சு என்றால் மிகவும் பிரியம். சிரன் பற்றி சொல்ல வேண்டுமானால் அவன் கருப்பு நிறத்தோற்றம் குள்ளமாக இருப்பான் மிகவும் அமைதியானவன் அறிவாளியும் கூட படிக்கும் விஷயத்தில் ஆர்வம் உள்ளவன். இவர்கள் மூவருக்கும் இடையில் எந்த ஒரு சண்டை வந்தாலும் அது அடுத்த 5 நிமிடத்தில் சரியாகிவிடும்.

 ஒரு நாள் அஜி விடியற்காலையில் 2 மணிபோல் எழுகிறான் அவனுக்கு மட்டும் தான் அந்த ஓசை கேட்கிறதா என்று தெரியவில்லை அவன் நண்பர்களை பயத்தில் எழுப்பிகிறான் க்ரிஷ் கேட்கிறான் "ஏன்டா இப்போ எழுப்பி விடுற?" உனக்கு சத்தம் ஏதாவுது கேட்குதா என்று கேட்க அதற்கு க்ரிஷ் நீ கனவு கண்டுவிட்டு என்னை எழுப்புர என்று சொல்ல திடிரென்று அவனுக்கும் அதே சத்தம் கேட்க சிரனை எழுப்பிவிடுகிறான். சிரன் எழுந்து குழந்தையின் அழுகுரல் போல கேட்கிறது வாங்க போய் பார்க்கலாம் என்று கூறினான் குழந்தையின் அழுகுரல் அதிகமானது தாமதிக்காமல் மூவரும் வெளியே போய் பார்த்தார்கள் சத்தம் வர திசை நோக்கி போனார்கள் அவர்களுக்கு அந்த காட்சி அவர்களை உலுக்கியது குப்பை தொட்டியில் ஐந்தறிவுள்ள ஒரு நாய் அந்த குழந்தையை தன் வாயால் கவ்வி இவர்களை பார்த்துவிட்டு இவர்கள் முன் அந்த குழந்தையை வைத்துவிட்டு சென்றது. நால்வரும் வீட்டிற்கு வந்தார்கள். சிரன் காலையில் நாம் குழந்தையை  போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாம் என்று சொல்ல அதற்கு க்ரிஷ் போலீஸ் ஸ்டேஷன் நம்மளையும்  கேள்வி கேட்பாங்க காப்பகத்தில் சேர்த்துவிடலாம் என்று  சொல்ல அஜி அதற்கு மனமில்லாமல் நம்மளே வைத்துக்கொள்ளலாம் சொல்ல மூவர்க்கும் வாக்குவாதமா போக இன்னொரு பக்கம்  குழந்தை அழுக மூவரும் திண்டாடினர் அந்த குழந்தையை அழுகாமல் இருக்கவைக்க.அஜி "ஆராரோ ஆரிரரோ" என பாடத் தொடங்க க்ரிஷும் தன் பங்குக்கு சேர்ந்து பாடினான்.சிரன் அவர்களின் பாடலை கேட்டுக்கொண்டிருந்தான் அந்தக் குழந்தை  நன்றாக  தூங்கியது. விடிந்ததும் குழந்தை இல்லாதவர்க்கு கொடுத்தது விடலாம் என்று ஒரு நல்ல முடிவாகயெடுத்த பிறகு மூவரும் அந்த குழந்தையை பார்த்தார்கள், குழந்தை தூக்கத்தில் அழகாக தெரிந்ததால் குழந்தை அழகு என்று சிரன் சொல்ல க்ரிஷ் அதற்கு குழந்தை  என்றாலே அழகுத்தானே அந்த பிஞ்சி கைகள் ,கண்கள், மூக்குகள் மெல்லிய உதடுகள் கன்னங்கள் கால்கள் பாதங்கள் மொத்தத்தில் குழந்தைகளை பார்த்தாலே நம் கவலைகளை மறக்க செய்யும் குழந்தையும் அழகே அவர்கள் மூவரையும்  பார்த்து அழகிய மெலிதான சிரிப்பைப் பொழிந்தது அந்த அழகிய சிரிப்பு இவர்களை மயக்கி மகிழ்ச்சியில் மனம் துள்ளச்செய்தது. அந்தக் குழந்தையை ஒருவர்க்கொருவர் பத்திரமாக இவர்களே பார்த்துக்கொண்டனர். நால்வரும் மிகவும் சந்தோசமாக வாழ்ந்தார்கள்.

கருத்து: நிறம், தோற்றம், உயரம் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று எந்த பாகுபாடும் காட்டாமல் உதவி புரிந்து கொண்டும் விட்டுக்கொடுத்தும் நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே நமது வாழ்க்கையே அழகு தான்.

-லக்ஷ்மி பிரியா

 

 

2.K2K00003

 

 மீரா வகுப்பறைக்குள் நுழைந்தபோது, ​​வகுப்பைக் கேட்பதற்குப் பதிலாக முழு வகுப்பினரும் அவளுடைய அழகைப் போற்றுகிறார்கள். அவள் பள்ளியில் தேவதூதர் தோற்றமுடைய ஒரே பெண். அவள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில சிக்கல்களுக்கு, அவள் தன் ஆசிரியர் இல்லாமல் தனது வகுப்பில் உள்ள யாருடனும் பேசவில்லை. ... அந்த நேரத்தில் ஒரு புதிய பையன் தனது வகுப்பில் சேர்ந்தான். மீரா அவனை முதன்முதலில் பார்த்தபோது அவளது உடல் நடுங்கியது, துருவும் அவளைப் பார்த்ததில் அந்த மாதிரியான உணர்வைக் கொண்டிருந்தான். அது ஏன் நடக்கிறது என்று அவர்கள் அறியவில்லை ... இருவரும் அழகாக இருக்கிறார்கள். பின்னர் சிறிய சிறிய சம்பவங்கள் அவர்களை நெருங்கச் செய்கின்றன. ஒரு மாலை நேரம் மீரா தனது வீட்டுப்பாடத்தைப் பற்றி ஒரு வேலையைக் கொண்டிருந்தார்; அவர் தனது திட்டப்பணிக்காக அந்தப் படங்களைப் பற்றிய சில படங்களயும் விவரங்களையும் சேகரிப்பதற்காக உலாவல் மையத்தில் நுழைந்தபோது ... அங்கே துருவ் ஏற்கனவே அவருக்கான விவரங்களை சேகரித்தார். மீரா இளஞ்சிவப்பு செருப்புகளுடன் நீல வண்ண கவுன் அணிந்திருந்தார் மற்றும் தலைமுடியை ழுக்கிறார், அவர் அந்த உடையில் மிகவும் அழகாக இருக்கிறார். அவர் கண்களை சிமிட்டாமல் அவளை முறைத்துப் பார்த்தார். நீண்ட நாட்கள் அவர்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றனர், ஆனால் அவர்கள் இருவரின் நினைவுகளும் அப்படியே இருக்கின்றன. ஒரு நாள் அவரது தந்தை கேட்டார் அவர் அந்தத் திட்டத்தைக் கேட்டபோது திடீரென்று அவரது நினைவுகள் மீராவில் செருகப்பட்டன. அவர் அமைதியாக அவரது இதயத்திற்கு அவள் என் தேவதை என்று சொல்கிறாள் .. நான் அவளை மறக்கவில்லை. அன்று மாலை அவரது குடும்பத்தினர் துருவஸ் எதிர்கால மனைவியின் குடும்பத்தை சந்திக்க சென்றனர் இரவு உணவிற்கு ஒரு ஹோட்டலில், அவருக்கு விசித்திரமான உணர்வு இருந்தது, அவர் தனது வாழ்நாளில் முன்பு அந்த மாதிரியான உணர்வைக் கொண்டிருக்க முடியாது ... மீராவை முதல்முறையாகப் பார்த்தபோது, ​​அவருக்கு அந்த உணர்வு இருப்பதாக அவர் நினைத்தார். அவருக்கு வருங்கால மனைவி ஒரு பெரிய ஆச்சரியம் இருந்தது அது மீரா. அவர்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு அழகான மகளைப் பெற்றார்கள் ...... நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் முந்தைய வாழ்க்கையைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்..அவர்கள் இருவரும் ஏஞ்சல் தீவில் இருக்கிறார்கள் ... அதில் வாழ்க்கையும் அவர்கள் அசிங்கமான முகத்துடன் கணவன்-மனைவி .... அவர்கள் இருவரும் அசிங்கமான முகம் காரணமாக இறந்தனர் .... இந்த வாழ்க்கையில் அவர்கள் மகிழ்ச்சியான மற்றும் உருகும் இதயத்துடன் அழகான நபர்கள் ....

எல்லாவற்றையும் விட நம் வாழ்க்கையை அழகாக மாற்றுவதில் அழகு முகத்தில் இல்லை ....

- சிந்துஜா. எம்

 

 

3.K2K-00004

அழகு

 

வினோத் அந்த ஊரின் பெரிய பணக்கார வீட்டு பையன் மிகவும் வசதியான வீட்டில் பிறந்தவன் என்பதால் எப்போதும் புதிய உடை வேலைக்கு ஆட்கள், பலவிதமான கார்கள் பள்ளிக்குச் சென்று வர மற்றும் நேரத்துக்கு நேரம் வகையான உணவுகள் என்று எப்போதும் மிகவும் ஆடம்பரமாக இருந்து வந்தான்.

ஆனால் அவன் தன் ள்ளியில் எல்லோருக்கும் உணவு மற்றும் புத்தகங்கள் கொடுத்து உதவுவான, அவன் தினமும் பள்ளிக்கு ஒரு ஏழைகள் வசிக்கும் குடியிருப்பு வழியாகச் செல்லுவான்.

 வசதியாக இருந்ததால் அவன் அந்த குடியிருப்பில் இருக்கும் மக்களை சற்றே ஏளனமாக நினைப்பான்; இப்படி சென்று கொண்டிருக்கையில் அந்த ஏழை மக்களின் குழந்தையான ஒருவன், அவன் பெயர் அன்பு அந்த பள்ளியில் நடக்கும் விழாவில் பரிசு ஒன்று வாங்குகிறான்.

இதைக்கண்ட வினோத்திற்கு மிகவும் ஆச்சரியம் என்னடா நாம் எல்லோருக்கும் உதவுகிறோம் நமக்கு ஒருவரும் பரிசு தரவில்லையே இந்த ஏழைப் பையனுக்கு வழங்குகிறார்கள், என்று மிகவும் மிரட்சியாக பார்த்தால் பின் தான் அவனுக்கு தெரிய வந்தது. 

அந்த பையன் தங்கள் வீட்டில் தான் சேர்த்து வைத்திருந்த 72 ரூபாய் பணத்தை அவர்கள் வீட்டில் உணவு இல்லாத சமயத்திலும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நீதிக்காக அளித்தான் என்பதால் அவனுக்கு இந்த பாராட்டு கிடைத்தது.

பின் தான் வினோத்துக்கு புரிந்தது, நாம் அந்தச் சிறுவனைப் பார்த்து ஏளனம் செய்தோம் இன்று அவன் செய்த 72 ரூபாய் நன்கொடை நாம் கொடுத்த எவ்வளவவோ ஆயிரங்களை விட பெருமையாக சொல்லப்படுகின்றது’, என்று எண்ணி கண்ணீர் வடித்தான்.

அன்று முதல் அவன் எல்லோரையும் தன் மனக்கண்ணால் அழகு கொண்டவர்களாக பார்க்க கற்றுக் கொண்டான்.

நெறி:

அழகு என்பது உண்ணும் உணவிலோ, உடுத்தும் உடையிலோ, நாம் பேசும் பேச்சிலோ இல்லை.

அழகு என்பது நாம் செய்யும் செயலிலும், நம் கண்களால் பார்ப்பதிலும் தான் இருக்கிறது.

-கணேசன் சண்முகவேல்

 

 

4. K2K-00004

அழகு:

 

சிவா அண்ணா! நாலு காபி, என்று சொல்லிட்டு விஜய், விஜயன், வெங்கடேஷ், மணி ஆகிய நான்கு நண்பர்களும் சிவா அண்ணன் கடையில் உள்ள பெஞ்சில் அமர்ந்தார்கள். அவர்கள் நால்வரும் அருகிலுள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்கள், தினமும் மாலை நேரத்தில் சிவா அண்ணன் கடைக்கு வந்து காபி குடித்துவிட்டு பெஞ்சில் அமர்ந்து சிறுது நேரம் உரையாடுவது அவர்கள் வழக்கம். அன்றும் அதுபோல ஒரு மாலை நேரம் அவர்கள் உரையாடல் ஆரம்பமானது.

சிவா அண்ணின் குடும்பத்தை பற்றி நலம் விசாரித்துவிட்டு பேச ஆரம்பித்தான் விஜயன். கல்லூரியில் அன்று நடந்த சுவாரஸ்யமானவை பற்றி உரையாடல் தொடங்கியது. பின்பு மணி மற்றவரை பார்த்து அவன் சொன்னான் இன்னைக்கு ஏதாவது புதுசா பேசாலாம் என்று கூறியபடியே அவன் விஜயை பார்த்து கேட்டான் அழகுனா என்னாடா என்று. அதற்கு விஜய் கூறினான் அழகு என்றால் நமது தோற்றம் எடுத்துக்காட்டாக சொல்லனும்னா நம்ம தல, தளபதி அப்புறம் நயன்தாரா, திரீசா அந்த மாதிரி அதாண்டா அழகுனா என்றான். மணி சொன்னான் டேய் அதெல்லாம் சினிமாடா நான் கேட்கிறது நிஜ வாழ்க்கையில.

டேய் விஜய் அழகு பத்தி கேட்டா நேத்து நீ பார்த்த படத்த பத்தி சொல்லிட்டுருக்க என்று கலாய்த்துவிட்டு தொடர்ந்தான் வெங்கடேஷ். அழகுனா பார்க்க நல்ல வசிகரமா, லட்சணமா இருக்கனும். இப்போ ஒரு காக்கா இருக்கு மயில் இருக்கு இரண்டுல எது அழகு நீயே சொல்லு என்று மணியிடம் கேட்டான். அதற்கு மணி இது என்னடா கேள்வி மயில் தான் அழகு என்று கூறினான். அவ்வளவு தான் பார்க்க அழகா இருக்கனும் அது தான் அழகு என்று முடித்தான் வெங்கடேஷ். இதையெல்லாம் கேட்டவாறு தன் பணிகளில் ஆழ்ந்திருந்தார் சிவா, அவர் மனதிலும் அழகு பற்றிய அழ்ந்த சிந்தனைகள் ஓடி கொண்டிருந்தது நாமாக இடைப்பட கூடாது என்று அவர் அமைதி காத்தார்.

அடுத்து விஜயன் தொடர்ந்தான், அவனுடைய கருத்துகள் எப்போதும் தனித்துவமாக இருக்கும் என்பதால் அதை கேட்க சிவா அண்ணனும் ஆர்வமாக காத்திருந்தார். விஜயன் சொன்னான் நாம எல்லோரும் நினைச்சிட்டு இருக்கிற மாதிரி பொதுவா எல்லாரும் நினைப்பாங்க அழகு என்பது பார்வையில் படுவது, வெளிப்புற தோற்றம் என்று. வெளிப்புற அழகு தாண்டா ஒரு பொருளை நோக்கி நம்மல ஈர்க்கும் அது இயல்பு தான். ஆனா உண்மையான அழகு நமக்குள்ள இருக்கிறது தாண்டா. அவன் முடிக்கும் முன்னே மணி சொன்னான் இதோ வந்துட்டாண்டா அடுத்த கமல் என்ன பேசுரான்னு புரியாது இனிமேல வாங்க கிளம்புவோம் என்று கலாய்த்தான் விஜயனை.

டேய் நான் சொல்லறத முழுசா கேளுடா மணி என்று தொடர்ந்தான் விஜயன். இப்ப உனக்கு எப்படி சொல்றது, சரி பலாப்பழம் பார்த்திருக்கியா, அது பார்க்க எப்படி இருக்கும், அன்னாசி பழம் கூட வெளிய முள்ளு முள்ளா இருக்கும் பார்க்கவே ஏதோ மாதிரி இருக்கும். ஆனா அது உள்ள சாப்பிட்டு பார்த்திருக்கியா எவ்வளவு இனிப்பாவும், உடம்புக்கு தெம்பும் கொடுக்கும். அது மாதிரி தாண்டா அழகும் வெளிய தெரியிரது தான் அழகுனு நம்மல நினைக்க வைக்கிறாங்க. அந்த வெளிபுற அழகு நிரந்திரமில்லாதது, உள்ள இருக்கிற அழகு அதாவது மனதொட அழகு அது தான் என்னைக்கும் நிரந்திரம் நமக்கு நல்லதும் கூட. இந்த பார்த்ததும் காதல், ஈர்ப்பு இதெல்லாம் வெளி தோற்றத்த பாத்து வரது. ஆனா உண்மையான அன்பு, அழகு நம்ம உள்ள எப்படி இருக்கோம் அதவச்சி தாண்டா வரும் என்று முடித்தான் விஜயன். என்ன சிவா அண்ணா நீங்க என்ன சொல்றிங்க ரொம்ப நேரமா ஏதோ சொல்ல நினைக்கிற மாதிரி இருக்கேனு மணி கேட்டான்.

சிவா அண்ணா பேச ஆரம்பித்தார் விஜயன் தம்பி சொல்றது தான் தம்பி சரி, நீங்க பேசுறத நானும் கேட்டுகிட்டு தான் இருந்தேன் என் அனுபவத்தில சொல்றேன் விளம்பரத்தால எல்லாத்தையும் கெடுத்து வச்சிருக்காங்க, வெள்ளையா இருக்கிறது தான் அழகு, அழகான தோற்றம் தான் முக்கியம் இப்படி நம்ம எல்லோரையும் நமக்கு தெரியாமலே நம்ப வச்சிட்டாங்க. அழகுனா அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காம, நம்மால முடிஞ்சத அடுத்தவங்களுக்கு உதவி செஞ்சிட்டு, பழகத்திற்காக எதையும் செய்யுற மனசும், அடுத்தவங்க நம்மல பார்த்ததும் அவங்க முகத்துல சிரிப்பு வர வைக்கிறதும் தான் உண்மையான அழகு, அது தான் என்னைக்கும் நிரந்திரமா இருக்கும் தம்பி என்று சொல்லி முடிச்சாரு.

சூப்பரா நல்ல புரியிர மாதிரி சொன்னிங்க போங்க சிவா அண்ணா என்று இதை கேட்ட மணி சொல்லியவாறு தொடர்ந்தான். இப்போது தான் அழகுனா என்னானு உண்மை புரியுது, இவ்வளவு நாளா இது தெரியாமா போச்சே, அப்போ நான் கூட அழகு தானா என்று கேட்டுக்கொண்டே புண்ணகைத்தான். அதற்கு அமா அமா நீ ரொம்ப அழகு தான் பேசிட்டே காபிக்கு காசு குடுக்க மறந்திராத என்று சொல்லிவிட்டு விஜயும் மற்றவர்களும் சிரித்துக்கொண்டே நடக்க தொடங்கினார். மணியும் சிவா அண்ணாவிடம் பணம் கொடுத்துவிட்டு அவர்களுடன் சென்றான், சிவா அண்ணன் வழக்கம் போல தன் கடை அடைக்கும் பணிக்கு ஆயத்தமானார்.

அழகு என்பது வெள்ளை தோலிலும், வெளிப்புற தோற்றத்திலும் இல்லை; அது நிரந்திரமற்றது, நாம் காணும் மாயை தோற்றமே வெளிபுற அழகு என்பது. அழகு என்பது ஒருவன் நடந்துகொள்ளும் விதத்திலும், அவன் மனதின் சுத்தத்திலும் தான் வெளிப்படும். "உண்மையான அழகை அகம் சென்று உரு காண்போம், அதற்கான உரிய அங்கிகாரத்தை கொடுப்போம்".

அங்க அழகையும் கடந்து அக அழகு கொண்ட அனைவருக்கும் சமர்ப்பணம்.

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

5.K2K-00013 

அழகு

 

ராமாவதிக்கு இருப்புக்கு கொள்ளவில்லை இருக்காதா பின்னே? இரண்டு வருடங்களாக பெண் பார்த்துச் சென்றவர்கள் எல்லாம் ஏதோ ஓர் காரணத்திற்காக தட்டிக் கழித்த போது, நேற்று வந்த 'வரன்' உடனே சம்மதம் தெரிவித்தது அவளுக்கு மகிழ்ச்சியாகவும் அதே வேளையில் குருகுப்பாகவும் இருந்தது.

சிறுவயது முதலே ராமாவதிக்கு தன் பெற்றோர் உடன்பிறந்தாற்போல் "நல்ல நிறமாகவே" இல்லையே என்ற ஏக்கம் இருந்தது ஒரு முறை இதைப்பற்றி ன் அப்பாவிடம் சொன்னபோது அவர், ராமகண்ணு (அவள் அப்பா அப்படித்தான் செல்லமாக அழைப்பார்) நீ அழகாகத்தான் இருக்கிறாய் உன்னுடைய சுருட்டை முடியும் அழகிய கண்களும் யாருக்கு இருக்கிறது? "சிவப்பு-செருப்பு, கருப்பு- நெருப்பு?"!! எதுகை மோனையோடு பேசி சமாதானப்படுத்துவார். இத்தனைக்கும், அவள் படிப்பில் படுசுட்டி மற்றும் நண்பர்கள் ஆக்கி கொள்வதில் பலே கில்லாடி இருப்பினும் திருமண வயதை எட்டியதும் பழகி சமயங்களில், அவள் நிறம் தடையாக இருந்தது வேறு சிலர் நேரடியாகசுட்டிக்காட்டாமல், அதற்கு ஈடாக நகைகளோ, பணமோ கேட்டப் பொழுது ராமாவதியின் அப்பா கோபமுற்று கேட்டவர்களை போலீஸில் புகார் கொடுப்பதாக சொல்ல, இந்த விவரம் உறவினர்களிடையே பரவி அவளை பெண் கேட்கவே பயந்தார்கள்.

அப்பொழுதுதான் ராமாவதிக்கு ஹிந்துவில் விளம்பரம் கொடுத்து "வரன் வேட்டையில்"? இறங்கினார், அதற்கு முன்பு, ராமாவதியிடம் "ராமுகண்ணு, இன்றிலிருந்து யார் வந்துப் பார்த்துவிட்டு போனாலும் முடிவாகும் வரை பொழுதுபோக்கு(timepass) ஆக நினைத்துக்கொள் என்றார் இறுதியாக வந்த "வரன்" அதாவது அவள் வருங்கால கணவன் நண்பருடன் வந்தப் பார்த்துவிட்டு, சம்மதம் என்று சொல்ல பிறகு ன் குடும்பத்தினரை அழைத்து வருவதாக கூறினார் இதில் அதிசயம் என்னவென்றால் வந்தவர் நல்ல சிவப்பு நிறமுடன் மூக்கும் முழியுமாக பார்ப்பதற்கு அந்தக் கால இளவயது "சுமன்"? போல இருந்தார்.

திருமணம் முடிந்தவுடன் முதன் முதலாக ராமாவதிக்கு தன் கணவனை தனியாக சந்திக்கும் நேரமும் வந்தது.அப்பொழுது அவள் தன் கணவனைப் பார்த்து வெட்கத்துடனும் சிறிது பயத்துடனும் "என்னை உங்களுக்கு பிடித்ததற்கு என்ன காரணம்" என வினவினாள், இதைக் கேட்டதும் அவள் கணவன் சிரித்தபடியே, "உன்னை முதலில் பார்க்க வந்தபோது,நான் உன் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நீ திருட்டுத்தனமாக ஹாலில் உள்ள கண்ணாடியில் என்னை பார்த்துக் கொண்டிருந்த, அந்தக் கள்ளத்தனமான குறும்பு எனக்கு பிடித்தது " என்று சொல்லவும் அதுவரை தன்னைப் பற்றிய தாழ்வுணர்ச்சிவுடன் இருந்த ராமாவதிக்கு மனம் தெளிந்தது!!

நெறி: "அழகு" என்பது, நம் புறத் தோற்றத்தைத் தாண்டி, சில சமயங்களில் நம் செய்கையினாலும் மற்றவர்களை   நம்மால் ஈர்க்கச் செய்யும்!!                                  

RAMA GOVINDARAJAN (GRAPSS)

 

 

6.K2K-00023

அழகு

வேலையை முடித்துவிட்டு கிளம்ப மிகவும் தாமதமாகிவிட்டது தீபாவுக்கு அலுவலக வேலை சோர்வைத் தரும், தள்ளாடியபடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள். கடைசி பேருந்தும் சென்று விடவே ஓலா புக் செய்துவிட்டு காத்திருந்தாள். அப்போது அங்கு ஒரு பெண் விசித்திரமான ஒரு வடிவமைப்பில் மெல்ல நடந்து வந்து அவள் அருகில் அமர்ந்தாள். அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது தீபாவிற்கு, மிகவும் களைத்துப் போய் மூச்சிறைக்க கானபட்டாள் அந்தப் பெண்.

தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டியவாறு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டாள்.

ஒரு குறு நகையுடன் அந்த தண்ணீரை பருகி நிமிர்ந்து பார்த்த அந்த பெண்,

இந்தத் தண்ணிய உனக்கு கொடுத்ததே நான்தான் ஒரு பாட்டில் அரைச்சு திருப்பி எனக்கு கொடுத்தா நீ பெரிய ஆளா? 

ஏதோ மனநிலை சரியில்லாத ஆள் என்று நினைத்து திரும்பிக்கொண்டாள் தீபா. பின்னர் இருக்கும் உயர்ந்த கட்டிடத்தை காமித்து, அந்த விசித்திரமான பெண் அதுதான் நீ வேலை செய்ற அலுவலகமா என்றாள். மாம் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டால் தீபா. முழு குளிர்சாதன வசதி... ம்ம்ம்பிராணவாயு தருகின்ற எல்லா மரத்தையும் அழிச்சிட்டு அப்புறம் சூரியன் சுட்டேரிக்குது மழை வரல காற்று வரல அப்படின்னு புலம்ப வேண்டியது முட்டாள் மக்கள்……

இன்னைக்கு பாத்து இந்த கார் ஏன் வரமாட்டேங்குது? என மிகவும் நொந்து கொண்டால் தீபா. கார்ல தான் மேடம் போறீங்களா? என தீபாவை பார்த்து கேட்டாள். நான் எதுல போனா உங்களுக்கு என்ன தயவு செஞ்சு அமைதியா இருங்க என பதிலுக்கு எரிந்து விழுந்தாள். நான் எல்லாத்துக்கும் அமைதியா இருக்கறதுனால தான் நீங்க எல்லாம் நல்லா வாழ்ந்து இருக்கீங்க. கொஞ்சம் கூட நன்றியே இல்லாமல் எவ்வளவுதான் என்ன கொடுமை படுத்துவிங்க?

யார் இப்போ உங்கள என்ன பண்ணா? ஏன் சம்பந்தம் இல்லாம என்கிட்ட கத்திட்டு இருக்கீங்க? 

நீ இந்த மக்கள் எல்லாரும் தான். ஒரு பால் பாக்கெட் வாங்க போனால் கூட கடைக்காரனிடம் பிளாஸ்டிக் பேப்பர் கேக்குறீங்க, அதை அப்படியே மண்ணில் போட்டு அது மக்கி போகாமல், இந்த மண்ணை பாழாக்கி என்ன மழடா ஆக்கிடிங்க. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே திடீரென மழை வந்தது. இது வேற நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது என அழைத்துக் கொண்டால் தீபா.

இந்த பருவ நிலை மாற்றத்திற்கு நானா காரணம், என்ன ஒழுங்கா பாதுகாக்காமல் என்ன பாதிக்குமேல் அழிச்சிட்டு இப்போ எதுக்கு அழுத்துகிற?

அட நிறுத்துமா நானும் வந்ததிலிருந்து பாத்துட்டு இருக்கேன் சமூக இல்லாம பேசிட்டு இருக்க, உனக்கு என்ன பிரச்சனை? என கத்தினாள் தீபா. அந்தப் பெண்ணுக்கு கோபம் வரவே எழுந்து நின்னு தீபாவை பார்த்து முறைத்தாள் அந்த இடமே ஒரு நிமிடம் குலுங்கி நின்றது. பயத்தில் உறைந்த தீபா நீங்க யாரு? என்றாள்.

‘’நான் தான் இயற்கை, மனித குலத்தால் அழிந்து கொண்டிருக்கிறேன், நான் மிகவும் அழகானவள், அமைதியாய் மனிதகுலத்திற்கு வேண்டிய நீர் நிலம் உணவு காற்று நெருப்பு அனைத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் பதிலுக்கு நான் மடிந்து கொண்டிருக்கிறேன். என்னை காப்பாற்றுங்கள் நான் இன்னும் அழகாக இருப்பேன்.

கீகீகார் ஹாரன் சத்தம் கேட்கவும் திரும்பி பார்க்க, திடீரென மறைந்தால் அந்த விசித்திரமான பெண். நடந்த எதுவுமே புரியாமல் காரில் ஏறி தன் வீட்டிற்கு பயணமானார் தீபா…….

YAGNAPRIYA

 

 

7.K2K-00031

அழகு

 

அன்று காலை எப்போதும் போல விடிந்தது. கந்தன் தன் படுக்கை விட்டு எழுந்தான். காலைக்கடன்களை முடித்துவிட்டு அம்மாவிடம் டீ கேட்டு குடித்தான். குளித்துவிட்டு வெளிவந்து ஹாலில் அமர்ந்தான். டிவி போட மனம் வரவில்லை. செல்போனில் பேஸ்புக்கோ வாட்சாப்போ போக மனம் விரும்பவில்லை. காரணம் அவைகளில் ஒளிபரப்பப்படும் கொரோனாப்பற்றிய செய்திகளும், பதிவிடப்படும் போன்மிகளும் தான்.

தொடர்ந்து அவைகளை பார்க்க பார்க்க மனிதர்கள் இல்லாத உலகம் அழகாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. அவ்வாறு தோன்றியதும் அது மடத்தனம் என்றும் தோன்றியது.

யோசித்துக்கொண்டே கந்தன் வீட்டின் வாசலுக்கு வந்தான். தன்னுடைய இருசக்கர வாகனம் போர்வை போத்தி அழகாக உறங்குவதைக் கண்டான். மனம் லேசாகியது, அவனுக்கு வண்டி ஓட்டுவது என்றால் பிரியம், தன் வண்டியின் அருகில் அமர்ந்தான். சமீபத்தில் தன் நண்பர்கள் இருவரோடிணைந்து தமிழத்தின் எல்லைகள் எங்கும் பயணம் செய்தது ஞாபகம் வந்தது, மனம் அதில் லயித்தது.

பயணம் தொடங்கிய அன்று காலை எட்டு மணியளவில் .எம்.ஆர். சாலையில் மூவரும் சந்தித்து அங்கிருந்து பயணம் தொடங்கியது. தமிழக எல்லை தாண்டி பாண்டிச்சேரி சென்று அங்கு புகைப்படங்கள் எடுத்து முடிக்கும்போது மணி பதினொன்று. காலை உணவு முடிக்கவில்லை என்பதே அப்போது தான் ஞாபகம் வந்தது. அது விடுமுறை நாளளில்லை எனவே கடைகள் எல்லாம் மூடும் நேரம் ஆகியிருந்தது. சிற்றுண்டி கடைகளை தேடவே பன்னிரெண்டு ஆகிவிட்ட நிலையில், இவர்கள் சுற்றித்திரிவதைக் கண்ட ஒரு பெரியவர் என்ன என்று விசாரித்தார். கந்தன் விவரம் சொல்லவும், மூடுவதற்காக எல்லாம் தயார் செய்யப்பட்டிருந்த தன் கடைக்கு அழைத்துச் சென்றார். அவர் துணைவியாரிடம் விவரம் சொன்னார். இன்முகத்தோடு மூவரையும் வரவேற்று அமரச்செய்தார்கள். பெரியவர் எங்கோ சென்று தோசை மாவும் முட்டையும் வாங்கி வந்தார். மூவருக்காக அடுப்பு மூட்டப்பட்டு சமைக்கப்பட்டது. அந்த உள்ளங்கள் எத்தனை அழகானது.

 பாண்டிச்சேரி தாண்டி வேளாங்கண்ணி போகும் வழியில் மூவருக்கும் இலேசாக கண் அசந்தது. எங்காவது ஒரு டீ கடையில் நிறுத்தி சற்று ஓய்வெடுக்கத் தோன்றியது. சாலை ஓரம் ஒரு கடையில் ஓய்வெடுக்க முடிவுசெய்தனர், அப்பளம் பொறித்துக்கொண்டிருந்த அக்காவிடம் அனுமதி பெற்று, திண்ணையில் தங்களது உடைமைகளை எல்லாம் வைத்து விட்டு இருவர் உறங்க கந்தன் மட்டும் பொருட்களுக்குப் பாதுகாப்பாக விழித்திருந்தான். ஓய்வு முடிந்து அங்கிருந்து கிளம்பும்போதுதான் தெரிந்தது, அது கடையல்ல, அப்பளம் பொரித்துக்கொண்டிருந்த அக்காவின் இல்லம் என்று. உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்காக ரேடியோ அமர்த்தப்பட்டது. தண்ணீர் கொண்டுவரப்பட்டது, கந்தனிடம் கைவிசிறி அளிக்கப்பட்டது. விடைப்பெறுகையில், ரொம்ப தூரம் போறாப்ல இருக்கு.... பாத்து பத்தரமா போங்க... நீங்களும் யாருக்கும் தொல்ல தராம, யார்னா தொல்ல தந்தாலும் உங்க வேலைய பாத்துட்டு பத்தரமா வீடு போய்சேரனும் என்று வழியனுப்பினார்கள்.

 அந்த பயணத்தில் இப்படி சந்தித்த மனிதர்கள் ஏராளம். இந்த உலகமும் அதில் வசிக்கும் மனிதர்களும் அழகுதான். கந்தன் சிந்தனையில் சிரித்துக்கொண்டான்.

 அழகு, ரசிக்கும் கண்களுக்கும் மனதிற்கும் மட்டுமே காட்சியளிக்கும்.

ரசிக்க பழகுவோம். வாழ்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம்

- MrDexzty

 

 

 8.K2K - 00034

கண்ணழகா? அவனழகா?

 

அமுதி எழுந்திரி, எழுந்திரி முதி, எழுத்திரி முதி, அமுதி எழுந்திரி என்று அவளவன் அழைக்க அதே உற்சாகத்தில் எழுந்தாள் அமுதவள்ளி.

முழுசா ஒரு நாள் கூட ஆகவில்லை, இப்படி மூச்சு விடும் நேரத்தில் கூட உன்னை மட்டுமே இந்த மனசு நினைக்குது. என்ன தான் டா பண்ண என்னை இப்படி மூச்சுக்கு முன்னூறு தடவை கதிரு கதிருன்னு நினைக்க வைக்கிற என்று தன் கணவனிடம் மானசீகமாக பேசி குளியல் அறைக்குள் புகுந்தாள்.

வெளியே வந்தவளிடம் அவசரகதியில் பேசினான் கதிர். டைம் ஆச்சி சீக்கரம் கிளம்பு என்று அவள் பதிலை கூட எதிர்பாராமல் பாத்ரூம்மிற்குள் அடைந்தான்.

பட்டுக்குட்டி ஏன் டி இவ்வளவு அழகா இருக்க. உன்னை பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு நீ சொன்ன வார்த்தை, " கதிர் உங்க கண்ணு பார்த்தா கரண்ட் சாக் அடிச்ச மாறி இருக்குனு" அப்பவே ஐய்யா உன்கிட்ட விழுந்துட்டேன்.

நைட் நீ சொன்னது கரெக்ட் தான், கடமைக்காக இல்லாமல் நம்ம உறவு காதலுக்காக இருக்கனும். உன்மேல ஒரு ஈர்ப்பு இருக்கு அது காதலா மாறும் வரை காத்திருப்பு தான். இந்த காத்திருப்பு கூட அழகான உணர்வு தான் என்று தன்னவளை நினைத்து குளித்து வந்தான்.

அவன் கிளம்பி வருவதற்குள் சமையல் வேலை முடித்து கோவிலுக்கு அவளும் கிளம்பியிருந்தாள். கதிர் வந்ததும் இருவரும் சாப்பிட்டு கோயிலுக்கு சென்று அமுதவள்ளி வீட்டிற்கு வந்தனர் மறு வீட்டு விருந்திற்கு.

இருவரையும் வரவேற்று அமுதவள்ளி வீட்டினர் ஓய்வெடுக்க அவள் அறைக்கு அனுப்பி வைத்தனர். அமுதி நம்ம இங்கேயே இருக்கலாம் என்று கூறியவன் கையில் கிள்ளி, ஒழுங்கா மேல வாங்க என்று சிரித்தவாறு கூறினாள்.

இதழோரம் சிரிப்பை சிந்தி அவள் பின் சென்றான் கதிர். அவள் அறைக்கு சென்றவன் அதிர்ச்சி அடைந்தான் காரணம் அவனது கண்ணை ஓவியமாக வரைந்து சுவரில் மாட்டியிருந்தாள் அமுதவள்ளி.

கதிர், "அமுதி இதை எப்போ வரைந்த? " .

அமுதி, "எனக்கு பதினேழு வயசு இருக்கும் போது அடிக்கடி இந்த கண்ணு என் கனவுல வரும் அப்போ வரைந்தேன். இந்த உலகத்துலேயே அழகு எது தெரியுமா? இந்த கண்ணு தான் என்று கூறினாள்.

கதிர், "அப்போ இந்த கண்ணுக்கு சொந்தகாரன்?".

அமுதி," கண்ணழகா? இல்லை அவனழகா" என்று தெரியலை என்று வெளியேறியவளை கைப்பற்றி உன்கூட தான் என் மீதி வாழ்க்கைனு உன்ன பார்த்ததும் தோணுச்சு. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் எனக்கு னு பொய்லாம் சொல்ல மாட்டேன் அப்டி இருந்தா நல்லா இருக்கும். ஆனா இந்த லைப்ப உன் கூட, உன்கூட மட்டும் தான் என்னால வாழ முடியும்னு தோணுது. எஸ் ஐயம் இன் லவ் வித் யூ என்றான் கதிர்.

யோசிச்சு சொல்லுறேன் அழகா என்று சிட்டாய் பறந்தாள் அவனின் அமுதி.

# கண்ணழகா? அவனழகா? தெரியவில்லை ஆனால் அவன் என் அழகன் என்னவன் #

-சுபாஷினி

 

 

9.K2K-00036

 என் அழகியே...!!

 

அவள் பெயர் ஆதிரா. தற்போது அவள் மிக கோபத்தில் இருந்தாள், கொலை செய்யும் அளவுக்கு போபம்! வெறி! நேரில் மட்டும் அவள் கோபத்துக்கு காரணமானவன் இருந்தால் கோபத்தில் கத்தி வைத்து குத்தி கொன்றே இருப்பாள். அப்படிப்பட்ட கோபம் அவளுக்கு.

அவளின் தங்கையை பெண் பார்க்க வந்தவன் இவளை கல்யாணம் செய்து கொள்ள கேட்டு விட்டான்.

அவன் பெயர் சந்துரு, இருபத்தி எட்டு வயது இளைஞன், பெரிய பிசினஸ்மேன் மற்றும் கடந்த வருடம் சிறந்த தொழிலதிபர் என்ற பட்டம் கூட பெற்றான்.

அவனின் அழகுக்கு ஏற்ற பொண்ணை வலைவீசி தேடிய அவனின் பெற்றோர் முடிவில் ஆதிராவின் தங்கை முக அழகில் மயங்கி பெண் கேட்டார்கள்.

ஆதிராவின் அம்மா, "என்னங்க இது…? பெரிய பொண்ணுக்கே இன்னும் கல்யாணம் முடிவு ஆகல. அதற்குள் சின்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ண பார்க்கிறீர்களா...? அப்போ பெரிய பொண்ணின் நிலை...? என்று பல கேள்விகள் தன் மூத்த பொண்ணின் வாழ்கையை பற்றிய பயத்தில் கேட்டார்.

ஆதிராவின் அப்பா, "என்னம்மா பண்றது…? பெரிய பொண்ணுக்கு பார்த்த எந்த சம்பந்தமும் சரிப்பட்டு வரல. அவளின் உடல் நிறத்தை பார்த்த யாருக்குமே அவளை பிடிக்கல. ரெண்டாவது பொண்ணுக்கும் வயசு ஏற்றிட்டே போகுது …?", ஒரு தந்தையின் மன ஏக்கம் அவர் பேச்சில் தெரிந்தது.

ஆதிரா, "இட்ஸ் ஓகே மா, தங்கச்சிக்கே பேசி முடிங்க, எனக்கு கடவுள் என்ன எழுதி வைத்து இருக்கறோ அதான் நடக்கும்.", என்று சொல்லி விட்டு தூங்க சென்றாள்.

ஆனால் அன்று இரவு தன் உடல் நிறத்தை வெட்கி கண்ணீரில் தலையணை நனைத்தாள்.

 அடுத்த நாள் பொண்ணு பார்க்கும் வேலை நடக்க மாப்பிள்ளையின் சொந்தம் எல்லாம் ஆதிராவின் தங்கையை பார்க்க சந்துரு கண்ணோ ஆதிராவை பார்த்தது.

நம்மை ஏன் இவன் இப்படி பார்க்கிறான் என்று அவள் யோசித்து கொண்டு இருக்கே அதே நொடியில், பொண்ணை பிடித்து இருக்கிறாதா? என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு சந்துரு, "பிடித்து இருக்கு. உங்க ரெண்டாவது பொண்ணை இல்ல, உங்க முதல் பொண்ணை பிடித்து இருக்கு. அடுத்த மாசமே ஒரு நல்ல முகூர்த்தமாக பாருங்க. அங்கே கல்யாணத்தை முடித்து விடலாம்.", என்று சொன்னவன் தன் பெற்றோருடன் சென்று விட்டான்.

இங்கே தனக்கு பார்த்த மாப்பிள்ளையை தன் அக்கா தன் பக்கம் இழுத்து கொண்டாள் என்று சொல்லி அவளின் தங்கை அழுது சண்டை போட அந்த நேரத்தில் ஆதிராவின் கோபம் சந்துருவிடம் தான் போனது.

அதே கோபத்தில் அவனுக்கு போன் செய்தாள். அவளின் போனை எடுத்தவன், "சொல்லு பேபி! அதுக்குள் இந்த மாமனின் நினைப்பு வந்து விட்டதா…?", என்று சமயம் புரியாமல் வாயை கொடுத்து வாங்கி கொண்டான்.

அவளும் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தையும் சொல்லி திட்டினாள். அதை கேட்டும் கூட அவன் சிரித்து விட்டு, "பேபி, திட்டியது முடிந்தது என்றால் நான் பேசலாமா...?", என்று கேட்டான்.

ஆதிரா, "அதை கேட்க தானே போன் பண்ணேன். சொல்லு! எங்க தங்கச்சிக்கிட்ட இல்லாத எது என்கிட்ட இருக்கு.", என்று அதே கோபம் மாறாது கேட்டாள்.

சந்துரு, "என்ன இல்ல...? உன் அளவுக்கு அவளுக்கு படிப்பு இல்ல...! உன் அளவுக்கு அவளுக்கு பொறுமை இல்ல...! அதெல்லாம் தாண்டி அவ சிரிப்பில் நடிப்பு இருந்தது ஆனால் உன் சிரிப்பில் இயல்பு இருந்தது. அதே போதாதா…?", என்று சொன்னான்.

ஆதிரா, "அவ அளவுக்கு நான் நிறம் இல்ல."

சந்துரு, "நான் என்ன ஃபேஷன் ஷோ வா நடத்துகிறேன்…? சந்தன நிறத்தை கல்யாண பண்ணிக்க. நான் என் வாழ்க்கை துணையே தேடினேன் எனக்கு பிடித்த மாதிரி உன்னை பார்த்த பிறகு என் மனம் சொன்னது நீயே என் அழகி என்று. அதான் எதைப்பற்றியும் யோசிக்காமல் கேட்டே விட்டேன்."

ஆதிரா, "என் தங்கச்சியை பார்க்க வந்துட்டு..."

சந்துரு, "அக்காவை பார்க்க வந்துவிட்டு தங்கச்சியை தான் கேட்க கூடாது. அதோடு உன் தங்கச்சி எங்க அம்மா அப்பாவின் தேர்வு, நீ என்னோட தேர்வு. உன்னை பார்க்காமல் இருந்திருந்தால் கூட உன் தங்கச்சியை மணந்து இருக்க மாட்டேன். அதனால் நீ தங்கச்சி வாழ்கையை கெடுத்த குற்ற உணர்வு உனக்கு வேண்டாம்."

ஆதிரா, "இருந்தாலும் உங்க அழகுக்கும் என் அழகுக்கும் செட் ஆகாது."

சந்துரு, "உடல் நிறத்தை மட்டும் வைத்து அழகு என்றாலும் நம்ம தேசத்தில் முதன்மை நிறம் கருப்பு தான். கருப்பு தான் எனக்கு பிடித்த கலாரு.", என்று சொல்லி அவன் சிரித்தான்.

ஃபோனில் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னவள் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து முதல் முதலில் சிரித்தாள். நிறத்தை மையப்படுத்தி தன்னை அழகு இல்லாதவள் சொன்னவர்களை மட்டும் இத்தனை நாள் பார்த்தவள், முதல் முதலில் அவளின் கருப்பு நிறத்தை அழகு என்று சொன்னவனை பார்த்ததும் அல்லாமல் அவனையே கல்யாணமும் செய்து கொள்ள போகிறாள்.

நன்றி!

விஜயன்.

 

 

10.K2K-00037

அழகு:

இரவு 9.00 மணி...

பிரதாப் தன் 5 வயது மகன் ஆதவுடன் வீடு திரும்பினான். ஆதவுக்கு வரைய பிடிக்கும் என்பதால் ஆதவும் அவனும் கொஞ்ச நேரம் வரைந்துவிட்டு படுக்கைக்கு வந்தனர்.

பிரதாப் "நாளைக்கு காலைல வெளிய போறோம். மதியம் ஹோட்டல்ல சாப்டுட்டு ஈவினிங் பிளே ஏரியா போய்ட்டு பாட்டி வீட்டுக்கு போறோம். ஓகே???’’

"ஓகே பா...எனக்கு கதை சொல்லு பா. "

"நான் இப்போ கதை சொல்றேன். கேட்டுட்டு சமத்தா தூங்குவியாம். ஓகே"

"ம்ம்ம்ம்ம். ஓகே…"

காலை 7.30 மணி....

"கண்ணா. எழுந்திரு டா. குளிச்சிட்டு வெளில போகணும்ல"

"ம்ம்ம்ம்ம்..."

" கம் ஆன் வேக் அப் குட்டி".

"ம்ம்ம்ம்ம்..."

அவன் ஆதவின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து," நீ அப்பாக்கு ஒரு குட் மார்னிங் கிஸ் கொடு ".

அவனும் அவன் முகத்தை பிடித்து அழுந்த முத்தமிட்டான்...

" லவ் யூ டா. கம் ஆன் கம் ஆன்... "

இருவரும் ஒன்றாக குளித்தனர். ஆதவ் தண்ணீரை எடுத்து பிரதாப் மேல் ஊற்றி" நான் உன்ன குளிப்பாட்றேன்" என்று சோப் தேய்த்து விட்டான். பிரதாப் அவனுக்கு தன் கையால் ஊட்டி விட்டு, இருவரும் ஒரே நிற ஆடை, கூலர்ஸ் அணிந்து பைக்கில் கிளம்பினர்.

காலை 9 மணி...

"அப்பா நான் ஹாரன் அடிக்கிறேன்..." "சரி கரெக்டா அடி. விட்டுவிட்டு அடி. ஒரேடியா அடிச்சா சில பேர் பயந்து நின்னுடுவாங்க. "

" ஓகே ஓகே"...

இருவரும் உயிரியல் பூங்கா வந்தனர். பூங்கா நிர்வாகத்தின் வண்டியிலேயே செல்வதற்கு இரு சீட்டுக்களை வாங்கி அதில் ஏறினர். அவர்கள் புலி, சிங்கம், கரடி, என பல மிருகங்களை கண்டனர்.  அவற்றை கண்டதும் ஆதவ் துள்ளி குதித்தான்.

" அப்பா அங்க பாரு பா, மூணு புலி பா, அது ஏன் பா மேலயும் கம்பி அடிச்சி வச்சிருக்கு"

"இல்லனா அது வெளில பாய்ந்து கடிச்சிடும்ல"

"ஏன் இந்த புலியல்லாம் இங்க வெச்சிருக்காங்க?"

"நாம எல்லாம் பார்க்கதான்"

"அப்போ அது உள்ளேயே தான் இருக்கணும்ல. பாவம் இல்ல பா"

பிரதாப் ஒன்றும் கூறமுடியாமல் தன் மகன் கண்ணோட்டம் கண்டு ரசித்தான்.

பிறகு மான் கூட்டத்தினை கண்டு" அப்பா இதுவும் இந்த பெரிய கேஜ் உள்ளேயே தான் இருக்கும்ல. நம்மள மாறி ஜாலியா வெளில போக முடியாதுல பா? "

" ஆமாம் டா செல்லம்."

மீன் அக்வாரியம் சென்று மீன்களை எல்லாம் பார்த்து அதன் வண்ணங்களை எல்லாம் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் பிரதாப்பும் ஐந்து வயது பிள்ளையாய் மாறினான். பின்னர் இருவரும் செல்பி எடுத்து கொண்டனர். ஜூஸ் ஆர்டர் செய்து இருவரும் அருந்தினர்.

மதியம் 1.00 மணி...

இருவரும் மாலில் ரெஸ்டாரன்ட் வந்தனர். சாப்டுட்டு ஆர்டர் செய்து வந்ததும் ஆதவ்

"அப்பா நான் உனக்கு ஸ்பூன்ல தரேன்" என்று சொல்லி பிரதாப்பிற்கு தன் சிறு கையால் ஊட்டிவிட்ட போது பிரதாப் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி அடைந்தான்.

பின்னர் இரண்டு வாய் வாங்கிக் கொண்டு, "நானே சாப்டுறேன் பா" என்று அவனே சாப்பிட்டான்.

தன் கண் முன்னே தன் மகன் வளர்ச்சியையும் மாற்றத்தையும் காணப் பெற்றான்.

பின்னர் இருவரும் அனிமேஷன் படத்திற்கு சென்றனர். பின்னர் படம் முடிந்து பிளே ஏரியா சென்று அங்கு இருவரும் டாஷிங் கார், பைக் ரேஸ் கேம், பால் த்ரோயிங் என்று வயசு வித்யாசம் இல்லாமல் இருவரும் நன்றாக ஒருவருக்கு ஒருவர் விளையாடினர்.

மாலை 5.00 மணி...

அதன்பின் ஐஸ்கிரீம் பார்லர் வந்து ஐஸ்கிரீம் சாப்பிடும் போது ஆதவ்

"அப்பா அந்த படத்துல மூணு பசங்களும் அவங்க அம்மா அப்பா கூட ஒரே வீட்லயே இருந்தாங்கல?"

"ஆமா "

"அப்போ ஜூல (zoo) அனிமல்ஸ் எல்லாம்?"

"குட்டில அதுவும் தன் அம்மா அப்பா கிட்ட இருக்கும் அப்புறம் தனியா போய்டும்"

"அப்போ ஏன் பா நான் மட்டும் அம்மா பாட்டி கூட இருக்கேன், நீ வேற வீட்ல இருக்க? "

பிரதாப் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல்" கண்ணா தாத்தாக்கு உடம்பு செரியாகிற வரைக்கும் இப்படி இருப்போம் "

" தாத்தாக்கு எப்போ உடம்பு செரியாகும் "

" சீக்கிரம் செரியாகிடும் கண்ணா "என்றான்.

அந்த ஐந்து வயது குழந்தையிடம் பிரதாப் எப்படி சொல்லுவான் அவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதும் அதனால் நீதிமன்ற தீர்ப்பின் படி பிரதாப் வருடத்திற்கு இரண்டு முறை அவனோடு ஆதவை தங்க வைத்து கொள்ளலாம் என்றும் வாரம் ஒருமுறை பார்க்கலாம் என்றும்.

பின்னர் அவனுடன் அவன் பாட்டி வீட்டில் கொண்டு விட்டதும் ஆதவின் அம்மா அவனை வரவேற்றாள். அவன் மறுபடியும் பிரதாப்பிடம் வந்து ஒரு பேப்பரை கொடுத்து

"பை பா..." என்று கையசைத்து காற்றில் ஒரு முத்தம் தர, பிரதாப்பும் பதிலுக்கு காற்றில் முத்தம் தந்தான்.

அதை பிரித்து பார்த்த போது அதில் ஆதவ் தன் கைகளால் ஒரு வட்டம், கோடு பின்னர் அதில் கைகள் கால்கள் போட்டு ஆண், பெண் மற்றும் ஒரு சிறுவனை வரைந்து அதில் " லவ் மாம் அண்ட் டேட்" என்று எழுதி இருந்தான். பிரதாப்பின் விழியின் ஓரம் லேசான கண்ணீர் துளி.

அவன் தனக்குள் "உண்மையில் அழகு என்பது ஒருவர் உருவத்தில் அல்ல அது வாழ்வின் பல தருணங்களில் காணும் ஒன்று என்றும் இந்த நாள் அவனுக்கு அப்படிப்பட்ட ஒரு அழகான ஒன்று என்றும் உணர்ந்தான். தன் வாழ்வில் மேலும் பல அழகிய நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையில் அவன் பைக்கில் உயிர்பித்து புறப்பட்டான்.

-பா. பிரபு

 

 

11.K2K00038

அழகு!

 

அழகு!அழகு தானே எல்லாம் ?!என்று சொல்லத் தோன்றுகிறது.

அந்த அளவிற்கு மனித வாழ்வை அழகே ஆட்டிப்படைக்கிறது எனலாம்.

அழகு குறித்த ஒவ்வொருத்தர் பார்வையும் அளவீடும் வேறு வேறு மாதிரி.அந்த வகையில் தனுசுக்கு காவ்யா எப்படித் தோன்றினாலோ தெரியவில்லை.திருமணமானதில் இருந்து காவ்யாவும் கவனித்துக் தான் பார்க்கிறாள்.காவ்யாவை அவன் அழகென்று யோசித்து ஆசையாக பார்த்ததேயில்லை.

திருமணம் முடிந்து விட்டது இவள் என் மனைவி என்பதற்காக மட்டுமே அவன் அவளுடன் வாழ்வதாக அவளுக்குத் தோன்றியது.

அவளிடத்தில் அவன் எதையும் ரசித்துப் பாராட்டியதே இல்லை. ஏன் பல முறை அவன் அவளை நேருக்கு நேராக பார்ப்பதைக் கூட தவிர்த்திருக்கிறான்.

திருமணமான புதிதிலேயே காவ்யா இதைக் கண்டுபிடித்து விட்டாள். ஆனால் என்னைப் பாராட்டுங்கள் என் அழகை ரசியுங்கள் என்று சொல்லவா முடியும்?! மனக்குறையோடே அவளும் வாழ்ந்தாள்.

வெளி இடங்களில் கம்பெனி பார்ட்டிகளில் அவர்கள் சந்திக்கும் மற்ற பெண்களை தனுஷ் ஆவலாக பார்ப்பதும் வலிய சென்று பேசுவதையும் பார்த்த போது தான் காவ்யாவிற்கு கோபம் வந்தது.

ஏன் அந்தப் பொண்ணை அப்பிடிப் பார்க்குறீங்க?!அவங்க கூட அப்படியென்ன பேச்சு?!”

நான் யாரையும் பார்க்க அவங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்

விட்டேத்தியாக பதில் சொன்னான்.

இவன் மீது காதலில் காவ்யா பொசசிவாக ஆகிப் போனாள். ஆனால் அதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை கோபப்பட்டான்.

நான் அழகாக ஆங்கிலம் பேசாததால் அழகாக தெரியவில்லையா?! நவநாகரிகமாக உடை உடுத்தாததால் அழகாகத் தெரியவில்லையா?!ஏன் என்னைத் தவிர்க்கிறான்?! புரியாமலே தவித்தாள் காவ்யா.

தனக்குத் தெரிந்தவரை நேர்த்தியாக உடை உடுத்துபவளாகவும் அளவான உடலோடு சிவந்த நிறமாக அன்பாகத்தான் இருக்கிறோம் ஏன் இவர் இப்படி இருக்கிறார் எனத் தவித்தாள்.

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தால் போதும்னு ஒரு நாள் அவர்களின் உறவின் போது அவன் சொல்ல….

முழுவதுமாக உடைந்து போனாள்.

அப்பா, அம்மா, உறவுகளுக்காக, ஊரு உலகத்திற்காக, செக்ஸிற்காக, குடும்பம் என்ற அமைப்பிற்கா, மட்டுமே இவர் என்னைத் திருமணம் செய்திருக்கிறார். என்னை அவர் ஒரு சிறிதும் ரசிக்கவில்லை என்று மனம் புழுங்கிப் போனாள் காவ்யா.

இதற்கிடையே பிள்ளைகளும் பிறந்து மூன்று பிள்ளைகளுக்கு பொறுப்பான அம்மாவாக மாறிப் போனாள். அந்த கடமையையும் பொறுப்பையும் கூட அவன் ரசித்துப் பாராட்டவில்லை. முடிந்தால் ஏதாவது குறை சொல்லி குத்திக் காட்டுவான்.

 

தனுசுடைய அப்பா இறந்த சில நாளில், லோ பிரசர், பைல்ஸ், ஹெர்னியா, என்று ஒன்று சேர்ந்த தாக்குதலில் நிலை குலைந்து போனான் தனுஷ்.

காவ்யா கலங்காமல் பதறாமல் உடனிருந்து அத்தனைஉதவியும் செய்தாள். பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டாள்.

கிட்டத்தட்ட ஒத்த வயதுடைய அவர்களுள் தனுஷ் மிக வேகமாக தளர்ந்து போனான்.

காவ்யா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் அவளை கவனித்துப் பார்த்தான். எத்தனைப் பொறுப்புகள்பொறுமைநிதானம்சுறுசுறுப்பு…. பக்குவம்….பயமின்றி செயல்படும் அழகு என்று அவளிடத்தில் எத்தனை அழகான விசயங்கள் இருக்கின்றன இதை இத்தனை நாள் உணரவேயில்லையே என்று நினைக்கிறான்.

அவளைப் பார்த்துப் பொறாமைப்படுகிறான்.

உடல், படிப்பு, பதவி, பேச்சு, தான் அழகுன்னு நினைச்சேன் ஒரு பெண்ணுக்கு அதையும் தாண்டி எத்தனை அழகுகள் என வியந்தான்.

என் மனைவி அழகு தான் என பெருமையாக நினைத்தான்.

அதன் பிறகு அவளிடம் அன்பாக பேசினான்சிரித்தான்அவர்களின் வாழ்வு இப்போது தான் பேரழகானது.

நீதி;

உறவாக வந்தவளிடம் உடலழகைத் தேடி உணர்வைச் சாகடிக்காதே. கிடைத்த உறவோடு நன்றி சொல்லி வாழ்ந்திடு.

-பூமாதேவி

 

 

12.K2K00048

 அழகு

           

               நம் பூமியில் பல பேர் அழகிகள், மற்றும் பலப்பேர் அழகியாக வாழ்கின்றனர், ஒரு ஊரில் உள்ள ஓர் அழகியின் தோற்றம் அருவெருப்புடையதாய் விளங்கியது,

             அவள் வெளியில் செல்லும் நேரங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், வீட்டில் உள்ள உறவினர்கள் இடையிலும் வெறுத்து ஒதுக்கி வைக்கப்படாள்,

             இவள் அயராது பாடு பட்டு பொன் பொருள் பணம் சேர்த்து, இவளை வெறுத்து ஒதுக்குவோரிடம் சமர்ப்பித்தால், இவள் சமர்ப்பிக்கும் பொன் பொருள் பயனால் இவளுக்கு உணவு அளித்து உயிர் வாழ வைத்திருந்தனர்,

             தன்னை பெற்ற தாய் தந்தை கூட அருவெறுப்பாக காண்பதால் தினந்தினம் மன உளைச்சல் கொண்டு உயிர் வாழ்ந்தால்,

            இவள் தொட்ட பாத்திரம் கூட மீண்டும் உபயோகிக்க கூடாது என்று இருந்தனர்., ஒரு நாள் இவள் விபத்தில் தன் கால்களில் ஒரு காலினை இழந்தால், இவளின் மதிப்பு அறியாதவர்கள், அவளுக்கு உணவு அளிக்கவும் மறுத்து விட்டனர், பசியினில் உயிர் இழந்தால் ...

           அவள் உயிர் பிரிந்த பின், இவர்கள் வீட்டில் உண்ணும் உணவிற்கு பஞ்சம் ஏற்பட்டது, வெளியில் இவள் இருந்த இடத்தில் சுற்று வட்டராம் அனைத்தும் வறுமையில் வாடின, அவள் வேலை செய்த இடத்திலும் சில குழப்பங்கள் ஏற்பட்டு நஸ்டம் அடைந்தது, ஒரே ஒரு அருவெறுப்பாக இருக்கும் பெண்ணின் இழப்பு பெரும் இழப்புகளை எவ்வாறு ஏற்படுத்தியது என்று எண்ணி கலங்கினர் அனைவரும்.,

            அப்போது அனைவருக்கும் ஒன்று புரிந்தது, இவளின் உருவம் அருவெறுப்பாக இருப்பினும் உண்மையில் அவள் உடன் இருக்கும் அனைவரது உள்ளம் மட்டுமே மிகவும் அருவெருப்பானது என்று உணர்ந்தனர்.,

             இவள் வீட்டை பாதுகாப்பதில் மனதளவில் பெரும் ஜமானியாக விளங்கி அனைவருக்கும் அனைத்தும் செய்தால், வெளியில் உள்ள அனைவருக்கும் பொது சேவைகள் பலவும் தினந்தனம் தன்னால் முடிந்த அனைத்தும் செய்தால், வேலை செய்யும் இடத்திலும் இரவு பகல் பாராது உழைத்து அனைவருக்கும் வேலையின் சிரமத்தை குறைத்து வந்தால்.,

             இவளின் உள்ளளவில் அழகிய தேவதை இருந்ததை அவள் உயிருடன் இருக்கும் போது யாரும் அறியவில்லை ...

கருத்து:  எப்பொதும் நமது உடன் இருப்பவர்கள் குணத்தினை அறிவதே மிக சிறந்தது ...

இப்படிக்கு,

சி. தெய்வாணி ஸ்ரீ.,

 

 

13.K2K00050

அழகு....

புலன்கள் மூலம் அகம் பெரும் இன்பங்களை அழகு எனலாம்...ரசனை கொண்டவர் அனைத்திலும் அழகை காண வல்லவர்.... தென்னங்கீற்று வழி காலை கதிரவனின் தோற்றம் முதல் நட்சத்திர வானின் சந்திரன் வரை அனைத்து இயற்கையின் படைப்புகளிலும் அழகை உணரலாம்......அவை மனதில் அமைதியை நிலைநாட்ட வல்லவை.... இவை அனைத்தும் தாண்டி என் மனதை ரசிக்க வைத்தவள் பத்ரா...7 வயதே ஆன சிறுமி.... எங்கள் குடியிருப்பின் அருகில் உள்ள பூங்காவின் பராமரிப்பு பணியை மேற்கொண்டு அங்கேயே வசிப்பவர் தமிழினி....குடும்பத்தால் கைவிடப்பட்டவர்...தானும் தன் மகளுமாக அங்கு வசித்து வந்தார்....7 வயதான நிலையிலும் பத்ரா வின் பேச்சுத்திறன்  குன்றியிருப்பதை நினைத்து அடிக்கடி என் பாட்டியிடம் வருத்தம் தெரிவிப்பார்.....பகுதி நேரமாக அருகில் இருக்கும் குடியிருப்புகளில் பூ விற்று வந்தார்....அன்று மொட்டவிழாத மல்லிகையுடன் பத்ராவையும் அழைத்துக்கொண்டு வந்தார்.....கல் மேசையில் பூ கூடையை   இறக்கி வைத்து முலம் போட ஆரம்பிக்க...பத்ராவோ அவள் அம்மாவின் அருகே சமத்து பிள்ளையாய் அமர்ந்திருந்தாள்.....உருண்டை முகம்...படிய வாரிய சிகை.....பூவைத் தாங்கும் அளவிற்கு தலைமுடி இல்லை.. ஆனாலும் பூச்சூடி இருந்தால்...... மாநிறத்தால் அல்லல்...மலையத்வஜன் மகள் நிறத்தால்......கையில் ஓலையால் செய்யப்பட்ட பொம்மை கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள்...ஏனோ யாரையும் கண்டு கொள்ளாமல் இருந்த அவள் என்னை கண்டதும் புன்னகைத்தாள்...

கள்ளம் கபடமரியாத அந்த புன்னகையின் அர்த்தம் நானறியேன்... ஆனால் அதன் தாக்கம் இதயத்தில் ஊடுருவியது...அன்று அறிமுகமானவள்...பின் என்னை எங்கு கண்டாலும் புன்னகைப்பாள்...ஓடி வந்து ஏதேனும் ஒரு பூ தருவாள்...சிறுவர்களின் உலகம் விசித்திரதமானது அல்லவா. ஒரு... நாள் மாலை பூங்காவின் வெளியே சோலை கருது விற்கும் தள்ளுவண்டியை சுற்றி ஈக்கள் போல் குழந்தைகள் வட்டமிட்டனர்...அதை வாயிலில் இருந்தபடி பத்ரா எட்டிப் பார்த்து க்கொண்டிருந்தால்... ஒரு பெரிய கருதை வாங்கி பத்ரா விடம் சென்றேன்...மீண்டும் புன்னகைத்தாள்... இம்முறை என்னை கண்டு அல்ல...கருதை கண்டு...சற்று அருகில் வந்ததும் கருதை சட்டென்று பிடுங்கி பூங்காவின் மறு வாசலுக்கு ஓட்டம் பிடித்தாள்... அங்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்த வயதான முதியவரிடம் அவள் கருதை தர...அவர் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு தென்னை ஓலையால் பின்னப்பட்ட பொம்மையை வழங்கினார்...அவள் வேகமாக தன் வீட்டிற்கு விரைந்து அழகிய சிகப்பிதழ் ரோஜாவை பெற்றுக்கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள்...ஏனோ அவள் முன் ரோஜா பொலிவிழந்து காணப்பட்டது...எத்தனையோ பேர் அம்முதியவர் அமர்ந்திருக்கும் வழி பூங்காவில் வருவதும் செல்வதுமாய் இருப்பர்...யாருக்கும் தோன்றாத எண்ணம் அச்சிறு குழந்தைகுக்கு தோன்றியது...ஜன்னலில் இருந்து பார்த்தேன்...தினம் தவறாது முதியவருக்கு உணவளிக்கிறாள்...ஆதரவற்ற அவரும் அதை தானமாய் வாங்காமல் தன்னால் இயன்றதை கூலியாய் தருகிறார்...அன்று அவள் மேலும் அழகாய்த் தெரிந்தாள்...

ஈகை மனிதனின் அக அழுக்கை போக்கி அவன் அகத்தை அழகுற செய்யும்...அகத்தின் அழகே அவள் முகத்தில் தெரிந்தது போலும்...

அவள் என்னைப் பார்த்து புன்னகைத்ததற்கான காரணத்தை இன்றளவும் யோசித்தபடி நான்!!!

- Tharini

 

 

14.K2K-00053

அழகு

 

"இன்னும் எவ்வளவு நாள் இப்படியே தனிமையா இருக்க போற ரஞ்ஜனி? ஏழு மாசம் கடந்தாச்சு. இந்த பிரிவு தேவையா டி?இப்ப லாக் டவுன் வேற....

எப்போ ஸ்ரீலங்காவுக்கு பிளைட் விட? எப்போ எம்பசி திறக்க? எப்போ உன் ஹஸ்பெண்ட் வர? எதுக்கு டி போக விட்ட? அதுவும் கல்யாணமாகி மூனு வாரத்துல...

உனக்கு மண்டைல ஏதாச்சும் மசாலா இருக்கா? என கடகடவென தன் உள்ள குமுறளை வெளியிட்டாள் தோழி ரத்னா...

ஐயோ ரத்னா... இத நீ எத்தனை தடவ டி கேட்ப? கொஞ்சம் எழுதறதுக்கு யோசிக்க விடேன் டி...

"கொரோனா கதைகள்"தலைப்புல கதை எழுதற போட்டி...

அழகுனு தலைப்புல நாலு வார்த்தை யோசிக்க விடுடி, டைம் ஆச்சு காலை ஒன்பது மணிக்குள்ள மெயில் பண்ணனும் என கூறியவாறு பேனாவால் நெற்றியோரம் தட்டிக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள் ரஞ்ஜனி...

சில்லென நெற்றியோர வியர்வை துளிகள் பேப்பரில் பட...பேனா எழுதவில்லை.... அவள் மன எண்ணங்கள் எழுத ஆரம்பித்து விட்டது...

வள் மனதில் ரமேஷின் உருவம்..

ரஞ்ஜனி இங்கிலீஸ் டீச்சர்...

ரமேஷ் மலேசியாலஆல்பம் சிங்கர்...

இரண்டு நாடு கடந்த காதல்...மூன்று வருட பேஸ்புக் காதல்...ஸ்ரீலங்கா டூ விருதுநகர் காதல்...

மதுரை ரீச் ஆன ரமேஷை பிக்கப் பண்ண காரில் பயணம்...இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்ற தருணம்...யாருக்குமே அமையாத இனிமை

காதலை காத்திருந்து காணும் சுகம் மிக அழகு...

முதல் தடவையா காபி ஷாப்பில் சந்திப்பு...ரஞ்ஜனி அருகே அப்பாவும் இருந்தார்எதிரே ரமேஷ்...கும்பகோண டிகிரி காபி டேபிளில்...டம்ளரில் காபி ததும்ப ததும்ப இருந்தது...ரஞ்ஜனிக்கு எடுத்து குடிக்க ஏதுவா இல்லை... அவ்வளவு சூடு... கீழே சிந்தும் அளவுக்கு காபி நிரம்ப இருந்தது...

அப்போ ரமேஷ் தன் காபியை வைத்துவிட்டு ரஞ்சனிக்கு காபியை ஆத்தி கொடுத்தான்...

மூனு வருஷ சொல்லாத ஆசைகள் விழி இசைக்க அந்த காபி ஆற்றும் சத்தத்தோடு சப்தமாய்....இன்னும் கூட சொல்லாமலே... அவனுக்கு தெரியாமலே அவன் விழி பார்த்த நிமிஷங்கள் மிக அழகு...

கல்யாணத்திற்கு பின்...

இரவு ஒரு மணிக்கு கூட மொபைல் நோண்டிக் கொண்டே...

"ரஞ்ஜனி காபி"...

" ரஞ்ஜனி டீ...

"டீ சூடு பத்தல"...

"இல்ல இருக்கட்டும்"

இப்படி நிறைய கமெண்ட்ஸ்...

அத்தன மணிக்கு சிறு பிள்ளை போல் தலையாட்டிய தருணம்... இன்னும் அந்த காபி கப்பை கடக்கும் நொடி மிக அழகு...

"வேண்டியதை எப்போது வேண்டுமானாலும் நேரம் பாராமல் செய்யும் போது கணவனுக்கு தாயாய் மாறிய தருணம் மிக அழகு..."

"கொக்கு ஒத்த காலுல மீனுக்கு காத்திருப்பது போல

சமைக்கிற சாப்பாடு நல்லா இருக்குடி என சொல்லபடுற ஒத்த வார்த்தைக்காக சாப்பிட வெச்சு பக்கத்திலே காத்திருக்கிற நிமிஷம் மிக அழகு..."

"இல்ல ரஞ்ஜனி நீ பரிமாற எல்லாம் வேணாம் நானே போட்டுகிறேன்... கூட உட்கார்ந்து சாப்பிடு மா என சொல்லும் அழகே ஓர் காதல் தான்..."

"சந்தர்ப்பம் சட்டென மாறியது....

ஸ்ரீலங்கா போக வேண்டிய சூழல்...

மியூசிக் சம்பந்தமா..."

ரமேஷ் ஸ்ரீலங்கா போன நேரம் இப்போ கொரோனா லாக்டவுன்ல

இந்த கதைய வாசிக்கிறவங்க

சீக்கிரம் லாக்டவுன் முடிய இந்த ரஞ்ஜனி ரமேஷ்காக ஒரு நிமிஷம் வேண்டுவீங்களா?

அடுத்தவங்களுக்காக சாமிட்ட வேண்டுறதும் ஒரு அழகுதாங்க...

இது கதை இல்லைங்க இந்த நிஜமும் அழகு தாங்க...

உண்மையான காதலின் அழகே நம்பிக்கை தான்...

காத்திருக்கிற நிமிஷம் வலி தான் அந்த வலிலயும் அந்த நினைவுகள் பேசற அழகு அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும் தான் புரியும்...

நீதி: நம்ம மனசுக்கு பிடிச்சவங்க மேல நாம வெச்சுருக்கிற நம்பிக்கை எப்பவுமே மிக அழகுங்க...

-பூங்கொடி

 

 

15.K2K00056

அழகு

 

கதிரவன் மெல்ல மெல்ல தன் மஞ்சள் வெயிலின் வருடலை தன்னுள் வாங்கிக்கொண்டு உஷ்ணத்தை உமிழ்ந்து கொண்டு இருந்த அந்த நேரத்தில் சுந்தரி அம்மாள் தன் மகனை, தம்பி அழகு எந்திரிப்பா! அழகு எந்திரி! மணி எட்டாவது பாருப்பா என்று சொல்லிவிட்டு உறங்கும் தன் மகனை ஒரு பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ம்..., என் பையன் ஒரு ராஜா மாதிரி இருக்க வேண்டிய பையன் போயும் போயும் இந்தப் பாவி வயிற்றில் பிறந்து இவ்வளவு கஷ்டப்படும் அவனுக்கு தான் எவ்வளவு அழகு என்று உள்ளுக்குள் தனக்குள் மெச்சிக் கொண்டாள். அழகு சுந்தரம் இருந்த வந்த எட்டு மணி தான் ஆகுது அதுக்குள்ள ஏன் கத்துற என்று சொல்லிவிட்டு குளியல் அழைத்துச் சென்றதே வேகமாக குளித்துவிட்டு வந்து அம்மா வைத்திருந்த இட்லியையும் தக்காளி சட்னியையும் கொரித்துக்கொண்டுவிட்டு சட்டென்று உடைமாற்ற சென்றுவிட்டான் வயலட் கலர் சட்டை போட்டுக்கொண்டு கருப்பு கலர் பேண்ட் ஒன்றை அணிந்து கொண்டான். கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்தான்அழகு சுந்தர் யாருடா அந்த பேர் உனக்கு இவ்வளவு அழகா செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க நீ உண்மையிலேயே அழகு சுந்தர் தான் என்ன அழகு என்ன கம்பீரம் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தான். உண்மையில் அழகு சுந்தரம் தன் பெயருக்கு ஏற்றார் படி அழகு நல்ல சிவப்பு கலர் கூரிய மூக்கு, சீரான உடம்பு அளவான உயரம் என்று இளம் பெண்கள் எல்லோரையும் கவரக்கூடிய அழகுதான் அவன். கண்ணாடியை விட்டு விலக மனமில்லாமல் இன்னும் கண்ணாடியிலேயே தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் தம்பி டைம் ஆகுது பா இன்னும் என்ன பண்ற என்று அம்மாவின் குரல் கேட்டவுடன் சட்டென்று நிதானத்திற்கு வந்தவனாய் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு நான் வரவா என்று சொல்லிவிட்டுச் சென்றான். தெருவில் நடந்து செல்லும் பொழுது இரண்டு இளம்பெண்கள் தன்னைத் திரும்பிப் பார்த்தது நினைத்து பூரித்து கொண்டு பஸ் நிலையத்திற்கு வந்தான்,அங்கு கல்லூரிக்குச்செல்லும் இளம் பெண்களையும் வேலைக்குச் செல்லும் இளம் மங்கையர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இவன் ஒரு ஓரமாக நின்று கொண்டான் அங்கும் ஒரு சில பெண்கள் தன்னை பார்ப்பதை கவனித்தேன் உள்ளுக்குள் கர்வம் கொண்டான் அவன் செல்லும் பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான் .அப்பொழுது தன் அருகில் உட்கார்ந்து இருக்கும் நபரை கவனித்தான், என்ன ஒரு குண்டான உடம்பு! கருப்பான நிறம், வயிறு பிதுங்க சட்டை போட்டு கொண்டிருக்கிறான், இதில் டை வேறு...! ஆளும் அவனும் அந்த மனிதன் அணிந்திருந்த சோடாபுட்டி கண்ணாடி இன்னும், அவன் அழகை விகாரப் படுத்தியது; என்று அந்த மனிதனின் உருவத்தை தனக்குள் எடை போட்டுக்கொண்டு.

இருக்கையில் தான் இறங்கும் இடம் வந்தவுடன் வேகமாக இறங்கி தன் வேலை பார்க்கும் ஐடி அலுவலகம் நோக்கி நடந்தான். அழகு சுந்தர், அலுவலகம் சென்றவுடன் தன்னுடைய ப்ராஜக்ட் மேனேஜர் அழைக்கும் குரல் கேட்டு சட்டென்று அவருடைய அறைக்கு விரைந்தான். என்னப்பா உள்ள வா என்று தன் மேனேஜர் அழைத்தவுடன் அவருடைய அறைக்குள் நுழைந்து சென்றான். நான் கொடுத்த ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் முடிஞ்சிருச்சா என்று தன்னுடைய மேனேஜர் கேட்டவுடன், இல்ல சார் கொஞ்சம் பென்டிங் இருக்கு என்று குரல் தாழ்த்தி சொன்னான் இதைக் கேட்டவுடன் மேனேஜர் சற்று சூடாக,‘இதைக்கூட முடிக்காம நீ என்ன பண்ணிட்டு இருந்த, எந்த தைரியத்துல என் முன்னாடி வந்த, ஆளும் மூஞ்சியும், நீ எல்லாம் ஒன்னுக்கும் லாயக்கில்லை என்று சொல்லு கொண்டு இருக்கையில் அந்த மேனேஜரின் அறைக்கதவு மெதுவாக தட்டப்பட்டது மே கம் இன் , எஸ் கமின் என்று மேனேஜர் சொன்னவுடன் உள்ளே அந்த உருவம் வந்தது இந்த ஆளா ஆம் நான் பஸ்ஸில் பார்த்த அந்த உருவம் தான் என்று அவரை அந்த சூழ்நிலையிலும் ஏளனமாக பார்த்துக்கொண்டிருந்தான் அழகு சுந்தர், அந்த உருவம் வாய்திறந்து சாரி என்னுடைய கார் ரிப்பேர் ஆயிருச்சு பஸ்ல வர வேண்டியதா போச்சு அதான் கொஞ்சம் லேட் என்று சொன்னது இட்ஸ் ஓகே சார் நோ ப்ராப்ளம் என்று மேனேஜர் பல்இழித்தபடி அவரை வரவேற்றான் இதைப் பார்த்துக்கொண்டிருந்த அழகுசுந்தரம் சற்று அதிர்ச்சியுற்ற அவனாய் தன்னுடைய மேனேஜரை நோக்கி பார்த்தான் மேனேஜர் உடனே அழகு சுந்தரத்தை நோக்கி சாரி  இவர் யார் என்பதை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன் என்று இவர்தான் நம்முடைய புதிய எம் .டி என்று சொன்னான், அப்படியா வெல்கம் சார் என்று போலி புன்னகை ஒன்றை உதித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான், இப்பொழுது அவனுக்கு தலையே சுற்றுவது போலிருந்தது என்னது இவரு டேரைக்டரா என்றும் மனதில் புழுங்கி கொண்டான்.அலுவலகம் முடிந்து மாலை பஸ் நிலையத்திற்கு சென்ற உடன் இன்று காலை நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் எண்ணிப் பார்க்கையில் அங்கு நின்றிருக்கும் எல்லோரும் இவனைப் பார்த்து நகைப்பது போன்றிருந்தது பஸ்ஸில் ஏறிசெல்லும் பொழுது கூட பஸ்ஸில் நின்றிருந்த அனைவரும் இவனை ஏதோ பார்த்து சிரிப்பது போலிருந்தது தெருவில் நடந்து கொண்டிருக்கும் பொழுது கூட இவனைப் பார்த்து சிரிப்பது போன்று இருந்தது அப்பொழுது தான் அவனுக்கு உள்ளுக்குள் உரைத்தது அழகு என்பது உடல் சார்ந்த விஷயம் அல்ல அறிவு, நல்ல மனம், இப்படி நல்ல குணநலன்களைக் கொண்டதுதான் அழகு என்று இப்பொழுது அவனுக்கு புலப்பட்டது.

 

இப்படிக்கு

-ஏஞ்சல்

 

 

 16.K2K00058

அது ஒரு அழகிய பொற்காலம்

            டேய் மச்சான் எல்லாமே பேக் பன்னிட்டியா மணி ஆச்சுடா ரயிலுக்கு சீக்குரம் வாடானு பாலா கத்திட்டு இருக்க இதோ வந்துடேன்டா என கத்திக்கொண்டே வந்து பைக்கில் ஏற பாலா வண்டியை வேகமாக ஓட்ட நேராக சென்னை மத்திய ரயில் நிலையத்தை அடைந்தோம் ஒருவழியாக ரயில் ஏறி எனது இருக்கையில் அமர்ந்தேன். 

            என்ன பத்தி சொல்லாமலே இருக்கேன்ல என் பெயர் சந்துரு சொந்தஊரு கரூர் சென்னையில ஐடி கம்பேனில மென்பொருள் தேவலப்பராக வேலை பாக்குரேன் ஆறு வருசத்துக்கு அப்புறமா இப்பதான் ஊருக்கு போரேன் ஆமா எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் அதான் போய்ட்டு இருக்கேன். 

            ரொம்ப வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு போரத நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்பகூட மனசு அந்த நினைவுகளாம் மாராமலே இருக்கு அத உங்ககிட்டையும் சொல்ரேன் கேளுங்க நான் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்து இங்கேயே இருந்துடேன்.

            நான் பள்ளி படிக்கும் போது என் ஊருல பன்னாத சேட்டையே இல்ல அவ்வோளோ பன்னிருக்கேன்.    மாங்க எல்லாரும் பள்ளி படிக்கும் போது பன்றதுதான் என்ன நான் கொஞ்சம் அதிகமாவே பன்னுவேன் அதனாலயே என் வகுப்பு ஆசிரியரோட செல்ல பிள்ளையாவே நான் இருந்தேன். 

            என்னடா சேட்ட பன்னுவேன் இருந்தாலும் ஆசிரியரோட செல்ல பிள்ளைனு சொல்ரேனு பாக்குரிங்களா ஆமாங்க என் ஆசிரியருக்கு யாரு மேல கோவம்னாலும் வந்து என்ன தான் அடிப்பாரு என்மேல அவ்வோளோ பாசம்.

            அது மட்டும் இல்லாம பள்ளி படிக்கும் போது நாளைக்கு எதாவது வகுப்புல டெஸ்ட்டுனு சொன்னா வயிறு வலிக்குதுனு சொல்லி லீவு போட்டு வீட்டுலையே இருந்துபேன்.  அப்புறம் புது படம் எதாவது வந்தா பள்ளிக்கும் வீட்டுக்கும் தெரியாம லீவு போட்டு நண்பர்களுடன் சேர்ந்து படத்துக்கு போரது அங்க போய் சீட்டுமேல ஏறி நின்னு தலைவானு கத்தி விசிலடிக்குறது இப்பிடிலாம் பன்னுவேன்.

            அப்புறம் சனி ஞாயிறு கிழமை விடுமுறைனா போதும் நண்பர்களுடன் சேர்ந்து கிணற்றிற்கு போரது அங்க போய் யாரு தண்ணிகுள்ள அதிக நேரம் இருக்குறதுனு போட்டிலாம் போடுவோம் அப்புறம் கிணத்துக்குள்ளையே தொட்ட ஆவுட்டுலாம் விளையாடுவோம்.

            அப்புறம் பக்கத்துல இருக்க வயல போய் பொந்துகுள்ள இருக்க நண்ட பிடிச்சு அப்புறம் கிணத்துல பிடிச்ச மீனோட சேத்து வீட்டுலிருந்து கொண்டுவந்த மசால மிளகா பொடிலாம் போட்டு பக்கத்துலையே நெருப்புமூட்டி சமச்சு சாப்பிடுவோம் ரொம்ப நல்லாவே இருக்கும். அப்புறம் அப்பிடியே நல்ல போய் கில்லி பம்பரம் பச்ச குதிரைலாம் விளையாடிட்டு சாங்காலாம வீட்டுக்கு போய் அம்மா திட்டும் போது காதுலையே வாங்காத மாறி அவங்க வெச்ச காபிய குடிச்சிட்டு மறுபடியும் போய் நண்பர்களுடன் சேர்ந்து ஒளிஞ்சு பிடிச்சு விளையாடிட்டு வந்து இரவு சாப்பிட்டு தூங்கிட்டு திங்ககிழம வேண்டா வெறுப்போட பள்ளிக்கு போனதுலாம் மறக்கவே முடியாத தருணம்.

            சொல்ல மறந்துடேன் எங்க ஊரு ஆலமரத்துல போய் ஆழவிழுதுல தூறி ஆடுரது மரத்துக்கு மரம் தாவுறது இப்பிடிலாம் பன்னுவோம்.

அடடே பேசிட்டே வந்ததுல நேரம் போனதே தெரியல சரி சரி ஊரு வந்துருச்சு இறங்க போரேன்

நீதி: “அது ஒரு அழகிய பொற்காலம்இப்ப நினைச்சாலும் அதுலாம் மறக்கவே முடியாதுல. 

-பிரிட்டோ சச்சின் மரியா. வே

புதுக்கோட்டை

 

 

17.K2K-00066

அழகு

ஆனந்தி, ‘அவனையும், ‘அவளையும்நேரம் காலம் பாக்காமல் அடிக்கடி தொந்தரவு செய்துக் கொண்டிருப்பாள். எந்த ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவமோ இவளிடம் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கிறார்கள்.

அன்று காலையிலே ஆனந்தி புத்தாடை அணிந்து 'அவன்' வீட்டிற்குச் சென்றாள். அங்கிருக்கும் அனைத்து அறைகளையும் நோட்டம் விட்டாள். அவனை 15 நிமிடங்களுக்கு மேலாகத் தொல்லை செய்தாள். "அப்பாடா, போய்ட்டா" என்று 'அவன்' பெருமூச்சு விடுவதற்க்குள், இன்னொரு புத்தாடை அணிந்துக்கொண்டு அவனிடம் வந்தாள். இந்த முறைஅவனை’ 30 நிமிடங்கள் பாடுபடுத்தினாள். அத்தோடு நின்று விடாமல், ஆனந்தி 'அவள்' வீட்டிற்கும் சென்றாள். 'அவள்' வீட்டிலிருக்கும் பழைய குப்பையெல்லாம் கிளரினாள். இது எங்கே? அது எங்கே? என்று கேட்டு நோகடித்தாள். "நீயும் அவனைப் போல ஒழுங்காக வேலை செய்யமாட்டாயா?" என்று கோபத்துடன் வசைப்பாடினாள்.

ஆனந்தியின் செயலால் 'அவனும்' 'அவளும்' மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ஆனந்தி உறங்கிய பின் 'அவன்' சோகமாக இருந்ததைப் பார்த்து 'அவள்', "என்ன ஆச்சு, இவ்வளோ சோகமா இருக்க?"என்று கேட்டாள்.

"இந்த ஆனந்திக்கு எப்போ தான் புத்தி வருமோனு தெரியல. நான் ஆனந்திக்காக வேலை செய்றவன் தான். அதுக்குனு ஒரு வரை முறை வேணாமா? எப்போ பாத்தாலும் அவ மூஞ்சியை என்கிட்ட கொண்டுவந்து காட்டுறா" என்று கோபத்துடன் 'அவன்' சொன்னான்.

"உனக்கு பரவால்ல, என்கிட்ட இருக்கிறதலாம் எடுத்து எங்கேயோ மாத்தி வெச்சுட்டு, நான் தான் குப்ப தொட்டில போட்டுட்டேன்னு என்னை அடிக்கடித் திட்டுறா. இதுல நான் சேத்து வெச்சதுல பெஸ்ட் எதுனு அடிக்கடித் தேடிப் பாக்குறேன்னு என்ன ரொம்ப தொல்லபண்றா" என்று 'அவள்' சொன்னாள்.

"ஆனந்திக்கு, தான் ரொம்ப அழகுனு கர்வம். அவ அழகா இருக்கானு யாராவது ஒரு ஆள் சொல்லலனா அன்னைக்குத் தூக்கமே வாராது போல" என்று 'அவன்'சொன்னான். உடனே,"நூத்துக்கு நூறு உண்ம. அவ அழகாத்தான் இருக்கா. அதுக்குன்னு நம்மள தினமும் இப்படி வேலை வாங்கலாமா" என்று விரக்தியுடன் 'அவள்' கேட்டாள்.

"இந்த வெளிப்புற அழகு தான் அழகுனு ஆனந்தி நினைச்சுகிட்டு இருக்குற வரைக்கும் எனக்கு வேலை அதிகமாத்தான் இருக்கும்" என்று 'அவன்' புலம்பினான். "அதுவும் செரிதான். ஆனந்தியைவிட வெளிப்புற அழகுல நல்லா இருக்குறவங்களோட பொருள் என்கிட்ட தெரியாம வந்துட்டா உடனே தூக்கிக் குப்பைத்தொட்டில போட்ருவா. அழகு என்பது கலர்ல இல்ல கேரக்டர்லதான் இருக்குனு அவ எப்போ தான் புரிஞ்சிக்கப் போறாளோ...!" என்று 'அவள்' மன வருத்தத்துடன் சொன்னாள்.

"ஹ்ம்ம். காலம்தான் பதில் சொல்லணும்" என்று 'அவன்' சொல்லி இருவரும் விடைப்பெற்றனர்.

மூன்று வாரங்கள் கழித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆனந்தியின் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. மாதங்கள் கடந்தன, ஆனந்தியின் அக அழகைப்பார்த்து ஒருவர் அவளைக் காதலித்தார். திருமணமும் ஆனது. முன்பைப் போல் இல்லாமல் 'அவனையும் அவளையும்' தேவைப்படும்போது மட்டும் வேலை வாங்குகிறாள்.

அவன்’ - ஆனந்தியின் கைப்பேசியிலிருக்கும் 'கேமரா'

அவள்’ - ஆனந்தியின் கைப்பேசியிலிருக்கும் 'போட்டோ கேலரி'

நீதி: புற அழகு தற்காலிகம். அக அழகு நிரந்தரம்.

 

-Dinesh kumar

 

 

18.K2K- 00067

அழகு

          .. ஜாதகங்களையும் மணப் பெண்ணின் நிழற் படங்க ளையும் பார்த்துப் பார்த்து சலிப்பே வந்து விட்டது நாகப்பணுக்கு. எந்த புகைப் படத்தைப் பார்த்தும் இதுவரை ஒப்புதல் தர வில்லை அவரது மகன் தேனப்பன். அவரது மகன் மனத்தில் இருக்கக் கூடிய கற்பனைப் பேரழகியின் படத்தோடு இவை இன்னும் ஒத்துப் போக வில்லை போலும்.

    ஒரு நிலையில அவர் தன் மனைவியை விட்டு சூசகமாக தன் மகனிடம் அவன் எந்தப் பெண்ணையாவ து மனதில் நினைத்திருந்தால் அவளை மணந்து கொள்வதில் எந்தத் தடையுமில்லை; சாதி குலம் பற்றி அட்டி ஏதுமில்லை என்று சொல்லச் சொன்னார். வெகுண்டெழுந்த தேனப்பன் தான் அப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான நடவடிக்கை கொண்ட பையன் அல்ல! என்று கோபமாகப் பேசி விட்டு, பெண் தேடு படலததுக்கும் கட்டையைப் போட்டு விட்டான். அதை மீறி திருமண முயற்சிகளைத் தொடர பெரும் பாடு பட வேண்டி இருந்தது நாகப்பணுக்கு.

        இந்நிலையில் ஒரு நாள் அலுவலகம் முடிந்து காலாற நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான் தேனப்பன். வழியில் ஒரு மண்டபத்தில் ஒரு பேச்சாளர் பேசுவது அவன் காதில் வந்து ஒலித்தது.

      ' இந்தக் கால இளைஞர்கள் தங்கள் மனைவி உலக அழகி போல பேரழகு கொண்டவளகவோ அல்லது அவர்களது கனவு கன்னியான திரைப்பட நடிகையைப் போலவோ பேரழகியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

   இந்த உலகம் எத்தனையோ பேரழகி களைக் கண்டு விட்டது, அவர்களது நினைவுகளை எல்லாம் நாம் போற்றுகிறோ மா? இன்றைக்கு செவிலியர் தினம் என்று பிளாரன்ஸ் நைட்டிங்கே லை நினைவு கூர்கிறோம். சேவை யின் சின்னம் என்று அன்னை தெரசா வைப் போற்றுகிறோம்.

    அந்த முதிய வயதிலும் அன்னை தெரசாவின் முகம் எவ்வளவு தெய்வீகப் பேரழகோடு மின்னுகிறது. எந்தவொரு உலகப் பேரழகி யின் வயதான தோற்றத்தை பார்த்த மட்டில் இந்தப் பொலிவும் கையெடுத்து தொழ தக்க உணர்வும் நமக்குத் தோன்றுமா? எனவே அழகு என்பது அக அழகு அல்ல. புற அழகு தான் உண்மையான அழகு.

       இன்னும் ஒன்று சொல்கிறேன், உலக அழகியையே வெல்லும் வனப்பு கொண்ட ஒருத்தியை நீ மணக்கிராய், திருமணத்திற்குப் பின் எதிர்பாராத விபத்தில் பேரழகு முகம் சிதைந்து விகாரமானால் என்ன செய்வது? மனைவியை வெறுக்க முடியுமா அல்லது விவாக ரத்து செய்ய முடியுமா? இதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் சிந்தித்து விழிப்புணர்வு பெற வேண்டும். இன்னொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். திருமணத்திற்குப் பின் ஒரு ஆணுக்கு விபத்து நேரிட்டு அழகு சிதைந்து அங்கங்கள் உடைந்து போனால், அந்தப் பெண் இவனை ஒதுக்கினால் என்ன நிலைமை? " என்று அடுக்கிக் கொண்டே போனார் பேச்சாளர்.

   சுருக்கென்று தைத்தது தேனப்பணுக்கு. அதற்குள் வீடு வந்து விட்டது.

    வீட்டுக்குள் நுழைந்த தேனப்பன் தன் பெற்றோரிடம் அவர்களுக்குப் பிடித்த பெண் யாராய் இருந்தாலும் தான் மணந்து கொள்ள சம்மதம் என்று தெரிவித்தான். இதைக் கேட்ட அவனது தாயும் தந்தையும் இன்ப அதிர்ச்சியில் குழம்பிப் போய் திகைத்து நின்றார்கள்.

 

 அன்பழகன்,

நீடாமங்கலம்

 

 

19.K2k 00068

கந்தன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் நண்பன் கடம்பன் டவுனில் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் டவுனில் இருந்து வந்த கடம்பனுக்கு கிராமத்தில் உள்ள வயல் அழகாக தெரிந்தது. அவனுடைய சகோதரிக்கோ பூத்துக்குலுங்கும் ரோஜா மற்றும் சூரிய காந்தி பூக்கள் அழகாக தெரிந்தது. ஒரு வாரம் தங்கி திருவிழா, பஞ்சாயத்து என அனைத்தையும் ரசித்து விட்டு சென்றார்கள்.

கம்பன் ஒரு வாரம் கழித்து கடம்பனிடம் சென்றான். டவுனில் அழகான மாடமாளிகை, கட்டிடங்கள், சாலைகள், போக்குவரத்தை ராசித்தான். ந்தனோ டவுன் அழகு என்றான். கடம்பனோ கிராமம் அழகு என்றான்.

இருவரும் விவாதம் செய்து கதிர்வேலனிடம் சென்றார்கள். அவனோ என் தலைவர் தான் அழகு. அவர் நடித்த படம் எல்லாம் 100 நாள் ஓடிவிடும் என்றான்.

மீண்டும் இருவரும் சேர்ந்து காமேஸ்வரனிடம் சென்றார்கள். நடிகைகளை ரசித்தவன் பெண்கள்தான் அழகு என்றான். உடனே அவர்கள் கழுதையை பார்த்தாலும் இளவயதில்

கன்னுக்குட்டி அழகாகத்தான் தோன்றும் என்றார்கள்.

முருகனிடம் சென்றார்கள். அவனோ திருவிளையாடல் புராணத்தில் உள்ள தருமி சிவன் கதையை கூறினான். இயற்கையில் பெண்களின் கூந்தலை வர்ணித்து விட்டு திருமணம் செய்யும் போது முக லட்சணமாக மூக்கும் முளியுமாக கேட்கிறோம் அதனால் ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய மனைவி அழகு என்றான்.

சுந்தரிடம் கேட்டான் இசை அழகு என்றான் காலையில் குயில் சத்தம் மாலையில் திரைப்பட பாடல் இசை என்றான்

வீட்டிற்கு சென்றார்கள் அக்காவிடம் மாமாவிடம் கேட்போம் என தீர்மானித்தார்கள் அக்காவின் 3 வயது குழந்தை மடியில் தவழ்ந்து மாமா என்று பேசும்போது உணர்ந்தவர்கள், குழல் இனிது, யாழ் இனிது, என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று. இருவருக்கும் கிடைத்த விடை குழந்தையும் அதன் மழலைச் சொல்லும் மடியில் தவழும் தொடுதல் அழகு என்று.

தலைப்பு எது அழகு

-J. JEYARAJ

 

 

20.K2K 00069

அழகு

அந்த செந்நிறச் செம்பருத்தி மொட்டைக் கடித்துக் கொண்டிருந்த கம்பளிப்பூச்சசிக்கு தூரத்தில் மலையின் பின் விழுந்து கொண்டிருந்த ஆதவனை இரசிக்க தெரியவில்லை. ஆனால் இந்த அழகிய காட்சியை தன் கைபேசியில் படம் பிடித்த படி நிமிர்ந்தான் வசந்தன்.

" ஐயா, பசி உயிர் போகிறது, தருமம் செய்யுங்கள் சாமி" என்ற அந்த முடவனின் எலும்புகளளை அப்படியே எண்ணி விடலாம் போலும்.

புன்னகையுடன் ஐம்பது ரூபாவைக் கொடுத்தான்.

"நன்றாகச் சாப்பிடுங்கள் "

"நீங்க நல்லா இருக்கணும் சாமி" காலை இழுத்தவாறு நடந்தான்.

" குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலமையால் கல்வியழகே அழகு"

நாலடியார் உரைத்ததை தெளிந்துணர்ந்ததால் தானோ என்னவோ கசடறக் கற்று அதன்வழி சென்று கொண்டிருந்தான் அவன்.

எனினும் ஆள்பாதி ஆடை பாதி அல்லவா!

வடிவாக பராமரிக்கப்பட்ட நேர்த்தியான தலைமுடி, கருநீல நிற கோடிட்ட Tshirt, பழுப்பு நிற Denim pant, கருநீலச் சப்பாத்துக்கள், Rolex மணிகூடு, Gucci Belt என ஆடை கொடுத்த அழகு அவனை மிகைப்பபடுத்ததியது.

    மணி ஆறு என்று அந்த பெரிய மணிக்கூட்டுக் குயில் கூவ அந்த அறிவியல் மாநாடு இனிதே தொடங்கியது.

ஒளிர்ந்த கண்களும் அவனது தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் நயமும் தெளிந்து அவன் தொடங்கிய செயலில் தெரிந்த அசட்டு தைரியமும் அவனது வெளித்தோற்றத்துடன் போட்டி போட புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட Corivir (🤣Just an imagination, theres no such drug) மருந்து covid19 கு எதிராய் எப்படி செயல் படும் என்று உரையாற்றத் தொடங்கியிருந்ததான் உலக முடக்கலுக்கு விடுமுறை தந்த,"இந்தியன் மருந்துகள்" (Indian Pharmaceuticals) நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளன் வசந்தன்.

ழகு என்பது கண்களைச் சுண்டி கருத்தை கடித்து கவிதையில் உறையும் மேன்மையா இல்லையேல் களவறிந்தும் நல்வழியில் செல்கிறோம் என்ற பூரிப்பில், செயலில் தெரியும் செம்மையா, என தேடித்தானோ என்னவோ வெளியில் அந்த கம்பளிப் பூச்சி தன் வண்ணச் சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கி இருந்தது.

நீதி - கறையற்ற கல்வி நாம் செய்கின்ற செயல்களை செம்மைப் படுத்தி நம்மையும் அழகாக்கி விடுகிறது.

-Vilia

 

 

 21.K2K00078

அழகு

 

பகல் முழுதும் பச்சைத்தண்ணீர் கூட குடிக்காமல், பட்டினி கிடந்து வேலைச்செய்து இழந்துவிட்ட சக்தி எல்லாவற்றையும், மீட்டெடுப்பதற்காக வீட்டில் இருந்த பழைய சோற்றைச் சாப்பிட்டு, வயிறு நிறையத் தண்ணீர் குடித்துவிட்டு தூங்குவதற்கு சாரதா அறைக்குள் வந்தாள்.

"அம்மா...

கதை கூறுங்களே!"

என்று செல்லமாக கேட்டாள். சாரதாவின் மகள் 'டோரா'.

ம்ம்ம்ம்ம்....

ஒரு அடர்ந்த காட்டில் முயல், குரங்கு, வண்ணத்துப்பூச்சி, கிளி என்பன; ஒன்றுடன் ஒன்று நண்பர்களாக பழகி வந்தன. அக்காட்டிலுள்ள குகையொன்றில் அடிக்கடி இவையனைத்தும் சந்தித்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.

இம்மகிழ்ச்சியோ!!!

நீண்டகாலம் நிலைக்கவில்லை.

இவர்களின் மகிழ்வான ஒன்று கூடுதளைக் கண்ட வேடன் ஒருவன், இவர்களைப் பிரித்து, தன் அன்பு மனைவியின் ஆசையினை நிறைவேற்ற நினைத்தான்; அதற்காக அருமையான திட்டமொன்றினையும் தீட்டினான்.

அவர்களை பார்த்து வேடன்

       "நட்பின் இலக்கணவாதிகளே!"

'நானும் எனது மனைவியும் இணைந்து போட்டியொன்றினை, நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம். நீங்களும் இப்போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றியடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். விருப்பமானவர்கள் இன்று மாலை 5 மணியளவில் என்னைச் சந்திக்க வீட்டிற்கு வருகை தாருங்கள்...  எதிர்ப்பார்த்து காத்திருப்பேன’, என்று கூறிச் சென்று விட்டான்.

 

மாலை 5 மணிக்கு முன்னரே...நால்வரும் வேடன் வீட்டை அடைந்தார்கள்,'வாருங்கள்! வாருங்கள்!  நட்பிலக்கணவாதிகளே' என்றான்.

"வேடனைப் பார்த்து குரங்கு கேட்டது. என்ன போட்டியென்று கூறினால் நாங்கள் ஒற்றுமையாக ஆயுத்தமாகுவோம் வேடரே!"

'கொஞ்சம் பொறுங்கள் தலைவரே!'என்னுடைய மனைவி வந்ததும் விளக்கமாக கூறுகிறேன்.

நிலாச் சிந்தும் அவ்வொளியில் வேடனின் மனைவி தேவதைப் போல வந்து நின்றாள்.

நட்பிலக்கணவாதிகளே! "இவள் என்னுடைய மனைவி இவளின் தலைமையிலே இம்மாபெரும் போட்டி நடைபெறவுள்ளது”, நீங்கள் கலந்துக்கொள்ளும் போட்டி அழகுராணி போட்டியாகும். இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு பெறுமதிமிக்க பரிசுகளும், உணவும், வசிப்பதற்கு பாதுகாப்பான ஓரிடமும் வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியானது நாளை, காலை 8 மணிளவில் நடைபெறவுள்ளது; காலதாமதமின்றி கலந்துக்கொள்ளுங்கள்.

(கூட்டம் கலைந்தது) நால்வரும் வழக்கமாக சந்திக்கும் குகைக்குச் சென்றனர்,மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்தவர்கள். வேடனின் சொல்லைக் கேட்டு, ஒருவொருக்கொருவர் தன் பெருமைகளை பறைச்சாற்றும் விதமாக பேசத் தொடங்கினர். முயல் மட்டும் வெகுநேரமாக மௌனம் தரித்தது.

"நம் நால்வரில் நான்தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்களின் இனத்திலிருந்துதான் தோன்றியதாக சொல்வார்கள்!" கிளைக்கு கிளை தாவிக்கொண்டு கூறியது குரங்கு.

" எனக்கு பேசக்கூடிய ஆற்றலுண்டு. மனிதர்கள் விரும்பி வீட்டில் வளர்ப்பார்கள்" நான்தான் அழகு தேவதை என்றது கிளி.

 

பெருமிதம் பொங்கக் கூடியது, நான் பல வண்ணங்களைத் தன்வசம் கொண்டுள்ளேன், என்னைத்தான் அனைவரும் விரும்புவார்கள் என்றது வண்ணத்துப்பூச்சி.

நான் இந்தப் போட்டிக்கே வரவில்லை! என்று சொல்லியது முயல்.

முயலோ மெதுவாக அவ்விடம் நீங்கியது. என்னயிருந்தாலும் வெள்ளையாக இருக்கிற முயல் ஓடி வந்தாலே அழகோ!!! அழகுதான் என்று கூறியது குரங்கு.

ஆமாம்.... ஆமாம்...! ஒப்புக்கொண்டது கிளி.

"நிறமும் அழகும் இருந்தால் மட்டும் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக்கொள்ள முடியும்." என்றது வண்ணத்துப்பூச்சி.

குரங்கு, வண்ணத்துப்பூச்சி, கிளி இம்மூன்றும் இப்போட்டியில் பங்குப்பெ முடிவு செய்தன.

அடுத்த நாள் வழக்கம்ப்போல குகையில் நண்ர்கள் நால்வரும் சந்தித்தனர்; அங்கிருதே புறப்பட்டனர், வெறும் பா்வையாளராக முயல் சென்றது. போட்டியானது ஆரம்பமானது மூவரும் தனித்தனியே தன்னழகு திறமைளைக் காட்டினர்.

போட்டி முடிவினை வேடனின் மனைவி கூறினாள்.

"பங்குப்பெற்ற மூவரின் அழகினையும் அறிவினையும் கொண்டு, இறுதி முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மூவரில் யாரை முதல் நபராக தெரிவு செய்வது என்பது சற்று கடினமாகவே உள்ளது. காரணம் மூவரும் பங்குப்பெற்ற விதம் சிறப்பானதாக காணப்பட்டன.

"உங்கள் மூவரையுமே நான் வெற்றியாளர்களாக தெரிவு செய்கிறேன்."

அன்றிரவு வேடனின் வீட்டில் அம்மூவருக்கும் பல வகையான இறைச்சிகளும், பழங்களும் விருந்தாக வழங்கப்பட்டன.  வர்ணம் பூசப்பட்ட கூட்டில் மூவரும் தனித்தனியாக அடைக்கப்பட்டனர், அன்றிரவை நன்றாக கழித்தனர். முயலோ வழக்கமா குகைக்கு சென்று தனிமையில் வாடியது.

 

'வேடனும் அவனின் மனைவியும், ஒவ்வொருவராக கொல்லத் திட்டம் தீட்டி வைத்திருந்தனர்'.

தொடர்ந்து கூண்டிற்டிக்குள் அடைக்கப்பட்டு, உணவின்றி குரங்கு, வண்ணத்துப்பூச்சி, கிளி மூவரும் தவித்தனர்.

வேடனுடன் மனைவி ஒருநாள் வேட்டைக்குச் சென்றாள். இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திய முயல் வீட்டினுள் நுழைந்து மூவரையும் விடுவித்தது.

உண்மையான அழகு, உன்னுடைய மனழகே என்று கூறி குரங்கு, வண்ணத்துப்பூச்சி, கிளி மூவருமாக கண்ணீர் சிந்தினார்கள்.

நட்புக்குள் எல்லாம் சகஜம் என்று கூறியது முயல்... அன்றிலிருந்து நால்வரும் இணைப்பிரியாது வாழ்ந்தனர்.

கதையினைக் கேட்ட டோரா அன்றிரவு மனநிறைவுடன் உறக்கம் கொண்டாள். அடுத்தநாள் எழுந்தவள், கண்ணாடி முன் நின்று தனக்குத்தானே ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டாள்; இனி நண்பர்களை அழகில்லை என்று பழிக்கக் கூடாது. அம்மா கூறியது போல அக அழகே மனிதர்களுடைய உண்மையான அழகாகும்.

நிறத்தை வைத்து அழகினை பார்ப்பவர்கள், மனிதர்களே இல்லை! உண்மையான அழகு அறிவும், பிறருக்கு உதவும் மனப்பாங்குமே ஆகும்.

 

பரமசிவம் இந்துஜா

நுவரெலியா

இலங்கை.

 

 

22.K2K -00079

அழகு

"பங்கஜம் இன்னிக்குச் சாயந்தரம் அஞ்சு மணிக்கு நித்யாவை பொண்ணு பார்க்க வர்றாங்க. அரை நாள் லீவு போட்டுட்டு அவளை சீக்கிரம் வரச் சொல்லு."

"நீங்க பேசறதைக் கேட்டுகிட்டுதான் இருந்தேன். சீக்கிரம் வந்துடறேன்." வேலைக்கு கிளம்பி விட்டாள் நித்யா.

"ஏன் பங்கஜம் மாப்பிள்ளை போட்டோவை காட்டினியா அவகிட்ட..."

"ம்... காண்பிச்சேன், எதுவும் சொல்லல. பையன் நல்ல வேலையில இருக்கான், சொந்த வீடு இருக்கு, பொண்ணு பிடிச்சா பெரிசா சீர்கூட செய்ய வேண்டாமாம். இந்த இடம் அமைஞ்சா நித்யா அதிர்ஷ்டக்காரிதான்." என்றாள் பங்கஜம்.

"ஏன்டா நரேன்... கிளம்பியாச்சா.  நேரமாகுது...நல்ல நேரம் போறதுக்குள்ள பொண்ணை பார்க்க போக வேண்டாமா."

"இதோ ரெடியாயிட்டேன்மா. கிளம்பலாமா"

"கொஞ்சம் இரு! இந்தப் பொண்ணாவதுஉனக்குப் பிடிக்கணும்னு கடவுளை வேண்டிட்டு வரேன். பார்க்கற பொண்ணையெல்லாம் குறை சொல்ற, உனக்குன்னு பொறந்தவ எங்கே இருக்காளோ தெரியலை. "

"ஏம்மா சலிச்சுக்கற, நானென்ன வேணும்னா குறை சொல்றேன்; என்னோட ஒரே டிமாண்ட், பொண்ணு அழகாயிருக்கணும், நல்ல நிறமா செக்கச் செவேல்னு இருக்கணும், போட்டோல நிறமா இருக்கற பொண்ணுங்க நேர்ல பார்த்தா டம்மியா தெரியறாங்க. எல்லாம் போட்டோ டிரிக்ஸ்; ஏமாத்து வேலை. அதான் ஒதுக்கிடறேன், நான் தேடற பொண்ணு கிடைச்சாதான் கல்யாணம்."

"என்னவோ போ. உம் மனசுபோலவே நடந்தா சரிதான் "என்றாள் சம்பூர்ணம்.

கையில் காப்பியுடன் வந்த நித்யாவைப் பார்த்ததும் சகலமும் மறந்துவிட்டது நரேனுக்கு. அடடா... இப்படியொரு அழகா! நல்ல நிறம், அழகான முகம், நீலநிற ஷிபான் புடவையில் தேவதை போலவே தெரிந்தாள். இவளை அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மாவின் பக்கம் பார்வையைத் திருப்பி தன்சம்மதத்தை முகஜாடையில் தெரிவித்தான்.

"எங்களுக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு. உங்களுக்குச் சரின்னா தட்டை மாத்திகிடலாம். "சம்பூர்ணம் சொல்ல சுப்பையா சந்தோசமாய்த் தலையாட்டினார்.

"தட்டு கொண்டு வா பங்கஜம். நல்ல நேரம் போறதுக்குள்ள தட்டை மாத்திப்போம்."

"கொஞ்சம் இருங்கப்பா. எனக்கு இவரை பிடிக்கலை." கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள் நித்யா.

"ஏன் என் பையனுக்கு என்ன குறைச்சல்..." எகிறினாள் சம்பூர்ணம்.

"உங்க பையன் கருப்பா இருக்காரு! எனக்கு சிவப்பாயிருக்கற மாப்பிள்ளைதான் வேணும்."

"அதை போட்டோ பார்க்கும்போதே சொல்ல வேண்டியதுதானே."

"போட்டோல சிவப்பாதான் தெரிஞ்சாரு. நேர்ல பார்க்கும்போதுதானே ஏமாத்து வேலை தெரியுது. போட்டோக்கு பெயிண்ட் அடிச்சாரோ என்னவோ!!!"

"எழுந்திருடா...கிளம்புவோம்!! நல்ல பொண்ணுதான், வீடு தேடி வந்தவங்களை இப்படியாப் பேசறது. சே...!அவமானமாப் போச்சு." கோபமாகச் சம்பூர்ணமும் முகம் தொங்கியபடி நரேனும் வெளியேறினர்.

"என்ன நித்யா...இப்படி பண்ணிட்டே... நல்ல இடம் கைநழுவிப் போயிடுச்சே." சுப்பையாவின் குரலில் வருத்தம் தெரிந்தது.

""அப்பா...நான் பண்ணினது சரிதான். அந்தாளுக்கு தான்ஆணழகன்னு நினைப்பு. பார்க்கற பொண்ணையெல்லாம் குறை சொல்லிட்டுத் திரிஞ்சான். போனவாரம் என் ப்ரெண்ட் மஞ்சுளாவைப் பெண்பார்க்க போயிட்டு; என்னங்க பொண்ணு இவ்வளவு கருப்பாயிருக்கு, போட்டோக்கு பெயிண்ட் அடிச்சீங்களான்னு நக்கலா கேட்டிருக்கான் அவ விஷம் குடிச்சுட்டா. நல்லவேளை உடனே பார்த்து ஆஸ்பத்திரியில சேர்த்ததால பொழைச்சா. இவனையெல்லாம் இப்படிக் கேட்டாதான் உரைக்கும், அதான் போட்டோல பார்த்து இவன்தான்னு தெரிஞ்சும் வரச் சொன்னேன். பெண்ணை வெறும் அழகுப்பதுமையா நினைக்காம உணர்வும் உயிரும் கொண்ட மனுசியா பார்க்கற ஆண்தான் உயர்ந்தவன். நீங்க கவலைப்படாதீங்க...இதைவிட உயர்ந்த நல்ல குணமுள்ள மாப்பிள்ளை நிச்சயம் எனக்கு கிடைப்பாருப்பா." நித்யாவின் குரலில் தெரிந்த நம்பிக்கை சுப்பையாவின் முகத்திலும் எதிரொலித்தது.

கருத்து: புற அழகு நிரந்தரமில்லை!!! அக அழகு நிறைந்த வாழ்க்கைத் துணையோடு இணையுங்கள். இல்லறம் நல்லறமாகும்!

 

-கி. இலட்சுமி

 

 

 23.K2K 00080

அழகு

 

"அம்மா, அம்மா",

என்று உற்சாகத்துடன் அழைத்துக் கொண்டே வீட்டில் நுழைந்தான் கவின்.

"என்னடா ராஜா? என்ன ஆச்சு ஸ்கூலில இன்னைக்கு?".

"இன்னைக்கு ஸ்கூலில் ஒரு எஸ்ஸே காம்பெடிஷன் அனௌன்ஸ் செஞ்சிருக்காங்கம்மா. தலைப்பு அழகு",

என்று சந்தோஷமாகச் சொன்னான்

கவின் அம்மா பவித்ராவிடம்.

" நானும் எழுதறேன்மா. எனக்கு நீ ஹெல்ப் பண்ணறயாம்மா! அழகுன்னா என்னன்னு சொல்லறயாம்மா?".

"அழகுன்னா எதைப் பாத்தா மனசுக்கு சந்தோஷமாகவும் நிறைவாகவும் தோணுதோ அது தான் அழகு. விடியற்காலைப் பொழுது அழகு, அந்திவானச் சிவப்பு அழகு, மழைத்தூறல் அழகு, அருவியின் ஓசை அழகு, நதியின் நீரோட்டம் அழகு, கடலில் அலைகள் அழகு, மலர்கள்அழகு, குழந்தையின் சிரிப்பு அழகு, இசை அழகு, நமது மொழி அழகு, இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ அழகான விஷயங்கள் இருக்கு. அழகைப் பார்த்து இரசித்துக் கொண்டாட வேண்டும், நாம் பார்க்கும் பார்வையில் தான் அழகு இருக்கு",

என்று சொன்ன அம்மாவைப் பெருமையுடன் பார்த்தான் கவின்.

" இது போதும்மா. இனி நானே எழுதிடறேன். எனக்கு நல்லாப் புரிஞ்சதும்மா",

என்றான் கவின்.

ஐந்தே வயதான கவின் தனது முயற்சியால் அழகாக எழுதி முடித்து சமர்ப்பித்து விட்டான். அவனுடைய கட்டுரைக்கு முதல் பரிசும் கிடைத்து விட்டது. அவனுடைய ஸ்கூல் சென்னையில் பிரபலமான  தனியார் பள்ளி;அன்று பள்ளியின் ஆண்டுவிழாவில் கவினுக்குப் பரிசு,பெற்றோரும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னதால் தயக்கத்துடன் அவர்களும் வந்தார்கள்.சாதாரணமாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்கள்.தலைமை தாங்க ஓர் அமைச்சர் வந்திருந்தார்.

கவினுக்குப் பரிசளிப்பதற்கு முன்னால் அவனுடைய கட்டுரையை அவனையே வாசிக்க வைத்தார் பிரின்ஸிபல். அதைக் கேட்ட எல்லோருடைய கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது.

"அழகு என்பது மனம் சம்பந்தப் பட்டது.பார்க்கும் போது மனதிற்கு நிறைவையும் இன்பத்தையும் தருவது எதுவோ அது தான் அழகு என்று என் அம்மா சொன்னார்கள்.இந்த உலகத்தில் நம்மைச் சுற்றி நம்மைச் சார்ந்து இருக்கும் ஒவ்வொரு பொருளும் அழகு.நமைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்கள் அழகு.என்னைக் கேட்டால்  இந்த உலகிலேயே மிகவும் அழகானவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான்.அப்பா இராணுவத்தில் பணி புரியும் போது தேச சேவையில் ஒரு கையையும், ஒரு காலையும் இழந்தார்.மண்ணில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை இடறியதால் ஏற்பட்ட பாதிப்பு.என்னுடைய அம்மா ஒரு டாக்டர்.ஒரு கிரிமினலிடம் சிக்கி அவனுடைய கொடுமைகளால் பாதிக்கப் பட்டு உயிருக்குப் போராடிய ஏழைப் பெண்ணைக் காப்பாற்றியதால் அந்த கிரிமினலின் பகையைச் சம்பாதித்தார்.அவரை ஆஸிட் எறிந்து தாக்கி விட்டார்கள்.முகத்தில் சதையெல்லாம் கருகித் தீவிர சிகிச்சையால் என் அம்மா உயிர் பிழைத்தார்.அவருடைய முகம் விகாரமாகி விட்டதால் வெளியே வர மாட்டார் அதிகமாக.ஆனால் எனக்கு அந்த முகம் தான் உலகத்திலேயே மிக அழகாகத் தெரிகிறது.இன்று இந்தப் பரிசையும் நான் எனது பெற்றோரின் கையால் வாங்க ஆசைப் படுகிறேன்",

என்று அவன் பேசி முடித்ததும் வயதில் முதிர்ந்த அந்த அமைச்சர் எழுந்து நின்று கைகளைத் தட்டினார்.

கவினுடைய அப்பா ஊன்றுகோல் உதவியுடன் மேடை ஏற, அவனுடைய அம்மா தன்னுடைய முகத் திரையைத் தூக்கி எறிந்து விட்டு மேடையில் ஏறிப் பெருமையுடன் மகனின் அருகில் நின்றார்.

அரங்கமே எழுந்து நின்று கைகளைத் தட்டி அவர்களை வாழ்த்தியது.

இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து கவின் இப்போது இராணுவத்தில் டாக்டராக நாட்டிற்கு சேவை செய்கிறான்.

-புவனா

 

 

 24.K2K - 00081

பேபி மூன்

விஜய்யின் மனைவி சுவாதிக்கு இது ஐந்தாவது மாதம்.

மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்க வேண்டுமென விரும்பிய விஜய், "ஸ்வாதி, நீ இந்த நேரத்துல என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுக்கணுமாம்... சொல்லு சொல்லு... உனக்கு என்ன வேணும்.... ??" என்றான் ஆசையாய் .

ஸ்வாதிக்கு சுற்றுலா செல்லவேண்டுமென வித்தியாசமான அவா எழுந்தது. எனவே விஜய் கேட்டதும் சற்றும் யோசிக்காது, " நாம எங்கேயாச்சும் ட்ரிப் போலாமா..." என்றாள்.

 

விஜய்க்கு ஆச்சரியமாக இருந்தது. கர்ப்பிணியை சுற்றுலா அழைத்துச் செல்லலாமா என்ற சந்தேகம் ஒருபுறம், அவள் கேட்டதைச் செய்யாவிட்டால் வருத்தப்படுவாளே என்ற கவலை மறுபுறம். செய்வதறியாமல் திகைத்தான்.

ஸ்வாதியோ, பின்விளைவுகளை யோசிக்காமல் இப்படி கேட்டுவிட்டோமே என்று நொந்துக்கொண்டாள். ஆசையாக இருந்தாலும், இச்சமயத்தில் பயணம் மேற்கொள்ளவது சரியல்ல என்றெண்ணி விஜய்யிடம் சுற்றுலா வேண்டாம் என்றாள்.

விஜய், ஸ்வாதிக்குத் தெரியாமல் அவளது மகப்பேறு மருத்துவரை நேரில் சந்தித்து தன் நிலையைக் கூறினான். அவர் சிரித்துக்கொண்டே, கர்ப்பகாலத்தில் சுற்றுலா செல்வது சகஜம் என்றும் அதை ஆங்கிலத்தில் 'பேபி மூன்' என்றழைப்பார்கள் என்றும் கூறினார். ஸ்வாதி பயமின்றி பயணிக்கலாம் என்றும் தைரியமூட்டினார்.

இதைக்கேட்டு நிம்மதியடைந்த விஜய், கோவா செல்லலாம் என்று முடிவுசெய்து, பிறந்தநாள் சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று ஸ்வாதிக்குத் தெரியாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான்.

இதை ஸ்வாதியிடம் சொன்னபோது சந்தோஷத்தில் சிறுபிள்ளைப்போல் துள்ளிக்குதித்தாள். தன் பேரன்புமிக்கக் கணவரை எண்ணி பெருமிதம் கொண்டாள்.

.......

விமானம் கோவாவில் தரையிறங்கியது. அங்கிருந்து தங்குமிடத்திற்குச் சென்ற ஸ்வாதிக்கு இன்ப அதிர்ச்சி; கடற்கரையோரம் ஒரு ரிசார்ட். அவர்களுக்கென்று பெரிய அறை, கனவிலும் கண்டிராத ரம்மியமான அழகு.

கர்ப்பிணி என்பதால் சிறந்த கவனிப்பும் கூட. அவசரமென்றால் செல்ல அருகாமையில் மருத்துவமனை என்று பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தான் விஜய். இப்படி ஒரு கணவன் கிடைக்க தான் குடுத்துவைத்ததாய் ஸ்வாதி மகிழ்ச்சியடைந்தாள்.

 பயணக்களைப்பின் காரணமாக இருவரும் சீக்கிரமே உறங்கினர்.

மறுநாள் காலையில், "ஹாப்பி பர்த்டே செல்லமே..." என்று ஸ்வாதி கண்விழித்ததும் விஜய் வாழ்த்தினான்.

பின்னர் இருவரும் கோவாவை சுற்றிப்பார்க்கத் தயாராகினர். அவளை பத்திரமாகக் கூட்டிச்செல்ல வேண்டுமென தனி வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். பீச், தேவாலயம், மியூசியம் ஆகியவற்றை கண்டுகளித்து சாயங்காலம் அறைக்குத் திரும்பியபோது இன்னோரு சர்ப்ரைஸ். அறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு கேக் ஒன்றும் வைக்கப்பட்டருந்தது. ரிசார்ட் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவளை வாழ்த்தினர்.

அந்த இனிய நாளின் முடிவாக விஜய் ஒரு 'காண்டல் லயிட் டின்னர்'ரும் ஏற்பாடு செய்திருந்தான். வெட்ட வெளியில் நிலா வெளிச்சத்தில் அவர்கள் சாப்பிட்டபோது சொர்க்கத்தில் இருப்பதாய் தோன்றியது ஸ்வாதிக்கு.

டின்னர் முடிந்து இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் விஜய், "சந்தோஷமா இருக்கியா...?" என்று வினவினான்.

விழியோரம் துளிர்த்த ஒருதுளி நீரை துடைத்துக்கொண்ட ஸ்வாதி பதிலேதும் கூறாமல், விஜய்யின் தலைக்கோதி அவன் நெற்றியில் சிறு முத்தம் பதித்தாள். தானும் மகிழ்ச்சியாக இருப்பதாய் ஸ்வாதியின் வயிற்றில் லேசாக உதைத்து வெளிப்படுத்தியது அவர்கள் குழந்தை.

அன்று, வான் நிலா இன்னும் சற்று கூடிய அழகோடு மிளிர்ந்தது!

கருத்து

உங்கள் வாழ்க்கைத்துணையை அன்போடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லறம் எப்பொழுதும் அழகாக இருக்கும்.

-Narmada

 

 

25.K2K -00086

அழகு

 

அதிசயம் நிறைந்த வாழ்வில் எத்தனை அழகு அன்று என் நண்பர்களுடன் காலை மட்டைப் பந்து விளையாட மைதானத்திற்கு சென்றேன் 

விளையாடி ஓய்ந்து களைத்து வீட்டிற்கு திரும்பினோம் சாலை ஓரத்தில் அழகான பூனைக்குட்டியின் சத்தம் அங்கிருந்த பெட்டியை திறந்தபோது வெள்ளை நிற பூனைக்குட்டி ஒன்று மியாவ் மியாவ்’, என்று கத்திக் கொண்டிருந்தது அதனை கையில் எடுத்துக் கொஞ்சி விளையாடினோம்.

 விலங்குகள் மீது அன்பு அதிகம் எனக்கு எனவே அந்த பூனைக்குட்டியை அங்கே தனித்து விட மனமில்லாமல் எங்களுடன் எடுத்துச்சென்றோம்.

பூனைக்குட்டிக்கு டைகர் என பெயரிட்டோம் நாங்கள் மூவர் இவனுடன் சேர்த்து நால்வர் ஆனோம் மட்டைப்பந்து, கண்ணாமூச்சி, வீடியோ கேம், சோடா மூடி, கபடி, மிதிவண்டி பயணம், இன்னும் பல விளையாட்டுகள் என மனதில் சிறிதளவு துன்பம் கூட இல்லாமல் அழகாக நகர்ந்து கொண்டிருந்த கோடை விடுமுறை அது. 

அதனை மேலும் இன்பம் சேர்க்கும் விதமாய் இணைந்தான் டைகர். 

அவனுடன் விளையாடி எங்களின் பாதி நாள் கழியும், 

டைகர் மெல்ல மெல்ல வளர்ந்தான் மீசையுடன் கூரிய நகங்கள் கொண்டு எங்கள் மீது ஏறி விளையாடுவான், சிறுவர்கள் என்றால் பொழுதுபோக்கிற்கு என்ன பஞ்சம். 

சிந்தனை சிதறாமல் எங்களுடன் சுற்றி திரிவான், செல்லப்பிராணி என்ற பெயருக்கு முழு அர்த்தத்தை மகிழ்ச்சியுடன் அறிந்தோம்; வேகமாக ஓடும் நாட்கள் பள்ளிகளை திறந்தன ஆளுக்கு ஒரு திசை, எங்கள் மூவர் துணை இல்லாமல் முதல் முறையாக டைகர் தனித்து இருந்தது. 

மாலை பள்ளி விட்டதும் நாங்கள் ஒன்றாக சென்று டைகரை பார்த்தோம் அவன் அங்கு இல்லை. அவனை வளர்த்தது நாங்களே தவிர வளர்ந்த இடம் என் நண்பனின் மாமா வீடு, அருகில் எங்கே ஆவது சென்றிருக்கும் என நண்பன் கூற காத்திருந்தோம். 

அவன் வரவில்லை, 

பாட்டியிடம் கேட்ட போது காலையில் இருந்தே பார்க்கவில்லை என்று கூறினார் மனம் பதறினோம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றோம். 

எங்கே தேடுவதென்று தெரியவில்லை மூவர் அமர்ந்து என்ன செய்வதென்று யோசிக்க மாமா வந்து என்ன ஆனது என்று கேட்டு அதனை பற்றி கவலைப்பட வேண்டாம் வீட்டிற்கு செல்லுங்கள் என்றார். 

பொருள் என்றால் என்ன உயிர் என்றால் என்ன அன்பு என்பது அகலத்தில் அனைத்திற்கும் ஒன்று தானே. முடிந்த வரை தேடி பார்க்க முடிவெடுத்து தேட தொடங்கினோம் அவன் கிடைக்கவில்லை. 

பூனைகள் அதிகமாக சுற்றி திரியும் சற்று தொலைவில் இருக்கும் தெரு ஒன்று நினைவிற்கு வந்தது அங்கும் சென்று தேடினோம் டைகர்! டைகர்!’ என்று கத்தியப்படி மூவரும் திரிந்து களைத்து விட்டு ஓர் இடத்தில் அமர்ந்து மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம். 

மியாவ்! என்ற சத்தத்துடன் எங்கள் காலில் ஒரு உரசல், 

அது எங்கள் டைகர் எங்களை கண்டறிந்து வந்து சேர்ந்தது அவனை தூக்கி கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவன் காணாமல் போனது எப்படி என்ற உண்மை தெரியவந்தது. 

நான்தான் அங்கு கொண்டு போய் விட்டது என்னை மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்புக் கேட்டார் மாமா, மாமா நேரம் ஆகிவிட்டது விழித்துக் கொள்ளுங்கள் என என் மனைவியின் குரல். 

கண் விழித்து பார்த்தால் என் சிறு வயதின் நிகழ்வு கனவாக வந்ததை எண்ணி புன்னகைத்தேன், சிறுவர் பருவம் என்றாலே அழகு தான். 

அதனினும் அழகானது அந்த அற்புதமான நினைவுகள், 

அனைவரும் தங்களின் அழகான சிறுவர் பருவத்தின் நிகழ்வுகளை சற்று நேரம் நினைத்து பார்க்கவே இந்த கதை........நன்றி!!!

 

-மு. தீபக்

சென்னை 600023

 

 

26.K2K00088

 

அழகு...இவ்வுலகில் உள்ள அனைவரும் விரும்பும்,ரசிக்கும் ஒன்று; அப்படிப்பட்ட இவ்வுலகில்  அழகால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண்தான் ராணி,அவள் கல்லூரியில் படிக்கும் பெண்.அவளுக்கு தன்னை அலங்கரித்து கொள்வதற்கு மிகவும் பிடிக்கும்.அவள் எங்கு சென்றாலும் அவளது முகத்தை அலங்காரம் செய்யாமல் வெளியே செல்ல மாட்டாள்.அது அருகில் உள்ள கடைக்குச் சென்றாலும் சரி,பக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்றாலும் சரி தன்னை அலங்கரித்து கொண்டு தான் செல்வாள்.அவளது நண்பர்கள் அனைவரும் ராணியை கேலி செய்வார்கள்,"ஏன்டி இங்கு செல்லக் கூடவா நீ உன்னை அலங்காரம் செய்வாய் " என்று ஆனால் அதையெல்லாம் அவள் பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை.எங்கு வெளியே கிளம்பினாலும் ராணிதான் கடைசியாக வருவாள்,ஆனால் அவள்தான் முதலில் கிளம்ப ஆரம்பிப்பாள்,  இருந்தாலும் கண்ணாடி முன்பு நின்று அலங்கரித்து கொண்டே இருப்பாள்.இன்று பெண்கள் எல்லாரும் அப்படித் தானேஇதில் ராணி மட்டும் விதிவிலக்கா என்ன...

அன்று ஒருநாள் ஆரம்பித்தது ராணிக்கு சரும பிரச்சனைகள்.அவ்வளவுதான் அவளது மனம் பிறந்த குழந்தையைப் போல அழுது கொண்டிருந்தது.ராணியும் நிறைய அழகு குறிப்புகளை பயன்படுத்தி வந்தாள்.ஆரம்பத்தில் அது எதுவும் பலன் தரவில்லை.பிறகு சிறிது சிறிதாக அவளது முகத்தில் பருக்களும் குறைந்தது.அவளுக்கு சிறிது மகிழ்ச்சியும் வந்தது.அப்போது ஒருநாள் அது கோடை காலம் என்பதால் வெயில் அதிகமானது.ராணிக்கு அதனால்  அம்மை போட்டது.சில நாட்கள் சென்ற பின்னர், அம்மை சரியானாலும் அதன் தழும்புகள் அவளது முகத்தில் இருந்தது.அதனால் ராணி மிகவும் வருத்தப்பட்டாள்.வீட்டில் அனைவரும் சரியாகி விடும் என்று ராணிக்கு ஆறுதல் கூறி, அதற்கான மருந்துகளும் வாங்கி கொடுத்தனர்.நாளடைவில் அவளுக்கு சரியும் ஆனது.ராணியும் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருந்தாள்.ஆனாலும் அவ்வப்போது சரும பிரச்சனைகள் வந்து போயின.

 

ராணியும் அழகு முகத்தில் மட்டும் இருக்க வேண்டியதல்ல மனதும் அழகுடன் இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவளே.அவளுடைய மனமும் மிகவும் தூய்மையானதே, நல்ல பண்பு உடையவளே ஆயினும் அவளுக்கு  முகத்தில் அழகு இல்லை என்றால் எதுவும் சரியாக நடக்காது என்று நினைத்து கொள்வாள்.காலப்போக்கில் அவளுக்கு தாழ்வு மனப்பான்மையும் வந்தது.அழகாக இல்லையென்றால் யாரும்   தன்னிடம் பேச மாட்டார்கள் என்று அவளே நினைக்கத் தொடங்கினாள்.தொலைக்காட்சிகளில்  வரும் நடிகைகளை பார்த்து ஆச்சரியப் பட்டாள்,எப்படி அவர்கள் இவ்வளவு அழகாக உள்ளார்கள் என்று.அதனால் மேலும் அவளுக்கு வருத்தம் அதிகரித்தது;நான் மட்டும் ஏன் இப்படி..என்று அவள் மனதிற்குள் அழுது கொண்டிருப்பாள்.

நாட்கள் சென்றன.அவள்,நாளிதழில் வந்த செய்தியைப் பார்த்து  அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தாமும்  மிக  அழகாக மாறலாம் என்று நினைத்து அதை செய்யலாம் என்று முடிவெடுத்தாள்.அவள் நினைத்தது போலவே முகத்தில்  சிகிச்சையும் செய்து கொண்டாள்;ராணி, அவள் பெயருக்கு ஏற்றவாறு மிகவும் அழகாக ராணியைப் போலவே தோற்றமளித்தாள்.ராணியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.சில நாட்கள் கழித்து திடீரென்று அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, முகமும் அதன் அழகை இழந்து தோற்றமளித்தது.ராணியின் பெற்றோர் மருத்துவரிடம் அவளை  அழைத்துச் சென்றனர்.சிகிச்சையின் பின் விளைவுகளால் தான் ராணிக்கு இப்படியெல்லாம் நடக்கிறது என்று மருத்துவர் கூறினார்.நல்ல ஆரோக்கிய உணவுகள், தண்ணீர் குடித்தாலே சரியாகி விடும் சரும பிரச்சனைகளுக்கு நாம் பல முகப் பூச்சுக்களையும், அறுவை சிகிச்சைகளையும் செய்து முகத்தை இன்னும் மோசம்  செய்கிறோம்.

ராணியும், அதன் பின்னர் உணர்ந்து கொண்டாள். முகத்தின் அழகை இன்னும் அழகு படுத்த நினைத்து முகம் இப்படி ஆனதை எண்ணி வருத்தமும் அடைந்தாள். இனி நாம் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொண்டால் போதும்,அழகு முக்கியம் தான். ஆனால், அது எந்த அழகு என்பது அதைவிட முக்கியம்.  ஒருவரின் முக அழகை விட அவர்களின் நல்ல பண்பு, செயல்கள், திறமை இவைதான் அதைவிட அழகானது என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டாள்.

கதையின் கருத்து:

இவ்வுலகில் ராணியைப் போல பல மனிதர்கள் உள்ளனர். அது, பெண்களோ அல்லது ஆண்களோ பலரும் ஒருவரின் அழகுதான் அவர்களின் பண்புகளை விடவும், திறமைகளை விடவும் பெரிதென்று நினைக்கின்றனர்.அது தவறென்று  சிலர் உணர்ந்தும்  இருக்கிறார்கள்., பலர் உணராமலும் இருக்கிறார்கள்.

அன்புடன்

ஜனனி பிரபா

 

 

27.K2K-00089

அழகு

 12-ஆம் வகுப்பு "" பிரிவு...

 ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட வகுப்பறை அது; வகுப்பறையில் யாரும் கேட்டிடாத ஒரு அமைதி, யாரோ ஒருவர் வருகைக்கு அனைத்து மாணவர்களும் காத்திருப்பதாக தெரிகிறது. உள்ளே உதட்டில் புன்னகையோடு வந்தான் ராமு. அவன் தான் கிளாஸ் லீடர்! இன்னிக்கி சார் வரவில்லை என்றும் மாற்று ஆசிரியர் யாரும் இல்லை என்றும் இப்போ இது free period என்று சொன்னான்.

 இதை கேட்ட அடுத்தநொடி வகுப்பறையில் அமைதி வெடித்து சிதரிவிட்டது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சந்தோஷம். கேலி சிரிப்பு என்று ஆங்காங்கு ஒரே கூத்து தான், அனைவரும் அவரவர் நட்பு வட்டாரத்துடன் அரட்டையடித்தும் கல கலவென்று சிரித்து கொண்டுமிருந்தார்கள்.

 ஒரு பக்கம் சுரேஷின் நண்பர்கள் ஒரு கும்பலாக நேற்று நடந்த ஐபில் கிரிக்கெட்டில் தோனி விளையாடியதை சொல்லி சொல்லி மீண்டும் ஒரு முறை ரசித்து கொண்டிருந்தார்கள். சுரேஷ் உடனே எழுத்தட்டையை வைத்து கொண்டு இன்னொருவன் ரப்பர் போட சொல்லி தோனி போலவே ஒரு சிக்ஸர் அடித்தான். அந்த ரப்பர், கோகிலா தலையில் வந்து அடித்தது, உடனே அந்த ரப்பரை அவன் மீது வீசினாள். அவனோ அதை பிடித்துவிட்டான். இதனை பார்த்த சக தோழியும் தோழர்களும் கல கலவென்று சிரித்தார்கள். கோகிலா சிடு சிடுவென அவன் மீது நாணத்துடன் கோபம் கொண்டாள்.

 அங்கு கோகிலாவின் நண்பர்கள் ஒரு கும்பலாக ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்கள். ஆனா அந்த கூட்டத்தில் சுஷீலா இருந்தும் இல்லாமலிருந்தாள். அவள் கவனம் அனைத்தும் சந்தோஷின் மீதல்லவா இருந்தது. அவ்வப்போது ஒற்றை ஜாடையில் கடைசி பெஞ்சில் இருக்கும் அவனை பார்த்தாள். சந்தோஷுக்கும் அவளின் மீதே கவனம். பார்வையிலே பேசி கொண்டார்கள் போலும், இதனை கவனித்த சக தோழிகளும் தோழர்களும் அவர்கள் இருவரையும் கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். இருவரும் நாணம் கொண்டார்கள்.

 சில மாணவ மாணவியர் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் என்ன செய்யபோகிறோம் என்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பக்கத்தறையிலிருந்து தமிழ் ஆசிரியை திடீரென்று கோபமாக வந்து பக்கத்து வகுப்பில் பாடம் நடத்த வேண்டாமா என்று சற்று அமைதியாக இருக்க சொல்லி விட்டுப்போனார். வகுப்பில் ஒரு கணம் மௌனம். ராமுவையும் கண்காணிக்க சொல்லிவிட்டும் சென்றார்.

 ஆனால் அங்கு ராமுவை யாரும் மதிப்பதாக இல்லை. மீண்டும் மௌனம் கலையப்பட்டது அவரவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார்கள்.

ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருந்தது சுரேஷ் தனது ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தான். ஆனால் இம்முறை மிக தத்ரூபமாக தன் நண்பன் ஜோசஃபின் முகத்தை வரைந்து கொண்டிருந்த முருகன் மீது ரப்பர் அடித்தது. கோபம் கொண்ட ஜோசப் உடனே ரப்பரை எடுத்து ஒரு வீசு, நெத்தி அடி தான் அது. செவென் ஸ்டோன் (seven stone) கேப்டன்-ஆசே அதனால் தான் குறிதப்பவில்லை.

 ராமு அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி சொல்லி பாத்தான் முடியவில்லை. வகுப்பறை அவன் கட்டுப்பாட்டில் இல்லை, ஒரு கணம் அவன் காதில் குயிலோசை ஒன்று கேட்டது, அது ஹரினியின் ஓசை. ஓசை கேட்டவுடன் ராமு கட்டுப்பாட்டில் இல்லை, காரணம் அங்கு தோழர்களுக்கும் தோழிகளுக்கும் இடையே பாட்டுப்போட்டி நடந்து கொண்டிருந்தது. உடனே ராமு பாட்டுக்கு ஏற்ப்ப beat boxing செய்ய தொடங்கினான். அதாவது வாயிலே டிரம்ஸ் வாசித்து கொண்டிருந்தான். அங்கிருந்தவர்களுக்கு அது உற்சாகமாக இருந்தது.

 கேலியும் கூத்தும் நடந்து கொண்டிருந்த வகுப்பறையில் யாருமே கவனித்திடாத ஒன்றும் அங்கு நடந்து கொண்டிருந்தது. முதல் பெஞ்சில் ஒரு முனையில் சரவணன் கணக்கு புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்து கொண்டிருந்தான்.

 யாரும் எதிர்பாத்திராத நேரம் இயற்பியல் ஆசிரியர் அடுத்த வகுப்பு தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்பே திடீரென்று உள்ளே நுழைந்தார். உள்ளே நுழையும் நொடி அனைவரும் அதிர்ச்சியுடன் அவருக்கு வணக்கம் சொல்ல எழும் போது சுரேஷின் சிக்ஸர் தவுறுதலாக ஆசிரியர் மீது விழுந்தது.

 அவருக்கு கோபம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் மாணவர்கள் வீணாக நேரம் செலவழித்து விளையாடிக் கொண்டிருப்பது அவருக்கு பிடிக்கவே இல்லை. பின்பு மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

 அறிவுரையின் இறுதியில்,

"இதோ பாருங்க சரவணன். எவ்ளோ அழகா படிச்சிட்டு இருக்கான்", என்றார்.

மாணவர்கள் அனைவர் முகத்திலும் அதிர்ச்சி, " என்ன கொடுமை சரவணன் இது", என்று முணுமுணுத்தார்கள்

 

"இவன பாத்து கத்துக்கோங்க.", என்றதும் அடுத்த வகுப்புக்கான பெல் சத்தம் கேட்டது.

 வகுப்பும் தொடங்கிற்று....

 கதையின் நீதி:

அழகு என்பது ஒரு ஒரு நொடியும் ஒரு ஒரு விதமாக நாம் காணலாம். இது ஒன்று மட்டும் தான் அழகு என்பது கிடையாது. பார்வைக்கு பார்வை அஃது மாறுபடுகின்றது.

 

-  விஷ்ணு வர்த்தன். ஜெ

 

 

28.K2K – 00090

அழகு

மறுபடியும் படுத்து தூங்கியாச்சா' அண்ணி அழகம்மாவை பார்த்து சொல்லி விட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வேலையை பார்க்க சென்றாள் முத்தழகு.

அழகம்மாள் பெயருக்கு ஏற்றார் போல் அழகானவள்…. தோற்ற அழகைவிட

அவளின் உள்ளம் மிக மிக அழகானது. ரத்த சோகை காரணமாக அடிக்கடி இப்படி படுத்து ஓய்வு எடுப்பாள்…. நாத்தனார் சொன்னது அவள் காதில் விழுந்தது…'பாவம் அவள் தான் என்ன செய்வாள்அவளுக்கு வேலை அதிகம்சரி நாம் முடியும்போது செய்வோம்' என்று நினைத்துக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். முத்தழகு நல்லவள் தான்சில சமயங்களில் எரிச்சலோடு புலம்புவாள்….

இளம் கைம்பெண் ஆன அவள் தன் நான்கு குழந்தைகளோடு அண்ணன் வீட்டிற்கு வந்துவிட்டாள்அவருடைய அண்ணன் வங்கியில் மேலாளர்…. பாசம் மிகுந்தவர்...அவருக்கு ஒரு படி மேலானவள் அழகம்மாள்அவர்களுக்கு அழகான ஒரு பையன் ஷங்கர்…. தன் நாத்தனாரின் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவே அன்போடு நடத்துவாள். அவள் கூறும் குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்...

நாத்தனாரின் நான்கு பெண்களுக்கும் வெகுசிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தனர் அழகம்மாளும் அவளின் கணவரும்...

முத்தழகின் மூத்த பெண் சரோஜாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல் குழந்தை நித்யஸ்ரீ பாட்டி வீட்டில்

ஐந்து வயதுவரை வளர்ந்தாள்நித்யஸ்ரீக்கு அழகும்மாவை மிகவும் பிடிக்கும். அவள் அழகும்மாவை அம்மா என்றுதான் அழைப்பாள்...

அம்மா எனக்கு பசிக்குது பால் வேணும்' இரவு ஒரு மணிக்கு அவள் அழகம்மாள் எழுப்புவாள்பாலைக் கொண்டு வந்து கொடுத்தால்

எனக்கு காபி வேணும் பால் வேண்டாம்' என்பாள் நித்யஸ்ரீ.

அழகம்மாவின் மகன் ஷங்கருக்கு கோவம் வரும்.,.’இந்த குட்டி பிசாசு ரொம்ப படுத்ததுபேசாம அவ அம்மாகிட்ட கொண்டு போய் விட்டு விடு' என்பான்

குழந்தையை அப்படி எல்லாம் சொல்லாத…. அதுக்கு என்ன தெரியும்நான் ஹாலுக்கு கூட்டிட்டு போறேன் நீ தூங்கு' என்பாள் அழகம்மாள்

நித்யஸ்ரீ கொஞ்சம் குறும்பு பெண்தான்…. அவள் செய்யும் குறும்புகளை ரசித்து இருக்கிறாளே தவிர ஒருபோதும் கடிந்து கொண்டதில்லை…. ஐந்து வயது வரை நித்தியஸ்ரீ ராணியாகத் தான் வளர்ந்தாள் அழகும்மாவின் அன்பில்தன் குழந்தையை வளர்க்க ஆள் தேடும் இந்த காலத்தில் நாத்தானாரின் பேத்தியை அன்போடு பார்த்து கொள்ளும் அழகம்மாவின் அன்பை என்னவென்று சொல்வது?

நித்யஸ்ரீ தன் பெற்றோருடன் சென்றபிறகு அடிக்கடி அவளுக்கு அழகும்மாவின் நினைவால் காய்ச்சல் வரும்அப்பப்போ அழகம்மாவை சந்திக்க அவள் அப்பாவுடன் நித்தியஸ்ரீ வருவாள்…. காலப்போக்கில் அடிக்கடி வருவதும் நின்று விட்டது.

அதன் பிறகு அழகும்மாவை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவள் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டாள் நித்யஸ்ரீ…. அது ஒரு அலாதியான அனுபவம் நித்யஸ்ரீக்கு. அழகம்மாவிடம் அதிகம் பேச மாட்டாள்ஆனால் அவள் அருகில் தான் இருப்பாள்…. அவளின் கையை தன் கையோடு கோர்த்து கொள்ளும் போது ஒரு இனம்புரியாத பரவசத்தை உணர்வாள்.... அழகம்மாவின் உள்ளங்கை எப்போதும் ஜில்லென்று இருக்கும்.... இரவில் அவள் அருகில் தான் படுத்து கொள்வாள்

காலங்கள் உருண்டோடியதுநித்யஸ்ரீ வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டாள்...

மறுபடியும் அழகம்மா கூட இருப்பதற்கு நித்யஸ்ரீக்கு சந்தர்ப்பம் அமைந்தது

வேலைக்காக சென்னைக்கு வந்த நித்யஸ்ரீ அழகம்மாவுடன் தங்கினாள்

ஷங்கருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனஒருதடவை கூட தன் மருமகளை பற்றி குறைவாக யாரிடமும் பேசியதில்லை அழகம்மாள்...

குடும்பத்தில் உள்ள எவரை பற்றியுமே அவதூறு பேசியது இல்லை...

சில சமயங்களின் நித்யஸ்ரீ யாரையாவது பற்றி குறை சொன்னால் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று எடுத்துக் கொள் என்பாள் அழகம்மாள்

 அழகம்மாள் வம்பு பேசி பார்த்ததில்லை நித்யஸ்ரீஅவளின் நற்குணங்கள் நித்யஸ்ரீயை மலைக்க வைத்திருக்கிறது…. அவளின் நாசுக்கான பேச்சு நேர்மறை எண்ணங்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இவற்றையெல்லாம் பார்த்த நித்யஸ்ரீ அசந்து போயிருக்கிறாள்...

திருமணமான பிறகு நித்யஸ்ரீயின் வீட்டிற்கு ஒருமுறை அழகம்மாள் வந்து தங்கியிருந்தாள்….

நித்யஸ்ரீ க்கும் அவளின் கணவருக்கும் ஏதோ மனக்கசப்புஅழகம்மா முன்பு அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை... ஆனால் அன்று இரவு நித்தியஸ்ரீ அழகம்மாவிடம் வந்து படுத்துக் கொண்டாள்வேதனை தாங்காமல் அழத்தொடங்கினாள் நித்யஸ்ரீ... முதுகை தட்டிக் கொடுத்து தூங்கு அழாதே 

என்று சொல்லி தூங்க வைத்து விட்டாள்

மறுநாள் காலை அவளின் கணவர் அலுவலகம் சென்ற பிறகு '

வெளியில் செல்லும் ஆண்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்'…நாம் தான் அவர்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும்... நீ பொறுமை ஆனவள் தானே உன்னால் எல்லாவற்றையும் சரி செய்ய முடியும்…. பார்த்து நடந்துகொள்' என்று சொல்லிவிட்டு மறு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்நித்யஸ்ரீ எதைப் பற்றியுமே அழகாம்மாவிடம் சொல்லவில்லை. சூழ்நிலையை புரிந்து அதற்கு ஏற்றார்போல் அழகம்மா அவளுக்கு எடுத்துச் சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது….

எப்பொழுதுமே அழகம்மாவிற்கு வம்புகள் தேவையில்லை...

ஒரு பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை மட்டும் தான் அவள் யோசிப்பாள்...

அதன் பிறகு படுத்த படுக்கையாக இருக்கும்பொழுது தான் அழகு அம்மாவை மறுபடியும் நித்யஸ்ரீ சந்தித்தாள்….

எப்படி இருக்க? குழந்தைகள் எப்படி இருக்காங்க? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?’என்று மாறாத அன்புடன் படுத்த படுக்கையில் இருக்கும் அழகம்மா நித்யஸ்ரீயிடம் கேட்டாள்

நீங்க எப்படி இருக்கீங்கவலி எதுவும் இருக்கா' என்றாள் நித்யஸ்ரீ 

வலி இருக்கத்தான் செய்கிறது...வயதான காரணத்தால் இப்படி படுத்த படுக்கையாகி விட்டேன்நம் கர்மாவை நாம் தானே அனுபவிக்க வேண்டும்'

ஷங்கர் அண்ணனும் பேரன் அரவிந்தும் தான் என்னை கவனித்துக் கொள்கிறார்கள்

அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது'என்றாள் அழகம்மாஇறைவன் என்னுடைய கணக்கை எப்பொழுது தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளானோ அப்பொழுதுதானே இறைவனடி சேரமுடியும்' என்று மிகவும் யதார்த்தமாக சொன்னாள்….

தன்னிலை பற்றி எந்த ஒரு புலம்பலும் இல்லை சுயபச்சாதாபம் இல்லை… 'எல்லோருக்கும் நல்லதை மட்டும் தான் செய்திருக்கறேன்என்னை கடவுள் இப்படி படுத்த படுக்கையாக செய்துவிட்டாரே' என்று அவள் நினைக்கவும் இல்லை.

வாழ்நாளில் யாரையும் குறை கூறாமல் தன்னை பற்றி குறை செல்பவர்கள் இடமும் அன்பு காட்டி தன்னுடைய கஷ்டங்களை நினைத்துப் புலம்பாமல் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்துகொண்டு வாழ்ந்த ஒரு ஜீவன் அழகம்மாள்

#அழகு... தோற்ற அழகைவிட உள்ளத்தின் அழகே என்றென்றும் நிலையானது.

-சுகமதி

 

 

29. K2K00093

அழகு

ஏனோ இந்த தலைப்பு கேள்விப்பட்டதிலிருந்து மனதில் இனம்புரியாத ஆனந்தம்... இருக்காதா பின்னே கண்மணி தமிழ் ஆசிரியயை ஆயிற்றே... தமிழுக்கே உறித்தான அந்த வார்த்தை அத்தனை இன்பம் தந்ததில் ஆச்சரியம் இல்லை தானே... தனது பள்ளி பங்கேற்கும் மாநில அளவிலான கவிதை போட்டியின் அன்றைய தலைப்பு அழகு... கண்மணி நல்ல எலுமிச்சை நிறம்... வசீகரமான கண்கள்... ரோஜா இதழ்களை ஒத்த உதடுகள் என வர்ணிக்க தொடங்கினால் வார்த்தைகள் போதாது அத்தனை அழகு... தந்தை கண்மணி எக்ஸ்போர்ட்ஸ் முதலாளி... மகளின் ஆசைக்கு மறுப்பு சொல்லாத பெற்றோர்... தங்கை நிலா பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு... அழகிலும் அறிவிலும் கண்மணிக்கு சளைத்தவள் அல்ல என்ற போதும் அப்பாவி... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது அவளது தாரக மந்திரம்... எப்போதும் போல அன்று சிகப்பு நிறத்தில் கறுப்பு பூக்கள் போட்ட சேலை அணிந்து பிறை வடிவ பொட்டிட்டு அழகின் முழுவடிவமாய் பள்ளிக்கு புறப்பட்ட மகளை நிறுத்தி சுற்றிப் போட்டாள் அன்னை அமிர்தம்... அரசல் புரசலாய் மேஜை மேல் இருந்த உணவை பார்த்தே பசி ஆறியவள் ஒர் ஆப்பிளை மட்டும் எடுத்து கடித்து கொண்டே வீட்டிலிருந்து கிளம்பலானாள்... வழியெங்கும் இயற்கையை ரசித்தவளின் எண்ணம் அன்றைய போட்டியின் தலைப்பில் லயித்து போனது... நட்பு இதைவிட அழகொன்று உலகில் உண்டோ என எண்ணும் போதே தன் நண்பன் கோப்பெருஞ்சோழனுக்காக வடக்கிருந்து உயிர் நீத்த பிசிராந்தையர் நினைவில் எழ ஒரு நிமிடம் மெய்சிலிர்த்து தான் போனாள்... சற்று நேரத்திற்கு பின்.. பட்டாம்பூச்சி ஒன்று அங்கும் இங்கும் சிறகடித்து பறந்து மஞ்சள் நிற பூவொன்றில் அமர்ந்து தேன் அருந்தும் காட்சியை கண்டு தன்னையும் மறந்து எத்தனை அழகு என ரசித்த படியே அங்கிருந்து சத்தமின்றி நகர்ந்தாள்... மழலை மொழி மாறாத சிறுமி தாயின் இடுப்பிலிருந்து நழுவி ஓட முற்ப்பட்டு தாயின் பிடியில் அடங்காமல் துள்ளும் காட்சி... 10 வயது தான் இருக்கும் அந்த சிறுவனுக்கு.. அவளுக்கு வலிக்கும் என்று தங்கையின் தோழ் பையையும் சேர்த்து சுமந்து கொண்டே சிரிப்புடன் ஓடிக் கொண்டிருந்தான்... ஆசை கணவனுடன் மோட்டார் பைக்கில் கொஞ்சல்  மொழிகளுடன் கடந்து சென்ற புது மணப் பெண் என அத்தனை அழகையும் ரசித்து கொண்டே பள்ளி வந்து சேர்ந்தாள்... அன்றைய தினம் அவ்வளவு வேகமாய் நகர்ந்ததில் மதிய உணவு இடைவேளை வந்ததே தெரியவில்லை அவளுக்கு... ஆசிரியர்கள் அனைவரும் பூங்கொடியை புகழ்ந்து தள்ள கேட்டு என்னவென்று வினவிய போது மாநில அளவில் பூங்கொடியின் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்து இருப்பது அறிந்து அதனை காண சென்றாள்..

"எதார்தமாய் சிரித்திடும் மனம் அழகு

எதிர்பார்ப்பு இன்றி உதவிடும் மனம் அழகு

பிறர் மனம் நோகாமல் பேசிடும் மனம் அழகு

சூழ்நிலை அறிந்து உதவிடும் மனம் அழகு

கோபத்தில் இருப்பவரை சிரிக்க வைக்கும் மனம் அழகு..." தான் அன்று காலை கண்ட காட்சிகளை விட இந்த கவிதை அவளை பெரிதும் பாதிக்க கண்களில் புலப்படும் அழகை விட அக அழகு மனித இனத்திற்கு இன்றியமையாத வரம் என்ற முடிவில் பூங்கொடியை உச்சி நுகர்ந்து பாராட்டி விடை பெற்றாள்...

-Tresa Immaculate Johnson


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY