பார்வை

1.K2K-0001

பார்வை

பார்க்கும் பார்வை நீ,

நீ என் வாழ்வும் நீ,

 நீ என் கவிதை நீ…!!

தினசரி பேருந்தில் அலுவலுக்கான பிரயாணம் அருகே பாரதியின் கண்ணம்மாக்கள் களுக்கென்று செப்பு சலங்கைகள் குலுங்கியது போல் சிரித்து கொண்டிருக்க, ஓலிபெருக்கியில் எஸ்.பி. பி குரலில் கான இசை, ஓட்டுநர் இசை மழையில் நனைந்து கொண்டு பேருந்து முடுக்கியை அழுத்தி கொண்டிருக்கிறார், பேருந்தின் தாலாட்டில் கண்ணுறங்கும் நேரம் அலைபேசி அலைக்கிறது, மகன் தான் அழைக்கிறான், என்னடா மகனே அதிகாலையிலே, ப்பா…… சித்தப்பா, சித்தப்பா என சிணுங்குகிறான், செல்லமே என்ன வேணும் உனக்கு எதுக்கு பொடி தூவுற, இல்லப்பா அந்த பார்வை அப்டினு தலைப்பு குடுத்து கதை ஒன்ன எழுத சொல்லிருக்காங்க,உங்களுக்கு தெரிஞ்சதுல உங்க பார்வை என்னனு சொல்லுங்க,அட அவ்ளோதான் விஷயமா,நல்ல தலைப்பு தந்தவங்ககிட்ட  சொல்லிடறா மகனே!  சரிப்பா கேட்டத சொல்லுங்க விட மாட்டியே, மகனே என்னை பொறுத்தவரையில் பார்வை புலணர்வோடு நின்று விடுவதில்லை அதையும் தாண்டி உள்ளுணர்வு, உயிரியல் உடற்கூட்டையும் தாண்டியும் பயணிப்பதாய் நம்புகிறேன், புரியாத பேசுறதே வழக்கமா போச்சுப்பா இவருக்கு அப்டி யோசிக்கிறீங்களா ஆமாங்க அறிவியல், ஆத்மவியல் துறைகளில் ஆரா வை பற்றி விளக்கப்படுகிறதே அதை சொல்கிறேன்நான் சொல்ற கதைய கேளு

அழகான கிராமம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரக்க பறக்க எல்லோரும் அங்கே ஓடி கொண்டு தொலைபேசியில் மகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்து கொண்டிருந்தார்கள் ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் பின்னாளில் காலமெல்லாம் மகிழ்வித்திருக்க மகன் பிறந்துவிட்டான்!! கண்களில் ஆனந்தம் கொப்பளித்திருக்க தாய் பேரு அசதியில் உறங்க, தந்தையோ அவளருகில் கிடத்தியிருக்கிற அவனை பார்த்து பார்த்து தலைகீழாக நின்று தவம் தான் செய்யவில்லை அவ்வளவு அளவளாவிய ஆர்பரியம் 

வருங்காலம் கைகளில் தவழ்கிறது அல்லவா, அவர்கள் அறிந்திருக்கவில்லை அவன் கண்விழிக்கும் பொழுது நிகழப்போவதை,பிறப்பில்  பார்வைகள் ஆயிரம் அதில் ஓர் புலணர்வாக அல்லாமல் அதையும்  தாண்டி பார்க்கும் அகப்பார்வையாளன் அவன்,யாருக்கும் சிறப்பை அறிந்திருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை அக்கிராமத்தில்,புதியதாய் உதித்தவனை வியப்பாய் பார்க்க கூட இல்லை,மாறாய் அவன் வீட்டிலும் அகத்தின் அழகை மட்டுமே புற வண்ணங்களை காண இயலவில்லை எனினும் அதன் வண்ணக்குச்சிகள் அவன் கைகளில் தவழ்ந்தன,வானுயர்ந்த பறக்கும் விமானங்களும் அவன் கைகளுக்குள் அடங்கும் உருவ பொம்மைகளாயின,பல்துலக்கும் குச்சிகள் கூட அவனுக்கென வெந்தழிழ் தன்னை உருக்கி தளும்பிட்டு கொண்டன ,பள்ளி செல்லும் போதோ நண்பர்களுடன் மிதிவண்டி பயணம் ,அவன் புறப்பார்வை பற்றி கவலையில்லை அவன் அமர்வதை பற்றி கரிசனம் இல்லை அவர்களுக்கு , குழந்தைகள் அல்லவே வித்தியாசம் பாராட்டும் எண்ணங்கள் இல்லை அவர்களுக்கு,காலங்கள் உருண்டோடி கல்லூரிக்குள் ஒரு காலடி, அந்நிய மொழிகள் கூட அவன் வசமாயின,தொழில்நுட்பங்கள் அவன் சொல் படி தாவும் குரங்குகள் ஆயின,புறப்பார்வையின்றி அகத்தால் அவனை அடையாளப்படுத்திவிடலாம் எனில் அது அவன் குணத்தாலும் குரலாலும் அன்றே வேறு வழியில்லை எனும் சிறப்பு கொண்டான் அவன் தான் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட அஜீஸ் ,

நெறி:

பிரித்து பார்க்கா எண்ணம் கொண்டு இயல்பை ஏற்றுக்கொள்

யாராயினும் மாற்ற முயற்சிக்கா உள்ளத்தை மகாராணியாக்கி அப்படியே சிம்மாசனத்தில் அமர்ந்துவிடு, அவை குழந்தைபோல் மனதை கொண்டு காழ்புணர்ச்சியில்லாதிருக்கட்டும்

பிரிவை காணாத பார்வைகொண்ட விழிகள் உனக்கு என  உறுதிகொள், இடம் கொடு உனக்கும் குடுக்கப்படும்,குழந்தைகள் வெண்திரை விளைநிலங்கள் அவர்கள் கறைகளோடு ஆழம் செல்வதில்லை, கறைப்பார்வைகள் ஒட்டிகொள்ளாத வரை.மகிழனுக்கு புரிந்தது பார்வை புலனுணர்வை தாண்டி அகத்திற்குள்ளும் பிரயாணம் செய்யும் கப்பல் தெளிவும்  திரத்தன்மையும் வேண்டுமென..

இவண்.,

திவாகர் பாலசுப்ரமணியன்,

உதவிமகிழ்,

பூவுலகில் ஓர் மாவட்டம் கரூர்.

 

 

2.K2K -00002      

பார்வை எல்லார்க்கும் அவசியமே என்றால் பார்வை இல்லாதவர்க்கு காது கேளாதவற்கு வாய் பேச இயலாதவருக்கு அவர்களையெல்லாம் குறைபாடு உள்ளவர்கள் என்று சொல்வதற்கு பதில் அவர்களையெல்லாம் அதிசய பிறவிகள்/அற்புதப்பிறவிகள் என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னென்றால் அவர்களும் சராசரி மனிதர்கள் போல தன் வாழ்க்கையில் சுடுச்சொல் இருந்தாலும் உதறிவிட்டு எல்லாத் துறைகளிலும் தன்னம்பிக்கையை அவர்களே உருவாக்கிக்கொண்டுச் சாதித்து வருகின்றனர்.

பட்டினப்பாக்கம் என்ற ஊரில் வசிக்கும் ஒரு சிறுமி அவள் பெயர் ஸ்ருதி தன் அம்மாவுடன் வெளியே கிளம்பினாள். ஸ்ருதி பேசிட்டே   வந்தால் சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள் எதிரில் பார்வை இல்லாத ஒருத்தர் இவர்களை கடந்து போக ஸ்ருதி பயத்தில் பேசாமல் அம்மாவின் கையை இறுக்கி பிடித்து கொண்டால் அம்மா ஸ்ருதியின் பயத்தை அறிந்து அதைப் போக்க ஒரு சிறிய கதையைக் கூறுகிறாள். ஸ்ருதியிடம், ஒரு ஊரில் ஒரு ராஜாவும், மூன்று வழிப்போக்கர்களும் இருந்தனர். அந்த மூன்ற வழிப்போக்கர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடித்து பங்கு பிரித்து வாழ்ந்து வந்தார்கள். அந்த ராஜ அரசவையில் பார்வை இழந்த ஒரு மந்திரி இருந்தார் அவர்க்கு பார்வை மட்டும் தான் இல்லையே தவிர அவர் ஒரு அற்புதப்பிறவி என்ற எண்ணத்தில் அவருக்கு மந்திரி பதவி கொடுத்து அதற்கு ஏற்றார் போல் மந்திரி கருத்து கேட்டப் பிறகுத் தான் ராஜா ஆலோசித்து முடிவெடுப்பார். அப்படி இருக்கையில் ஒரு நாள் 3  வழிப்போக்கர்கள் அட்டகாசம் தாங்க முடியாமல் ஊர் மக்கள் ராஜாவிடம் புகார் அளித்தார்கள். குற்றவாளிகளை பிடிக்க ராஜாவை யார் மகிழ்விக்கிறார்களோ அவர்களுக்கு 5000 பொற்காசுகள் மற்றும் வைரநகையும் பரிசாக கிடைக்கும் என்று அறிவித்தார். மூன்று வழிப்போக்கர்களும் மாறுவேடத்தில் வந்து போட்டிக்கு கலந்து கொண்டனர். மந்திரி இவர்கள் தான் அந்த மூன்று வழிப்போக்கர்கள் என்று கண்டுப் பிடித்துவிட்டார் அதனால் குற்றவாளிகளுக்கு சந்தேகம் வராதபடி காவலாளிகளிடம் கைது செய்யும்படி தன் செய்கையால் காட்டினார். பின்னர் மூவரும் முழித்தனர் ஏன் எங்கள் மூவரையும கைது செய்தீர்கள் என்று கேட்க. ராஜாவும் குழப்பத்தில் இருக்க, மந்திரி விளக்கினார் அதாவது எல்லாரும் தனியாகத்தான் திறமையை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் மட்டும் தான் கூட்டாக வந்து உங்கள் முன் திறமையைக் காட்டிக்கொண்டுருக்கிறார்கள் அதுவும் மாறுவேடத்தில் என்று மந்திரி சொல்ல அரசர் சோதனையிட உத்தரவு போட பின்னர் மூவரும் இனிமே தப்பிக்க வழியில்லை என்று   எண்ணி அவர்களே ஒப்புக்கொண்டனர். மன்னிக்கவும் மன்னா...! மந்திரிக்கு பார்வை தெரியாது என்ற எண்ணத்தில் தான் இந்த போட்டிக்கு கலந்துகொண்டு பரிசைக் கொண்டு சென்று திருப்தியாக வாழலாம் என்று நினைத்தோம். ஆனால் எங்களை மிகவும் சுலபமாக கண்டுபிடித்துவிட்டார் எப்படி என தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறோம் மன்னா என்று மூவரும் கேட்க மன்னரும் ஆவலுடன் சொல்லுங்க மந்திரி நானும் ஆவலாய் இருக்கிறேன் என்று ராஜாவும் கேட்க மந்திரி சொன்னார். மன்னா "எந்த தொழில் செய்கிறார்களோ அதே போலத்தான் பேச்சும் இருக்கும். காட்டிலிருந்து வந்துருக்கோம் தெரியக்கூடாது என்ற காரணத்தால் இவர்கள் மூவரும் ஒரே வாசனைத் திரவியத்தை உபயோகித்து வந்துருக்கிறார்கள். நான் அதை வைத்துக் கண்டுப்பிடித்துவிட்டேன்" என்று மந்திரி விளக்கி கூற அனைவரும் நெகிழ்ந்து போனார்கள் என்று ஸ்ருதி அம்மா கதையை முடிக்க ஸ்ருதி "உடனே புரிந்தது அதாவது அற்புத பிறவிகளுக்கு எல்லாம் அற்புத ஆற்றலையும் சேர்த்து கடவுள் படைத்திருக்கிறார் அவர்களும் நம்மளை போல தான் அவர்களிடம் நாம் பேசலாம், பழகலாம், விளையாடலாம் அப்படித்தானே!" அவள் அம்மா "ஆமாம்! புரிந்து கொண்டாயே நல்லது" என பாராட்டினாள்.  

கருத்து: பெற்றோர்களே! அதிசயப்பிறவிகளைப் பற்றி முழுமையாக அறிந்துக்கொண்டு குழந்தைகளிடம் தவறான எண்ணம் கொண்டுவராமல் அவர்களை பற்றி தெளிவுபடுத்துங்கள் அவர்களுக்கு பார்வை இல்லாமல் இருக்கலாம். இந்த அதிசயப்பிறவிகள் தான் மற்றவர்களுக்கு பிரதிபலிக்கும் ஒளியாய் பிரகாசமாய் தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறார்கள் என்று மனதில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள்.!!

லக்ஷ்மி பிரியா

 

 

3.K2K-00003

 கடவுளின் படைப்பின் மிகவும் ஆக்கபூர்வமான விஷயம் நம் கண். இது நம் முகத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும் ... இது மகிழ்ச்சியான மற்றும் சோகமான மனநிலையில் பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது ... பெண்ணின் மிக சக்திவாய்ந்த ஆயுதம் கண் ... அந்த தோற்றம் பல ஆண்களைக் கொல்கிறது ....... அந்த ஒரு சக்திவாய்ந்த கண் தனது அப்பாவின் விருப்பத்தால் பழிவாங்குகிறது ... ரிவ்யா 12 ஆம் வகுப்பில் படித்த அழகிய ஒரு டீனேஜ் பெண் ... கோடை விடுமுறை காரணமாக அவள் சொந்த இடத்திற்கு சென்றாள் தஞ்சைக்கு அருகில் ... பல நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தைப் பார்வையிட அவள் மிகவும் உற்சாகமாக இருந்தாள். சில தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நாட்களாக அந்த கிராமத்திற்குச் செல்லவில்லை. அந்தப் பிரச்சினையைப் பற்றி அவள் பல முறை அப்பாவிடம் கேட்டாள், ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. அவள் குழந்தைப் பருவ பள்ளித் தோழியான ரூபினியைச் சந்திக்க விரும்புகிறாள்.அவர்கள் இருவரும் சிறுவயது முதல் இப்போது வரை நல்ல நண்பர்கள்,ரிவியா இப்போது தனது பாட்டி வீட்டில் ... அவள் நெருங்கிய நண்பரான ரூபினியுடன் நிறைய ரசித்தாள்..ஒன்று அவள் வீட்டில் ரூபினியைக் காணவில்லை, அவளுடைய அம்மா ஏதோ வேலைக்காக அவள் காட்டுக்குச் சென்றதாகக் கூறினாள்.ரிவியா சோகமாக வீட்டிற்கு நடந்தாள், திடீரென்று ரூபினி ஒரு மனிதனுடன் பேசுவதைக் கண்டாள் .எஸ் அவன் அவளிடம் ஓடி அதைப் பற்றி கேட்டான்.ருபினி அவள் மாமா மகன், அவள் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று சொன்னாள் ... ரிவி சந்தோஷப்பட்டாள், பின்னர் அவள் வீட்டிற்குச் சென்று, இப்போது வரை அவளுக்கு எந்தவிதமான திருமண திட்டமும் இல்லை என்று நினைத்தாள். அவள் காதலிக்கத் திட்டமிட்டாள். அவளுக்கு அந்தத் திட்டம் இருந்தபோது, ​​திடீரென்று ஒரு தேவதை அவள் முன் வந்து "ரிவி கடவுள் உங்களுக்காகத் திட்டமிட்டார் ...."

இதைச் சொல்வதன் மூலம் அது மறைந்துவிட்டது ... அவள் மகிழ்ச்சியடைந்தாள், அந்த திட்டத்தை விட்டுவிட்டாள். அடுத்த நாள் காலையில் அவரது தந்தை தனது பாதுகாப்பு நோக்கத்திற்காக அந்த சம்பவத்தைப் பற்றி கூறினார்...அந்த கிராமத்தில் அவர்களுக்கு ஒரு எதிரி குடும்பம் உள்ளது. அவர்கள் ரிவியாவைக் கொல்ல திட்டமிட்டனர், இதுபோன்ற ஆபத்தான செய்திகளைக் கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இந்த சூழ்நிலையிலிருந்து விடுபட ரிவியா ஒரு விஷயத்தைத் திட்டமிட்டார். ... ரிவியா அந்த எதிரி குடும்பத்தை போலீசில் ஒப்படைக்கிறார் ... இரு குடும்பங்களுக்கும் எதிரான பெரிய சண்டையின் காரணமாக இந்த ரிவியா சம்பவத்தால் அவர்கள் மேலும் கோபமடைந்தனர் ... ரிவியா தனது தந்தையின் விருப்பத்திற்காக அந்த குடும்பத்தை கொல்ல திட்டமிட்டார். ஆனால் அவர் கவலைப்பட்டார் தனது அன்புக்குரியவர்கள் குடும்பத்தின் மீதான பழிவாங்கல் ... ராஜு தனது குடும்பத்தின் மீதான பழிவாங்கலுக்காக பதற்றமடைந்தார். அவர் மேலும் கோபமடைந்து ரிவியாவைக் கொன்றார் .... அந்த சம்பவத்தின் காரணமாக அந்த கிராமம் ரிவியாவின் ஆவியால் பிடிக்கப்பட்டது. இப்போது அவள் கோபம் ராஜுவின் கனவில் கண்கள் வந்தன ... அவரும் அவரது குடும்பத்தினரும் ரிவியாவின் ஆவியால் கடுமையாகப் பிடிபட்டனர் .... அந்த அப்பாவி பெண் அழிக்கப்படுவது முழு கிராமத்தையும் அவள் இறந்ததற்காக ....... அவள் வரையறுக்கப்படாத காரணத்திற்காக அந்த முழு குடும்பத்தையும் கொன்றாள் இறப்பு.....

தார்மீக: பழிவாங்கல் நம் வாழ்நாள் முழுவதையும் அழித்தது

பெயர்: சிந்துஜா எம்

 

 

4.K2K-00004

பார்வை:

ஆடி மாத இரவு நேரம் அது, ஆடி மாதத்தின் காற்றும், முழு நிலவின் ஒளியிலும் அந்த தெருவே பிரகாசமாகவும் ரம்யமாகவும் மிளிர்ந்து கொண்டிருந்தது. அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் லட்சுமியம்மா அறுவதை கடந்த கணவரை இழந்தவர், அவரின் அருகில் அமர்ந்திருந்தாள் பொன்னி ஐந்து வயதை கடந்த அவரின் மகன் வழி பேயர்த்தி. பொன்னிக்கு இரவு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார், உள்ளிருந்து வெளியே வந்த பிரியா லட்சுமியின் மருமகள் அத்தை நேரம் ஆகிட்டே இருக்கு வேகமா ஊட்டிட்டு வாங்க என்று கூறியவாரே. பொன்னியை பார்த்து பாப்பா நீயும் சீக்கிரம் சாப்பிடு பாட்டி சாப்பிடனும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அப்போது பொன்னி லட்சுமியை நோக்கி பாட்டி நீங்க எதாவது கதை சொல்லுங்க அப்போ தான் நான் சாப்பிடுவேன் என்று சொன்னாள். அதற்கு லட்சுமி இப்போவே நேரம் ஆயிடுச்சி நாளைக்கு சொல்றேன் என்று சொன்னாள்; பொன்னி அதற்கு நீங்க கதை சொன்னாதான் சாப்பிடுவேன் என்று கூறினாள். பின்பு வேறு வழியின்றி லட்சுமி தொடர்ந்தாள்.

ஒரு ஊரில் அறிவழகி என்ற இருபது வயது பார்வையில்லாத பெண் அவருடைய தாத்தாவுடன் வசித்து வந்தார். சிறு வயதிலே அவளின் தாய், தந்தை இறந்துவிட்டதால் அவள் தாத்தாவுடன் வாழ்ந்து வந்தார். தாத்தாவிற்கு வயதானதால் தன்னுடைய குடும்ப பாரத்தை தன் தலையில் சுமந்து வந்தாள் அறிவழகி. பார்வையில்லாத போதும் தன் உழைப்பை நம்பி தனது வீட்டின் அருகே காய்கறி வியாபாரம் நடத்தி வந்தாள், அவள் தனது வீட்டு செலவுக்கு போக மீதம் உள்ள பணத்தில் தன்னால் முடிந்த உதவியை அடுத்தவருக்கு செய்தும் வந்தாள்.

ஒரு நாள் அந்த வழியே சென்ற ஒரு துறவி, அறிவழகியின் வேலையையும், சேவையும் கண்டு அவள் அருகே சென்று அவளுடன் உரையாட முடிவு செய்தார். ஏன் அம்மா உனக்கு பார்வை தெரியாத போதும் நீ உழைப்பதோடு மட்டும் இல்லாமல் அடுத்தவருக்கும் உதவி செய்து வருகிறாய். உன்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன், இறைவன் உனக்கு குறைவைத்த போதும் நீ உன்னால் முடிந்த அளவுக்கு அடுத்தவருக்கு குறையில்லாமல் நடந்து கொள்கிறாய், உன்னை ஏமாற்ற வேண்டும் என்று அடுத்தவர் நினைப்பார்களே அதை எவ்வாறு எதிர் கொள்வாய் என்று வினவினார்.

அதற்கு அறிவழகி புன்னைத்தவாரு கூறினாள் ஐயா நான் உங்களை போலவோ, மற்றவரை போலவோ கண்கள் கொண்டு அடுத்தவரை பார்பதில்லை, எனது மனதின் வழி அதாவது அகக் கண்களால் அவர்களை பார்க்கின்றேன். அதனால் என்னால் பெரும்பாலும் அவர்களை சரியாக புரிந்து கொள்ள முடிகின்றது. அப்படி இருந்தும் சில சமயங்களில் சிலர் என்னை ஏமாற்றத்தான் செய்கிறார்கள். அந்த சிலரினால் நான் என்னிடன் பெருந்தன்மையுடனும், நேர்மையாகவும் நடக்கும் பலரை சந்தேகிப்பது முறையாகது அல்லவா. அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவே என்று விட்டுவிடுவேன் என்று சொன்னாள். இதை கேட்ட அந்த துறவி பார்வை உள்ளவர்கள் அடுத்தவருடன் நடந்து கொள்ளும் பாகுபாடுகளையும், பிரிவனைகளும் எண்ணியவாறே அறிவழகியை நினைத்து ஒரு நொடி மெய் மறந்தார். அவளின் படிப்பறிவில்லாத ஞானத்தையும், அவள் அடுத்தவருடன் நடந்து கொள்ளும் விதமும், பார்வை இல்லாமல் அவள் மற்றவரை பார்க்கும் விதமும் அவரை பூரிப்படைய செய்தது. அவர் அறிவழகியை பார்த்து ஆண்டவன் உன்னை குறையுடன் படைக்கவில்லை அம்மா, என்னை போன்றோரின் குறைகளை களையவே படைத்துள்ளான் என்று கூறி வாழ்த்தி வணங்கி சென்றார்.

இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது என்று பொன்னியை நோக்கி வினவினால் லட்சுமி. அதற்கு போ பாட்டி உன்னை கதை சொல்ல சொன்னதே தப்பா போச்சு என்று கடிந்து கொண்டாள் பொன்னி. லட்சுமி அதற்கு சிரித்தவாறு சொன்னாள், பார்வை என்பது ஒருவருக்கு மிக முக்கியமானது தான், ஆனால் இருப்பவருக்கு அதை சரியாக உபயோகிக்க தெரிவதில்லை, நாம் கண்களால் பார்பது மட்டும் பார்வை அல்ல, மனதின் கண்ணான அக கண்களால் கண்டு அடுத்தவர் நிலையை உணர்ந்து நடக்க வேண்டும். அது தான் உண்மையான பார்வை புரியுதா என்று கேட்டவாறு வா நாம் உள்ளே போகலாம் அம்மா வந்து விடுவார் மறுபடியும் என்று சொல்லியவாறு லட்சுமி பொன்னியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

பார்வை என்பது நாம் கண்களால் காண்பது மட்டும் அல்ல பாகுபாடின்றி, வேற்றுமைகளை கடந்து அனைவரையும் சரிக்கு சமமாக பார்க்க வேண்டும் அதுவே உண்மையான பார்வை. "பார்வையின் மூலம் நாம் காண்பது காட்சியின் பிரதிகளே தவிர அது யாவும் உண்மையல்ல. பார்வையின் வழி காட்சியின் ண்மையை ஆராய்ந்தே அரிய முடியும்".

அகக் கண்ணால் அனைவரையும் சமமாக பார்க்கும் யாவருக்கும் சமர்ப்பணம்.

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

5.K2K-00013

ரமணி ரொம்பவே உடைந்து போனால் தன் தலைவிதியை நொந்துக் கொள்வதா? அல்லது கொரோன வைரஸ்யா? இப்பொழுது நடந்த சம்பவத்திற்கு யாரையும் குறைச் சொல்ல முடியாது என்பது மட்டும் நன்றாக தெரிந்துவிட்டது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் தன் மகளோடு பெங்களூருக்கு மாற்றலாகி வந்ததால் அவளுக்கு உதவியாக சில நாட்கள் தங்கிய பிறகு சென்னை திரும்பிவிடலாம் என்ற எண்ணத்துடன் வண்டி ஏறினாள். பத்து நாட்களில் திரும்பிவிடலாம் என்ற நினைப்புடன் வந்தவளுக்கு லாக் டவுன் ஆல் இங்கேயே தங்கும்படி ஆகிவிட்டது.

ரமணியின் கணவர் காலமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன மகனுக்கும் திருமணம் ஆகி பெங்களூரில் இருந்து வருகிறார்கள் "தனிமை" விரும்பியான ரமணி சென்னையிலே தனியாக வசித்து வந்தாள். வழக்கம் போல ஆன்லைன் கிளாஸ்க்கு மகள் தன் மகனையும், மகளையும் தாயார்படுத்திக் கொண்டிருந்தாள். ரமணி தன் போனைப் பார்த்து தம்பி, சீக்கிரம் குளித்துவிட்டு வா" என்றுக் கூற அவனும் "எல்லாம் எனக்குத் தெரியும் யாரும் என்னிடம் சொல்ல வேண்டாம்" என்றுக் கூற கடுப்பாகி போன மகளோ ரமணியை நோக்கி "நீ பேசாமல் உன் வேலையைப் பார் அவனிடம் பேசாதே" என்று கோபமாக கத்தினாள் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரமணியின் மாப்பிள்ளை அங்கு வந்து சற்று சத்தமாக நீங்கள் இருவரும் சற்று நேரம் கத்தாமல் இருங்கள் என்றார். மேலும் ரமணியைப் பார்த்து" காலையிலேயே நெகடிவ் எனர்ஜியை " உண்டு பண்ணாதீர்கள் என்று கத்தினார்.

ரமணிக்கு இதைக் கேட்டதும், ஒரு நிமிடம் ஆடிப்போனால். தன் வாழ்நாளில் அன்று தான் முதன்முறையாக, வேண்டாதவளாக நிற்பதை உணர்ந்தாள். இத்தனை ஆண்டுகளாக தன்னைப் பற்றி மிகவும் உயர்வாகவும், கடவுளின் மறு அவதாரமாக எண்ணி வந்தவளுக்கு இந்தச் சம்பவம் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்தியது எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்தில் தன்னை சுற்றி இருக்கும் மாயவலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற உண்மையை அவளுக்கு இந்த நிகழ்ச்சியைப் புரிய வைத்தது. இனி வரும் காலங்களில் தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டு இல்லாமல் உலக வாழ்க்கைக்கு ஏற்ப நடந்துக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

நெறி:  "பார்வை" என்பது நம் கண்களைக் கொண்டு பார்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தாலும் அறியப்படும் ஓர் உணர்வாகும்.

 

-RAMA GOVINDARAJAN (GRAPSS)

 

 

6.K2K-00034

பார்வையாளர்

காலங்காத்தால வந்துருதுங்க வெக்கமே இல்லை ச்சை என்று எதிர் நிற்பவளை வசைப்பாடி சென்றார் அந்த கடை உரிமையாளர்.

இது அவளுக்கு முதல் முறையல்ல என்றாலும் கூனிகுறுகி போனாள். மீண்டும் கைத்தட்டி காசு கேட்க பத்து ரூபாய் தாளை   அவள் மீது விசிறி அவர் வேலையை பார்க்க சென்றார்.

அதையும் எடுத்து கொண்டு அவள் வீட்டிற்கு போனாள், அவள் பெயர் ரதி. ஆணாய் பிறந்து பெண்ணாய் மாறிய திரு நங்கை. பதினைந்து வயதில் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இப்படி கடை கடையாக ஏறி பிச்சை கேட்கிறாள்.

பாவம் அவளுக்கு வேற வழியும் இல்லை இதை தவிர வயிறு ஒன்று இருக்கிறதே அதற்காக இதை செய்தாக வேண்டும். தான் படித்த பத்தாவது வைத்து எதாவது வேலை பார்க்கலாம் என்று பார்த்தாள், ஆனால் யார் அவளுக்கு வேலை கொடுத்தார்கள்.

அவள்மீது சில சில்லறை காசுகளை தூக்கி போட மட்டும் தான் செய்தார்கள். இதுவே போற இடம் எல்லாம் நடக்க கால போக்கில் பிச்சை எடுப்பது மட்டுமே தனது வேலை என்று அவள் மனதில் பதிய இப்படி தினமும் அவமானத்தில் உழன்றாள்.

இந்த ரதியை அனைவரும் அறியும் விதம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்தாள். அதை செயலும் படுத்தினாள் அந்த ரதி.

அடுத்த நாள் காலையில் அனைத்து ஊடகமும் அவள் வீட்டின் முன் நின்றது அப்படி அவள் என்ன செய்தாள் என்றால் தாங்கள் படும் அவஸ்த்தையும் தங்களது உடல் மற்றும் மன உணர்வையும் வெகு நாட்களாக தான் சேமித்த செய்திகளை, சிறு வயது கணிணி அறிவால் ஊடகத்தை சிறு மணி நேரம் முடக்கி அவள் சேமித்த செய்தியே அனைத்து இடத்திலும் ஒளிருமாறு செய்திருந்தாள்.

அதன் தாக்கமே இங்கு ஊடகங்கள் கூடியிருக்கின்றனர். பல தரப்பு கேள்விகள் கேட்டாலும் தான் மனதில் நினைத்ததை பேசினாள்.

திருநங்கைகளுக்கும் பெண்களுக்கான அனைத்து உணர்வும் இருக்கும், ஆணாக ஜனதித்து பெண்ணாக மாறுவதில் எந்த தவறும் இல்லை.

பெண்களுக்கு எட்டு அம்சம் மட்டுமே, அவர்களுக்கு எட்டு அம்சங்களுடன் வீரம் ஒரு அம்சமாக சேர்ந்து ஒன்பது அம்சங்களை பெற்றவர்கள்.

அவர்களையும் மனித தன்மையுடன் பார்ப்பது தான் மனிதநேயம். உங்கக்கிட்ட அது இருக்குனு நினைக்கிறேன் என்றவள் அடுத்த கேள்வி கேட்கும் முன் ஒரு கடை முன் கைதட்டி பிச்சை கேட்க ஒற்றை நாணயத்தை கொடுத்தார் அந்த உரிமையாளர்.

திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் அதில் ஆயிரம் அர்த்தம் பதிந்திருந்தது,

# ஆணென்ற அடையாளத்தை விடுத்து பெண்ணாக உருவெடுத்தவர்களை மதிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை அவர்களை மிதிக்க வேண்டாம்#

 

உங்கள்,

சுபாஷினி

 

 

7.K2K-00036

அவரின் பார்வை

அந்த கடைக்கு வெளி வாசலில் அடிக்கடி ஒரு ஊமை பிச்சைக்காரன் இரவில் படுத்து தூங்கி விடுவான். தினமும் அந்த கடை ஓனர் அவனை அடித்து துரத்துவதும் அதை மீறி அவனும் தூங்குவது என்று நாட்கள் போனது.

ஒரே நாள் அவர் கடை வாசலில் சிறுநீர் கழித்த அடையாளம் இருந்தது, அதன் அருகேயே அதே பிச்சைக்காரன் படுத்து இருந்தான். அந்த சிறுநீர் கழித்தது அவன் தான் என்று நினைத்து என்றும் இல்லாத கோபத்தில் துடப்பதை கொண்டு அடித்து விரட்டினார்.

ஆனால் அதன்பிறகு அவரது கடைவாசலில் இந்த பிச்சைக்காரனை அவர் சந்திக்க வில்லை. அவர் சந்திக்கவில்லை தவிர தினமும் அவர் கடையை பூட்டி சென்ற பிறகு அந்த பிச்சைக்காரன் அந்த வாசலில் படுத்து தூங்குவதும் அவர் வருவதற்குமுன் எழுந்து செல்வதும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

ஆனால் அவர் கடை வாசலருகே ஒரு நாள் ரத்த திட்டுக்கள் கொஞ்சம் இருந்தது. என்ன நடந்தது என்று புரியாமல் அவர் கடையில் சிசிடிவி கேமராவை பரிசோதிக்க ஆரம்பித்தார்.

அப்படி பரிசோதிக்கும் போதுதான் ஒரு விஷயத்தை கண்டறிந்தார். அது என்னவென்றால், இரவு கடையை அவர் பூட்டி சென்ற பிறகு அதே பிச்சைக்காரன் சுமார் இரவு 11 மணிக்கு வந்து படுத்துக் கொண்டான். பின் ஒரு அடுத்த ஒரு மணிநேரத்தில் ஒரு கொள்ளைக்கார கும்பல் அவரின் கடையின் பூட்டை உடைக்க பார்க்க அந்த பிச்சைக்காரன் அவர்களிடம் சண்டைக்கு சென்று சில பல அடிக்கள் வாங்கினான். அப்பவும் பல போராட்டங்களுக்கு பிறகு அந்த கொள்ளைக்கார கும்பல் துரத்திவிட்டு அங்கேயே படுத்துக் கொண்டான்.

எப்போதும் போல அவர் வருவதற்குள் அந்த பிச்சைக்காரன் ரத்தம் வழியும் வாயோடு கிளம்பி விட்டான். அதில் சிந்தியது தான் கடைக்கு வெளியே அவர் பார்த்த அந்த ரத்த திட்டுக்கள்.

அதே போல சில வாரத்துக்கு முன்னாடி அவர் பார்த்த சிசிடிவி வீடியோ தேடி பார்க்க, அன்று கடை வாசலில் சிறுநீர் கழித்தது கூட ஒரு குடிபோதை ஆசாமி தான். அது தெரியாமல் தான் அன்று இவர் அவனை அடித்து விரட்டி உள்ளார்.

அன்று இரவு கடையை மூடிவிட்டு அந்த பிச்சைக்காரனுக்காக காத்திருந்தார். தன் தவறான பார்வையால் பல தடவை தன்னிடம் அடிப்பட்டு, மிதிப்பட்டு கூட கடைசிவரை தனக்கு நல்லதே செய்தவனை பார்த்து நன்றி சொல்லி தன் கடையிலேயே வேலை போட்டு கொடுக்க தான்.

# குறிப்பு

ஒருவர் ஏதேனும் நிலையில் தங்களை விட தாழ்த்தப்பட்டு இருப்பதால் அவர் செய்யும் அனைத்துமே தவறு என்கிற பார்வையை விட்டு வெளியே வந்து அவர் நிலையில் ஒரு தடவை யோசிப்பது நல்லது.

நன்றி!

 

விஜயன்.

 

 

 8.K2K-00037

 பார்வை:

ஆராதனா-ப்ரகாஷ், இந்த அவசர யுகத்தில் தங்கள் அலுவலகத்திலேயே ஒருவரை ஒருவர் கண்டு, கேட்டு, நட்பாகி, ஓரளவுக்கு புரிந்து, காதலாகி பின்னர் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணமான தம்பதியர். முதலாம் ஆண்டு திருமணநாள் முடிந்த ஓரிரண்டு மாதத்தில் குழந்தை என்று அடுத்தடுத்த கட்டடங்களை கண்ட தம்பதியர். வாழ்வின் அடுத்தகட்டத்திற்கே உண்டான குழப்பங்களும், சின்னச்சின்ன சண்டை சச்சரவுகளும் என வாழ்ந்து வந்தனர்.

ப்ரகாஷ் சராசரி நடுத்தரவர்க குடும்பத்தில் பிறந்து பணம், அந்தஸ்து காரணமாக சொந்தங்களிடம் அவமானம் என்று பலவற்றை கண்டு வளர்ந்தவன். பணத்தின் தேவை மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் உணர்ந்தவன். சொந்த முயற்சியில் பட்டம் பெற்றவன். ஒரு விஷயத்தை பல வகையில் ஆராய்ந்து சாதகபாதகங்களை உணர்ந்து செயல்படுபவன், அதீத நுகர்வு கலாச்சாரத்தில் முழுவதும் சிக்காமல் தப்பிப்பிழைக்கும் ஒருசில மனிதரில் ஒருவன்.

ஆராதனா வீட்டில் செல்ல மகள். உயர் நடுத்தர வர்க பெரிய குடும்பத்தில் பிறந்தவள். கடன் வாங்கி செயல்படுவதை பற்றிய கவலை இல்லாதவர்கள். நாளை என்பதே புதிர் இன்றே நிஜம், வருவதை பின்னர் பார்ப்போம் என்ற மனப்பான்மை கொண்டவர்கள். இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் புதைந்த பெரும்பான்மை மக்களில் இவர்களும் ஒருவர்.

குழந்தை பிறந்தபின் ப்ரகாஷ் சற்று மேலும் எச்சரிக்கையாகவே இருந்தான். இருபதாயிரம் மதிப்பில் கைபேசி இருந்தால் அதே அம்சங்கள் கொண்ட முன்னணி ப்ராண்ட் இல்லாத ஆனால் தரமான பொருளை வாங்குவான். ஆனால் ஆராதனா அந்த நிறுவனத்தின் பொருளையே அதிக மதிப்பில் இருந்தாலும் வாங்குபவள். ப்ரகாஷின் இந்த மனநிலை அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

அவள் "நல்லா தானே சம்பாதிக்கிற. அப்புறம் ஏன் இப்படி பார்த்து பார்த்து பண்ற?"

நாம இப்போ கொஞ்சம் கொஞ்சமா மேலவறோம். அதனால பார்த்து செலவழிப்பது தான் நல்லது "

"என் தோழி ரேவதி அடுத்த மாசம் யூரோப் டூர் போக போறா. சம்பளமும் நம்ம அளவு தான்"

"அவ கணவன் அப்பா இன்னும் சம்பாதிக்கிறார். இவனுக்கு வீட்டுக்கு செய்ய கட்டாயம் இல்ல. நான் நம்ப மூணு பேர், வயசான அப்பா அம்மாவையும் பார்க்கணும்".

"எப்ப பாரு இல்லாதவன் மாறி பேசுற. லைஃப் என்ஜாய் பண்ணவே தெரியாதா?"

அவன்

"கடன் வாங்கி டூர் போறது, தேவை இல்லனாலும் கடன்ல கார் வாங்குறது இதல்லாம் சந்தோஷம் இல்ல. நாளைக்கு அதுவே நமக்கு பார்மா, அத வெறுக்கற நிலைமை வந்துடும். நான் அப்படி பலபேர பார்க்கறேன்."

ரெண்டாவது இன்னைக்கு இருக்கற நிலைமை நம்ம அப்பா தாத்தா காலம் மாறி நம்ம வேலைக்கு பாதுகாப்பு இல்ல. எப்போ எது வேணும்னாலும் ஆகலாம். 2008 ஞாபகம் இருக்கா. உங்களை கஷ்டப்பட விடாமல் செரியான முறையில் குடும்பத்த வழி நடத்துவது என் கடமை. ஒரு குடும்ப தலைவனா நான் யோசிக்காம எல்லாத்தையும் செய்ய முடியாது. கண்டிப்பா நாமளும் டூர் போலாம். ஆனா அத செரியா சேர்த்து வெச்சி அதுல போகலாம். கடன் வேணாம்."

"யூரோப் டூர விடு ஒரு செடான் கார் வாங்கினா என்ன? கல்யாணம், விசேஷம்னு போகும் போது நாமளும் கார்ல போகணும் அதுல லாங் டிரைவ் போகணும்னு ஆசை.

அவன்

"இப்போ என் சேமிப்பு எல்லாம் நம்ம குழந்தை வருங்கால படிப்பு சம்பந்தமா பண்றேன். அது தவிர கொஞ்சம் சேர்த்து வெச்சி இருக்கேன். இன்னும் 2 வருடம் ரெண்டு பேரும் இதுக்கு கொஞ்சம் சேர்ப்போம். அப்போ ஒரு 75% சேர்ந்திடும். செடான் இல்லாட்டியும் ஹேட்ச்பேக் வாங்கலாம். மீதி . எம்.- ஒண்ணு இல்ல ஒண்ணரை வருடத்தில் கட்டி முடிச்சிடலாம். நான் வேணாம்னு சொல்லல. பொறுமையா செய்யலாம்னு சொல்றேன்"

"எல்லாமே ப்ளான் பண்ணிதான் பண்ணனும்னா எனக்கு ஒத்து வராது".

" சரியா திட்டமிடாமல் போனா நாளைக்கு நாம தான் கஷ்டப்படணும்"

"இவ்ளோ வருஷத்துல நானும் பார்த்துட்டேன். எல்லாமே ப்ரோசீஜரா போறது எனக்கு எரிச்சலாக இருக்கு. நீ ரிஸ்க் எடுக்க பயப்படற".

"சரியா வராதுனு தெரிஞ்சே எப்படி செய்ய முடியும்".

"என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க. இப்படி ஒருத்தரோட இருக்கறது கஷ்டம்னு. நான் தான் என் லைஃப்ப வேஸ்டு பண்ணிட்டேன்".

"இப்போ எதுக்கு இப்படி பேசுற".

"நான் எல்லாம் ராணி மாறி இருந்தவ. இப்படி பட்ஜெட் போட்டு வாழ முடியாது. நீ ஒரு மணி மைன்டட். காசு தான் எல்லாம் உனக்கு. நாம பிரிஞ்சிடலாம்" என்று சொல்லி அவன் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்காமல் சண்டை முற்றி அவள் பிறந்த வீட்டுக்கு சென்றாள்.

சில கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகும் சுமுகமாக தீர்வு கிடைக்கவில்லை. ஒரு நேரத்தில் ஆராதனா பெற்றோரும்."இது உங்க வாழ்க்கை. நாங்க ஒண்ணும் சொல்ல முடியாது. நீங்க படிச்சவங்க. உங்க விருப்பம் தான்" என்று கவலை இன்றி ஒதுங்கிவிட்டனர்.

அவள் 90% கடனில் ஒரு செடான் கார் வணங்கினாள். இதற்கு இடையில் தன் தோழியுடன் தொழில் தொடங்க மேலும் வங்கிக்கடன் வாங்கினாள். அவள் கணவனிடமும் அவன் பெற்றரிடமும் மற்றும் அவன் சொந்தங்கள் எல்லாரையும் தவிர்த்தாள்.

ப்ரகாஷ் குழந்தை மனைவியை பிரிந்து சில காலம் வாழ வேண்டிய சூழல். இதற்கு இடையில் ஆராதனாவிற்கு தப்பான வழி கூறிய நண்பர்கள் யாவரும் அவள் தொடர்பிலிருந்து விட்டு சென்றனர். இதற்கு இடையில் பொருளாதார மந்தநிலை காரணமாக செலவுகள் அதிகம் ஆகின. சேர்ந்து தொடங்கிய தொழில் நஷ்டத்தினால் அவள் தோழி அவள் பங்கை பெற்றுக்கொண்டு இவள் தலையில் பாரம் ஏற்றிவிட்டாள். சம்பளம், செலவு போக மீதி . எம். கட்டுவதில் செரியாக இருந்தது. அவள் பெற்றோரும் அவளை குறை கூறினார்கள்.

அவளுக்கு இப்போது தான் தன் கணவன் கூறியது உறைத்தது. "இந்த காலத்தில் யாரிடமும் கடன் கேட்டு நிற்க முடியாது. சில இடத்தில் பெற்றவர்களிடம் கூட பண உதவி கேட்பதை தவிர்ப்பதே நல்லது. அதற்கு தேவையற்ற செலவை குறைத்து வேண்டிய சேமிப்பு செய்வதே சிறந்தது. நாம யாரிடமும் உதவி கேட்க கூடாது. நாம முடிஞ்ச உதவி செய்யற வகையில் இருக்கணும்". இப்போது தான் அவள் தான் தன் கணவன் பற்றி கொண்டிருந்த பார்வை முற்றிலும் தவறு என்றும் தன்னை வழி நடத்திய அனைவரும் சுயநலமாக இருந்தவர்கள் என்றும் உணர்ந்து தன் வாழ்வை தானே கெடுத்து கொண்டதை எண்ணி முதல் முறை கண்ணீர் விட்டு அழுதாள்.

நம்மை சுற்றி இருப்பவர்களும் பொருளை சந்தை படுத்தும் சந்தையாளர்களும் அவர்கள் லாபத்திற்காக பல ஆசை தரும் திட்டங்களை திணிப்பர். நாம் தான் விழிப்புணர்வுடன் நமக்கு தேவையற்ற நுகர்வு கலாச்சாரத்தை தவிர்த்து வளமான வாழ்வை வாழ வேண்டும்.

நம் கணவன் மனைவி மீது உள்ள பார்வையை நல்ல முறையில் காண்போம்.

ன்றி!!!

இப்படிக்கு

பா. பிரபு,

மடிப்பாக்கம்.

 

 

9.K2K00038

 பார்வை!

பார்வதி…. வயது நாற்பதுநடுத்தரக் குடும்பத் தலைவி. பார்த்தால் அம்மா என அழைக்கத் தோன்றும் மரியாதையான தோற்றம்.

பார்வதின்னு முக்கண்ணன் சிவனின் மனைவியின் பெயரைக் கொண்டிருப்பதாலோ என்னவோ அவளுக்கு மறைந்திருந்து மூன்றாவது கண்ணும் செயல்படும்.

யாரையும் பார்த்ததும் அவர்களின் பார்வையை வைத்தே அவர்களை சரியாக எடை போட்டு விடுவாள். இதனால் நல்லது கெட்டது தெரிந்து யாருடன் பழகலாம் யாரை விலக்கலாம் என்பதை தெரிந்து கொள்வாள்.

ம்…. சரி சரி அதெல்லாம் கட்டுப்படியாகும்.நீ முப்பது ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து எங்கிட்ட அறுபது ரூபா  சொல்ற.ரொம்ப ஆசைப்படாத ஐம்பது ரூபா தர்றேன் ஒரு கிலோ கொய்யாக்காய்  குடுத்துட்டு போ.”

அடி ஆத்தி…. இப்பிடி பேசுறீங்களே?!” பழக்காரம்மா அதிசயமா பார்க்கும்.

எப்பிடி தாயி இப்பிடி பக்கத்துல நின்னு பார்த்த மாதிரியே பேசுற?!” முகவாயில் கை வைத்து அந்தம்மா ஆச்சரியப்படுறதை பார்த்து

…” அதான் உன் பார்வையே சொல்லுவதே?! கொய்யாக்காய் புதுசா இருக்குதுன்னு நான் ஆசையா பார்க்கிறதை கவனிச்சுகிட்டு நீ டக்குன்னு விலையை ஏந்திச் சொன்ன. சொல்லும் போதே….இந்த விலைக்கு படிவாங்களான்னு சின்ன யோசனை உன் கண்ணுல தெரிஞ்சதே?!”

சரி தான் போ. ஐஞ்சு ரூபா சேர்த்துக்குடு. பஸ்சுக்கு  குடுத்த மாதிரி ஆவும்

அதெல்லாம் முடியாது ஐம்பது தான். சோறு போடுறேன் ஒரு வாய் சாப்பிட்டு போ.”

கோவில்ல ஒரு முறை சுவாமி தீபாராதனை நடக்குது. கூட்டம் முந்திகிட்டு தீபாராதனை பார்க்கக் குமியுது…. அந்தக் கூட்டத்திலும் ஒரு பொம்பளையை விடாம வாட்ச் பண்ணியிருக்காங்க நம்ம பார்வதி.

சரியா பத்தாவது நிமிசம்…. பிடிங்க ….பிடிங்கன்னு கத்துறாங்க.” கூட்டம் அப்படியே அவங்க பக்கம் திரும்பஒரு பெண்ணோட கழுத்திலிருந்து இன்னொரு பெண் செயினை இழுக்க அந்தக் கையை அப்படியே பிடிச்சு பார்வதி அம்மா வச்சிருக்க…. நிமிசத்துல விசயம் புரிஞ்சு கூட்டம் அந்த திருட்டுச் பொம்பளையை பொழந்து கட்ட….

‘’நான் முதல் தடவை பார்க்கிறப்பவே அந்தம்மா திருட்டு முழி முழிச்சுச்சு. அதனால தொடர்ந்து வாட்ச் பண்ணேன் சரியா சிக்கிருச்சு.”

என்ன தான் பக்தி இருந்தாலும் அக்கம் பக்கம் கவனமா இருங்கஇந்த பார்வதி அம்மா மாதிரின்னு எல்லோரும் பாராட்ட அவங்களுடைய பார்வை அவங்களுக்கு பெரு மதிப்பை வாங்கிக் குடுத்துருச்சு.

வீட்லயும் இவங்க பார்வையில இருந்து கணவரோ பிள்ளைகளோ தப்பவே முடியாது.

சமையலறையில் இருந்தாலும் ஹால்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு (… சில நேரம் பார்வதிக்கு காது மூக்கு கூட மூணாவது கண்ணா செயல்படும்) அங்கிருந்தே கரெக்ட் பண்ணிடுவாங்க.

பாலா…. நீ ஏன் விஜய் கூட சண்டை போடுற…. ரெண்டு பேரும் சேர்ந்து ரிமோட்டை ஒப்பேத்திருவீங்க….நாலு தடவை கீழ் விழுந்துருச்சு

என்னங்க…. இன்னும் நீங்க லேப்டாப்பை மூடலையா?! அவங்க ரெண்டு பேரும் கத்திக்கிட்டிருக்காங்க உங்க சத்தத்தையே காணோமே?!”

அடுத்து பார்வதி ஹாலுக்கு வந்தா…. நடக்கிற கதை என்னன்னு புரிஞ்சுகிட்டுஎல்லோரும் அவங்கங்க வேலையைப் பார்க்க எந்திரிச்சு போயிடறாங்க.

நேத்து உங்க பைக் சாவி அதனிடத்துல இல்லையே?! வண்டியிலயா கம்பெனிக்கு போனீங்க?!

பார்வதி இப்படி கேட்டதுக்கப்புறம் என்ன சொல்லியும் சமாளிக்க முடியாது சதாசிவத்தால.

ஆமா. போகிறப்ப நண்பனை பார்க்க வேண்டியதிருந்துச்சுஅதான் கார் வேண்டாம்னு வண்டியில போனேன்.”

எத்தனை தடவை சொல்றேன்…. ஏதாவது பொய் சாக்கு சொல்லிட்டு நீங்க பண்றதையே தான் பண்றீங்க. ஊர் இருக்கிற நிலைமையில அவ்வளவு தூரம் வண்டியில போகிறது சரியா?!

இப்படித்தான் பார்வதியின் பார்வை பல உண்மைகளைக் கொண்டு வருது.

நீதி;(படிப்பினை)

பார்வை என்பதை கவனம் என்பதோடு பொருத்திப் பார்த்தால்நாமும் பார்வதி போல பல உண்மைகளைக் கண்டுணரலாம். அதற்குத் தேவைபொறுப்புணர்வும் விழிப்புணர்வும்.

பூமாதேவி

 

 

10.K2K-00042

மாறிய வாழ்கை பார்வை  

அன்புள்ள நண்பர்களே வணக்கம்

இது என்னுடைய வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் அதாவது இன்று 11.10.20 இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்தது இந்த உண்மை சம்பவம்,

 அதாவது பார்வை என்பது நாம் அதை எதிர்கொள்ளும் / கடக்கும் விதத்தைப் பொறுத்து மாறிவிடுகிறது என்பதை நான் உணர்ந்து கொண்ட (நினைவு படுத்திய) நிகழ்வு,

என் பெயர் கணேசன் சண்முகவேல் வயது 40, அகமதாபாத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது மாடியில் வசித்து வருகிறேன். 08.06.20 அன்று கிடைத்த தகவலின் படி 09.06.20 காலை 7 முதல் 12 வரை மின்சார பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் என்பதுதான்.

நாங்கள் வழக்கமாக கீழே சென்று பால் வாங்குவது வழக்கம் (காரோண காலம் என்பதால் வீட்டில் தருவது நிறுத்தபட்டு இருக்கிறது). நான் சுமார் 7:20 மணிக்கு கீழே சென்று கடையில் பால் வாங்கி கொண்டு எந்த கடைக்காரரிடம் இன்னும் மின்சாரம் நிறுத்தப்படவில்லை என்று கேட்டேன், அதற்கு அவர் பணியாட்கள் வர நேரம் ஆகியிருக்கும் அதனால் சிறிது நேரம் ஆகலாம் என்று சொன்னார்.

அதைக் கேட்டுவிட்டு நான் பாலை வாங்கி விட்டு நான் வசிக்கும் ஆறாவது மாடிக்கு லிப்டில் பயணிக்க ஆரம்பித்தேன், இங்கே தான் நான் பார்வை மாறி கொள்ளும் நிகழ்வை அறிந்து கொண்டேன். அப்போது திடீரென்று லிப்ட் நின்றுவிட்டது அதாவது மூன்றாவது மாடிக்கும் நாலாவது மாடிக்கு நடுவில் இது நடக்கும் போது மணி சுமார் 7:26 இருக்கும், ஒரு நொடி நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன் ஏதோ மூச்சை அடைத்து மயக்கம் வருவது போல் இருந்தது, இரண்டு மூன்று முறை எச்சரிக்கை ஒலியை எழுப்பினேன், அந்த சத்தம் வேறு என்னை மேலும் பயத்திற்கு ஆளாக்கியது.

பின் ஒரு நொடி சிந்தித்தேன் நாம் இப்போது இங்கே இருக்கிறோம் நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை உபயோகப்படுத்தி இந்த நேரத்தின் பார்வையை ஆம் என் உள்ளத்தின் பார்வையை திருப்ப முடிவு செய்தேன்.  என்னை நானே ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். (நான் எப்போதும் கீழே செல்லும் போது என்னுடைய கை பேசியை எடுத்து செல்வதில்லை.  ஆனால் அன்று நான் இறைவன் சித்தத்தால் கையில் எடுத்து சென்று இருந்தேன்).  பின் நான் ஏர்டெல் மியூசிக்கை திறந்து 

 

"அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே " என்ற பாடலை கேட்க கன நேரம் என் பார்வை மாறியது, பின் 25 தடவை நான் உட்கார்ந்து எழுந்து உடற்பயிற்சி செய்தேன்.   இதற்கிடையில் மூன்றாவது மாடியில் வசிக்கும் நண்பர் சத்தம் கேட்டு சென்று செக்யூரிட்டியை அழைத்து வர சென்றார்.

பின் சுமார் பத்து பன்னிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு வந்து கதவை திறந்துவிட்டார்கள். வெளியே வந்த பிறகு ஒரு நிம்மதியுடனும் வாழ்க்கையில் கிடைத்த மேலும் ஒரு படிப்பினையுடன் மிகுந்த சந்தோஷத்தில் மாடி படிகளின் வழியே சிரித்து கொண்டே வீடு வந்து சேர்த்தேன்.

இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்க முடியாத திருப்பு முனையாக மாறி இருக்கிறது.

நெறி: நாம் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் விதம் மாறும் போது அதன் முடிவுகளும் கண்டிப்பாக மாறித்தான் கிடைக்கும் என்பது திண்ணம். 

கணேசன் சண்முகவேல்

 

 

11.K2K00048

பார்வை ...

 

          உலகில் ஒவ்வொருவரும் வேறு வேறு வகையான பார்வையில் (கண்ணோட்டத்தில்) பலவற்றை காண்கின்றனர், அதில் சில கண்ணோட்ட பார்வைகளை நாம் அறிவோம் ...

          ஒரு கல்லூரியில் பயிலும் மாணவன், அவன் குடும்பத்தினை பிரிந்து வந்து கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கி வாழ்ந்தான்,

          ஆரம்பத்தில் அனைவரிடமும் சகஜமாக பழகிய அவன் ஒரு தோழியிடம் மிகவும் நெருக்கமாக பழகினான் , அந்த தோழிக்கும் இவன் மீது அதிக அளவு அன்பு இருந்தது , அவன் தன் தோழியின் அன்பை பார்த்து , இவள் வருங்காலத்தில் நான் உடன் இல்லை என்றால் மிகவும் வேதனை படுவால் என்று எண்ணி இருக்கும் காலம் எல்லாம் விலகி வாழ்ந்தான் , இவனின் கண்ணோட்டத்தில் இவனின் தோழி மெல்லிய மனதுடைவலாக விளங்கினாள் , இவன் விலகிய காலங்களில் இவன் மூலம் இவனுடைய தோழிக்கு கிடைத்த இன்னொரு நெருங்கிய நட்பு கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினான்  , இதனை எவரும் அறியவில்லை , எவருடனும் நெருங்கி பழகாத மூன்று பேர் இவனின் தோழியிடம் மட்டும் நெருக்கமாக உள்ளதை கண்ட பலர் அவள் மீது பொறாமை கொண்டனர் , இவ்வாறு பல பேர் கண்களின் பல வித பார்வைகள் அவள் மீது பதிந்தது , அவளை சுற்றி உள்ள அனைவரும் இவளை வெவ்வேறு கண்ணோட்டத்தில் கண்டதால் இவளுக்கு பல சங்கடம் உருவாயிற்று , அனைவரிடமும் இருந்து விலகி வாழ்ந்தால் , இத்தகைய சங்கடம் நேராது என்று விலகி நின்று வருந்தினாள் , இவள் கண் பார்வைக்கு எட்டாத தூரம் மறைந்து தொலைந்து போனால் , அப்போது தன் தோழியின் வேதனையை அறிந்த இவன் , தன் தோழியை தேடி திரிந்தான் , பல நாட்களுக்கு பிறகு தன் தோழியை கண்டறிந்து மன்னிப்பு கூறி , இனி இவ்வாறு தவறு நடக்காது என்று கூறி மீண்டும் நட்பை தொடர எண்ணினான் , ஆனால் பல சண்டங்களில் சிக்கிய அவள் மனம் மீண்டும் நம்பிக்கை வெய்க்கும் தன்மை இழந்தது , ஆனால் தான் கொண்ட நட்பு என்றும் அழிவது இல்லை , ஆனால் என் குணம் மாறியது , என்றும் நான் உன்னுடைய தோழியாக இருப்பேன் , ஆனால் பழைய நம்பிக்கை மீண்டும் வருவது கடினம் என்று விலகி சென்றால் , இவனும் அவளின் வலி மற்றும் வேதனையை அறிந்து , தனது கண்ணோட்டம் தவரானதாக இருந்து உன்னை இழந்தது , இனி எனது கண்ணோட்டம் அவ்வாறு இருக்காது , நீ என்னை விலகினாலும் , நீ என் மீது கொண்டு இருந்த அதே அன்பு மற்றும் நம்பிக்கையுடன் நான் உன்னை தொடர்வென் என்று தொடர்ந்தான் ...

கருத்து: எப்பொதும் அன்பின் கண்ணோட்டம் ஆனது சிரிந்த அனுபவம் ஆகும் , அதனை இழந்தால் மீண்டும் மீட்டெடுப்பது கடினம் ...

இப்படிக்கு 

சி. தெய்வாணி ஸ்ரீ.,

 

 

12.K2K-00049

கதை: பார்வை

நாளை அம்மாவைப் பார்க்க போகிறோம்,

என்ற நினைப்பே அமுதனுக்கு சொல்ல முடியாத உற்சாகத்தை தந்திருந்தது.

எத்தனை ஆண்டு கனவு அது, வேண்டுதல் அது நாளை நிறைவேறப்போகிறது.

மனம் அவனை மீறிய ஒரு மாய ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது.

அமுதனுக்கு இப்போது பதினெட்டு வயதாகிறது. இது வரை அவன் அம்மாவின் முகத்தை பார்த்ததே இல்லை. அம்மா மட்டுமல்ல அவன் குடும்பத்தில் யார் முகத்தையும் அவன் பார்த்ததே இல்லை.

கண்களை இறுக்கி மூடி தூங்க முயன்றான். தூக்கம் வரவேயில்லை.மனதுக்குள் கற்பனை சிறகுகள் படபடத்துக்கொண்டேயிருந்தன.

அம்மா எப்படி இருப்பாள் என அவனுக்குள்ளேயே ஒரு கற்பனை அம்மாவை பல காலமாய் வடித்து வைத்திருந்தான். அந்த முகத்தோடு தான் அம்மா முகம் இருக்குமா,

அம்மா தன்னுடன் எப்படி பேசுவாள், என்ன பேசுவாள் என மனதுக்குள் ஒரே கேள்விகளின் கூட்ட நெரிசல், கேள்விகளை அடுக்கிக்கொண்டான்.

பார்த்த உடன் அவளிடம் ஏன் என்னை இத்தனை நாட்களாய் பார்க்க வரவில்லை என்று கேட்க வேண்டும். அதற்கான பதில் கிடைத்தால் மட்டுமே அடுத்த கேள்வி என்று உறுதியாக சொல்லிக்கொண்டான்.

அப்படியே கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் கட்டிக்கொண்டே தூங்கிப்போனான்.

அமுதன் குழுந்தையிலிருந்தே அந்த ஹோமில் தான் வளர்கிறான்.

அவன் குடும்பம் நல்ல வசதியான குடும்பமென்று யாரோ சொல்ல கேள்விபட்டிருக்கிறான்.

ஆனால் இதுவரை அவனை யாருமே பார்க்க வந்ததில்லை.

மற்ற குழந்தைகளை எப்போதேனும் யாராவது பார்க்க வருவார்கள்.

அந்த நாளில் அமுதன் தனிமையில் அமர்ந்து தன் அம்மாவின் பிம்பத்தோடு கேள்விகளை கேட்டுக்கொள்வான்.

அவன் அறிந்ததெல்லாம் சாரதா டீச்சர் மட்டும் தான்,

அவனின் காலை கடன் தொடங்கி இரவு தூங்கும் வரை எல்லா நேரமும் அவனின் அனைத்து வேலைகளையும் அவள் தான் பார்ப்பாள்.

அவளுக்கென்று உறவுகள் யாருமில்லை. அதனால் அவளுக்கு அந்த இல்லத்தின் குழந்தைகள் தான் அத்தனை உறவுகளும். குழந்தைகள் எவ்வளவு சேட்டை செய்தாலும் கடிந்து கொள்ள மாட்டாள் அன்பாக பேசி அவர்களை சரி செய்வாள் இதனாலேயே மற்றவர்களை விட சாரதா மீது குழந்தைகள் அதிக பாசமாய் இருப்பார்கள். அமுதனும் அப்படிதான்.

ஆனாலும் எல்லா குழந்தைகள் போலவும் தன் அம்மாவை பார்க்க அவனுக்கும் ஏக்கம் எப்போதும் உண்டு. அந்த நிலையில் தான் அவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு.

காலை முதலே சாரதா பரபரப்பாக தயாராகிக்கொண்டிருந்தாள்.

இன்னும் சற்று நேரத்தில் மருத்துவர் வந்துவிடுவார் அதன்பின்னான விசயங்கள் அவளுக்கு மிகுந்த உற்சாகமளிப்பதாய் இருக்கும் என நம்பினாள்.

மருத்துவரும் வந்தாயிற்று.

தன் கண்களை மூடி எல்லாம் நல்லபடியாக நடந்துவிட்டால் மண்டியிட்டு நடப்பதாக வேண்டிக்கொண்டாள்.

அரை மணி நேர பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமுதனின் அம்மாவும் வந்துவிட்டாள்.

ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்தவள் போலேயிருந்தது அவளை பார்க்க அவ்வளவு ஒரு அழகுப்பதுமையாக இருந்தாள்.

அடிக்கடி தன் கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டே யிருந்தாள்.

அதிலிருந்தே ஏதோ அவசர வேலை இருப்பதை உணர முடிந்தது. மருத்துவர் சிரித்த முகத்தோடே வெளியே வர சாரதா வேக வேகமாக அவரை நோக்கி ஓடினாள்.

சிறிது நேரம் கழித்து போய் பாருங்கள் என்றவர் புன்னகையோடே விடைபெற்றார்.

ஏதோ பிரசவ வார்டின் வெளியே நிற்பவளைப்போல் நேரத்தை பார்த்துக்கொண்டே இங்கும் அங்கும் நடந்த சாரதா

அம்மா என உள்ளிருந்து அமுதன் அழைக்க கன்றழைத்த தாயைப்போல துள்ளிக்கொண்டு உள்ளே ஓட அமுதன் சாய்ந்தமர்ந்த நிலையில் படுத்திருந்தான்.

அவன் கண்களிலிருந்த கட்டை ஒரு செவிலி அவிழ்க்க இந்த உலகத்தை முதன் முதலாக பார்த்தான் அமுதன்.

கண்கள் கூச சிமிட்டி சிமிட்டி திறந்தான் அவன் முன்பு ஒருநாள் சொன்னது நினைவு வர வேகமாய் வெளியே ஓடிய சாரதா அவன் அம்மாவை அழைத்து வந்து முன் நிறுத்தினாள்.

 உணர்ச்சிப்பெருக்கின் நடுவே தாம் இருக்க வேண்டாம் என நினைத்த சாராதா அறைக்கு வெளியே நின்றாள்.

சிறிது நேரத்திற்கு பின் கண்களில் கண்ணீரோடே வெளியே வந்த அவன் தாய் சாரதாவின் கைகளை பற்றி அழுதாள். பின்னர் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து வேகமாய் புறப்பட ஒன்றும் விளங்காதவளாய்

அமுதனிடம் ஓட அவன் அம்மா என அவளை கட்டிக்கொண்டான்.

அமுதன் பேசினான் அந்த அம்மா என்னை பார்க்க மட்டுமே வந்தார்கள்

என்னை பார்த்துக்கொள்ளவோ நான் இந்த பூமியை பார்ப்பதை பார்க்கவோ வரவில்லை என்று மௌனமானான்.

சாரதா கண்ணீரோடு அவனை பார்க்க

அவனின் பார்வை முழுவதும் சாரதாவே நிறைந்திருந்தாள்,

அவன் கற்பனையில் செதுக்கி வைத்திருந்த உருவத்தின் சர்வ லட்சனங்களோடே.

 இருவரின் கண்ணீரோடே கருணையும் பாசமும் கரைந்தொழுகிக்கொண்டிருந்தது...

எழுத்தாக்கம்: எபிநேசர் ஈசாக்

 

 

 

13.K2K0050

பார்வை...

அன்வர் - இரண்டாம் ஆண்டு முதுகலை உளவியல் மாணவன்...visual perception என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வந்தான்...அது சம்பந்தபட்ட (reference) குறிப்பெடுப்பதற்காக நூலகம் சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேர அலசலின் பிறகு 5 புத்தகங்களை தேர்வு செய்தான்......பின் உறுப்பினர் அட்டையை காண்பித்து அதை தனது விடுதி அறைக்கு எடுத்து வந்தான்.... வந்தவுடன் குளித்து முடித்து கெட்டிலில் உள்ள சுடு நீரை கோப்பையில் ஊற்றி green tea pouch- இட்டு reading table -லில் அமர்ந்தான்... அவன் எடுத்து வந்த 5 புத்தகங்களையும் புரட்டினான்... அவன் எடுத்து வந்ததோ 1. visual perception- An introduction 2. Art of visual perception 3. The ecological approach to visual perception 4. Theories of visual perception 5. Basic vision.....ஆனால் ஐந்தாவதாக மேசையில் இருந்ததோ VISION- THE POWER OF SIGHT என்ற புத்தகம்.....அன்வர் திகைப்புடன் புத்தகத்தை புரட்டினான்.....கிட்டத்தட்ட 72 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில்  வெறும் 26 பக்கங்களே அச்சிடப்பட்டு இருந்தன......வியப்புடன் ஒவ்வொரு பக்கமாக வாசிக்க துவங்கினான்....பார்வை திறனற்ற மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் சவால்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் குறித்த புத்தகம் அது.....சிறிது நேர வாசிப்பிற்கு பிறகு கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தான்......உறக்கமோ சரிவர வரவில்லை...... கனவிலோ இனம் புரியாத காட்சிகள்......நாகம், மெழுகுவர்த்தி ஏற்றிய ஒரு அறை, ஒரு வயதான கிழவி, திருவோடு, இரயில் பாலம், நூலகம், பேனா, புத்தகம்,மரக்குச்சி இவை அனைத்தும் மங்கலான காட்சிகளாக மாறி மாறி தோன்றின....இறுதியில் ஒரு இருட்டு அறையில் ஓர் இளைஞன் தன்னை சுற்றி பாம்பும் தேளும் இருப்பது அறியாது செல்கிறான்.....அன்வர் அந்த இளைஞனை தடுக்க எவ்வளவு முயன்றும் இயலவில்லை....கடைசியில் பாம்பு தீண்டியது.......அந்த இளைஞனை அல்ல....அன்வர் -....பதட்டத்தில் வியர்க்க விறுவிறுக்க எழுந்தான்....சூரியன் பிரகாசமாக உதித்திருந்தது...... வழக்கம் போல் பல்கலைக்கழகத்திற்கு கிளம்பினான்....மாலை வீடு திரும்புகையில் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது.....அவன் கனவில் கண்ட காட்சிகளை மீண்டும் நேரில் கண்டான்.........மகுடி வித்தை, இரயில் நிலையத்தில் திருவோடு ஏந்தி சில்லரைகளை குழுக்கி கொண்டிருந்த பார்வைத்திறனற்ற மூதாட்டி, செல்லும் வழியில் நூலகம், நூலகம் வாசலில் பேனா விற்றுக் கொண்டிருந்த நபர்.....தாங்க முடியாத தலைவலியோடு வீட்டிற்கு விரைந்தான்....கதவை திறந்ததும் இது வரை காணப்படாத அளவுக்கு இருட்டாக இருந்த அறையிலிருந்து நாகம் ஒன்று தன்னை நோக்கி சீறியது ......மயங்கி விழுந்தான்.....மீண்டும் சில மாற்றங்களுடன் அதே கனவு வர திடுக்கிட்டு எழுந்தான்.....அப்போது மருத்துவமனையில் இருந்தான்.....கண் பரிசோதனை செய்ததில் open angle glaucoma (பார்வை குருகிவிடும்-loss of peripheral vision and tunnel vision)உள்ளதாக முடிவு வந்தது.....மருத்துவர் ஆலோசனை பெற்று வீடு திரும்பினான்...நான்கு நாட்கள் பிறகு..புத்தகத்தை மீண்டும் நூலகத்தில் நாளை தர வேண்டிய நிலையில் மீண்டும் அன்று இரவு அந்த புத்த்கதை வாசித்தான்..... அந்த புத்தகத்தின் 26-ம் பக்கத்தில் "பார்வை இருந்தும் மற்றவர்களுக்கு நடக்கும் அநீதிகளை பாராதது போல் இருக்கும் குறுகிய உள்ளம் உடைய மானிடர் அனைவருக்கும் குறுகிய பார்வை சமர்ப்பணம்" என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.... சட்டென்று புத்தகத்தை மூடினான்...மறு நாள் காலை அன்வரின் 26ம் அகவை ஆரம்பமானது (பிறந்த நாள்).....புத்தகத்தில் குறிப்பிட்டதை போல் முற்றிலுமாக பார்வை இழந்தான்...... உலகமே ஒளியிழந்து காணப்பட்ட நிலையில் அந்த புத்தகத்தில் அச்சிடப்படாமலிருந்த மீதி பக்கங்களை மட்டும் அவனால் வாசிக்க இயன்றது.....72வது பக்கத்தில் "அநீதிகள் நிறைந்த உலகின்  நரக வாழ்விலிருந்து முக்தி பெறுவாய்" பெறுவாய் என்றெழுதியிருந்தது....

-THARINI

 

 

14. K2K-00053

பார்வை

"காதல் பார்வையில இருக்கிற நேர்மை தாங்க வாழ்க்கையில் கெடச்ச பெஸ்ட் நேர்மை...அது அவ்வளவு சீக்கிரம் எல்லாருக்கும் அமைஞ்சுராது...."

கொஞ்சம் பொறுமையா மனசு விட்டு பேசுங்க....

விவாகரத்துஒன்னும் விளையாட்டு பொம்ம இல்ல..." என்று அறிவுரை ராஜனுக்கும் ரக்ஷனாவுக்கும் கூறிக் கொண்டு இருக்கும் போதே லேசான இருமல்...

"ஒரு கிளாஸ் தண்ணில தொண்டை குழியை நனைத்துக் கொண்டாள் மனநல மருத்துவர் அருந்ததி..."

மீண்டும் பேச எத்தனிக்கும் போது இடையே ரக்ஷனா குறுக்கிட்டாள்...

மேம், "ஜஸ்ட் ஒரு பார்மாலிட்டிக்கு எங்க வக்கீல் இந்த கவுன்சிலிங் வர சொன்னதுனால வந்தேன்....

என் மனசுல இனி எந்த மாற்றமும் வர போறது இல்ல...என்று ரக்ஷனா பரபரப்பாய் வார்த்தைகளை அள்ளி தெளித்தாள் தீர்க்கமாய்...

"ஆமா மேடம் எனக்கும் இதே எண்ணம் தான்..." என அவன் பங்குக்கு வார்த்தைகளை ஒற்றை வரியில் உதிர்த்தான் ராஜன்...

"உங்க மனசோட பார்வைக்கு கொஞ்சம் அவகாசம் குடுத்து தான் பாருங்களேன். இன்னும் மூனு மாசம் கழிச்சு வாங்க...உங்கள பத்தின பார்வைகள், கணிப்புகள் உங்க ரெண்டு பேருக்குள்ள இந்த மூனு மாச அவகாசத்துல மாறவும் வாய்ப்பு இருக்கு..."

"வாய்ப்போட வீரியம் நழுவ விட்டவங்களுக்கு தான் புரியும்..." பார்க்கிற பார்வையில் இருக்கு பிரச்சனையின் ஆழம்... பழையது போகட்டும்...குறைகள் மறந்துருங்க புதுசா உங்க பார்வைகளை மாத்தி தான் பாருங்களேன். உங்க அடமெண்ட் மைன்ட் விட்டு வெளில வாங்க... டேக் டைம்...என அவர்களை பேச விடாமல் நீண்ட நெடிய அறிவுரையை அழுத்தமாய் பேசி நிறுத்தினாள் மனநல மருத்துவர் அருந்ததி"

இருவருமே ஒன்று போல தலையாட்டி விடை பெற்றார்கள்;

"தேங்யூ மேம்"என்று...

வீட்டில் ராஜன்...ரக்ஷனா....

யார் முதலில் பேச மவுனத்தில் கரைந்தன நிமிட முட்கள்...

முதலில் ராஜன் ஆரம்பித்தான்....

" ரக்ஷனா, இப்ப கூட நீயா பேசனும்னு உனக்கு தோனலை அவ்வளவு திமிர் டி...

கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இருக்க பாரு... ஹஸ்பென்ட்னு மதிப்பே இல்ல டி உனக்கு" என வார்த்தை தீயை பற்ற வைத்தான்...

மவுனம் இங்கே உடைந்து யுத்த களத்தில் படைகள் தயாராவது போல ரக்ஷனா அவள் பங்குக்கு பேசலானாள்...

"யாருக்குங்க திமிர்... இனி் இந்த டி போடற வேலையெல்லாம் வேணாம்... ஏதோ டாக்டர் சொன்னாங்களேனு கொஞ்சம் கன்வின்ஸ் ஆனேன்... ரொம்ப தலைக்கு மேல ஆடாதீங்க என கை நீட்டி பேசினாள்..."

"வேணாம் ரக்ஷனா உனக்கு பல தடவ சொல்லிருக்கேன்... என் முன்னாடி கை நீட்டி பேசாத எனக்கு செம டென்ஷன் ஆகுது...என கடல் அலை போல ஆர்ப்பரித்து இரைஞ்சினான்...ராஜன்"

இரவு நேரம்...

கண்ணிரீல் தலையணை நனைத்தாள்...

"இப்ப உனக்கு என்ன பிரச்சனை ரக்ஷனா...நா ஒன்னும் கொடுமை செய்யல...இப்படி அழுது அழுது எனக்கு பாவத்த தேடி தராத பிளீஸ்...

தூங்கற நிமிஷத்துலயாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு என கெஞ்சினான்"

ஆணும் பெண்ணும் சரி சமம் னு இந்த சொஷைட்டி சொல்லுது பட் ஒரு வீட்டுல கணவன் மனைவினு வரும் போது மட்டும் ஈக்வல் ஈக்வல் இல்லையா?

நான் உனக்கு இக்வல் இல்லையா ராஜன்? நா என்ன அடிமையா? எனக்குனு எண்ணங்கள் கல்யாணத்துக்கு அப்புறம் இருக்க கூடாதா ராஜன்...

கல்யாணம்ங்கற களத்துல என் ஐடென்டிய தொலைச்சுருவேனோனு பயமா இருக்கு ராஜன்...கணவனும் மனைவியும் பிரண்ட்ஸ் போல பேசிக்கவே முடியாதா ராஜன்? நாம ஈக்குவள் இல்லையா ராஜன்? என கேள்விகளை அம்பாய் எய்தினாள் கண்ணீர் துளிகளோடு...

"ராஜனின் பார்வை லேசா மாறத் துவங்கியது... சாரி ரக்ஷனா உன் மனச இத்தனை நாள் எனக்கு புரிய தெரியல... "என்றான் அவள் விழி நீரை கையில் ஏந்தியவாறே..."

சிறு நிம்மதி தித்திப்பில் அவன் தோள் சாய்ந்து இமை மூடுகிறாள்

நீதி: யாரோட பார்வை அலைகளும் யாரோடும் அவ்வளவு சீக்கிரம் ஒத்துப்போவதில்லைங்க... எனினும் இந்த வாழ்க்கை அடுத்த கட்ட பார்வையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டே தான் இருக்குதுங்க. புரிதல் பார்வைக்கு அவகாசம் கொடுங்க.

- பூங்கொடி

 

 

15.K2K00058

கண்கள் இரண்டும் பேசுதே

            டேய் சரவணா நீயும் ஒன்பதாம் வகுப்பு பாஸ் ஆகிட்ட போல.   ஏன்டா நீயே பாஸ் ஆகும் போது நான் ஆகமாட்டேனா? இப்பிடி பேசிக்கொண்டு பாலாவும் சரவணாவும் பத்தாம் வகுப்பிற்குள் அடியெடுத்து வைத்தனர்.  உள்ள மதனைப் பார்த்து உன்னலாம் யாருடா பாஸ் பண்ணிவிட்டது அனேகமா உன் பேப்பர திருத்தும் போது வாத்தியாருக்கு கண்ணு தெரியாம போய்ருக்கனும் அதான் நீ பாஸ் ஆகி இங்க வந்துருக்க என கிண்டலடிக்க மதன் கடுப்பாகி பாலாவ அடிக்க துரத்த பாலா வகுப்பின் கதவை நோக்கி ஓடினான். அப்போது ஒரு பெண் வகுப்பினுள் வர அவள் மீது மோதாமல் விலகி அருகிலிருந்த போர்டின் மீது விழ அந்த பெண் பயத்தில் உறைந்து இவனை பார்த்தாள்.  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருக்க மதன் பாலாவை அடிக்க அப்பதான் இருவரதும் பார்வையும் விலகியது.

            முதல் நாள் வகுப்பு தொடங்கியது.  தமிழ் ஐயா முதல் வகுப்பினை எடுக்க வந்தார்.  முதலில் தன்னை மணிமாறான் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வகுப்பு மாணவர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தச் சொன்னார்.  அப்போதுதான் பாலாவிற்கு அவள் பெயர் பிரியங்கா என்று தெரிந்தது.  அன்று முதல் அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். இப்படியே நாட்கள் செல்ல அவளும் மெல்ல இவனை பார்க்கத் தொடங்கினால் வகுப்பில் ஆசிரியர் வராத நேரங்களில் பாலா பிரியங்காவைப் பார்க்க அவளும் இவனை பார்க்க ஏதோ கேட்பது போல் பாலாவிற்கு தோன்றியது என்ன என கேட்க முற்படும்போது மணிமாறன் ஐயா உள்ளே வர கவனம் சிதறியது.

மணிமாறன் ஐயா: மாணவர்களே அறிவியல் ஆசிரியருக்கு உடல் நிலை சரியில்லை.  இந்த வகுப்பு நான் தான் உங்களுக்கு.  சரி எல்லோரும் தமிழ் புத்தகத்தை எடுங்க.  இன்னைக்கு நாம பாக்க போற பாடம் இலக்கணம்.

[பாலா மெல்ல பிரியங்காவை பார்க்க அவளும் இவனை பார்த்தல் அப்போது]

பிரியங்கா: என்ன அப்பிடி பாக்குற?

பாலா: நீ பாக்குரியானு பாத்தேன், ஆமா நீ ஏன் என்ன பாக்குற?

பிரியங்கா: நீதான் என்ன பாத்த அதான் பாத்தேன்.

பாலா: நான் பாத்தா நீயும் பாப்பியா?

பிரியங்கா: நீ எதுக்கு என்ன பாக்குற அதான் உன்ன பாத்தேன்.

பாலா: நான் உன்ன பாக்கல, உன் பக்கதுல இருக்கால அவளதான் பாத்தேன்.

பிரியங்கா: அப்ப நீ என்ன பாக்கலதானே சரி போ என்று கோவமாக திரும்பினாள்.

பாலா: ஏய் சாரி சாரி சும்மா சொன்னேன்.  உன்ன தான் பாக்கிரேன்

பிரியங்கா மெல்ல திரும்பி அப்புறம் எதுக்கு பொய் சொன்ன சரி ஏன் என்ன பாக்குரனு சொல்லு.

பாலா: அது வந்துவந்து…......

மணிமாறன் ஐயா: டேய் பாலா எரும நான் இங்க பாடம் நடத்திட்டு இருக்கேன் அங்க என்னடா வேடிக்க பாக்குற?

பாலா ஆசிரியரின் குரல் கேட்டு சுயநினைவிற்கு வந்து பதட்டத்துடன் பதில் கூற முற்பட்டான்.

மணிமாறன் ஐயா: இவ்வோளோ நேரம் என்ன நடத்துனேனு சொல்லு.

பாலா தெரியாமல் தவிக்க ஆசிரியர் அவனை அழைத்து முட்டி போட வைத்த்தார்.

            உதடுகள் அசைவின்றி வார்த்தையெதும் சொல்லிடாமல் இருவரும் பார்வையினாலே பேசிக்கொள்ளும் மொழி காதல்”.

 

-பிரிட்டோ சச்சின் மரியா. வே

புதுக்கோட்டை.

 

 

 

16.K2K_00065

புகைப்படவிழிகளின்வலிகள்

#புகைப்படவிழிகளின்வலிகள்

"கண்ணில் படும் காட்சியெல்லாம் அவன் (காமிரா) விழியில் வெளிச்சம் படும் "

வணக்கம், இது எனது நான்காவது பதிவு, உங்களின் அன்போடும் ஆதரவோடும் எழுத தொடங்குகிறேன்,

இதுவரை கற்பனை குறுங்கதைகளை எழுதிவந்த நான் நிஜத்திலும் நடைபெறும் சில வலிகளின் கதைகளை பகிர ஆசைப்படுகிறேன்.

ஒரு புகைப்பட கலைஞனின் காமிராவில் காட்சிப்படும் புகைப்படங்கள் தன் விழிகளில் வலிகளாய் உணர வைப்பதே இந்த பதிவு ...

#படித்து_ரசிக்கலாமே

பிரசன்னா, இயந்திரவியல் பொறியாளன், சென்னை மாநகரில் ஏதோ ஓர் வழியில் முன்னேற துடிக்கும் கோடி இளைஞர்களில் ஒருவன். இயந்திரத்துக்கும் அவனுக்கும் ஆன தொடர்பு ஏனோ பிறந்த நாள் முதல் அவனிடம் தொற்றி கொண்டு இருந்தது ...தன் மானசீக குருவை ஏற்று அவர் வழி வாழ்ந்து வந்தவன். அதனால் என்னவோ அவனுக்கு காமிரா மீது அலாதி பிரியம் வந்தது. அவனும் அவனின் விடா முயற்சியால் தனக்கு விருப்பமான காமிராவை வாங்கினான்

 "இயந்திரமும் அவன் விரல் ஸ்பரிசம் பட தவம் பெற்று அவனிடம் வந்து சேர்ந்தது’’

அவன் அந்த காமிரா மூலம் அவ்வப்போது அவனை சுற்றியுள்ள நபர்களை அசர செய்தான். பொழுதுபோக்கு புகைப்படம் எடுக்கும் அவனுக்கு அவனது காமிராவும் பல புகைப்படங்களை படமெடுத்து தந்தது

"மாற்றம் ஒன்று வந்து சேர்ந்து ஏமாற்றம் பின் தொடர்ந்தது "

சாதாரணமாக புகைப்படம் எடுக்கும் அவனிடத்தில் சில நாட்கள் பிறகு அரிதான காட்சி படங்கள் எடுக்கும் ஆசையாய் வந்து சேர்ந்தது.

அதற்காகவே அவனது காமிராவும் பனி மூடிய அதிகாலை கதிரவனும் அவனின் விரல் ஸ்பரிசத்தில் ஸ்தம்பித்தது ... எண்ணிலடங்கா காட்சிகளை காலை கதிரவன் அவனுக்கு பரிசாய் தோன்றியது. அதிகாலை கதிரவன் தொடங்கி அந்திமாலை தென்றலோடு வீசி பறந்தாடும் பறவை கூட்டம் அவனிடம் நட்பு பாராட்டி வந்தன...இடைஇடையே வன விலங்குகளும் கூட அவன் காமிராவில் காட்சி பட்டு வந்தன.

விழிகளின் வழிகள் எங்கே? ...

புகைப்படம் எடுப்பது அரிய கலை, அதற்கு காட்சிகளை தன் விழிகளில் உள்வாங்கி கற்பனைபடுத்தி உருவம் அளிக்கப்படும், ரசிக்க மட்டும் போதாது அந்த ரசனையை காட்சி படுத்த பொறுமை மிக மிக அவசியம்.

தன் காதல் காமிராவில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் அங்கீகரிக்க படவில்லையெனில் அதனை எடுத்த இயந்திரமும் பழுதாகி அதனை உருவகப்படுத்திய பிம்பமான கலைஞனையும் வலிக்க வைக்க தான் செய்யும்அந்த விழிகளின் கண்ணீர் துளிகளில் காமிராவும் சோர்ந்து தான் போய்விடும் ...

இதற்கு ஏற்றார் போல அவனுக்கும் இந்த கடினமான காலகட்டங்கள் வந்து சேர்ந்தது. தான் பாராட்டப்படவில்லையே என்கிற ஏக்கம் அவனை வாடி வதைத்தது ...ஆனாலும் சோர்ந்து விடமால் அவனிடம் கொஞ்சி குழாவிடும் பறவைகளிடத்திலும் அன்பு விலங்குகளிடமும் நட்பு பாராட்டி வந்ததன் மூலம் எங்கோ கோவில் மணி அடித்தது போல அவனுக்கான அங்கீகாரங்கள் ஒன்று சேர அவனிடத்தில் வந்து சேர தொடங்கின ... அவனும் எந்த சலனமும் இல்லாமல் திரும்பவும் தன் காதல் காமிராவோடு தனக்கான நட்பு வட்டங்களோடு வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டான்...

இதில் நாம் என்ன கற்றுக்கொண்டு செய்திட முடியும்?...

 தனக்கு பிடித்த வேலைகளை இன்பத்தோடு செய்திடும் பொழுது துன்பங்கள் வந்தாலும் என்றோ ஒருநாள் அதற்கான பலன் கிட்டியே தீரும்.

பறவைகளும் விலங்குகளும் மனிதர்களை விட தன்னை தேடி வருபவர்களை அலாதி அன்பு கொண்டு அரவணைக்கும். மாற்றி தடைகளாக இல்லாமல் நாம் இருக்கின்றோம் என்கிற இரு கரம் கொடுத்து தோழமை காப்போம்

இன்றைய சமூக வலைத்தளங்களில் இது போன்ற படைப்புகளை அசாதாரணமாக கடந்து சென்று விடுகிறோம்அவர்களோடு தோள்தட்டி எப்பொழுதும் கூட நிற்க முடியாவிட்டாலும் அன்பென்ற வார்த்தைகள் உதிர்த்து அவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்துவோம்...

அங்கீகரிப்புகளுடன் வளரும் பிரசன்னாவின் வளர்ச்சிகளை காண

#ஆவலோடு_ நான்

வீரா வீகா

 

 

17.K2K-00066

 பார்வை

சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் மாறன், ரத்த வெள்ளத்தில் இருந்த பல்லவியின் விவரங்களை அக்கம் பக்கத்திலிருந்த நபர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். கொலை நடந்த இடத்தில் ஒரு விசிட்டிங் கார்டு கிடைத்தது. அதில் அதே ஏரியாவில் இருக்கும் மொபைல் ஷோரூமின் விவரங்கள் இருந்தது. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பல்லவியின் தோழி, "அய்யோஅநியாயமா உன்ன கொன்னுட்டாங்களே" என்று கண்ணீர்மல்க புலம்பினாள்.

மாறன் அவளை விசாரித்த போது, வினோத் என்பவன்மீது சந்தேகம் உள்ளதென்றாள். வினோத், ஒரு மொபைல் ஷோ ரூமில் பணியாற்றுபவன் என்றும், அவன் ரொம்ப நாளாகப் பல்லவியைப் பின்தொடர்ந்தான் என்றும் சொன்னாள். மாறன் அனைத்தையும் கணக்கு போட்டு, அந்த கடைக்கு 10 மணி அளவில் சென்றார்.

கடையின் உரிமையாளரை அழைத்து வினோத் யார் என்று கேட்டார்?

"அதோ குள்ளமாக இருப்பவன் தான் வினோத்" என்றார்.

மாறன், "நீ தான் வினோத்தா...? ஏன் திருட்டு முழி முழிக்குற…!" என்று விரைப்பாகக் கேட்டார்.

"சார்... என் பார்வையே அப்படிதான் சார், திருட்டுப்பார்வை மாதிரியிருக்கும்" என்று நகைத்துக்கொண்டே சொன்னான்.

"பல்லவிய கொன்னுட்டு இங்க எதுவுமே தெரியாத மாதிரி இருக்கியா. வெளிய வாடா ராஸ்கல்" என்று அவனை வெளியே இழுத்தார்.

"அய்யோ... என்ன சார் சொல்றீங்க... பல்லவி இறந்துட்டாளா? எப்போ எப்படி?" என்று விக்கிவிக்கி அழுதுக்கொண்டே கேட்டான்.

"நடிக்காத டா... வண்டில ஏறு... உன்னையெல்லாம் விசாரிக்குற மாதிரி விசாரிச்சா தான் உண்மை வரும்" என்று அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரிக்க தொடங்கினார் மாறன்.

வினோத் பல்லவியைப் பின்தொடர்ந்தது, காதலிக்க வைக்க செய்த செயல்களை எல்லாம் சொன்னான்.

"நேத்துகூட, நாளைக்கு ஈவ்னிங் 6 மணிக்கு நல்ல செய்தி சொல்றேனு சொல்லிட்டு போனா சார். நான் அவள கொல்லல. நம்புங்க சார்" என்று மாறனின் கால்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.

"அப்படினா. உன் கடையோட இந்த விசிட்டிங் கார்டு எப்டிடா அவ வீட்ல இருந்துச்சு?" என்றார் மாறன்.

"சார்... இது விமலோட கார்டு... அவன் தான் "வி" னு எழுத்த கார்டு பின்னாடி எழுதுவான்" என்றான்.

விமல், வினோத்துடன் வேலை செய்பவன். அடுத்த 15 நிமிடங்களில் விமல் காவல் நிலையத்தில் இருந்தான். விமல் பார்க்க வாட்ட சாட்டமாய் இருந்தான், வினோத்தின் அவல நிலையைப் பார்த்து நடுங்கினான். மாறனுக்கு மிகவும் சிரமம் தரவில்லை, ஒரே அடியில் "நான் உண்மையைச் சொல்லிடுறேன்" என்றான்.

"நானும் பல்லவியைக் காதலிச்சேன் சார். இந்த வினோத் முந்திக்கிட்டான். பல்லவிக்கு வினோத்தை பிடிக்காதுனு தெரியும். ஆனா நேத்து பல்லவி வினோத் கிட்ட பேசுனத பார்த்து, அவ கண்டிப்பா ஓகே சொல்லிடுவானு நெனச்சேன். எனக்கு கிடைக்காதவ யாருக்கும் கிடைக்ககூடாதுனு முடிவு பண்ணி, அவள நேத்து நைட் கொலை செய்தேன். பழி வினோத் மேல் விழுந்துடும்முனு நெனச்சேன் சார்." என்றான் விமல்.

"ஹ்ம்ம்...இவன் இப்பவும் திருட்டுமுழி முழிக்கிறானே. இவன் பார்வையே இப்படிதான் போல" என்று வினோத்தைப் பார்த்து மனதிற்குள் சொல்லிக்கொண்டார் மாறன்.

நீதி: ஒருவரின் பார்வையை வைத்து அவரை எடை போட கூடாது.

-GD

 

 

18.K2K- 00067

 ஆதவன் பார்வை

      ஒரு கணவன் மனைவியின் படம் இது. இளம் பிள்ளைகளும் வய தான பெற்றோரும் உள்ளவீட்டில் கரோன காலத்தில் டாஸ்மாக் அவசியமா என்று கேட்ட மனைவியை கணவன் ஆத்திரத்தோடு அறையும் காட்சி இது.

      இனியன் பார்வை

ஒரு சகோதர சகோதரியின் படமாக இது இருக்க வேண்டும். கல்லூரியில் பயிலும தன் சகோதரியை ஒர் ஆடவனோடு பார்த்த அச் சகோதரன் அது பற்றி அவளிடம் கேட்ட போது அவள் மறு மொழியில் கோபமுற்று அறைவது போல இப்படம் உள்ளது.

    ஈஸ்வரன் பார்வை.

          ஒரு பெண் மீது ஒரு தலைக் காதல் கொண்ட ஒர் ஆணின் படமாக இது இருக்க வேண்டும். பல நாள் தொடர்ந்தும் பல முறை முயன்றும் அவனைப் புறக்கணித்த அவள் பொறுக்க மாட்டாது அவனது பெற்றோரிடம் புகார் கூறியதால் ஏற்பட்ட கோபததின் விளைவு தான் அந்த அறை.

      அலுவலக தலைமை அதிகாரியின் பார்வை.

   இந்த அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர பணிக்குவந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களில் இந்த நால்வரும் வயதால், கல்வித் தகுதி யால், தோற்றத்தால், நேர் முகததேர்வு மதிப்பெண் களால் சம நிலையில் உள்ளனர். எனவே படம் பார்த்து கருத்துக் கூறும் இந்த உள பகுப்பாய்வு தேர்வு வைக்கப் பட்டது. இதில் அருணன் பார்வை நேர்மறை கண்ணோட்டம் கொண்டதாகவும் ஏணையோர் கருத்துகள எதிர் மறைக் கண்ணோட்டம் கொண்டதாகவும் இருப்பதால் அருணனே இப்பதவிக்கு சரியான தேர்வு என்பதே என் பார்வை.

ஆக்கியோன்: அன்பழகன்

 

 

19.K2k 00068

 முருகன் ஒரு கிராமத்தில் பிறந்தவன், கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து

வளர்ந்தவன். அவன் தாயிடம் சிறு வயதில் இருந்தே அவர்கள் கண்களைப் பார்த்து பேசுபவன், அது பாசப் பார்வையாக இருந்தது. அவன் தந்தை வயல் வெளியில் இருந்து வந்தவுடன் அவர்களைப் பார்த்து அவன் பேசும் போது அறிவுப் பார்வையாக இருந்தது.

எப்போது பள்ளி படிப்பை முடித்தானோ அப்பவே அவன் தலை எழுத்தும் மாறியது. கல்லூரி வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்தாள்.

அவளுடைய பார்வையோ கடைக்கண் பார்வை; அதில் ஏமாந்து விட்டான், அவள் அழகிற்கும் பேச்சிற்கும் ஏமாந்து இருந்தவனால் தன் பெற்றோர் ஆசிரியர் கண்களைப் பார்த்து அவனால் பேச முடியவில்லை.

தன்னைச் சுற்றியுள்ள தீய நட்பு பழக்க வழக்கத்தால் நண்பர்கள் பெண்களைப் பார்க்கும் பார்வை காமப்பார்வையாக இருந்தது.

ஏனோதானோ என்று ஒரு வழியாக கல்லூரி படிப்பை முடித்தான்.

பின்பு அவனுடைய தாய்மாமா வழிகாட்டுதலினால் ஆசிரிய பயிற்சி படிக்கச் சென்றான், நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். இந்த நிலையில் ஆசிரிய பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கே அவன் கண்டது காது கேளாதவர், மற்றும் வாய் பேசாதவர், பள்ளி மனநிலை, பாதிக்கப்பட்டடோர் பள்ளி, ஊனமுற்றோர் பள்ளி, இறுதியில் அவன் பார்த்தது பார்வைக் குறைபாடு உடைய பள்ளி.

அப்போது தான் பார்வையின் அர்த்தம் புரிந்தது, கடவுள் நமக்கு கொடுத்த முழுமையான உடலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என முடிவு எடுத்தான்.

J. JEYARAJ

 

 

20.K2K 00069 

 பார்வை

ஆதவனின் கதிர்கள் நிறைக்கும் முன்னே சாம்பிராணி வானனை பாக்யாவின் வீட்டை நிறைத்திருந்தது. சாளரத்தை திறந்து பார்த்தால் பக்கத்து வீட்டு நதியா செடிகளுக்கு உரமிட்டுக் கொண்டிருந்தாள். 

நதியாவின் இதழ்களில் தவழ்ந்த புன்னகை, கண்கள் தூரம் என்று எண்ணியதோ என்னவோ! ஒளியிழந்த கண்கள் சிவந்து தான் தூங்கவில்லை என பறையடித்துக் கொண்டிருந்தது. கலைந்த கூந்தலை ஒதுக்கியவள் செடிகளுக்கு தண்ணீர் இறைத்து விட்டு குளிக்க ஓடினாள்.

"இந்த நதியாக்கு என்ன குறை. ஆனாலும் இரவெல்லாம் இவள் உறங்காமல் உழைக்கிறாள்" பாக்யாவின் பெருமூச்சு காற்றோடு கலந்தது.

 

ஒரு மெதுவடை இரண்டு இட்லிகளை அவசரமாக சாப்பிட்டு விட்டு வேலைக்குக் கிளம்பிய நதியாவைப் பார்த்த அவளது அன்னையின் முகத்தில் கேள்விகள்.

"இவள் உறங்கவில்லை போலிருக்கிறதே. அந்த நந்தன் இவள் மனதை இப்படிக் காயப்படுத்தி இருக்க வேண்டாம். இறைவா! என் மகளின் வாழ்வை பிரகாசமாக்கு"

காலையில் தோட்டத்தில் கசங்கிய பூவாக பொலிவிழந்திருந்த நதியா இப்போது மாசற்று வடித்த களிமண் பொம்மையாக மிளிர்ந்தாள். ஒரு ஆசிரியைக்கு தோற்றம் முக்கியம் தானே!

வாண்டுகளின் பார்வையில் வண்ண மீனாக ஓடினால் தானே அவர்கள் அவள் பேச்சை கேட்கிறார்கள். அவர்களின் பாரவையில் அவள் இரு மாமேதை… Haha... தனக்குள் சிரித்தாள்.

ஆனால் நந்தனின் பார்வையில் அவள் பகல் நேரங்களில் விண்மீன்களைப் பிடிக்க முயலும் எதிர்காலமற்ற ஒரு பேதை மட்டுமை.

"ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி" யின் சிறந்த ஆசிரியை விருதை வாங்க மிஸ். நதியாவை மேடைக்கு அழைக்கிறேன், 

கரவொலி நனவுக்கு இழுத்து வர பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மேடைக்கு நடந்தவளின் மனம் அவளது காதுகளில் உரைத்தது அந்த சத்தத்தில் உங்களுக்கு கேட்கவில்லைத்தானே?!

"நீ உன் பார்வையில் யார்? கண்கள் பிரகாசிக்க "நான் ஒரு வெற்றிகரமான ஆசிரியை" முணுமுணுத்தாள்.

நீதி - பார்வை என்பது பார்ப்பவரின் கோணத்திலிருந்து தெரிவது. எனவே மற்றவரின். பார்வையை உங்களின் நம்பகத்தன்மை ஆக்காதீர்கள். உங்களுக்கு நீங்கள் யார் என்று அடிக்கடி கேட்டறியுங்கள்.

 

- Vilia

 

21.K2K-00078

 பார்வை

இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த, கடிதத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள் சுதா.

"அன்புள்ள சுதா, நான் நலமாக உள்ளேன்! நீ நலமாக உள்ளாயா? உன்னைப் பார்த்து நீண்ட காலமாகி விட்டது. பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்தோம். அடிக்கடி உன்னைப் பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன."

கடிதத்தை வாசித்துக்கொண்டிருக்கையில்,

"வீட்டுக் கூரையில் கல்லொன்று திடீரென விழுந்தது" பயந்துப் போனவள். கடிதத்தினை தலையணையின் கீழ் வைத்துவிட்டு, அச்சத்தோடு வெளியே சென்றுப் பார்த்தாள். தூரத்தில் யாரோ! கையசைத்து அழைப்பதுப் போல இருந்தது.

 தனிமையில் வாடினாள். திருமணம் முடித்து, மூன்று வருடங்கள் கடந்துவிட்டன.

  " என்ன பாவத்த பன்னி தொலைச்சாலோ! வயித்துல இன்னும் புழுப்பூச்சி கூட உண்டாகல"

என்று அடிக்கடி கூறும் மாமியாரின் வார்த்தைகளோ! நடுயாமத்தில் காதோரம் வந்துப்போனது; நாளை திரும்பி வருவேன், என்றுக்கூறி, வெளியூர் சென்ற கணவனோ! மூன்று நாட்கள் கடந்து விட்டன, இன்னும் வீடு திரும்பவில்லை. 

அவனது தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...

கணவனுக்கு என்ன நடந்தது? என்று தெரியாமல், பயந்துப் போனவள் அன்றிறவு, தன்னையறியாமலே தூங்கிவிட்டாள்.

அதிகாலை 5மணிக்கெல்லாம் விழித்துக்கொண்டவள். 'தன் கணவன் இல்லாத' இம்மூன்று நாட்களும், வீட்டில் நடந்தவற்றை நினைத்துக் கொண்டு கட்டிலில் உறக்கமின்றி புரண்டுப் படுத்தவளது, கைகளில் கடிதம் சிக்கியன.

"என் மனதில் நெடுங்காலம் இருப்பதை, கடிதத்தில் சொல்ல விரும்பவில்லை. இம்மாதம் 24ஆம் திகதி 'என் நெருங்கிய நண்பனின் திருமணம் உன் ஊரிலுள்ள', "வர்ஷா" திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அவ்விழா முடிந்தவுடன், உன் வீட்டிற்கு வருகிறேன். என்று சுருக்கமாக எழுதியிருந்தது.

சுமார் 20வருடங்களாக சுதாவும், சுரேனும் ஒன்றாக படித்தார்கள். சுதா திருமணத்திற்குப் பிறகு, தன் நண்பனை சந்திக்கவே இல்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஒரு பெண்னை காதலிப்பதாகவும், நேரம் வரும்போது சொல்வதாகவும் சுதாவிடம் கூறியிருந்தான். 

பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும் போதே..., சுதாவுக்கு சொந்த மாமாவையே! திருமணம் முடித்து, வைத்தார்கள். அவளின் படிப்பும் திருமணத்திற்குப் பின் தடைப்பட்டது.

கடிதத்தைப் படித்து முடித்தவள், சுரேன் என்ன? கூற விளைகிறான். என்று அறியாது சிந்தித்துக் கொண்டிருந்தாள்...

அன்று 6மணியளவில், கதவை யாரோ! தட்டும் சத்தம் கேட்டவள். தனது கணவனாக இருக்க கூடும். என நினைத்து வேகமாக ஓடிப்போய் திறந்தாள்.

" அதிர்ந்துப் போனாள்". பாதுகாப்பு மூக்குக் கவசதினை அணிந்தவாறு சுரேனை கண்டாள். கடிதத்தில் 24ஆம் திகதி வருகிறேன். என்று கூறியவன் திடீரென வந்து, நின்றதைப் பார்தவள். உள்ளே வா! என்றுக்கூட அவனை அழைக்காது அப்படியே! நின்றாள். அவன் தோலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்ததும், கல்லாக நின்றவள், குழந்தையை கையில் ஏந்தியவாறு உள்ளே சென்றாள்.

அன்றிரவு.... தனியாக இருக்க பயந்தவள். ராணி அக்கா வீட்டிற்கு சென்றாள்.

"அக்கா உங்க மகள... இன்னைக்கு என்னோட தூங்க அனுப் முடியுமா?"

'ஏன்டியம்மா'

"மூனு நாளா தனியா தானே...

தூங்குன இப்போ!!! என்ன?

தொனைக்கு என் புள்ளைய கேக்குற"

'சரி சரி...

கூட்டிட்டு போ'

சுரேனிடம் எதுவும் பேசவில்லை. சுதா ஏதோவொரு பயத்தில் இருக்கிறாள். என்பதை அவளின் தடுமாற்றத்தைப் பார்த்து அறிந்துக்கொண்டான். சுரேனது ஓரிரு வார்த்தைகளுக்கு பதில் அளித்தவள். குழந்தைப் பற்றியோ! அவனது மனைவி பற்றியோ! எதுவும் கேட்கவில்லை... எல்லாம் தெரிந்தது போல முகத்தினை, வைத்துக்கொண்டு குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தாள்.

"மேசையில சாப்பாடு இருக்கு"

அவளவுதான் சுரேனின் குழந்தையை தூக்கிக் கொண்டு, அறைக்குள் சென்று உள்ளே மூடிவிட்டாள். குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த, ராணி அக்கா மகளும் தூங்கிவிட்டாள். குழந்தை பாக்கியமற்ற, அவளோ! சுரேனின் குழந்தையை தன் மார்புடன், அணைத்தவாறு தூங்கிவிட்டாள்.

10மணியிருக்கும் அவளது அறைக் கதவை, யாரோ! தட்டுவதுப் போலயிருந்தது. பிரம்மையாக இருக்கும் என நினைத்தாள்.

சுதா கதவை திற...

புள்ளைங்க தூங்கிட்டாங்கலா!

ஓங்கிட்ட கொஞ்சம் பேசனு"

சுரேனின் இவ்வார்த்தைகளை கேட்டதும் பயந்தப் போனாள்.

"ஏன்?

இப்போ! ஒன்னும் பேசயில்ல"

'நா காலையில பேசுறே'

அவளுடைய வார்த்தையில் இருந்த பயத்தினை உணர்ந்தான் சுரேன்.

'சுதா ஒன்னோட பயோ! புரிது. ஆனா ஓங்கிட்ட நா பேச வேண்டிய கட்டாயத்துல இருக்கே.  கதவ தெற" என்றான்.

"நீ ஏதோ திட்டோ! தீட்டிட்ட ...

தயவு செஞ்சி போய்டு. காலையில பேசிக்கலா என்றாள்.

அவள், அவன் கூறிய எதையும் பொருட்ப்படுத்தவில்லை. முடிவாக கூறினாள்இப்போது உன்னிடம் பேச முடியாது என்று மீண்டும்! மீண்டும்!

சுதா, உன்னிடம் பேச வேண்டும், என்பதை மட்டுமே சொல்லிக் கத்தினான்.

திடீரென 'பலம் கொண்ட யானையொன்று மண்ணில் வீழ்ந்து, துடிப்பது போல ஒரு சத்தம்' பயத்துடன் கதவை திறந்துப் பார்த்தாள்.

சுரேன் தரையில் வீழ்ந்துக் கிடந்தான். என்ன செய்வது என்று தெரியாமல், "சுரேன் என்னாச்சி ஒனக்கு எழுந்திடு"

என்று அவன் கைப்பிடித்து, கதிரையில் உட்கார வைத்தேன்.

அவன் பேச ஆரம்பித்தான், சுதா உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, இரண்டாம் வருட மாணவி ப்ரியாவை நான் காதலித்தேன், அவளும் என்னை காதலித்தாள், இருவரின் காதலும், யாருக்கும் தெரியாமல் மலர்ந்தது, அவளின் பெற்றோரை எதிர்த்து திருமணமும் முடித்துக்கொண்டோம். 2மாதங்களுக்கு முன்பு, எனக்கு கொரோனா என்ற தொற்றுநோய் இருப்பதாக உறுதிச் செய்யப்பட்டது. நான் தனியாக மருத்துவமனையில் 14நாட்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று, வீடு திரும்பினேன். என்னுடைய மனைவி என்னைவிட்டு மனதளவில் தூரமாகினாள். என்னை திருமணம் முடித்ததால், தன் வாழ்க்கையே! நாசமாகிப் போனதாக கூறி அழுதாள். அடுத்தநாள் காலை அவளது பெற்றோர்கள், என் அனுமதியின்றி என் மனைவியை உடனழைத்து சென்றனர். நானும் முடிந்தளவு, என் குழந்தைக்கு ஒரு தாய் வேண்டும், நான்தான் தொற்றுக்கு உள்ளாகியுள்ளேன். நம் பிள்ளைக்காக போய்விடாதே! நான் ஒரு ஓரமாக இவ்வீட்டில் வாழ்ந்து விடுகிறேன் என்று காலில் விழுந்து கெஞ்சினேன். ஆனால் அவளோ பச்சக்குழந்தை முகத்தை பார்த்தும்கூட மனமிரங்காது சென்றுவிட்டாள். என்னைப் போல தாயில்லாது தவிக்கும், என் குழந்தையை பார்க்கும்போது ஒவ்வொரு நாளும் உள்ளம் வலிக்கிறது என்றான்.

கதவை யாரோ! தட்டும் சத்தம் கேட்டது, திறந்துப் பார்த்தவள் கட்டியணைத்து அழுதாள். சுரேனை பார்த்து! யார்? என்று கேட்டபோது... தன் கணவனிடம் நடந்தவற்றை கூறினாள்சுதாவின் கணவன் இரவென்றும் பாராது சுரேனை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தான்.

அடுத்தநாள் காலை நானும் எனது கணவனும், குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று, சுரேனைப் பார்த்தோம். சுதா எனக்கொரு உதவி செய்வாயா? என் குழந்தையை உன் குழந்தையாக வளர்க்க முடியுமா? என்றான். குழந்தையில்லாத எனக்கோ! இறைவன் கொடுத்த வரம் போலயிருந்தது. கணவனின் அனுமதியுடன் குழந்தையை சுரேனின் கையிலிருந்து வாங்கினேன்.

அன்றிலிருந்து என் குழந்தையாகவே! வளர்த்தேன். ஒருநாள் சுரேன் மீண்டும் கொரோனா தொற்றில் இறந்துவிட்டதாக, தொலைப்பேசி அழைப்பொன்று வந்தது

என் கணவனிடம் சுரேனைப் பற்றி மீண்டும் சொல்லியழுதேன், சுரேனை தவறாக புரிந்துக்கொண்டேன்மருத்துவமனையில் அவன் குழந்தையை நான் கையில், ஏந்தியபோது அவன் கண்கள் என்னைப் பார்த்த "பார்வை" ஆயிரம் கதைகளை சொல்லிவிட்டுச் சென்றன.

நிலையானது அன்பு மட்டுமே... ஒருவரின் பார்வையை வைத்து தவறாக நினைத்துவிடக் கூடாது.

                                         நன்றிகள்

பரமசிவம் இந்துஜா

நுவரெலியா

இலங்கை.

sabaragamuwa university of srilanka

 

 

22.K2K id - 00079

 பார்வை

அடையாள எண்: வழக்கம்போல் சரியான நேரத்துக்கு பேருந்து வந்துநின்றது. ஏனோ கயல் ஏறுவதற்கு தயங்கினாள், ஆனாலும் இப்போது ஏறினால்தான் சரியான நேரத்துக்கு அலுவலகம் செல்ல இயலும்; சற்றே யோசனையுடன் ஏறிவிட்டாள், இருபது வயது பருவப்பெண்ணான கயல் பிரபல துணிக்கடையில் விற்பனைப்பிரிவில் பணிபுரிகிறாள்.

'தேனாம்பேட்டை ஒண்ணு ...'டிக்கெட் கேட்டதும் அவளருகே வந்தார் நடத்துர். வழக்கம்போல் தவறாமல் அவளை உற்றுப்பார்த்தபடியே பயணச்சீட்டை கொடுத்தார். கயலின் முகத்தில் வெறுப்புத் தெரிந்தது, சேநாகரிகமில்லாத ஜென்மம் ...முன்னபின்ன பெண்ணை பார்த்ததே இல்லையா... அப்படியென்ன ஆளை விழுங்கற மாதிரி பார்வை, இந்த ஆள் பார்வையை தவிர்க்கறதுக்காகவே பஸ்ஸை மிஸ் பண்ணணும்னு நினைச்சேன், ஆனா முடியலையே... சற்றே ஒதுங்கி நின்றாள்.

ஆம் ...கயல் தினமும் இந்த பேருந்தில் ஏறியதும் அத்தனை கூட்ட நெரிசலிலும் இவளருகே வந்து நடத்துநர் உற்றுப் பார்ப்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது.  ரோட்டோர ரோமியோக்களை கூட சமாளித்து விடலாம், ஆனால் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நடத்துநரே தவறாக பார்த்தால் என்ன செய்வதுஅவளும் இந்த பேருந்தை விட்டுவிடலாம் என நினைப்பாள். ஆனால் இதில் ஏறினால்தான் சரியான நேரத்துக்கு அலுவலகம் செல்ல முடிகிறது. இதை தவறவிட்டால் அரைமணி நேரம் தாமதமாகத்தான் அலுவலகம் செல்ல இயலும், வேலைக்கென்று செல்லத் தொடங்கி விட்டாலே பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. உடம்பெல்லாம் கூசுவதைப் போன்ற உணர்வுடன் தள்ளி நின்றாள்.

"இப்படி வாம்மா... ஏன் நடுவுல நின்னுகிட்டு கஷ்டப்படற…" பெரியவரின் கனிவான பார்வையும் குரலும் கயலை ஈர்க்க பார்வையால் நன்றி சொல்லி அந்தப்பக்கமாய் நகர்ந்தாள். நடத்துநரும் நகர்ந்து விட்டார். கொஞ்சநேரம்தான்... பெரியவரின் கை வேண்டுமென்றே படக்கூடாத இடங்களில் பட்டது. பஸ்ஸில் ப்ரேக் போடாதபோதும் வேண்டுமென்றே சாய்ந்தார். திரும்பி பார்த்து முறைத்தபோது, இலேசாய் இளித்தார்.

"பாப்பா...கூட்டம் ஜாஸ்தி பஸ்சுல... கொஞ்சம் அப்படி இப்படின்னுதான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா..." மீண்டும் வேண்டுமென்றே சாய்ந்தார், கயலுக்கு கோபமேற செருப்பைக் கழட்ட கீழே குனிந்த வேளையில் பேருந்தை விசிலடித்து நிறுத்தினார் நடத்துர்.

"யோவ்... நீயெல்லாம் பெரிய மனுசனா... நானும் பார்த்துட்டே இருக்கேன்... இல்லாத சில்மிஷம் பண்றியே அந்தப் பொண்ணுகிட்ட... உம்பொண்ணு வயசுய்யா அதுக்குவயசான காலத்துல புத்தி ஏன் இப்படி போகுது... இறங்குய்யா முதல்ல..." பெரியவரை சட்டையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார். தலைகுனிந்து இறங்கிய பெரியவரை அருவெறுப்பாய் பார்த்தனர் அனைவரும்... கயல் பக்கம் திரும்பி பேசத்தொடங்கினார்

"அம்மாடி... என் தங்கச்சி ரெண்டு வருஷத்துக்கு முன்னால நோய் வந்து இறந்து போச்சுபார்க்க அச்சுஅசலா உன்னைப்போலவே இருக்கும்மாஅதான் பஸ்சுல நீ ஏறினா உன்னையே பார்த்துட்டிருப்பேன்...இனிமேலாவது ஏதாவது பிரச்சினைனா வாயைத் திறந்து சொல்லும்மா...கூடப்பொறந்த அண்ணனா நினைச்சுக்க... எல்லாம் நல்லதாவே நடக்கும்ரைட் போலாம்..."

நடத்துர் சொல்ல முதன்முறையாய் நேசப்பார்வையோடு நடத்துநரை நோக்கினாள் கயல்.

கருத்து: பார்வைகள் பலவிதம்; மனிதர்களும் பலவிதம். சிலநேரம் தவறான கணிப்பு நல்லவற்றை கண்ணிலிருந்து மறைத்துவிடும்.

கி. இலட்சுமி

 

 

23.K2K 00080

பார்வை

வியாழக்கிழமை மாலை நேரம், ஷீரடி சாயிபாபா கோயில் வாசல்; நிறையப் பிச்சைக்கார்கள் கையில் அலுமினியத் தட்டுடன் பிச்சைக்காகக் கையேந்தி நின்றார்கள். வியாழக்கிழமை என்பதால் நல்ல கூட்டம் அங்கு.

பார்வை 1

தங்கள் அருகில் புதிதாக வந்த அந்த வயதான பிச்சைக்காரனைக் கோபத்துடன் பார்த்தான் கொஞ்சம்

வயதில் சிறியவன்.

" எங்கேயிருந்தோ வந்து இன்னைக்கு நம்ப பக்கத்தில் வந்து உக்காந்துருச்சே இந்தக் கெழம். போச்சு போச்சு வருமானமெல்லாம் போச்சு".

மனதிற்குள் புலம்பினான் அந்த சக பிச்சைக்காரன்.

பார்வை 2

கோயிலில் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து பிச்சைக்காரர்களுக்கு வரிசையாகக் காசுகளைப் போட்டாள்

மாயா, வாராவாரம் வியாழக்கிழமை தவறாமல் வருவாள் குழந்தைப் பேறுக்காக வேண்டிக் கொள்ள மாயா வருகிறாள்...புதிய பிச்சைக்காரர் மேல் பார்வை படிந்தது.

" ஐயோ பாவம் வயதான காலத்தில் இப்படிப் பிச்சையெடுக்கிறாரே! பிள்ளை இல்லை போல இருக்கு",

என்று நினைத்துக் கொண்டே நடந்தாள்.

பார்வை 3

அவசர அவசரமாகக் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு க் கிளம்பினான் தசரதன். வெளியில் பிச்சைக்காரர்களுக்கு அளவாகக் காசுகளைப் போட்டு நடக்கும் போது அவரைப் பார்த்தான்.

"கையையும் காலையும் பாத்தா நல்லாத் தெம்பாத் தானே இருக்காரு இவரு. எங்கேயாவது போய் வயசுக்கு ஏத்த வேலை செஞ்சு பொழைக்கலாமே! ஏன் தான் இந்த வயசில் வந்து பிச்சை எடுக்கறாரோ?".

என்று புலம்பிக் கொண்டே நடந்தான் தசரதன், அவனுக்குத் தான் தெரியும் நடுத்தர வர்க்கத்தில் குடும்பத்தின் தேவைகளைத் தீர்க்க எவ்வளவு உழைத்தாலும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதன் கஷ்டம்.

பார்வை 4

முதியவருக்குத் தட்டில் காசைப் போட்டு நடக்க ஆரம்பித்தார்கள் அந்த வயதான தம்பதி.

" பாவம், நம்பளை மாதிரி பொறுப்பான பிள்ளைங்க இல்லை போலிருக்கு, வயதான காலத்தில இப்படிப் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆண்டவன் தள்ளிட்டான்.

இதுக்குத் தான் அந்தக் காலத்தில் இருந்தே நாமும் சிக்கனமாக் குடும்பம் நடத்திக் குழந்தைகளையும் நல்லாப் படிக்க வச்சோம், நம்ப குழந்தைகளும் நல்லாப் படிச்சு முன்னுக்கு வந்து நம்மையும் வயசான காலத்துல நல்லாப் பாத்துக்கறாங்க. அப்படி அவங்க நம்மை முதியோர் இல்லத்தில் விட்டாலும் நம்ம கையில் பணபலம் இருக்கு; பயப்படத் தேவையில்லை",

என்று பேசிக் கொண்டே நடந்து சென்று ஆட்டோவில் ஏறினார்கள்.

விதவிதமான பார்வைகள் அங்கு கிடைத்தன. பிச்சைக்காரர்களாக ஒருவேளை ணவிற்குப் போராடினாலும் கிடைத்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அன்பான பார்வை,ஒருவருக்கொருவர் நலம் கேட்டு விசாரிக்கும் பரிவான பார்வை,பொறாமையுடன் பார்க்கும் பார்வை,தனது இடத்தை மற்றவன் பறித்து விடுவானோ என்ற எச்சரிக்கை பார்வை எல்லாமே மாலை வரை கிடைத்தது அந்தப் புதிய பிச்சைக்காரருக்கு.விதவிதமான மனிதர்கள்,பணத்தை அலட்சியமாகத் தூக்கிப் போடுவோர்,அருகில் வந்து கருணையோடு போடுவோர் என்று

பிச்சை போடுபவர்களிலும் பல ரகம்.

மாலை இருட்ட ஆரம்பித்ததும் தனக்குக் கிடைத்த பணத்தை அங்கிருந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் அவர். அருகில் சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் எதிரே நிறுத்தப் பட்டிருந்த சொகுசுக் காரில் ஏறினார் அந்தப் பிச்சைக்காரப் பெரியவர்.

வேறு யாருமில்லை அவர், வளர்ந்து வரும் நடிகர், தனது புதிய படத்தில் பிச்சைக்கார வேடத்தில் நடிப்பதால் அந்த அனுபவத்தைக் கண்டுணர ஒரு நாள் பிச்சைக்கார வேடம் போட்டு

வெற்றிகரமாக நிறைவேற்றினார் எதிலும் பெர்ஃபெக்ஷனைத் தேடும் அந்த நடிகர்.

கருத்து

காட்சி ஒன்றே ஆனாலும் பார்வைகள் பலவிதமாகப் பார்ப்பவர்களின் மனநிலையையும் குணத்தையும் வைத்து அமைகிறது, உண்மை உள்ளுக்குள் ஒளிந்து நிற்கிறது.

 

புவனா

 

 

24.K2K 00081

பார்வை

நான் லீலா, எங்கள் ஊரிலிருக்கும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறேன, எங்கள் வகுப்பு மாணவிகளை, 'பார்வை' என்ற தலைப்பில் அவரவர் கற்பனைக்கேற்ப சிறுகதை எழுதிவருமாறு தமிழாசிரியை கூறியிருந்தார்.

என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, 'தொப்...' பென்ற சத்தம்கேட்டு கொல்லைப்புறத்திற்கு விரைந்தேன். எங்கள் வீட்டில் துணி துவைக்கும் ஆயா, ஒரு பிளாஸ்டிக் வாளியைக் கைத்தவறி கீழேபோட்டு உடைத்துவிட்டார். அதைப் பார்த்த என் பாட்டி, வாய்க்கு வந்தவாறு திட்டினார்.  இதனால் ஆயா கூனிக்குறுகி, "மன்னிச்சிருங்க தாயீ..." என்றார்.

தாழ்த்தப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த அந்த ஆயாவுக்கு ஐம்பது வயதிருக்கும். குட்டையாகவும் கருப்பாகவும் இருப்பார், வீட்டிற்க்குள் சேர்க்க மாட்டார்கள் என்பதால் பின்வழியாக வந்து செல்வார், எப்பொழுதாவது மீதமுள்ள பழைய சோற்றை அம்மா அவருக்குக் கொடுப்பதுண்டு. அதுவும் வேறு யாரும் பயன்படுத்தாத அலுமினிய பாத்திரத்தில்தான், அவர் பயன்படுத்தியதைத் தொட்டால் தீட்டாம், பாட்டியின் பேச்சு எரிச்சலூட்டியது.

 

இன்று, தெரியாமல் செய்தத் தவறுக்கு அத்தனை பேரின் முன்னால் திட்டியது அந்த ஆயாவுக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் என்பதையெண்ணி மனம் வருந்தியது.

நான் நேராக அம்மாவிடம் சென்று, "ஏம்மா... அது பழைய பிளாஸ்டிக் வாளிதானே!! அதுக்கு போய் இப்படி திட்டணுமா? அவங்களும் மனுஷி தானே... ஏன் யாருமே கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்கிறாங்க? தீண்டாமை ஒழிக்கணும்னு சொல்றதெல்லாம் வெறும் பேச்சுக்கு தானா...?"

அம்மா, "இங்க பாரு லீலா; இந்த உலகத்துல பல கேள்விகளுக்குப் பதில் கெடையாது. நிறம், மதம், சாதி இதெல்லாம் மனித இனத்தோட ஆணிவேர்ல கலந்தது...நம்மால ஒத்துக்கமுடியலனாலும், அமைதியா போறதுதான் நல்லதுநீ போய் படிக்கிற வேலையப் பாரு...", என்றாள்.

"என்னமோ... ரொம்ப கஷ்டமா இருக்கும்மா...மனுஷனே மனுஷனை இப்படி பாகுபாட்டோட பாக்கலாமா...? எனக்கே இப்படி இருக்கும்போது, அந்த ஆயாவோட பிள்ளைகளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்லமா?"என்றேன்.

அம்மா, " அந்த ஆயாவுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன், அவங்க புருஷன் சின்ன வயசுலயே விட்டுட்டுப் போயிட்டாரு, ஆயா தான் அவங்கள கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வெச்சாங்க. தாழ்த்தப்பட்டவங்கனு யாருமே அவங்களுக்கு வேலை கொடுக்க முன்வரல, கெஞ்சி கூத்தாடி கிடைச்ச வேலைய செய்வாங்க. சில சமயம் தாழ்த்தப்பட்டவங்க தானே... எதிர்த்து பேசமாட்டாங்கனு, சம்பளம்கூட தரமாட்டாங்க மேல்தட்டுக்காரங்க... ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாம இருந்திருக்காங்க. கணவர் இல்லன்னு பலர் தப்பாவும் பார்த்ததுண்டு. அவங்க அனுபவிச்ச கஷ்டங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.  ஆனா, தன்னை மாதிரி இல்லாம பிள்ளைங்க சமூகத்தில் அந்தஸ்தோட இருக்கணும்னு நல்லா படிக்கவெச்சாங்க. அவங்க பையன் 'எம்.பி. 'வும் பொண்ணு 'என்ஜினீயரி'ங்கும் படிக்கிறாங்க.பிள்ளைங்க வேலைல சேந்துட்டா ஆயாவோட கஷ்டம் தீந்துரும்." என்றபோது வாயடைத்து நின்றேன்.

அம்மா தொடர்ந்து, "இந்த உலகம் அவங்கள எப்படி பார்க்குதுன்னு அந்த ஆயா கவலப்பட்டதில்ல. அப்படி யோசிச்சிருந்தா இன்னிக்கி அவங்க வாழ்க்கைல முன்னேற்றமே இருந்திருக்காது.  இது அவங்கக்கிட்டிருந்து நாம் கத்துக்க வேண்டிய பாடம்" என்றபோது என் சிறுகதைக்கு வேண்டிய கருத்து கிடைத்ததாய் உணர்ந்தேன்.

" சாதிகள் இல்லையடி பாப்பா..." என்று என் தம்பி சத்தமாகப் படிப்பது கேட்டது.

கருத்து

சாதி, மதம், இனம், உயர்வு, தாழ்வுஇவையனைத்தும் வெளி உலகிற்கு மட்டுமே. உலகம் நம்மை எப்படி பார்க்கின்றது என்பதை விட நம்மை நாம் எப்படி பார்க்கின்றோம் என்பதில் தான் அடங்கியிருக்கிறது நம் எதிர்காலம்.

-Narmada

 

 

25.K2K-00084

பார்வை

லாக் டவுணில் வீட்டில் அடைந்திருக்கும் நான் அவ்வப்போது கடந்த கால நிகழ்வுகளை அசை போடுவதுண்டு!

சில நேரங்களில் அவை மகிழ்வைத் தரும், சில சமயங்களில் அவை கவலையும் தரும். சில தருணங்களில் மன நெகிழ்வைத தரும். என் மனதில் நேற்று அசை போட்ட நிகழ்ச்சி ஒரு சிறந்த படிப்பினை தந்த நிகழ்ச்சி, அது பரிகாசம், உதவி, பரிவு, பண்பு, புழங்காகிதம் மற்றும் படிப்பினை தந்த நிகழ்வு.

என் வீட்டின் அருகே அழகிய கோவில் ஒன்று. அம்மாவின் அரிப்பு தாங்காமல் கல்லூரி விடுமுறை நாட்களில் கோவில் செல்வதுண்டு. பக்தி இல்லை என்று சொல்ல வில்லை.

நான் கோவில் சென்ற போதெல்லாம் எத்தனையோ பேர் வருவதுண்டு; போவதுண்டு. ஒரு சராசரி இளைஞனைப் போல நான் கண் குளிர்ச்சை எதுவும் தேடுவதில்லை.

ஒரே ஒரு நபர் மட்டும் என் கவனத்தை ஈர்ப்பார். அவர் 6 அடி உயரம். சுமார் 50 வயது இருக்கலாம். திடகாத்திரமான உடம்பு. நெத்தியில் நாமம். இடுப்பில் வைணவ சம்பிரதாய வேட்டி. மார்பினின் துண்டைப் பரப்பி இருப்பார். சிறிய உப்புக் கல்லும் கறுப்பு எள்ளும் கலந்தது போன்ற வெண்முடியும் கறு முடியும் கலந்த டிரிம் செய்த தாடி. கையில் ஓர் ஊன்று கோல்.

நான் கோவில் சென்ற போதெல்லாம் அவர் தவறாமல் கோவிலில் விக்கிரகத்தின் முன்னால் ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பார்.

நான் அசை போட்ட நாள் நவம்பர் 21; என் பிறந்த நாள். அம்மாவின் நச்சரிப்பால் கோவில் அடைப்பதற்கு சற்று முன்பாக கோவில் கேட்டை அடைந்தேன் அவசரம் அவசரமாக.

அதே நேரத்தில் அந்த 6 அடி மனிதரும் கோவில் வாசலை அடைய, என் காலடி ஓசை கேட்டு, அவர் சொன்னார், “ஐயா அம்மா - நான் வர நேரமாயிப் போச்சு. என் கோலின் துணையோடு மெதுவா போனா, நடை சாத்திடுவாங்க; நீங்க என் கையைப் பிடிச்சிங்கன்னா, சட்டுண்ணு வந்திருவேன்ங்க.”

ஒரு நொடிப் பொழுது, கண் தெரியாத இவருக்கெல்லாம் சாமியைப் பாக்க அப்படி என்ன ஆசைன்னு பரிகாசப் பட்டேன். இவரால் என் நேரம் வீணாகுமேன்னு சற்று கோபமும் வந்தது.

கேட்டில் இருந்து 200 அடிகள் நடக்கணும்.

பரிகாசம், கோபம் எல்லாவற்றையும் உள் மனதில் ஆழப் புதைத்து விட்டு, அவர் கையைப் பிடித்தேன். என் உடம்பில் ஏதோ ஒரு சக்தி உள்ளூர உணர்ந்தேன்.

அம்மனிதர் நடந்த வேகம் ஓடுவது போல் இருந்தது. என் கையை வைத்தே நான் இளைஞன் என்று அறிந்து கொண்டார். ஓட்டத்திலும்ரொம்ப நன்றி தம்பிஎன்று சொன்னார்.

நடை சாத்த இரண்டொரு நிமிடங்கள் முன்பு கடவுளின் முன்பு சேர்ந்தோம். கரம் கூப்பி கடவுளை வணங்கினேன்.

அந்த மாமனிதர் பூசாரியிடம் வேண்டினார் - சாமி மாலை ஒன்றை இந்த தம்பி கழுத்தில் போடுங்கள் என்று.

சாமி மாலை என் கழுத்தில் விழ சாமியே என் இதயத்தில் குடி வந்தது போல் உணர்ந்தேன்; மகிழ்ந்தேன்.

நடை சாத்தப் பட்டது. அறியாப் பருவத்தால் கடவுள் விக்கிரகத்தைத் தான் இவரால் பாக்க முடியாதே; பின்ன ஏன் இவர் தினசரி கொவில் வரார்? ஏன் இந்த அவசரம் இன்று? என்றெல்லாம் என்பகுத்தறிவுகேட்டது என்னிடம். பயமறியா இளம் வயதால் அந்த வினாக்களை அவரிடமே கேட்டு விட்டேன்.

அவர் சொன்னார் - “தம்பி பார்வை எனக்குத்தான் இல்லையே தவிர கடவுளுக்கு உண்டே! நான் வந்து சாமியின் முன் நின்றால் அவர் பார்வை எல்லா பக்தர்கள் போல் என் மீதும் விழும் அல்லவா?

உன் இரண்டாம் கேள்வியின் பதில் - தம்பி இன்று என் பிறந்த நாள், அவசரமாய் ஓடி வந்தேன்!”

நான் அன்று கற்ற கல்வி என் வாழ்க்கையின் பார்வையை முற்றிலும் மாற்றி விட்டது.

Moral: ஒரே கோணத்தில் பார்ப்பதல்ல வாழ்க்கை. பல கோண பார்வையே சிறந்த வாழ்க்கை.

- சிறுத்தொண்டன் சு. லி. பாண்டியன்

 

 

 26.K2K-00086

பார்வை

காலையில் விழிப்பது முதல் இரவில் உறங்கும் வரை எத்தனையோ பார்வைகள் நம் மீது விழும் அதில் பதினைந்து நிமிடங்கள் 48 பார்வைகள் என் மீது விழுந்த தருணம் கீழ் வருமாறு

நான் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி என் பெயர் குஷி அன்று என் பள்ளியில் தமிழ் பாடம் நடத்தும் நேரத்தில் கதை சொல்லும் போட்டி நான் கலந்துகொண்டேன்

அந்த போட்டியில் நான் கூறிய கதை நீங்கள் வாசிக்க போகும் வரிகள்

தாயாக போகும் பெண்மணி பிரசவ வலியில் கத்தும் சத்தம் மருத்துவமனை எங்கும் எதிரொலிக்க தன் மனைவியின் கதறலை தாங்க முடியாமல் கண்கள் இல்லாத அந்த முகத்தில் கண்ணீர் துளிகள்

கண்ணீருடன் உதட்டில் புன்னகையும் சேர்ந்தது அவர் செவிகளுக்கு அந்த குழந்தையின் அழுகை சத்தம் ஒலித்ததும்

அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை அவர் மனைவி உயிர் பிரிந்த செய்தியால்

காதலுக்கு கண் இல்லை என்பதை நிரூபித்து என்னை மனம் முடித்தவள் இன்று என் மனம் முறிய எங்களை தனித்து விட்டு இறைவனடி சேர்ந்தாள் என தன் நாட்குறிப்பேட்டில் ஓட்டைகளாக பதிக்கிறார் பார்வையற்ற அந்த தந்தை கண்ணீருடன்

இருள் சூழ்ந்த என் வாழ்வை ஒளி மயமாக்கிய என் மனைவியின் இடத்தை நிரப்பி மேலும் வண்ணம் பூசி அழகு சேர்க்க என் மகள் இருக்கிறாள் அவளுக்காக தான் என் மிஞ்சிய வாழ் நாட்கள் என அந்த பிஞ்சுக்காக அர்ப்பணித்தார்

கண்ணும் இல்லை கண்ணாக இருந்த மனைவியும் இல்லை தன் குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற கவலை அவர் மனதில் அலையாக ஓயாமல் அடித்து

 கொண்டு இருந்தது

பார்வையற்றோர் வாழ்வின் பசிக்கு தாயாக இருந்து சோறூட்டுவது இசை தான்

அவரது வீடு கடற்கரை ஓரம் என்பதால் புல்லாங்குழல் விற்று தன் மகளை கவனித்து கொள்கிறார்

குழந்தை நிற்க நடக்க ஓட என நாட்கள் ஓடின ஐந்து ஆண்டுகள் கழித்து முதலாம் வகுப்புக்குள் நுழைகிறாள்

தாய் இல்லாவிட்டாலும் தந்தையின் மகத்தான வளர்ப்பில் அவளுக்கு சிறு வயது முதல் பக்குவம் அதிகம் பொறுப்பு மிகுந்த குழந்தை

ஒரு கையில் குழலும் மறு கையில் குழந்தையும் என திரிந்து காலத்தை கடத்திய தந்தையை பார்த்துக் கொள்ள அத்தனை ஆசை அந்த ஐந்து வயது சிறுமிக்கு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவி மாவட்டத்தில் முதல் இடம் என்று தொலைக்காட்சிகளில் செய்தி ஒலிக்க மிகுந்த ஆனந்தத்தில் தந்தை பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தந்தை செய்த முயற்சிகளும் மகள் செய்த பயிற்சிகளும் பல

காதல் என்ற பெயருக்கு கலங்கம் இடும் உறவுகளின் மீது மோகம் கொண்டு பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை கூட கொல்ல துணியும் அறக்க குணம் கொண்டவர்கள் இருப்பினும் இத்தனை கடினங்கள் மேற்கொண்டு மகளை ஆளாக்கி விட்டார் என ஊரே புகழ்ந்தது

கண்கள் இருந்தும் பார்வை அற்ற குருடர்களாய் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பற்றி யோசிக்காமல் தன் வாழ்க்கை துணையை விவாகரத்து என்ற பெயரில் பிரிந்து வாழ்கிறார்கள் ஆனால் அந்த குழந்தைகளின் நிலை என்றும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது அத்தகைய பெற்றோர் விழித்துக் கொள்ள வேண்டும்.

வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களை கடந்து இன்று மாவட்ட ஆட்சியர் பதவியில் நான் முதல் கையெழுத்து என் பெயர் குஷி.

அந்த பெண்ணின் நிகழ்கால நிகழ்வு என் எதிர்கால கனவு, ஆம் அந்த பார்வை அற்ற தந்தையின் குழந்தை தான் நான்.

என்று கூறி வகுப்பில் கதைசொல்லும் போட்டியை முடித்து வைத்தேன்......நன்றி!!!

மு. தீபக்

 

 

27.K2K00088

பார்வை...இவ்வுலகை காண்பதற்கு கடவுள் தந்த அற்புத வரம். அந்த அற்புத வரத்தை நல்ல விதமாகவோ அல்லது தீய விதமாகவோ பயன்படுத்தி வருகின்றனர் பலர். உலகை கண்ணால் மட்டும் பார்ப்பது பார்வையல்ல, அதை அறிவாலும் மனதாலும் நல்ல உணர்வோடு பார்ப்பதே பார்வை."பார்வை இல்லாதவர்களும் இவ்வுலகை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் அவர்களின் மனம் வழியாக.!!"பார்வைக்கு அர்த்தங்கள் பல உள்ளது. அதில் ஒன்று தான், "ஒரு மனிதன் ஒரு விஷயத்தைப் பார்க்கின்ற பார்வை அல்லது கோணம்". அந்த அர்த்தத்தைக் கொண்டு நடந்த ஒரு சம்பவத்தை நாம் கதையாக பார்க்கலாம்.

குமாரும் அவனது மனைவி சீதாவும் ஒரு  பெரிய வீட்டில் அவர்களது குழந்தை கீதாவோடு வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களது  திருமணம் காதல் திருமணம், வீட்டில் உள்ள அனைவர் சம்மதத்துடன் நடைபெற்ற ஒரு அழகான திருமணம்.அவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம்  ஆகின்றது,அவர்கள் இருவரும் தங்களது ஆறு மாத குழந்தை கீதாவோடு மகிழ்ச்சியான ஓர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.அவர்கள் பக்கத்து வீட்டில் ஒரு தம்பதியினர் புதிதாக வாடகைக்கு வந்தனர்,அவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து அங்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆனது.அவர்களுக்கும் குமார் - சீதா தம்பதிகளுக்கும் பேச்சுவார்த்தை இல்லை.ஏனெனில், குமாருக்கு அவர்கள் மீது நல்ல அபிப்ராயம் வரவில்லை.அதனால் மனைவி,குழந்தையைக்   கூட அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை.அவர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாது மற்றும் பார்ப்பதற்கே வினோதமாக  திருடர்கள் போல உள்ளனர் என்றெல்லாம் குமார் அவன் மனைவியிடம் கூறி அவர்களிடம் பேசக் கூடாது  என்றும் சொல்லி வைத்திருந்தான். மனைவி சீதாவும் குமார் கூறியதை கேட்டு அவர்களிடம் பழகாமல் இருந்தாள்.

அன்று ஒருநாள் மதிய வேளை, அவளது குழந்தை கீதாவுக்கு அருகில், சில பொம்மைகளை வைத்துவிட்டு கீதாவை விளையாடுமாறு கூறி, துவைத்த துணிகளை காய வைப்பதற்காக சீதா மாடிக்குச் சென்றாள். குமாரும் அவருடைய   அலுவலக வேலையாக வெளியே சென்றிருந்தார். அப்போது, தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தை கீதா, திடீரென்று அழும் சத்தம். அவர்களது வீடு பெரியதாக இருப்பதால் மாடியில் இருக்கும் சீதாவிற்கு குழந்தையின் அலறல் கேட்கவில்லை. அப்போது, பக்கத்து வீட்டுக்காரர் தனது வீட்டில் இருந்து கிளம்பிய போது குழந்தையின் அழுகையைக் கேட்டார். சற்று நேரம் பார்த்தார் குழந்தையின் அலறல் நிற்கவில்லை. பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தால், குழந்தையின் கையில் இரத்தம். அவர்,  அதிர்ச்சியில்   அக்குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள  மருத்துவமனைக்கு சென்று, கீதாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார்.பிறகு கீதாவுக்கு கையில் சிறிய கட்டு ஒன்று போடப்பட்டு கையில் வந்த இரத்தமும் நின்றது கீதாவின் அழுகையும் நின்றது. அவசரத்தில் வீட்டில், கீதாவின் பெற்றோர்களிடம் சொல்லாதது நினைவுக்கு வர, அவர் தன் மனைவிக்கு கைப்பேசியில் தொடர்புகொண்டு நடந்ததை கூறிவிட்டு,கீதாவின் பெற்றோர்களிடம் விஷயத்தைக் கூறுமாறு சொன்னார்.அந்த நேரத்தில் மாடியில் இருந்து வந்த சீதா குழந்தை அங்கு இல்லாததையும், அங்கே இரத்தத் துளிகள் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் கணவன் குமாரிடம் தொலைபேசியில் பேசி சீக்கிரம் வரச் சொன்னாள்.குமாரும் பதற்றத்துடன் வீட்டிற்கு  வர,சீதாவிடம் நடந்ததை கேட்டுக் கொண்டு இருந்தான்.அப்போது, பக்கத்து வீட்டில் உள்ளவர், குமாரின் வீட்டிற்கு வந்து, கீதா விளையாடும் போது  குழந்தையின் விளையாட்டு பொருளில் உள்ள கூர்மையான ஒன்று  கையில் பட்டதால் குழந்தைக்கு இப்படி ஆனது என நடந்த விஷயங்களை எல்லாம் அவர்களிடம் கூறினார்.பிறகு கீதாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் இருந்து பக்கத்து வீட்டுக்காரர் குமாரின் வீட்டிற்கு வந்து, குழந்தையை அவர்களிடம் கொடுத்தார். கீதாவுக்கு சிறிய காயம் தான் சரியாகி விடும் என்றும் கூறினார். குமாரும் சீதாவும் தாங்கள் செய்ததை எண்ணி மிகவும் வேதனை பட்டனர்.அந்த தம்பதிகளிடம் நன்றி கூறி, தாங்கள் தங்களது தோற்றத்தை பார்த்து தவறாக எண்ணியதற்கு மன்னிப்பும் கேட்டனர்.அவர்களும் மன்னித்து ஏற்றுக் கொண்டனர்.

கதையின் கருத்து:

ஒருவரின் தோற்றத்தையோ அல்லது அவர்களின் இடத்தையோ வைத்து பார்த்து அவர்களை எடை போடுவது தவறு. ஒருவரை அவர்களின் செயல்கள் மற்றும் குணத்தை வைத்து பார்க்க வேண்டும். நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.

அன்புடன்

ஜனனி பிரபா

 

 

28.K2K-00089

 

"பார்வை"

 

ஏழெட்டுபேர் நின்று தரிசனம் செய்தார்கள். அங்கு மனோவும் தன் குடும்பத்தாரோடு சேர்ந்து தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

 “.  தெனனாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! ... ...... கயிலை மலையானே போற்றி போற்றி...", என்று ஈசனை பார்த்து மந்திரம் கூறியபடி தீபாராதனை செய்து முடித்து கருவறையிலிருந்து வெளியே வந்தார் பூசாரி.

ஒரு கையில் தீபாராதனை தட்டை நீட்டிக் கொண்டபடி இன்னொரு கையில் அர்ச்சனை செய்த பொருளை, "இந்தாங்க அர்ச்சனைய வாங்கிக்கோங்க" என்று கூறி மனோவின் மனைவியிடம் கொடுத்தார் பூசாரி.

 பிறகு தரிசித்தவர்களுக்கு தீபத்தை காண்பித்த பூசாரி விபூதி குங்குமத்தையும் வழங்கிய வண்ணம் நின்று கொண்டிருந்தார்.

 அர்ச்சனையை பெற்றவுடன் தீபத்தை தொட்டு கும்பிட மனோவின் மனைவி எத்தனித்தபோது தீபத்தின் அருகே மனோ 500 ரூபாய் தாள் ஒன்றை எட்டி வைத்தார். பூசாரி அதனை பார்த்த மறுகணம் தட்டை அவர்கள் நிற்கும் பக்கம் நீட்டினார். பின்னர் திருநீறை அவர்கள் நெற்றியிலிட்டு ஆசிர்வதித்தார். பிறகு மனோ தன் 12 வயது மகனுக்கு பிறந்தநாள் என்று கூறினார். உடனே உள்ளே சென்று லிங்கத்தின் அடியிலிருந்த பூமாலை ஒன்றை எடுத்துவந்து அந்த பையனின் கழுத்தில் போட்டு திருநீறிட்டு ஆசிர்வதித்தார் அந்த பூசாரி. குடும்பத்தினர் அனைவருக்கும் லிங்கத்திலிருந்த பூ மற்றும் மாலையை வழங்கினார்.

பின்பு சன்னிதானத்தை சுற்றியதும் மனோவும் அவர்கள் குடும்பத்தாரும் கோயில் மண்டபத்தை சுற்ற ஆரம்பித்தார்கள். நவகிரகத்தை பார்த்ததும் ஒன்பது முறை சுற்றினார்கள். பிறகு கோயிலின் கொடிகம்பத்தை பார்த்ததும் அதன் அருகில் விழுந்து கும்பிட்டார்கள்.

 அங்கு கோயில் பிரசாதமாக சக்கரை பொங்கல் சிலர் வழங்கிக்கொண்டிருந்தனர். அதனை பார்த்ததும் அவர்கள் ஓடி சென்று ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு என்று வாங்கிக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்து உண்டுவிட்டு பின்பு கோயிலை விட்டு அவர்கள் காரில் ஏறி புறப்பட்டனர்.

 மனோவின் குடும்பத்தினர் தரிசனம் செய்யும் போது அங்கு முரளியும் தன் மனைவி மற்றும் நான்கு வயது மகளோடு சேர்ந்து தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அவர்கள் காணிக்கை ஏதும் கொடுக்கவில்லை தீபத்தை மட்டும் தொட்டு கும்பிட்டார்கள். தன் மகளுக்கு முரளியின் மனைவி தீபத்தை தொட்டு அவள் கண்ணிலொத்தினாள். பின்பு விபூதி குங்குமத்துக்கு கையேந்தினர்; பூசாரியும் வழங்கினார்.

 மனோ தன் மகனுக்கு பிறந்தநாள் என்று கூறியபோது நடந்த சம்பாஷணைகளை பார்த்தோம் அது போல முரளி தன் மகளுக்கும் பிறந்தநாள் என்று கூறினார். பூசாரி கையில் ஒரு ரோசாப்பூவும் சாமந்திப்பூவும் மீதமிருந்தது அதனை வழங்கினார். அதனையே பெரியதாய் பார்த்தவண்ணம் பெற்றுக்கொண்டார்கள். சன்னிதானத்தை சுற்றியதும் வெளியே வந்தார்கள் அப்போது முரளி எதர்ச்சியாக தன் வலது பக்கம் பார்த்தான்; அங்கு ஏதோ வயது முதிர்ந்த சிவ சித்தர் ஒருவர் தன் சீடர்கள் மூவருக்கு சிவ சரிதத்தை போதித்துக்கொண்டிருந்தார்.

 அந்த போதனையில் ஈசனையே கண்டார்கள் போலும் சீடர்கள் முகத்தில் அதிக பரவசம் காணப்பட்டது. ஆனால் சித்தரின் பார்வை ஒருகணம் முரளியின் மகள் மீது திரும்பியது. சிறுமி தன் தாயின் கையை பற்றியவாறு நடந்து சென்றுகொண்டிருந்தாள்.

உடனே "அம்மா என்ன தூக்கு ... என்ன தூக்கு ...", என்று தன் அம்மாவை அண்ணாந்து பார்த்து கூறினாள்.

 அவளும் தூக்கிக்கொண்டாள்; பிறகு மூவரும் கோயில் மண்டபத்தை சுற்றினார்கள். கோயில் மண்டபத்தை சுற்றும் போது விநாயகர் முருகன் இன்னும் பல லிங்கங்கள் இருந்தன அதனை பார்த்தவண்ணம் பக்தியோடு முரளியும் அவன் மனைவியும் நின்று வணங்கி சென்றனர். சிறுமி தன் தாய் தந்தை செய்வதை பார்த்து அவ்வாரே செய்வாள். கும்பிட வேண்டும் என்றால் கும்பிடுவாள் கண்மூட வேண்டும் என்றால் மூடுவாள்.

 ஒரு லிங்கத்தின் பக்கத்தில் சற்று பெரிய நந்தி ஒன்றை சிறுமி கண்டாள் உடனே தன் தாயின் இடுப்பிலிருந்து இறங்கி சென்று நந்தியின் கழுத்தை அணைத்துக்கொண்டு காதோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தாள், இதனை பார்த்த முரளிக்கும் அவன் மனைவிக்கும் முகத்தில் புன்னகை பூத்தது. அவளுக்கும் நந்திக்கும் சம்பாஷணை முடிந்ததும் அவளை அழைத்து சென்று நவகிரகத்துக்கு வந்தார்கள். அங்கு பக்தியோடு ஒரு முறை சுற்றிவிட்டு வந்தார்கள், பிறகு கோயில் கொடி கம்பத்தை வந்தடைந்தனர்.

கம்பத்தினருகில் அன்னதான உண்டியல் ஒன்றை முரளி பார்த்தவுடன் தன் சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அதில் போட்டான்.

 மனோவின் குடும்பம் எழுந்த பிறகு முரளியும் அவன் மனைவியும் விழுந்து கும்பிட்டு வணங்கினார்கள். சிறுமி அவர்கள் செய்வதை பார்த்து தானும் தரையில் படுத்து எழுந்தாள், சக்கரை பொங்கல் வழங்கும் இடத்தில் ஒரே ஆரவாரம் அதனை பார்த்து முரளி பின்னர் வாங்கலாம் என்று எண்ணியவாறு அந்த சிவ சித்தர் இருக்கும் இடத்திற்கு சென்றார்.

சித்தரை பார்த்து தன் மகளுக்கு பிறந்தநாள் என்று தெரிவித்தான் முரளி, பின்பு அவன் மகள் விழுந்து கும்பிட சித்தர் தன் சுருக்கு பையில் இருந்த திருநீறை எடுத்து அவன் மகள் நெற்றியிலிட்டு அசர்வதித்தார். முரளியும் அவன் மனைவியும் கூட திருநீறு பெற்றுக்கொண்டனர். பிறகு சித்தர்களின் சீடர்களாக சிறுது நேரம் அவர் அருகில் அமர்ந்து போதனைகளை கேட்டுக்கொண்டிருந்தனர்.

 சிறிது நேரத்திற்கு பிறகு மூவரும் புறப்பட்டனர். புறப்படுவதற்கு முன் மூன்று பேரும் அவரவர் தொன்னையில் சக்கரை பொங்கலை வாங்கி கொண்டனர். வீட்டுக்கு சென்று உண்ணலாம் என்று எண்ணியவாறு வெளியே வந்தார்கள். அங்கு மனோ காரில் ஏறி செல்வதை நாம் காணலாம்.

கோயில் வாசல் அருகில் பார்வையற்ற பிச்சைக்காரன் ஒருவன் அமர்ந்திருந்தான். பாவம் அவருக்கு பசி, பசி தான் அவர் உதட்டில் பேசியது, "அம்மா...! தாயே...! ஏதாது இருந்த கொடுங்கம்மா ரொம்ப பசிக்குது" என்றார். முரளி அவரை பார்த்தவுடன் தன் சட்டைப்பையில் மீதம் இருந்த பத்து ருபாய் தாள் எடுத்து வழங்கினான்.

 சிறுமி என்ன எண்ணினாள் என்று தெரியவில்லை அவரை பார்த்ததும் தன் கையிலிருந்த சக்கரை பொங்கல் தொன்னையை வழங்கினாள். அந்தக்கணம் கோயிலில் மணியோசை: உள்ளே சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் நடந்துக்கொண்டிருந்தது.

 இதனை பார்த்த முரளியும் அவன் மனைவியும் அவருக்கு அவர்களுடைய தொன்னையையும் வழங்கிவிட்டு பின்பு புறப்பட்டனர்.

 தையின் நீதி:

உணர்ச்சிகளின் உருவமே பார்வை. நாம் உணர்வதே பார்வையில் வெளிப்படுகிறது. அல்லது பார்ப்பது உணரப்படுகிறது.

இங்கு முரளியின் குடும்பம் பார்த்ததை மனோவின் குடும்பம் பார்க்காமல் தவறியது அவர்களின் உணர்வின் வெளிப்பாடே.

 

- விஷ்ணு வர்த்தன். ஜெ

 

 

29.K2K – 00093

 பார்வை

கீதா... 25 வயது பெண் என்ற போதும் அவளது எண்ணங்கள் அனைத்தும் அத்தனை பக்குவமானவை... அதற்கு முழு காரணம் அவளது அறிவு என்று மட்டும் சொல்லிவிட முடியாது அவள் படிக்கும் தத்துவவியலும் ஓர் காரணம்... கர்நாடக சங்கீதம், கவிதை, ஓவியம் என அத்தனை துறையிலும் ஆர்வம் இருந்த போதும் தத்துவத்தில் இருந்த பிடிப்பு அவற்றை மறக்கத்தான் செய்தது... காலை எட்டு மணி இருக்கும் 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது கல்லூரிக்கு செல்ல புறப்பட்டாள்... வீட்டை பூட்டிய பிறகே குடையின் நினைவு வர பூட்டிய கதைவ திறக்க மனமின்றி நடக்க தொடங்கினாள்... ஏதோ அவளது நல்ல நேரம் பங்குனி மாதத்திலும் அவளுக்கு இசைவாய் அன்னையின் சேலைக்குள் ஒளிந்து ஒளிந்து எட்டி பார்க்கும் குழந்தை போல மேகங்களின் இடையே ஒளிந்து ஒளிந்து இதம் தந்தது சூரியன்... அன்றைய அவளது பாடம் பார்வை பறிமாற்றத்தின் முக்கியத்துவம் பற்றி... ஏனோ அவள் மனம் பாடத்தில் நிலைக்கவில்லை... மனித பரிணாம வளர்ச்சி தொடங்கியதில் இருந்தே அவனின் பார்வைகளும் வேறுபட தொடங்கின என்பது மறுக்க முடியாத உண்மை... ஒரு சிட்டுக்குருவி பறந்து திரியும் போது ஓர் மழலையின் கண்களுக்கு அதின் குறு குறுப்பும்... ஓர் வாலிபனின் கண்களுக்கு தன் காதலியும்... ஓர் நடுத்தர  வயது இளைஞனுக்கு இரை தேட பறக்கும் தாயும்... ஓர் வயது முதிர்ந்தவர் கண்களுக்கு சிறை வாசம் அறியாத சிறுபிள்ளை போலும் தோன்றும்... இத்தனை சிறிய விஷயம் இவ்வளவு வித்தியாசமாக பார்க்கபடும் போது ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்கும் தன் கலாச்சாரத்திலேயே இல்லாத பழக்கத்தை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றதும் கீதாவிற்கு வந்த கோபத்திற்கு எல்லையே இல்லை... அப்பாவி பெற்றோர் என்ற போதும் மகளின் விஷயங்களில் கொஞ்சம் கரார்... இன்று பார்வை என்ற ஒரே வார்த்தையில் தான் செய்த தவறு உரைக்க வெட்கத்தில் தலை குனிந்தாள்.... அப்போதே சட்டென்று நினைவில் உரைத்தது தனது காதலன் விக்ரமின் பிடிவாதம்.... அவளை விடாமல் ஆறரை வருடங்கள் காதலித்து அவளையும் காதலிக்க வைத்தது அவனது பிடிவாதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு... அவளை விட ஆறு மாதம் சிறியவன் என்ற போதே அடுத்தவர் பற்றி கவலை படாதவன் இதை பற்றியா கவலை பட போகிறான் என உள்ளூர முணுமுணுத்தபடி அந்த நினைவில் இருந்து வெளிவர முயன்றாள்... இரவு எதிர்பார்த்தபடி விவாதம் தொடங்கியது... விவாதங்களும் சண்டைகளும் ஆசை முத்தங்களில் அடங்கி போவது வழக்கம் என்பதால் அவளை தன் புறம் இழுத்து கண்மணி மனித பார்வைகளின் மாற்றங்கள் மாறாதவை ஆனால் உன் மேலான என் காதல் அப்படி அல்லவேதன் மனதிற்கு சரி என தோன்றுவதை செய்பவனுக்கு மற்றவரின் பார்வை பற்றிய கவலை வரவே வராது... ஆனால் உனது விருப்பமே எனது முதற்கண் கடமை அல்லவா... எனவே என் கண்மணியின் விருப்பத்திற்கு இணங்க அவளை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு மனபூர்வ சம்மதம் என்றான் குறும்பாக... தனது ஆசைகளையும் விருப்பங்களையும் கடமை என்று நினைப்பவன் மேலான தனது பார்வையின் தவறை உணர்ந்து உள்ளூர மன்னிப்பு கேட்டு கொண்டு அவவனது கன்னங்களில் ஆசையாய் முத்தமிட்டு திருமண உற்சாகத்தில் உறங்கி போனாள் கீதா

Tresa Imaculate Johnson

 

 

 

 


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY