காதல்

1.K2K - 00002

காதல்

காதல் என்ற உணர்வு ஆண் பெண் இருவருக்கும் மட்டும் தான் என்று இல்லை..! காதல் என்பது அன்பின் உச்சபட்ச வெளிப்பாடு. நாம் உயிராய் மதிக்கும் பொருட்கள், இயற்க்கைகள், தாவரங்கள், உயிரினங்கள், கொள்கைகள் மீதும் காதல் வருவது உண்டு.இக்கதை ஆண் பெண் சம்பந்தப்பட்ட காதல் கதையல்ல..!! நிஜத்தின் சம்பவக் காதல் கதை..!!    

 திரு.வி. என்ற நகரில் வசிக்கும் பெண் அவள் பெயர் அம்மு     அவளுக்கு உயிரனங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவளுடைய பொழுதுபோக்கு செல்ல பிராணிகளுடன் விளையாடுவது தான் கோழி, ஆடு,மாடு,நாய், பூனை போன்ற விலங்குகளிடம் தனது அன்பையும் பாசத்தையும் பொழியக்கூடியவள். அவளுக்கு செல்ல பிராணிகள் என்றால் உயிர். ஒரு நாள் அவள் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டுருக்கும் போது அவளுடைய தோழன்கள் இருவர் 4 நாய்க்குட்டியை எடுத்துவந்து அவள் கையில் திணித்தனர். அவள் அதற்கு "எங்கேயிருந்து எடுத்துக்கிட்டு வந்தீங்க?" என்று கேட்டாள் அதற்கு அவர்கள் நாய்க்குட்டி இருக்குற திசையை நோக்கி கைக்காட்ட இருக்குமிடத்திற்கு போனார்கள்.அங்கே "குட்டிகள் மட்டும் தான் இருந்ததே தவிர நாய்க்குட்டியின் தாயை காணோமே" என்ற கேள்வியை தோழனிடம் கேட்டாள்.அதற்கு அவர்கள் இருவரும் "இறந்துவிட்டது".என கூறினார்கள். அவள் அதிர்ச்சியில் "எப்படி?" என கேட்டு கண்கலங்கினாள். அவர்கள் இருவரும் "பக்கத்து தெருவில் வேகமாய் ஒரு ஆட்டோ வந்து அதன் மேல் ஏற்றிக் கொன்றுவிட்டார்" எனக் கூறினார்கள் "எங்கே?" என்று கேட்டு அழுதாள். அதற்கு அவர்கள் "நீ அழாதே அதான் குட்டி இருக்கே வளர்த்துக்கோ" என்று சொன்னார்கள். ஆனால் அம்மு கேட்காமல் தாய் நாயை போய் பார்த்தால் அது இறந்து போய்  'ரத்தம் வழிந்து மித்து' கடந்தது அதைப் பார்த்து கதறி அழுதாள் "இதை நம்மளே அடக்கம் பண்ணலாம் பள்ளம் தோண்டுங்க" என கண்ணீரோடு கூறினால் அவர்கள் ஒரு மரத்தடியில் குழியைத்தோண்டினர். அம்மு அந்த சடலத்தை கையிலேந்தி அதற்கு ஒரு முத்தத்தை கொடுத்து நல்லபடியாக அடக்கம் செய்தனர்.பிறகு அம்மு அந்தக் குட்டியை வீட்டிற்கு எடுத்து வந்து 'ஜெர்ரி' என்ற பெயர் வைத்து நல்லபடியாக வளர்க்க ஆரம்பித்தாள்.பள்ளி கூடத்திற்கு போகும்போது கூட அதனிடம் போயிட்டு வரேன் ஜெர்ரி "சமத்தா வீட்டுல இருக்கனும். நான் சாயங்காலம் வந்துடுவேன் விளையாடலாம்" என்று சொல்லுவாள். ஜெர்ரி அதற்கு அம்மு மேல் தாவி "தன் பாசத்தை பொழியும், அம்மு அதற்கு கட்டியணைத்து முத்தம் ஒன்று தந்து விட்டு" செல்வாள்.அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அம்மு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.ஜெர்ரி அம்மு பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டது. பின்னர் அம்மு எழுந்து ஜெர்ரிக்கு அம்மா செய்த "சாதமும் பொரியலும்" கொடுத்துவிட்டு ஜெர்ரி கூட கண்ணாம்பூச்சி ஆட்டமும், பந்து வைத்து விளையாடினர்.ஜெர்ரியை குளிப்பாட்டி முடித்தவுடன் அதன் உடம்பில் மேல் உள்ள தண்ணீரை அம்மு மேல் படும்படிதான் உதிரும்.ஜெர்ரிக்கு அது மிகவும் பிடிக்கும் என்பதால் அதனை செய்யும். ஜெர்ரி எத்தனை தடவ சொல்லிருக்கேன் இப்படி பண்ணக்கூடாது என்று சினுங்கிக் கொண்டே சொல்லுவாள். உடனே ஜெர்ரி அம்முவை ஓரக்கண்ணால் பார்க்கும். அம்மு ஜெர்ரியிடம் "உன்னை எதுவும் சொல்லிடக்கூடாதே உடனே பார்ப்ப" என்று கூறுவாள் அம்மு ஜெர்ரி மீது அளவுக்கடந்தக் அன்பை வைத்திருந்தால். ஒரு நாள் ஜெர்ரியைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அம்முவிற்கு ஜெர்ரியின் பிரிவை தாங்கி கொள்ள முடியவில்லை அதன் மேலுள்ள காதலால், எப்போவும் உன்னை நேசித்து கொண்டிருப்பேன் ஜெர்ரி என மனதுக்குள் சொல்லி அழுவாள்.

நெறி: தயவு செய்து வண்டியை வேகமாக செலுத்தாதீர்கள் அவைகளுக்கும் குடும்பம் இருக்கின்றது. சில பேர் வாய் இல்லா ஜீவன்களை துன்புறுத்துகின்றனர் அவைகளையும் ஒரு உயிரினமாக கருதி பாதுகாக்க வேண்டியது நம் கடமை..!!!

-- லக்ஷ்மி பிரியா

 

 

2.K2K-00004

 காத்திருந்த காதல்:

கொஞ்சும் கொங்கு தமிழும், அமிழ்தினும் சுவையான சிறுவாணி நீரும், பழகியவருக்காக உயிரை கொடுக்கும் மக்களும், இயற்கை அன்னைக்கே மனிதனாக வந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அழகும், வளமும் பொருந்திய கோவை நகரத்தின் வெளிப்புற பகுதி அது. பசுமையான மரங்கள் அடர்ந்த மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்த பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இயந்திரவியல் படித்து வந்தான் சூர்யா. வீட்டில் இருந்து தொலைவு இருந்த காரணத்தால் விடுதியில் தங்கி படித்து வந்தான். பேச்சில் கனிவும், செயலில் பணிவும் கொண்ட அவனின் குணங்கள் பார்ப்பவரை கரைத்து அவனுடன் கலந்திட செய்யும் வகையில் இருக்கும். அதனால் எப்போதும் அவனை சுற்றி நண்பர்கள் கூட்டமாக இருப்பார்கள். அப்படி பார்ப்பவர் அனைவரையும் தன்னை நோக்கி ஈர்க்கும் காந்தமாக இருந்தான் அவன்.

கைப்பந்து, மட்டைப்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டிலும், படிப்பிலும் கைதேர்ந்து விளங்கும் வல்லவனாக இருந்தான். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படித்து வந்தாள் புவனா. மலையரசியின் மடியில் பிறந்து தவழ்ந்ததலோ ஏனோ அவள் ஒரு அழகோவியமாக மிளிர்ந்தால். நிலம் அதிர்ந்திடாத நடையும், சத்தமில்லாமல் பேச்சும், அமைதியே உருவான அழகு பதுமை அவள். இந்த நாகரிக நாட்களிலும் பண்பாட்டுடனும், பாரம்பரியத்துடனும் மிகவும் அடக்கமாக நடந்துகொள்வாள். புவனாவின் ஊரை சேரந்த சூர்யாவின் நண்பன் மூலமாக இருவரும் அறிமுகம் ஆகின்றார்கள். அன்று முதல் அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தார்கள். சூர்யா தினமும் மாலை கைப்பந்து விளையாடுவதை மகளிர் விடுதியின் மாடியில் இருந்து ரசிப்பாள் புவனா. இவர்கள் அறிமுகம் ஆனது முதல் சூர்யாவின் அனைத்து ரெக்கார்ட் நோட்டுகளும் எழுதும் பொறுப்பு புவனாவுடையது, அவளும் மிகவும் சிரத்தையுடன் அதை எழுதி கொடுப்பாள். இருவரும் தினசரி வளாக படிகட்டுகளில், கல்லூரி கேண்டினிலும், நூலகத்திலும் சந்தித்து கொள்வார்கள், தொலைவில் இருந்து பார்பதோடு சரி. அவர்கள் இருவருக்கும் ஒருவர் மேல் மற்றொருவர் மிகுந்த பாசமும், அன்பும் கொண்டிருந்தார்கள்.அவர்கள் கல்லூரி நாட்களில் அருகில் உள்ள கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். அங்கே சென்று தனிமையில் இருவரும் அவரவர் குடும்பத்தை பற்றியும், வருங்காலம் குறித்தும் பேசிக்கொள்வார்கள். சூர்யாவின் தந்தை உடல் நிலை சரி இல்லாததால் அவருக்கு படித்து முடித்திவிட்டு நல்ல இடத்தில் சிகிச்சை செய்ய வேண்டும் என்று புவனாவிடம் கூறினான். புவனா நடுத்தர குடும்பத்தை சேரந்தவள், அவள் அப்பா கோத்தகிரியில் ஒரு கடை வைத்து நடத்தி வந்தார். புவானாவின் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார் அவர் தந்தை. இப்படி இருவருக்கும் காதல் இருந்தும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன இருவரின் குடும்ப சூழ்நிலையும் அவர்களை காதல் என்ற உறவில் நகரவிடாமல் தடையாக இருந்தது. கல்லூரியின் இறுதி நாட்கள் வந்தன. கடைசியாக இருவரும் அந்த கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்கள், அத்தனை நாட்களாக புவனா தன்னுள் சொல்லாமல் வைத்திருந்த ஆசையை சொல்லிவிடுவது என்று முடிவு செய்தால். சூர்யா பல நாட்களாக நான் சொல்ல நினைத்ததை சொல்றேன் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும், உன் கூட இருக்கும்போது நான் ரொம்ப மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணர்கின்றேன். நான் உன் கூட தான் என் மீதி வாழ் நாட்களை கழிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். நீ உன் பொறுப்பு எல்லாம் முடிக்கிற வரைக்கும் நான் காத்திருக்கேன் என்று சூடு செய்த சோலைகருதாய் படபடவென்று வெடித்து முடித்தால். சூர்யாவின் மனதிலும் அதே எண்ணம் இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டவில்லை. நீ சொல்வது எல்லாம் சரி முதலில் நாம் நமது குடும்பத்தை பார்ப்போம் எல்லோரும் மாதிரி நம்ம இந்த காதல், சந்திப்பு அப்படி எல்லாம் இல்லாமல் நமது கடமையை செய்வோம் பின்பு நடப்பதை பார்ப்போம். அதுவரை நாம நண்பர்களாவே இருப்போம் என்றான் சூர்யா. பிரியும் தருணம் வந்தது பல அசைகள், கனவுகள், வெளிப்படுத்தாத காதல் என்று இருந்தும் அதை அடக்க முயன்ற புவனாவின் விழிகளில் தண்ணிர் குளமாக தேங்கியது, இப்போதே உன்னுடன் நான் வந்திவிடுகின்றேன் என்று கூறலானாள். பின்பு சூர்யா அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

பின்பு கல்லூரி முடிய இரண்டு வாரம் இருக்கும் போது அவர்கள் கேண்டினில் சந்தித்து கொண்டனர். சூர்யா அன்று கோவிலில் நடந்தை வைத்து புவனாவின் எண்ணத்தில் உள்ளதை உணர்ந்தான், பின்பு அவன் அவளிடம் நம் இடையே என்ன இருக்கின்றது என்று நாம் வெளிப்படுத்தாமலே இந்த கல்லூரி முழுவதும் அறியும், என் எண்ணத்தில் உள்ளதை சொல்வதற்கு முன் எனக்கு ஒரு உறுதி வேண்டும், நீ உன் தந்தையிடம் இது பற்றி தைரியமாக பேசி சம்மதம் பெற முடியும் என்று நினைக்கின்றாயா? என்று கேட்டான். புவனாவும் கண்களில் ஆன்ந்தம் நீராக வழிந்தோட சொல்ல வார்த்தைகள் இன்றி தலையசைத்தால். பின்பு இருவரும் பனிக்கூழ் வாங்கி பகிர்ந்து உண்டனர், இருவரின் கைப்பேசி எண்களையும் பரிமாற்றிக்கொண்டனர்.

கல்லூரி முடிந்து வேலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டான் சூர்யா, வேலை கிடைக்கும் வரை அருகில் உள்ள பள்ளியில் கைப்பந்து பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தான். புவனா வீட்டில் அம்மாவிற்கு உதவியாக இருந்துவந்தாள். வாரத்திற்கு சிலமுறை இருவரும் குறுஞ்செய்திவாயிலாக உரையாடிக் கொண்டனர். பின்பு சூர்யாவிற்கு மங்களூரில் வேலை கிடைத்து அவன் அங்கே செல்ல நேரந்தது. தொலைவு அவர்களை இன்னமும் நெருக்கமாக்கியது. இருவரும் தினமும் தொலைப்பேசியில் பேசிக்கொள்வதும், குறுஞ்செய்தியில் கொஞ்சி உறவாடுவதும் தொடர்ந்தது. தொலைவின் பிரிவின் காரணத்தால் உண்டான நெருக்கம் அவர்களது உறவை காதலாக உருப்பெறச் செய்தது. இருவரும் தங்களின் காதலை வார்த்தைகளில் பரிமாறிக்கொண்டனர், தொலைவு அவர்களின் உறவில் ஒரு தடையாக இல்லை. சிலவருடங்கள் உருண்டோடின, சூர்யா தான் நினைத்தவாறு அவன் தந்தைக்கு நல்ல சிகிச்சை அளித்து குணமாக்கினான், சொந்தமாக வீடு கட்டி அங்கே குடியேறினான். பின்பு ஒருமுறை சூர்யா விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது தனது குடும்பத்துடன் சென்று புவனாவின் வீட்டில் இருவரது காதல் கூறித்தும் பேசினான். முன்பே புவனா அவளின் அப்பாவிடம் சூர்யா குறித்து கூறி இருந்ததால், இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கே, அவர்களின் காத்திருந்த காதல் அடுத்த நிலைக்கு செல்ல தன்னை உருவகப்படுத்தி கொண்டது. இருவரின் திருமணமும் மிகுந்த மகிழ்வுடன் அவர்களின் காத்திருந்த காதலுக்கு உருவம் கொடுக்கும் விதமாக நடந்தது. அவர்கள் ஆனந்தமாக வாழ்க்கையை தொடர்ந்தனர்.....

"காத்திருப்பு காதலை அழகாக்கும், ஆழமாக்கும்". "காதல் வார்த்தையில் வெளிப்படுத்துவதை விட வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவதே ஆகச் சிறந்தது". "காத்திருந்து பெற்றோர் சம்மத்ததுடன் காதலை திருமணமாக மாற்றம் செய்யும் வலிமையும், வல்லமையும் கொண்டுவிட்டால் காதல் போல ஒரு வரம் இல்லை"...

காத்திருந்து காதல் கனவை நினைவாக்கும் காதலர்கள் யாவருக்கும் சமர்ப்பணம்.....

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

3.K2K00013 

காதல்

"காதல், கல்யாணம்", இவ்விரண்டு வார்த்தைகளைக் கேட்டாலே ராகவிக்கு பயங்கர கோபம் வரும். கல்லூரி நாட்களில் அவளுடைய தோழிகள், தங்களின் "காதல்" அனுபவங்களைக் கூறும் போது ராகவி அவர்களிடமிருந்து விலகிவிடுவாள், சில வேளைகளில் அவளுக்கும் கூட தன மீது ஒரு விதமான கோபம் வருவதுண்டு, நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? மற்றவர்களைப் போல் என்னால் நடந்துக் கொள்ள முடியவில்லை? என்று பலமுறை யோசித்தும் இருக்கிறாள். வெறுப்பும், சலிப்பும், மனதில் கூடினதேத் தவிர விடைக்காண அவளால் முடியவில்லை.

இதற்கிடையில் ராகவியை அவளுடைய நெருங்கிய தோழியான ரம்பாவின் அண்ணன் இரவி "காதலிக்க?" ஆரம்பித்தான். விஷயம் கேள்விப்பட்டதும், ராகவி அவனை நேருக்குநேர் சந்தித்து "வேறு நல்ல? வேலை பார் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லை என்று கோபமாக சொல்லிவிட்டாள் இருந்தும் இரவி கொஞ்சம் கூட கோபப்படாமல் அவளை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்துக்கொள்ளவும் விரும்பினான். விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவந்து அவர்களும் இந்த "ஒருதலைக்காதல்" ஆதரித்தார்கள் இறுதியில் எந்தக் காரணத்தினாலோ, ராகவியும் சம்மதம் சொல்ல திருமணமும் நடந்து முடிந்தது.

முதல் நாள் அன்றே இரவி அவளிடம் " உன்னை வற்புறுத்தித் திருமணம் செய்து கொண்டேன்" என்று என் மீது வெறுப்பை இருப்பாய் இருந்தாலும், நீயாக என்னை ஏற்றுக்கொள்ளும் வரை நாம் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூற ராகவி மனமுடைந்து அழுதுவிட்டாள். தன்னுடைய சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை முதன்முறையாக அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என் அண்ணனின் மனைவி அதாவது என் மதனியின் தம்பி ஒரு நாள் யாரும் இல்லாத வேளையில் வீட்டில் இருக்கும் போது என்னிடம் காதலிப்பதாக கூறி தவறாக நடக்க முற்பட்டான். நான் பயந்துபோய் அவனை வேகமாகத் தள்ளிவிட்டு ஓடி வந்துவிட்டேன் தள்ளிய வேகத்தில் அவன் நிலைத்தடுமாறி விழுந்து விட்டதில் தலையில் பலமாக அடிபட்டதால் "கோமா" நிலைக்கு சென்றுவிட்டான். பிறகு என் அண்ணியும் எதோ ஒரு காரணத்தினால் விவாகரத்து பெற்றுக்கொண்டு எங்களை விட்டுச் சென்றுவிட்டார்கள்.. அன்றிலிருந்து எனக்கு காதல்,கல்யாணம் என்று யாரவது பேசினால், ஒரு விதமான பயமும் அருவருப்பும் மனதில் தங்கிவிட்டன.மேலும் என் அண்ணியின் திருமண முறிவும் அவர்களுடைய தம்பியின் "சோக நிலைமையும்" என்னுள் ஒரு குற்றவுணர்ச்சியையும் ஆண்கள் அனைவரையும் வெறுக்கும்படி செய்துவிட்டன ஆனால் இன்று நீ என்னை விடாமல் காதலித்து கல்யாணமும் செய்துக் கொண்டதால் தான் ஒரு உண்மையைப் புரிந்துக்கொண்டேன். "காதலும், கல்யாணமும்' சிந்திக்கும் அடிப்படையில் பொருள் தருவதேயின்றி நம் வாழ்க்கையில் இருந்து "விலக்கிவைப்பது" எவ்வுளவு பெரியத் தவறு என்று உணர்ந்துக் கொண்டேன். "காதலுக்கும், கல்யாணப் பந்தத்திற்கும்" உன்னை போன்ற ஆண்கள் "மரியாதைத்" தந்துக் கொண்டு இருப்பதால் இவ்விரண்டு நிலைப்பாடுகளும், இவ்வுலகத்தில் என்றும் "உயிர்ப்புடன்" இருக்கும் அதற்கு நான் தலைவணங்குகிறேன் எனக் கூறி இரவியை அணைத்துக் கொண்டாள். பிறகென்ன, ஆங்கிலத்தில் சொல்வது போல்                         

" And They Lived Happily Forever "!!

--ரமா கோவிந்தராஜன்

 

 

4.K2K-00037

காதல்:

வினோத் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான். பயணத்தினூடே தனது கடந்த கால நினைவுகளில் மூழ்கினான்.

கல்லூரி காலம்...

முதல் நாள் தான் வகுப்பிற்கு சென்று, தனது நண்பர்கள் செந்தில் மற்றும் கிருஷ்ணாவிடம் அறிமுகமானான். அன்று அவன் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள் நந்தினி. நல்ல சிரித்த முகம், குறும்பான பார்வை. ஒரு சின்ன மின்னல் அவனை தட்டியது போல இருந்தது வினோத்திற்கு.

சில நாட்களில் கணினி ஆய்வகத்தில்(lab) இருவரும் அடுத்தடுத்த இடத்தில் அமர்ந்து கணினி நிரலாக்கம்(programming) செய்து கொண்டிருந்தபோது, நந்தினி வினோத்திடம் சந்தேகம் கேட்டாள்.

"ஹலோ! எனக்கு கம்பைலேஷன் எரர் வருது. என்னன்னு தெரியல. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றாள்.

"ம்ம்ம்...". அவன் அதைப் பார்த்துவிட்டு "லூபிங் வேரியபிள் தப்பா அசைன் ஆகி இருந்தது. சரி பண்ணிட்டேன் இப்போ வர்க் ஆகும்" என்றான்.

"தேங்க்யூ" என்றாள் அவள் சிரித்து கொண்டே.

அவன் "வினோத்" என்று கை கொடுக்க, அவள், "நந்தினி" என்று ஒருவருக்கொருவர் கை குலுக்கி அறிமுகமாகினர். அவர்கள் சில நாட்களிலேயே ஒருவருக்கொருவர் சற்று நன்றாக பரிச்சயமாகிவிட்டனர்.

ரயிலில் "காபி... காபி... காபி சார்".

வினோத் "ஒரு காப்பி" என்று இருபது ரூபாய் கொடுத்து வாங்கினான்.

அன்று கல்லூரி உணவகத்தில்...

"நாலு காபி"

"அப்புறம் சம்மர் ப்ராஜெக்ட் என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க?"

கிருஷ்ணா "நான் பேங்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் பண்ண போறேன் டா."

என்னடா சீனியர்ஸ் பிராஜக்ட வெச்சு லைட்டா கொஞ்சம் சரி பண்ணி ஒப்பேத்தி விடலாம்னு பார்க்கறியா? "

"அட நீ வேற. நான் இப்பதான் நம்ம பையன் சுப்புவை நைஸ் பண்ணி ப்ராஜக்ட் பண்ண வச்சிருக்கேன் பயபுள்ள நல்லா பண்ணிட்டான்னா அத வச்சி ஓட்டிடுவேன். நீ மானத்த வாங்காத."

"நல்லா உனக்குன்னு ஒரு அடிமை சிக்கி இருக்கான் நடத்து நடத்து. நந்தினி நீ என்ன பண்ண போற? இவனுக்கு ஒரு சுப்பு மாறி உனக்கு இந்த கீர்த்தனா வா?"

"டேய் நான் ஒண்ணும் இவனை மாதிரி மொத்தமாக இவ தலையில் கட்ட மாட்டேன் நானும் சேர்ந்து தான் பண்ணுவேன்"

"எது ரெண்டு பேரும் ஒண்ணா போய் டி. நகர்ல ப்ராஜெக்ட் விலைகொடுத்து வாங்கிட்டு வரப் போறீங்களா? "

" டேய் போடா. போடா. ரொம்ப பேசாத. ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச். "

" பார்க்கலாம் பார்க்கலாம் என்ன பண்றீங்கன்னு"

ரயில் பெட்டியில் யாரோ "நெஞ்சோரமாய் காதல் துளிரும்போது..." பாட்டு ஒலித்துக் கண்டிருந்தது.

அன்று கல்லூரி ஆண்டு விழாவில்.... நந்தினி "டேய் வினோத்! டென்ஷனா இருக்கு டா."

"உனக்கு மியூசிக் பேக்ரவுண்ட் இருக்கு, அப்புறம் என்ன பயம்?"

"லைட்டா ஸ்டேஜ் ஃபியர் இருக்கு டா. இவ்ளோ க்ரௌட்ல பாடுனது இல்ல"

"ஒண்ணும் பிரச்சனை இல்ல. நீ இந்த ஹால் கடைசியில் உன் பார்வையை வச்சுக்கோ. அப்போ எல்லாரையும் பாக்குற மாதிரி இருக்கும் நான் உன்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பேன்" என்று அவள் கையைப் பிடித்து "ஆல் இஸ் வெல். ஆல் பெஸ்ட்" என்றான். அவள் மேடை ஏறினாள்.

பாடி முடியும் வரை வினோத்தை மட்டுமே அவள் பார்த்து பாடினாள். பாடி முடிந்ததும் அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. அவள் மேடை இறங்கி அவனிடம்" டேய் ரொம்ப டென்ஷனா இருந்தது. உன் என்கரேஜ்மெண்ட் தான் என்னால பாட முடிஞ்சது. ரொம்ப தேங்க்ஸ் டா" என்றாள். அவன் புன்னகை பூத்து பெருமையாகவும், அவள் அவன் கையை பற்றியதால் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தான்.

எல்லாம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, "வா நந்தினி. என் பைக்ல உன்ன டிராப் பண்றேன்" என்று இருவரும் சென்றனர். அவளை அவள் வீட்டு வாசலில் விட்டுவிட்டு

" ஓகே பார்க்கலாம்" என்றான்.

அவளும் "ம்ம்ம்... பார்க்கலாம்" என்று தயங்கி திரும்பி அவள் வீட்டு கேட்டை நோக்கி சென்றாள். வினோத் "ஒரு நிமிஷம்" என்றான்.

அவள் திரும்பி "என்ன?"

அவன் "ஒண்ணும் இல்ல. நல்லா ரெஸ்ட் எடு. அப்புறம் பார்க்கலாம்" என்றான்.

அவள் "நீயும் தான். வேற?" என்றாள்.

அவன் "வேற எதுவும் இல்லை".

அவள் "சரி ஓகே. பை" என்று திரும்பும் போது, 

"எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு நந்தினி" என்றான். அவள் சற்று உறைந்து நின்றாள். அவன் மீண்டும்" ஆமாம். இது சரியான பிளேஸ் இல்ல. ஆனா மனசுல தோணுச்சு சொல்லிட்டேன். நீ யோசிச்சு சொல்லு. நான் உன்ன ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்" என்று கூறி பைக்கை உயிர்ப்பித்து புறப்பட்டான். சில நாட்களில் அவளும் அவள் காதலை அவனிடம் கூறினாள். காலமும் விரைந்து சென்றது.

ரயில் வேறு ஒரு ரயில் நிலையத்தில் நின்றது. அங்கு ஒருவன் தன் நண்பனை வழியனுப்பி, "மச்சி பத்திரமா போயிட்டு வாடா. புது வேலைய நல்லா கத்துக்க. அப்பப்போ ஊர் பக்கம் வா"

அந்த நண்பன், "கண்டிப்பா மச்சான்! பிரியரத நினைச்சா கஷ்டமா இருக்குடா. நான் போய் செட்டில் ஆகி உனக்கும் ஒரு வேலை பார்க்கிறேன். சொல்லி அனுப்புறேன் வந்துரு" என்றான்.

அன்று அவர்கள் கல்லூரியின் கடைசி நாள், பிரியாவிடை தினம் (farewell day)...

செந்தில் "மச்சிஸ், நாலு வருஷம் போனதே தெரியல நேத்து தான் பார்த்த மாதிரி இருக்கு இப்ப முடிஞ்சு போறோம்" என்றான்.

கிருஷ்ணா "ஆமா மச்சி.. இனிமே வேலை, வாழ்க்கை என்று ஓடணும். ஆனாலும் டச்சில் இருப்போம்" என்றான்.

நந்தினி, கீர்த்தனா, ரஞ்சினி அனைவரும் வருத்தத்தில் இருந்தனர்.

ரஞ்சனி "எனக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு. கல்யாணம் முடிஞ்சதும் கத்தார் போயிடுவேன். எப்ப திரும்ப வருவேன்னு தெரியாது" என்று கூறி அழுதாள்.

கீர்த்தனாவும், நந்தினியும் "ஏண்டி ஃபீல் பண்ற? ஃபேஸ்புக், ஈமெயில் அப்படின்னு நிறைய மீடியம் இருக்கு. கண்டிப்பா டச்சுல இருக்கலாம். நாங்க உன்ன பார்க்கவறோம். கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினார்கள்.

வினோத், செந்தில், கிருஷ்ணாவும், "நாம எப்படியும் டச்சுல இருப்போம். கவலைபடாதீங்க." என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி "வாங்க, நம்ம கேண்டீன்ல ஒரு காபி சாப்பிடுவோம்" என்று கூறி அனைவரும் ஒன்றாக கடைசி முறை அவர்கள் கல்லூரி கேண்டினில் காபி அருந்தினர்.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. வினோத் வீட்டில் அவனது தாய் லட்சுமி, "வாடா கண்ணு. ரொம்ப எளச்சிட்ட சாப்பாடு சரி இல்லையா?" என்றாள்.

"அம்மா அதெல்லாம் இல்லைம்மா. நல்லாத்தான் இருக்கேன்."

அவன் தந்தை ரங்கராஜன் "லக்ஷ்மி, அவனுக்கு முதல்ல காபி கொடு. நீ காபி குடிச்சிட்டு, குளிச்சிட்டு வா பா. ஒண்ணா சாப்பிடலாம்." என்றார்.

சாப்பிட்டு எல்லாம் முடித்த பின்னர் லட்சுமியும், ரங்கராஜனும், "ஒரு நல்ல சம்பந்தம் வந்து இருக்கு பா. போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம். உனக்கு புடிச்சிருந்தா முடிச்சிடலாம்." என்றார்கள்.

அவன் "அம்மா எனக்கு கல்யாணத்துல எல்லாம் விருப்பம் இல்ல. என்கிட்ட இனிமே அதைப் பத்தி பேசாதீங்க."

"இப்படி சொன்னா எப்படிப்பா.. உனக்காக நாங்களும் பொறுமையா இருந்தோம் உனக்கும் வயசு ஆகுது. காலாகாலத்தில நீயும் குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆக வேண்டாமா?"

"அப்பா புரிஞ்சுக்கோங்க. எனக்கு கல்யாணம் வேணாம். "

" உன் சந்தோஷத்துக்கு தான் அந்த பொண்ணு நந்தினி வீட்டில் கூட போய் பேசினோம். ஆனா அவங்க அப்பா வசதி, சாதி இதெல்லாம் காரணம் காட்டி நீ அப்ராட்(abroad) போய் இருக்கும் போது அவசர அவசரமா அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி ஃபாரினும் அனுப்பிட்டான். நாம என்ன பண்ண முடியும்?" என்றார். வினோத் பதில் ஏதும் கூறாமல் அவன் அறைக்கு சென்றான்.

நந்தினி அவனிடம் கடைசியாக அனுப்பிய செய்தி...

" நான் உனக்காக வெயிட் பண்ணுவேன். எப்படியாவது நீ ஓரளவுக்கு வேலைல செட்டில் ஆகிட்டு வந்துடு. நானும் செட்டில் ஆகிடுவேன். நம்ம கல்யாணம் பண்ணலாம். உன்ன நான் அவ்ளோ லவ் பண்றேன். இப்ப கூட நான் எங்க அப்பா அம்மாவுக்கு தெரியாம தான் இந்த மெசேஜ் அனுப்புறேன். என்னை மறந்துடாத வினோத்" என்று அனுப்பி இருந்தாள்.

பணி காரணமாக ஆறு மாசம் ஸ்வீடன் சென்று பின்னர் திரும்பி வந்தபோது நந்தினிக்கு திருமணம் முடிந்தது என்றும், அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள் என்பதும் செந்தில் மூலம் தெரிந்து கொண்டான் வினோத். அதற்குப்பின் அவன் நந்தினியை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை. அவள் நினைவுகள் மட்டும் அவன் மனதில் நீங்கா நினைவுகளாய் இருந்தது.

அவன் ஊருக்கு வந்த மற்ற நாட்களில் ஊரில் தெரிந்தவர்களையும், மற்ற நண்பர்ளையும் சந்தித்தான். கிளம்புவதற்கு முந்தைய நாள் செந்திலை பார்த்து பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு கல்லூரி நாட்களைப் பற்றியும், அவர்கள் நட்பு, நண்பர்கள் பற்றியும், நந்தினி பற்றியும் சென்றது. அப்போது செந்தில் பேச்சுவாக்கில்

"நந்தினி இப்படி ஆகியிருக்கக் கூடாது" என்றான்.

வினோத், "என்னாச்சு அவளுக்கு?" என்றான்.

செந்தில், "ஒண்ணும் இல்ல வினோத். பொதுவா சொன்னேன்" என்றான்.

"இல்ல என்ன ஆச்சு அவளுக்கு சொல்லு"

"இல்ல மச்சான். நினைச்ச வாழ்க்கை வாழ முடியாம போச்சுல அத சொன்னேன்" என்றான்.

"இல்ல உண்மையை சொல்லுடா. என்ன ஆச்சு?" என்றான் வினோத்.

"ஒரு ஆக்சிடென்ட்ல அவ படுத்த படுக்கையா ஆகிட்டா டா" என்றான்.

வினோத் நந்தினி வீட்டிற்கு சென்று வாசல் மணி அடித்தான். அவள் தந்தை சந்தானம் தான் கதவை திறந்தார். அவனை உள்ளே அழைத்தார்.

வினோத், "நந்தினிக்கு என்ன ஆச்சு?"

சந்தானம், "வசதி, ஜாதி எல்லாம் தடையா இருந்ததால உங்க காதல நாங்க ஒத்துக்கல. அவ பிடிவாதமா உன்ன தான் கல்யாணம் பண்ணுவேன்னு இருந்தா. அவளை சம்மதிக்க வைக்க அவ அம்மா தற்கொலை வரை போனதால, வேற வழி இல்லாம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா. என் பிசினஸ் பார்ட்னர் பையன் தான். கல்யாணம் ஆகி யூ.எஸ் போய்ட்டா. ஆனா அவன் ஒரு ட்ரக் அப்யூஸ்ட்னு எங்களுக்கு தெரியல. ரெண்டு மாசத்துல ஒரு சண்டைல அவன் ஹைவேல காரில் இருந்து தள்ளிவிட்டதுல இவ சாகும் நிலைக்கு போய்ட்டா. எப்படியோ அவள பிழைக்க வெச்சிட்டோம். ஆனா தலையிலும், முதுகுத்தண்டிலும் அடிபட்டதுல அவளால எழுந்து நடக்கவோ உட்காரவோ முடியாது. தலைல பட்ட காயத்துல அவ பேசும் திறனும் போய்டுச்சு" என்றார்.

சந்தானம் மேலும், "ஜாதி, அந்தஸ்து, மரியாதை இதெல்லாத்துக்காக தான் அவசரமாக அவன கல்யாணம் பண்ணோம். ஆனா இன்னிக்கு இவ வாழ்க்கையே போச்சு. இவள இந்த நிலைமைக்கு ஆளாக்கிய இவ புருஷன் இதையே காரணம் காட்டி இவள விவாகரத்து பண்ணிட்டான். அவனுக்கு எதிரா எங்களால ப்ரூவ் பண்ண முடியல" என்றார்.

வினோத் கண்ணீருடன் தன் நந்தினியின் இந்த நிலையை பார்த்து அங்கிருந்து வெளி ஏறினான்.

சில மாதங்கள் கழித்து...

சென்னையில் ஒரு புது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வினோத் குடி வந்தான். அங்கு ஒரு அறையில் ஜன்னல் கதவுகளை திறந்து" இங்க நல்ல இயற்கை காத்து வரும். அப்படியே இங்க இருந்து வியூவும் நல்லா இருக்கும்" என்று தன் மனைவி நந்தினியிடம் கூற, அவளும் சிரிப்பால் அதை ஆமோதித்தாள்.

அன்று நந்தினியை கண்டதும் தன் வீட்டிற்கு சென்று தன் பெற்றவர்களிடம் தான் நந்தினியை திருமணம் செய்ய இருப்பதாக தன் முடிவை கூறினான். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் அவளை கரம் பற்றி சென்னையில் குடி பெயர்ந்தார்கள். அவளுக்கு தேவையான சிகிச்சையை அவளுக்கு செய்து கொண்டு இருக்கிறான் வினோத். நந்தினி வாழ்வில் வசந்தம் வீச தொடங்கியதை உணர்த்துவது போல அவள் அறையில் காற்று வீசியது. அவளும் முதல் முறையாக எழுந்து அமர முயற்சித்தாள்.

அவர்கள் காதலின் சக்தி அவளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வாழ்க்கை தொடங்கியது.

ன்றி...

இப்படிக்கு

பா. பிரபு,

மடிப்பாக்கம்

 

 

5.K2K 00038

காதல்!

எவனோ எவனோ என நெடுநாள் இருந்தேன். இவனே இவனே என இதயம் தெளிந்தேன்….”

 பெண் பார்த்துச் சென்றதும் பிரமிளா இந்தப் பாட்டைக் கேட்டு தனக்கு முடிவான வருங்காலத் கணவனை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறாள். பிரமிளா கட்டுப்பாடான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள், சித்திகள் மாமா அண்ணன் என பலரும் இருந்த குடும்பத்தில் கடைக்குட்டி.

திரைப்படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றால் சில படங்களுக்கு அவளுக்கும் சித்திகளுக்கும் அனுமதி கிடையாது.

கோவிலுக்கா கடைக்கா எங்கு சென்றாலும் அண்ணனோ தம்பியோ இல்லாமல் தனியே அனுப்பியதில்லை அந்த வீட்டுப் பெண்களை.

அவர்கள் இருந்த வீடு சந்துக்குள் இருந்ததால் வெளியே சாமி ஊர்வலம் வரும் போதோ வேறு ஏதேனும் சத்தம் கேட்டால் மட்டும் எட்டிப்பார்க்கலாம் இந்த ஊர் உலகத்தை.

பள்ளி விட்டதும் பத்து நிமிட இடைவெளியில் வீட்டிலிருக்க வேண்டும்.

சின்னவளாகவும் இருந்ததால் கல்லூரி வரை பாட்டியின் பாசம் சித்திகளின் அன்பு அண்ணன் தம்பி நேசம் தான் தெரியும்.

காதல் என்ற உணர்வே அவளுக்கு கண்ணில் பார்த்தால் கூட புரியாது.

கல்லூரி விடுதிக்கு வந்ததும் பாய் பிரண்ட் டேட்டிங் இதெல்லாம் ஏதோ அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தது பிரமிளாவுக்கு.

யாராவது காதல் என்று பேசினால் கூட அவர்களை ஒழுக்கம் கெட்டவர்களாக பார்ப்பாள்.

இப்படியே எம். வரை இவளை சமாளித்து இவளுடன் நட்பு கொண்டனர் தோழிகள். கல்லூரி முடியும் கடைசி நிலையில் இவளுக்கு பெண் பார்த்து திருமணம் நிச்சயமானது. இப்போது இவள் முதல் முறையாக காதல் பாட்டைக் கேட்டுச் சிரிக்கிறாள். வருங்காலக் கணவனை நினைத்து மகிழ்கிறாள்.

இருவரும் கடிதம் போட்டுக் கொள்வதாகவும் தனிமையில் சந்தித்துக் கொள்வதாகவும் கற்பனை செய்கிறாள்.

அவனிடமிருந்து நிஜமாகவே கடிதம் வந்த போது அவனே நேரில் நிற்பதாக நினைத்து வெட்கப்படுகிறாள்.

கடிதத்தின் ஒவ்வொரு எழுத்தும் அவளது உணர்வுகளை மீட்டி உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்கிறது.

பிரமிளா….! இன்னைக்கு செமினார் இருக்கு. வேகமா கிளம்பு.”

காதில் விழாதவளைப் போல அவள் இருக்க அறைத்தோழி தட்டிக் கூப்பிடுகிறாள்.

இதோ கிளம்பிட்டேன் ஷீலா.” வாய் சொல்கிறதே தவிர மனசு வேறெங்கேயோ .” நேற்றே வந்திருக்கணுமே…..ஏன் வரலை?! இன்னைக்கு நான் வர லேட்டாகும் வேற யாருகிட்டயாவது லெட்டர் போயிட்டால்….?!”

இன்னைக்கு நான் வரலை ஷீலா.”

ஏய்என்ன விளையாடுறியா?!

ஹெச் டி டின்னு கட்டிடுவாரு

இல்லைடி. இன்னைக்கு லெட்டர் வரும்

வந்தா பறந்தா போயிரும்?!”

நாம வர லேட்டாகுமேஎங்கேயாவது மிஸ் ஆகிட்டால்?!”

அடி என் கண்ணே….! உன் வுட்பி லெட்டர்னு வாடர்னுக்கே தெரியுமே?!அதெல்லாம் பத்திரமா இருக்கும். நீ கிளம்புபிரமிளாவின் காதை செல்லமாக திருகி சொல்கிறாள் ஷீலா.

ச்சேவர வர நான் ரொம்ப அசிங்கப்படுறேன், எல்லாம் இந்தக் காதலால வந்தது.” என்று தனக்குத் தானே சிரித்துக் கொண்டு கிளம்புகிறாள் பிரமிளா.

வழக்கமாக இவர்களுடன் வம்பிழுக்கும் வகுப்புத் தோழன் செல்வம் இன்றும் அவ்வாறே,” ஏன் லேட். ஹெச்..டி ஸ்டாஃப்  ரூமுல இருக்காரு.உங்களுக்காக வெயிட்டிங்என்று வருத்த முகத்துடன் சொல்ல, பதறியடித்து இருவரும் ஓட….

ஏய்…..பிரமிளா நில்லு…. நில்லுநான் சும்மா கலாட்டா பண்ணேன், இன்னும் அவர் வரலை என்ன ஓட்டம்.?“ என்று பேசிச் சிரிக்க, பிரமிளா ஒதுங்கி ஷீலாவின் பின் ஒழிந்து கொள்கிறாள்.

இது மாதிரி செல்வம் கலாய்த்தால் பதிலடி கொடுக்கும் பிரமிளா இன்று இப்படி செய்வது ஷீலாவுக்கே வித்தியாசமா இருக்கு, செல்வம் அவர்களிருவரையும் திரும்பிப் பார்த்துக் கொண்டே போய் விடுகிறான்.

என்னாச்சு டி?!”

அவர் என்னைப் பெண் பார்த்துட்டு போனதுல இருந்துவேற யார் கூடவும் பேச சங்கடமா இருக்குடி, …..காதல் வந்திருச்சு…….”, ஷீலா பாட பிரமிளா வெட்கத்தில் தலைகுனிகிறாள்.

நீதி; காதல் ஒரே முறை தான் பூக்கும் உண்மையாக.

- பூமாதேவி

 

 

6.K2K00048

காதல்

              உலகின் உயர் சக்தியாக விளங்கும் ஒன்றானது அன்பெனும் காதல் ஒன்றே ...

               ஒரு பெண் ஒருவனை மிகவும் அதிகமாக நேசித்தால் , அவனின் சந்தோஷம் , கோவம் , வருத்தம் எல்லாத்தையும் சொல்லாமலே உணர்ந்து காதலிக்கிற ஒரு பெண் , இவள் நேசிக்கும் ஆண்மகன் , பெண்கள் எவர் மீதும் நம்பிக்கை இன்றி இருந்தான் , ஏன் என்றால் ஒரே ஒரு பெண்ணால் அவன் பாதிக்க பட்டவன் , ஒரு பெண்ணின் பாதிப்பால் , அனைத்து பெண் மீதும் நம்பிக்கை இழந்தவன் , இருப்பினும் , அவன் மனம் குழந்தை போன்றது என்று அறிந்த அவள் , அவன் தன்னை காயப்படுத்தியும் இவள் நேசிப்பதை நிறுத்தவில்லை, அன்பு கொண்டு உலகில் அனைவரையும் அனைவராலும் நேசிக்க முடியும் , ஆனால் அதித காதல் என்பது ஒருவர் மீது மட்டுமே வரும் , அதும் இவள் 21 வருடம் வரை தன் மனதினுள் காதலித்து இருந்தவள், சில காலங்களுக்கு பிறகு , இவளுக்கு இன்னொருவருடன் திருமணம் நிகழ்ந்தது , இவள் தன் கணவன் மீது மிகுந்த அன்பும் பற்றுடனும் நேசித்தால் , ஆனால் தன்னுடைய அதித அன்பிற்கு இன்னும் கூட அவளின் காதலனே , இதனை சமூகத்தில் கள்ளத்தொடர்பு என்று விமர்சிப்பது உண்டு , ஆனால் திருமணத்திற்கு முன்பே இவள் , தன்னுடைய அதித அன்பிற்கு பாத்திரமானவன் இன்னொருவன் என்று உண்மை அறிந்தவர் , இவள் ஒருவர் மீது அதீத அன்பினை வெளிப்படுத்துவது அவளின் சுயச்செயல் , அத்துடன் அன்பினை பொழிவது எந்த வகையிலும் தவறானது அல்ல , இவளின் அதித அன்பிற்கு ஆள் ஆகாமல் போனது என்னுடைய துர்பாக்கியம் , அவள் அன்புடன் அவளின் துணை வாழ்க்கை முழுவதும் எனக்கு கிடைத்தது என்னுடைய அதிர்ஷடம் என்று கூறி அவளை முழுமனதுடன் அரவணைத்து கொண்டான் .,

       மேலும் திருமணத்திற்கு பிறகு இவள் இவளுடைய காதலனை சந்திக்க சென்றாலும் இவளின் கணவன் தடுக்கவில்லை , ஏனென்றால் காதல் என்னும் அன்பானது கருனைக்கும் ஆருதல்கும் உரிய இடம் , இதில் காமம் உடன் வருவது இல்லை , இந்த கருணை மாற்றும் ஆதரவை செலுத்த தன் மனைவி செல்கிறாள் என்று அவள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் , அதனால் கேள்வி இன்றி சுதந்திரம் அளித்தார் , அவளும் தன் கணவனின் மீது மிகுந்த அன்பு கொண்டவள் , எனவே அவரின் பேருக்கு களங்கம் வராத வாரு , தன் காதலனை விட்டு விலகி நின்று பழகி , காதலையும் அளித்து, மனைவி என்னும் பொறுப்பையும் சிறப்பாக வழி நடத்தினால் ..,

       இந்த கதையில் ஆணின் நேசமும், பெண்ணின் பாசமும் ஒன்றான பற்றுதல் பற்றி கூறி உள்ளேன் ... எந்த உறவையும் கலங்க படுத்த எழுத வில்லை, அனைவரின் தவறிய கண்ணோட்டம் சீராக உருவாக்கினேன் ...

கருத்து: காதல் என்பது தூய அன்பின் நேசம் மட்டுமே ...

இப்படிக்கு.,

சி. தெய்வாணி ஸ்ரீ,

 

 

7.K2K-00053

காதல்

"டேய் ஹஸ்பென்ட் நேரமாச்சு டா எந்திரி... இன்னைக்கு ஒன்னும்

 சன்டே இல்ல டா... என காபி சூட்டை லேசாக பட்டும் படாமல் அவன் தோள் மேல் குறும்பாய் வைத்து எடுத்தாள்..."ஹரிணி

"காபி சூடு பட்டவுடன் பட்டென பட்டாம்பூச்சியாய் இமை படபடக்க கண் விழித்தான் கவுதம்..."

"அடிப்பாவி.... உன்ன என்ன பண்றேன் பாரு என கூறியவாறே தன் கையோடு அணைத்துக் கொள்ள.... அவள் கூந்தலின் ஈரம் அவனின் நெற்றியில் சில்லென முத்தமிட்டது..."

"ஹலோ மை ஹஸ்பென்ட், இது ஒன்னும் ரொமான்ஸ் பண்ற டைம் இல்ல... சமைக்கனும் டா... மெல்ல எழ முயற்சிக்க...அவள் கால் விரல் மெட்டி அவன் காலில் இதமாய் உரச..."

" இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன"….. என்ற மரியான் பட பாடல் ஒலி பக்கத்து வீட்டு ஜன்னல் வழியே இவர்கள் பெட் ரூமை வந்து நனைத்தது..." செல்லமாய் அவள் புருவம் தொட முயற்சிக்க...

"டேய் ஹஸ்பென்ட், வேணாம்... பாப்பா முழிச்சுப்பா...ஒழுங்கா ஒர்க்குக்கு கெளம்பு எனக்கு சமைக்கனும் டா..." என செல்லமாய் அவனை மேலும் அணைத்தவாறே சிணுங்கினாள்..."

"ஹலோ மை பிஸி பொண்டாட்டி,

நீங்க தான் என்னைய ஹக் பண்ணிட்டு இருக்கிங்க என்றவாறு குறும்பாய்.... கண் இமைக்கும் நேரத்தில்... அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்..."

சட்டென குழந்தையின் அழுகை தொட்டிலில்...

"ம்ம்ம் தப்பிச்சுட்ட டி பொண்டாட்டி...

இரு...வெயிட் பண்ணு...

பாப்பாவ நா தூக்கிட்டு வரேன்..."

"பல நூறு ரோஜா பூக்களை மொத்தமாய் கையில் ஏந்துவதை போல...இதமாய்... தொட்டிலில் இருந்து குழந்தையை எடுத்து ஏந்தி வந்தான்..."

"ஏன் அழுகறிங்க... அம்மாகிட்ட போலாமா... என செல்லமாய் கொஞ்சியவாறே குழந்தையை முத்தமிட்டு அவள் மடி சாய்கிறான் கையில் குழந்தையோடு...", "அவள் வளையல் ஓசை அபிநயிக்க...குழந்தைய கீழ போட்டுறாத டா என பதறிக் கொண்டு குழந்தையை வாங்கிக் கொண்டாள்..."

"ஒரு ஐஞ்சு நிமிஷம் டி பிளிஸ்... அப்புறம் குளிப்பேன்... அவள் மடியில் குறும்பாய் கண் சாய்கிறான்...

நீதி: ரொமான்ஸ் உள்ள வரை வாழ்க்கை தித்திக்கும்...

-பூங்கொடி

 

 

8.K2K00058

பாலாவின் காதல்

டேய் பாலா எப்படா ஊர்லயிருந்து வந்த ஒரு வார்த்த கூடசொல்ல மாட்டிர காலேஜ் போனதும் கண்டுக்கவே மாட்டிக்குர மச்சான் அப்பிடிலாம் இல்லடா நேத்து காலேஜ்லயிருந்து கிளம்பும் போதே மணிக்கு கால் பண்ணி ஊருக்கு வரேன் ஒரு வாரம் நல்ல என்ஜாய் பன்ரோமுன்னு சொன்னேன் டா அவன் எதுவும் சொல்லலையா, உனக்கு விசயம் தெரியாதுல மணி இப்ப காதல விழுந்துடான், என்டா விக்கி சொல்ற இது எப்ப நடந்துச்சு. அதான் டா நீங்க கூட ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு பொண்ண பாப்பிங்கல அந்த பொண்ணுதான் எப்பிடியோ பேசி அந்தபொண்ண காதலிக்க வெச்சுடான்டா டேய் வாங்க டா விளையாட போலாம்னு அருணும் மாதேஷும் சொல்ல எல்லோரும் விளையாட கிளம்பி போனாங்க.           

 மணி அங்க வந்து டேய் இங்க பாருங்கடா புதுசா வந்த 2000 நோட்டு சொன்னதும் எல்லாரும் வாங்கி பாத்துட்டு போட்டோ எடுத்து, வெச்சுகிட்டாங்க அப்பிடியே விளையாட போனாங்கா அப்ப பாலோவோட பள்ளி நண்பன் ஒருவன் ஸ்கூல் வாட்'ஸ்ஆப் குரூப்ல.

 2000 ரூபாய் நோட்டுடன் ஒரு புகைபடம் எடுத்து பதிவிட்டான் அத பாத்து பாலாவும் ஒரு புகைபடம் பதிவிட்டான், ஒரு வாரம் எப்படி போச்சுனே தெரியலனு புலம்பியடியே கல்லூரி நோக்கி தனது பேருந்து பயணத்தை தொடங்கினான்.

(பாலா விடுதிக்கு வந்த பிறகு தனது வாட்'ஸ் ஆப் ஓபன் பன்னிய போது ஒரு புது நம்பரில் இருந்து மெஸேஜ் வந்திருந்தது)

 புது நம்பர்: ஹாய் எப்படி இருக்கீங்க,       

 பாலா: நல்ல இருக்கேன் நீங்க. அப்றம் நீங்க யாரு உங்க நேம் சொல்லுங்க.

புது நம்பர்: என்ன தெரியலையா நாமலாம் ஒரே பள்ளியிலாதான் படிச்சோம் நீங்க பாலா தானே,

பாலா ஆமாம் ஆன நீங்க யாருனு தெரியலேயே, 

புது நம்பர்: என்ன பாலா அதுக்குதான் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திருந்தா நான் யாருனு தெரியும் நீங்க தான் எல்லாரு பின்னாடியும் வந்திங்கலே அப்ப எப்பிடி என்ன தெரியும்.

பாலா: அப்பிடிலாம் இல்ல நீங்க யாருனு முதல்ல சொல்லுங்க இல்லைனா நான் பேசமாட்டேன் என்று   கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றான் பாலா மாலை விடுதிக்கு வந்த பிறகு வாட்'ஸ் ஆப் ஒபன் செய்த போது அந்த பெண்ணிடமிருந்து வந்த ஒரு குருந்தகவல் பார்த்து பாலா அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் அப்போது அங்கு வந்த சரவணணிடம் மச்சான் பிரியங்கா மெஸேஜ் பன்னிருக்காடானு சொல்லி அவன்டா காட்ட அப்பதான் பாத்தா பிரியங்க தனனது புகைபடம் ஒன்றை அனுப்பியிருந்தால் அதை வெத்து தான் உறுதி படுத்திக்கொன்டான்.     

இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் அப்போது ஒரு நாள்,         

பாலா: நீ யாரையாவது காதலிக்கிராயா?         

பிரியங்கா: நீ சொல்லு நான் சொல்ரேன்     

 பாலா: ஆமாம் ஒரு பொண்ண ஐஞ்சு வருசமா காதலிக்குரேன்     

 பிரியங்கா: அப்பிடியா யாருடா அந்த பொண்ணு சொல்லவே இல்ல

பாலா: நம்ம கூட படிச்ச பொண்ணு தான் அந்த பொண்ணுக்கும் தெரியும்னு நினைக்குரேன் ஆன இன்னும் சொல்லல நீ சொல்லு 

 பிரியங்கா: நானும் ஒரு பையன காதலிக்குரேன் அவனும் என்ன தான் அவன நேருல பாத்து தான் சொல்லனும்னு இருக்கேன் பாக்கமுடியுமானு தெரியல.     

பாலா: ம்ம்ம் அந்த பையன் இன்னைக்கு ஊருக்கு வரான் நாளைக்கு கூட நீ சனிஸ்வரன் கோவிலுக்கு போவதானே அப்ப அவனும் அங்க வரலாம் அதுனால மரக்காம கோவிலுக்கு போகனும் சரியா. 

பிரியங்கா: நீங்க சொன்னா கன்டீப்பா போகவேன்டியது தான் அப்ப நாளைக்கு அவன பாத்துருலாம்.

பாலா: ஆமாம் ஆமாம் இரயில்வே ஸ்டேசனுக்கு வந்துடேன் நாளைக்கு சாங்கலம் ஐஞ்சு மணிக்கு அவன நீ பாக்க போர சரி தானே.

பிரியங்கா: ம்ம்ம்ம் நீங்க சொன்னா சரி தான்.

(பாலா தன் காதலி பிரியங்காவை பார்க்க செல்கிறான்)

இவர்களை இனைப்பதற்கு இயற்கையும் கூட ஒன்றாக இனைந்தது இது தான் காதல். 

பிரிட்டோ சச்சின் மரியா. வே

புதுக்கோட்டை.

 

 

9.k2k-00063

 தலைப்பு காதல்

தாரா விற்கு 13 வயது எட்டாம் வகுப்பு படிக்கிறாள். இன்னும் பருவம் அடையவில்லை .அவள் அம்மா தாராவின் ஜாதகத்தை அவள் அப்பாவிடம் கொடுத்து அவர்களுக்கு தெரிந்த பையனுக்கு ஜாதகம் பார்க்க கொடுக்கும்படி கூறினார் .அக்கால வழக்கப்படி பெண் பருவம் அடைவதற்கு முன்பு திருமணம் செய்து பின் இருவரும் அவரவர் வீட்டில் இருப்பார்கள் .பெண் பருவம் அடைந்த உடன் புகுந்த வீட்டிற்கு அனுப்புவார்கள் .அவ்வாறான திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர் பெற்றோர் .அப்படி எந்த பையனுக்கு ஜாதகம் கொடுத்தனரோ அந்தப் பையனை அவன்தான் உன் கணவன் என்ற எண்ணத்தையும் தாராவின் உள்ளத்தில் விதைத்தனர் .இதனிடையே தாராவின் ஜாதகத்தைப் பார்த்த பையனின் அப்பா இந்தப் பெண்ணிற்கும் என் பையனுக்கும் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம் ,ஆனால் அது இப்போது அல்ல ஏனெனில் என் பையனின் ஜாதகத்தில் கர்ம தசை உள்ளது .நான் இறந்து அவன் செய்ய வேண்டிய காரியத்தை திருமணம் நடந்தால் அப்பெண் இறந்து விடுவாள், நான் இரண்டு வருடம் உயிரோடு இருப்பேன். நான் வாழ்ந்து முடித்தவன் அப்பெண் வாழவேண்டிய வாழைக் குருத்து எனவே இத்திருமணம் நான் இறந்த பின் தான் நடக்கும் என்று கூறிவிட்டார் .ஆனாலும் தாராவின் மனதில் இவன்தான் உன் கணவன் என்று பதிமூன்று வயதில் விதைத்த விதை 17 வயதில் விருட்சமாக வளர்ந்து கிளைபரப்பி பூ பூத்து காய் காய்த்து கனிந்து நின்றது. ஏதோ காரணத்தினால் தாராவின் அம்மா வேறு பையனை மணமுடிக்கலாம் என்று கூறியபோது என் கணவன் என்று என் பதிமூன்று வயதில் அவனை நினைத்து காதலிக்க தொடங்கி, கணவனாக நினைத்து வாழ ஆரம்பித்து விட்டேன். இனி யாரையும் என்னால் நினைக்க முடியாது ,மறக்க முடியாது என்று கூறி தங்களின் இருவீட்டாரின் சம்மதத்துடன் யாரை காதலித்தாலோ அவனையே மணமுடித்து காதலில் வெற்றி பெற்றாள் தாரா.

                இவள் அனுராதா.

 

 

10.K2K-00068

ஒரு ஆண்கள் படிக்கும் பள்ளியில் ராஜ் படித்து வந்தான். 

11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் போது சக நண்பர்கள் அவனுடன் சேர்ந்து மாலை நேரத்தில் அவள் பாக்குறா பாருடா என்று உணர்ச்சி வசப்பட்டு அவன் உணர்ச்சியை தூண்டி விட்டனர் 

அவனுக்குள்ளே ஆசை துளிர் விட ஆரம்பித்து, ஒரு வழியாக 12 ஆம் வகுப்பு முடித்தான், கல்லூரியில் சேர்ந்தான், அவன் சேரும் போது தான் Co. Ed என ஆரம்பித்தது, அவனுக்கு பெண்களைப் பார்த்ததும் பேசுவதற்கு கூச்சசுவாசத்துடன் இருந்தான். 

மாணவிகளிடம் சிலர் வலி ஜொல்லு வடிக்கிறான்கள் என்று பேசிவிட்டு அவனும் அவர்களை ரசிக்க ஆரம்பித்தான், வீட்டிற்கு வரும்போது வீட்டின் எதிரே ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை. 

அங்கே ஒரு அழகான ஐஸ்வர்யா போன்ற பெண் அந்த வயதில் அவனுக்கு, அவளும் நோக்கினாள் அவனும் நோக்கினான், இவன் மனதில் வானத்தின் எல்லைக்கே போன மகிழ்ச்சி; தீபாவளி பண்டிகை மற்ற பண்டிகை நாட்களில் பந்தாவாக வான வேடிக்கை காட்டுவான், 3 ஆண்டு கல்லூரி படிப்பும் முடிந்தது. 

அவள் கூடவே அவள் தங்கை அவன் வீட்டை கடந்து செல்லும் போது அவள் பார்க்க வேண்டும் என்பதற்காக தங்கையை பெயர் சொல்லி கூப்பிடுவான். அவள் கடைக்கண் பார்வை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனால் இது வரை அவளிடம் அவன் பேசியதில்லை. 

நாட்கள் சென்றன; வேலை பார்த்து அவளை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தான்; ஆனால் அவள் அவனை விரும்பவில்லை அவன் வீட்டு பக்கத்து வீட்டுக்காரனை விரும்பினாள். அவர்கள் இருவரும் திருமணம் செய்து விட்டார்கள், ஒரு பக்கமாக பார்த்தவன் அவன் பின்பக்கம் பார்க்கவில்லை. 

மேற்படிப்பு படித்தான் அப்போது பெண்கள் அதிகம் ஆண்கள் குறைவு, படிப்பு இறுதியிலே அவனிடம் ஒரு பெண் பேச ஆரம்பித்தாள், அவனும் பேச ஆரம்பித்தான். இருவருக்கும் பிடித்திருந்தது, வீட்டில் கூறினான் அவனுடைய தாய்மாமா நீ ஒரு வேலை அவள் ஒரு வேலைல இருந்தா இரண்டு பேர் நல்லா சம்பாதித்து வாழலாம் என்றார். அவள் படித்து முடித்தவுடன் அவளுக்கு திருமணம். ஏனெனில் அவள் தந்தை இறக்கும் தருவாயில் இருந்ததால் வேகமாக முடித்து விட்டார்கள். 

ஒரு தலைக்காதல் என்றாலும் இரு தலைக்காதல் என்றாலும் இப்படி தருதலையாக சுற்றுவதுதான் நம் வாழ்க்கையா என்று இருந்தான். 

ஆட்டோகிராப் திரைப்படம் போல அவன் வாழ்க்கையும் போனது. வேலை கிடைத்தும் பெண்கள் இவனை விரும்பினாலும் விருப்பம் இல்லாமல் இருந்தான். இவனுடைய தாய்மாமா வழிகாட்டுதலினால் 35 வயதில் திருமணம் செய்து கொண்டான், அவர் கூறிய வார்த்தை திருமணம் செய்த பின்பு காதலித்துப்பார். அப்போது தான் வாழ்க்கை இனிக்கும் என்றார். உண்மையில் அது தான் ஒரு நல்ல காதலாக இருந்தது. ஒருவருக்கொருவரின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழ்வது உண்மையான காதல்.

JEYA RAJ

 

 

11.K2K00069

 காதல்

மெக்சிகன் சம்பங்கி மலர்களின் நறுமணத்தை அங்கிருந்த சின்ன ஜன்னலின் வழி நுழைந்து பின் இலைகளை அசைத்து இசையமைத்த தென்றல் தாங்கி அந்த பச்சைக் கண்ணாடி வீட்டை நிறைத்திருந்தது. ஆனால் தனியான கண்ணாடி பெட்டியில் வளர்ந்திருந்த விலையுயர்ந்த அந்த ஓர்கிட் செடியில் இன்னும் பச்சையாக இருந்த நீளமான வனிலா அவரைகளை கண்களால் பருகியபடி காலைத் தேனீரை உறிஞ்சினாள் மதுரா.

"மது, மருத்துவமனைக்கு போக வேண்டுமே, தயாரா? "

நந்தனின் உறுதியான குரல் அவளது அமைதியை கலைக்க பலூனாக உப்பியிருந்த வயிறை மெல்லிய புன்னகை தவழ தடவினாள். நந்தன்-மதுரா வின் காதல் தந்த பரிசல்லவா அந்த மழலை.

தூய வனிலாவின் நிறத்தை மிகைப் படுத்துவது போல அவளது மனதின் தைரியம் கண்களில் ஒளியை நிறைத்திருக்க ஞாபகங்கள் வருடத் தொடங்கின. நடுங்கிய கரங்களால் சக்கர நாற்காலியைத் தொட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு!

        காரில் ஏறுவதற்குக்கூட மற்றவரின் உதவி அவளுக்குத் தேவை என்ற எண்ணத்தில் பௌர்ணமி நிலவாக வடித்த அவளது வதனம் லேசாக வாடியது. தன் தேவைகளை தானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உந்தினாலும் அவளால் பயன்படுத்த முடியாத கால்கள் அவளுக்கு மற்றவர்களின் இரக்கத்தை மட்டும் தான் பெற்றுக் கொடுத்தன.

என்னதான் கடின முயற்சியால் படித்து நல்ல ஒரு உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலையில் இருந்தாலும் ஊனமுற்றவளாக முடங்கி மௌனித்து மனிதர்களைத் தவிர்த்து இயற்க்கையுடன் பேசத் தொடங்கி இருந்தவளுக்கு செடிகளின் மேலிருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவள் ஆசையை கண்ணாடி வீடாக மாற்றினான் நந்தன். நந்தனின் மேல் அவளுக்கு அப்போது தான் முதலில் ஆர்வம் தோன்றியது. ஆர்வம் அன்பாகி நட்பாகி காதலாகிக் கனிந்த போது அவளது மௌனம் கூட அவனிடம் அரட்டையடிக்கத் தொடங்கியது.

இளவயதிலேயே பலர் சான்றாக எடுக்கும் அளவிற்கு தன் கடுமையான முயற்சியால் உணவுத் துறையில் தனக்காக ஒரு பதக்கத்தைப் பதித்தவன் ஊனமுற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்ய எடுத்த முடிவு பலரால் விமர்சிக்க பட்ட போதிலும் மதுராவையே திருமணம் செய்து கொண்டான். அப்போது தான் அவள் காதலை அதிகமாக நம்பத் தொடங்கினாள்.

மதுரா தனது செடி ஆராட்சிகளை சுதந்திரமாகச் செய்ய தொடங்கிய போது அவளின் வித்தியாசமான தேன் வனிலா பழவகைக் கேக் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற அவளது ஊனத்தை விடுத்து திறமையை பார்க்கத் தொடங்கியனார்கள். தன் யோசனைகளில் மட்டுமின்றி சாதனைகளிலும் அவனிருக்கிறான் என்று அவள் உணரத் தொடங்கினாள்.

"என்ன யோசனை மது? இங்கே வா" நந்தன் அவளது யோசனைக் கண்களைப் படித்திருக்க வேண்டும். அவனது குரலில் ஒரு கனிவிருந்தது. அது காதலின் கனிவு என்று காற்று வனிலாஅவரைகளுக்கு சொல்லி இருக்க வேண்டும்! அவை இலைகளுக்குள் பாதி மறைந்து எட்டிப் பார்த்தன.

- Vilia

 

 

12.K2K00078

. காதல்

#######################

இன்று அவன் வருவான் என எண்ணிக் கொண்டிருந்தாள் சங்கீத்தா. சட்டென பின்னின்று யாரோ! அவளை அணைத்ததென உணர்ந்த ஒரு இன்பம்.. ஆசையில் அவன் அணைத்தது இவளுக்கு அருவருப்பாக இருந்தது. அணைப்பிலிருந்து திமிறினாள். தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள். சங்கீத்தா அணைத்தது கமலன் அல்ல. மாறன் என்பதை உணர்ந்தாள். உடல் முழுதும் வியர்வை கண்டது. வாய் உலறியப்படி கட்டலில் இருந்து தொப்பென விழுந்தாள்.

கிழக்கு வெளுத்தது உதயம் கண்டது. எழுந்தது முதல் ஏதோ ஒரு அச்சம். அவள் மனதில் நீங்காமல் இடம் பிடித்துக் கொண்டது. அன்று பள்ளி விடுமுறையை கழிக்க, சங்கீத்தாவின் மாமா மகள் கவிதா வந்திருந்தாள். சங்கீத்தாவை விட மூத்தவள் கவிதா. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். தேனீர் அருந்திவிட்டு இருவரும் பேச ஆரம்பித்தார்கள். கண்ணீல் சோர்வும், மனதில் பயமும் கொண்டிருந்ததை உணர்ந்த கவிதா. சங்கீத்தாவைப் பார்த்து, உடல் நிலை ஏதும் உனக்கு சரியில்லையா? என்றாள்.

இல்லை .....

இல்லை....

'மனநிலைதான் சரியில்லை' என்றாள் சங்கீத்தா, கவிதா மனதில் உள்ளதை தயங்காமல், மறைக்காமல் கூறு என்றாள்.

கமலனும், மாறனும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் நாங்கள் மூவரும் ஒன்றாக தான் இருப்போம்.

இதே ஊரில் பக்கத்து தெருவில் கமலன் வசிக்கிறான். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். தாயின் அன்பிலும், அரவணைப்பிலும் வளர்ந்தவனாவான். வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பம் என்பதனால், அவன் தன் தாயின் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசியதில்லை. கூலிவேலை செய்து கஞ்சிக் குடிக்கும் தலைமுறை தன்னோடு முடிய வேண்டும் என்ற அவா! அவனுடைய தாய் மனதிலுள்ளது. பள்ளியில் யாருடனும் அதிகம் பேசமாட்டான். அவனுக்கு நெருக்கமென்றால், நானும் மாறனும்தான்.

யன்னல் வழியாக எட்டிப் பார். நீல கலர் வர்ணம் பூசிய வீடு தெரியும். அதுதான் மாறனின் வீடு. அவனது தந்தை, தாய் இருவரும் வெளிநாட்டில் பணி புரிகிறார்கள். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வந்து போவார்கள். இவனை வளர்த்தது, படிக்க வைத்தது, எல்லாமே தாத்தா, பாட்டி. குறும்புத்தனம் கொண்ட மாறனுக்கு பெற்றோர்களின் அன்பு கிடைத்ததே இல்லை. அதனை நானும் கமலனும் மாறன் பேசும் போது அறிந்துள்றோம்.

நாங்கள் மூவரும் சோதனையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுக்கொள்வோம். மாறன் நன்றாக கிரிகட் விளையாடுவான். நானும் கமலனும் அவனது ஆட்டத்தை பார்த்து, மேலும் உச்சகப்படுத்திக் கொண்டிருப்போம். உணவகத்தில் ஒன்றாக உண்ணுவது. பள்ளிக்கு செல்வது முதல் வீடு திரும்புவது முதல் மூவரும் ஒன்றாக தான் செய்வோம்.

இப்படிப்பட்ட நட்பில் காதல் மலர ஆரம்பித்தது, ஒருநாள் பல்வலி காரணமாக, அன்று நான் பள்ளிக்கு செல்லவில்லை. நீண்ட நாட்களாக மாறன் கமலனிடம் தனியாக பேச திட்டம் போட்டுள்ளான். அன்று அது நிறைவேறியது. உணவகத்தில் கமலனை சந்தித்த மாறன்.

"கமலா.....ஓங்கிட்ட ஒன்னு சொல்லனும், "என்னடா மச்சா... சொல்லு."

"எப்டி சொல்றதுனு தெரியல... சங்கீத்தாவ நா லவ் பன்றே. நீதா மச்சா எல்ப் பன்னனும்"

"ம்ம்ம்ம்ம்...." சிறிது நேரம் மௌனமாக இருந்தான்.

மாறன் விடாது பேசத் தொடங்கினான். இந்த முறை விடுமுறைக்கு முன்பு, என்னிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறான்.

"நீ தா மச்சா.....

உதவனு"

"நானா"

"ஆமா" என்றான் மாறன்.

நாளை வெள்ளிக்கிழமை என்பதால், அவள் கூட்டுப்பிராத்தனை முடிந்ததும், தனியாக வகுப்பறைக்கு செல்வாள் அப்போது நீதான். என் காதலை அவளிடம் பக்குவமாக சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளான்.

கமலன் எதுவும் பேசாது வீட்டிற்கு சென்றுவிட்டான். அன்றிரவு அவன் தூங்கவே இல்லை. மாறனின் காதலை எவ்வாறு சொல்வது என்று தெரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தான். தன்னையறியாது கமலன் தூங்கிவிட்டான்.

"கமலா....

எழும்பு, பள்ளிக்கு போகலயா?"

'இதோ வாறே மா'

அவசர அவசரமாக புரப்பட்டுச் சென்றான். பள்ளிவாசலில் நானும் மாறனும் காத்துக் கொண்டிருந்ததை கண்டவன். அப்படியே நின்றான்.

"வா மச்சா!"

தயக்கத்துடன் சென்றான். மூவருமாக கூட்டுப்பிரத்தனைக்கு சென்றோம். என் மனதிலுள்ளதை இறைவனிடம் கூறினேன்.

"கமலனிடம் காதலை சொல்ல தயக்கமாக உள்ளது. என் காதலை நீதான் அவனுக்கு உணர்த்த வேண்டும்" என வேண்டினேன்.

"நீ என்ன சொல்ற"

"ஆமா நா கமலன லவ் பன்றே"

"சரி மேல சொல்லு"

"ம்"

கூட்டுப்பிராத்தனை முடிந்தது, வகுப்பிற்கு செல்ல முதல் படி இறங்கினேன். மாறனின் நச்சரிப்பு தாங்காது, என் பின்னால் வந்தான் கமலன் பின்தொடர்ந்ததை பார்த்த நான் அப்படியே நின்றுவிட்டேன்.

"சங்கீத்தா ஒன்னு சொல்லனு"

"சொல்லு."

"லவ்"

என்று ஆரம்பித்தான்.

நான் அவன் கூறவந்ததை முழுதாக கேட்கக் கூடாத பொருமையில்லாமல், நானும் உன்னை காதலிக்குறேன். என்று கூறி கமலனின் கையை பிடித்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் எனது கைகளை மெதுவாக உதறிவிட்டு, வகுப்பறைக்கு சென்றான்.

"என்ன மச்சா சொல்லிட்டியா?

"ம்ம்ம்ம்ம்"

"ஓகே வா!"

"ம்ம்ம்ம்ம்" என்றான்.

கமலன் மாறன் கேட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் முகத்தை பார்க்காமல், ம்ம்ம்ம் என பதிலளித்தான்.

நானும் மாறனும் காதலை சொல்லிவிட்டோம் என்ற சந்தோசத்தில் இருந்தோம். நான் கமலனை பார்க்க, மாறன் என்னை பார்க்க, கமலன் மண்ணை பார்த்து அமைதியாக நடந்து வந்தான்.

நாட்கள் கடந்தது. என்னுடைய புத்தகத்தின் உள்ளே " உன் இதழ்களை சுவைக்க நான்" என எழுதியிருந்தது. கையெழுத்தினை பார்த்தேன் அது மாறனின் எழுத்துக்கள் உடனே... கமலனை தனியாக அழைத்து கடிதத்தை காட்டினேன். கமலன் நடந்தவற்றை கூறினான். மாறன் என்னை காதலிப்பதையும், அன்று அவனுடைய காதலை கூற வந்தபோது தான். நான் கமலனும் என்னை காதலிப்பதாக புரிந்துக் கொண்டதையும்.

நான் ஒன்றுமே பேசாது அங்கிருந்து நகர்ந்து விட்டேன். பரீட்சையும் ஆரம்பமாகிவிட்டது. இருவருமே என்னிடம் சரியாக பேசுவதில்லை.

"கவலைப்படாதே... விடுமுறை முடிந்ததும் மீண்டும் உன் காதலை கமலனிடம் கூறு என்றாள் கவிதா.

ம்ம்ம்

இன்று அதிகாலை ஒரு கனவு. அப்படி எதுவும் நடந்தால், நான் உயிரோடவே இருக்கமாட்டேன்.

நட்புக்குள் காதல் வருவது சகஜம். ஒருதலைக்காதல் புனிதமானது. பல தடைகளை தாண்டி வரும். காதலை சொல்வதும் ஒருவித மனவலிமைதான். இருதலைக்காதல் போல ஒருதலைக்காலும் இம்மண்ணில் வாழும்.

-Indhuja

 

 

13.K2K00079

. சிகப்பு விளக்கில் கண்ணம்மா

சிரிப்பும் கும்மாளமும் செயற்கையாய் இருந்த அந்த இடத்தில் சற்றே நெளிந்து உட்கார்ந்தான் சிவா.

"மதன்..ஒருமாதிரி இருக்குடா..போயிடலாமா.."

"சரியாப்போச்சு போ..இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தது சும்மா திரும்பி போறதுக்கா..களவும் கற்று மறன்னு சொல்வாங்க..அனுபவி சிவா..பிடிச்சிருந்தா கன்டினியூ பண்ணு..இல்லேன்னா ஸ்டாப் பண்ணிக்கோ..நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்"

அதற்குள் வளையலணிந்த கரமொன்று மதனை அழைத்துச் செல்ல, சிவாவை அழைத்தது சிங்கார குரலொன்று... "உள்ளே வாய்யா..கதவு திறந்துதான் இருக்கு.." எதிரில் இருந்த அறைக்கதவு விரிய தயங்கி நடந்தேன் நான். அரையிருட்டு வெளிச்சத்தில் உள்ளே நுழைந்ததும் சட்டென சாத்தப்பட்டது கதவு.

இடுப்பை அணைத்தது வளைக்கரம்..சொல்ல முடியாத அவஸ்தையில் உடல் நடுங்க வளைக்கரத்தை விலக்கினேன். தப்பு..மதன் பேச்சைக் கேட்டுக்கொண்டு இங்கு வந்தது தப்பு...

"என்னய்யா முதல் தடவையா.."

'ஆமாம்.. 'என்பதாய்த் தலையசைத்தேன்.

பளீரென விளக்குகள் ஒளிர்ந்தன.. சித்திரம் போன்ற முகம்.. கூரிய விழிகள்..என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.. அழகான அந்த முகத்தில் அந்த இடத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத தெய்வீகக்களை.. 'சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா ..'மனம் தாளமிட்டுப் பாடியது. அவளோ அவனை முறைத்துப் பார்த்தாள்.

"நான் வேணா வெளியே போயிடட்டுமா.." பதற்றத்தோடு கேட்டான் சிவா.

"வேண்டாம்யா.. நீ போனா இன்னொருத்தன் வருவான்.. சின்ன வயசு ..உனக்கு விருப்பமில்லையா.. இல்ல என்னைப் பிடிக்கலையா.."

"உன்னைப் பார்த்தா..பாரதியின் கண்ணம்மாவைப் பார்த்த மாதிரி இருக்கு..தப்பு பண்ண தோணலை.." கடகடவென வாய்விட்டு சிரித்தாள் அவள்..வெண் முத்துகளைக் கொட்டியது போல..

"இப்படித்தான் ஒருத்தன் கவிதையா பேசினான்.. நம்பி பதினாறு வயசுல ஓடி வந்தேன்.. ஓடிவந்த இரவோட அவன் கதை முடிஞ்சுடுச்சு..இதோ நாலு வருசமா...தினமும் ஒருத்தனுக்குப் பொண்டாட்டியா வாழறேன்..எவனும் கண்ணம்மான்னு கூப்பிட்டதில்ல..நாலு நடிகை பெயரை சொல்லுவானுங்க.. நானும் சிணுங்கி வளைஞ்சு சரசம் பண்ணுவேன்.. காலையிலே காசை எறிஞ்சுட்டு போயிடுவாங்க...நீ என்னடான்னா..நேரத்தை வீணாக்கிட்டு உட்கார்ந்துட்டிருக்க..", வேண்டுமென்றே முந்தானையை உதறிப் போட்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

"உன் பெயர் என்ன.." நான் கேட்டதும் வியப்பாய்ப் பார்த்தாள்.

"கதை எழுதப்போறீயான்னு தெரியலை..இந்த ரூம்ல அதிகமா பேசினவன் நீதான்..சரி இந்த ராத்திரியாவது நான் கைபடாத ரோஜாவ இருக்கேன்.. பேர்தானே கேட்டே.. சாதனா.. ஊரு திருநெல்வேலி.. படிப்பு பத்தாங்கிளாஸ் வேற எதுவும் கேட்காதே.."

"உனக்கு இந்த தொழில் வேண்டாம் சாதனா..பெண்மையை இழிவுபடுத்தற இடத்துல நீ இருக்ககூடாது....", "ஏன்.. உனக்கென்ன வந்தது.. இதை விட்டுட்டு வேற தொழிலா..ரோட்டோரத்துல இட்லி சுட்டு விக்கவா...அப்பவும் வர்றவன் இட்லிக்காக வர மாட்டான்.. எனக்காகத்தான் வருவான்..உடம்பெல்லாம் ஒரே வலி..ரெண்டு நாளா சரியா தூக்கமில்ல.. நான் தூங்கறேன்..நீ என்னவேணா பண்ணிக்க.." ஒருக்களித்து தூங்கும் அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். விடிந்ததும் ஆச்சரியப்பட்டாள்..

"இப்படியேவா உட்கார்ந்துட்டிருந்த.. சரி நீ கிளம்பு..அடுத்த ஆள் வர்றதுக்குள்ள நான் குளிச்சு ரெடியாகணும்.."

நான் அவள் கைகளிரண்டையும் அழுந்த பற்றினேன்.. "சாதனா எனக்கு உன்னைப் புடிச்சிருக்கு..நான் உன்னை விரும்பறேன்..", அவள் எதையோ சொல்ல வாயெடுத்தாள்.

"அவசரப்படாதே..ஒருவாரம் கழிச்சு வரேன்..நல்ல முடிவா சொல்லு.. "வெளியே வந்துவிட்டேன். மதன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

"என்னடா ..இப்படி பண்ணிட்டியே.. பணம் வீணாப்போச்சே..பத்தாதுக்கு கண்ணம்மா..பொன்னம்மான்னு உருகிகிட்டிருக்க..வெளியே கேட்டா சிரிப்பாங்க..ரெட்லைட் ஏரியா பொண்ணுங்களைப் பார்த்ததும் தலை முழுகிடணும்..அதான் குடும்பத்துக்கு நல்லது..காதலாவது கத்திரிக்காயாவது..போ போயி வேலையைப் பாரு.."

சதைப்பிண்டமாய் பெண்களைக் கருதும் மதனிடம் எதைச்சொல்லி புரியவைப்பது..

யார் எதைச் சொன்னாலென்ன..எனக்கு சாதனாவைப் பிடித்திருக்கிறது..காதல்தான்.. எனக்கு பாரதியின் கண்ணம்மாவாகத் தெரிகிறாள்..அவள் என்னுடையவள் மனம் சொல்கிறது.. ஊரும் உலகமும் தூற்றினாலென்ன நான் தீர்மானித்துவிட்டேன்.. தொடர்ந்து அவளைத் தேடி சென்றேன்.. அவளின் உடலுக்காக அன்று..மனத்தை வசப்படுத்த.. அவளும் கனிந்தாள்.. மொழிந்தாள் என் பெயரை வாழ்க்கைத்துணையாக..

எட்டு மாதங்களுக்குப் பிறகு கண்ணம்மாவுடன் வேறு ஊரில் தொடர்கிறது எங்கள் வாழ்க்கைப் பயணம்..ஆம் அவளுக்கு கண்ணம்மா எனப் பெயர் சூட்டியிருக்கிறேன்..குட்டிக் கண்ணம்மா வளர்கிறாள் வயிற்றில் ..எங்கள் காதலின் நினைவுச் சின்னமாய்.. இப்போதும் ..எப்போதும் ..அவளைக் காதலித்துக் கொண்டேயிருக்கிறேன்.. காதலிப்பேன்...காதல் வாழ்க!

கருத்து: காதல் களங்கமில்லாதது.. விதிவசத்தால் உடலால் களங்கப்பட்ட பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கி கொள்பவன் தெய்வத்திற்கு சமம்.

பெயர் கி. இலட்சுமி

 

 

14.K2K 00080

காதல்

இமயன் வழக்கம் போல அலுவலக வேலைகளில் தன்னை மறந்து மூழ்கியிருந்தான். எல்லா விதத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட் இமயன். வீட்டுக் கடமைகளிலும், ஆஃபிஸ் வேலைகளிலும் அவ்வளவு நேர்த்தி;

அப்பா இல்லாத வீட்டின் தலைமகன் என்றால் சும்மாவா? படிப்பு ஆசைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அப்பாவின் அலுவலகத்தில் கிடைத்த வேலையை ஏற்றுக் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் தலையில் சுமந்தான்.

தம்பி உதயன் இதோ படித்து முடித்து விட்டு வேலையிலும் சேர்ந்து விட்டான், தங்கை இந்த வருடம் டிகிரி வாங்கி விடுவாள். அவர்களுடைய கல்யாணத்தை முடித்து விட்டால் பொறுப்பு குறையும்.

வேலை, கடமை என்று மூழ்கிக் கிடப்பவன் தன்னுடைய வாழ்வைப் பற்றி மட்டும் யோசிக்கவேயில்லை. அம்மா தான் புலம்பிக் கொண்டே இருப்பாள். முதலில் கல்யாணப் பேச்சைத் தட்டிக் கழித்து வந்தான். இப்போது அதிக வயதாகி விட்டது. பெண் கிடைப்பது கஷ்டம் என்று தனக்குத் தானே முடிவெடுத்துத் தனது உணர்வுகளை மறைத்து வாழ்கிறான். அவனுடைய ஆஃபிஸில் புதிதாக ஒரு பெண் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.

பட்டாம்பூச்சி போலச் சுற்றி வந்து எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகி இனிமை பரப்பும் தேவதை. இமயனின் பார்வையும் அவள் மேல் பட்டது. அவளுடைய பண்பும் அன்பான குணமும் அவன் மனதைக் கவர்ந்தன.

"இந்த மாதிரி கலகலப்பான ஒரு பெண் நம்முடைய தங்கை கல்யாணம் ஆகிப் போவதற்கு முன்னால் நம்ப வீட்டிற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?",

என்று நினைத்த மனதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை, அவன் தனக்காக யோசிக்கவில்லை; தன்னுடைய தம்பி உதயனுக்காகத் தான் நினைத்தான்.

அடிக்கடி கண்கள் அவளைப் பார்ப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. அலை பாயும் அவனுடைய மனதை அங்கு வேலை பார்த்தவர்கள் நோட்டமிட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். வம்புப் பேச்சு ஆரம்பித்து விட்டது.

"விசுவாமித்திரர் தவத்தைக் கலைக்க மேனகை வந்தாச்சு", என்று அந்தச் சின்னப் பெண்ணைப் பார்த்து மற்றவர்கள் கேலி பேசியது அவனுடைய செவிகளிலும் விழுந்தது.  மனம் வருந்தினான். தன்னைத் தானே கூட்டுக்குள் குறுக்கிக் கொண்டான், பாவம் சின்னப் பெண், அவள் காதுகளிலும் இந்தப் பேச்சு விழுந்திருக்கும், நம்மைப் பற்றித் தவறாக எண்ணியிருப்பாளே என்று குழப்பம் மனதில், அவளை நிமிர்ந்து பார்ப்பதையும் அவளுடன் பேசுவதையும் தவிர்க்க ஆரம்பித்தான்.

ஒரு நாள் மாலை அவளே தயயக்கத்துடன் அவனிடம் பேச வந்தாள், ஆஃபிஸில் இருந்து எல்லோரும் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரம். அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

" மன்னிக்கவும்!! நீண்ட நாட்களாக உங்களிடம் பேச நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன், என்னைத் தவறாக எண்ண வேண்டாம்", என்ற பீடிகையுடன் ஆரம்பித்த அவளுடைய முகத்தைக் கலக்கத்துடன் பார்த்தான்.

" நானும் உங்கள் தம்பி உதயனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம், மூன்று வருடங்களாகக் காதலித்து வருகிறோம், அண்ணன் கல்யாணத்திற்கு அப்புறம் தான் நம்ப கல்யாணம் னு உதயன் ஸ்ட்ரிக்டாச் சொல்லிட்டார்; அப்பா கல்யாணத்துக்குப் பாக்க ஆரம்பிச்சுட்டார். எனக்கு என்ன செய்யறதுன்னு புரியலை", என்று அவள் சொல்லி முடிக்க இமயன் மனமகிழ்ந்து போனான்.

" நான் பேசறேன், உதயனை சம்மதிக்க வச்சுட்டு உங்க வீட்டில வந்து முறையாப் பொண்ணு கேக்க வரோம், நீ கவலைப் படாம போம்மா", என்று அவன் உறுதி கூறினான்.

" இல்லை அண்ணா, அது மட்டும் இல்லை, எனக்கு ஓர் அக்கா இருக்கிறாள், குழந்தையிலேயே அம்மாவைப் பறிகொடுத்த என்னை அம்மாவாகத் தூக்கி வளர்த்தவள், உங்களை மாதிரியே அவளும், எனக்கு வயதாகி விட்டது; திருமணமெல்லாம் வேண்டாம் என்று சொல்லித் தனியாக நிற்கிறாள், உங்களுக்கு சம்மதம் என்றால் இரண்டு திருமணங்களையும் ஒன்றாக முடித்து விடலாம்", என்று சொல்லி விட்டு அக்காவின் ஃபோட்டோவை எடுத்து அவனுக்கெதிரே வைத்தாள்.

ஃபோட்டோவைப் பார்க்காமலேயே சம்மதம் என்று தலையசைத்த இமயனின் உள்ளம் நிறைந்து போய் முகமும் மலர்ந்தது, காதலின் இனிமையை அனுபவிக்க வயது ஒரு தடையல்ல, தாமதமாக கதவைத் தட்டினாலும் இனிமை பரப்பத் தவறாது.

-புவனா

 

 

15.K2K 00081

காதல்

"அடுத்த வாரம் உன்ன பாக்க வரேன்னு மாப்பிள்ளை சொல்லியிருக்கார். பையன் டாக்டர். உன்ன நல்லா பார்த்துக்குவார். வேண்டாம்னு சொல்லாதே..." என்றாள் அம்மா.

சிந்து... நல்ல படிப்பு மற்றும் வேலை என்று அழகாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை. இருபத்தைந்து வயதானவுடன் திருமணப் பேச்சை ஆரம்பித்தனர் பெற்றோர்.

வயதுவந்த பருவத்திலிருந்தே காதல் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை சிந்துவுக்கு. இருப்பினும் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்ற பயத்தில் அப்படி எதுவும் செய்யவில்லை.

இப்பொழுது மாப்பிள்ளையும் வந்தாகிவிட்டது. ஒரு முறை அவரிடம் நேரில் பேசவேண்டும் என்றபோது பெற்றோர் திகைத்தனர். ஆனால் மாப்பிள்ளையே போன் செய்து நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்தார். சிந்துவுக்கு "அப்பாடா..." என்றிருந்தது. இருவரும் கோவிலில் சந்திப்பதாக முடிவானது.

கோவிலில்..

மாப்பிள்ளைப் பார்க்கக் களையாக இருந்தார். பார்த்த மாத்திரத்தில் டாக்டர் என்று சொல்லிவிடலாம். என்ன பேசுவதென்று அறியாமல் இவள் முழிக்க, அவரே ஆரம்பித்தார், "உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பீல் பொசிட்டிவ் அபௌட் திஸ் மேரேஜ். உனக்கும் சரின்னா ஓகே சொல்லிடு.."என்றார். பதிலுக்கு இவள் புன்னகையை உதிர்த்தாள்.

டக்கென்று எழுந்த அவர் தன் பையைத் திறந்து அவளுக்குப் பிடித்த சாக்கலேட்டு ஒன்றை கொடுத்தார். கூடவே இன்னொரு பரிசும் இருந்தது. "மை டெஸ்டினி இஸ் இன்ஸைட்" என்று அதன் மீது எழுதியிருந்தது. பிரித்துப் பார்க்கையில் உள்ளிருந்தது ஓர் கலைநயம் மிக்க கண்ணாடி, அதில் தெரிந்தது இவள் பின்பம். பார்த்த நொடியில் வெட்கித்தாள். தன்னை அறியாமலேயே அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டாயிற்று. திருமணம் முடிவாயிற்று.

இருவரும் தங்கள் அலைபேசியில் தினமும் பேசினர். ஆனால் அவர் மீது காதல் எப்போது உண்டானது என்று சிந்துவுக்கு தெரியவில்லை.

திருமணம் முடிவான அடுத்த நாள், எச்..வி டெஸ்ட் எடுத்து அதன் முடிவைத் தன்னிடம் கூறியபோதா? அவள் தாய்க்கு உடம்பு சரியில்லாதபோது உடனிருந்து ஒரு மகன் போல் கவனித்துக் கொண்ட போதா? அவள் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக அழைத்துச் சென்று ட்ரீட் வைத்தபோதா? வாரம் ஒருமுறை அவளோடு தன் நேரத்தைச் செலவிட்ட போதா? இவள் சாப்பிடாதபோது செல்லமாய் கோபித்த போதா? இவளுக்குப் பிடித்த மஞ்சள் நிறப் பூக்களைப் பரிசளித்த போதா? "ஒரு முறையாவது லவ் யூ சொல்லு.."என்று தினமும் கெஞ்சியபோதா? தன் எதிர்காலத்தை அவளோடு கற்பனை செய்து கதைகள் கூறியபோதா? இவள் விருப்பத்திற்கேற்ப தேனிலவுக்கு ஏற்பாடு செய்தபோதா?  திருமணத்திற்குப் பின் இவள் உத்தியோகம் குறித்து ஆலோசித்தபோதா? முதன்முறையாக அவள் கன்னம் கிள்ளி சிரித்தபோதா? அவளை ஓர் குழந்தை போல் கவனித்துக் கொண்ட போதா?

இவ்வாறு படுக்கையில் படுத்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள் சிந்து. தானாகத் தேடியிருந்தால் கூட இப்படி ஒரு மாப்பிள்ளைக் கிடைத்திருக்க மாட்டார் என்பது உறுதியாகத் தெரிந்தது.

அவர் பல நாட்கள் கேட்டும் கூறாததை இன்று கூறிவிட வேண்டுமென்று முடிவெடுத்தாள்.

சட்டென்று தன் அலைபேசியை எடுத்து

" லவ் யூ..." என்று டைப் செய்து தன் வருங்கால கணவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். இல்லறம் இனிதே ஆரம்பமாகியது.

முடிவுரை

காதல் ஓர் மாயாவி. எவருக்கு எப்போது உண்டாகும் என்று தெரியாது. அதை அணைத்துக் கொண்டாடுங்கள்!

Narmada

 

 

16.K2K-00085

காதல்:

அன்று தேர்தல் நாள், வானத்தைச் சுழ்ந்த மேகம் மழையைத் தூவிய படியே இருந்தது. வழி முழுவதும் இருள் கவ்வியிருந்தது. எங்கோ தூரத்தில், வெளிச்சம் ஒரு புள்ளிப் போல தெரிந்தது.

தேர்தல் காரணமாக, அனைத்து வகையான போக்குவரத்துக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. அது கூட ஒரு வகையில் நல்லது என்ற ஒரு மனநிலையில் தான் இருந்தான் அவன். அவ்வாறு உள்ள மனநிலையில்தான் அனைத்தையும் ரசிக்க தொடங்கினான்.

அவனை கடந்து சென்ற குல்பி விற்க்கும் பையனுடைய மிதிவண்டியின் மணி சத்தம், மழைச்சாறல் சத்தத்துடன் சேர்ந்து சங்கீதமாக ஒலித்தது அவனுக்கு. பெண்ணிற்கு குங்குமம் எவ்வளவு அழகோ, அது போலத் தான் வானுக்கு நிலா என்று வர்ணிப்பவனுக்கு,

அன்று கருநிற மேகங்களின் அழகு கருவாச்சி காவியத்தை நினைவுப் படுத்தியது. இப்படியாக எல்லாவற்றையும் ரசித்தபடி, இதழ்களில் புன்னகையுடன் நடந்து சென்று கொண்டிருந்தவனின் எண்ணங்கள் சட்டென்று பின்னோக்கி நகர்ந்தது, எங்கோ தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைப் போல.

வருடங்கள் பல கடந்து, இன்று அவளை சந்தித்தான் அவன்.  ஐந்து வருடங்கள் முழுதாக ஆகிவிட்டது. அவள், அவன் ஞாபகத்திலேயே இல்லாமல் போய்விட்டாள். இறுதியாக அவளின் அண்ணனின் நிச்சயத்தில் பார்த்தது. அவளின் அண்ணன், இவன் உயிர்த்தோழன்.

இன்று அவளைப் பார்த்தது மட்டுமல்ல, அவளுடன் சேர்ந்து பயணிக்கவும் செய்தான். ஒரு வகையில் மறக்க முடியாத பயணம் தான்.

தேர்தலுக்காக ஓட்டுப் போட ஊருக்கு சென்றவன், நண்பனைப் பார்த்துவிட்டு வரலாம், என்று செல்ல அவளையும் சந்தித்தான்.

அவளும் ஓட்டுப் போட வந்திருந்தாள். சமுதாயத்தைப் பற்றி அதிகம் பேசுவாள். எனவே, அவள் வருகை எதிர்ப்பார்த்த ஒன்று தான்.

இரவு புகைவண்டிக்குச் செல்ல இருந்தவன், அவளுக்காக மதிய வண்டிக்கே கிளம்பினான், ஏனென்றால் அவள் பயணச்சீட்டு பதிவு செய்யவில்லை.

சிறுவயதிலிருந்தே அவளை தெரியும் அவனுக்கு. அவளைப் பிடித்துப் போய் பெண் கேட்க, ஜாதகம் சரியில்லை என்று அவள் வீட்டினர் மறுத்துவிட்டனர். ஆனால் ஓருமுறை கூட அவளிடம், அவன் மனதிலிருப்பதைச் சொன்னதில்லை.

இப்போது அவனுக்கு திருமணமாகி, குழந்தை, குடும்பம் என்றாகிவிட்டது. அவன் சென்னையில் குடும்பத்துடன் குடியேறிவிட்டான். இந்த உலகத்திலேயே அனைத்தையும் விட அதிகமாக, அவன் தன் மனைவியை நேசிக்க ஆரம்பித்துவிட்டான்.

பயணம் முழுவதும், அவனுள் ஒன்றாகிப் போனவளான அவன் துணைவியைப் பற்றிய பேச்சுதான். ஒருநிமிடம், அவளின் கண்களில் பொறாமையை எதிர்பார்த்து, ஏமாந்துப் போனான்.

அவளும் ஏதாவதொன்றைப் பற்றிப் பேசியபடியே வந்தாள். வாயாடித்தனம், வளர்ந்தபிறகும் அப்படியே இருந்தது. எப்படி பயணம் சென்றதென்றே தெரியவில்லை, இருவரும் சென்னை வந்து சேர்ந்துவிட்டனர்.

அவன், சென்னை சென்ரலுக்கு முன்பே இறங்க வேண்டும், ஆனால் அவளிடம் அதை சொன்னால், அவனை அவள் முன்பே இறக்கிவிட்டுவிடுவாள் என்று தெரியும் அவனுக்கு. எனவே, அவளை அந்த இரவில் தனியாக அனுப்ப மனமில்லாமல், மறைத்துவிட்டான்.

சென்னை வந்தவுடனே, நீங்க எங்கே போகவேண்டும்? என்றாள், முதல் கேள்வியாக.

அவன், நான் பேசன் பிரிட்ஜ்- இறங்கியிருக்கணும் என்றவன், சிரித்தபடியே "தெரியும், சொன்னா நீ ஒத்துக்க மாட்டனு" என்றான்.

சரி நீங்க கிளம்புங்க, நான் பேருந்து ஏறி போய்க் கொள்கிறேன் என்றாள்.

மழை வருதுகிளம்புங்கஎன்றாள் வற்புறுத்தலுடன்.

சரி வா, நான் உன்னை பஸ் ஏற்றி விட்டுவிட்டுக் கிளம்பறேன், என்றான்.

சரி என்று செல்ல, அவள் செல்ல வேண்டிய இடத்திற்குப் போக பேருந்து இல்லை. எனவே அவள் நான் பாரிஸ் போய் பஸ் ஏறிக்கிறேன் "நீங்க கிளம்புங்க" என்றாள்.

 

ஆனால் அவனோ மறுத்து, அவளுடனே பாரிஸ்க்கு பஸ் ஏறினான்.

 இருவரும் பாரிஸ்க்கு வந்தப் பிறகு, அவள் அவனைக் கிளம்ப சொல்ல, அவன் பணத்தைக் கையில் திணித்தான் "வைச்சுக்கோ ஊர்க்காசு" என்றான்.

அவள், எனக்கு வேண்டாம், நானேவேலை பார்க்கிறேன்என்றாள் சிறு கர்வத்துடன்.

சிறுவயதிலிருந்தே அவளை தெரியும் என்பதாலோ என்னமோ, அவளை வேறுவீட்டுப் பெண்ணாக நினைக்க முடியவில்லை. அவள் கையில் எப்படியோ பணத்தைத் திணித்துவிட்டான்.

 அவள் பேருந்து ஏறிய பிறகும் கிளம்பாமல் மழையிலேயே நின்றுக் கொண்டிருந்தான், பேருந்து கிளம்பிய பிறகு செல்லலாம் என்று, பேருந்தை விட்டு இறங்கி வந்து, “கிளம்புங்க”, பேருந்து கிளம்ப நேரமாகும் போல இருக்கு, என்றாள்.

சரி நான் போறேன், நீ கிளம்பு "பேருந்து கிளம்பிடப் போகுது" என்றான். அவள் திரும்ப பேருந்து ஏறிய பின்பும், அவன் நின்றுக் கொண்டேயிருந்தான். அவள் நேரம், பேருந்து கிளம்ப, பத்து நிமிடத்திற்கும் மேலானது, பொறுமை இழந்து ஓட்டுநரையும் சபித்தாள்.

கண் மறையும் வரை, அவன் மழையில் நின்றுக் கொண்டேயிருப்பது தெரிந்து, அவள் கண்களை, கண்ணீர் மறைத்தது புரியாத உணர்வில்.

இன்று நடந்த அனைத்தையும் யோசித்தப்படியே நடந்துச் செல்ல, அவன் செல்லிடைப் பேசியில் குறுஞ்செய்தி, நிஜமாகவே "குறுஞ்செய்திதான் " “சேர்ந்தாகிவிட்டதா?" என்ற கேள்விக்குறியுடன். அவன் இன்னும் வீடு செல்ல தாமதமாகும், ஆனாலும் போய்விட்டதாகச் சொன்னான்.

அவளும் பத்திரமாகப் போய்ச் சேர்ந்ததாகச் சொன்னாள்.

அவனுக்கு தெரியும், இதுதான் அவளுடைய கடைசி செய்தியாக இருக்கும் என்று.

அவன் வாழ்க்கையில் எல்லாமே மாறிவிட்டது, அவளை இனி எப்போது பார்ப்பான் என்றும் தெரியாது, ஏன் பார்ப்பானா என்றே தெரியாது. அவளுடைய திருமணத்திற்குச் செல்லலாம், அதுவும் அந்த சுழ்நிலையைப் பொறுத்தது. ஆனாலும் ஏனோ ஒரு புரியாத உணர்வில் அவன் மனம் நெகிழ்ந்தது, அர்த்தமற்ற சந்தோசம்.

அவளும் அந்நேரம் அவனைப் பற்றித்தான், யோசித்துக் கொண்டியிருந்தாள். அவள் கண்களிலும் பொறாமை எட்டிப் பார்க்கத்தான் செய்தது, ஆனால் அவள் அதை காட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

அடுத்தநாள் முதல் வேலையாக, அவன் கொடுத்த பணத்தை, அவன் பெயர் சொல்லியே ஒரு அனாதை இல்லத்திற்கு கொடுத்ததுடன், அந்த பக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்து விட்டாள்.

சில நேரங்களில்

வாசிக்காமல் விடும்

இசை

எவ்வளவு

அழகானதோ

அதுபோலத்தான்

புரியாத இந்த உணர்வும்,

அழகானது மட்டுமல்ல

மனதின் ஏதோ ஒரு இடத்தில்

பசுமரத்தாணிப் போல

இருந்துக் கொண்டேயிருக்கும்.

இவர்கள், மனதில் மட்டுமல்ல..

எல்லோர் மனதிலும்

ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது

எப்போதும் சொல்லாத ஒன்று.

-மணிமுத்து

 

 

17.K2K - 00091

காதல்

"சிறுவயது முதலே கார்த்தி பாலின வேறுபாடு பாராமல் அனைவருடனும் சகஜமாக பழகுபவன் அதனாலே அவனை பலருக்கு பிடிப்பதுமில்லை"

"இப்படியே கார்த்தியின் வாழ்க்கை சென்றது, பள்ளி, கல்லூரி காலமெல்லாம் மிகவும் குதூகலமாமனவை நண்பர்கள், தோழிகள் என வாழ்வை அனுபவித்துக்கொண்டிருந்தான்", "இவனைப் பார்த்தால்  நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் கமிட்டட் என்ற பட்டம் கொடுத்துக் கொண்டே இருந்தனர் ஆனால் இவனோ சிங்கிள் பசங்க என கெத்தாக வெளியே கூறினாலும் உள்ளே சிங்கி அடித்துக்கொண்டுதான் இருந்தான்", "கல்லூரி முடித்து பல காலம் கடந்து ஒரு தேவதையை ஒரு நிகழ்வில் தற்செயலாக காண நேர்ந்தது, கண்டவுடன் காதலெல்லாம் இங்கில்லை மோதலில் தான் துவங்கியது,பின் பேசி பேசி பிடித்துப்போக அடுத்த முறை கார்த்தியும் ப்ரியாவும் சந்திக்க"

"அன்று முதல் வெளியே சொல்ல முடியாத காதல் பரவசம் உள்ளுக்குள், கார்த்தி கவிதை மழையில் நனைய வைத்தான் அவளை, அவளுக்கும் மிகவும் பிடித்துவிட்டது, ஆனாலும் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை"

"இருவருக்கும் முதல் காதல் என்பதால் அற்புதமான உறவு, ஆரோக்கியமான உறவாக மாறியது இக்காதல், ஒருநாள் மலைக்கு செல்ல வாய்ப்பு கிட்டியது, மலை உச்சி, அற்புதமான வானிலை, சுற்றியும் இயற்கை இவருவரும் ஒரே நேரத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்"

"பின் பல சவால்களை சந்தித்து வீட்டில் கூறி காதலில் பயணித்து கொண்டே இருக்கின்றனர், காதல் இருவரின் வாழ்வை அற்புதமாக மாற்றியது", "வாழ்க்கையில் காதலுக்காக காத்திருந்த இவனுக்கு, இவன் காதலே வாழ்க்கையாகி விட்டது",

"இக்கதையையை நான் தான் உங்களிடம் சொல்லிவிட்டு இருக்கேன் அட கந்தசாமி, இது என் நண்பன் கதை",

நீதி: காதலுக்கு காலம், வயது வரம்பெல்லாம் கிடையாது, நீ காதலை தேடுவதுபோல் அதுவும் உனைத் தேடிக்கொண்டே தான் இருக்கிறது, சரியான நேரத்தில் வரும், உன் வாழ்வை அற்புதமாக மாற்றும்.

🏼 அசோக் குமார் சுதர்சனம்

 

 

18.K2K00093

காதல்

ஒவ்வொரு பருவக் காதலும் தனக்கே உரிய தனி சுவை கொண்டிருந்தாலும் கல்லூரியில் அடியெடுத்து வைத்ததும் இளமை ததும்ப ஏராளம் ஆசைகளையும் ஏக்கங்களையும் உள்ளடக்கிய கல்லூரி காதல் என்றும் இனிமை தான் இல்லையா? அஷ்வித்தா பொரியியல் முதலாமாண்டு... கண்களில் பல்லாயிரம் கனவுகளோடு கல்லூரி வாசலில் அடியெடுத்து வைத்த 10000 இளைஞர்களுள் அவளும் ஒருத்தி... அஷ்வி படு சுட்டி ஆனாலும் படிப்பில் கெட்டி என அவளை பாராட்டாத ஆளே இல்லை... பள்ளிகூட கதைகள் பட்டணத்து நண்பர்கள் என முதல் வருடம் உருண்டிருந்தது...  கல்லூரி விழா பொழுதுகள் என்றாலே அஷ்விதாவிற்கு திருவிழா தான்... அவனை சந்திக்க வைத்த அந்த பாடல் குழுவிற்கு எத்தனை முறை நன்றி கூறி இருப்பாள்.. யெஷ்வந்த் அதே கல்லூரியில் வேறு பிரிவு... அதிகம் யாரிடமும் பேச மாட்டான்... பாட்டு மீது அத்தனை ஆவல்... அனைத்து தமிழ் பாடல்களும் அத்துபடி...  காலையில் அயர்ன் செய்த சட்டை மாலை வீடு திரும்பும் வரை கசங்கி அவள் பார்த்ததேத இல்லை.. கூடை பந்து விளையாட்டு அவனுக்கு அவ்வளவு இஷ்டம்... எந்த பெண்ணிடமும் எல்லை மீறி சிரிக்க கூட தெரியாது அவனுக்கு... அஷ்விதாவை அவனுக்கு தெரியும் என்றாலும் பேசியதே இல்லை... ஒருமுறை பெண்மை பற்றிய அவனது கவிதை நோட்டிஸ் போர்டில் பாராட்டு பெற்றதில் இருந்து தான் அவன் மீதான இந்த ஆர்வம் துளிர்த்திருந்தது... இப்போது இனம் புரியாத அன்பாகவும் உருவெடுத்திருக்கிறது..  தினமும் காலை 7.30 மணிக்கு  B12 பேருந்திற்காக நிறுத்தத்தில் அவனது நிழல் புலப்படும் வரை நிலத்தில் கால் படாது அவளுக்கு... என்றோ ஓர் நாள் எதார்த்தமாக இருவரும் ஒரே நிற உடை அணிந்து சென்றிருந்தால் அஷ்விதாவை கையிலே

பிடிக்க முடியாது... இவ்வாறாக கழிந்தது 3 வருடம்... கடைசி வரை தன் காதலை தெரியப்படுத்தாமலே தேய்ந்த கல்லூரி பொழுதுகளை    திட்டியவாரே பெண் பார்க்கும் படலத்திற்கு தயாராகி இருந்தாள் அஷ்விதா... ஆனால் அங்கே மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்த யெஷ்வந்தின் முகத்தை அவள் வாழ் நாளில் மறக்கவே முடியாது... அவள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சடங்குகள் அனைத்தும் நிறைவேர அவன் அவள் அருகே வந்து 3 வருஷம் பார்த்தது பத்தலையா கண்ணமா என்று கேட்ட அழகில் சொக்கித்தான் போனாள்... திருமண ஏற்பாடுகள் இனிதே நடந்தேர மணவரை செல்லும் முன்னதாக அஷ்விதாவை சந்தித்து எனக்கு ஒரே ஒரு ஆசை எங்க அம்மா என்ன பாத்துகிட்டது போல பாத்துப்பியா அஷ்வி என கொஞ்சல் மொழியில் கேட்க..  அவள் தன் காதல் ஈடேரிய மகிழ்ச்சியில் வெட்கத்தில் தலை குனிந்த அந்த தருணம் நிழற் படமாய் ஓடியது யெஷ்வந்திற்கு.. 25 ஆம் வருட திருமண நாள் கொண்டாட்டங்களின் பின் அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு தன் ஒரே ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அவளை உச்சி  நுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டான்.... காதல் ஓர் அழகான உறவின் பிள்ளையார் சுழி காதலிப்போம்!

-. Tresa John

 

 

19.K2K 00099

அன்றொரு நாள் இதே நிலவில் அவள் இருந்தாள் என் அருகே "

இந்த பாடலை கேட்டவுடன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த ராபெர்ட்டின் மனத்தில் ஆயிரம் எண்ணங்கள்.
மனதில் மறக்கமுடியாத நிலவாக தேக்கி வைத்து இருந்த சீதாவின் முகம் அவனை பார்த்து சிரித்தது.
"
ராபர்ட் என்ன தைரியத்தில் நீ இங்கு வருகிறாய்?  யாரை பார்க்க?  நான் அப்படியே இருப்பேன் என்று நினைத்தாயா? உன்னை இப்போ பார்த்தால் என்னால் பேச முடியுமா?  உனக்கு இந்த விஷ பரிட்சை தேவையா? "
என்று அவரை பார்த்து கேட்பதை போல இருந்தது.

இருபது வருடங்களுக்கு முன்னர் நள்ளிரவில் ஊரை வீட்டு போன ராபர்ட் தேவநேசம் இப்போது இல்லை. ஐம்பது வயதில் முதிர்ச்சி பெரிய பதவி என்று பந்தாவாக வரும் ராபர்ட் ஐயா.
இத்தனை வருடங்களுக்கு பிறகு தன் வாழ்வை மாற்றிய ஊருக்கு வருகிறார்
அவர் இப்போ மரியாதைக்கு உரிய பெரிய அதிகாரிஎனவே அவர் என்று சொல்லுவோம்.

ராபர்ட் இப்போது போகும் ஊர் தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள ஓரு அழகான ஊர் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஓரு சிறிய ஊர்.  அங்கேதான் அவர் சீதாவை பார்த்தார். சீதாவின் அப்பா அங்கு ஊர் தலைவர்.  மிகவும் பாரம்பரியம் மிக்க மதிப்பான குடும்பம். அவர் பேச்சுதான் அங்கே சட்டம்.   அவருக்கு ஒரே பெண் சீதா. ஸ்கூல் பைனல் முடிந்து தந்தை வெளியூர் சென்று படிக்க அனுமதி தராததால் வீட்டில் இருந்தபடி தபால் மூலம் பட்ட படிப்பு படித்து வந்தாள்.
கண்டிப்பு கண்ணியம் மிக்க குடும்பம் ஒரே வாரிசு சீதா.  அம்மா இல்லை பாட்டியின் வளர்ப்பு.  அப்பாவிடம் பயம் மரியாதை. ரவி வரமா ஓவியம் போல அழகு.

அந்த ஊரில் ஓரு பழைய கோயில் மிக அற்புதமான ஓவியங்கள் சிலைகள் கொண்டது.  ராபர்ட் அங்கே தனது ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஊர் பெரியவர் பண்ணை வீட்டில் தங்கி இருந்தான். கோயிலுக்கு சாமி கும்பிட வரும் சீதாவை முதலில் சாதாரணமாக பார்த்தான்.  பின் அவனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.  சீதாவும் அவனை ஓர கண்ணால் பார்க்க அவனது கம்பிரம் கலையான முகம் அவளையும் ஈர்த்தது.  Chemistry நல்ல ஒர்கவுட்.  ஆனால் இருவரும் ஓரு வார்த்தை கூட பேச முடியவில்லை.  கண்கள் ஆயிரம் பேசியது. இருவரும் விரும்புவது இருவரின் மனதுக்கு தெரியும். ஆனால் வாரதைகள் இல்லாத காதல்.
நாட்கள் ஓடின.
ஓரு நாள் துணிந்து ஓரு முறை துணை இல்லாமல் தனியே வந்த சீதாவை பார்த்து தன் மனதை திறந்து காட்ட சீதா கண்ணீருடன்
"
நாளை என் அத்தை வீட்லே இருந்து எனக்கு பரிசம் போட வராங்க.  நீங்கள் வேறு இனம். அப்பா மிக பெரிய மனிதர் அவர் கவுரவம் கெட நான் விட மாட்டேன். என்னை மன்னித்து மறந்து விடுங்கள். நீங்கள் வேறு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளுங்கள். " என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள்

ராபெர்ட்க்கு தலை சுற்றியது.  முளைத்த காதல் மூலையில் கருகியது. அவன் ஓரு ஆசிரமத்தில் வளர்த்த அப்பா அம்மா இல்லாத பையன்.  வேறு எதுவும் செய்ய தைரியம் இல்லாமல் ஊரை வீட்டு நள்ளிரவில் போனவன் தன் இருந்த சுவடுகள் இல்லாமல் துடைத்து வீட்டு
"
அவசரம் போகிறேன் வர மாட்டேன் எல்லாம் முடிந்து விட்டது நன்றி" என்று வேலையாளிடம் கொடுத்து வீட்டு போனவன்
பின் உடனே நோர்த் சைடு போய் அங்கேயும் மனது பொறுக்காமல் வெளிநாடுகளில் நல்ல பெரிய வேலை நிறைய காசு, பணம்
பார்த்து விட்டான். ஆனால் எங்கயும் அவனால் சீதாவை மறக்க முடியவில்லை.  வேறு கல்யாணம் பற்றிய நினைப்பும் இல்லை. இப்போதுதான் ம்பது வயதில் எதோ நினைவில் எதோ உந்துதத்தில் இந்த ஊருக்கு வந்து இருக்கிறான்.

" சார் கெஸ்ட் ஹவுஸ் வந்து விட்டது. " டிரைவர் குரலினால்
விழித்தார் ராபர்ட்.
"
பக்கத்தில்தான் கோயில். முதலில் அங்கே போகலாம் "
கோயிலில் இறங்கியவர் மனதில் அலை அலையாக பழைய எண்ணங்கள்.
இத்தனைக்கும் அவரும் சீதாவும் அந்த கடைசி நாள் தவிர எதுவும் பேசியது கூட இல்லை.  எப்படி அவருக்கு இப்படி ஓரு அட்டச்மெண்ட் தெரியவில்லை இதுதான் காதலின் சக்தியோ
கோயிலுக்குள் சென்று தான் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்தார்.
"
தம்பி நீங்க நீங்க ராபர்ட் தம்பிதானே, சர்வேஸ்வரா எங்க சீதாவின் தவம் வீணாகவில்லை.  தம்பி வந்தாச்சு"
  என்ற கோயில் குருக்கள் அதே பழைய குருக்கள் என்ன கொஞ்சம் தள்ளாமை.
சீதா தவம் மை god என்ன ஆயிற்று, எப்பா சொல்கிறார் ராபர்ட் இதயம் வேகமாக துடித்தது சீதா என்ற சொல்லுக்கு அத்தனை சக்தி.
"
தம்பி உன்னிடம் மறந்து விடுங்கள் என்று சொன்னாலும் சீதா அம்மா உன்னை மறக்க வில்லை.  ஒரே ராத்திரியில் என்ன என்ன நடந்தது தெரியுமா.  சீதா உன்னை மறக்க முடியாமல், அப்பாவிடமும் சொல்ல தைரியம் இல்லாமல் தன்னை மாய்ந்து கொள்ள துணிய பாட்டி பார்த்துவிட்டு தடுத்து விட்டார்கள்.  பின்னர் பொறுமையாக கேட்க உண்மை வெளிய வந்தது.  தன் பேத்தியின் உன்னோட கண்ணியமான காதல் பாட்டிக்கு பிடித்து விட்டது அந்த அர்த்த ராத்திரியில் மகனை எழுப்பி விஷயம் பக்குவமாக சொல்ல சிறிது மாறுபட்டாலும் பெரியவர் பாட்டியின் பேச்சுக்கு கட்டு பட்டு காலையில் போய் பேசலாம் என முடிவு செய்து உடனே வர வேண்டாம் என தங்கச்சி வீட்டுக்கும் சொல்லி விட்டார்.  ஆனால் காலையில் வந்து பார்க்க நீங்கள் இல்லை
சீதம்மா இந்த கோயிலில் வந்து சாமி முன்னாடி அவர்தான் என் கணவர் அவர் நிச்சயம் வருவார் என சொல்லி அம்மன் தாலியை எடுத்து தானே கட்டி கொள்ள ஊரே சிலிர்த்து நின்று விட்டது. அப்புறம் பாட்டியும் போய் விட சீதாம்மாவும் அய்யாவும் தன் வீட்டை ஓரு ஆசிரமம் ஆக்கி சொத்தை எல்லாம் ராபர்ட் தேவசகாயம் டிரஸ்ட் ஆக்கி விட்டார்கள் இப்போது அங்கே முப்பது குழ்ந்தைகள் இருக்கிறார்கள் முதியோர் இல்லம் இருக்கிறது  குழந்தைகளுக்கு அம்மா சீதம்மா அப்பா  ராபர்ட் அப்பா  நீங்க உடனே போங்க தம்பி "
என்று கூற ராபர்ட் ஓட்டமும் நடையுமாக காரில்  ஏறினான்
எஜமானன் கதை எல்லாம் தெரிந்த அந்த விசுவாசி அவர் வழி சொல்ல வேகமாக ஆசிரமம்
இறங்கி சீதா சீதா என்று கத்தி கொன்டே உள்ளெ ஓடிய அவரை " அய்யா அப்பா  அப்பா " என்ற குரல்கள் வரவேற்றது.  நடுநாயகமாக அவனது பெரிய படம்.  அதனால்தான் அவர்களுக்கு அடையாளம் தெறிந்தது
குழ்ந்தைகளின் குரலை கேட்டு ஓடி வந்த சீதாவின் முகத்தில் அத்தனை ஆனந்தம்.காலம் அவளை எதுவும் மாற்றவில்லை கம்பிரம் கூடி இருந்தது அவ்வளவுதான். 
அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள் ஓரு புதிய ரோஜாப்பூ மலர்ந்து மனம் வீசியது.  கூடை மல்லிகைப்பூக்கள் வாசம் ஓரு சேர வீசியது.  பாரதிராஜா படம் தேவதைகள் களுக் க்ளுக் என சிரித்தனர். அவர்கள் வாழ்வில் இனி வசந்தம்தான்.

உண்மையான காதலுக்கு அழிவில்லை மதம் இல்லை வயதும் இல்லை.  அது நிச்சயம் ஓரு நாள் ஜெயிக்கும்

-KK MADAM


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY